இலங்கையில் இருந்து தமிழகம் அனுப்பப்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சோகம் தொடர்கிறது
இலங்கையின் மலையகப் பகுதிகளில் இருந்து இலங்கை – இந்திய அரசுகளின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருப்பி அனுப்பப்பட்ட மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்நிலை இன்றும் மிகவும் மோசமாக உள்ளதாக ஹிந்து பத்திரிகை தெரிவிக்கின்றது. தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கூட்டுத்தாபனத்தால் நிரந்தர வேலை வழங்கப்பட்டோரில் 3850 பேருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. வரிசையாகக் கட்டப்பட்டுள்ள 400 சதுர அடி பரப்பையே கொண்ட இவ்வீடுகள் லையன்கள் ஆகவே உள்ளன. இவ்வீடுகள் தற்போது குடியிருக்க முடியாத அளவுக்கு சீரழிந்தும் உள்ளதாக அப்பத்திரிகைச் செய்தி தெரிவிக்கின்றது. இவ்வீடுகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாது உள்ளதாகவும் அச்செய்தி தெரிவிக்கின்றது.
இலங்கையில் இருந்து வருகின்ற தேயிலைத் தோட்டப் பணியாளர்களை மீளக் குடியமர்த்துவதற்காக 1975இல் உருவாக்கப்பட்ட தமிழ் நாடு தேயிலைத் தோட்டக் கூட்டுத்தாபனம் நீலகிரி மாவட்டத்தில் 8 பிரிவுகளில் 2513 இலங்கையில் இருந்து திரும்பிய குடும்பங்களை குடியமர்த்தி உள்ளது.
இவர்களின் வீடுகளின் நிலை மட்டுமல்ல தொழில் நிலைமைகளும் கடினமானதாகவே உள்ளது. இவர்கள் இன்னமும் தினக் கூலிகளாகவே உள்ளனர். இதுவரை இவர்கள் புடுங்குகின்ற தேயிலையின் நிறைக்கு ஏற்பவே கூலி வழங்கப்பட்டு வந்தது. தற்போது இவர்களுக்கு குறைந்தபட்ச தினக் கூலி 78 ரூபாய் உம் மேலதிக கொடுப்பனவாக 67 ரூபாய் உம் ஆக 145 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது.
இலங்கை பிரித்தானியாவின் காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டு இருந்த காலத்தில் 1870க்களில் இந்தியத் தமிழர்கள் மலையகத் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காகக் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் அன்றைய காலகட்டத்தில் அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட போது மோசமான கஸ்டங்களை எதிர்கொண்டதுடன் ஆயிரக் கணக்கில் உயிரிழந்தனர்.
1948இல் சுதந்திர இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றிய டி எஸ் செனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜிஜி பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் கொங்கிரஸ் ஆதரவளித்தது. ஜிஜி பொன்னம்பலம் அந்த அரசாங்கத்தில் அமைச்சராக்கப்பட்டார்.
மலையகத்தில் இருந்து கூடுதலான இடதுசாரிகள் பாராளுமன்றம் சென்றதனைத் தொடர்ந்து அதனைத் தடுக்கவும்; இனவாத அடிப்படையிலும் மலையகத் தமிழரின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. 1948இல் கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டம், 1949இல் கொண்டுவரப்பட்ட இந்திய – பாகிஸ்தான் பிரஜாவுரிமைச் சட்டம் என்பவற்றின் கீழ் மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமை பறிக்கபட்டு; அவர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர். இப்பிரஜாவுரிமையைப் பறித்த அரசாங்கத்தில் அமைச்சராக ஜிஜி பொன்னம்பலம் (கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பேரன்)இருந்தார்.
மலையகத் தமிழரின் வாக்குரிமையைப் பறிக்க தமிழ் கொங்கிரஸின் தலைவர் ஜிஜி பொன்னம்பலம் அதரவளித்தமையே எஸ் ஜே வி செல்வநாயகம் தமிழ் கொங்கிரஸில் இருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியை உருவாக்கக் காரணமாய் இருந்தது.
ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீபம் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தமிழ் கொங்கிரஸ் மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொடுக்க போராடியதாகவும் அவர்களில் குறிப்பிடத்தக்க அளவினருக்கு அவர்கள் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுத்ததாகவும் உண்மைக்குப் புறம்பாகத் தெரிவித்து இருந்தார்.
1964, 1974 ஆகிய ஆண்டுகளில் இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட இரு நாட்டு உடன்படிக்கைக்கு அமைய 10 இலட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் இன்றும் கடினமான வாழ்வை எதிர்கொள்கின்றனர்.

Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed
அவசியம் நாம் தெரிந்திருக்க வேண்டிய உண்மைகள். கட்டுரைக்கு நன்றி. //இலங்கை பிரித்தானியாவின் காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டு இருந்த காலத்தில் 1870க்களில் இந்தியத் தமிழர்கள் மலையகத் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காகக் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் அன்றைய காலகட்டத்தில் அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட போது மோசமான கஸ்டங்களை எதிர்கொண்டதுடன் ஆயிரக் கணக்கில் உயிரிழந்தனர்//
ஆட்கள் சொன்னவற்றை வைத்தும், ஏழாம் அறிவு பார்த்ததிலிருந்தும் உலகத்தை கட்டி ஆண்ட தமிழன் என்று கம்பீரமாக அல்லவா நினைத்து கொண்டிருந்தேன்.
//…ஆட்கள் சொன்னவற்றை வைத்தும், ஏழாம் அறிவு பார்த்ததிலிருந்தும் உலகத்தை கட்டி ஆண்ட தமிழன் என்று கம்பீரமாக அல்லவா நினைத்து கொண்டிருந்தேன்…..//
சினிமாவில் பார்ப்பதையும், ஆட்கள் சொன்னவற்ரையும் வைத்து கதை விடுபவர் நீங்கள் என எமக்கு எப்போதோ தெரியும்!!!
இவரின் கதைகள் இவரோடு சேர்ந்த ஆட்களின் கதைகளை எல்லாம் ஒரு பொருட்டாக தன்னும் எடுக்க கூடாது என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.
சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இந்தியாவிற்க்கே திரும்பவும் சென்ற முதியவர் (தோட்டத்தொழிலாளி) ஒருவரை தமிழகத்தில் தற்செயலாக சந்திக்க நேரிட்டது. தலை முடி வாரிவிட்ட விதம் சாரக்கட்டு என்பன அவரை இலங்கயைச் சார்ந்தவர் போல எடுத்துக்காட்டியது. அவருடன் பேசிப்பார்த்தேன். பல விடயங்கள் பேசினோம். முக்கியமான ஒன்றை கூறுகின்றேன். அவரின் பேச்சு அசல் இந்தியரின் பேச்சுமொழியாக இருந்தது. ஆனால் தானும் இலங்கைதான் என்றார் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் பிரகாரம் வீடும் பணமும் கொடுப்பதை அறிந்து இந்தியாவிற்க்கு வந்ததாகவும் சிறியதொகை பணம் கொடுத்ததாகவும் வீடு கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்தார். அத்துடன் இலங்கையில் இருக்கும் போதும் பாகுபாடு காட்டினார்கள் தற்ப்போது இலங்கையில் இருந்து வந்ததால் இங்கும் பாகுபாடுதான் என வருத்தப்பட்டார். பேச்சு எல்லாம் அசல் இந்தியன் மாதிரி இருக்கின்றதே அத்துடன் உங்கள் பூர்வீகம் இந்தியா அப்படியிருக்க எப்படி உங்களை எப்படி இலங்கையிலிருந்து வந்தவர் என்று இனம் காண்கின்றனர் என்று கேட்டதற்க்கு தம்பி எனக்கு இலங்கையிலிருந்து வந்தேன் என்று சொல்வது பெருமையாக இருக்கின்றது என்று கூறினார். இதன் விளைவுகள் என்ன என்று தெரியாத அப்பாவிகள். இனிமேல் இலங்கையிலிருந்து வந்ததாக கூறவேண்டாம் என கூறி என் மனது ஆறுதலடைய என்னால் முடிந்த சிறிய தொகை பணத்தை கொடுத்தேன்..
அவசியம் நாம் தெரிந்திருக்க வேண்டிய உண்மைகள்.//
இங்கு எதுவும் புதிதாக இல்லை. ஆனால் ஒரு உண்மை மறைக்கப்பட்டு உள்ளது. 1948இல் சுதந்திர இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றிய டி எஸ் செனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜிஜி பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் கொங்கிரஸ் ஆதரவளித்தது உண்மை. ஜிஜி பொன்னம்பலம் அந்த அரசாங்கத்தில் அமைச்சராக்கப்பட்டார். அப்போது சிங்கள இன்வாதசக்திகளின் (ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரான பண்டாரனையகவும் அதில் உள் அடக்கம்). சிங்கள இனவாதிகளை திருப்தி படுத்தவும் தமிழர் விகிதாசாரத்தை குறைக்கவும் 1948 இல் இலங்கை குடி உருமை சட்டம் திருத்தப்பட்டது. இலங்கை இந்திய காங்கிரஸ் உம் இலங்கை தமிழர் காங்கிரஸ் உம் இந்த சட்ட மூலத்தை எதிர்த்து.
சிங்கள இனவாதிகளை மேலும் திருப்திபடுத்த பண்டரனையகே சுதந்திர கட்சியை உருவாகியதும் சிங்களம் மட்டும் சட்டத்தை கொண்டுவந்ததும் அடுத்த இன அழிப்பு நாடகத்தின் ஒருபகுதி. அதன் ஒரு அங்கமாக முக்கிய நிகழ்வு தான் சிறிமா -சாஸ்திரி ஒபந்தம். இந்த ஸ்ரீமாவின் அடுத்த முயற்சியான பௌத்த-சிங்கள அரசமைப்பை 1972 இல் உருவாகியதற்கு தமிழ் இடது சாரிகளும் சிங்கள இடதுசாரிகளும் ஆதரவு அளித்ததை தமிழர்கள் எவரும் மறந்து விடமாடார்கள். இதன் உச்சகட்ட நாடகம் தான் முல்லிவாய்கால் இன அழிப்பும இதற்கு உடந்தையாக இன வாத ராஜபக்சே அரசுக்கு ஆதரவு வழங்கிய வழங்கி வரும் டக்லஸ் தேவானந்தா தலைமையினால கூடு குழுவும் அதன் ஆதரவு சக்திகளும்.
திரு ஜி ஜி பொன்னம்பலம் மலைநாட்டு தமிழரின் வாக்கு உரிமையை பறித்த அரசில் அமைச்சராக இருந்தார். தமிழ் மக்களின் ஒட்டு மொத இன அழிப்பை நடத்த ராஜபக்சே அரசின் அமைச்சராக டக்லசும் இடதுசாரிகளும் முன்நாள் போராளிகளும் இருக்கிறார்கள் என்பதனை மறந்து விட முடியுமா?
இந்திய தமிழன் என்று நினைத்து இலங்கையில் பாகுபாடு அவருக்கு. இலங்கை தமிழன் என்று நினைத்து இந்திய தமிழ்நாட்டில் பாகுபாடு. ஈழம் எடுத்து கொடுக்க வேண்டும் என்பதும் பாகுபாட்டினாலேயே.
//ஈழம் எடுத்து கொடுக்க வேண்டும் என்பதும் பாகுபாட்டினாலேயே.//
இதனைச் சாதாரண தமிழில் எப்படிச் சொல்லலாம்?
//இதனைச் சாதாரண தமிழில் எப்படிச் சொல்லலாம்?//றோகன்
வர்த்தக விளம்பரத்திற்கு ஆந்திரா தமிழீழ விளம்பரத்திதிற்கு தமிழ்நாடு முதலீட்டுக்கு கேரளா. சர்வதேச மோசடிக்கு வட இந்தியா.
பணத்திற்கு புலம்பெயர்தமிழர். உயிர்கொடுக்க ஈழத்தமிழர்
நாம் இந்தியருமல்ல, இலங்கையருமல்ல வாழும் நாடுகழும் எமதல்ல
சிகரம்போல் வளர்ந்த மேல்நாடுகளில் கோபுரத்தில் கூடுகட்டும் குருவிபோல் வாழுவோம் நாங்கள். அது மட்டுமல்ல கோபுரத்தை கட்ட எண்ணுக் குருவிபோல் எமக்கு தனிநாடு வேண்டுமென நெடுநாளாசை காரணம் பாகுபாட்டினை தமிழரிடம் அழியாது கடைப்பிடிக்கவேயாகும்.-துரை
//…..வர்த்தக விளம்பரத்திற்கு ஆந்திரா தமிழீழ விளம்பரத்திதிற்கு தமிழ்நாடு முதலீட்டுக்கு கேரளா. சர்வதேச மோசடிக்கு வட இந்தியா. பணத்திற்கு புலம்பெயர்தமிழர். உயிர்கொடுக்க ஈழத்தமிழர். நாம் இந்தியருமல்ல, இலங்கையருமல்ல வாழும் நாடுகழும் எமதல்ல…..//
பாகுபாட்டை சொல்லச் சொன்னால் ‘ஒற்றுமையை’ சொல்லிக்கொண்டு போகிறீர்களே? இந்த ‘ஒற்றுமை’ கூட நீங்கள் வலிந்து தமிழரின்மேல் கட்டியழும் ‘ஒற்றுமை’ அன்றி வேறில்லை!!
துரை, தனிநாடு வேண்டுமென இவர்கள் காட்டும் பாகுபாட்டினை நன்றாக விளங்கபடுத்தியுள்ளீர்கள்.
தங்கள் ஆட்களின் பிள்ளைகளை பத்திரமாக வெளிநாட்டில் படிக்க வைத்து கொண்டு இலங்கையில் படிக்கபோன பிள்ளைகளை பிடித்து கொண்டு போய் பலி கொடுத்தது கொடூரமான பாகுபாடு.
//கருத்து: ஈழம் எடுத்து கொடுக்க வேண்டும் என்பதும் பாகுபாட்டினாலேயே.//
/கேள்வி: இதனைச் சாதாரண தமிழில் எப்படிச் சொல்லலாம்?/
/விளக்கம் 1: வர்த்தக விளம்பரத்திற்கு ஆந்திரா தமிழீழ விளம்பரத்திதிற்கு தமிழ்நாடு முதலீட்டுக்கு கேரளா. சர்வதேச மோசடிக்கு வட இந்தியா.
கோபுரத்தை கட்ட எண்ணுக் குருவிபோல் எமக்கு தனிநாடு வேண்டுமென நெடுநாளாசை காரணம் பாகுபாட்டினை தமிழரிடம் அழியாது கடைப்பிடிக்கவேயாகும்/
/விளக்கம் 2: தங்கள் ஆட்களின் பிள்ளைகளை பத்திரமாக வெளிநாட்டில் படிக்க வைத்து கொண்டு இலங்கையில் படிக்கபோன பிள்ளைகளை பிடித்து கொண்டு போய் பலி கொடுத்தது கொடூரமான பாகுபாடு./
அதற்குள்…
/துரை, தனிநாடு வேண்டுமென இவர்கள் காட்டும் பாகுபாட்டினை நன்றாக விளங்கபடுத்தியுள்ளீர்கள்./
அற்புதமான விளக்கங்கள்!!
//பாகுபாட்டை சொல்லச் சொன்னால் ‘ஒற்றுமையை’ சொல்லிக்கொண்டு போகிறீர்களே? இந்த ‘ஒற்றுமை’ கூட நீங்கள் வலிந்து தமிழரின்மேல் கட்டியழும் ‘ஒற்றுமை’ அன்றி வேறில்லை!!//சாந்தன்
//அதற்குள்…
/துரை, தனிநாடு வேண்டுமென இவர்கள் காட்டும் பாகுபாட்டினை நன்றாக விளங்கபடுத்தியுள்ளீர்கள்./
அற்புதமான விளக்கங்கள்!!//றோகன்
உலகத்தமிழர் என்பதும், ஈழத்தமிழர் என்பதும், ஏன்,எப்படி,எதற்காக? புலிகளை விட வேறு யாவரும் சினிமா நிகழ்ச்சிகளோ, கலைநிகழ்சிகளோ நடத்தப்படாதென சர்வதேச சட்டம் வகுத்தவர்கள் யார்? 30 வருடகாலமாக எங்கு போய் இருந்தீர்கள்.
