உருளைக் கிழங்கு வடிவத்தில் கொண்டுவரப்பட்ட 2.5 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது

ஒருகோடி 25 இலட்சம் ரூபா பெறுமதியான 21/2 கிலோகிராம் ஹெரோயினை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கொள்கலனில் உருளைக்கிழங்கு வடிவத்திலான 46 பெட்டிகளில் இந்த ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது.

இந்த உருளைக் கிழங்கு கொள்கலன் பாகிஸ்தான் கராச்சி துறைமுகத்திலிருந்து கடந்த ஞாயிறு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது சுங்கப்பகுதியின் உறுகொடவத்த புதிய பரிசோதனை நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே சுங்கப்பகுதியினரால்யினரால் கண்டுபிடிக்கப்பட்டள்ளது. இது தொடர்பில் போதைப் பொருள் ஒழிப்பு அத்தியட்சர் எம்.விக்கிரமரட்ண மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • virus
    virus

    இப்போதைப்பொருள் கடத்தலில் கூத்தமைப்பு மைனர்கள் யாருக்காவது ஏதாவது சம்மந்தம் இருக்குமா என்று ஆராயவேண்டியது மிக அவசியம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நியாயமான கேள்வி எனது வாழ்த்துக்கள் விரஸ்.

    Reply
  • palli.
    palli.

    //கூத்தமைப்பு மைனர்கள் யாருக்காவது ஏதாவது சம்மந்தம் இருக்குமா //
    அப்படி இருக்க வாய்ப்பில்லை; காரணம் பொருள் பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கு; ஆகவே பாகிஸ்தானுடன் கூதமைப்புக்கு சமரசம் கிடையாது; பாகிஸ்தானில் அவர்களுக்கு எதிராக கதைத்து விட்டு அங்குபோய் வியாபாரம் எல்லாம் செய்ய முடியாது; ஆக கூட்டி பெருக்கி பார்த்தால் ஆண்டவன் (அரசு) மீதுதான் பாகிஸ்தான் பாசம் அதிகம்; அதைவிட பலவிட்டு கொடுப்பும் இருநாடும் செயலபடும் என சொன்னது இதுதானோ என எண்ண தோன்றுகிறது; அரசின் வியாபாரத்தை அதிகாரிகள் பிடித்துவிடார்களா? அல்லது அதிகாரிகள் பண்டமாற்றை அரசு அமுக்கிவிட்டதா?எல்லாமே சிரிப்புதான்;

    Reply
  • மாயா
    மாயா

    பாகிஸ்தானில் இருந்து கடத்தல் போதைப் பொருள் வந்தால் பாகிஸ்தான் அரசு, இலங்கை அரசுக்கு அனுப்பியது என்று சிலர் துப்புத் துலக்கியதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. கிரிமினல்கள் என்னவெல்லாமோ செய்கிறார்கள்……?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    மாயா பார்த்திபன் தமிழ்மக்களின் நல்வாழ்விற்காக மிகவும் நெருங்கிவருகிறீர்கள்.
    உங்களுக்காக எனது நன்றிகள்.

    Reply
  • palli.
    palli.

    மாயா கூதமைப்பை நல்லவர்களோ அல்ல நீதியானவர்களோ என்பது அல்ல எனது கருத்து; அரசும் தவறான செயல்களுக்கு துனை போகும் திருட்டுதனங்கள் செய்யவும் சிலருக்கு உதவும்; இதை சொல்ல கிரிமினலுக்கு உள்ள துணிவு தேவையில்லை; ஒரு ஊடகவியாளனுக்கு உள்ள சிந்திக்கும் தன்மையில் ஒருவீதம் இருந்தாலே போதும்; அந்த ஒரு வீதம் பல்லிக்கு உண்டு என பல்லி நினைக்கிறேன், பல்லிதான் சொன்னேனே எல்லாமே சிரிப்புதான்;

    Reply
  • மாயா
    மாயா

    இலங்கையிலிருந்து (ஏனைய நாடுகிளிலும்தான்) ஆள் கடத்தல்கள் நடக்கின்றன. அதாவது ஏஜென்சி வழி தமிழர்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு வருகிறார்கள். நம்மில் பலர் அப்படி வந்திருக்கிறோம். இதற்கு எந்த நாடு பொறுப்பு?

    Reply
  • msri
    msri

    பல்லி சொல்லியுள்ளதை வைத்துப் பார்க்கும்போது> அரசு பாகின்தான் பாசத்தை பயன்படுத்தி> உந்த ஐனநாயக நீரோட்டக்காரர்களுக்கு உந்த யோசனை வந்திருக்காதோ? இப்ப தேர்தல் சீசன்தானே பணத்தட்டுப்பாடு இருக்குமதானே?

    Reply