தூற்றுவார் தூற்றட்டும் எனது பணி தொடரும்…… – எனக்குத் தெரிந்த நியாயம்! – 2 : சஹாப்தீன் நாநா


Chankanai_Marketசிறிலங்காவில் நிலத்திற்குக் கீழ் நிறைய வளங்கள் இருக்கின்றதாமே? உண்மையா? என ஒருவர் கேட்க, ஆம் இருக்கின்றது என இன்னொருவர் சொல்ல. இதை ஆராயப் புறப்பட்டது ஒரு குரூப். ஆம் சிறிலங்கா முழுக்க உள்ள நிறையப் பிரதேசங்களின் மண் பரிசோதிக்கப்பட்டது. இறுதியில் ஊவா மாகாணத்தில் ஒரு காட்டுப் பிரதேசத்தில் (மலைப்பிரதேசம்), அரச காணியில், நிலத்திற்குக் கீழ் இரும்பு தாது இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இரண்டு வருடம் (2006 முதல் 2008 வரை) ஓயாத உழைப்பு, அலைச்சல், அமெரிக்க நில ஆய்வாளர்கள், இங்கிலாந்தின் மண்ணியல் நிபுணர்கள், சிங்கப்பூர் கம்பனி ஒன்றின் வழிகாட்டல் என ஓடோ, ஓடென ஓடி, நாலரை கோடி ரூபா சிறிலங்கா பணத்தை தண்ணியாக இறைத்து, சிறிலங்காவில் இரும்பு இருக்கின்றது என்ற உண்மையை கண்டாயிற்று.

அப்புறம் கிட்டத்தட்ட 5000 (ஐயாயிரம்) கோடி ரூபா முதலிட்டு, முதல் வருடம் 1000 பேருக்கு வேலை வாய்ப்பளித்து, சிறிலங்கா பொருளாதாரத்தை ஜம்மென்று உயர்த்துகின்றோம் பேர்வழி எனக் கூறிக்கொண்டு 2009ம் ஆண்டு நவம்பர் 14 முதல் மும்மூர்த்திகளின் கதவை தட்டிக் கொண்டிருக்கின்றோம், தட்டுகின்றோம், தட்டுகின்றேன். ஆனால் இதுவரையும் எம்மூர்த்தியும் எனது புறஜக்ட்டை தூக்கிக்கூட பார்க்கவில்லை. ஆனால் இந்த புறஜக்ட்டுக்காக எனக்கு கடன் தந்த ஒவ்வொருவரும் என்வீட்டுக்கதவை தட்டி, பிடறி மயிர் தெறிக்க திட்டிவிட்டு போகின்றார்கள். காக்கா தொப்பி புரட்டிட்டாண்டா? இதுதான் இப்போதைய நிலமை. இதை விட்டுவிட்டு பசிலுக்கு சாமரம் வீசி, மகிந்தக்கு வீதியில் குடைபிடித்து, கோட்டாபாயவிற்கு பன்னீர் தெளிக்க இன்னும் நம்முட ஆத்மா சாகல. சாகவும் மாட்டாது. அது ஒரு பீனிக்ஸ்.

இப்படித்தான் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பீனிக்ஸ் உருவாக வேண்டும், உருவாக்கப்பட வேண்டும். போராடு, போராடு, போராடு என்றுதான் நாமும் சொல்கின்றோம். முதலில் உன்னுடன், உனது வாழ்க்கையை வென்றெடுக்க போராடு. கத்தியின்றி, ரத்தமின்றி, வெள்ளேந்திரியாக போராடு. பசிக்குணவு, உனது பசிக்குணவு, பொண்டாட்டி, புள்ளகுட்டியின் பசிக்குணவு, அப்புறம் வீதிக்கு வா. வாழ்க்கையுடன் போராடத் தெரியாதவனுக்கு போராட கற்றுக்கொடு. நோ பொளிடிக்ஸ். இப்படி நாலுபேரை உருவாக்கு. அப்போது உனக்கு புரியும் நீ இங்கே நாயாக உழைக்க, யாரோ உன்னை சுரண்டி தின்பது புரியும், தெரியவரும். நீ உற்பத்திசெய்து, கண்ணீரும், களைப்பு நீரும் கலந்து உருவாக்கிய உருளைக்கிழங்கு சந்தையில் 90 ரூபாவுக்கு விற்கமுடியாமல் திரும்பிவரும். மினிஸ்டர்ர மச்சினன் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்த உருளைக் கிழங்கு சந்தையில் 55 ரூபா சில்லறை விலை, 43ரூபா ஹோள்சேல் விலை என துதிபாடும். இடிக்கும். மனம் பதறும். அரசையும் ஆட்சியாளர்களையும் திட்ட வேண்டும் போல இருக்கும். ஆனால் உன்னிடம் பலம் இருக்காது.

உனது அடுத்த தோட்டத்தில் தக்காளி செய்தவரின் கதையும் இதுதான். தக்காளி சோஸ் இந்தோனேசியாவில் இருந்து இம்போட் செய்யப்படுவதால் தக்காளி விலை சரியும். சைனாவில் இருந்து பிளாஸ்ரிக் குடம் இறக்குமதி செய்யப்படுவதால், மண்பானை உற்பத்தி படுக்கும். ஆம் அங்கிருந்துதான் நாம், நான் சொல்லும் சொல்லும் புரட்சி வெடிக்கும். அது பொருளாதாரப் புரட்சி, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற புரட்சி.

இல்லை எங்கள் ரத்தம் சிவப்பு, சிங்களவன்ட ரத்தம் கறுப்பு. அதனால நாங்க யுரோப்புல வசதியாக இருந்து கொண்டு மந்திரிப்போம், வன்னியில இன்னும் நேர்த்தி செய்த எங்கட வாரிசுகள் இருக்கு, அவர்கள காவு கொடுத்துப் போட்டுத்தான் சாவோம் என்றால், அல்லாஹ்ச்சாமி, ஹிந்துச்சாமி, புத்தர்ச்சாமி, மாவோச்சாமி, லெனின்சாமி எல்லாமே, எல்லோருமே பொய் என்றுதான் நான் சொல்வேன்.

நாம் எவ்வளவுதான், அய்யன்னா நாவன்னா என்னா, அகிலாண்டேஸ்வரிகள்ற கருவறை வரைதான் நடைபயணம் செய்தாலும், சிறிலங்கா ஒரு முழு நாடு, அதில் சிங்கள, தமிழ், முஸ்லீம் என்ற மூவின மக்கள் வாழ்கின்றார்கள், இனியும் வாழ்வார்கள் என்ற காய் நகர்த்தல்கள்தான் இனி நடக்கும். அரங்கேறும். தடங்கல்களை ஏற்படுத்தலாம். ஆட்சியாளர்களை திக்குமுக்காடப் பண்ணலாம். திக்குமுக்காடப் பண்ணினோம். அதன் பயனைத்தான் மே17, 2009ல் முள்ளிவாய்க்கால் சகதிக்குள் அறுவடை செய்தோம். அதில் இருந்து கற்றதுதான் இந்த எனக்குத் தெரிந்த நியாயம்.

2009 மே இல் உலகமே தடுமாறிக் கொண்டிருக்கின்றது. ஆனால், மே 19ல் முழுக்க முழுக்க சிங்கள மக்கள் வாழும் கேகாலை பஸ்நிலையத்துக்கு, முன்னிருக்கும் ஹிந்துக் கோயிலில், பட்டப்பகல் 11 மணிக்கு, லவுட்ஸ்பீக்கர் கட்டி தமிழ்மக்கள் பெரும் ஆரவாரத்துடன் பூஜை, புனருத்தாரணம் செய்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு சிங்களவனும் கோயிலை கடக்கும் போது, குனிந்து, வலதுகையை நெஞ்சில் அமர்த்திக் கொண்டு மௌனியாகச் செல்கின்றான். கோயிலுக்கு 200 அடி தூரத்தில் படா டோபமாக, பணத்தை தண்ணியாக இறைத்து கட்டப்பட்டிருக்கும் முஸ்லீம் பள்ளிவாசலில் இருந்து பாங்கொலியும் அதற்குப் போட்டியாக கேட்கும். எந்த சிங்களவனும் வந்து இது எங்கள் பூமி, தமிழனும், சோனியும் இங்கிருந்து வெளியேற வேண்டும் என இதுவரை சொல்லவில்லை. இதுதான் சிங்களவன்.

குருவி சேர்ப்பது போல் ஐரோப்பிய நாடுகளில் சேர்ப்பதை உண்டியல்காறர்களுக்கு கொடுக்காமல், அந்த அகதிகளுக்கு, அந்த மனித தெய்வங்களுக்கு, தனித்தனியாக அனுப்புவோம். ஒரு மனிதனை உருவாக்குவோம். இவ்வாறு உருவாக்கப்படும் ஒவ்வொருவனும்தான், நாளைக்கு அல்லது நாளை மறுதினம் சிந்திக்க தொடங்குவான். தனது உருளைக்கிழங்கு ஏன் மார்கட்டில் விலை போகல என சிந்திப்பான். சிந்திக்கும் வளம் நம்மால் வளங்கப்பட்டிருக்கும். அதுதான் ஆரம்பம். அவ்வாறு அவன் சிந்திப்பதுதான் ஆரம்பம். அவனை தானாக, சுயமாக சிந்திக்க விட வேண்டும். அப்புறம் என்ன செய்யலாம் என அவனே முடிவெடுப்பான். கிட்டத்தட்ட 10 வருடம் எடுக்கும். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயுமாமே. எனவே எம்மவன் முப்பது வருடமெல்லாம் வேஸ்ட் பண்ண மாட்டான். சிங்கள, தமிழ், முஸ்லீம் சகோதரர்களுடன் சேர்ந்து அழகான முடிவெடுப்பான்.

சின்னத்தாயியை இந்திய ஜனாதிபதி தனது மாளிகைக்கு அழைத்துத்தான் பட்டம் வழங்கினார். நாம் பல நுறு சிங்கள, தமிழ், முஸ்லீம் சின்னத் தாயிகளையும், சின்னத் தங்கச்சிகளையும் உருவாக்குவோம். அவர்களாக சுயம்புவாக வெளிவருவார்கள். அப்போது அவர்களைத்தேடி பல கட்சிகள் வரும். வரப்பண்ண வேண்டும். வரப்பண்ணினோம். அதை கண்டி மாவட்டத்தில் பரீட்சார்தமாக செய்தும் பார்த்தோம். எம்மால் உருவாக்கப்பட் ஏழைத்தாய்மாருக்கு கொழும்பு கொமர்சியல் வங்கி வீடு தேடிவந்து கடன் வழங்கியது. பத்தாயிரம் ரூபா முதல் 5லட்ச ரூபா வரை. யாருடைய கரண்டியோ, கால்பிடித்தலோ இல்லாமல் செல்ப் கரண்டி அங்கு வெற்றி பெற்றது. வாட்டசாட்டமான, கறுப்பு அரசியல்வாதி, வீடு தேடிவந்து, வாக்கு வழங்குங்கோ, உங்கள் கணவன்மாரை கொரியாவுக்கு அனுப்பி வைக்கின்றேன் என்றார். கடந்த இறுதித் தேர்தல் முடிந்து பத்துநாளில் 147 பேரை கொரியாவுக்கு அனுப்பியும் வைத்தார். இதுதான் சிங்களவன். இதுதான் பொருளாதாரப் புரட்சி.

பொருளாதாரப் புரட்சி எப்படி எங்கள் உரிமைப் பிரச்சனைக்கு வடிகாலாகும்? என்று இக்கென்னா வெச்சிப்பேசினால் நாம் கொஞ்சம் பின்னே போய் மீண்டும் மாவோவை துணைக்கழைக்க வேண்டியிருக்கின்றது. இவரென்ன சியாங்கே சேக்குடன் மல்லுக்கு நின்று விட்டா சீனத்தை சிவப்பாக்கினார். பாட்டாளி மக்களுடன் ஏர் பிடித்துவிட்டல்லவா பீல்டுக்கு வந்தார்.

இப்போது ஆசிய அபிவிருத்தி வங்கி, உதவி தலைவர் யாழ்ப்பாண விஜயம் என்ற செய்தியும் காதைக்கடிக்கின்றது. சிறிலங்காவில் நிறைய அபிவிருத்தி திட்டங்களை இந்நிறுவனமே மேற்கொண்டுள்ளது. சில சமயம் நமது அரசியல்வாதிகளின் தில்லு முல்லு காரணமாக ஒதுக்கிய பணம் திரும்பி போன கதைகளுமுண்டு. இம்முறை எமது எம்பிக்குளும், மக்களும் கொஞ்சம் உசாராக இருந்தால் நிறைய சாதிக்கலாம். இந்நிறுவனம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு அதிகாரிகளை நியமித்துள்ளது. இவர்களை ஐ.ஆர்.டி.பி. (இன்ரர் கிறெட் ரூறல் டெவலப்மென்ட் போரட்) புறஜக்ட் டிரக்டர் என அழைக்கின்றனர். ஒவ்வொரு கச்சேரிகளிலும் ஒவ்வொரு டிரக்டர்களுக்கும், அலுவலகம், ஆள், அம்பு என சகல வசதிகளும் உண்டு. நல்லவர்கள். மனிதாபிமானிகள். நன்கு கற்றவர்கள். சாதி, இனம், மதம் எதுவுமே பார்க்க மாட்டார்கள். யாரும், எப்போதும் போய் இவர்களது கதவை தட்டலாம்.

எம்மிடம் ஏதும் திட்டங்கள் இருந்தால் இவர்களிடம் சொல்லலாம். காது கொடுத்து கேட்பார்கள். அடுத்த வருடம் ஆசிய அபிவிருத்தி வங்கி நமது நாட்டுக்கு பணம் தரும் போது; அந்த திட்டத்துக்கும் அரசிடம் பணம் வழங்கி ஏழைகளின் வாழ்வை நிறைய வைப்பார்கள். ஒவ்வொரு மாவட்ட கிராம அபிவிருத்திக்கும், வங்கிகள் வழங்கும் சிறு கைத்தொழில்கள் கடன்களுக்கும், இவர்களது கைப்பட காசோலைகளில் கையொப்பமிடப்படும்.

ஒரு முறை ஒரு புறஜக்கட் டிரக்டரை சந்திக்க வேண்டிய வாய்பு ஏற்பட, மலையகத்தில் ஏழைத்தாய்மார் படும் அல்லல்களை அள்ளி வைத்தேன். என்ன செய்யலாம் என கேட்டார். சிறிலங்காவில் கிராமங்களில், அப்போது கிராம்பு விலை 130 ரூபா. இதை கிராம மக்களிடம் துட்டுக்கு இரண்டாக வாங்கும் பண முதலைகள்; கிலோ முன்னூறு ரூபாவாக எற்றுமதி செய்து கொள்ளையடிக்கின்றார்கள். ஏன் ஐயா நீங்களே கோடவுணை (சேமிப்பகம்) உருவாக்கி, உங்கள் கிராமத்தில் உள்ள மக்களிடம் வாங்கி, நேரடியாக எற்றுமதி செய்து அவ்விலாபத்தின் ஒரு பகுதியை இவ் ஏழைகளுக்கு வழங்கலாமே என்றேன். அதை எம்மால் செய்ய முடியாது! உன்னால் செய்ய முடியுமா என்றார். பணம் ஒரு 40 லட்ச ரூபா இருந்தால் செய்ய முடியும் என்றேன். டண். 40 லட்ச ரூபாவுக்கு காசோலை கிழித்து, அடுத்த நாளே, ஒரு இருபத்தைந்து தாய்மார்களை அழைத்து; அதாவது கணவன்மார்களை இழந்த தாய்மார்களை அழைத்து, ஒவ்வொருவரிடமும் காசாக இருபதாயிரம் கொடுத்து, அம்மக்களே உங்கள் கிராமத்தில் இருக்கும் கிராம்புகளை வாங்கி வீட்டில் வையுங்கள், நாம் வந்து சேகரிக்கின்றோம் என்றோம். வெற்றி. வெற்றி பூரண வெற்றி. அவர்களது கராம்பு கனடா சந்தையில் 340 ரூபாவுக்கு விலை போது. 90 வீத இலாபம் அவ்வேழைத் தாய்மாருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இப்போது அம்மாவட்டத்தில் 132 காந்தா சமிக்திய (பெண்கள் அமைப்பு) உருவாகி உள்ளது. இவர்களுக்கு அரசியலும் தெரியாது. ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது. ஆனால் அத்தொகுதி மெம்பர் ஒப் பார்ளிமென்ட்டை தெரிவுசெய்யும் பவரில் இருக்கின்றார்கள். இதைவிட ஆச்சரியம். 40 லட்ச ரூபாவைத் தூக்கித்தந்த அந்த புறஜக்ட் டிரக்டருக்கும் எனக்கும் எந்த மாமன், மச்சான், தோழர், கோம்ரேட் உறவும் கிடையாது. அவர் ஒரு சிங்களவர். சிங்கள மகாத்மா. அவர் வீட்டில் நாலு பேர் போனால் உட்காருவதற்கு கூட இன்றுவரையும் கதிரை கிடையாது.

இப்படி மகாத்மாக்களைத் தேடி கண்டு பிடித்து தார்மீக, ஜனநாயக, சோசலிச சிறிலங்காவை உருவாக்கிவிட்டு, எங்க கோயில் கட்டுற, எங்க பன்சல கட்டுற, எங்க பள்ளிவாசல்கட்டுற என யோசிப்போம். எங்கள உட்டா இஸ்லாத்த பலோ பண்ற ஆட்களே கிடையாது, நாங்க வேற, நீங்க வேற என்று இஸ்லாம் பேசின அரபு நாட்டு காக்காமார்களே இப்போ எறங்கி வந்து, கட்டுங்கோடா கிறிஸ்தவ தேவாலயத்த என்று சொல்லி, கட்டார் மாநகரின் மத்தியில் தேவாலயமும் கட்டி, திறப்பு விழாவும் வச்சின்டான். ஆனால் நீ  அவன்ட மாளிகைக்கு முன்னால தேரோட்டம் போறதை மகின்தவும், பொண்டாட்டியும் தரிசிக்கின்றார்கள், ஆனால் நீ எங்க பகுதியில் வந்து யாவாரமும் செய்யக் கூடாது, கோயில் பூசையும் செய்யக் கூடாது….புரியல ? புரியல…நம்ம இதயத்துக்குள்ள இருக்கிற அந்த சாமான் என்ன என்று புரியல. என்கு நியாயமாயும் படல.
(தூற்றுவார் தூற்றட்டும் எனது பணி தொடரும்……)

எச்சரிக்கை :
யாழ்ப்பாண மாநகரில், ஐரோப்பிய ஸ்டைலில் பெற்றள் கராஜ் திறப்பதற்குரிய கோட்டா, யாரோ ஒரு பெரும் புள்ளியின் கையில் இருப்பதாகவும், கொஞ்சம் காக்காமாரும், சிங்கள சகோதரயோக்களும் அதற்கு முயற்சி பண்ணுவதாகவும் தூது வந்துள்ளது. தயவு செய்து நாட்டுப்பற்றுள்ளவர்கள் முயற்சி பண்ணுங்கள். அப்புறம் சோனி எங்கட எல்லைக்குள்ள பெற்றள் செற் திறந்துட்டான், சிங்களம் புகுந்து அராஜகம் பண்ணுகின்றது என கட்டுக்கதைகள் சொல்லாமால் புத்திமான் பலவான் என்பதை நிரூபியுங்கள் பிளீஸ். இன்வெஸ்ட்மென்ட் ஒரு கோடி ரூபாவாம்.

._._._._._.

எனக்குத் தெரிந்த நியாயம்! – 1

Micro_Credit_Project//இக்கட்டுரையாளர் தேசம்நெற் க்கு நன்கு அறிமுகமானவர். இலங்கையில் ஒடுக்கப்பட்டுள்ள சமூகங்கள் சார்பில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருபவர். சில பொதுத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றார். புலம்பெயர்ந்து வாழ்கின்ற இவர் காலத்திற்குக் காலம் இலங்கை சென்று அம்மக்களுடன் இறுக்கமான பிணைப்பைக் கொண்டுள்ளவர். அவர் புனைப்பெயரிலேயே தனது ஆக்கத்தினைத் தந்துள்ளார். இது தேசம்நெற் இல் வருகின்ற அவருடைய முதலாவது ஆக்கம். எதிர்காலத்தில் இவரது ஆக்கங்கள தொடர்ந்து வரும் என நம்புகிறோம். – தேசம்நெற். //

அட எல்லோருமே திரிந்திவிட்டார்கள் போல தெரிகின்றது. ஏரோப்பிளேன் வாங்க, ரொக்கட் லோன்ஜர்கள் வாங்க, எறிகணைகள் வாங்க, வெடிமருந்துகள் வாங்க, அழிவாயுதங்கள் வாங்க என பணத்தை கத்தை கத்தையாக சேர்த்தவர்களும்; அந்த நாலுகால் மிருகத்துக்கும், அதற்கு துணை போகின்றவர்களுக்கும் எப்படி ஆப்பு வைக்கலாம் என மூளைகளை கசக்கியவர்களும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு; இப்போ புதுசாக வடக்கின் அபிவிருத்தி, வடகிழக்கின் புனர்நிர்மாணம் என பேசத்தொடங்கியுள்ளார்கள். வாழ்க மகிந்த பிறதர்ஸ். அந்தப் புண்ணியவான்கள்தானே இதற்கெல்லாம் பிள்ளையார் சுழிபோட்டவர்கள்.

ஆனால் இந்த மகிந்த பிறதர்ஸின் நடவடிக்கைகள்தான் ஒன்றும் புரியாத புதிராக இருக்கின்றது. ஏதோ நல்லது செய்கின்றது மாதிரியும் தெரிகின்றது. சில நேரம் குப்புற கவுத்து விடுவார்களோ எனவும் எண்ணத் தோன்றுகின்றது. அவர்கள் நல்லது செய்வார்கள் என நினைப்போம். அப்படித்தானே இப்போ ஏ டபுள் பிளஸ் கைதியாக இருக்கும் கேபி சகோதரயா சொல்லியுள்ளார். நம்பிக்கைதான் வாழ்க்கையாம். அட போங்கப்பா இத சொல்றத்துக்கு இந்த ஆயுத கொள்வனவாளர் பிளஸ் கிட்டத்தட்ட ஒண்ணரை லட்சம் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களின் ரத்தம் குடிக்க காரணமாக இருந்த தொப்பிச் சாமியாருக்கு  30 வருசம் எடுத்திருக்கின்றது. அவ்வளவு மூளை. இந்த மயிரத்தான் எங்களுக்கு 7ம் வகுப்பில் பைதாகரசின் தேற்றம் சொல்லித்தந்த சோதிலிங்கம் வாத்தியாரும், காத்தான்குடி பள்ளிவாசலில் 75 தலைகள் வெடித்து சிதறிய போதும், அறந்தலாவ புத்த பன்சலவில் 43 குட்டி ஆமுதுறுக்களின் தலைகள் வெட்டிச் சரிந்த போதும் நாங்க சொன்னோம். கேட்கல, கேட்கல, யாருமே காது கொடுத்துக் கேக்கல. அதுதான் சிங்களவன நம்புவோம், சோனிக்காக்காமாரயும் கொஞ்சம் நம்புவோம், அடுத்த இயக்க காறர்களையும் கொஞ்சம் நம்புவோம்டா புள்ளைகளே என தலையால அடிச்சிக்கிட்டு சொன்னோம். ஹ்ம். யார்தான் நமது புலம்பல்களை காது கொடுத்துக் கேட்டார்கள். எனிவே விடயத்துக்கு வருவோம்.

அந்த மனுஷன் இறப்பதற்கு முந்திய மாவீர் தின உரையில் ஒரு விடயத்தை மிக ஆளமாகவும், அகலமாகவும், தெளிவாகவும் சொல்லிவிட்டுப்போனார். இனி போராட்டம் புலம்பெயர்ந்தவர்களின் கையிலேயே தங்கியுள்ளது என. அந்த மனுஷன்ட வாய்க்கு சக்கர போடணும். இல்லா விட்டால் ஜீஎஸ்பி வரிச்சலுகையை ஏன் நீக்க வேண்டும். ஐ.நா.தலைமைச் செயலர் சிறிலங்காவுக்கெதிராக ஒரு ஆணைக்குழுவை ஏன் நியமிக்க வேண்டும். ஏதோ சம்திங் எல்ஸ். யாரோ ஐநூறு பேர்களோ அல்லது நூத்தி அம்பது நபர்களோ புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு அரசுக்கெதிராக டூ விட்டுக் கொண்டிருக்கின்றார்கள் போலத்தான் தெரிகின்றது. இப்படியே புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு டூ விட்டுக் கொண்டிருந்தால் அந்த பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு, மலையக, ராணுவத்தில் கணவர்மார்களை இழந்து கைம் பெண்களாக இருக்கும் தாய்மார் எல்லோரையும் பற்றி யார் கவலைப்படுவது. நாம் கொஞ்சம் கவலைப்படுவோம்.

சிறிலங்கா பொருளாதாரம் பார்க்கிறதுக்கு அழகாகத் தெரிந்தாலும் ரசிக்கிறதுக்கு, மூச்சுவிடுவதற்கு, மூணுவேளை றிலாக்ஸாக உண்பதற்கு அவ்வளவு அழகாகத் தெரியல. சன்லைட் 27 ரூபா, சீனி 105 ரூபா, லாம்பெண்ணை போத்தல் 56 ரூபா, தக்காளி கிலோ 120 ரூபா, அரிசி (ஒன்றுக்கும் உதவாத புண்ணாக்கு அரிசி) கிலோ 65 ரூபா, தேங்காய் எண்ணை போத்தல் 180 ரூபா, மீன் கிலோ 700 ரூபா, இறைச்சி கிலோ 350 ரூபா, தங்கம் பவுண் 34,000 ரூபா, பஸ்ஸில் ஒரு ஹோல்ட்டில் இருந்து அடுத்த ஹோல்ட்டில் இறங்க 6 ரூபா, தத்தக்க பித்தக்கா பணிஸ் 12 ரூபா, பாண் 55 ரூபா, அங்கர் 400 கிராம் பக்கட் 450 ரூபா என, இப்படி பொருட்களின் விலை தினமும் ஏற, ஒரு நபரின் நாட்சம்பளம் 600 ரூபா. ஆம் வரவு எட்டணா செலவு பதினெட்டணா. அதிகம் 10 அணா, அதனால் பாமரர்கள் பாடு, படு ஜோர் என்று சொல்வதற்கில்லை.

அரசு திட்டங்களை தீட்டுகின்றது. தினமும் விளம்பரங்கள் வருகின்றது, மக்களும் ஆவலுடன் எதையோ எதிர்பார்க்கின்றார்கள். மகின்த பிறதர்ஸ் எங்கேயாவது ஆப்படித்து நம்மை முன்னேற்றுவார்கள் என அரசியல்வாதிகளும் தினமும் ஏதோ ஒரு இலவு காத்த கிளி கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். சரி நம்புவோம், நம்புவோம், நம்பிக்கைதானே வாழ்க்கை. ஆனால் நாளைக்கு சமைத்துச் சாப்பிட சட்டி பானையும் இல்லாமல், தீப்பெட்டியும் இல்லாமல், அரிசி, தேங்காயும் இல்லாமல் அவதிப்படும் அந்த ஜீவன்களுக்கு ஆறுதல் சொல்ல மகின்த மட்டும் போதுமா? நமது கைகளும் நீள வேண்டாமா? நமது கைகளையும், அதி புத்திசாலித்தனத்தையும் கொஞ்சம் நீட்டலாமே.

நமது எம்பிக்கள் ஒவ்வொருவருக்கும் வருடாவருடம் 60லட்சம் ரூபா, தமது தொகுதி அபிவிருத்திக்கென அரசால் ஒதுக்கப்படுகின்றதாமே? ஓள்ரெடி இந்த வருடத்துக்குரிய நிதி ஒதுக்கப்பட்டு விட்டதாமே? இதுவரை, வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு வடம் பிடித்து, நம்மையெல்லாம் உசுப்பேத்திய அந்த அதி புத்திசாலிகள்?  அந்தப் பணத்தை எடுத்து, அந்த அப்பாவி உள்ளங்களுக்கு கொடுக்கவில்லையாமே? இது உண்மையா? யாரும் விபரங்கள் தெரிந்தவர்கள் இருந்தால் கேட்டுச் சொல்லுங்கோவன். அந்த பணம் திறைசேரிக்கு திரும்பி போக முன்னர், அந்த அப்பாவிகளின் வயிற்றை, அப்பணம் சென்று சேர ஒரு ஐடியா சொல்லுங்கோவன்.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள சோமாலி நாட்டை சேர்ந்தவர்கள், வங்கிகளில் கணக்கோ வேறு தொடர்புகளோ வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பள்ளி வாசல்களில் அச்சமூகத்தவர்கள் கூடி, ஒரு குழுவைத்தெரிந்து, அப்பகுதி வாழ் சோமாலி நாட்டவர்களுக்கு ஒரு பணக்கஸ்டமோ, மனக்கஸ்டமோ வரும் போது அந்நபரை அழைத்து சகல உதவிகளும் செய்வார்கள். ஆம் நீண்டகால, குறுங்கால கடன்களை வழங்குவார்கள். வழங்குவது மட்டுமல்ல அவருக்கு பின்னாலேயே நின்று, அந்த நபர் எழும்பி மூச்சுவிடும் வரை கை கொடுப்பார்கள்.

இதே தன்மையை இப்போது சிங்கள கிராமங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. கண்டி தலதா மாளிகை தியவதன நிலமே, கண்டியை அண்டிய சகல கிராமங்களிலும் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்திருக்கின்றார். இக்குழு ஒவ்வொரு கிராமத்திலும், வீதிகளிலும் இயங்குகின்றது. உதவி தேவைப்பட்டவர்கள் இவர்களை அணுகலாம். அந்த தெருவில் உள்ள அல்லது அடுத்த தெருவில் உள்ள ஐந்து பேருடன் குறித்த நபர் அவர்களை அணுகலாம்.

Micro_Credit_Projectகுறிப்பாக பெண்கள். உண்மைகளை அவர்களிடம் கக்க வேண்டும். அதாவது என் புருஷன் குடிகாறன். வீட்டுக்கு உதவுவதே இல்லை. எனக்கு ஒரு பத்தாயிரம் ரூபா கொடுத்தால் ஒரு தொழிலை செய்வேன், பிள்ளைகளுக்கு கூழோ, கஞ்சியோ ஊற்றுவேன் என்ற தன் ஆதங்கத்தை சொல்ல வேண்டும். டண். பத்தாயிரம் கேஷ் வழங்கப்படும். இவருடன் செல்லும் மற்ற நான்கு பேரும்தான் காரண்டி. நோ பேப்பர் வேக். 6 வீத வட்டி.6 மாத கடன். ஒவ்வொரு வாரமும் ஒரு குட்டித்தொகை கட்ட வேண்டும்.

இவருடன் செல்லும் மற்றவர்களுக்கும் அன்றே கடன் வழங்கப்படும். ஒருவர் பணம் கட்டா விட்டால் மற்ற 4 பேரும் சேர்ந்து அப்பணத்தை கட்ட வேண்டும். இதனால் தில்லு முல்லு குறைவு. தில்லு முல்லே கிடையாது. இரண்டு மாதம் தொடர்ந்து பணம் கட்டினால் அடுத்த தினமே தனியாக, தைரியமாக அவர்களிடம் சென்று ஐந்து லட்ச ரூபா வரை கடன் பெறலாம்.

ஆச்சரியம் என்னவென்றால் இவர்களிடம் இக்கடன்களை பெறும் அனேகம் பேர் கண்டியை அண்டிய பகுதிகளில் உள்ள தமிழர்களும், முஸ்லீம்களும் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. விபரம் தெரிந்தவர்கள் யாராவது எங்கட கோயில், பள்ளிவாசல்களில் குவிந்து கிடக்கும் செல்வங்களை இப்படி திருப்புவதற்கு முயற்சித்திருக்கின்றார்களா? அல்லது முயற்சிக்கலாமா என கேட்டுச் சொல்லுங்கோவன். இல்ல நாங்க அந்தப் பணங்களை சாமிக்கு படைக்க வெச்சிருக்கோம், பள்ளிவாசல்ல கந்தூரி கொடுக்க வெச்சிருக்கோம் என்றால் உங்கள எந்தச் சாமியும் மன்னிக்காது. திரும்பவும் நாசமாப்போவயள்.

இல்ல மகின்த வருவார். எங்க வீட்டுக்குள்ள வந்து எங்களுக்கு கஞ்சி காய்ச்சித் தருவார், தர வேண்டும். இல்லாவிட்டால் அவரை உண்டு இல்லை என பண்ணி விடுவோம் என இறுமாந்திருந்தால் அங்குள்ள நம்மவன் செத்துடுவான். அது பெரிய தல. பெரிய கை. அவர்கள் இந்தியாவுக்கு அசைந்து கொடுத்து, சைனாவுக்கு வளைந்து கொடுத்து, ஜீஎஸ்பி என்ற பெரும் பூதத்துக்கு விட்டுக்கொடுத்து, நம்ம வீட்டுக்கு வந்து விருந்து படைக்க நாளெடுக்கும் அல்லது காலம் கடக்கும். அதுவரை டோர் ரூ டோர் சேவையை நாம்தான் செய்ய வேண்டும்.

புலம் பெயர்நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதுவராலயங்களில் அமைந்துள்ள கொமர்ஷியல் டிவிஷன்கள் நன்கு கால் நீட்டி, குறட்டை விட்டுத் தூங்கிக் கிடக்கின்றன. இந்த வர்த்தகப்பிரிவென்பது அந்த, அந்த நாட்டை பொறுத்த வரை ஒரு சக்தி. ஒரு ஊக்கி. இதை எமது அரசு இயக்குவதும் இல்லை. இயங்க வைப்பதும் இல்லை. ஜீஎஸ்பி வரியை தூக்கி விட்டால் எங்களால் எழும்பி நடக்க முடியாதா? முடியும் என்பதை இந்த வர்த்தகப் பிரிவுகளை வைத்து அரசு வெற்றி கொள்ளலாம். நமது நாட்டின் ஒவ்வொரு உற்பத்திப் பொருட்களையும், இவ்வர்த்தகப் பிரிவில் பார்வைக்கு வைத்து, நம்மவர்களை அழைத்து விருந்து படைத்து நமது பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை பெறலாம். இதப்பத்தி கவலைப் படவும் ஆள் இல்ல, ரெண்டு அதட்டு அதட்டவும் ஆள்கிடையாது. இது பற்றி அந்தந்த நாடுகளில் உள்ள கொமர்ஷியல் டிவிஷன்களை கேட்டால், அதற்கெல்லாம் எங்களிடம் பணம் கிடையாது என்கின்றனர்.

குறிப்பாக இங்குள்ள கொமர்ஷியல் டிவிஷன்களில் போர்ட் ஒப் இன்வெஸ்ட்மென்ட் (முதலீட்டு சபை) பற்றி எந்த தகவல்களும் இல்லை. அப்புறம் எப்படி தமிழன் சிறிலங்கா போவது, அங்கு போய் முதலிடுவது. இது பற்றி யாராவது மெத்தப்படித்தவர்கள் கொஞ்சம் விபரம் சொல்லலாமே? முடிந்தால் பின்னூட்டத்தில் நம்மட பொறின் மினிஸ்டரை ரெண்டு திட்டு, திட்டி நம் பொருளாதாரம் உயர்ந்து, குடி உயர்ந்து, கோன் உயர ஒரு அன்பு பாலம் கட்டலாமே? கட்டுவார்களா?

கொழும்பு, போர்ட் ஒப் இன்வெஸ்ட்மென்ட் (BOI) அலுவலகத்தில் நிறைய முதலிட்டாளர்களுக்கான துண்டுப்பிரசுரங்களும், கையேடுகளும் குவிந்து கிடக்கின்றது. அனைத்துமே ஆங்கிலத்தில்; அப்பிரசுரங்களில் ஒன்றில் சிறிலங்காவை மூன்றாக பிரித்து, அதாவது ஏ, பி, சி வலயமென பிரித்து கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் ஏ எனவும். இங்கு முதலிட கொஞ்சம் ஹெல்த்தி பிளஸ் வெல்த்தியானவர்கள் முன்வரலாம் எனவும், வடக்கு, கிழக்கு பகுதிகளை சீ வலயமாக பிரித்து, இங்கு பத்தாயிரம் டொலருடன் முதலிடலாம், நிறைய சலுகைகள் வழங்கப்படும் எனவும் பறை சாற்றியிருக்கின்றார்கள். ஆனால் இது பற்றி யாருக்குமே தெரியாது. மகின்த பிரதர்ஸ் இது பற்றி அலட்டிக் கொள்ளவே இல்லை. ஆனால் தினமும் ஏதோ ஒரு பத்திரிகையில் ஒரு தலைப்புச் செய்தி வந்து கொண்டே இருக்கின்றது முதலிட வாருங்கள் என்ற தோரணையில். இந்த பிரசுரங்களை தமிழிலும், சிங்களத்திலும் பிரசுரித்து உலகம் முழுக்க உள்ள எம்மவர்களின் கைகளை அடைய அரசு முயற்சிக்கலாமே? உல்லாசப் பிரயாணிகளை கவர, பல லட்சம் டாலர் கொடுத்து பிபிசியில் விளம்பரம் செய்யும் அமைச்சுக்கு, பிஓஐ யை தூக்கி விட பணம் இல்லையா? அமைச்சு தூங்குகின்றதா? யாராவது விபரம் தெரிந்தவர்கள் அமைச்சுக்கும், நமது தூதுவராலயங்களுக்கும் ஒரு மொட்டைக்கடிதம் போடலாமே?

நியாயம் தொடரும்…..
(பின்னூட்டங்களில் யாரும் என்னை திட்டாமல் இருந்தால் தொடருவேன். மோதிரக்கைகளால் குட்டு படத் தயாராகவே உள்ளேன்….)

கொசுறு.

ஒரு மாதிரியாக ஒரு வெள்ளையனின் காலில் விழுந்து யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இரண்டு கொலேஜ்களை ஆரம்பித்துள்ளார். இது செப்டம்பர் ஒன்று இயங்கத் தொடங்கும். எமது இளைஞர்களை 21ம் நூற்றாண்டுக்கு கொண்டு போகும் ஒரு சிறு முயற்சி இது. யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக தடுமாறுகின்றார்கள். ஆர்வமுள்ளவர்கள், புலம்பெயர் நாடுகளில் இருந்து ஊர் புதினம் பார்க்க செல்பவர்கள் முடிந்தால் ஒரு 10 நாளோ அல்லது 15 நாளோ இங்கு வந்து கற்பிக்கலாம். எமது இளைஞர்களுக்கு உலக நாகரிகம் சொல்லித்தரலாம். சம்பளம் தேவைப்பட்டால் வழங்கப்படும். இருக்க இடம், உணவும் வழங்கப்படும்.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள சில உயர் பாடசாலைகள், தமது மாணவர்களை 20 அல்லது 25 நாட்களுக்கு, மூன்றாம் உலக நாடுகளுக்கு கற்பிப்பதற்காகவும், அவர்களது உளப்பாங்கை விருத்தி செய்வதற்காகவும் வருடா வருடம் அனுப்பிக் கொண்டிருக்கின்றன. அப்படி உங்கள் குழந்தைகள் படிக்கும் பாடசாலை அதிபர்களை தொடர்பு கொண்டு, நமது மண்ணுக்கு அவர்களை அனுப்ப முயற்சிக்கலாமே. அப்படி நீங்கள் செய்வதால் நாம் எல்லோரும் செய்த பாவங்களுக்கு ஒரு துளியளவாவது விமோசனம் பெறலாம் அல்லவா. வட் டூ யூ திங்?

17 – 08 – 2010

உங்கள் கருத்து
 1. DEMOCRACY on August 17, 2010 2:29 pm

  /பிஓஐ யை தூக்கி விட பணம் இல்லையா? அமைச்சு தூங்குகின்றதா? யாராவது விபரம் தெரிந்தவர்கள் அமைச்சுக்கும், நமது தூதுவராலயங்களுக்கும் ஒரு மொட்டைக்கடிதம் போடலாமே?/– சாஹாபுதீன் நாநா.
  இந்த “பெட்டிசம்” போடும் கலாச்சாரம், சட்டத்தரணிகள்?, நீதிமன்ற கிளார்க்குகளில் ஆரம்பித்து தற்போது, “கேனிபாலிஸம்” என்று என்னால் கூறப்படும் விஷயத்தில் வந்து நிற்கிறது!.

  இலங்கைத் தமிழரிடம் “இவருடன் செல்லும் மற்றவர்களுக்கும் அன்றே கடன் வழங்கப்படும். ஒருவர் பணம் கட்டா விட்டால் மற்ற 4 பேரும் சேர்ந்து அப்பணத்தை கட்ட வேண்டும். இதனால் தில்லு முல்லு குறைவு. தில்லு முல்லே கிடையாது. இரண்டு மாதம் தொடர்ந்து பணம் கட்டினால் அடுத்த தினமே தனியாக, தைரியமாக அவர்களிடம் சென்று ஐந்து லட்ச ரூபா வரை கடன் பெறலாம்.”-//
  இது போன்ற சமுதாய சிந்தனைகள் “சைபர்”. நீங்கள் தீவிரமான “இலங்கை தேசிய வாதியாக”, “மகின்த பிறதர்ஸ் எங்கேயாவது ஆப்படித்து நம்மை முன்னேற்றுவார்கள் என அரசியல்வாதிகளும் தினமும் ஏதோ ஒரு இலவு காத்த கிளி கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். சரி நம்புவோம், நம்புவோம், நம்பிக்கைதானே வாழ்க்கை. “இதனடைப்படையில் உள்ளீர்கள்!. நான் தீவிரமான “இந்திய தேசியவாதி”!. இருந்தாலும் சில வரலாற்றை பார்ப்போம்.

  ராவுப் ஹக்கீம் போலல்லாது?, மட்டகளப்பு “தமிழ் முஸ்லீம்கள்”, தமிழ்நாட்டைவிட, தமிழர்கள் என்று மார்தட்டி கூறிட தகுதி உள்ளவர்கள் என்ற கூற்று உள்ளது? (சிங்களவர்களும் இந்த எல்லைக்குள் அடங்குவர் என்பது தற்போதைய சூழலில் பேசுவது அறிவீனம், அதை விடுவோம்). இருந்தாலும், இலங்கை “தமிழ்முஸ்லீம்கள்” “கேனிபாலிஸத்திற்கு” ஆதரவாக சென்னையிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தில் செயல்படுகிறார்கள் என்று பின்னூட்டம் விட்டிருந்தேன்!. அவர்கள் யார்? நீங்கள் சென்னையின் “செல்போன்” இணைப்புகளின் எண்ணை (வியாபாரிகள்) சுழற்றினால், “இந்திய தேசபக்தி பாடலாக”, “..பாரத தேசம் என்று தோள் தட்டுவோம்..” என்பது போன்ற படல்கள் வரும் இவர்கள்தான் “அட எல்லோருமே திரிந்திவிட்டார்கள் போல தெரிகின்றது. ஏரோப்பிளேன் வாங்க, ரொக்கட் லோன்ஜர்கள் வாங்க, எறிகணைகள் வாங்க, வெடிமருந்துகள் வாங்க, அழிவாயுதங்கள் வாங்க என பணத்தை கத்தை கத்தையாக சேர்த்தவர்களும்; அந்த நாலுகால் மிருகத்துக்கும், அதற்கு துணை போகின்றவர்களுக்கும் எப்படி ஆப்பு வைக்கலாம் என மூளைகளை கசக்கியவர்களும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு; இப்போ புதுசாக வடக்கின் அபிவிருத்தி, வடகிழக்கின் புனர்நிர்மாணம் என பேசத்தொடங்கியுள்ளார்கள்.”– இவர்கள்!.

  முஸ்லீம்கள் வியாபாரம் செய்யுங்கள், இலங்கை தேசபக்தியுடன் வாழுங்கள், ஆனால் “தமிழ்” என்று முட்டாள்தனமாக தமிழ்நாட்டில் வாழும்?, ஒரு சில “ஈரப்பதம்” உள்ள நடுத்தரவர்க மக்களை, இந்த “புதைக்குழிக்குள்” இழுக்காதீர்கள்”. உங்கள் திறமைகளை, லக்ஷ்மி மிட்டல், டாட்டா(ஸ்வீடன்), அம்பானி பிரதர்ஸ், போன்றோர்களிடம் காண்பியுங்கள்!.–ஜெய்ஹிந்த், வந்தேமாதரம்!.


 2. Naadoode on August 17, 2010 2:43 pm

  ஏற்கனவே மசூர்நானா தேனீயில் இப்பிடி ஒரு சுயமுன்னேற்றக் கட்டுரையை எழுதினவர். இப்ப இவர் தொடங்கியிருக்கிறார். இந்த சுயமுன்னேற்றம் எல்லாத்தையும் ஏற்கனவே தமிழ்நாட்டுச் சஞ்சிகையிலை உதயமூர்த்தி தொடங்கி பல்வேறு ஆட்களும் எழுதிப் பார்த்தாச்சு.

  இவையளுக்கு இருக்கிற குழப்பம் போல – மகிந்த பிறத்ர்ஸ் நல்லது செய்யுறாரா கவிழ்த்துவிடப் போகிறாரா என்பது போன்ற- எங்களுக்கு இல்லை. சனங்களுக்கும் இல்லை.

  சண்டை முடிஞ்சா உடன வடக்கிலை என்ன அபிவிருத்தி செய்யலாம் என்று கூட்டம் போட்டு ஆராய்ந்து ஹொட்டல் கட்டலாம் என்று ஏற்கனவே முடிவெடுத்து போன ஆக்கள் இருக்கினம். அபிவிருத்தி எண்டு இவை என்னத்தை நினைக்கினம் என்பது தெளிவாத் தெரியுது. போராலை விழுந்து போய்க்கிடக்கிற சனத்தை ஏறி மிதிக்கிறது தான் எண்டு சுருக்கமாய்ச் சொல்லலாமோ தெரியவில்லை.

  உதாரணமா ஹொட்டல் கட்டினா துன்பப்படுகிற சனங்களுக்கு எப்பிடி உதவும் என அவை விளக்குவினமோ தெரியவில்லை.
  எனக்குத் தெரிந்த வரைக்கும் தென்பகுதியிலிருந்து நீர்கொழும்பு வரை ஹொட்டல் வியாபாரத்தால் முதலாளிமார் பணப் பெட்டியை நிரப்பிச்சினம். அந்தக் கடற்கரையோரச் சனங்களின் பிள்ளையள் எயிட்சிலை இருந்து எல்லா பால்வினை நோயாலையும் தங்கடை உடம்பை நிறைச்சுக் கொண்டு “வாழ்ந்து’ கொண்டிருக்கினம்.

  மகிந்த சிந்தனையின்ரை விளைவால் இந்தக் கடற்கரையோரத் தாய் தகப்பன்மார் தங்கட இளங்குருத்துக்களை உல்லாசப் பயணிகளின் வக்கிரத்துக்கு வடிகாலா அனுப்பிப்போட்டு அவர்கள் கொண்டு வாற சில தாள்களுக்காகக் காத்துக்கிடக்கினம். இதெல்லாம் இந்தப் புலம்பெயர் சனநாயகவாதிகளுக்கு எங்கே விளங்கப் போகுது.

  இந்த மாதிரி சுயமுன்னேற்றக் கட்டுரைகளுக்கு ஒரு உதாரணம் தருகிறேன் நேரமிருந்தா படியுங்கோ: hவவி://றறற.எயைெஎர.உழஅ/2010/08/10/வநய-ளாழி/ ஏற்கனவே படித்திருந்தால் சிந்தியுங்கோ.


 3. Jeyabalan T on August 17, 2010 5:54 pm

  இங்கு சஹாப் நாநா சொல்கின்ற விடயத்திற்கும் நாடோடி கொடுக்கிற விளக்கத்திற்கும் ஏதும் சம்பந்தம் இருக்கிறதாக எனக்குத் தெரியவில்லை. சஹாப் நானா ஹொட்டல் கட்டச் சொல்லி யாரையும் கேட்டதாகச் சொல்லவில்லை. அபிவிருத்தி என்றால் ஹொட்டல் கட்டுவது விபச்சாரவிடுதிகளை உருவாக்குவது என்பது நாடோடியின் விளக்கமாக உள்ளது. ஆனால் சஹாப் நாநா சிறு கடன்களை வழங்கி மக்களை தம் சொந்த உழைப்பில் வாழ உதவலாம் என்கிறார். அதனைத்தான் தனக்குத் தெரிந்த நியாயம் என்கிறார்.

  கட்டுரையின் இறுதியில் திருகோணமலையில் இரண்டு கொலேஜ் கட்டப்பட்டு உள்ளது என்றும் சொல்லி இருக்கிறார். இரண்டு ஹொட்டலோ விபச்சார விடுதியோ கட்டப்பட்டதாக அவர் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன் சஹாப் நாநா இவை பற்றி ஒரு விளக்கக் குறிப்புத் தந்தால் நல்லது என நினைக்கிறேன்.

  நண்பர் டெமொகிரசியும் இந்த அபிவிருத்தி விடயமாக விபரமாக எழுதினால் கருத்துப் பரிமாற வசதியாக அமையும்.
  இது தொடர்பாக எனக்குள்ள கேள்ளவிகள்:
  1. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதற்குக் காரணமான அரசாங்கத்தை மட்டுமே நம்பித்தான் தங்கள் எதிர்காலத்தை நகர்த்த வேண்டுமா?

  2. பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களுடைய குடும்பங்கள் சீரழிவதை மட்டும் வைத்துத்தான் போராட்டமோ புரட்சியோ செய்ய முடியுமா?

  3. போரினால் அனாதரவான பிள்ளைகளைப் பராமரிப்பதும், போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு உதவுவது போன்ற விடயங்களை செய்யாது விட்டால், பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை யாராலும் வென்றுகொடுக்க முடியுமா?

  4. 20 வருடங்களுக்கு முன் புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லீம்கள் இன்றும் மிக மோசமான வாழ்நிலையில் உள்ளனர். இவர்களை அரசும் ஏறெடுத்து நோக்கவில்லை. அரசை எதிர்க்கின்றவர்களும் அவர்களை ஏறெடுத்து நோக்கவில்லை. இன்று போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இன்னமும் 20 வருடங்களுக்கும் அதற்கு மேலும் சீரழிவில் வைத்திருப்பதால் யார் நன்மை அடைவார்கள்?

  5. தங்களால் புரட்சியானதாகவோ புரட்சிக்கு சற்றுக் குறைந்ததாகவோ அல்லது புரட்சிகரமற்றதாகவோ இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதுபவர்கள் அம்மாற்றத்திற்கு எத்தகைய விலையைக் கொடுக்கலாம் அதாவது எத்தனை ஆயிரம் உயிர்களைப் பலியிடலாம், எவ்வளவு அவலத்தை ஏற்றுக் கொள்ளலாம் என மதிப்பிடுகிறார்கள்.

  6. இந்த சில்லறை அபிவிருத்திகள் மலரப் போகும் மாற்றத்துக்கு தடையாக உள்ளதாகச் சொல்பவர்கள் இவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்த முனைபவர்கள் மற்றவர்களை வென்றெடுக்க முன் தங்களை இவற்றுக்கு முழுமையாக தங்களை அர்ப்பணிக்கத் தயாராக உள்ளனரா?

  கேள்விகள் இன்னும் உண்டு…..

  த ஜெயபாலன்


 4. Naadoode on August 17, 2010 9:40 pm

  அபிவிருத்தி என்பது ஹொட்டல் கட்டுவது என்று நான் சொல்லவில்லை. சொன்ன தங்கள் நண்பரைத் தான் கேட்க வேண்டும். இன சமத்துவமில்லாமல் அபிவிருத்தி காணலாம் என்று எந்த அரசியல் சித்தாந்தம் சொல்கிறதென்று எனக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் தான் விளக்க வேண்டும்.

  மற்றது அறிவிக்கப்பட்ட சிவப்பு விளக்குப் பகுதிகளில் தான் உலகில் விபச்சாரம் என்பவர்களைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. மீளவும் முடிந்தால் ஒருமுறை இலங்கையின் கரையோரப் பகுதிகள் குறித்து வந்த ஆய்வுகளை தேடிப் படித்துப் பார்த்தால் உல்லாசப் பயணத்துறை ஹோட்டல் துறை என்பவற்றுக்குள்ள தொடர்பு கொஞ்சமாவது புரியும்.

  வெள்ளைக்காரர்களின் காலைப்பிடித்து பள்ளிக்கூடம் திறந்ததை பெருமைப்படும் விசயமில்லை. ஏற்கெனவே மூடிக்கிடக்கிற பள்ளிக்கூடங்களைத் திறக்க அனுமதியும் மகிந்தவின் மகன்மார் ஊதாரித்தனமா சிலவழிக்கிற அரசாங்கப் பணத்திலை ஒரு பகுதியையும் ஒதுக்கினால் போதும் பள்ளிக்கூடங்கள் தானாக இயங்கும்.

  மட்டக்களப்பில் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கேட்டு போராட்டம் நடாத்தினார்கள். இப்ப அவர்களை வேலை குடுக்கக் கூப்பிடுறதுக்குப் பதிலா இப்ப விசாரிக்க நீதிமன்றத்திற்கல்லவா கூப்பிடுகினம்.

  ஆட்சியிலுள்ளவர்களும் அதிகாரத்திலுள்ளவர்களும் (இதில் சிங்களம் தமிழ் முஸ்லிம் என்றில்லை) சுரண்டிக்கொள்ளவும் சுருட்டிக் கொள்ளவும் விட்டிட்டு> அதைத் தட்டிக் கேட்டாப்பயங்கரவாதி எண்டு பட்டமும் குடுத்துட்டு – அதுக்குவேறை இங்கை இருக்கிற இணையங்கள் சிலது வக்காலத்து வாங்கும். எங்களை மட்டும் வயித்தைக் கட்டிக் கொள்ளச் சொல்றதை எப்பிடி விளங்கிக் கொள்ளுறதெண்டு தெரியேல்லை. புலியளும் முந்நி உதைத் தான் சொன்னவை.

  எல்லாப் பிரச்சினைக்கும் புலி புலி எண்டு புலி ஒழிஞ்சு ஒரு வருசத்துக்கும் மேலாச்சு. இப்ப என்ன கிளியே பிடிக்கிறியள்.

  சும்மா ஒரு உதாரணத்துக்கு: போன ஞாயிற்றுக்கிழமை வீரகேசரியிலை ஒரு கட்டுரை வந்திருந்தது. முடிஞ்சால் வாசியுங்கோ. கிழக்கிலை எவ்வளவு நிலத்தை அரசாங்கம் அபகரிச்சு சிங்களக்குடியேற்றங்களைத் தொடங்கி இருக்கென்று.

  கிழக்கைப் பாதுகாக்க முதலமைச்சரானவர் எங்கை போனார் எண்டு தெரியேல்லை. அதைப் போல அமைச்சரானவரும் எங்கை போனார் எண்டு தெரியேல்லை. இரண்டு பேரும் மகிந்தவில் தொங்குறதா கொழும்பிலை ஒரு பத்திரிகை காட்டுன் போட்டுது. உவங்கள் நக்கலடிக்கிறாங்கள் என்று நினைச்சன். தொங்குறது அவை மட்டுமில்லை இன்னும் கனபேர் எண்டது இப்ப விளங்குது. கிழக்கைப் பாதுகாக்க ஆலோசனை கொடுக்க பிரான்ஸிலிருந்து போனவரும்தான் தொங்கிறாரோ தெரியேல்லை.

  //அது பெரிய தல. பெரிய கை. அவர்கள் இந்தியாவுக்கு அசைந்து கொடுத்து, சைனாவுக்கு வளைந்து கொடுத்து, ஜீஎஸ்பி என்ற பெரும் பூதத்துக்கு விட்டுக்கொடுத்து, நம்ம வீட்டுக்கு வந்து விருந்து படைக்க நாளெடுக்கும் அல்லது காலம் கடக்கும். //

  மகிந்தவை இந்தியாவுக்கு அசைந்து கொடுத்து சைனாவுக்கு வளைந்து கொடுக்கச் சொல்லி மக்கள் யாரும் சொல்லவில்லையே? மகிந்தவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் பெரும் பூதமாகலாம். அது எப்படி சஹாப்தீன் நாநாவுக்கும் பெரும் பூதமானது?

  ஐநாவை அடியொற்றிய மனித உரிமைகளை கடைப்பிடியுங்கள் ஜிஎஸ்பி பிளஸ் ஐத் தருகிறோம் என்று சொல்வது சஹாப்தீன் நாநாவுக்கு பூதமாகத் தெரிகிறது. ஆனால் அடிப்படை உரிமைகள் எதுவும் அற்று வாழும் மக்களுக்கு அந்த உரிமைகள் ஒரு சிறிய நிம்மதிக்கீற்று.

  ஜெயபாலன் உங்களுடைய ஊடக சுதந்திரமும் அந்த அடிப்படைச் சுதந்திரங்களிலொன்று. இப்பவாவது புரிகிறதா?


 5. BC on August 17, 2010 10:11 pm

  சஹாப்தீன் நாநா, உங்கள் அடுத்த கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.

  ஹொட்டல் கட்டுவது அபிவிருத்தி இல்லை தான். ஆனாலும் தேவையிருக்கிறது. எனக்கு தெரிந்தே சிலர் யாழ்ப்பாணம் உடனே குடும்பமாக போக விரும்பியும் ஹொட்டல் வசதியில்லாததால் போவதை பின்போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சிலர் ஹொட்டல் கட்டுவது என்ற உடனேயே பால்வினை நோய் வந்துவிடும் என்று பயங்காட்டுகிறார்கள். வெளிநாடுகளில் பல தமிழர்கள், பெண்கள் உட்பட ஹொட்டலில் வேலை செய்கிறார்கள்.


 6. Thalaphathy on August 17, 2010 11:44 pm

  நீங்கள் சொல்லவாறது எல்லாம், புலம்பெயர்ந்த எங்கட ஆட்களுக்கு உற்சாகம் ஊட்டுவதுதென்பது உண்மைதான். அத்தோடு, வடக்கு அல்லது கிழக்கில் முதலிட்டு, அந்த முதலீட்டில் உள்ளூர் சமூகத்தின்ற வளர்ச்சிக்கு உதவ எல்லோருக்கும் விருப்பம்தான், ஆனால் சட்டதிட்டங்கள், நிர்வாக ஒழுங்குகளை சரியாக நடைமுறைப்படுத்த, உள்ளூர் அரச நிர்வாகமோ அல்லது அங்குள்ள சமூகமோ முன்வராத பட்சத்தில், அங்க வாற முதலீட்டாளன், என்ன அந்த ஊர் ஐயனாரையும், வைரவரையும் வைத்தா தனக்கும் தன் முதலுக்கும் பாதுகாப்பு தேடுவான். முஸ்லீம்கள் என்றால், ஒரு சின்ன முனகல் விட்டாலே போதும், எல்லோரும் ஒன்றாகக்கூடி வந்து பாதுகாப்பு கொடுப்பியள், ஆனால் தம்மை தமிழர் என்று சொல்லிக்கொண்டு, கத்தியும் பொல்லுமாய் திரிகின்ற எங்கட ஆக்கள் அப்பிடியோ? வெளிநாட்டில இருந்து அங்க எவனாவது வாறானெண்டு கேள்விப்பட்டாலே போதும், ஆளைத்தூக்கிறத்திற்கல்லோ அங்கேயிருக்கிற சோம்பேறித் தறுதளையள் திட்டம் போடுகிறார்கள்!


 7. DEMOCRACY on August 18, 2010 1:13 am

  /ஐநாவை அடியொற்றிய மனித உரிமைகளை கடைப்பிடியுங்கள் ஜிஎஸ்பி பிளஸ் ஐத் தருகிறோம் என்று சொல்வது சஹாப்தீன் நாநாவுக்கு பூதமாகத் தெரிகிறது./-நாடோடி.
  /ஹொட்டல் கட்டுவது அபிவிருத்தி இல்லை தான். ஆனாலும் தேவையிருக்கிறது./–பி.சி.
  /The Tamil apartheid policy of “Exclusive homelands” for Tamils, which have been ethnically cleansed of Muslims and Sinhalese, is misunderstood and mis-represented in the west, just as the “Ilankai Thamil Arasu Kadchi” mis-represented in the 1950s-1970s, its Sovereignty program as “Federalism” in its English publications [It correctly presented its sovereignist program in its Tamil publications. It acted to polarize the two main ethnic comunities, and rejected any alliances with political parties (e.g., the LSSP) which looked for ethnic rapproachment]. The western nations mistakenly take the Tamil-fedaralist bid at its face value. /–A to Z list!.

  இலங்கை அபிவிருத்தி என்ற பெயரில்தான் பல வியாபாரிகள் தமிழ்நாட்டில் (இந்தியா)முகாமிட்டுள்ளனர்!. இவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்பு உண்டு. இதை நீ ஏன் எதிர்க்கிறாய் எனலாம்?. “இனம்” என்பது மேற்கத்திய ஆராய்ச்சிச் சொல், ஐ.நா. சட்டத்தில் சிறுபான்மையினர்(முஸ்லீம், கிருஸ்தவருக்கு) மற்றும் மனித உரிமை சட்ட பிரிவுகளில் இடம் பெற்றுள்ளது. “தமிழ் இனம்” என்பது இவ்வாறாக தந்தை செல்வா(யாருக்கு தந்தை?, கத்தோலிக்க?) போன்ற இலங்கைத்தமிழ் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் காலங்காலமாக யு.என்.பி. யை ஆதரிப்பது ஏன்?. தற்போது இலங்கை அபிவிருத்தி என்ற பெயரில், தமிழநாட்டுக்குள் (இந்தியா) அமர்ந்துக்கொண்டு, “இந்திரா காங்கிரஸ்தான்” தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் (புலி எதிர்ப்பு?)என்பது ஏன்?. தமிழ்நாட்டில்தான் தமிழர்கள் அதிகம், இலங்கையில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் உள்ள பிரச்சனையை “தமிழினப்பிரச்சனையாக” முவைத்தால், மேற்குலகம் புரிந்துக் கொள்ளகூடிய முறையில் அது ஒரு நிரந்தர பிரச்சனையாக இருக்க வேண்டும். இதில் அபிவிருத்தி வியாபாரிகள் யு.என்.பி.யை ஏன் ஆதரிக்கிறார்கள், இந்திரா காங்கிரஸை ஏன் அதரிக்கிறர்கள் என்பது (ஆராய்க) மேற்குலக வெள்ளைக்காரர்களில் சிறந்த அரசியல் விஞ்ஞானிகளும் தலையை பிய்த்துக் கொள்ளும் விஷயம்.

  இந்திய நிர்வாக கட்டமைப்பு என்பது தானாக உருவானது, அதை ஒருங்கிணைத்தது பிரிட்டிஷ். இந்திரா காங்கிரஸ் அதில் ஏறி அமர்ந்துள்ளது, நிவாகத்தின் போக்கை தீர்மானிக்கும் சக்தி அதற்கும் இல்லை. தொல்லை இல்லாமல் இருப்பது என்பது, பல பிரச்சனைகளை தீர்க்காமல் முற்றவிடுவது என்பது ஆகும்

  தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்ற வகையில், இந்தியாவின் பிரச்சனைகளை தீர்க்கும் அளவுக்கு யாருக்கும் “பெரிய” மூளை இல்லை!. பிரச்சனைகள் முற்றினால், இந்தியா மதயானை. அது மத்திய பிரதேசத்தில் மிதிக்கட்டும், ஹிமாச்சல பிரதேசத்தில் மிதிக்கட்டும், அருணாசல பிரதேசத்தில் மிதிக்கட்டும், ஆனால், “ஜுஜூபி” இலங்கைத் தமிழர்கள் செய்யும் பெருச்சாலி வேலைகளால், “இயல்பாக” தமிழினத்தை மிதிக்க வழிகோலியது முள்ளியவாய்க்காலில் யார்?.

  திரு.ஜெயபாலன், சாதாரண மக்களுக்கு அபிவிருத்தி என்பது, ஒரு அடிப்படை கட்டமைப்பேனும் இல்லாமல் செயல்படமுடியாது. இதற்கு இலங்கை – இந்திய அரசாங்கங்களின் உதவி நிச்சயம் தேவை!. “நாடுகடந்த” ஒரு கற்பனை உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டு, அதற்கு இணைவாக, இந்திய – இலங்கை அரசியல்வாதிகளை பயன்படுத்தலாம் என்ற அதிபுத்திசாலிதனமான ஐடியாக்களுக்கு ஆதரவு வருவதுபோல், என்பது ஒரு “வஞ்சகப் புகழ்ச்சி அணி”!. மேற்குககிற்கே புரியாது என்கிற போது, மதயானைக்கு புரியாது. வியாபாரங்கள் சரிவரவில்லை என்றால் அதை அரசியல்(தமிழின)பிரச்சனையாக்கி, அணி மாறுதல் என்பது ஐ.நா. சாசனத்தின் கீழ் கொண்டுவர இயலாது. இதற்கு சில நடுத்தர அபாவிகளை உசுப்பேத்தி (தமிழின உணர்வு) உலாவிடுவது யானை மிதிப்பிற்கே வழிகோலும்!.


 8. nantha on August 18, 2010 3:43 am

  நம்ம தமிழர்கள் (முஸ்லிம்கள் உட்பட) வெளிநாடுகளில் ஹோலிடய்க்கு ஹவாய், கியூபா என்று ஆயிரக்கணக்கில் செலவழித்து போய்க் கொண்டிருக்கிறார்கள். புலிகளின் ஈழப் பொருளாதார விருத்திப் பகுதிக்கு என்ன நடந்தது. ?

  வடக்கு கிழக்கில் முதலிடுவது லாபம் கிடைக்க வழியில்லாத முயற்சி என்று எண்ணுகிறார்களா?

  1965 இல் பதவிக்கு வந்த யு என் பி – தமிழ் தேசிய அரசுதான் முதலில் இந்த டூரிஸ்ட் “வியாபரத்தை” ஆரம்பித்தது. அதன் பலன் இன்று பாலியல் “தொழில்” அபிவிருத்திதான் என்பதே ஒழிய வேறு எதையும் காணவில்லை. அந்த ஹோட்டல்களின் உடமையாளர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். “சீரழிவு” நிறுத்தப்பட முடியாத வியாதியாகியுள்ளது.

  சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரம் உயராத பட்சத்தில் இந்த டூரிஸ்ட் வியாபாரம் சீரழிவுகளையே ஊக்குவிக்கும். மனித சக்தியை உபயோகித்து இருக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஆயிரம் வழிகள் உள்ளன. ஆயினும் அவற்றையெல்லாம் அரசு செய்யவேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருப்பதை விட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் விவசாய, மீன் பிடித் துறைகளில் முதலீடு செய்வதற்கு முயற்சிப்பது மக்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல பலனைக் கொடுக்கும்.


 9. Naadoode on August 18, 2010 7:14 am

  //வெளிநாடுகளில் பல தமிழர்கள் பெண்கள் உட்பட ஹொட்டலில் வேலை செய்கிறார்கள்.//BC
  இங்கு குறைந்த பட்ச சட்டப்பாதுகாப்பு என்றாலும் உண்டு.அங்கு? மகிந்தவின்ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்ததற்கு ஏராளம் உதாரணங்களை சாதாரண பத்திரிகை வாசகர்களே பட்டியல் போடுவார்கள்.

  இறுதி உதாரணம்: //அமைச்சர் ஒருவர் லஞ்சம் பெற்றுக்கொள்ள மேற்கொண்ட முயற்சி பாராளுமன்றில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

  அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர் ஒருவர் ஜப்பான் தொண்டு நிறுவனமொன்றிடம் லஞ்சம் கோரியதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயததாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

  காட்டு யானைகளினால் ஆபத்துக்களை எதிர்நோக்கும் மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் நோக்கில் திட்டமொன்றை ஆரம்பித்த ஜப்பான் தொண்டு நிறுவனமொன்றிடம் குறித்த அமைச்சர் லஞ்சம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காட்டு யானைகளினால் ஆபத்துக்களை எதிர்நோக்கும் கிராம மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்காக 850 மில்லியன் ரூபாவினை குறித்த நிறுவனம் ஒதுக்கியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  இந்தப் பணத்தில் எவ்வளவு தரகுப் பணம் தமக்குக் கிடைக்கும் என குறித்த அமைச்சர், ஜப்பான் தொண்டு நிறுவனத்திடம் வினவியுள்ளார்.

  இந்தத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் குறித்த ஜப்பானிய தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் இலங்கை விஜயம் செய்திருந்த போது, அமைச்சர் லஞ்சம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தினால் அதிருப்தி அடைந்த குறித்த ஜப்பான் தொண்டு நிறுவனம் ஒதுக்கப்பட்ட நிதியை தாய்லாந்து மக்களுக்கு செலவழிப்பதென தீர்மானித்ததாக விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

  இவ்வாறான விடயங்களை அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேசத் துரோக முத்திரை குத்தப்படுவதாக அவர் அவர் தெரிவித்துள்ளார்.//

  நன்றி: globaltamilnews


 10. sahabdeen nana on August 18, 2010 7:55 am

  பயங்கரமாகத்தான் திட்டப் போகின்றார்கள் என்று பார்த்தால் அனைத்துமே மோதிர விரல்கள். நன்றி. நன்றி, ரொம்ப நன்றி. ஆனானாப்பட்ட அமெரிக்காவே இன்னும் ஹரிக்கேன் சூறாவழிக்கு உணவு, உடை, உடுக்கை இழந்த மக்களுக்கு உதவி செய்து முடியல. முந்தா நாள் போரை முடித்து, நேற்றிரவு ஆட்சிக்கு வந்த மகின்த பிரதர்ஸ் என்ன கொம்பர்களா? முட்டி மோதி நமக்கு வீடு கட்டித்தரவும். வீட்டுக்கு வீடு தேடி வந்து பசிஆற்றவும். நோ வே பிறதர்ஸ். நோ வே. பட் எம்மால் முடியும் பிறதர்ஸ், எம்மால் முடியும். தனித்தனியாக, ஒவ்வொரு உள்ளங்களுக்கும் நேரடியாக உதவ நம்மால் முடியும். முடியா விட்டால் ஆலோசனையாவது செய்ய முடியும் பிறதர்ஸ். என்பதைத்தான் எனக்குத் தெரிந்த நியாயமாக எழுதினேன்.

  டெமாக்கிரசி சொல்வது போல் நம்மவனுக்கு லஷ்மி மிட்டால், டாட்டா, அம்பானி இப்போது சன் குழுமம் பற்றி யெல்லாம் விளங்கப்படுத்த காலம் போதாது. நான் சொல்வது, இந்தியாவில், மெட்ராஸில், மண்ணடியில், செம்புதாஸ் வீதி, அங்கப்பபன் நாயக்கன் வீதி, போஸ்ட் ஆபீஸ் வீதி போன்றவற்றில் இரவு ஏழு மணிக்கு பின்னாடி வந்து, பழைய அட்டை பெட்டியை விரித்து குடும்பம் குடும்பமாக வீதிகளில் தூங்கிக் கொண்டிருக்கின்றார்களே, அந்த பாமரனுக்கு போய் கைத்தொழிலை கற்றுக் கொடுங்கோவன் புண்ணியமாவது கிடைக்கும் என சொன்னேன்.

  நாடோடி ரொம்ப பொல்லாதவர் போல தெரிகின்றது. மெட்ராஸ், எக்மோரில் உன்னால் முடியும் தம்பி எனக் கூறிக்கொண்டு டாக்டர் உதயமூர்த்தி அமெரிக்காவில் படா டோபமாக வாழ்ந்து கொண்டு எழுதிய புத்தகத்தை காப்பி அடித்திருபாரோ என ஆதங்கப்பட்டுள்ளார். உதயமூர்த்தி கூறும் கோஸ்ரிக்சோடாவுக்கும், பொட்டாசியம் பர மங்கனேற்றுக்கும் நம்மவன் எங்கு போவான். நாம் சொல்வது, நம்மிடம் உள்ள வேப்பிலையையும், நெல் உமியையும், அடித்து பிசைந்து பற்பொடி தயாரி, சேற்றையும், சகதியையும் பிசைந்து சட்டி பானை செய், உலர்ந்த தேங்காய் மட்டையை வகுந்து கயிறு, மெத்தைகள் தயாரிக்கலாமே இதற்குப் போய் எதற்கு மகின்த பிரதர்ஸை வம்பிக்கிழுக்க வேண்டும்.

  ஹோட்டேல் கட்டுங்கோ என நான் சொல்லவில்லை. எம்மைச் சார்ந்தவர்கள் யாழ்ப்பாணம் ஸ்டான்லி ரோட்டிலும், திருகோணமலையிலும் கல்லூரிகள் ஆரம்ம்பிக்க (செப்டம்பர் 1) உள்ளார்கள், முடிந்தால் உதவுங்களேன் என சொல்லியிருந்தேன்.

  அரசியல்வாதிகள் ஆயிரம் சொல்வார்கள், ஐநூறு விடயங்கள் பத்திரிகைகளில் கட்டம் கட்டி வரும், நூறு விடயத்தை பற்றி பாரளுமன்றத்தில் பேசுவார்கள், இருபத்தைந்து விடயத்துக்குத்தான் நிதி போதுமாக இருக்கின்றது என மத்திய வங்கி ஆளுநர் கதை சொல்லுவார். அதில் இருபத்திரண்டே முக்கால் விடயம் மந்திரிமார்களின் மச்சான், மதினிகளின் பெயரில் தொடங்கப்படும் (சரத்பொன்சேகா மன்னிப்பாராக. நம்மவனை அழிக்க வாங்கிய ஆயுதங்களில் 90 வீதம் இவரது மச்சானின் பெயரில் அல்லவா வாங்கப்பட்டது), மீதி ரெண்டே கால் திட்டங்கள், நம்ம முஸ்லிம்களுக்கும், கொழும்பு தமிழ் சகோதரர்களுக்கும் போய்ச் சேரும்.

  அதற்கப்புறம், வரப்பு வெட்டி, வாய்க்கால் துப்பரவு செய்து, முளை நெல் கொண்டுவந்து விசிறி, உரமிட்டு, பயளையிட்டு, தண்ணி பாய்ச்சி, களை பிடுங்கி, மிருகங்கள் பறவைகளிடமிருந்து காப்பாற்றி……இப்பவே மூச்சு முட்டுதே….வெறி சாறி. அரசிடமிருந்து இப்படியெல்லாம் வருவதற்கு முதல். பசித்த வாய்களுக்கு கொஞ்சம் அவசரமாக நாமாவது கொஞ்சம் தண்ணி ஊற்றுவோமே அண்ணாக்களே என்று சொல்ல வந்தேன்.

  பிரான்சில், லாச்சப்பிள் பகுதியில் நம்மவர்களுக்கும், பாக்கிஸ்தானிகளுக்கும் தினமும் வாள்வீச்சே நடக்கும். அதனால் என்ன நம்மவர்கள் எல்லோரும் லாச்சப்பிள் பகுதியை விட்டு ஓடியா போய் விட்டார்கள். திரும்பத் திரும்ப அந்த லாஜ்சப்பிள் பகுதியில் தானே குடியேறுகின்றார்கள். நான் இங்கு பாலியல் நோயை பற்றி சொல்ல வந்தேன். நீ திருந்து, அப்புறம் உன் அடுத்த வீட்டை திருத்து, அப்புறம் ஊர் திருந்தும், நாடு திருந்தும். இல்ல முதல் நாட்டை திருத்துவோம். அப்புறம் என்ர வீட்டை திருத்துவோம் என்றால்; நோ வே. மகின்த ராஜபக்ஷ அல்ல. மகின்த (மைத்திரி) புத்தர் வந்தாலும் முடியாது.

  எவ்வளவு அற்புதமான பின்னூட்டங்கள். எவ்வளவு பரந்த உலக அறிவு. மை கோட். இது போதுமய்யா. நம்மவன் எழும்பி நடக்க. ஒரு குடும்பத்துக்கு, ஒரே ஒரு குடும்பத்துக்கு ஒரு பத்து டாலருக்கு நேரடியாக பணம் அனுப்பி பாருங்கள். அல்லது அவன் ஒரு குட்டி தொழிலை சுயம்புவாக செய்ய உதவிப்பாருங்கள். அன்று இரவு நீங்கள் நிம்மதியாக தூங்கலாம். பணமே அனுப்ப வேண்டாம் உங்கள் திறமைகளை, அனுபவங்களை, சுயமாக அவன் முன்னேறும் வழிகளை, எம்மவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கல்லுரிகளில் வந்து சொல்லிக் கொடுங்கள் என்றுதான் சொல்ல வந்தேன்.


 11. Naadoode on August 18, 2010 10:20 am

  //நாடோடி ரொம்ப பொல்லாதவர் போல தெரிகின்றது. மெட்ராஸ் எக்மோரில் உன்னால் முடியும் தம்பி எனக் கூறிக்கொண்டு டாக்டர் உதயமூர்த்தி அமெரிக்காவில் படா டோபமாக வாழ்ந்து கொண்டு எழுதிய புத்தகத்தை காப்பி அடித்திருபாரோ என ஆதங்கப்பட்டுள்ளார். உதயமூர்த்தி கூறும் கோஸ்ரிக்சோடாவுக்கும் பொட்டாசியம் பர மங்கனேற்றுக்கும் நம்மவன் எங்கு போவான். நாம் சொல்வது நம்மிடம் உள்ள வேப்பிலையையும் நெல் உமியையும் அடித்து பிசைந்து பற்பொடி தயாரி சேற்றையும் சகதியையும் பிசைந்து சட்டி பானை செய் உலர்ந்த தேங்காய் மட்டையை வகுந்து கயிறு மெத்தைகள் தயாரிக்கலாமே இதற்குப் போய் எதற்கு மகின்த பிரதர்ஸை வம்பிக்கிழுக்க வேண்டும்.//

  தாங்கள் காப்பி அடித்ததாக நான் சொல்லவில்லை. இவையெல்லாம் அந்த வகையறா என்று தான் சொல்ல வந்தேன்.

  போகிற போக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வம்புக்கிழுத்த தாங்கள் (தமிழ் தேசியக்கூட்டமைப்போ / தமிழ் தேசியவாதிகளோ விமர்சனத்திற்கோ கண்டனத்திற்கோ அப்பாற்பட்டவர்களல்ல) மகிந்த பிறதர்ஸை வம்பிக்கிழுப்பது பற்றி கவலைப்படுகிறீர்கள்.

  இதேபோன்ற பணம் திரும்பிப் போன சம்பவங்கள் ஏராளம்.
  டக்ளஸ் தேவானந்தாவின் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட பணம் திரும்பிப் போயிருக்கிறது.
  டக்ளஸ் தேவானந்தாவின் ஆசியுடன் யாழ்.பல்கலைக்கழகதுணைவேந்தரானவரின் காலத்தில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட பணம் திரும்பிப போயிருக்கிறது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

  வெறும் ஒரு எம்பிக்களுக்காக ஒதுக்கப்பட்ட பணம் திரும்பிப் போவதில் அக்கறை உள்ள நீங்கள் இந்திய திரைப்பட விழைவுக்கு செலவழித்த பணத்தில் இடம் பெயர்ந்த முழு மக்களையும் மீளக் குடியமர்த்தி அவர்கள் தொழில் தொடங்க ஒரு தொகைப் பணத்தையும் கொடுத்திருக்கலாம் என்பது ஞாபகத்திற்கு வராதது ஏனோ?

  தனித்த புலம் பெயர்ந்தவர்கள் அங்கிருப்பவர்களுக்கு உதவுவதென்பது அவசியமானது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்கு முதல் அரசாங்கத்தின் போலித்தனத்தையும் சுருட்டல்களையும் பற்றி பேசியாக வேண்டும். ஆனால் நீங்கள் அரசாங்கத்தை அதன் பொறுப்பிலிருந்து பாதுகாத்துக் கொண்டு மற்றவர்களுடைய பொறுப்பைப் பற்றிப் பேசுவது தான் சகிக்கவில்லை.

  மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தற்கு மக்களுடைய பிரச்சினைகளுக்கு உதவ முடியவில்லை என்றால் அது எவராயிருந்தாலென்ன ஆட்சியை விட்டு விலக வேண்டியது தானே.

  அதைச் செய்யமாட்டார்கள். அவர்கள் சுரண்டிக் கொண்டும் சுருட்டிக் கொண்டும் இருப்பார்கள். அதற்கு வக்காலத்து வாங்க கொஞ்ச ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் இருக்கும். அந்த வகையறாகக்ளுக்குள் நீங்களும் தேசமும் வேண்டாமே என்று தான் இதை எழுதினேன்.


 12. DEMOCRACY on August 18, 2010 10:46 am

  திரு.சஹாப்தீன் நாநா அவர்களே,

  /விற்பனை முகவர் பாணியில் “பலிசிக்கு” ஆள்பிடிக்கும் விதமாக,புகழ்ந்து கெஞ்சுவதைக் காட்டிலும்,இது எந்த அரசியலில் அடங்குகிறது என்று விளக்கினால் நல்லது./
  The Tamil apartheid policy of “Exclusive homelands” for Tamils, which have been ethnically cleansed of Muslims and Sinhalese, is misunderstood and mis-represented in the west–A to Z list!/– இதனுடைய சராம்சம் எனக்குப் புரியவில்லை. இலங்கையிலுள்ள ஏழைகளின் அளவுக்கோல் எனக்குத் தெரியாது.

  /இந்தியாவில், மெட்ராஸில், மண்ணடியில், செம்புதாஸ் வீதி, அங்கப்பபன் நாயக்கன் வீதி, போஸ்ட் ஆபீஸ் வீதி போன்றவற்றில் இரவு ஏழு மணிக்கு பின்னாடி வந்து, பழைய அட்டை பெட்டியை விரித்து குடும்பம் குடும்பமாக வீதிகளில் தூங்கிக் கொண்டிருக்கின்றார்களே, அந்த பாமரனுக்கு போய் கைத்தொழிலை கற்றுக் கொடுங்கோவன் புண்ணியமாவது கிடைக்கும் என சொன்னேன்./- இதிலுள்ள இந்திய ஏழைகளுக்கான திட்டமென்பது (நான் அவர்களுடன் படுத்தும் உறங்கியுள்ளேன் – பல்கலைகழகத்தின் ஒரு கணெக்கெடுப்பு பிரிவினருடன்), தனி மனிதர்களால் முடியாது, இதற்கான பல அரசாங்க வெளீயீடுகள் கிடைக்கப் பெரூகின்றன. நீங்கள் ஏன், தென்னிலங்கை, மலையகம், வடக்கு, கிழக்கு ஆகிய பிரதேசங்கள் அனைத்திற்கும் சமமான திட்டம் வகுத்து, ஏழைகளின் அளவுகோளுக்கு தகுந்த மாதிரி (போர்ப்பகுதிகளை முன்னிலைப்படுத்தி) சதவிகிதமாக பிரித்து உதவிகளை அறிவித்தால், இந்த “அப்பர்த்தெய்ட்(குண்டுசட்டி)” அவப்பெயர் நீங்குமல்லவா!?.

  நான் சுட்டிக்காட்டும் அரசியல் என்பது, தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று கூவி விற்கும் அரசியல். இது ஒரு ஆபத்தான கட்டத்தை நோக்கி வளர்ச்சியடைந்துள்ளது, இந்த ஆபத்து ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்று, இது நீங்கினாலே… அதிகம் பேசவில்லை.. உற்பத்தியை சந்தைப்படுத்தினாலேயே அது பணமாக மாறுகிறது. நீங்கள் கூறும் சன் டி.வி. குழுமமும், ராஜ் ரத்தினம், அனந்த கிருஷ்ணன்.. இத்தியாதிகள், மாநாட, மயிலாட, ஹெட்ஜ் பண்ட், சூதாட்டம், லாட்டரி டிக்கெட், போன்ற உற்பத்தி பொருள்களால் பில்லினேயர்கள் ஆனார்களா?. உலகின் பாரிய உற்ப்பத்தியை பிடித்து வைத்திருக்கும் சீனாவில் ஏன் இவ்வளவு பில்லீனேயர்கள் இல்லை?. இது தமிழினப் பெருமையா அல்லது முள்ளிய வாய்க்காலுக்கான அவசியங்களா?… இன்னும் பல கேள்விகள் உண்டு…


 13. Jeyabalan T on August 18, 2010 1:52 pm

  கடந்த 60 ஆண்டுகால சுதந்திர இலங்கையின் அனுபவத்திற்குப் பின் கடந்த 30 ஆண்டுகால தமிழ் இளைஞர்களின் ஆயுத வன்முறையின் பின் புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலர் கண்டு பிடித்தது மகிந்த ராஜபக்ச அரசை உலுப்பி தமிழ் மக்களின் வாழ்நிலையை மேம்படுத்தலாம் என்பது. இலங்கை அரசு மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை எனக்கு முரண்நகையானதாகவே உள்ளது.

  இலங்கை போன்ற மூன்றாம் நாடுகளில் சர்வதிகாரப் போக்குடைய அரசுகள் உள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல எவ்வித மக்கள் பிரிவு மீதும் அரசுகள் அக்கறை கொள்வதில்லை. அரசுகளை பணிய வைத்து சாதிப்போம் என்று புறப்பட்டவர்களும் அரசுகளிலும் பார்க்க மோசமான வன்முறையை மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டனர். தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறோம் என்று புறப்பட்ட புலிகள் இலங்கை அரசுக்கு எவ்விதத்திலும் குறையாமல் மக்கள் மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு இருந்தனர்.

  மேலும் இன்று அரசை உலுக்கலாம் என்று கதையளப்பவர்களும் நாளை தம் கைகளில் அதிகாரத்தைப் பெற்றவுடன் புலிகளுக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் நிகராக அல்லது அதனிலும் பார்க்க மோசமாக நடந்து கொள்ளமாட்டார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. மேலும் மக்களை தொடர்ந்தும் கீழ் நிலையிலும் சீரழிவிலும் வைத்திருப்பதன் மூலம் அவர்களைத் தொடர்ந்தும் பலவீனமாக்கி அவர்களது கையறுநிலையில் தங்களைத் தவிர வேறு யாராலும் அவர்களைக் காப்பாற்ற முடியாது என்ற நிலையை உருவாக்கிவிடுவார்கள். அதன் பின் இவர்களுடன் மக்களும் உடன்கட்டை ஏற்றப்படுவர். இதுவே வன்னி மக்களுக்கு முள்ளிவாய்க்காலில் ஏற்றப்பட்டது.

  யாழ்ப்பாணத்தைப் போன்று வன்னியிலும் மக்கள் பொருளாதார வளத்திலும் கல்வியிலும் மேம்பட்டு இருந்தால் இந்த முள்ளிவாய்க்கால் நிலையை புலிகளால் ஏற்படுத்தி இருக்க முடியாது. மக்களின் சீரழிவையும் அவலத்தையும் வைத்து அரசியல் செய்கின்ற வழிமுறையைக் கைவிட்டு புதிய அரசியல் போக்கு ஒன்று பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இது.

  பசித்தவன் தான் போராடுவான் என்று சொல்லி மக்களைப் பட்டினி போட்டு கொல்கின்ற போராட்டங்கள் அர்த்தமற்றவை. வாழ்வின் கீழ்நிலையில் உள்ள மக்களை பரம்பரை பரம்பரையாக கீழ்ப்படுத்தி அவர்களை ஆதிக்கம் செய்யும் போக்கே இன்னமும் நிகழ்கின்றது.

  ஒரு கத்தை வைக்கோலுடன் வன்னிமாடுகளைச் சமாளிக்க முடியும் என்ற தமிழ் தேசியத்தின் சிந்தனைப் போக்கு மாற்றப்பட வேண்டும். இலங்கை அரசு ஒடுக்கினாலும் புலம்பெயர்ந்த வெத்துவேட்டுக்கள் வெடித்தாலும் அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வாழ்வாதாரங்கள் எவ்வகையிலும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். கல்வியூட்டப்பட வேண்டும். இவை செய்யப்பட்டால் அம்மக்கள் தங்களை தாங்கள் பாதுகாக்கவும் அவர்களது உரிமைகளை வென்றெடுக்கவுமான திட்டங்களை அவர்களே வகுத்துக் கொள்வார்கள். இங்கிருந்து அரசியல் சிந்தனையையும் போராட்டங்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

  மலையகத்தில் மக்களின் நிலை இலங்கை சுதந்திரமடைந்த பின் முன்னேற்றம் அடைந்துள்ளதா? இந்த மலையக மக்களுக்காக குரல் கொடுத்தவர்களால் ஏன் இந்த மக்களது நிலையை கடந்த 60 வருடங்களாக முன்னேற்ற முடியவில்லை என் அவர்கள் சிந்தித்தார்களா? இந்த மக்களுக்காக போராடுவதாகக் கூறிக்கொண்டு அவர்கள் பிளவுபட்டே உள்ளனர் ஏன்? ஏன் இந்த தொழிற்சங்கங்களிலும் பார்க்க பிரதான கட்சிகளின் தொழிற்சங்கங்களில் மக்கள் இணைகின்றனர்? இதனை மாற்றி அமைப்பதற்கு என்ன வழி என்று சிந்திக்கப்படவில்லை?

  இலங்கை அரசாங்கத்திடம் போராடி கடைசியாக கழிக்கப்பட்டது அந்த மக்களின் வாழ்வே. அரசாங்கத்திற்கு எதிராகப் போராட வேண்டும். அதேசமயம் அரசாங்கத்தினால் ஒடுக்கப்படும் மக்களின் வாழ்நிலையை மேம்படுத்துவது பற்றிய காத்திரமான செயற்திட்டங்கள் அவசியம்.

  அரசாங்கத்திடம் போராடி அந்த அரசு மக்களது விடயத்தைச் கவனத்திற் கொள்ளும்வரை அல்லது வேறொரு அரசை உருவாக்கும்வரை அல்லது பாட்டாளிவர்க்கச் சர்வதிகாரம் வருவரை இந்த மக்கள் பரம்பரைபரம்பரையாக சீரழிய முடியாது.

  இன்று அரசை உலுப்பி ஏதுவும் செய்வோம் என நம்புவவர்களுடன் சேர்ந்து கனவு காண என்னால் முடியவில்லை.

  இன்றைய இலங்கை அரசு 3 மில்லியன் தமிழர்களை ஒடுக்கினால் 3 மில்லியன் தமிழர்களை கொல்லமுற்பட்டால் முழுப்பேரையும் காப்பாற்ற வழியிருக்கா என்று பார்க்கும் அதேசமயம் உடனடியாக காப்பாற்றக் கூடியவர்களை காப்பாற்றுவதே பொருத்தமானது.

  எல்லாம் அல்லது ஓன்றுமில்லை என இருந்துவிட முடியாது.

  த ஜெயபாலன்


 14. nantha on August 18, 2010 3:30 pm

  தமிழுக்காக (தமிழருக்காகவா?) உயிரை விடுகிறோம் என்று புறப்பட்டவர்கள் கடைசியில் தமிழருக்கு சிரட்டை கொடுத்துவிட்டு மறைந்துள்ளனர். தமிழர்களின் “ஏகப் பிரதிநிதிகள்” என்று தங்களை கூறிக் கொள்பவர்கள் தங்களின் உறவினர்களுக்காக ஸ்கொலஷிப் கிடைக்க வேண்டும் என்று அரசு அமைச்சுக்களுக்கு படி ஏறுவதை இன்னமும் நிறுத்தவில்லை.

  டக்லஸ் பணத்தை திருப்பி அனுப்பிவிட்டது தப்பு என்று சொல்பவர்கள் புலி காலத்து தமிழ் எம்பிமார் தங்களுக்குக் கிடைத்த பணத்தை யாருக்குச் செலவிட்டார்கள் என்பதையும் சொன்னால் நல்லது. பல்கலைக் கழகத்தில் குதிரைக் கஜேந்திரன் கூட்டம் அரச பணத்தை எடுத்து அம்பாளிக்க விடவில்லை என்று நாடோடி கவலைப்படுவது தெரிகிறது!

  தமிழர்களுக்குத் தமிழர்கள் உதவ தயாரில்லை என்பது மட்டும் உண்மை. வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் பகுதிகளில் “உதவிகள்” செய்ய மகிந்தவிடம் இருந்து “கியாரண்டி” எதிர்பார்க்கிறார்கள். இந்த லட்சணத்தில் மஹிந்த சகோதரர்கள் “தமிழ்” பிரச்சனையைக் கண்டு பிடித்துத் தீர்க்க வேண்டும் என்பது வெறும் ஏமாற்று வேலையே தவிர வேறெதுவுமில்லை!


 15. கந்தையா on August 18, 2010 4:40 pm

  யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் கொட்டல் கட்ட முதலில் போனவர் ஆணிவேர் படத்தின் தயாரிப்பாளர். இவர் தலைவரோட நின்று எடுத்த படத்தை பொக்கற்றுக்குள் இருந்து தூக்கிக்காட்டி பெருமைப்பட்டவர். மற்றவர்களுக்கு துரோகிப்பட்டம் தாராளமாக வழங்கிய பெருந்தகை. இந்த கொட்டல் விபச்சார விடயம் எல்லாம் புலிகளுடைய விடயம். சாஹிப்தீன் மண்சட்டி தயாரிக்க பாய் இழைக்க (பாய் ஒட்டுவதற்கு என்று தவறாக எடுத்துப் போடாதீர்கள்) என்று குடிசைக் கைத்தொழில் பற்றித்தான் கதைக்கிறார். ஆனாலும் சாஹிப்தீன் சொல்ற விசயமும் சரியில்ல குடிசைக் கைத்தொழில் அது இது என்று சனத்திற்கு பிராக்கு கிடைச்சா போராட வராது. அதனாலும் குடிசைக் கைத்தொழிலும் மகிந்த அரசுக்கு துணைபோகிற விடயம் என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


 16. BC on August 18, 2010 8:05 pm

  அடக்குமுறைக்கெதிராக போராடுவதாக சொன்னவர்கள் தாங்கள் பதவிக்கு வந்ததும் எப்படி மக்கள் மீது அடக்கு முறை செய்தார்கள் என்பதை அந்த நாடுகளில் இருந்து வந்தவர்கள் முலம் போதுமான அளவு அறிந்து கொண்டோம். தமிழ் மக்களுக்காக போராடுவதாக சொன்ன புலி அவர்களுக்கு என்ன செய்தார்கள் என்பதையும் பார்த்துவிட்டோம். புலத்தில் உள்ள புரட்சிகர தனிநாட்டு போராட்டகாரர்கள் மோசமான அடக்கு முறையாளர்களாக மாறுவார்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம்.தனிநாடு என்று இவர்கள் சொன்னதே புலி ஆதரவாளர்களை கவர தான். இவர்களுக்கு உள்ள பெரிய கவலை இலங்கையில் தமிழ் மக்கள் கொஞ்சம் தலை எடுக்கின்ற நிலைமை ஏற்பட்டால் நாளை இவர்கள் நடத்த இருக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்கு எதிரான புரட்சிக்கு தடையாக போய்விடுமோ என்பது தான்.


 17. DEMOCRACY on August 19, 2010 2:08 am

  /இன்றைய இலங்கை அரசு 3 மில்லியன் தமிழர்களை ஒடுக்கினால் 3 மில்லியன் தமிழர்களை கொல்லமுற்பட்டால் முழுப்பேரையும் காப்பாற்ற வழியிருக்கா என்று பார்க்கும் அதேசமயம் உடனடியாக காப்பாற்றக் கூடியவர்களை காப்பாற்றுவதே பொருத்தமானது./- த.ஜெயபாலனும்,சகாபுதீன் நாநா அவர்களும், தாங்கள் அறிந்தவர்கள் மனமுவந்து உதவி செய்கிறார்களா? என்று கோரிக்கையை வைக்கிறார்கள். கலைஞர் கருணாநிதியும் செந்தமிழ்? மாநாட்டில்,”டெசோ” பாணியில் கார்த்திகேசு சிவத்தம்பியை வைத்து ஒரு முயற்சி செய்தார்?. இதற்கு எதிராக பிரச்சாரம் செய்தேன், ஏனென்றால் “கேனிபாலிஸத்தை சமரசம் செய்து” தன்னைமட்டும் காப்பாற்ற ஒப்பந்த முயற்சி நடந்தது.

  திரு.நாநா இந்த பாணி போல் தோன்றினாலும், திரு.ஜெயபாலனின் “சமன் படுத்துதலுக்கு” ஒப்பவே விஷயம் அறிந்தவர்களாக கோரிக்கை விடுகின்றனர்!. சமன் படுத்துதல் என்றால், திரு.ரவி.சுந்தரலிங்கம் “ஜனநாயகம் என்றால் என்ன” என்பதில், “தேவையான அளவு பொருளீட்டுவது (வழி பற்றி கவலை இல்லை)”என்பது “ஜனநாயக உரிமை”, அது உலகமயமாக்கலில், “மனித உரிமையாக” அங்கீகரிக்கப் படவேண்டும் எனபதன் அடிப்படையில், “தமிழ் பெருச்சாலிகள்” ஏழைகளின் வயிற்றுப் பசிக்காக சேர்த்து வைத்திருகும் நெல்மணிகளை கரண்டிக்கொண்டு போய், “தன் வலைக்குள்” சேமித்து வைப்பது மனித உரிமை என்று விட்டுவிட்டாலும் “அட நீயாவது பொழைச்சியா?”, உன் வலைக்குள் இருந்த நெல்மணிகளை ஆயுத முகவர்களும், மேற்குலகில் ஓடாதிருந்த கைத்தொழில் முதலாளிகளும், உணவுவிடுதி அதிபர்களும், சுற்றுலா முகவர்களும், விமான நிறுவனங்களும் அன்றோ பிடுங்கிக் கொண்டுவிட்டனர்? என்பது வயிற்றில் அடிப்பதில்லையா?. இந்த லட்சணத்தில் தத்தி தத்தி சொந்தகாலில் நிற்க முயலும் பசியுள்ள்வர்களையும் “ஜிஎஸ்பி வரி சலுகை ரத்து” மூலமாக வயிற்றிலடிப்பதுதான் இந்த வரிகளுக்கு “It acted to polarize the two main ethnic comunities, and rejected any alliances with political parties (e.g., the LSSP) which looked for ethnic rapproachment]. The western nations mistakenly take the Tamil-fedaralist bid at its face value. /–A to Z list!.” அர்த்தமா? இதுதான் “கேனிபாலிஸமா”?. பெருச்சாலிகள் பிழைத்தால் பரவாயில்லை, ஆனால் பொறிகளில் அல்லவா மாட்டிக் கொண்டு அழிகின்றன!. இந்த பொறிகளிலிருந்து காப்பாறிவிடும்(அங்கீகரிக்காமல்)”சமன் படுத்துதலாகவே” இக் கோரிக்கைகள் அமைகின்றன என்று நினைக்கின்றேன்!.

  கே.பி. ஒரு கைதிதான் ஆனால் சூழ்நிலைக் கைதி அல்ல என்று நினைக்கிறேன். ஒரு அரசியல் மேகம் கவிழ்ந்துள்ளது இதில்,பொருளாதாரம் என்பது சிறு பாகமே!. கூல் கட்டுரைக்கே கூழ் காய்ச்சிவிட்ட நீங்கள்(அல்லது அரசியல்), கே.பி. விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதனை, கே.பி. – டிபிஎஸ்.ஜெயராஜ் பேட்டியின் இறுதி பாகம் வந்த பின்பு பார்ப்போம்!.


 18. yahiya wasith on August 19, 2010 3:32 pm

  மிகவும் நல்லதொரு கட்டுரை.
  தொடர்ந்து எழுதுங்கோ சஹாப்தீன் நாநா.


 19. thevan on August 19, 2010 9:43 pm

  கட்டுரையாளர் நாநா அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் எற்கனவே தமிழ்நாட்டில் சின்னதாயி என்பவராலும் வங்கத்தில் அமர்தியா சென் போன்றவர்களாலும் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்தான். இந்தக் கருத்துக்கள் ஒன்றும் புதுமையானவை அல்ல. மாறாக இவை ஆளும் அரசுகளுக்கு உதவிகரமாக இருப்பதால்தான் சின்னதாயி இந்திய ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்டார். அமர்த்தியாசென் நோபல் பரிசு வழங்கி போற்றப்பட்டார். ஆனால் இவர்களின் இந்திய நாட்டில் இன்னும் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. மாறாக பஞ்சம் பசி பட்டினி எல்லாம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்த ஒன்றாகும்.

  இங்கு எனது கேள்வி என்னவென்றால் கட்டுரையாளர் நாநாவின் கருத்துக்களை பின்பற்றினால் இலங்கையில் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா என்பதே? அரசை நம்பியிருக்காமல் நாமே எம்மால் இயன்ற உதவிகளை செய்வது என்பது அரசின் பொறுப்பை மக்களுக்கு உணர விடாமல் அரசுக்கு செய்யும் மறைமுகமான உதவிகரமாக அமைகின்றது என்பதை நாநா ஏன் உணர மறுக்கிறார்? மேலும் இவ்வாறு எந்தளவு செய்ய முடியும் என்பது ஒருபுறம் இருக்க ஒரு பேச்சுக்கு செய்ய முடியும் என எடுத்துக் கொண்டாலும் அதை இந்த அரசு எந்தளவு தூரத்திற்கு அனுமதிக்கும் என நாநா கருதுகிறார்? இதையேதான் நாடோடி தனது பின்னூட்டத்தில் சொல்ல வருகின்றார் என கருதுகிறேன். ஆனால் கட்டுரையாளர் நாநாவோ அல்லது அவருக்கு சார்பாக கருத்து சொன்ன தேசம் ஆசிரியர் ஜெபாலனோ இது குறித்து தமது பதில்களை தவிர்த்துவிட்டதாகவோ அல்லது தவறிவிட்டதாவோ நான் உணருகிறேன்.

  மேலும் இங்கு நான் இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நாநா தற்போது தெரிவித்த கருத்தைத்தான் தேசம் ஆசிரியர் கொன்ஸ்ரன்ரைன் அவர்களும் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். அவர் ஹோட்டல் கட்டச் சொன்னதாக கொச்சைப்படுத்துவது தவறு. யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது அதன் முடிவை முன் கூட்டியே உணர்ந்து அவர் தனது அபிவிருத்திக் கருத்துக்களை முன்வைத்தார். ஆனால் அன்று அவரை துரோகியாக சித்தரித்தவர்கள் இன்று கே.பி யின் கருத்துக்களை பிரச்சாரம் செய்து பல அரசு சாரா நிறுவனங்களை கட்டுகின்றனர். இங்கு எனது கேள்வி என்னவெனில் உண்மையிலே இவர்கள் எல்லோருக்கும் தமிழ் மக்களுக்கு உதவுவதுதான் நோக்கம் எனில் இவர்கள் எல்லோரும் தனித் தனியாக அமைப்புகளை நிறுவுவதை விடுத்து இதை எல்லாம் முன்னரே கூறிய கொன்ஸ்ரன்ரைன் அவர்களின் “லிட்டில் எயிட்” மூலம் ஏன் உதவ முன்வரக்கூடாது?

  அண்மையில் “ஏடு” அமைப்பைச் சார்ந்த நபர் ஒருவருடன் உரையாடும்போது இந்தக் கருத்தை தெரிவித்தேன். அதற்கு அவர் தமது அமைப்பு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்றும் விரும்பினால் லிட்டில் எயிட் அமைப்பு தங்களுடன் இணையட்டும் என்கிறார். இது குறித்து தேசம் ஆசிரியர் ஜெயபாலன் கருத்து தெரிவிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

  எல்லா தொண்டு அமைப்புகளும் ஒன்றாக வேண்டும். அவர்களின் நிதி பற்றிய கணக்கு வழக்குகள் யாவும் வெளிப்படையாக வைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் முன்வைத்து பாருங்கள். அப்போது எத்தனைபேர் இதற்கு உடன்பட்டு வருகிறார்கள் என்று நோக்கினால் இந்த அமைப்புகளின் உண்மை சுயரூபத்தை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.


 20. DEMOCRACY on August 20, 2010 8:35 am

  தமிழ்நாட்டில்(இந்தியா), ம.க.இ.க.வினரை கொம்பு சீவிவிட்டுக் கொண்டிருக்கும்? சபாநாவலனின், இனியொரு இணையதளத்தில் “நிருபாமா – கருணாநிதி: ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்” இந்த தலைப்பில் உள்ள கட்டுரையில், வரும் வரிகள் “புலம் பெயர் நாடுகளில் இலங்கை அரசு திட்டமிட்டது போல எழுச்சிகள் மட்டுப்படுத்தப்பட்டு விட்டன. தமிழ் நாட்டில் இதனை மட்டுப்படுத்தி அழிப்பதற்கான ஆயுதமாகவும் இந்த உதவி பயன்படுத்தப்படுகிறது.” – இவை.
  “இவர்களின் இந்திய நாட்டில் இன்னும் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. மாறாக பஞ்சம் பசி பட்டினி எல்லாம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்த ஒன்றாகும்”– இலங்கைத்தமிழர்.

  இதுவல்ல பிரச்சனை, இந்தியாவில் பொருளாதாரம் முன்னேறுகிறது என்கிறார்கள், ஐரோப்பிய, அமெரிக்க பல்கலைகழகங்களிலிருந்து தொழில்நுட்பங்கள் குவிகிறது என்கிறார்கள், ஏழ்மை மெதுவாக தீர்க்கப்படும் என்கிறார்கள்! ஆனால் “தமிழ்நாட்டில் எழுச்சி” என்ற பொறியில் சிக்கியிருக்கும் வரை அங்கு மட்டும் ஒடுக்குமுறை இருக்கும்!. திரு.ஜெயபாலன் கூறியுள்ள மாதிரி,”வன்னி மக்கள்” பொருளாதாரத்திலும், கல்வியறிவிலும் மற்றவர்கள் போல் இருந்தால் இப்படி படுகொலைகளில் சிக்கியிருக்க மாட்டார்கள். தற்போது சென்னை எழும்பூரில் செயல்படும் “என்.ஜி.ஓ. உட்பட உலகில் பல என்.ஜி.ஓ. க்களில் சம்பளத்திற்கு வேலைசெய்யும் “தன் இனத்தவராலேயே (கேனிபாலிஸம்” “கரண்டப்பட” மாட்டார்கள்!.
  இனியொரு வரிகளில், தமிழ்நாட்டில்(இந்தியா),இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் என்று பலர் இருக்கிறார்கள் என்று (நான் உட்பட)1980 களுக்கு முன்பு தெரியாத நிலையிலிருந்த அங்கேயே இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சியை? (அவர்களின் அன்றாட பிரச்சனைகளையும் மீறி)மிகப்பெரிய இந்திய இயந்திரம் அடக்கமுடியவில்லையாம் (இந்த பொறிமுறைக்கு இந்திய அரசாங்கத்தின் ஒரு பகுதி ஆதரவு உண்டு,இந்த குழப்பத்திற்கு எதிரானதே என்னுடைய எழுத்தின் ஊற்று), ஆனால் இலங்கையிலிருந்தி வெகுதூரம் எல்லாவித பாதுகாப்புடனும், கொடுப்பனவுகளுடனும், ஓய்வு நேரங்களுடனும் செயல்படும் “புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரின்” எழுச்சியை?, ஜெயபாலன், நாநா போன்றோர்களின் கோரிக்கைக்கான ஆதரவை “இலங்கை அரசாங்கம் ஒடுக்கி விட்டதாம்”! இதுதான் கேழ்வரகில் நெய்வடிகிறது என்பதா?.அப்படியென்றால் இலங்கை அரசாங்கமும்,மகிந்த சகோதரர்களும் அமெரிக்க,ஐரோப்பிய,இந்தியாவை சேர்த்தாளும் மிக பெரிய வல்லரசாயிற்றே!.இதுவெல்லாம்,கே.பி.யை சந்திக்க சென்றவர்களிடம்,இலங்கை இராணுவ அதிகாரி சொல்லியது போல,”உங்களை அழிக்க நாங்கள் தேவை இல்லை” என்பதேயாகும்!.வன்னிமக்களுக்கு கொடுத்த அதே அல்வாவை,இலங்கைத்தமிழர் மூலம்(தமிழின எழுச்சி?)தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்திய அதிகார – வியாபார பீடத்திலிருக்கும் சிலர் கொடுப்பது நியாயமா?!.


 21. Jeyabalan T on August 20, 2010 8:39 am

  அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி.

  தேவன். //இந்தக் கருத்துக்கள் ஒன்றும் புதுமையானவை அல்ல. மாறாக இவை ஆளும் அரசுகளுக்கு உதவிகரமாக இருப்பதால்தான் சின்னதாயி இந்திய ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்டார். அமர்த்தியாசென் நோபல் பரிசு வழங்கி போற்றப்பட்டார்.//
  எல்லா நடவடிக்கைகளுக்கும் பின் ஒரு அரசியல் இருக்கும். ஆளும் வர்க்கம் ஆளும் அரசுகள் பரிசு கொடுத்தால் அதன் அரசியலை அராய்வது அவசியம். அதே சமயம் ஆளும் அதிகார வர்க்கம் பரிசு கொடுத்தது என்பதற்காக நிராகரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நெல்சன் மண்டேலாவுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டதற்காக நெல்சன் மண்டேலாவை நிராகரிக்க முடியுமா?

  //அமர்த்தியாசென் நோபல் பரிசு வழங்கி போற்றப்பட்டார். ஆனால் இவர்களின் இந்திய நாட்டில் இன்னும் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. மாறாக பஞ்சம் பசி பட்டினி எல்லாம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்த ஒன்றாகும்.//
  சுதந்திரம் பெற்ற இந்திய அரசு பஞ்சம் பட்டினியைத் தீர்க்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிறோம் என்று போராடுபவர்களாலும் பஞ்சம் பட்டினியைத் தீர்க்க முடியவில்லை. அமர்த்தியா சென்னினதும் சின்னத்தாயியனதும் திட்டங்களால் மட்டும் இந்தியாவில் பட்டினி பஞ்சம் போய்விடும் என்று எதிர்பார்க்க முடியாது.

  தற்போதுள்ள போராட்ட முறைகள் போராட்ட வடிவங்களில் பாரிய மாற்றங்கள் அவசியம். இதுவரை முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களும் வழிமுறைகளும் மக்களை மேலும் சீரழிவுக்கே இட்டுச்சென்றுள்ளது. இதனை யதார்த்தமாக உணர்ந்ததாலேயே நேபாளில் மாவோயிஸ்ட்டுகள் ஐநா கண்காணிப்பில் ஆயுதங்களை வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்தனர். அடைந்தால் புரட்சிகர நேபாளம் இல்லையேல் சாகும்வரை போராடுவோம் என்று தங்களையும் மக்களையும் பலிகொடுக்கவில்லை.

  //நாநாவின் கருத்துக்களை பின்பற்றினால் இலங்கையில் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா என்பதே? //
  இலங்கையில் மட்டுமல்ல உலகின் எந்த நாட்டிலும் உள்ள அனைத்துப் பிரச்சினைக்கும் ஒரே தீர்வு கிடையாது. கட்டுரையாளர் அவ்வாறு தெரிவிக்கவும் இல்லை. பிரச்சினைகள் எவ்வாறு பன்முகத் தன்மை கொண்டவையோ தீர்வுகளும் பன்முகத்தன்மை கொண்டவையாகவே அமைய முடியும்.

  //நாமே எம்மால் இயன்ற உதவிகளை செய்வது என்பது அரசின் பொறுப்பை மக்களுக்கு உணர விடாமல் அரசுக்கு செய்யும் மறைமுகமான உதவிகரமாக அமைகின்றது என்பதை நாநா ஏன் உணர மறுக்கிறார்?//
  இலங்கை சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளாக அரசின் பொறுப்பை மக்கள் உணரவில்லையா அல்லது அதனைச் சொல்பவர்கள் அரசை உணரந்து கொள்ளவில்லையா? நான் பின்னையவர்களே அரசை உணரவில்லை என நினைக்கிறேன்.

  அரசு பற்றி மக்களை உணரவிடாமல் செய்வது மறைமுகமாக அரசுக்கு உதவுவது போன்றது என்பது அர்த்தமற்றது. ஏனெனில் மக்களிடம் கற்றுக்கொள்வதே ஒரு போராட்டத்தின் அடிப்படை. மக்கள் அரசு பற்றியும் போராட்ட அமைப்புகள் பற்றியும் மிகத் தெளிவாகவே உள்ளனர். மக்களுக்கு உதவுவது அரசுக்கு மறைமுகமாக உதவுவது என்ற சமன்பாடு ஒருவகைத் தப்பித்தலாகவே பார்க்கப்படுகிறது. மிகக் கடுமையான வாழ்நிலையில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு தோள்கொடுக்காமையாலேயே போராட்டங்கள் மக்களில் இருந்து அந்நியப்பட்டன. அரசியலும் போராட்டங்களும் மக்களுக்காகவே. அரசியலுக்காகவும் போராட்டங்களுக்காகவும் மக்கள் இல்லை.

  //அரசு எந்தளவு தூரத்திற்கு அனுமதிக்கும் என நாநா கருதுகிறார்? இதையேதான் நாடோடி தனது பின்னூட்டத்தில் சொல்ல வருகின்றார் என கருதுகிறேன். ஆனால் கட்டுரையாளர் நாநாவோ அல்லது அவருக்கு சார்பாக கருத்து சொன்ன தேசம் ஆசிரியர் ஜெபாலனோ இது குறித்து தமது பதில்களை தவிர்த்துவிட்டதாகவோ அல்லது தவறிவிட்டதாவோ நான் உணருகிறேன்.//
  ”அரசின் பொறுப்பை மக்களுக்கு உணர விடாமல்” என்று சுட்டிக்காட்டும் தேவன் ஒரு விடயத்தை மறக்கிறீர்கள். இந்த அரசு பொறுப்பற்ற அரசு என்பதால் தான் அந்த அரசுக்கு எதிராக இடம்பெற்ற இருபெரும் கிளர்ச்சிகளுக்கு மக்கள் தம் ஆதரவை வழங்கினர். தம் இன்னுயிர்களையும் கொடுத்தனர். இந்த அரசு பொறுப்பற்ற அரசு என்பதாலேயே மக்களுக்கான தேவைகளை செய்ய வேண்டிய சில பொறுப்புக்களை நாம் ஏற்க வேண்டும் என்று கூறுகிறோம்.

  ”அதை இந்த அரசு எந்தளவு தூரத்திற்கு அனுமதிக்கும்.” அரசு அனுமதித்தால் தான் எமது மக்களுக்கு செய்ய முடியும் என்று என்னை அரசு தடுக்க முடியாது. அரசில் உள்ள ஓட்டைகள் துவாரங்களைப் பயன்படுத்தி எமது மக்களுக்கான தேவைகளைச் செய்ய வேண்டும். நாளை அவர்கள் தம்முரிமையை தாமே வலிந்தெடுக்கும் பலமுடையவர்களாக அவர்களை ஆக்க வேண்டும்.

  ஒரு மணமாகாத இளம்பெண் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டால் இக்கொடுமையை புரிந்தவனையே தவறை உணர்ந்து திருந்தி அப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். இது இந்திய சினிமா அரசியல். இதையே தான் புரட்சிகர சிந்தனையாளர்களும் செய்ய முற்படுகின்றனர். எந்த அரசு மக்களை ஒடுக்குகிறதோ அந்த அரசைத் திருத்தி பொறுப்பூட்டி மக்களுக்கு சேவை செய்ய வைக்க முடியும் என நினைக்கிறீர்கள்.

  எனது வாதம் நீங்கள் அரசைத் திருத்தி எடுக்கும் வரை பாட்டாளி வர்க்கச் சர்வதிகாரத்தை நிறுவும் வரை அந்த மக்கள் சீரழிய அனுமதிக்க முடியுமா?

  //எனது கேள்வி என்னவெனில் உண்மையிலே இவர்கள் எல்லோருக்கும் தமிழ் மக்களுக்கு உதவுவதுதான் நோக்கம் எனில் இவர்கள் எல்லோரும் தனித் தனியாக அமைப்புகளை நிறுவுவதை விடுத்து இதை எல்லாம் முன்னரே கூறிய கொன்ஸ்ரன்ரைன் அவர்களின் “லிட்டில் எயிட்” மூலம் ஏன் உதவ முன்வரக்கூடாது?//
  எல்லா அமைப்புகளையும் ஒரே குடையின் கீழ வருவது என்பது சாத்தியமற்ற விடயம். அவரவர் தமக்கு விரும்பியவாறு விரும்பிய அமைப்புகளுடாக உதவிகளை முன்னெடுக்கட்டும். ஆனால் அவர்கள் தமக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு சதத்தையும் பதிவு செய்ய வேண்டும். செலவு செய்யும் ஒவ்வொரு சதத்தையும் எவ்வாறு யாருக்கு செலவிடுகிறார்கள் என்பதையும் பதிவு செய்ய வேண்டும். அவர்களுடைய கணக்கு விபரங்கள் திறந்ததாகவும் வெளிப்படையாகவும் அமைய வேண்டும். அந்த வகையில் லிற்றில் எய்ட் வெளிப்படையா உள்ளது. யாரும் அவர்களுடைய கணக்கு விபரத்தை இணையத்திலேயே பார்வையிடலாம். யார் பணம் தந்துள்ளனர். அது எவ்வாறு செலவிடப்பட்டது. அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் அதில் உண்டு.

  ஏடு அமைப்பும் உதவி முயற்சிகளை முன்னெடுக்கின்றனர். அது பற்றிய விபரங்களையும் தேசம்நெற் இல் வெளியிடுமாறு நண்பர் பாண்டியனிடம் கேட்டுள்ளோம். இவ்வாறான அனைத்து முயற்சிகளையும் நாம் வரவேற்கிறோம் அந்தந்த அமைப்புகள் தங்கள் கணக்கு விபரங்களில் திறந்த புத்தகமாகவும் வெளிப்படையாகவும் வைத்திருந்தால் மக்களின் கேள்விகளுக்கு அஞ்சியே அவர்கள் சரியான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள். அதற்கு லிற்றில் எய்டோ ஏடோ விதிவிலக்கல்ல.

  //எல்லா தொண்டு அமைப்புகளும் ஒன்றாக வேண்டும். //
  இதற்கு ஏற்கனவே பதிலளித்துள்ளென். இது மீண்டும் ஒரு ஏகபிரதிநிதித்துவத்திற்கு வழியேற்படுத்திவிடும். ஆனால் இவ்வமைப்புகளிடேயே ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்தப்படுவதால் செய்யப்படும் உதவிகளை வினைத்திறன் உடையதாக்கலாம். ஒரே வேலையை இரு தடவை மேற்கொள்வதைத் தவிர்க்கலாம்.

  //அவர்களின் நிதி பற்றிய கணக்கு வழக்குகள் யாவும் வெளிப்படையாக வைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் முன்வைத்து பாருங்கள். அப்போது எத்தனைபேர் இதற்கு உடன்பட்டு வருகிறார்கள் என்று நோக்கினால் இந்த அமைப்புகளின் உண்மை சுயரூபத்தை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.//
  100 வீதம் இக்கருத்துடன் உடன்படுகிறேன்.


 22. பல்லி on August 20, 2010 10:41 am

  //இலங்கை சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளாக அரசின் பொறுப்பை மக்கள் உணரவில்லையா அல்லது அதனைச் சொல்பவர்கள் அரசை உணரந்து கொள்ளவில்லையா? நான் பின்னையவர்களே அரசை உணரவில்லை என நினைக்கிறேன். //
  அரசை மக்கள் உணர்ந்து கொள்ளும் அளவுக்கு 60 பின் எந்த அரசு இருந்தது?? அப்படி இருந்தாலும் அரச நிர்வாகிகள் அயல்நாட்டவன் போலதானே மக்களிடம் நடந்து கொண்டனர், அரசன் எவ்வழியோ அடியேனும் அதன் பின்னே என்பது போல்தான் 50 ஆண்டுகள் கழிந்தன;

  //வாழ்க மகிந்த பிறதர்ஸ். அந்தப் புண்ணியவான்கள்தானே இதற்கெல்லாம் பிள்ளையார் சுழிபோட்டவர்கள்.//
  ஆரம்பமே அட்டகாசமாய் இருக்கே நீங்களும் வாழ்க;

  //அதுதான் சிங்களவன நம்புவோம், சோனிக்காக்காமாரயும் கொஞ்சம் நம்புவோம், அடுத்த இயக்க காறர்களையும் கொஞ்சம் நம்புவோம்டா புள்ளைகளே என தலையால அடிச்சிக்கிட்டு சொன்னோம்//
  அப்படி நம்பிதான் தம்பி கருனாவை அம்மான் ஆக்கி கிழக்கே வெளிக்கட்டும் அதுவே வடக்கின் எதிர்கால மாற்றமாக இருக்கட்டும் என சொன்னார்கள் அதையும் நம்பினோமே இப்படி நம்பிக்கைகள் தான் எம் அழிவுக்கு காரணம் என்பதை மட்டும் நம்பவே மாட்டம் நாம்;

  //சரி நம்புவோம், நம்புவோம், நம்பிக்கைதானே வாழ்க்கை. ஆனால் நாளைக்கு சமைத்துச் சாப்பிட சட்டி பானையும் இல்லாமல், தீப்பெட்டியும் இல்லாமல், அரிசி, தேங்காயும் இல்லாமல் அவதிப்படும் அந்த ஜீவன்களுக்கு ஆறுதல் சொல்ல மகின்த மட்டும் போதுமா? நமது கைகளும் நீள வேண்டாமா? நமது கைகளையும், அதி புத்திசாலித்தனத்தையும் கொஞ்சம் நீட்டலாமே.//
  பிழையான நம்பிக்கையுடன் சரியான தகவல்;

  //அப்பணம் சென்று சேர ஒரு ஐடியா சொல்லுங்கோவன்.//
  அவர்களின் பணம் அந்த மக்களிடம் போய் சேருவதே அவர்களுக்கு அரசியல் பாதுகாப்பென சம்பந்தர் அடிக்கடி சொல்லுவருகிறாராமே, அப்படி தவறினால் எம்பேனா அவர்கள் வீடுவரை செல்லும்;

  //யாராவது விபரம் தெரிந்தவர்கள் அமைச்சுக்கும், நமது தூதுவராலயங்களுக்கும் ஒரு மொட்டைக்கடிதம் போடலாமே?//
  இப்போதெல்லாம் பல மொட்டைகடிதகாரன் அங்குதான் (தூதுவராலத்தில்தான் அரட்டை அடிக்கினம்; பொழுது போவதே (பேசுவது) தெரியவே இல்லையாம்;

  //அரசு பற்றி மக்களை உணரவிடாமல் செய்வது மறைமுகமாக அரசுக்கு உதவுவது போன்றது என்பது அர்த்தமற்றது. ஏனெனில் மக்களிடம் கற்றுக்கொள்வதே ஒரு போராட்டத்தின் அடிப்படை. மக்கள் அரசு பற்றியும் போராட்ட அமைப்புகள் பற்றியும் மிகத் தெளிவாகவே உள்ளனர். //
  எல்லாவற்றையும் இழந்த பின்புதானே ;அதுக்கு முன் மக்களை எங்கே உணர விட்டீர்கள்? சிலரது உணர்வுகளை மக்கள்மீது வில்லண்டத்துக்கு திணித்தார்கள் என்பதுதானே நிஜம்,

  //எல்லா தொண்டு அமைப்புகளும் ஒன்றாக வேண்டும். //thevan
  இதுக்காக ஒரு போராட்டம் நடத்துவோமா?? ஏனென்றால் எமக்கு போராட்டம் என்றால் அவ்வளவு விருப்பம்;

  எதுக்கும் இத்துடன் என் குழப்பத்தை நிறுத்தி புதுமுக கட்டுரையாளரை வாழ்த்தி தொடரும் பல்லி;


 23. Naadoode on August 20, 2010 11:06 am

  //இன்று அரசை உலுப்பி ஏதுவும் செய்வோம் என நம்புபவர்களுடன் சேர்ந்து கனவு காண என்னால் முடியவில்லை// த.ஜெயபாலன்.

  ஜெயபாலனின் கனவுகாண முடியாக்கனவுடன் நாங்கள் ஒத்துப் போவதாக வைத்துக் கொள்வோம். அவருடைய அடுத்தபடி எது லிட்டில் எய்ட் போன்ற பல்வேறு அமைப்புக்களுடாக மக்கள் நலன்களைப் பேணுவது. இதைத் தானே அரச சார்பற்ற நிறுவனங்களும் செய்து வந்தன. போர் நடைபெற்ற போது பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்களும் மக்களுடைய நலன்பேணலைத் தானே மேற்கொண்டு வந்தன. அவ்வாறானால் அந்த மகக்ள் நலன் பேணும் ஐநா நிறுவனங்கள் உட்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களை அரசாங்கம் அவசர அவசரமாக வெளியேற்றியதே.

  அவ்வாறு செய்யாதிருந்தால் நாநா நீங்கள் சொல்வது போல ஜிஎஸ்பி என்கிற பூதத்தோடு மல்லாட வேண்டி வந்திருக்காது அல்லவா? அது யாருடையதவறு. சரி அந்த அரசசார்பற்ற நிறுவனங்களை வெளியேற்றியவர்கள் லிட்டில் எய்ட் போன்ற அமைப்புக்களுக்கு அனுமதி வழங்க என்ன காரணம்?

  உங்களுடைய கனவு அவர்களைப் பாதிக்காது என்று அவர்கள் திட்டவட்டமாக முடிவு செய்ததால் என்று சொல்லலாமா?

  மற்றையது> அபிவிருத்தி பற்றியது. வானுயர்ந்த கட்டிடங்கள் பெருந்தெருக்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் போன்றவை தான் அபிவிருத்தியின் குறிகாட்டிகள் என்பதை முற்போக்காளரும் இடதுசாரிகளும் தூக்கியெறிந்து காலாதிகாலமாகி விட்டது.

  மகிந்த அரசின் அபிவிருத்தி பற்றிய பார்வை என்ன? தெற்கிலிருந்து வடக்கு கிழக்கு ஈறாக பெருந்தெருக்கள். நல்லூரில் ஹோட்டல் கட்டுவது என்று தானே விரிகிறது.

  அண்மைய உதாரணம் தெற்கிலும் கிழக்கிலும் சிங்கள மற்றும் தமிழ் விவசாயிகள் விதைத்த நெல்லை விற்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் விவசாயிகள் அமைச்சர் கருணாவிடமும் சிங்கள் விவசாயிகள் தத்தமது அமைச்சர்கள் பலரிடமும் இது தொடர்பாக முறையிட்டார்கள். குறைந்தது இந்த விளைச்சல் காலத்திலாவது அரிசி இறக்குமதியை நிறுத்தும்படி. தமது நெல்லை தகுந்த விலை கொடுத்து வாங்கும்படி. ஆனால்> அமைச்சர்கள் தானே இறக்குமதிக் கொந்தரத்துக்களை வைத்திருக்கிறார்கள். இறக்குமதியை நிறுத்தினால் கமிசன் வருமானம் போய்விடுமே. இறக்குமதி நிறுத்தப்படவே இல்லை. கருணா தமிழ் விவசாயிகளுக்கு வாக்குறுதி அளித்தார் தகுந்த விலைக்கு நெல்லை அரசாங்கம் வாங்க ஏற்பாடு செய்வதாகவும் இறக்குமதியை நிறுத்துவதாகவும். ஆனால் இற்றை வரை நடந்தது என்ன?

  எமது விவசாயிகள் வங்கியிலும் தனிப்பட்டவர்களிடமும் கடன்பட்டு விதைத்து அறுவடை செய்த தரமான நெல் தகுந்த விலை கொடுத்து வாங்குவாரில்லாமல் அழிவடைகிறது. ஆனால் தரமற்ற அரிசி கமிஷனுக்காக இறக்குமதி செய்யப்பட்டு இடம் பெயர்ந்த முகாமிலுள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது.

  இதில் இன்னொரு நரித்தந்திரமும் இருக்கிறது. நெல்லை அறுவடை செய்யும் காலத்தில் இறக்குமதியை அதிகரித்து விட்டால் நெல்லின் விலை வீழ்ச்சி அடையும். ஆக பிறகு அதனை இந்த விலை குறைப்பைக் காரணம்காட்டி அடிமாட்டு விலைக்கு வாங்கலாம் என்பது.

  அது தான் தற்போது நடந்து வருகிறது. இந்த நிலைமை காரணமாக விதைப்புக்கு பெற்ற வங்கிக் கடனைக்கட்ட முடியாமல் வங்கி அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று மிரட்டியதும் தற்கொலை செய்து கொண்ட சிங்கள விவசாயிகள் ஏராளம். கடனாளியாக வாழ்வதையும் கடனைக்கட்டமுடியாமல் இன்னொருவரின் பேச்சுக்கு ஆளாவதையும் அந்த சுய உழைப்புள்ள சுயமரியாதை உள்ள விவசாயிகளால் தாங்க முடியவில்லை. அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

  இது தவிர தங்கள் விவசாய நிலங்களையும் வாழ்விடங்களையும் கைவிட்டு கூலியாக கொழும்புக்கு வந்த விவசாயிகள் இன்னொரு பகுதியினர். அவர்கள் தான் அரசு போட்ட பெருந்தெருக்களின் நடைபாதையில் இளநீர் விற்பவர்களாகவும் சிறு தேநீர்க்கடை வியாபாரிகளாகவும் சுவீப் டிக்கற் வியாபாரிகளாகவும் மாறிப்போனார்கள். அரசாங்கத்தின் அபிவிருத்தி பற்றிய அளவு கோலின் தெருவோரத்தில் தான் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது. இப்படியான பலருடைய துயர்க்கதைகள் பலவற்றை அவர்களிடமிருந்தே கொழும்பில் நான் கேட்டிருக்கிறேன்.

  நாநாவும் ஜெயபாலனும் செய்வது இத்தகைய அரசாங்கத்தின் அபிவிருத்தி பற்றிய கோட்பாட்டை கேள்வி கேட்காமல் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் அநத அரசை உலுப்பலாம் என்ற நம்பிக்கை எதுவுமின்றி தெருவோர வியாபாரிகளுக்கு அதாவது இந்த விவசாயிகளுக்கு வெயில் குடை வழங்குவது பற்றிப் பேசுவது தான். அத்தகைய குடைகளால் அவர்களையோ அவர்களுடைய வியாபாரப் பொருட்களையோ மழையிலிருந்தோ அல்லது வெயிலிலிருந்தோ காப்பாற்ற முடியாது என்பது அதனை நேரில் பார்த்தவர்களுக்குப் புரியும்.

  நாநாவினதும் ஜெயபாலனினதும் பணிகள்? எல்லாம் அரசாங்கத்தின் இத்தகைய மோசடிகளை மறைத்து இந்த தெருவோர வியாபரிகள் கூட பாருங்கள் கலர் கலர் குடையின் கீழ் சிறப்பாய்(?) வாழ்கிறார்கள் என்று காட்டத் தான் உதவுமே ஒழிய வேறொன்றுக்குமல்ல.

  அரசாங்கத்தனதோ எத்தரப்பினதோ மக்கள் விரோதக் கொள்கையை அம்பலப்படுத்தாமல் மக்கள் நலன் என்பதே சாத்தயமில்லை.

  மற்றும்படி லிட்டில் எய்ட் வெறும் விட்டில் எய்ட்ஆகத் தானே முடியும். அது தான் விட்டில் பூச்சி விளக்கில் தானே விழுந்து சாவதைப் போல.


 24. கருணா on August 20, 2010 12:35 pm

  //மற்றும்படி லிட்டில் எய்ட் வெறும் விட்டில் எய்ட்ஆகத் தானே முடியும். அது தான் விட்டில் பூச்சி விளக்கில் தானே விழுந்து சாவதைப் போல.//
  இதை நாடோடிகள் சொல்லக் கூடாது. நாட்டில் உள்ளவர்கள் கூறவேண்டும்!


 25. Kalamohan on August 20, 2010 1:27 pm

  உங்களுடைய எதிரும் புதிருமான பின்னூட்டங்களுக்கு மத்தியில், ஒரு சிறிய கருத்து!

  நன்கு திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்த வன்னிச்சுனாமியில், தங்கள் வாழ்வாதாரங்களையும், குடும்ப உறவுகளையும் (கணவன் அல்லது மனைவி அல்லது பெற்றோர் இருவரும், அதாவது குடும்பத்தின் உழைப்பாளியை) இழந்த குடும்பங்களை இங்கு ஒருமுறை உற்று நோக்குவோம். இவர்களது இயல்பு வாழ்வை மீண்டும் ஆரம்பிக்க எவரும் (அரசு,சமூகம்) முன்வரவில்லை என்று வைத்துக்கொள்வோம் – இதனால் இந்த மக்கள் ஒருபோதும் தற்கொலை செய்துவிடமாட்டார்கள், ஏனெனில் இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவின் (உயிர்களின்) இயங்குதலுக்கான தூண்டுதலே, தனது உயிரை அல்லது ஆயுளை இயலுமானவரை, இன்னும் கூடுதலாக ஒருநாளைக்கோ அல்லது ஒருநிமிடத்திற்கோ, இந்த பூமியில் வாழ்ந்துவிட வேண்டுமென்பதிலூடான இயற்க்கைத் துடிப்புடனுடனுமேயே எல்லா ஜீவராசிகளினதும் இதயமும் துடித்துக் கொண்டிருக்கிறது, வாழ்ந்து கொண்டிருக்கிறது – இது இயற்கையின் எங்குமே எழுதப்படாத விதிகளில் ஒன்றே!- ஆகையால் இந்த வாழ்வாதாரங்களை இழந்த மக்கள் எதையெல்லாம் (களவு, கொள்ளை, கொலை, விபச்சாரம் மற்றும் இதுசார்ந்த வன்முறை) செய்து உணவுண்டு வாழமுடியுமோ அதுவரை வாழ்வார்கள். இதனது எதிர்விளைவுகளானது, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் “பம்பாய்” போன்ற, பல சீர்கெட்ட நகரங்களை உருவாக்கவே வழிவகுக்கும். அப்போது இந்த நகரங்களில் உங்களின் பரம்பரையையும், சந்ததிகளும் கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்துவிட முடியுமா? அல்லது நீங்கள் புலம்பெயர் நாடுகளில் காகம்போல் பறந்து திரிந்து சேர்த்த சொத்துக்களும், பணங்களும் உங்கள் சந்தியின் வாழ்வை உறுதிசெய்யுமா? அல்லது எதிர்காலத்தில் நீங்கள்கூட ஏ 9 வீதியூடாக எந்த பிரச்சனையுமில்லாமல் யாழ் குடாநாட்டிற்கு சென்றுவிடுவீர்களா? – வழிப்பறிக் கொள்ளைகள் பல எதிர்காலத்தில் வன்னியில் நடக்கும். அப்போது அவை (பணம், பொருள்) நீங்கள் கொடுக்காமலே அவர்களால் பெற்றுக்கொள்ளப்படும்.

  எனது மனக்கருத்துப்படி, இன்று புலம்பெயர்ந்த நாங்கள் ஒவ்வொருவரும் எமது பிள்ளைகளினதும், பேரப்பிள்ளைகளினதும் அவர்களது வழித்தோன்றல்களுக்குமாக எத்தனையோ சேமிக்கின்றோம், அதையும்விட பெரும் கனவுகள் காண்கிறோம், ஆனால் இவர்கள் வாழப்போகும் சமூகமும் மற்றும் சமுதாயத்திற்காவோ நாங்கள் எதுவுமே செய்யமுன்வருவதில்லை. உங்களின் வழித்தோன்றல்கள் வாழப்போகும் சமூகம், வன்முறையும் மற்றும் ஏற்றத்தாழ்வு உள்ளதாயிருக்கும் போது, நீங்கள் விட்டுப்போகும் உங்கள் வழித்தோன்றல்கள் இந்த உலகதில் எங்குமே நின்மதியாக வாழப்போதில்லை என்ற உண்மை உங்களுக்கு விளங்குகிறதா?

  ஆகையினால் நீங்கள் அன்புவைத்திருக்கும் உங்கள் வழித்தோன்றல்களின் வாழ்வை உறுதிசெய்வதாயின், உங்கள் வழிதோன்றல்கள் வாழப்போகும் அவர்களது சமுதாயத்திற்காய் ஏதாவது நல்லதுகள் பல செய்வீர்களாக!


 26. nantha on August 20, 2010 2:01 pm

  //இதில் இன்னொரு நரித்தந்திரமும் இருக்கிறது. நெல்லை அறுவடை செய்யும் காலத்தில் இறக்குமதியை அதிகரித்து விட்டால் நெல்லின் விலை வீழ்ச்சி அடையும். ஆக பிறகு அதனை இந்த விலை குறைப்பைக் காரணம்காட்டி அடிமாட்டு விலைக்கு வாங்கலாம் என்பது. //

  நெல் சந்தைப்படுத்தும் சபை எழுபதுகளில் விவசாயிகளை தனியாரிடம்ருந்து பாதுகாக்க ஆரம்பிக்கப்பட்டது. தற்போதும் விவசாயிகள் அரசு கொள்வனவு செய்ய வேண்டும் எதிர்பார்ப்பது அரசின் கொள்வனவு விலை அதிகமாக உள்ள காரணத்தினாலேயே ஆகும்.

  இலங்கையிலுள்ள மக்கள் அனைவருக்கும் தேவையான நெல்லையோ அரிசியையோ சேகரித்து வைக்கும் அளவுக்கு அரசிடம் பாதுகாப்பான வசதிகள் இல்லை என்பதுவும் உண்மை. தற்போது தவிச்ச முயல் அடிக்கப் புறப்பட்டுள்ளவர்கள் “வியாபாரிகளே” ஒழிய வேறு யாரும் இல்லை. அடிமாட்டு விலைக்கு நெல்லை வாங்குவது வியாபாரிகளே ஒழிய அரசு அல்ல!


 27. Jeyabalan T on August 20, 2010 4:41 pm

  நண்பர் நாடோடி விவாதத்தின் முக்கிய விடயத்தை விட்டுவிட்டு மகிந்த ராஜாபக்சவைக் காட்டி கிணறு வெட்டினால் பூதம் வருகின்ற கதையைச் சொல்ல முற்படுகின்றார். நான் இங்கு மகிந்த ராஜபக்சவோ அல்லது இலங்கையில் அரசுப் பதவிகளை பிடிப்பவர்கள் செய்கின்ற அபிவிருத்தியைப் பற்றி பேசவில்லை. இலங்கை அரசு இனவாத அரசு. அது மக்கள் மீது கரிசனை கொண்டு எதுவும் செய்யப் போவதில்லை. ஆகவே அந்த மக்களை சீரழிவில் இருந்து மேன்நிலைக்கு கொண்டுவர அந்த மக்கள் பக்கம் நிற்பதாகக் கூறிக்கொள்கின்றவர்கள். நாடோடி போன்றவர்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதே என் கேள்வி.

  நாடோடி மற்றும் நாடோடியின் சிந்தனையில் இருப்பவர்கள் தமது அரசியல் அடையாளங்களைக் காட்டிக் கொள்வதற்காக இல்லாமல் மிகக் கீழ்நிலை தமது நாளாந்த வாழ்வுக்கு அல்லபடும் மக்களுக்காக அம்மக்களைப் பணயம் வைக்காமல் போராட விரும்புவதை நான் மனமார வாழ்த்துகிறேன். ஆனால் உங்களுடைய போராட்டத்தின் படிமுறைத் திட்டங்கள் என்ன? உங்களுடைய போராட்டம் எவ்வளவு நீண்டது? (ஏற்கனவே 60 ஆண்டுகள் போராடியுள்ளோம் என்பதையும் கவனத்தில் எடுக்கவும்.) உங்களுடைய போராட்டத்தின் இலக்கு என்ன? இவையெல்லாம் தெரிந்தால் மக்கள் தங்களைத் தயார் படுத்துவார்கள். 60வது வருசம் பட்ட கஸ்டத்துடன் இன்னும் கொஞ்சக்காலம் தானே என்று பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கச் சொல்ல முடியும்.

  இதற்குப் பதில் இல்லை யென்றால் உங்கள் போராட்டமும் கல்லுக்கும் பாம்புக்கும் பால் வார்த்து எங்களை எப்படியாவது முன்னேற்று என்று வேண்டுவது போல் போராடுவோம் போராடுவோம் விடிவு வரை போராடுவோம் என்ற விடியும்வரை காத்திருக்கும் கதையாகி விடும். பிறகு நீங்களோ உங்கள் பிள்ளைகளோ வந்து இன்னும் போராட்டமே ஆரம்பிக்கவில்லை இனித்தான் போராட்டம் என்று தொடங்கிய இடத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.

  தயவு செய்து மேலெழுந்தவாரியாக போராட வேண்டும் என்ற கதைகளை விடுத்து எப்படி இந்தப் போராட்டத்தை திட்டமிடுகின்றீர்கள் என்பது பற்றி அறியத்தரவும். தமிழ் மக்களை எப்படி இலங்கையர் என்ற பெரும்பான்மைச் சிங்கள அடையாளத்தை நோக்கி நகர்த்துவது என்ற தெளிவான திட்டம் இலங்கை அரசிடம் உண்டு. அதிலிருந்து தமிழ் மக்களை விடுவித்து அவர்களை மேம்படுத்தும் திட்டம் உங்களிடம் இருந்தால் இத்தளத்தில் வையுங்கள் விவாதிப்போம்.

  அதைவிட்டு விட்டு போராடுவோம் கோசம் வைப்போம் ஐரோப்பாவில் இருந்து கூவுவோம் வன்னியில் பொழுது விடியும் என்ற கதையைக் கேட்டு விடியலை கனவு காண என்னால் முடியாது.


 28. ஜெயராஜா on August 20, 2010 8:09 pm

  சாகிப் நாநா ஒன்றும் தப்பாகச் சொல்லவில்லையே. அள்ளித் தரவும் கேட்கவில்லை கிள்ளித் தரவும் கேட்கவில்லை. ஏதோ நம்மால் முடிந்தவரை அந்த மக்களுக்கு உதவுவோமே என்றுதான் கேட்டார். அதற்கு நன்மை தரக்கூடிய சில வழிமுறைகளையும் சொன்னார்.இதற்குப் போய் குடிசைக் கைத்தொழில் என்றால் மக்கள் சோம்பேறியாகப் போய்விடுவார்கள் போராடமாட்டார்கள் என்றும் இப்போ எங்களுக்கு இருக்கிற ஒரே வேலை மகிந்த அரசுக்கு எதிராக போராடுவதைத் தவிர வேறொன்றுமில்லை என்ற மாதிரியும் கருத்தெழுதி நாம் ஒன்றையும் சாதிக்கப் போவதில்லை.


 29. பல்லி on August 20, 2010 10:46 pm

  //மகிந்த அரசுக்கு எதிராக போராடுவதைத் தவிர வேறொன்றுமில்லை என்ற மாதிரியும் கருத்தெழுதி நாம் ஒன்றையும் சாதிக்கப் போவதில்லை.//
  அரசுக்கெதிரான போராட்டம் வேறு விமர்சனம் வேறு;
  பல்லியை பொறுத்த மட்டில் விமர்சனம் மட்டுமே: போராட்டம் என்பது எமக்கு சரிவராத ஒன்று,

  //அதிலிருந்து தமிழ் மக்களை விடுவித்து அவர்களை மேம்படுத்தும் திட்டம் உங்களிடம் இருந்தால் இத்தளத்தில் வையுங்கள் விவாதிப்போம்.
  அதைவிட்டு விட்டு போராடுவோம் கோசம் வைப்போம் ஐரோப்பாவில் இருந்து கூவுவோம் வன்னியில் பொழுது விடியும் என்ற கதையைக் கேட்டு விடியலை கனவு காண என்னால் முடியாது.//
  இதில் நான் முரன்படுகிறேன் பல்லியும் ஜெயபாலனும் என்ன முள்ளிவாய்க்கால் மூலையில் இருந்தா எழுதுகிறோம்; ஜெயபாலன் அரசின் தவறுகளை புலம்பெயர் எம்மால்தான் விமர்சிக்க முடியும்; வன்னியிலோ அல்லது வடகிழக்கிலோ உள்ளவர்களால் அது முடியாது; அதனால் இங்கிருந்து நாமும் கூவி கொண்டு இப்படி எழுதுவது சரியாக எனக்கு படவில்லை, அனைத்து அதிகாரம் பொரிந்திய ஜனாதிபதிக்கும் அவரது தம்பியான பாதுகாப்பு அமைச்சருக்கும் தமிழர் நிலையில் நிறையவே கருத்து முரன்பாடுகள் உள்ளது; இதில் மகிந்தா வென்றால் எமது ஊகம் சரிதான் ஆனால் தம்பி அடம்பிடித்தால் இனவெறி தாண்டவம் ஆடவே செய்யும், அப்போது நாம் அபிவிருத்தி பற்றி எப்படி பேசமுடியும்; அவர்களது எதிர்காலம் பற்றிதானே சிந்திக்க வேண்டும், அப்படியாயின் மக்கள் வாழ்வுடந்தான் எமது கருத்துக்கள் பயணிக்க வேண்டுமே தவிர அரசின் ஆட்சி மகிமைகளுடன் அல்ல; பல்லியை பொறுத்த மட்டில் அரசும் ஒரு அங்கீகரிக்கபட்ட புலியே, தனது தேவைக்காய் யாரையும் கொல்லும் வெல்லும்; மக்கள் பற்றி சிந்தனைகள் மிக மிக குறைவே, எம்மால் முடிந்த உதவிகளை விளம்பரமின்றி செய்து வருகிறோம்; அதை தொடருவோம்;


 30. Naadoode on August 21, 2010 12:50 am

  // இதை நாடோடிகள் சொல்லக் கூடாது. நாட்டில் உள்ளவர்கள் கூறவேண்டும்! // karuna
  அரசாங்கமும் புலிகளும் நாட்டிலிருந்து எங்கே சொல்லவிட்டார்கள். வாய் திறந்தவர்களின் வாய்க்குள் துப்பாக்கியை அல்லவா இரண்டு பேரும் வைத்தார்கள்.

  // உங்களின் வழித்தோன்றல்கள் வாழப்போகும் சமூகம் வன்முறையும் மற்றும் ஏற்றத்தாழ்வு உள்ளதாயிருக்கும் போது நீங்கள் விட்டுப்போகும் உங்கள் வழித்தோன்றல்கள் இந்த உலகதில் எங்குமே நின்மதியாக வாழப்போதில்லை என்ற உண்மை உங்களுக்கு விளங்குகிறதா?
  ஆகையினால் நீங்கள் அன்பு வைத்திருக்கும் உங்கள் வழித்தோன்றல்களின் வாழ்வை உறுதிசெய்வதாயின் உங்கள் வழிதோன்றல்கள் வாழப்போகும் அவர்களது சமுதாயத்திற்காய் ஏதாவது நல்லதுகள் பல செய்வீர்களாக! //kalamohan

  முழுமையாக உடன்படுகிறேன். இன மத சாதி மற்றும் பொருளாதார அரசியல் வர்க்க ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை எத்தகைய சமூகமும் நிம்மதியாக வாழ்ந்து விட முடியாது. முன்னெறிவிடவும் முடியாது. அபிவிருத்தி கண்டு விடவும் முடியாது.

  // அடிமாட்டு விலைக்கு நெல்லை வாங்குவது வியாபாரிகளே ஒழிய அரசு அல்ல!//nantha
  அந்த வியாபாரிகள் ஒன்றில் அமைச்சர்களாக அல்லது அவர்களுடைய பினாமிகளாகத் தான் இருக்கிறார்கள் என்பது இலங்கையின் யதார்த்தம்.

  தவிரவும் விதைப்புக்காக வங்கியிடம் இருந்து பெற்ற கடன் மற்றும் பசளைச் செலவுகளைக் கணிப்பிடும் போது அரசின் கொள்வனவு விலை போதாது என்ற குற்றச்சாட்டு சிங்கள தமிழ் விவசாயிகளிடமிருந்து தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

  //நண்பர் நாடோடி விவாதத்தின் முக்கிய விடயத்தை விட்டுவிட்டு மகிந்த ராஜாபக்சவைக் காட்டி கிணறு வெட்டினால் பூதம் வருகின்ற கதையைச் சொல்ல முற்படுகின்றார்.//ஜெயபாலன்

  நான் விவாதத்தின் மையத்தை விட்டு வெளியே செல்லவில்லை. மற்றும்படி ஜெயபாலன் கேள்விகளை எழுப்பவதற்கு முன்னர் கலாமோகன் எழுதிய குறிப்பை வாசித்திருந்தால் அந்தக் கேள்விகள் எழுந்திருக்கவே வாய்ப்பில்லை. அதையும் மீறி அந்தக் கேள்வி எழுகிறதென்றால் நாடோடியை புலம் பெயர் புலிகளுடன் இணைத்துக் காண அல்லது காட்ட விரும்புகிறார் என்று தான் பொருள் கொள்ள முடியும்.

  இந்தப் போராட்டத்தின் திசை விலகலுக்கு புலம் பெயர் தமிழரின் செல்வாக்கும் ஒரு காரணம் என்பது எனது அபிப்பிராயம்.

  மற்றும்படி விடுதலைக்கான போராட்டம் என்பது காலங்குறித்ததல்ல.

  தைப்பொங்கலுக்குத் தமிழீழம் காணலாம் என்று புறப்பட்டவர்களுக்குத் தான் அந்தக் கேள்விகள் பொருத்தமானவை.

  கலாமோகன் குறிப்பிட்டிருப்பதைப் போல உயிர்வாழ்க்கைக்கான போராட்டம் என்பது எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்தப் போராட்டம் சக மனிதர்களது உரிமைகளை மதிப்பதாகவும் சமூக நீதியை நிலைநாட்டக் கூடியதாகவும் சமூக முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் அமைதல் அவசியம். அதனை அவ்வாறு மாற்றியமைப்பது எவ்வாறு என்பது குறித்தே நாம் அக்கறைப்பட வேண்டும்.

  இவை பற்றி மேலும் விளக்கம் வேண்டின் தங்கள் நண்பர் ஜானை அணுகலாமே? /


 31. Naadoode on August 21, 2010 1:25 am

  விவசாயிகள் தொடர்பான இன்றைய செய்தி ஒன்று: இன்றைய வீரகேசரியின் (21.08.2010) 6ஆம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியானது.

  //உருளைக்கிழங்கு இறக்குமதியை உடனடியாக நிறுத்தக் கோரி வெலிமடை நகரில் நேற்று காலை 10.30 மணியளவில் வெலிமடை பிரதேச உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு இருந்தனர்.
  இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் உடனடியாக “உருளைக்கிழங்கு இறக்குமதியை தடை செய்’, “உருளைக் கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்கு’, “கிழங்கு இறக்குமதியாளர்கள் சுகபோகத்தில் உருளைக்கிழங்கு விவசாயிகள் அந்தரத்தில்’, “உள்நாட்டு உற்பத்தியை ஏன் அரசு கண்டுகொள்வதில்லை’ என்ற கோஷங்கள் எழுப்பினர்.//


 32. palli on August 21, 2010 9:27 am

  //இவை பற்றி மேலும் விளக்கம் வேண்டின் தங்கள் நண்பர் ஜானை அணுகலாமே? // Naadoode
  புரியலையே,,,,,???


 33. palli on August 21, 2010 10:14 am

  //“உருளைக்கிழங்கு இறக்குமதியை தடை செய்’, // Naadoode
  நியாயமான ஆர்பாட்டம்தான், இதுக்காக தினமும் ஆர்பாட்டம் செய்ய முடியாதல்லவா?? அப்படியாயின் நாம் உருளைகிழங்கை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு விளைவிக்க என்ன செய்யவேண்டும் என்பதையே சிந்திக்க வேண்டும்; இறக்குமதியை தடுக்க ஆர்பாட்டம் செய்யும் அதேவேளை ஏற்றுமதி பற்றியும் அதற்கான முயற்ச்சியும் மிகஅவசியம்;


 34. nantha on August 21, 2010 1:52 pm

  நெல்லுக்கு அரசை விட அதிக விலை கொடுப்பார் யாரும் இலங்கையில் இல்லை. அடுத்ததாக ‘அடிமாட்டு” விலைக்கு நெல்லை வாங்குபவர்கள் “அந்த வியாபாரிகள் ஒன்றில் அமைச்சர்களாக அல்லது அவர்களுடைய பினாமிகளாகத் தான் இருக்கிறார்கள் என்பது இலங்கையின் யதார்த்தம்” என்பது தவறு. வவுனியாவில் மில் வைத்திருப்பவர்களும், நெல் விற்பனையில் ஈடு பட்டுள்ளவர்களும் “தமிழீழ” ஆதரவாளர்கள் என்பது எனக்குத் தெரிந்த உண்மை!


 35. sahabdeen nana on August 21, 2010 2:12 pm

  எவ்வளவுதான் இறக்குமதி செய்தாலும் நமது உருளைக்கிழங்கின், டேஸ்ரும், மகிமையும் வேறு. கண்டி கொழும்பு வீதி, செனநாயக்கா வீதி, அலிமுடுக்கு போன்ற இடங்களில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் கேட்டால் நமது கிழங்கின் மகாத்மியம் பற்றி சொல்வார்கள். அதிருக்க;;
  இரண்டு வருடத்துக்கு முதல் நுவரெலியா,ராகலை, தலவாக்கொல்ல, நாணு ஓயா உருளைக்கிழங்கு உற்பதியாளர்களும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆயத்தமானர்கள். ஆனால் அவர்களுக்கு ஆர்ப்பாட்டத்துக்கு போய் உங்கள் ஒரு நாள் வேலையையும், உழைப்பையும் வீணாக்கி விடாதீர்கள் என ஆலோசனை வளங்கப்பட்டது.
  அதாவது
  உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யுங்கோவன். பிரெஞ் ப்றை ஸ்டைலில் உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்ய யாரோ ஒரு நல்லவர் வழிகாட்டினார். ஆம் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சந்தையில் 55 ரூபா, நம்மவன்ட சிப்ஸ் கிலோ 200ரூபாவுக்கு மேல். மழைக்காலங்களில் எப்படி சிப்சை உலர வைப்பது? இருக்கவே இருக்கிறது வெஜ்ஜிடபள் ட்ரையர், இது பிரான்சில் 70 டாலர், ஸ்பெயினில் 60 டாலர், சைனாவில் 45 டாலர்.

  அய்யய்யோ டாலர்கணக்கில் செலவு செய்ய எங்களிடம் பணமில்லையே என அந்த உற்பத்தியாளர்கள் கைவிரித்த போது; மகியங்கனை ஆந்தாஉல் பத்த என்ற கிராமத்தில் உள்ள ஒரு குட்டி இளைஞன் இரண்டாயிரம் ரூபாவுக்கு அவ்வியந்திரத்தை செய்தான்.

  அரசியலில், அடுத்தவனுக்கு ஆப்படிப்பதில் எடுக்கும் கவனத்தை கூட; ஏழைகளுக்கு உதவுவோமே என்ற விடயத்தில் நாம் (என்னையும் சேர்த்துத்தான் சொல்கின்றேன்) செலுத்துவதில்லை. பேங்கொக்(தாய்லாந்து) கில், இறக்குமதியினால் வாழைப்பழத்தினதும், பழப்புளியினதும் விலை சரிந்தபோது பேங்கொக் மக்கள் ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்யவில்லை. சத்தமின்றி, ரத்தமின்றி தமது ஸ்டைலை கொஞ்சம் மாற்றினார்கள். வாழைப்பழத்தை இரண்டாகப் பிழந்து சீனிப்பாணியில் (சீனிப்பாகு) பொரித்தார்கள். பழம் புளியை வாகாக வகுந்தெடுத்து அதே சீனிப்பாணியில் பொரித்தார்கள். 300 வீத நிகர இலாபம்.

  போராட்டம் ஒன்றுதான். பாணியைமாற்றுவோம் என்பதுதான் என்பக்க நியாயம்.


 36. palli on August 21, 2010 6:31 pm

  //போராட்டம் ஒன்றுதான். பாணியைமாற்றுவோம் என்பதுதான் என்பக்க நியாயம்.//
  பல்லியும் இதில் உடன்படுகிறேன், தேவை (ஏதோ ஒன்று)ஏற்படுகின்ற போதுதான் முயற்ச்சியின் வேகம் அதிகரிக்கும் என்பார்கள்.


 37. Jeyabalan T on August 21, 2010 8:21 pm

  //நீங்கள் அன்புவைத்திருக்கும் உங்கள் வழித்தோன்றல்களின் வாழ்வை உறுதிசெய்வதாயின், உங்கள் வழிதோன்றல்கள் வாழப்போகும் அவர்களது சமுதாயத்திற்காய் ஏதாவது நல்லதுகள் பல செய்வீர்களாக.// கலாமோகன்

  நாடோடி இக்கருத்துடன் முழுமையாக உடன்படுவதாகக் கூறுகிறார். நாடோடிக்கு எனது மொழி புரியவில்லை என நினைக்கிறேன். பரவாயில்லை கலாமோகன் தனது மொழியில் புரியவைத்துள்ளார். நன்றி கலாமோகன்.

  பல்லி எனது கருத்தை தவறாகப் புரிந்து விட்டார் என நினைக்கிறேன். இலங்கை அரசை விமர்சிப்பதையோ அதற்கு எதிராகப் போராடுவதையோ தவறு என்றோ அல்லது அவ்வாறு செய்ய வேண்டாம் என்றோ எங்கும் குறிப்பிடவில்லை. அப்படிக் குறிப்பிடும் போது நான் ஊடகத்தில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டும்.

  இங்கு எனது வாதத்தின் மையம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது வாழ்வை மேம்படுத்துவதற்கு உதவ வேண்டும். கலாமோகனின் மொழியில் சொல்வதானால் ”நீங்கள் அன்புவைத்திருக்கும் உங்கள் வழித்தோன்றல்களின் வாழ்வை உறுதிசெய்வதாயின் உங்கள் வழிதோன்றல்கள் வாழப்போகும் அவர்களது சமுதாயத்திற்காய் ஏதாவது நல்லதுகள் பல செய்வீர்களாக.”

  உங்கள் மக்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு கைகொடுத்துக் கொண்டு உங்கள் போராட்டத்தை முன்னெடுங்கள். விமர்சனங்களை முன் வையுங்கள்.

  இங்கு எதிர்நோக்குகின்ற பிரச்சினை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை இலங்கை அரசுக்கு உதவுவதாக காட்டி அந்த மக்களை தொடர்ந்தும் கீழ்நிலையில் வைக்க முயற்சிக்கப்படுவதையே எதிர்க்கின்றேன். ஏனெனில் காலம் காலமாக போராட்டம் என்ற பெயரில் மக்களின் அழிவிலும் அவலத்திலும் அரசியல் செய்வதே வழமையாகிவிட்டது.

  அதனால் போராட வேண்டும் என்று கோருபவர்களின் சிந்தனையில் மக்களின் அவலத்தை அரசியலாக்குகின்ற சிந்தனைப் போக்கையே உணர முடிகின்றது. இது மக்களைப் பலப்படுத்தி அவர்களுக்கு அறிவூட்டிப் போராட்டத்தை முன்னெடுப்பதற்குப் பதிலாக அவர்களது அழிவையும் அவலத்தையும் வைத்து அவர்களது அறிவுநிலையைத் தொடர்ந்தும் கீழ்நிலையில் வைத்திருக்கும் ஒரு போக்கே. காணப்படுகிறது.

  சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய அனைவருமே இறுதியில் இந்த 3ம் தர போராட்டத்தையே முன்னெடுத்தனர். அதுவே தமிழ் மக்களின் பாரிய அழிவிற்குக் காரணமானது. எப்போதும் எதிரிமீது பழியைப் போட்டுத் தப்பிக்கின்ற மனப்பான்மையே அன்றைய தலைமைகளுக்கு இருந்தது. இன்றைய தலைமைகளும் அதனையே செய்ய முற்படுகின்றனர். தமிழரின் தலைவிதியை எப்போதும் எதிரியே தீர்மானிக்கிறான். அதனை மாற்ற அது பற்றிச் சிந்திக்க நாம் தயாராகவில்லை. உணர்ச்சிக் கோசங்கள் மட்டும் விடியலைக் கொண்டு வராது என்பதே இன்னமும் என்னுடைய நிலைப்பாடு.

  போராடிச் சாவதால் பேரின்பப் பெருவாழ்வு கிட்டாது. போராடி வாழ வேண்டும். வாழ்வதற்காகப் போராட வேண்டும். போராடுவதற்காக வாழ முடியாது.

  த ஜெயபாலன்.


 38. palli on August 21, 2010 10:13 pm

  //பல்லி எனது கருத்தை தவறாகப் புரிந்து விட்டார் என நினைக்கிறேன். //
  நான் எப்போதும் ஜெயபாலனை மட்டுமல்ல யாரையும் தப்பாய் எண்ணியது இல்லை; அப்படி எண்ணும் பட்சத்தில் நான் எனது நம்பிக்கையில் அல்லது என் கருத்துமீது நம்பிக்கை இளக்கிறேன் என ஆகி விடும்;

  ஜெயபாலன் உங்கள் கருத்து பல என்னை இந்த தேசத்தில் எழுத வைத்தது; அதில் ஒரு மகாநாட்டில் தாங்கள் கல்வி பற்றி பேசியது இன்றும் ஏன் இந்த கட்டுரைக்கும் பொருந்தும் என நினைக்கிறேன், (நீங்கள் சொன்னதுதான் கல்வியில் இட ஒதுக்கீடு யாருக்கும் தேவையில்லை அனைவருக்கும் பாகுபாடின்றி தரமான கல்வி வழங்கபடவேண்டும், அந்த கல்வியே ஒரு சமூகத்தை சமநிலை படுத்தும் என்பது) ஆகவே அரசோ அல்லது அமைப்புகளோ எதுவாயினும் இன மத பாகுபாடின்றி (அபிவிருத்தி உட்பட) நிவாகிக்குமானால் கண்டிப்பாக ஒரு சமூகமாற்றம் தென்படும் என்பதே என் அனைத்து பின்னோட்டங்களும்;

  //இங்கு எனது வாதத்தின் மையம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது வாழ்வை மேம்படுத்துவதற்கு உதவ வேண்டும்.//
  இதில் மறு கருத்துக்கே இடம் இல்லை தாங்கள் ஓரு ஊடகவியாளானாக செயல்படுகிறீர்கள் பல்லி ஒரு சராசரி மனிதனாகவே செயல்படுகிறேன்;

  //சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய அனைவருமே இறுதியில் இந்த 3ம் தர போராட்டத்தையே முன்னெடுத்தனர். //
  எனக்கு இந்த போராட்டம் சதிராட்டம் என்பதில் 1980களிலேயே உடன்பாடு இல்லை, இதை பலமுறை இதே தேசத்திலும் நான் சொல்லி விட்டேன்;

  //தமிழரின் தலைவிதியை எப்போதும் எதிரியே தீர்மானிக்கிறான். //
  உன்மைதான் அதுக்கான முதலுதவியை தமிழந்தான் கொடுக்கிறான்:( இராமநாதன் இருந்து கே பி வரை)

  //போராடுவதற்காக வாழ முடியாது.//
  சிலரது போராட்ட குணமே இதுவரை பலமக்கள் வழியில் துன்பபட வழி வகுத்தது;

  //வாழ்வதற்காகப் போராட வேண்டும்.: ://
  அதை அனைத்து மக்களும் இனைந்து செய்யவேண்டும்; அதற்கு பின்னால் போராளிகள் இருக்க வேண்டும் இது மாறாக போராளிகள் பின்னால் அல்லவா மக்கள் பயணிக்க வேண்டி உள்ளது;

  // எப்போதும் எதிரிமீது பழியைப் போட்டுத் தப்பிக்கின்ற மனப்பான்மையே அன்றைய தலைமைகளுக்கு இருந்தது.//
  இதுவே அவர்களது தற்பாதுகாப்பு கலையும் மக்களது அறியாமையும்; இனிமேல் காலங்களில் இது சரிவராது என நினைக்கிறேன்;

  // உணர்ச்சிக் கோசங்கள் மட்டும் விடியலைக் கொண்டு வராது என்பதே இன்னமும் என்னுடைய நிலைப்பாடு. //
  இது ஒரு சமூகத்துக்கு மட்டுமல்ல தனிமனிதனுக்கும் பொருந்தும்;

  //உங்கள் மக்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு கைகொடுத்துக் கொண்டு உங்கள் போராட்டத்தை முன்னெடுங்கள். விமர்சனங்களை முன் வையுங்கள். //
  இது நடைமுறைக்கு வரும்போது போராட்டம் எதுக்கு? தேவையே இருக்காது; இதில் நாம் சீக்கிய மக்களையும் ஏன் யூதர்களை கூட கவனத்தில் எடுக்கலாம்;

  //”நீங்கள் அன்புவைத்திருக்கும் உங்கள் வழித்தோன்றல்களின் வாழ்வை உறுதிசெய்வதாயின் உங்கள் வழிதோன்றல்கள் வாழப்போகும் அவர்களது சமுதாயத்திற்காய் ஏதாவது நல்லதுகள் பல செய்வீர்களாக.”//
  இதுக்கும் எமது எழுத்து உதவ வேண்டும் என்பதே
  பல்லியின் கனா,,


 39. naadoode on August 23, 2010 3:27 pm

  விடுதலைப் புலிகளையும் அவர்களுடைய போராட்டத்தின் பலவீனங்களையும் வைத்துக் கொண்டு மக்களின் போராட்டங்களை அதன் நியாயத் தன்மைகளை நாம் மறுதலிக்க வேண்டாமே.

  //அது பெரிய தல. பெரிய கை. அவர்கள் இந்தியாவுக்கு அசைந்து கொடுத்து சைனாவுக்கு வளைந்து கொடுத்து ஜீஎஸ்பி என்ற பெரும் பூதத்துக்கு விட்டுக்கொடுத்து நம்ம வீட்டுக்கு வந்து விருந்து படைக்க நாளெடுக்கும் அல்லது காலம் கடக்கும்.// சஹாப்தீன் நாநா

  தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒதுக்கப்படும் சில ஆயிரங்கள் திரும்பிப் போவதாகக் கணக்கு காட்டும் சஹாப்தீன் நாநா (காட்டக் கூடாதென்று நான் சொல்லவில்லை) மகிந்த அரசாங்கத்தின் மோசடி மற்றும் ஊழல் குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை. பதிலாக அவர்கள் எவ்வளவு கஸ்டப்பட்டு மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தொனிதான் அவருடைய மேற்படி பந்தியில் வருகிறது.

  இதில் அவர் எப்படி அரசாங்கத்தை விமர்சிக்கிறார் என்பதை ஜெயபாலன் தான் பொழிப்பு எழுதி விளக்க வேண்டும்.

  //இலங்கை அரசை விமர்சிப்பதையோ அதற்கு எதிராகப் போராடுவதையோ தவறு என்றோ அல்லது அவ்வாறு செய்ய வேண்டாம் என்றோ எங்கும் குறிப்பிடவில்லை. அப்படிக் குறிப்பிடும் போது நான் ஊடகத்தில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டும்// த.ஜெயபாலன்.

  நான் யாரையும் தூக்கி எறிய வரவில்லை. சஹாப்தீன் நாநாவின் கண்ணொட்டத்திலுள்ள குறைபாட்டைச்சுட்ட மட்டுமே விரும்பினேன். கூடவே போராட்டத்தை நடாத்திய புலிகளையும் புலித் தலைமையையும் அவர்களின் தவறுகளையும் விமர்சிக்கிறோம் என்ற போர்வையில் ஒரு மோசடித்தனமான சுரண்டல் மிக்க இனவாத அரசாங்கத்திற்கெதிராக பல்வேறு தளஙகளில் நடைபெறுகின்ற போராட்டங்களை அதனைப் புலி ஆதரவு என்று சுருக்கி அதனை விமர்சியாது அல்லது அதனைக்கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு கடந்து போவதைத் தான் சுட்டிக்காட்ட விரும்பினேன்.

  மற்றும்படி அங்கு துன்பப்படும் மக்களுக்கு உதவுவது பற்றியும் அங்குள்ள மக்களை அறியாமையிலிருந்து வெளிக்கொணர்வது பற்றியும் அப்பிரதேசங்களின் அபிவிருத்த பற்றியும் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பிறகு ‘ஞானம்’ வந்த கோஸ்டியினரை விட அதற்கு பல ஆண்டுகள் முன்பிருந்தே அதற்காகவே அரசாங்கத்துடனும் புலிகளுடனும் இன்னும் அதகாரத்திரப்பிலிருந்த பலருடனும் போராடி வந்த பலரை அந்த மக்களுக்கு உதவி வந்த பலரை நாடோடி அறிவான். அவர்கள் இன்றும் அமைதியாக தமது பணியை ஆற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

  சஹாப்தீன் நாநாவுக்கு இருப்பது போல மகிந்தவுக்கு இருக்கும் கஸ்டங்களை யோசிப்பதற்குப் பதில் அரசாங்கத்தாலும் புலிகளாலும் மக்களுக்கு இருக்கும் கஸ்டங்களைப்பற்றி யோசித்தவர்கள் யோசிப்பவர்கள் அவர்கள்.


 40. naadoode on August 24, 2010 7:00 am

  //ஆனால் நீ அவன்ட மாளிகைக்கு முன்னால தேரோட்டம் போறதை மகின்தவும், பொண்டாட்டியும் தரிசிக்கின்றார்கள், ஆனால் நீ எங்க பகுதியில் வந்து யாவாரமும் செய்யக் கூடாது, கோயில் பூசையும் செய்யக் கூடாது….புரியல ? புரியல…நம்ம இதயத்துக்குள்ள இருக்கிற அந்த சாமான் என்ன என்று புரியல. எனக்கு நியாயமாயும் படல.//

  சாகிப்தீன் நாநா உங்க இதயத்துக்குள்ள இருக்கிற சாமான் என்னவென்று நமக்குப் புரியவில்லை. அது நியாயமாயும் படவில்லை. விசயம் தெரியாம விழுந்த பாட்டுக்கு குறி சுடுவது சரியாயும் படவில்லை. இனவாதம் இரண்டு தரப்பிலையும் இருக்கின்றது. அதென்னவோ சிங்களவர் பெருந்தன்மையானவர்கள் போலவும் தமிழர் தான் வெறும் இனவாதிகள் போலவும் கதை விடுவது எந்தளவுக்குச் சரி.

  நுரறு வருடத்திற்கு மேற்பட்ட பழமைவாய்ந்த இரத்தினபுரி இறத்தோட்டை சிறி முத்துமாரி அம்மன் கோயில் மகோற்சவம் முதல் முறையா போன ஏப்ரலில் நிறுத்தப்பட்டது காரணம் தெரியுமா? அந்த மகோற்சவம் சித்திரா பெளர்ணமி அன்று வருகுதாம். பெளர்ணமி தினம் தங்களுக்குப் புனிதமான தினமாம். இங்கு மகோற்சவம் நடத்தினால் தங்களுக்குப் பெளத்த விகாரையில் வழிபாடு நடத்த முடியாதிருக்கிறதாம். அதனால் அந்தன்று பெளர்ணமியன்று தமிழர் மகோற்சவத்தைக் கொண்டாடக் கூடாதாம். மீறிக் கொண்டாடினால் இரத்த ஆறு தான் ஓடுமாம். – பாருங்கள் பெளர்ணமி தினத்தன்று வழிபாடு நடாத்துபவர்கள் இரத்த ஆறு ஓடும் என்று எச்சரிப்பதை- என்று எச்சரித்தார்கள்.

  கோவில் நிர்வாகம் பொலிஸ் அரசியல்வாதிகள் என்று எங்கு அலைந்தும் பிரயோசனம் கிட்டவில்லை. மீறி திருவிழாவை நடாத்தி இரத்த ஆறை ஓட விட விரும்பவில்லை. தமிழ் மக்கள் பாதிப்புக்குளாவதை விரும்பவில்லை. போன வருடம் மகோற்சவத்தையே நிறுத்தி விட்டது. அந்தக் கோவிலின் வரலாற்றில் முதல் தடவையாக இனவாதிகளின் அச்சுறுத்தால் மகோற்சவம் நிறுத்தப்பட்டது.

  சாகிப்தீன் நாநா, மகிந்தவும் பொண்டாட்டியும் தரிசிக்கிறது ஒரு அரசியல் என்டால் இது இன்னொரு அரசியல்.

  எல்லாத் தரப்பிலையும் உள்ள இனவாதத்தை எதிர்க்க வேணும் என்றால் சரி. ஆனால் சாகிப்தீன் நாநா விழுந்தபாட்டுக்கு குறி சுட்டா அது ஒரு நாள் சுட்டவனையும் சுடும்.


 41. Kusumpu on August 25, 2010 8:29 pm

  நிலத்தின் கீழ் இல்லாத வளங்களை தேடுவது கடவுளைத் தேடுவது போன்றது. கடவுளை வைத்தே உழைக்கப்பளகியுள்ளது உலகம். நிலத்தின் கீழ் இல்லாத வளங்களைத் தேடுவதை விட நிலத்தின் மேல் எம் கண்முன்னால் உள்ள மனிதவளங்களைத் தேடுங்கள். பயன்படுத்துங்கள். சிங்களவர் தமிழர் சோனகர்கள் எல்லாரும் மனிதர்கள் தான். மூளைவளத்தையுமா மறந்து விட்டீர்கள்.


 42. Kusumpu on August 25, 2010 8:54 pm

  /சிந்திக்கும் வளம் நம்மால் வளங்கப்பட்டிருக்கும். அதுதான் ஆரம்பம். அவ்வாறு அவன் சிந்திப்பதுதான் ஆரம்பம். அவனை தானாக, சுயமாக சிந்திக்க விட வேண்டும். அப்புறம் என்ன செய்யலாம் என அவனே முடிவெடுப்பான்./
  சிந்திப்பதா? நாமா? சிந்திக்காமல் இருப்பதற்குத்தானே இனங்களை சாதியை உலகம் வளர்த்து வைத்திருக்கிறது. அரசியல் பிழைப்புக்காக சிங்களவன் அன்று சோனகனுக்கு அடித்தான். பின் அவனைக்காத்து நின்ற தமிழனை கொன்று குவித்தான் இனி யாரை. இதில் தமிழரோ சோனகரோ குறைந்தவர்கள் அல்ல. வேறுபாடுகள் களையப்படும் வரை சிறீலங்கா சுனாமி தின்னும் நாடுதான்.
  நாம் சிந்திக்க மாட்டேன் பந்தயம் பிடிப்பதா? முஸ்லீமை இனம் என்கிறீர்களே தவறு. முஸ்லீம் மதம்: சோனக இனம். சிந்திக்கப்படாது. மதத்துக்குள் மனம் இருக்கவேண்டும் NO.

  17:18:19: என்று என்ன பகிடியா விடுகிறீர்கள் எமது தலைவர் வருவார் தமிழீழம் பெற்றுத்தருவார். சிங்களைவரையும் சோனகரையும் இலங்கையை விட்டுக் கலைப்பார். தமிழீழம் மலரும். மனிதர்கள் சாகும் போது சும்மா சாகமாட்டார்கள். இருக்கிறவர்களுக்கு ஏதாவது வில்லங்கத்தை வைத்துவிட்டுத்தான் போவார்கள். கடைசிகாலத்தில் இழுத்துக் கொண்டு மேடை மேடையாகத் திருந்து தமிழீழம் என்று சும்மா இருந்த பொடியளை உசுப்பி விட்டு செல்வா போட்டார். இது பிரபாரன் தொடக்கிய போர் இல்லை சிங்கள அரசியல்வாதிகளும் தமிழ் அரசியல் வாதிகளும் ஒப்பந்தம் செய்து தொடக்கிய போர் முள்ளிவாய்க்காலிலும் முடியவில்லை. அடிமனங்களில் ஆழமாக எழுதப்பட்டுள்ளது அது அடியோடு அழியும்வரை எல்லாமே காக்கத்தான்….


 43. ஜெயராஜா on August 26, 2010 4:31 pm

  சபாஷ் சாகிப் நாநா. தொடர்ந்து எழுதுங்கள். இதுதான் இன்றைய தேவை.
  பூநகரி மொட்டைக்கறுப்பன், யாழ்ப்பாண கறுத்தக் கொழும்பான், நீர்வேலி வாழைக்குலை, புங்குடுதீவு புழுக்கொடியல், மன்னார் றால், மட்டக்களப்பு தயிர் இப்படி இருந்தவர்கள் இப்போது தாதுப் பொருட்கள் பற்றியும், கொட்டல் கட்டுவது பற்றியும், ஜரோப்பா மாதிரி சுப்பமார்க்கெட் கட்டுவது பற்றியும், வேறு என்ன அபிவிருத்தி செய்யலாம் என்பது பற்றியும் சிந்திக்கிறார்கள். முடிந்தால் மீன்பிடி விவசாயம் கால்நடை இவை சம்பந்தமான ஜடியாக்களையும் கூறுங்களேன். கடைசியிலை தொப்பி பிரட்ட மாட்டீங்கள்தானே. நம்பிக்கைதானே வாழ்க்கை. நம்புவோமே.(இது உங்கள் வசனம்)


 44. JACQUELINE KINGS on December 8, 2017 2:32 pm

  நல்ல நாள் அனைவருக்கும்,
  நிதி உதவி கேட்கிறீர்களா? உலகின் அனைத்து நாடுகளுக்கும் கடனளிக்கும் வங்கியியல் முறையுடன் நாங்கள் கடன்களை வழங்குகிறோம், எங்கள் வட்டி விகிதம் 2% ஆகும். இன்று எங்களை தொடர்பு கொண்டு, உங்கள் கடன் விவரங்களை 48 மணி நேரத்திற்குள் பெற்றுக் கொள்ளுங்கள்.
  EMAIL: jacquelinekingsfinancefirm@aol.com
  WHATSAPP: +16106340720
  PHONE: +16106340720


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு