விஸ்வா

விஸ்வா

அரசின் வடபகுதிக்கான வெள்ள நிவாரணப் பணிகளில் கூட்டமைப்பும் கலந்து கொள்ளும்.

Flooding_Jaffnaவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வட பகுதி மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள நிவாரணப் பணிகளில் தமிழ்தேசியக் கூட்டமைப்பும் கலந்து கொள்ளலாம் என மீள் குடியேற்ற அமைச்சர் எம்.எம்.வீரக்கோன் தெரிவித்துள்ளார். வன்னியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும், யாழ்.குடாநாட்டிலும் வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை சனிக்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

மீள் குடியேற்ற அமைச்சர் விடுத்துள்ள இந்த அழைப்பினை கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணப் பணிகளில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் வித்தியாதரன் புலனாய்வுப்பிரிவினரால் விசாரணக்குட்படுத்தப்பட்டார்.

vithyatharan.jpgஉதயன், சுடரொளி பத்தரிகைகளின் முன்னாள் பிரதம ஆசிரியரான என். வித்தியாதரன் நேற்று முன்தினம் புதன்கிழமை தேசியப் புலனாய்வுப்பிரிவினரால் மூன்று மணி நேரம் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு தனிப்பட்ட முறையில் பயணம் செய்து விட்டு நேற்று முன்தினம் நாடு திரும்பிய போது கொழும்பு பண்டாரநாயக்கா சாவதேச விமான நிலையத்தில் வைத்து அவர் விசாரணகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

சிங்கப்பூர் மலேசியா நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டமை எதற்காக என்பது பற்றியும், அரசியலில் ஈடுபடப் போவதாக கூறப்படுவது குறித்தும், தற்போது செய்யும் தொழில் குறித்தும் பல கேள்விகள் வித்தியாதரனிடம் கேட்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். புதன் இரவு 10.30 மணிக்கு ஆரம்பமான விசாரணைகள் நேற்று வியாழன் அதிகாலை 1.30 வரை நடைபெற்றதாகவும், புலனாய்வுப்பிரிவினர் தன்னை நாகரீகமான முறையிலேயே விசாரணை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகைத் துறையிலிருந்து ஒதுங்கியுள்ளதாக தெரிவித்திருக்கும் வித்தியாதரன் அரசியலில் ஈடுபடப்போவதாகவும், எதிர்வரும் மாகாண சபைக்கான தேர்தலில் கூட்டமைப்பில் இணைந்து முதலமைச்சராக போட்டியிடுவதற்கு முயற்சி செய்து வருவதாகவும் முன்னர் செய்திகள் அடிபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்க தடையில்லை என இராணுவப் பேச்சாளர் தெரிவிப்பு.

Iranaimadu_Tankகிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடுக்குளத்தில் மீன்பிடிப்பதற்கு தடைவிதிக்கப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபயமெதவல தெரிவித்துள்ளார். இதேவேளை, இரணைமடுக்குளத்தில் மீன் பிடிப்பதற்கு படையினர் அனுமதிக்காமை குறித்து அங்குள்ள இராணுவ அதிகாரிகளுடன் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரணைமடுக்குளத்தில் மீன்பிடிக்க அனுமதி வழங்குமாறு இராணுவ அதிகாரிக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். அண்மையில் மீள்குடியேற்றப்பட்டுள்ள கிளிநாச்சி சாந்தபுரம் மக்கள் முன்னர் இரணைமடுக்குளத்தில் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வந்தனர். தற்போது மீன்பிடிப்பதற்கு படையினர் அனுமதி மறுத்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். சாந்தபுரம் கிராமத்திற்கு அண்மையில் விஜயம் செய்த தமிழர் விடுதலைக் கூட்டணியினரிடமும் இம்மக்கள் இது குறித்து முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸ் சமாதான விருதினைப் பெற்றமைக்காக யாழ்.படைகளின் தளபதிக்கு யாழ்ப்பாணத்தில் கெளரவிப்பு நிகழ்வு.

Mahinda_Hathurusinghe_Major_Generalபிலிப்பைன்ஸ் நாட்டின் சமாதானத்திற்கான ‘குஷி’ விருதினைப் பெற்றுள்ள யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை கெளரவிற்கும் நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று வியாழக்கிழமை மாலை பாதுகாவலன் மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க சங்கானையில் இடம்பெற்ற கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்திற்கு படையினர் துணைபோனமைக்காக படையினர் சார்பில் தாம் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். அத்துடன் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமலிருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
முப்பது வருடகால யுத்தம் முடிவிற்கு வந்து சகல மக்களும் ஒன்றிணைந்து வாழும் சூழல் உருவாகியுள்ளது இந்நிலை தொடர சகல மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நல்லைஆதீன முதல்வர் சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகள், யாழ்.ஆயர் வண.தோமஸ் செளந்தரநாயகம், தென்னிந்திய திருச்சபை போராயர் வண. டானியல் தியாகராசா ஆகிய மதத்தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Related News:

யாழ். இராணுவத் தளபதிக்கு சமாதானத்திற்கான விருது வழங்கப்படவுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழு தடுப்பு முகாம்களுக்கும் செல்லவுள்ளது.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினர் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களுக்கும் செல்லவுள்ளதாக ஆணைக்குழுவின் பிரதிச் செயலாளர் வருண டி சேரம் தெரிவித்துள்ளார். இவ்வகையில் அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு முகாம் மற்றம் காலி, பூஸா முகாம்களுக்கும் ஆணக்குழுவினர் செல்லவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆணைக்குழுவின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் புத்தளம், மன்னார் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார். ஜனவரி 7ஆம் திகதி புத்தளத்திலும், 8, 9ஆம் திகதிகளில் மன்னாரிலும், 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை அம்பாறையிலும் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆணக்குழுவின் அமர்வுகள் மொனராகலை, அநுராதபுரம், பொலநறுவை ஆகிய மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் வாகன சாரதிகளிடம் தீவிரமாக இலஞ்சம் பெறும் பொலிஸார்!

