26

26

“துமிந்த சில்வா பிரச்சினை போன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகள் பிரச்சினையையும் தமிழ்அரசியல்வாதிகள் கையாள வேண்டும்”- பாராளுமன்ற உறுப்பினர் மனோகனேசன் !

“துமிந்த சில்வா பிரச்சினை போன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகள் பிரச்சினையையும் தமிழ் அரசியல்வாதிகள் கையாள வேண்டும்” என பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை பொது மன்னிப்பில் விடுவிக்கும் மனுவில் தான் கையொப்பமிட்டதாக உறுதிப்படுத்தியுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கை வருமாறு…,

முன்னாள் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கொலை குற்றச்சாட்டின் நிமித்தம் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் இருக்கின்றார். சம்பவம் நிகழும் போது அவர், மது போதையில் இருந்துள்ளார். தற்போது, அவர் சுமார் ஐந்து வருடங்களை சிறையில் கழித்துள்ளார். அவர் மீது சட்டத்தை மீறிய வேறு குற்றங்கள் இருப்பின், சட்ட ஒழுங்கு துறை அவர் மீது குற்றம்சாட்டி வழக்கு தொடரலாம்.

நான், அரசியல்வாதி என்பதை விட ஒரு மனித உரிமை போராளி. வெள்ளை வேன் கடத்தல், சட்டத்துக்கு அப்பாலான கடத்தல் கொலை, கப்பம், அடாத்தான கைது ஆகியவற்றுக்கு எதிராக உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நான் போராடியுள்ளேன். இளையோர் நீண்டகாலமாக சிறையில் வைக்கப்பட கூடாது. குற்ற செயல்களில் ஈடுபடும், இளையோருக்கு திருந்தி வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இது என் பொதுவான கொள்கை நிலைப்பாடு. துமிந்த சில்வா, ஏற்கனவே ஐந்து வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். அவர் அங்கே சீர்திருத்தத்துக்கு உள்ளாகியுள்ளார் என நம்புகிறேன். அவருக்கு திருந்தி, தனது சமூகத்துடன் வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என நான் எண்ணுகிறேன்.

அதேபோல், அரசியல் சார்ந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட தமிழ் கைதிகளும் சிறைகளில் உள்ளார்கள். இளைஞர்களாக இருக்கும்போது கைது செய்யப்பட்டு, தம் வாழ்நாளில் கணிசமான காலத்தை இவர்கள் சிறையில் கழித்துள்ளார்கள். அவர்களில், தீர்ப்பு வழங்கப்பட்டவர்களும், விசாரணை கைதிகளும், வழக்குகளை எதிர்நோக்குகின்றவர்களும் உள்ளார்கள். அவர்களும் சீர்திருந்தி, புனர்வாழ்வு பெற்று, சமூகத்துக்குள் சென்று, தம் குடும்பங்களுடன், மனைவி மக்களுடன் வாழ விடுதலை வழங்கப்பட வேண்டும் எனவும் கோருகிறேன்.

யார் என்ன சொன்னாலும், பெரும்பான்மை இனத்தை சார்ந்த தீர்ப்பு வழங்கப்பட்ட மற்றும் விசாரணை கைதிகளுக்கான பொது மன்னிப்பு, விடுதலை என்பவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை மனித உரிமையாளர்களும், சர்வதேச சமூகமும் வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருக்கின்றன.

எனவே இவ்விவகாரம், தமிழ் கைதிகளின் பிரச்சினையையும் தேசிய அரங்குக்கு கட்டாயமாக கொண்டு வரும் எனவும் எதிர்பார்க்கின்றேன். இந்நிலையில், தமிழ் அரசியல்வாதிகளும், மனித உரிமையாளர்களும், இதை பயன்படுத்தி, நீண்டகால, தமிழ் கைதிகளின் பிரச்சினையையும் முன்னெடுக்க வேண்டும். அதற்கு எப்போதும் போல் நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்.

என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைனை அடுத்து இஸ்ரேலுக்கு சூடானும் அங்கீகாரம்!

பாலஸ்தீன பிரச்சினை காரணமாக, இஸ்ரேலுக்கும், பெரும்பாலான முஸ்லிம் நாடுகளுக்கும் நீண்ட காலமாக பகை நிலவி வருகிறது. எகிப்து, ஜோர்தானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளும் இஸ்ரேலை ஒரு நாடாகவே அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்வரை இஸ்ரேலை அங்கீகரிக்கக் கூடாது என்று அரபு லீக் அமைப்பு முடிவு செய்திருந்தன. இந்த நிலையில் படிப்படியாக பல நாடுகள் இஸ்ரேலின் சுதந்திரத்தை அங்கீகரிக்க ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக இந்த வருடம் ஆகஸ்ட் மாதமளவில் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாடுகள் இஸ்ரேலுக்கு அங்கீகாரம் அளித்திருந்தன. இந்த நிலையில் இஸ்ரேலுடன் நாட்டுடன் நல்லுறவை ஏற்படுத்த சூடான் முன் வந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையின் பலனாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுடன் தூதரக நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள சூடான் சம்மதம் தெரிவித்திருப்பதாக வொஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் அறிவித்தார்.

இதுதொடர்பாக தனது ஓவல் அலுவலகத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் சூடான் பிரதமர் அப்துல்லா ஹாம்டாக்குடன் ட்ரம்ப் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போதே, இந்த அறிவிப்பை செய்தியாளர்களிடம் அவர் வெளியிட்டார்.

இதற்கிடையே, பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சூடான் தலைநகர் கார்ட்டூமில் கடந்த 1967ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு லீக் மாநாட்டில், இஸ்ரேலுக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தற்போது அந்த சூடானே இஸ்ரேலுக்கு அங்கீகாரம் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் அமைதிக்கான புதிய யுகம் தொடங்கியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மையும் குறிப்பிடத்தக்கது.

“அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்திற்கு அனுமதியளித்து சபாநாயகர் கையெழுத்திட்டமை வரவேற்கத்தக்கது ” – முன்னாள் சபாநாயகர் பாராட்டு !

“அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்திற்கு அனுமதியளித்து சபாநாயகர் கையெழுத்திட்டமை வரவேற்கத்தக்கது ” என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த 22.10.2020 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய திருத்தச் சட்டம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

உலகிலேயே தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட உயர் அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி ஒருவரை இலங்கை கொண்டுள்ளது. இவ்வாறான மட்டற்ற உயர் அதிகாரங்கள் தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்தப்படாது என்று நம்புகின்றோம். அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்திற்கு அனுமதிளித்து சபாநாயகர் கையெழுத்திட்டமை வரவேற்கத்தக்கது என பதிவிட்டுள்ளார்.

கருஜயசூரிய அவர்கள் முன்னதாக கடந்த 22ஆம் திகதி தன்னுடைய டுவிட்டர் பதிவில் “1933ஆம் ஆண்டு ஜேர்மனிய நாடாளுமன்றம் கைகளைத் தூக்கி சர்வாதிகாரத்தை அங்கீகரித்தது எனவும் அவ்வாறான ஓர் தவறை எமது நாடாளுமன்றம் செய்து விடக்கூடாது” எனக்குறிப்பிட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.

“யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்கள் 30 ஆண்டுகளுக்கு பின்னரும் சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தப்படவில்லை” – கே.எம் நியாஸ்

யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்கள் மீளவும் குடியமர்த்துவதற்கான  ஒழுங்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளவில்லை என யாழ்  மாநகர சபை உறுப்பினர் கே.எம் நியாஸ்( நிலாம்) தெரிவித்துள்ளார்.

கடந்த யுத்த அனர்த்தம் காரணமாக 1990 ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்கள் 30 ஆண்டுகளுக்கு பின்னரும் சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தப்படவில்லை என்பதை கருத்திற்கு கொண்டு இனிவரும் காலங்களில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒக்டோபர் 25 ஆம் திகதியுடன் முஸ்லீம் மக்கள் இடம்பெயர்ந்த 30 வருட நிறைவை முன்னிட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றில் இவ்வேண்டுகோளை கேட்டுள்ளார்.

யாழ்.மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களிற்கு  தற்போது  எதுவும் ஒழுங்காக நிறைவேற்றப்படவில்லை.2010ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 9 வருடங்களாக நான் எமது மக்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளில் நான் கவனம் செலுத்தி வருகின்றேன் இதற்கு எமது  மக்கள்  சாட்சியாக இருக்கின்றார்கள்.முஸ்லிம் சமூகத்திலே பல  நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.

அவர்கள் தமக்கான அதிகார எல்லைகளைக் கொண்டிருக்கின்றார்கள்.கடந்த காலங்களில் பல  மீள்குடியேற்றத்திற்கான நடமாடும் சேவைகள் எனது  முயற்சியினால்  நடைபெற்றன.

இந்நடமாடும் சேவையின் ஊடாக    யாழ் முஸ்லிம் சமூகத்தின்   வீட்டுத்திட்டம் காணியற்றோரது பிரச்சினைகள் வாழ்வாதாரம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து நாம் தற்போது  தீவிர கவனம் செலுத்துகின்றோம் எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மக்களுக்கு சேவையாற்றுவதனை முதன்மை நோக்காக கொண்டு இருபதுக்கு ஆதரவளித்தேன்”- அ.அரவிந்த குமார்

மக்களுக்கு சேவையாற்றுவதனை நோக்காக கொண்டே 20 ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தாக பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று (25.10.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

பொதுஜன முன்னணி அரசாங்கம் எதிர்வரும் 10,15 வருடங்களுக்கு ஆட்சியில் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம். இவ்வாறு இருக்கும் போது எதிர்க் கட்சியில் இருந்துக் கொண்டு மக்கள் நலன்சார் விடயங்களை முன்னெடுக்க முடியாது. எதிர்க் கட்சியில் இருந்துக்கொண்டு வெறுமனே கொள்ளை அரசில் பேசிக்கொண்டிருக்க முடியாது. கடந்த தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியுள்ளேன். அவ்வாறு வழங்கப்பட்ட உறுதிமொழியை காப்பாற்ற வேண்டிய தேவையும், அவசியமும் உள்ளது.

இதனை எதிர்க் கட்சியில் இருந்து நிறைவேற்ற முடியாது. ஆகவே மக்களுக்கு சேவையாற்றுவதனை முதன்மை நோக்காக கொண்டு இருபதுக்கு ஆதரவளித்தேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒருபுறமிருக்க மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்னிணியின் அரசியல் பிரிவுத் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாருக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

லங்கன் பிரிமியர் லீக் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி வீரர்கள் அறிமுகமும் ஊடகவியலாளர் சந்திப்பும் !

லங்கன் பிரிமியர் லீகில் விளையாடவுள்ள அணிகளில் ஒன்றான யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியின் (Jaffna Stallions) அறிமுகம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம்(26.10.2020) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியின் இணைப்பாளர் G.வாகிசேன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று வீரர்களின் அறிமுகமும் இடம்பெற்றிருந்தது. யாழ்.பரியோவான் கல்லூரி மற்றும் யாழ்.மத்திய கல்லூரியின் வீரர்களான வி.வியஸ்காந்த், தி.டினோஷன் மற்றும் க.கபில்ராஜ் ஆகியோரே அணியில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LPL will boost interest and offer opportunities for youngsters,Jaffna team  owners

இன்று இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ் மாநகர சபை முதல்வர் இ.ஆனல்ட் , யாழ் கிரிக்கெட் சம்மேளன தலைவர் நிசாந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு அளித்த அ.அரவிந்தகுமாரை கட்சியிலிருந்து இடைநிறுத்திய முடிவுக்கு எம்.ஏ.சுமந்திரன் வரவேற்பு !

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்னிணியின் அரசியல் பிரிவுத் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாருக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

20 ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக அவருக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்குவதற்கும், அவர் வழங்கும் பதிலின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிலையில் ,ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்குமாரை  இடைநிறுத்துவதற்குத் தமிழ் முற்போக்கு கூட்டணி எடுத்துள்ள முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கூறியதாவது:-

“அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்குமாரை தமிழ் முற்போக்குக்  கூட்டணியில் இருந்து இடைநிறுத்துவதற்கு மனோ கணேசன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த முடிவை வரவேற்கின்றோம். அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் உரிய முடிவை எடுக்கவேண்டும்.அவ்வாறு இல்லாவிட்டால் ஹக்கீமும் ரிஷாத்தும் இரட்டை வேடம் போடுகின்றனரா? என்ற சந்தேகம் எழும். அதேபோல் இணைந்து பயணிப்பதிலும் சிக்கல் உருவாகும்” – என்றார்.