‘ஈழத் தமிழர்’ என்ற பதத்திற்கு பதிலாக இன்று ‘ஐரோப்பிய தமிழர்’ என அடையாளப்படுத்தும் நிலை – என். செல்வராஜா

selvarajah-n02.jpgஐரோப்பாவில் வாழும் தமிழர் எதிர்காலத்திலும் தமிழர் என்ற அடையாளத்தினை பேணுவார்கள். ஆனால்,  ஈழத் தமிழர்கள் என்ற பதத்திற்கு பதிலாக ஐரோப்பிய தமிழர் என்று அடையாளப்படுத்தும் நிலை தோன்றியுள்ளதாக லண்டனிலிருந்து நூல்தேட்டம் என்ற ஈழத்துத் தமிழ் நூல்களை ஆணவப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நூலகர் என். செல்வராஜா தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் புலம்பெயர் தமிழ் சூழலில் வெளியீடுகளை ஆவணப்படுத்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த உரையாடலில் பல்கலைக்கழக பேராசிரியர்களும்,  விரிவுரையாளர்களும்,  தமிழ்த்துறை உள்ளிட்ட பல மாணவர்களும் பங்குபற்றினர்.

தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் துரை. மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூலகவியலாளர் என். செல்வாராஜா தொடர்ந்து உரையாற்றுகையில்:

ஐரோப்பாவில் வாழும் தமிழர்களின் இரண்டாம் தலைமுறையினர் இலங்கை தமிழர் பற்றி பல ஆய்வுகளை ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் மேற்கொள்கின்றனர்.  ஐரோப்பியரும் இவ்வாறான ஆய்வுகளில் ஆர்வம் செலுத்துகின்றனர். பல்வேறு மொழி அகராதிகளும்,  மொழிபெயர்ப்பு முயற்சிகளும் புலம்பெயர்ந்த தமிழர்களினாலும் அவர்களது இரண்டாம் தலைமுறையினராலும் நேரடியான மூல மொழியிலிருந்தும்,  மூல நூலாசிரியரின் வாழிடச் சூழலை அனுபவித்தும் நேரடியாக மொழிபெயர்க்கப்படுகின்றன. படைப்பாளி நிலக்கிளி பால மனோகரன் (டென்மார்க்) சரவண பவன் (ஜேர்மனி) கலாமோகன் (பாரிஸ்) போன்றோரை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

1980களில் மலேசியா,  சிங்கப்பூர் நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்களின் தலைமுறையினர் இன்று சிலோன் தமிழர்களாக வாழ்வது போல ஐரோப்பிய தமிழரும் தனித்துவ அடையாளத்துடன் வாழ்வார்கள்.

இன்று ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் கூட பல இலங்கை தமிழர்கள் போட்டியிடுகின்றனர். மலேசியா,  சிங்கப்பூர் தமிழர்களில் இலங்கையிலிருந்து சென்றவர்களே 1870-1930 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பல இலக்கியங்களை படைத்துள்ளனர். மலேசியா மான்மியம் ஈழத்தமிழராலேயே எழுதப்பட்டுள்ளது. மலேசியாவின் ஆரம்பகால படைப்பிலக்கியங்கள் ஈழத்தமிழர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன. ஆனால்,  இவை ஆவணப்படுத்தப்படவில்லை. இவற்றை தனியான ஒரு மலேசிய நூல்தேட்டம் மூலம் ஆவணப்படுத்தி வெளியிட்டுள்ளேன்.

ஐரோப்பிய தமிழ் ஆவணகாப்பகமும்,  ஆய்வு நிலையமும் என்ற பெயரில் அமைப்பொன்று ஏற்படுத்தப்பட்டு ஐரோப்பாவில் புலம்பெயர்ந்த மண்ணில் தமிழர்களின் நூல்கள் ஆவணப்படுத்தப்படுவதோடு,  அங்கு இலங்கை தமிழர் பற்றிய நூல்களும் ஆவணப்படுத்தப்படுகின்றன. இவை எதிர்காலத்தில் தமிழர் பற்றி ஆய்வு செய்யும் ஐரோப்பியர்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் பல்கலைக்கழகங்களில் கற்பவர்களுக்கும் ஒரு ஆய்வகமாகத் திகழப் போகிறது. பிரித்தானியாவிலுள்ள முன்னணி ஆறு பல்கலைக்கழங்களில் 600ற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்த தமிழ் மாணவர்கள் வருடாந்தம் கல்வி கற்று பட்டதாரிகளாக வெளியேறுகிறார்கள். எமது புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்தும் இலங்கை தமிழர்களுக்கு ஏதோவொரு வகையில் உதவிகளை செய்து வருகின்றனர்.

நூல்தேட்டத்தின் 7வது நூல் தொகுப்பு பேராதனை பல்கலைக்கழக வெளியீடுகளையும்,  பல்கலைக்கழக நூலகத்தின் அரிய வளங்களையும் ஆவணப்படுத்தி வெளியிடப்படவுள்ளது. இந்த நூல் தேட்டம் விற்பனை நோக்கத்துடன் செய்யப்படவில்லை. ஈழத்தமிழரின் வெளியீடுகள் உலகளாவிய ரீதியில் ஆவணப்படுத்தப்படுவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்கள் தாம் வாழும் இடத்திலிருந்து கொண்டே இலங்கை தொடர்பான பல ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றனர். இவை இலங்கையிலும் இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் அச்சிடப்படுகின்றன. இந்த நூல்கள் பலவற்றில் எழுத்தாளரின் இலங்கை விலாசமே பயன்படுத்தப்படுகிறது என்பதும் அவதானிக்கப்பட வேண்டும்.

இளம்தலைமுறையினரும் இலங்கை பற்றி ஆய்வு செய்யவே ஆர்வமாகவுள்ளனர். எதிர்காலத்தில் இலங்கையில் பல வெளியீடுகளை மேற்கொள்வார் எனவும் புலம் பெயர் தமிழரின் ஆதரவினை பெற்றுக்கொள்ள தாயகத்திலுள்ள தமிழ்ப் படைப்பாளிகள் முன்வர வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார். உரையின் முடிவில் திரு. செல்வராஜா ஒன்றுகூடலில் கலந்துகொண்டோரின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • sumi
    sumi

    ஈழத்தமிழர்கள் ஐரோப்பிய தமிழர்களாக நிலைப்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்வதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் ஈழம் எங்கு அமையப் போகின்றது என்ற கனவுக்குத்தான் விடை தெரியாமல் இருக்கின்றதே…ஒருவேளை ஐரிஷ் குடியரசு போன்று ஈழக்குடியரசும் பிரித்தானியாவில் அமைந்தால்..தமிழீழம் ஐரோப்பிய யூனியனில் அங்கத்தவ நாடாகுமா?…கனவுக்கும் ஒரு எல்லையுண்டல்லவா??
    கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போன கதைதான் இந்த ஈழக்கதையும்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    எதுஎப்படியோ? புலம்பெயர்ந்த தமிழருக்காக ஈழத்தில் வாழும் தமிழர்கள் மரிக்க வேண்டும் என்பது விதியாகிய போது இனி சங்கம் என்ன? சங்கடமென்ன?.
    ஈழத்தமிழனை காட்டிக் கொடுக்கப்போவது புலம்பெயர் தமிழன் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. அதிலிருந்து இன்னமும் விடுபடவில்லை.
    இல்லை. அப்படி புலம்பெயர் தமிழர்கள் செய்யமாட்டார்கள் என்பதை தேசம்நெற் வாசகர்கள் யாராவது உறுதி செய்வார்களாக இருந்தால்… தாகத்திற்கு ஒரு துளி நீர்.

    Reply
  • palli
    palli

    //ஈழத்தமிழனை காட்டிக் கொடுக்கப்போவது புலம்பெயர் தமிழன் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. அதிலிருந்து இன்னமும் விடுபடவில்லை.
    இல்லை. அப்படி புலம்பெயர் தமிழர்கள் செய்யமாட்டார்கள் என்பதை தேசம்நெற் வாசகர்கள் யாராவது உறுதி செய்வார்களாக இருந்தால்… //

    செய்தார்கள்? செய்கிறார்கள்; செய்வார்கள், இதில் சந்திராவுக்கு சந்தேகம் வரபடாது, (ஆனாலும் ஒரு கவலை இந்த கேடுகெட்ட விடயத்தில் பல்லிக்கும் பங்கு உண்டு என நினைக்கும் போதுதான் வெக்கமாய் இருக்கு; வேதனையும் தான்)

    Reply
  • thurai
    thurai

    புலத்தில் வாழும் தமிழர்களிற்கு சில தலையாய கடமைகழுண்டு. இந்தக கடமைகள் இலங்கை அரசியலிற்கு அப்பால், வாழும் நாடுகளில் தமிழர்களை ஒருங்கிணத்து அந்தந்த நாட்டு மக்கழுடன் இணந்து வாழப்பழக்குதல் வேண்டும். நாம் வாழும் நாடே நம்நாடு என்னும் எண்ணமும், தமிழ் சமூகம் நம் நாட்டிற்குத் தேவை என்று ஒவ்வொரு நாட்டிலும் சொல்லுமளவிற்கும் தமிழர்களின் நடத்தைகள் மாறவேண்டும்.

    இதிலிருந்து தவறுவோமேயானால் இலங்கையில் இரண்டாமிடத்து பிரசைகளென்றால் புலங்களில் ஆறமிடத்து பிரசைகளாகவே வாழ்வோம்.

    துரை

    Reply
  • santhanam
    santhanam

    அந்த 35லட்சம் ஈழத்தமிழர் பயன் பெறுவார் என்றரல் இந்த புலத்துபுண்னாக்குகளை காட்டிகொடுப்பதில் தப்பில்லை தலைவர் எல்லோரையும் அழைத்து சென்றுவிட்டார் புலம்பெயர்தேசத்தில் கொஞ்ச எச்சத்தை விட்டுவிட்டு சென்றுவிட்டார் இது நஞ்சாகமுன் களத்தில் குதிக்கவும் பல்லி.

    Reply
  • மாயா
    மாயா

    தமிழர்கள் , தம்மை தமிழர்கள் என்று அடையாளப்படுத்துவதிலிருந்து விலகிச் சென்றவர்களில் முதன்மையானவர்கள் இலங்கை (ஈழ) தமிழர்கள்தான். தமிழர்களில் , தாங்கள்தான் முதன்மையானவர்கள் என்ற வீராப்பு விதை இவர்களின் மனங்களில் எவன் விதைத்தானோ தெரியாது. அது தமிழ் பேசுவோர் எல்லோரும் தமிழர்கள் என்று சொல்லவே வைக்கவில்லை. சிங்கப்பூரிலும் , மலேசியாவிலும் வாழ்ந்த இலங்கை தமிழன், தன்னை உயர்ந்தவனாகக் காட்டிக் கொள்ள சிலோன் தமிழனாக ஒதுங்கியே வாழந்தான். வாழ்கிறான். இவர்களை விட இந்திய தமிழன் இந்நாடுகளில் கோலோச்சுகிறான். அரசுகளிலும், அரசாங்கங்களிலும் முதன்மை பதவி வகிக்கிறான். அதுவும் தகுதியோடு. ஆனால் சிலோன் தமிழன் , நான்தான் முதன்மையானவன் என்று சொல்லிக் கொண்டு அங்கேயே நிற்கிறான். இந்திய தமிழர்கள் , தன்னைத் தமிழர்கள் என்பதை விட , தாம் இந்தியர்கள் என்று தம்மை முதன்மைப்படுத்திக் கொண்டு, தாம் பேசும் தாய் மொழி தமிழ் என தமிழ் வளர்க்கிறார்கள்.

    புலத்து தமிழனும் நான் இலங்கையன். நான் பேசும் மொழி தமிழ் என , உலகில் வாழும் தமிழ் பேசும் மக்களோடு இணைந்து பயணிக்க வேண்டுமே ஒழிய, ஐரோப்பிய தமிழன் என்று , இன்னொரு அவலத்துக்கு வழி காட்டக் கூடாது. படித்தவர்கள், இலங்கையில் செய்த படு முட்டாள்தனத்தால் , ஈழ மக்கள் படு பாதாளத்தில் வீழ்ந்து போயிருக்கிறார்கள். புலத்து படித்தவர்கள் , அதே நிலையை புலத்திலும் உண்டாக்குவார்கள் போல் தெரிகிறது, இந்த ஐரோப்பிய தமிழர் எனும் கனவு?

    Reply
  • palli
    palli

    //குதிக்கவும் பல்லி.//
    சந்தானமும் குசும்புவும் பல்லியை உசுப்பேத்த்கியே சிக்கலில் மாட்டிவிடுறியள்; நீங்களும் துனைக்கு வருவதானால் பல்லி எங்கும் வர(எழுத்தில்) தயார்தான்; ஆனால் தொடங்கி விட்டு பல்லியை மட்டும் வடிவேலு போல் விட்டு விட்டு ஓடபடாது, இருப்பினும் சந்தானத்துக்கு பல்லி மீது அநியாயத்துக்கு அன்பு;

    Reply
  • Kusumbo
    Kusumbo

    பல்லி- எங்களைக் கூப்பிட்டு உசுப்பேத்திறியள். நான் நந்தாவுக்குப் பயந்து போய் ஒழிச்சிருந்தனான். நீங்கள் என்னைச் சும்மாய் கூப்பிடுகிறியள். நந்தா வந்தால் நான் அழுதிடுவன்.

    Reply