மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காது தடுக்க வன்னியில் மீளக்குடியமர்வின் பின்னரும் மக்களுடன் படையினர் தங்கியிருப்பர்.

udaya_nanayakkara_brigediars.jpgவன்னியில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது பகுதிகளில் குடியேற்றப்பட்ட பின்னரும் அவர்களுடன் படையினர் தங்கியிருப்பர் என்று இராணுவப் பேச்சாளர்  பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் இரண்டு இராணுவத் தலைமையகங்கள் ஏற்படுத் தப்படுகின்றன. படையினரின் எண்ணிக்கையை 50 வீதத்தினால் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் பி.பி.ஸியிடம் இதுகுறித்து பி.பி.ஸி. வெளியிட்ட செய்தி வருமாறு:

மற்றுமொரு தீவிரவாத எழுச்சியை ஒடுக்குவதற்கும் அபிவிருத்தித் திட்டங்களில் உதவுவதற்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை 50 வீதத்தினால் அதிகரிக்க அரசுஎண்ணியுள்ளது எனப் பாதுகாப்பு அமைச்சுவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்தவர்கள் இவ்வருட இறுதிக்குள் மீளக் குடியேற்றப்படுவார்கள் எனத் தெரிவிக்கும் அரசு, அதற்குப் பிறகும்  குறிப்பிட்ட காலம் வரை இராணுவம் அவர்களுடன் தங்கியிருக்கும் எனவும் கூறுகின்றது. வடக்கில் இரண்டு இராணுவத் தளங்கள் அமைக்கத் தாங்கள் எண்ணியுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார  தெரிவித்தார்.

“தற்போது முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் இரு இராணுவத் தலைமையகங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்தத் தலைமையகங்களின் கீழ் முகாம்கள் அமைக்கப்படும். இதன் அர்த்தம் மக்கள் அங்கு மீளக் குடியேற முடியாது என்பது அல்ல. மக்கள் மீளக் குடியேறலாம்.  எனினும், அந்தப் பகுதியில் நடைபெறும் நடவடிக்கைகளை நாங்கள் கண்காணிக்க வேண்டும். எதிர்காலத்தில் அந்தப் பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்”என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

57 Comments

  • vanthijathevan
    vanthijathevan

    பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசுக்கு இருக்கின்றதென்றால் அரசு பயங்கரவாத்திற்கு காரணமான இனப்பிரச்சனையை தீர்க்கப் போவதில்லை என்றுதானே அர்த்தம்? எந்த நாடுகளில் அபிவிருத்திப் பணிகளுக்கு இராணுவத்தை அதிகரித்து செயற்படுகிறார்கள். அபிவிருத்தி பணிகளுக்கு நிர்வாக அதிகாரிகள் அல்லவா வேண்டும்? இராணுவம் எதற்கு?

    இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது பகுதிகளில் குடியேற்றப்பட்ட பின்னரும் அவர்களுடன் படையினர் தங்கியிருப்பர். படையினருடன் அவர்களின் குடும்பங்களும் வந்து சேருவர். பிறகென்ன? பிரதேசம் இலகுவாக சிங்கள மயமாகும்!

    Reply
  • மகுடி
    மகுடி

    சிங்களப் பகுதியில் குடியேறியவர்கள் மட்டும் தமிழ் குடியேற்றம் இல்லையோ?

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    சிங்களப் பகுதிகளில் குடியேறியவர்களை அரசாங்கமா கொண்டு போய் குடியேற்றியது? தமிழர்கள் தமது சொந்த பொருளாதாரத்தினாலும் முயற்சிகளினாலும் சென்று குடியேறினார்கள். தமிழ் பிரதேசங்களில் சிங்களவர்களின் குடியேற்றம் இயல்பானதாக இருக்க வேண்டுமே ஒழிய படைகளின் துணையுடன் வரப்படாது. அப்படி இயல்பான குடியேற்றங்கள் நடைபெற வேண்டுமானால் இரண்டு இனங்களும் பகைமை சந்தேகங்கள் நீங்கப் பெற வேண்டும். அதற்கு தமிழர்களின் தாயகம் வட கிழக்கு அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன் பிறகு சிங்களவர்கள் வட கிழக்கின் எந்தப் பகுதிலும் குடடியேறுவதை தமிழ் மக்கள் மனமுவந்து வரவேற்பார்கள்.

    அது சரி ஒன்றரைக் கோடி சிங்கள் மக்களின் பிரதேசங்களில் சில லட்சங்களேயான தமிழர் குடியேறுவதால் சிங்கள மக்களின் குடி முழுகி விடாது. ஆனால் தமிழர்களின் நிலை அவ்வாறானதா?.

    Reply
  • BC
    BC

    //அவர்களின் குடும்பங்களும் வந்து சேருவர். பிறகென்ன? பிரதேசம் இலகுவாக சிங்கள மயமாகும்!//

    பிரபாகரனின் கொடிய பாசிச கும்பலால் துன்புறத்தப்பட்டு சிங்கள பிரதேசங்களில் ஏராளம் தமிழர்களும் குடியேறினார்களே அவர்களினால் இலகுவாக சிங்கள பிரதேசங்கள் தமிழர் பிரதேசங்கள் ஆகிவிடாதா?

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    BC ,உங்களுக்கு கணக்கு வழக்கு தெரியாதா? ஐந்து லட்சத்திற்குள் ஐயாயிரம் பேர் போய் இருப்பதற்கும் ஐயாயிரம் பேருக்குள் ஐம்பதாயிரம் பேர் வந்து இருப்பதற்கும் வித்தியாசம் தெரியாதா? ….

    Reply
  • msri
    msri

    தேவன்!
    நீங்கள் தேசிய இனப்பிரச்சினையில்>குடியேற்றம் சமபநதமான யதார்த்த நிலையை சரியாக சொல்லியுள்ளீர்கள! சிங்கள+தமிழ்மக்களின் இயல்பான குடியேற்ற வாழ்விற்கும்> திட்டமிட்ட குடியேற்றத்திற்கும் உள்ள வேறுபாட்டில் நம்மவர்களில் பலர் > ஏன் “தலைவர்கள்” என சொல்லப்படுபவர்களே> குழம்பி கிணற்றுத் தவளையாகவே உள்ளார்கள்! என்ன செய்வது பேரினவாத மாயையில் மூழ்கியதன் விளைவே!

    Reply
  • msri
    msri

    குதர்க்க விவாதங்களில் ஈடுபடாமல்> சமூக விஞ்ஞானக் கண்ணோட்த்தில் சிலகேள்விகளுக்கு நாம்விடைகாணவேண்டும்!
    தமிழ் மக்கள் ஓர்தேசிய இனமா?
    வடகிழக்கு தமிழ்மக்களின் தாயகமா?
    வடகிழக்கில் கடந்த 60ஆண்டுகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் நடைபெறவில்லையா?
    சாதாரண தமிழ்+சிங்கள மக்களின் இயல்பான குடியேற்ற வாழ்விற்கும்> திட்டமிட்ட குடியேற்றங்களுக்கும் வித்தியாசம் இல்லையா?
    தமிழ் மக்களின் பிரதான எதிரி சிங்களப் பேரினவாதம் இல்லையா?
    இப்பேரினவாத அரசுகள் தமிழ்மக்கள் பிரச்சியனயை தீர்க்குமா?
    குறைந்தது 13-வது திருத்தமாவது அமூலாகுமா? இவைகளை நோக்கிய அர்த்தமுள்ள பின்னோட்டங்களை நாம் பதிந்தாக வேண்டும்!

    Reply
  • நண்பன்
    நண்பன்

    // vanthijathevan on June 30, 2009 1:56 pm BC ,உங்களுக்கு கணக்கு வழக்கு தெரியாதா? ஐந்து லட்சத்திற்குள் ஐயாயிரம் பேர் போய் இருப்பதற்கும் ஐயாயிரம் பேருக்குள் ஐம்பதாயிரம் பேர் வந்து இருப்பதற்கும் வித்தியாசம் தெரியாதா? ….//

    vanthijathevan ஆட்கள் விபரம் பெரிதல்ல. இருக்க உள்ள இடம் வெற்றாக எங்கே இருக்கிறது? கொழும்பு சின்ன இடம். அத்தனை தமிழனும் கொழும்பில். வடக்கு கிழக்கில் எவ்வளவு வெறும் நிலங்கள். அது சும்மா எதுக்கு. தமிழரே இல்லாத நிலமாகி விட்ட இடங்கள் பாலைவனமாவதை விட மக்கள் நிறைந்த சோலையாகாட்டும். அது தமிழ் – சிங்கள – இஸ்லாமிய – பரங்கியரது தாயகமாக இருக்கட்டும்.

    சிங்கப்பூர் எவ்வளவு பரப்பு. அதன் ஜனத்தொகை என்ன? அங்கே பிரச்சனை இல்லாமைக்கு காரணமென்ன? தேடுங்கள் விடை கிடைக்கும்?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இலங்கையின் மொத்த சனத்தொகையில் முக்கால்ப் பங்கைக் கொண்ட சிங்கள இனம் 2/3 பங்கு பரப்பளவில் வாழ வேண்டும். மொத்த சனத்தொகையில் 1/6 பங்கைக் கொண்ட தமிழினம் 1/3 பரப்பளவில் வாழ வேண்டுமென்பது எந்தவகையில் நியாயமென்பது எனக்குப் புரியவில்லை. இந்த நிலையில் பல இலட்சம் தமிழ்மக்கள் சிங்களப் பகுதிகளில் நிரந்தரமாக வாழ்கின்றனர். நாம் வரும்போது எதையும் கொண்டு வரவுமில்லை, போகும்போது எதையும் கொண்டு போகப் போவதுமில்லை. வாழும் போதாவது மனிதனாக வாழுவோம். பலவற்றைப் பெற வேண்டுமானால், சிலவற்றை இழப்பதில் தவறில்லை.

    Reply
  • vadakkan aatham
    vadakkan aatham

    “சிங்கப்பூர் எவ்வளவு பரப்பு. அதன் ஜனத்தொகை என்ன? அங்கே பிரச்சனை இல்லாமைக்கு காரணமென்ன? தேடுங்கள் விடை கிடைக்கும்?”

    அதுதானப்பா நாங்களும் சொல்கின்றோம். சிங்கப்பூர் நன்றாக இருப்பதற்கு காரணம் அங்குள்ள அரசு(சிங்கள )இனவாத அரசு அல்ல.சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ தமிழர்களைப்பற்றி என்ன கூறியிருக்கிறார் என்பதை சற்று படித்துப் பாரும்.
    நண்பரே நீங்களும் உங்களது குடும்பமும் இங்கு நன்றாக உங்கள் இருப்பை உறுதி செய்து விட்டு…….. யாருடைய நிலத்தை யாருக்கு தானமாக வழங்குகிறீர்கள்? உமக்கு தெரியுமா வடக்கு கிழக்கு மாகாணங்களின் சனத் தொகை அடர்த்தியை(146/கி.மீ) விட வடமத்திய மாகாணத்தில் சனத் தொகை அடர்த்தி (103/கி.மீ) குறைவு. எனவே முதலில் அங்கு குடியேற்றிய பின்பு இங்கு வந்தால் சந்தோசமாக ஏற்றுக் கொள்வோம்.

    சகோதரனே ஆறுகளும் நீர்ப்பாசன வசதிகளும் கூடிய வளமான தென்பகுதி இடங்களை விட்டு விட்டு குளங்களை நம்பியுள்ள வன்னிப் பகுதிக்கும் விட்டால் கிணறுகளை நம்பியுள்ள யாழ்ப்பாணத்திற்கும் கொண்டு வந்து விடுவீர் போலுள்ளது.

    எழுபதுகளில் சிறிமாவின் ஆட்சிக்காலத்தில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு இறக்குமதியை தடைசெய்திருந்தார். எங்களைப் போன்ற ஏழை விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. ஆனால்… மணி ஓடர் பொருளாராதத்தில் தங்கியிருந்த மேட்டுக் குடியினர் தரப்படுத்தலை காரணம்காட்டி தமிழீழக் கோரிக்கையை கிளப்பி எங்களை சிறிமாவுக்கு வாக்கு போட விடாமல் தடுத்து விட்டார்கள்.

    வளமான பூமியை வைத்திருந்த சிங்கள மக்களும் கோதுமை இறக்குமதி இன்மையால் பாணுக்காக அம்மையாரை மிகக் கேவலமாக தோற்கடித்ததை நீங்கள் மறந்து கதைகிறீர்கள்.

    கிணற்று நீர்ப்பாசனத்தை நம்பி விவசாயம் செய்த (பட்டி/ அந்தர்) நிலத்தைப் பற்றி புதிதாக ஒன்றும் படிப்பிக்க வேண்டாம்.

    வடக்கான் ஆதாம்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    நல்ல கருத்துகள் பார்த்திபன். நன்றி.

    பெரும்பாலான இலங்கை தமிழர்கள் எப்போதும் தனித்துவமாகவே வாழ முனைபவர்கள். இவர்கள் சிங்களவரோடு மட்டுமல்ல தமிழரோடு கூட சாதி ரீதியாகவும் தனித்தே வாழ்கிறார்கள். இவை புலிகளது காலத்தில் மறைந்ததாக பலர் சொல்வார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. புலிகளது புலம் பெயர் ஆதரவாளர்கள் மற்றும் புலத்து தலைவர்களில் பலர் சாதி பார்த்தே திருமணம் செய்துள்ளனர். ஏன்? சீதனமும் வாங்கினர். சாதிப் பேர் சொன்னவனை நக்கியதால் சாதி ஒழியாது. அது மனதிலிருந்து மாற்றப்பட வேண்டும். இவை தமிழருக்குள் ஒரு மன நோயாகவே உள்ளது.

    இதுவே இப்படியிருக்க , சிங்கள மக்களை அல்லது இஸ்லாமியரை தமிழர் பிரதேசத்தில் வாழ விடக் கூடாது என்பதே பலரது வாதமாக இருக்கிறது. புலம் பெயர்ந்து வந்த நாடுகளில் நாம் அனுபவிக்கும் சொத்து சுகங்கள் குறித்து சற்று சிந்தியுங்கள்? அவர்களுக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் நாம் வந்து விழுந்த தேசத்தில் நமக்கு வாழ வளமும் , இருக்க நிலமும் / வீடும் கிடைக்கிறது. இவற்றை கூச்சமின்றி அனுவிப்போர்தான், ஒரே தாயகம் எனச் சொல்லிக் கொள்ளும் இலங்கை மக்களில் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களுக்கு நம் பகுதியில் வாழ உரிமையில்லை என்கின்றனர். தமிழர்கள் இலங்கையில் எங்கு வேணுமானாலும் பணம் இருந்தால் குடியேறலாம் , தொழில் செய்யலாம் , அப்பகுதி மக்களாகவே வாழலாம். அதே உரிமை அடுத்த இனத்தவனுக்கு இல்லையே? ஏன்?

