முருகையன் “புத்திஜீவிக் கவிஞன்’ மறைவு தமிழ் இலக்கியத்திற்கு பேரிழப்பு – பேராசிரியர் சிவத்தம்பி

Kvingar Murugaiyan Photo - Thamayanthyகவிஞர் முருகையனின் மறைவு ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமல்லாது தமிழ் இலக்கியம் முழுவதற்குமே பேரிழப்பாகுமென பேராசிரியர் கா.சிவத்தம்பி தெரிவித்துள்ளார். முருகையனின் மறைவு குறித்து அவர் வெளியிட்ட அஞ்சலியில்;

கவிஞர் முருகையன் காலமாகிவிட்டார் என்ற செய்தி எனக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைலாசபதியுடன் யாழ்.இந்துக் கல்லூரியில் சக மாணவனாக இருந்த முருகையன் பின்னர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் போது சிவஞானசுந்தரம் ஆகியோரது நட்பு மூலமாக நன்கு பிணைப்புற்றிருந்தோம்.

கல்விப் பிரசுரத் திணைக்களத்தில் பதிப்பாளர் பதவி வெற்றிடமானதும் அவர் கொழும்புக்கு வந்து முதன் முதலில் எழுதிய கவிதை நாடகம், முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் இடம்பெற்ற, “குற்றம் குற்றமே’ எனும் கவிதை நாடகமாகும். கல்வி மொழித் திணைக்களத்தில் அவர் பதிப்பாசிரியராக செய்த பணிகள் பலப்பல. அக்காலத்தில் பலருக்கும் தெரியாதிருந்த இரகசியம், முருகையனும் நானும் மகாகவியுடன் கொண்டிருந்த உறவாகும்.

நாம் முருகையனை மாத்திரமே விதந்து பேசுகின்றோம். மகாகவியைப் பற்றி எதுவும் பேசுவதில்லையென்ற ஒரு குற்றச் சாட்டிருந்தது. ஆனால், அக்காலத்தில் நாங்கள் இடம்வகித்த இலங்கைத் தமிழ் நாடக நடனக் குழுவில் மகாகவியின் நூல்களுக்கே ஒரு தடவை முதல் பரிசு கிடைத்தது.

முருகையன் தனது மனதிற்குள் பல விடயங்களை வைத்துக் கொள்வார். அவற்றை எடுத்துக் கூறும் பண்பே அலாதியானது. முருகையனை intelectualist Poet என்றே நான் எல்லாக் காலத்திலும் போற்றுவதுண்டு. உண்மையில் முருகையனின் மறைவு ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு மாத்திரமல்லாமல் தமிழ் இலக்கியம் முழுவதற்குமே பாரிய இழப்பாகும்.

முருகையன் போன்றவர்களுடைய முழுக் கவிதைத் தொகுதியும் ஒன்றாகச் சேர்த்து பதிக்கப்பட வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை யார் செய்வார்களென்ற எதிர்பார்ப்புடன் நட்பு நினைவுகளிலிருந்து விடைபெற முடியாதவானாய் நிற்கின்றேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • S Murugaiah
    S Murugaiah

    முருகையன் தமிழ் சிந்தனையாளர் உலகில் ஒரு வைரம். பேராசிரியர் சிவத்தம்பி கூறுவது போல் முருகையன் விடயங்களை வெளிப்படுத்தும் பாணியே ஒரு தனிக்கலை. அவரின் இழப்பு தமிழ் இலக்கிய உலகுக்கு ஓர் பேரிழப்பே.
    அவரின் அரிய படைப்புக்களை அழியவிடாது பாதுகாப்பது தமிழர் எம் கடனாகும். இதை உடனடியாக செயல்படுத்த அவரின் குடும்பத்தாருடனோ அல்லது சிவத்தம்பி போன்ற அவரின் நெருங்கிய நண்பர்களுடன் தொடர்பு கொண்டு செயல்படுத்த வேண்டும்.
    இதற்கான தொடர்புகளை தேசம் ஏற்படுத்துமா?
    அவ்வாறு செயின் இணைந்து செயல்பட நாம் தயார்.

    ச முருகையா
    இலண்டன்

    Reply
  • msri
    msri

    முருயைன் அவர்களின் எழுத்துக்கள்> திரிபு-பேரின-குறுகியஇன-பிரதேச வாதங்களுக்கு அப்பாற்பட்டவை! இது இன்றைய இளம் சமுதாயத்ததிடம் சென்றடைய நாம் பாடுபடவேண்டும்! இப்பாரிய பொறுப்பை தேசிய கலை இலக்கியப் பேரவை முன்னெடுக்க வேண்டும்! இதுவே நாம் அவருக்கு செய்யும் மரியாதையும் >காணிக்கையுமாகும்!

    Reply
  • நண்பன்
    நண்பன்

    யார் இந்த தேசிய கலை இலக்கியப் பேரவை?

    Reply
  • msri
    msri

    நண்பன்
    நல்லவேளை யார் இந்த முருகையன் என கேட்கவில்லை> தேசிய கலை இலக்கியப்பேரவை> ஆள் இல்லை> கலை இலக்கிய அமைப்பு! அதன் தலைவர்களில் ஓருவர்தான் முருகையன்!

    Reply
  • நண்பன்
    நண்பன்

    முருகையனையே இறந்த பிறகுதானே தெரிகிறது? கொலைகாரர்களைத்தானே நம் மக்கள் தலைவர்கள் என்றார்கள்?

    //கலை இலக்கிய அமைப்பு! அதன் தலைவர்களில் ஓருவர்தான் முருகையன்!//

    தெரிய வைத்ததற்கு நன்றி சிறீ.

    Reply