”எந்திரன்” – தமிழ்ப்பட ரசிகர்களைத் ‘தந்திரமாக’ ஏமாற்றும் பிரமாண்டமான படைப்பு : ரதிவர்மன்

Endiranமிகப் பிரமாண்டமான செலவில் (25-40 அமெரிக்க கோடிகள்), தயாரிக்கப்பட்டு ஒரே நாளில் உலகில் 2250 திரைகளில் வெளியிடப்பட்ட படம் எந்திரன். முதல்நாள் காட்சிகளே  25 கோடி (அமெரிக்க டாலர்ஸ்) களுக்கு விற்கப் பட்டிருக்கிறதாம். படத்தின் ஆதிமூலம் தமிழாகவிருந்தாலும், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் ‘டப்’ பண்ணப் பட்டிருக்கிறது. ஹிந்தி, தெலுங்கு படங்களுக்கு ஆங்கில மொழியில் சப் டைடிலும் போடப் பட்டிருக்கிறது. ஒரேயடியாக உலகமெல்லாம் 2250 திரைகளில் திரையிடப்பட்ட இப்படம் பலரின் பலவிதமான எதிர்பார்ப்புக்களையும் தூண்டி விட்டிருக்கிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்ப்பட வசூலைக் கொடுப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்களின் பொழுது போக்குக்குத் தமிழ்ப் படங்களை நாடுகிறார்கள். இவர்களால் தமிழத் திரையுலகம் நன்றாகப் பணம் படைக்கிறது. தமிழ்த் திரையுலகம் என்ன படத்தைக் கொடுத்தாலும் அதை விழுந்தடித்துக் கொண்டு பார்க்க புலம்பெயர்ந்த தமிழ்க் கூட்டம் இருக்கிறது. நோர்வேயில் ‘எந்திரன்’ ஒரு பிரமாண்டமான ‘கொலோசியக் கட்டிடத்தில்’ திரையிடப்படுவதாத் தமிழகப் பத்திரிகைகள் பீற்றிக்கொண்டன.

நோர்வேய்த் தமிழர்களில் பெரும்பாலோர் இலங்கைத் தமிழர்கள். இப்படம் அவர்களுக்கு என்ன தாக்கத்தை உண்டாக்கும் என்ற தெரியாது. திரையிடப்படும் இடங்கள் திருவிழா காண்கிறது என்று தென்னிந்தியத் தமிழ்ப் பத்திரிகைகள் பறைசாற்றின. ஆனால் ஹிந்தியில்  ‘ரோபோர்ட்’ என்ற பெயரில் (எந்திரன்) திரையிடப்பட்ட விடயங்களில் கைவிட்ட எண்ணக்கூடிய கூட்டம்தான் வந்திருந்தது. (01.10.10).

இது ஒரு வழக்கமான தமிழ்ப் படம், காதலிக்காக உலகத்தை அழிக்க முயலும் தமிழ்த் திரைப்படக் கதாநாயக வடிவத்தின் ‘இயந்திர் சொருபமாக ‘எந்திரன்’ படைக்கப் பட்டிருக்கிறது. தமிழகத்தின் பிரபல இயக்குனர்களில் ஒருத்தரான சங்கரின் கதையமைப்பு, இயக்கத்தில் மிக மிகப் பணச்செலவில் தயாரிக்கப் பட்டிருக்கிறது. ஆங்கிலப் படங்களான ‘அவதார’, ‘மெட்டரிக்ஸ்’ போன்றவற்றிக்கு இணையானது இப்படம் என்று இந்திய  தமிழ்ப் படங்கள் பெருமை கொட்டிக்கொள்கிறது.

கதாநாயகன் ( ரஜனிகாந்த், அறுபது வயதைத் தாண்டியவரா அல்லது தொட்டுக்கொண்டிருப்பவரா) டொக்டர் வசீகரன் (?) பத்துவருட கால கட்டங்களாக ஆராய்ச்சி செய்து உருவாக்கிய ஒரு இயந்திர மனிதனுக்கு டொக்டரின் காதலியான ஐஸ்வரியாவின் முத்தம் கன்னத்தில் பட்டதும் மனித உணர்வுகள் வந்து ஐஸ்வரியாவின் காதலை முழுமையாகப் பெற விஞ்ஞானத்தையே விழுங்குமளவுக்குத் தன்னை வளர்த்துக்கொண்டு இயந்திர மனிதன் போராடுவதுதான் கதை.

திரைப் படங்கள் எடுப்பவர்கள் தனக்குத் தெரிந்த ஒரு கருத்தையோ தத்துவத்தையோ சாதாரண மக்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் படம் எடுப்பார்கள். அல்லது பொழுதுபோக்குக்காக ஜனரஞ்சகமான படங்கள் எடுப்பார்கள். அல்லது சமயத்தைப்போதிக்கக் கடவுள்களின் மகிமைகளைக் காட்டும் படங்களை எடுப்பார்கள்.

இதை எடுத்த சங்கரால், தென்னிந்தியாவின் பிரபல நடிகரின் பல நாள் ஆசையான எப்படியும் உலக அழகியாகப் பட்டம் எடுத்த (1992) ஐஸ்வரியாவின் காதலான நெருங்கி நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தத்தான இந்தப் படம் எடுக்கப் பட்டதா என்ற கேள்வியின் திரைப்பட அமைப்பு எழுப்புகிறது.
 
அறுபது வயது முதுமை (பாவம் பார்க்கப் பரிதாபம்) முப்பத்தியாறு (மூ)முத்தழகுடன் பல நாடுகளுக்கும் பறந்து படம் பார்க்க வரும் இளைஞர்களைக் கிளு கிளுப்படைய வைக்க முயற்சிக்கிறது. இந்தக் கருத்துக்கு உதாரணம், காதலன் காதலி ஊடலில் தான்கொடுத்த முத்தங்களைத் திருப்பித் தரசொல்லிக் கதாநாயகன் கேட்க காதலி, காதலன்  வசீகரனின் கன்னத்தில் பட் பட்டென்று ‘உம்மாக்கள்’ கொடுக்க, அவள்கொடுக்கும் ‘இச்சுக்களின்’ நெருக்கம் பத்தாதென்று அடம் படிக்கிறார். உலகத்திலேயே அதிக சக்தி வாய்ந்த இயந்திர மனிதனை உருவாக்கிய ‘க(ல்)லாநிதி, இந்தக் கட்டத்தில் என்ன புதிய காதல் உத்தியை உட்புகுத்தி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. (இக்கட்டத்தைப் பெரிதுபடுத்தி விமர்சனம் எழுதப்பட்டதால் இதை எழுத வேண்டியிருக்கிறது.)

இயந்திரத்துக்கு டாக்டரின் காதலி சானாவில் வந்த  (ஐஸ்வரியாவில்) வந்த காதலைப் புரிந்து கொண்ட, கதாநாயகனின் எதிரியான இன்னொரு விஞ்ஞானி, இயந்திர மனிதனை மடக்கித்  தன் தேவைகளுக்குப் பாவித்துப் பணம் சேர்க்க அயல் நாட்டு சக்திகளுடன் கூட்டுச்சேர்கிறான். ஐஸ்வரியாவின் காதலைத் தவிர வேறு எதையும் கண்டுகொள்ளாத இயங்திர மனிதன் தன்னனைப் போல் இன்னும் பல் நூறு இயந்திரங்களை உருவாக்கி சானாவுக்காக உலகை அழிக்க முயல்கிறான்.
தனது காதலியை இயந்திரத்திடமிருந்து காப்பாற்றவும் அதேநேரம் உலகைக் காப்பாற்றவும் கதா நாயகன் வசீகரன்(?) தனது விஞ்ஞான அறிவைப் பாவித்து இயந்திர மனிதனை அழித்து விடுகிறார்.

இயக்குனர் சங்கர் தனது உதவி இயக்குனர்களுக்குப் பல ஆங்கிலப் படங்களைக் கொடுத்து அவற்றில் வரும் விறு விறுப்பான கட்டங்களைப் பற்றிய தகவல்களைச் கேகரித்துத் தனது படங்களின் ‘தேவைகளுக்குப்’ பாவிப்பதாக எங்கேயோ படித்திருக்கிறேன். பல ஆங்கிலப் படங்கனின் காட்சிகளின், கருத்துக்களின் சாயல்கள் இப்படத்தில் தொட்டுத்தடவிக் கிடக்கின்றன.
 
இந்தப் படத்தில் கதை பற்றியோ நடிப்பு பற்றியோ பெரிதாக ஒன்றும் இல்லை. ஐஸ்வரியாவுடன் பல நாடுகளுக்குப் போய்க் கவர்ச்சி நடனம் ஆடவும் ஐஸ்வரியாவுக்கு விதமான ஆடைகளைப் போட்டு அழகு பார்க்கவும்  பிரமாண்ட செலவு செய்யப்பட்டிருக்கிறது

அதுசரி ‘கிளி மான்சரோ’ பாட்டுக்குரிய ஆட்டக் காட்சியை ஏன் தென் அமெரிக்காவில் பெரும்பாலும் எடுத்தார்கள்? கிளிமாஞ்சரோ ஆபிரிக்காவிலல்லவா இருக்கிறது? (தமிழர்களுக்குச் சரித்தரம் தெரியாதென்ற நினைவு போலும்!) இவர்கள் அந்தப் பாடலுக்குப் படம் எடுத்த இடம் ஒருகாலத்தில் நாகரிக மனிதர்களாயிருந்து ஸ்பானிய காலனித்துவ வாதியான பிரான்கோயி பிச்சாரோ (1528) என்பரால் அழிக்கப்பட்ட ‘இங்கா’ என்ற இன மக்களைக் கொண்டிருந்த  ‘மாச்சுப்பூச்சி’ (1400 ஆண்டுகளில் உருவாக்கிய நகர்) என்ற தென்னமரிக்க இடமாகும்.