    இலங்கைக்கு வந்து உதிரத்தை உரமாக்கிய இந்திய தமிழர்கள் கள்ளத் தோணிகள். ஆனால் கள்ளத் தோணியில் சென்று தமிழகத்தில் குடியேறிய அதே இலங்கையர் இன்று தென் இந்தியாவில் ஈழத் தமிழர். பலர் திருட்டுத்தனமாக இந்தியர்கள். நமக்கு ஒரு நியாயம்? அடுத்தவருக்கு ஒரு நியாயம்? இது சரியா? இவை நம் மனங்களில் கேள்விளாக வேண்டும்?

    இணைந்து வாழப் பழகுங்கள். அது இனியது. கருத்துகளை பரிமாறிக் கொள்ளுங்கள். அவர்களால் எமது பிரச்சனைகளையும் , எம்மால் அவர்களது பிரச்சனைகளையும் புரிந்து கொள்ள முடியும்.

    நம்மை விட அதிக வலிகளை தாங்கியவர்கள் கறுப்பர்கள். அடிமைகளாகவே வாழந்தவர்கள்.எம்மிடம் உள்ள தாழ்வு மனப்பான்மை அவர்களிடம் இல்லை. அவர்கள் அடுத்த இனத்தோடு இணைந்து பழகியதால் அடுத்தவர்களால் அவர்களை புரிந்து கொள்ள முடிந்தது. இத்தனை காலம் புலம் பெயர்நாடுகளில் வாழ்ந்த தமிழரால் எத்தனை அந்நிய இனத்தவரை வீதிப் போராட்டங்களுக்கு கொண்டு வர முடிந்தது? வந்த சிலரும் அவர்களது நலனுக்காக வந்தோரே அதிகம்.

    அடிமை இனமான கறுப்பர்கள் தன் எதிரிக்கே நேசிக்க கற்றுக் கொடுத்தார்கள். அவர்களில் முதன்மையானவர் மார்டின் லூதர் கிங். அவரது கனவை தற்போது நனவாக்க முடிந்தது. மார்டின் லூதர் கிங்கின் எண்ணங்களை கறுப்பர்கள் மட்டுமல்ல அனைவரும் மதிக்கின்றனர். அவர் இனவாதம் பேசவில்லை. தனிநாடு கோரவில்லை. தனது இனமும் அடுத்த இனத்தவரைப் போல உயிரும் சதையும் கொண்ட மானுடர் என சொன்னார். அவர் போட்ட விதை இன்று பராக் ஒபாமாவாக பூத்துள்ளது. உலகம் ஓபாமாவை கறுப்பனாக பார்க்கவில்லை. ஒரு இனியவனாக , நேசமான தலைவனாக பார்க்கின்றனர்.

    எத்தனை விளையாட்டு வீரர்கள், எத்தனை கலைஞர்கள் கறுப்பினத்தில் இருக்கிறார்கள். நம்மில் எத்தனை பேர்? இன்று கொலைகாரர்கள்தான் ஈழத் தமிழரில் அதிகம். அடுத்தவன் போடும் ஒவ்வொரு கோலுக்கும் கைதட்டினான். ஈழத் தமிழன் மட்டும் ஒவ்வாரு கொலைக்கும் கைதட்டி ஆரவாரித்தான். இது நம் முன்னோர் நமக்குள் விதைத்த பயங்கரமான ஒரு மன நோய் விதை. இதற்கு பெயர் தாய் நாட்டு பாசம் என்றால் இந்த தாய்நாடு அல்லது தாயக பாசம் எமக்கு வேண்டாம்.

    பொய் பரப்புரைகளை சொல்லிச் சொல்லியே மக்களை மந்தைகளாக்கியது நம் தமிழ் அரசியல்வாதிகள்தான். தமிழ், தமிழ் என்று மேடையில் பேசி தாங்கள் மட்டும் சிங்களம் கற்று கொழும்பிலே கொலுவீற்ற தலைவர்கள் நம்மை நம் வேலியை விட்டும் எட்டிப் பார்க்க அனுமதிக்கவில்லை. ஒரு சிங்களவனோடு பேசக்கூட விடவில்லை. அந்த மொழி எதிரிகள் மொழியானது. புலிகளோ கட்டி மேய்த்தனர். புலம் பெயர்ந்த தமிழனுக்கு தன் தாய் நாட்டின் சகோதர மொழி தெரியாது. ஆனால் உலக மொழி அத்தனையும் தெரியும்? விந்தை மனிதர்கள்?

    நாம் சற்று விட்டுக் கொடுத்தால் , அவர்களும் விட்டுக் கொடுப்பார்கள். ஜேவீபியில் ஒரு சாரார் 13வது திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் போது மற்றொரு ஜேவீபியினர் வவுனியா முகாமுக்குள் சென்று அங்கள்ள மக்களுக்கு உதவ எம்மையும் அனுமதியுங்கள் என்கின்றனர். சிகள உருமய தமிழருக்கு எதிரான கருத்துகளை சொல்லும் போது பல பெளத்த பிக்குகள் வவுனியா முகாமுக்குள் தமிழருக்கான பணிவிடைகளை செய்கிறார்கள். தமிழ் குழந்தைகள் பெளத்த பிக்குகளை அங்கள் (மாமா) என்று அழைக்கிறார்கள். இராணுவ வீரனையும் அங்கள் என்றே அழைக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் எதிரியோடு அன்யோன்யமாகி விட்டன. அவை இனி நெருக்கத்தைக் கொண்டு வரும். எதிர்ப்போர் நாட்டை விட்டு வெளியேறுவர் அல்லது ஏதோ வகையில் சாவடைவர். புலத்து அரசியல் அடுப்பெரிக்கக் கூட உதவாது. இதுவே நிஜம்.

    எதிர்ப்பவனை எதிர்ப்பதை விட நட்பாய் இருப்பவனோடு அன்யோன்யமாகி வாழ்வது, எதிரியையும் ஒருநாள் சிந்திக்க வைக்கும். அதை செய்யுங்கள். என்னைப் பொறுத்தவரை இலங்கை முழுவதும் அனைத்து இலங்கையரும் பரந்து சுதந்திரமாக வாழும் நிலை ஒன்றுக்கு வர வேண்டும். அன்று நம் தேசத்தின் நேசங்களுக்கு நிச்சயம் விடிவு கிடைக்கும். அது நடக்கும் காலம் அதிக தொலைவில் இல்லை.

    அது சாத்தியமில்லையென்றால் , நமக்கு நம் தேசமும் சாத்தியமில்லை.

    Reply
  • மாயா
    மாயா

    // அதுதானப்பா நாங்களும் சொல்கின்றோம். சிங்கப்பூர் நன்றாக இருப்பதற்கு காரணம் அங்குள்ள அரசு(சிங்கள )இனவாத அரசு அல்ல.சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ தமிழர்களைப்பற்றி என்ன கூறியிருக்கிறார் என்பதை சற்று படித்துப் பாரும். – vadakkan aatham //

    அதன் ஆரம்பத்தைக் கவனியுங்கள் சகோதரரே. நான் அந்த நாட்டில் இருந்து எழுதுகிறேன். அங்கு வாழும் தமிழர்கள் பெரும்பான்மை சீனரோடு இணைந்து செயலாற்றியதால் அங்கு சம உரிமையாக வாழ்கிறார்கள். ஆதம், உங்களுக்கு லீ அவர்கள் தமிழர்கள் குறித்து சொன்ன சில வரிகள் மட்டுமே தெரியும். ஆனால் அந்த நாட்டின் சரித்திரம் தெரியாது என்பது உங்கள் எழுத்துகளில் தெரிகிறது. சிங்கப்பூரில் இனவாதம் உருவாகாததற்கு காரணம் , அனைத்து மக்களும் கலந்து ஒன்றாக வாழும் முறைதான். ஒரு இனம் தனித்து அங்கு எங்குமே காண முடியாது. தனித்து வாழும் போது , குழுவாதம் உருவாகும் என்பதை உணர்ந்த லீ அவர்கள் கலந்து மக்கள் வாழும் முறையை அமுல்படுத்தினார்.

    ஆகக் குறைந்தது ஒரு தொடர் மாடி வீட்டுக் கட்டிடத்திலும் அனைத்து இன மக்களும் கலந்தே வாழ்கின்றனர்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    அப்பப்பா…தாங்கமுடியலை நண்பனே!
    பராக் ஒபாமா ஈழத்தமிழரை பற்றி என்ன சொன்னார் என்பதையும் சிங்கப்பூரின் சிற்பி லீகுவான் யூ தமிழரைப்பற்றி என்ன சொன்னார் என்பதைப்பற்றியும் சிங்கப்பூ்ருக்கு ‘டொமினியன்’ அந்தஸ்து கோரி சென்றபோது மலேசியாவின் புகழ்பூத்த பிரதமர் தின்கு அப்துல் ரஹ்மான் என்ன சொன்னார் என்பதைப் பற்றியும் பற்றியும் படித்துப்பாரும்.

    இப்போது (அரை மணித்தியாலங்களின் முன்னர்) எலி வைசல் ஈழத்தமிழரைப் பற்றி சொன்னதையும் படித்துப்பாரும். (Homeland என்ற சொல்லையும் கவனிக்கவும்)

    TAMIL PEOPLE STATEMENT:
    Wherever minorities are being persecuted we must raise our voices to protest. According to reliable sources, the Tamil people are being disenfranchised and victimized by the Sri Lanka authorities. This injustice must stop. The Tamil people must be allowed to live in peace and flourish in their homeland.

    – Elie Wiesel, June 30th 2009
    http://www.eliewieselfoundation.org/buchenwaldtrip.aspx

    Reply
  • BC
    BC

    மிக சரியான கருத்து நண்பன்.

    Reply
  • Sooriasegaram, Mylvaganam
    Sooriasegaram, Mylvaganam

    Former Singaporean Prime Minister Lee Kuan Yew once said:
    “ In terms of numbers, the Ceylonese, like the Eurasians, are among the smallest of our various communities. Yet in terms of achievements and contributions to the growth and development of the modern Singapore and Malaysia they have done more than warranted by their numbers. In the early days of Malaysia’s and Singapore’s history the civil service and the professions were manned by a good number of Ceylonese. Even today the Ceylonese community continues to play a prominent role in these and other fields of civil life.
    For example in Singapore, today, the Speaker of Parliament is a Ceylonese. So is our High Commissioner in Great Britain. So is our Foreign Minister. In the Judiciary, in the civil service, in the university, in the medical Service and in the professions they continue to make substantial contributions out of all proportion to their numbers. They are there not because they are members of a minority community but on the basis of merit.

    The point is that the Ceylonese are holding their own in open competition with communities far larger than them. They have asked for no special favour or consideration as a minority. What they have asked for – and quite rightly – is that they should be judged on their merits and that they be allowed to compete with all other citizens fairly and without discrimination. This, as far as the Singapore government is concerned, is what is best for all of us. I believe that the future belongs to that society which acknowledges and rewards ability, drive and high performance without regard to race, language or religion.

    >>They have asked for no special favour or consideration as a minority

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    சிங்கப்பூரில் அனைத்து மக்களும் கலந்து வாழ்கிறார்கள்தான். ஒரு குடியிருப்பில் பல இன மக்களும் வாழ்கிறார்கள் தான். ஆனால் குறிப்பிட்ட பிரதேசங்கள் குறிப்பிட்ட இனங்களுக்குரியவை என ஒதுக்கப்பட்டுள்ளன். அதனால் அங்கு இனவாதம் எழ வாய்ப்பில்லை. பார்த்திபன், நண்பன் ,மாயா புலி தந்த தாங்க முடியாத அலுப்பினால் தேசியம் என்ற கோட்பாடு உங்களை புரட்டிப் போட்டு விட்டது.

    Reply
  • msri
    msri

    உண்டிக்கு சோறு+உடுக்க உடுப்பு-இருக்க வீடு இவ்வளவும் தமிழ்மக்களுக்கு கொடுத்தால் போதும் என்கின்றது! மகிந்தப் பேரினவாதமும் ஆதன் கூட்டாளிகளும்! ஐயோ இதுதான் தமிழ்மக்களின்> பிரச்சினை இதுவெ போதும் என்னகிறது! அரசை தொழுதுண்டு வாழும் கூட்டம்! இதைப் படித்த அதன் ரசிகர் கூட்டத்திற்கு> தேசியம்+தேசிய இனப்பிரச்சினை+திட்டமிட்ட குடியேற்றம்> பற்றிக் கேட்டால்> அதென்ன அப்படியம் ஒன்று இருக்கோ என்று ஏறிப்பாய்கிறார்கள்.! பலதைப் பெற சிலதை விடவேண்டும் என்றும் புலம்புகிறார்கள்.! இதுகளையும் சுயநிர்னய உரிமைக் கோடபாட்டுக்குள் அடக்கலாம்தானே? என்ன அடக்கித்தான் ஆடவேண்டும்!

    Reply
  • நண்பன்
    நண்பன்

    சிங்கப்பூரில் லீ குவான்யூ கட்சியோடு இணைந்த லீ அவர்களுக்கு பக்க பலமாக இருந்த S.ராஜரட்ணம் அவர்கள் இணை பிரதமராக இருந்தார்.
    http://en.wikipedia.org/wiki/Sinnathamby_Rajaratnam
    இவர் ஆரம்ப காலம் தொட்டு லீ அவர்களோடு இருந்தார். இதேபோல அநேக இந்தியர்கள் , குறிப்பாக இந்திய தமிழர்கள் சிங்கை அரசியலில் அதிகம் இருக்கின்றனர்.

    இதே போல லீ அவர்களை எதிர்த்து எதிர்கட்சியாக இருந்து ஜே.பீ. ஜெயரட்ணம் அவர்கள்
    http://en.wikipedia.org/wiki/Joshua_Benjamin_Jeyaretnam
    முகம் கொடுத்த பிரச்சனைகள் குறித்து தெரியுமோ தெரியாது?

    சிங்கப்பூரில் வாழும் மக்கள் சீனர் – மலாயர் (மலேசியர்) – இந்தியர் ( தமிழர் உட்பட இந்திய மொழிகள் பேசுவோர்) மற்றும் யுரேசியர் (ஐரோப்பிய கலப்பு ஆசியர்கள்) என்ற இனங்கள் இருக்கின்றன.

    இவர்கள் தம்மை முதலில் தாங்கள் சிங்கப்பூரர்கள் என்றே அழைத்துக் கொள்கின்றனர். அங்கே பிரிவினை பேச முடியாது. பேசினால் சூரியனை பார்க்கவே முடியாது. கடுமையான சட்டம். 1980களில் சிங்கையில் புரட்சி செய்ய முயன்ற சீன மாணவர் அமைப்புக்கு என்ன நடந்தது என்பதன் ஆரம்பம் மட்டுமே சிங்கப்பூரர்களுக்குத் தெரியும். அதற்கு பின்னர் என்ன நடந்தது என்பது யாரும் வாய் திறந்து கேட்காத கேள்வி? நாம் முதலில் தமிழன் என்றே அடையாளப்படுத்தி பிரித்துக் காட்டுகிறோம். நாம் இலங்கையர் என்று சொல்வதேயில்லை? இந்தியர்கள் கூட இந்தியர் என்று சொன்ன பின்னரே தமது இனமான தமிழர் – மலையாளி – ஹிந்தி ……….. என்கின்றனர். நமக்குள் நம் தேசத்தை விட நம் இனமே முதன்மையாக அடிமனதில் பதியவைக்கப்பட்டுள்ளது?

    சிங்கை குடிகள் தம்மை சிங்கையர் என்றே சொல்கின்றனர்.பூர்வீகம் என்ற கேள்விக்கு வரும் பதில் சீனா – மலேசியா – இந்தியா என்பதாகவே இருக்கும். இதில் அதிக அக்கறை கொள்வதை பார்க்க முடியாது. சிங்கையின் பல இந்தியத் வம்சாவழி தமிழ் அமைச்சர்களையும் (இது நம்மில் பலருக்கு புரியவில்லை) நாம் நம் தேவைக்காக இலங்கையராக காட்டும் தன்மை நமக்கு பலம் சேர்ப்பதற்காக குறிப்பிட முனைகிறோமே தவிர இதில் உண்மையில்லை. இது புலிகள் என்றால் தமிழர்கள் , தமிழர்கள் என்றால் புலிகள் என்று சொல்லிவிட்டு முகாமுக்கு போன தமிழ்ச்செல்வனின் மனைவி குறித்து வரும் போது அவர் புலியல்ல என்று கூறியது போன்ற நமக்கு சாதகமான போக்குகளுக்காக மட்டும் தேவை கருதி நாம் பயன்படுத்தும் வார்த்தை ஜாலங்களின் அவலத்தையே காட்டுகிறது.

    நம் நாட்டு மக்களின் சமாதான சுக வாழ்வை விட சிலர் மரவெள்ளிக் கிழங்கு விற்க நிலம் தேவை என்பதெல்லாம் தனக்கு மட்டுமான சுயநலம் சார்ந்த எண்ணங்களின் வெளிப்பாடுகளே. அதற்கு இனவாத பண்டாரநாயக்காவின் மனைவி சிறீமாவோ செய்த நன்மை என்பதாக நமக்குள் பதிந்து விட்டது. இங்கே அடிப்படை இனவாதம் மறந்து, எனக்கான வரவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    //Sooriasegaram, Mylvaganam on July 1, 2009 1:16 am Former Singaporean Prime Minister Lee Kuan Yew once said:
    “ In terms of numbers, the Ceylonese, like the Eurasians, are among the smallest of our various communities. Yet in terms of achievements and contributions to the growth and development of the modern Singapore and Malaysia they have done more than warranted by their numbers. In the early days of Malaysia’s and Singapore’s history the civil service and the professions were manned by a good number of Ceylonese. Even today the Ceylonese community continues to play a prominent role in these and other fields of civil life.- Sooriasegaram, Mylvaganam//

    இதை முழுமையாக படியுங்கள்:
    http://www.southasiaanalysis.org/%5Cpapers33%5Cpaper3206.html
    நாம் நமக்குத் தேவையான வரிகளை மட்டும் கோடிட்டு பைபிள்காரர்கள் போல் சுயலாபம் தேட முனைகிறோம். இவை நம்மை நியாயப்படுத்துவதற்கு இப்போது சரியாகத் தோணலாம். அது நிரந்தர தீர்வுக்கு வழியாகாது. அவரது முழமையான பேச்சின் இணைப்பை இணையுங்கள்.

    சிங்கப்பூரில் 3 முக்கிய இனங்கள் வாழ்ந்தன என்பதற்கு சான்றாக வேண்டுமானால் லிட்டில் இன்டியா (இந்தியர்), அரபு ஸ்ட்ரீட் ( இஸ்லாமியர்) , சைனா டவுண் (சீனர்) இருக்கிறதே தவிர அங்கும் ஏனைய இனத்தவர்களும் வாழ்கிறார்கள். (சீனர்கள் : இந்தியர்கள் என்போர் பல மொழி பேசுபவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியவில்லை?) இவற்றையும் அழித்துவிட லீ அவர்கள் முனைந்த போது இது மூவின மக்கள் வாழ்ந்தார்கள் என்பதற்காக ஒரு சரித்திர ஆதாரமாக இருக்கட்டும் என்ற பலரது கருத்துக்காக கொண்டு வந்த போது, ஒரு இடத்தில் மட்டுமே லீ அவற்றை இருப்பதற்கு அனுமதித்தார். சிங்கையின் உருவாக்கத்தின் போது அவை வேண்டவே வேண்டாம் என்பதே அவரது அடிப்படைக் கருத்தாக இருந்தது.

    பொது அரச மொழியாக சிங்கையில் ஆங்கிலம் இருந்த போதும் , சிங்கை வாழ் மக்கள் தமது தாய் மொழியையோ அல்லது சிங்கை மக்கள் பேசும் வேறு ஒரு மொழியையோ கற்க வேண்டும் எனும் கட்டாயம் உண்டாக்கப்பட்டது. பெரும்பாலான சிங்கப்பூர் சீனர்கள் கென்தனிஸ், ஹாக்கியன் , மென்டரின் ஆகிய சீன மொழிகளை பேசுவோர்களாக வாழ்கிறார்கள்.(இது இந்தியர்கள் ஹிந்தி – மராட்டி – தெலுங்கு – கன்னடம் – மலையாளம் – தமிழ் போன்றவை என எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்களும் சிங்கையில் இருக்கிறார்கள்.), சீனர்கள் , பெரும்பாலான உலக சீன மக்களால் பேசப்படும் மொழியான மென்டரீனையும் ( இது பெரும்பாலான உலக சீன மக்களால் பேசப்படும் மொழியாகும்.) மலாயர்கள் (மலேசியர்/ இந்துனேசியர்),மலே மொழியையும் , இந்தியர்களில் , தமிழர் தமிழையும் , தமிழரல்லாத இந்தியர்கள் மென்டரினையோ அல்லது மலாயையோ கற்றனர். இதுவும் 1970களுக்கு பின்னரே நடந்தது.

    எனவே அனைத்து மக்களோடு இணைந்து வாழும் நிலை அவர்களுக்குள் உருவானது. மொழிதான் ஒரு மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடகம். இது இலங்கையில் அடிப்படையிலேயே இல்லாமல் செய்யப்பட்டமை என்பது திட்டமிட்ட கிரிமினல் தன்மையேயாகும். தமிழர்கள் சிங்களம் படிக்கக் கூடாது என்பதை நமது தமிழ் தலைமைகளே உருவாக்கின. இது தமிழ்நாட்டு ஹிந்தி எதிர்ப்பின் தாக்கமாகவே இருந்தது. இதை எவரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. எமது தலைவர்கள் அன்று கிரிமினலாகவே சிந்தித்து இச் செயலை செய்துள்ளார்கள். தமது மக்களது வாக்குகளை பெறவே இது தேவைப்பட்டது.

    சாதாரண மக்கள் அடுத்த சகோதர மொழியை பேசவே விடக்கூடாது என்பதில் அதிக கரிசனை கொண்டு திட்டமிட்டே அரசியல் செய்துள்ளான் தமிழ் அரசியல்வாதி என்பது நிரூபனமாகிறது. எம் தேசத்து மக்கள் எமது நாட்டின இரு மொழிகளை கற்றிருந்தால் தமிழ் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் தமது அரசியல் சுயநலத்துக்காக பொய்யுரைக்கின்றனர் என்பதையாவது உணர்ந்திருப்பார்கள். அன்றே அரசியல்வாதிகள் இல்லாமலே போயிருப்பார்கள். இது கடந்த புலி இணைய செய்திகளை நம்பிய நம் உறவுகளது நிலைக்கு ஒப்பானது. அது நடந்திருந்தால் நாமெல்லாம் இலங்கையர் என ஒன்றாக கலந்திருப்போம். நாடு எனும் வீடு சுபீட்சமாக இருந்திருக்கும். இந்த அளவு எந்த இனமும் இறந்தும் இருக்காது. பாதிக்கப்பட்டும் இருக்காது.

    உலக நாடுகளில் பரவி, இன்று பல் மொழி பேசும் தமிழன் இன்றும் உண்மையை உணர முடியாதவனாகவும் , உண்மை பேசாதவனாகவும் தன் சுயநலத்துக்குள் மூழ்கிப் போயே இருக்கிறான். இதற்கு பிரபாகரன் மரித்தார்? மரிக்கவில்லை? என மண்டை குழம்பி உயிர்தெழுதலுக்காக திரியும் உலகம் தெரிந்த புலம் பெயர் கூட்டம், நல்லதொரு உதாரணம். அதிகம் பின்னோக்கி செல்ல வேண்டியதில்லையே? சுயநலங்களை விட்டு வெளியே வாருங்கள். அதுவரை நமக்கும் விடிவில்லை.

    // அப்துல் ரஹ்மான் என்ன சொன்னார் என்பதைப் பற்றியும் பற்றியும் படித்துப்பாரும். // என இலங்கை முஸ்லீம்களைத் துரத்தி விட்டவர்கள் , இன்று தனது சுயநலத்துக்காக ஒரு இஸ்லாமியன் சொன்னதை எடுத்துக் காட்டாக வைப்பதையிட்டு வருந்தவே முடிகிறது. படித்துப்பாரும் போன்ற வார்த்தைகள் தெரிந்தவர்களோடு பேசும் வார்த்தைகள், தெரியாதவர்களோடு பேசும் அதட்டல்களாக வைப்போர் எழுதும் நாகரீகத்தையாவது கற்றவர்களில்லை என்பதையே காட்டுகிறது. இதையே ஊடகங்களில் தமிழர் பேசும் நாகரீகமாக் கொண்டிருக்கின்றனர்? இவை யாழ்பாணிகளின் அழுத்தி அச்சப்பட வைக்கும் வார்த்தைகள் என்பர்.இவற்றை மாற்றிக் கொள்ள முனையுங்கள். நாம் நான்கு பேர் பார்க்கும் ஊடகம் ஒன்றில் கருத்து பகிர்ந்து கொண்டிருக்கிறோம். பல பெரியவர்களுக்கு சிறுவர்கள் புத்தி சொல்ல வேண்டியதில்லை.

    நன்றி.

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    “1980களில் சிங்கையில் புரட்சி செய்ய முயன்ற சீன மாணவர் அமைப்புக்கு என்ன நடந்தது என்பதன் ஆரம்பம் மட்டுமே சிங்கப்பூரர்களுக்குத் தெரியும். அதற்கு பின்னர் என்ன நடந்தது என்பது யாரும் வாய் திறந்து கேட்காத கேள்வி”

    ஆதலால் இலங்கையில் போராட்டங்களை ஒடுக்கலாம் என்கிறீர்களா?

    மற்றும் சிங்கப்பூர் பற்றி நீங்கள் குறிப்பிடும் விடயங்களை அதன் அரசு தானே உளத்தூயமையடன் செயற்படுத்தியது? நமது சிங்கள அரசு அப்படி செயற்பட்டதா? ஏன் செயற்படவில்லை? மாறாக இனக்கலவரங்களை உருவாக்கவில்லையா?

    மேலும் இராணுவம் சிங்கப்பூரில் மக்களுக்குள் தான் இருக்கிறதா? அல்லது இருப்போம் என அறிக்கை விட்டிருக்கிறதா? பிரச்சனைகளையும் தீர்க்கமாட்டார்களாம். தமிழர்களை நம்பவும் மாட்டார்களாம். தமிழர் எங்கேதான் போவது?

    Reply
  • palli
    palli

    அப்ப முகாமில் இருப்பவர்களுக்கு உலகநாடுகள் கொடுக்கும் உதவி பணம் யாவும் ராணுவத்தை பராமரிக்கவே போதாது என சொல்லுவது போல் இருக்கு; அத்துடன் மொத்த தமிழரே இலங்கையில் 1400000 எனதானே அரசு சொல்லுகிறது: அந்த தமிழரை காக்கவோ அல்லது அவர்களிடம் இருந்து அரசை காப்பதுக்கோ 1400000 ராணுவத்தை செயல்பட வைப்பது ஒரு வல்லரசுக்கு சரியான செயலா!!

    சிலவேளை பொன்சேகா ஏதாவது குளறுபடி செய்யும் நோக்கமோ! சொல்ல முடியாது அல்லவா ராணுவ ஆட்ச்சி வந்தாலும் பரவாயில்லை ஆனால் தமிழருக்கு எந்த ஒரு தீர்வும் கொடுக்ககூடது என ஜெ வி பியும் சிங்கள பூசாரிகளும் அலைவது தெரிகிறதே:

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நண்பன்,
    அருமையான விளக்கத்தை அனைவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் வைத்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

    வந்தியத்தேவன்,
    நண்பன் சொல்லவந்த உட்கருத்தை மட்டும் உள்வாங்குங்கள். வெறும் விதண்டாவாதங்களுக்காக உள்வாங்காதீர்கள். இதுவரை இருந்த சிங்கள அரசுத் தலைவர்கள் செய்த தவறுகளும் எம் வாழ்வின் சீரளிவுகளுக்கு ஒரு காரணம் தான். சிங்கள அரசுத் தலைமைகள் தொடர்ந்து தந்த ஏமாற்றங்களினால் எல்லாச் சிங்கள அரசுத் தலைமைகளிலும் சந்தேகம் உண்டாவது தவிர்க்க முடியாதது தான். ஆனாலும் மகிந்தவின் நடவடிக்கைகளில் இதுவரை இருந்த ஏனைய சிங்கள அரசுத் தலைமைகளிலிருந்து வேறுபட்ட ஒரு தன்மை தெரிகின்றது. அதனால் அவருக்கு என்ன செய்யப் போகின்றார் என்று பார்க்க போதிய அவகாசத்துடனான ஒரு சந்தர்ப்பத்தை தமிழர்களாகிய நாம் உட்பட ஏனைய சிறுபான்மையின மக்களும் வழங்கிப் பார்ப்பதில் தவறில்லை என்பதே எனது நோக்கம். மகிந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முன்வரும் போது, நாமும் எமது ஒத்தழைப்பை அவருக்கு வழங்க முன்வர வேண்டும். வெறுமனே அரசு என்னத்தைக் கிளிக்கப் போகின்றது என்று கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது. இனப்பிரைச்சினை என்ற தேரை நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து வடம் பிடித்து இழுத்தால்த் தான் அது கரைசேர முடியும்.

    Reply
  • Karan
    Karan

    எம்மவர்களுக்கு சிங்கப்பூரில் இருக்கும் அலாதியே தனி. அவர்கள் புலிகளை எதிர்த்தாலும் சரி ஆதரித்தாலும் சரி சிங்கப்பூரில் இவர்களுக்கு அம்புட்டு லவ்வு. நண்பர்களா சிங்கப்பூர் பார்க்க என்னவோ கலாதியாகத்தான் இருக்கிறது. ஆனால் அங்கு மனிதர்கள் வாழ்வதில்லை. மனித இயந்திரங்களே வாழ்கின்றன என்பதை மறந்துவிடாதீர்கள்.

