பிரபாகரனை யாராலும் அழிக்க முடியாது: தமிழ் தேசிய கூட்டமைப்பு

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை யாராலும் எளிதில் அழித்துவிட முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபாகரனின் மாவீரர் தின உரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

”பிரபாகரனின் உரைகள் அடங்கிய இந்த நூல் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியானதாக உள்ளது. தமிழர்களின் விடுதலையே இறுதி மூச்சு என்பதில் அவர் உறுதியாகவே உள்ளார். தற்போது என்னால் பல விவரங்களை வெளியே கூற முடியாவிட்டாலும் காலம் வரும்போது அனைத்தும் வெளியே வரும். போரின்போது தனக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் தனது உடல்கூட எதிரிகளுக்கு கிடைக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் தனக்கருகில் போராளிகளை வைத்திருந்தவர் பிரபாகரன். ஆனால், அவரின் உடலை முள்ளிவாய்க்காலில் கண்டெடுத்தோம் என்று இலங்கை அரசு கூறும் கதையை குழந்தைகள் கூட நம்பாது. இலங்கை தென்பகுதி மக்களையும், இந்தியாவையும் நம்ப வைக்க நடத்தப்பட்ட நாடகம் தான் அது.” என்று எஸ். ஜெயானந்தமூர்த்தி பேசியதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி

Show More
Leave a Reply to Eelathamilan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Sampanthan
    Sampanthan

    தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ பாராளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்..

    அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகதாரலிங்கம் , செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரே மட்டக்களப்பிற்கு விஜயம் செய்திருந்தனர்..

    இவர்களுடன் கிழக்கு மாகாணத்தில் நிலவிய அரசியல் நெருக்கடி மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக கடந்த 3 வருடங்களாக கொழும்பில் தங்கியிருந்த அக் கட்சியின் பொதுச் செயலாளரான பிரசன்னா இந்திரகுமாரும் தற்போது மட்டக்களப்பு திரும்பியுள்ளார்..

    தமது கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கட்சி உறுப்பினர்களுடன் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைகளை மேற்கொண்டனர்..

    மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்களையும் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளரொருவரை நிறுத்துவது தொடர்பாகவும் கருத்துக்களை பரிமாறியதாகவும் தெரியவருகின்றது. .

    தற்போது மட்டக்களப்பில் தங்கியுள்ள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான தங்கேஸ்வரி கதிர்காமர் மற்றும் பா.அரியநேத்திரன் ஆகியோரையும் சந்தித்து உரையாடிய பின்பு அன்றிரவே கொழும்பு திரும்பினர்–வீரகேசரி இணையம்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஜெயானந்தமூர்த்தி இப்படியெல்லாம் கதையளந்து கொண்டிருந்தால்த் தானே, இலங்கை திரும்பினால் தனக்கு ஆபத்து எனறு தொடர்ந்து கூறி தனது பிரித்தானிய இருப்பை தக்க வைவத்துக் கொள்ளலாம்.

    Reply
  • Eelathamilan
    Eelathamilan

    Yes, Partheepan. You are 200% correct. This Jeyananthamoorthy, who was with Karuna when split came up. In Kokkadicholai, Jeyananthamoorthy stump his foot in Prapaharan’s photo. Then when he went to wanni, He changed.! He is a good Politician though. he has settled his family in Harrow area and they are living in Housing Benefit.

    Reply