11

11

“நான் நந்தசேனா கோட்டாபய, இது ஒரு நல்ல பெயர். எனது கதாபாத்திரத்திற்கு இரண்டு பக்கங்களும் உள்ளன” – ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷ

“நான் நந்தசேனா கோட்டாபய, இது ஒரு நல்ல பெயர். எனது கதாபாத்திரத்திற்கு இரண்டு பக்கங்களும் உள்ளன” என ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (09) காலை அம்பாறை, உஹனவில் உள்ள லாத்துகல கிராமத்தில் இடம்பெற்ற “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

மகா சங்கத்தினர் உட்பட மக்கள் தான் ஜனாதிபதியாக வருவதற்கு முன்பு இருந்த பாதுகாப்பு செயலாளரின் வகிபாகத்தை எதிர்பார்க்கின்றனர். பித்தளை சந்தியில், புலிப் பயங்கரவாதிகள் என்னை இலக்குவைத்து தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தினர். அதைச் செய்த பயங்கரவாதத் தலைவருக்கு நேர்ந்த கதியை மக்கள் அறிவார்கள்.

நான் நந்தசேனா கோட்டாபய, இது ஒரு நல்ல பெயர். எனது கதாபாத்திரத்திற்கு இரண்டு பக்கங்களும் உள்ளன.நான், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவாகவே இருக்க வேண்டும் என சில தேரர்கள் விரும்புகின்றனர். அத்துடன், நான் கொஞ்சம் கடினமாக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள், அந்த கதாபாத்திரங்களில் ஒன்றைச் செயல்படுத்த நான் தயாராக இருக்கிறேன். நான் எதற்கும் தயாராக இருக்கிறேன். எவ்வாறாயினும், மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் மக்களுக்காக உழைக்க விரும்புகிறேன்.

நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அல்லது கோட்டாபய ராஜபக்ஷ என்ற எந்த ஆளுமைக்கு ஏற்பவும் செயற்பட தயார் என்ற போதும், எதிர்க்கட்சி போன்று மோசமான அரசியலுக்கு தான் தயாராக இல்லை

தவறு செய்தவர்களைத் தண்டிப்பது சட்டத்தின் கடமையாகும். அதில் தலையிட்டு முந்தைய அரசாங்கம் செய்ததைப் போல அரசியல் பழிவாங்க தான் தயாராக இல்லை மக்களை தவறாக வழிநடத்தாமல் நியாயமான அரசியலில் ஈடுபடுமாறு எதிர்க்கட்சியிடம் கேட்டுக்கொள்கிறேன் ” என அவர் குறிப்பிட்டிருந்தார்.