January

January

“நேர்மையான மனிதனுக்கு ஒரு முகமே இருக்க முடியும் . கோட்டாபாய எண்ணும் அந்தக் காலம் மலையேறி விட்டது” – ஜனாதிபதிக்கு அநுர குமார திசாநாயக்க பதிலடி !

“நேர்மையான மனிதனுக்கு ஒரு முகமே இருக்க முடியும் . கோட்டாபாய எண்ணும் அந்தக் காலம் மலையேறி விட்டது” என ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனக்கு இரு வேறு முகங்கள் இருப்பதாகவும் தேவைப்பட்டால் ‘கடுமையான’ பக்கத்துக்கு மாறி தன்னால் தண்டனைகளைக் கொடுக்கவும் முடியும் எனும் தொனியில் அம்பாறையில் வைத்து ஜனாதிபதி வெளியிட்ட கடுமையான கருத்தை கண்டித்து பேசும் போதே ஜே.வி.பியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஒரு ஜனநாயக நாட்டில் இவ்வாறு பேசுவது ஏற்புடையதல்ல. ஷதற்போதிருக்கும் பொருட்களின் விலையுயர்வு, கொரோனா தடுப்பு மருந்தின் இறக்குமதி செலவு அதிகரிப்பு என பல்வேறு காரணங்களுக்காக ஜனாதிபதிக்கு வெறுப்பும் கோபமும் இருக்கலாம். ஆனால், அதனை பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் தெரிவிக்கும் கலாசாரத்துக்கு இடமளிக்க முடியாது.

ஜனாதிபதியின் கருத்துக்கள் தனது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக ஹரின் பெர்னான்டோ ஏலவே பொலிசில் முறையிட்டுள்ள அதேவேளை ஹரினுக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு கோட்டாபய ராஜபக்சவே பொறுப்பென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, நேர்மையான மனிதனுக்கு ஒரு முகமே இருக்க முடியும் எனவும் கோட்டாபாய எண்ணும் அந்தக் காலம் மலையேறி விட்டதெனவும் அநுரகுமார தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வாசுதேவவுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயதனிமைப்படுத்தலில் !

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவருடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களாக 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிசிஆர் சோதனைக்கு உட்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் சுயதனிமைப்படுத்தலுக்கும் உள்ளாகியுள்ளனர்.

அமைச்சர் வாசுதேவ 2021ஆம் ஆண்டின் தொடக்கக் கூட்டத் தொடரின் நான்கு நாள் அமர்வுகளிலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரபரப்பான ஆட்டத்தை வெற்றி தோல்வியின்றி சமன் செய்தது இந்தியா !

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று முடிந்தது.

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி, வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்துள்ளது.

சிட்னி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 338 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்டீவ் ஸ்மித் 131 ஓட்டங்களையும் மார்னஸ் லபுஸ்சேகன் 91 ஓட்டங்களையும் வில் புகோவ்ஸ்கி 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, 244 ஓட்டங்களை பெற்றது. இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுப்மான் கில் மற்றும் புஜாரா ஆகியோர் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹெசில்வுட் 2 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டாக் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 94 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதனால் இந்தியா அணிக்கு 406 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக கேமரூன் கிரின் 84 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஸ்மித் 81 ஓட்டங்களையும் மார்னஸ் லபுஸ்சேகன் 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவிச்சில், நவ்தீப் சைனி மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, போட்டியின் இறுதிநாள் வரை 334 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுகளை இழந்து களத்தில் தாக்குபிடித்தது. வெற்றி இலக்குக்கு 72 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்த நிலையில், இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலைப் பெற்றது.

இதன்போது இந்திய அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப் பந்த் 97 ஓட்டங்களையும் செடீஸ்வர் புஜாரா 77 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அஸ்வின்- விஹாரி பொறுப்பான ஆட்டம்... ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி டிரா

ஹனுமா விஹாரி 161 பந்துகளுக்கு 23 ஓட்டங்களுடனும், அஸ்வின் 128 பந்துகளுக்கு 39 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இறுதிவரை களத்தில் இருந்து  போட்டியின் போக்கை மாற்றியமைத்தனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், ஜோஸ் ஹசில்வுட் மற்றும் நாதன் லியோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் 131 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 81 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட அவுஸ்ரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டார்.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், அவுஸ்ரேலிய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ள நிலையில், தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இறுதி டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 15ஆம் திகதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.

“யார் யாரெல்லாம் எப்படி எம்மை ஆளப்போகிறார்கள் என்கிற அச்சம் மிகுந்த சூழ்நிலையில்த்தான் நாம் இருக்கிறோம்” – சிறிதரன்

“யார் யாரெல்லாம் எப்படி எம்மை ஆளப்போகிறார்கள் என்கிற அச்சம் மிகுந்த சூழ்நிலையில்த்தான் நாம் இருக்கிறோம்” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மிகமுக்கியமாக இன்றைய காலகட்டம் என்பது எல்லோருக்குமே ஒரு அச்சம் மிகுந்த சூழ்நிலையைத்தந்திருக்கிறது. இன்று என்ன நடக்கிறது நாளை நாளை மறுதினம் என்ன நடக்கும் என்ற கேள்விகளோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

அடையாளத்தை தொலைத்த மனிதர்களாக அடையாளம் அற்ற மனிதர்களாக நாம் வாழவேண்டிய காலம் வருமோ? அல்லது யார் யாரெல்லாம் எப்படி எம்மை ஆளப்போகிறார்கள்? என்கிற அச்சம் மிகுந்த சூழ்நிலையில்த்தான் நாம் இருக்கிறோம்.

இந்த வேளையில் நான் இளைஞர்களை கோருவது இந்ம மண்ணிலே நாம் தமிழ்த்தேசிய இனமாக எங்கள் அடையாளத்தை தொலைத்து விடாமல் நிமிர்ந்து வாழ்கின்ற இனமாக உணர்வுகள் சூழ்ந்த இனமாக இந்த மண்ணிலே நாம் வாழவேண்டும்.

யாழ்ப்பாணம் இந்துக்கலர்லூரியின் மாணவன் ஒருவன் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த மாணவனிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு உணர்வு என்பது என் உள்ளத்தில் மட்டும் இருந்து வந்தால் போதுமானது தாய்தந்தையிரிடம் கேட்கவேண்டும் என்று நான் யோசிக்கவில்லை. இங்கே எனது இனம் அழிக்கப்படுகிறது. என் இனத்தின் அடையாளங்கள் தொலைக்கப்படுகிறது அதனால் இந்தப்போராட்டத்தில் குதித்து இருக்கின்றேன் என்றும் குறிப்பிட்டிருந்தான்.

இந்த செய்தியெல்லாம் நாங்கள் இன்னும் இன்னும் எத்தனையோ இடர்களை சந்திக்கப்போகின்றோம்.சிங்கள பௌத்த அரசுகளால் சூழப்பட்டுள்ள இந்த நிலை மிகப் பெரிய கேள்விகளை எங்கள் முன்னால் வைத்திருக்கிறது. இவற்றுக்கெல்லாம் அஞ்சாது சோரம் போகாதவர்களாக வாழவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

“யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட நினைவுத்தூபி அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் என்பதால் அது அகற்றப்பட்டது” – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

“யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட நினைவுத்தூபி அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் என்பதால் அது அகற்றப்பட்டது” என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர்,

“ஒரு பொது விதி உள்ளது. அது சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் எந்தவொரு பல்கலைக்கழக வளாகத்திலும் எந்தவொரு நினைவுச்சின்னத்தை அல்லது சிலையை அமைக்க முடியாதென அது கூறுகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்த நினைவுத்தூபி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி கட்டப்பட்ட ஒன்றாகும் என்பதால் அதை அகற்ற வேண்டியிருந்ததாக அமைச்சர் கூறினார்.

இந்த நினைவுத்தூபி ஒரு சட்டவிரோத கட்டுமானம் என்பதால் அது குறித்து வாதிடுவதில் எந்தப் பயனும் இல்லை” என்றும் அவர் மேலும் கூறினார்.

“ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கினை தொடர்ந்து நடாத்தமுடியாது” – சட்டமா அதிபர் திணைக்களம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கினை தொடர்ந்து நடாத்தமுடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் எதிர்வரும் புதன்கிழமை குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்  நாடாளுமன்ற  உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

ஐந்து பேரும் தொடர்ந்து விளக்கமறிலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் 2015ஆம் ஆண்டு தாங்கள் கைதுசெய்யப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் பெறப்பட்ட 1ஆம் 02ஆம் எதிரிகளின் வாக்கு மூலமானது சுயேட்சையாக வழங்கப்படவில்லை, தூண்டுதல் அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த வாக்குமூலத்தினை வழங்கியிருந்தார்கள்,பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் நேரடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் வழங்கியிருந்ததாக தெரிவித்து மேன் முறையீட்டு நீதிமன்றில் செய்யப்பட்ட மீளாய்வு விண்ணப்பித்ததன் பிரகாரம் குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தினை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தன் அடிப்படையில் 24ஆம் திகதி மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் ஒப்புதலின் பேரில் பிணை வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று குறித்த வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கினை தொடர்ந்து நடாத்தமுடியாது என்ற அறிவிப்பினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திகாந்தன் தெரிவித்தார். இதனடிப்படையில் குறித்த வழக்கின் தீர்ப்பு நாளை மறுதினம் புதன்கிழமை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்ற தீர்ப்பு வரும் எனவும் தெரிவித்தார்.

“விடுதலைப்புலிகளை நினைவேந்தும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை முழுமையாக இடித்தழிக்க வேண்டும்” – அமைச்சர் விமல் வீரவன்ச

“விடுதலைப்புலிகளை நினைவேந்தும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை முழுமையாக இடித்தழிக்க வேண்டும்” என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்ற வகையில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி யாழ். பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்டிருந்த தூபியைத் துணைவேந்தர் இடித்து அகற்றியுள்ளார். இது அவரின் தற்துணிவை எடுத்துக்காட்டுகின்றது.

இறுதிப்போரில் மரணித்த பொதுமக்களை நினைவேந்தும் தூபி என்ற பெயரில் அங்கு அமைக்கப்பட்டிருந்தது புலிகளை நினைவேந்தும் தூபியேயாகும். இதைப் பல்கலைக்கழத்தில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. அதற்கமைய நல்லதொரு தீர்மானம் எடுத்து அந்தத் தூபியைத் துணைவேந்தர் இடித்துள்ளார்.

மூவின மாணவர்களின் நன்மை கருதி இந்தத் தீர்மானத்தை அவர் எடுத்திருப்பார் என நான் நினைக்கின்றேன். எனவே, மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கல்வியைத் தொடர வேண்டும்.

மரணித்த தமிழீழ விடுதலைப்புலிகளைத் தூபிகள் அமைத்தோ அல்லது பகிரங்க நிகழ்வுகள் நடத்தியோ நினைவேந்துவது நாட்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெரும் குற்றமாகும். எனவே, விடுதலைப்புலிகளை நினைவேந்தும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை முழுமையாக இடித்தழிக்க வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹர்த்தாலால் முடங்கிப்போன தமிழர் பகுதிகள் !

யாழ் பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் காரணமாக தமிழர் வாழ் பகுதிகள் பலவும் இன்றையதினம் ஹர்த்தால் காரணமாக முடங்கிப்போயுள்ளது. மக்கள் அனைவரும் இன்றைய ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு வழங்கியுள்ளதையும் காணமுடிகின்றது.

IMG 20210111 WA0032

இன்றைய போராட்டத்திற்கும் யாழ்ப்பாண மக்களும் தமது பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதோடு வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்படுகின்றது.அரச பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.அத்தோடு பாடசாலையின் கல்வி செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

29e40265 529e 4a14 8769 1b4924c83716

கிளிநொச்சியும்முடங்கியுள்ளது. கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன, அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுப்பட்டிருந்தன.

 

IMG 20210111 092422

வவுனியா நகரில் சில வியாபார நிலையங்கள் கொவிட்-19 தொற்று காரணமாக ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் ஏனைய வியாபார நிலையங்கள் பொதுச்சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. நகரை அண்டிய பகுதிகளான பூந்தோட்டம், குருமன்காடு, கோவில்குளம் போன்ற இடங்களில் அனைத்து வியாபார நிலையங்களும் முழுமையாக மூடப்பட்டிருந்தது.

நினைவுத்தூபி இடிக்கப்பட்ட இடத்தில் இடப்பட்டது புதியதூபிக்கான அடிக்கல் !

யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியைக் கட்டுவதற்குத் துணைவேந்தர் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளதை அடுத்து உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நிறைவு செய்வதற்குச் சம்மதித்துள்ளார்கள்.

Image may contain: one or more people, people standing and outdoor

இன்று அதிகாலை 3 மணியளவில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்தித்த மாணவர்களைச் சந்தித்த துணைவேந்தர் இந்த வாக்குறுதியை வழங்கியிருக்கிறார்.

அதன் படி இன்று காலை முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

“நான் நந்தசேனா கோட்டாபய, இது ஒரு நல்ல பெயர். எனது கதாபாத்திரத்திற்கு இரண்டு பக்கங்களும் உள்ளன” – ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷ

“நான் நந்தசேனா கோட்டாபய, இது ஒரு நல்ல பெயர். எனது கதாபாத்திரத்திற்கு இரண்டு பக்கங்களும் உள்ளன” என ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (09) காலை அம்பாறை, உஹனவில் உள்ள லாத்துகல கிராமத்தில் இடம்பெற்ற “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

மகா சங்கத்தினர் உட்பட மக்கள் தான் ஜனாதிபதியாக வருவதற்கு முன்பு இருந்த பாதுகாப்பு செயலாளரின் வகிபாகத்தை எதிர்பார்க்கின்றனர். பித்தளை சந்தியில், புலிப் பயங்கரவாதிகள் என்னை இலக்குவைத்து தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தினர். அதைச் செய்த பயங்கரவாதத் தலைவருக்கு நேர்ந்த கதியை மக்கள் அறிவார்கள்.

நான் நந்தசேனா கோட்டாபய, இது ஒரு நல்ல பெயர். எனது கதாபாத்திரத்திற்கு இரண்டு பக்கங்களும் உள்ளன.நான், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவாகவே இருக்க வேண்டும் என சில தேரர்கள் விரும்புகின்றனர். அத்துடன், நான் கொஞ்சம் கடினமாக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள், அந்த கதாபாத்திரங்களில் ஒன்றைச் செயல்படுத்த நான் தயாராக இருக்கிறேன். நான் எதற்கும் தயாராக இருக்கிறேன். எவ்வாறாயினும், மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் மக்களுக்காக உழைக்க விரும்புகிறேன்.

நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அல்லது கோட்டாபய ராஜபக்ஷ என்ற எந்த ஆளுமைக்கு ஏற்பவும் செயற்பட தயார் என்ற போதும், எதிர்க்கட்சி போன்று மோசமான அரசியலுக்கு தான் தயாராக இல்லை

தவறு செய்தவர்களைத் தண்டிப்பது சட்டத்தின் கடமையாகும். அதில் தலையிட்டு முந்தைய அரசாங்கம் செய்ததைப் போல அரசியல் பழிவாங்க தான் தயாராக இல்லை மக்களை தவறாக வழிநடத்தாமல் நியாயமான அரசியலில் ஈடுபடுமாறு எதிர்க்கட்சியிடம் கேட்டுக்கொள்கிறேன் ” என அவர் குறிப்பிட்டிருந்தார்.