January

January

விடுதலைப் புலிகளுக்கும், படையினருக்கும் இடையே தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் பலியாகி விடாமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் – ஐ.நா. கோரிக்கை

un-logo.jpgவிடு தலைப் புலிகளுக்கும்,  படையினருக்கும் இடையே நடந்து வரும் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் பலியாகி விடாமல் இலங்கை அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. அகதிகள் ஏஜன்சியின் செய்தித் தொடர்பாளர் ரான் ரெட்மான்ட் கூறுகையில், இலங்கையில் தற்போது கடும் சண்டை நடந்து வரும் பகுதிகளில் அப்பாவித் தமிழர்கள் பலியாகி விடாமல் இலங்கை அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பாவிகளுக்கு உரிய பாதுகாப்பினை இலங்கை அரசு அளிக்க வேண்டும். அப்பாவிகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 24 அப்பாவிகள் சண்டையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இது கவலை தருகிறது.

கிழக்கு மாவட்டங்களான திரிகோணமலை மற்றும் மட்டக்களப்பிலிருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் மீண்டும் தங்களது பகுதிகளுக்கு திரும்பி வருகின்றனர்.ஆனால் தாங்கள் முன்பு போல சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்றும், ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் இந்த மக்கள் குறை கூறுகின்றனர். இவ்வாறு திரும்பி வந்த 50 குடும்பங்கள் அரசாங்கத்தின் கெடுபிடிகள் காரணமாக மட்டக்களப்பிலிருந்து மீண்டும் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர். மற்றவர்களும் கூட தங்களது வீடுகளில் தனித்து தூங்க முடியாமல், மொத்தமாக சேர்ந்து தங்கும் அவலம் உள்ளது.

இப்பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் உரிய பாதுகாப்பு தரப்பட வேண்டியது அரசின் கடமையாகும். இதேபோல, தமிழகத்திலிருந்து இலங்கைக்குத் திரும்பி வந்த நான்கு அகதிகள் திரிகோணமலை மாவட்டத்தில் கடத்தப்பட்டுள்ளனர். இது கவலை தருகிறது. கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்திலிருந்து 1500 அகதிகள் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர். இது வரும் ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கிறோம். இவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் மறு வாழ்வு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.  இலங்கையின் வடக்கில் நடந்து வரும் சண்டையை ஐ.நா. அகதிகள் ஏஜென்சி உன்னிப்பாக கவனித்து வருகிறது. அங்கு இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்றார் அவர்.

தொலைபேசியூடாக கொலைமிரட்டல் ஐ.தே.க. எம்.பி. தயாசிறி சபையில் முறையீடு

phone.jpgதொலை பேசி ஊடாக தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான தயாசிறி ஜயசேகர நேற்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (09) சிறப்புரிமை பிரச்சினையொன்று முன்வைத்து பேசும்போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு கூறினார்.  “நேற்று (08) இரவு தொலைபேசி அழைப்பு ஒன்றின் மூலம் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

தொலைபேசியூடாக ஆண் குரலில் பேசிய ஒருவர், நான் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியிலும் சரி அதிகம் கத்துவதாகவும், அரசாங்கத்துக்கு எதிராக பேசுவதை நிறுத்தாவிட்டால் லசந்தவிற்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் ஏற்படுமென்றும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார். அத்துடன், இதுதான் முதலும், இறுதியுமான எச்சரிக்கை என்றும் கூறிவிட்டு பேசியவர் தொலைபேசி அழைப்பையும் துண்டித்துவிட்டார். இன்று அரசாங்கத்துக்கு எதிராக பேசுவது உயிரை பறிக்கும் அளவுக்கு குற்றமாகியுள்ளது. எனவே, இந்த நிலைமைகளை கவனத்தில் கொண்டு எனக்குரிய பாதுகாப்பை அதிகரித்து தருமாறு சபாநாயகரிடம் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், எனது கருத்து வெளியிடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் அவர் கூறினார்.