கிளிநொச்சியில் போக்குவரத்துக் கண்காணிப்புக் கடமையில் ஈடுபட்டு வரும் பொலிஸார் சிலர் உள்@ர் வாகன ஓட்டுநர்களிடம் இலஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சிப் பிரதேசத்தில் கடந்த காலத்தின் யுத்தசூழல் காரணமாக வாகனங்களின் ஆவணங்களை பலர் தொலைத்துள்ளனர் அவற்றை மீளப்பெறும் நடவடிக்கைகளிலும் அவர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் பலர் சாரதி அனுமதிப்பத்திரங்கள் பெற்றிருக்கவில்லை. இறுதிக்கட்டப் போரின் போது கைவிடப்பட்டு, தற்போது மீட்கப்பட்டுள்ள பல வாகனங்கள் திருத்தியமைக்கப்பட்டு வரும் நிலையில். அவற்றில் ‘சிக்னல் லைற்’ போன்றவை இயங்காத நிலையில் பலர் பாவனைக்குட்படுத்தி வருகின்றனர்.

இவற்றில் ஏதோவொரு குறைப்பாட்டை அவதானித்து அவர்களிடம் இலஞ்சம் வாங்குவதில் குறித்த பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருதாக அவர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பணமாக இலஞ்சம் பெறல், சம்பந்தப்பட்டவரை கடைகளுக்கு அழைத்துச்சென்று தாங்கள் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கு பணம் செலுத்துமாறு வற்புறுத்தல் போன்ற நடவடிக்கைகளில் குறித்த பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் கிளிநொச்சியில் இவ்வாறான சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இரு பெண்கள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வுவனியாவில் இரு பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திலேயே இவ்விரு பெண்கள் காணாமல் போன சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வுவனியா சேமமடுவைச் சேர்ந்த 22 வயதான பெண்ணொருவர் வவுனியா பஸ் நிலையத்தில் வைத்து காணமால் போயுள்ளதாகவும், நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை காலை வவுனியா மாவட்டச் செயலகத்தில் தொழில்புரியும் பெண்ணான ஜெயசீலன் ஜெயப்பிரவீனா (வயது 25) என்ற பெண்ணும் காலையில் தொழிலுக்குச் சென்ற வழியில் காணமால் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவாத்தில் இடம்பெற்ற இரு பெண்கள் காணாமல் போயுள்ள சம்பவங்கள் அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கில் இரு நெற்களஞ்சியங்கள் உடனடியாக அமைக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு.

பெரும்போக நெற்செய்கையினால் கிடைக்கப்பெறும் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு வடக்கில் இரு நெற் களஞ்சியங்களை 80 மில்லியன் ரூபா செலவில் அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்விரு நெற்களஞசியங்களையும் உடனடியாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி பணிப்புரை விடுத்துள்ளார்.

இக்களஞ்சியங்களை அமைக்க வடமாகாண சபை, வடக்கின் மீள்எழுச்சித்திட்டம் என்பவற்றின் ஊடாக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கில் பெரும்போகத்தில் ஒரு இலட்சம் ஏக்கரில் நெற் செய்கை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் புனரமைக்கப்பட்டு வரும் 17 பாடசாலைகள் விரைவில் மீள இயங்கவுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

மீள்குடியேற்றத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னமும் ஆரம்பிக்கப்படாமலுள்ள 17 பாடசாலைகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேசச் செயலர் பிரிவுகளிலுள்ள 17 பாடசாலைகளின் புனர்நிர்மானப்பணிகள் முடிவடைந்து வருகின்ற நிலையில் இவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 84 பாடசாலைகள் மீள இயங்கி வருவதாகவும், இப்பாடசாலைகளில் 26 ஆயிரத்து 649 மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும், ஆயிரத்து 494 ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக 150 முஸ்லிம் மக்கள் புத்தளத்திலிருந்து வருகை.

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக புத்தளத்திலிருந்து ஒரு தொகுதி முஸ்லிம் மக்கள் நேற்று செவ்வாய் கிழமை யாழ்ப்பாணம் வந்துள்ளனர். முதற்கட்டமாக 150 முஸ்லிம் குடும்பத் தலைவர்கள் வருகை தந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினர் சில தினங்களில் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்ப்டுள்ளது. இந்த முதற்கட்ட குழுவில் யாழ். மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் எம்.ஜீ. பஷீரும் இடம்பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்டு புத்தளத்தில் வசித்து வந்த இம்மக்கள் ‘வளமான சிறீலங்காவைக் கட்டியெழுப்புவோம்’, என்ற அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.