வணங்காமண் நிவாரணபொருட்களை தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு வழங்க வேண்டும் – பழ. நெடுமாறன்

ships000.jpgஇலங்கை அரசு திருப்பி அனுப்பிய கப்பலில் உள்ள நிவாரணப் பொருள்களை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வழங்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வணங்காமண்’ என்ற கப்பலில் ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்களை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது.

அந்தப் பொருட்களை இலங்கை அரசு இறக்கிக் கொள்ள வலியுறுத்துமாறு அப்போதே மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்க வேண்டும். இப்போது கப்பல் திரும்பிவிட்ட நிலையில் மறுபடி சென்றாலும் இலங்கையில் அப்பொருட்களை இறக்க முடியாது.

கப்பல் சென்னைக்கு வந்த பிறகு மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதுவதில் பயன் இல்லை. அந்தப் பொருட்கள் வீணாகிப் பழுதடைந்து போக வழி ஏற்பட்டுவிடும். எனவே, கப்பலில் உள்ள நிவாரணப் பொருள்களை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வழங்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும். என அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • rony
    rony

    வணங்காமண் கப்பல் நிவாரணப்பொருகளை இலங்கைத்தமிழர்களுக்கு வழங்குவதற்கு முன்பு,அக்கப்பலில் வேலை செய்யும் மாலுமிகளுக்கு குடிக்க தண்ணீரும் உண்ண உணவும் கொடுத்து அவர்களின் உயிர்களை காப்பாற்றி, சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க குரல் கொடுக்க நெடுமாறன் ஐயா அவர்ககள் ஆவன செய்வார்களா? -புண்ணியம் செய்ய காசிக்கு போகவேண்டியதில்லை. வணங்காமண் கப்பல் பக்கம் போனாலே போதும்….S.O.S….

    Reply
  • nantha
    nantha

    Oh! Please Do something before the food damaged. It doesnt matter whose getting benifit. BTF please dont try to do such thing in your life.

    Reply
  • accu
    accu

    வணங்காமண் பொருட்களை நெடுமாறனிடம் கொடுத்தால் அவர் பெட்டிக்கடை போட்டு தன் காலத்தை ஓட்டிவிடுவார். பாவம் இனி அவருக்கும் பிழைப்புக்கு வழி வேணும்தானே!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அடுத்தவருக்கு புத்தி சொல்வதற்கு முதல், நெடுமாறன் இலங்கை தமிழ்மக்களுக்கென்று முன்பு சேகரித்த 2 கோடி ரூபா பெறுமதியான பெர்ருட்களை என்ன செய்தார் என்ற விபரத்தையும் கூறலாமே??

    Reply
  • palli.
    palli.

    பார்த்திபன் அதுதான் ஜந்தாவது ஈழ சதிராட்டத்துக்கு முதல் பணம்; கைசெலவுக்கு நோட்டிஸ்க்கு, மைக்கு; ஸ்பீக்கர்; தொண்டர், சோடா; பொன்னாடை, விக்கினால் தண்ணி; எறிவதுக்கு செருப்பு, பிரபாவுடன் விண்வெளிக்கு பேச தொழில் நுட்ப்பம் வாய்ந்த தொல்லை பேசி; புகை படம்; வீடியோவும் வேண்டும் தானே, செல்லாபாவுக்கு இரு பாடல் இப்படி பல செலவு இருக்கும்போது பார்த்திபன் இப்படி கேக்கலாமா? அது முறையா? நியாயமா? நீதியா?

    Reply
  • மாயா
    மாயா

    பல்லியில் எனக்கொரு சந்தேகம். உண்மையில் பல்லி எந்தக் கட்சி? ஒன்றுமா விளங்குதில்லை. சொல்வீர்களா?

    பல்லி
    1. தமிழீழத்தை ஆதரிக்கிறீர்களா? இல்லையா?
    2. இலங்கை பிரச்சனை தீர்க்க என்ன செய்யலாம்?
    3. இந்தியாவில் யாரை நம்பலாம்?
    4. புலத்தில் போராட்டங்கள் தேவையா? தேவையில்லையா?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலிகள் சட்டம் ஒழுங்கை மதிக்காதவர்கள் சர்வதேசிய சட்டத்தையெல்லாம் ஒரு கிடப்பில் போட்டுவிட்டு தமக்கென ஒரு சட்டத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள். “அடங்காமாடுகள்” என்று சொன்னால் அது சரியாகவே இருக்கும்.

    இதில் புணர்வாழ்வு கழகமோ வெண்புறாவோ அதனுடன் சேர்ந்த இணைஅமைப்புகளுக்கும் இதே கதிதான். பணம் பொருள் வரவுசெலவு கணக்குகள் கிடையவே கிடையாது கிடைத்தால் அது வேறு கொப்பி. துருவித்துருவி கேட்டால் எல்லாருக்கும் எல்லா விஷயங்களையும் சொல்ல முடியாது இதுசட்டச் சிக்கலை ஏற்படுத்தும் ரகசியமானது என்று போடுபோட்டு வாய்யடக்கப் பண்ணிவிடுவார்கள்.இப்படி வளர்ந்து வந்ததவர்களே இவர்கள். வணங்காமண் வேலைத்திட்டம் காலநேரம்பயணம் வெவ்வேறானவை.பிரச்சனை எடுக்கவேண்டும் என நினைத்தவர்கள் நடந்துமுடிந்த பிரச்சனை வேறுவிதமாக இருந்தது.

    கப்பல்நிவாரண பொருட்கள் அனுமதிமறுக்கப்பட்டதை நினைத்து மனம்வருந்தியதில் நானும் ஒருவன். ஆனால் இலங்கை-இந்திய அரசுகள் எடுத்தமுடிவுகள் சரியானவையே! புலிகளோ மூர்த்தியோ பொதுநலசேவை என்றுசொல்லி நன்கொடைகளை எதிர்பார்த்து மக்களை நெருங்கமுடியாது. கடலில் கொட்டப்பட்டாலும் இதில்நஷ்டம் அடையப்போவது தமிழ்மக்கள்அல்ல. மனிதநேயம் கொண்டவர்கள் வேறுமுறையில்
    அணுகி தமதுகடமையை செய்துகொண்டேயிருப்பார்கள். நஷ்டம் அடையப்போவது “பிழைப்புவாதிகளே”.

    Reply
  • சந்தனம்
    சந்தனம்

    சற்று முன் கிடைத்த செய்தி வணங்காமண் கப்பல இந்தியகடற்படை அனுமதிமறுப்பு வேறுநாட்டை நோக்கி நகர்வு.பல்லி தலைவனின் வழிநடத்தலில் அம்மானிற்கு உதவியாக பல தளபதிகளை கண்ட யாம்பவான் சிலதளபதிகளை விசாரனைக்குட்படுத்தியவர் தமிழ்ழம் என்றகனவுடன் வாழ்ந்துவெறுத்து துறவியாகி அறிவின் எழுத்துபிரதிவிடுபவராகவும் அன்மையில் பல அச்சுறுத்தல் நெடியவரின் அடியாட்கள் முலம் பயமுறுத்தபட்டுள்ளார்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    மாயா இந்த கேள்வியை மட்டும் நீங்கள் கேட்கக்கூடாது. கேள்விக்கிற உரிமை மட்டுமே அவருக்கு உண்டு ஏன்தெரியுமா? “பரமசிவன் கழுத்தில் இருக்கிற பாம்பு”. இனிபுரிந்து கொள்வது அவ்வளவு கஷ்ரம் இருக்காது என நினைக்கிறேன்.

    Reply
  • palli.
    palli.

    மாயா எனக்கே என் மீது சந்தேகம். தொடங்கி பலநாள்: இருபினும் தங்களது கேள்விகளுக்கு என்னால் சரியான பதில்தர முடியுமா தெரியவில்லை:
    //1. தமிழீழத்தை ஆதரிக்கிறீர்களா? இல்லையா?
    இது 1982ல் கேக்க வேண்டிய கேள்வி காலம் கடந்து கேப்பதால் எனக்கு பதில் தெரியவில்லை:

    //2. இலங்கை பிரச்சனை தீர்க்க என்ன செய்யலாம்?
    ப் பல்லியின் கருத்து இதை பெரிதுபடுத்த வெண்டாம்; புலம்பெயர் தமிழர் மூடியிட்டு இருக்க வேண்டும்:

    //3. இந்தியாவில் யாரை நம்பலாம்?
    கண்டிப்பாக எந்த தலமையையும் இல்லை மக்களை மக்களை மக்களை:

    //4. புலத்தில் போராட்டங்கள் தேவையா? தேவையில்லையா?
    இங்கேதான் மாயா பல்லியை கடுப்பு ஏத்துகிறியள் உங்க கேள்வியே தேவை இல்லை என்பது இந்த மூடனின் கருத்து மட்டுமல்ல. அவாவும் கூட;

    //அன்மையில் பல அச்சுறுத்தல் நெடியவரின் அடியாட்கள் முலம் பயமுறுத்தபட்டுள்ளார்.//
    சந்தானம் பொட்டரையா அல்லது…………. புரியவில்லை இதில் சந்தானதின் கேள்வி தவறா? அல்லது பல்லியின் புரிந்துணர்வு தவறா? என பல்லி குளம்புவது தவறா???

    Reply
  • palli.
    palli.

    // மாயா இந்த கேள்வியை மட்டும் நீங்கள் கேட்கக்கூடாது. கேள்விக்கிற உரிமை மட்டுமே அவருக்கு உண்டு ஏன்தெரியுமா? “பரமசிவன் கழுத்தில் இருக்கிற பாம்பு”. இனிபுரிந்து கொள்வது அவ்வளவு கஷ்ரம் இருக்காது என நினைக்கிறேன்.//
    சந்திரா தங்களை போல் சிவப்பு மட்டை புத்தகங்களை படித்து பின்னோட்டம் விடும் ஆசாமி அல்ல பல்லி; விடுப்பு பாத்து பகிரங்கபடுத்துபவன் என்பதை புரிந்து கொள்ளுங்கள்;
    //பரமசிவன் கழுத்தில் இருக்கிற பாம்பு”.//
    தவறு பரமசிவன்; பாம்பு பற்றி கூட பின்னோட்டம் விட கூடிய யதார்த்தவாதி;

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பல்லி! மாடுகள் கறுப்புகுடை கண்டாலும் மிரளுதுகள் சிகப்பைகண்டாலும் மிரளுதுகள். மனிதர்கள் அப்படி செய்யலாமா? சிகப்பு என்றால் என்ன அர்த்தம்? இரத்தம் அல்லவா? மனித உழைப்பல்லவா? இந்த உழைப்பு தான் செல்வமாக மாறுகிறது. இந்த செல்வத்தை தான் திருப்பிக் கேட்கிறோம் அடைய ஆசைப்படுகிறோம் இதில் என்ன தப்பு? அதற்கு “சிகப்புமட்டை” முத்திரையா?

    இந்த ஆசாமி எப்பவும் ராஜயபக்சா அரசை மிருகமாகவே பாசிஸ்ராகவே கணித்ததில்லை அதற்கு உரியவர் தாங்களும் அதற்கு சாட்சியாக இருக்கிற பின்னோட்டங்களுமே! இந்த மனிதன் மிருகத்தின் அதிகாரங்களை அழித்தொழித்து தமிழ்மக்களின் ஜனநாயக போராட்டத்திற்கு வழிவிட்டு தந்திருக்கிறது தமிழ்மக்களின் சகவாழ்வுக்காக…இதில்லிருந்து தெரியவில்லையா? நிறங்கள் கூடமாற்றங்களை கொண்டுவர முடியுமென்று. இனிமேல்லாகுதல் நிறத்தை பற்றி மட்டைகளை பற்றி நையாண்டி வார்த்தைகளை குறைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். இப்ப யார் சாமி? யார் ஆசாமி?

    Reply
  • palli.
    palli.

    அப்பாடா சந்திரா அசத்தீட்டீங்க; ஆனாலும் யதார்த்தம்???
    பல்லி எப்போது சிவப்பு மட்டைகாரரை அடையாளம் கண்டேன் தெரியுமா? 74 பேர் சேர்ந்து ஒரு கரகம் ஆட புறபட்டார்கள் அல்லவா (நீங்களும் தான் அது உங்கள் தனிசுகந்திரம்) அன்றுதான் சிவப்பின் மகிமை புரிந்து கொண்டேன், ஆக பாம்பில் தொடங்கி மாட்டில் முடிக்கும் அளவுக்கு தங்களிடம் இருப்பு இல்லையென்பது புரிகிறது; அன்றாட வாழ்க்கையே தத்துவம்தான்; அதுக்கு ஏன் இந்த திருகுதாளங்கள். பல்லியுடன் விவாதியுங்கள் வீம்பு எதுக்கு பல்லி கொழும்புக்கு கல் எறிந்தால் ……. வலிக்கலாமா??
    என்ன இது குழந்தைதனம்; பல்லியின் நையாண்டியிலும் கருத்து இருக்கும்; கருத்து இருக்கும்; அது தவறும்போது தேசம் தணிக்கை செய்துவிடும்; ஆக அந்த கவலை தங்களுக்கு வேண்டாம்; இப்போதும் ஆசாமி யார் என்பது பலருக்கு புரிய வாய்பிருக்கல்லவா??

    Reply