தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு கொழும்பில்


நாட்டில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக 03 ஆண்டுகளின் பின்னர் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு பெப்ரவரி 18ஆம் திகதி சனிக்கிழமை பம்பலப்பிட்டியில் உள்ள வெஸ்ரேன் ஹோட்டேலில் நடைபெறவுள்ளதாக இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் இ.பாரதி தெரிவித்துள்ளார்.

இதன்போது ஒன்றியத்துக்கான தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகள் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும், சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உட்பட 05 ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் விழுது அற்றல் மேம்பாட்டு மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சாந்தி சச்சிதானந்தம் சமகால நிலைமைகள் குறித்து உரையாற்றவுள்ளார்.

அத்துடன், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாட்டுக்கு விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் உதவி வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு