சங்குப்பிட்டியில் இரும்புப் பாலம்!

Mahinda Rajapaksaநாவற்குழி காரைதீவு மன்னார் ஊடாகச் செல்லும்  ஏ32  வீதியில் படகுச்சேவை நடைபெறும் சங்குப்பிட்டிப் பகுதியில் தடையின்றி வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் இரும்புப் பாலம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட நிர்மானப்பணிகளை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில்  இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். இதற்கு 150 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியம் ஊடாக அந்தத் தொகையை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • kullan
    kullan

    நீங்கள் கட்டிப்போட்டு புலிகளைக் கலைத்துக்கொண்டு திரியுங்கோ. புலிகள் குண்டுவைத்துத் தகர்க்கட்டும். நாட்டில் ஒரு சுமூகநிலையைக் கொண்டு வரமுடியவில்லை. வெளிநாட்டுக்காசுகளில் குசியடியுங்கோ

    Reply
  • tax
    tax

    பல கோடி திட்டமுடைய இந்த பாலம் போடும் பணிக்கு ஈபிடிபி செயலாளர் நாயகம் வடக்கின் வசந்தநாயகன் தனது சகோதரன் மூலமாக கேள்விகோரலை முடித்துவிட்டதாக அறியப்படுகிறது. வடக்கின் வசந்தநாயகனுக்கு நல்ல விளைச்சல்.

    Reply
  • சங்கு
    சங்கு

    எடுக்கிற காசில swimming pool கட்டாட்டிச்சரி

    Reply
  • sivaji
    sivaji

    பிரபா அனுபவிச்ச அளவு விளைச்சல் ஒருத்தருக்கும் கிடைக்காது.

    Reply