பிரான்ஸ் தமிழரிடம் பணம் பறித்த விடுதலைப்புலிகளுக்கு சிறைத்தண்டனை

பிரான்ஸில் வாழுகின்ற தமிழர் சமூகத்திடம் மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டின் கீழ் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒரு குழுவினருக்கு ஒரு பிரஞ்சு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. என BBC தெரிவித்துள்ளது

இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போருக்காக பல லட்சக் கணக்கான டாலர்களை இந்தக் குழுவினர் பிரான்ஸில் வாழும் தமிழ் மக்களிடம் மிரட்டிப் பறித்ததாக கூறப்படுகிறது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரான்ஸ் நாட்டுப் பிரிவின் தலைவரான நடராஜா மதிந்திரன் என்பவர் உட்பட 21 பேர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளனர்.

பாரிஸிலும், அண்மைய பகுதிகளிலும் வாழும், பெரும்பாலும் அரசியல் அகதிகளான தமிழர்களிடம், புரட்சி வரி என்ற பெயரில் இந்தப் பணம் அறவிடபட்டதாக அரச தரப்பு வழக்குத்தொடுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • palli
    palli

    இவர்களுக்கு கிடைத்திருக்கும் தண்டனையை சொன்னால் இனிவரும் காலங்களில் உண்டியல் குலுக்குவோருக்கு ஒரு பாடமாய் அமையுமல்லவா? உன்மை பொய் தெரியாது; பாரிஸ் நண்பர்களே சொல்ல வேண்டும், மூவருக்கு ஏழு வருடங்கள் சிறை என தீர்ப்பு வந்திருப்பதாகவும் அவர்களுக்காக வாதாடிய வக்கில் இது குறைந்த தண்டனைதான் என தேற்றியதாகவும் ஒரு செய்தி இது உன்மையா தெரியவில்லை;

    Reply
  • MBBS
    MBBS

    21 புலிகளுக்கு சிறை: தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கு தடை!
    பிரான்சில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
    புனர்வாழ்வுக்கழகமும் தடை செய்யப்படலாம்!!

    பிரான்ஸில் வாழுகின்ற தமிழர் சமூகத்திடம் மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டின் கீழ் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 21 பேருக்கு பிரஞ்சு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

    தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரில் இயங்கிய புலிகளின் அமைப்பை கலைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போருக்காக பல லட்சக் கணக்கான யூரோக்களை இந்தக் குழுவினர் பிரான்ஸில் வாழும் தமிழ் மக்களிடம் மிரட்டிச் சேகரித்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

    விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரான்ஸ் பொறுப்பாளராகச் செயற்பட்ட நடராஜா மதிந்திரன் (பரிதி) என்பவர் உட்பட 21 பேர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளனர்.

    தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரில் 1986ம் ஆண்டிலிருந்து இயங்கிவந்த அமைப்பு புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், புலிகளுக்காக இந்த அமைப்பைச் சேர்ந்த 22 பேர் தமிழ் மக்களிடம் கட்டாய நிதி வசூலிப்பிலும் மற்றும் தமிழ் மக்களை அச்சுறுத்துவதிலும் ஈடுபட்டு வந்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    கடந்த மாதம் பல நாட்கள் நடைபெற்ற வழக்கு விசாரணையில் குற்றவாளிகள் சார்பில் 11 வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடியதுடன், அமெரிக்காவிலிருந்து பிரபல மனிதஉரிமைவாதியான திருமதி கரன் பாக்கர் நேரில் ஆஜராகி 22 பேர் சார்பிலும் சாட்சியமளித்திருந்தார். நேற்றைய தினம் 23ம் திகதி வழக்கு தொடர்பான திர்ப்பை நீதிபதிகள் வழங்கியுள்ளனர். அந்தத் தீர்ப்பில் 21 பேருக்கு சிறைத்தண்டனை வழங்கியுள்ளதுடன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவையும் கலைக்குமாறு சம்பந்தப்பட்ட அரச திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளனர்.