இந்தப் படத்தை மக்கள் திரணடு வந்த பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி படத்தை ஓட்டுவது பிரமாண்டமான டெக்னிக் காட்சிகளாகும். இப்படியான காட்சிகளைப் பார்க்க விரும்புவர்கள் உங்கள் குழந்தைகளுக்குப் பக்கத்தில் அவர்கள் கொம்பியுட்டர் கேம் விளையாடும் போது சேர்ந்திருந்தால் மிகவும் விறுவிறுப்பாகவிருக்கும்.

இறுதியாக, இப்படம் 12 வயதுக்கு மேலுள்ள வயதுள்ளவர்கள் பார்க்க வேண்டிய படம் என்று மேற்குலக தணிக்கை சபை சொல்லியிருக்கும் போது ‘எந்திரன்’ குடும்பத்துடன் சேர்ந்திருந்து பார்க்கக்கூடிய படம் என்று தென்னிந்தியத் தமிழ் இணையத்தளம் ஒன்று புழுகித் தள்ளியிருக்கிறது.

குடும்பம் என்றால் அதில் சிறு குழந்தைகளும் அடங்குவார்கள், அதைப்பற்றி ஒரு சின்னச் சந்தேகம், கதாநாயகியை வில்லர்கள் துரத்தித் தங்கள் கூட்டத்தின் நடுவிற் கிடத்தி துப்பட்டாவை உரிவதை அந்தக் கூட்டத்திலுள்ள ஒருத்தர் மோபைலில் படம் எடுக்கிறார். இக்கேவலமான கட்டத்தை சுப்பஸ்ரார் ரஜனிகாந்த் தனது பேரன் யாத்திராவுடன் சேர்ந்திருந்து பார்ப்பாரா?

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

28 Comments

  • பல்லி
    பல்லி

    //கதாநாயகியை வில்லர்கள் துரத்தித் தங்கள் கூட்டத்தின் நடுவிற் கிடத்தி துப்பட்டாவை உரிவதை அந்தக் கூட்டத்திலுள்ள ஒருத்தர் மோபைலில் படம் எடுக்கிறார். இக்கேவலமான கட்டத்தை சுப்பஸ்ரார் ரஜனிகாந்த் தனது பேரன் யாத்திராவுடன் சேர்ந்திருந்து பார்ப்பாரா?//
    கதாநாயகியின் குடும்பம் என்ன தனி தனியாகவா பார்க்க போகிறார்கள்? ரஜனிக்கு நீண்டநாள் கனவு அமிதாபக்ச்சனின் மருமகளுடன் ஆடவேண்டும் என்பது, நீலம்பரியில் ஆரம்பித்த இந்த ஆசை நிகழ்காலத்தில் முடிந்து விட்டது, சினிமா சீரழிந்து காலம் பல ஆகிவிட்டது,

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    திரைப்படத்துக்கு விமர்சனம் மிக முக்கியம். ஆனால் திரைப்படத்துக்குள் கதாபாத்திரங்களில் வருவோரது பின்னணி இங்கே தேவையற்றது. எந்திரன் விமர்சனம் என்று நினைத்தேன், இங்கும் அரசியல் மற்றும் தனிமனித தேவை நுழைந்து விட்டது என்பது கொடுமைதான்…….

    மீன் வாங்க சந்தைக்கு போனால் வாங்கிய மீன் நல்ல மீனா நாறின மீனா என் பார்த்து வாங்க வேண்டுமே தவிர, மீன் பிடித்தவன் விற்றவன் பின்னணியை ஆராய வேண்டியதில்லை. அதற்கு கிசு கிசு பகுதியுண்டு.

    CAMERAMAN RATHNAVELU INTERVIEW

    http://www.youtube.com/watch?v=uoSOdqMQO54&feature=player_embedded

    Reply
  • BC
    BC

    தமிழ்ப்பட ரசிகர்களைத் தந்திரமாக ஏமாற்றும் எந்திரனை பற்றிய இந்த கட்டுரை அவசியம் தேவை பாராட்டுகள் ரதிவர்மன்,தேசம்நெற்.

    Reply
  • பல்லி
    பல்லி

    // இங்கும் அரசியல் மற்றும் தனிமனித தேவை நுழைந்து விட்டது என்பது கொடுமைதான்…….//
    இது விமர்சகர் குற்றமா அல்லது உங்க சினிமா வட்டாரத்தின் குற்றமா??

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    //இது விமர்சகர் குற்றமா அல்லது உங்க சினிமா வட்டாரத்தின் குற்றமா??//

    இது நம்மவர் அடி மனதின் பிரச்சனை என நினைக்கிறேன். நான் இன்னும் இத் திரைப்படத்தைப் பார்க்கவில்லை. இருந்தாலும் அனைத்து படைப்புகளும் நமக்கு வேண்டிய படி வரவேண்டும் என்பதில்லை. “அவதார்” திரைப்படம் வந்த போது அதன் கதை சுமாரானதுதான். இருந்தாலும் அதன் தொழில் நுட்பம் காரணமாக அது ஒரு மாபெரும் படைப்பாக பேசப்பட்டது. அதன் கலைஞர்கள் குறித்து அலட்டிக் கொள்ளவில்லை. திரைப்படம் குறித்தே பேசினோம். உலக திரைப்படங்களை பார்க்கும் வாய்ப்புகள் நமக்கு அதிகமாகவே இருக்கிறது. இருந்தும் என்ன? நாம் அதே அடி மட்ட சிந்தனையில் இருக்கிறோம். இவை சற்று மாறுபட வேண்டும். எனவே விமர்சனம் என எழுதும் போது படைப்புக்கான விமர்சனமாக இருக்க வேண்டுமே ஒழிய அது படைப்பாளிகளை விமர்சிக்கும் விமர்சனமாக ஆகலாகாது.

    //அதுசரி ‘கிளி மான்சரோ’ பாட்டுக்குரிய ஆட்டக் காட்சியை ஏன் தென் அமெரிக்காவில் பெரும்பாலும் எடுத்தார்கள்? கிளிமாஞ்சரோ ஆபிரிக்காவிலல்லவா இருக்கிறது? (தமிழர்களுக்குச் சரித்தரம் தெரியாதென்ற நினைவு போலும்!) இவர்கள் அந்தப் பாடலுக்குப் படம் எடுத்த இடம் ஒருகாலத்தில் நாகரிக மனிதர்களாயிருந்து ஸ்பானிய காலனித்துவ வாதியான பிரான்கோயி பிச்சாரோ (1528) என்பரால் அழிக்கப்பட்ட ‘இங்கா’ என்ற இன மக்களைக் கொண்டிருந்த ‘மாச்சுப்பூச்சி’ (1400 ஆண்டுகளில் உருவாக்கிய நகர்) என்ற தென்னமரிக்க இடமாகும்.//

    பாடலை ரசிக்க இதிகாசங்கள் எதற்கு? பரத நாட்டியத்தை ஏன் சுவிசில் ஆடுகிறீர்கள்? இதை இந்தியாவில் மட்டும்தான் ஆட வேண்டும் என்பது போன்ற மேதாவித் தனங்கள் பாடலை அல்லது ஆட்டத்தை ரசிக்க தடையாகி விடும். டிரம் எல்லாம் ஆபிரிக்கர்களுடையது. இங்கே பறைதான் இசைக்க வேணும் என்பது போன்றதெல்லாம் விஞ்சும் அழுத்தங்கள் மாதிரி இல்லை? இலங்கையர் எல்லாம் கோவணத்தோட இருப்பவர்கள். எதுக்கு கோட்டும் சு-ட்டும் என்பது போலில்லை? யாரோ உருவாக்கிய கேமராவை பாவித்து நீ ஏன் படம் பிடிக்கிறாய். உன் இனம் படம் வரைந்துதான் காட்ட வேண்டும் என்பது போலில்லை? மேலே உள்ள கருத்தெல்லாம் சற்று மேதாவித் தனமாக இருக்கிறது.

    நான் பொதுவாக யதார்த்த சினிமாவை விரும்புபவன். இருந்தாலும் பரீட்சார்த்த ரீதியான படங்களை மட்டுமல்ல > அடுத்தவன் திறன் பளிச்சிடும் தகமைகளை பாராட்டும் தன்மை கொண்டவன். இது பொழுது போக்கு சினிமாவே தவிர வேறெதும் இல்லை. இருந்தாலும் முன்னைய சினிமாக்களில் நிலவுக்கு போய் இறங்குவது போலெல்லாம் கதை படைத்தார்கள்.முன்னைய படத்தை பார்த்து விட்டு வெளியே வந்தவர்கள் நன்றாக பேக்காட்டுகிறார்கள் என்றார்கள். அதன் பின்னர் மனிதன் நிலவுக்கே போய் வந்தான். அங்கே நடப்பது இங்கே எப்படி தெரியும் என்றான்? தொலைக் காட்சியில் – தொலைபேசியில் தெரிகிறது. வானோலி – தொலைபேசியில் கேட்கிறது. மனிதனின் அனைத்து வேலைகளையும் றோபோக்கள் செய்கின்றன. சில கலைஞர்கள் யதார்த்த படைப்பாளிகள். சில கலைஞர்கள் வித்தியாசமான கற்பனைத் திறன் கொண்டவர்கள்.

    //தென்னிந்தியாவின் பிரபல நடிகரின் பல நாள் ஆசையான எப்படியும் உலக அழகியாகப் பட்டம் எடுத்த (1992) ஐஸ்வரியாவின் காதலான நெருங்கி நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தத்தான இந்தப் படம் எடுக்கப் பட்டதா என்ற கேள்வியின் திரைப்பட அமைப்பு எழுப்புகிறது.//

    இத் திரைப்படம் வேறு கதாநாயகர்களோடு உருவாக்கப்பட இருந்து கடைசியில்தான் ரஜனிகாந்த் தேர்வானார். சில விடயங்கள் வியாபார நோக்கம் கொண்டவை. அதில் ஐஸ்வரியாவின் தேர்வும் அடங்கும். ரஜனிகாந்தின் ஆசையும் அடங்கும். யாருக்குத்தான் ஆசையில்லை. ஆசைப்படாதவன் சினிமாவில் நிலைக்க முடியாது. ஒவ்வோரு மனிதனும் தன் மன ஆசைகளுக்காகத்தான் தன் முன்னேற்றத்திற்காக ஏதாவது செய்ய எத்தனிக்கிறான். இல்லாவிட்டால் அனைத்து மனிதரும் புல் பு-ண்டு போல வளர்ந்து அழிந்தல்ல போவார்கள். பலருக்கு யாரைத் தெரியும் ? யாருக்குத் தெரியும்? யாருக்கு என்ன பயன்?

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    இயக்குனர் ஷங்கர் ஹாலிவுட்டில் பரவலாக பயன்படுத்தும் மாஸ்கிங் முறையை பயன்படுத்தி நடிகர் ரஜினிகாந்த் இல்லாமலேயே முழுச்சண்டை காட்சியையும் எடுத்திருக்கிறார். அலெக்ஸ் மார்டின் என்ற அதி அற்புதமான சண்டை கலைஞன் ரஜினியின் ரப்பர் முகத்தை அணிந்து பிரமாதமாக சண்டை போட்டிருக்கிறார். அது youtube இல் வெளியாகி இருக்கிறது.

    அலெக்ஸ் மார்டின் as ரஜினி :
    http://www.youtube.com/watch?v=zi0sfRQ9Bx0&feature=player_embedded

    இது தான் சினிமா :
    http://www.youtube.com/watch?v=lHxyIt81i5o&playnext=1&videos=id58nVoMN-8&feature=mfu_in_order

    Thanks: itsmeena

    Reply
  • Kusumpu
    Kusumpu

    எது எப்படியோ. இது படவிமர்சனம் என்று எழுதியவார் சொன்னாரா. ஏதோ தனக்குத் தெரிந்தளவு ரவிவர்மன் எழுதியிருக்கிறார்.
    /இது ஒரு வழக்கமான தமிழ்ப் படம்,தலிக்காக உலகத்தை அழிக்க முயலும் தமிழ்த் திரைப்படக் கதாநாயக வடிவத்தின் ‘இயந்திர் சொருபமாக ‘எந்திரன்’ படைக்கப் பட்டிருக்கிறது. / கதையில்லாக்கதை என்கிறீர்கள். ரஜனிக்குப் பென்சன் குடுக்காமல் ஏன் வைத்து இழுக்கிறார்கள் என்றுதான் இன்னும் புரியவில்லை. ரஜனின் படங்கள் குழந்தைப்பிள்ளைக்குத் தான்சரி என் ஜீ ரிவி நினைத்ததோ என்னவோ இந்தப்படத்தின் பாடலையும் படத்தின் துண்டையும் மழலைகள் நேரத்தில் போட்டார்கள். குழந்தைகளைப் பழுதாக்குவதற்கு இது போதும். முள்ளிவாய்காலில் கொட்டியது போதாது என்று இங்கேயுமாக. அடிபாடு குத்து வெட்டு சூடு காணுமையா நாம் பட்டது.
    மற்றும் ரஜனி என்றாவது நடித்தது உண்டா? நடந்தால் கிறுக்கன்மாதிரியம். நின்றால் ஏங்கோ ஒரு படத்தில் சிவாஜிகணேசன் நின்றமாதிரியும். தமிழ் தலைதெறிக்கும். இவரையெல்லாம் ஒரு நடிகன் என்று படமெடுப்பனையும் படம்பார்ப்பர்களையும் போட்டுத் துவைத்தால் மட்மே நாடு உருப்படும். 60வயதிலை ஆட்டுகிறார் இடுப்பை. அதே ஆடமாட்டுன் என்று அடம்பிடிக்கிறது. இதுக்குள் ஒரு டான்ஸ். டான்ஸ்சுக்கும் டூப்புப் போடலாமே.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    சினிப்மாப்படம் என்பதனால் ஒரு விசயமத்தைச் சொல்லவேணும். உங்களுக்குத் தெரியுமா இந்தியாவில் எல்லோருமே கிட்டத்தட்ட பில்கேட்டுக்கு நிகரான பணக்காரர்கள். 1990ல என்ற நினைக்கிறேன் 362தமிழ்படங்கள் வெளிவந்ததாம். தொகை சரியாகத் தெரியவில்லை சுமார் ஒருநாளைக்கு ஒரு படம் என்று கணித்திருந்தேன். இத்தனை படங்களில் எத்தனை படங்கள் உண்மையான ஒரு இந்தியனின் வாழ்க்கையை பிரச்சனையை எழுத்துச் சொன்னது? எந்தப்படத்தை எடுத்தாலும் நடுத்தரமக்களைவிட ஒருதட்டு உயர்ந்த மக்களை மையப்படுத்தியோ கதைகள் இருக்கின்றன: 1.2பில்லியன் மக்களைக் கொண்ட இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களில் அதிகமானோம் தென்னிந்தியர்கள். 70சதவீதமான இந்தியாயர்கள் நடுத்தரவகுப்பை எண்ணியே பார்க்க முடியாதவர்கள். உண்மையான இயற்கையாகப் படமெடுக்க முடியாவிட்டால் அவை படங்களே அல்ல வெறும் பட்டங்கள்தான். ரஜனியை நடப்புலகத்தை விட்டு சாமியாகப்போகச் சொன்னால் திரையுலகம் தப்பும் அல்லது மழலைப்படங்கள் எடுக்கச் சொல்லுங்கள் பேக்காட்டுகளை நம்புவதற்கு.

    Reply
  • நந்தா
    நந்தா

    தமிழனுக்கு இந்த நவநாகரீக விஞ்ஞானக் கதை புரியுமா அல்லது தேவையா என்பது புரியவில்லை.

    பல மலையாளப் படங்கள் இந்த பிரச்சனைகளுக்கு விதிவிலக்கு!

    Reply
  • மாயா
    மாயா

    நைட் சியாமளன் போல சங்கர் ஆங்கிலத்தில் இதே கதை பண்ணியிருந்தால் பார்வை வித்தியாசமாக இருந்திருக்கும். சங்கர் ஆங்கிலத்தில் படம் பண்ணும் வாய்ப்புண்டு. இதை கருத்தில் வைத்து பல கலைஞர்கள் இங்கே இணைந்திருக்கிறார்கள். அலெக்ஸ் மார்டின் : ஐஸ்வரியா : ரகுமான் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள்.

    Reply
  • பல்லி
    பல்லி

    இந்த படத்தின் முதலீடு 160 கோடி, ஆனால் அதை உடனயே தயானிதி மாறன் 600 கோடிக்கு மாற்றி மறு ஒருவருக்கு விற்று விட்டார்: இது வியாபாரம் அதில் தப்பும் இல்லை, ஆனால் இந்த பட கட்டவுட்டுக்கு பால் ஊற்றும் அல்லது கருப்பில் டிக்கற் வாக்கி படம் பார்ப்பவன் யார்?? யாரை நம்பி இத்தனை கோடி முதலீடு? இதில் ரஜனிக்கு சம்பளம் கிடையாது, ஆனால் படத்தின் லாபத்தில் 35வீதம் இவருக்கு; ஆனால் பால் ஊத்தியவன் வீட்டில் மதிய உணவுக்கு திண்டாட்டம், இதுக்கு என்ன செய்யலாம் என்னும் கேள்வி சிலரால் வரலாம், திமுக அரசால் ஒரு தீர்மானம் திரை அரங்குகளுக்கு சில காலத்துக்கு முன்பு கொண்டு வரபட்டது, அதில் திரையரங்குகள் ஏழை மக்களின் பொருளாதார நிலையறிந்து கட்டாய கடனமாக (மிக அதிகமாக) சில ரூபாக்களுக்கு மேல் டிக்கற் விலை உயர்த்தபடாது, அதுக்கான வரிசலுகையை அரசு கவனிக்கும் என; ஆனால்அடுத்த நாளே இது வறு இதை ஏற்றுகொள்ள முடியாது என போராடியவர்கள் சிலர் அதில் மிக முக்கியமானவர் ரஜனி; ஆக இந்தியா வல்லரசாவது சினிமாவில் மட்டும்தான் என எண்ண தோன்றுகிறது;
    அஜீவன் எமக்கு சினிமாவின் சூத்திரம் தெரியாது என்பதை ஏற்றுகொள்ளும் அதேவேளை சமூக முன்னேற்ற சீரழிவு பற்றி ஓர் அளவாது தெரியும் என்பதை தாங்கள் புரியவேண்டும்; சினிமா ஒரு பொழுது போக்கு நிலையம் என்பதில் கருத்து முரன்பாடு கிடையாது; ஆனால் பொழுது போக்கே வாழ்க்கை அல்ல என்பதுதான் எமது கவலை; இன்றய சினிமா வளர்ச்சி அல்லது தோல்வி என்பது புலம்பெயர் தமிழரிடமும் உண்டு என்பதை பல தயாரிப்பாளர்கள்? இயக்குணர்கள்? ஏன்நடிகர்கள் கூட மறுப்பதற்கில்லை;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //இன்றய சினிமா வளர்ச்சி அல்லது தோல்வி என்பது புலம்பெயர் தமிழரிடமும் உண்டு என்பதை பல தயாரிப்பாளர்கள்? இயக்குணர்கள்? ஏன்நடிகர்கள் கூட மறுப்பதற்கில்லை. – பல்லி//

    ராஜேந்தர் தன எந்தப் படத்தையும் சிங்கப்பூர், மலேசியா தவிர்த்து ஏனைய வெளிநாடுகளுக்கு விற்றது கிடையாது. அப்போதும் அவர் கோடி கோடியாகத் தான் சம்பாதித்தார். தென்னிந்திய தமிழ்ப்படங்களுக்கு வெளிநாட்டில் புலம் பெயர்ந்த தமிழர்களால் மேலதிக வருமானம் வருகின்றதேயொழிய, புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுகின்றது என்பது பகற்கனவு. பொதுவாகவே நம்மவர்களுக்கு செயற்பாட்டை விட நினைப்புகள் தான் அதிகம். எம்மால் செய்ய முடியாதவற்றை மற்றையவர்கள் செய்யும் போது அதனைக் குறை கூறியோ, கிண்ணலடித்தோ தம்மை தேற்ற முயல்வது வேடிக்கையானது. இது ஒரு வகையில் இயலாமையின் வெளிப்பாடே. இங்கு ரஜனியை விமர்சிப்பவர்கள் கூட, கடைசி திருட்டு விசிடியிலாவது எந்திரனை பார்க்காமல் இருப்பார்களா?? தென்னிந்திய திரைப்படங்களை ஐரோப்பாவில் திரையிட்டு காசு பார்ப்பவர்கள் யார்?? எம்.ஜி.ஆர் 60 வயதில் அவரது பேரப்பிள்ளைகளுக்கு சமமான 16, 18 வயது நடிகைகளுடன் கட்டிப்பிடித்து நடித்த போது வராத ஆதங்கம் இனறு ரஜனியில் வருவது தான் வேடிக்கை.

    இன்று சமுதாயச் சீரழிவுகள் பற்றி இவர்கள் படம் எடுக்கலாமே என்று கதையளப்பவர்கள், அப்படி வந்த எத்தனை படங்கள் வெற்றிவாகை சூடின என்ற பட்டியலையும் வைக்கலாமே?? புலம் பெயர்ந்து வந்த நம்மவர்கள் கதையளப்பதை நிறுத்தி, இப்படித் தான் ஒரு படம் இருக்க வேண்டுமென எடுத்துக் காட்டலாமே?? என்று நம்மவர்கள் அதைச் செய்து காட்டுகின்றார்களோ, அதன் பின் அடுத்தவன் படத்தை விமர்சிக்கவும் தகுதியுடையவர்கள் ஆகின்றார்கள். செய்வார்களா நம் வாய்சொல் வீரர்கள்??

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // அலெக்ஸ் மார்டின் என்ற அதி அற்புதமான சண்டை கலைஞன் ரஜினியின் ரப்பர் முகத்தை அணிந்து பிரமாதமாக சண்டை போட்டிருக்கிறார்.- அஜீவன் //

    இந்த உண்மையை எந்திரன் படக்குழுவினரே வெளியிட்டனர். இது பாராட்டப்பட வேண்டிய விடயமே. முன்பு கதாநாயகனை ஒத்த உருவமுடையவர்களை தேர்ந்தெடுத்து, டூப்பாக தூரத்தில் வைத்து சண்டைக் காட்சிகளில் பயன்பபடுத்தினார்கள். இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் அருகாமையிலும் கதாநாயகனே சண்டை செய்வது போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகின்றார்கள்.

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    பார்த்திபனின் கருத்துகளுக்கு நன்றி. பல்லியின் கருத்துகளிலும் தவறில்லை. இருந்தாலும் பார்த்திபனின் கருத்துகளில் சினிமா எனும் மாய உலகத்தை புரிந்த கருத்தாக எடுத்துக் கொள்கிறேன். எந்த ஒரு வியாபாரியும் நட்டமடைய பொருளை கொண்டு வந்து போட மாட்டான். புலம் பெயர் தேசங்களில் உள்ள மக்களை நம்பித்தான் இந்திய தமிழ் சினிமா இருக்கிறது என்பது மிகத் தவறான கருத்து.

    இந்திய சினிமாக்காரர்கள் இந்தியாவை நம்பித்தான் படமெடுக்கிறார்கள். வெளிநாட்டு உரிமத்தால் வருவது மேலதிக வருமானம். இது வரலாம் : அல்லது வராமலும் போகலாம். பல படங்களை வெளிநாட்டு விநியோகத்தர்கள் வாங்கவே இல்லை. நல்ல பல படங்கள் வெளிநாட்டில் ஓடவும் இல்லை. சில நல்ல படங்கள் , நல்ல படங்கள் என மக்களுக்கு தெரிய வரும் பொது அவை தியட்டரை விட்டு தூக்கப்பட்டு விட்டது. அந்தப் படங்களின் DVDக்கள் பின்னர் அதிகமாக விற்பனையாகின.

    பெரிய தொகை முதலீட்டில் வரும் படங்கள், இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் திரைக்கு வருகின்றன. இதில் முதன்மை பெறுவது தெலுங்கு பகுதி. இரண்டாவது இடத்தையே இந்தி எடுத்துக் கொள்கிறது . மலையாள மற்றும் கன்னட பகுதி பெரிதாக கணக்கில் எடுக்கப்படுவதில்லை. மலையாள மற்றும் கன்னட ரசிகர்களுக்கு பெரும்பாலும் தமிழ் புரியும். சில வேளைகளில் மாத்திரமே டப் பண்ணப்படுகின்றன. தெலுங்கு மற்றும் இந்தியில் மொழி மாற்றம் இல்லாவிட்டால் அவர்களுக்கு புரியாது. சப் டைட்டில் எல்லாம் சரியே வராது. இலங்கைத் தமிழர்களை நம்பித்தான் தமிழ்நாட்டு திரைப்படங்கள் உருவாகின்றன என்பது சற்று ஓவரான ஒரு மனநிலை. அன்றைய கால கட்டத்தில் உலகம் சுற்றும் வாலிபன் அதிக பணச் செலவில் உருவான ஒரு படம். அந்தப் பணம் இலங்கையில் படத்தை ஓட்டி பெறலாம் என MGR நினைத்தே இருக்க மாட்டார்? வாசனின் “சந்திரலேகா” , அன்றைய காலப் பகுதியில் மாபெரும் செலவில் உருவான படம். அது இந்தியிலும் , தமிழிலும் வெளிவந்தது. இன்று நிலமை வேறு?

    பொழுது போக்கு திரைப்பட இயக்குனர் தனது படத்தின் வெற்றியைத்தான் குறியாக வைக்கிறாரே தவிர , மக்களைத் திருத்த வேண்டும் என்பதையல்ல. சினிமா பார்த்து மக்கள் திருந்தியதாக சரித்திரம் இல்லை. ஒரு இயக்குனரது படம் ஓடவில்லை என்றால் அவரை நம்பி யாரும் படம் எடுக்க மாட்டார்கள். சங்கர் படம் இப்படித்தான் இருக்கும் என்ற ஆதங்கம் ரசிகர் மனதில் உள்ளன. அவை மாறினால் சங்கரை ஏறிட்டும் பார்க்க மாட்டார்கள். சங்கரின் தயாரிப்பில் அவரோடு பணிபுரிந்தவர்கள் உருவாக்கும் படங்கள் வேறு விதமானவை.

    ரஜனியின் 6லிருந்து 60வரை படம் நல்ல படம். ஓடவில்லை. எடுத்தவர் கையை சுட்டுக் கொண்டார். கமலின் பல படங்களில், கமல் கையை சுட்டுக் கொண்டார். அதை ஈடுகட்ட வேறு தயாரிப்பாளர்களின் பொழுது போக்கு படங்களில் நடித்தே பணம் பெற்றார். இங்கே தவறுகள் இல்லாமல் இல்லை. யதார்த்தத்துக்கு புறம்பானவைதான். இருந்தாலும் கலைஞர் வாழ்ந்தால்தான் கலை வாழும்.

    புலம் பெயர் தேசத்திலும் சரி , இலங்கையிலும் சரி நம் கலை அழிவதற்கு நாம்தான் காரணமாகியுள்ளோம். பல நிகழ்வுகளில் கலைஞர்களுக்கு பணம் கொடுப்பதில்லை. அவர்களுக்கு பொன்னாடையும் , புகழையும் , நினைவுப்பரிசையுமே வழங்குகிறோம். இவை அவனது வாழ்வாதாரத்துக்கு ஒன்றையும் செய்யாது. அவர்கள் பொய்யான புகழோடு மண்ணாகிப் பொவார்கள்.

    பார்த்திபனுக்குத் தெரியும் , சுவிசில் இடம் பெற்ற ஒரு கலை நிகழ்வுக்காக தமிழ் – சிங்களக் கலைஞர்களை கொண்டு வந்து நடத்துவதென்று முடிவான போது , அங்கே இருந்த சிங்களவர்கள் இத்தாலியில் இருந்து வரும் சிங்கள கலைஞர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்கள். நான் எமது தமிழ் கலைஞர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்றேன். அங்கு நின்ற பல தமிழர்கள், எமது கலைஞர்களுக்கு நாங்கள் ஒரு போதும் பணம் கொடுப்பதில்லை என்றனர். அது தேவையற்றது என்றனர். வரும் கலைஞர்களுக்கு சாப்பிட , குடிக்கவும் கொடுக்காமல் நிகழ்ச்சி நடத்துபவர் நீர் என ஒருவரைச் சாடினேன். நான் எந்த ஒரு தமிழ் நடனக் குழுவுக்கும் பங்கு பற்ற சொல்ல மாட்டேன் என்றேன்.

    அந்த விழாவுக்கு இத்தாலியில் இருந்து வந்த குழுவுக்கு 4000/- பிராங்குகளை கொடுத்திருந்தார்கள். தமிழ் நடனக் குழுக்கள் 2 பங்கு பற்றியிருந்தன. அவர்கள் எதுவமே கொடுத்திருக்கவில்லை. அதை செலவுகள் என காட்டப்பட்ட அறிக்கை வாயிலாக அறிந்தேன். அந்த தமிழ் குழுக்களை அழைத்துச் சென்றவர்களிடம் அதைக் காட்டிய போது , சிரித்தார்களே தவிர , பதிலழிக்க முடியாமல் இருந்தார்கள். இந்தியர்கள் மட்டுமல்ல , உலக சினிமா , ஐரோப்பிய சினிமா எல்லாமே பணம் சம்பாதிக்க கலை படைப்புகளை செய்கின்றன. உன்னிடம் எல்லாம் இருந்தால் உன்னை உலகம் மதிக்கும். எதுவுமே இல்லையென்றால் அதுவே ஏறி மிதிக்கும். இதை புலம் பெயர் அனைத்து தமிழ் குழுக்களுமே செய்கின்றனர். இவை மாறுமா எனத் தெரியவில்லை. எமது கலைஞர்கள் இருக்கிறாhகள். அவர்களுக்கு இவர்கள் ஒரு மேடையாகின்றனர். அத்தோடு அது நிறைவு எய்துகிறது. புலத்தில் எந்தக் கலைஞராவது தொடர்ந்து வெற்றியோடு இருக்கிறார்களா? ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு அடிமட்ட வேலை செய்து கொண்டு , தனது ஆசையைத் தீர்த்துக் கொள்ள அதையும் கரியாக்கியே வாழ்கிறான். புலத்து தொலைக் காட்சிகளிலும் இதே பல்லவிதான்.

    மக்களுக்கு யதார்த்தத்தை சொல்ல வேண்டுமென்றால் , டாக்யுமன்றி சினிமாதான் எடுக்க வேண்டும். அதுபோல் எடுத்து அடுத்தவன் வேதனையை விற்று தமது வயிறு வளர்க்கும் படைப்பாளிகள் என வயிறு வளர்க்கும் ஆட்களை விட இவர்கள் எவ்வளவோ மேல். இவர்களையாவது, இவர்கள் யாரென புரியும். சிலரை யாரென புரியாமலே நாமும் ஏமாறுவோம். பாலு மகேந்திரா ஒரு நல்ல சிறந்த படைப்பாளி. யதார்த்த சினிமா வித்தகர். அவர் தனது சமுதாயத்துக்கு என்ன கொண்டு வந்தார்?

    Reply
  • பல்லி
    பல்லி

    //ராஜேந்தர் தன எந்தப் படத்தையும் சிங்கப்பூர், மலேசியா தவிர்த்து ஏனைய வெளிநாடுகளுக்கு விற்றது கிடையாது. //
    அவர் வெளினாடுகள் சென்று படமும் எடுப்பதில்லை என நினைக்கிறேன், அதே போல் ராஜேந்தர் படங்களில் பலநூறு தொழிலாளர்கள் கடமை செய்வார்கள். இப்படி பல விளக்கம் தரலாம், ஆனால் சினிமாவுக்காக நாம் வாதம் செய்வது சரியாக படவில்லை,

    அஜீவன் நீங்க சினிமாதுறையில் இருப்பவர் என்பது எனக்கு தெரியும், அதனால் உங்களுடன் சிலவிடயங்களை வேறு ஒரு நேரத்தில் விவாதிப்போம், பலரது (ஏழை) வியர்வைகள்தான் சிலரது கோடிகள். இது அனைத்து தொழிலிலும் உண்டுதான் ஆனால் சினிமாவில் அது சினிமா போன்றே உள்ளது, புலிகள் இறுதி காலத்தி அவர்கள் எந்த படங்களுக்கு கருப்புபணமாய் நிதி உதவி செய்தார்கள் என ஒரு பட்டியலே எடுக்கபட்டது, அதில் ரஜனி படங்களும் அடங்கின, புலம் பெயர் ரசிகரை மட்டும் நான் சொல்லவில்லை, பல முகம் தெரியாத கடனுதவியோ அல்லது தயாரிப்போ இதில் அடக்கம், நாம் எடுத்த எல்லாத்துக்கும் எம்மை தாழ்த்த முடியாது ; உன்மையில் விஜய் ஏன் காங்கிறஸ் கட்சியில் இனையவில்லை, இதுக்கான காரனம் கருனாநிதிதான் என எண்ணினால் நாமும் ஒரு சராசரி ரசிகராகி விடுவோம்; இப்படி பலதை என்னாலும் அடையாள படுத்த முடியும்; அதே போல் தாங்கள் பாலு மகேந்திராவை இனம் காட்டினீர்கள் நான் விசுவை இனம் காட்டுகிறேன்; அவர் எடுத படம் ஏதாவது தோல்வியா?? அல்லது அவரது தயாரிப்பாளர்கள் நடு தெருவிலா?? ரஜனியின் ரசிகர்கள் யார் அவரது படங்கள் ஓட யார் காரனம் என்பதை நேரம் இருப்பின் மனதில் உறுதி வேண்டும் என்னும் சினிமாவை எடுத்து பாருங்கள்? அஜீவன் பார்த்திபன் இத்துடன் இந்த வாதத்தில் இருந்து நான் விலகுகிறேன்; இதுபற்றி யாராவது ஒரு(சினிமா) அப்போது வாதிப்போம்;
    நட்புடன் பல்லி;

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    //அஜீவன் நீங்க சினிமாதுறையில் இருப்பவர் என்பது எனக்கு தெரியும், அதனால் உங்களுடன் சிலவிடயங்களை வேறு ஒரு நேரத்தில் விவாதிப்போம், பலரது (ஏழை) வியர்வைகள்தான் சிலரது கோடிகள். இது அனைத்து தொழிலிலும் உண்டுதான் ஆனால் சினிமாவில் அது சினிமா போன்றே உள்ளது, புலிகள் இறுதி காலத்தி அவர்கள் எந்த படங்களுக்கு கருப்புபணமாய் நிதி உதவி செய்தார்கள் என ஒரு பட்டியலே எடுக்கபட்டது, அதில் ரஜனி படங்களும் அடங்கின, புலம் பெயர் ரசிகரை மட்டும் நான் சொல்லவில்லை, பல முகம் தெரியாத கடனுதவியோ அல்லது தயாரிப்போ இதில் அடக்கம், நாம் எடுத்த எல்லாத்துக்கும் எம்மை தாழ்த்த முடியாது ; உன்மையில் விஜய் ஏன் காங்கிறஸ் கட்சியில் இனையவில்லை, இதுக்கான காரனம் கருனாநிதிதான் என எண்ணினால் நாமும் ஒரு சராசரி ரசிகராகி விடுவோம்; இப்படி பலதை என்னாலும் அடையாள படுத்த முடியும்; அதே போல் தாங்கள் பாலு மகேந்திராவை இனம் காட்டினீர்கள் நான் விசுவை இனம் காட்டுகிறேன்; அவர் எடுத படம் ஏதாவது தோல்வியா?? அல்லது அவரது தயாரிப்பாளர்கள் நடு தெருவிலா?? ரஜனியின் ரசிகர்கள் யார் அவரது படங்கள் ஓட யார் காரனம் என்பதை நேரம் இருப்பின் மனதில் உறுதி வேண்டும் என்னும் சினிமாவை எடுத்து பாருங்கள்? அஜீவன் பார்த்திபன் இத்துடன் இந்த வாதத்தில் இருந்து நான் விலகுகிறேன்; இதுபற்றி யாராவது ஒரு(சினிமா) அப்போது வாதிப்போம்;
    நட்புடன் பல்லி;//

    பல்லியின் கருத்தில் மட்டுமல்ல மேலே உள்ள அனைவர் கருத்திலும் உள்ள பல விடயங்களில் உடன்பாடு உண்டு. சில விடயங்களில் இல்லை. சினிமாவை சினிமாவாகப் பார்க்காதது யார் தவறு? அதைச் சொன்ன அஜித் போன்றவர்களது நிலை என்னவாச்சு? விஜய் ஏன் காங்கிரஸில் இணையவில்லை என்றால் அதற்கு புலம் பெயர் ரசிகர்களது அழுத்தம் அல்ல காரணம், தமிழ்நாட்டில் இலங்கை தமிழர் தொடர்பான மாற்றம் என நினைக்கிறேன். ராஜீவ் காந்தி கொலைக்கு பின்னர் தமிழகத்தில் , இலங்கைத் தமிழர் குறித்த மாற்றம் ஒன்று மக்கள் மனதில் ஏற்பட்டன.

    புலிகள் அனைத்து இடங்களிலும் தமது பணத்தை முதலீடு செய்தார்கள். அது சினிமாவிலும்தான். பல்லி சொல்வது இதைத்தானே?

    உண்மையான ஈழத்துக்கான ஆர்வலர்களாக இருந்த நடிகர்கள் பின்னர் நிலையுணர்ந்து மாறி விட்டார்கள். அவர்களில் விஜயகாந் , சந்திரன், சந்திரசேகர் , ராதாரவி ஆகியோரை குறிப்பிடலாம். இவர்கள் பணத்துக்காக இல்லாமல் இதயசுத்தியோடு வீதிக்கு இறங்கியவர்கள். இன்று பணத்துக்காக இறங்யோரை மட்டுமே மக்கள் அடையாளப்படுத்தியுள்ளது சோகம்தான். இன்றைய உண்மையை அனைவரும் உணர்ந்தேயுள்ளனர்.

    அஜீத் போன்றவர்களது படத்தை யார் தயாரிக்கிறார்கள் என்று உணராமல் தமது உணர்வை வெளிப்படுத்தியதால் , தமது தயாரிப்பையே தோல்வியடையச் செய்தார்கள்? தோற்றது அஜீத் அல்ல , தோற்றது தாங்களே. இந்திய சினிமாவை தடை செய்த அதே புலிகள் , இந்திய சினிமா தயாரிப்பில் ஈடுபட்டதை என்னவென்று சொல்வது?

    சினிமாவை சினிமாவாக தமிழன் பார்க்காதவரை இந்த அவலங்கள் தொடரும்…..

    நட்போடு
    அஜீவன்

    Reply
  • BC
    BC

    எந்திரன் என்ற படத்திற்க்கு தேசம்நெற்றில் வைத்து இலங்கையரும் பால் ஊற்றி பூசை செய்வது ஏமாற்றத்தை தருகிறது.

    Reply
  • N,.Ananth
    N,.Ananth

    ரசிப்பு தன்மையின் அதி உச்சத்தின் விழைவினால்தான் ரசிகர்கள் யாழ்ப்பாணத்திலும் எந்திரன் விழாவினை கொண்டாடுகின்றார்கள். ரசிப்புக்கு எல்லை கிடையாது. அதனை கட்டுப்படுத்தவும் முடியாது.எந்திரன் என்ற படத்திற்க்கு தேசம்நெற்றில் வைத்து இலங்கையரும் பால் ஊற்றி பூசை செய்வது அவர்களின் ரசனையின் வெளிப்பாடு

    Reply
  • BC
    BC

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பான எந்திரன் திரைப்படம் தயாரானது முதல் அக்கம்பெனியார் படத்துக்கான விளம்பரம் என்ற பெயரில் செய்து வரும் ஆர்ப்பாட்டங்கள் நியாய உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரையும் கவலை கொள்ளச்செய்வதாக உள்ளன. தங்கள் கையில் தொலைக்காட்சி அலைவரிசைகள் இருப்பதாலும் தாங்கள் போட்ட பணத்தைப்போல பல மடங்கு சம்பாதித்துவிட வேண்டும் என்கிற வியாபார வெறியுடனும் தமிழக இளைஞர்களைத் தவறான வழியில் திசைகாட்டும் வேலையை சன் குழுமம் செய்து வருகிறது.அதிகாலை 4 மணி முதல் திரைப்படத்தைத் திரையிடுவது ,இளைஞர்கள் மொட்டை போட்டுக்கொள்வதையும் கோழிகள் அறுப்பதையும் கட் அவுட்டுகளுக்குப் பால் ஊற்றுவதையும் மிகச்சிறந்த முன்னுதாரணமான பண்பாட்டு அசைவுகள் போல சன் டிவியிலும் தினகரன் பத்திரிகையிலும் திரும்பத் திரும்ப வெளியிட்டுத் தமிழக இளைஞர்களை மேலும் மேலும் அவ்விதமே செய்யத்தூண்டுகிறது.தமிழகத்தின் பலமான ஒரு உழைப்புச் சக்தியை இவ்விதம் சிதைக்கும் பணியை சன் குழுமம் செய்கிறது.சன் குழுமம் செய்து வரும் இந்தப் பண்பாட்டுச் சீரழிவு நடவடிக்கையை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொறுப்பும் மனச்சாட்சியும் உள்ள ஒவ்வொரு தமிழரும் இதைக் கண்டனம் செய்ய வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.தாம் விரும்பும் திரைக்கலைஞரைக் கொண்டாடும் ரசிக மனநிலையை ஒரு பைத்திய மனநிலைக்கு வழிநடத்தி இட்டுச்செல்லும் சன் குழுமத்தின் வியாபார வலையில் விமர்சனமின்றி வீழ்ந்துவிட வேண்டாம் எனத் தமிழகத்து இளைஞர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
    மேற்கண்ட கண்டன அறிக்கையை தங்கள் இதழில் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம்.
    அருணன் (மாநிலத்தலைவர்)
    ச.தமிழ்ச்செல்வன்(பொதுச்செயலாளர்)
    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    பல தமிழர்கள் குண்டு வெடித்தால் ஆடுவார்கள். பாடுவார்கள். கதறி அழுவார்கள். பொய்யான அரசியல் பேசி மக்களை ஏமாற்றுவார்கள். யாராவது மகிழ்வாக இருந்தால் மகிழ மாட்டார்கள். அதைப் பார்த்து எரிச்சல்படுவார்கள். இது ஒரு மனநோய்..

    மேலத்தேசத்தில் எல்லாம் வீதியில் ஒருவன் பாடினாலும் அதை ரசிப்பார்கள். கை தட்டுவார்கள். ஏதோ ஒரு நாட்டில் உதை பந்தாட்ட போட்டி நடக்கும் , இவர்கள் வீதி முழுதும் கொண்டாடுவார்கள். ஆனால் இதையெல்லாம் வேலை நேரத்தில் செய்ய மாட்டார்கள். இந்தியாவில் ; இலங்கையில் வேலை செய்யும் இடத்திலேயே வேலையை ஓரம் கட்டி விட்டு வேலைத்தலத்திலேயே கிரிக்கெட் மெட்ச் பார்ப்பார்கள். இதெல்லாம் இந்த சமூக அக்கறையாளர்களுக்கு தெரியாது. நாலுபேர் சந்தோசப்படும் போது , அதைத் தாங்காத மனது கொண்டவர்களை என்ன என்று சொல்வது? நம் குழந்தைகள் ஏதாவதொரு ஒரு நிகழ்சியில் ஆடும் , பாடும். அதை எத்தனை பேர் கை தட்டி ரசிக்கிறார்கள்?

    ஆங்கிலப்படங்கள் எத்தனையோ இதுபோல வந்துள்ளன. அவற்றை இவர்கள் எதிர்த்ததில்லை. இது நமக்கு தெரிந்தவனது படைப்பாகி விட்டது. எனவே இதை நம்மால் பொறுக்க முடியாது. என்னால் முடியாவிட்டால் , அவதூறாவது செய்தாக வேண்டும். பொதுவாக மனிதன் யாரைப் பார்த்து பொறாமைப்படுகிறான்? அவனுக்குத் தெரிந்தவனைப் பார்த்துதான். தெரியாதவனை தலை மேல் வைத்துக் கொண்டாடுகிறான். இது மனித இயல்பு. இது நாடு , இனம், மதம், மொழ இவற்றைத் தாண்டிய உண்மை. எல்லாவற்றையும் அரசியலாக்க போகலாகாது.

    அழகான மெழுகு சிலை போன்ற கதாநாயர்களையே மையப்படுத்தி அல்லது கதாநாயகனாக்கி தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களின் தலைவிதியை மாற்றியவர் ரஜனிதான் என்றால் அது மிகையல்ல. பாலசந்தருக்கு நன்றி. தியாகராச பாகவதர்- எம்.ஜீ.ஆர் – சிவாஜி………..தொடங்கி ரஜனி காலம் வரை அழகியல் அற்ற ஒரு மனிதன் கதாநாயகனாகி தமிழ் திரையுலக ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படது ரஜனியால்தான். அதன் பின்னரே சுமாரான நடிகர்களுக்கும் நடிக்கலாம் எனும் மனநிலை வந்தது. சாதாரண மனிதனும் தன்னை ஒரு கதாநாயகனாக நினைக்கத் தொடங்கினான்.

    இன்னும் தமிழ் சினிமாவில் அழகியல் அற்ற ஒரு பெண்ணை கதாநாகியாக ஏற்றுக் கொள்ளும் மனம் வரவில்லை. ஒரு அழகான பெண்ணை மேக்கப் கொண்டு அருவருப்பாக்கித்தான் கதாபாத்திரம் ஆக்கின்றனர். நாடு முழுவதும் முடவர்கள் இருக்க ஒரு கமலை சப்பானியாக்கி பார்ப்பதில்தான் நம் மனது ஆறுதல் அடைகிறது? என்ன கொடுமை? யதார்த்தம் என்பது என்ன? யதார்த்தம் என்றால் டொக்யுமன்றி படம்தான் பார்க்க வேண்டும்?

    நமக்கு எதையோ பிடிக்கவில்லை என்றால் , அத்தனையும் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஏதாவது இருக்க வேணுமே? ஒரு மகா கெட்டவனிடம் ஏதாவது ஒரு நல்ல விடயம் இருக்கும்? இங்கே எதுவுமே பிடிக்கவில்லை என்றால் , சம்திங் றோங்? இதற்கெல்லாம் பெரிய படிப்பு அல்லது தத்துவங்கள் தேவையில்லை. ஒரு மனிதனுக்கு நம்பிக்கை கொடுக்க ஒரு மாகான் தேவையில்லை. படிப்பறிவற்ற ஒரு தாய் போதும். இவை மனது சம்பந்தமான விடயம். சினிமா என்பது உண்மையிலேயே பொய். அதைப் போய், ஏன் பெரியவர்களெல்லாம் கடிந்து கொள்கிறார்கள். ஒன்றரை அல்லது மூன்று மணி நேரத்தில் ஒருவனது வாழ்வைச் சொல்ல முடியுமா? ஒரு சாதாரமான மனிதனின் சோகத்தை சொல்ல முடியுமா? முடியாது. அப்போ இது பொய்தானே?

    சித்திரங்கள் எங்கே , எப்போது பேசின? காட்டுன் படங்கள் பேசுகின்றனவே? அவற்றின் செயல் திறன் உண்மையானவையா? இல்லை. குழந்தைகளுக்கு ஒரு கதை சொல்ல , அக் குழந்தைகள் மனதில் நம்பிக்கையை வளர்க்க அது போன்றவற்றை படைக்கிறார்கள்.

    கடந்த கால போர் காட்சிகளை எமது தமிழ் இணையங்களும் , தொலைக் காட்சிகளும் கொண்டு வந்தனவே , அப்போது அதை எத்தனை பேர் எதிர்த்தீர்கள்? எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாது உங்கள் வீட்டுக்குள் தொலைக் காட்சி வழி அல்லது இணையத்தின் வழி வந்து எமது அமைதியை கெடுக்கிறதே? யார் தடுத்தீர்கள்? இவற்றை இன்னொருவருக்கு பார்க்க முனமொழிந்தவர்களாக நாமிருப்போம்.

    சிலரால் மகிழ்வுகளை பகிர்ந்து கொள்ளும் மனசில்லை. ஆனால் பொய் தத்துவங்கள் வழி மக்களை கொலைக் களம் கொண்டு செல்வது மகிழ்வானது. சிலர் பணத்துக்காக எழுதுவோர். சிலர் சிலரை மகிழ்விப்பதற்காக எழுதுவோர். நாம் உண்மையாக எழுத வேண்டும். அது நிச்சயம் நிலைக்கும்.

    இது ஒரு நல்ல கதை. எனவே இதை இணைக்கிறேன்.

    பகுத்தறிவு
    ——-
    ஒரு மகாராஜாவின் மகன் மிகவும் மக்காக இருந்தான். அதிகாரம் உள்ள பல குடும்பங்களில் இந்த “மக்கு மகன்” பிரச்சனை எப்போதும் உண்டு. அவனுக்கு ஆட்சியை கொடுக்க மக்கள் விரும்பவில்லை. மூத்தவர் சபை எதிர்த்தது. “என்ன செய்யலாம்” என்று அரசர் கவலைப்பட்டார். வெளிநாட்டில் திறமையான கலாசாலையில் மகனைச் சேர்த்துவிட்டால் அவர்கள் எப்படியும் அறிவாளி ஆக்கிவிடுவார்கள் என்று மகாராஜா முடிவு செய்தார். அங்கு பலதுறைகள் இருந்தன. உயர்தரமான அந்தக் கலாசாலையில் ஐந்து ஆண்டுகள் தங்கிப் படித்துவிட்டு இளவரசன் திரும்பி வந்தான்.

    அவனது உடை, நடை, பாவனைகள் என எல்லாம் மாறியிருந்தன. பளிச்சென்று உடையணியப் பழகியிருந்தான். அழகாக நடப்பது, கைகுலுக்குவது, மரியாதையாய்ப் பேசுவது என்று நிறைய மாற்றங்கள். மகாராஜாவுக்கு ஆனந்தம் தாங்கவில்வைல. முதியோர் சபையில் மகனை நிறுத்தி அவர்கள் அனுமதியுடன் அறியாவளியாக்கப்பட்ட மகனை அரசனாக்க நினைத்தார். பலரும் அவனை அறிவாளி என்றே ஒப்புக் கொண்டனர். பல்கலைக் கழகத்தின் சாதனையைய் பாராட்டினர்.

    ஒரு வயதானவர் மட்டும் இளவரசனைச் சோதிக்க நினைத்தார். “என்ன படித்தாய்?” என்றார். “நிறைய, நிறைய… சோதிடம் கூட முறையாக கற்றுத் தந்தார்கள். நீங்கள் சோதிடத்தில் கேள்வி கேட்டால் கூடச் சொல்வேன்” என்றான். வயதானவர் தமது மோதிரத்தை உள்ளங்கையில் வைத்து மூடிக் கொண்டு, “இது என்ன?” என்றார். இளவரசன் யோசித்தான். ஒரு காகிதத்தை எடுத்து கணக்குப் போட்டான். “உங்கள் கையில் உள்ளது வட்டமானது. நடுவில் ஓட்டையானது. ஒளியுடையது” என்று விடை சொன்னான். வயதானவருக்கு உள்ளூர சந்தோஷம். இருந்தாலும், “அடையாளங்களைச் சொல்கிறாயே ஒழிய அது இன்னதென்று சொல்லக்கூடாதா?” என்றார். “அது எங்கள் பாடத்திட்டத்தில் இல்லை” என்றார் இளவரசன். “யூகித்துச் சொல்” என்றார் வயதானவர். உடனே இளவரசன் “பாடத் திட்டத்தில் இல்லையென்றாலும் என் பொது அறிவை வைத்துச் சொல்லி விடுவேன்.. அது ஒரு வண்டிச் சக்கரம்” என்றான்.

    முட்டாள். சர்வகலாசாலை சொல்லிக் கொடுத்ததைச் சரியாகச் சொல்லிவிட்டான். ஆனால் வண்டிச்சக்கரத்தை எவரும் உள்ளங்கையில் ஒளித்து வைக்க முடியாது என்ற சின்ன விஷயம்கூட அந்த மடையனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

    முட்டாளையும் படிப்பாளியாக்க முடியும். ஆனால் அறிவாளியாக்க முடியாது.
    “You can educate fools; but you cannot make them wish”.

    Reply
  • மாயா
    மாயா

    படத்தை பார்க்க-http://www.indiavix.com/videos/250/endhiran-movie-online-cam-hq-tamil-.html

    Reply
  • நந்தா
    நந்தா

    இலங்கைத் தமிழர்கள் சினிமா தமிழில் தயாரித்தது வெகு குறைவு. சிங்கள மொழியில் தமிழர்கள் ஆயிரக்கணக்கான படங்களைத் தயாரித்துள்ளனர்.

    சினிமா என்பது வியாபாரம். அது லாபம் கொடுக்கவில்லை என்றால் என்ன பண்ணுவார்கள்? லாபம் தருவதற்கு படம் ஓட வேண்டும். மக்களின் “எந்த” ரசனையாவது அதிகளவு மக்களை பார்க்க வைக்கும் என்றால் அதனை படத்தில் உபயோகப்படுத்துகிறார்கள்.

    தமிழ் படங்களில் “காதல்” பற்றி நிறைய கதை விடுவார்கள். ஆனால் தமிழ் நாட்டில் காதல் என்பது இன்னமும் அங்கீகரைக்கப்படாத ஒரு சமூக உணர்வு!

    ஆயினும் சினிமாவூடாக பலநல்ல செய்திகளையும் மக்களுக்குக் கொடுக்க முடியும். அவற்றை மலையாள சினிமாக்களில் காணலாம்!

    தமிழ் படங்களில் தமிழ்நாட்டையே காண முடியாது. தமிழ், இந்திப் படங்கள் இலவசமாக மேற்குநாடுகளின் உல்லாசப் பயண கேந்திரங்களுக்கு இலவச விளம்பரங்கள் கொடுக்கின்றன.

    “மகன்ர அச்சன்” என்றொரு மலையாளப் படத்தில் சாதாரண வாழ்வையும், மக்களை ஏமாற்றும் “சுவாமி” யால் வரும் பிரச்சனைகள், மக்களின் “வெள்ளையர்கள்” மோகம் எப்படி இந்த ஏமாற்றுக்காரர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதனையும் “கோடிக்கணக்கில்” செலவு செய்யாமல் காட்டியிருக்கிறார்கள். நிஜ வாழ்வில் தந்தையும், தனையனுமான சீனிவாசனும், மகனும் தந்தையும் மகனுமாக படத்தில்நடித்துள்ளனர். சுகாசினி தாயாக நடித்துள்ளார். பிள்ளைகளின் திறமைகளை இனங் கண்டு அவற்றை ஊக்குவிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் அந்தப் படம் ஒரு சாதாரண அரச ஊழியன் கைக்கூலி என்பனவற்றுக்கு அடிமையாகாமல் இருந்து அடையும் வேதனைகள், பிள்ளைகளை நன்றாகப் படிப்பித்து நல்ல தொழிலுக்கு அனுப்ப வேண்டும் என்ற கனவுகள் என்பன பற்றியும் சித்தரிக்கிறது.

    சமாதான காலத்தில் எங்கள் நாட்டிலும் இருந்த அதே கனவுகள் அந்தப்படத்தில் காட்டுகிறார்கள். அந்தப் படத்தில் காட்டப்படும் சம்பவங்கள் “நிஜமாகவும்” உள்ளன என்பது அடுத்த விசேஷம்.

    நிஜங்களைப் பார்ப்பதை விட நடக்க முடியாத கற்பனைகளில் பறக்க பழக்கப்பட்ட தமிழர்களுக்கு மலையாளப் படங்கள் பிரச்சனையாகவே படும்!

    Reply
  • மாயா
    மாயா

    //இலங்கைத் தமிழர்கள் சினிமா தமிழில் தயாரித்தது வெகு குறைவு. சிங்கள மொழியில் தமிழர்கள் ஆயிரக்கணக்கான படங்களைத் தயாரித்துள்ளனர். – நந்தா //

    எம்மவர் நொட்டை நொடிசல் சொல்வதாலேயே இலங்கையில் தமிழ் படங்கள் உருவாகாமலே போனது. அதையெல்லாம் இங்க பார்த்தாலே தெரியுதே? அதனாலயே சிங்கள் படங்களை உருவாக்கி பிழைத்தார்கள். புலிகள் காலத்தில சில படங்கள் வந்தது. அதுவும் ஒருவகை விளம்பரப் படம் அல்லது பிரசார படம். இனியாவது வருமா என்றால் காதைத்தான் சொறிய வேண்டும்?

    குளித்துக் கொண்டிருக்கும் பெண் நிர்வாணமாக இருக்கிறார் என்பதால் தூக்கி காப்பாற்றுவதா? இல்லை மானத்துக்காக சாக விடுவதா என்று எவருக்கும் யோசிக்கத் தோன்றாது. முதலில் உயிரை காப்பதுதான் கடமை. எமது சமூகம் உயிரை விட மானத்தைத்தான் பெரிதாக கருதுகிறது என்றால் பிரசவங்கள் இன்னொருவர் முன் நடப்பதே அவமானம்தான். சத்திர சிகிச்சைகளே அவமானம்தான். கடந்த போர் காலத்தில் குண்டு தாக்குதல்களில் அகப்பட்டவர்கள் துணியே இல்லாமல் ஓடித் தப்பியிருக்கிறார்கள். அவமானத்தால் அவர்கள் சாகவில்லை. இன்றும் மனத் துணிவோடு வாழ்கிறார்கள். சிலரைக் காப்பாற்ற எரியும் துணிகளை கிழித்து எறிந்து உயிர்களை காப்பாற்றியிருக்கிறார்கள். இவை வன்னி மக்களின் வாழ்வில் கதைகள். மனிதன் போராடி வாழும் மனதை உருவாக்க வேண்டும். கலாச்சாரம் கத்தரிக்காய் என்று மூடத் தனங்களை தொடர்ந்தும் வழக்கங்களாக்கிக் கொள்ளலாகாது.

    நான் இப்போது தான் இணையத்தில் விமர்சனமாக வைக்கப்பட்ட பகுதியை பார்த்தேன். இவை யதார்த்தமாக நடப்பவை.
    1.மானத்தைக் காக்க துணி தேடினால் அந்த பெண் இறந்து போவாள்.
    2.ரோபோவுக்கு உணர்வுகள் இல்லாததை காட்ட அப்படியான ஒரு காட்சி உருவாக்கப்பட்டு உள்ளது.
    3.அந்த பெண் தற்கொலை செய்து கொள்வது , ஊடகங்கள் படம் பிடிப்பதால் அல்லது மக்கள் பார்ப்பதால் என்றால் இந்த சமூக குறைபாட்டை மாற்றலாமே?

    இருந்தாலும் படப்பிடிப்பில் பயன் படுத்தப்பட்டுள்ளது ஒரு நிர்வாண பெண் அல்ல. அங்கே கிரபிக்சில் அது இணைக்கப்பட்டுள்ளது. நெருப்புக்குள் சென்று காப்பாற்றுவது போன்ற அநேக காட்சிகள் கிரபிக் தந்திரக் காட்சிகளேயாகும்.

    Reply
  • மாயா
    மாயா

    Endhiran Movie Online ORG VCD HQ
    http://www.indiavix.com/videos/253/endhiran-movie-online-org-vcd-hq-.html

    Reply
  • நந்தா
    நந்தா

    நான் சொன்ன தகவலுக்கும் மாயாவின் பின்னோட்டத்துக்கும் என்ன சம்பந்தம் என்று விளங்கவில்லை!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சமீபத்தில் விகடனில் ஒரு வாசகர் கருத்தைப் பார்த்தேன். அதில் அவர் தமிழீழம் கிடைத்தால் தமிழ்நாட்டுத் தமிழனுக்கு என்ன இலாபம் என்பதை சீமான் பல கூட்டங்களில் விரிவாகப் பேசினாராம். அதிலொன்று தமிழ் நாட்டிற்கு கர்நாடகமும், கேராளாவும் தண்ணியைத் தராமல் ஏமாற்றுகின்றனராம். தமிழீழம் அமைந்தால் இந்த இரு மாநிலங்களுக்கும், பொட்டம்மான் சென்று அந்த மாநில முதலமைச்சர்களை மிரட்டியே தமிழ் நாடடிற்கு தண்ணியை வர வைத்து விடுவாராம். இதனை ஆதரித்து பல வேறு நேயர்களும் கருத்து வைத்திருந்ததையும் பார்த்த போது விகடன், குமுதம், நக்கீரன் போன்ற பத்திரிகைகள் இப்படிப் பல முட்டாள்களை ஊக்குவித்து ஊடக விபச்சாரம் மூலம் எவ்வாறு பணம் புரட்டுகின்றதென்பதை புரிய முடிந்தது. ஆனால் இப்படிப்பட்ட ஊடக விபச்சாரங்களை எவரும் கண்டிக்க முன்வர மாட்டார்கள். காரணம் தமக்கு துரோகிப்பட்டம் கிடைத்து விடுமென்ற கவலையில். ஒரு பக்கம் வைகோவும், நெடுமாறனும் பிரபாகரன் உயிரோடிருக்கின்றார் அடுத்தகட்டப் போருக்குத் தயாராகிவருகின்றார் என்று கதையளப்பார்கள். பின்பு இந்திய அரசு விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீடிக்க ஆராய்ந்தால், இல்லாத புலிகளுக்கு ஏன் இன்னும் தடை நீடிப்பு என்று இன்னொரு கதையளப்பார்கள். இப்படியான ஏமாற்றுப் பேர்வழிகளை எவரும் விமர்சிக்க மாட்டார்கள். மொத்தத்தில் உண்மையான ஏமாற்றுவாதிகளை விட்டுவிட்டு, அடுத்தவனைச் சாடியே காலம் கடத்துவதில் நம்மவர்கள் கில்லாடிதான். அதனால்த் தான் இன்றும் உலக்கை போனதை விட்டுவிட்டு, ஊசி போனதை ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள். வாழ்க நம்மவர்கள் சிந்தனைகள்.

    Reply
  • நந்தா
    நந்தா

    தமிழ் சினிமாவையும் இலங்கைத் தமிழர்களையும் இணைத்து பெரும் மோசடி அரசியல் நடத்தப்படுகிறது.

    சீமானுக்கு கோழிக்கறியும் குழல் புட்டும் தண்ணியுமாக கனடாவில் உபசாரம் செய்து கனடா தமிழர்களிடம் சுனாமீ இறுதி யுத்தம் என்று சுருட்டிய பணத்தினையும் கொடுத்து இறுதியில் மகளை அவர் பொறுப்பில் சென்னைக்கு படிப்பிக்க அனுப்பினார் ஒரு இடியப்பக் கடைக்காரன். சீமான் சினிமாக்காரனாச்சே! சும்மா இருப்பாரா? அந்த இளம் பெண்ணுக்கு தனது கோடாம்பாக்கம் விளையாட்டைக் காட்டி விட்டார். அந்தப் பெண் சிங்கிள் மதர் ஆகு முன்னரே அப்பன் ஓடிச் சென்று கனடாவுக்கு கூட்டிக் கொண்டு வந்து தலயில் துண்டைப் போட்டுக் கொண்டு திரிகிறார்.

    இது தமிழ் ஈழப் போராட்டத்தில் தமிழ் சினிமாக்காரன்களின் ஒரு அத்தியாயம். இன்னும் எத்தனை இருக்கிறதோ?

    Reply
  • BC
    BC

    //இப்படியான ஏமாற்றுப் பேர்வழிகளை (சீமான்,வைகோ,நெடுமாறன், விகடன்,குமுதம்,நக்கீரன்)எவரும் விமர்சிக்க மாட்டார்கள். மொத்தத்தில் உண்மையான ஏமாற்றுவாதிகளை விட்டுவிட்டு, அடுத்தவனைச் சாடியே காலம் கடத்துவதில் நம்மவர்கள் கில்லாடிதான்.//
    பார்த்திபன் கூறியது சிந்திக்க வைக்கிறது. இந்த மேசடிகாரர்களை பற்றி விமர்சித்து இது வரை ஒரு வரி எழுதாதவர்கள், எந்திரன்,முதியவர் ரஜனிகாந்த், ஐஸ்வரியா பற்றி எழுதிவிட்டால் மட்டும் வந்து அவர்களுக்காக பந்தி பந்தியா எழுதுகிறார்களே!

    Reply