இனிமேல் உங்களிற்கெல்லாம் சரியான விளக்கம் எதற்கு? தமிழரை ஏமாற்ரி அழித்த தமிழர்களை அடையாளம் காணமுடியாதவர்களிற்கு ஏற்ர விளக்கம் இதுவேதான். வளர்ந்த உலகில் வளராத சமூகமாக தமிழரை வாழவைத்த தலைமையும் அதனை ஆதரித்த்வர்கழும் மற்ரவர்களிற்கு வழி விட்டாலே போதும்.-துரை
வெளிநாட்டு தமிழர்கள் பாதுகாப்பாக வாழ இலங்கை தமிழர்கள் அழிய வேண்டுமா என்ற நினைப்பு வரத்தொடங்கினால், அப்படி எல்லாம் பாகுபாடுகள் பார்க்க தொடங்கினால், நாம் ஒரு போதும் தமிழீழம் பெற முடியாது. இழப்பினால் மனவலிமையை இழந்து போய்யுள்ள இலங்கை தமிழர்கள் இழப்புகள் அற்ற வெளிநாட்டு தமிழர்களை பார்த்து மன உறுதி பெற வேண்டும் என்று நாம் கருத்து எழுத வேண்டும் என்பது கந்தசாமியின் ஆசை.
//வளர்ந்த உலகில் வளராத சமூகமாக தமிழரை வாழவைத்த தலைமையும் அதனை ஆதரித்த்வர்கழும் மற்ரவர்களிற்கு வழி விட்டாலே போதும்.-துரை//
‘தமிழீழம் கிடைக்கும்’ என்று காத்திருந்த பரம்பரையில் வந்தவர்கள் பேசும் பேச்சு இது.
தமிழர்களுக்கு உரிய முறையில் வழிகாட்டினால் தமிழர்கள் தாமே பின் தொடர்வார்கள். இது அங்கும் பொருந்தும் – இங்கும் பொருந்தும். பழைய பெருங்காய டப்பாக்கள் கொஞ்சக்காலம் ஒலி எழுப்பி வந்தாலும், அவை அடங்கி விட்டன.
யாரும் யாருக்கும் வழி விட வேண்டியதில்லை. டக்ளசோ கருணாவோ பிள்ளையானோ கேபீயோ தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்படாதமைக்கு என்ன காரணம்? புலிகளா புலிவால்களா? அவர்களால் தலைமை தாங்க முடியாது என்று தாயகத் தமிழர்கள் கண்டு கொண்டிருக்கிறார்கள். சங்கர் ராஜியோ தவராசாவோ ராமராஜோ வேறு யாருமோ முன்னால் வர விடாமல் யார் தடுக்கிறார்கள்? சும்மா பூச்சாண்டி காட்டித் தப்பிக் கொள்வது சில்லறை விளையாட்டு. துரை போன்றவர்கள் தம்மைப் போன்றவர்களை மட்டுமே இவ்வாறான விளையாட்டுகள் மூலம் ஏமாற்ற முடியும்!
//இனிமேல் உங்களிற்கெல்லாம் சரியான விளக்கம் எதற்கு? //
ஆ! அதனால் தான் தர மாட்டீர்களோ? முடியாதவர்களுக்கு இப்படிக் காரணம் ஒரு கேடா? ‘எங்கள் தலைவர் செய்ய நினைத்தால் செய்துவிடுவார் – ஆனால் நினைக்க மாட்டார்’ வகையறாக்களை எப்போதோ பார்த்துக் கழித்து விட்டோம்.
//உலகத்தமிழர் என்பதும், ஈழத்தமிழர் என்பதும், ஏன்,எப்படி,எதற்காக? //
ஐயையோ – ‘சம்பந்தம் இல்லாது பேசுவதற்கு’ இங்கு என்ன போட்டியா நடக்கிறது?
மற்ரவர்களிற்கு வழி விட்டாலே போதும்.-துரை ///
வழி தெரியாமல் அலையும் மற்றவர்கள் யார் என்று சொன்னால் நல்லாக இருக்குமே துரை? கடத்தல், கப்பம் , கொலை கொள்ளை கும்பல்கலுகா?