    அங்கு கடத்தல் இல்லை கொலை இல்லை. கொள்ளை இல்லை. என்பது உண்மைதான் ஆனால் அங்கு மனிதமும் தொலைக்கப்பட்டு விட்டது. அரச இயந்திரம் எடுக்கும் முடிவுகளுக்கும் முதலாளிகள் எடுக்கும் முடிவுகளுக்கும் ஏற்ப மனித இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன. இலங்கையில் கடத்தல் கொள்ளை கொலை எனபன நிறுத்தப்பட்டால் இலங்கை சிங்கப்பூரிலும் பார்க்க பல மடங்கு அடிப்படை உரிமைகளை உடைய நாடு என்பதை மறந்துவிட வேண்டாம்.

    இலங்கை அரசு தனது அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்துமாக இருந்தால் சிங்கப்பூரிலும் பார்க்க இலங்கை பலமடங்கு சிறந்த நாடாக விளங்கும். சிங்கப்பூர் பொன் விலங்கிட்ட சிறைக்கூடம் என்பதை கவனத்திற் கொள்ளவும்.

    போட்டி போட்டுக் கொண்டு இலங்கையை சிங்கப்பூராக்க குத்துப்படுவதில் அர்த்தம் இல்லை. சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் அவர்கள் மனிதர்களாக வாழுகின்றனர். (ஆயுதம் தாங்கியவர்களைத் தவிர) சிங்கப்பூரில் நீங்கள் மனிதர்களாக வாழ முடியாது.

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    அதனால் அவருக்கு என்ன செய்யப் போகின்றார் என்று பார்க்க போதிய அவகாசத்துடனான ஒரு சந்தர்ப்பத்தை தமிழர்களாகிய நாம் உட்பட ஏனைய சிறுபான்மையின மக்களும் வழங்கிப் பார்ப்பதில் தவறில்லை என்பதே எனது நோக்கம்” என நீங்களாகவே நினைத்துக் கொள்ளுகிறீர்கள். தனக்கு கால அவகாசம் தரும்படி மகிந்த எங்கேயாவது கேட்டிருக்கிறாரா?

    13 வது திருத்தச்சட்ட தீர்வுக்கு பொலிஸ் அதிகாரம் இல்லை என ஒரு அமைச்சர் கூறுகிறார். 13 வது திருத்தச்சட்டத்தை எதிர்ப்போம் என ஜாதிக கெல உறுமயவும் ஜே. வி.பி யும் எதிர்க்கின்றன. இது சிங்களவரின் நாடு என இராணுவ தளபதி பேசுகிறார். ஆனால் உங்களுக்கோ இந்த அரசில் வேறுபட்ட தன்மை தெரிகிறது . எங்கேயிருந்து மகிந்தா பிரச்சனையை தீர்க்க ஆதரவு எடுக்கப் போகின்றார். தவறான குரோதமான கருத்துக்களை எப்படி கையாளப் போகின்றார்? சிறுபான்மையினரான இப்போது இனப்பிரச்சனை தீர்வுக்கு தடையாக உள்ளனர்?

    எங்கள் விவாதங்கள் முடிவுக்கு வருமா?

    Reply
  • msri
    msri

    தேவன்!
    இதுபற்றிய விவாதங்கள் முடிவுக்கு வராது! ஆரோக்கியமான விவாதங்களை தொடர வேண்டும்! மகிந்தா இனப்பிரச்சினைக்கு தீர்வு காணபார் என எதிர்பார்ப்பது> இலவு காத்த கிளி போலாகும்!

    Reply
  • நண்பன்
    நண்பன்

    நன்றி பார்த்தீபன்.

    கரண் ,இலங்கையோடு சிங்கப்பூரை ஒப்பிட முடியாது. உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன். இருந்தாலும் சிங்கப்பூரில் தமிழருக்கான உரிமைகள் குறித்து நண்பரின் எழுதிய கருத்துக்காகவே அவ்விளக்கத்தை அளித்தேன்.

    அனைத்து நாடுகளிலும் சில நல்லவைகளும் , சில தீயவையும் இருக்கும். நல்லவைகளை எடுத்துக் கொள்வோம் தீயதை புறம் தள்ளுவோம்.

    வந்தியத் தேவன் , அந்த மாணவர் போராளிகள் சிங்கப்பூரில் ஒழிக்கப்பட்டார்கள். அது குறித்த விபரங்கள் வெளிவரவில்லை. அங்கே அரசுக்கு எதிராக யாரும் வாய் திறக்கவே முடியாது. அப்படி வாய் திறந்த ஜே.பீ. ஜெயரட்ணம் அவர்கள் தனது சொத்துக்களை தண்டப் பணமாக கட்டி அழிந்து , பின்னர் இறந்து போனார். இவரும் ஒரு இலங்கையர்.

    ஆரம்பகால சிங்கப்பூர் கொள்ளையர்கள் நிறைந்த பூமியாக இருந்தது. அதற்கான கடும் சட்டத்தை லீ அவர்கள் கொண்டு வந்தார். அவரது கடும் போக்கே மக்களை நல்வழிப்படுத்தியது. அது மட்டுமல்ல உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இன்று பலரும் வியக்கும் ஒரு தேசம்.மலேசிய நாடு கொள்ளைக்காரர்கள் கொண்ட தேசம் எங்கே உருப்படும் என எண்ணினர். பின்னர் மலேசியாவே சிங்கப்புரை பின்பற்றியது. கட்டுப்பாடற்ற சுதந்திரம் ஆபத்தானது.

    பிரபாகரனது ஆட்சிப் பகுதியில் நடந்த கொடுமைகளை எவரும் வாய் திறந்து எதிர்க்கவில்லை. எதிர்த்தோர் துரோகிகளாக்கப்பட்டனர். அங்கே புலிகளால் கேடயமாகவும் , இராணுவப் பகுதிக்கு ஓட முனைந்தவர்களும் கொன்று குவித்ததை நம்மில் எவரும் குற்றம் சொல்லவில்லை. ஆனால் அரசு செய்வதை மட்டும் குறை சொல்கிறோம்.

    இது நம் பிள்ளை என்ன செய்தாலும் குற்றமில்லை. அடுத்தவன் பிள்ளை சரியென்றாலும் குற்றம் காண வேண்டும் எனும் மனநிலையாகவே நம் கருத்துகள் தெரிகிறது.

    அதனால்தான் நாம் அரசை குறை மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இன்று முகாம்களில் முடங்கியிருக்கும் மக்கள் வேதனைகளோடு வாழ்ந்தாலும் குண்டு அச்சுறுத்தலின்றி வாழ்கிறார்கள். அவர்கள் வெளியில் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அங்கும் சட்டத்துக்கு புறம்பான தவறுகளைச் செய்து கடுமையை உண்டாக்கிக் கொள்வோர் தமிழராகவே இருக்கின்றனர்.

    புலிகளது கட்டுப்பாட்டில் உயிர் பயத்தில் கட்டுப்பட்டு இருந்தார்களே ஒழிய அங்கே யாரும் மகிழ்வாக வாழ்ந்ததாக யாரும் அடி மனதிலிருந்து சொல்வதில்லை. அதைச் சொன்னால் உயிர் உடலில் இருக்காது. திருமணம் செய்த பாவத்துக்கு கணவனோடு கடமைக்காகவாவது வாழ்ந்தே ஆக வேண்டும் எனும் நிர்ப்பந்திக்கப்பட்ட மனைவியின் நிலையில் தமிழர்கள் இருந்தார்கள் என்பதே உண்மை. வேறு மாற்று வழி?

    சிங்கப்பூரில், அனைத்து பிரஜைகளுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி உண்டு. மக்களோடு இராணுவம் அல்ல, ஒவ்வொரு குடிமகனும் இராணுவத்தின் ஒரு அங்கமேயாகும்.

    சிறீலங்கா இராணுவம் , புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த புலிகளைக் கூட கண்டு கொள்ளாமல் விட்டுள்ளது. ஆனால் பிடிப்பட்ட புலிகள்தான் , அவனையும் புலியென காட்டிக் கொடுப்பதாக ஒரு நண்பர் சொன்னார். நான் பிடிபட , இவனை விடுவதா எனும் மனநிலை புலிகளிடம் இருப்பதாக. புலிகளாக சரணடைந்த பலர் , முகாமிலிருக்கும் ஏனைய புலி உறுப்பினர்களைக் காட்டிக் கொடுக்கிறார்கள் எனும் உண்மையை சொன்னார். நம்புவீர்களோ தெரியாது? அதிகம் நடப்பது அதுவே. அடுத்தவனைக் காட்டிக் கொடுத்தாவது நாம் தப்ப வேண்டும் எனும் மனநிலை.

    ஒரு சிங்கள நண்பனின் கருத்திலிருந்து சில:
    // புலிகளில் இருந்து வெளியே வந்தவர்கள் அளவுக்கு சிறீலங்கா அரசுக்கு உதவிய எவருமே,வேறு எந்த போராளிகள் அமைப்பிலும் இருந்ததேயில்லை என ஒரு இராணுவ உயர் மட்ட நண்பர் சொன்னார். அது எனக்கு முதலில் வியப்பாக இருந்தது. ஆனால் அவர் சொன்ன விடயங்கள் அதை ஏற்றுக் கொள்ள வைத்தன. ஏனைய இயங்களை புலிகள் அழித்த போதும் , அவர்கள் ஏதோ ஒரு வகையில் ஒரு சிலர் இன்போர்மர்களாக இருந்தார்களே தவிர, இராணுவத்துடன் இணைந்து புலிகளுக்கு எதிராக போரிட அல்லது உதவ வந்தவர்களென்றால் மிகச் சிலர்தான். புலிகள் எதிரிகளானாலும் , அவர்களை எதிர்க்காது நழுவல் போக்கில் இருந்தனர். ஆனால் புலிகளிலிருந்து வந்தவர்கள் எமக்கு வழி காட்டிகளாகவே இருந்தார்கள் என்று பல தகவல்களை சொன்ன போது வாயடைத்துப் போனேன்.

    உண்மைதான். உதாரணத்துக்கு புதினத்தின் மாற்றம்? தேசியத் தலைவரையே துரோகி ரேன்ஜுக்கு எழுதுகிறது புதினம்?

    புலிகளை விட்டு லட்சக் கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் இராணுவப் பகுதிகளுக்கு வந்த போது, இன்னொரு சுனாமி அனர்த்தம் போல் இருந்ததாக பலர் குறிப்பிடுகிறார்கள். வருவோரை ஏற்பதைத் தவிர யார் என்று பிரித்துப் பார்க்கக் கூட எமக்கு நேரம் போதவில்லை என்கிறார் அங்கு நின்ற அந்த ஒரு அதிகாரி நண்பன்.

    ஆரம்பத்தில் சிறிது சிறிதாக வந்திருந்தால் அது பெரும் சுமையாக இருந்திருக்காது. ஒரே சமயத்தில் என்பது பெரும் சுமை. உலகம் , உதவி செய்வதை விட புலிகளதும் , எதிர்கட்சியனரதும் பரப்புரைகளை நம்பி அரசை தடுமாற வைப்பதிலேயே குறியாக இருக்கிறது. புலிகளை காப்பாற்ற பல நாடுகள் கடைசி நேரத்தில் முனைந்தன. அதற்கு அவர்களது சுயநலம் காரணம். அதை செய்யாத மகிந்தவை அவர்கள் ஏதோவிதத்தில் தண்டிக்க நினைக்கிறார்கள். ஆனால் மகிந்த நிதானமாக தனது எண்ணத்தை நிறைவேற்ற பயணித்துக் கொண்டிருக்கிறார். தமிழர்களுக்கு தன்னால் விடிவு ஒன்று இருக்கும். அதை நாம் செயலால் காட்ட வேண்டும் எனும் ஆதங்கத்தில் அவர் உள்ளார் என்றார் அவர்.

    சிங்கள இனவாதிகளதும் , எதிர்க்கட்சிகளதும் , தமிழர் கட்சிகளதும் , உலக நாடுகளதும் தாக்கத்துக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. முடிக்க முடியாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த எம்மால் , இந்த பிரச்சனையை தீர்ப்பது கடினமானதல்ல. சற்று முகம் கொடுக்க வேண்டும். யுத்த தளபாட செலவுகளை மக்களது பணிகளுக்கு திருப்பலாம். இராணுவமும் மக்களில் ஒரு அங்கம்தான். அவர்களை நாட்டின் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தலாம்.

    இலங்கையில் தொலைக் காட்சியில்லாத காலத்தில் இந்தியாவில் கறுப்பு வெள்ளை தொலைக் காட்சி இருந்தது. இலங்கைக்கு தொலைக் காட்சி வரும் போது அதை நாங்கள் கறுப்பு – வெள்ளை தொலைக் காட்சியாக கொண்டு வரவில்லை. நமது தேசத்துக்கு வண்ண தொலைக் காட்சியாகவே வந்தது. அது போல குண்டு பொழிந்த பகுதிகளில் அப்படியே கொண்டு போய மக்களை தள்ளிவிடுவதை விட , இதுவரை இல்லாத அனைத்து வளங்களும் கொண்ட அவர்களது பூமிக்கு அவர்கள் போகும் போது அது மகிழ்வாக இருக்கும்.மாற்றமாகவும் இருக்கும். அதை நாம் செய்ய முனைகிறோம் என்றார்.

    முகாமிலிருப்போருக்கு இன்று இராணுவம் அச்சம் கொண்டவர்களாக இல்லை. ஓரளவு நெருக்கம் தெரிகிறது. அந்த நெருக்கம் உண்டாக சிறுது காலமெடுக்கும். அன்பு கொண்ட மனங்களில் விஷத்தை தூவுவது இலகுவானது. விஷம் தூவப்பட்ட மனங்களில் அன்பை விதைக்க வெகு காலம் எடுக்கும். அதை எம்மால் உணர முடிகிறது. இது தமிழர்களது தவறு மட்டுமல்ல. சிங்கள தலைமைகளது தவறாகவும் இருந்தது என்றார்.//

    இவை நமக்கும் , அவர்களுக்குள்ளும் உள்ள எதிர்கால எண்ணங்களை எடுத்தியம்புகின்றன.

    நாம் இன்னும் வட்டுக் கோட்டையில் அமிர்தலிங்கம் சொன்ன தீர்மானத்துடன் நின்று கொண்டிருக்கிறோம். சிங்களவர் உலகத்தை தன் இராஜதந்திரத்தால் மெதுவாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவே யதார்த்தம்.

    நமது மாறாத எண்ணங்களா? இல்லை நமது மக்களது நல்வாழ்வா? இதற்காக நாம் தியாகங்கள் செய்தே ஆகவேண்டும். ஆகக் குறைந்தது, அது நமது எண்ணங்களாக ஆகவாவது இருத்தல் வேண்டும்.

    டாக்குத்தரும், இன்ஜினயரும் , வக்கீலும் இருந்த நம் யாழ் சமுதாயத்தன் எண்ண மாற்றம் போல இவையும் மாற வேண்டும்.

    நன்றி.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    “…இலங்கையில் கடத்தல் கொள்ளை கொலை எனபன நிறுத்தப்பட்டால்…… வேண்டாம்.

    “..இலங்கை அரசு தனது அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்துமாக இருந்தால்….

    இவைதான் பிரச்சினை. மக்கள் சொல்கின்றனர் நாட்டில் பிரச்சினைகள் உண்டு என்று. நீங்கள் சொல்கிறீர்கள் இல்லை..இல்லை என்றும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் நாடு நன்றாக இருகும் என்றும்.

    சிங்கப்பூர் அலாதி மறைந்த ஸ்ரீலங்கா அதிபர் ஜே.ஆருக்கே இருந்த போது புலி என்ன புலி. ஜே.ஆர் இன் சிங்கப்பூர் அலாதிபற்றியும் சிங்கப்பூர் எயர்லைன்ஸ் பைலெடடின்ர கொன்ரக்ட் பற்றியும் லீகுவான் யூ சொல்லி இருக்கிறார்…………

    Reply
  • vadakkan aatham
    vadakkan aatham

    மாயா 1963ல் மலேசியாவுடன் இணைந்த சிங்கப்பூர் 1965 ல் பிரிந்து போகும் போது என்ன சிங்கப்பூர் முள்ளிவாய்க்கால் சண்டையா அங்கு நடந்தது? சிங்கப்பூரில் உள்ள பொருளாதார வளர்ச்சி தான் சிங்கப்பூரை ஐக்கியமாக வைத்திருக்கிறதே அன்றி வேறொன்றும் இல்லை. இது சுவிஸ் கனடா போன்ற வளர்ந்த நாடுகளுக்கும் பொருந்தும். அதை விடுத்து தமிழன் பொருளாதார ரீதியில் முன்னேறும் போது சிங்களவரும் சிங்களவர் முன்னேறும் போது தமிழரும் குற்றம் சாட்டுவதால் தான் பிரச்சனை வருகிறது.

    நண்பனுக்கு

    பொதுவாகவே ஒவ்வொரு மனிதக் கூட்டத்திற்கும் வெவ்வேறு குணாதிசயங்களும் வாழ்க்கை முறைகளும் உள்ளது. தமிழர்களும் ஒரு இறுக்கமான சமூகக் கட்டமைப்பையே வைத்திருகிறார்கள். இதை விட யூதர்கள் முஸ்லிம்கள் இறுக்கமான கட்டமைப்பை வைத்திருக்கிறார்கள். நான் கேள்விப்பட்டேன் சுவிஸில் யூதர்களின் பகுதிகளுக்கு இரவில் வேறொருவரும் செல்ல முடியாது என. கிழக்கில் சில முஸ்லிம கிராமங்களிலும நிலைமை இதுவே. இவை கால மாற்றங்களினூடாகவே மாற்றப்பட வேண்டும். சீதனம் பூப்பனித நீராட்டு விழா சீட்டு சாதி இவை மாற்றப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான முரண்பட்ட கருத்தும் இல்லை. இவை சமூக பொருளாதார மாற்றங்களினுர்டாக மாற்றப்பட முடியும். அதற்காக தமிழர்களை இனரீதியாக ஒடுக்கலாம் என்ற வாதத்திற்கு துணை போகாதீர்கள்.

    பார்த்திபனுக்கு

    நீங்கள் ராஜபக்சவிற்கு இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு கால அவகாசம் கோடுக்கும்படி கூறியிருந்தீர்கள். அவருடைய ஒரு பதவிக்காலம் முடியப் போகின்றது. அவருடைய ஏபிஆர்சி யையும் ஒரு கிழமையில் மூடுகிறார்களாம். இனப்பிரச்சனை 60 வருடங்களாக உள்ளது. அவர் பிரதமராக இருந்த காலத்திலேயே அரசியல் தீர்வு குறித்து சிந்திதது இருப்பார் என நம்புகின்றேன். மேலும் சில வருடங்களுக்கு முன்பு ஜனாதிபதி லண்டன் வந்திருந்த போது சந்தித்த கூடட்டத்தில் நானும் ஒருவன். ஆனால் அப்போதே அவர் எனக்கு நம்பிக்கையை தரவில்லை. இப்போது ஆயுதப் போராட்டம் அழிந்த பின்னால் தருவார் என்றா நினைக்கிறீர்கள்?

    பலரும் ஜேவிபி கெல உறுமய மற்றும் பலர் பிழையாக கதைத்தாலும் அதை செய்கிறார்கள் இதை செய்கிறார்கள் என சொல்லுகிறீர்கள். இது அவர்களுடைய அரசியல். பிபாகரனும் சிங்கள பகுதிக்கும் நிவாரணம் அனுப்பியதாக நினைவு.

    ஒரு ஏழை விவசாயின் மகனாக எனக்குள்ள பிரச்சனையை சொல்லியிருந்தேன். இதைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லை. உங்களுக்கு தெரியுமா யாழ்ப்பாணத்தில் வெங்காயம் உயர்வான விளைச்சல் அடையும் போது இலங்கை அரசு வெங்காயத்தை இறக்குமதி செய்து எமது வயிற்றில் அடித்தது.

    வடக்கான் ஆதாம்.

    Reply
  • vadakkan aatham
    vadakkan aatham

    “அந்த மாணவர் போராளிகள் சிங்கப்பூரில் ஒழிக்கப்பட்டார்கள். அது குறித்த விபரங்கள் வெளிவரவில்லை. அங்கே அரசுக்கு எதிராக யாரும் வாய் திறக்கவே முடியாது”

    சிங்கப்பூரில் மாணவர் போராட்டம் ஒடுக்கப்பட்டது. அரசுக்கு எதிராக யாரும் வாய் திறக்கவே முடியாது. இதே வழியை இலங்கையிலும் பயன்னடுத்தலாம் என்றும் சொல்கிறீர்கள் போலுள்ளது. அந்தப் போராட்டத்தில் இருந்த நீதி நியாயங்கள் இருக்கவில்லையா? கடுமையான நடவடிக்கைகளுக்கு பிறகு சிங்கப்பூர் உருவாகியது என்கிறீர்கள். அது போல் தற்போது கடுமையான நடவடிக்கையை கண்டுள்ள இலங்கையில் மகிந்த இனப்பிரச்சனையை தீர்த்த நாடடை முன்னேற்றுவாரா என்பதே குறிப்பாக சிறுபான்மையினரை வாழ வைப்பாரா என்பதே எனது கேள்வி. இலங்கை அரசியலில. இதுவரை நடந்தவை தற்போதைய சூழ்நிலைகளை வைத்து தமிழர்களுக்கு தீர்வேதும் கிடைக்காது எனவே நான் கூறுகின்றேன். ஆனால் நீங்களோ புலியைப்பற்றி சம்மந்தம் இல்லாமல் எழுதி வேறென்னவோ சொல்லுகிறீர்கள்.

    சிங்ப்பூர் போல நாங்களும் கட்டாய இராணுவ பயிற்சி எடுத்து தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க தயார். ஆனால் இலங்கை ராணுவமோ எங்கள் கொல்லைப் புறத்தில் எங்களை உளவு பார்க்கத்தான் தயாராக இருக்கப் போகிறதாம்.

    மாறவேண்டியவர்கள் நாங்களா?

    Reply
  • நண்பன்
    நண்பன்

    வடக்கான் ஆதம்,
    ஒருவருக்கு உதவ எனக்குள் விருப்பம். சிலர் அவருக்கு உதவ வேண்டாம் என்கின்றனர். நான் உதவ நினைப்பவரும் என்னை சந்தேகமாகவே பார்க்கிறார். பல எதிர்ப்புகள் மத்தியில் அவருக்கு உதவ விரும்புவதை அவர் புரியாமல் வேறு பேசுகிறார். நான் என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.

    என் விருப்பத்தின்படி உதவுவதா? இல்லை, என் நிலை புரிந்து கொள்ளாத அவனுக்கு என்ன உதவி என விட்டு விடுவதா? பதில் தாருங்கள்?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    வடக்கான் ஆதம்,
    நீங்கள் ஊகங்களை நம்பும் அளவிற்கு உண்மைகளை நம்பவதில்லையென்பது புரிகின்றது. சுவிஸில் யூதர்களின் பகுதிகளுக்கு இரவில் வேறொருவரும் செல்ல முடியாது என நீங்கள் அறிந்தது கூட முழுக்க முழுக்கத் தவறான தகவல். அதுபோல் சுனாமி அடித்து ஒருமாதம் கழித்தே தன் மக்களைப் பார்த்த பிரபாகரன் நிவாரணநிதியென்று 30 கோடியை அறிவித்தரதுடன் சரி. அதன் பின் அந்த மக்களுக்காக வெளிநாடுகள் உட்பட பலர் அனுப்பிய அனைத்தையும் புலிகளே அபகரித்து அம்மக்களுக்கு விலைவைத்து விற்றார்கள். இந்த இலட்சணத்தில் சிங்களப் பகுதிகளுக்கு நிவாரணம் அனுப்புவதா??

    ஒரு புதிய உணவைச் சாப்பிட போகும் போது அதனைப் பற்றி தவறான அபிப்பிராயத்தை வைத்துக் கொண்டு சாப்பிடுவோமேயானால், உணவு எவ்வளவு தான் நன்றாக இருந்தாலும் எமக்கு அந்த உணவு திகட்டத் தான் செய்யும். அதுபோலவே உங்களது மகிந்த பற்றிய எண்ணமும். மகிந்தவின் பதவிக்காலம் முடிய இன்னும் ஒரு வருட காலத்திற்கு மேலுள்ளது. ஏன் திரும்பவும் மகிந்த வர மாட்டாரென்றும் கூற முடியாது. வெறுமனே மகிந்த என்ன கிளிக்கப் போகின்றாரென்று நாம் காத்திருப்பதை விட, எமது ஒத்துழைப்பையும் வழங்கி அவர் ஆவன செய்வதற்கு நாமும் உந்து சக்தியாக இருந்து பார்க்கலாமே. மகிந்த ஏமாற்றப் பார்க்கின்றாரா அல்லது இனப்பிரைச்சினையைத் தீர்க்கப் பார்க்கின்றாரா என்பது விரைவில் தெரியாமலா போய்விடும்….

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    “கருணா கூறியுள்ளதைப் போல தமிழ் ரெஜிமென்ட் எதையும் உருவாக்கும் எண்ணம் எங்களிடம் இல்லை. அந்த செய்தி தவறு என்று கூறியுள்ளார் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்சே. தமிழர்களைக் கொண்ட தனி படைப் பிரிவு உருவாக்கப்படும். அதில் தமிழர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். எங்களது பிரிவைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே அதில் சேர்ந்து வருகின்றனர் என்று கருணா கூறியிருந்தார். ஆனால் அதை பொய்ச் செய்தி என்று கூறியுள்ளார் கோத்தபாய ராஜபக்சே. இதுகுறித்து அவர் கூறுகையில்இ இந்த கருத்து அடிப்படை அற்றது. அப்படி ஒரு திட்டம் அரசிடம் இல்லை. கருணா கூறியதில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார் கோத்தபாய. இதையேஇ பாதுகாப்புத் துறை அமைச்சர் கெகலிய ரம்புகவெல்லாவும் தெரிவித்துள்ளார்.”

    சிங்கப்பூர் ராணுவம…..?

    Reply
  • மேளம்
    மேளம்

    நண்பனின் வாதம் முற்றும் சரியானது. எனது மனதில் எழுகின்ற கேள்வியும் இதுதான். நாம் தெற்கில் வாழலாமென்றால் ஏன் வடக்கில் சிங்களவன் வாழக்கூடாது? ஏன்ராப்பா சிங்களவனைப் பற்றி யோசிக்கின்றோம்? தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியரையே 24 மணித்தியாலங்களுக்குள் துரத்திய மண்ணின் மைந்தரல்லவா நாம்? ஏன் இவ்வளவு? எத்தனை மட்டக்களப்பு மக்கள் யாழ்ப்பாணத்தில் குடியிருக்கின்றார்கள் அல்லது வளவு வாங்கியிருக்கின்றார்கள் என்று கணக்கெடுத்தாற்கூட இரண்டு கை விரல்களுக்கிடையேயே கணக்கு அடங்கிவிடும் என்பது நம்மனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் நாம் எங்கு போனாலும் நம்மவரையும் கூப்பிட்டு நம்மருகே குடியமர்த்தி வீடு வளவு என்று வாங்கி நாம் குடியேறிக் கொண்டே இருப்போம். ஆனால் நாம் வாழ முடியாது என்று கைவிட்ட இடத்தில் வாழ இடமில்லாமல் யாரும் வந்தாலும் கூட இருக்க விடமாட்டோம். ஏதோ ஆயிரம் வருடம் வாழப்போவது போல்.

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    “13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை. சுசில் பிரேம ஜெயந்த.
    13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் நோக்கம் அரசிடம் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேம ஜெயந்த அவர்கள் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு அரசு வழங்குமாக இருந்தால் தாம் அரசில் இருந்து வெளியேறப்போவதாக ஜாதிக ஹெல உறுமய விடுத்திருக்கும் அச்சுறத்தல் தொடர்பாக பிபிசி க்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

    மாகாண சபைகளிலும், அமைச்சரவையிலும் அமைச்சுப்பதவிகளையும், பிற பதவிகளையும் பெற்றுக்கொண்டுள்ள ஹெல உறுமயவினர் அரசிலிருந்து வெளியேற மாட்டார்கள் என தனக்கு அசையாத நம்பிக்கை உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

    இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக 13ம் திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதுடன் அதற்கு மேலாக 13+ எனும் ஓர் விடயத்தையும் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ராஜபக்ச அவர்கள் இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு தெரிவித்துள்ளார் என்பதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பல அமைச்சர்கள் 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலமே நாட்டின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வைக்காண முடியும் எனவும் கூறிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் ”

    அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். நம்மவர்கள்தான் அவர்களை நம்பச் சொல்கிறார்கள்.

    Reply
  • BC
    BC

    //வடக்கான் ஆதாம் – சீதனம் பூப்பனித நீராட்டு விழா சீட்டு சாதி இவை மாற்றப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான முரண்பட்ட கருத்தும் இல்லை. இவை சமூக பொருளாதார மாற்றங்களினுர்டாக மாற்றப்பட முடியும்.//

    இதில் பூப்பனித நீராட்டு விழா என்பது இலங்கையில் முன்பு எப்போதும் நடைபெற்றிராத அளவுக்கு இப்போ புலம் பெயர்ந்த தமிழர்களிடம் மோசமாகவும் பரவலாகவும் நடை பெறுவதாக சொல்லப்படுகிறது.பொருளாதார மேம்பாடு புலம் பெயர்ந்த தமிழர்களிடம் மாற்றங்களை கொண்டுவராமல் நிலமையை மோசமானதாக்கி விட்டதே! இலங்கையில் குண்டு வெடிக்கும் போதும், போட்டுதள்ளும் போதும் enjoyபண்ணுவதும் இவர்கள் தான்.

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    இங்கு யாரும் சிங்களவர்கள் வந்து தமிழ் பிரதேசங்களில் குடியேற வேண்டாம் என சொல்லவில்லை. திட்டமிட்ட ரீதியில் அரசினதும் படைகளினதும் பின்னணியோடு வந்து ஆக்கிரமிக்க கூடாது என்பதே திரும்பு திரும்ப சொல்கிறோம்.மெல்ல இவ்வாறு எழுதுபவர்களை புலியென்று முத்திரையிட்டு தள்ளி விடவும் பார்க்கிறீர்கள். அது தவறு! நாங்கள் (தமிழரும் சிங்களவரும்) நீண்ட தூரம் வந்து விட்டோம். தமிழர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப் படாத வரைக்கும் இரண்டு இனங்களும் இணைந்து வாழுதல் சாத்தியமற்றது. தமிழர்களுக்கு பிரதேச மொழி மற்றும் நிர்வாக உரிமைகள் இதய சுத்தியுடன் பகிர்ந்தழிக்கப்படா விடின் காலப் போக்கில் மீண்டும் இலங்கையில் மோதல்கள் உருவாகும்.

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    இதில் பூப்பனித நீராட்டு விழா என்பது இலங்கையில் முன்பு எப்போதும் நடைபெற்றிராத அளவுக்கு இப்போ புலம் பெயர்ந்த தமிழர்களிடம் மோசமாகவும் பரவலாகவும் நடை பெறுவதாக சொல்லப்படுகிறது”

    அடுத்த தலைமுறை இவற்றை பெருமளவில் கைவிட்டு வீட்டு மோட்கேஜ் விடுமுறை என வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு விடும்.

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    மேளம் ,பிசி அவர்களே
    சுசில் பிரேம ஜெயந்த அவர்கள் 13 வது திருத்தச் சட்டம் பற்றி சொல்லியிருப்பது குறித்து நீங்கள் ஒன்றும் சொல்ல மாட்டீர்களா?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நண்பனின் வாதத்தை ஏற்றுக்கொள்ள நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்? இல்லாத பட்சத்தில் நாம் தமிழருக்கு பயன்யுள்ள தமிழராகவோ மனிதனாகவோ வாழவிருப்பம் இல்லாததையே குறிக்கும். எமது அறிவை நாம்வளர்த்தெடுத்து தெளிவுபெறும் போதுதான் எமதுஇனம் உயர்வு
    அடையும் நாடும் முன்னேற்ற பாதையில் பயணிக்க வழிதேடமுடியும்.

    சகிப்புதன்மை விட்டுக்கொடுத்தல் சேர்ந்துவாழுதல் விடாமுயற்சி இதுவெல்லாம் எல்லாஇனத்திற்கும் உரியவை. இதைவேறுபடுத்தி அரசியல் நடத்தும் போதுதான் பிரச்கனைகளே உருவாகிறது. மனிதன் சந்தேகப்படகூடியவன் தான். வாழ்நாள்பூராவும் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தால் எப்படி? சிங்களவன் தரமாட்டான் சிங்களவன் திருந்தமாட்டான் என்று சொல்லியே விரல்களையும்சுட்டு கைகளையும் முறித்துக் கொண்டோம். இனி…ஆரோக்கியமான அரசியலை இனம்கண்டு கொள்வோம். அரசியல்பிராணியே மனிதனும். தமிழன் மட்டும் எப்படி? விதிவிலக்காக இருக்கமுடியும்.

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிச் சண்டையில் 100 பொது மக்கள் தான் பலியானானார்கள் என மகிந்த இந்தியாவில் வைத்து பேட்டி கொடுத்திருந்தார். அவரா தமிழர்களுக்கு உரிமைகளை கொடுக்கப் போகின்றார்?

    ஆரோக்கிய அரசியலுக்கான பாதையை எங்கும் காண முடியவில்லை. ஜேவிபி யும் கெல உறுமயவும் இனவாதத்தைக் கக்குகின்றன. அமைச்சர்களே அரசியல் தீர்வு குறித்து இதுவரை உருப்படியாய் ஒரே குரலில் ஒன்றும் சொல்லவில்லை.

    நீங்கள் எவரும் கூட மேலுள்ள சரத்பொன்சேகாவின் அறிவிப்பு குறித்து ஒன்றும் சொல்லவில்லை. தமிழர்கள் தேசிய இனத்தவர் என்பதை நீங்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லையோ என்றும் தெரியவில்லை.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வந்தியதேவன் துரத்தி துரத்தி நீங்கள் கேட்கும் கேள்விகளைப் பார்தால் என்னால் ஒரு முடிவுக்கு தான் வரமுடியும். மேமாதம் பத்தொன்பதாம் திகதி பிறகு நடந்த சம்பவங்கள் எமக்கு மகிழ்சி தருவது போல் தங்களுக்கு இந்த திகதிகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களே “இனிமையாக” உள்ளது போல் தெரிகிறது.
    ஒருகடிதமோ அனுப்பிய பணமோ வாரக்கணக்காக ஆகும் போது மாறிவரும் பரிமானங்களை கணக்கில் எடுக்காது. எடுத்தோம் கவிழ்தோம் என்ற முடிவைத்தேடுவது தங்கள் அவசரபுத்தியா? அறியாமையா? எதுவாக இருந்தாலும் பொறுமையாக இருங்கள் முன்பு நடந்த துரஷ்ரவசமான சம்பவங்கள் இனிநடபெறப் போவதில்லை.நல்லவற்றை எதிர்பார்போம் அதற்காக முயற்சிப்போம். எவருக்கு குறையில்லாத சிந்தனைகளும் கருத்துக்களும் இல்லை? அதையும் வெல்ல கருத்துக்களை முன்வைப்போம்.

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    மேமாதம் பத்தொன்பதாம் திகதி பிறகு நடந்த சம்பவங்கள் எமக்கு மகிழ்சி தருவது போல் தங்களுக்கு இந்த திகதிகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களே “இனிமையாக” உள்ளது போல் தெரிகிறது.”

    மே மாதம் பத்தொன்பதாம் திகதிக்கு பின்னர் தான் சற்று மூச்சு விடுவதால் தான் உங்களை எல்லாம் துரத்தி துரத்தி கேட்க முடிகிறது. அது நிரந்தரமான நிம்மதி மூச்சாக இருந்து விட வேண்டும் என்ற ஆதங்கத்தில் சந்தேகப்படுவதும் கேள்வி கேட்பதும் உங்களுக்கு என்னை புலி முத்திரை குத்தப் பார்க்கிறது. அரசியல் தீர்வு குறித்து மகிந்தாவை தொடர்பு படுத்தாமல் பிரபாகனையா கேட்க முடியும்?

    மகிந்த இனப்பிரச்சனை என்ற கடிதம் எழுதத் தொடங்கி நீண்ட காலமாகிறது.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //vanthijathevan on July 2, 2009 7:31 am முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிச் சண்டையில் 100 பொது மக்கள் தான் பலியானானார்கள் என மகிந்த இந்தியாவில் வைத்து பேட்டி கொடுத்திருந்தார். அவரா தமிழர்களுக்கு உரிமைகளை கொடுக்கப் போகின்றார்?

    ஆரோக்கிய அரசியலுக்கான பாதையை எங்கும் காண முடியவில்லை. ஜேவிபி யும் கெல உறுமயவும் இனவாதத்தைக் கக்குகின்றன. அமைச்சர்களே அரசியல் தீர்வு குறித்து இதுவரை உருப்படியாய் ஒரே குரலில் ஒன்றும் சொல்லவில்லை.

    நீங்கள் எவரும் கூட மேலுள்ள சரத்பொன்சேகாவின் அறிவிப்பு குறித்து ஒன்றும் சொல்லவில்லை. தமிழர்கள் தேசிய இனத்தவர் என்பதை நீங்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லையோ என்றும் தெரியவில்லை.//

    இங்கே கருத்தெழுதும் சிலர் சந்திரன் ராஜா , பார்த்திபன் போன்ற யதார்த்தமான தொலை நோக்கோடு இருப்பது மகிழ்வாக இருக்கிறது. நன்றிகள்.

    நான் எழுதும் கருத்துகள் சிங்களத்துக்கான கருத்தாக எண்ணினால் அது வருத்தமாக இருக்கும். எனது கருத்துகள் அனைத்து இலங்கை மக்களது சுபீட்சத்தை நோக்கிய கருத்தாக நினைக்கிறேன்.

    vanthijathevan , மகிந்தவின் பேட்டி அவர்களை காப்பாற்றிக் கொள்ளும் பேச்சாகவே கருதுகிறேன். முல்லைவாய்க்காலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதோ அல்லது எத்தனை பேர் புலிகளால் கொல்லப்பட்டார்கள் என்பதோ வெளிவராத , ஆனால் ஒருநாள் வெளிவரும் ரகசியங்கள். பிரபாகரனும் , பாலசிங்கமும் ராஜீவ் கொலை துன்பியல் என உளறி , ராஜீவ் கொலை புலிகளால்தான் செய்யப்பட்டது எனும் தன்மையை கொண்டு வந்தது போல மகிந்த முட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொள்ள சிங்களயா மோடயா ( சிங்களவன் மோடன்) தரத்தில் இல்லை என்றே நினைக்கிறேன்.

    ஜேவீபியின் ஒரு பகுதியினர் மட்டுமே 13வது திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றனர். ஆனாலும் தமிழருக்கு மட்டுமல்ல இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என சொல்கின்றனர்.

    ஜேவீபியின் இன்னொரு பிரிவினர் 13வது சட்ட திருத்தத்தை ஆதரிக்கின்றனர். சிங்கள கெல உருமயவை ஜேவீபியை வைத்தே மகிந்த சரிக்கட்டுவார். அது கடந்த காலத்தில் நடந்தேறியது. பாணதுறை மற்றும் களுத்தறை பகுதியில் வைத்து சிகள உருமய கட்சி பெளத்த பிக்குகளுக்கு ஜேவீபீ சாணம் வீசி , உடைகளை களைந்த நிகழ்வுகள் நடந்தன என்பவை பலருக்கு தெரியுமோ தெரியாது? பெளத்த சாசனத்தின் முக்கிய தலைமை பீடாதிபதிகள் இனப்பிரச்சனை மகிந்த காலத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் எனும் கருத்தோடு இருக்கின்றர். இவற்றை மகிந்தவால் அவசரத்தில் செய்ய இயலாது. முள்ளில் சிக்கிய சேலையை எடுப்பது போல காய்களை நகர்த்துகிறார் மகிந்த என்பது பலரும் அறிந்த விடயம். மகிந்தவை யதார்த்தவாதி என்று பிரபாகரன் சொன்னது பொய்யல்ல. ஒரு வீட்டுக்குள்ளே பல வித கருத்துகள் இருக்கும் போது ஒரு நாட்டுக்குள் உள்ள கட்சிகள் பலவித கருத்துகளை முன் வைக்கும். ஆனாலும் மக்களின் விருப்பமே இங்கு வெல்லும்.

    கடந்த காலங்களில் எந்தவொரு சிங்கள அரசியல் கட்சியும் இனவாதத்தின் அடிப்படையில் வெற்றி பெறவில்லை. அனைத்து கட்சிகளும் நாட்டில் சமாதானத்தை கொண்டு வருவோம் என்றே மக்களது வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தார்கள். இறுதியுத்தம் கூட மனித நேய யுத்தமாகவும் , பயங்கரவாதத்தின் காலடியில் சிக்கியிருக்கும் அப்பாவி தமிழ் மக்களை காக்கும் யுத்தமாகவே பிரசாரம் செய்யப்பட்டது. ஜேஆர் சொன்னது போல தமிழர்களை தள்ளிவிடுவோம் என பிரசாரப்படுத்தியது போன்று அனைத்து தமிழர்களையும் கொன்றுறொழிப்போம் என பிரச்சாரப்படுத்தவும் இல்லை. அப்படியாக அனைத்து தமிழர்களும் கொல்லப்படவுமில்லை.

    அப்பாவித் தமிழர்களுக்கு பின்னால் இருந்து தாக்குதல் நடத்திய போதும் , மக்கள் மத்தியில் இருந்து புலிகள் எறிகணைகளை வீசிய போதும், அந்த இலக்குகளை நோக்கி அரச படைகளது தாக்குதலிலேயே பெரும்பாலான மக்கள் கொல்லப்பட்டனர் என்பது உண்மை. அதை நாம் இல்லையென்று மறுக்க முடியாது.

    பொது மக்களின் சாவில் அனுதாபம் கொண்டு உலகம் புலிகளுக்கு தமிழீழத்தை பெற்றுத் தரும் என்று நம்பி, இறுதியில் உயிரையாவது மீட்டுத் தராதா எனும் அடி நிலைக்கு புலித் தலைமை தள்ளப்பட்டது வேதனையான சம்பவம்.

    புலிகளின் ஊடகங்கள் சொன்ன கற்பழிப்புகளும் , சிறுநீரக , கற்பப்பை அகற்றல் மற்றும் உடல் உறுப்புத் திருடல்களும் சிங்கள வைத்தியர்களால் நடை பெற்றது உண்யென்றால் 15ம் திகதிக்கு பின்னர் சரணடைந்து இடைத்தங்கல் முகாம்களை நோக்கி வந்த புலிகளின் இரண்டாம் தரத்திலான பாலகுமார் , தமிழினி……. போன்றவர்களுக்கு இந்த அச்சம் இருக்கவில்லையா?

    அப்பாவி இளைஞர்களையும் , யுவதிகளையும் பொய்ப்பரப்புரையால் கொன்ற பாவம் புலிகளுக்கு ஒரு போதும் இறைவனிடமிருந்து மன்னிப்பை தரவே தராது. கூட்டுத் தற்கோலை செய்வதாகவும் , ஆயுதங்களை வைக்கவே மாட்டோம் என்றவர்கள் ஆயுதங்களே இல்லாமல் வெள்ளைக் கொடியோடு சரணடைந்தார்களே……… அதே உயிர்தானே , அதே ஆசைகள்தானே அந்த இளையோருக்கு இருந்திருக்கும்? அதே நிலையில் இருந்து எத்தனை திறன் படைத்த எம் இளையவர்கள் மாவீரர்கள் என செத்தார்கள்? இறுதியில் அந்த மண்ணிலாவது அந்த மக்களுக்கு இருக்க விட்டார்களா?

    இராணுவம் கிளிநெச்சியை நோக்கி நகரும் போது புலிகள் , அங்கே வாழ்ந்த புலிகளல்லாத மக்களை அப்படியே விட்டு விட்டு , பின் நகர்ந்திருந்தால் இன்று அங்கே இறந்த அநேகர் இன்றும் உயிரோடு இருந்திருப்பார்கள்? ஆகக் குறைந்தது முதியோரையும் , குழந்தைகளையுமாவது விட்டுச் சென்றிருக்கலாம்? மக்களின் சாவில் தமது கனவு நிஜப்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு ஒரு மண்ணும் மண்டைக்குள் இருக்கவில்லை.

    இல்லை, இராணுவம் வன்னி மக்களை அழித்திருக்கும் என்றால் , யாழ்பாணத்தை விட்டு புலிகள் வெளியேறிய போது புலிகளோடு சென்றவர்கள் அளவுக்கு யாழ்பாணத்தில் தங்கியவர்கள் பாதிக்கப்படவில்லையே? அப்படி பாதிக்கப்பட்டது என்றால் அதுவும் புலிகளால்தான். சமாதான காலத்தில் , சங்கம் சங்கமாக அல்லது பிரிவு பிரிவாக யாழ் இளையோரை வன்னிக்கு கொண்டு சென்று ஆயுதங்களோடு கொண்டு வந்து விட்ட புலிகளின் செய்கையால்தான் யாழில் பலர் பிரச்சனைக்கு முகம் கொடுத்தனர். கொல்லப்பட்டனர்.