    புலிகளின் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் குறித்து தீர்ப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை ஆனாலும் சிலர்மீது அந்த அமைப்பில் பணியாற்றியதாகவும் அதற்காக பணம் சேர்த்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. எனவே இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் அதனையும் தடைசெய்யுமாறு வழக்குத்தொடுநர் விண்ணப்பிக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

    நேற்றைய தீர்ப்பில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விபரமும் தண்டனை விபரமும் வருமாறு:
    நடராஜா மதீந்திரன் அல்லது பரிதி – (புலிகளின் பிரான்ஸ் பொறுப்பாளர்) 7 வருட சிறைத்தண்டனை
    துரைசாமி ஜெயமூர்த்தி அல்லது ஜெயா – (நிதிப் பொறுப்பாளர்) – 6 வருட சிறைத்தண்டனை
    புதியவன் தயாளன் – 3 வருட சிறைத்தண்டனை
    கந்தசாமி உமாகரன் – 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)
    மகாலிங்கம் ஜெயதாஸ் – 4 வருட சிறைத்தண்டனை
    மார்க்கண்டு ஜெயபாலசிங்கம் – 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)
    முகுந்தன் ஜெயவீரசிங்கம் – 6 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டன்)
    செல்லக்கண்டு ரவிகுலம் – 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)
    கந்தையா மோகனதாஸ்- 2 வருட சிறைத்தண்டனை
    போல் நியூமன் – 18 மாத சிறைத்தண்டனை (6 மாதம் ஒத்திவைக்கப்பட்ட)
    சின்னத்தம்பி சுதாகரன் – 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)
    அரவிந்தன் துரைசாமி அல்லது மேத்தா – 5 வருட சிறைத்தண்டனை (18 மாதம் ஒத்திவைக்கப்பட்ட)
    முருகானந்தம் ராஜலிங்கம் – 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)
    காந்தரூபன் பாலசிங்கம் – 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)
    ஏ. சகியரூபன் – 2 வருட சிறைத்தண்டனை
    வின்சன் அமலதாஸ் – 2 வருட சிறைத்தண்டனை (6 மாதம் ஒத்திவைக்கப்பட்ட)
    பேயாஸ் புலேந்திரன் – நிரபராதி
    ஸ்ராலின் சவிரிமுத்து – 4 வருட சிறைத்தண்டனை
    ரவி மாணிக்கம் அல்லது ஊத்த மாணிக்கம் – 2 வருட சிறைத்தண்டனை (6 மாதம் ஒத்திவைக்கப்பட்ட)
    பார்த்திபன் சிறிகாந்தன் – 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)
    முருகன் சிவசுப்பிரமணியம் – 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)
    சிவதாசன் யோகராசா – 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)
    – பாரிஸ் நிருபர்

    Reply
  • MBBS
    MBBS

    சுவிஸ் கிளையின் புதிய தலைவராக லவுசானில் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொளை செய்தவரின் தம்பி ரகு (பாண்டியன்) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு போராளியாக புலத்திலிருந்தே இணைத்துக் கொண்டவர். விடுதலைப் போராட்டத்தையும், வெளிநாட்டுக் கிளைகளையும் வெளிநாடுகளில் நாசமாக்கியவர் என பேசப்படும்; கஸ்ரோவின் நம்பிக்கைக்குரியவர். ஆரம்பத்தில் இவர் TTN தொலைக்காட்சிக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு சில நாட்களிலேயே TTN தொலைக்காட்சியை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. இவருடைய கடும் போக்கும், அடாவடித்தனமுமே இந் நிலையை தோற்றுவித்தது.

    தேசியத்தலைவரின் மரணத்திற்குப் பின்னர் வெளிநாட்டுக் கிளைகள் அனைத்தும் கஸ்ரோவின் நம்மிக்கைக்குரியவர்களின் ஆதிக்கத்தில் செயற்படத்தொடங்கியுள்ளன.
    சுவிஸ்- ரகு, Nஐர்மன் – வாகீசன், கொலன்ட் – ரங்கன், நோர்வே – முகிலன், டென்மார்க் – பிரியன், அனைத்துலகத் தொடர்பு- குட்டி (மயுரன்) இவர்களை வழிநடத்துவது நெடியவன் என கஸ்ரோவின் வழி வந்தவர்கள்.
    இப்போது அறிவு என்னும் பெயரில் அறிவில்லாத ஒருவரும் இடையில் நிற்கிறார். இவரும் நாளை தனக்கென்ற பொறுப்புடன் வந்திறங்குவார்.
    சமாதான காலத்தின் போது பல தடவைகள் ஏவு பாhப்பதற்கு புலத்திற்கு வந்து போனவர். ஏற்கனவே ஒரு போராளியை திருமணம் செய்து இரு குழந்தைகளிற்கு தந்தையானவர் இப்போது இன்னொரு பெண்ணை மறுமணமும் செய்துள்ளார்.

