ஜி ரிவி இன் முக்கிய நிகழ்ச்சித் தயாரிப்பாளர் தினேஸ் ஜி ரிவி யில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார்.


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய பிரச்சார ஊடகமான ஜி ரிவி இல் இருந்து அதன் முக்கிய நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் ஊடகவியலாளருமான தினேஸ் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார். ஜீ ரிவி யில் புதிதாக உருவாக்கப்பட்ட தலைமை இயக்குநர் பதவிக்கு நியமிக்கப்பட்ட தணிகாசலம் தயாபரன் தினேஸ்க்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டதையடுத்து தினேஸ் ஜி ரிவி இல் இருந்து வெளியேறத் திட்டமிட்டு உள்ளார். தேசம்நெற்க்கு கிடைத்த தகவலின்படி இன்று அல்லது நாளை தினேஸ் தனது பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாகக் கையளிப்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரு வாரங்களாக தினேஸ் ஜி ரிவி இல் தோண்றவில்லை.

இலங்கையில் தீபம் தொலைக்காட்சிக்கு பணியாற்றிய தினேஸ் தீபம் தொலைக்காட்சியின் லண்டன் கலையகத்தில் பணியாற்றுவதற்கு பிரித்தானியா அழைக்கப்பட்டு இருந்தார். அவர் விரைவிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியான ரிரிஎன் தொலைக்காட்சியில் இணைந்து கொண்டார். ரிரிஎன்  தொலைக்காட்சி யின் ஒளிபரப்பு தடைப்படவே அத்தொலைக்காட்சி ஜி ரிவி யாக மீண்டும் தனது ஒளிபரப்பை ஆரம்பித்தது. அதில் தினேஸ் உம் இணைந்திருந்தார்.

மலையகத்தை தாயகமாகக் கொண்ட தினேஸ் ரிரிஎன் ஜி ரிவி ஆகிய தமிழ் தேசிய தொலைக்காட்சிகளில் பணியாற்றியதன் ஊடாக தீவிர தமிழ் தேசிய ஆதரவாளனாக கணிக்கப்படுகிறார். ரிரிஎன் ஜி ரிவி தொலைக்காட்சிகளில் தமிழ் தேசியம் என்பது புலித் தேசியமாகவே உள்ளது. ஒஸ்லோ பேச்சுவார்த்தை சுனாமி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடையே ஏற்பட்ட பிளவு வன்னி யுத்தம் என முக்கிய காலகட்டங்களில் தினேஸ் ஜி ரிவி இன் முக்கிய நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தவர்.

தமிழீழ விடுதலைப் புலிகளை கண்மூடித்தனமாக ஆதரித்த ஊடகங்கள் அவர்களின் அழிவையும் கண்டுகொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் கொல்லப்பட்டதை ஜி ரிவி ஒளிபரப்பியதைத் தொடர்ந்து ஜி ரிவி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அச்செய்தி மீளப்பெறப்பட்டது. ஆயினும் ஜி ரிவி தனது அரசியல் பாதையை மாற்றுகிறது என்ற குற்றச்சாட்டு தங்களை புலிகளின் பிரதிநிதிகளாக குறிக்கொண்டவர்கள் மத்தியில் வலுவடைந்து வந்தது.

பிரபாகரனின் மறைவுக்குப் பின் வெளிநாடுகளில் மிஞ்சியிருந்த விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டு அதிகாரத்தையும் சொத்துக்களையும் தங்கள் பக்கம் கைப்பற்றும் போட்டி உருவானது. இப்போட்டியில் ஜி ரிவி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. தற்போது ஜ ரிவி இன் பிரித்தானிய செயற்பாடுகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள தணிகாசலம் தயாபரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரின் நெருங்கிய உறவினர்.

தினேஸ் அண்மையில் இந்தியா சென்றிருந்த போது அவர் தயாரித்து வழங்கிய வெளிச்சம் நிகழ்ச்சியை தயாபரன் தயாரித்து வழங்கியதாகவும் அதனைத் தொடர்ந்தும் நடாத்த தயாபரன் விரும்பியதாகவும் இதன் பினனணியே தினேஸ்க்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை என ஜீ ரிவி க்கு நெருக்கமான ஊடகவியலாளர் ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஆரம்பத்தில் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டு தனது நிகழ்ச்சியைத் தயாரிக்க தினேஸ் கலையகம் வந்தபோதும் கலையகத்தில் இருந்து நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளர்கள் நிகழ்ச்சியைத் தயாரிக்க உதவவில்லை. இந்நிலையில் தினேஸ் வெளிச்சம் நிகழ்ச்சியை வழங்க மறுத்துள்ளார். இதற்காகவே தணிகாசலம் தயாபரன் தினேஸ் யை ஒரு வாரம் தற்காலிக வேலை நீக்கம் செய்யும் ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இந்த தற்காலிக வேலை நீக்கம் இவ்வாரம் முடிவடைய தினேஸ் வேலையை விட்டு வெளியேறத் தீர்மானித்து உள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தேசம்நெற் க்கு தெரிவிக்கின்றனர். இன்று அல்லது நாளை தினேஸ் ஜீ ரிவி நிர்வாகத்தை சந்திக்க உள்ளார்.

இப்பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டு தினேஸ் மீண்டும் ஜி ரிவி இல் தனது பணியைத் தொடர்வார் என ஜ ரிவி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தினேஸின் முடிவு இதற்கு மாறாகவே அமையும் எனத் தெரியவருகிறது. தினேஸ் ஒரு சுயாதீன ஊடகவியலாளராகவே ஜி ரிவி இல் பணியாற்றி உள்ளார். அதனால் ஜி ரிவிக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையையும் தொடரும் எண்ணம் தினேஸ்க்கு இல்லை எனவும் தெரியவருகிறது.

ஜி ரிவி இல் இப்பிரச்சினை தொடர்கையில் யூன் 6 இல் தினேஸ் மீதும் ஜி ரிவி இன் வெளிப்புற நிகழ்ச்சிப் பதிவுகளுக்கு பொறுப்பான எஸ் கருணைலிங்கம் மீதும் தாக்குதல் நடத்த சிலர் முயன்றுள்ளனர்.

பிரித்தானிய மகாராணி மூடிசுட்டிய 60வது வருட கொண்டாட்டங்களில் கலந்தகொள்ள அழைக்கப்பட்ட இலங்கை ஜனாதிபதி யூன் 6இல் கொமன்வெல்த் கவுன்சிலில் உரையாற்ற இருந்தமையும் அது பின்னர் ரத்து செய்யப்பட்டமையும் தெரிந்ததே. இலங்கை ஜனாதிபதியின் உரை ரத்து செய்யப்பட்டமை யூன் 5இல் வெளிவந்தது. அதனை உடனடியாக அறிவித்தால் யூன் 6 காலையில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் வரமாட்டார்கள் என்பதால் அச்செய்தியை ஒளிபரப்ப வேண்டாம் என ஜி ரிவி யை சிலர் கேட்டுக்கொண்டனர். ஆனால் ஜி ரிவி அச்செய்தியை உடனடியாகவே ஒளி பரப்பியது. மேலும் ஜனாதிபதி தங்கியிருந்த ஹொட்டலுக்கு அனைவரையும் வரும்படி ஜி ரிவி அழைப்பு விடுத்தது. ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் றொட்டலில் இருந்து ஊர்வலமாக மக்களை கொமன்வெல்த் கவுன்சிலுக்கு வரும்படி கேட்டிருந்தனர். இந்த முரண்பாடுகளுக்காகவே சிலர் தினேஸ் மீதும் கருணைலிங்கம் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டனர்.

இப்பிரச்சினை தணிகாசலம் தயாபரனுக்கு தினேஸ் சுட்டிக்காட்டி இருந்ததாகவும் இதுவும் அவர்களிடையே முரண்பாடு ஏற்படக் காரணம் எனக் கூறப்படுகிறது.

தினேஸ் இன் ஊடக எதிர்காலம் இன்னும் சில நாட்களில் தெளிவாகும்

இது தொடர்பான வேறு பதிவுகள்

  • வேறு பதிவுகள் இல்லை!
உங்கள் கருத்து
  1. thurai on June 19, 2012 8:19 am

    ஊடகமென்பது நடுநிலையாக செய்திகளை வெளியிடுவது. ஜிரிவி புலிகளின் பிரச்சார ஊடகம். புலி பயங்கரவாதிகளின் ஊடகம். இதுவரை காலமும் அதன் ஊழியர்கள் கடமையை சரியாகவே செய்து வந்துள்ளனர். அவர்களில் தினேசும் ஒருவர். புலத்துத் தமிழர்களை வீதிகளிற்கும் வன்னிமக்களை முள்ளிவாய்காலிற்கும் அழைத்து அழிவுக்கு வழிகாட்டியவர்கழும் இவர்கள்தான். இவர்களின் பின்னணியில் இருந்து செய்ற்பட்ட ஆயுதமேந்தாத பயங்கரவாதிகள்தான் இப்போது நாடுகடந்த தமிழீழ அரசை சேர்ந்தவர்கள். இவர்களெல்லாம் நாட்டுக்காக போராடியவர்கள்(பேச்சில்மட்டும்). இன்று பணத்திற்காக போராடுகின்றார்கள்–.துரை


  2. Rohan on June 19, 2012 12:06 pm

    //ஊடகமென்பது நடுநிலையாக செய்திகளை வெளியிடுவது. //

    அது சரி – நடுநிலை என்றால் என்ன? அந்தப்பக்கம் ஐந்து இந்தப் பக்கம் ஐந்து என்பதா?

    ஊடகம் என்பது துரையின் வரைவிலக்கணப்படி பார்த்தால் கற்பனையான ஒன்று.

    தனக்குத் தெரிந்த நடுநிலையாக செய்திகளை வெளியிடும் ஐந்து ஊடகங்களை அவரால் பெயரிட முடியுமா?


  3. mao on June 19, 2012 8:30 pm

    ஆகா….. அற்புதமான கருத்து.
    இப்படித்தான் தினேஷ்சை அறிமுகப் படுத்தித் கொண்டேன். புலிகளுக்கு பொல்லெடுத்து கொடுத்தவர்களில் இவரும் ஒருவரே!.

    உள்ளமாட்டை களட்டிபூட்ட வேண்டியது வண்டிக்காரனின் கடமை. வேகமாக ஓடுவதற்கு.

    தினேஷ் போனால் இன்னொருவர் வருவார். அவரும் போவார். கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. வண்டிக்காரனின் நோக்கம் வண்டி எப்பவும் வேகமாக போக வேண்டும் என்பதே!.


  4. Ajith on June 22, 2012 9:04 am

    ஊடகமென்பது நடுநிலையாக செய்திகளை வெளியிடுவது. ஜிரிவி புலிகளின் பிரச்சார ஊடகம்./// துரை

    நீங்கள் உங்கள் கருத்துகளை கூறும் தேசம்நெட், Lankaweb, என்பன யார் சார்பு செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் என்று சொல்லுங்கள் துரை. அதுசரி தினேசின் ஊடக எதிர்காலம் பற்றிய பிந்திய தகவல்கள் என்ன?

    அதுசரி ராஜபக்சே இனை கண்மூடி ஆதரிக்கும் தேசம்நெட் ஊடகத்திற்குள் திரு சோதி அவர்கள் இலங்கை விஜய கட்டுரைக்கு பின் தோன்றிய முறுகல் (ஜெயபாலன், சோதி, கொன்ஸ்ரன்ரைன்) தற்போதைய ராஜபக்சே லண்டன் விஜயத்தின் பின் ஆசிரியர் குழுவுக்குள் பல முரண்பாடுகள் தோன்றி இப்போது உச்ச கட்டத்திற்குள் இருப்பதாக தேசம்நெட் உடன் நெருங்கியவர்கள் தகவல்கள் தெரிவிகின்றன. இது உண்மையா துரை.


  5. Kusumpu on June 22, 2012 12:31 pm

    தினேஸ் தீபத்தை விட்டு வெளிறேயியபோதிலும் அவரின் சகோதரியான சுனிதா தொடர்ந்தும் தீபத்திலேயே வேலை செய்கிறார். தூக்கிப்போடுவதும் துரோகி என்பதும் புலிகளுக்குப் புதினான ஒன்றல்லவே. எங்கேயும் நடுநிலை என்ற ஒன்று கிடையாது. ஆனால் சரியான செய்தியை உண்மையுடன் கொடுக்கும் செய்திகள் உள்ளன: இதைத்தான் துரை நடுநிலை என்றாரோ. உள்ளதை உள்ளபடி கொடுக்கும் ஊடகங்களை சிலவேலை நடுநிலை என்று கூறலாமா?

    மாவோ:- புலிகளுக்குப் பொல்லெடுக்துக் கொடுத்தாலோ அதே பொல்லால் அடிவிழும் என்று அனுபவம் தினேசுக்கு இல்லை. மற்றவர்களைப் பார்த்தாவது திருந்தியிருக்கலாம் தானே.


  6. thurai on June 22, 2012 5:57 pm

    //நீங்கள் உங்கள் கருத்துகளை கூறும் தேசம்நெட், ளன்கநெப், என்பன யார் சார்பு செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் என்று சொல்லுங்கள் துரை. அதுசரி தினேசின் ஊடக எதிர்காலம் பற்றிய பிந்திய தகவல்கள் என்ன?//அஜீத்

    புலிகளோடு எதிர்த்து புலிகள் பலத்துடன் இருக்கும்போதே கருத்து வெளியிட அனுமதித்த தமிழ் ஊடகங்கள் போற்றத்தக்கவையே. அதிலே தேசம்நெற்ரும் உள்ளடங்கும். கடுகு சிறிதானாலும் காரம் பெரிதுபோல் ஜிரிவி புலிகளிற்கு தோல்வியையே பெற்றுக் கொடுத்தது. தேசம்நெற் மாற்றுக் கருத்தாளரிற்கு கை கொடுத்தது.-துரை


  7. ajeevan on June 22, 2012 9:03 pm

    இதுவும் கடந்து போனதா?


  8. Ajith on June 22, 2012 9:21 pm

    தேசம்நெற் மாற்றுக் கருத்தாளரிற்கு கை கொடுத்தது.-துரை//
    எதற்கும் மாற்று கருத்துத்தானா? சொந்தத்தில் ஒரு கொள்கை அற்றவர்கள் தான் மாற்றுகருத்தாளர்கள். யார் காசு கொடுத்தாலும் அவர்களுக்காக கருத்து கொடுபவர்களையே மாற்று கருத்தாளர்கள் என்று கூறுவார்கள். சரியாக உங்களை அடையாளம் காட்டி கொடுத்து விட்டீர்கள் துரை,


  9. kanthasami on June 22, 2012 11:10 pm

    அறிப்பாளர் அண்மையில் சர்ச்சைக்குரிய இந்திய விஜயத்தை மேற்கொண்டதும் இந்திய உளவுப்படையின் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகமும் அவரது நீக்கத்திற்கு காரணம் என உள்வீட்டு செய்திகள் கூறுகின்றன.இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் கூறுவது போன்று உண்மை இருக்குமென்றாலும்கூட அதற்கான நடவடிக்கை உடுப்பதற்குரிய தகுதி அவர்களுக்கு இல்லை.


  10. thurai on June 23, 2012 9:08 am

    //சொந்தத்தில் ஒரு கொள்கை அற்றவர்கள் தான் மாற்றுகருத்தாளர்கள். யார் காசு கொடுத்தாலும் அவர்களுக்காக கருத்து கொடுபவர்களையே மாற்று கருத்தாளர்கள் என்று கூறுவார்கள். சரியாக உங்களை அடையாளம் காட்டி கொடுத்து விட்டீர்கள் துரை,//

    புலிகளால் அழிக்கப்பட்ட அமைப்புகள் யாவும் ஒரு கொள்கை அற்றவர்கள் தானா? அவர்கள் கருத்துக்கள் வெளியிட்டால் துரோகிகள் என புலிகள் பட்டம் சூட்டி போட்டுத்தள்ள, அதனை ஏற்று வரவேற்ர 30 வருட பரம்பரையில் வாழ்பவர்களை எவ்வாறு கூறுவது. -துரை


  11. mohamed Nisthar on June 23, 2012 2:14 pm

    அன்புள்ள அஜித்,
    “சொந்தத்தில் ஒரு கொள்கை அற்றவர்கள் தான் மாற்றுகருத்தாளர்கள். யார் காசு கொடுத்தாலும் அவர்களுக்காக கருத்து கொடுபவர்க,…”

    மேலுள்ள உங்கள் வாய் மூலத்தில் இரண்டு வசனங்கள். இரண்டும் ஒன்றுக் கொன்று வித்தியாசமானவை. சொந்தத்தில் கருத்தே இல்லாதவர்கள் எப்படி காசுக்காக கருத்துக் கொடுக்க முடியம்?
    அஜித் மாற்று கருத்து என்றால் என்னவென்று தெரியாமலா மாற்று கருத்து விட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். எல்லாம் மாயமாக இருக்கிறது.


  12. சாந்தன் on June 23, 2012 3:27 pm

    //…புலிகளால் அழிக்கப்பட்ட அமைப்புகள் யாவும் ஒரு கொள்கை அற்றவர்கள் தானா?…//

    அவர்களின் ‘கொள்கைகள்’ பற்றி ஜெயபாலனே சொல்லி இருக்கிறார். ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டுகின்றனர் என்கின்ற தலைப்பில், படித்துப்பாருங்கள் !


  13. Rohan on June 23, 2012 9:57 pm

    //புலிகளால் அழிக்கப்பட்ட அமைப்புகள் யாவும் ஒரு கொள்கை அற்றவர்கள் தானா? அவர்கள் கருத்துக்கள் வெளியிட்டால் துரோகிகள் என புலிகள் பட்டம் சூட்டி போட்டுத்தள்ள, அதனை ஏற்று வரவேற்ர 30 வருட பரம்பரையில் வாழ்பவர்களை எவ்வாறு கூறுவது. -துரை//

    கொஞ்சம் தமிழை விளங்கிக் கொள்வது பயன் தரும்.

    //தேசம்நெற் மாற்றுக் கருத்தாளரிற்கு கை கொடுத்தது.-துரை// என்று சொல்லி, இருப்பதற்கு மறு கருத்து (எதிர்க் கருத்து) வைத்திருப்பவர்கள் நாங்கள் என்று அடையாளம் காட்டிக் கொண்டவர் துரை.

    //எதற்கும் மாற்று கருத்துத்தானா? சொந்தத்தில் ஒரு கொள்கை அற்றவர்கள் தான் மாற்றுகருத்தாளர்கள் – அஜித்// என்று கருத்துச் சொன்னார் அஜித்.

    //புலிகளால் அழிக்கப்பட்ட அமைப்புகள் யாவும் ஒரு கொள்கை அற்றவர்கள் தானா? -துரை// என்று கேட்பதை விடுத்து அவர்கள் வைத்திருந்த கொள்கை என்ன – அவற்றை அவர்கள் நடைமுறைப்படுத்திய விதங்கள் என்ன என்றெல்லாம் நாலு வரியை இழுத்து விடுவதை விட்டுவிட்டு புலி வசை பாடியே வாழ்க்கை நடாத்துவது வசதி தான்.

    இப்போது கூட தன்னைக் கேள்வி கேட்கும் என்னை எவ்வாறு புலிப்பட்டம் கட்டி வாய் மூட வைக்கலாம் என்ற கேள்வி தான் துரை மனத்தில் ஓடும்.

    புலியை தள்ளி வைத்துவிட்டு *முடிந்தால்* துரை பதில் சொல்லலாம்!!


  14. Rohan on June 23, 2012 11:58 pm

    //மேலுள்ள உங்கள் வாய் மூலத்தில் இரண்டு வசனங்கள். இரண்டும் ஒன்றுக் கொன்று வித்தியாசமானவை. சொந்தத்தில் கருத்தே இல்லாதவர்கள் எப்படி காசுக்காக கருத்துக் கொடுக்க முடியம்?//

    என்ன இது?

    /“சொந்தத்தில் ஒரு கொள்கை அற்றவர்கள் தான் மாற்றுகருத்தாளர்கள். யார் காசு கொடுத்தாலும் அவர்களுக்காக கருத்து கொடுபவர்க,…” /……என்பதில் முதல் வரி கொள்கை பற்றியும் இரண்டாவது வரி கருத்து பற்றியும் அல்லவா பேசுகின்றன?… வித்தியாசமான இரண்டு வரிகளை அடுத்தடுத்து எழுதக் கூடாதா? ஒரே விடயத்தை அடுத்தடுத்து எழுதுவது தான் தவறு – அதைக் கூறியது கூறல் என்பார்கள்.

    இரண்டு வரிகளும் முரண்படுவதாகவும் எனக்குத் தோன்றவில்லை. முதல் வரி கொள்கை பற்றியும் இரண்டாவது கருத்துக் கூறல் பற்றியும் பேசுகின்றன! கொள்கை இல்லாமல் கருத்துக் கூற முடியாது என்றா சொல்ல வருகிறார் நிஸ்தார்?

    சொந்தமாய் நிதி இல்லாது, மற்றவர்களிடம் பெற்று தொண்டு நிறுவனங்கள் நிதி தருகின்றன. அதுபோல, சொந்தமாய்க் கருத்து இல்லாது கருத்து அள்ளி விடுவதற்கு கருத்து வழங்குநர்களில் தங்கியிருப்பது ஒன்றும் புதிது அல்லவே. இராஜபக்ச சகோதரர்களிடமிருந்து கருத்து வராது இலங்கைத் தூதரகங்கள் வாய் திறப்பதில்லை. ‘மேலிடத்திலிருந்து’ கருத்து வராது புலத்துப் புலி அலுவலகங்கள் முன்பு வாய் திறப்பதில்லை.

    கருத்து இருந்தும் பேசாதிருப்பது ஒன்று – கருத்தே இல்லாதிருப்பது இன்னொன்று. காசு தந்தால் மட்டும் வாய் திறப்பது ஒன்று – காசுடன் சேர்த்துக் கருத்தும் தந்தால் தான் கருத்துச் சொல்வோம் என்பது வேறொன்று. Cash for comments என்று வானொலிகள் – தொலைக்காட்சிகள் நடாத்துவோர் காசு வாங்கிக் கொண்டு பொது அபிப்பிராயம் போல விளம்பரம் செய்து, அவர்களது ஊடக தர்ம அமுலாக்கல் அமைப்புகளிடம் மாட்டி அலைவதும் மேற்குலகில் வாழ்வோருக்குத் தெரியும்.

    //அஜித் மாற்று கருத்து என்றால் என்னவென்று தெரியாமலா மாற்று கருத்து விட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். எல்லாம் மாயமாக இருக்கிறது.//
    “மாற்றுகருத்தாளர்கள்” என்பதற்கு ஒரு தனி அரும்பத விளக்கம் இருக்கிறது. அது தெரியாமலா மாற்று கருத்து விட்டுக் கொண்டிருக்கின்றார் நிஸ்தார்?


  15. mao on June 24, 2012 6:32 am

    புலியை சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது றோகன்?
    (இது எனக்கு பி.சி.சொல்லித் தந்தது)

    புலிகள் செய்த அநியாயங்களை கிடப்பில் போட்டு விட்டு ராஜீவ் காந்தியை கொன்றது. இலங்கை வெளிவிவகார அமைச்சரை கொன்றது. பாலன் பாலகிகளை சயனட்டி போருக்கு அனுப்பியது

    முஸ்லீம் தமிழ்சமூகத்தை கொள்ளையிட்டுவிட்டு… அவர்களது தாயகப்பிரதேசத்தில் இருந்து துரத்திவிட்டது தவறு என்று துணிகரமாகச் சொல்லுங்கள் அதற்கு பிறகு உங்களை யாரும் புலிகள் என்று சொல்ல மாட்டார்கள் திரு றோகன் அவர்களே!

    இதைவிட்டு மகிந்தா…மகிந்தா.. மகிந்தா அரசு என்று சொல்வதிலோ துரையை குறை கூறுவதிலோ எந்த நியாயமும் வரபோவதில்லை.


  16. thurai on June 24, 2012 9:19 am

    //புலியை தள்ளி வைத்துவிட்டு *முடிந்தால்* துரை பதில் சொல்லலாம்!!//றோகன்

    புல்லை(களையை) வளரவிட்டு பயிரையும் காக்கவேண்டும் போலுள்ளது. எல்லா அமைப்புகளிலுமிருந்து
    மட்டுமல்ல தமிழ் சட்டமீறிகழும் குற்ரவாளிகழும் சர்வதேசரீதியில் புலியாகமாறி (வேசம்போட்டு) உலகினை
    ஏமாற்ரினார்கள். இதற்கு பெயர் தமிழீழ விடுதலையா? இதனால் ஏற்பட்ட தமிழின அழிவிற்கு சிங்களவரையும்
    அரசையும் மட்டும் குற்ரம் சொல்வதால் தமிழரிடையே வாழும் குற்ரவாளிகள் தப்பிப்பது இன்னமும் புரியவில்லையா?-துரை


  17. thurai on June 24, 2012 9:25 am

    //அவர்களின் ‘கொள்கைகள்’ பற்றி ஜெயபாலனே சொல்லி இருக்கிறார். ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டுகின்றனர் என்கின்ற தலைப்பில், படித்துப்பாருங்கள் !//சாந்தன்

    ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்ட முடியாதுதான்.
    ஆனல் அவர்கள் குடிசையில் வாழ்வோரை மாளிகை கட்டித்தருவோம் என்றும், எங்கள் பின்னால் வாருங்கள் என்று சொல்லியும் அழித்துவிட்டு நடு வீதியில் எதுவுமில்லாமல் நிற்கவைத்துவிட்டு தப்பி ஓட மாட்டார்கள்.-துரை


  18. Rohan on June 24, 2012 11:27 am

    ////புலியை தள்ளி வைத்துவிட்டு *முடிந்தால்* துரை பதில் சொல்லலாம்!! றோகன்//

    //புல்லை(களையை) வளரவிட்டு பயிரையும் காக்கவேண்டும் போலுள்ளது. எல்லா அமைப்புகளிலுமிருந்து மட்டுமல்ல தமிழ் சட்டமீறிகழும் குற்ரவாளிகழும் சர்வதேசரீதியில் புலியாகமாறி (வேசம்போட்டு) உலகினை ஏமாற்ரினார்கள்.//

    புலிகளை யாரும் கடியுங்கள் – குதறுங்கள் – செத்த புலி அடியுங்கள் – வசை பாடி மகிழுங்கள் – எனக்கு ஒன்றும் மனவருத்தம் வராது, பரிதாபம் தான் வருகிறது – என்று சொல்லியும் புரியாமல் இருப்பவர்களைப் பார்க்க மீண்டும் பரிதாபம் வருகிறது.

    பம்மாத்துக் கருத்துச் சொல்லிவிட்டு, விளக்கம் கேட்டால் பதில் சொல்வதை விடுத்து புலி அடிக்கப் போகிறீர்கள்.

    //புலியை தள்ளி வைத்துவிட்டு *முடிந்தால்* துரை பதில் சொல்லலாம்!! றோகன்//
    ஆக, உங்களால் முடியாது! அப்படியானால் நேரே சொல்வது தானே! நான் கேட்ட கேள்வி இலகுவானது….

    “//புலிகளால் அழிக்கப்பட்ட அமைப்புகள் யாவும் ஒரு கொள்கை அற்றவர்கள் தானா? -துரை// என்று கேட்பதை விடுத்து அவர்கள் வைத்திருந்த கொள்கை என்ன – அவற்றை அவர்கள் நடைமுறைப்படுத்திய விதங்கள் என்ன என்றெல்லாம் நாலு வரியை இழுத்து விடுவதை விட்டுவிட்டு புலி வசை பாடியே வாழ்க்கை நடாத்துவது வசதி தான்.

    இப்போது கூட தன்னைக் கேள்வி கேட்கும் என்னை எவ்வாறு புலிப்பட்டம் கட்டி வாய் மூட வைக்கலாம் என்ற கேள்வி தான் துரை மனத்தில் ஓடும்.”
    உங்களால் முடிந்தது அவ்வளவு தான்


  19. Rohan on June 24, 2012 11:49 am

    //புலியை சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது றோகன்? (இது எனக்கு பி.சி.சொல்லித் தந்தது)//
    நான் கிறிஸ்தவன் சைவர்களை வெறுப்பவன் என்றும் சொல்லியிருப்பார் பிசி – அதையும் நம்பிக் கொண்டிருங்கள். சொந்தமாய் விடயங்களைப் புரிந்து கொள்ள அறிவை வளர்த்துக் கொண்டால் மூக்குடைவுகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். அது சிரமமானது என்றால், குறைந்தது எழுத முன்னர் கொஞ்சம் யோசித்து எழுதுவது உதவும்.

    //புலிகள் செய்த அநியாயங்களை கிடப்பில் போட்டு விட்டு ராஜீவ் காந்தியை கொன்றது. இலங்கை வெளிவிவகார அமைச்சரை கொன்றது. பாலன் பாலகிகளை சயனட்டி போருக்கு அனுப்பியது//
    அதற்கும் இங்கே வாததில் இருக்கும் பொருளுக்கும் என்ன தொடர்பு? சொந்தத்தில் கொள்கை அற்ற மாற்றுக் கருத்தாளர்களைப் பற்றிப் பேசுகிறோம், முடிந்தால் தலைப்புடன் நில்லுங்கள் – புலிகள் பற்றி வேறு தலைப்புகளில் பேசலாமே!

    //முஸ்லீம் தமிழ்சமூகத்தை கொள்ளையிட்டுவிட்டு… அவர்களது தாயகப்பிரதேசத்தில் இருந்து துரத்திவிட்டது தவறு என்று துணிகரமாகச் சொல்லுங்கள் அதற்கு பிறகு உங்களை யாரும் புலிகள் என்று சொல்ல மாட்டார்கள் திரு றோகன் அவர்களே!//

    ஹோ – ஹோ – ஹோ…. எங்கிருந்தீர்கள் இத்தனை நாளும்? புலிகளின் செயற்பாடுகள் பற்றி புலிகள் பலமாக இருந்த போதே நான் நிறையவே விமர்சித்திருக்கிறேன். இங்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதிகளைக் கடத்தியது, முஸ்லிம்களின் வெளியேற்றம், ரெலோ அழிப்பு, என்று பல விடயங்களை விமர்சித்து எழுதியிருக்கிறேன். இதற்கு ஏன் துணிவு வேண்டும் – குறிப்பாக புலிகள் போன பின்னர்? ஆனால், என்னை யாரும் புலிகள் என்று சொல்ல மாட்டார்கள் என்று என்ன உரிமையில் பேசுகிறீர்கள்? வாதத்தில் விழும் போது வெல்பவனுக்குப் புலி முத்திரை குத்துகிறதன்றி வேறொன்றும் அறியா பின்னூட்டக்காரர்கள் உலவும் தளம் இது. துணிவு இருந்தால், புலி பற்றிச் சொன்னால் எனக்குக் கோபம் வரும் என்று பிசி சொல்லித் தந்ததை நம்பி என்னைக் கேள்வி கேட்டது பிழை என்று முதலில் ஒப்புக் கொள்ளுங்கள், பார்க்கலாம்.


  20. thurai on June 24, 2012 2:23 pm

    //பம்மாத்துக் கருத்துச் சொல்லிவிட்டு, விளக்கம் கேட்டால் பதில் சொல்வதை விடுத்து புலி அடிக்கப் போகிறீர்கள்.//றோகன்

    இவ்வாறுதான் 30 வருடமாக கொலைகளிற்கு நியாயம் கேட்டால் துரோகப்பட்டம் யாவருக்கும். காயப்பட்டவரை சிகிச்சைக்கு அனுமதிப்பதுதான் மனிதாபிமானம். தமிழினத்தின் நிலமை இன்று அதுதான். காயப்படுத்தியவர்கள் புலிகள். புலிகளை மீண்டும் காப்பாற்ரவும் புதிய தலைமைகள் தோன்றுவதை தடுக்கவுமே சிங்கள அரச எதிர்ப்பு உலகமெங்கும் நடைபெறுகின்றது. -துரை


  21. BC on June 24, 2012 3:37 pm

    ரெலோ புலிகளால் அழிக்கபட்டபோது, யாழ்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றபட்ட போது எல்லாம் அவர் புலிகளை புலிகள் பலமா இருந்தபோதே விமர்சித்தாராம். நம்புங்கள்.
    தம்புள்ளையில் முஸ்லிம்கள் வணங்கும் இடம் தாக்கபட்டத்திற்கு அவர் பொங்கி எழுந்த விதம் யாவரும் அறிவார். அவருக்கு எங்கே யாரால் நடத்தபடும் போது பொங்க வேண்டும் என்பது தெரியும்.


  22. Ajith on June 25, 2012 8:43 am

    மேலுள்ள உங்கள் வாய் மூலத்தில் இரண்டு வசனங்கள். இரண்டும் ஒன்றுக் கொன்று வித்தியாசமானவை. சொந்தத்தில் கருத்தே இல்லாதவர்கள் எப்படி காசுக்காக கருத்துக் கொடுக்க முடியம்? அஜித் மாற்று கருத்து என்றால் என்னவென்று தெரியாமலா மாற்று கருத்து விட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். எல்லாம் மாயமாக இருக்கிறது. //

    அன்பின் நிஸ்தார்,

    நான் கூறிய இரண்டு வசனங்களும் மிகவும் தொடர்பு கொண்டவை. என்னை பொறுத்தவரை தேசம்நெட் இன் முக்கிய நோக்கம் புலிகளுக்கு எதிரான கருத்துகளை பரப்புரை செய்வதன் மூலம் சிங்கள தேசியத்திற்கு மறைமுகமாக உதவுவதே என்பதை தெட்ட தெளிவாக புரிந்து கொள்ளலாம். இதுவரையில் சிங்கள இனவாத ராஜபக்சே அரசையோ அல்லது அதனுடன் சேர்ந்து இயங்கும் இனவாத சிங்கள கட்சிகளையோ அல்லது தமிழ் துணைப்படை குழுக்களையோ (EPDP , பிள்ளையான், கருணா) விமர்சிக்கும் எந்த கருத்துகளையும் ஆய்வு செய்த கட்டுரைகளை ஜெயபாலன் குழு எழுதியது இல்லை.

    தற்போதைய இலங்கை அரசு பல ஊடங்கங்களுக்கு, இணையங்களுக்கு, தனி நபர்களுக்கு நிதி வழங்கி புலிகள் எதிர்ப்பு பிரசாரத்திற்கு, தமிழ் தேசியத்திற்கு எதிரான பிரசாரத்திற்கு வழங்கி வருகின்றது என்பது மறைக்க முடியாத உண்மைகள். இதனை நண்பர் துரை அவர்கள் ஏற்றும் கொண்டு உள்ளார். தேசம்நெட் ராஜபக்சே அரச சார்பு ஊடகமாகவே நான் கணிக்கிறேன்.

    உண்மையான நடுநிலையான ஊடகமாகவோ அல்லது இலங்கை ஒரு ஐக்கியமான, சகல மக்களுக்கும் சகல இனங்களும், சம உரிமை கொண்ட, இலங்கை தேசம் என்ற கொள்கை உள்ளவர்கள் என்று சொன்னால் அங்கு அதற்கு தடையாக உள்ள சகல சக்திகளையும் இனம் கண்டு விமர்சிக்க வேண்டும். அதைவிட்டு புலிகளையும் தமிழ் தேசியத்திற்கு சார்பானவர்களியும் மட்டும் விமர்சிக்கும் தேசம்நெட் சிங்கள, முஸ்லிம் இனவாத அரசியல் சக்திகளை விமர்சிக்க மறுப்பது ஏன்?

    அறுபது ஆண்டுகால இனவாத சக்திகளை விட்டு முற்பது வருட இன விடுதலை போராடத்தை விமர்சிப்பது ஏன்? புலிகளின் மீதான தனிபட்ட விரோதத்தை தீர்பதற்கு தமிழ் இனத்தின் உரிமை போராடத்தை அடகு வைப்பது தான் உங்கள் மாற்று கருத்தா? அன்பர் நிஸ்தார், மாற்று கருத்தாளர்கள் என்றால் கொள்கை ரீதியான அதனை அடைவதற்கான வழிமுறைகள் பற்றி மாற்று கருத்துகள். உங்களிடம் அது உண்டா? இல்லையே நிஸ்தார். இருந்தால் சொல்லுங்கள் உங்கள் மாற்று கருத்துகளை ஆதாரங்களுடன் சொல்லுங்கள். உங்கள் மாற்று கருத்துகள் மாயமா அல்லது நிஜமா?


  23. Rohan on June 25, 2012 10:10 am

    //BC – ரெலோ புலிகளால் அழிக்கபட்டபோது, யாழ்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றபட்ட போது எல்லாம் அவர் புலிகளை புலிகள் பலமா இருந்தபோதே விமர்சித்தாராம். நம்புங்கள்.
    தம்புள்ளையில் முஸ்லிம்கள் வணங்கும் இடம் தாக்கபட்டத்திற்கு அவர் பொங்கி எழுந்த விதம் யாவரும் அறிவார். அவருக்கு எங்கே யாரால் நடத்தபடும் போது பொங்க வேண்டும் என்பது தெரியும்.//

    சிறுமை கண்டு பொங்கும் மனப்பக்குவத்துடன் நான் வளர்ந்திருப்பதில் BCக்கு என்ன பிரச்சனை? அவரை நம்புமாறு யாரும் கேட்கவில்லை. தயவு செய்து நம்ப வேண்டாம்! இந்த மாதிரி விளக்கங்களைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாதவர்களுக்கு விளக்க நான் முற்படவும் போவதில்லை.

    யூதர்கள் நச்சுவாயுக் குதங்களுக்குள் வகைதொகையாய்க் கொல்லப்பட்ட கதை கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். அவர்கள் தமக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொண்ட செய்தியை ஒரு நல்ல செய்தியாக நினைத்துக் கொண்டவர்களும் நாங்கள் (BC தயவு செய்தி இதற்கு மேல் வாசிக்க வேண்டாம் -இது விளங்கும் பக்குவம் உள்ளவர்களுக்காக மட்டும் எழுதப்படுகிறது). அப்போது மோஷே தான் ஒரு அர்ச்சுனன் போலத் தான் எங்களில் பலருக்குத் தெரிந்தார். பாலஸ்தீனியப் போராளிகள் பயங்கரவாதிகளாய்த் தெரிந்தார்கள். என்டபே தாக்குதல் எங்களைப் புல்லரிக்க வைத்தது. ஆனாலும், இஸ்ரேலின் கூத்துகள் பின்னர் தான் தெரிந்தன.

    அமெரிக்காவில் நான் இருக்கையில் தான் Operation Desert Storm தொடங்கியது. கண்ணில் நீர் வர நான் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது வெள்ளை நண்பர்களுடன் வாக்குவாதப்படும் அளவுக்கு எனக்குள் ஆவேசம் இருந்தது. அவர்களும் தாம் செய்வது முறை அல்ல என்று தெரிந்து வைத்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் என்னைத் தனியே அழைத்துப் போய் தம்மைத் தவிர மற்றவர்களிடம் எனது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டாம் என்று – எனது சொந்தப் பாதுகாப்பு கருதிக் கவனமாக இருக்குமாறு – கரிசனையுடன் ஆலோசனை சொல்லும் அளவுக்கு எனக்குக் கோபம் இருந்திருக்கிறது என்பதைக் கூட நான் உணரவில்லை.

    பின்னர் முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். அடுத்த மாதம் கனடா போயிருந்த பொது கொஞ்சம் கடுமையாகத் தான் கதைத்து விட்டேனோ என்னவோ…. எனது நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து, அடுத்த முறை கனடா வரும்போது அரசியல் பேச வேண்டாம் என்று கண்டிப்பான ஆலோசனை சொன்னார். என்னை புளட்காரன் என்றும் அவர்கள் தீர்மானித்து விட்டதாகவும் அறிந்தேன்.

    புலிகளுக்கு ‘மாற்றுக்கருத்தாளர்கள்’ துரோகிகள். புலிகள் அல்லாதோருக்கு புலிகள் எதிரிகள். இரு புறமும் இல்லாதாருக்கு இருவருமே பிரச்சனை தருவது அன்றிலிருந்து நடப்பது தான். இதில் வேலிக்குப் பின்னால் நின்று கதைவிடும் BC போன்றவர்கள் சும்மா ஜுஜூப்பி!

    மற்றவர்கள் எதை எதற்காக எப்படிச் செய்கிறார்கள் என்று எல்லாம் தெரிந்த BC போன்றவர்கள் வந்து உலாவும் தளத்தின் காற்றுப்பட்டதே நான் செய்த பாக்கியம்.


  24. Rohan on June 25, 2012 10:14 am

    //காப்பாற்ரவும் புதிய தலைமைகள் தோன்றுவதை தடுக்கவுமே சிங்கள அரச எதிர்ப்பு உலகமெங்கும் நடைபெறுகின்றது. -துரை//

    அருண் தம்பிமுத்து ‘சிறிலங்காவுக்கான தமிழர்கள்’ அமைப்புக்கு ஆள் சேர்க்கிறாராம். துரைக்கு போதிய தகுதி இருப்பதாகவும் அதற்கான விருப்பம் ஒன்று இருப்பதாகவும் தெரிகிறது. தாயகம் அழைக்கிறது – போவாரா துரை?


  25. BC on June 25, 2012 7:44 pm

    சிறு வயதில் இருந்தே யூத மக்களுக்கு மனித இன வரலாற்றிலேயே மிக மோசமாக நடந்த கொடுமைகளை கேட்டு வளர்ந்த சிறுவன் பெரியவனானதும் தம்புள்ளை முஸ்லிம்கள் வணங்கும் தலம் தாக்கபட்டத்திற்க்கு பொங்கி எழுந்தான்.தமிழ் அரசியல்வாதிக்குரிய முழு பக்குவத்தையும் காண முடிகிறது. சிறுவனின் தந்தையார் கூட தமிழ் பெரும் தலைவர்களுடன் தொடர்பில் இருந்தவர்.
    அதுக்காக!!!
    நான் சொல்கிறபடி தான் தேசம்நெற்றில் நீங்கள் கருத்து எழுத வேண்டும் என்று அஜ‌ராகம் செய்யலாம் என்று கனவு காண வேண்டாம்.


  26. Rohan on June 25, 2012 9:11 pm

    //நான் சொல்கிறபடி தான் தேசம்நெற்றில் நீங்கள் கருத்து எழுத வேண்டும் என்று அஜ‌ராகம் செய்யலாம் என்று கனவு காண வேண்டாம்.//
    மண் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கிற குழந்தைகள் மனதில் வந்து போகிறார்கள்!!


  27. Kusumpu on June 27, 2012 10:10 am

    ஜிரிவி ஒரு நல்ல புலி ரிவி என்பதற்கு டினேசை நீக்கியது சான்றாகிறது. என்றும் தமது நிலையை விட்டு தரமுயர்ந்தால் அவர்களை களத்தில் வைத்துப்போட்டுவதும் பிரச்சனை வருமென்று கண்டால் மாவீரர் ஆக்குவதும். பதவியில் இருந்து தூக்குவதும் பின் துரோகியென தெருவில் தூக்குவதும் புலிகளின் மரபு என்பதை டினேஸ் அறியாது இருந்தது அவரது பிழையே. ஐ பி சியில் சிவரஞ்சித்து கந்தையா அம்மானுக்கு என்ன நடந்தது. தாசியஸ் என்ன ஓசியிலா ஓடுகிறார். இங்கே புதிசாக ஜிரிவி எதையும் செய்யவில்லை. புலிகளின் மரபியல்பைக் காப்பாற்றி உள்ளது.


  28. kandasamy on June 28, 2012 2:30 am

    //ஐ பி சியில் சிவரஞ்சித்து கந்தையா அம்மானுக்கு என்ன நடந்தது. தாசியஸ் என்ன ஓசியிலா ஓடுகிறார்.//

    குசும்பு, என்ன நடந்தது? விளக்கமாய் சொல்லுங்களேன்.


  29. Kusumpu on June 29, 2012 9:35 am

    சிவரஞ்சித்தின் தலையில் ஐபிசியைக் கட்டி மகுடம் சூட்டி கடனுகளை எடுக்கப்பண்ணி ஐபிசியில் புலிகளுக்கே உழைத்த தாசியஸ்தை தூக்கி வெளியில் எறிந்த பின் சிவரஞ்சித்தையாவது ஒழுங்காக நடத்தினார்களா? ஐபிசி நன்குவளர்ந்ததும் வாங்கிய கடனுடன் வெளியே எறிந்தார்கள். இன்று கடனுடன் முழித்துக் கொண்டிருக்கிறார். களத்தில் போடுவது எல்லாம் எதற்காக? பலாலியில் இருந்து ஆமி வெளிக்கிட்டு வரும்போது சுண்ணாகத்தில் தேசியப்பாதுகாப்பு என்று பணமும்: நகையும் சேர்த்த பொய்யர்கள்: பித்தலாட்டக்காரர்களை விடுதலைவீரர்கள்: மாவீரர்கள் என்பது முசுப்பாத்தியாக இருக்கிறது. தற்கொலை செய்தவர்களும்; சரணடைந்தவர்களும் மாவீரர்கள் ஆனால் உண்மையாக போராடி வீழ்தவர்களும்: சித்திரவதைக்கு உட்பட்டும் இரகசியங்களை பாதுகாத்துவர்களையும் எப்படி அழைப்பது. வீரமற்ற தற்கொலை செய்யும் மனப்பான்மையை வளர்த்தவர்கள் போராளிகள் அதற்கொரு தலைவன்: தேசியத்தலைவன் என்றால் அவன் மக்களுடன் இருக்கவேண்டும் மக்களால் தெரிவுசெய்யப்பட வேண்டும். பங்கர்களுக்குள் ஒழிந்து வாழ்ந்தவன் தேசியத்தலைவன். கற்பிணிகளைக் தற்கொலைதாரிகளாக்கிய கோழைகள் தமக்கு நிகராக இன்னொருவன் வருவதை விரும்பமாட்டார்கள். இதுதான் ஆண்டாண்டு காலமாகப் புலிகளுக்குள் நடந்தது.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு