பிரான்ஸினால் நடமாடும் மருத்துவமனை அன்பளிப்பு!

france.jpgபுலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் பொதுமக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக நடமாடும் மருத்துவமனையொன்றை பிரான்ஸ் அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

100 கட்டில்களைக் கொண்ட இந்த நடமாடும் மருத்துவமனை விமானம்மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன்  75 பேரைக் கொண்ட பிரான்ஸ் நாட்டின்  மருத்துவர்கள் குழுவொன்றும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • ramesh
    ramesh

    இலங்கைத்தமிழர்கள் இரண்டு யுக அகதிவாழ்வில் எத்தனையோ அரச சார்பற்ற வெளிநாட்டு உதவி அமைப்புகளை சந்தித்துள்ளார்கள். அவைகளுள் உண்மையாகவும் திறமாகவும் செயலாற்றிய ஒரேயொரு அமைப்பு பிரான்சு நாட்டின் எல்லைகளற்ற மருத்துவ சேவையான -எம்.எஸ்.எவ்- அமைப்பு மட்டுமே. இலங்கைத் தமிழர்கள் என்றும் இவர்களுக்கு நன்றியுள்ளவர்கள்.பிரான்ஸ் நாட்டுக்கும் நன்றி.

    Reply