விடுதலைக்கு பௌத்த மதபீடங்கள் உதவ வேண்டும்! – தமிழ் அரசியல் கைதிகள்.

Buddha_SriLankaநீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய பௌத்த மதபீடங்கள் உதவ வேண்டும் என பௌத்த மதபீடங்களுக்கு சிறைக் கைதிகள் சார்பில் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அஸ்கிரிய, மல்வத்த, ஸ்யாம், பௌத்த பீடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“நாட்டில் யுத்தம் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையிலும், தமிழ் அரசியல் கைதிகள் நாட்டிலுள்ள பல்வேறு சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இக்கைதிகளின் அவலநிலை குறித்து அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு தரப்பினருக்கு பல தடவைகள் தெரியப்படுத்தினோம். ஆக்கபூர்வமாகன பதில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் இலங்கையில் அதியுயர் நிலையில் மதிக்கப்படுகின்ற பௌத்த பீடங்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதம நீதியரசர், அமைச்சர் டீயூ குணசேகர ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இதே வேளை, கண்டி மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே சுமங்கல தேரர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம், கிளிநொச்சிப் பகுதிகளுக்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • C.kumar
    C.kumar

    யதார்த்தம் அதுதான்.

    Reply
  • sivan
    sivan

    விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் கூட தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு உதவினார்கள் என்கிற குற்றச்சாட்டில் வருடக்கணக்காக விசாரணைகள் கூட நடத்தப்படாமல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இளளைஞர் யுவதிகளை விடுவிப்பதில் அரசாங்கம் ஏன் அக்கறை காட்டவில்லை. உதாரணத்திற்கு கடந்த வருடம் துவாரகா என்கற மாணவி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வைத்து புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளால் வன்னியில் நடத்தப்ட்டப்பட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு அவர்ளால் வழங்கப்பட்ட சான்றிதழை வைத்திருந்தது அவர் புரிந்த குற்றம். வன்னியிலுள்ள சகல பாடசாலைகளும் விடுதலைப்புலிகளின் கட்டப்பாட்டில் இருந்தது அரசுக்குத் தெரியாதா?

    Reply