இதேநேரம், இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார தெரிவித்தார்.

சக்தி/சிரச நிலையம் மீதான தாக்குதல்; கோட்டே நகரசபை ஐ.தே.க உறுப்பினர் சந்தேகத்தில் கைது

sirasa.jpgதெபா னம, பன்னிப்பிட்டிய, சிரஸ-சக்தி நிறுவனத்தின் மீதான தாக்குதலுடன் தொடர் புடைய நபரென சந்தேகிக்கப்படும் கோட்டே நகரசபை ஐ.தே.க உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை க்குட்படுத்தப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் டிபெண்டர் வாகனமொன்றையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மஹரகம பொலிஸார் மேற்படி சந்தேக நபரை நாவல பகுதியிலிருந்து கைது செய் துள்ளனர். மேற்படி நபர் யார் என்பது பற்றி பொலிஸார் வெளியிடவில்லை. இருப்பினும் தாக்குதலுக்கு யார், யார் வந்தார்கள் என்பது பற்றி சந்தேக நபரிடம் விசாரணைகளை நடத்துவதாக பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட டிபெண்டர் வாகனம் மஹரகம பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பலஸ்தீனம் இஸ்ரேல் உடனடி யுத்த நிறுத்தமே இலங்கையின் நிலைப்பாடு -அமைச்சர் போகொல்லாகம

bogolagama-1612.jpgபலஸ் தீனத்தின் மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டு அங்கு உடனடியாக யுத்தநிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கம் வலியுறுத்துவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். பாராளுமன்றத்தில் (09) வெள்ளிக்கிழமை காலை ஜே.வி.பி.யினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் அரசு நடத்திவரும் இராணுவ நடவடிக்கையால் இதுவரை 500 க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பாரிய இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் என்ன நடவடிக்கையெடுத்துள்ளதென ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்த ரோஹித போகொல்லாகம மேலும் கூறியதாவது;  காஸா மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் மிகவும் கவனத்துடன் ஆராய்ந்து வருகின்றது. காஸா மீதான இராணுவ நடவடிக்கையால் பாரிய மனித அழிவுகள் இடம்பெற்றிருப்பது குறித்து அரசு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அங்கு யுத்தம் நிறுத்தப்பட்டு சமாதானம் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே இலங்கையரசின் நிலைப்பாடு.

இஸ்ரேல் அரசு நடத்திவரும் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு உடனடியாக யுத்தநிறுத்தமொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென இலங்கையரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பலஸ்தீனத்தில் இடம்பெற்று வருகின்ற வன்முறைகளை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசு பூரண ஒத்துழைப்பு வழங்குமென ஐ.நா.வின் செயலரிடம் உறுதி வழங்கியுள்ளோம

விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கு நியமிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு யாழ். குடாவில் தற்காலிக நியமனம்

teach.jpgவடக்கு மாகாணத்தில் விடுவிக்கப்படாத பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு நிரந்தர நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு யாழ். மாவட்டப் பாடசாலைகளில் தற்காலிக நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் யாழ். வலயக்கல்வி அலுவலகத்திலுள்ள மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளன. தற்காலிகமாக எதிர்வரும் மூன்று மாதங்கள் வரை கடமையாற்றுமாறு இவர்கள் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கின்றனர். வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு முதலாம் கட்டமாக 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி 287 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2 ஆம் கட்டமாகவும் ஒரு தொகுதி பட்டதாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இந்த 2 கட்ட நியமனத்தின் போதும் விடுவிக்கப்படாத பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒரு மாதகாலத்தின் பின்னர் அங்கு சென்று தமது கடமைகளைப் பொறுப்பேற்குமாறு கேட்கப்பட்டிருந்தனர். ஆனால், ஒன்றரை மாதங்கள் கடந்திருக்கின்ற நிலையில், மூன்று மாதங்கள் வரை யாழ்.மாவட்ட பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கான தற்காலிக நியமனக் கடிதங்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கத

புலிகளின் நான்காவது விமான ஓடுபாதையை இராணுத்தினர் கைப்பற்றினர் ! -இராணுவ பேச்சாளர்

_army.jpgமுல் லைத்தீவில் முள்ளியவளைக்கு வடமேற்கே சுமார் ஆறரை கிலோ மீட்டர் தொலைவில் விடுதலைப்புலிகளின் நான்காவது விமான ஓடுபாதையை இராணுத்தினர் கைப்பற்றியிருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இரண்டரை கிலோ மீற்றர் நீளமும் நூறு மீற்றர் அகலமும் கொண்ட இப்பாதை இன்று சனிக்கிழமை காலை படையினரால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்ததாவது:  இந்த ஓடு பாதையில் இரண்டு விமானங்கள் நிறுத்தி வைப்பதற்காகன ஷெட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்களில் ஒரு இடத்தில் விமானக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருந்தது. அப்பகுதிகளில் பெருமளவிலான கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதால் இராணுவத்தினர் மெதுவாக முன்னேறி வருகின்றனர் என்றார்.
 

வடக்கு ,கிழக்கு விடுதலைப் போராட்டம் மலையக மக்களின் விடிவுக்கு உறுதுணையாக அமையும் – கூட்டமைப்பு எம்.பி.ஸ்ரீகாந்தா

sl-parlimant.jpgஅர சாங்கத்தின் ஒட்டுண்ணிகளாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் மலையகக் கட்சிகளை மலையக மக்கள் தூக்கியெறியும் போது தான் அம்மக்களுக்கு விடிவு கிடைக்குமென்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான என். ஸ்ரீகாந்தா, மலையக மக்களின் விடிவுக்கு வடக்கு, கிழக்கு விடுதலைப் போராட்டம் உறுதுணையாக இருக்குமென்றும் கூறினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடற்ற மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கல் சிறப்பேற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசும் போதே ஸ்ரீகாந்தா இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; இந்த நாட்டில் மட்டுமல்லாது ஆசிய ரீதியிலும் உலகளாவிய ரீதியிலும் மிக மோசமாக வஞ்சிக்கப்பட்ட மக்கள் பிரிவு அல்லது சமூகமென ஒன்றை அடையாளம் காட்டுவதென்றால் அது மலையக தமிழ் தொழிலாள வர்க்கத்தினராகவே இருக்கும். அமெரிக்காவுக்கு கப்பல் மூலம் வரும் நெருக்குவாரங்களுக்கு மத்தியில் ஏற்றிச் செல்லப்பட்ட ஆபிரிக்க நீக்ரோகளை அடுத்ததாக எமது மலையக மக்களை குறிப்பிடலாம். மோசமாக வஞ்சிக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட சமூகம் இது.

1948 ஆம் ஆண்டு மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் அம்மக்களுக்கு பிரஜாவுரிமை கிடைத்ததை அடுத்தே மலையக கட்சிகள் பாராளுமன்றத்துக்கு வந்தன. மலையக கட்சிகள் அரசாங்கத்தின் ஒட்டுண்ணிகளாக இருந்து கொண்டு மலையக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். மலையக மக்கள் என்று இவ்வாறான கட்சிகளை தூக்கி எறிகின்றனரோ அன்று தான் அந்த மக்களுக்கு விடிவு கிடைக்கும்.  அத்துடன் வடக்கு, கிழக்கு விடுதலைப் போராட்டமானது மலையக மக்களின் விடிவுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.

எரிபொருள் நிலைய உரிமையாளர் சுட்டுக் கொலை

gun_.jpgகாத் தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாப் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய மொன்றின் உரிமையாளர் நேற்று அதிகாலை இனம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

தம்பிராசா ரவீந்திரன் (50) எனப்படுமிவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்தபோது மோட்டார் சைக்கிளில் சென்ற இனம் தெரியாத இருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இவரது சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

15 இலங்கை மீனவர்கள் இந்திய காவல் படையினரால் கைது

handcuff.jpgஇந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 15 பேரை கடலோர காவல் படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். அவர்கள் வந்த இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 15 மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர் கிராப்ட் கப்பலில் ரோந்து சென்ற போது அவர்களைக் கைது செய்து மண்டபம் கடலோர காவல்படை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அவர்கள் வந்த இரு படகுகளையும் , அதில் இருந்த என்ஜின்களையும் பறிமுதல் செய்தனர். அங்கு கியூ பிரிவு பொலிஸாரும் இலங்கை மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட 15 பேரும் மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர

பயண மார்க்கங்களை தடை செய்தமைக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு ஆலோசனை

leadimg.jpgசில பயண மார்க்கங்களுக்கான தனியார் பஸ் சேவையினை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளமைக்கு எதிராக, சட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்துத் தாம் ஆலோசித்து வருவதாக தனியார் பஸ் கம்பனிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 50 இற்கும் மேற்பட்ட பயணமார்க்கங்களின் தனியார் பஸ் சேவை இடைநிறுத்தப்பட்ட விவகாரத்தில் அரசாங்கம் தலையிடத் தவறும் பட்சத்தில், சட்ட நடவடிக்கையில் தாம் இறங்க நேரிடுமெனவும் பஸ் கம்பனிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை குறைப்பை அடுத்து போக்குவரத்து அமைச்சும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் கூட்டாக அறிவித்திருந்த புதிய பஸ் கட்டண விபரங்களை அமுல்படுத்த சில தனியார் பஸ் ஊழியர் சங்கங்கள் தவறியதை அடுத்து, இவற்றின் பயண மார்க்கங்களில் பஸ் சேவையை நடத்துவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தடைவிதித்திருந்தது. இதேசமயம், பஸ் கட்டணங்களைக் குறைப்பது தொடர்பாக பஸ் நடத்துநர்களுடன் ஆராயப்படாமையால் இந்தப் பஸ் கட்டண குறைப்புக்கு பஸ் நடத்துநர்கள் சம்மதிக்கவில்லை என ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த தனியார் பஸ் கம்பனிகள் கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பஸ் வண்டிகளுக்கான ரயர், ரியூப் என்பவற்றின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றைக் குறைப்பது பற்றி பஸ் நடத்துநர்கள் தமது கவனத்துக்குக் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது விடயமாக, அரசாங்கம் தம்முடன் கலந்தாலோசிக்குமாயின் பஸ் கட்டணங்களை 4.3 வீதத்தில் இருந்து 8 வீதம் வரை குறைக்க தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அறிவிக்கப்பட்ட பஸ் கட்டண குறைப்பு அறிவிப்பை நடத்தத் தவறியதுடன், கூடுதல் கட்டணங்களைப் பயணிகளிடம் அறவிட்டதாக தெரிவித்து மேல் மாகாணத்தில் 67 தனியார் பஸ் பயண மார்க்கங்களின் சேவைகளை ஆணைக்குழு தடை செய்திருந்தது. இதனிடையே புதன்கிழமை தனியார் பஸ் கட்டணங்கள் குறைவடையுமென எதிர்பார்த்திருந்த நிலையில் அதற்கு முரணாக பஸ் கட்டணங்கள் கூடுதலாக அறவிடப்பட்டதாக சில தனியார் பஸ் பயணிகள் தெரிவித்தனர்.

நிலைமை இவ்வாறிருக்க புதன்கிழமை முதல் இந்த அறிவிப்பு அமுலுக்கு வருவது தொடர்பாக, பஸ் நடத்துநர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் குழப்பமான கருத்துகளும் எழுந்துள்ளன. பஸ் கட்டணங்களை குறைக்குமாறு கோரிய சமயம் பஸ் நடத்துநர்களால் தாக்குதல் அச்சுறுத்தலை தாம் எதிர்நோக்கியதாகவும் பஸ் பயணிகள் தெரிவித்தனர