ஏ-9 இன்று முதல் தினமும் பஸ் சேவை

north-governor.jpgஏ-9  வீதியூடாக பயணிகள் பஸ் சேவை இன்று முதல் தினமும் நடத்தப்படும் என வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். யாழ். நகரிலுள்ள சிங்கள மகா வித்தியாலய திடலிலிருந்து தினமும் காலை 9.00 மணிக்கு புறப்படும் 5 பஸ் வண்டிகள் வவுனியா நகரில் ரம்யா ஹவுஸ் பகுதியை வந்தடைந்ததும் அங்கிருந்து கொழும்பு மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ். நகரிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்ல பாதுகாப்பு அனுமதி பெற்றவர்கள் தினமும் காலை 9.00 மணிக்கு புறப்படும் 5 பஸ் வண்டிகளில் பயணிக்க முடியும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.வவுனியாவுக்கு தினமும் செல்லும் 5 பஸ் வண்டிகளும் அதே தினம் யாழ். நகரை சென்றடையும் என யாழ். அரச அதிபர் கே. கணேஸ் தெரிவித்தார்.

யாழ். நகருக்குள் மீண்டும் செல்பவர்கள் வவுனியா நகரிலுள்ள ரம்யா ஹவுஸ¤க்கு வரும் பட்சத்தில் அங்கிருந்து யாழ்.நகர் நோக்கி புறப்படும் பஸ் வண்டிகளில் செல்ல முடியும் எனவும் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். ஏ-9 பாதையூடாக மட்டுப்படுத்தப்பட்ட பயணிகள் போக்குவரத்துச் சேவை இதுவரை நடத்தப்பட்டுவந்தது. ஐந்து வஸ் வண்டிகள் வீதம் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்தன.

இதேவேளை, மடு தேவாலய திருவிழாவை முன்னிட்டும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்படவுள்ளன. மதவாச்சிவரை வரும் யாத்திரிகர்களை பாதுகாப்பு நடைமுறைகளின் பின்னர் வேறு பஸ் வண்டிகள் மூலம் மடுத்தேவாலயம் வரை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • பல்லி
    பல்லி

    வவுனியா மாங்குளம் மிருகண்டி கிளிநொச்சி பளை கொடிகாமம் சாவகசேரி கைதடி கச்சேரி சின்னகடை யாழ்பானம் எல்லாம் முன்னால் ஏறு;
    போகலம் றைற் றைற்;;;

    Reply
  • Kirupa
    Kirupa

    பல்லி,
    ஆனால் இப்பிடியெல்லொ சத்தம் கேக்குது..
    “யன்ட யன்ட..யக்கொ..இசரடட்..
    கட்ட வாகென, அஷ் வாகென யமன் வென்ட ஒனெ..” ??

    Reply
  • santhanam
    santhanam

    இந்த பாதைதான் புலியின் அழிவுக்கே யெனிவாவில் டி சில்வாவின் சபதம் இதை அவர்கள் நிட்சயம் செய்வார்கள் அப்பவும் எரிக் தமிழ்செல்வனை கெஞ்சிகேட்டார் அந்தவரிபணத்தை நாங்கள் தருகிறோம் பாதையை திறந்துவிடும் என்று அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார் ஆனால் ஒன்றை புரியவில்லை செல்வன் எரிக் தனிமனிதர் அல்ல அவர் சர்வதேசம் என்று இது புரிகிற———-

    Reply