செய்திகள்

செய்திகள்

செய்திகள்

“ஏப்ரல் குண்டுத்தாக்குதலில் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவோம்.” – கனடாவில் அனுரகுமார திஸ்ஸநாயக்க!

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை முன்னெடுத்த சிஐடி அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியின் ஒய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மன்றத்திற்கு தலைமைதாங்கவுள்ளனர் என அனுரகுமார திசநாயக்க கனடாவில் தெரிவித்துள்ளார்.

 

மேமாதம் இந்த அமைப்பு செயற்பட ஆரம்பிக்கும் என தெரிவித்துள்ள அவர் இந்த தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக சட்டத்தைஇவர்கள் நடைமுறைப்படுத்துவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து புதிய விசாரணைகள் அவசியமில்லை ஏற்கனவே இடம்பெற்ற விசாரணைகளின் மூலம் வெளியான பல விடயங்கள் உண்மையானவையா என்பதை உறுதி செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

உயிர்த்தஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணைகளை மேற்கொண்ட சிஐடி உத்தியோகத்தர்கள் தற்போது ஓய்வுபெற்றுவிட்டனர் அவர்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்றுகின்றனர் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

 

மே மாதத்தில் நாங்கள் ஆரம்பிக்கவுள்ள ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அமைப்பிற்கு உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை முன்னெடுத்த சிஐடி தலைவர் தலைமைதாங்குவார்.நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைவழங்குவோம் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவோம் என அவர்தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சில நாட்களிற்கு முன்னர் தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

 

அவ்வேளை ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியவரின் பாரதூரமான தகவல் தாக்குதல் இடம்பெற்ற பின்னரும் அவர் பதவியிலிருந்தார் எனவும் ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யாசகத்தில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கதிர்காமம் புனித பூமியில் யாசகத்தில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுத்த போதிலும் அவர்களது பெற்றோர்கள் பிள்ளைகளை மீண்டும் யாசகத்தில் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கதிர்காமம், செல்ல கதிர்காமம், கிரிவிகாரை ஆகிய பகுதிகளில் இந்த சிறுவர்கள் தனியாகவும் பெற்றோருடனும் யாசகத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. 5, 10, 16 வயதுக்குட்பட்ட பல சிறுவர்கள் பெற்றோருக்குத் தெரிந்தே யாசகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலான சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சிறுவர்கள் பல தடவைகள் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சில சிறுவர்கள் பூஜை தட்டுக்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் தனியார் வகுப்புக்களுக்காக அதிக பணம் செலவிடும் பெற்றோர்கள் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த

பாடசாலை பாடப்புத்தகங்களை 3 பிரிவுகளாகப் பிரித்து கற்பிப்பதன் மூலம் புத்தகப் பையின் எடை 3ல் 2 ஆக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பதுளையில் ஊவா மாகாண பாடசாலைகளின் அதிபர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

தனியார் வகுப்புகளுக்கு பெற்றோர்கள் அதிக பணம் செலவழித்து வருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

கல்விச் சீர்திருத்தங்கள் முன்வைக்கப்படும் என்றும், அப்போது தனியார் வகுப்புகளில் பங்கேற்பது குறையும் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இருநூறு ஆண்டுகளாக உழைக்கும் தோட்டத்தொழிலாளர்களை கவனிக்காமல் மத்திய வங்கி அதிகாரிகள் மனசாட்சியின்றி தமது சம்பளத்தை அதிகரித்துக்கொள்கிறார்கள் – சுமந்திரன்

இரு நூற்றாண்டுகளாக இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் ஊழியர் சேமலாப நிதியத்தின் ஊடாக தேசிய கடன் மறுசீரமைப்புக்குப் பங்களிப்பு செய்யும் அதேவேளை, அதற்குப் பொறுப்பான மத்திய வங்கி அதிகாரிகள் மனசாட்சியின்றி தமது சம்பளத்தை அதிகரித்துக்கொள்வதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

அண்மையில் புதிய மத்திய வங்கிச் சட்டத்தின் பிரகாரம், இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்ட விடயம் கடும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது. இவ்விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை செயற்றிட்டப் பிரதானி பீற்றர் ப்ரூவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதிலும், சம்பள அதிகரிப்பு தொடர்பில் தன்னால் எதனையும் கூறமுடியாது எனவும், இருப்பினும் மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் பதிலளித்திருந்தார்.

 

இவ்வாறானதொரு பின்னணியில் மத்திய மலைநாட்டு பகுதிகளில் பணிபுரியும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்ந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள எம்.ஏ.சுமந்திரன், தற்போது அவர்கள் தமது ஊழியர் சேமலாப நிதிய சேமிப்பின் ஊடாக உள்ளகக் கடன் மறுசீரமைப்புக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

 

இருப்பினும், அந்த ஊழியர் சேமலாப நிதியத்துக்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் பொறுப்பானவர்கள் மனசாட்சியின்றி பெருமளவால் தமது சம்பளத்தை அதிகரிக்கின்றனர் எனவும் சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.

லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்திற்குச் செல்லும் இளம் சிறுமிகளின் படங்கள் ஆண்கள் மட்டுமே உரையாடும் சமூகவலைத் தளங்களில்!!!

லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்திற்குச் செல்லும் இளம்சிறுமிகளின் படங்கள் சமூகவலைத் தளங்களில் பரவவிடப்பட்டுள்ளது. நேற்று இரவு 22 இரவு அதாவது மார்ச் 23 அதிகாலை 00:27 மணி முதல் கற்பக விநாயகர் ஆலயத்திற்குச் செல்லும் பல பெண்களின் படங்கள் சமூக வலைத் தளத்தில் ஏற்றப்பட்டுள்ளது. ‘கோபால் நைஸ் மசேஜ் ஒன்லி’ என்ற வட்ஸ்அப் தளத்தினூடாகவே இப்படங்கள் பரப்பப்பட்டுள்ளது. லண்டனில் சைவ ஆலயங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் பாலியல் குற்றங்களுக்காக தண்டனை பெற்று வருகின்ற இக்காலகட்டத்தில் பதினெட்டு வயது நிரம்பாத இளம் குழந்தைகளின் படங்களை சமூகவலைத்தளங்களில் ஏற்றி ரெஸ்ரெஸ்ரிரோன் சுரப்பி பற்றி அறுபதுக்களைத் தாண்டிய ஆண்கள் கூட்டம் சிற்றின்பம் காண்கின்றது.

பெண்களின் சருமத்தை விரைவாக வெண்மையாக்கும் கிறீம்களால் புற்றுநோய்கள் ஏற்படுவது உறுதி !

கொழும்பின் சில பகுதிகளில் புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களின் விநியோகங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் அஜித ஜயசுந்தர தெரிவித்திருந்தார்.

பெண்களின் சருமத்தை விரைவாக வெண்மையாக்கும் என கூறி குறித்த கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும்,இதனால் புற்றுநோய்கள் ஏற்படுவது உறுதி என்றும் தெரிவித்திருந்தார்.

இணைய சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது, அவர் பெயர் குறிப்பிட்டே ‘chandhani’ எனும் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் முகத்தினை வெண்மையாக்கும் க்ரீம் தொடர்பிலும் கருத்து தெரிவித்திருந்தார்.

குறித்த க்ரீமினை பாவிக்க வேண்டாம் என்றும், இதனை நாம் ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தோம். இதில் ஈயம் அதிகளவு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பாதரசத்தின் அளவும் அதிகம், கென்டியம் எனும் மூலப்பொருளும் அதிகளவு சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இவ்வாறு விற்பனை செய்யப்படும் கிரீம் வகைகள் தரமற்றவை. மேற்கூறப்பட்ட க்ரீமினால் நிச்சயமாக புற்றுநோய் உருவாகும் என்பதில் சந்தேகமே இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன், இதன்போது உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தடைசெய்யப்பட்ட கிரீம்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை இலங்கை சந்தையில் சூட்சமமாக பயன்படுத்தப்படுகின்றது.

சில கிரீம்கள் இலங்கையின் பிரபல அழகுக்கலை பார்லர்களில் விற்பனைக்கு கூட வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

மொஸ்கோ இசைநிகழ்ச்சியில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரிப்பு – உக்ரைனை சாடும் புடின் !

மொஸ்கோவில் இசைநிகழ்ச்சி அரங்கமொன்றில் இடம்பெற்ற தாக்குதலில கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.

குரோகஸ் சிட்டியின் இசைநிகழ்ச்சி அரங்கி;ல் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது என ரஸ்யாவின் விசாரணை குழு தெரிவித்துள்ளது. அரங்கில் மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கைகளின் போது மேலும் உடல்களை மீட்டுள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.

குரோகஸ் சிட்டியின் இசைநிகழ்ச்சி அரங்கி;ல் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது என ரஸ்யாவின் விசாரணை குழு தெரிவித்துள்ளது.

அரங்கில் மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கைகளின் போது மேலும் உடல்களை மீட்டுள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.

மொஸ்கோவின் மிகவும் பிரபலமான இசைநிகழ்ச்சி அரங்கில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ள அதேவேளை  ஐஎஸ்ஐஎஸ்  அமைப்பு இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளது.

டெலிகிராமில் ஐஎஸ் அமைப்பு தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளது எனினும் இந்த தாக்குதலைதான் மேற்கொண்டமைக்காக ஆதாரங்கள் எவற்றையும் அந்த அமைப்பு வெளியிடவில்லை.

இதேவேளை இந்த தாக்குதலை ஐஎஸ் அமைப்பே மேற்கொண்டுள்ளது என்பதை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்துள்ளன.

ஐஎஸ் அமைப்பு ரஸ்யாவில் தாக்குதலொன்றை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்ற தகவல்கள் நவம்பர் மாதம் முதல் கிடைத்தன என அமெரிக்க புலனாய்வு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான உறவுகள் பாதி;க்கப்பட்டுள்ள போதிலும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் ஐஎஸ்தாக்குதல் குறித்த எச்சரிக்கையை ரஸ்யாவிடம் பகிர்ந்துகொண்டன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொஸ்கோவில் இசைநிகழ்ச்சி அரங்கத்தில் தாக்குதலை மேற்கொண்ட பின்னர் உக்ரைனை நோக்கி சென்றுகொண்டிருந்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

இசைநிகழ்ச்சி அரங்க தாக்குதலை காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல் என தெரிவித்துள்ள புட்டின் தாக்குதலை மேற்கொண்டவர்கள் உக்ரனை நோக்கி தப்பிச்சென்றுகொண்டிருந்தவேளை கைதுசெய்யபட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் உக்ரைன் புட்டின் தெரிவித்திருப்பதை  தகவலை நிராகரித்துள்ளது.

தாக்குதலை மேற்கொண்டவர்கள் உக்ரைனிற்கு சென்றுகொண்டிருந்தார்கள் என தெரிவிப்பது அவர்கள் முட்டாள்கள் அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர் என தெரிவிப்பதை போன்றது என உக்ரைனின் புலனாய்வு பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த தாக்குதலிற்கு உக்ரைன் காரணம் என தெரிவி;ப்பதற்கு ரஸ்ய ஜனாதிபதி முயல்வதை உக்ரைன ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கண்டித்துள்ளார்.

மீண்டும் சிக்கிக்கொண்ட மைத்திரிபால சிறிசேன – வாக்குமூலம் பெற தயாராகும் குற்றப் புலனாய்வு திணைக்களம் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குற்றப் புலனாய்வு திணைக்களம், நாளையத்தினம் (25) இது குறித்த அவரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால், பொலிஸ் மா அதிபருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மைத்திரிபால சிறீசேனவை ஜனாதிபதியாக்கியதையிட்டு நாங்கள் வெட்டகப்படவேண்டும். – ஈஸ்டர்படுகொலை நூல் வெளியீட்டு விழாவில் பிள்ளையான் !

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றாரா? என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் துணிந்த  நேர்மையான அரசியல் தலைவராக இருந்தால் யார் என்பதை அவர் வெளிப்படையாக விரைவாக ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை என பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

Thinakkural.lk

மட்க்களப்பில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர்படுகொலை இனமத நல்லிணக்க அறிதலும் புரிதலும் எனும் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை (23) அஞ்சனா மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்  பின்னர் ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்தியவர்களை தெரியும் என தெரிவித்த கருத்தை நான் ஊடகங்களில் பார்த்தேன்.

ஒரு சாதாரண மனிதனைப்போல  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசுகின்றார். இந்த குண்டு வெடிப்பு இடம்பெறுகின்ற போது அவர் நாட்டின் தலைவராக இருந்தார். தலைவருடைய பொறுப்பு யாராக இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியதே.

ஆனால் அவர் அதைவிட்டுவிட்டு இப்போது இரகசிய வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என கருத்துக்களை சொல்லுகின்றார். எனவே ஒருவேடிக்கையான மனிதரை இந்த நாட்டு அரசியலுக்கு கொண்டுவந்துள்ளோம்  என்பதையிட்டு நாங்கள் வெட்டகப்படவேண்டும்.

ஏன் அவர் இரகசிய வாக்குமூலம் தேவை என்கின்றார். எதற்கு?  யாருக்கு ?  அச்சப்படுகின்றார். அப்படியென்றால் இந்த குண்டு வெடிப்பிற்கு அவரும் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றாரா? என்ற சந்தேகம் எங்களுக்கு  உண்டு ஆகவே அவர் ஒரு துணிந்த  நேர்மையான அரசியல் தலைவராக இருந்தால் யார் என்பதை வெளிப்படையாக விரைவாக ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தற்துணிவுடன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடும் ஜனாதிபதி பேவட்பாளருக்கே ஆதரவு – தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சிறீதரன் !

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை வழங்குவது குறித்து ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும், சாதகமான தீர்வு எதனையும் முன்வைக்காதவிடத்து தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளரொருவரைக் களமிறக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் எனவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு இப்போதே அரசியல் கட்சிகள் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் எவையும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து இதுவரையில் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு உத்தேசித்திருக்கும் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமது நிலைப்பாடு என்னவென்பதை தற்றுணிவுடன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவுபடுத்தவேண்டுமென சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

அத்தீர்வானது இணைந்த வட, கிழக்கில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யக்கூடியவாறான சமஷ்டி அடிப்படையிலான தீர்வாக அமையவேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ள அவர், அத்தீர்வினை வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடுவதன் ஊடாக அதனை சிங்கள மக்களுக்கும் கொண்டுசெல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் தீர்வு பற்றிய நிலைப்பாட்டை வெளியிடும் பட்சத்தில் அதுகுறித்து தமிழர்கள் பரிசீலிக்க முடியும் எனவும், இல்லாவிடின் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் எனவும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.