    அடுத்து பொங்கு தமிழில் பொங்கியவர்களை அடையாளம் காட்டிக் கொடுத்தனர். இவை அனைத்தும் புலிகளின் திட்டமிட்ட மக்கள் மத்தியில் பதட்டத்தையும் , யுத்த பீதியையும் வைத்திருந்த முட்டாள்தனம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

    “எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன, ஆனால் எங்கள் கண்கள் கட்டப்படவில்லை . எனவே ஒரு நாள் உங்களுக்கும் பிரச்சனை வரும். எங்காவது போய்விடுங்கள்” என்று புலிகளது பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு இராணுவ அதிகாரி ஒருவர் சொன்னதாக ,அண்மையில் அகதியாக வந்துள்ள யாழ்பாணத்து இளைஞர்கள் சிலர் சொன்னார்கள். பலர் இல்லையென்று மறுதலித்த போது இராணுவம் இந்த படத்தை பாருங்கள் என்று வீடியோவில் அவர்களது வண்டவாளங்களை போட்டு விட்டு வாயடைக்க வைத்தனராம். இவை கடந்த வாரம் சந்தித்த சில இளையோர் சொன்னவை.

    புலித்து புலிகள் சொன்னவை, எல்லாம் தலைவருக்குத் தெரியும், எல்லாம் தலைவருக்குத் தெரியும் என்று…. சொன்னவர்களும் மடையர்கள். அதை நம்பியோரும் மடையர்கள். தலைவரும் ஒரு மடையர்தான் என்பதை புலிகளே விலா வாரியாக இப்போது எழுதுகின்றனர். இதை எழுத பல வருடங்கள் அல்ல, சில மாதங்கள் கூட ஆகவில்லை ? இப்படி வேறு எந்தவொரு இயக்க தலைமைக்கும் நேரவில்லை?

    இன்னமும் மக்களை சாகடிப்பதுதான் நோக்காக இருந்தால் தொடர்ந்து புலிகளது போராட்டத்தை நியாயப்படுத்துங்கள்?

    // நீங்கள் எவரும் கூட மேலுள்ள சரத்பொன்சேகாவின் அறிவிப்பு குறித்து ஒன்றும் சொல்லவில்லை. தமிழர்கள் தேசிய இனத்தவர் என்பதை நீங்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லையோ என்றும் தெரியவில்லை.//

    சரத்பொன்சேகாவின் அறிவிப்பு குறித்து ,BBC சிங்கள சேவைக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன சொன்ன பதிலை மட்டும் இங்கே பதிய முனைகிறேன்.
    “சரத் எனது நெருங்கிய நண்பன்.அது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். அது அரசின் கருத்தாக முடியாது. இலங்கையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்றமும், அரசும்தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டுமே ஒழிய இராணுவமல்ல. 13வது திருத்தச் சட்டம் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டேயுள்ளது. அது 17வது திருத்தச் சட்டங்களினால் சில மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்த போதும் அது நாட்டின் சிங்கள பகுதிகளில் அமுலில் உள்ளது. போலீஸ் அதிகாரம் மட்டுமே இங்கு தவிர்க்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஜேவீபியும் , கெல உருமயவும் மாகாண வாரியலான சபைகளில் பதவிகளை வகிக்கின்றனர்”

    Reply
  • BC
    BC

    //சுசில் பிரேம ஜெயந்த அவர்கள் 13 வது திருத்தச் சட்டம் பற்றி சொல்லியிருப்பது குறித்து நீங்கள் ஒன்றும் சொல்ல மாட்டீர்களா?//

    இப்போ தானே நிரந்தரமானதுமான போர் நிறுத்தம் ஒன்று (புலம் பெயர்ந்த தமிழர்களின் கோரிக்கையும் அது ) வந்துள்ளது . இவர் இப்படி சொல்லிவிட்டார் என்பதற்க்காக போர் நிறுத்தத்திற்க்கு பங்கம் ஏற்படுத்தலாமா?
    வேறுபட்ட கருத்துக்களை தெரிவிப்பதை நிறுத்துமாறும் பயங்கரவாதத்திற்கு தீர்வு கண்டதைப் போல இந்தப் பிரச்சினைக்கும் தன்னால் தீர்வு காண முடியும் எனவும் எனவே இதற்காக சந்தர்ப்பம் தனக்கு வழங்குமாறும் மகிந்தா தனது கட்சி தலைவர்களைக் கேட்டுக் கொண்டதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    “மகிந்த முட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொள்ள சிங்களயா மோடயா ( சிங்களவன் மோடன்) தரத்தில் இல்லை என்றே நினைக்கிறேன்.”

    மகிந்த பொய் சொல்லுகிறார். ஆனால் ஒரு நாள் மாட்டிக் கொள்வார்.

    ஜேவீபியின் ஒரு பகுதியினர் மட்டுமே 13வது திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றனர்
    ஜேவீபியின் இன்னொரு பிரிவினர் 13வது சட்ட திருத்தத்தை ஆதரிக்கின்றனர்”

    சிங்கள கெல உருமயவை ஜேவீபியை வைத்தே மகிந்த சரிக்கட்டுவார்.
    என்ன செய்து சரிக்கட்டுவார்?

    சிகள உருமய கட்சி பெளத்த பிக்குகளுக்கு ஜேவீபீ சாணம் வீசி, உடைகளை களைந்த நிகழ்வுகள் நடந்தன என்பவை பலருக்கு தெரியுமோ தெரியாது?

    இதற்கும் தமிழர்களின் பிரச்சனைக்கும் என்ன சம்மந்தம்? நாங்கள் ஒவ்வொருவராக சுட்டுக் கொன்றே அரசியல் செய்தோம்.

    மன்னிக்க வேண்டும். நான் புலி ஆதரவாளன் அல்ல. நீங்கள் புலி பற்றி குறிப்பிடுபவை உண்மையே. அத்தோடு நான் பிரிவினை என்ற தொனியில் கருத்து வெளியிட்டுள்ளேனா? ஏன் புலியின் போராட்டத்தை ஆதரியுங்கள் என சொல்லுகிறீர்கள்?

    Reply
  • நண்பன்
    நண்பன்

    அரசியல் தீர்வு யோசனை குறித்து பல்வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்துமாறு ஜனாதிபதி அரசாங்கத்திலுள்ள கட்சித் தலைவர்களைக் கோரியுள்ளார்.

    பயங்கரவாதத்திற்கு தீர்வு கண்டதைப் போல இந்தப் பிரச்சினைக்கும் தன்னால் தீர்வு காண முடியும் எனவும் எனவே இதற்காக தனக்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் அவர் கட்சித் தலைவர்களைக் கோரியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

    ஊடகத்துறை அமைச்சில் நேற்று (01) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:- 13ஆவது திருத்தம் குறித்தும் அரசியல் தீர்வு யோசனை தொடர்பாகவும் கடந்த சில தினங்களாகப் பல்வேறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகளை சந்தித்த ஜனா திபதி இது குறித்து கட்சிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

    மஹிந்த சிந்தனையில் அரசியல் தீர்வு யோசனை குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்வு யோசனை குறித்து சகல தரப்பினருடனும் பேசி இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர் சர்வஜனவாக்கெடுப்பு நடத்தப்படும் என ஜனாதிபதி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு எடுத்துரைக்கு மாறு அவர் என்னிடம் கேட்டுக் கொண்டார்.

    அரசியல் தீர்வு தொடர்பில் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் சகலரும் ஒன்றாக ஐக்கிய இலங்கையினுள் வாழக் கூடிய தீர்வொன்று வழங்கப்படும்.

    பிரதான பிரச்சினையான பயங்கரவாதப் பிரச்சினை முன்கூட்டியே தீர்க்கப்பட்டுள்ளது. இரண்டாவது பிரச்சினையான அரசியல் தீர்வு ஏற்படுத்தும் பிரச்சினை அவ்வளவு கஷ்டமானதல்ல. 40வருட அரசியல் அனுபவமுள்ள தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து போதிய தெளிவு உள்ளது. தமிழ் மக்களுக்கும் ஏனைய மக்களைப் போல சம உரிமையுடன் வாழ வழி வகுக்கப்படும்.

    அரசியல் தீர்வு யோசனை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சர்வகட்சிக் குழுவின் யோசனை ஒரு மாதத்தில் வெளியிடப்பட உள்ளது. அந்த யோசனை குறித்து சகல கட்சிகளுடனும் ஆராயப்படும்.

    இது தொடர்பில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர் சர்வசன வாக்கெடுப்புக்கு விடப்பட்டு மக்களின் கருத்து பெறப்படும். மக்களின் அங்கீகாரம் கிடைத்தால் யார் எதிர்த்தாலும் அந்த யோசனை அமுல்படுத்தப் படும்.

    நாட்டுக்குப் பொருத்தமான அரசியல் தீர்வொன்றே முன்வைக்கப்படும். சொந்த விருப்பு வெறுப்புக்கேற்ப தீர்வு யோசனை முன்வைக்கப்பட மாட்டாது. நாட்டுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலான தீர்வே முன்வைக்கப்படும்.

    அரசியல் தீர்வு யோசனை தொடர்பாக எத்தகைய இணக்கப்பாடு வந்தாலும் அதனை முதலில் மக்களின் இணக்கப்பாட்டுக்காக முன்வைக்கப்படும். 13ஆவது திருத்தச் சட்டத்தை அதே போல நிறைவேற்றுவதா அல்லது அதனை விட கூடுதல் அதிகாரம் வழங்குவதா என்பது குறித்து இது வரை கட்சிகளிடையே இணக்கப்பாடு எட்டப்படவில்லை. 13ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்வதானால் அதனை விட சிறந்த தீர்வொன்று மாற்றீடாக இருக்க வேண்டும்.

    நாட்டுக்குப் பாதிப்பான எந்தத் தீர்வையும் முன்வைக்கப்போவதில்லை என ஜனாதிபதி தெளிவாகக் கூறியுள்ளார். – நன்றி: தேனி

    Reply
  • msri
    msri

    சந்திரன்ராஜா!
    சிங்களவன் திருந்தமாட்டான்! என தமிழ்மக்கள் சொல்லவில்லை! இது புலி போன்ற குறுகிய தமிழ்த்தேசியத்தின் கருத்தாடல்! உங்களில் சிலர்> சாதாரண சிங்கள மக்களுக்கும்+ சிங்களப் பேரினவாதத்திற்கும்> வித்தியாசம் தெரியாமல்> குழம்புவது மட்டுமல்ல> மற்றவர்களையும் குழப்புகின்றீர்கள்! சிங்களப பேரினவாதமும் அதன்கூட்டாளிகளும் தமிழ் மக்கள் பிரச்சினையை தீர்க்கமாட்டார்கள்! இதில் சந்தேகப்படுவதில் நியாயம் உண்டு! ஆரோக்கியமான அரசியலை இனம் காண்போம் என்கின்றீர்! இது எம்நாட்டின் சமகால அரசியலில் தென்படுகின்றதா? 13-வது திருத்தத்தில் முக்கிய சாரமே (வடகிழக்கு தமிழர் தாயகமல்ல) இல்லாது போயவிட்டது> சரி சத்தில்லாத இதற்குக்கூட எவ்வளவு எதிர்ப்பு> இதை நடைமுறைப்படுத்தினால்> வரலாறு காணாத போராட்டம் நடகுகும் எனகின்றார்கள்! புத்தபிக்குகள்! மகிநதா இதை மீறுவாரா? இந்தப்பிக்குகளிட்ம் மகிநதா பல ஆசீர்வாதங்களையே பெற்றுள்ளார்! முடியும் சூட்டப்பட்டுள்ளது! சிங்கள உருமய 13-வது தேவையில்லை! தமிழ்மக்களுக்கு உணவு உடை வீடு கொடுத்தல் போதுமென்கின்றது! இந்நிலையில் நீங்கள் சொல்லும அரசியல ஆரோக்கியம் எங்குள்ளது! மகிநதாவின் அரசியல் பொதிக்குள் ஏதோ இருக்குது! பாருங்கள் பொறுங்கள் வெளியில் வருகிறதென குறளி வித்தை காட்டுவது பொலெல்லோ இருக்குது!²

    Reply
  • indiran.raja
    indiran.raja

    ஆக கடைசி வரை மகிந்த எல்லாம் தரப் போகின்றார் சற்றுப் பொறுங்கள் என்ற அளவில் தான் உங்கள் அபிப்பிராயங்கள் உள்ளது. நீங்களாக அழுத்தம் கொடுத்து தீர்வுக்கு முயற்சிக்காத வரை அவர்கள் கதை கதையாய் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். இதை காலப் போக்கில் நீங்கள் உணர்வீர்கள். அப்போது இதே தேசம் நெற் ஊடாக சந்திப்போம். நன்றி!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    indiran.raja
    60 வருடங்களுக்கு மேலாக புரையோடிவிட்ட ஒரு பிரைச்சினையை 6 நாட்களிலோ 3 மாதத்திலோ தீர்த்து விட முடியாது. அவசர அவசரமாக ஒரு தற்காலிகத் தீர்வை வைக்கவும் முடியாது. வைக்கப்படும் தீர்வு எல்லோரினதும் எதிர்பார்புகளையும் ஈடுசெய்வதாகவும் இருக்க வேண்டும். அதனால் தீர்வு தாமதமாவது தவீர்க்க முடியாதது. அரசு தீர்வு வைக்கும் என்று எவரையும் நாம் சும்மா இருங்கள் என்று கூறவில்லை. அரசு வைக்கப் போகும் தீர்வை அறிந்து, அதில் பிழைகளிருந்தால் தாராளமாக அவை பற்றிய எமது விமர்சனங்களை வைக்கலாம். உங்களைப் போல் ஏதோ அடுத்தவர் பிரைச்சினை என்பது போல் “நீங்களாக அழுத்தம் கொடுத்து தீர்வுக்கு முயற்சிக்காத வரை அவர்கள் கதை கதையாய் சொல்லிக் கொண்டு இருப்பார்கள்” என்று சொல்லிவிட்டு இருக்க முடியாது. எமக்கான தீர்விற்கான அழுத்தம் கொடுக்கவேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்ககள்.

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    பார்த்திபன் அவர்களே

    நாம் தருவார்களா எனக் கேட்பது ஆகக் குறைந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தையே. அதுவும் வடக்கு கிழக்கு தமிழர்களைக் கேட்காமலே நீதிமன்ற அதிகாரத்தின் மூலம் பிரித்து விட்டார்கள். அந்த ஒப்பந்தத்திற்கே மல்லுக்கட்ட வேண்டியுள்ளது. ஆனால் நீங்களோ சேர்ந்து வாழலாம் என்கிறீர்கள்.

    தீர்விற்கான அழுத்தம் கொடுக்கவேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கின்ற நிலையில் அரசின் காலடியில் ஒரேயடியாய் விழுந்து அதன் ஊதுகுழலாக செயற்படுவது அரசை மமதை கொள்ள வைக்கும். ஆனால் புலம் பெயர் சூழலில் அதைத்தான் செய்கிறார்கள்.(புலி எதிர்ப்பாள, ஜனநாயக வாதிகள்)

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    நண்பன் அவர்களே

    “சரத்பொன்சேகாவின் அறிவிப்பு குறித்து இடீடீஊ சிங்கள சேவைக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன சொன்ன பதிலை மட்டும் இங்கே பதிய முனைகிறேன்.
    “சரத் எனது நெருங்கிய நண்பன்.அது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். அது அரசின் கருத்தாக முடியாது.”

    ஒரு பாதிப்படைந்து அகதி முகாம்களில் கிடக்கிற சனங்கள் தொடர்பாக ஒரு இராணுவத்தளபதிக்கு என்ன தனிப்பட்ட கருத்து இருக்க முடியும.? சரத் பொன்சேகாவிற்கு வேறெதும் யோசனைகள் இருக்கிறதோ? பொறுப்பற்ற இந்த தளபதி முன்னரும் திகில் ஊட்டும் கருத்துக்களை சொல்லியிருக்கிறார். (இலங்கை சிங்களவரின் நாடு) ஆனால் அவர் யாராலும் விமர்சிக்கப்படவில்லை.

    அவரின் கருத்தால் கிட்டத்தட்ட 50 பின்னூட்டங்கள் எழுதி விட்டோம். அவ்வளவு கலவரபட்டு விட்டோம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வந்தியதேவன் உங்கள் கேள்விகள் நியாமானவைதான். சுயநலத்திற்கு உட்பட்டதல்ல. பதில் சொல்லவேண்டியது கடமை தான். சிறப்புமிக்க சாதுரியமிக்க இராணுவத்தளபதின் திறமைகளும் வெற்றிகளும் தனது இராணுவத்தை வழிநடத்துவதிலேயே தங்கியுள்ளது. அதை அவர் நிரூபித்தும்
    இருக்கிறார்.இலங்கை வரலாற்றில் அவருக்கும் ஒரு தனியிடம் உண்டு. இந்த இராணுவதளபதி ஒரு அரசியல்வாதியல்ல. ஜனநாயகத்தை கொண்டுநடத்துவதற்கோ மேற்பார்வை செய்வதற்கே யாரும் பொறுப்பு கொடுக்கவில்லை. சில…. ஊடகங்கள் அதை அரசியல்பிழைப்பு தேடுவதற்காக வெளியிட்டால் அதில் சிக்கிக்கொள்வதற்கு உங்களுக்கு என்ன? தகமை. ஐக்கியஇலங்கையில் புலிகளுக்கோ ஜாதிககெல உறுமையாக்கோ இனியொரு இடம் இருக்கப் போவதில்லை என்பதை புரிந்துகொள்ள கஷ்ரமாக இருந்தால் கொஞ்சம் பொறுமை காத்துடுவீர்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //நாம் தருவார்களா எனக் கேட்பது ஆகக் குறைந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தையே. அதுவும் வடக்கு கிழக்கு தமிழர்களைக் கேட்காமலே நீதிமன்ற அதிகாரத்தின் மூலம் பிரித்து விட்டார்கள்.- vanthijathevan //

    எங்கள் பக்கத் தவறுகளை நீங்கள் என்றுமே உணர்ந்ததில்லையா? இப்போது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையாவது கேட்கும் நீங்கள், சிந்தித்துப் பாருங்கள் 1987 இல் அதனை ஏற்று நடைமுறைப்படுத்த விட்டிருந்தால், கடந்த 22 வருடங்களில் நிலைமைகள் எவ்வளவு மாறியிருக்கும். 1988 இல் வடகிழக்கு இணைப்புப் பற்றிய ஒரு சர்வசன வாக்கெடுப்பையும் நடாத்தி சட்டபூர்வமாக அதனை இணைத்துமிருக்கலாம். அன்றைய நிலையில் வாக்கெடுப்பு சாதகமாகவே முடிந்திருக்கும். இந்தியாவும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருந்திருக்கும். எனிமேலும் பழைய தவறுகளைத் தொடராமல் சிந்தித்துச் சரியாகச் செயற்படுவோம் என்பதையே நானும் பலமுறை எழுதினேன். இதனையே சமீபத்தில் தமிழக முதல்வர் கலைஞரும் சுட்டிக் காட்டினார்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //தீர்விற்கான அழுத்தம் கொடுக்கவேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கின்ற நிலையில் அரசின் காலடியில் ஒரேயடியாய் விழுந்து அதன் ஊதுகுழலாக செயற்படுவது அரசை மமதை கொள்ள வைக்கும். ஆனால் புலம் பெயர் சூழலில் அதைத்தான் செய்கிறார்கள்.(புலி எதிர்ப்பாள, ஜனநாயக வாதிகள்)- vanthijathevan //

    உங்களைப் போன்றவர்களுக்கு அரசு நன்மை செய்தாலும் தீமை செய்தாலும் எப்பொழுதும் அரசை எதிர்த்துக் கொண்டெயிருக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை அரசு தவறு செய்தால் சுட்டிக் காட்டவும், அரசு நன்மை செய்தால் ஊக்கப்படுத்தவும் வேண்டுமென்கின்றோம். ஆனால் அவை உங்களுக்கு அரசின் கால்களில் விழுவது போல் தெரிகின்றது. என்ன செய்வது காமாளைக் கண்ணுள்ளவனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் நிறமாகவே தெரியுமாம்.

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    இடம் பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் நிரந்தரமாக அங்கேயே தங்க வைக்கப்படலாம் என உதவிப் பணியாளர்களின் கூற்றை மேற்கோள் காட்டி டைம்ஸ் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    இலங்கையின் வடபகுதியில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து வாழும் அப்பாவி தமிழர்கள் நிரந்தரமாக முகாம்களிலேயே தங்கியிருக்க நேரிடலாம் என தொண்டு நிறுவன பணியாளர் ஒருவரை மேற்கோள் காட்டி டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    மெனிக் பாம் முகாமில் நிரந்தர கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக தொண்டு நிறுவன பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மெனிக் பாமில் அமைக்கப்பட்டுள்ள ஆறு முகாம்களில் நான்கில் தொண்டுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட போதிலும், இரண்டு முகாம்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பூச்சிய வலயங்களகாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக ரிலிப் இன்டர்நெசனல் தொண்டு நிறுவனத்தின் பணியாளர் ரஜிந்தா ஜயசிங்க தெரிவித்துள்ளார். குறித்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் பல நிரந்தர கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    வைத்தியசாலைகள், பாடசாலைகள், வங்கிகள் என சகல விதமான கட்டிடங்களும் குறித் வலயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருவதனால் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என்பதில் தமக்கு நம்பிக்கை இல்லை என தொண்டு நிறுவன பணியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    தலைநகர் கொழும்பிற்கு அடுத்தபடியான பெரிய நகரமான இந்த பிரதேசம் உருவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு தங்கக் கூடிய அளவிலான கட்டிடங்களே இம்மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    நிரந்தரக் கட்டிடங்களை அமைப்பதற்காக இடம்பெயர்ந்த மக்களையே அரசாங்கம் பயன்படுத்தி வருவதாகவும், அவர்களுக்கு எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

    ஊதியம் எதுவும் கொடுக்காமல் இவர்களை பணிகளில் ஈடுபடுத்துவது ஐக்கிய நாடுகளின் சட்ட விதிகளுக்கு புறம்பானதென தெரிவிக்கப்படுகிறது

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    “எங்கள் பக்கத் தவறுகளை நீங்கள் என்றுமே உணர்ந்ததில்லையா”

    காட்டுக்குள் இருந்த பிரபாகரன் யாருக்கும் பொறுப்புச் சொல்ல தேவையில்லாதவர். ஆனால் ஜனநாயகப்படி சட்டப்படி அமைந்த பிரேம தாச அரசும் முழுமூச்சாக இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்தாமல் இருக்க செயற்படவில்லையா? இந்திய ராணுவத்தை விரட்டுவதற்கு எப்படி கைகோர்த்துக் கொண்டார்கள். உண்மையில் அமைதி சமாதானம் அபிவருத்தி என்பவற்றையும் நாட்டையும் விரும்பியிருந்தால் பிரேமதாச அரசு புலிகளை வழிக்கு் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆதலால் இன்றைய பேரவலத்திற்கு சிங்களப் பகுதியே தார்மீக பொறுப்பு எடுக்க வேண்டும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    vanthijathevan,
    தயவு செய்து உண்மைகளை மறைப்பதற்காக பொய்களை எழுதாதீர்கள். இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தில் எப்போது பிரபாகரன் காட்டிலிருந்தார். இந்திய இராணுவத்துடன் முரன்பட்ட பின்பே காட்டிற்குள் ஒளிந்தார். சுழிபுரத்தில் நடந்த சந்திப்பை மறந்து விட்டீர்களா?? அல்லது மறைக்கப் பார்க்கின்றீர்களா?? ஒப்பந்த காலத்தில் இலங்கை அதிபராக இருந்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா. அவர் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு தான் கையொப்பமிட்டார். அப்போது பிரேமதாசா பிரதமர் மாத்திரம் தான். ஒப்பந்தத்தை பிரேமதாசா எதிர்த்தாலும், அவரால் அப்போது ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஆரம்பத்திலிருந்து ஒப்பந்தத்தை எதிர்த்து வந்த புலிகள் இந்திய இராணுவத்துடன் முரன்பட்டு போர் புரியத் தொடங்கியதும், அது பின்பு பிரேமதாசாவிற்கு கைகொடுத்தது என்பதே உண்மை. பின்பு இந்த நிலையை தமக்கு சாதகமாக்கிப் புலிகளும், பிரேமதாசா அதிபரானவுடன் அவருடன் கைகோர்த்து பெருமளவு ஆயுதங்களையும், பணங்களையும் லாறி லாறியாகப் பெற்று இந்திய இராணுவத்துடனான போரைத் தொடர்ந்தனர். அப்போது புலிகள் சொன்ன திருவாசகம் “சிங்கள மக்களும் நாங்களும் சகோதரர்கள். இன்று அடித்துக் கொண்டால் நாளை அணைத்துக் கொள்வோம், எங்கள் பிரைச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்வோம்” என்பதே. சரி இந்திய இராணுவத்தை பொது எதிரியாக்கி அரசுடன் கைகோர்த்த புலிகள் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னாவது, பிரேமதாசாவுடன் ஒரு நேர்மையான தீர்வுத் திட்டத்தை தொடர்ந்தார்களா?? மாறாக தமது அரசியல் எதரிகளைப் போட்டுத் தள்ளுவதிலேயே குறியாக இருந்தார்கள். பிரேமதாசாவின் அரசும் இந்தக் கொலைகளையெல்லாம் கண்டும் காணாமலே இருந்தது. இறுதியில் புலிகள் தமது கைங்கரியத்தை பிரேமதாசாவிடமும் காட்டி, அவருக்கும் பரலோகப் பதவியை வழங்கினார்கள். பல அரரசியல் தலைவர்களைப் புலிகள் மே மாதத்தில் தான் போட்டுத் தள்ளினார்கள். அதே மே மாதத்தில் தான் புலிகளுக்கும் முடிவுரை அமைந்தது.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //vanthijathevan on July 4, 2009 4:47 pm “எங்கள் பக்கத் தவறுகளை நீங்கள் என்றுமே உணர்ந்ததில்லையா”

    காட்டுக்குள் இருந்த பிரபாகரன் யாருக்கும் பொறுப்புச் சொல்ல தேவையில்லாதவர். ஆனால் ஜனநாயகப்படி சட்டப்படி அமைந்த பிரேம தாச அரசும் முழுமூச்சாக இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்தாமல் இருக்க செயற்படவில்லையா? இந்திய ராணுவத்தை விரட்டுவதற்கு எப்படி கைகோர்த்துக் கொண்டார்கள். உண்மையில் அமைதி சமாதானம் அபிவருத்தி என்பவற்றையும் நாட்டையும் விரும்பியிருந்தால் பிரேமதாச அரசு புலிகளை வழிக்கு் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆதலால் இன்றைய பேரவலத்திற்கு சிங்களப் பகுதியே தார்மீக பொறுப்பு எடுக்க வேண்டும்.//

    vanthijathevan, நீங்கள் பிரேமதாஸ பகிரங்கமாக என்ன கூறினார் என்பதை பின்நோக்கிப் பார்த்தல் நலம் என நினைக்கிறேன்.

    இலங்கை அரசியலில் ஜேஆரை விட பிரமதாஸவுக்கு அதிக மக்கள் செல்வாக்கு இருந்தது. அது அவரது பேச்சு மற்றும் செயலால் என்பதை தெரிந்தோர் அறிவார்கள். அன்று ஜேவீபியை அழிக்க பிரேமதாஸவுக்கு தனியான ஒரு ஆயுதப்படை வேறு இருந்தது.

    அப்போது அவர் இந்தியாவின் தலையீட்டு குறித்து இது அண்ணனுக்கும் தம்பிக்குமுள்ள பிரைச்சனை இதை நாங்கள் தீர்த்துக் கொள்வோம். என்றே புலிகளுக்கு பெருந்தொகையான ஆயுதங்களைக் கொடுத்தார். வேறு பல உதவிகளையும் செய்தார். அத்தோடு பிரபாகரனிடம் , தமிழீழத்தை தவிர எது வேண்டுமானாலும் கேளுங்கள் நான் அதை தருவதற்கு தயாராக இருப்பதாக கூறியதோடு , இலங்கை இராணுவத் தளபதியாக இருக்க பிரபாகரன் போன்ற ஒருவர் இருக்க வேண்டும் என்று பிரபாகரனை புகழ்ந்து சிங்கள மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

    இக் காலத்தில் புலிகள் என்ன செய்தார்கள்? கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அமிர்தலிங்கத்தை படுகொலை செய்தார்கள். பின்னர் பிரேமதாஸாவையும் படுகொலை செய்தார்கள். புலிகளுக்கு கொலை என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதனால் அவர்களும் அதற்கே இரையானார்கள்.

    புலிகள் மட்டுமல்ல புலி ஆதரவாளர்களும் கொலைக் கலாச்சாரத்தில் ஊறியவர்கள். அவர்களுக்கு மகிழ்வு தருவது சாவுகள் அல்லது சோகங்கள். இது ஒரு பாரிய மனநோய். இதிலிருந்து விடுபட அனைவருக்கும் கவுண்சிலிங் தேவை. இன்னமும் முகாம் குறித்த பொய் பிரசாரங்கள் வழியாவது அவர்கள் சந்தோஷப்பட முனைகின்றனர்.

    இராணுவ அடையாள அட்டை பெற்று முகாம்களில் உள்ளோருக்கு வீடு முதல் அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கப் போகிறது. அவர்கள் நிச்சயம் நன்றாக இனியாவது வாழ்வார்கள். அதுவே எமது பிரார்த்தனை.

    புலிகளின் சாயம் வெளுத்துவிட்டது. இனி என்னதான் முயன்றாலும் வெளுத்தது வெளுத்ததுதான், கலராகாது. கலங்கித்தான் போகும்.

    Reply