    இவர்களின் நோக்கம் முட்கம்பிவேளிகளில் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதோ அல்லது தமிழ்மக்களிற்கு நியாயமான தீர்வினை பெற்றுக்கொடுப்பதோ அல்ல. இயக்கம் என்னும் பெயரை பயன்படுத்தி தொடர்தும் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதும் அதன் ஊடாக தங்களை, தங்கள் குடும்பத்தினரை வாழவைப்பதற்கான வழிகளையும் தேடுவதே.

    மே மாதத்திற்குப்பின்னர் பல போராளிகள் சரணடைந்துள்ளார்கள். பலர் வீரச்சாவடைந்துள்ளார்கள். ஒரு சிலர் தங்களிற்கிருந்த வெளிநாட்டுத் தொடர்புகளைப் பயன்படுத்தி மலேசியா, ஐரோப்பிய நாடுகளிற்கு வந்துள்ளார்கள். சாதாரணமாக ஒருவர் வெளிநாடு வருவதற்கு எத்தனை இலட்சம் ரூபாக்கள் செலவிடவேண்டியுள்ளது அவ்வாறாயின் இறுதிவதை போராட்டத்தில் இருந்த இவர்களிடத்தில் எப்படி இவ்வளவு நிதி கிடைத்தது. அல்லது இவர்களிற்கு இந்த நிதியினை வழங்கியது யார். உண்மையில் இவர்கள் போராளிகளாக இருந்தார்களா?. வெளிநாட்டிலிருந்து நிதிகிடைத்திருந்தால் ஏன் அந்த நிதி கஸ்ரோவின் போராளிகளிற்கு மட்டும் கிடைத்தது.

    இவ்வாறு தப்பிவந்தவர்களே இன்று ஒவ்வொருவரும் தங்களை தாங்களாகவே பொறுப்பாளர்களாக நியமித்து செயற்படத் தொடங்கியுள்ளார்கள.; உண்மையில் இவர்களால் புலம்பெயர்தமிழர்கள் போராட்டத்திற்காக வழங்கிய கடன் சுமைகளை ஓரளவேனும் சுமக்கமுடியுமா? அல்லது முட்கம்பிகளில் அடைபட்டிருக்கும் மக்களிற்கு ஒரு நேர உணவைத்தன்னும் வழங்கமுடியுமா?.

    சுவிசில் ரகுபதியை பொறுப்பாளர் ஆக்குவதற்கு எடுத்த முயற்சி நிதிப்பொறுப்பாளர் அப்துல்லாவினாலும், கஸ்ரோவின் வெளிநாட்டுப் புலிகளான நெடியவன், குட்டீ(மயூரன்), வாகீசன், ரெஐp போன்றவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    சுவிஸ் நிதிப் பொறுப்பாளர் அப்துல்லா மக்களிடம் சேகரிக்கப்பட்ட நிதியினை தனது தனிப்பட்ட தேவைகளிற்கும், தனது குடும்ப உறவுகளிற்கும் பயன்படுத்தியதை கண்டிக்க முயன்றபோதே அப்துல்லா கஸ்ரோ மூலமாம தனது செல்வாக்கை பயன்படுத்தி குலத்தை வெளியேற்றியது.
    அப்துல்லா தேசிய போராட்டத்திற்காக மக்களிடம் சேகரித்த நிதிக்கு சுவிஸ்கிளையின் கிளைப் பொறுப்பாளருக்குக்கூட கணக்கறிக்கை காட்டாததற்கான காரணம் என்ன? சுவிஸ் நிதிப் பொறுப்பாளர் அப்துல்லா நிதிமோசடிகளில் ஈடுபட்டிருப்பது நிருபிக்கப்பட்டும் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அனைவரும் தவறிவிட்டார்கள்.

    தன்னுடன் முரண்படாத தனது விருப்பத்திற்குட்பட்டவர்களின் கடன்களை கட்டுவதற்கு வழிசெய்த அப்துல்லா தன்னுடன் முரண்பட்ட எவருடைய கடன்களையும் கட்டுவதற்கு எந்த வழிகளையும் ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக சூரிச் மாநில நீண்ட நாள் உறுப்பினர் ஒருவர் தற்கொலை முயற்சிகளை மேற்கொள்ளவேண்டிய அவல நிலையும் ஏற்பட்டது.

    கனடாவில் இருக்கும் அப்துல்லாவின் 3 மாடி வீடுகள் , சுவிஸ் பங்குச்சந்தையில் உள்ள 30 லட்சம் முதலீடுகள்;, பிரித்தானியாவில் இருக்கும் முதலீடுகள், உண்டியல் கருணாவின் பங்குச் சந்தைகள், வீடுகட்ட குமாரிற்கு வழங்கிய முதலீடுகள் எல்லாம் புரியாத புதிர்கள். எவரும் இதனை கேட்கமுடியாது. கேட்டால் அவர்களிற்கு துரோகிப்பட்டம். சுவிசில் கணக்குக் கேட்ட குலம், nஐயம், அல்பேட், குட்டி, ஆகியோரை புலிகள் இடைநிறுத்தியுள்ளார்கள்;.

    தங்களை இயக்கம் என மக்கள் முன் நிறுத்தி இவர்கள் எடுத்த சம்பளங்களிளும், இவர்களால் சேகரிக்கப்பட்டக் கூடிய சொத்துக்களிளும் கவனம் செலுத்தினார்களே தவிர என்ன நோக்கத்திற்காக தங்களை இணைத்துக் கொண்டார்களோ அந்த நோக்கத்தினை நிறைவேற்ற தவறிவிட்டார்கள்.
    சுவிஸ் கிளையின் உபஅமைப்பான கல்விச்சேவை தலைவர் மகேந்திரன் 6500 சுவிஸ்பிராங் மாத ஊதியத்துடன் விலையுயர்ந்த பென்ஸ்கார் ஓடுகிறார்.2000ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு இன்று வரை 6500 சுவிஸ்பிராங்கினை ஊதியமாக பெற்றுக்கொள்ளும் இவர் ஈவாவிற்கு(ஐஏ) போவதற்காக அதிகதொகை பதிந்ததாக குறிப்பிடுகிறார்.

    சுவிசின் துணைநிதிப் பொறுப்பாளர் லோகேஸ் களத்திலிருந்த ஒரு பெண்ணை இங்கிருந்தை தொலைபேசி மூலமாக காதலித்து கஸ்ரோவின் உதவியாட்கள் ஊடாக 20 இலட்சம் செலவளித்து இந்தியா அழைத்து அங்குசென்று திருமணம் செய்துவிட்டு வந்துள்ளார். ஏற்கனவே சுவிஸ் பெண்ஒருவரை இயக்க காசில் 45000 சுவிஸ்பிராங் வழங்கி டீ காட்டிக்காக திருமணம் செய்தவர் 5 வருடமாக சுவிஸ்பெண்ணின் முழுமையான செலவுகளையும் இயக்க காசில் வழங்கிவந்தவர். அவ்வப்போது சுகத்தையும் அனுபவித்தவர் விவாகரத்து பெற்றுக் கொள்ளாமலே இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மனைவி இந்தியாவில் இருப்பதற்கு சென்னையில் 80 இலட்சம் பெறுமதியான வீடு ஒன்றினை சொந்தமாகவும் வாங்கியுள்ளார். இவர்களிற்கெல்லாம் இவ்வளவு நிதி எப்படி வந்தது. சுவிசின் முன்னைய பொறுப்பாளரையும் தூசனத்தால் பேசியதும் அப்துல்லாவிற்கு உதவியாக இருந்தவரும் இவரே

    தேசியத் தலைவர் பிரபாகரனால் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் கட்டமைக்கபட்டு வளர்த்தெடுக்கபட்ட புலிகள் இயக்கம் இன்று நகைப்புக்கிடமாகி வருவது தமிழ் மக்களை வருத்தமடையச் செய்திருக்கிறது.
    அண்மையில் சுவிஸ் அலுவலகத்தில் கைகலப்பு ஒன்றும் இடம்பெற்றது. முன்னைய பொறுப்பாளர் குலம், சூரிச் மாநிலப்பொறுப்பாளர் nஐயத்திற்கும் அலுவலகத்தில் இருந்த அப்துல்லா குழுவினருக்கும் வாய்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி சேட்டுக் கிளிபட்ட நிகழ்வுகளும் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில் திரு nஐயம் நீக்கப்பட்டும் உள்ளார்.

    ஆயிரக்கணக்கான மாவீரர்களினதும், சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களினதும் புதைகுழிகளின் மீது யாரேனும் மாளிகை கட்ட நினைத்தால் அது அப்பட்டமான துரோகம். அவர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தும் ஈனச்செயல். தமிழ் மக்கள் இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

    தேசியத் தலைமையையும், விடுதலைப்போரை விலை பேசுவோரை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. ழூன்று தசாப்த காலமாக போராட்டத்தை வழிநடத்திய தேசியத் தலைமையை விலைபேசும் அளவுக்குச் சிலர் துணிந்து விட்டதே-தமிழ் மக்களிடத்தில் இருந்து புலிகள் இயக்கம் அந்நியப்பட்டு வருவதற்குப் பிரதான காரணம்.
    தேசியத்தலைமையின் நிலைபற்றித் தெளிவுபடுத்துவதற்கும், அவருக்கு மரியாதை செலுத்துவதற்கும் தடையாக இருப்பவர்களால் நிச்சயமாகப் போராட்டத்தை முன்னகர்த்த முடியாது. தெளிவற்ற நிலையில் இருக்கும் தமிழ்மக்களும் கூட நவம்பர் 27 ஆம் நாளுடன் ஒரு இறுதியான முடிவுக்கு வந்து விடிவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

    இப்போது இருக்கும் நிலைகளைப்பயன்படுத்தி வெளிநாட்டில் இருக்கும் நெடியவன், றெஐp, மதியரசன், அப்துல்லா, குட்டி, வாகீசன், அறிவு ஒவ்வொருவரும் இயக்கத்தின் பெயரால் தங்களிடம் இருக்கும் நிதியினையும், சொத்துக்களையும் தங்கள் உடைமைகள் ஆக்குவதற்காக இறுதிவரை போராடிய போராளிகளிற்கு துரோகிப்பட்டங்களை வழங்குவதும் அவைதொடர்பான அறிக்கைகளை தமது சார்பு ஊடகங்கள் மூலமாகவும் வெளியிடுகிறார்கள்.

    இவ்வாறான நயவஞ்சகமான துரோகிகளினால் தான் விடுதலைப்போராட்டம் இந்த நிலையை அடைந்திருக்கிறது. விடுதலைப் போராட்டத்திற்கு புலம்பெயர் மக்களாகிய நீங்கள் வழங்கிய உதவியை எவரும் மறந்துவிட முடியாது. தேசியத்தலைவர் மீதும், மாவீரர்கள் மீதும் அளவுகடந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள நீங்கள் விடுதலைப் போராட்டத்தின் தற்போதய உண்மைத்தன்மையை உணர்ந்து செயற்படுங்கள். தேசியதலைவர் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் இவ் அடாவடித்தனங்களிற்கு ஒருபோதும் அனுமதித்திருக்கமாட்டாh.;;

    இச்செய்தியினை உண்மைப் பெயருடன் வெளிக்கொண்டுவர முடியாமைக்கு பல காரணங்கள் உள்ளன. எவர் இதனை எழுதினார்கள் என்ற ஆய்வினை விடுத்து தேசியத் தலைமையையும், விடுதலைப்போரை விலை பேசுவோரையும் இனங்கண்டு செயற்படுங்கள். தேசியதலைவரினது பிறந்த தினத்திற்கும், தேசியமாவீரர் நாளிற்கும் தேசியதலைவரிற்கும் அகவணக்கம் செலுத்துங்கள். நன்றி நிலவன்

    Reply