இன்றைய ஈழத் தமிழரிடத்தில் “சமூகச் சீரழிவு’’ : உலகமயமாக்கல் நோக்கில் ஓர் ஆய்வு! – யோகா-ராஜன்


“அப்பாவின் மறுமணத்தை அங்கீகரிக்கும் சமூகம், அம்மாவின் பாலியல் ஆர்வத்தைப் பற்றி உணர்வதில்லை“ -நிவேதா

ஐரோப்பிய நாடொன்றில் மானிடவியல் துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டுவரும் இவர் அண்மையில் 18.12.20011 அன்று சுவிஸ் சூரிச் நகரில் இடம்பெற்ற “பெயரிடாத நட்சத்திரங்கள்’’ ஈழத்துப் பெண் போராளிகளின் கவிதைநூல் வெளியீட்டில் அழுத்தமாகத் தெரிவித்த வார்த்தைகள் இவை.

தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தரை இது ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல்! மேற்குலகக் கலாச்சாரத்தின் பிம்பமாகவும் தோன்றலாம். ஆனால் பொருளாதார வளர்ச்சியில் மட்டுமன்றி, பண்பாட்டு முறைமையிலும் சுமார் 50 ஆண்டுகள் பின்னிற்கும் எமது சமூகத்தின் வளர்ச்சிப்போக்கை முன்னெடுத்துச் செல்ல முனையும் வார்த்தைப் பிரயோகத்தில் இது ஒரு சிறு துளி!

நாம் ஏற்கனவே கூறியதுபோன்று, பழமையின் மீது சம்மட்டி அடிபோடுகின்ற பெரியாரியப் பாணிதான் எமது சமூகத்தின் இன்றைய தேவை! அதன் கோட்பாட்டு வடிவத்தை சமூக அரசியல் என்று கொள்வோம். அதை மிகவும் துணிச்சலுடன் பெண் அணியில் இருந்து ஆரம்பித்து வைத்திருக்கிறாள் இந்த இளந்தலைமுறைக் கவிஞரும் கட்டுரையாளரும் பெண்ணிலைவாதியுமான நிவேதா! இவருக்கு வயது 22 மட்டுமே.

எங்கள் நெருங்கிய நண்பர், தோழர் குஞ்சி. எமது கட்டுரைகளை வாசித்து கனமாக கருத்துரைப்பவர்களில் இவரும் ஓருவர். நீண்டகாலமாக தமிழ்த் தேசித்தின் ஆதரவாளராக இருந்து வருபவர். அண்மையில் அவர் எமக்குரைத்த வார்த்தை “நாட்டில பெரியளவில கலாச்சாரச் சீரழிவு நடக்குதாம். ஏதோ இயக்கம் அழிஞ்சதாலதான் இதெல்லாம் நடக்குதெண்டு சனம் கதைக்குது. இதைப்பற்றி அவசியமா ஒரு கட்டுரை போடுங்கோவன்.“ என்பதுதான். இக்கட்டுரையின் தோற்றத்திற்கு தூண்டுதலாக அமைவது அவரது இக் கூற்றுத்தான் என்பது பொய்யல்ல.

அடிப்படையில் பெண்களின் பாலுறவு நடவடிக்கைகள்தான் பொதுவாக ஈழத்துச் சமூகத்தில் “சமூக சீரழிவாக’’ முன்னிலைப்படுத்தப்படுகின்றன. ஊடகங்களிலும் பெரிதுபடுத்தப்படுகின்றன. அவ்வகையில் இளவயதில் காதல் செய்தல், திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்ளுதல், திருமணத்துக்கு முன் கருத்தரித்தல், கருஅழித்தல், கருவை அழிக்க முடியாத நிலையில் தற்கொலைக்கு முற்படுதல் அல்லது பெற்றெடுக்கும் சிசுவை கைவிடுதல், கொலைசெய்தல் போன்ற இன்னோரன்ன வெளிப்பாடுகளே இன்றைய சமூகச் சீரழிவின் உச்சங்களாக முன்னிறுத்தப்படுகின்றன! இதில் பெண்ணுக்குச் சமனாக ஆணுக்கு இருக்கும் பங்கு இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுகிறது, அல்லது கண்டுகொள்ளப் படாமலே விடப்படுகிறது.

நண்பர் ஒருவர் கூறினார்… “கசிப்பு, கள்ளளச் சாராயம் காச்சுதல், போதைவஸ்துப் பாவனை, ஒழுக்கமற்ற பாலுறவு என்று எல்லாச் சீரழிவுக்கும் ஆமிக்காரங்கள் துணை போறாங்கள், தூண்டியும் விடுகிறாங்கள்’’ என்று, ஜிரிவி மொழியில் பேசிய இவர், பின் தொடர்ந்து தன்மொழியில் பேசுகின்றபோது… “இவை போக, பேரளவிலான சமூகச் சீரழிவாக இருப்பது நாட்டில ஆண் பெண் உட்பட ஒரு பகுதியினர் எவ்வித உழைப்பிலும் ஈடுபடாமல் இருப்பதுதான்… வெளிநாட்டில் இருந்து வருகின்ற பணத்தில் சீவிக்கின்ற இவர்கள் மோட்டார்ச் சைக்கிள் முதல் ஐபோண், இன்ரநெற், பேஸ் புக் என்று அனைத்துச் சௌகரியங்களுடனும் வாழ்கின்றனர். இவர்கள் வெளிநாடுகளில் இருந்து அண்ணன்மார், அக்காமார் அனுப்புகின்ற பணத்துடன் ஒப்பிடுகின்றபோது ஒருநாள் வேலைக்குச் செல்வதையோ, நாலு பயிர்களை வைத்துத் தண்ணீரூற்றுவதையோ பேர் நஷ்டமாகக் கருதுகிறார்கள். உடம்பை தேவையில்லாமல் ஏன் கஷ்டப்படுத்துவான் என எண்ணுகிறார்கள்’’ என்று.

இன்றைய உலகமயமாக்கல் முறைமையில் உள்ளங்கை அளவுக்கு சுருங்கிக் கிடக்கிறது உலகம். கணணிமயமும் அதனால் உருவான தொழில்நுட்ப முறைகளும் இதனை துரிதப்படுத்தியது. மேலும் இலகுபடுத்தியதுடன் மலினப்படுத்தியுமுள்ளன. உலகமயமாக்கலின் பிரதான அம்சம் பொருளியலில் ஏற்படும் மாற்றங்கள். திறந்த சந்தைப் பொருளாதாரம் என்பது அதன் அச்சாணி! மனிதர்களிடையே நுகர்வுக் கலாச்சாரத்தைத் தக்கவைப்பது அதன் உச்சம்! மனிதர்ளை, சக மனிதன் பற்றிய பிரகஞையற்ற விதத்தில், சுயமாக வாழ்வதற்குரிய சூழலை அல்லது சந்தர்ப்பங்களை உருவாக்கி, (உதாரணமாக மேலை நாடுகளில் வயோதிபர்கள் தவிர வேலையற்ற இளையவர்க்கும் சமூக நலக் கொடுப்பனவுகளை வழங்கி) தனிமனித உற்பத்திகளை மேம்படுத்தி, தனித்தனிக் காலில் நிற்கவைப்பது! இதன் பக்க விளைவாக பிறப்பெடுக்கும் மனிதர்களுக்கிடையிலான கூட்டு முயற்சிகளுக்கான சந்தர்ப்பங்களை தகர்த்துவிடுவது! இவை எல்லாமே குறிப்பிட்ட சில சக்திகள் மட்டும் உலகை ஆளுமை செய்வதற்கான நவீன முறைமைகள்! உலகமயமாக்கலின் ‘உன்னதங்கள்’! இந் நிலைமைகளில் உலகமயமாக்கலின் சாதக பாதக அம்சங்களுக்கு அப்பால் அதன் பிடிக்குள் சிக்குப்பட்டதுதான் இன்றைய உலகு என்பதை மறுத்துவிட முடியாது! நாம் மட்டும் அதற்கு விதிவிலக்கானவர்கள் ஆக இருந்துவிட முடியாது.

உலகமயமாக்கல் திறந்துவிடுவது சந்தைப் பொருளாதாரத்தை மட்டுமல்ல. கூடவே மனித மனங்களையும் பரந்த அளவில் கட்டுப்பாடின்றித் திறந்துவிடுகிறது. இதில் விந்தை என்னவெனில், இவ்விதம் மனித மனங்களைக் கட்டுபாடின்றித் திறந்துவிட்டு, தாம் கொட்டி வைத்திருக்கும் விற்பனைப் பொருட்களின் மீது மனிதனின் கவனத்தை ஒன்று குவித்துவிடுகிறது! அது மனிதசிந்தையில் நுகர்வுக் கலாச்சாரத்தை இலகுவில் நுழைத்துவிடுகிறது! இது மனித இரத்தத்தில் கெட்ட கிருமிகள் நுழைவதுபோல் எமது விருப்பு வெறுப்புக்களையும் மீறி நிகழ்கிறது.

கீழைத் தேசங்களில் பேரளவிலான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தாத நிலையிலும், பொருளாதார மாற்றங்களை உண்டுபண்ணியிருக்கிறது உலகமயமாக்கல் முறைமை. இப் பொருளாதார மாற்றங்கள் சமூகங்களிடையே பண்பாட்டுரீதியான மாற்றங்களை துரிதப்படுத்த முனைகிறது. இத்தகைய பண்பாட்டு முறைமையிலான மாற்றங்களுக்கு அறிவியல் வழியில் முகங்கொடுக்க முடியாத சமூகம், இதனை ’’சமூகச் சீரழிவாக’’ நோக்குவதன் மூலம் அழுது புலம்ப முனைகிறது. இத்தகைய மாற்றங்களை அறிவுரீதியில் ஆய்வதும், எதிர்கொள்வது பற்றியும் கூறுவதே இக் கட்டுரையின் உள்ளடக்கம்.

சமூக வளர்ச்சியின் நெம்பு கோலாக அமைவது உழைப்பு! இத்தகைய முக்கியத்துவம்வாய்ந்த உழைப்பில் ஈடுபடாத, உழைப்பை உதாசீனம் செய்கின்ற (மேலே நண்பர் கூறிய) சமூகக் குழுக்கள் பற்றி, தமிழ் ஊடகங்களும் சரி, சமூகமும் சரி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஆமிக்காரனின் திட்டமிட்ட செயல் என்று பரப்புரை செய்து போதைவஸ்து பற்றி இடையிடையே பேசிக்கொள்வதையும் மறுப்பதற்கில்லை. (எப்போது ஒரு சமூகம் தனது தவறுகளுக்கான காரணங்களை மற்றவன் மீது சுமத்த முனைகிறதோ, அப்போதே அச் சமூகம் தனது சமூகத்தின் தவறுகளுக்கான உண்மைக் காரணங்களை அறிந்துகொள்ளும் திறனை இழந்துவிடுகிறது என்பது இங்கு ஆழ் சிந்தனைக்குரிய விடயம்).

ஆனால் இவைகளுக்கப்பால் இளம் தலைமுறை உறவுகளுகளின் (குறிப்பாக கன்னியரின்) பாலுறவு பற்றியும் அதன் பக்கவிளைவாகத் தோன்றும் சிசுக்கொலைகள் பற்றியுமே பத்திரிகைகள் தொடங்கி படித்தவர்கள், அரச அதிபர் இமெல்டா சுகுமார் அடங்கலாக பதவியில் உள்ளவர்கள் எல்லோரும் பரபரப்பாகப் பேசிக்கொள்கின்றனர்.

ஆகையினால் நாம் இங்கு ஆழமாக நோக்குவது, “சமூகச் சீரழிவு’’ என்பதன் மையப்பொருளாக விளங்குகின்ற பாலியல் அல்லது பாலுறவு பற்றியே! அதேவேளை சமூகத்தில் -கலாச்சாரத்தில்- ஏற்படும் இவ்வித சிக்கலான பிரச்சனைகளை அதன் யதார்த்தத்தின் வழிநின்று தொட விரும்புகின்றோம். அதன் பொருட்டு மேற்குலகின் விழுமியங்களை அதன் முன்னேறிய பக்கங்களைச் சற்றுப் புரட்டிப்பார்க்கவும் எண்ணுகின்றோம். குறிப்பாக நாம் வாழுகின்ற சுவிற்சலாந்தில் 1970ல் தொடங்குகின்ற இவ் வளர்ச்சிபோக்கை இங்கு எமது அணுகுமுறையில் கண்டுகொள்ளலாம்.

பாலியல் பற்றிய எமது புரிதலும் மேற்குலக கலாச்சாரமும்:

மனிதன் அடிப்படையில் ஒரு ஜீவராசி. மானுடவியல் நோக்கில் உயிர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று பாலியல் அல்லது பாலுறவு. பிரபஞ்சம் தோன்றி, உலகம் தோன்றி உலகத்தில் உயிர்கள் தோன்றி, கலாச்சாரங்கள் தோன்றின. மனிதன் கலாச்சாரத்திற்கு முந்தியவன். இன்றைய தந்தை வழிச் சமூகத்துக்கு முந்தைய தாய்வழிச் சமூகத்தில் தாய் மகனுடன் புணர்ந்ததையும், தந்தை மகளுடன் புணர்ந்ததையும் பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. பின் தந்தைவழிச் சமூகத்தின் வருகையுடன் தோன்றிய சொத்துடைமைச் சமூகத்தில் அரசுகளும், மதங்களும், அன்றைய மனிதனின் தேவைகளுக்கு ஏற்ப சில பல கட்டுப்பாடுகளை உருவாக்கிக்கொண்டன. வெவ்வேறு கட்டுப்பாடுகளுக்குட்பட்ட மனிதக் குழுக்கள், வெவ்வேறு சமூகக் குழுக்களாகத் கட்டமைக்கப்பட்டன. இக் கட்டுப்பாடுகள், மனித குழுக்கள் ஒன்று இன்னொன்றுடன், சேர்வதைத் தடுப்பதற்கும், அவரவர்க்குரிய அடையாளங்களை தக்கவைப்பதற்கும் ஏதுவாக அமைந்தன. அதுவே (அந்தந்தந்தச் சமூகக் குழுக்களுக்குரிய கட்டுப்பாடுகள்) காலப்போக்கில் அவரவர்க்குரிய கலாச்சாரங்கள் ஆயின. பொதுவாக அனைத்துச் சமூகங்களிலும் பெண் ஆண்களின் சொத்துக்களாக வரையறுக்கப்பட்டாள். அதைத் தொடர்ந்து அனைத்துச் சமூகங்களும் பாலியல் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டன. இவற்றையும் மீறி, மனித சமூகத்தின் மறு உற்பத்தியின் அடிப்படையாக, சமூகங்களில் பாலியல் தேவைகள் உணரப்பட்டும், வலியுறுத்தப்பட்டும் வந்திருக்கின்றன.

எமது புராணங்களும் இதிகாசங்களும் கூட மனிதரின் பாலியல் தேவைகளை ஆங்காங்காங்கே வெளிப்படுத்துகின்றன. அதுமட்டுமன்றி பாலுறவின் வெவ்வேறு பரிமாணங்களையும் அவை குறிப்புணர்த்துகின்றன. சிவபெருமானும் கிருஷ்ணரும் புணர்ந்ததையும், அவர்களின் புணர்ச்சியில் பிறந்த பிள்ளையாக ஐயனாரையும் சித்தரிக்கிறது ஒரு புராணக்கதை. தவிரவும் எமது கோயிற் கோபுரங்களை அலங்கரிக்கும் சிற்பங்களும் சிலைகளும் கூட பாலுறவின் தேவைகளைப் பறைசாற்றுகின்றன.

இவற்றுக்கும் அப்பால் “காம சூத்திரா“ வைத் தருவித்த கலாச்சாரத்தின் வழிவந்தவர்கள் என்பதில் நாம் பெருமையடைய வேண்டும். மனிதரின் பாலியல் தேவையை அடிப்படையாக் கொண்டு அவர்களது புணரும் வலிமையை மேம்படுத்தும் பொருட்டும், புணர்ச்சியின்போது காமச் சுவையை அனுபவிப்பதற்கான பல்வகை முறைமைகளை வெளிப்படுத்துவதுதான் காமசூத்திரா.

1970 களுக்கு முன்புவரை மேற்குலகிலும் பாலுறவு குறித்து பல கட்டுப்பாடுகள் நிலவிவந்தன. 1970களில் உருவான ஆணுறை உற்பத்தி, மனிதர்களுக்கிடையிலான பாலியல் தேவையில் பெரும் பாய்ச்சலை உருவாக்கியது. திருமணத்துக்கு முந்திய பாலுறவுக்குத் தடைபோடும் திருச்சபைகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் நடைமுறையில் அக்கட்டுப்பாடு வலுவிழந்ததாகவே காணப்படுகிறது. மேற்கு ஐரோப்பாவைப் பொறுத்தவரை ஓரடி முன்சென்று போசனவாய்வழி பாலுறவு Oralsex, ஆசனவாய்வழிப் பாலுறவு Analsex, குழுநிலைப்பாலுறவு, ஓரினச் சேர்க்கை (ஆண் சக (ஆண் Gay, பெண் சக பெண் Lesbian- என்று) பாலுறவின் பல்வேறு பரிமாணங்களையும் ஏற்றுக்கொள்ளும் சட்டங்களுக்கு அங்கீகாரம் வளங்கியுள்ளது. சுவிசில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பிள்ளைகளைச் சுவீகாரம் செய்து கொள்வதற்கான சட்டங்கள் பற்றியும் பேசப்படுகின்றன. எங்கள் நாடும் சமூகமும் கூட குறைந்த பட்சம் சமூகத்தில் ஓரினச் சேர்க்கை முறையிலான பாலுறவு உண்டு என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கான சட்ட அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும்.

இங்கு கவனிக்கப்படவேண்டிய முக்கிய குறிப்பு, இம் மாற்றங்கள் எதுவும் வெறும் காலஓட்டத்தின் நிகழ்வுகள் அல்ல என்பதுதான். மாறாக பொருளாதார உற்பத்தியின் பரிணாம வளர்ச்சியாகவே பார்க்கப்படவேண்டும். சர்வதேச மயப்படுத்தப்பட்ட இன்றைய சூழலில் கற்புக்கும், கண்ணகிக்கும் கூட நாம் புதிய வியாக்கியானம் வழங்க வேண்டியவர்களாகவே இருக்கின்றோம். எமது தேசமும் மக்களும், கைத்தொலைபேசி, ரிவி, இன்ரநெற், பேஸ் புக் என்று இன்றைய சர்வதேசமயப்படுத்தப்பட்ட அனைத்துத் தேவைகளையும் நுகர்ந்துகொண்டு, அதற்குப் புறம்பான முறையில் பழைமைக் கலாச்சாரத்தில் திகழ நினைப்பது ஒன்றுக்குப் பின் முரணான செயற்பாடாகும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மூத்தகுடி நாம் என்று பெருமை பேசுவதற்கு, இது ஒன்றும் கற்காலமும் அல்ல!

எமது கலாச்சாரத்தில் பாலியல் பற்றிய கற்பிதங்களும் ஓரினச் சேர்க்கையும்:

பாலியல் என்பது மனித சமூகத்தின் அடிப்படைத் தேவை என்பதை மேலே பார்த்தோம். மனிதனின் குழந்தைப் பருவத்தில் இருந்தே பாலியலுக்கான உணர்வும் தோற்றம் பெறுவதாக, உளவியலாளர்கள் பலரும் ஏற்றுக்கொளகின்றனர். குழந்தைகள் கக்கா கழிக்க்கின்றபோது அவர்களது முகத்தில் தோன்றும் மகிழ்ச்சி அவர்கள் பாலியலைத் துய்ப்பதன் அடையாளம் என்கிறார்கள். முலைப்பால் அருந்தும் குழந்தையினால் ஏற்படும் தாயின்பமும் உள்ளகரீதியான பாலுணர்வாகவே உளவியலாளர்களால் ஏற்கப்படுகிறது. ஆனால் இவை எதுவும் இனவிருத்தி சம்பந்தப்பட்ட பாலியல் உணர்வுகள் அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அந்த அடிப்படையில் மனிதனிடம் இயல்பாகத் தோன்றும் பாலுணர்வு, பதின்ம வயதிலேயே சக மனிதரிடம் (ஆண், பெண்) உறவுகொள்ளக் கோருகிறது.

எங்கள் சமூகத்தில் ஓரினச்சேர்க்கை முறை ஒன்று இல்லை என்று அதட்டுபவர்களும் உண்டு. ஆனால் காதலுக்கும் காமத்தேவைகளுக்கும் எமது சமூகத்தில் நிலவும் தடையானது, பாலுறவுத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு இரகசிய முறைகளைக் கையாளும்படி நிர்ப்பந்திக்கிறது. இதனால் எமது சமூகத்தில் ஓரினப் பாலுறவில் ஈடுபடாத பதின்ம வயதினரை இனம் கண்டுகொள்வது கடினமே! விகிதாரசாரத்தில் வேறுபட்டிருப்பினும் இருபாலாருக்கும் பொருந்திய விசயமே இது! ஆனால் இவர்கள் மேற்குலக முறையிலான ஆசனவாசல் வாய்வழியில் (Anal Sex) பாலுறவில் ஈடுபட்டார்கள் என்று கூறிவிடமுடியாது. ஏனெனில் இப்படி ஒன்றிருப்பதையே எமது சமூகம் அறிந்திருக்கவில்லை அல்லது அருவருப்பாகப் பார்த்திருக்கலாம். இதே பதின்ம வயதினர் சுய இன்பம் துய்ப்பதன் மூலமும் தமது பாலுணர்வைத் தளர்த்திக் கொள்கின்றனர்.

இவையெல்லாம் எமது மரபுவழியில் வந்த செயற்பாடுகள் என்பதை, மேலே குறிப்பிட்ட வகையில் புராணங்கள், இதிகாசங்கள் அடங்கலாக கோயிற் சிற்பங்களும், பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் ‘கைக்கிளை’ எனும் சொல்லும் ஆதாரப்படுத்துகின்றன. மேலும் மகாத்மா காந்தி அவர்களுக்கு 13 வயதில் திருமணம் நடந்தது என்ற விடயத்தையும் இச்சந்தர்ப்பத்தில் குறித்துக்கொள்ள முடியும். இவற்றைக் கூறுவதன் மூலம் நாம் பாலிய வயதுத் திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டுவதாக அர்த்தமல்ல.

தமிழர் கலாச்சாரத்தில் மிகப்பெரும் கற்பிதமாக இருப்பது கற்புடமை. இதுவே பெண்களின் பேருடமையாகவும் கருதப்படுகிறது. உண்மையில் பெண்களை தன்னுடமையாகக் கருதுவதன் வெளிப்பாடுதான் இது. மனதளவில் கூட இன்னொருவரை நினைத்துவிடக்கூடாது என்பதுதான் கற்புடமையின் அடிப்படை. மானிடவியல் நோக்கில் மிகப்பெரும் மனித உரிமை மீறலும் இதுதான்!

மேற்குலகில் பாலியலை வெளிப்படையாகப் பேசப்படவேண்டிய பேசுபொருளாக கருதுகிறார்கள். இன்றைய நவீன உலகும் இதனையே ஏற்றுக்கொள்கிறது. பதின்ம வயதின் ஆரம்பத்துடன் பாடசாலைகளில் இதற்கான பாடங்களும் ஆரம்பிக்கப்படுகின்றன. ஆனால் எமது சமூகம் பாலியலை வெளிப்படையாகப் பேசுமளவிற்கு இன்னும் வளர்ச்சியடையவில்லை. மாறாக பாலியல் என்பது அடக்கப்படும் உணர்வாகவும், ஒடுக்கப்பட வேண்டிய விசயமாகவும் கருதப்படுகிறது. இவை அனைத்தையும் மீறி உள்ளகரீதியில் பரமரகசியமான முறையில் பாலியல் சார்ந்து பல குளறுபடிகளுடன் நகர்ந்து செல்கிறது எமது சமூகம். இதன் விளைவு சிசுக் கொலைவரை வந்து நிற்கிறது.

குடும்பமும் பாலியலும்:

குடும்பம் என்பது அடிப்படையில் ஆண் அரசியல் வகைப்பட்டது. இது ஓர் பேரரசுக்குரிய நுண்ணிய (micro) வடிமாகச் செயற்படுகிறது. அதாவது பேரரசுக்குரிய தொழிற்பாட்டை சிறிய அளவில் கொண்டிருப்பதே குடும்பம். இதன் சிறப்பம்சம் தலைமை உறுப்பினர்களான தாய், தந்தையர்களுக்கிடையிலான பாலியல் உறவு இங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும். ஆனால் தமக்குள் பாலுறவைக் கொண்டிருக்கும் இத் தலைமை உறுப்பினர்கள், குடுப்பத்தின் ஏனைய உறுப்பினர்களது பாலியல் (காதலிக்க முயற்சிப்பது, காதலிப்பது போன்ற) நடவடிக்கைகளுக்கு எதிரான முறையில் காவலரண்காளாகச் செயற்படுவர். இது அடிப்படையில் தமது பாலியல் தேவையை ஒரு மானிடத் தேவையாக புரிந்து கொள்ளாமையின் வெளிப்பாடே!

எமது சமூகத்தில் பாலியல் தேவைகளை அடைவதற்கான ஒரே ஒரு நிறுவனமாக குடும்பம் மட்டுமே செயற்படுகிறது. இரும்புத் திரையால் மூடப்பட்ட இந் நிறுவனத்தில், பாலியல் உறவு என்பது ஜனநாயக வழிமுறைக்குட்பட்டதாக இருப்பதில்லை. எமது குடும்பங்களில் இன்றும் கணவன், மனைவிக்கிடையிலான பாலுறவு கணவனின் விருப்பத்தின் அடிப்படையில் பகிரப்படும் ஒன்றாகவே அறியமுடிகிறது. மனைவி தனக்கு விரும்பிய, தனது பாலுறவுக்கான தேவையைக் கோரும்பட்சத்தில், அவள் ஆணின் சந்தேகத்துக்குள்ளாகிறாள். இப்போக்கு இன்றைய இளந் தலைமுறையினரிடமும் தொடர்வதுதான் பேரவலம்.

மூடப்பட்ட இந் நிறுவனத்தில் பாலியல் ஒடுக்குமுறைகளும், சூறையாடல்களும் மிக இயல்பாகவே இடம்பெறும்! இந்நிலைமைகளில் கணவன், மனைவியர்களுக்கிடையிலான பாலுறவில் விரிசல்கள் ஏற்படுகின்றன. இதுவே, (வெவ்வேறு இடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நேரடியாக எம்மால் அவதானிக்கப்பட்ட உரையாடல்களின் அடிப்படையில்) குடுப்பத்தில் பல்வேறு விபரீதங்கள் உருவாகுவதற்கும் கால்கோளாக அமைந்துவிடுகிறது. அத்தகைய ஒரு சூழலில்,

1. ஆண் தனது பாலியல் தேவைகளுக்காக வெளியில் செல்கிறான்.

2. பெண்களும் இதே தேவைக்காக வெவ்வேறு வழிகளை நாடவேண்டி நேருகிறது.

3. இதையும் தாண்டி இன்னும் ஒரு பகுதியினர் (பிள்ளைகளின் நலன் கருதி) சமூக ஒழுங்கமைப்புக்குட்பட்டு தம்மைத் தாமே வருத்திக்கொண்டு பாலியல்தேவைகளைத் தியாகம் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் சிலர், மன அழுத்தத்துக்கு உட்பட்டு, இருதய நோய் உட்பட பல்வேறு வகை நோய்களுக்கு ஆட்படுகின்றனர்.

தமது பாலுறவுத் தேவைக்காக சமூக நெறிமுறைகளுக்கு பிறழ்வான நடைமுறைகளுக்குட்படும் அதே பெற்றார், தமது பிள்ளைகளின் பாலுறுவுத் தேவைகளை மிக வலிமையுடன் அடக்கி ஒடுக்குவதை இலகுவில் கண்டுகொள்ளலாம்.

திருமணமாகி, சுமார் 5 ஆண்டுகள் வரை அல்லது அதற்கும் மேலாக ஆகக் கூடியது 12 வருடங்கள் வரைதான் கணவன் மனைவிக்கடையிலான பாலுறவு செயலூக்கம் மிக்கதாக நிலைத்திருக்க முடியும் என்று கூறுகிறது இன்னோர் ஆய்வு. அதன் பின்பு பிள்ளை வளர்ப்பு, சமூக நிர்ப்பந்தங்கள் காரணமாகவே கணவன் மனைவிக்கிடையிலான உறவு கட்டமைக்கப்படுகின்றன என்பது இதன் மறு அர்த்தம் ஆகும். இச் சந்தர்ப்பங்களில் கணவன் மனைவிக்கிடையிலான பாலுறவு முறைமைகள் பல்வேறு பரிமாணங்களை (காம சூத்திராவில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு) நோக்கி வளர்ச்சியடைய வேண்டும். ஆனால் எமது சமூகத்தில் ‘பாலுறவில் பல்வேறு பரிமாணங்கள்’ என்பதற்கான அர்த்தம் புரிந்துகொள்ளப்பட்ட ஒன்றாக கொள்ள முடியுமா என்பது கேள்வியே! உண்மையைக் கூறின் நாம் காம சூத்திராவைத் தருவித்த ஒரு சமூகத்துக்கு மிக நெருக்கமானவர்களாக இருந்தபோதும், பாலியலுக்கு என்று ஓர் அறிவிருப்தை புரிந்துகொள்வதில்லை.

கணவன் மனைவிக்கிடையிலான புரிதல்களில் விரிசல்கள் ஏற்படும் பட்சத்தில் தமது பிரச்சனைகளை வெளிப்படையாகப் பேசி, ஓர் தீர்மானத்துக்கு வருவதில் மேற்குலகச் சமூகம் மிக முன்னுதாரணமாக திகழ்கிறது. இது அடிப்படையில் மேற்குலகில் (ஒப்பீட்டளவில்) நிலவும் ஒரு மேன்மையான சமூக ஜனநாயகப் பண்பாக ஏற்க முடிகிறது! ஒருமித்த வாhழ்வு என்பது தனித்து கருத்தக்களால் மட்டும் கட்டமைக்கப்பட்ட ஒன்றல்ல. உடலியல் ஒற்றுமையும் இதில் பிரதான பங்கு வகிக்கிறது. இயல்பில் ஓரிச் சேர்கையாளராக இருக்கும் எமது சமூக உறுப்பினர்கள் தம் நிலைமையை வெளிப்படையாக முன்வைப்பதற்கு எமது சமூகப் பண்பாட்டில் இடமில்லை. ஆதனால அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ திருமண பந்தத்துக்கு ஆட்பட்டு இறுதியில் பாலுறவுப் பிரச்சனைகளாலேயே பிரிந்து விடுகின்றனர். இவை வெளியில் தெரியமுடியாத சம்பவங்களாக அமுங்கிப் போகின்றன. காம சூத்திரா வழிவந்த சமூகம் என்பதனாலோ அன்றி வேறு காரணங்களினாலோ எமது சமூக மரபில்… சரி, பிழை அல்லது உண்மை, பொய்மை என்பதற்கு அப்பால் சாதகப் பொருத்தங்களில் யோனிப் பொருத்தம் மிக முக்கிய கூறுகளில் ஒன்றாகக் கருதப்படுவதை உடலியல் ஒற்றுமைக்கு ஆதாரமாக அவதானிக்கலாம்.

திருநங்கையர் (அரவாணிகள்) மீதான எமது அக்கறை:

ஆண் உடம்பு, பெண்ணுக்குரிய உணர்வுகளுடன் இருப்பதுதான் திருநங்கையர் தோற்றத்தின் அடிப்படை. இவ்வகைப்பட்ட மூன்றாவது பாலினத்தை இழிவாகப் பார்க்கின்ற அல்லது அவர்கள் பற்றி கவனத்தில் கொள்ளாத போக்கு எமது சமூகத்தில் இன்னும் உண்டு.

மேலே ஒரு பந்தியில் குறிப்பிட்டது போல் ஐயனாரின் பிறப்பு இவர்களுக்கான பாலுறவு முறைமையின் மேலதிக கற்பனையே! மேலும் சைவ சமயத்தில் அர்த்தநாரீஸ்வரர் என்பது சிவபெருமானுக்குரிய விசேட தோற்றங்களில் ஒன்று. ஒரே உடம்பு! பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் சித்தரிக்கப்பட்டிருப்துதான் இதன் சிறப்பம்சம். இது மனித சமூகத்தில் திருநங்தையரின் இருத்தலை உறுதிப்படுத்துவதுடன், அவர்களுக்கு சமூகத்தில் வழங்ப்படவேண்டிய அங்கீகாரத்தையும் கோருகிறது. இன்னும் சிவன் தாயுமானவர் ஆகி பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய கதையுமுண்டு. இவையெல்லாம் பெண் ஆணாக மாறுவதும், ஆண் பெண்ணாக மாறுவதும் ஆதிகாலம் தொட்டு சமூகத்தில் இருந்து வந்த இயற்கை முறைமையின் பிரதிபலிப்புகளே!

இன்றைய நவீன சிகிச்சைமுறை பெண்ணாக மாறிய திருநங்கையரின் ஆணுறுப்பை சத்திரசிகிச்சை மூலம் அகற்றிவிட்டு, செயற்கை முறையிலான பெண்ணுறுப்பைப் பொருத்தி ஆணுடனான இயற்கையான பாலுறவுக்கு வழிசெய்கிறது.

இன்று திருநங்கையர்களை மூன்றாவது பாலினமாக அங்கீகரிப்பதும், அவர்களது பாலுணர்வைப் புரிந்துகொள்வதும் கூட மானுடவியல் நோக்கில் ஓர் உயர் கலாச்சாரமாகவே நோக்கப்படுகிறது.

பாலியல் தொழில் பற்றிய எமது புரிதல்:

மனித சமூகத்தில் பாலியல் தொழில் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பழைமை வாய்ந்த ஒன்று. எமது தொன்மை இலக்கியங்களான சிலப்பதிகாரமும், நளாயினி சரிதையும், புராணக்கதைகளும் கூட இதற்கு ஆதாரங்கள் ஆகின்றன. இந்தியாவில் பரமரகசியமாகப் பாதுகாக்கப்பட்டும், பல பிரச்சனைகளுக்குள் அகப்பட்டும் வந்த பாலியல் தொழில், இன்று சட்டவகைக்குட்பட்டு வளர்ந்து வருகிறது. நெதர்லாந்தில் இரு பாலாருக்குமான ஒரு தொழில் முறையாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் எமது நாட்டிலும் இது ஒரு தொழில் முறையாக வளர்வதைகக் கண்டு ஆச்சரியம் அடைவதற்கில்லை. 1980ம் ஆண்டுகளில் சுமார் 25000 பாலியல் தொழிலாளிகளைக் கொண்டிருந்த நாடு இலங்கை.

எனவே நாம் இங்கு புரிந்துகொள்ளப்பட வேண்டிய விசயம், பாலியல் தொழில் அழிந்துவிடக்கூடிய, அழித்துவிடக்கூடிய ஒன்றல்ல என்பதுதான். நிலவுகின்ற இத்தொழிலை சட்டரீதியாக அங்கிகரித்து, அதற்குரிய கொடுப்பனவுகளை உரிய முறையில் கையாள்வதற்கும் அரசு முன்வரவேண்டும். மேலும் பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும், வயோதிப கால வாழ்க்கைக்கும் கூட உத்தரவாதம் அளிக்கும் வகையிலும் தொழிற்சட்டங்கள் பலப்படுத்தப்பட வேண்டும்.

அதேவேளை பெண்களையும் சரி அன்றி ஆண்களையும் சரி விருப்பத்துக்கு மாறான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கும், இத்தொழிலில் ஈடுபடுத்த முனைபவர்களுக்கும் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கான முறையில் சட்டரீதியான கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும்.

பாலியல் ரீதியாகக் கொண்டுவரப்படும் இச்சட்ட வடிவங்களும் வழிமுறைகளும் இத் தொழிலில் கையாளப்படும் சூறையாடல்களை தவிர்க்கவும், எமது நாட்டில் குழந்தைகள் மீதான (ஓரினச் சேர்க்கை உட்பட) பாலியல் துஷ்பிரயோகத்தைத் இல்லாதொழிக்கவும் வழி சமைக்கும்.

பிரச்சனைகளுக்கான பிரதான தீர்வுமுறைகள்!

மனித தேவைகளின் அடிப்படைகளில் ஒன்றாக பாலியல் உணர்வுகள் இருப்பதை இதுவரை ஆராய்ந்தோம். ஆனால் எமது சமூகத்தில் “சமூகச் சீரழிவு’’ களின் முதன்மைப் பிரச்சனையாகவே பாலியல் பார்க்கப்படுகிறது! ஒன்றுக்கொன்று முரண்பட்டிருக்கும் இப்பிரச்சனையை எப்படிக் கையாள்வது?

„உற்பத்தி முறையில் ஏற்படும் மாற்றங்கள் மனிதப் பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும் மாற்றங்களை உண்டு பண்ணுகின்றன“

இது இயங்கியல் விதியின் பிரதான அம்சம். உலகமயமாக்கல் முறைமையில் பொருளாதார மாற்றத்துக்குட்பட்டிருக்கும் இலங்கைச் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் “சமூகச் சீரழிவு’’ எனும் இக் கருத்தியலின் தாக்கத்தையும் இவ் விதியின் மையப்போக்கில் இருந்தே நோக்க முடியும்.

சுவிற்சலந்தில் பதின்ம வயதினரின் பாலுறவு பற்றிய சட்ட விதியின் பிரகாரம்…

1. 16 வயதுக்கு மேல் இருபாலாரின் விருப்பின் அடிப்படையில் புணர்வதற்கு அனுமதியுண்டு.

2. 14 வயதையடைந்தோரும் புணர்ந்து கொள்ளலாம். ஆனால் பாலுறவில் ஈடுபடும் இரு பகுதியினருக்கும் இடையிலான வயது வேறுபாடு ஆகக் கூடியது மூன்று வயதுக்கு மேல் அமையக் கூடாது.

பதின்ம வயதின் ஆரம்பத்துடன் பாலியல் கல்வியாக்கப்படுவதனால் கருத்தரிக்கும் வாய்புக்களையும், எயிட்ஸ் போன்ற நோய்ப் பரவல்களையும் இவர்கள் தவிர்த்துக் கொள்கிறார்கள். இதையும் மீறி உருவாகும் கருக்களை அழிப்பதற்கும் இங்கு அனுமதியுண்டு. கரு முற்றிய நிலையில், அழிக்க முடியாத சூழலில் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கும் போதிய அனுமதியுண்டு. இங்கு இச் சமூகத்தின் சிறப்பம்சம் இக் குழந்தைக்கும், குழந்தையைப் பெற்றெடுத்த தாயாருக்கும் சமூகத்தில் அங்கீகாரம் உண்டு என்பதுதான். இதனால் சிசுக்கொலைக்கான சந்தர்ப்பங்களும் இங்கு இல்லாமல் போய்விடுகிறது!

இவ்வகையில் எமது பாடசாலைகளில் பதின்ம வயதில் இருந்தே பாலியல் அறிவு புகட்டப்பட வேண்டும். அதேவேளை கற்பித்தல் என்றபேரில் பாலியற் கிளர்ச்சிக்குட்படுத்தி மாணவர்களை துஷ்பிரயோகம் செய்ய முனையும் ஆசிரிர்கள் மீது சமூகம் விழிப்பாக இருக்கவேண்டும். அதற்கெதிரான சட்டங்களும் ஓட்டை ஒடிசல் இன்றி இறுக்கமானதாக அமைய வேண்டும்.

பதின்ம வயதுப் பாலுறவினால் ஏற்படும் கருத்தரிப்பில் பிறக்கும் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பை உடனடியாக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேவேளை மறுபறத்தில் அக் குழந்தையையும் குழந்தையைப் பிறப்பித்த தாயையும் அங்கீகரித்துக் கொள்ளும் வகையில் சமூகப் பண்பாடுகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். பாலியல் உறவு என்பது அறிவு சம்பந்தப்பட்டது என்பதுடன் சமூக ஜனநாயகம் சம்பந்தப்பட்ட விடயமாகவும் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

கான் போண் Hand phone, ஐ போண் I phone , ஐபொட் I pod, பேஸ் புக் Face book, இன்ரநெற் internet, ரிவி, ரிவி நிகழ்ச்சிகள் என்று அனைத்தையும் மேற்குலகில் இருந்து நுகர்ந்து கொள்ளும் நாம், அது சுமந்துவரும் கலாச்சாரங்களை முகர்ந்துகொள்வதும் இயல்பாகிறது. இவ்வகையில் பதின்மவயது விடலைகளின் காதல் உறவுகளும், பாலியல் தொடர்புகளும் கூட சமூகத்தின் இயல்பான நிகழ்வுகளாக மாற்றம் பெறுகின்றன! இரும்புத் திரைகளுக்குப் பின்னால் மறைமுகத்தில் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட இந் நிகழ்வுகள் இன்று வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட ஆரம்பித்திருக்கின்றன!

உலகமயமாக்கலின் திறந்த சந்தைப் பொருளாதார அலையில் கூடவே, நல்லதும் கெட்டதுமான பல விசங்கள் குவிக்கப்படுகின்றன. நாம் சுவாசிக்கும் காற்றில் ஒட்சிசனுடன் சேர்ந்து கானீரொட்சைட்டும் நைதரசனும் இன்னும் பல்வகைத் தூசிகளும் கலந்திருப்பது போல! ஆனால் சுவாசப்பை தனது செயற்திறன் மூலம் உடம்புக்குத் தேவையானவற்றை மட்டும் வடிகட்டி குருதியுடன் சேர்த்துவிடுகிறது! திறந்த சந்தைப் பொருளாதாரம், நுகர்வுக் கலாச்சாரத்தையும் தனிமனித உற்பத்திகளையும் மையப்படுத்தும் அதேவேளை, தன்னளவில் தெரிந்தும் தெரியாமலும், மேற்குலக ஜனநாயகப் பண்பையும் கூடவே சுமந்து வருகிறது. ஒப்பீட்டளவில் இன்றைய உலகில் மேற்குலக ஜனநாயகம் மேன்மையானது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்! ஆனால் பண்பாட்டுரீதியில் எம்மிடம் உறைந்திருக்கும் பன்னாடைக் கலாச்சாரத்தின் வடிகட்டும் திறன் தலைகீழானது. இங்குதான் நாம் விழிப்படைய வேண்டும்!

இச் சந்தர்ப்பத்தில் நாம் முன்னிலைப்படுத்த வேண்டிய முக்கிய கருப்பொருளாக இருப்பது ஜனநாயகப்பண்பு! ஜனநாயகப்பண்பு என்பது அரசிலுக்கும், தேர்தலுக்கும் சில வாக்குவாதம்மிக்க கூட்டங்களுக்கும் மட்டுமே தேவையானவை என நோக்கும் மனநிலை மாறவேண்டும். நவீன உலகில் ஜனநாயகம் பற்றிப் பேசப்படும் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்துகொள்ள முனையவேண்டும். அவ்வகையில் இதுவரை நிலவிவந்த சமூக நெறிமுறைகளைக் கடந்து பல விசயங்களை எமது சமூகம் ஏற்றுக்கொள்ளத் தயாராகவேண்டும்.! அப்போதுதான் அதற்கான தீர்வுகளையும் இலகுவாக எட்டமுடியும்!

இதற்கான ஆரம்பமும், முதலுமாக அரசு வடிவத்தின் நுண்கலனாக விளங்கக்கூடிய குடும்பத்தின் அடிப்படைத் தேவையாக ஜனநாயகப்பண்பு உணரப்பட வேண்டும். குடும்பத்தின் தேவையாக உணரப்படும் பட்சத்தில் அது (ஜனநாயகப்பண்பு) சமூகப் பண்பாக உணரப்படுவதற்கு அதிக காலம் எடுக்கப்போவதில்லை! (சமூகப் பண்பு இனத்தின் பண்பாகவும், அரசியற் பண்பாகவும், ஒட்டுமொத்த நாட்டின் பண்பாகவும் மாற்றம் பெறுவது என்பது இன்னோர் விதி).

குடும்பத்தில் ஆளுமை சக்தியாக இருக்கும் தந்தைக்கும், தலைமை உறுப்பினர்களான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றங்கள் ஜனநாயக தன்மைக்கு உட்படுத்தப்பட வேண்டும். குடும்பத்தில் வன்முறைரீதியான அணுகுமுறையைத் தளர்த்துவதற்கும் இது உதவியாக அமையும். இவ் வழியாக, குடும்பத்தில் தலைமை உறுப்பினருக்கு அங்கீகரிக்கப்பட்ட பாலியல் தேவை, கீழ்நிலை உறுப்பினர்களாக இருக்கக்கூடிய பிள்ளைகளில் வயதானவர்க்கும் உரிய ஒன்றாக உணரப்படவேண்டும். இத்தகைய ஒரு நிலை தோற்றம்பெறும் பட்சத்தில், பிள்ளைகள் தமது காதல் விவகாரங்களை பெற்றோருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பங்கள் இயல்பாகவே பேணப்படும். மனைவி மீதான பாலியல் அடக்குமுறை உடைந்துபோவதற்கும் இது வழிசெய்யும்.

மேற்படி பண்பாட்டு முறைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்பது இலகுவான காரியமல்ல. சமூக சக்திகளாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் அனைத்துப் பிரிவினரும் இதில் ஈடுபட வேண்டும். முக்கியமாக அரசியல் சக்திகளின் ஒருங்கிணைப்பு இதில் அவசியமாகிறது. ஆனால் வாக்குவங்கிக்காக ஏங்கி நிற்கும் இவர்கள் பழைமைவாத சக்திகளை பகைத்துக்கொள்ள முன் வரமாட்டார்கள் என்பது கடந்தகால வாரலாறுகளில் கற்றுத் தேர்ந்த பாடம். ஆகையினால் பாலியல், பெண்ணியம், சாதியம், வன்முறை, பிரதேசவாதம், சூழலியல் போன்ற இன்னும் பல்வேறு கலாச்சார முறையிலான மாற்றங்களை நாம் முதலில் கூறியதுபோல் ஈவேரா பெரியார் வழியிலான சமூக அரசியல் வழியிலேயே முன்னெடுக்க முடியும். பண்பாட்டு மாற்றத்திற்குரிய இச் சமூக அரசியல் பற்றி அடுத்து வரும் கட்டுரைகளில் நோக்குவோம்.

உங்கள் கருத்து
 1. vasanth on January 31, 2012 10:52 am

  தேசம்நெற்றில் யோகா ராஜன் இன் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தேசம்நெற் சிறந்த ஒரு எழுத்தாளரை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. வாழ்த்துக்கள் யோகா ராஜன்.


 2. BC on January 31, 2012 1:40 pm

  //யோகா-ராஜன் – ஒப்பீட்டளவில் இன்றைய உலகில் மேற்குலக ஜனநாயகம் மேன்மையானது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்! ஆனால் பண்பாட்டுரீதியில் எம்மிடம் உறைந்திருக்கும் பன்னாடைக் கலாச்சாரத்தின் வடிகட்டும் திறன் தலைகீழானது. இங்குதான் நாம் விழிப்படைய வேண்டும்!//
  உங்களது இந்த கருத்தில் நான் 100% முழுமையாக உடன்படுகிறேன். அது தான் உண்மையானது, யதார்த்தமானது.
  //ஈவேரா பெரியார் வழியிலான சமூக அரசியல் வழியிலேயே முன்னெடுக்க முடியும்//
  இதை 100% நிராகிக்கிறேன்.


 3. மேத்தா on January 31, 2012 2:37 pm

  யோகா ராஜன், கட்டுரை நன்றாக இருந்தாலும், இவர் சாதியை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனும் கருத்தைக் கொண்டவர். எனவே இவரது கட்டுரைக்கும், இவரது நடைமுறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதே?


 4. sutha on January 31, 2012 9:29 pm

  யோகா ராஜன் எழுதியிருக்கும் மேற்குறிப்பிட்ட கட்டுரை இன்றைய காலப்பகுதியில் மிகவும் அவசியமானதும், புரிந்துகொள்ளப்பட வேண்டியதும்.
  மேத்தா on January 31, 2012 2:37 pm
  யோகா ராஜன், கட்டுரை நன்றாக இருந்தாலும், இவர் சாதியை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனும் கருத்தைக் கொண்டவர். எனவே இவரது கட்டுரைக்கும், இவரது நடைமுறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதே?.
  பின்னூட்டம் எழுதியிருக்கும் மேத்தா அவர்கள் ஒருவகையில் யோகா ராஜன் ஆகிய இருவர் எழுதிய கட்டுரையை ஒருவர் எழுதியதாக கருதியுள்ளார் போலும். அதைவிட யோகா ராஜன் ஆகியோர் கடந்த காலங்களிலும் பல கட்டுரைகளை எழுதியவர்கள். அந்தக் கட்டுரைகளை படித்தவர்களுக்குப் புரியும் யோகா ராஜன் ஆகியோரின் எழுத்துக்கள்பற்றி. மேத்தா அவர்கள் யோகா ராஜன் என அவர் நினப்பவரை அறிந்தவர் போலவும் காட்டி எழுதியிருக்கின்றார். அப்படி அறிந்தவராயின் சாதி தொடர்பாக மேத்தா குறிப்பிட்டிருப்பது அவதூறு செய்வதற்காக என எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் யோகாவும் ராஜனும் சாதியொடுக்குமுறை தொடர்பாகவும் சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறைகள் தொடர்பாகவும் மிகவும் தெளிவானவர்கள். அந்த ஒடுக்குமுறைகளுக்கெதிராக தொடர்ச்சியாக செயற்படுபவர்கள். அதிலும் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக மிகவும் காட்டமான கருத்துக் கொண்டவர்கள் மட்டுமல்ல இன்றுவரை எதிர்த்துப் போராடுபவர்கள். மேத்தா போன்றவர்கள் இப்படிப்பட்ட கருத்துக்களை எழுதும்போது தங்களை அடையாளப்படுத்தி எழுதினால் ஆரோக்கியமானதாய் இருக்கும். அவர்கள் மேலான சந்தேகமும் எழுவதற்கு வாய்ப்பிருக்காது.
  யோகா மற்றும் ராஜன் ஆகியோரை மிகவும் அறிந்தவன் என்றவகையில் எனது கருத்தை எழுதியுள்ளேன்.


 5. யோகா on January 31, 2012 10:12 pm

  நண்பர் பிசி அவர்களுக்கு…
  பெரியார் பாணி, பெரியார் வழி என்று நாம் இங்கு குறிப்பிடுவது, எதையும் கேள்விக்குள்ளாக்கும் அவரது தன்னலமற்ற, எவருக்கும் அஞ்சாத துணிச்சலைத்தான். சம்மட்டி அடி போன்ற அவரது இத் துணிச்சல் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது. தன்னைத் தானே கேள்வி கேக்குமபடி சமூகத்தைத் தூண்டியது. இது பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரையில் சுருக்கமாக சொல்லியிருந்தோம்.
  அவர் வகுத்த அதே வழியில் அவரையும் நாம் கேள்விக்குள்ளாக்குகிறோம். கடைசி நேரத்தில் கட்சிச் சொத்தின் பாதுகாப்புக் குறித்து அவர் எடுத்த முடிவுகள் இதற்கு ஓர் உதாரணம். மற்றும்படி, நாம் பெரியாரியத்தை முற்று முழுதாக ஏற்றுக்கொண்டவர்களும் அல்ல. 50 ஆண்டுகட்கு முந்தைய தமிழ்நாட்டில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை இன்றைய எமது சுழலுக்கு பொருத்திப் பார்க்கவேண்டும் என்ற கருத்துடையவர்களும் அல்ல!


 6. பல்லி on January 31, 2012 10:41 pm

  //. 16 வயதுக்கு மேல் இருபாலாரின் விருப்பின் அடிப்படையில் புணர்வதற்கு அனுமதியுண்டு. //
  இருக்கலாம் அதில் அவதிபடுவது பெண் மட்டுமே;
  அத்துடன் அவர் பெற்றோரும் அல்லவா??

  //14 வயதையடைந்தோரும் புணர்ந்து கொள்ளலாம். ஆனால் பாலுறவில் ஈடுபடும் இரு பகுதியினருக்கும் இடையிலான வயது வேறுபாடு ஆகக் கூடியது மூன்று வயதுக்கு மேல் அமையக் கூடாது.//
  ம்ம்ம் தவறு செய்யலாம் ஆனால் அதை தவறாய் செய்ய கூடாது என்பது கட்டுரையாளர் கவனம்;


 7. Mohamed SR. Nisthar on January 31, 2012 10:44 pm

  அன்புள்ள யோகா ராஜன்,

  நல்லதொரு ஆய்வை செய்துள்ளீர்கள். ஆனால் நல்லது என்பதற்கப்பால் சரியான அணுகுமுறையில் செய்யப்பட்ட பூர்த்தியான ஆய்வாக இதை கொள்ளமுடியாதுள்ளது.

  பாலியல் உணர்வு என்பது மனிதனின் இயற்கையான ஏனைய உணர்வுகள் போன்ற ஒன்று. அதை ஏதோ மேற்கு நாட்டார் மிக லாவகமாக கையாள்வது போலவும் எனவே நாமெல்லாம் அவர்களை போலவே நடந்து கொள்ள வேண்டும் போன்ற உங்கள் அறிவுரையை பின்பற்றுவதன் மூலம் மனிதனாக பிறந்ததின் “பிறபிப்பயனை” அடையமுடியும் என்பதுமாதிரியான உங்கள் விருப்பம் ஆபத்தானது.

  கீழே நாட்டு கலாச்சார வாழ்வில் இந்த பாலியல் உணர்வு சம்பந்தமான பார்வை மேற்கைவிட வித்தியாசமாக உள்ளதனால் மாத்திரம் அது பிழையானது என்ற எழுந்தமான முடிவுக்கு வருவதும் அதே அளவு ஆபத்தானது.

  உ+ம் பசி உணர்வென்பது வயது பேதமின்றி மனிதர் அனைவருக்கும் உள்ளது. அது பாலியல் உணர்வைவிட முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கவேண்டியது. அந்த பசியுணர்வை அடக்க உணவு இன்றியமையாயது என்றாலும் அந்த உணவே மனிதனின் மன, உடல் ஆரோக்கியத்தை தீர்மாணிக்கின்றது. சாதாரணமாக ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு என்ற ஒரு வரையறைக்குள் மனிதன் அதை தீர்மாணித்துக் கொண்டாலும் அது தொடர்பாக இன்னும் பல சுயகட்டுப்பாடுகளை தானாக விரும்ம்பி ஏற்படுத்திக் கொள்கிறான்.

  எந்த வகை உணவு, எந்தளவு எப்படியான சூழ்நிலையில் உற்கொள்ள வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதே போல்தான் இயற்கையாய் உள்ள பாலுணர்வு என்பது தேவையைப் அடிப்படையாகக் கொண்டு அனுபவிக்க வேண்டியது. மதம் என்பது மனிதனின், ஆண், பெண் உட்பட, அனைவரின் பாலியல் தேவைகளையும் ஏற்றுக் கொள்வதுடன் அதை நியாயமான முறையில் அனுபவிக்க ஏற்பாடுகளை செய்கின்றது.

  கட்டுப்பாடற்ற மேற்கத்தைய (கொண்டொம் கண்டுபிடிப்பின் பின்னான) கலாச்சாரத்தில் இது சமூக சீரழிவை ஏற்படுத்தியுள்ளதை உணவு உற்கொள்ளலில் ஏற்பட்ட கட்டுப்பாடற்ற நிலையால் உடல் பருமன் கூடி சமூகம் அவதிபடுவதற்கும் மேலான அவதிபடுகையை இந்த மேற்கத்தியரே சுட்டிக் காட்டி பரிகாரம் வேண்டி நிற்கின்றனர்.

  இந்த அடிப்படையில் பின்வரும் உங்கள் கூற்றுகளை சற்று நோக்கினால், “தாய் மகனுடன் புணர்ந்ததையும், தந்தை மகளுடன் புணர்ந்ததையும் பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன”. இத்தகைய முறையில் பாலுணர்வு தீர்கப்பட்டதை யாரும் மறப்பதற்கில்லை. ஆனால் அது ஒழுக்க கேடானது என்பதை யார் எப்போது தீர்மாணித்தார்? சரி அது தீர்மாணமாகிவிட்டது, அதன் சரி, பிழைகளில் உங்கள் தனிப்பட்ட நிலைப்பாடு என்ன? அந்த முறைமை சரி என்றால் இன்றைய நிலையில் உங்களால் அதை எந்தளவு கைக்கொள்ளமுடியும்? அது பிழை என்றால் அந்த பிழையின் வரம்பு என்ன யார் தீர்மாணிப்பது? இதுதான ஆரம்ப சமூகச் சிக்கல்.

  ஆடை இன்றி பிறந்த மனிதன் தன் அந்தரங்க உறுப்புகளை ஏன் இலை குழைகளாள் மறைக்க வேண்டும் என்று நினைத்தான். இன்றும் சில ஆபிரிக்க, பபுவா நிவ் கினி நாடுகளில் இலை, குழை மூலம் அந்தரங்க் உறுப்புகளை மறைக்கும் மக்கள் இருக்கின்றனரே? அவர்கள் இன்னும் அறிவு பெறவில்லையா? அல்லது தெருவில் கோட் சூட்டுடன் திரியும் ஆண்கள் அதேபோல் சரியான முறையில் உடல் மறைத்து திரியும் பெண்கள் உடைகழைந்து நடனமாடும் இடங்களில் அனேகமா ஆண்கள் பார்வையாளர்களாகவும் அவர்களை பரவசத்தில் ஆழ்த்துவோர் பெண்களாகவும் இருக்கும் காரணம் என்ன?

  மனிதனின் இந்த பாலுணர்வு பற்றி மேற்கத்தய தத்துவஞானி வ்ரொய்ட் என்ன சொல்கிறார்? சமய தத்துவஞானி கஸ்சாலி என்ன சொல்கிறார்? இந்த இரண்டு அறிஞர்களின் நியாயமான அணுகுமுறைக்கும் அப்பால் எதிலுமே எல்லை கடந்து அனுபவிப்பதுதான் தமது பிறப்புரிமை என்ற தப்பிதத்தில் வாழும் மேற்கு ஏன் இவ்வளவு சீக்கிரத்தில் களைத்துப் போகிறது?

  ஆக மனிதனின் ஒழுக்க வாழ்வில் இன்றைய கண்டுபிடிப்புகளான நீங்கள் சொல்லும் ஐபோனும், பேஸ்புக்கும் தலையிட்டு மனிதனை வழி நடத்த வேண்டும்மென்றால் இன்னும் 100 அல்லது 200 வருடத்தின் பின்னான கண்டுபிடிப்புகளோடு மனிதன் மீண்டும் தன் கட்டுபாட்டை இழந்து தாய் மகனுடனும், தந்தை மகளுடனும், சகோதரன் சகோதரியுடனும், சகோதரன் தன் சகோதரனுடனும், சகோதரி தன் சகோதரியுடனும் தம் இயற்கையான பால்லுணர்வை தீர்த்துக் கொள்ள தலைப்படும் போது,…?


 8. பல்லி on January 31, 2012 10:47 pm

  // இதையும் தாண்டி இன்னும் ஒரு பகுதியினர் (பிள்ளைகளின் நலன் கருதி) சமூக ஒழுங்கமைப்புக்குட்பட்டு தம்மைத் தாமே வருத்திக்கொண்டு பாலியல்தேவைகளைத் தியாகம் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் சிலர், மன அழுத்தத்துக்கு உட்பட்டு, இருதய நோய் உட்பட பல்வேறு வகை நோய்களுக்கு ஆட்படுகின்றனர்.//
  அப்படி ஆயின் எம் சமூக மக்கள் 95 வீதமானோர்க்கு இருதய கோளாறு இருக்கலாம்
  ஆகவே அவசரமாக அருகில் உள்ள டாக்டரிடம் இந்த கட்டுரையின் பிரதியுடன் போவது நல்லது;;


 9. shankar on February 1, 2012 10:47 am

  இங்கு அடிப்படையில் எல்லாருக்கும் தேவை புரிதல்! புரியும் ஆற்றல்! வாசிப்பு எல்லாம் புரிதல் ஆகிவிடாது! தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்! பின்னோட்டம் விடுகிறதுக்கு முன்னம் கொஞ்சம் முன்னோட்டம் செய்துபாருங்கோ! அப்ப தெரியும் உங்கட புரிதலில உள்ள லட்சணம். ஒரு தடவை புல்லு மேஞ்சது மாதிரி மேஞ்சுபோட்டு ஓடி வராதையுங்கோ!…….


 10. பல்லி on February 1, 2012 12:38 pm

  ::// இன்னும் 100 அல்லது 200 வருடத்தின் பின்னான கண்டுபிடிப்புகளோடு மனிதன் மீண்டும் தன் கட்டுபாட்டை இழந்து தாய் மகனுடனும், தந்தை மகளுடனும், சகோதரன் சகோதரியுடனும், சகோதரன் தன் சகோதரனுடனும், சகோதரி தன் சகோதரியுடனும் தம் இயற்கையான பால்லுணர்வை தீர்த்துக் கொள்ள தலைப்படும் போது,…?/

  அப்போதும் நாம் கட்டுண்டு இருக்கிறோம் இதை உடைக்க இது போன்ற சமூக சேவைகளை நாம் செய்ய வேண்டும் என சிலர் எழுதலாம்; ஆனால் அதை படிக்க நேரம் இன்றி சமூகம் ஓடும் காலமாக அது இருக்கலாம்; நாம் கடந்து வந்த பாதை தவறாக இருக்குமானால் அதை சரிசெய்ய முயற்சிக்கலாம், அனால் அது சரியானதாக இருக்கும் போது நாம் வல்லரசுகள் வரை வளர்ந்து விட்டோம் இன்னும் எதுக்கு கிராமத்து கட்டமைப்பு என்பதுபோல் நாகரிகமாக நடப்பதாக எண்ணி கேவலமாக வாழ நினைக்கலாமா?? அப்படி வாழ்பவர்களை நாம் தவறு என குற்றம் சாட்டவில்லை; ஆனால் அதை நியாய படுத்துவதோ அல்லது ஒரு சமூகம் மீது திணிப்பதோ சரியானதா??

  //சம்மட்டி அடி போன்ற அவரது இத் துணிச்சல் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது. தன்னைத் தானே கேள்வி கேக்குமபடி சமூகத்தைத் தூண்டியது//
  அம்முட்டுதானே ஏதாவது பலன் கிடைத்ததா?? அவரது எண்ணபடி அவரது சமூகம் மாறி உள்ளதா?? ஏன் அவரது கட்சியான தி க கூட அவரது கொள்கையை இன்று செயல் படுத்துகிறதா?? எத்தனைனையோ தி க தொண்டர்கள் இருக்கும் போது பெரியாரின் மோதிரம் நம்ம சத்தியராஜ் அவர்களுக்கு அன்பளிப்பாய் வீரமணி கொடுத்தாரே இதுதானா பெரியார் சொல்லி கொடுத்த பகுத்தறிவு?? பெரியாரின் பகுத்தறிவு செயல்பாடுகளை தவறான செயல்களுக்கு உறையாக மாட்டாதீர்கள், பெரியார் பெண்கள் ஏன் ஆண்கள் காலில் விழ வேண்டும் என்றார்; அதுதானோ என்னவோ இன்று தமிழகத்தில் ஒரு பெண்ணின் காலில் பல ஆண்கள் பட பட என விழுகிறார்கள்;;


 11. பல்லி on February 1, 2012 12:49 pm

  //இங்கு அடிப்படையில் எல்லாருக்கும் தேவை புரிதல்! புரியும் ஆற்றல்!//அப்படியானால் ஒரு
  கட்டுரையை எப்படி புரியவேண்டும் அதுக்கான ஆற்றல் என்ன என முதல் உதவியாக ஒரு முன்னோட்டம் தாங்கள் தரலாம், அது புரியாத எமக்கு புரிய வாய்ப்பாக இருக்கும்;

  // வாசிப்பு எல்லாம் புரிதல் ஆகிவிடாது! தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்! //
  வாசித்தத்தை செயல்முறை படுத்த வேண்டுமோ??? அப்பதான் புரிதல் முழுமை பெறுமோ??

  //. ஒரு தடவை புல்லு மேஞ்சது மாதிரி மேஞ்சுபோட்டு ஓடி வராதையுங்கோ//
  ஏன் இந்த கோவம்?? உங்க கருத்தை நாம் ஏற்று கொள்ளவில்லை என்பதாலா?? அல்லது ஒரு மிக சிறந்த சமூக சேவை நம்மால் தடை படுகிறதென்பதாலா?? கோவப்படாமல் அமைதியாக பேசுங்க நிறைய பேசுவோம்; சமூக விடயமல்லவா?? அரசியல் போல் ஆடம்பரமாக பேச முடியாதுதானே;


 12. மீராபாரதி on February 1, 2012 1:53 pm

  நட்புடன் நண்பர்களுக்கு….
  மேற்குறிப்பிட் கட்டுரையின் கருத்துக்களுக்கு வலுச் சேர்க்கும் எனது கட்டுரைகள்….
  நன்றி
  மீராபாரதி

  திருமணம் : சட்டத்திற்கு உட்பட்ட பாலியல் தொழில்!

  காமம், பாலுறவுகள், சமூகம் மற்றும் குழந்தைகளும், வாலிப வயதினரும் – ஒரு பார்வை- பகுதி 2

  காமம், ஆண்கள்,(ளின்) சமூகம், பாலியலுறவுகள் மற்றும் பெண்கள் – ஒரு பார்வை- பகுதி 3

  - http://meerabharathy.wordpress.com/category/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5/


 13. Mohamed SR. Nisthar on February 1, 2012 5:38 pm

  அன்புடன் மீராபாரதி,

  “மேற்குறிப்பிட் கட்டுரையின் கருத்துக்களுக்கு வலுச் சேர்க்கும் எனது கட்டுரைகள்…”. அதாவது கட்டுப்பாடற்ற பாலுறவு சுதந்திரம், அதாவது எல்லாருக்கும் பொருந்தும் ஒரே அளவு ஆடை என்பது மாதிரியா? ஏன் ஐயா/அம்மணி பாலுறவு விடயத்தில் பெண்களின் விருப்பு வெறுப்பு ஓரங்கட்டப்படுகிறது ஆகவே அதற்கான தீர்வாக எல்லையற்ற, நாடுகடந்த, எல்லாம் எல்லாருக்கும் என்ற மாதிரியான மேற்கின் பாலுறவு நடை முறைகளை அறிமுகப்படுத்த விரும்புகிறீர்களா? யோகா ராஜனின் கட்டுரை விபசாரத்தை தொழில் ரீதியாக அங்கிகரித்து அத்துறையின் உழைப்பாளிகளுக்கு பாதுகாப்பும் வழங்கச் சொல்கிறது. சரி அதன் சாதக(?)பாதகங்களை பார்க்காமல் டொக்டருக்கு படிக்கச் சென்ற உங்கள்/உறவினர் பிள்ளை பாதியில் அதை நிறுத்தி வருமானம் தரும் விபச்சார தொழிலை ஆரம்பிக்க நீங்கள் ஏற்பாடுகள் செய்து கொடுப்பீர்களா? மகள் என்ன செய்கிறரார் என்ற கேள்விக்கு அவா நல்லா உழைக்கிறா சிட்டியில விபச்சாரம் செய்ரா என்று பெருமையாகக் கூறுவீர்களா?

  “திருமணம் : சட்டத்திற்கு உட்பட்ட பாலியல் தொழில்!” என்பதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது திருமணம் =(சட்ட ரீதியான) பாலியல் தொழில், விபச்சாரம்= (சட்ட ரீதியற்ற) பாலியல் தொழில், ஆகவே திருமணம் = விபச்சாரம் என்பதா?

  அரச அனுமதி பெற்று செய்யும் விபச்சாரமும் இருக்கிறதே (டோனி ப்ளெயரின் கிறிஸ்தவ விழும்மியங்கள் கொண்ட அரசமைப்பு உள்ள யூகே யிலும்) அதுக்கும் நீங்கள் சொல்லும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம்?

  “காமம், பாலுறவுகள், சமூகம் மற்றும் குழந்தைகளும், வாலிப வயதினரும் – ஒரு பார்வை- பகுதி 2

  “காமம், ஆண்கள்,(ளின்) சமூகம், பாலியலுறவுகள் மற்றும் பெண்கள் – ஒரு பார்வை- பகுதி 3

  இவையாவும் யோகா ராஜனின் ஆய்வுக்கு சார்பானதாக இருந்தால் இவைகளை தேடிப்பிடித்து வாசிக்க ஆர்வம் இல்லை. காரணம் நீங்களே ஒற்றை வரியில் சொல்லிவிட்டீர்கள் மேலுள்ள கட்டுரைக்கு “வலுவூட்டல்” என்பதாக. ஆகவே உங்கள் நிலைப்பாட்டை சுருக்கமாக அல்லது சங்கர் சொல்வது போல் எமக்கு விளங்கும் வகையில் சற்று விரிவாக சொன்னால் இதை தொடர்ந்தும் விவாதிக்கலாம் அல்லவா? போகிற போக்கைப் பார்த்தால் இதுவரை காலமும் கீழேத்தேயர் “பாலுணர்வை” சரியாக புரிந்து கொள்ளாத, அதனால் அதை சரியாக அனுபவிக்காத, அதனால் செய்யக் கூடாத காரியத்தை செய்துவிட்டதாக, அதனால் ஐரோப்பியர் போல் முன்னேற முடியாதுள்ளதாக, அதனால் அதற்கு பரிகாரம் தேடவேண்டும் என்ற கட்டாச்சனை உள்ளதாக, அதனால் யோகா ராஜனின் பரிந்துரை உடனடியாக செயல் படுத்த வேண்டும் என்பதாகா அதனால் அதற்கு வலு ஊட்ட நீங்கள் வேறு கட்டுரை தொடர்களை தந்துள்ளீர்கள் போலுள்ளதே.


 14. பல்லி on February 1, 2012 10:18 pm

  // யோகா ராஜனின் கட்டுரை விபசாரத்தை தொழில் ரீதியாக அங்கிகரித்து அத்துறையின் உழைப்பாளிகளுக்கு பாதுகாப்பும் வழங்கச் சொல்கிறது.//
  அப்படியா?? இந்த தொழிலுக்கு மாதத்தில் நாலு தடவை மருத்துவ சோதனை செய்ய வேண்டும் என மருத்துவம் சொல்லுகிறது, ஆக இதை ஒரு எட்டு தரமாக உயர்த்தலாமா??

  //டொக்டருக்கு படிக்கச் சென்ற உங்கள்/உறவினர் பிள்ளை பாதியில் அதை நிறுத்தி வருமானம் தரும் விபச்சார தொழிலை ஆரம்பிக்க நீங்கள் ஏற்பாடுகள் செய்து கொடுப்பீர்களா//
  இது பல்லிக்கு வலி தரும் எழுத்து; ஆனாலும் அவரது கேள்வியில் நியாயம் இருப்பதாகவே நான் கருதுகிறேன்;

  // மகள் என்ன செய்கிறரார் என்ற கேள்விக்கு அவா நல்லா உழைக்கிறா சிட்டியில விபச்சாரம் செய்ரா என்று பெருமையாகக் கூறுவீர்களா? //
  நட்புடன் நிஸ்தார் நாம் இவ்வளவு கீழ்தரமாக இந்த பிரச்சனையில் இறங்க வேண்டியதில்லை; அத்துடன் இதில் சம்பந்தபடாத உறவுகளை எம நியாயத்துக்காக நாம் கொச்சை படுத்துவது கூட எம் கலாசாரமோ அல்லது நாகரீகமோ அல்லவே,

  பல்லிக்கு எல்லாமே குளப்பமாக இருப்பதால் இதை தொடர முடியவில்லை; இருப்பினும்
  யோகாராஜன் ,
  காதலில் எப்போதும் காமம் இருக்க கூடாது;
  காமத்தில் எப்போதும் காதல் வேண்டும்;


 15. Fiona on February 2, 2012 8:48 am

  யோகா ராஜன் கட்டுரையுடன் எனக்கு உடன்பாடு உண்டு.

  இன்றைய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனையை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியதுடன் நில்லாது சாத்தியமான கையாள்கையையும் எடுத்துக் கூறியுள்ளார்.

  காலம் காலமாக இன்றும் அன்றும் ஒரே மாதிரியான தவறுகள் எமது சமுதாயத்தில் நடைபெற்றுக்கொண்டே உள்ளது. கலாச்சாரம் என்ற பெயரில் பெண்ணடக்குமுறையே பிரயோகிக்கப் படுகின்றது.

  தற்போதைய விஞ்ஞான தொழில்நுட்ப வசதி காரணமாக இவை உடனுக்குடன் செய்திகளாக வெளிவருவதையும் ஆதாரங்களை காணக்கூடியதாகவும் உள்ளது.

  /எனவே நாம் இங்கு புரிந்துகொள்ளப்பட வேண்டிய விசயம் பாலியல் தொழில் அழிந்துவிடக்கூடிய அழித்துவிடக்கூடிய ஒன்றல்ல என்பதுதான். நிலவுகின்ற இத்தொழிலை சட்டரீதியாக அங்கிகரித்து அதற்குரிய கொடுப்பனவுகளை உரிய முறையில் கையாள்வதற்கும் அரசு முன்வரவேண்டும். மேலும் பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும் வயோதிப கால வாழ்க்கைக்கும் கூட உத்தரவாதம் அளிக்கும் வகையிலும் தொழிற்சட்டங்கள் பலப்படுத்தப்பட வேண்டும்./

  என்ற கட்டுரையாளர்களின் கருத்துக்கு

  /யோகா ராஜனின் கட்டுரை விபசாரத்தை தொழில் ரீதியாக அங்கிகரித்து அத்துறையின் உழைப்பாளிகளுக்கு பாதுகாப்பும் வழங்கச் சொல்கிறது. சரி அதன் சாதக(?)பாதகங்களை பார்க்காமல் டொக்டருக்கு படிக்கச் சென்ற உங்கள்/உறவினர் பிள்ளை பாதியில் அதை நிறுத்தி வருமானம் தரும் விபச்சார தொழிலை ஆரம்பிக்க நீங்கள் ஏற்பாடுகள் செய்து கொடுப்பீர்களா? மகள் என்ன செய்கிறரார் என்ற கேள்விக்கு அவா நல்லா உழைக்கிறா சிட்டியில விபச்சாரம் செய்ரா என்று பெருமையாகக் கூறுவீர்களா? /

  என்ற எதிர்க்கருத்தும்; அந்தக் கேள்வியில் நியாயம் உண்டு என்ற வழி மொழிதலிலும்; மிகத் தெளிவாக பாலியல் தொழில் என்பதை பெண்களுக்கு மட்டும் உரியதாக வரையறுத்துவிட்டு நிற்கிறார்கள்.

  /இதில் பெண்ணுக்குச் சமனாக ஆணுக்கு இருக்கும் பங்கு இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுகிறது. அல்லது கண்டுகொள்ளப் படாமலே விடப்படுகிறது./ யோகா ராஜன்

  இங்கு ஆணின் பங்கு கண்டுகொள்ளப் படாமலே விடப்படுகிறது.

  யோகா ராஜன் கட்டுரையை மறுதலிப்பவர்கள் தாம் முரண்படும் விடயத்தை முன்வைத்து அதை எவ்வாறு கையாள்வது என்பதையும் எழுதலாம்.


 16. பல்லி on February 2, 2012 1:15 pm

  //யோகா ராஜன் கட்டுரையை மறுதலிப்பவர்கள் தாம் முரண்படும் விடயத்தை முன்வைத்து அதை எவ்வாறு கையாள்வது என்பதையும் எழுதலாம்.//
  அப்போ இதுவரை எதை எழுதினோம்?? கையாள்வது எவ்வாறு?? உங்க பிரச்சனைதான் என்ன? முதலில் விபசார விடுதி எதுக்கு?? தமிழகத்தில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் சொன்ன விடயம் தாம் குடும்ப கஸ்ற்றத்தில்தான் இந்த தொழிலில் ஈடுபடுவதாக, அதற்க்கு அங்கு சில சமூக அமைப்புகள் அவர்களுக்கு மறுவாழ்வுக்காய் வேலைவாய்ப்பு சுய தொழில் இன்னும் சிலருக்கு கல்வி என உதவியுள்ளனர்; ஆக இங்கே நீங்கள் பெண்களை அடிமைபடுத்தாதீர்கள் என சொல்லி பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அமூலாக்கி அதில் ஆண்கள் மட்டும் இன்பம் காண துடிக்கிறியள்; அதே பெண்ணுரிமை வாதிகள்தான் பாலியல் தொழில் முற்றாக நீக்கபட வேண்டும் இது சட்டத்தால் முடியாத காரியம்; ஆனால் அனைத்து பெண்களுக்கும் கட்டாய கல்வி சுயதொழில் கல்வி என கொண்டு வந்தால் கஸ்ரற்றத்தால் இப்படியான விடயத்தில் ஈடுபடுபவர்களை தடுக்க முடியும் என சொல்லுகிறார்கள், நிஸ்தார் சொன்னது போல் வசதியான ஆண்கள் இன்பம் காண ஏழை பெண்களா விபசாரம் செய்ய வேண்டும்; இதில் வசதியான பெண்களும் விபசாரத்தில் இருப்பதாக சிலர் சொல்லலாம்; உன்மையில் அவர்கள் ஆண்களால் ஏமாற்ற பட்டவர்களாகவே இருப்பார்கள், விபசாரம் செய்யும் பெண்களால் அதன் பின் குடும்ப வாழ்க்கை வாழ முடியுமா?? அப்படி தியாக உள்ளம் கொண்ட ஆண்கள் இருக்கார்களா என்ன??


 17. ajeevan on February 2, 2012 11:00 pm

  //“அப்பாவின் மறுமணத்தை அங்கீகரிக்கும் சமூகம், அம்மாவின் பாலியல் ஆர்வத்தைப் பற்றி உணர்வதில்லை“ -நிவேதா//
  அப்பாவின் மறுமணம் நடப்பது என்பது அப்பாவின் பாலியல் ஆர்வத்துக்காகவா? அல்லது வேறு காரணங்களுக்காகவா?
  அம்மா மணம் செய்வது பாலியல் ஆர்வத்தினால் மட்டுமா?
  அழகான வார்த்தைக்குள் அபாயகரமான எண்ணங்கள் துளிர் விட்டுள்ளதாக உணர முடிகிறது.

  கட்டுரையில் பெண்ணடிமையிலிருந்து விடுதலையை நோக்கி ஒரு பெண் செல்ல வேண்டுமானால்
  அவள் விபசாரியாவதால்தான் ஆண்களின் முகத்தில் காறித் துப்பலாம் என்பது போல கருத்துகள் தெரிகின்றன.
  முத்துகளை தேடி எடுத்து அருமையான ஒரு இடத்தில்தான் வைக்க வேண்டும். அதை குப்பையில் போட்டு உள்ளதையும் நாறடிக்க வழி காட்டலாகாது.

  நம்மில் பலர் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து வந்ததோடு சரி. இங்கு வாழும் வெள்ளையின மக்களின் வாழ்வு குறித்து ஆழச் சென்று தேடியதில்லை என்றே நினைக்கிறேன்.
  மேலே வரும் கட்டுரை சுவிசையும் அதை அடுத்து மேற்கத்திய உலகத்தையும் பார்த்து நம்மவருக்கு அறிவுரை சொல்வதாக கட்டுரை எழுதப்பட்டாலும் மேற்குலக பெண்களை நன்கு அறிந்தவர்கள் ; தொடர்ந்து இந்த கட்டுரையோடு தர்க்கம் செய்ய முயல மாட்டார்கள்.

  தொழில் நுட்ப வளர்ச்சி ; மேலத்தேய சுதந்திரம் ; பாலுறவு தொடர்பான ஈடுபாடு ஆகியவை குறித்து எழுதியுள்ளவற்றை நோக்கும் போது ; மேலத்தேசத்தில் பிள்ளைகளுக்கு பெற்றோரே இல்லாமல் இருக்க வேண்டும்.
  குழந்தைகளை பெற்ற பின் பெண்கள் விபசார விடுதிகளில் அல்லது பாதையோர விபச்சாரத்தில் ஈடுபடும் ஒரு கலாச்சாரம் சர்வ சாதாரணமாக இருந்திருக்கும். ஆண்கள் எல்லாம் ; பிடித்த எல்லா பெண்களையும் புணர்ந்து கொண்டு ஜாலியாகத் திரியவதையே பார்க்க முடிந்திருக்கும்.

  கதவை வேண்டாம்…..ஜன்னலைத் திறந்து ஒரு சில மணி நேரம் வீதியைப் பாருங்கள்.
  பெற்றோரோடு செல்லும் குழந்தைகளை உங்களால் நிச்சயம் தரிசிக்க முடியும்.
  தவறுகள் நடக்காத தேசமாக ஒரு தேசத்தையும் நாம் தேர்வு செய்ய முடியாது.
  தவறாத மனிதர்களை எங்கும் காண முடியாது.
  அதற்காக அனைத்து மனிதர்களும் தவறானவர்கள் எனும் எண்ணம் தவறானதே!

  ஒருத்தனுக்கு ஒருத்தி எனும் தத்துவம் மேற்கத்திய நாடுகளிலிருந்துதான் வந்திருக்கிறது. அதே மேற்கத்தய நாட்டிலிருந்துதான் பிடிக்காத வாழ்வை தொடராத விவாகரத்து முறையும் வந்திருக்கிறது.
  என்ன காரணத்துக்காக விவாகரத்து கொடுக்கிறார்கள் எனப் பாருங்கள். அங்கே இச்சை மட்டும் இல்லை.

  சில நம்மவர்கள் குடும்ப கெளரவத்துக்காக போலி வாழ்கை வாழ்வது உண்மை.
  அது தேவையற்றது.
  இதற்குள் அரசியல் தேவயற்றது.
  அரசியலே சுயநலமிகள் நிறைந்த சாக்கடை.
  அந்த சாக்கடைகள் குடும்பம் எனும் கோவிலுக்குள் வர வேண்டிய தேவையே இல்லை.

  இலங்கை – இந்தியா போன்ற நாடுகளில் இருந்து என்னோடு பேசும் சிலர் உங்களுக்கென்ன ஐரோப்பாவில் இருக்கிறீங்க. நினைச்சதை செய்யலாம் என்பார்கள். அதாவது விரும்பிய யாரோடும் போகலாம் என்பதே அவர்களது பேச்சின் அர்த்தம்.

  நான் அவர்களுக்கு சொல்வதையே ; இங்கும் பதிவிடுகிறேன்.
  இங்கு எந்தப் பெண்ணும் தான் விரும்பாத ஒருவனோடு படுக்கை அறைக்குள் மட்டுமென்ன காப்பி சாப்பிடவும் போக மாட்டாள்.
  ஒரு வேலை கிடைக்க ; ஒரு அரசியல்வாதியிடம் தன்னை இழக்க வேண்டியதில்லை. வேலை செய்யும் இடத்தில் அப்படி நடப்பது இல்லை என்பதல்ல. அதுவும் ஒரு காதலால்தான். அது சட்டென வருவதில்லை. ஒரு பெண்ணுக்கு நல்லதொரு காதலனோ அல்லது கணவணோ இருந்தால் அவள் இன்னொருவருடன் தன் பொழுதை கழிக்க துளியும் விரும்புவதில்லை.
  கணவனை விவாகரத்து செய்த பெண் அல்லது காதலனை விட்டு தனியாக வாழும் பெண்ணே இன்னொரு உறவை தேடுகிறாள். அதிலும் காமத்தை விட ; தன் துணையாக தேர்வு செய்து கொள்வதற்காகவே காலத்தை இழுக்கிறாள்.

  நட்பையும் , அசிங்கப்படுத்தும் எண்ணம் கொண்ட மனம், கட்டுப்பாடுகளோடு வளர்ந்த நம்மவருக்குள் அதிகம்.
  கட்டுப்பாடுகளே இல்லாமல் வாழும் இந்த சமூகத்துக்குள், நல்ல மனங்கள் அதிகம்.

  நான் சிங்கை சென்ற போது எனக்குள் வியப்பை ஏற்படுத்திய ஒரு விடயம் விபச்சாரத்துக்கான அனுமதியோடு விபச்சாரத்துக்கு ஒதுக்கப்பட்ட பகுதி. இது குறித்து அந்நாட்டின் மிக முக்கியமான ஒரு மனிதரிடம் கேட்டேன்.
  அவர் சொன்ன பதில் என்னை விசனப்படுத்தவில்லை ; சிந்திக்க வைத்தது.

  அவர் சொன்னார்
  ”இவை ஒரு சிலருக்காக மட்டுமே. எல்லோரும் இங்கே வர மாட்டார்கள். இது போன்ற இடம் இல்லாவிட்டால் ;
  இங்கே வரும் ஒரு மனிதன்; தன் இச்சைகளுக்காக ; எங்கோ உள்ள ஒரு ஒரு அபலயின் வாழ்வோடு மட்டுமல்ல. அந்த குடும்பத்தையும் அழித்து விடுவான்.
  அதைத் தடுக்க இது போன்ற அனுமதிகள் பகிரங்கமாக கொடுக்கப்பட வேண்டும். இங்கே உள்ளவர்கள் விரும்பியே அதைச் செய்கிறார்கள். அதனால் அதை நாம் தடுப்பதில்லை. அதிலும் கட்டுப்பாடுகள் உண்டு. சுகாதார பரிசோதனைகள் உண்டு.

  இவ்வளவும் இருந்தும் இங்கே வரம்பு மீறினால் ; அதற்கான தண்டனை மிக மிக கடுமையாக இருக்கும்.”

  அது நான் இலங்கையை விட்டு வெளியேறிய முதல் நாடு மட்டுமல்ல. என்னை சிந்திக்கவும் வைத்த ஒரு வித்தியாசமான பதிலாகவும் இருந்தது.

  ஈவேரா பெரியார் வழியிலான சமூக அரசியல் வழியிலேயே முன்னெடுக்க முடியும் என்ற வார்த்தை
  இளம் வயது பெண்ணை மணந்த அவரது வாழ்கையையும் நியாயப்படுத்துகிறது. ஒருவரது பேச்சுக்களை அல்லது எழுத்துகளை விட; அவர்களது வாழ்கைதான் நம்மை கவருகிறது.


 18. பல்லி on February 3, 2012 1:40 pm

  ::////“அப்பாவின் மறுமணத்தை அங்கீகரிக்கும் சமூகம், அம்மாவின் பாலியல் ஆர்வத்தைப் பற்றி உணர்வதில்லை“ -நிவேதா//
  இங்கே கூட அப்பாவை மறுமணமகா மேன்மை படுத்தியும் அம்மாவை பாலியல் ஆர்வம் என கேவலபடுத்தும் பெண் உரிமை வாதிகளின் பெரும்தன்மைக்கு ஒரு வாழ்த்து சொல்லலாம்; அஜீவன் மிக விளக்கமாக கட்டுரைக்கு பதில் சொல்லி இருக்கிறியள்; யோகா அல்லது ராஜன் இதுக்கான விளக்கத்துடன் வருவார்களோ தெரியவில்லை;


 19. bala on February 3, 2012 2:43 pm

  இது போன்ற சம்பவங்கள் நடக்காது தடுப்பது எப்படி??

  மீசாலையில் தனது பேத்திமீது பாலியல் வல்லுறவு புரிந்த தாத்தா பின்னர் நஞ்சருந்தினார்
  -http://www.newjaffna.com/fullview.php?id=OTM0OA==


 20. Mohamed SR. Nisthar on February 3, 2012 5:53 pm

  அன்புள்ள அஜீவன்,

  என்னதான் சொன்னாலும், “மேற்கின்” போக்கு சரி என்றும் ஆகவே கிழேத்தேயர் போக்கு ஏதோ மாதிரியுமாக சொல்ல எத்தனிப்பது வெளிப்படுகிறது. உ+ம் “இங்கு எந்தப் பெண்ணும் தான் விரும்பாத ஒருவனோடு படுக்கை அறைக்குள் மட்டுமென்ன காப்பி சாப்பிடவும் போக மாட்டாள்.” இது சாதாரணப் பெண்ணைப் பற்றியதானால் நம் நாட்டு பெண்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காகவா நடக்கின்றனர்? அதோடு கூடவே “செருப்படி” கிடைக்கும் என்றல்லவா சொல்வார்கள்.

  “ஒரு வேலை கிடைக்க ; ஒரு அரசியல்வாதியிடம் தன்னை இழக்க வேண்டியதில்லை. வேலை செய்யும் இடத்தில் அப்படி நடப்பது இல்லை என்பதல்ல. அதுவும் ஒரு காதலால்தான். அது சட்டென வருவதில்லை. ஒரு பெண்ணுக்கு நல்லதொரு காதலனோ அல்லது கணவணோ இருந்தால் அவள் இன்னொருவருடன் தன் பொழுதை கழிக்க துளியும் விரும்புவதில்லை”.

  இதில் முதல் வசனத்தில் உண்மை இருந்தாலும் எல்லா சந்தர்ப்பத்திலும் இப்படி அல்ல என்று அடித்துக் கூறமுடியும். ஆனால் இது எப்படி “விபச்சாரத்துடன்” தொரடர்புபடுகிறது? மற்றைய வசனங்கள் நம் கீழே நாட்டு பெண்களுக்கு பொருந்தாதா?

  “இவை ஒரு சிலருக்காக மட்டுமே. எல்லோரும் இங்கே வர மாட்டார்கள். இது போன்ற இடம் இல்லாவிட்டால் ;
  இங்கே வரும் ஒரு மனிதன்; தன் இச்சைகளுக்காக ; எங்கோ உள்ள ஒரு ஒரு அபலயின் வாழ்வோடு மட்டுமல்ல. அந்த குடும்பத்தையும் அழித்து விடுவான்.” மேலுள்ளதில் கடைசி வரியைத்தவிர மற்றவை நம் கீழேத்தேய மக்களுக்குப் பொருந்தாதா?

  கூடவே உங்கள் சிங்கை நண்பர் இப்படியும் கூறியுள்ளார், “,…இவ்வளவும் இருந்தும் இங்கே வரம்பு மீறினால் ; அதற்கான தண்டனை மிக மிக கடுமையாக இருக்கும்.”

  ஆக “வரம்பு” மீறுபவர்களுக்கு இருக்கும் தண்டனையை விபசாரத்தை நோக்கி செல்வேருக்காக பயன்படுத்த முடியாதா? நீ சீரழிந்து போ என்று அனுமதித்துவிட்டு, அந்த “சீரழிவு”க்கு ஏன் வரம்பு, அது மீறப்படும் போது ஏன் தண்டனை? விபச்சாரத்துக்கு (ஆணுக்கும், பெண்ணுக்குமாக) கடுமையான தண்டனையுள்ள நாடுகளில் மேற்கைவிட பன்மடங்கு குறைவாகவே இத்தகைய குற்றங்கள் நடப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. ஏன் நாம் அதை பின்பற்றக் கூடாது?

  நாம் தவறமாட்டோம் என்ற திடகாத்திரம் உள்ளவருக்கு இந்த கடும் தண்டனைகளால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆகவே உங்கள் சிங்கை நண்பரின் கூற்றுக்கிணங் ஒரு “சிலர்” இத்தகைய விடயங்களில் அதிக நாட்டம் கொண்டோராக இருப்பதால், விபச்சாரத்துக்கு எதிராக கடுமையான சட்டம் பின்பற்றப்படும் போது அந்த சிலரிலும் பலரை பாதுகாக்க முடியும் என்பதுதான் என் நிலைப்பாடு.

  மேலும் உங்களின் பின்வரும் கூற்றுடன், “ஒருத்தனுக்கு ஒருத்தி எனும் தத்துவம் மேற்கத்திய நாடுகளிலிருந்துதான் வந்திருக்கிறது. அதே மேற்கத்தய நாட்டிலிருந்துதான் பிடிக்காத வாழ்வை தொடராத விவாகரத்து முறையும் வந்திருக்கிறது.
  என்ன காரணத்துக்காக விவாகரத்து கொடுக்கிறார்கள் எனப் பாருங்கள். அங்கே இச்சை மட்டும் இல்லை”,
  முழுமையாக உடன்பட முடியாதபடியல்லவா வரலாறு இருக்கிறது.

  நீங்கள் சொன்ன இரண்டும் மேற்கில் இருந்து வரவில்லை. மாறாக கிழக்கில் இருந்துதான் வந்துள்ளது. உ+ம் இன்றை உலகின் அனேக நாடுகளுக்கு அடியாக திகழும் இங்கிலாந்தின் சட்டம், தன் சொந்த பெண்பிரஜைகளுக்கு 1857வரை விவாகரத்து செய்யும் உரிமையை வழங்கவில்லை. இங்கிலாந்திலும் அதன் சட்டங்கள் பின்பற்றப்பட்ட இடங்களிலும் ” கல்லானாலும் கணவன், புல்லானாகும் புருசன்” என்று அவர் கூனோ, குருடோ,கிழடோ, அலியோ, முடமோ அல்லது எழுவோ அவருடன் வாழ்ந்தேயாக வேண்டும் சாகும் வரைக்கும். 1882வரை பெண்களுக்கு சுயமாக சொத்து வைகத்திருக்கவோ அல்லது தான் சம்பாதித்ததை கூட சுயமாக அனுபவிக்கவும் முடியாது. எல்லாவற்றையும் அந்த கல்லோ,புல்லோ அவரிடம் தாரைவார்க்க வேண்டும்.

  ஆனால் மேல் சொன்ன பெண்களின் இரண்டு அடிப்படை உரிமைகளும் இங்கிலாந்தின் சட்டத்துக்கு முன்னான சுமார் 904 வருடங்களுக்கு முன் அறேபியாவில் சட்டமாக அமுல் படுத்தத் தொடங்கி இன்றும் நடை முறையில் உள்ளன.

  சிங்கையின் இந்த விபச்சாரத்துக்கான ஏற்பாடு ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் காணப்படுகிறதுதானே? அதில் புதினம் ஒன்றுமில்லை. ஆனால் அத்தகைய முறை சரியானது என்ற முடிவில் அதை நம்மவர்களிடையேயும் பரப்பிவிட வேண்டுமென்ற யோகா ராஜனின் பரிந்துரைதான் நாம் கண்டிக்கும் விடயம்.

  இந்த பாலுணர்வு/உறவு பற்றி இறுக்கமான, பல வேளைகளில் பாரபட்டமான நிலையை (ஆண்களை விட அதிகமாக) பெண்கள் எதிர் நோக்குகிறார்கள் என்பதற்காய் அறிவு பூர்வமாக இந்த பிரச்சினைக்கு பரிகாரம் தேடாமல், அணைக்கட்டு உடைப்பது போல், நொந்துபோன மேற்கின் சமூக அமைப்பின் மாதிரிகளை எம்சமூகத்துக்குள் வலிந்து திணிப்பது இருக்கும் பாதக நிலைமையுடன் இன்னும் அதிகமான பாதக விளைவுகளை கொண்டுவரும் என்பது நிச்சயம்.

  பாலுறவு என்பது இரண்டு அடிப்படைத் தன்மைகளைக் கொண்டது. 1. உயிர் சார்பு(நிலை) 2.ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ( ஆரோக்கியமாக வளர்ந்து செல்லும்) ஒரு இணைப்புக்கு வலு சேர்ப்பது.

  ஆகவே அதன் இயற்கை தனமையை கொச்சைபடுத்தும் வகையில் விபச்சாரத்தை இதற்கு இணையாக்குவதோ அல்லது அது தொடர்பான பராமுக போக்கோ யோகா ராஜன் தடுக்க முயலும் பிரச்சினைகளை தடுத்துவிடாது.


 21. ajeevan on February 3, 2012 9:57 pm

  அன்பு மொகமட்,

  //“மேற்கின்” போக்கு சரி என்றும் ஆகவே கிழேத்தேயர் போக்கு ஏதோ மாதிரியுமாக சொல்ல எத்தனிப்பது வெளிப்படுகிறது.//

  இல்லை. நான் கீழத்தேய போக்கு குறித்து எழுதவில்லையே? கட்டுரையின் தன்மைக்கே கருத்து எழுதியுள்ளேன்.
  நீங்கள் நல்லவர் என சொல்லும் போது , அடுத்தவர் மோசமானவர் என எடுத்துக் கொள்ள வேண்டாம்.
  அவரும் நல்லவராக இருக்கலாம். இதுவும் நம்மிடம் உள்ள ஒரு குறைபாடுதான்.

  //1882வரை பெண்களுக்கு சுயமாக சொத்து வைத்திருக்கவோ அல்லது தான் சம்பாதித்ததை கூட சுயமாக அனுபவிக்கவும் முடியாது. எல்லாவற்றையும் அந்த கல்லோ; புல்லோ அவரிடம் தாரைவார்க்க வேண்டும்.

  ஆனால் மேல் சொன்ன பெண்களின் இரண்டு அடிப்படை உரிமைகளும் இங்கிலாந்தின் சட்டத்துக்கு முன்னான சுமார் 904 வருடங்களுக்கு முன் அறேபியாவில் சட்டமாக அமுல் படுத்தத் தொடங்கி இன்றும் நடை முறையில் உள்ளன.//

  //இணையத்தளத்தைப் பார்வையிட்டார்கள் என்ற காரணத்துக்காக தனது மூன்று மகள்மாரையும் கொலை செய்த ஆப்கானிஸ்தான் தந்தையொருவருக்கும் அவருக்கு ஆதரவாக செயற்பட்ட மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதித்து கனடா; ஒஸ்ட்ரியோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பிட்டுள்ளது.

  ஆப்கானிஸ்தான் ஆடைகளை பயன்படுத்தாமை; ஆண் நண்பர்களுடன் பழகியமை; சமூகத்துடன் ஒன்றிப் பழகியமை மற்றும் இணையத்தள நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டமை உள்ளிட்ட விடயங்களைக் காரணங்காட்டியே மேற்படி மூன்று யுவதிகளும் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. – News //

  இப்படியான ஒரு சமூகத்தில் பெண்கள் , ஆண்களின் அந்தப்புரத்து ராணிகளாகவேதான் வாழ்ந்திருக்கிறார்கள். அல்லது (இன்றும்)அடிமைகளாக……. . தலாக்! தலாக்!! தலாக்!!! என 3 முறை சொல்வதன் மூலம் ; யாரும் விவாகரத்து பெற்று விடலாம். அதை ஆண்களே அதிகமாக செய்துள்ளார்கள். பெண்கள் ???

  சட்டங்கள் எழுத்தில் வந்தாகச் சொன்னால் மட்டும் போதாது. அதை இரு பாலாரும் அனுபவிக்கும் சுதந்திரம் வேண்டும். பல பெண்களை ஒருவன் மணக்க இருக்கும் சுதந்திரம் , பெண்ணுக்கு அங்கு இருக்கிறதா?

  அதையே பஞ்ச பாண்டவர்களும் அவரோகனமாக செய்துள்ளார்கள். இதையே கண்டி சிங்களவர்களும் ” எக்க கே கேம” ( ஒரு வீட்டில் சாப்பிடுவது) எனும் பெயரில் , சொத்துக்கள் பிரிந்து போகாமலிருக்க ஒரு பெண்ணை , பல சகோதரர்கள் மணமுடித்த வரலாறும் உண்டு.

  நான் ஆசிய அல்லது மேற்கத்திய கலாச்சாரத்தை விட ;, யதார்த்தமான விடயங்களையே பார்க்கச் சொல்கிறேன்.
  பலரோடு தன்னை பகிர்ந்து கொள்ளும் போது ஏற்படும் மன விரக்தி , குற்ற உணர்வு , வரும் பாலியல் நோய்கள் , வன்மங்கள் ,நம்பிக்கையீனங்கள் ………………. இவை , வாழ்வு எனும் கப்பலை மூழ்கடித்து விடும்.

  சட்டங்களை விட ; சிந்திக்கும் அறிவே மிக முக்கியம்.
  நமது அடி மனதில் பொதிந்து கிடப்பதை ; அடுத்துவனுக்குள் திணித்து , தன் செயலை நியாயப்படுத்துவது மிக மிகத் தவறு.
  ஆறறிவு இல்லாத விலங்குக்கும் ; உணர்வு என்ற ஒன்றினூடாக தனக்கு வரும் ஆபத்தை உணரும் தன்மை உண்டு.
  அது ஆறறறிவு படைத்த மனிதனை விட மேன்மையாகவே வாழ்கிறது.
  விலங்கினமாக கருதப்படும் மனிதனுக்குள் , விலங்கை விட அதிகமான மிருகத்தனம் நிறைந்து கிடக்கிறதே! ஏன்?

  நாகரீகம் என்ற பெயரில், புதுமை என்ற பெயரிலோ அல்லது புரட்சி என்ற பெயரிலோ அநாகரீகங்கள் நடப்பதற்கு , மனித நேயம் கொண்ட சமூகம் அனுமதிக்கும் என்று , எனக்கு எண்ணத் தோன்றவில்லை.

  இக் கட்டுரைக்கு வலுச் சேர்ப்பதாக இணைக்கப்பட்ட கட்டுரைகளும் , விழி பிதுங்கவே வைக்கின்றன.


 22. kumar on February 4, 2012 12:52 am

  ///”இவை ஒரு சிலருக்காக மட்டுமே. எல்லோரும் இங்கே வர மாட்டார்கள். இது போன்ற இடம் இல்லாவிட்டால் ;
  இங்கே வரும் ஒரு மனிதன்; தன் இச்சைகளுக்காக ; எங்கோ உள்ள ஒரு ஒரு அபலயின் வாழ்வோடு மட்டுமல்ல. அந்த குடும்பத்தையும் அழித்து விடுவான்.///

  நல்ல வியாக்கியானம், அதுவும் ஒரு சிங்கை முக்கியமான மனிதரின்மூலம்! உங்களுக்கு அவரின் பதில், வியப்பு.

  இப்படிப்பட்ட தொழில்களில் உங்களது உறவுகள் ஈடுபட்டால், மனந்திறந்து ஏற்றுக்கொள்வீர்களா என்று நீங்கள் அந்த முக்கியமான மனிதரிடம் கேட்டிருந்தால், வேறு தத்துவங்கள் பேசியிருப்பார், நாம் பெண்ணியம் பேசுவதுபோல்.


 23. BC on February 4, 2012 12:55 am

  //இங்கிலாந்திலும் அதன் சட்டங்கள் பின்பற்றப்பட்ட இடங்களிலும் ” கல்லானாலும் கணவன், புல்லானாகும் புருசன்” என்று அவர் கூனோ, குருடோ,கிழடோ, அலியோ, முடமோ அல்லது எழுவோ அவருடன் வாழ்ந்தேயாக வேண்டும் சாகும் வரைக்கும்.
  பெண்களின் இரண்டு அடிப்படை உரிமைகளும் இங்கிலாந்தின் சட்டத்துக்கு முன்னான சுமார் 904 வருடங்களுக்கு முன் அறேபியாவில் சட்டமாக அமுல் படுத்தத் தொடங்கி இன்றும் நடை முறையில் உள்ளன//
  எப்படி நடைமுறையில் உள்ளது என்றால் ஒருவர் தனது மனைவியை கைவிட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பினால் தனது மனைவிக்கு மூன்று முறை தலாக் சொல்ல வேண்டும் விடயம் முடிந்தது விடயம் முடிந்தது. மனைவி வீட்டை விட்டு போக வேண்டும். ஜீவனாம்சமும் கேட்க முடியாது. இதுவா பெண்களுக்கான பாதுகாப்பு முறை? சில நாட்களுக்கு மட்டும் என்று பெண்ணை விலை பேசி முத்ஆ என்று சொல்லி பெண்ணுடன் இருக்க (பாலியல் தொழில் செய்ய) இஸ்லாமில் அனுமதியுண்டு. ஆனால் மேற்க்குலக நாடுகளில் உள்ளது போல் பாலியல் தொழிலை சட்டரீதியாக அங்கிகரித்து பாதுகாப்பாக நடத்தபட வேண்டும் என்பதிற்க்கு எதிர்ப்பு!
  யோகா-ராஜன் குறிப்பிட்ட “பெண்களையும் சரி அன்றி ஆண்களையும் சரி விருப்பத்துக்கு மாறான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கும் இத்தொழிலில் ஈடுபடுத்த முனைபவர்களுக்கும் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கான முறையில் சட்டரீதியான கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும்”
  இதை எதிர்ப்பவர்கள் கவனித்ததாக தெரியவில்லை.


 24. abdula on February 4, 2012 9:15 am

  இஸ்லாத்தில் பல குறைபாடுகள் பெண்கள ;பற்றியுள்ளது ஆனால் அவைகள் பகிரங்கமாக விவாதிக்க முடியாது காரணம் அடிப்படைவாதிகளின் மிரட்டல்களேயாகும் அண்மையில் சவுதியில் பெண்கள் தனியே வாகனம் ஓட்டுவதில் உள்ள சட்டசிக்கலகள் எழுந்திருந்தது பெண்கள் வாக்கு போடுதல் பற்றிய பிரச்சினைகள் எழுந்திருந்தது
  சவுதி பெண்களின் காம விருப்பங்கள் பற்றி பல படங்கள் யுரியூப்ல் உள்ளதே


 25. ajeevan on February 4, 2012 10:28 am

  // நல்ல வியாக்கியானம், அதுவும் ஒரு சிங்கை முக்கியமான மனிதரின்மூலம்! உங்களுக்கு அவரின் பதில், வியப்பு.
  இப்படிப்பட்ட தொழில்களில் உங்களது உறவுகள் ஈடுபட்டால், மனந்திறந்து ஏற்றுக்கொள்வீர்களா என்று நீங்கள் அந்த முக்கியமான மனிதரிடம் கேட்டிருந்தால், வேறு தத்துவங்கள் பேசியிருப்பார், நாம் பெண்ணியம் பேசுவதுபோல். – kumar //
  பெண்ணியம் என்ற பெயரில் பேசுவோரில் அநேகமானோர் சுயநல அரசியலுக்காகவோ அல்லது தமது சுய தேவைக்காக மக்களை திசை திருப்பவே பெண்ணியம் பேசுகிறார்கள். இதுவும் ஒரு வகை அரசியல்தான். இதை அதிகமாக படித்தவர்கள்தான் செய்கிறார்கள்.

  சிறிதொரு நாடு; சுங்க வரி இல்லாமல் திறந்து விடப்பட்ட ஒரு தேசம். எங்கிருந்தும் கப்பல்கள் வரும். கடலில் பல காலம் பெண்களையே காணதவர்கள் தரை இறங்கியதும்; காணும் பெண்களை கசக்கி பிழிய தோன்றும். கப்பலில் இருந்து இறங்கிய மாலுமிகள்; வீதிகளில் போகும் பெண்களை நச்சரிப்பார்கள். அவர்களது ஆசை அதிகமானால் கடத்தி; தன் இச்சையை தீர்த்துக் கொள்வார்கள். இவர்களைப் போல நாட்டிலும் காமப் பசிக்காக அலைபவர்கள் இல்லாமல் இல்லையே?

  சில பிரச்சனைகளை பார்த்துக் கொண்டிருப்பதோ; அதை தொடர விட்டு அதை வைத்தே அரசியல் செய்வதோ அல்லது கதை கட்டுரை எழுதுவதோ இயல்பாக பார்க்க முடியும் யதார்த்தம். நோய்க்கு மருந்து தேவைப்படும் போது அதை பார்த்துக் கொண்டு வியாக்கியானம் செய்வதால் எதுவும் நடவாது. நோய் உக்கிரமாகி நோயாளி சாவானே தவிர; விமோசனத்தை காணவே முடியாது.

  பாலியல் தொழில் என்பது காலா காலமாக மறைமுகமாக நடந்தே வருகிறது. அதை வெட்ட வெளிச்சமாக அநேகர் சொல்லிக் கொள்வதில்லை. இத் தொழிலில் ஈடுபடும் பெண்கள்தான்; ஏன் இந்த தொழிலுக்கு வந்ததற்கு காரணங்கள் சொல்கிறார்களே தவிர; அங்கே செல்லும் ஆண்கள் பெரிதாக காரணங்களை தேடுவதும் இல்லை. பெரிதாக சொல்வதும் இல்லை. இதேவகை ஆண்கள்தான் இதையே உங்க சகோதரி அல்லது உறவு செய்தால் என்று கேள்வி கேட்பார்கள்.

  உதாரணத்துக்கு கடந்த கால இலங்கை யுத்தத்தில் கணவனை இழந்த ஏகப்பட்ட பெண்கள் விதவைகளாக; தமிழ் – சிங்கள – இஸ்லாமிய – மலாய் – பறங்கியர் சமூகத்துக்குள் இருக்கிறார்கள். விகிதாசாரம்தான் வித்தியாசமே தவிர அனைவரும் மானுடர்களே! இவர்களுக்கு வாழ்வழிக்க எமது சமூகம் ஏதாவது அக்கறை கொண்டதா? இல்லை ; வாழ்விழந்தோருக்கு வாழ்வு கொடுக்க எத்தனை பேர் இணையத்திலாவது கட்டுரை வரைந்திருப்பார்கள்? நயன்தாராவின் வாழ்வை கரிசனை கொண்டு எழுதும் இணையங்கள் இந்த அப்பாவிகள் குறித்து கண்சாடை காட்டுமாறாவது யாரும் ஒன்றையும் செய்வதில்லை. இறந்தோரை வைத்து பணம் பறிக்க நினைப்போர் ; இருப்போர் குறித்து அந்த அளவு அக்கறை கொண்டதாக இல்லை. எமது லட்சியம் மனிதனை வாழ வைப்பதற்காக வேண்டி செயலாற்றுவதாக இருக்க வேண்டுமே தவிர, வாழும் மனிதரை அழிப்பதற்காக இருக்க வேண்டியதில்லை.

  வாழ வழியில்லாத ஒரு பெண்; தான் வாழ்வதற்காக தன்னையே விற்கிறாள் ; இப்படி ஒரு வகை.
  அடுத்த வகை இலகுவாக பணம் பெற்று உயர்வடைய தேவையென்றால் இதுவே மற்றோர் இலகு வழி.
  அதாவது
  பிரச்சனைகளால் நாட்டில் வாழ முடியாமல் அகதியாவோர் ஒரு வழி.
  பணக்காரனாக அகதியாகி வெளிநாடு வருவோர் அடுத்த வழி என்பது மேற் சொன்னதற்கு ஒப்பான ஒரு விடயமே!

  மேற்கத்தய நாடுகளில் விபச்சாரத்துக்கான அனுமதிகளோடு நடைபெறும் விபச்சார விடுதிகள் உண்டு.
  அங்கே யாரும் போவது தவறாக அந்நாட்டு அரசு கருதுவதில்லை.
  ஆனால் அதே போல அடுத்தவன் வீட்டுக்குள் ஒருவன் போனால் அது பாரதூரமாக தண்டிக்கப்படும் குற்றமாகிறது. தண்டிக்கப்படுகிறார்கள்.
  விபச்சார விடுதிகளுக்கு பணிக்காக வருவோர் அறிந்தும் தெரிந்துமே வருகிறார்கள். அங்கே கட்டாயப்படுத்தல் இல்லை.
  (பலாத்காரமாக விபச்சாரத்துக்கு தள்ளும் இடங்களைத் தவிர்த்து …….. இது போன்ற நிலை நம் தேசங்களில்தான் அதிகம்)
  போகும் ஆண்களும் தற்செயலாக தவறு செய்யவெனப் போவதில்லை.
  அதற்காகவேதான் போகிறார்கள். எனவே இது இரு சாராரும் தெரிந்தே செய்யும் ஒரு விடயம்.
  இங்கே அவள் என்னை இழுத்தாள் எனவும் சொல்ல முடியாது. இல்லை; அவன் என்னை பலாத்காரம் செய்தான் என்றும் சொல்ல முடியாது.

  எனவே சிங்கையில்; இந்த நடைமுறை பொது மக்களுக்கு பங்கம் ஏற்படுவதை தடுக்கவே ஏற்படுத்தப்பட்டது.
  அங்கே பாலியல் பலாத்காரத்துக்கான தண்டனைகள் அதி உச்சமானவை என்பதை கருத்தில் கொள்ளவும்.

  அதை சொன்ன முக்கியமான மனிதர் வேறு யாருமல்ல; சிங்கை என்ற நாட்டை உருவாக்கிய லீகுவான்யு அவர்களேயாகும்.

  பாலியல் பலாத்காரத்துக்கான சிங்கை தண்டனை :
  Rape
  Rape – A man commits “rape” when he has sexual intercourse with a woman under circumstances falling under any of the five following descriptions:
  (a) against her will;
  (b) without her consent;
  (c) with her consent, when her consent has been obtained by putting her in fear of death or hurt;
  (d) with her consent, when the man knows that he is not her husband, and her consent is given because she believes that he is another man to whom she is or believes herself to be lawfully married or to whom she would consent;
  (e) with or without her consent, when she is under 14 years of age.
  However, sexual intercourse by a man with his own wife, the wife not being under 13 years of age, is not rape.[75] The penalty for rape is imprisonment for up to 20 years, and also a fine or caning.[76] Where a man, in order to commit or to facilitate the commission of an offence of rape, voluntarily causes hurt to a woman or to any other person, or puts the woman in fear of death or hurt to herself or any other person, he shall be punished with imprisonment for not less than eight years and not more than 20 years and shall also be punished with not less than 12 strokes of the cane. The same penalty applies to the commission of rape by having sexual intercourse with a woman under 14 years of age without her consent.[77] It should be noted that under the Women’s Charter,[78] any person who has carnal connection with any girl below the age of 16 years except by way of marriage is guilty of an offence and is liable on conviction to imprisonment of up to five years and a fine not exceeding S$10,000.[79] As this offence raises the age of consent for females from 14 to 16 years, cases of underage sex are usually charged under the Women’s Charter rather than the Penal Code. (The offence is often called ‘statutory rape’, although this is a term used in U.S. law.)
  Incest – Incest is committed when —
  (a) any man has carnal knowledge of a woman with or without her consent who is to his knowledge his grand-daughter, daughter, sister, half-sister or mother (whether such relationship is or is not traced through lawful wedlock); or
  (b) any woman of or above the age of 16 who with consent permits her grandfather, father, brother, half-brother or son (whether such relationship is or is not traced through lawful wedlock) to have carnal knowledge of her (knowing him to be her grandfather, father, brother, half-brother or son, as the case may be).[80]
  A man who commits incest shall be punished with imprisonment of up to five years, and if the woman is found to be under 14 years the offender shall be punished with imprisonment of up to 14 years.[81] A woman who commits incest shall be punished with imprisonment of up to five years.[82]

  -http://en.wikipedia.org/wiki/Penal_Code_(Singapore)#Rape


 26. BC on February 4, 2012 1:28 pm

  நண்பர் அப்துல்லா அவர்களுக்கு ஒரு சலூட்.
  இப்படியாக மிரட்டும் மத அடிப்படைவாதிகள் சிலர் எங்களிடமும் இருக்கிறார்கள். ஆனால் மத கருத்துகளை சுதந்திரமாக பலர் எம்மிடையே விவாதிப்பதால் மத அடிப்படைவாதிகளின் கருத்துக்கள் பெரும்பான்மை ஆரோக்கியமான நடைமுறையை விரும்பும் மக்களிடம் எடுபடவில்லை. மத அடிப்படைவாதம் உங்களிடம் எவ்வளவு பிரச்சனைகளை கொண்டு வருகிறது என்பதை உணர முடிகிறது. வலுக்கட்டாயமாக திணிக்கும் மத அடிப்படையிலான கருத்துக்கள் மனித சமுதாயத்துக்கு ஒரு போதும் நன்மை தராது.


 27. BC on February 4, 2012 11:04 pm

  //அஜீவன்- பாலியல் தொழில் என்பது காலா காலமாக மறைமுகமாக நடந்தே வருகிறது. அதை வெட்ட வெளிச்சமாக அநேகர் சொல்லிக் கொள்வதில்லை. இத் தொழிலில் ஈடுபடும் பெண்கள்தான் ஏன் இந்த தொழிலுக்கு வந்ததற்கு காரணங்கள் சொல்கிறார்களே தவிர அங்கே செல்லும் ஆண்கள் பெரிதாக காரணங்களை தேடுவதும் இல்லை. பெரிதாக சொல்வதும் இல்லை. இதேவகை ஆண்கள்தான் இதையே உங்க சகோதரி அல்லது உறவு செய்தால் என்று கேள்வி கேட்பார்கள்.//
  நச் என்று ஒரு கருத்து.


 28. Kumar on February 5, 2012 12:01 am

  ajeevan,
  ///சில பிரச்சனைகளை பார்த்துக் கொண்டிருப்பதோ; அதை தொடர விட்டு அதை வைத்தே அரசியல் செய்வதோ அல்லது கதை கட்டுரை எழுதுவதோ இயல்பாக பார்க்க முடியும் யதார்த்தம்.//
  முன்னாள் பெண் போராளிகள், தமது பசியைப் போக்குவதற்கு தம்மையே விற்பதைப் பார்த்து, அஜீவனுக்கு வேடிக்கை பார்க்கத்தான் முடியும். இல்லாவிட்டால், அதுவும் பெண்ணியம் பேசுவது போல ஓர் அரசியல் என்று சுற்றலாம்.

  ///நோய்க்கு மருந்து தேவைப்படும் போது அதை பார்த்துக் கொண்டு வியாக்கியானம் செய்வதால் எதுவும் நடவாது. நோய் உக்கிரமாகி நோயாளி சாவானே தவிர; விமோசனத்தை காணவே முடியாது.///
  நோய்க்கும் விபச்சாரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல், முடிச்சுப் போடுகிறீர்கள்.

  ///எமது லட்சியம் மனிதனை வாழ வைப்பதற்காக வேண்டி செயலாற்றுவதாக இருக்க வேண்டுமே தவிர, வாழும் மனிதரை அழிப்பதற்காக இருக்க வேண்டியதில்லை.///
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை கரை சேர்த்து, வாழ வையுங்கள். உங்களது இலட்சியமும் வாழட்டும்!

  ///மேற்கத்தய நாடுகளில் விபச்சாரத்துக்கான அனுமதிகளோடு நடைபெறும் விபச்சார விடுதிகள் உண்டு.
  அங்கே யாரும் போவது தவறாக அந்நாட்டு அரசு கருதுவதில்லை.//
  அந்தந்த நாடுகளே விபச்சார விடுதிகளை அனுமதித்துவிட்டு, அங்கு செல்பவர்களை தவறாக கருதுமா?

  ///அங்கே பாலியல் பலாத்காரத்துக்கான தண்டனைகள் அதி உச்சமானவை என்பதை கருத்தில் கொள்ளவும்.//
  பாலியல் பலாத்காரத்திற்கான தண்டனைகள், சிங்கையில் மட்டுமா, எல்லா நாடுகளிலும்தான் காணப்படுகின்றது. தண்டனைகளை நடைமுறைப்படுத்துவதில் எல்லா நாடுகளும் ஒரே நிலையை கடைப்பிடிப்பதில்லை.

  ///விபச்சார விடுதிகளுக்கு பணிக்காக வருவோர் அறிந்தும் தெரிந்துமே வருகிறார்கள். அங்கே கட்டாயப்படுத்தல் இல்லை.//
  விபச்சாரிகள் மட்டுமல்ல, கூலித் தொழிலாளரும் அவர்களின் தொழிலை தெரிந்துதான் வருகின்றனர். யாரும் எந்தத் தொழிலையும் செய்யும்படி கட்டாயப்படுத்த முடியாது.

  ///இதேவகை ஆண்கள்தான் இதையே உங்க சகோதரி அல்லது உறவு செய்தால் என்று கேள்வி கேட்பார்கள்.///
  தனது சொந்த அக்கா, தங்கைகள் விபச்சாரிகளாக கேள்விப்படுவதை யாரும் விரும்புவதில்லை. வேறு யாரும் விபச்சாரிகளாக இருந்தால், அவர்கள் செய்யும் சேவை, மனுக் குலத்திற்கு இன்றியமையாத புகழ் வேறு! எல்லாம் ஊருக்கு, உனக்கல்லடி மகளே!
  Also, please read this news link!
  -http://www.chinadaily.com.cn/china/2012-02/03/content_14528838.htm


 29. ajeevan on February 5, 2012 1:04 pm

  குமார், தூங்கிறவர்களை எழுப்ப முடியும். தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என சிலர் சொல்லுவார்கள். அது போலத்தான் உங்கள் கருத்துகளும் இருக்கின்றன.

  //முன்னாள் பெண் போராளிகளி தமது பசியைப் போக்குவதற்கு தம்மையே விற்பதைப் பார்த்துஇ அஜீவனுக்கு வேடிக்கை பார்க்கத்தான் முடியும். இல்லாவிட்டாலி அதுவும் பெண்ணியம் பேசுவது போல ஓர் அரசியல் என்று சுற்றலாம். – குமார்//

  மன்னிக்கவும் குமார். உங்கள் எழுத்துக்கள் உங்களுக்கு மகிழ்வைத் தரலாம். நிச்சயம் எம்மைப் போன்றவர்களுக்கல்ல. உங்களைப் போன்றவர்கள் குறித்து நிச்சயம் என்னைப் போன்றவர்கள் வெட்கப்படத்தான் முடியுமே தவிர சந்தோசப்பட முடியாது. அப்படி சந்தோசப்படும் யாராவது இருப்பார்களாக இருந்தால் அவர்களை நான் மனநோயாளிகளாகவே கருதுவேன்.

  முன்னாள் பெண் போராளிகள் எவரும் தமது பசியை போக்குவதற்கு தம்மையே விற்கிறாள் என ஒரு சிங்களவனாவது சொல்ல மாட்டான்.
  சிங்களவர்களிடமுள்ள கருணையாவது உங்களைப் போன்றவர்களிடமில்லை என்பதை அடித்துச் சொல்வேன்.
  இதுபோன்ற ஒரு கருத்தை எந்த ஒரு சிங்களப் பத்திரிகையிலும் கட்டுரையாக காண முடியாது. அதாவது பெண் போராளிகள் விபச்சாரிகளானார்களென்று……………….. நான் புலிகளுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டவனாக இருக்கலாம்.
  அதற்காக அங்கே இருந்து போராடிய அனைத்து போராளிகளையும் தவறாக கருதாதவன்.
  தமது சுயநலத்துக்காக பேசுவதை விட, சரி என்பதை பேசும் எழுதும் துணிவு நமக்கு வேண்டும். அதை மனிதனாகவோ அல்லது ஊடகவியளாளனாகவோ செய்ய வேண்டும். எனக்கு பிடிக்காத ஒரு அப்பாவியை புலி எனச் சொல்லி மாட்டி விடும் மோசமான எண்ணம் நமக்குள் வரலாகாது. இதைத்தான் அன்று தமக்கு பிடிக்காதவர்களை புலிகளுக்கு எதிரானவர்கள் என சொல்லி அழித்ததையும் மறக்கலாகாது.

  அந்த வகையில் பெண் போராளிகள் தமது பசி என்பதை; தன் காமப் பசியை என்று சொல்ல வந்து; நாசுக்காக பசி என்றீர்களா குமார்? அபாரம்.
  மனதில் உள்ளதே வார்த்தைகளில் வரும். அது மேலே வந்துள்ளது. இதே வார்த்தைகளை எழுதிய தாங்களே அக்கா தங்கைகள் என பசை தடவினீர்கள்? இதே தாங்கள்தான் அவர்களுக்கு வாழ்வு கொடுங்கள் என்று வேண்டுதலும் செய்கிறீர்கள்?

  கடந்த யுத்தத்தில் ஏகப்பட்டவர்கள் செத்துப் போனார்கள். அல்லது கொல்லப்பட்டார்கள். அதாவது பெண்கள்.
  இன்று அவர்கள் தமது வயிற்று பசிக்காக அல்லது காமப் பசிக்காக தன்னை விற்பதை நான் தவறாக்கி அவர்களை மேலும் வருத்த மாட்டேன்.
  அதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் தன் இனத்துக்காக தன் உயிரை தியாகம் செய்ய வந்தவர்கள்! அவர்கள் யாரும் தான் வாழ வேண்டும் என ஆயுதம் தரித்தவர்கள் அல்ல. தனது சமூகத்துக்காக ஆயுதம் தரித்தவர்கள். தமது சமூக விடுதலைக்காக ஆயுதம் தரித்தவர்கள். அவர்கள் இறந்திருந்தால் நீங்களெல்லாம் மாவீரராக படம் வைத்து கொண்டாடி, இன்னும் பணம் சம்பாதிக்கிறீர்கள்! ஆனால் தப்பி உயிர் வாழ்வோரை யாரும் கண்டு கொள்ளவதில்லை. முடிந்தால் அவர்களை துரோகிகளாகவேதான் பார்க்கிறீர்கள். அவர்கள் வாழ்வதாக அணு அணுவாக செத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவே உண்மை.

  புலத்தில் அரசியல் செய்வோர் ; தமது அரசியலுக்கு வலுச் சேர்ப்பதற்காகவும் பணம் சேர்ப்பதற்காகவும் ; கொண்டாட்டங்களை நடத்துகிறார்களே ஒழிய ; அந்த மக்களை நினைத்து எதையும் செய்யவில்லை. இலங்கையில் இருந்து வரும் அரசியல் பினாமிகளுக்கு விருந்து வைத்து உபசரிக்கிறார்களே ஒழிய ; போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு சதமும் அனுப்புவதில்லை. இப்படி இருக்கும் போது ; அந்த மக்கள் என்ன செய்வார்கள்? அவர்களது கைதான் அவர்களுக்கு இன்று துணை. வாழ்ந்தால் மட்டுமே எந்த தேசமும் வாழ்த்தும். எவரும் வாழ்த்துவர். பணம் இருப்பவன் நாட்டை விட்டு; எம்மைப் போல் ஓடி விடுகின்றனர். ஒரு வேளைச் சோற்றுக்கு இல்லாதவன்; நடக்கவே முடியவில்லை; ஓடுவதெங்கே?

  புலத்தில் ஒரு சிலரிடம் மட்டுமே மக்கள் பணம் இருக்கிறது. அல்லது பணம் சேர்க்க முடிகிறது. முடிந்தால் அவர்களிடமிருக்கும் சொத்துகளை பறித்து; அவர்களிடமுள்ள பணத்தை பறித்து; உங்களைப் போன்றவர்கள் அங்கே உள்ள மக்களுக்கு அனுப்புங்கள். அதற்கான ஒரு போராட்டத்தை தொடருங்கள்.

  //விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை கரை சேர்த்து; வாழ வையுங்கள். உங்களது இலட்சியமும் வாழட்டும்! // என என்னிடம் கேட்பதை தவிர மேலே சொன்னதை செய்யுங்கள். என்னால் ஒருவரைத்தான் கரை சேர்க்க முடியும். என்னோடு நீங்களும் வரத் தயாரா? முடிந்தால் சொல்லுங்கள். அழைத்துச் செல்ல நான் ரெடி. ஒருவருக்கு மேல் என்னால் வாழ்வு கொடுக்க முடியாது. காரணம் நானும் ஆண் விபச்சாரி ஆகி விடுவேன். எழுத முடிந்தால் எதையும் எழுதுவதா? யதார்த்தமாக எழுதுங்கள். விதண்டாவாதங்கள் வேண்டாம்.

  நம் அரசியல்வாதிகள் ; புத்திசீவிகள் ; போரளி தலைவர்கள் ; மேடைப் பேச்சாளர்கள் எல்லோரும் ; முடியாததையும் ; இல்லாததையும் பேசிப் பேசியே மக்களை ஏமாற்றி இந்த இழி நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள். ஏன் நம் அரசியல்வாதிகளிடம் இதைக் கேளுங்களேன்? ஒரு தலைவனிடம் அதற்காக இறங்கி வேலை செய்யச் சொல்லுங்களேன்? உண்மையாகச் சொல்கிறேன். எவரும் இறங்க மாட்டார்கள்! எந்த தமிழ் தலைவனும் இறங்க மாட்டான்!! காரணம் வீட்டை விட்டே அந்த தமிழ் தலைவனையும் துரத்தி விடுவார்கள். முடிந்தால் சிறிதரனிடம் அல்லது மாவையிடம் கேட்டுப் பாருங்களேன். இல்லை அவர்களது அமைப்பில் வேறு யாரிடமாவது கேட்டுப் பாருங்களேன். நிச்சயம் வாய் திறக்க மாட்டார்கள்.

  முடிந்தால் புலத்தில் வீதிகளுக்கு இறக்கிய இளசுகளிடம் இதைக் கொண்டு செல்லுங்கள் பார்க்கலாம். அந்த இளசுகள் சம்மதித்தாலும் ; அவர்களது பெற்றொர்கள் சம்மதிக்கவே மாட்டார்கள். அந்த அப்பாவிகளது இரத்தத்தில் வாழப் பழகிய புலம் பெயர் தமிழர்கள் நாங்கள். எனவே எனக்காக எவரும் சிலுவை மரம் ஏறுங்கள் அல்லது குப்பி கடியுங்கள் அல்லது வெடித்து செத்து மடியுங்கள். நாங்கள் அதை பத்திரகை செய்தியாக படித்து ரசிப்போம். அல்லது தொலைக் காட்சியில் பார்த்து மகிழ்வோம். இதுவே நம்மவர் மனநிலை.

  அங்கேயுள்ள இராணுவத்தினரின் மன நிலை கூட நம்மிடம் இல்லை என்பதை மன வருத்தத்தோடு சொல்லியே ஆக வேண்டும்.

  உதாரணமாக அண்மையில் கஜபா ரெஜிமென்டை சேர்ந்த சந்தருவன் எனும் இளைஞன் ; மறுவாழ்வு மையத்திலிருந்து வெளியேறிய முன்னாள் பெண் புலி உறுப்பினர் ஒருவரை திருமணம் செய்த நிகழ்வு செய்தி கடந்த சண்டே டைம்சில் வந்த போது ; வன்னி இராணுவத் தளத்திலிருந்து டைம்சின் ஆசிரியரைத் தொடர்பு கொண்ட படை அதிகாரி ; ” தயவு செய்து மறுவாழ்வு மையத்திலிருந்து வெளியேறிய முன்னாள் பெண் புலி உறுப்பினர் என்ற பதத்தை தூக்கி விடுங்கள். அது சமூகத்தில் இணையும் போது ஒரு உறுத்தலைக் கொண்டு வந்து விடும்” என்றாராம்.

  “இந்த படமும் ; தலைப்பும் அதிபரின் செயலகத்தில் இருந்துதான் வந்தது.” என டைம்சின் ஆசிரியர் சொன்ன போது

  “அதிபர் செயலகத்தில் இருப்பவர்களுக்கு எமது பிரச்சனை புரியாது. அந்த படம் அவர்களது அனுமதிக்காக அனுப்பப்பட்டது. அந்தப் பெண் கணவனோடு ; அவரது பகுதிக்கு போகும் போது வித்தியாசமாக பார்ப்பார்கள். அது இருவருக்கும் சங்கடத்தைக் கொடுக்கும். நான் சொல்வதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? ”

  “எனக்கு புரிகிறது. இருந்தாலும் பத்திரிகைகள் அச்சாகி வெளியேறி விட்டன. இணைய பதிப்பில் தூக்கி விடுகிறேன்.” என்றாராம் ஆசிரியர்.

  இதை என்னோடு பகிர்ந்து கொண்டவர்; நல்ல வேளை அதிபர் காரியலயம் தந்த செய்தி என்பதால் தப்பினேன் என்றார் சிரித்துக் கொண்டே. ஆனால் தமிழ் இணையங்களிலும் அது பின்னர் அப்படியே ; முன்னாள் பெண் புலி போராளி என்றே வந்தது.

  இங்கேதான் நாம் வித்தியாசமான மனிதர்களை பார்க்கிறோம்.

  அடுத்து அண்மையில் தயா கமகே எனும் கிழக்கு மாகாண எதிர்க் கட்சி தலைவரிடம் வானோலி பேட்டி ஒன்றை நடத்தினோம்.
  http://www.radio.ajeevan.com/
  அவர் சொன்னார் இன்று தமிழருக்கு 13வது தித்தச் சட்டத்தை அமுல்படுத்தி அவர்கள் ; இந்நாட்டில் எம்மைப் போன்ற கெளரவமான பிரஜைகள் என ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். நான் அதை பேட்டிக்காக பேசுவதாக எண்ணினேன். இல்லை ; கிழக்கு மாகாணத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஏகோபித்த முடிவாக கிழக்குக்கு காணி மற்றும் போலீசின் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என வாக்களித்திருந்தனர். அங்கே அரசு சார்பானவர்களும் ; ஐதேகவும் ; பிள்ளையான் கட்சினரும் இருக்கின்றனர். அனைவரும் இங்கே ஒன்றுபட்டுள்ளனர்.

  இவைதான் புரட்சி. சும்மா வாய்ப்பேச்சில் பரட்டிப் போடுவது புரட்சி என்போர் சட்டியில் தோசையை புரட்டவே தெரியாதவர்கள்.

  //தனது சொந்த அக்கா; தங்கைகள் விபச்சாரிகளாக கேள்விப்படுவதை யாரும் விரும்புவதில்லை. வேறு யாரும் விபச்சாரிகளாக இருந்தால்; அவர்கள் செய்யும் சேவை; மனுக் குலத்திற்கு இன்றியமையாத புகழ் வேறு! எல்லாம் ஊருக்கு; உனக்கல்லடி மகளே!//
  இது ஒன்றும் அதிபர் பதவியல்ல. வீட்டுக்கே தெரியாமல் ஓடிப் போனவர்களாக நாமிருக்கும் போது ; இதை மட்டும் யார் ஏற்றுக் கொள்வார்கள்? இயங்களுக்கு போன எத்தனை பேர் ; வீட்டில் சொல்லி ; பெற்றொர் ஆசீர்வாதத்தோடு போனார்கள் என்று ஒரு தரவு எடுத்து பாருங்கள். தெரியாது போனால் யாரையாவது கேட்டு பாருங்கள்? போனதை கேள்விப்பட்டு அழுத பெற்றோரையும் ; உயிர் போன பின்னும் வாய் விட்டு அழுத பெற்றோரையுமே எனக்குத் தெரியும்.

  எம்மவருக்கு கவுன்சிலிங் செய்ய மனநல மருத்துவர்கள் அதிகமாக தேவைப் படுகிறார்கள்!


 30. Mohamed SR. Nisthar on February 5, 2012 3:37 pm

  ஆன்புள்ள அஜீவன், பீசி, அப்துல்!

  அஜீவன்,
  “இல்லை. நான் கீழத்தேய போக்கு குறித்து எழுதவில்லையே? கட்டுரையின் தன்மைக்கே கருத்து எழுதியுள்ளேன்”. கட்டுரையின் தன்மைக்கே கருத்து சொல்லியுள்ளீர்கள். ஆனால் அதில் மேற்கின் ஒருபக்கம் அதுவும் நல்ல பக்கம் காட்டப்பட்டு அதே நேரம் கிழேத் தேசத்தின் ஒருபக்கம் அதுவும் கெட்டப்பக்கம் மட்டும் காட்டப்படும் தன்மையை அதே கட்டுரையின் தமைக் குறித்து கேள்வியாய் எழுப்ப நீங்களோ மிக லாபகமாக தப்பிச்செல்ல முனைகின்றீர்கள்.

  இல்லாவிடால் உங்கள் இந்திய/இலங்கை நண்பர்கள் “உனக்கென்ன நீ ஐரோப்பாவில் இருக்கிறாய்” என்ற கேட்க, அதன் பொருள் “நீ விரும்பியவரோடு போகலாம் என்பது மாதிரியான அவர்களின் எண்ணப்பாடு என்ற ஒரு விளங்கலின் அடிப்படையில் உங்களின் பதில் இவ்வாறு அமைகின்றது, “இங்கு எந்தப் பெண்ணும் தான் விரும்பாத ஒருவனோடு படுக்கை அறைக்குள் மட்டுமென்ன காப்பி சாப்பிடவும் போக மாட்டாள்”. இங்கே நீங்கள் மேற்கை உயர்த்திப் பிடிக்கவில்லை என்றால் உங்கள் பதில் அனேகமாக இப்படி அமைந்திருக்கலாம் “ஐரோப்பா என்றால் இங்கு பெண் வேறு விதமாக படைக்கப்பட்டவளா? அங்கு போல்தான் இங்கும்” என்று சின்ன விடையாக அமைந்திருக்கும். எனவே உங்கள் பின்னூட்டம் வேறு பக்கம் செல்லாமல் அடிப்படை விடயத்துக்கு மீண்டும் வருகின்றேன்.

  நான் பெண்களின் அடிப்படை உரிமைகள், அதுவும் இந்த பாலுறவு கட்டுரையுடன் சம்பந்தப்பட்ட இரண்டு உரிமைகளான, விவாகரத்து, சொத்துரிமை சட்டம் பற்றி அவை கீழே தேசத்தில் இருந்து வந்தவை என்று, அதுவும் உங்களின் பிழையான விளக்கத்தை சரி செய்ய சொல்ல, நீங்கள் காற்றின் வீசு திசையை பலாத்காரமாக திருப்ப தொடர்ந்து வந்த கப்பல்கள் புது திசை வழி செல்ல தலைப்பட்டுள்ளன. அதாவது எனது மேல் சொன்ன உதாரணங்களுக்கும் மறுப்பு தெரிவிக்கும் முகமாக அல்லது ஏற்றுக்கொள்ள விருப்பம் இன்மை காரணமாக நீங்கள் கனேடிய உதாரணம் காட்டியுள்ளீர்கள், “//இணையத்தளத்தைப் பார்வையிட்டார்கள் என்ற காரணத்துக்காக தனது மூன்று மகள்மாரையும் கொலை செய்த ஆப்கானிஸ்தான் தந்தையொருவருக்கும் அவருக்கு ஆதரவாக செயற்பட்ட மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதித்து கனடா; ஒஸ்ட்ரியோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பிட்டுள்ளது.

  ஆப்கானிஸ்தான் ஆடைகளை பயன்படுத்தாமை; ஆண் நண்பர்களுடன் பழகியமை; சமூகத்துடன் ஒன்றிப் பழகியமை மற்றும் இணையத்தள நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டமை உள்ளிட்ட விடயங்களைக் காரணங்காட்டியே மேற்படி மூன்று யுவதிகளும் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. – ணெந்ச் //

  இந்த உதாரணத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறிகள் என்று விளக்கமாக சொல்ல முடியுமா? அல்லது நான் சொன்ன சட்டத்தினால் உறுதிசெய்யப்பட்ட இரண்டு உரிமகளுடன் இந்த ஆப்கான் குடும்பத்தின் விடயம் எவ்வாறு சம்பந்தப்படுகிறது என்று சொல்ல முடியுமா?

  மேலும் இவ்வாறும் கூறியுள்ளீர்கள், “சட்டங்கள் எழுத்தில் வந்தாகச் சொன்னால் மட்டும் போதாது. அதை இரு பாலாரும் அனுபவிக்கும் சுதந்திரம் வேண்டும். பல பெண்களை ஒருவன் மணக்க இருக்கும் சுதந்திரம் , பெண்ணுக்கு அங்கு இருக்கிறதா?” ஆப்கான் மனிதன் சட்டத்தை மீறி இருக்கின்றான் என்றதனால் தான் கனேடிய சட்டம் அவனைத் தண்டித்துள்ளது. அதேபோல் அவன் வேறு ஒருநாட்டில் இருந்திருக்க அந்நாட்டின் சட்டப்படி அவனது குற்றத்துக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கும். உ+ம் தகாத உறவில் மாட்டி சவூதியில் சட்ட நடவடிக்கைக்கு முகம் கொடுக்கும் இலங்கையர் போல். அல்லது அண்மையில் அவுஸ்திரேலிய தமிழ் இளைஞ்சன் பாலியில் மரணதண்டனைக்கு முகம் கொடுத்தது போல். உங்கள் மேற்கோளின் கடைசி பகுதியான ” பல பெண்களை ஒருவன் மணக்க இருக்கும் “சுதந்திரம்”, பெண்ணுக்கு அங்கு இருக்கிறதா? இங்கு, அங்கு என்று அறேபியாவைக் கேட்றீர்கள் போல் தெரிகிறது. சரி அதுவும் இந்த கட்டுரையோடு மறைமுகமாக சம்பந்தப்படுவதால் அதையும் சேர்து பதில் சொவதில் எனக்கு சிரமமில்லை.

  நீங்கள் கூறும் இந்த “சுதந்திரம்” நீங்கள் நினைப்பது போன்றதல்ல. மனித உரிமையில் Absolute right (மறுக்க முடியாத உரிமை), Qualified right (நிபந்தனையுட கூடிய உரிமை) என பிரிக்கப்பட்டுள்ளன. மனித உரிமைக்கான ஜெனிவா சாசனத்திலும் அப்படியே. ஆக நான் நினைத்தவுடன் முஸ்லிம் என்ற ஒரே ஒரு காரனத்துக்காக நாலு என்ன நாலு இரண்டாவதையும் கூட யோசித்துப் பார்க்க முடியாது. மேலும் இந்த விடயத்தில் Fairness (நியாயமான முறையில் இருத்தல்) என்ற விடயத்தை Equality (சரிசமனாக இருத்தல்) என்ற விடயத்துடன் குழப்பிக் கொண்டதால்தான் இந்த கேள்வி பிறந்துள்ளது என நினைக்கின்றேன்.

  பீசி,
  காற்றடிக்கும் திசையில் எல்லாம் கப்பல் ஓட்ட நினைத்தால் நீங்கள் நினைக்கும் கரையை அடையமாட்டீர்கள். உங்களின் பின்வரும் கூற்று அப்படி சொல்ல வைக்கிறது, “ஒருவர் தனது மனைவியை கைவிட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பினால் தனது மனைவிக்கு மூன்று முறை தலாக் சொல்ல வேண்டும் விடயம் முடிந்தது விடயம் முடிந்தது. மனைவி வீட்டை விட்டு போக வேண்டும். ஜீவனாம்சமும் கேட்க முடியாது. இதுவா பெண்களுக்கான பாதுகாப்பு முறை? சில நாட்களுக்கு மட்டும் என்று பெண்ணை விலை பேசி முதா என்று சொல்லி பெண்ணுடன் இருக்க (பாலியல் தொழில் செய்ய) இஸ்லாமில் அனுமதியுண்டு. ஆனால் மேற்க்குலக நாடுகளில் உள்ளது போல் பாலியல் தொழிலை சட்டரீதியாக அங்கிகரித்து பாதுகாப்பாக நடத்தபட வேண்டும் என்பதிற்க்கு எதிர்ப்பு”.

  வரையபப்ட்டுள்ள எந்த சட்டத்திலும் இப்படி ஒரு முறைமையில்லை. நீங்களும் அஜீவனும் சொல்லும் ” தலாக், தலாக், தலாக்” என்ற சின்ன வார்த்தையை தொடர்ச்சியாக மூன்று முறை சொன்னால் ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு விவாகரத்து கிடைத்து விடும் என்பது தவறு.
  ஆங்கில சட்டபடி யூகே யில் ஒருவர் விவாகரத்து எடுக்க வேண்டுமென்றால் அந்த திருமணம் இனி சரிசெய்ய முடியாதபடி உடைந்துவிட்டது என்று நீதிமன்றத்துக்கு நிரூபிக்க வேண்டும். அதன் பிறகு அதை ஐந்து அடிப்படைகளில் ஆகக் குறைந்தது ஒரு அடிப்படையிலாவது உறுதி செய்ய வேண்டும். அப்படி செய்ய முதலில் ஒரு Petition முறைப்பாடு செய்ய வேண்டும், இதுதான் முதல் தலாக். குறிப்பிட்ட கால இடை வெளியின் பின் தஸ்தாவேஜு பரிமாற்றங்களுடன் Decree Nisi (இடைநிலை ஆணை) வழங்கப்படும், இதுதான் இரண்டாம் தலாக். இதிலிருந்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு ஆறு கிழமையும் ஒருநாளும் அவகாசம் வழங்கப்படும் இதற்கிடையில் சம்பந்தபட்டோர் மீண்டும் இணைய வாய்ப்பு அளிக்கப்படும், இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால் முறைப்பாட்டாளர் கடைசி ஆணைக்காக ( Decree Absolute) விண்ணப்பிக்க வேண்டும் , இதுதான் மூன்றாம் தலாக். ஆக இங்கும் கூட அஜிவன் மேற்கின் முறைமையை நல்லது என்றும் அதே நேரத்தில் அச்சொட்டாக அமைந்துள்ள இந்த கிழேத்தேச விவாகரத்து விவகாரத்தை (“தலாக், தலாக், தலாக்” ) தவறு என்றும் எப்படிக் கூறுவீர்கள்

  அப்துல்,
  “இஸ்லாத்தில் பல குறைபாடுகள் பெண்கள ;பற்றியுள்ளது ஆனால் அவைகள் பகிரங்கமாக விவாதிக்க முடியாது காரணம் அடிப்படைவாதிகளின் மிரட்டல்களேயாகும்,…”

  அடிப்படைவாதிகளின் மிரட்டல் பற்றி ஒரு பந்தி பயமில்லாமல் எழுதிய உங்களுக்கு இந்த குறைபாடுகள் பற்றி இன்னுமொரு பந்தி எழுதுவதில் என்ன பிரச்சினை? இது வரை எத்தனை பேர் நீங்கள் சொல்லும் “இஸ்லாத்தின் குறைபாடுகள்” பற்றி கதை சொன்னார்கள். யாராவது நீங்கள் சொல்லும் அடிப்படைவாதிகளின் மிரட்டல் பற்றி சொல்லவே இல்லையே? நீங்களாவது சொல்லுங்களேன்.


 31. ajeevan on February 5, 2012 9:41 pm

  //1882வரை பெண்களுக்கு சுயமாக சொத்து வைத்திருக்கவோ அல்லது தான் சம்பாதித்ததை கூட சுயமாக அனுபவிக்கவும் முடியாது. எல்லாவற்றையும் அந்த கல்லோ; புல்லோ அவரிடம் தாரைவார்க்க வேண்டும்.

  ஆனால் மேல் சொன்ன பெண்களின் இரண்டு அடிப்படை உரிமைகளும் இங்கிலாந்தின் சட்டத்துக்கு முன்னான சுமார் 904 வருடங்களுக்கு முன் அறேபியாவில் சட்டமாக அமுல் படுத்தத் தொடங்கி இன்றும் நடை முறையில் உள்ளன.//

  அன்புள்ள மொகமட்

  நான் அரேபியாவில் சட்டமாக அமுல்படுத்தப்பட்ட விடயம் குறித்தே நான் பதில் எழுதியிருந்தேன்.
  இன்றும் அங்குள்ள பெண்கள் வாகனம் ஓட்டவே முடியாத நிலையில் நீதி மன்றத்துக்கு செல்வதான செய்தி வருகிறது.

  // நான் கீழத்தேய போக்கு குறித்து எழுதவில்லையே? கட்டுரையின் தன்மைக்கே கருத்து எழுதியுள்ளேன்”. கட்டுரையின் தன்மைக்கே கருத்து சொல்லியுள்ளீர்கள். ஆனால் அதில் மேற்கின் ஒருபக்கம் அதுவும் நல்ல பக்கம் காட்டப்பட்டு அதே நேரம் கிழேத் தேசத்தின் ஒருபக்கம் அதுவும் கெட்டப்பக்கம் மட்டும் காட்டப்படும் தன்மையை அதே கட்டுரையின் தமைக் குறித்து கேள்வியாய் எழுப்ப நீங்களோ மிக லாபகமாக தப்பிச்செல்ல முனைகின்றீர்கள். //

  ஒருவரது தர்க்கத்துக்கு எழுதிய பதிலை ; இன்னொருவரது தர்க்கத்துக்காக எடுத்துக் கொள்ள முயல்வதாகவே தோன்றுகிறது.
  நீங்கள் அரேபியாவின் சட்டத்தை கருத்தில் கொள்கிறீர்களா?
  இல்லை ; இஸ்லாத்தின் சட்டத்தை கருத்தில் கொள்கிறீர்களா?

  என்னைப் பொறுத்தமட்டில் இன – மத – மொழி குறித்ததாக எம்மை குறுகிக் கொள்வதை தவிர்த்துக் கொண்டு ; புலம் பெயர் வாழ்வின் சமூகச் சீரழிவு குறித்து பேசும் போது ; ஈழம் குறித்த கேள்விக்கான பதில் தங்களுக்கு ஒரு துரும்பாக கிடைத்து விட்டதாக எண்ணுகிறீர்கள் என்றே நினைக்கிறேன்.

  வாதங்களின் வழி குற்றவாளிகள் தப்பலாம்.
  ஆனால் மனச்சாட்சி நிழலாய் என்றும் தொடரும்.


 32. Kumar on February 6, 2012 4:18 pm

  ajeevan,

  My response to your comment has been censored. Sorry!


 33. Mohamed SR. Nisthar on February 6, 2012 7:14 pm

  ஆன்புள்ள அஜீவன்,

  எனது பின்னூட்டத்துக்கான உங்கள் பதிலில் உறுதி தெரியவில்லை. மாறாக குற்றஞ்சாட்டும் நிலைமை அல்லது நீங்கள் மாத்திரம் மனசாட்சியுடன் பேசுவதாகவும், மற்றவரெல்லாம் அதை அடகுவைத்து விட்டு சும்மா சிந்தனை செல்லும் பக்கம் எல்லாம் சுழல்வது போலவும் கூறியுள்ளீர்கள்.

  இந்த தேசம்நெட்டில் கட்டுரைகள் முன்பு எழுதும் போதோ, இன்னும் தொடர்ந்தும் பின்னூட்டங்கள் இட்டுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலோ இரண்டு அடிப்படை விடயங்களில் தெளிவாகவே உள்ளேன். 1. என்ன செய்தாலும் சொந்தப் பேயரோடு வருவது, இது பொறுப்புச் சொல்லும் எனக்குள்ள கடமையை என்றும் எனக்கு சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கும். 2. பொய்யான விடயங்களை உண்மையானது என்று காட்ட முற்படக் கூடாது என்ற சுய நிபந்தனை.

  இந்த இரண்டுடையும் மிக அவதானமாக கடைபிடிக்கும் போது என்னால் முடியுமான வரை எங்கும் செல்ல முடியும். ஆகவே மனசாட்சி என்பது “இருக்கிறது” என்று சொல்வதனால் மட்டும் உங்களிடம் இருக்கிறது என்று ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், நீங்கள் சொன்ன அதே வார்த்தைகளை பயண்படுத்தி, அதாவது “நீங்கள் நல்லவராய் இருப்பதால் மட்டும் மற்றவர் கெட்டவர் என்ற முடிவுக்கு வர வேண்டாமே”, மனசாட்சியின் உந்துதல்தான் தொடர்ச்சியாக நான் பின்னூட்டம் இட்டுக் கொண்டிக்கும் நிலை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

  நிற்க, இதோ உங்கள் தடுமாறு நிலை, 1.அப்பாவின் மறுமணம் நடப்பது என்பது அப்பாவின் பாலியல் ஆர்வத்துக்காகவா? அல்லது வேறு காரணங்களுக்காகவா? அம்மா மணம் செய்வது பாலியல் ஆர்வத்தினால் மட்டுமா? அழகான வார்த்தைக்குள் அபாயகரமான எண்ணங்கள் துளிர் விட்டுள்ளதாக உணர முடிகிறது.”

  2.”கட்டுரையில் பெண்ணடிமையிலிருந்து விடுதலையை நோக்கி ஒரு பெண் செல்ல வேண்டுமானால்
  அவள் விபசாரியாவதால்தான் ஆண்களின் முகத்தில் காறித் துப்பலாம் என்பது போல கருத்துகள் தெரிகின்றன.
  முத்துகளை தேடி எடுத்து அருமையான ஒரு இடத்தில்தான் வைக்க வேண்டும். அதை குப்பையில் போட்டு உள்ளதையும் நாறடிக்க வழி காட்டலாகாது”.

  3.”நட்பையும் , அசிங்கப்படுத்தும் எண்ணம் கொண்ட மனம், கட்டுப்பாடுகளோடு வளர்ந்த நம்மவருக்குள் அதிகம்.
  கட்டுப்பாடுகளே இல்லாமல் வாழும் இந்த சமூகத்துக்குள், நல்ல மனங்கள் அதிகம்”.

  4.”இளம் வயது பெண்ணை மணந்த அவரது வாழ்கையையும் நியாயப்படுத்துகிறது”. இவை உங்கள் முதல் பின்னூட்டத்தில் சில. இதில் யோகா ராஜனின் பரிந்துரையை ஆதரிக்கிறீர்களா?, மேற்கை உயர்திப் பிடிக்கவில்லையா?

  1.”இல்லை. நான் கீழத்தேய போக்கு குறித்து எழுதவில்லையே? கட்டுரையின் தன்மைக்கே கருத்து எழுதியுள்ளேன்.
  நீங்கள் நல்லவர் என சொல்லும் போது , அடுத்தவர் மோசமானவர் என எடுத்துக் கொள்ள வேண்டாம்.
  அவரும் நல்லவராக இருக்கலாம். இதுவும் நம்மிடம் உள்ள ஒரு குறைபாடுதான்”.

  2.”இப்படியான ஒரு சமூகத்தில் பெண்கள் , ஆண்களின் அந்தப்புரத்து ராணிகளாகவேதான் வாழ்ந்திருக்கிறார்கள். அல்லது (இன்றும்)அடிமைகளாக……. . தலாக்! தலாக்!! தலாக்!!! என 3 முறை சொல்வதன் மூலம் ; யாரும் விவாகரத்து பெற்று விடலாம். அதை ஆண்களே அதிகமாக செய்துள்ளார்கள். பெண்கள் ??? ”

  3.”சட்டங்கள் எழுத்தில் வந்தாகச் சொன்னால் மட்டும் போதாது. அதை இரு பாலாரும் அனுபவிக்கும் சுதந்திரம் வேண்டும். பல பெண்களை ஒருவன் மணக்க இருக்கும் சுதந்திரம், பெண்ணுக்கு அங்கு இருக்கிறதா?”

  4.”நான் ஆசிய அல்லது மேற்கத்திய கலாச்சாரத்தை விட ;, யதார்த்தமான விடயங்களையே பார்க்கச் சொல்கிறேன்.
  பலரோடு தன்னை பகிர்ந்து கொள்ளும் போது ஏற்படும் மன விரக்தி , குற்ற உணர்வு , வரும் பாலியல் நோய்கள் , வன்மங்கள் ,நம்பிக்கையீனங்கள் ………………. இவை , வாழ்வு எனும் கப்பலை மூழ்கடித்து விடும்.”

  5.”நாகரீகம் என்ற பெயரில், புதுமை என்ற பெயரிலோ அல்லது புரட்சி என்ற பெயரிலோ அநாகரீகங்கள் நடப்பதற்கு, மனித நேயம் கொண்ட சமூகம் அனுமதிக்கும் என்று , எனக்கு எண்ணத் தோன்றவில்லை.” இவை உங்கள் இரண்டாம் பின்னூடத்தின் சில வெளிப்படுத்தல்கள். இதில் யோகா ராஜனை ஆதரிக்கிறீர்களா? மேற்கத்தை சட்டம் நல்லவை என்ற எடுகோளில்,கீழேத்தேய சட்டங்களை சந்தேகத்துடன் பார்க்கவில்லையா?

  1.”வாழ வழியில்லாத ஒரு பெண்; தான் வாழ்வதற்காக தன்னையே விற்கிறாள் ; இப்படி ஒரு வகை.”

  2.”மேற்கத்தய நாடுகளில் விபச்சாரத்துக்கான அனுமதிகளோடு நடைபெறும் விபச்சார விடுதிகள் உண்டு.
  அங்கே யாரும் போவது தவறாக அந்நாட்டு அரசு கருதுவதில்லை”.

  3.”விபச்சார விடுதிகளுக்கு பணிக்காக வருவோர் அறிந்தும் தெரிந்துமே வருகிறார்கள். அங்கே கட்டாயப்படுத்தல் இல்லை. (பலாத்காரமாக விபச்சாரத்துக்கு தள்ளும் இடங்களைத் தவிர்த்து …….. இது போன்ற நிலை நம் தேசங்களில்தான் அதிகம்)”

  4.”எனவே சிங்கையில்; இந்த நடைமுறை பொது மக்களுக்கு பங்கம் ஏற்படுவதை தடுக்கவே ஏற்படுத்தப்பட்டது.
  அங்கே பாலியல் பலாத்காரத்துக்கான தண்டனைகள் அதி உச்சமானவை என்பதை கருத்தில் கொள்ளவும்.” மேல் சொன்னவை உங்கள் மூன்றாம் பின்னூட்டத்தில் இருந்து. இவை யோகா ராஜனின் பரிந்துரைக்கு சிபாரிசு வழங்குகிறதா?

  1.”.”தமது சுயநலத்துக்காக பேசுவதை விட, சரி என்பதை பேசும் எழுதும் துணிவு நமக்கு வேண்டும். அதை மனிதனாகவோ அல்லது ஊடகவியளாளனாகவோ செய்ய வேண்டும். இது உங்கள் நான்காம் பின்னூட்டத்தில் இருந்து. சரியாக பேசுபவர்கள் உங்களைத் தவிர யாருமில்லையா?

  1.”இன்றும் அங்குள்ள பெண்கள் வாகனம் ஓட்டவே முடியாத நிலையில் நீதி மன்றத்துக்கு செல்வதான செய்தி வருகிறது” இதில் தனக்கான உரிமை மறுக்கப்படும் போது நீதிமன்று செல்ல அனுமதி உள்ளது என்பதைக் காட்டவில்லையா?அல்லது இது ஒரு கண்துடைப்பு என்று சொல்லத் தோன்றுகிறதா?

  2.”வாதங்களின் வழி குற்றவாளிகள் தப்பலாம். ஆனால் மனச்சாட்சி நிழலாய் என்றும் தொடரும். இவை உங்கள் கடை பின்னூட்டத்தில் இருந்து.

  இங்கு என்னை குற்றவாளி என்கின்றீர்களா? காரணம் நான் யோகா ராஜனின் ஆலோசனையை எதிர்ததாலா? கீழ்நாட்டு சட்டங்களை சுட்டிக் காட்டியதாலா? உங்களோடு தர்க்கம் புரிந்ததாலா? எனக்கு மனசாட்சி இல்லை என்ற ஒரு எடுகோளிலா?


 34. நந்தா on February 7, 2012 1:57 am

  கனடாவில் நடந்த கடல் கடந்த ஈழ கூட்டத்தில் போல்நியூமன் என்ற இந்தியதமிழன் பேசும் பொழுது 90,000 அதிகமான விதவைகள் என்றும் அவர்களில் சரிபாதிக்கும் அதிகமானவர்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக சொன்னவுடன் பல தமிழர்கள் கைதட்டினார்கள். இராணுவத்தினர் அந்த விதவைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டு கையடி பெற்றது படு விரசமாக இருந்தது.

  புலிகளின் வெளினாட்டு உண்டியல் பிரிவினர்களால் செய்யப்படும் வசூல் எதுவும் இலங்கையிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைப்பதில்லை என சமீபத்தில் இலங்கை சென்று திரும்பிய பாராளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

  ஆணும் பெண்ணும் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது இயற்கையின் தேவைகளான “அடுத்த” சந்ததியை உருவாக்கும் முயற்சியே ஆகும்!

  “சொத்துரிமை” என்பது வந்த நாளிலிருந்து பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.1976 ஆம் ஆண்டில்த்தான் கேரளாவில் ஆண்களுக்கும் சொத்துரிமை வழங்கப்பட்டது.

  இலங்கையிலும் கேரளத்திலும் ஒரு பெண் பலருக்கு மனைவியாக இருந்த கதைகள் உண்டு.


 35. DEMOCRACY on February 7, 2012 8:53 am

  இன்றைய ஈழத் தமிழரிடத்தில் “சமூகச் சீரழிவு’’ : உலகமயமாக்கல் நோக்கில் ஓர் ஆய்வு!

  இந்த சீரழிவுக்கு அமெரிக்கா மன்னிப்பு கோரியுள்ளது???

  NBC APOLOGIZES FOR M.I.A. ??

  -http://www.mediaite.com/tv/gretchen-carlson-reacts-to-m-i-a-giving-the-finger-get-a-life/

  அதனால்தான், இலங்கை இராணுவதளபதியை, இந்த சீரழிவுகளை கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்தியதாக ஐ.நா. அங்கீகரித்துள்ளது ??. ஒன்னுமே புரியலே ???!!!

  Shavendra Silva appointed Peace Keeping Advisor
  The Deputy Permanent Representative of Sri Lanka to the United Nations Major General Shavendra Silva has been selected to the Peace Keeping Advisor Group established by the UN Secretary General. — -http://www.sundayobserver.lk/2012/01/29/new43.asp


 36. ajeevan on February 7, 2012 11:55 am

  //சரியாக பேசுபவர்கள் உங்களைத் தவிர யாருமில்லையா?//

  எங்காவது அப்படிச் சொல்லியுள்ளேனா அன்பு மொகமட்?
  அரேபியாவில் பெண்களுக்கு சம உரிமை உள்ளது சுமார் 904 வருடங்களுக்கு முன் அறேபியாவில் சட்டமாக அமுல் படுத்தத் தொடங்கி விட்டார்கள் என்பதற்கு எதிர் கருத்து எழுதியதிலிருந்து தங்கள் தாக்கம் வேறு விதமாக மாறியிருக்கிறது.

  நீங்கள் அரேபியா என்பதை அல்லது அரேபிய சட்டம் என்பதை இஸ்லாத்தின் சட்டமாக பார்க்கிறீர்கள் என நினைக்கிறேன்.
  நான் எவர் மதத்தையும் வெறுப்பவன் அல்ல. அது மதத்தை பின்பற்றுபவனுடைய விருப்பம். அவனது சுதந்திரம். இஸ்லாத்தை பின் பற்றும் தேசங்களில் வெவ்வேறு சட்டங்கள் உண்டு.

  நான் மீண்டும் சொல்கிறேன். சட்டத்தை இயற்றுவது ஒன்றும் பெரிதல்ல. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். காகிதத்தில் இருந்து ஒன்றும் செய்யாது. இலங்கை ; அங்கு வாழும் அனைவருக்கும் பொதுவான நாடு என சொல்லிக் கொள்கிறார்கள். அது பத்திரத்தில் இருந்து என்ன பிரயோசனம். நடைமுறையில் இல்லையே? 13வது சட்டத் திருத்தம் கையெழுத்துக் கொள்ளப்பட்ட ஒரு விடயம். அது இன்னும் முறையாக நடைமுறைப்படுத்தாமல் நழுவிக் கொண்டிருக்கிறதே?

  இது குறித்து இலங்கை வாழ் சிங்களவர்களே தமிழருக்கு ( என்னைப் பொறுத்தவரை இலங்கை வாழ் அனைவருக்கும் சிங்கள – தமிழ் – முஸ்லீம் – மலாய் – பறங்கியர் ) மட்டுமல்ல ; அனைவரும் கெளரவமாக வாழும் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதேயாகும்.

  இது போலவே அரேபியாவில் உருவாக்கப்பட்ட சட்டம் உண்மையாக கடைப்பிடிக்கப்படவில்லை.

  // தடையை மீறி கார் ஓட்டிய சவூதி அரேபிய பெண்ணுக்கு 10 கசையடி தர உத்தரவு!

  கெய்ரோ: பெண்கள் கார் ஓட்டக் கூடாது என்ற தடையை மீறி கார் ஓட்டிய ஒரு சவூதி அரேபியப் பெண்ணுக்கு 10 கசையடிகள் தர அந்த நாட்டில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சவூதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  முஸ்லீம் நாடுகளிலேயே சவூதியில் மட்டுமே பெண்களுக்கு அதிக அளவில் கட்டுப்பாடுகள் உள்ளன. கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டக் கூடாது, ஆண் துணை இல்லாமல் வெளிநாடு போகக் கூடாது, வாக்குரிமை கிடையாது என பல கட்டுப்பாடுகள். //

  more:
  -http://tamil.oneindia.in/news/2011/09/28/saudi-woman-sentenced-10-lashes-driving-aid0091.html

  பாருங்கள் எப்படி ஒரு பெண்ணை தண்டிக்கிறார்கள் என்று? இது என்னைப் பொறுத்தவரை மிலேச்சத்தனமானதாக இருக்கிறது.
  -http://www.youtube.com/watch?v=YP8uB9abAhE&feature=related
  -http://www.youtube.com/watch?v=kXOXXDnRuyQ&feature=related

  Video News :
  -http://www.youtube.com/watch?v=AxBH6mrQXsQ

  -http://www.youtube.com/watch?v=lnz0nsTWAy4

  Iranian Actress Sentenced to Prison and 90 Lashes:
  -http://www.youtube.com/watch?v=BOB40tp9A48&feature=related

  -http://www.youtube.com/watch?v=AxBH6mrQXsQ


 37. BC on February 7, 2012 12:46 pm

  NBC APOLOGIZES FOR M.I.A.

  இப்படி ஏதாவது பொறுப்பற்றதனமாக நடந்தால் தான் புகழடைய முடியும் என்று நினைத்திருப்பார்.


 38. Mohamed SR. Nisthar on February 7, 2012 5:40 pm

  அன்புள்ள அஜீவன்,

  “அரேபியாவில் பெண்களுக்கு சம உரிமை உள்ளது,…” இப்படி எங்காவது நான் சொன்னேனா?

  “சுமார் 904 வருடங்களுக்கு முன் அறேபியாவில் சட்டமாக அமுல் படுத்தத் தொடங்கி விட்டார்கள் என்பதற்கு எதிர் கருத்து எழுதியதிலிருந்து தங்கள் தாக்கம் வேறு விதமாக மாறியிருக்கிறது”, அஜீவன் நான் குறிப்பிட்டு சொன்னது 1. விவாகரத்து செய்யும் உரிமையும், 2. சொந்தமாக சொத்து வைத்திருக்கும் உரிமையுமே. இவை தொடர்பான சட்டங்கள் நான் சொலியவாறு இல்லை அமுல் படுத்தப்படவும் இல்லை என்றால் அல்லது ஐரோப்பிய நாட்டு சட்டம்தான் இந்த சட்டங்களுக் கெல்லாம் கால் என்றால் சொல்லுங்கள் அது சரியா பிழையா என பார்ப்போம்.

  “நான் மீண்டும் சொல்கிறேன். சட்டத்தை இயற்றுவது ஒன்றும் பெரிதல்ல. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். காகிதத்தில் இருந்து ஒன்றும் செய்யாது.” இது எல்லா, ஐரோப்ப்பவுக்கும், அமெரிக்காவுக்கும், பொருத்தம் என்றால், இதோ இன்றைய இங்கிலாந்தின் ஹல்(Hull Crown Court) முடிக்குறிய நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஒரு தாயும், 11 வயது மகனும் குடியோ குடி என குடித்து வாகன போக்குவரத்தை தடுத்து தமக்கும் ஆபத்து வரும் விதமாக நடந்த குற்றத்துக்காக 12 மாத ஒத்தியைக்கப்பட்ட சிறை தண்டனை. ஹல் மக்கள் கடுப்பில் இருக்கிறார்கள். காரணம் 11 வயது மகனை குடிக்க தூண்டிய தாய், சேர்ந்து குடித்த தாய், மகனுக்கு வொட்கா ( Vodka)வாங்கி கொடுத்து ஊக்கப்படுத்திய தாய் அந்த பிரதேசத்தில் ஏனையோரின் அமைதியான, பாதுகாப்பான வாழ்வுக்கு குந்தகம் விழைவித்த தாய்க்கு 12 மாத ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை.

  18 வருடங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட லொரன்ஸ் ஸ்டிபனின் கொலையாளிகள், சட்டத்தின், அதை பாதுகாப்போரின் அசமந்த போக்கினால் 18 வருடம் ஓய்வின்றி நீதிக்காய் போராடிய பெற்றோர்.

  சட்டத்தை அமுல் படுத்த முடியாதபடி லண்டனில் நடக்கும் வீடுடைப்பு சம்பங்கள். இன்னும் போலிஸிடமோ, நீதிமன்றத்திடமோ போய் பிரயோசனமில்லை என்று நொந்து போன மக்கள் கூட்டம் இப்படி இருக்கிறது நீங்கள் உயத்திப்பிடிக்கும் மேல் நாட்டு சட்டம்.

  யூகே(UK) சொல்கிறது அபு கடாடா நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர் நாடு கடத்தல் உத்தரவு பிறப்பி என்று. ஐ.நீ(European Court)சொல்கிறது அவர் யுகேயின் பதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை, ஆகவே அவரை தொடர்ந்து அடைத்து வைக்கவோ அல்லது ஜோர்தானுக்கு நாடு கடத்தவோ முடியாது, ஆளை ஜாமினில் விடு என்று. என்ன சட்டம் இது? இதன் சரி பிழைகள் என்ன? எங்கே?

  “பாருங்கள் எப்படி ஒரு பெண்ணை தண்டிக்கிறார்கள் என்று? இது என்னைப் பொறுத்தவரை மிலேச்சத்தனமானதாக இருக்கிறது”
  யார் சொன்னார் இல்லை என்று? இஸ்லாமிய சட்டத்தில், அதாவது ஷரியாவில், தனி மனித உரிமை பாதுகாக்கப்படுகிறது. உ+ம். திருமணத்தின் பின்னான வெளிபாலுறவுக்கு ஆணுக்கும் பெண்ணுக்குமாக 100 கசையடி. ஆனால் அது நாஙுகு சாட்சிகளால் நிரூபிக்கப்பட வேண்டும். சாட்சிகள் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டால், அது தனிமனித நிந்தனையாக கணக்கிடப்பட்டு குற்றம் சாட்டியவர் 80 கசையடி பெறுவார். ஆனால் தனி மனித உரிமை சமூகத்தின் உரிமைக்கு மேலானதல்ல என்பது அந்த சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை எல்லாம் யார் மீறினாலும் தனி மனிதனோ, சமூகமோ, அரசனோ, அரசாங்கமோ அது கண்டிக்கப்பட, தண்டிக்கப்பட வேண்டியவை. உ+ம் போர் குற்றம், இனழிப்பு என்பதற்கு எதிரான சர்வதேச சட்டங்கள் உள்ளனவே யார் யாரை தண்டிக்கிறார்கள்? எனவே உங்கள் விசனப்படி இந்த சட்டங்கள் பிரயோசமற்றவை என்போமா? இனித் தேவையில்லை என்று ஒதிக்கிவிடுவோமா? இந்த நிலையை ஏன் ஷரியா சட்டத்துடனும் அதை மீறுவோர் அல்லது அதை சரியாக நடை முறைபடுத்தார் தொடர்பாக பக்கசார்பாக பார்க்கின்றீர்கள்?


 39. abdula on February 7, 2012 9:19 pm

  எம்மில் பலருக்கு வெளிநாடு வந்த பிறவு பல குழப்பங்கள் வளர்ந்துள்ளது என்பது உண்மையே அதிலும் இன்டர்நெற் வந்த பிறவு பல குழப்பங்கள் வந்துள்ளது.


 40. BC on February 7, 2012 10:33 pm

  // இங்கும் கூட அஜிவன் மேற்கின் முறைமையை நல்லது என்றும் அதே நேரத்தில் அச்சொட்டாக அமைந்துள்ள இந்த கிழேத்தேச விவாகரத்து விவகாரத்தை (“தலாக் தலாக் தலாக்” ) தவறு என்றும் எப்படிக் கூறுவீர்கள்//
  மூன்று முறை தலாக் சொல்லி மனைவிய விலத்தும் முறை மேற்கின் முறைமையை போன்று நல்லதாக இருந்தால் எதற்காக சில இஸ்லாமிய மத குழுக்கள் இந்தியாவில் தலாக் முறையில் சீர்திருத்தம் வேண்டும் என்று கேட்கின்றனர்! இஸ்லாமிய மதவாதிகள் சீர்திருத்தம் பற்றி கதைப்பதே மிக பெரிய விடயம். ஏனெனில் மாற்றவே முடியாத விடயம் அல்லவா.
  ———————————————————
  13வது சட்டத் திருத்தம் முழுமையாக இலங்கையில் நடைமுறைபடுத்தபடவில்லை. ஆனால் அரேபியாவில் உருவாக்கப்பட்ட சட்டம் சவூதி அரேபியாவில் முழுமையாக நடைமுறைபடுத்தபடுகிறது. அதனால் தான் கார் ஓட்டிய பெண்ணுக்கு 10 கசையடி உத்தரவு. சில இஸ்லாமிய நாடுகளில் அவர்கள் சட்டங்கள் முழுமையாக நடைமுறைபடுத்தபடவில்லை.
  மனைவியை பிடிக்காவிட்டால் தலாக் சொல்லி மனைவியை விலத்துவதில் பெண்கள் அடையும் நன்மைகள் பற்றியும் சொல்கின்றனர். கணவனுக்கு மனைவியை பிடிக்கவில்லை விவாகரத்து, கோடு என்று அலைய வேண்டும். ஆகையால் இன்னொரு பெண்ணை ரகசியமாக மணந்து கொள்கிறான்.சொந்த மனைவி பெயருக்கு மனைவியாக இருந்து துன்பம் அடைகிறாள். ஆனால் தலாக் உரிமை ஆண்களிடம் இருந்தால் அதை ஆண்கள் பாவிப்பதன் மூலம் மனைவியானவள் உடனடியாக சுதந்திரம் அடைந்து தான் விரும்பிய வாழ்க்கையை அனுபவிக்கலாம். கார் ஓட்ட அனுமதியில்லா பெண்கள் மீது அப்படி ஒரு அக்கறை.


 41. ajeevan on February 7, 2012 11:35 pm

  எனக்கு சில விளக்கங்கள் போதாது. எனவே கேட்கிறேன். தப்பாய் எடுத்துக் கொள்ள மாட்டீர்களே?

  இஸ்லாத்தில் ஒரு ஆண்மகனுக்கு, எத்தனை பெண்களோடு ஒரே வீட்டிலோ அல்லது வெவ்வேறு இடத்திலோ வாழ அனுமதியுண்டு?

  இஸ்லாத்தில் ஒரு பெண்ணுக்கு, எத்தனை ஆண்களோடு ஒரே வீட்டில் அல்லது வெவ்வேறு இடத்திலோ வாழ அனுமதியுண்டு?


 42. BC on February 8, 2012 10:35 am

  அப்துல்லா, உங்கள் குழப்பங்கள் ஆரோக்கியத்தின் அறிகுறி. அப்போ தான் தெளிவு பிறக்கும்.
  தமிழ்நாட்டில் கடைநல்லூரில் தனது மதத்தை விமர்சித்ததிற்க்காக இஸ்லாமிய இளைஞர் ஒருவர் மற்றவர்களால் தாக்கப்பட்டுள்ளார். எனது கண்டனங்கள்.


 43. ajeevan on February 8, 2012 3:14 pm

  //எம்மில் பலருக்கு வெளிநாடு வந்த பிறவு பல குழப்பங்கள் வளர்ந்துள்ளது என்பது உண்மையே அதிலும் இன்டர்நெற் வந்த பிறவு பல குழப்பங்கள் வந்துள்ளது.//

  உண்மைதான் அப்துல்லா. முன்னர் யாரோ ஒரு சிலர் சொன்னதை மட்டும் நம்பினோம். அது குறுகிய ஒரு வட்டம்.
  இன்று எல்லோருக்கும் இணைய வழி ; தம் கருத்தை சொல்ல முடிகிறது.
  அது சிலருக்கு குழப்பமாக இருக்கலாம். பலருக்கு விளக்கமாக இருக்கிறது. அது நல்லதுதானே?

  அன்று ஒரு சில பத்திரிகைகளில் மட்டுமே விடயங்களை படிக்கலாம்.
  இன்று அப்படி இல்லை. அதைத் தாண்டி புளொக்குகள் வழி ; எவரும் தன் கருத்தை எழுதலாம். இது ஒரு வித உலக மயமாக்கல்தான்.

  அன்று சமயம் என்று சொல்லித் தந்ததை ; சயன்ஸ் என்று சொல்லுடா என பலரால் சொல்ல முடிகிறது.
  அனைத்து சட்டங்களும் ; ஏதாவது ஒரு புத்தகம் வந்த காலத்து தலைமைகளின் ஆதரவிலேயே உருவாகியுள்ளது.

  வெகு தூரம் செல்ல வேண்டாம். மிக அண்மைக் காலத்தை எடுத்துக் கொள்வோம்.
  ஈழப் பிரச்சனை ஆரம்பித்த காலத்திலிருந்து வாழ்ந்தவர்களில் அநேகர் ; இன்னும் உயிரோடு இருக்கிறார்கள்.
  இன்று 98 விழுக்காட்டினர் ; பிரபாகரனால்தான் தமிழ் ஈழ போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது என நம்புகின்றனர்.
  உண்மை அதுவல்ல என்பது தேசத்தின் வாசகர்களுக்குள் வந்த பழைய கருத்துகளை பார்த்தாலே தெரியும்.
  பிரபாகரன் போன்ற இளையவர்களை பாவித்த ; தமிழ் அரசியல்வாதிகளே தமிழ் ஈழம் என்ற பிரகடனத்தை கொண்டு வந்தனர்.
  ஆனால் முன்னால் வந்த காதை ; பின்னால் வந்த கொம்பு மறைத்தது போன்ற நிலைக்கு மாறி ; பிரபல்யமான பிரபாகரன் பேசப்பட்டார்.
  தமிழ் பகுதிகளும் ; பலமும் ; புலிகளின் கட்டுப்பாட்டுக்கு வந்த பின் ; தளத்தில் மட்டுமல்ல புலத்திலும் புலிகளுக்கு எதிராக யாராலும் எதையும் எழுதவோ ; பேசவோ முடியவில்லை.

  விகடனுக்கு கனடாவில் விண்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் – மானுடவியல் துறை பேராசிரியராக இருப்பவர் ஒருவர் ( சேரன்) கொடுத்த பேட்டியை பாருங்கள் :-

  ____________________________________________________________________________________
  விகடன் கேள்வி : ”பிரபாகரன் இருக்கிறார் – இல்லை என்று இன்னமும் தெளிவு இல்லாத நிலை இருக்கிறதே?”

  சேரன் பதில் : ”பலரும் பல இடங்களில் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். இதற்கு ஒரு ‘மல்டிபிள் சாய்ஸ் கேள்வி’ மூலமாகப் பதில் சொல்ல விரும்புகிறேன்.
  1. பிரபாகரன் இருக்கிறார். திரும்பி வருவார்.
  2. இல்லை. அவர் மாவீரர் ஆகிவிட்டார்.
  3. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
  4. கனத்த மௌனம்.
  5. மேற்கூறிய யாவையும் சரி.
  - இந்த பதில்களில் நான் ஐந்தாவது பதிலை டிக் செய்கிறேன்!”

  நன்றி விகடன்
  ____________________________________________________

  இது கொடுமையல்ல. இதுவே இன்றும் ; என்றும் நிலமை.

  மகிந்த விடயத்திலும் இதுவே இன்று பின் பற்றப்படுகிறது என சிங்கள மக்களே எழுதுகிறார்கள்.

  கிறிஸ்தவ வேதகாமத்தில் பழைய ஏற்பாடு ; புதிய ஏற்பாடு என இரு பகுதிகள் உண்டு.
  பழைய ஏற்பாட்டுக்கும் ; இஸ்லாத்துக்கும் மிக நெருங்கிய சம்பவங்கள் உண்டு.
  பெயர்களும் ; இடங்களும் ; பல வழி முறைகளிலும் ஒரே இழையில் சற்று வேறு பட்டு பயணிப்பதை காணலாம்.
  ஆதாம் ; ஏவாள் சம்பவத்தலிருந்து பார்க்கலாம். தவிர ஏசு ; தர்மச்சேதனம் செய்யப்பட்டார் என்பது சுன்னத்தையே குறிக்கிறது.

  பழைய ஏற்பாடு ; ஏசுவின் பிறப்புக்கு முந்திய தகவல்கள் எனப்படுகிறது.
  புதிய ஏற்பாடு ; ஏசுவின் பிறப்புக்கு பிந்திய தகவல்களை அடக்கியது.
  புதிய ஏற்பாடு ; ஏகப்பட்டவர்களால் எழுதப்பட்டாலும் ; தேர்வாகியிருப்பது ஒரு சில மட்டுமே ஒரு குழுவால் தேர்வுக்கு எடுத்துக் கொண்டு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ( இவை குறித்து தொடர்வது சலிப்பை தரும்)

  இருந்தாலும் உலகம் தட்டையானது என அன்று நம்பினர். இல்லை ; அது உருண்டையானது என்பதை சொன்னவனை துரோகி என கொலை செய்தனர். அதே கும்பல் இன்று ; உலகம் உருண்டை என சொல்கிறது அல்லது ஏற்றுக் கொள்கிறது.

  புதிய ஏற்பாட்டில் 8-9 வயதுக்கு பின்னர் ; 40 வயது மலைப் பிரச்சங்கம் செய்ய ஏசு வரும் வரை ; அவர் என்ன செய்தார்? எங்கு இருந்தார் ? எனும் ஏசுவின் இளமைக் காலம் மறைக்கப்பட்டுள்ளது. இதுவே மிக முக்கியமான காலம்! இக்காலத்தில் அவர் இந்தியாவில் இருந்ததாகவே நம்பப்படுகிறது.

  Jusus Lived in India Video:
  -http://krishnatube.com/video/293/Jesus-in-India–BBC-Documentary

  Jusus Lived in India Doc:
  -http://www.sol.com.au/kor/7_01.htm

  இது போன்ற விடயங்கள் ; அனைத்து மதங்களிலும் உண்டு. அவற்றை நாம் அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் தவறு! அங்கு நல்லவை இல்லாமல் இல்லை. அதை பின்பற்றுவதில் தவறும் இல்லை.

  சரியை சரி என்றும் ,
  தவறைத் தவறென்றும் உணராதவன் ,
  ஒரு போதும் ஆறறிவு படைத்தவனாக முடியாது.


 44. Mohamed SR. Nisthar on February 9, 2012 6:38 pm

  அன்புள்ள பீசி, அஜிவன்!

  “மூன்று முறை தலாக் சொல்லி மனைவிய விலத்தும் முறை மேற்கின் முறைமையை போன்று நல்லதாக இருந்தால் எதற்காக சில இஸ்லாமிய மத குழுக்கள் இந்தியாவில் தலாக் முறையில் சீர்திருத்தம் வேண்டும் என்று கேட்கின்றனர்!,…” பீசி ஷரியாவின் விவாகரத்து நடை முறை ஒழுங்குகள் உங்களுக்கு தெரியாது என்பதை ஒரு பக்கம் வைப்போம். அல்லது நீங்கள் இதுவரை உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒரு செக்கனில் தலாக், தலாக், தல்லக் என்று மூன்று முறை சொல்லி அதுவும் ஆண்கள் மாத்திரம் விவாகரத்து பெறுவதான முறையை இன்னொரு பக்கம் வைப்போம், இப்போது சொல்லுங்கள் எந்த குழு எந்த குழுவிடம் நான் சுட்டிக்காட்டிய எந்த முறையில் இருந்து சீர்திருத்தம் கேட்கிறது? ஷரியா என்றால் இறைவனால் அளிக்கபட்ட சட்ட ஒரு தனி மனிதனாலோ, ஒரு அரசனாலோ, ஒரு குழுவாலோ, ஒரு கட்சியாலோ, ஒரு அரசாங்கத்தாலோ ஆக்கப்பட்ட சட்டமல்ல. ஆகவே அந்த சட்டத்தை ஆக்காதோருக்கு அதில் மாற்றம் செய்யவோ, இடை செருகல் செய்யவோ முடியாது என்பது மாத்திரமல்ல அப்படியான அதிகாரமும் யாரின் கையிலும் இல்லை. இப்படி இருக்க அந்த இந்திய குழு யாரிடம் சீர்த்திருத்தம் கேட்கிறார்கள்? இஸ்லாத்தில் “வத்திகான்” பாணியிலான தலைமை இல்லையே. அப்படியானால் இந்திய அரசாங்கத்திடமா? அல்லது பக்கத்திலுள்ள பாக்கிஸ்தானிடமா? அல்லது சற்று தொலைவிலுள்ள ஈரானிடமா அல்லது மேற்கிடமா அந்த குழு சீர்திருத்தம் கேட்கிறது?

  அஜீவன், நான் எனது முன்னைய இரண்டு பின்னூட்டங்களிலும் அடிப்படை கட்டுரை சம்பந்தமாக நீங்கள் கூறிய கருத்துக்கள் அல்லது எனது கருத்துக்களுக்கு எதிர்கருத்து வைத்த விடயங்கள் சம்பந்தமாக பல கேள்விகள் கேட்டிருந்தேன். பதில் ஒன்றும் இல்லை. ஆனாலும் புதிதாக ஒரு கேள்வியை முன்வைத்துள்ளீர்கள் அதாவது, “இஸ்லாத்தில் ஒரு ஆண்மகனுக்கு, எத்தனை பெண்களோடு ஒரே வீட்டிலோ அல்லது வெவ்வேறு இடத்திலோ வாழ அனுமதியுண்டு?

  இஸ்லாத்தில் ஒரு பெண்ணுக்கு, எத்தனை ஆண்களோடு ஒரே வீட்டில் அல்லது வெவ்வேறு இடத்திலோ வாழ அனுமதியுண்டு?” இது எதற்காக, எப்படி அடிப்படை கட்டுரையுடன் சம்பந்தப்ப்டுகிறது என்று தெரியாத போதும், இந்த கேள்வி யாரை நோக்கி கேட்கப்பட்டுள்ளது என்று தெரியாமல் இருக்கின்ற வேளையிலும், “தெரியாதலால் ” கேட்கின்றேன் என்றிருப்பதால் இதோ என் நேரடி பதில்.

  ஒரு திருமணமாகா ஆண் தனக்கு திருமணம் முடிக்க தடை செய்யப்பட்ட பெண்கள், தன் தாய், தன் சகோதரிகளைத் தவிர வேறு எந்தப் பெண்களுடனும் எங்கும் வாழ அனுமதியில்லை. அதேபால் ஒரு திருமணமாக பெண் தனக்கு திருமணம் முடிக்க தடை செய்யப்பட்ட ஆண்கள், தன் தகப்பன்,தன் சகோதரர்களைத் தவிர வேறு ஆண்களுடன் எங்கும் வாழ அனுமதியில்லை.


 45. BC on February 9, 2012 9:52 pm

  //நீங்கள் இதுவரை உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒரு செக்கனில் தலாக்இ தலாக் தல்லக் என்று மூன்று முறை சொல்லி அதுவும் ஆண்கள் மாத்திரம் விவாகரத்து பெறுவதான முறையை இன்னொரு பக்கம் வைப்போம்//
  தலாக்கின் நிலை இது தான்.
  An influential Muslim cleric has called for a ban on uttering of talaq through the internet and mobile phones.
  -http://articles.timesofindia.indiatimes.com/2011-03-17/bhubaneswar/29138161_1_triple-talaq-word-talaq-muslims
  //ஷரியா என்றால் இறைவனால் அளிக்கபட்ட சட்ட ஒரு தனி மனிதனாலோ, ஒரு அரசனாலோ, ஒரு குழுவாலோ, ஒரு கட்சியாலோ, ஒரு அரசாங்கத்தாலோ ஆக்கப்பட்ட சட்டமல்ல.
  ஆகவே அந்த சட்டத்தை ஆக்காதோருக்கு அதில் மாற்றம் செய்யவோ
  இடை செருகல் செய்யவோ முடியாது என்பது மாத்திரமல்ல
  அப்படியான அதிகாரமும் யாரின் கையிலும் இல்லை.//
  இப்படிபட்ட சட்டம் உலகில் வாழும் மனிதர்களுக்கு எப்படி பொருத்தமுடையதாக இருக்கும்?
  நான் மத நம்பிக்கை காரணமாக எனது உடலை வருத்தி கோவிலில் காவடி எடுக்கலாம் அதற்காக மற்றவர்களையும் காவடி எடுக்கும்படி கேட்பது எந்த வகை நியாயம்!


 46. Mohamed SR. Nisthar on February 9, 2012 11:41 pm

  அன்புள்ள பீசீ,
  நல்ல வேளை “குர்-ஆன் பரிந்துரைக்கும் இன்டெர்னெட், மொபைள் மூலமான விவாகரத்து” என்று ஒரு போடு போடாமல் இருந்தீர்களே அந்தளவில் சந்தோசம்.

  இப்படி எல்லாம் இவர்கள் விவகாரத்து செய்கிறார்கள் என்றுதானே அந்த அறிடையவர் சொல்கிறார். அதன் அர்த்தம் என்ன குர்-ஆன் சொல்லும் படி நீங்கள் விவாகரத்து உரிமைமை பாவியுங்கள் என்கிறார் அல்லவா.


 47. ajeevan on February 10, 2012 2:22 pm

  //ஒரு திருமணமாகா ஆண் தனக்கு திருமணம் முடிக்க தடை செய்யப்பட்ட பெண்கள்இ தன் தாய்இ தன் சகோதரிகளைத் தவிர வேறு எந்தப் பெண்களுடனும் எங்கும் வாழ அனுமதியில்லை. அதேபால் ஒரு திருமணமாக பெண் தனக்கு திருமணம் முடிக்க தடை செய்யப்பட்ட ஆண்கள்இ தன் தகப்பன்இதன் சகோதரர்களைத் தவிர வேறு ஆண்களுடன் எங்கும் வாழ அனுமதியில்லை.//

  அன்பான மொகமட்

  ஒன்றுமா விளங்கவில்லை.
  இது ஆதி காலத்து ஆதாம் ஏவாள் யுகத்தை நெருக்குகிறதோ?

  ஆதாமும் ஏவாளும்தான் முதல் மனிதர்கள் ( பைபிள் மற்றும் இஸ்லாம் ) நம்பிக்கை அல்லது இறைவனின் வார்த்தைகளின் படி…… அப்படியானால் யார் ; யாரோடு இணைந்து இந்த உலக மக்கள் தொகை அதிகரித்திருக்கும்?
  உங்கள் எழுத்துகள் அதை சொல்கிறதா? (தாய் – தந்தை – அண்ணன் – தங்கை – அக்கா – தம்பி என இணைந்ததால் வந்த மக்கள் தொகைதானோ?)


 48. ramanan on February 11, 2012 12:00 pm

  பாலியல் தொழிலுக்காக கொழும்புக்கு அழைத்துவரப்படும் இளம் விதவைகள்

  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளம் விதவைப் பெண்களை அங்குள்ள இராணுவ புலனாய்வு பிரிவினர் பாலியல் தொழிலுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்வதாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

  யுத்தத்தால் கணவனை இழந்த இளம் பெண்களின் வீட்டுக்கு அடிக்கடி செல்வதுடன், அவர்களின் கணவர்மாரைப் பற்றி விசாரித்து வரும் புலனாய்வுப் பிரிவினர் பெண்களின் குடும்ப வறுமையினைப் போக்குவதற்கு கொழும்பில் வேலை பெற்றுத் தருவதாக அழைத்துச் சென்று பின்பு பாலியல் தொழிலுக்காக அவர்களைப் பயன்படுத்துவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

  பாதிக்கப்பட்ட பெண்கள் விடுமுறையில் தங்களது வீட்டுக்கு வந்து திரும்பவும் கொழும்பு செல்லும்போது இன்னும் பல இளம் பெண்களை தங்களுடன் அழைத்துச் செல்வதாகவும் கடந்த மாதம் இவ்வாறு 9 பெண்கள் இந்த தொழிலுக்காக கொழும்பு செல்வதற்காக வீதியில் நின்றபோது நிறுவன உறுப்பினர்கள் அவர்களை விசாரித்தபோது அங்கு வந்த இராணுவ புலனாய்வு பிரிவினர் அந்த உள்ளூர் நிறுவன உறுப்பினர்களை அச்சுறுத்தி விட்டு இந்த பெண்கள் அனைவரையும் தங்களுடைய வாகனத்தில் ஏற்றிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்தப் பிரதேசத்தில் தற்போது 55 பெண்கள் இந்த தொழிலில் ஈடுபடுவதாக இனம் காணப்பட்டுள்ளதாகவும் இங்குள்ள இளம் விதவைப் பெண்களுக்கு வேண்டியவ வாழ்வாதாரத் திட்டங்களை மேற்கொண்டு மாற்று நடவடிக்கை எடுக்காவிட்டால், தவறான தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் என்றும் அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது. -http://thesamnet.co.uk/?p=33715


 49. BC on February 11, 2012 1:01 pm

  //புலனாய்வுப் பிரிவினர் பெண்களின் குடும்ப வறுமையினைப் போக்குவதற்கு கொழும்பில் வேலை பெற்றுத் தருவதாக அழைத்துச் சென்று பின்பு பாலியல் தொழிலுக்காக அவர்களைப் பயன்படுத்துவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது//

  மேற்படி சம்பவம் கடுமையான தண்டனைக்கு உட்படுத்த வேண்டிய மோசமான கிரிமினல் குற்றம்.
  இதற்க்கும் பாலியல் தொழிளார்களுக்கு மேற்குலக நாடுகளில் உள்ளது போல் பாதுகாப்புக்கள் வழங்க வேண்டும் என்ற சமுக அக்கறை கொண்ட இந்த கட்டுரையுடன் எந்த சம்பந்தமும் இல்லை.


 50. பல்லி on February 11, 2012 2:55 pm

  //மேற்படி சம்பவம் கடுமையான தண்டனைக்கு உட்படுத்த வேண்டிய மோசமான கிரிமினல் குற்றம்.//
  இந்த தகவல் உன்மையாயின் அதை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு, சமபந்த பட்ட குற்றவாளிகள் மன்னிப்பின்றி தண்டிக்கபட வேண்டியவர்கள்.


 51. நந்தா on February 11, 2012 9:23 pm

  தேசம்நெட் அந்த “தொண்டர்” நிறுவனங்களின் பெயர்களை எப்பொழுது வெளியிடும்?

  தொண்டர் நிறுவனங்கள்தான் அதுவும் வெளினாட்டில் இருந்து பணம் பெறுபவர்கள் இந்த திக்கற்ற பெண்களை விபச்சாரத்தில் பயன்படுத்த தொடங்கி வெகு காலமாகிவிட்டது.


 52. BC on June 11, 2013 1:58 pm

  நிஸ்தார், நீங்கள் முஸ்லிம்விவாகரத்து தான் சிறப்பானது என்று இங்கே சொன்னீர்கள். நாங்கள் மறுத்தோம். ஆனால் தொடர்ந்தும் முஸ்லிம் பெண்கள் பாதிக்கபடுகிறார்கள் பிரச்சனை தொடர்கிறது.
  தலாக் கூறி முஸ்லிம் பெண்கள் விவாகரத்து செய்யப்படுவதற்கு சான்றிதழ் தரும் அதிகாரம் காஜிக்களுக்கு இல்லை என்று நீதிமன்றம் அறிவிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும் வழக்குரைஞருமான பதர் சயீத் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்துள்ளார்.
  பொதுவாக விவாகரத்து போன்ற பிரச்னைகளில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க போதுமான சட்டங்கள் உள்ளன. ஆனால் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கு அத்தகைய சட்டபூர்வமான உரிமைகள் இல்லை. மத ரீதியான பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் முஸ்லிம் மத பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட முடியாத நிலைமை உள்ளது. முஸ்லிம் மத தம்பதிகளுக்கு விவாகரத்து அளிக்கும் முன் சட்டப்படி கணவன் மனைவி ஆகிய இரண்டு தரப்பினரிடமும் பேசி அவர்களின் பிரச்னைக்கு சமரச தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக இரண்டு சமரச தீர்வர்கள் தனித்தனியாக இரு தரப்பிலும் பேசி தீர்வு காண முயல வேண்டும். அதில் எவ்வித சமரசத் தீர்வும் கிடைக்காவிட்டால் மட்டுமே திருமண முறிவுக்காகக் கூறப்படும் தலாக் செல்லும்.
  நடைமுறையில் இதுபோல நடப்பதில்லை. சில நேரங்களில் மனைவிக்குத் தெரியாமலேயேகூட கணவர் தலாக் கூறி காஜிக்களிடம் திருமண முறிவுக்கான சான்றிதழ் பெற்று விடுகின்றனர். இதனால் முஸ்லிம் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
  -http://www.bbc.co.uk/tamil/global/2013/06/130605_muslimdiforce.shtml


 53. Mohamed SR Nisthar on June 11, 2013 4:56 pm

  அன்புள்ள பீசி.

  இப்பொழுதும் அதைத்தான சொல்கின்றேன். இங்கு நான் கதைப்பது சட்டம் பற்றி. நீங்கள் கதைப்பது மக்களின், அவர்கள் சார்ந்த ஊர், சுற்றாடல் பிரதேச பழக்கவழக்கங்கள், சம்பிராதயங்கள் பற்றி (என்று நினைக்கின்றேன்)

  “முஸ்லிம் மத தம்பதிகளுக்கு விவாகரத்து அளிக்கும் முன் சட்டப்படி கணவன் மனைவி ஆகிய இரண்டு தரப்பினரிடமும் பேசி அவர்களின் பிரச்னைக்கு சமரச தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக இரண்டு சமரச தீர்வர்கள் தனித்தனியாக இரு தரப்பிலும் பேசி தீர்வு காண முயல வேண்டும். அதில் எவ்வித சமரசத் தீர்வும் கிடைக்காவிட்டால் மட்டுமே திருமண முறிவுக்காகக் கூறப்படும் தலாக் செல்லும்.” என்று அந்த சட்டவாளர் கூறுவதும் தெரியவில்லையா?


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு