கட்டாயத் திருமணம்: கிரிமினல் குற்றமாக்க பிரிட்டன் நடவடிக்கை
பிள்ளைகளை அவர்களது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்ய பெற்றோர்கள் வற்புறுத்துவதென்பதை இங்கிலாந்து வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய பகுதிகளில் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாக்குவதற்கான புதிய சட்டத்தை அரசாங்கம் கொண்டுவரவுள்ளது.
ஸ்கொட்லாந்து பகுதியில் இப்படியான ஒரு சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது.
இங்கிலாந்தில் மட்டுமே இளம் பெண்களும் சிலவேளை இளைஞர்களுமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் எட்டாயிரம் பேர் அவர்தம் குடும்பத்தினரால் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைக்கப்படுகிறார்கள் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
இந்த வழக்கத்தை ” அடிமைத்தனத்துக்கும் ஒரு பங்கு அதிகம்” என்று பிரிட்டிஷ் பிரதமர் கெமரன் வர்ணித்துள்ளார்.
“கலாச்சாரப் பின்னணி சார்ந்த வழக்கம் என்று கருதி இந்த நாட்டில் கட்டாயத் திருமணங்களுக்கு நீண்ட காலம் இடம்தந்துவிட்டோம். ஆனால் இனிமேலும் இது அனுமதிக்கப்படக்கூடாது.”
பாகிஸ்தானிய, வங்கதேச மற்றும் இந்தியப் பூர்வீகம் கொண்ட மக்களிடையேதான் இந்தக் கட்டாயத் திருமணம் அதிக அளவில் நடக்கிறது.
ஆனால் ஆப்பிரிக்க தென்னமெரிக்க மற்றும் கிழக்கு ஐரோப்பிய பூர்வீகம் கொண்டவர்களின் சமூகங்களிலும் கொஞ்சம் எண்ணிக்கையில் இப்படியான கட்டாயத் திருமணங்கள் நடப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் இளம் பெண்கள் பலர் திடீரென பள்ளிக்கூடம் வராமல் போவதும், அவர்களில் பலர் அவர்தம் குடும்பத்தினரால் சொந்த நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுவதென்பதும் அதிகரித்துவருவதாக பிராந்திய அரசாங்கங்கள் உணர்ந்ததை அடுத்து, கட்டாயத் திருமணங்களை தடுப்பதற்கென்ற விசேடப் பிரிவு ஒன்றை பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் ஏற்படுத்தியிருந்தது.
தற்போது அமலில் இருக்கின்ற சட்டத்தின் படி, தமது பிள்ளைக்கு கட்டாயத் திருமணம் செய்துவைக்கின்ற பெற்றோர்கள், பிள்ளையை பொய்சொல்லி அடைத்து வைத்தார்கள், அடித்தார்கள், துன்புறுத்தினார்கள் என்றால் மட்டும்தான் அந்தப் பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று இருக்கிறது.
வெறுமனே கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைப்பதற்காக மட்டும் இவர்கள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கையை முன்னெடுக்க முடியாது.
ஆனால் கட்டாயத் திருமணம் தொடர்பான பல சம்பவங்கள் செய்திகளில் பெரிதும் அடிபட்டுவந்த நிலையில், ஒருவரைத் திருமணத்துக்காக கட்டாயப் படுத்துவதென்பதையே ஒரு கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டுமென அரசாங்கம் விரும்புகிறது.
திருமணத்துக்காக கட்டாயப்படுத்துவதென்பதை குற்றச் செயலாக அறிவிப்பது பற்றி முந்தைய தொழிற்கட்சி அரசாங்கமும் பரிசீலித்திருந்தது என்றாலும், அத்திட்டத்தை பின்னர் அது கைவிட்டிருந்தது.
ஆனால் தற்போதைய கன்சர்வேடிவ் அரசாங்கம் இச்சட்டத்தை அமலுக்கு கொண்டுவரும் முடிவில் உள்ளனர். இந்த புதிய சட்டம் அமலுக்கு வருமானால் பிள்ளைகளை திருமணத்துக்கு கட்டாயப்படுத்த பெற்றோர் பயப்படுவார்கள் என அமைச்சர்கள் நம்புகின்றனர்.
ஆனால் தமது பெற்றோர்கள் கிரிமினல் குற்றவாளிகளாக சிறை செல்வதை பிள்ளைகள் விரும்ப மாட்டார்கள், ஆகவே திருமணத்துக்காக தான் நிர்பந்திக்கப்படுவதை வெளியில் சொல்ல அவர்கள் முன்வராமலேயே போவதற்கு இந்த புதிய சட்டம் வழிவகுத்துவிடலாம் என அச்சங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
அது போன்ற கவலைகளையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு அவ்வாறான பிரச்சினைகள் வராதபடி புதிய சட்டம் வடிவமைக்கப்படும் என அரசாங்கம் தெரிவிக்கிறது.
BBC TAMIL

Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed
மனிதர்களில் யாருமே கொம்பு முளைத்தவர்கள், உயர்வானவர்கள் இல்லை. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த யாருக்கும் குற்றம் செய்ய சலுகைகள் கொடுக்காமல் எல்லா மக்களுக்கும் பொதுவான சட்டத்தையே பின்பற்ற வேண்டும். ஆனால் மற்றவர்கள் நாசமாகி போகட்டுமே அதன் மூலம் நாம் பயன் அடையலாமே என்று செயல்பட கூடியது தான் தற்போதைய பிரிட்டிஷ் அரசு.
தீர்கமுடியாத பிரச்சனைகள் ( மனிதபிணக்குகள்)ஏராளமாகவே உலகில் ஏதுவுமே இல்லை. சகலதுமே தீர்க்க கூடியவை.
மனிதநேயம் கருதினால் மட்டுமே!.
இன்றைக்கும் நீ குற்றம் செய்தவன்(ள்) என்று இருக்கும் போது நீ காதையும் அறுக்கலாம் மூக்கையையும் அறுக்கலாம் அது எங்கள் நீதி-சட்டம் என்று சொல்லும் போது நாம் என்ன செய்ய முடியும்?.
ஆகவே மனிதவரலாறு எப்படி தோன்றிற்று. உலகம் பரவி எது எப்படி ஆதிக்கம் கொண்டது?. இப்படியான கேள்விகளை இடைவிடாது எழுப்புவதால் மட்டுமே! விடைகாண முடியும்.
முன்னூறு ஆண்டுகாலம் கிழக்காசிய நாடுகளில் மரணவேதனைப் படுத்தியவர்கள் உப்பும் தண்ணீருக்கும் வரிவிதித்தவர்கள். கட்டாயதிருமணம் பற்றி ஒரு சட்டம் இயற்றுகிறார்களாக இருந்தால்…?
கட்டாயதிருமணம் தடுக்கப்பட வேண்டியது ஒன்று மட்டுமல்ல. இதற்கெதிராகவும் வெகுவாகவும் போராட வேண்டியுள்ளது.
இந்த காலணியாதிக்க காரர்கள் ஈராக்கிலும் லிபியாவுலும் சிரியாவிலும் முடித்த-நடத்திக் கொண்டிருக்கும் போது சமூகத்தின் வளர்ச்சி கோட்பாடுகளை தவறு என்று சொல்லும் போது நாம் அதை எப்படி அமைதியாக ஏற்றுக் கொள்வது.
யுகம் தாழ்த்தியாவது பிரித்தானியாவில் ஐரோப்பாவில் சர்வஉலகம் தழுவிய சட்டம் வந்துதான் தீரப்போகிறது. அப்போது இவர்கள் இயற்றும் சட்டங்களிலும் ஓட்டையிருக்காது கேள்வியோ சந்தேகமோ இருக்காது.
அதுவரை சிலகேள்விகளை தொடுக்கத் தான் வேண்டியிருக்கிறது.
இந்தச் சட்டம் மிக மிக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
இதில் சிரியா, ஈராக், ஏகாதிபத்தியம் மற்றும் புலிக்காய்ச்சல் கதைகளை விட்டு கிடைக்கும் ஒழுங்கையில் கிடாய் வெட்டுவொரும் உள்ளனர்.
//அதுவரை சிலகேள்விகளை தொடுக்கத் தான் வேண்டியிருக்கிறது.//
கேள்வியின் நாயகர்களாக மட்டும் இருந்து விட்டுப் போய்விடுவோம்?
//ஆகவே மனிதவரலாறு எப்படி தோன்றிற்று. உலகம் பரவி எது எப்படி ஆதிக்கம் கொண்டது?. இப்படியான கேள்விகளை இடைவிடாது எழுப்புவதால் மட்டுமே! விடைகாண முடியும்.//
கேள்விகளை இடை விடாது எழுப்புவதால் மட்டும் விடை காண முடியாது. விடைகளக் காண காத்திரமான முயற்சிகளையும் செய்வதால் மூலமே விடை காண முடியும்.
மனித வரலாறு எப்படித் தோன்றியது என்பதற்கு விடை காணாமல் இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறோம் என்பதே விடை காண முயற்சி எடுக்கப்படவில்லை என்பதைச் சுட்டி நிற்கிறது. இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடித்துத் தான் என்ன பண்ணப்போகிறோம்??
//..//ஆகவே மனிதவரலாறு எப்படி தோன்றிற்று. உலகம் பரவி எது எப்படி ஆதிக்கம் கொண்டது?. …//
கைப்புண்னுக்கு கண்னாடி கேட்டால் ஊர் உலகமெல்லாம் சுற்றிவருதல் வழமையான சோசலிச மாற்றுக்கருத்து கோஷ்டியின் பம்மாத்து வேலை என்பது நிரூபணமாகி 40 வருடங்களுக்கு மேலாகிறது. ஊரில் தோட்டத் தொழிலாளருக்கு சம்பள உயர்வு கேட்டால் யூ.என்.பியின் முதலாளித்துவ அரசியலை அலசி ஆராய்வது, ஈழத் தமிழரின் உரிமை கேட்டால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வலிந்து இழுத்து கதைகள் சொல்லுவது….லிஸ்ற் மிக நீளம் மாஓ..
//இந்தச் சட்டம் மிக மிக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.//
கட்டாய திருமணம் என்பதுக்கான வரையறை என்ன?? என்பதை முதலில் சொல்லலாமே; பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணம் கட்டாய திருமணமா? அல்லது பிள்ளைகளுக்கு விருப்பம் இல்லாமல் செய்யும் திருமணம் கட்டாய திருமணமா?? (இரண்டுமே ஒன்றுதான் எனவும் சொல்லலாம்)
இந்த சட்டம் வரவேற்க்கதக்கதுதான், அதில் எந்தவிதமான கருத்தும் எனக்கு இல்லை; ஆனால் இந்த சட்டத்தை தவறாக இளய சமுதாயம் கையாளுமே என்னும் அச்சமும் இருக்கு, அதையும் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது; பிள்ளைகளுக்கு கொடுக்கும் சுகந்திரம் அவர்கள் வாழ்வை மேம்படுத்த உதவ வேண்டும், எத்தனையோ காதல் கலியாணங்கள் சீரளிவில் முடிவைதையும் நாம் அறிவோம்; அதனால் பெற்றவர்களால் முடிவு செய்யபடும் திருமணமே சரியானது என சொல்ல முடியாது;
திரும்பவும் ஆரம்பத்துக்கே வருகிறேன் கட்டாய திருமணம் என்பது எப்படியானது?? இந்த சட்டம் வெளிநாட்டு இளய சமூகத்துக்கு இனிமை தரலாம்; ஆனால் அந்த சமூகம் தவறி விடவும் மிக மிக உதவும் என்பதில் சந்தேகமே இல்லை, பிரிட்டிஸ் மக்கள் மத்தியில் கட்டாய திருமணங்கள் நடக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை; ஆனால் அங்கு விவாக ரத்துக்கள் மிக மிக இலகுவாக நடப்பதை அறியலாம்; சாள்ஸ் டயானா திருமணம் கட்டாய திருமணமா?? அல்லது காதல் திருமணமா?? டயானாவுக்கு முன் டயானாவுக்கு பின் சாள்சின் வாழ்க்கை(குடும்ப) எப்படியானது?? இதில் எது கட்டாயமாக பார்க்க படலாம்? சட்டத்துக்கு தேவை சாட்ச்சியங்கள் மட்டுமே தவிர மனிதநேயமோ அல்லது தனிமனிதர் வாழ்வோ கிடையாது?? ஆக சட்டம் சரியானதுதான் இதை நம்மவர் எப்படி கையாள போகிறார்கள், இந்த சட்டத்தால் நம்ம சமூக சீரளிவு அதிகரிக்குமோ என்பதும் என் கேள்வியாகவே உள்ளது??
//..கட்டாய திருமணம் என்பதுக்கான வரையறை என்ன?? என்பதை முதலில் சொல்லலாமே; …//
பல்லி கட்டாயத் திருமனம் என்பது கட்டாயப்படுத்திச் செய்துவைக்கும் திருமணம். இதில் உங்களுக்கு என்ன விளக்கம் தேவைப்படுகிறது எனத்தெரியவில்லை!
அது பெற்றோர் செய்தாலென்ன மற்றோர் செய்தாலென்ன ஒன்றுதான். கட்டாயத்திருமணம் எனப்பேசினால் காதல் திருமணம் சீரளிகிறது என்கிறீர்கள்.
கட்டாயத் திருமணம் எப்படிப்பட்டது என்பதனை சட்டம் இயற்றும் நாட்டு மக்கள் தீர்மானிப்பர், விவாதிப்பர், திருத்தி அமைப்பர், நீக்குவர்…
அந்நாட்டில் இருப்போர் அச்சட்டங்களுக்கு ஒழுகி நடப்பர் அல்லது எதிர்த்துப் போராடுவர்.
சட்டம் ‘வெளிநாட்டு இளைய சமூகத்துக்கு இனிமை’ தந்தால் உங்களுக்கென்ன? உங்களுக்கு என்ன திடீரென ‘வெளிநாட்டு இளைய சமுதாய’ அக்கறை? ஓஹோ…தடுக்கி விழுந்த நாடுகளில் கரிசனையோ?
விவாகரத்து இலகுவாக நடப்பதற்கு காரணம் ஒன்றாக வாழ விருப்பமில்லை என்றால் உடனே பிரிந்து செல்ல அனுமதி உண்டு. அது நியாயமானதும் கூட!
சார்ள்சின் திருமணம் சிக்கலானால் அது சார்ள்சுக்கும் அவரது மனைவிக்கும் உள்ள பிரச்சினை. அதனை வைத்து உங்கள் குடும்பம் ஏன் முடிவு எடுக்க வேண்டும்?
சட்டத்துக்குத் தேவை சாட்சியங்கள் மனித நேயமில்லை என்கிறீர்கள்!! அடேங்கப்பா? அப்பொ இந்தச் சட்டங்களே ஈழத்தமிழர்களுக்காக் போராடியவர்களை உள்ளே போட்டதா? (10 வருடம் என்றவர் நீங்கள்) அப்போ புல்லரித்தீர்களே? இப்போ சாட்சி மனித நேயம் என்கிறீர்களே? சுப்பர். எவ்வாறாயினும் கட்டாயத் திருமணம் என்பது தவறு. அதனை அனிமதிக்கக்கூடாது!
மேலும் சட்டம் சரியானதுதான் இதனை நம்மவர் எப்படிக் கையாளப்போகிறார்கள், சமூகசீரளிவு எனகிறீர்கள். இப்போதே சொல்கிறேனே உங்களைப் போன்றவர்கள் இதனை கொசிப்படிக்க பாவிப்பார்கள். சிலர் அதனைச் சமூகச்சீரளிவு என ‘கலாச்சாரக் காவலர்களாக’ மாறி ஐயையோ…தமிழனின் மானம் போகுதே.. இந்த புலிக்கூட்டம் செய்யும் வேலையைப் பாருங்கள் என வாழ்க்கையை ஓட்டுவார்கள்!
சனல்4 வீடியோவை உலகுக்குக் காட்டியதை ‘இனமானம் போகுதே’ என சமூக அக்கரையுடனும் பகுத்தறிவுக்கருத்துடனும் விவாதம் செய்தவர் தாங்கள். பிணங்களைப் புணர்ந்தவர்களை தண்டிக்கக் கோரியதை ‘சின்னப்புள்லத்தனம்’ என எள்ளி நகையாடியவர் நீங்கள். அந்தக் கோரக்காட்சிகளை பொத்திவைத்து ‘இனமானம்’ காத்த கனவான் இளைய சமுதாயம் சமூகச்சீரளிவு என கலாச்சாரக்காவலன் லெவலுக்கு கதை விடுகிறார் இப்போது…எல்லோரும் ஓடிவந்து கேளுங்கள்!
சோசஸிசத்திற்கான விஞ்யாண கருத்துக்கள் தோன்றி இன்றைவரை 150 வருடங்களுக்கு மேல் ஆகிறது. தான் தோன்றி தனமாக இந்தக் கருத்துகள் இருந்திருந்தால் புலிக்கொடி அழிவுற்றமாதிரி என்றோ அழிவுற்றிருக்கும்.
சமநீதிகோரி போராட்டம் முன்பை விட இன்று மென்மேலும் உக்கிரமடைந்து கொண்டேயிருக்கிறது. இது மேலும் விரிவடையுமேயொழிய இதன் வேகம் குறையப் போவதில்லை.
கட்டாயத் திருமணத்தில் ஈடுபடுபவர்கள் ஆசிய ஆபிரிக்கர்களே தவிர வேறுயாருமே அல்ல. இதைக் கிறிமினல் குற்றமாகக்க முயல்கிறார்களாக இருந்தால்.. நாளை இது வெளிநாட்டவரை நாட்டைவிட்டு வெளியேற்ற ஒரு காரணமாகவும் பயன்படுத்துவார்கள்.
எப்பவும் இவர்கள் இயற்றும் சட்டங்கள் சந்தேகங்களை தோற்றி விக்கக்கூடியது ஒன்று. சந்தேகமில்லாமல் சந்தேகப்பட்டே ஆக வேண்டும்.
இப்படியெல்லாம் உங்கள் சிந்திக்க முடியாது கருத்துச் சொல்ல முடியாது. தமிழன் ஆண்டால் தமிழனின் பூமியில் ஆறும் தேனும் பாலக ஓடும் என கதைவிட்டு கொண்டேயிருக்கிறீர்கள்.
தமிழனை தமிழன் அடக்கி வைத்திருக்கிறான். அவனை எப்படி விடுவிப்பது என்பதை பற்றி உங்களிடம் கேள்வி இல்லை. …..
வெலிக்கடைசிறை கொடுமைகளை கதைக்கும் நீங்கள் 4000-5000 சுவடியில்லாமல் ஆக்கப்பட்ட துணுக்காய் புலிமுகாமைப் பற்றி கதைத்தீருப்பீர்கள். வடக்கில் இருந்த முஸ்லீமக்கள் தமிழர்கள் இல்லை என்பதை உங்களைபோல் சிந்தனை உள்ளவர்கள் தான் சுலபமாக மறந்து விடகூடும். சோசலிசக் கருத்துள்ளவர்களால் முடியாத காரியம்.
யாரை பலிகொடுத்தாவது எமதுவயிற்றை கழுவிவிட வேண்டும். கொத்துரொட்டி கொத்தியாவது வாழ்வதற்கு ஐரோப்பாவில் தமிழனின் உரிமைக்காக போராடவேண்டும் என எண்ணம் உள்ளவர்களுக்கு எந்தக் கருத்தும் புறக்குடத்து தண்ணீர். ஒரு குடத்துப்பாலுக்கு ஒரு துளி……!.
எனது கருத்து இந்த கட்டுரைக்கான பின்னோட்டம்: சாந்தனின் கடுப்பு பல்லியின் கருத்துக்கான முன்னோட்டம்;
அமெரிக்காவில் இருக்கும் ஒருவர் இந்த கட்டுரைக்கு பினோட்டம்(கருத்து) சொல்லலாம்; ஆனால் பல்லி அந்த நாட்டில் இருக்காத படியால் பதில் சொல்லகூடாதாம்;
:://விவாகரத்து இலகுவாக நடப்பதற்கு காரணம் ஒன்றாக வாழ விருப்பமில்லை என்றால் உடனே பிரிந்து செல்ல அனுமதி உண்டு. அது நியாயமானதும் கூட!//
பிள்ளைகள் இருந்தால் அவர்கள் யாருடன் வாழ வேண்டும் என்பதையும் சட்டமே முடிவு செய்யும் அல்லவா?? ஆக நம்ம குழந்தை யாருடன் வாழவேண்டும் என்பதை கூட நம்மால் தீர்மானிக்க முடியாது, இது சாந்தனுக்கு மகிழ்ச்சி;
//சார்ள்சின் திருமணம் சிக்கலானால் அது சார்ள்சுக்கும் அவரது மனைவிக்கும் உள்ள பிரச்சினை. அதனை வைத்து உங்கள் குடும்பம் ஏன் முடிவு எடுக்க வேண்டும்?// ஏதோ சாந்தனின் குடும்ப விடயத்தில் தலையிட்ட மாதிரி பேசுறியள், உங்களுக்கு என்ன உறவோ அதே உறவுதான் எனக்கும் நினைவுபடுத்தி அப்புறம் சொல்லுங்கள்,
//சமூகச்சீரளிவு என கலாச்சாரக்காவலன் லெவலுக்கு கதை விடுகிறார் இப்போது…எல்லோரும் ஓடிவந்து கேளுங்கள்!// உங்க அனுசரனைக்கு நன்றி;;
//சட்டத்துக்குத் தேவை சாட்சியங்கள் மனித நேயமில்லை என்கிறீர்கள்!! அடேங்கப்பா? அப்பொ இந்தச் சட்டங்களே ஈழத்தமிழர்களுக்காக் போராடியவர்களை உள்ளே போட்டதா? (10 வருடம் என்றவர் நீங்கள்) அப்போ புல்லரித்தீர்களே? இப்போ சாட்சி மனித நேயம் என்கிறீர்களே? சுப்பர். எவ்வாறாயினும் கட்டாயத் திருமணம் என்பது தவறு. அதனை அனிமதிக்கக்கூடாது!//
சாந்தன் நான் கருத்து எழுதியது மக்கள் பற்றி அதாவது சராசரி மனிதர்கள் பற்றி, நீங்களோ சண்டியரையும் சதிராட்டகாரரையும் இங்கு கொண்டு வந்து என்னை வம்புக்கு இழுப்பது தெரிகிறது, இதுக்கு பல்லி பதில் சொன்னால் குத்துது குடையுது என்பியள்;
///..இதுக்கு பல்லி பதில் சொன்னால் குத்துது குடையுது என்பியள்;…// ஆதாரத்துடன் தர்க்கரீதியாக பதில் சொன்னால் நான் ஏன் கொசிப் எனச் சொல்லப்போகிறேன்!
//…அமெரிக்காவில் இருக்கும் ஒருவர் இந்த கட்டுரைக்கு பினோட்டம்(கருத்து) சொல்லலாம்; ஆனால் பல்லி அந்த நாட்டில் இருக்காத படியால் பதில் சொல்லகூடாதாம்;…// தாராளமாகச் சொல்லலாம். சொல்லிவிட்டுப் போங்கள். ஆனால் பல ‘கேள்விகள்’ கேட்டிருக்கிறீர்கள் பாருங்கள்! அதைவிட கலாச்சாரக்காவலன் லெவல் கதை சொல்லி இருக்கிறீர்கள் பாருங்கள். சிக்கல் அங்கே தான்!
//..பிள்ளைகள் இருந்தால் அவர்கள் யாருடன் வாழ வேண்டும் என்பதையும் சட்டமே முடிவு செய்யும் அல்லவா?? ஆக நம்ம குழந்தை யாருடன் வாழவேண்டும் என்பதை கூட நம்மால் தீர்மானிக்க முடியாது, இது சாந்தனுக்கு மகிழ்ச்சி;….//
ஆம்…சட்டம் என்றால் ஸ்ரீலங்காச் சட்டம் போல் பணம் உள்ளவன், பெரும்பான்மை உள்ளவன் எழுதிய சட்டங்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள் போல இருக்கிறது! அனேக மேலைத்தேய நாடுகளில் சட்டங்களுக்குள் மனித நேயம் அடங்கி இருக்கிறது. ஸ்ரீலங்காவுக்கு வேலைக்காரர்களாக இழுத்துவரப்பட்ட மக்கள் அந்நிலத்தை வளமாக்கி 300 ஆண்டுகள் வியர்வைசிந்தி உழைத்தும் அவர்களின் குடியுரிமை பறிப்பு. இன்றும் ஸ்ரீலங்காவில் பிறந்திருந்தால் தகப்பனார் பிறந்த இடம் எது தகப்பனார் ஸ்ரீலங்காவில் பிறந்திருந்தால் பாட்டனார் பிறந்த இடம் எது என்கின்ற கேள்வி உண்டு! ஆனால் ‘தடுக்கி’ விழுந்த இடத்திலேயே பிரஜா உரிமை உண்டு பாருங்கள்!!
குழந்தை யாருடன் வாழவேண்டும் எனத்தீர்மானிக்கும் உரிமை உங்களுக்கு இல்லை எனச் சட்டம் எங்கே சொல்கிறது. உங்களால் தீர்மானிக்க முடியாமல் கோட்டுக்குப் போனபின்னர்தானே சட்டம் வருகிறது? இல்லையா? கோட்டுக்கும் போக வேண்டும் ஆனால் சட்டமும் வரக்கூடாது என்கிறீர்களா? நீங்களே தீர்மானியுங்கள் யார் ஏன் கேட்கப்போகிறார்கள்?
//…ஏதோ சாந்தனின் குடும்ப விடயத்தில் தலையிட்ட மாதிரி பேசுறியள், உங்களுக்கு என்ன உறவோ அதே உறவுதான் எனக்கும் நினைவுபடுத்தி அப்புறம் சொல்லுங்கள்,….// நிங்கள் போய் சார்ள்சை துணைக்கு அழைப்பீர்கள். அதைக்கேட்டால் சிக்கலாக இருக்கிரதா? பிரச்சினை அதுவல்ல சார்ள்சின் குடும்பத்தில் சிக்கல் வந்துள்ளது என்பதை வைத்து ஏன் மற்றவனின் உரிமையில் கைவைக்கிறீர்கள்? கேள்வி புரியுதா?
//…சாந்தன் நான் கருத்து எழுதியது மக்கள் பற்றி அதாவது சராசரி மனிதர்கள் பற்றி, நீங்களோ சண்டியரையும் சதிராட்டகாரரையும் இங்கு கொண்டு வந்து என்னை வம்புக்கு இழுப்பது தெரிகிறது,…//
சட்டம் என்பது சட்டம். சண்டியரோ சதிராட்டக்காரோ நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும்.
அப்போ ”சராசரி” மனிதருக்கு சட்டம் மனிதாபிமானத்துடன் எழுதப்படவில்லையா? அப்போ அதற்கு எதிராகப் போராடுவீர்களா? …….
‘சராசரி’ மனிதன் என்பவன் அவனவன் வாழும் சூழ்நிலையைப் பொறுத்தது. பாலஸ்தீன போராளி பாலஸ்தீன மக்களிடையே ஒரு ’சராசரி’ மனிதன், இஸ்ரேலுக்கு அவன் சண்டியன், சதிராடக்காரன்!! நான் சொல்ல வருவது புரியும் என நினைக்கிறேன் பல்லி அவர்களே.
//…..சோசஸிசத்திற்கான விஞ்யாண கருத்துக்கள் தோன்றி இன்றைவரை 150 வருடங்களுக்கு மேல் ஆகிறது. தான் தோன்றி தனமாக இந்தக் கருத்துகள் இருந்திருந்தால் புலிக்கொடி அழிவுற்றமாதிரி என்றோ அழிவுற்றிருக்கும்…..//mao
அப்படியா?
//சோசஸிசத்திற்கான விஞ்யாண கருத்துக்கள் தோன்றி இன்றைவரை 150 வருடங்களுக்கு மேல் ஆகிறது. //
என்ன இசத்துக்கான என்ன கருத்துக்க்கள்? இந்த இசம் இன்னமும் கொடி கட்டிப் பறக்கிறதா? சிவப்பு சிவப்பாக கொடி மட்டும் தான் ஆடுகிறது! அதனுள் பொருள் இருக்கிறதா?
//தான் தோன்றி தனமாக இந்தக் கருத்துகள் இருந்திருந்தால் புலிக்கொடி அழிவுற்றமாதிரி என்றோ அழிவுற்றிருக்கும்.//
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்?
:://தாராளமாகச் சொல்லலாம். சொல்லிவிட்டுப் போங்கள். // உங்களை விட்டு எங்கே போவது??
//பல ‘கேள்விகள்’ கேட்டிருக்கிறீர்கள் பாருங்கள்! // தெரியாத படியால் பல சட்ட வல்லுனர்கள் இங்கு வருவதால் கேட்டேன்;
//அதைவிட கலாச்சாரக்காவலன் லெவல் கதை சொல்லி இருக்கிறீர்கள் பாருங்கள். சிக்கல் அங்கே தான்!//
கலாசாரம் வேறு சமூக அக்கறை வேறு; இப்போ சொல்லுங்கள் நான் எழுதியது கலாசார சீரளிவா?? அல்லது சமூக சீர்கேடா..,,??
:://ஆம்…சட்டம் என்றால் ஸ்ரீலங்காச் சட்டம் போல் பணம் உள்ளவன், பெரும்பான்மை உள்ளவன் எழுதிய சட்டங்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள் போல இருக்கிறது// உங்களை போல் எனக்கு அந்த துறையில் அனுபவம் இல்லை; ஆனால் இலங்கையிலும் சரி இங்கும் சரி சட்டத்தை நான் மதிக்கிறேன், ஆனால் எம் சமூகம் புலத்தில் சட்ட சிக்கலில் மாட்டி தவிப்பதையும் நான் அறிவேன், (இதில் குடும்ப சீரளிவே அதிகம்)
//அனேக மேலைத்தேய நாடுகளில் சட்டங்களுக்குள் மனித நேயம் அடங்கி இருக்கிறது.//
பிரிட்டனில் இருந்து சமீபகாலத்துக்கு முன்பு பலரை இலங்கைக்கு வழி அனுப்பி வைத்தத்து அந்த நாட்டு சட்டம்; அது ஒரு மனிதநேயம் இல்லாத செயல் என உங்க வக்கில் ஒருவர் தொலைகாட்ச்சியில் சொன்னார்;
//‘தடுக்கி’ விழுந்த இடத்திலேயே பிரஜா உரிமை உண்டு பாருங்கள்!!// கொடுத்து விட்டும் நேரில் பார்க்கும் போது நீ எந்த நாடு என கேக்கிறார்கள்,,??
//இன்றும் ஸ்ரீலங்காவில் பிறந்திருந்தால் தகப்பனார் பிறந்த இடம் எது தகப்பனார் ஸ்ரீலங்காவில் பிறந்திருந்தால் பாட்டனார் பிறந்த இடம் எது என்கின்ற கேள்வி உண்டு!// இது சரியோ அல்லது தவறோ எனக்கு தெரியாது; ஆனால் நான் இருக்கும் நாட்டிலும் இந்த நடைமுறை உண்டு:
//குழந்தை யாருடன் வாழவேண்டும் எனத்தீர்மானிக்கும் உரிமை உங்களுக்கு இல்லை எனச் சட்டம் எங்கே சொல்கிறது//
எம்மை பெற்றோர் கண்டித்துதான் வளத்தார்கள்; இன்னும் சொல்லபோனால் அவர்கள் இல்லாத போதும் ஒரு பயம் கலந்த மரியாதை இருக்கிறது; ஆனால் அது இங்கு சாத்தியம் இல்லை; இதன் வெளிப்பாடே இன்று புலத்தில் 100 கணக்கான குறூப்புகள்; பிள்ளைகள் விடும் தவறை கண்டிக்க சட்டம் இடம்தராது; அதையும் மீறி தண்டித்த பலர் சிறையிலும் சீர் சிருத்த சிறையிலும் வாடுவது சாந்தன் அறியாதது ஏனோ??
//. உங்களால் தீர்மானிக்க முடியாமல் கோட்டுக்குப் போனபின்னர்தானே சட்டம் வருகிறது? இல்லையா?// ஜயோ காவல் கதவை தட்டும் ;அதன் பின்பு சட்டம் தன் கடமையை செய்யும்;
:://? கோட்டுக்கும் போக வேண்டும் ஆனால் சட்டமும் வரக்கூடாது என்கிறீர்களா? நீங்களே தீர்மானியுங்கள் யார் ஏன் கேட்கப் போகிறார்கள்?//
அடேங்கப்பா என்ன ஒரு அறிவுரை ,,நன்றி சாந்தன்;
//நிங்கள் போய் சார்ள்சை துணைக்கு அழைப்பீர்கள். அதைக்கேட்டால் சிக்கலாக இருக்கிரதா?// இல்லை கிளிண்டனை உதவுக்கு அழைத்திருப்பேன் கட்டுரை அமெரிக்காவை சார்ந்து வந்திருந்தால்;
//பிரச்சினை அதுவல்ல சார்ள்சின் குடும்பத்தில் சிக்கல் வந்துள்ளது என்பதை வைத்து ஏன் மற்றவனின் உரிமையில் கைவைக்கிறீர்கள்? கேள்வி புரியுதா? //
பல நூறு சட்டவல்லுனர்கள் (வக்கில்தான்) அறிவுரை இருக்கும் அரச குடும்பத்துக்கே சட்ட சிக்கல் வரும் போது எம்மை போன்ற ஆண்டி குடும்பங்கள் எப்படி சமாளிக்கலாம்; இந்த சட்டம் குடும்பம் சார்ந்ம் சட்டம் கூடியும் வந்தத்தால் என் பார்வை அங்கு போய் விட்டது;
:://கேள்வி புரியுதா? // புரிகிறது புரிகிறது இது கேலியென;
//அப்போ ”சராசரி” மனிதருக்கு சட்டம் மனிதாபிமானத்துடன் எழுதப்படவில்லையா? //
எனக்கு தெரியாது நீங்களே உங்க நண்பர்;; வக்கிலிடம் கேட்டு சொல்லுங்க;
//அப்போ அதற்கு எதிராகப் போராடுவீர்களா? …….// போராட்டம் கெட்டவார்த்தை பேசாதீர்கள்; அதுக்கு தகுந்தா போல் வாழ பளகி கொள்வேன்;(30 வருட அனுபவம் இருக்கே)
//பாலஸ்தீன போராளி பாலஸ்தீன மக்களிடையே ஒரு ’சராசரி’ மனிதன், இஸ்ரேலுக்கு அவன் சண்டியன், சதிராடக்காரன்!! நான் சொல்ல வருவது புரியும் என நினைக்கிறேன் பல்லி அவர்களே// இவர்கள் யார் உங்க உறவுகளா?? சாந்தன் ஏன் இந்த தடுமாற்றம்;??
சாந்தன் திரும்பவும் கேக்கிறேன் இந்த கட்டாய திருமணம் என்பது எப்படி முடிவு செய்யபடும்;
பெண்ணுக்கு பிடிக்காததா,,
ஆனுக்கு பிடிக்காததா??
பெற்றோருக்கு பிடிக்காதத்தா??
அல்லது வயது பிரச்சனையா??
அல்லது வயது (இருவருக்கும்) இடைவெளியா??
அல்லது பக்கத்து வீட்டுகாரருக்கு பிடிக்காவிடிலா??
காதலை பிரித்து செய்யும் திருமணமா?
விசாவுக்காக செய்யபடும் அதுவா??
இப்படி கலர் கலராய் பல திருமணங்கள் இருக்க இந்த கட்டாய திருமணத்தை (தவறை) எப்படி அடையாளம் காண்பது;; சாந்தன் இதுக்காக எகிப்த், துருக்கி; லிபியா என பயணம் செய்ய வேண்டாம் நம்ம வீடு, நம்ம உறவு; நம்ம அயல், நம்முடைய சமூகத்துக்குள் எட்டி பாருங்கள் உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கலாம்;
//பாலஸ்தீன போராளி பாலஸ்தீன மக்களிடையே ஒரு ’சராசரி’ மனிதன் இஸ்ரேலுக்கு அவன் சண்டியன் சதிராடக்காரன்//
புலிக்கு வெள்ளையடிக்கும் முயற்ச்சி.
மத்திய கிழக்கில் வேலை பார்த்த தமிழர்களுடன் சண்டிதனம் அல்லாத சதிகாரன் இல்லாத சாதாரணமான பாலஸ்தீனகாரன் (சாதாரண தமிழன் மாதிரி) வேலை செய்திருக்கிறான்.
இது கிடாய்வெட்டி மகிழ்வதோ மொட்டந்தலைக்கும் முடிச்சு போடுவதோ அல்ல.
றோகன் சாந்தன் பழிகளை அப்பாவி மக்கள் மீது திணிக்காதீர்கள். அரசு மீது திணித்தால் அதை நாங்கள் கூர்மையாக கேட்டுக் கொள்வோம். ஆனால் நீங்களோ..? சயினட்டுடன் வந்து வெள்ளைக் கொடியுடன் போனவரின் அறிவுறுத்தலில் தான் தொடர்ந்தும் பயணிப்போம் என்று நிற்கும் போது தாங்கள் யாருடைய வார்த்தைகளைத் தான் செவிமடுப்பீர்கள்?.
//இது கிடாய்வெட்டி மகிழ்வதோ மொட்டந்தலைக்கும் முடிச்சு போடுவதோ அல்ல.
றோகன் சாந்தன் பழிகளை அப்பாவி மக்கள் மீது திணிக்காதீர்கள். அரசு மீது திணித்தால் அதை நாங்கள் கூர்மையாக கேட்டுக் கொள்வோம். ஆனால் நீங்களோ..? சயினட்டுடன் வந்து வெள்ளைக் கொடியுடன் போனவரின் அறிவுறுத்தலில் தான் தொடர்ந்தும் பயணிப்போம் என்று நிற்கும் போது தாங்கள் யாருடைய வார்த்தைகளைத் தான் செவிமடுப்பீர்கள்?.//
உலக வரலாறு எப்படித் தோன்றியது போன்ற முக்கிய கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதே மாஓ போன்றவர்களின் சேவையாக இருக்க வேண்டும் – அரசு மீது வீண்பழி திணித்தால் கூர்மையாகக் கேட்டுக் கொள்வோம் என்று தன்னிலை விளக்கம் தருவது அட்டகாசமாகத் தான் இருக்கிறது. ‘தர்க்கித்தலில் வெல்ல முடியாவிட்டால்’ றோகன் சாந்தன் போன்றவர்களுக்குப் புலி முத்திரை குத்துவது மூலம் வென்றுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் பரிதாபம் தருகிறார்கள். ‘நாங்கள் கூர்மையாக கேட்டுக் கொள்வோம்’ என்பதில் வரும் ‘நாங்களில்’ மாஓ தவிர வேறு யார் இங்கே அடங்குகிறார்கள்? ஓ – உலகத் தொழிலாளர்கள் எல்லோருமாக இருக்குமோ?
///….புலிக்கு வெள்ளையடிக்கும் முயற்ச்சி…..//
சட்டம் பற்றியும் கட்டாயத் திருமணம் பற்றியும் நடக்கும் விவாததில் காலனியாதிக்கம் இராக் என யாருக்கு வெள்ளையடிக்க முயற்சி நடந்தது. மேலும் ரெனிஸ் போட்டியில் வென்றவரைப்பற்ரி எழுதினால் ஏன் கொடிக்கொஷ்டி வரவேண்டும்? யாரை கரிபூசும் முயற்சி??
//…..மத்திய கிழக்கில் வேலை பார்த்த தமிழர்களுடன் சண்டிதனம் அல்லாத சதிகாரன் இல்லாத சாதாரணமான பாலஸ்தீனகாரன் (சாதாரண தமிழன் மாதிரி) வேலை செய்திருக்கிறான்……//
இருக்கலாம் அதுக்கென்ன இப்போ? தோழர் பி.எல்.ஓ வுடன் பயிற்சி எடுத்தவன் நான் என்று சொல்வதைச் சொல்கிறீர்களா?
கடந்த காலங்களில் தமிழ்பிள்ளைகள் எல்லாம் புலிகளுக்கு நேர்ந்துவிட்ட கிடாய்களாக தானே இருந்தார்கள். இந்த கிடாய் வெட்டுதலை வெளிநாட்டில் இருந்து பார்த்து இரசித்தவர்கள் இவர்கள்.
//..தெரியாத படியால் பல சட்ட வல்லுனர்கள் இங்கு வருவதால் கேட்டேன்;..// அப்போ ஏன் எதிர்க்கேள்வி?
//..கலாசாரம் வேறு சமூக அக்கறை வேறு; இப்போ சொல்லுங்கள் நான் எழுதியது கலாசார சீரளிவா?? அல்லது சமூக சீர்கேடா..,,??…//
கட்டாயத்திருமணம் சமூகச் சீர்கேடுமல்ல, கலாச்சார சீரளிவும் அல்ல. மாறாக சனல்4 வீடியோவில் வந்த பிணத்தைப் புணர்ந்த காட்சிகளை ‘பொத்திவைத்து’ துணைபோவது வக்கிர புத்திகொண்ட கள்ளத்தனம். அதனை ’இனமானம் காத்தல்’ என கதை விடுதல் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
//..உங்களை போல் எனக்கு அந்த துறையில் அனுபவம் இல்லை; …// அப்போ ஏன் சட்டத்துக்கு மனிதாபிமானம் இல்லை மனிதம் இல்லை என பெரிய லெவல் கதை?
/…இது சரியோ அல்லது தவறோ எனக்கு தெரியாது; ஆனால் நான் இருக்கும் நாட்டிலும் இந்த நடைமுறை உண்டு:…//
ஓஹோ…. அப்படியா? பெல்ஜியம் பிரஜா உரிமைக்கு ஒரு பெற்றோர் (தாய் அல்லது தகப்பன்) பெல்ஜினனாக இருந்தால் போதும். தகப்பனின் தகப்பன் பாட்டன் பூட்டன் எல்லாம் கேட்கிறாகளா?
கீழே விபரம் உள்ளது படித்துப்பாருங்கள்.
http://en.wikipedia.org/wiki/Belgian_nationality_law
மேலும் 300 வருடங்களாக வாழும் ஒரு குடும்பத்திடம் அக்கேள்வி உண்டா?
//..எம்மை பெற்றோர் கண்டித்துதான் வளத்தார்கள்; …// பல்லி கேட்ட கேள்விக்கு பதிலே இல்லை என்றால் இப்படித்தான் ஓடி ஓடி பம்மாத்துப் பதில்கள் சொல்ல வேண்டும் இல்லையா? பிள்ளை யாருடன் வாழவேண்டும் என பெற்றோர் தீர்மானிப்பார்கள். தீர்மானிக்க முடியாத படசத்தில் கோட்டுக்கு போவார்கள். அதைப்பற்றிக் கேட்டால் எம்மை பெற்றோர் கண்டித்துதான் வளத்தார்கள் என வட்டுக்கோட்டைக்கு வழி சொல்கிறீர்களே?
சொல்லுங்கள் கோட்டுக்குப் போய் எமது பிள்ளை யாருடன் வாழவேண்டும் எனக்கேட்பது நீங்களா அல்லது சட்டமா?
/…இல்லை கிளிண்டனை உதவுக்கு அழைத்திருப்பேன் கட்டுரை அமெரிக்காவை சார்ந்து வந்திருந்தால்;…//
மொனிக்கா லுவின்ஸ்கியின் கேசில கிளின்ரனும் ஹிலரியும் கோட்டுக்குப் போகாமல் தீர்த்துக்கொண்டார்கள். இல்லையா பல்லி? கோட்டுக்குப் போயிருந்தால் செல்சி கிளின்ரன் யாருடன் இருக்க வேண்டும் என கோட் சொல்லி இருக்கும் இல்லையா பல்லி?
அதுசரி சால்ள்சை துணைக்களைத்திருக்கிறீர்கள். அப்படிப் பார்த்தால் இப்போ இங்கிலாந்திலா ‘தடுக்கி’ விழுந்த வாழ்க்கை?
//….//அப்போ ”சராசரி” மனிதருக்கு சட்டம் மனிதாபிமானத்துடன் எழுதப்படவில்லையா? //
எனக்கு தெரியாது நீங்களே உங்க நண்பர்;; வக்கிலிடம் கேட்டு சொல்லுங்க;….//
நீங்கள் எழுதியதையே படியுங்கள் புரியும்.
//…//பாலஸ்தீன போராளி பாலஸ்தீன மக்களிடையே ஒரு ’சராசரி’ மனிதன், இஸ்ரேலுக்கு அவன் சண்டியன், சதிராடக்காரன்!! நான் சொல்ல வருவது புரியும் என நினைக்கிறேன் பல்லி அவர்களே// இவர்கள் யார் உங்க உறவுகளா?? சாந்தன் ஏன் இந்த தடுமாற்றம்;??….//
தடுமாற்ரம் எனக்கில்லை. கொசிப்படித்தல், மடத்தடிக்கதைகள் பேசுதல், போராட்டத்தைக்கொச்சைப்படுத்தல், சின்னப்புள்ளத்தன் என நக்கல் பேசுதல் போலல்ல எனது பேச்சு!
சே குவேராவின் புகழ்பெற்ர வசனம் ஞாபகம் இருக்கா?
//…சாந்தன் திரும்பவும் கேக்கிறேன் இந்த கட்டாய திருமணம் என்பது எப்படி முடிவு செய்யபடும்; பெண்ணுக்கு பிடிக்காததா,, ஆனுக்கு பிடிக்காததா??
பெற்றோருக்கு பிடிக்காதத்தா??…//
பல்லி பெரிய கதை எல்லாம் சொல்வீர்களே? இது கூடவா தெரியாது? திருமணம் என்பது இருவருக்கு இடையிலானது. இதில் பெற்றோர், சுற்ரத்தார் எல்லாம் இரண்டாம் மூன்றாம் பட்சமே. இதை விட தெளிவாகச் சொல்ல முடியாது. பக்கத்து வீட்டுக்காரனுக்கு பிடிக்காத்து எல்லாம் உங்கள் போல கொசிப் கொஷ்டிக்கு!!
அது நம்ம சமூகமாயிருந்தாலென்ன அடுத்தவனதாயிருந்தாலென்ன. இருவர் மனமொத்து வாழ்வதே வாழ்க்கை. இது திருமணமானால் என்ன திருவாத மணமானால் என்ன.
//….நம்ம வீடு, நம்ம உறவு; நம்ம அயல், நம்முடைய சமூகத்துக்குள் எட்டி பாருங்கள் உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கலாம்;….//
எல்லாவற்ரையும் விட ‘தடுக்கி’ விழுந்த நாட்டின் சட்டங்களைப் பாருங்கள். பதில் இன்னும் சிறப்பாகக் கிடைக்கும்! மேலும் ’இலக்கிய’ ‘பெண்கள்’ சந்திப்பு கோஷ்டியைக் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு மிக மிக நல்ல பதில் கிடைக்கும்!
//’இலக்கிய’ ‘பெண்கள்’ சந்திப்பு கோஷ்டியைக் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு மிக மிக நல்ல பதில் கிடைக்கும்//
குடும்ப வாழ்வுக்கு குத்தாட்டமே போதும் குடும்ப உறவு தேவையில்லை என தாங்கள் சொல்லுவதால் தாங்களும் இந்த வில்லங்கம் பிடித்த பாட்டியோ என எண்ண தோன்றுகிறது,
//திருமணம் என்பது இருவருக்கு இடையிலானது. இதில் பெற்றோர், சுற்ரத்தார் எல்லாம் இரண்டாம் மூன்றாம் பட்சமே. //
கட்டாய திருமணம் என கட்டுரை இருப்பதால் அந்த மூன்றாம் நபரே நாயகன்;
//அதுசரி சால்ள்சை துணைக்களைத்திருக்கிறீர்கள். அப்படிப் பார்த்தால் இப்போ இங்கிலாந்திலா ‘தடுக்கி’ விழுந்த வாழ்க்கை? // இல்லை கட்டுரை இங்கிலாந்தில்தான் எழுதப்பட்டது;
//சொல்லுங்கள் கோட்டுக்குப் போய் எமது பிள்ளை யாருடன் வாழவேண்டும் எனக்கேட்பது நீங்களா அல்லது சட்டமா? ::// போவது நாம்; போக வைப்பது சட்டம்;
//அப்போ ஏன் சட்டத்துக்கு மனிதாபிமானம் இல்லை மனிதம் இல்லை என பெரிய லெவல் கதை?// எல்லாம் இந்த தேசிய தொலைகாட்ச்சியை பார்த்ததன் தாக்கம்தான்;
//ஓஹோ…. அப்படியா? பெல்ஜியம் பிரஜா உரிமைக்கு ஒரு பெற்றோர் (தாய் அல்லது தகப்பன்) பெல்ஜினனாக இருந்தால் போதும். தகப்பனின் தகப்பன் பாட்டன் பூட்டன் எல்லாம் கேட்கிறாகளா? கீழே விபரம் உள்ளது படித்துப்பாருங்கள்.//
உங்கள் கேள்விக்கு எனது பதில் சரியானதே; அப்படியானால் உங்கள் கேள்வியை மாற்றுங்கள் நானும் தாங்கள் தந்த காட்டுக்குள் போய் விறகு ஒடிக்கிறேன்;
//கொசிப்படித்தல், மடத்தடிக்கதைகள் பேசுதல், போராட்டத்தைக் கொச்சைப்படுத்தல், சின்னப்புள்ளத்தன் என நக்கல் பேசுதல் போலல்ல எனது பேச்சு!//
எல்லா இடத்திலும் புலி பற்றி பேச கூடாது என நண்பர் சாந்தன் சொல்லி உள்ளார்; (ஆகவே கட்டுரைக்குள் நிற்ப்போம்)
//மொனிக்கா லுவின்ஸ்கியின் கேசில கிளின்ரனும் ஹிலரியும் கோட்டுக்குப் போகாமல் தீர்த்துக்கொண்டார்கள். இல்லையா பல்லி// அதுதான் கட்டாயதிருமணம் என்பதோ??
//ஓடி ஓடி பம்மாத்துப் பதில்கள் சொல்ல வேண்டும் இல்லையா? பிள்ளை யாருடன் வாழவேண்டும் என பெற்றோர் தீர்மானிப்பார்கள்.//
இது ஒரு தவறா?? ஆனால் அவர்கள் வாழ்வை பெற்றோர் தீர்மானிக்கலாமா?? இங்குதான் கட்டாய திருமன கரு ஆரம்பமாகிறது, (தீர்மானிக்கலாம் என்பதுவே என் கருத்து; ஆனால் பிள்ளைகளின் விருப்பம் அறிந்து பெற்றோர் முடிவு செய்ய வேண்டும்; அதுபோல் உங்க இரு மனம் சேரும்போது பெற்றவர்கள் மனம் புண்படும்படி இல்லாமல் பார்க்கவேண்டியது இரு மனங்களுக்கும் வேண்டும், (இரு மனங்கள் இனைவதுக்கு கூட (பதிவு திருமனம்) நால்வர் கை ஒப்பம் வேண்டுமென சட்டம் சொல்லுகிறதே) ஆக இரு மனங்களிலும் சட்டத்துக்கும் நம்பிக்கை இல்லை என எடுத்து கொள்ளலாமா சாந்தன்;
//…குடும்ப வாழ்வுக்கு குத்தாட்டமே போதும் குடும்ப உறவு தேவையில்லை என தாங்கள் சொல்லுவதால் தாங்களும் இந்த வில்லங்கம் பிடித்த பாட்டியோ என எண்ண தோன்றுகிறது,…./// அடடா….புலிக்கோஷ்டி கொத்துரொட்டி கோஷ்டி புலி எதிர்ப்பு கோஷ்டி குத்தாட்டகோஷ்டியா? இது கூட நல்லாயிருக்கே? இனிமேல் அப்படியே வைத்துக் கொள்வோமே!!
//..கட்டாய திருமணம் என கட்டுரை இருப்பதால் அந்த மூன்றாம் நபரே நாயகன்;….// அதனால்தான் சொல்கிறேன் அந்த மூன்றாம் தரப்பு நாயகனை விடுத்து திருமணம் செய்யும் இருவருக்கிடையில் இருக்கட்டும்.
//…இல்லை கட்டுரை இங்கிலாந்தில்தான் எழுதப்பட்டது;…/// அப்படியா லொஜிக்? அப்போ ஏன் பெல்ஜியத்தில் இருந்து கருத்து? விடுங்கள் அவர்களே பார்த்துக் கொள்வார்கள்!!
//….போவது நாம்; போக வைப்பது சட்டம்;…// மீண்டும் சொல்கிறேன். உங்களுக்குள் பிரச்சினையைத் தீர்க்கமுடியாமல் தான் போகிறீர்கள். சட்டம் ஒன்றும் உங்களை கோட்டுக்கு இழுக்கவில்லை! மனமொத்து திருமணம் செய்தால் ஏன் வம்பு? யாரோ மூன்றாம்தரப்பு ‘கலாச்சார காவலர்கள்’, ‘இனமானக் காப்பாளர்கள்’ கதையைக்கேட்டால் இதுதான் சிக்கல்.
///….ஆனால் பிள்ளைகளின் விருப்பம் அறிந்து பெற்றோர் முடிவு செய்ய வேண்டும்; …// அதாவது பிள்ளைகளின் விருப்பம் தான் முக்கியம் இல்லையா?
//…அதுபோல் உங்க இரு மனம் சேரும்போது பெற்றவர்கள் மனம் புண்படும்படி இல்லாமல் பார்க்கவேண்டியது இரு மனங்களுக்கும் வேண்டும்,…///
இருவர் இணைவதில் உங்கள் மனம் ஏன் புண்பட வேண்டும்? அவ்வாறு புண்பட்டாலும் மூன்றாம் தரப்பு யாரும் திருமணத்தை கட்டாயப்படுத்த முடியாது?
//….. (இரு மனங்கள் இனைவதுக்கு கூட (பதிவு திருமனம்) நால்வர் கை ஒப்பம் வேண்டுமென சட்டம் சொல்லுகிறதே) ஆக இரு மனங்களிலும் சட்டத்துக்கும் நம்பிக்கை இல்லை என எடுத்து கொள்ளலாமா சாந்தன்;….//
பல்லி….உங்களுக்கு சட்ட அடிப்படை, பொதுச் சட்டங்கள் பற்றிய அறிவு போதாது. இருவர் இணைவதை பதிவு செய்வது அவர்களின் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. மாறாக உலக விடயங்கள், சொத்துரிமை, மருத்துவ ஒப்புதல் கடமை …என பல உலக விடயங்களில் இலகுவாக கையாளுவதற்கு.
இங்கே எனக்குத் தெரிந்த ஒருவர் (ஈழத்தவர்) இருக்கிறார். இருவரும் இணைந்து வாழ்கிறார்கள். ஆனால் பதிவுத்திருமணம் செய்யவில்லை. அவர்களுக்கு அதில் அக்கறையுமில்லை.
கட்டாயத்திருமணம், சட்டம் என விவாதிக்க போய் பதிவுத்திருமணம் என இழுத்து உங்கள் சட்ட அறிவை நன்கு வெளிக்காட்டி உள்ளீர்கள்.
இந்தியாவில் முன்னைய காலங்களில் பதிவுத்திருமணம் இல்லை. ஒரு பெண் தனது தாலியைக் காட்டி இன்னார் கட்டியது எனச் சொன்னாலே நீதிபதி (பஞ்சாயத்து) ஏற்றுக்கொள்ளும். அதே போல கிறிஸ்தவ நாடுகளில் ஒரு பாதிரியார் கோட்டுக்கு வந்து இவர்களுக்கு நான் திருமணம் செய்து வைத்தேன் எனச் சொன்னாலே போதும். இன்றும் கூட அமெரிக்க கிராமப்புறங்களில் ஒரு பாதிரியார் ஒரு குழந்தையை நான் ஞானஸ்னானம் செய்து வைத்தேன் இக்குழந்தையின் பிறப்பை நான் அறிவேன் எனச் சொன்னால் பிறப்பு அத்தாட்சிப்பத்திரமாக அந்த சத்தியக்கடதாசி ஏற்றுக்கொள்ளப்படும்.
//இங்கே எனக்குத் தெரிந்த ஒருவர் (ஈழத்தவர்) இருக்கிறார். இருவரும் இணைந்து வாழ்கிறார்கள். ஆனால் பதிவுத்திருமணம் செய்யவில்லை. அவர்களுக்கு அதில் அக்கறையுமில்லை.//
இங்கு எனக்கு தெரிந்த 99 பேர் இருக்கிறார்கள்; அவர்கள் பதிவு திருமணம் செய்துதான் வாழ்கிறார்கள், அந்த பதிவுக்கு மூன்றாம்தரப்பு சாட்ச்சியாகவும் அமைத்துள்ளது; அதுதான் சொன்னேனே சட்டத்துக்கு தேவை அதுவல்ல இதுதான்;
// இந்தியாவில் முன்னைய காலங்களில் பதிவுத்திருமணம் இல்லை. //
அதுவா இப்போ பிரச்சனை?? கட்டாய திருமணம் என சட்டம் சொல்லும் போது அது பதிவு திருமணமாகதானே இருக்க வேண்டும்; அவதான் என் பெண்டாட்டி என சொல்லுவதை கூட சட்டம் நம்பிவிடுமா??
நீங்கள் இந்தியாவுக்கு சென்றபடியால் ஒருதகவல் சொல்லுகிறேன்; ரஜீவ் காந்தியின் மகள் பிரியங்காவை தனது மனைவி என சோபிராஜ் (பெயர் சரியோ தெரியவில்லை) என்பவர் வழக்கு போட்டார்; அவரதான் தாலி கட்டி மனைவியாக்கினேன்; அவர் இப்போது என்னை தவிக்க விட்டு வேறு யாரையோ மணக்க போவதாக, ஆனால் பின்பு விசாரித்து பார்த்தத்தில் அவர் அப்படி ஒரு மன நோயாளி என கண்டு கொண்டார்களாம்;
//அப்போ ஏன் பெல்ஜியத்தில் இருந்து கருத்து? விடுங்கள் அவர்களே பார்த்துக் கொள்வார்கள்!!//
இதை தாங்கள் எங்கிருந்து கேக்கிறியள் என சொல்லவில்லையே,
//உலக விடயங்கள், சொத்துரிமை, மருத்துவ ஒப்புதல் கடமை …என பல உலக விடயங்களில் இலகுவாக கையாளுவதற்கு.// வருவாய்க்காக என சொல்லுறியள்,
நான் முன்னமும் சொல்லியிருக்கிறேன் – இன்னொரு முறை இப்போது…
இந்தத் தலைப்பில், பல்லியின் கருத்துக்கள் சாந்தன் சொல்ல வருவதை வேண்டுமென்று முரண்படும் நோக்கில் எழுதப்படுவதாகவே தெரிகிறது. வரிக்கு வரி மறுத்தான் அடிப்பது யாருக்கும் உதவாது – சொந்த ஈகோவுக்கு ஒத்தடம் கொடுப்பதைத் தவிர!
//சாந்தன் – இங்கே எனக்குத் தெரிந்த ஒருவர் (ஈழத்தவர்) இருக்கிறார். இருவரும் இணைந்து வாழ்கிறார்கள். ஆனால் பதிவுத்திருமணம் செய்யவில்லை. அவர்களுக்கு அதில் அக்கறையுமில்லை.//
/பல்லி- இங்கு எனக்கு தெரிந்த 99 பேர் இருக்கிறார்கள்; அவர்கள் பதிவு திருமணம் செய்துதான் வாழ்கிறார்கள் /
இப்படியா விவாதம் செய்வது?
/பல்லி- நீங்கள் இந்தியாவுக்கு சென்றபடியால் ஒருதகவல் சொல்லுகிறேன்; ரஜீவ் காந்தியின் மகள் பிரியங்காவை தனது மனைவி என…. ஆனால் பின்பு விசாரித்து பார்த்தத்தில் அவர் அப்படி ஒரு மன நோயாளி என கண்டு கொண்டார்களாம் ./
இதெல்லாம் ஒரு விவாதத்துக்கு ஆதாரம் சேர்க்கும் பொயின்ற்றா?
//சாந்தன் – உலக விடயங்கள், சொத்துரிமை, மருத்துவ ஒப்புதல் கடமை …என பல உலக விடயங்களில் இலகுவாக கையாளுவதற்கு.//
/பல்லி- வருவாய்க்காக என சொல்லுறியள்/
சாந்தன் சொல்வதை விளங்குவதில் என்ன சிரமம் இருக்கிறது?
முதல் மனைவி உயிருடன் இருக்கையில் இன்னொருவரையும் மனவி ஆக்கிக் கொள்ள முடியுமா? கருணாநிதி மனைவியும் துணைவியும் வைத்திருக்கிறார். முத்து முதல் கனிமொழி வரை அவர் சட்ட பூர்வமாக உரிமை கொண்டாடும் பிள்ளைகள் தான்.
ஆனாலும், சொத்தில் மட்டுமல்ல, கருணாநிதிக்கு ஒரு உயிர் ஆபத்தான அறுவைச் சிகிச்சை செய்வதானாலும், சட்டபூர்வமான மனைவி தான் ஒப்புதல் தர முடியும்.
இந்த கணவர் – துணைவர், மனைவி – துணவி முறைகளை அங்கீகரிக்கும் மேற்குலகில் கூட இப்பிரச்சனைகள் உள்ளன. உதாரணத்துக்கு, அவுஸ்திரேலியாவில் இப்போதைய பிரதமர் துணைவருடன் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்குப் போவதும் அவர் உத்தியோகபூர்வநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் சரி தானா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் ஒரு ஞாபகம். ஏன் வருவாயை மட்டும் பேச வேண்டும்?
செழுமையான கருத்துப் பரிமாற்றங்களுடன் இருந்த தேசம் கோயில் மேளங்களுடன் (நான் உட்பட) ஓடுவது கூடப் பரவாயில்லை – அளவுக்கு மீறி அலுப்பு அடிக்காதவாறு பார்த்துக் கொள்வது எல்லோருக்கும் நன்மை தரும்!
//..இங்கு எனக்கு தெரிந்த 99 பேர் இருக்கிறார்கள்; அவர்கள் பதிவு திருமணம் செய்துதான் வாழ்கிறார்கள், அந்த பதிவுக்கு மூன்றாம்தரப்பு சாட்ச்சியாகவும் அமைத்துள்ளது…//
அட ‘கட்டாயத்திருமணம்’ என்றால் பதிவுத்திருமணம் என பல்லி நினைத்திருக்கிறார் என தெரியாமல் போய்விட்டது? சுப்பர் ஆகியூமன்ற்!! தொடருங்கள் பல்லி!
//அட ‘கட்டாயத்திருமணம்’ என்றால் பதிவுத்திருமணம் என பல்லி நினைத்திருக்கிறார் என தெரியாமல் போய்விட்டது? சுப்பர் ஆகியூமன்ற்!! தொடருங்கள் பல்லி!//
இந்த புடுங்கலுக்காகதான் கேட்டேன் கட்டாய திருமணம் என்றால் என்ன என; சட்ட வல்லுனர்கள் சொல்வதே சட்டமாகி விடும் அல்லவா?? சாந்தன் கட்டாய திருமணத்துக்கு விளக்கம் தாருங்கள், அதனுள் இருக்கும் வில்லங்கத்தை பல்லி தருகிறேன்,
மாணவனுக்கு மாமியார்; வாத்தியாருக்கு என்ன உறவு,, ?? என்பது போல் கடுப்படியாதையுங்கோ;
//…சாந்தன் கட்டாய திருமணத்துக்கு விளக்கம் தாருங்கள், அதனுள் இருக்கும் வில்லங்கத்தை பல்லி தருகிறேன்,…///
யார் இருவர் திருமணம் செய்ய நினைக்கிறார்களே அவர்களின் ஒப்புதல் இல்லாமல் வேறொருவர் கட்டாயப்படுத்தி, அதுவும் திருமணம் செய்யும் இருவரில் யாராவது ஒருவர் தனது எதிர்ப்பை நேரடியாகவொ அல்லது மறைமுகமாகவோ தெரிவிக்கும் பட்சத்தில் அது கட்டாயத் திருமணம்.
கட்டாய்த் திருமணம் சம்பந்தமாக வில்லங்கம் இருப்பதால் தானே வேண்டாம் என்கிறோம். அதனைத்தடுக்கும் சட்டத்தில் ‘வில்லங்கம்’ இருந்தால் சட்டத்தை திருத்த வேண்டும் அல்லது அடுத்தவனின் திருமணத்தில் தலையிடும் ‘பேர்வழி’ திருந்தவேண்டும் ஒழிய கட்டாயத் திருமணத்தை நியாயப்படுத்தக் கூடாது !
பல்லிக்கு கட்டாயத்திருமணம் ஒரு பொருட்டல்ல அதனுள் இருக்கும் ‘வில்லங்கம்’ தான் முக்கியம். என்னே மனிதம், என்னே பண்பு, என்னே சமூக அக்கறை!!
//…மாணவனுக்கு மாமியார்; வாத்தியாருக்கு என்ன உறவு,, ?? என்பது போல் கடுப்படியாதையுங்கோ;….//
இது கட்டாயத் திருமணத்துக்கு பதிவுத் திருமணத்தை முடிச்சுப் போட்டவரிடம் கேட்க வேண்டிய கேள்வி பல்லி!
சாந்தன் உங்கள் கருத்துக்கும் கட்டுரைக்கும் இடையில் பல்லி மாட்டி தவிக்கிறேன் என நினைக்கிறேன்; எனது கருத்து குடும்பம் அல்லது சமூகம் சார்ந்தது, உங்களது கருத்து சட்டம் சார்ந்தது; ஆனால் கட்டுரையோ பிரிட்டன் வாழ் மக்கள் பற்றியது, ஆக இந்த மும்முனை போர் வேண்டாமே என்பதால் இத்தனை இத்துடன் நிறுத்தி கொள்வோம்;
//..சாந்தன் உங்கள் கருத்துக்கும் கட்டுரைக்கும் இடையில் பல்லி மாட்டி தவிக்கிறேன் என நினைக்கிறேன்; எனது கருத்து குடும்பம் அல்லது சமூகம் சார்ந்தது, உங்களது கருத்து சட்டம் சார்ந்தது; ஆனால் கட்டுரையோ பிரிட்டன் வாழ் மக்கள் பற்றியது, ஆக இந்த மும்முனை போர் வேண்டாமே என்பதால் இத்தனை இத்துடன் நிறுத்தி கொள்வோம்;…//
இதற்காகவா ”…சாந்தன் கட்டாய திருமணத்துக்கு விளக்கம் தாருங்கள், அதனுள் இருக்கும் வில்லங்கத்தை பல்லி தருகிறேன்…” என பெரிய லெவல் கதை அளப்பு? நானும் ஏதோ பல்லி கேட்கிறார். அட்டகாசமான ‘ஆழ அகலமான’ (மாஓ உபயம்) ஒரு பதிலைத் தரப்போகிறார். அதுதான் இரண்டு நாட்களாக தட்டச்சு செய்து கொண்டிருக்கிறார் என நினைத்திருந்தேன்!
இதற்குள் ”…எனது கருத்து குடும்பம் அல்லது சமூகம் சார்ந்தது, உங்களது கருத்து சட்டம் சார்ந்தது; ….” என அடுத்த பெரிய லெவல் கதை.
சமூகம் குடும்பம் என்றால் என்ன பல்லி? பெயருக்கு பம்மாத்து வாழ்க்கை வாழுவதா? அல்லது மனமொத்து வாழுவதா?
இதில் என்ன மும்முனைப்போர்? பதில் இல்லையென்றால் இல்லை எனச் சொல்லவேண்டியதுதானே?
மனமொத்து வாழாமல் ஊருக்கு காட்ட பம்மாத்து வாழ்க்கை வாழ்வோரைத்தானே உங்களுக்குப் பிடிக்கும் இல்லையா பல்லி?
//சமூகம் குடும்பம் என்றால் என்ன பல்லி? பெயருக்கு பம்மாத்து வாழ்க்கை வாழுவதா? அல்லது மனமொத்து வாழுவதா?//
விட்டு கொடுப்பு, பொறுமை, புரிந்துணர்வு; எனக்காக வாழாமல் எமக்காக வாழுதல், இப்படி பலதை சொல்லலாம்;
//இதில் என்ன மும்முனைப்போர்? பதில் இல்லையென்றால் இல்லை எனச் // கட்டுரை இந்த சட்டத்தால் (கட்டாய திருமணம்) எம்மவரும் பாதிக்கபடலாம் என்பதால் ஒரு விழிப்புணர்வுக்காக எழுதியதாகவே நான் கருதுகிறேன், அதனால் அந்த விழிப்புனர்வு சார்ந்தே எனது கருத்து; சாந்தன் சட்டம் தெரிந்தவர் என்பதால் சேர்ந்தோம் பிரிந்தோம் என்பது போல சட்டத்தை தெளிவாக்குகிறார்;
//பதில் இல்லையென்றால் இல்லை எனச் சொல்லவேண்டியதுதானே?// ஆக உங்கநோக்கம் உங்களிடம் தோற்று விட்டோம் என்பதை ஏற்றுகொள்ள வேண்டும் அப்படிதானே,
//மனமொத்து வாழாமல் ஊருக்கு காட்ட பம்மாத்து வாழ்க்கை வாழ்வோரைத்தானே உங்களுக்குப் பிடிக்கும் இல்லையா பல்லி?//
அம்மாவை நேசிக்கிறேன்;
நீங்கள் மம்மியை விரும்புகிறீர்கள்;
முன்னது இயற்கையானது; பின்னது செயற்கையானது;
//அதுதான் இரண்டு நாட்களாக தட்டச்சு செய்து கொண்டிருக்கிறார் என நினைத்திருந்தேன்!// ஆக உங்களுக்கு பல்லியின் பின்னோட்டம் படிக்காவிட்டால் தூக்கம் வராது அப்படிதானே சாந்தன்;
//சாந்தன் கட்டாய திருமணத்துக்கு விளக்கம் தாருங்கள், அதனுள் இருக்கும் வில்லங்கத்தை பல்லி தருகிறேன்//
அதில் எந்த மாற்றமும் இல்லை முதலில் கட்டாய திருமணம் என்பத்தை எப்படி வரையறுக்கிறியள், பதிவு திருமணத்தில் மட்டுமா என கேட்டேன்??
பல்லி,
ஏன் இந்த அங்க இங்க ஓட்டம். ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் உங்கள் ‘கருத்து’ மாறி மாறி ஓடுகிறது. நிலையான எந்த கருத்தும் இல்லை? முதலில் பதில் தா பின்னர் சொல்கிறேன் என்றீர்கள். பின்னர் பதில் காணோம், மாட்டுப்பட்டுத் தவிக்கிறேன் என்றீர்கள். இப்போது எனக்கு, நமக்கு என சொல்லுகளுக்குள் ஒழிந்து விளையாட்டுக் காட்டுகிறீர்கள்.
பின்னர் அடுத்த படிக்குப் போய் செய்தியில் இருக்கும் கட்டாயத் திருமணத்தடை என்பதையே தலைகீழாக மாற்றி ‘…எம்மவரும் பாதிக்கபடலாம் என்பதால் ஒரு விழிப்புணர்வுக்காக எழுதியதாகவே நான் கருதுகிறேன்…’ என உங்களின் ஊகத்தைத் திணிக்கிறீர்கள். செய்தியை வாசித்துப் பாருங்கள் மீண்டும் ஒருமுறை. விழிப்புணர்வுக்காக எழுதியதாகவே வைத்துக்கொண்டால் உங்களுக்கு அது வந்து விட்டதா? மாறாக உங்களுக்கு எந்தப்பக்கம் போவது எனத்தெரியாமல் இங்கும் அங்கும் ஓடும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டதாகவே தெரிகிறது. இது அம்மா…மம்மி என தொடர்பில்லாத ஓட்டம் ஓடும்போது தெரிகிறதே? இதில் அம்மா இயற்கை மம்மி செயற்கையாம்.
ஒரு ஆங்கிலம் பேசும் பிள்ளைக்கு மம்மிதான் இயற்கை. நீங்கள் ‘தடுக்கி’ விழுந்த நாட்டில் பிறந்த பிள்ளைக்கு அம்மாதான் செயற்கை மம்மி அல்ல. இதில் மனிதம் எனப் பெரிய கதை. பல்லி அம்மாவை எப்படியும் அழைக்கலாம். ஆனால் அது அம்மாவுக்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு. நீங்கள் அதனை உங்கள் விருப்பத்துக்கு செயற்கை எனச் சொல்ல முடியாது. அது கட்டாயப்படுத்தல்! இப்ப புரியுதா ‘கட்டாயத்திருமணம்’ பற்றி ! உங்களுக்கு ஒரு பிள்ளை தனது தாயை எப்படி அழைக்க வேண்டும் என்பதிலேயே விட்டுக்கொடுப்பு கிடையாது. நான் இயற்கை நீ செயற்கை என்கிறீர்கள். இதில் விட்டுக்கொடுப்பு, நாம், நமக்கு என கதை வேறு.
பல்லியின் பின்னோட்டம் படிக்காமல் விட்டால் தூக்கம் வராதா? இதுவேறயா?
வரையறை கேட்டீர்கள், வில்லங்கத்தை தருகிறேன் என்றீர்கள். பதிலைக்காணோமே?? இப்ப வந்து அம்மா ….மம்மி என திசைகெட்டு ஓடுகிறீர்களே?
பல்லி,
நீங்கள் ‘கட்டாயத்திருமன எதிர்ப்புச் சட்டத்துக்கு’ ஆதரவா? இல்லையா? நாம், சமூகம், பெற்றார், மம்மி கதை எல்லாம் வேண்டாம். இருவர் மனமொத்து வாழ்வதை நீங்கள் உங்களின் ‘சமூகம், நாம், நமக்கு, எனக்கு, மம்மி’ எனக்கதை விட்டு தடுப்பீர்களா? அவர்கள் பதிவுத்திருமணம் செய்தாலென்ன செய்யாவிட்டாலென்ன அது அவர்களின் விருப்பம் என விடுவீர்களா? அல்லது இமிகிரேசன்காரன் கேக்கிறானே, பாங்க் லோன்காரன் கேக்கிறானே என முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போடுவீர்களா?
ஆம் அல்லது இல்லை எனப் பதில் சொன்னால் ஏன் இவ்வளவு சிக்கல்?
//ஏன் இந்த அங்க இங்க ஓட்டம். ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் உங்கள் ‘கருத்து’ மாறி மாறி ஓடுகிறது. நிலையான எந்த கருத்தும் இல்லை?//
அப்படியா?? ஆனாலும் என் கருத்துக்கள் யாவும் என் சமூகத்துக்குள்தான் தடுமாறுகிறதே தவிர ,,,,,,
//முதலில் பதில் தா பின்னர் சொல்கிறேன் என்றீர்கள். பின்னர் பதில் காணோம்,//
அப்போ பல்லி எழுதியது பதில் இல்லையா??
//பின்னர் அடுத்த படிக்குப் போய் செய்தியில் இருக்கும் கட்டாயத் திருமணத்தடை என்பதையே தலைகீழாக மாற்றி ‘…எம்மவரும் பாதிக்கபடலாம் என்பதால் ஒரு விழிப்புணர்வுக்காக எழுதியதாகவே நான் கருதுகிறேன்…// பல்லியின் பார்வையில் என சொன்னேனே;
//. செய்தியை வாசித்துப் பாருங்கள் மீண்டும் ஒருமுறை. விழிப்புணர்வுக்காக எழுதியதாகவே வைத்துக்கொண்டால் உங்களுக்கு அது வந்து விட்டதா//
தெரியவில்லை ஆனால் பயம் வந்து விட்டது; உன்மையில் இது வெளி நாட்டவர்க்காக கொண்டுவரபட்ட சட்டமா என;
//ஒரு ஆங்கிலம் பேசும் பிள்ளைக்கு மம்மிதான் இயற்கை// இருக்கலாம் ஆனால் பல்லியின் பலனோ தமிழ் சமூகம் சார்ந்தே;
//நீங்கள் அதனை உங்கள் விருப்பத்துக்கு செயற்கை எனச் சொல்ல முடியாது. அது கட்டாயப்படுத்தல்//
இதை மையமாக வைத்தே கட்டுரையாளர் இந்த கட்டுரையைஎழுதினாரோ??
//உங்களுக்கு ஒரு பிள்ளை தனது தாயை எப்படி அழைக்க வேண்டும் என்பதிலேயே விட்டுக்கொடுப்பு கிடையாது//
மன்னிக்கவும் தாயை விட்டு கொடுப்பதில் விட்டுகொடுப்புக்கு கூட உடன்பாடு கிடையாது;
//நீங்கள் ‘கட்டாயத்திருமன எதிர்ப்புச் சட்டத்துக்கு’ ஆதரவா? இல்லையா? //
சட்டத்தை மதிக்கிறேன்;
//. இருவர் மனமொத்து வாழ்வதை நீங்கள் உங்களின் ‘சமூகம், நாம், நமக்கு, எனக்கு, மம்மி’ எனக்கதை விட்டு தடுப்பீர்களா?//
இல்லை; ஆனால்:!!!
//பதிவுத்திருமணம் செய்தாலென்ன செய்யாவிட்டாலென்ன//
நாசமாய் போனால் என்ன என சொல்ல வருகிறீர்களா??
//அவர்களின் விருப்பம் என விடுவீர்களா?// அவர்கள் யார் என்பதே கேள்வி??
//அல்லது இமிகிரேசன்காரன் கேக்கிறானே, பாங்க் லோன்காரன் கேக்கிறானே என முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போடுவீர்களா?//
அப்படி எல்லாம் கிடையாது தாய் தந்தை மனசை நினைப்பேன் மீண்டும் வந்து எழுதுவேன், காரனம் நானும் ஒரு அப்பா ;
பல்லி,
நீங்கள் சமூகத்துகுள் ‘தடுமாறுவது’ நாட்டுக்குள் ‘தடுக்கிவிழுவது’ உங்கள் தேர்வு! உங்கள் ‘உரிமை’ ‘மனிதம்’ அதைச் சொல்ல நானென்னெ.
நீங்கள் ஒரு அப்பாவாக இருந்து பிள்ளைகளின் திருமணத்தை மனமொவ்வாத தேர்வொன்றைச் செய்வது உங்கள் உரிமை. ஆனால் அந்த மனமொவ்வாத ’நாசமாய் போகாத’ தெரிவை மறுப்பது உங்களின் பிள்ளைகளின் உரிமை என்பது கோட்டில் இருந்து நோட்டீஸ் வரும்போதுதான் தெரியும். அங்குபோய் நாசமாய் போனால் எனச் சொல்கிறீர்களா என நீதிபதியை கேட்பீர்களா? அல்லது சட்டத்தை மதிக்கிறேன் என்ச் சொல்வீர்களா? அல்லது தமிழ்ப்படங்களில் வருவதுபோல் ‘தடுமாறுகிறேன் ஐயா…‘தடுமாறுகிறேன்! என தத்துவப்பாடல் பாடுவீர்களா?
:://அந்த மனமொவ்வாத ’நாசமாய் போகாத’ தெரிவை மறுப்பது உங்களின் பிள்ளைகளின் உரிமை என்பது கோட்டில் இருந்து நோட்டீஸ் வரும்போதுதான் தெரியும். அங்குபோய் நாசமாய் போனால் எனச் சொல்கிறீர்களா என நீதிபதியை கேட்பீர்களா? அல்லது சட்டத்தை மதிக்கிறேன் என்ச் சொல்வீர்களா? அல்லது தமிழ்ப்படங்களில் வருவதுபோல் ‘தடுமாறுகிறேன் ஐயா…‘தடுமாறுகிறேன்! என தத்துவப்பாடல் பாடுவீர்களா?// இந்த கன்றாவிகள் எதும்நடந்து விட கூடாது என்பதுக்கான விழிப்புனர்வாகவே இந்த கட்டுரையை நான் பார்த்தேன்; அதனால் என் அனுபவத்தையும் ஆதங்கத்தையும் யதார்த்தமாக சொன்னேன், திரும்பபும் சொல்லுகிறேன். உங்கள் கருத்து ஒரு வீதமானவர்களுக்காக; என் கவலை 99 வீத பெற்றோர் சார்ந்தது;
//…ஒரு வீதமானவர்களுக்காக; என் கவலை 99 வீத பெற்றோர் சார்ந்தது;…//
திருமணம் செய்வது பெற்றோரல்ல!!