கனரக ஆயுதத்தாக்குதல் நடத்தப்படமாட்டாது என்ற வாக்குறுதியினை அரசு மீறியுள்ளது : பிரிட்டன் வெளியுறவு அமைச்சரிடம் கூட்டமைப்பு தெரிவிப்பு

samthan-2.jpgபாதுகாப்பு வலயப் பகுதி மீது கனரக ஆயுதத்தாக்குதல் நடத்தப்படமாட்டாது என்ற வாக்குறுதியினை அரசாங்கம் மீறியுள்ளது. தமிழ் மக்களை இதுவரை ஏமாற்றிய அரசாங்கம் முழு உலகத்தையும் தற்போது ஏமாற்றி வருகின்றது. இத்தகைய நிலையில் இனியும் சர்வதேச சமூகம் வேடிக்கை பார்க்கக்கூடாது. உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்டிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய வெளிவிகார அமைச்சர் டேவிட் மிலிபான்டை இன்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தச் சந்திப்பின்போது கடந்த ஜனவரி மாதம் முதல் வன்னியில் பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏராளமானோர் காயமடைந்துமுள்ளனர். இந்த நிலையில் சர்வதேச சமூகம் சரியான முறையில் நடவடிக்கை எடுக்காமை கவலையளிக்கின்றது. இலங்கையில் ஆட்சிசெய்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல உறுதிமொழிகளை வழங்கியபோதும் அவற்றைக் காப்பாற்றவில்லை. தற்போது சர்வதேச சமூகத்திற்கு வழங்கும் உறுதிமொழிகளையும் அரசாங்கம் நிறைவேற்றத் தவறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    என்ன சம்பந்தன் ஐயா இப்ப கூத்தமைப்பிற்குள்ளும் சண்டை நடக்கிறதாமே?? அதிலும் சில கூத்தமைப்பினர் கனரக ஆயுதங்களை (கடுமையான வார்த்தைப் பிரயோகம்) பாவித்து தங்கள் மீது தாக்குதல் நடாத்துகின்றார்களே? எப்போ இந்தச் சண்டை ஓயும்.

    Reply
  • msri
    msri

    இதைத்தான் கலைஞரும் போர்நிறுத்தமென சிதம்பரம் சொல்ல> தனது “மினி உண்ணாவிரதப் போரை” நிறுத்தியவர்!

    Reply