நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் : சந்திரிக்கா

chandrika.jpgநமது நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இயற்கையாகவே பெண்கள் மிகவும் சிறந்த ராஜதந்திரிகளாகவும், பேச்சுவார்த்தை நடத்தக் கூடியவர்களாகவும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 13 வீதமான பெண்களே நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ‘இந்திய அரசியலில் பெண்களின் வாக்குகள்’ என்ற தொனிப்பொருளில் இந்தியாவில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடுபோது இலங்கையில் பெண் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை வெகு குறைவாகவே காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • பல்லி
    பல்லி

    சின்ன சின்ன ஆசை:
    சிறகடிக்க ஆசை;
    மகிந்தாவின் திமிரை;
    அடக்கி விட ஆசை;
    ஆனாலும் அதுவோ;
    நிறைவேறா ஆசை;

    Reply
  • sekaran
    sekaran

    இயற்கையிலேயே பெண்களிடம் குழுவாக இயங்கும் மனநிலையும் ஆண்களிடம் தனியாக இயங்கும் போக்கும் அமைந்திருக்கிறது.

    உதாரணமாய், ஆண்கள் சேர்ந்து ஒரு இடத்தில் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இன்னொரு ஆண் அங்கே வந்தால் ‘அடே! எனக்குப் போட்டியாக இன்னொருவன் வந்துவிட்டானே!’ என்கிற சிந்தனை தான் முதலில் எழும். பதிலாய், பெண்களிடையில் இன்னொரு பெண் அங்கு வந்தால் ‘அடே நமக்கு ஒரு தோழி கிடைத்துவிட்டாளே!’ என்கிற சிந்தனை எழுகிறது. இது மானுடவியல், உளவியல், உயிரியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொதுவான கோட்பாடு. இன்றைய உலகில், ஆண்களின் ‘விட்டுக்கொடுக்க முடியாத ‘ பித்தலாட்டங்களால் பிரச்னைகள் வளர்ந்துகொண்டு போகின்றனவே தவிர ‘கொடுத்துப் பெறுகிற’ பெண்களின் ஆற்றலை மதிப்போமானால் ஓரளவாவது அவைகளைக் கட்டுப்படுத்த முடியும்.

    சந்திரிகாவினாலேயே அவர் பதவியில் இருந்தபோது அதை சாதிக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டம் தான். சுற்றி ஆண்கள் குழுக்கள் இருந்து அப்படி செய், இப்படி செய் என்று வற்புறுத்தல்கள் இருந்ததுவும் ஒரு காரணம். பரவாயில்லை. இப்போதாவது வாய் திறந்து தன உள்ளக்கிடக்கையை சொல்லியிருக்கிறாரே!

    ஸ்கான்டிநேவிய நாடுகளில் பெண்கள் அதிகளவு எல்லாத்துறைகளிலும் ஈடுபட்டிருப்பதால் அங்கு நிலவும் அமைதியை உதாரணம் சொல்லலாம். ஆண்களும் விட்டுக்கொடுக்கிறார்கள். ஆனால் இது மற்றைய நாடுகளில் எந்தளவுக்கு சாத்தியம்? இன்னும் நம்மை ஆட்டிப் படைக்கும் பயனில்லாத பழைய கலாசார, சமய, மரபு வழிக்கோட்பாடுகளை எப்படி உடைக்கப் போகிறோம்? எப்போது உடைக்கப் போகிறோம்?

    (இலங்கை இனப்பிரச்னையின் தீர்வுக்கு திருமதி ராஜபக்ச, திருமதி பிரபாகரன், திருமதி கோத்தபாய, திருமதி சரத் பொன்சேகா, தவிர இறந்து போன, காயம்பட்ட ராணுவ வீரர்கள்/ மாவீரர்களின் அம்மாமார், மனைவிமார்கள் சிலரையும் ஒன்றாய் உட்காரவைத்து பேசவைத்திருக்க வேண்டும். இது ஒரு கற்பனை தான். சிலர் இதைக்கேட்டு சிரிக்கவும் கூடும். ஆனால் அது நடந்திருந்தால் இன்றைய நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும் என்பது என் கருத்து. பெண்களால் தான் பிரச்னையை ஆழமாக அணுகமுடியும். நான் என்கிற மமதையோடு ஆண்கள் உருவாக்கும் அத்தனை பிரச்னைகளையும் அவர்கள் அல்லவா சுமந்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! )

    Reply
  • Pearl Thevanayagam
    Pearl Thevanayagam

    Chandrika needs to look beyond rallying feminine support if she were to ouster Mahinda.

    She has got the will, the acumen and vision to lead this country once more.

    But she needs to look beyond Sinhala chauvinism and recognise that Tamils are rigthful heirs to this island of ours as much as the Sinhalese.

    She is not beyond seeing fairplay and justice.

    She has so much potential and she could bring back some mode of decorum into SL politics.

    But she needs to get rid of woodworms such as Tamil paramilitary groups Mahinda covets and look for moderate Tamil politicians.

    Reply