ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டுகின்றனர்! : த ஜெயபாலன்


தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரசுக் கட்சி தான் மற்றையவர்கள் ஒட்டிக் கொண்டிருப்பவர்களே என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மிகத் தெளிவாக தமிழரசுக் கட்சி மாநாட்டில் தெரிவித்து இருக்கின்றார். தமிழரசுக் கட்சியே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தலைமையை வழங்கும் என்பதையும் இரா சம்பந்தன் அங்கு உறுதிப்படுத்தி உள்ளார். இரா சம்பந்தனின் உரை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. இதில் குறிப்பாக ஈபிஆர்எல்எப் சுரேஸ் அணியின் கனவை இரா சம்பந்தன் ஒரே நாளில் கலைத்துவிட்டார்.

தமிழரசுக் கட்சியின் மாநாட்டைத் தொடர்ந்து ஈபிஆர்எல்எப் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றார். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைமைத்துவத்தைக் கொண்ட ஒரு உயர்சபை உருவாக்கப்பட வேண்டும் என்பது கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளதாக புளொட் தலைவர் த சித்தார்த்தன் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார். இந்த உயர்சபை தொடர்பாக தமிழரசுக் கட்சி மெளனமாகவே உள்ளது.

சுரேஸ் பிரேமச்சந்திரனின் கிளர்ச்சிக்கு உறுதுணையாக புளொட் அமைப்பு தீவிர ஆதரவளித்து வருவதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சுரேஸ் பிரேமச்சந்திரன் புளொட் தலைவர் சித்தார்த்தனுடன் தனிப்பட்ட சந்திப்புகள் சிலவற்றை மேற்கொண்டதாக தேசம்நெற் க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவற்றுக்கு முன்னதாக ரியுஎல்எப் தலைவர் வி ஆனந்தசங்கரி தனது கட்சிக்கு தலைமை தாங்குமாறு புளொட் தலைவர் த சித்தார்த்தனைக் கேட்டுக்கொண்டதாக செய்திகள் கசிந்தன. ஆனால் இதனை வி ஆனந்தசங்கரி முற்றாக மறுத்துள்ளார்.

தற்போது தமிழரசுக் கட்சிக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளை ஒருங்கிணைப்பதில் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஓரளவு வெற்றி கண்டுள்ளார். தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஈபிஆர்எல்எப் (சுரேஸ் அணி), புளொட், ரியுஎலஎப், ரெலோ ஆகிய கட்சிகள் ஒத்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிய வருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வது என்றும் அதற்கு ரியுஎல்எப் இன் உதய சூரியன் சின்னத்தைப் பயன்படுத்துவது என்றும் இதற்கு தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகள் உடன்பட்டு உள்ளதாகத் தெரியவருகின்றது. இந்த முடிவுக்கு தமிழரசுக் கட்சி உடன்படாவிட்டால் தமிழரசுக் கட்சியை ஓரம்கட்டிவிட்டு தமிழரசுக் கட்சி இல்லாத தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதே இந்த புதிய அணியின் நோக்கம். அதற்கு உதய சூரியன் சின்னமாகும்.

இப்புதிய அணியின் அரசியல் கணக்கு தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகளே. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சியைக் கழட்டிவிட்டால் அவ்வாக்குகள் தங்களுக்கு வரும் என அவர்கள் கணக்குப் போட்டு உள்ளனர்.

ஆனால் தமிழரசுக் கட்சியின் கணக்கோ இதற்கு முற்றிலும் எதிரானது. இவர்களைக் காடாத்தி விட்டால் தங்களுக்கு எதிர்காலத்தில் தொல்லை இல்லை என்று எண்ணுகிறார்கள். மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம் முதல் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி என்ற பெயரிலும் வீட்டுச் சின்னத்திலுமே போட்டியிட்டனர். கட்சி சாராது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நின்று வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ் சிறீதரன் யோகேஸ்வரன் போன்றவர்கள் தற்போது தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர். தற்போது தமிழரசுக் கட்சி இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழரசுக் கட்சிக்கான அலுவலகங்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய எடுத்த முயற்சி தோல்வியிலேயே முடிவடைந்தது. இம்முயற்சி தோல்வியடைய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டது என்ற சந்தேகமும் சிலரிடம் இல்லாமல் இல்லை.

தமிழரசுக் கட்சியை ஓரம்கட்டி புதிய அணியை உருவாக்குபவர்களின் அரசியல் தமிழரசுக் கட்சியின் அரசியலிலும் மோசமானது. நிலையில்லாதது. காலத்துக்குக் காலம் நிறம் மாறிக் கொண்டது.

ஈபிஆர்எல்எப் இலங்கையில் உருவான முக்கிய ஆயுத அமைப்புகளில் மிகுந்த ஜனநாயகமும் குறைந்த அல்லது உட்படுகொலைகள் அற்ற அமைப்பாக இருந்தது. ஆனால் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் மிக மோசமான படுகொலைகளை மேற்கொண்டது. அதனால் மண்டையன் குழு என்ற பெயரையும் சுரேஸ் அணி பெற்றிருந்தது. அதன் பின்னர் இலங்கை இந்திய அரசுகளுடனும் அதன் உளவு நிறுவனங்களாலும் பராமரிக்கப்பட்டனர். பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் தமிழீழ விடுதலைப் புலிகளால் உள்வாங்கப்பட்டு ஞானஸ்தானம் செய்யப்பட்டனர்.

புளொட் அமைப்பு உட்படுகொலைகளுக்குப் பெயர் பெற்றது. இலங்கை அரசினாலும் அதன் உளவுப் பிரிவுகளினாலும் நீண்டகாலமாகப் பராமரிக்கப்பட்டவர்கள். மிக மோசமான சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான ஈபிடிபி இனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான தமிழ் அரங்கத்தில் அங்கம் வகித்தனர். நடந்து முடிந்த தேர்தல்களுக்குப் பின் ஞானம் பிறந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தஞ்சம் அடைந்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கம் இந்திய இலங்கை அரசுகளினாலும் அதன் உளவு நிறுவனங்களினாலும் பராமரிக்கப்பட்டு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஞானஸ்தானம் செய்யப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் உள்வாங்கப்பட்டவர்கள்.

மேலுள்ள மூன்று அமைப்புகளுமே ஆயுத அமைப்புகள் மட்டுமல்ல அவர்களுடைய செயற்பாடுகளினால் முற்றாக மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். இந்தப் பலவீனமான நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இவர்களை அழித்தொழிப்பதில் பெருமளவில் வெற்றி பெற்றனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுத வடிவம் எடுத்த பின்னர் ரியூஎல்எப் மக்களாலும் ஆயுத அமைப்புகளினாலும் நிராகரிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டது. தமிழரசுக் கட்சிக்கு எதிரான அணியில் இருக்கின்ற ஒரே அரசியல் வரலாற்றைக் கொண்ட கட்சி ரியுஎல்எப். ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் ஈடுபட்ட போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துகொள்ளாத கட்சி. அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிகமோசமான விமர்சனத்துக்கு தொடர்ச்சியாக உள்ளாகி இருந்தது.

தற்போது உருவாகவுள்ள புதிய அணி தொடர்பான சந்திப்புக்களில் ஐரோப்பியப் பயணத்தை மேற்கொண்டிருப்பதால் ரியுஎல்எப் தலைவர் வி ஆனந்தசங்கரி நேரடியாக ஈடுபடவில்லை. ஆனால் அவர் தன்னுடைய ஆதரவை வழங்கி உள்ளதுடன் ரியுஎல்எப் இன் உதய சூரியன் சின்னத்தை வழங்கவும் முன்வந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழரசுக் கட்சிக்கு எதிரணியில் உள்ள நான்கு கட்சிகளுக்கு எதிராகவும் அதன் தலைமைகளுக்கு எதிராகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் மிக மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தினர். புளொட் தலைவர் உமாமகேஸ்வர்ன் தவிர்ந்த ஏனைய அமைப்புகளின் தலைவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளாலேயே படுகொலை செய்யப்பட்டனர். உமாமகேஸ்வரன் புளொட் அமைப்பினுள் எடுக்கப்பட்ட முடிவுக்கமைய உட்படுகொலை செய்யப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் மிகப் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்றிருந்தனர். தமிழரசுக் கட்சிக்கு எதிரணியில் உள்ள நான்கு கட்சிகளுமே தமிழீழ விடுதலைப் புலிகளால் துரோகிகள் ஒட்டுக் குழுக்கள் என அடையாளம் காட்டப்பட்டவர்கள். தற்போதைய வாக்கு வங்கியைத் தீர்மானிப்பதில் இதுவொரு முக்கிய காரணியாக அமையும். எதிரணியின் சின்னமான உதய சூரியன் சின்னமும் சர்ச்சைக்கு உரியதே.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக உதய சூரியன் பயன்படுத்தப்பட்டதனால் கிளிநொச்சியின் இரு உள்ளுராட்சிப் பிரிவுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறைவான வாக்கு வீதத்தையே பெற்றிருந்தது. வீட்டுச் சின்னம் பயன்படுத்தப்பட்ட வன்னியின் ஏனைய பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடிய வீத வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சி இல்லாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஆண்டிகள் கூடி மடம் கட்டுவதற்கு ஒப்பானது.

தமிழ் அரசியல் களத்தில் முத்தரப்பு போட்டி ஏற்படும். குறிப்பாக அரசுக்கு எதிரான அணியில் ஏற்படும் பிளவு அவர்களது வாக்கு வங்கியையே பாதிக்கும். இவ்வாறான ஒரு நிலை உருவாகுமானால் அது ஈபிடிபி கட்சியின் அரசியல் எதிர்காலத்திற்கு மிகவும் சாதகமாக அமையும்.

இது தொடர்பான வேறு பதிவுகள்

  • வேறு பதிவுகள் இல்லை!
உங்கள் கருத்து
  1. Ajith on June 21, 2012 10:48 am

    ஆண்டிகள் சேர்ந்து மேடம் கட்டுகின்றனர். //ஜெயபாலன்
    என்ன அழகான ஆய்வு. இந்த ஆய்வின் நோக்கம் என்ன என்பதை பலரும் புரிந்து கொண்டு இருப்பார்கள் என நம்புகிறேன். “ஆடு நனையுது என்று நரி கவலைபட்டதாம் “.என்ற ஒரு பழமொழி. இந்த ஆய்வின் சிறப்பு “செய்திகள் கசிந்தன, கிடைக்கும் செய்திகள் தெரிவிகின்றன, தெரியவருகிறது, சந்தேகம் சிலரிடம் உண்டு.” என்ற கொசிப்பு.


  2. பல்லி on June 21, 2012 11:40 am

    //ஆண்டிகள் சேர்ந்து மேடம் கட்டுகின்றனர்//
    இல்லை இல்லை அவர்களால் மடத்தைதான் கட்ட முடியும், காரணம் அவர்கள் மேடங்களால்தான் ஆண்டிகள் ஆகி இருப்பார்கள்;

    //இரா சம்பந்தனின் உரை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. இதில் குறிப்பாக ஈபிஆரெலெப் சுரேஸ் அணியின் கனவை இரா சம்பந்தன் ஒரே நாளில் கலைத்துவிட்டார்.// தொடர்ந்தும் சம்பந்தன் தன் கனவுகள் கூட கலையும் அளவுக்கு ஆடுவார் ஏசுவார்,

    //தமிழரசுக் கட்சியின் மாநாட்டைத் தொடர்ந்து ஈபிஆரெலெப் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றார்.// ஆனால் அது கலகலப்பாக அல்லவா இருக்கு;

    //இவற்றுக்கு முன்னதாக ரியுஎலெப் தலைவர் வி ஆனந்தசங்கரி தனது கட்சிக்கு தலைமை தாங்குமாறு புளொட் தலைவர் த சித்தார்த்தனைக் கேட்டுக்கொண்டதாக செய்திகள் கசிந்தன. ஆனால் இதனை வி ஆனந்தசங்கரி முற்றாக மறுத்துள்ளார்.//
    அதுக்காகவே வாழும் சங்கரியா இப்படி கெடுப்பார்,

    //தற்போது தமிழரசுக் கட்சிக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளை ஒருங்கிணைப்பதில் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஓரளவு வெற்றி கண்டுள்ளார். தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஈபிஆரெலெப் (சுரேஸ் அணி), புளொட், ரியுஎலஎப், ரெலோ ஆகிய கட்சிகள் ஒத்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிய வருகின்றது//
    வாழ்த்துக்கள்; ஆனால் சுரேஸ், வரதர்; சுகு, துரைரட்னம், எப்போது இனைய போகிறார்களாம்??

    :://தமிழரசுக் கட்சி இல்லாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஆண்டிகள் கூடி மடம் கட்டுவதற்கு ஒப்பானது.//
    தமிழரசு கட்சியே தாம் தான் கூட்டமைப்பு என சொன்னால் அது உறவற்ற திருமணம் போல் ஆகிவிடாதா?? ஆக மகிந்தாவின் கையை பலப்படுத்துவதில் இரு அணியும் மிக கவனமாக செயல் படுகிறார்கள் என ஆண்டிகள் மடத்தில் இருந்து சம்பந்தரின் கூட்டை பார்க்கும் போது தெரிகிறது, வாழ்க தமிழர் தலமை வளர்க மகிந்த அரசு;


  3. BC on June 21, 2012 5:30 pm

    நடைபெற்றவைகளை அப்படியே எழுதியுள்ளீர்கள். சுரேஸ் பிரேமச்சந்திரனின் மண்டையன் குழுவின் படு மோசமான செயல்கள், புளொட்டின் படு கொலைகளை கட்டுரையில் பதிவு செய்தது பாராட்டுக்குரியது.


  4. வடிவேலு on June 21, 2012 6:11 pm

    அரச எதிர்ப்பு கூடாரதிட்குள் [ஜெயபாலன் சொல்கின்றார் சங்கரியும், சித்தனும் அரச எதிர்ப்பாம் ஆனால் சித்தனின் கும்பல் அரச துணைப்படையாம்] நடக்கும் குத்துவெட்டு சம்பந்தன் குழுவினருக்கு தமிழ் மக்கள் மத்தியில் கிளம்பும் எதிர்ப்பின் எதிரொலி. இவர்களின் கையலாகத்தன்மை பரந்துபட்ட அளவில் வெளிப்படையாக தெரிவதுடன் தொடர்ந்தும் இவர்களை ஏற்றுக்கொள்ள பெரும்பானமையோர் தயாரில்லை.

    மாவை ஊர்வலத்திற்கு தலைமை தாங்க நிர்ப்பந்திக்கபட்ட நிலை. நீண்ட காலம் எடுக்க போவதில்லை இவர்கள் இல்லாமல் இராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சி ஒன்று உருவாக்குவதற்கு. டக்லஸ் கண்டபடி இராணுவம் நிலம் எடுக்க முடியாது என்று கூறும் அளவிற்கு நெருக்கடி உருவாகின்றது. இதனைக் கேட்பதற்கு இராணுவம் ஆள் சேர்த்து காவல் காக்கின்றது. இந்த இரண்டு கூடாரங்களையும் தவிர்த்து ஒரு பாதையினை தேடாவிட்டால் இந்த கிளர்சி தோல்வியடைவது தவிர்க்க முடியாதது.

    >>> தமிழ் அரசியல் களத்தில் முத்தரப்பு போட்டி ஏற்படும். குறிப்பாக அரசுக்கு எதிரான அணியில் ஏற்படும் பிளவு அவர்களது வாக்கு வங்கியையே பாதிக்கும். இவ்வாறான ஒரு நிலை உருவாகுமானால் அது ஈபிடிபி கட்சியின் அரசியல் எதிர்காலத்திற்கு மிகவும் சாதகமாக அமையும் <<<

    அடுத்த கட்டுரையில் இந்த "சாதகம்" எப்படி சாத்தியமாகும் என்பதை எழுதி அதற்கு "பனை வளர்த்து கள்ளுக்குடிப்போம்" அல்லது "அழுக்கு எண்ணை ஊத்தி அபிவிருத்தி செய்வோம்" அல்லது "மாமா டக்ளசின் தலைமையில் மகளிர் விடுதலை" என்ற தலைப்பினை தெரிவு செய்யலாம்.

    எப்பிடி இருப்பினும் அரசு எதிர்ப்பு தேசிய வாதிகளுக்குள் நடக்கும் குத்து வெட்டினை சாதகமாக்கி அரச ஆதரவு தேசிய வாதிகள் லாபம் தேட முனைவது ஒன்றும் புதிது இல்லை. ஆனால் இதில் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.

    ஜெயபாலனின் முயற்சிகள் அரச சார்பு கொடுக்கல் வாங்கலுக்குள் என்ன பலனை கொடுத்தன என்பதை அவர் இரத்தின ஜீவன் கூலினால் யாழ்ப்பாணத்தின் ஏழை மக்களிக்கு கல்வி அபிவிருத்தி அடைய முயன்றதும் லண்டன் கூட்டத்தில் தவராஜாவின் துவக்குக்கு சரணடைந்ததிலும் தெரிந்தது.

    விக்ரமாதித்தன் பெருமூச்சு விட்டபடி முருங்க மரத்தினை நோக்கி மீண்டும் நடக்க தொடங்கினான்.


  5. விமலநாதன் on June 22, 2012 1:30 pm

    இன்றைய வடக்கின் ஒரு யதார்த்தம் இது! டக்கிளஸ் ஒரு பக்கத்தால் தனது கட்சியை வளர்க்க முனைந்தாலும் இலங்கையின் முக்கிய தேசிய கட்சிகளான ஐதேகாவும் சுதந்திர கட்சியும் தனது சொல்வாக்கை மக்களிடம் இன்று பெற்று வருகிறது என்பது தான் உண்மை. இதன் முதல் படியாக ஐதேகாவில் மண்ணெண்ணை மகேஜ்வரினின் மனைவி ஐதேகாவின் யாழ் பொறுப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அனால் இதை விட ஒரு படி மேல் போய் சுதந்திர கட்சி அதன் யாழ் அமைப்பாளர் அங்கஜன் மூலம் வேலையற்ற பட்டதாரிகளை அயிரக்கணக்கில் இணைத்துள்ளது. இவர்களிறக்கு இன்னும் இரு வருடங்களில் தொழில் வாய்ப்பு உறுதிமொழி செய்யப்பட்டதை அடுத்து இவர்கள் இணைந்துள்ளனர். ஆனால் தேசிய கூத்தமைப்பபும் கூட்டணியும் இன்னும் மக்களை உசுப்பேத்துவதன் முலம் ஆட் சேரக்க முனைகிறது!


  6. சாந்தன் on June 22, 2012 4:46 pm

    ஜெயபாலனின் இந்த ‘அலசலில்’ தெரியவரும் சில விடயங்கள்…

    1) மாற்றுக்கருத்தாளர், மாற்று அரசியல்காரர்கள், கறைபடியாக்கரங்களின் சொந்தக்காரர்கள், இணக்க அரசியலாளர்கள், புரட்சிக்காரர், மக்கள்மயக்காரர்… என இன்னும் பல பெயர்களில் வெள்ளையடிக்கப்பட்டவர்கள் எல்லோரும் மக்களால் நிராகரிக்கப்பட்டு உளவு நிறுவனங்களால் ‘பராமரிக்கப்பட்ட’, உட்கொலை செய்தவர்கள் என்ற உண்மை

    2)தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ்மக்களிடம் அமோக ஆதரவைப் பெற்றவர்கள் என்கின்ற உண்மை

    இது தேசம்நெற் ஜெயபாலனுக்கு இன்று எந்தப் பாதிரியாரின் ‘ஞானஸ்நானம்’ மூலம் தெரியவந்ததோ எனக்கு தெரியாது. ஆனால் எல்லோருக்கும் தெரிந்தவையை வெள்ளையடிக்க முயல்வோருக்கு சிலவேளைகளில் ‘ஞானஸ்நானம்’ தேவைப்படுதல் தவிர்க்க முடியாதது!

    3) புளோட்டையும், ஈ.பி.ஆர்.எல்.எ.ஃப் இன் கொலைகளுக்கு பழையபடி ’வசதிகருதி’ இரத்தச்சாயம் பூசிய ஜெயபாலன் ரெலோவை மட்டும் இந்தியாவுடன்/ஸ்ரீலங்காவுடன் சேர்ந்த அமைப்பு என நோகாமல் ‘மெல்லிய தட்டு’ ஒன்றுடன் நின்றுவிடுகிறார். தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் போன்ற தமிழ் எம்பிக்களின் கொலையை கூட ஏனோ சொல்லவில்லை? எங்கேயோ உதைக்குதே!

    புலிகள் ரெலோவைச் சுட்டுக்கொல்லும்போது சோடா கொடுத்த மக்களுக்கு இவர்களின் கொலை, இந்திய புலனாய்வு தொடர்பு, சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதலில் இந்திய பங்கு, ரயில்வண்டித் தாக்குதலில் இந்திய ராணுவ நேரடிப்பங்கு என அடிபட்ட கதைகள் தெரிந்திருந்ததோ?

    4) எல்லாவற்றிலும் ஜோக் டக்ளசுக்கு அரசியல் எதிர்காலமாம்!! இரண்டு நாளுக்கு முன்னர் கூட ‘நான் கொஞ்சம் பின்போடுங்கோ எண்டு சொன்னன் எண்டா… கிடப்பில போடுவினம்’ என பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு வந்திருந்த பொம்பிளையளுக்குச் சொன்னவர் இவர். இந்த மாதிரி வெருட்டல்களை அரசியல் எதிர்காலம் எனச் சொல்வார்களா?

    5) என்னது அங்கஜன் ராமநாதனா? அவர் எங்க இருக்கிறர்? எங்க அப்பொயின்மன்ற் குடுக்கிறார்? இதில் பட்டதாரிகளை ஆயிரக்கணக்கில் இணைத்துள்ளது என கதை வேறு விடுகிறார்கள்! போகிற போக்கைப்பார்த்தால் ஸ்ரீமா கட்டிய ஆயிரக்கணக்கான பாடசாலைகளில் அவர்களுக்கு அப்பொயின்மற் கொடுத்திருக்கு எனச் சொன்னாலும் சொல்வார்கள்!


  7. சாந்தன் on June 22, 2012 5:30 pm

    6) இந்த ஆனந்த சங்கரி திடீரென கொடை வள்ளலாக மாறிவிட்டார் என்கின்ற செய்தி புல்லரிக்குது. மிகவும் இக்கட்டானதும் முக்கியமானதுமான ஒரு கால கட்டத்தில் உதயசூரியன் சின்னத்தை தமிழ்க்கூட்டமைப்பு கேட்டபோது கொடுக்க மறுத்தவர். உதயசூரியன் சின்னமும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் பதிவுசெய்யப்பட்ட போது நிகழ்ந்த சின்ன ”ரெக்னிக்கல் பொயின்ரை” வைத்து இவரும் ஆவரங்கால் சின்னத்துரையும் ஆடிய ஆட்டம் நாம் அறிந்ததே! இதனை ஸ்ரீலங்கா தேர்தல் திணைக்களம் (அடிப்படையில் அரசு) ஏதோ நீதி நியாய லெவலில் இவருக்கு ஆதரவு வழங்கின! சங்கரியும் போகிற இடமெல்லாம் இருக்கும் புலி எதிர்ப்பு ரேடியோக்களில் முழங்கினார். உதயசூரியனில் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் தெள்ளத்தெளிவு!!
    “அகவை 79 ஐ நோக்கிய அண்ணன் ஆனந்த சங்கரி” க்கு புரியாதா? அவர் மகிந்தாவுக்கும் தம்பி பிரபாகரனுக்கும் லெற்றர் எழுதியதுடன் சரி. இப்போ கொடை வள்ளல். காசு பொருள் என நினைச்சிடாதயுங்கோ அதனிலும் மதிப்பு மிக்க உதயசூரியன் சின்னம்!
    போகிற போக்கில தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சியை தடை செய்தாலும் செய்து விடுவார்கள் போலிருக்கு. சிங்கள உறுமய உறுமிக்கொண்டு திரியுது. தமிழ் மக்களும் இவருக்கு சப்போட் இல்லை. அற்லீஸ்ற் கட்சிச்சின்னத்தை கொடுத்த கொடை வள்ளல் என்கின்ற பெயராவது மிஞ்சும்!!
    “அகவை 79 ஐ நோக்கிய அண்ணன் ஆனந்த சங்கரி” க்கு தெரியாதா?


  8. kanthasami on June 22, 2012 11:14 pm

    தேசம் ஆசிரியர் ஜெயபாலன் அவர்கள் தனது வழக்கமான நக்கல் நையாண்டிகளுடன் இதனை எழுதியுள்ளார். நன்றாக இருக்கிறது.இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்.இருப்பினும் இதில் குறிப்பிடப்படும் பல பிரமுகர்களுடன் தனிப்பட்ட ரீதியில் நல்ல உறவு இருந்தாலும்கூட அது பற்றி கவலைப்படாது மக்களுக்காக தைரியமாக கட்டுடைத்தார் என்றே சொல்லவேண்டும்.அவருக்கு எனது பாராட்டுக்கள்.தொடர்ந்தும் இதேபோல் கட்டுரைகளை அவர் தரவேண்டும் எனக் கெட்டுக்கொள்கிறேன்.


  9. பல்லி on June 22, 2012 11:18 pm

    //இக்கட்டானதும் முக்கியமானதுமான ஒரு கால கட்டத்தில் உதயசூரியன் சின்னத்தை தமிழ்க்கூட்டமைப்பு கேட்டபோது கொடுக்க மறுத்தவர்//
    தவறு சம்பந்தர் கேட்டபோது கொடுக்க மறுத்தவர் என்பதே சரி;

    /உயசூரியன் சின்னமும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் பதிவுசெய்யப்பட்ட போது நிகழ்ந்த சின்ன ”ரெக்னிக்கல் பொயின்ரை” வைத்து இவரும் ஆவரங்கால் சின்னத்துரையும் ஆடிய ஆட்டம் நாம் அறிந்ததே!//
    ஆனால் அதன்பின் ஆவரங்கால் சின்னதுரை அச்சுவேலி வழியாக வல்வெட்டி சென்றதையும் நாமும் அறிவோம்,

    //ரெக்னிக்கல் பொயின்ரை” வைத்து இவரும் ஆவரங்கால் சின்னத்துரையும் ஆடிய ஆட்டம் நாம் அறிந்ததே! இதனை ஸ்ரீலங்கா தேர்தல் திணைக்களம் (அடிப்படையில் அரசு) ஏதோ நீதி நியாய லெவலில் இவருக்கு ஆதரவு வழங்கின! சங்கரியும் போகிற இடமெல்லாம் இருக்கும் புலி எதிர்ப்பு ரேடியோக்களில் முழங்கினார்//
    இது கடுப்பு ஆனால் அவர் இன்றும் முழங்குகிறார் என்பதெ கருத்து;
    //. உதயசூரியனில் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் தெள்ளத்தெளிவு!!//
    கூட்டணிக்கே சங்கா?? வாழ்க கூத்து கூட்டு;
    :://அகவை 79 ஐ நோக்கிய அண்ணன் ஆனந்த சங்கரி” க்கு புரியாதா?//
    சிவலிங்கம் இது உங்க நேரம்;;;;

    //மகிந்தாவுக்கும் தம்பி பிரபாகரனுக்கும் லெற்றர் எழுதியதுடன் சரி. // ஆனால் ஒரு லெற்றருக்கு கூட பிரபாகரன் பதில் பொடவில்லை என்பது அவர் கவலையாம்;

    //இப்போ கொடை வள்ளல்// மறுக்க முடியாத உன்மை;

    //காசு பொருள் என நினைச்சிடாதயுங்கோ அதனிலும் மதிப்பு மிக்க உதயசூரியன் சின்னம்!// ஏன் பாரிஸ்சில் கொடுத்த பரிசு என்னாச்சு??

    //போகிற போக்கில தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சியை தடை செய்தாலும் செய்து விடுவார்கள் போலிருக்கு. //
    தமிழருக்கு ஒரு விடிவு வேண்டுமாயின் இந்த தடை கல்லையும் உடைக்கலாம்;

    //சிங்கள உறுமய உறுமிக்கொண்டு திரியுது// சம்பந்தரை விடவா??

    //தமிழ் மக்களும் இவருக்கு சப்போட் இல்லை.// புலத்து தமிலரா?? அல்லது தளத்து தமிழரா??

    :://அற்லீஸ்ற் கட்சிச்சின்னத்தை கொடுத்த கொடை வள்ளல் என்கின்ற பெயராவது மிஞ்சும்!!::
    இதுதான் உங்க ஜோக்கா??

    //அகவை 79 ஐ நோக்கிய அண்ணன் ஆனந்த சங்கரி” க்கு தெரியாதா?//
    இதுக்கான விடையை அகவை 80ல் எதிர்பார்க்கலமா??


  10. 7thdayisvavuniya on June 23, 2012 11:13 am

    ஜெயபலத்துக்கு வல்த்துக்கல்!

    7ம் அட்வெண்டிஸ்ட் சர்வதேச பாடசாலை பிள்ளைகளின் பெற்றோர்கள்.


  11. சாந்தன் on June 23, 2012 3:33 pm

    பல்லியின் கருத்துகளில் இருந்து தெரிவது பல்லிக்கு நான் எழுதிய விடயங்களோ அன்றி அவைநடந்த காலகட்டங்களோ அவற்றினால் ஏற்பட்ட விளைவுகளோ என்பன பற்றி எதுவும் தெரியாது அல்லது தெரியாததுபோல் நடக்கிறார். கடந்த விவாதத்தில் ”எழுதுவோருக்கும் வாசிப்போருக்கும் காலவிரயம்” எனும் றோகனின் பின்னூட்டக்கருத்து நினைவுக்கு வருவதாலும் பதிலுக்கு பதில் எழுதி பல்லி ‘மாட்டுப்பட்டுத் தவிக்கிறேன்’ எனும் நிலைக்கு பல்லி வருவதை விரும்பாமையினாலும் பல்லிக்கு பதில் சொல்வதை தவிர்க்கிறேன்.


  12. Ajith on June 25, 2012 8:54 am

    நடைபெற்றவைகளை அப்படியே எழுதியுள்ளீர்கள். சுரேஸ் பிரேமச்சந்திரனின் மண்டையன் குழுவின் படு மோசமான செயல்கள், புளொட்டின் படு கொலைகளை கட்டுரையில் பதிவு செய்தது பாராட்டுக்குரியது.//BC

    இந்த படுகொலைகள் இப்போது தான் ஜெயபாலன் கண்டு பிடித்தார் என்பதற்காக பாராட்டா அல்லது இதுவரையில் மறைத்து வைத்தற்கானதா இந்த பாராட்டு? யார் யார் டக்லஸ் இற்கும் ராஜபக்சே இற்கும் எதிரானவர்களோ அவர்கள் தப்ப முடியாது. இதுதான் நிஜம்.


  13. IT Sampanthan on June 25, 2012 8:49 pm

    Jeyabalan, Very good ananalysis, Thaough I am out Uk, I apreciate your article. Intelligent ananlysis. You never hesitateto tellthe truth. Thanks


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு