இடம்பெயர்ந்து வாழும் யாழ். முஸ்லிம்களின் விபரங்கள் நூல் வடிவில் வெளியிடப்படவுள்ளது.

Chavakachcheri_Jumma_Mosqueயாழில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 1990 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெயர்ந்து வாழும் யாழ். முஸ்லிம்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவ்விபரங்களை நூல் வடிவில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவம் யாழ். மானிப்பாய் பெரிய முகைதின் ஜூம்மா பள்ளிவாசல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த மாதமளவில் இந்த நூல் வெளியீடு நடைபெறவள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உலாமாக்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள். கலை இலக்கியவாதிகள் சகலரும் தமது விபரங்களை அனுப்பி வைக்கலாம் என குறித்த பள்ளிவாசல் வட்டாரம் தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • suban
    suban

    நல்லவிடயம் வரவேற்கிறேன் புத்தகம் நல்ல ஆதாரமானத அதே போல யாழ் முஸ்லீம்கள் முன்னின்று செய்த விடயங்களையும் அதே புத்தகத்தில் சேர்த்து எழுதவும்

    அரச இராணுவம் தமிழர் கடைகளை கொழுத்தியபோது முஸ்லீம் இளைஞர்களும் பெண்களுமாக தலைக்கு தொப்பியும் முட்டாக்கும் போட்டு வந்து இராணுவம் உடைத்த கடைகளில் கொள்ளையிட்டதையும் சேர்த்து எழுதுங்கள்

    இராணுவம் தமிழரை அடித்தபோது தமிழர்கள் பொதுவாக இளைஞர்கள் ஓடி ஒளித்தபோது இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த முஸ்லீம்கள் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அதை இராணுவத்துக்கு சொல்லிக் கொடுத்து கொலை செய்ப்பட்டதையும் சேர்த்து எழுதவும் அப்போது தான் புத்தகம் பலன்ஸ்சாக வரும்.– Suban Jaffna

    Reply
  • Kusumpu
    Kusumpu

    நல்லவிடயம் யாழ்பாணத்தில் இருந்து இடம்யெயர்ந்த முஸ்லீம்களை தேடிப்பிடித்த கணக்கெடுக்கும் கர்த்தாக்களே. இவர்கள் எங்கிருந்த யாழ்பாணம் வந்தார்கள் என்பதையும் சுபன் சொல்லதுபோல் பனையால் விழுந்தவனை மாடேறு உளக்கிய மாதிரி நடந்து கொண்ட வரலாறுகளையும் சேர்ந்து எழுதுங்கள். அது மட்டுமல்ல வெளிநாடு அனுப்புகிறேன் கணவன் காதலிடம் அனுப்பி வைக்கிறேன் என்று தமிழ் பெண்களையும் கன்னியர்களையும் கொழும்பு கொண்டு வந்து மட்டுமல்ல வெளிநாடுகள் கொண்டு சென்று தமது காமப்பசிக்கு இரையாக்கி விட்டு நடத்தெருவில் விட்ட கதைகளையும் கணக்கெடுப்புக்களையும் சேர்த்து எழுதுங்கள். நாங்கள் உதவி செய்கிறோம்.

    Reply
  • N.Selvarajah
    N.Selvarajah

    இலங்கையின் இனப்பிரச்சினையும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லீம்களும் என்ற தொடரில் எஸ்.எச்.ஹஸ்புல்லா. அவர்கள் கொழும்பு 6: வடக்கு முஸ்லீம்களின் உரிமைக்கான அமைப்பு என்ற அமைப்பினூடாக விரிவான தகவல்களுடன் ஏற்கெனவே 6 தொகுதிகளை (அதைவிட அதிகமாக இருக்கலாம் பின்னைய தகவல் இல்லை) 1997இலேயே நூலுருவில் வெளியிட்டிருந்தார். இதைவிட முஸ்லிம்களின் பாரம்பரியப்பிரதேச வரலாறுகள் தொர்பான பல நூல்கள் (இருபதுக்கும் அதிகமானவை) விரிவாகத் தொகுக்கப்பட்டு ஏற்கெனவெ ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பார்க்க நூல்தேட்டம் தொகுதி 1-6.
    யாழ். மானிப்பாய் பெரிய முகைதின் ஜூம்மா பள்ளிவாசல் வட்டாரங்கள் இவை தொடர்பாக அறியவில்லையா?

    1929
    இலங்கையின் இனப்பிரச்சினையும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லீம்களும் (தொகுதி 3): முல்லைத்தீவு முஸ்லீம்கள். எஸ்.எச்.ஹஸ்புல்லா. கொழும்பு 6: வடக்கு முஸ்லீம்களின் உரிமைக்கான அமைப்பு> 15 யு ரோகிணி வீதி> 1வது பதிப்பு> 1997. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ்> 48டீ புளுமென்டால் வீதி).
    ஒiஎ> 183 பக்கம்> நிலவரைபடம்> விலை: ரூபா 150. அளவு: 21.5ஒ14 சமீ. (ஐளுடீN: 955-9445-03-0).

    1930
    இலங்கையின் இனப்பிரச்சினையும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லீம்களும் (தொகுதி 5): முசலி முஸ்லீம்கள். எஸ்.எச்.ஹஸ்புல்லா. கொழும்பு 6: வடக்கு முஸ்லீம்களின் உரிமைக்கான அமைப்பு> 15யு ரோகிணி வீதி> 1வது பதிப்பு> 1997. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ்> 48டீ புளுமென்டால் வீதி).
    ஒஎii> 192 பக்கம்> நிலவரைபடம்> விலை: ரூபா 150. அளவு: 21.5ஒ14 சமீ. (ஐளுடீN: 955 9445 05 7).

    1931
    இலங்கையின் இனப்பிரச்சினையும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லீம்களும் (தொகுதி 6): மாந்தை-நானாட்டான் முஸ்லீம்கள். எஸ்.எச்.ஹஸ்புல்லா. கொழும்பு 6: வடக்கு முஸ்லீம்களின் உரிமைக்கான அமைப்பு> 15யு ரோகிணி வீதி> 1வது பதிப்பு> 1997. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ்> 48டீ புளுமென்டால் வீதி).
    ஒiஎ> 144 பக்கம்> நிலவரைபடம்> விலை: ரூபா 150. அளவு: 21.5ஒ14 சமீ. (ஐளுடீN: 955 9445 06 5).

    N.Selvarajah, Noolthettam

    Reply