May

May

ஹஜ் கடமைக்குச் செல்வோர் சர்வதேச நாடுகளுக்கான கடவுச்சீட்டையே பயன்படுத்த வேண்டும்.

hajj.jpgஇந்த வருடம் முதல் ஹஜ் கடமைக்குச் செல்வோர் சகல நாடுகளுக்குமான சர்வதேச கடவுச்சீட்டையே பயன்படுத்த சவுதி அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
 
இந்த வருடம் முதல் புனித மக்காவுக்குச் செல்லும் ஹாஜிகளின் கடவுச்சீட்டுக்கள் சகல நாடுகளுக்குமான சர்வதேச கடவுச்சீட்டாக இருக்கவேண்டுமென சவுதி அரேபியாவின் ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறை குறித்து ஏற்கனவே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் வை.எல்.எம். நவவி தெரிவித்துள்ளார். இதேவேளை முன்னதாக புனித ஹஜ் கடமைக்காக விஷேட கடவுச்சீட்டுக்கள்  பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைக்கப்படுவர்

fonseka-000.jpgவட மாகாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைக்கப்போவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட வடமாகணத்தின் பாதுகாப்பை அதிகரிக்கவுள்ளதாகவும் இதற்கு இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கிழக்குமாகாணம் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டதை அடுத்து அந்த மாகாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைத்து கிழக்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது போன்றே இந்த நடவடிக்கையும் என குறிப்பிட்டுள்ளார். இரண்டு இலட்சமாக உள்ள இராணுவத்தை முன்று இலட்சமாக அதிகரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

தமிழக முதல்வர் கருணாநிதியுடன் தமிழ் கூட்டமைப்பு சந்திப்பு

karunanidhi.jpgதமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் நேற்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் கோபாலபுரத்திலுள்ள இல்லத்தில் நடைபெற்ற இச் சந்திப்பின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சந்திப்பின் பின்னர் வெளியில் வந்த சம்பந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில்;

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவி கேட்பது குறித்து தமிழக முதல்வருடன் பேசினோம். தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளோம்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு அமைதியான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அத்தகைய பாதுகாப்பான சமூகமாக தமிழர்கள் வாழ ஒரு நிலை உருவாக்கப்பட வேண்டும்.

இதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யத் தயார் என்று முதல்வர் தெரிவித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு நீர்வினியோகத் திட்டம்

rizad_baduradeen1.jpgஇடம் பெயர்ந்து வந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 250,000 இற்கும் அதிகமான மக்களுக்கு நீர் வினியோகத் திட்டம் ஒன்று இன்று (31.05.2009) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனை மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆரம்பித்து வைத்துள்ளார். 400 மில்லியன் ரூபா செலவில் யுனிசெவ் நிறுவனத்துடன் இணைந்து மீள்குடியேற்ற மற்றும் அனர்த நிவாரண சேவைகள் அமைச்சும் இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை அழிப்பதற்கு சர்வதேசத்தின் உதவியைக் கோரியது இலங்கை

rohithaogollagama.bmpவிடு தலைப் புலிகளுக்கு உதவி வழங்கும் சர்வதேச வலைப்பின்னலைத் தடுப்பதற்கு உலக நாடுகள் உதவ வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

திருகோணமலையில் டெங்கு அச்சுறுத்தல் 197 பேர் பாதிப்பு; இரு சிறுவர் உயிரிழப்பு

mosquito_preventionss.jpgதிரு கோணமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போதுவரை டெங்கு நோயினால் 197 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரண்டு சிறாரும் சுமார் மூன்று வயதுக்குட்பட்டவர்கள். உயிரிழந்த சிறார் கிண்ணியா பிரதேசசெயலகப் பிரிவில் ஆலங்கேணிக் கிராமத்தையும் மூதூர் பிரதேசசெயலர் பிரிவில் அக்கரைச்சேனைக் கிராமத்தையும் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் மே மாதம் வரை மாவட்டத்தில் 197 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டனர். இவர்களில் 164 பேர் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேசசெயலர் பிரிவைச் சேர்ந்தவர்கள். குச்சவெளி பிரதேசசெயலர் பிரிவைச் சேர்ந்த 14 பேர் டெங்கு காய்ச்சலிற்கு ஆளாகினர் என்று சுகாதாரசேவைகள் பிராந்தியப் பணிப்பாளர் டாக்டர் திருமதி கே.ஞானகுணாளன் தெரிவித்தார்.

திருகோணமலைக் கடற்படைத்தளத்தில் பணிபுரியும் கடற்படை வீரர்கள் சிலரும் டெங்கினால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, டெங்குக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையில், நுளம்பு உற்பத்தியைப் பெருக்கும் விதத்தில் தாம் வசிக்கும் வீடுகள், வளவுகளைத் துப்பரவு செய்யாமல் வைத்திருப்போருக்கு எதிராக ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் சட்டநடவடிக்கை எடுக்கவும் மாகாண சுகாதாரத்திணைக்களம் ஈடுபட்டுவருகின்றது.

முல்லைத்தீவில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி

வடக்கிலிருந்து இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் சேர்த்துக் கொள்ளும் வகையில் முல்லைத்தீவில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன தெரிவிக்கின்றார்.

இந்த காணி ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்கத்திடம் கோரிக்கை முன் வைக்கபடப்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர் முதற் கட்டமாக 1000 தமிழ் இளைஞர் யுவதிகள் சேர்த்துக் கொள்ளப்பட விருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.

இடம் பெயர்ந்துள்ள மக்களின் மீள் குடியேற்த்தின் பின்னரே இந்த ஆட்சேர்ப்பிற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள போதிலும் தேவை ஏற்பட்டால் அதற்கு முன்னதாகவே பின்னனி ஆராயப்பட்டு ஆட்சேர்ப்புகள் இடம் பெறலாம் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஸ்வாட் பள்ளத்தாக்கில் முக்கிய நகரம் எம் வசம் – பாகிஸ்தான் இராணுவம்

pakarmy_.jpgபாகிஸ் தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பெரிய நகரம் ஒன்றின் பெரும்பகுதியை தாலிபான் வசமிருந்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அந்நாட்டின் இராணுவம் கூறுகிறது.

மிங்கோரா நகரம் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்றாலும் சில பகுதிகளில் சிப்பாய்கள் கிளர்ச்சிக்காரர்களின் தாக்குதல்களை எதிர்கொள்வதாக இராணுவம் சார்பாகப் பேசவல்ல மேஜர் ஜெனரல் அதர் அப்பாஸ் கூறினார்.

ஆரம்பத்தில் தாலிபான் தரப்பிலிருந்து வலிமையான எதிர்த்தாக்குதல் வந்திருந்தது. ஆனால் அவர்கள் தப்பித்துச் செல்வதற்கான பாதைகள் துண்டிக்கப்பட ஆரம்பித்துள்ளன என்று உணர்ந்ததை அடுத்து அவர்கள் சண்டையிடாமல் பின்வாங்கிக் செல்வதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.

தாலிபான் ஆயுததாரிகள் தற்போது கிராமப் பகுதிகளுக்குள் சென்றுவிட்டார்கள் என்றும், அங்கு அவர்களுக்கு சித்தாந்த அடிப்படையில் மக்கள் ஆதரவு இல்லை என்றும். அவர்கள் பதுங்கியுள்ள இடங்களைக் கண்டுபிடிக்க மக்கள் உதவி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மீரா குமார் மக்களவையின் முதல் பெண் சபாநாயகர்

காங்கிரஸ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மீரா குமாரை மக்களவை சபாநாயகராக்க   காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.  அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், பெருமைமிகுந்த மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் என்ற சிறப்பை பெறுவார்.

மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல்  அடுத்த மாதம் 3ந் தேதி நடைபெறுகிறது. இது குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மீராகுமாரை மக்களவை சபாநாயகராக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. ஐந்து முறை எம்.பி.யாகி இருக்கும் மீராகுமார் அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தின் சசாராம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரான பாபு ஜெகஜீவன்ராமின் மகளும், முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியுமான மீராகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டால் பெருமைமிகுந்த அரசியல் சாசன பதவியான மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் என்ற சிறப்பை பெறுவார். அதன் பிறகு  அவர் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

அமரசிறி தொடங்கொட காலமானார்

dodangoda.jpgநீதி, சட்டமறுசீரமைப்பு அமைச்சர் அமரசிறி தொடங்கொட நேற்று இரவு காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 66.  இவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.

1983 ஆம் ஆண்டு காலி மாவட்டத்திலிருந்து அரசியலில் பிரவேசித்த அவர் 1994ம் ஆண்டு அமைச்சராகப் பதவி யேற்றார். தென் மாகாண சபையின் முதலமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.