இலங்கை – இந்திய ஒப்பந்தமும் 13வது திருத்தச் சட்டமுமே தமிழ் மக்களுக்கு சாத்தியமான தீர்வாக அமையும் – நாபா நினைவுக் கூட்டத்தில் பேச்சாளர்கள் – கருத்தாளர்கள்
இலங்கை – இந்திய ஒப்பந்தமும் 13வது திருத்தச் சட்டமுமே தமிழ் மக்களுக்கு சாத்தியமான தீர்வாக அமையும்” என நாபா நினைவுக் கூட்டத்தில் பேச்சாளர்களும் – கருத்தாளர்களும் தெரிவித்தனர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபாவும் பன்னிரு தோழர்களும் படுகொலை செய்யப்பட்ட 22வது வருட நினைவு தினம் யூன் 24இல் லண்டனில் இடம்பெற்ற போதே இக்கருத்து முன் வைக்கப்பட்டது
இலங்கை – இந்திய ஒப்பந்தம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழர்களுக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பு என்றும் அதனை தீர்க்க தரிசனத்துடன் உணர்ந்தவர் பத்மநாபா என அங்கு வழங்கிய பிரதான உரையில் அரசியல் ஆய்வாளர் வி சிவலிங்கம் தெரிவித்தார். ஈபிஆர்எல்எப் கட்சியும் அதன் ஆதரவாளர்களும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அமுல்ப்படுத்த வைப்பதற்கான அரசியல் முன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வி சிவலிங்கம் அங்கு குறிப்பிட்டார்.
ஆய்வாளர் வி சிவலிங்கத்தின் கருத்தை அன்றைய நிகழ்வில் கலந்துகொண்ட பலரும் பிரதிபலித்தனர். இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆலோசகரும் முன்னாள் யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ் தவராஜா “இலங்கை – இந்திய ஒப்பந்தம் தமிழர்களுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பு” எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் “இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் பின் கிழக்கில் உள்ள சிங்களக் குடியேற்றங்கள் தமிழ் இயக்கங்களினால் விரட்டப்பட்டன. அப்போது சிங்களக் குடியேற்றங்களின் பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவம் முகாமை விட்டு வெளியேற முயன்ற போது கூட இந்திய இராணுவம் தனது கவச வாகனத்தை குறுக்காக நிறுத்தி இலங்கை இராணுவம் வெளியேறுவதைத் தடுத்தது. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் இருந்த முக்கியமான அம்சம் இராணுவம் தனது முகாம்களை விட்டு வெளியேறக் கூடாது என்பது. யார் இந்த நிலையை மாற்றியது. இன்று இராணுவம் எங்கும் திரிகிறார்கள் எல்லா விடயங்களிலும் தலையிடுகிறார்கள் என்று சொல்பவர்கள் இதனைத் தெளிவாக விளங்க வேண்டும். இந்த நிலையை ஏற்படுத்தியது ராஜபக்ச சகோதரர்கள் அல்லவே” என எஸ் தவராஜா அழுத்தமாகத் தெரிவித்தார்.
“இலங்கை – இந்திய ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட வேண்டும்” என்பதில் ஈஎன்டிஎல்எப் மிகவும் தெளிவாக இருப்பதாகவும் “இந்தியாவின் மூலமாகவே ஒரு தீர்வு சாத்தியம்” எனவும் ஈஎன்டிஎல்எப் பிரதிநிதியும் ரிபிசி வானொலி இணைப்பாளருமான வி ராம்ராஜ் தெரிவித்தார்.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்த முடியாமல் போனமைக்கு தமிழ் தலைமைகள் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளே காரணம் எனப் பலரும் குற்றம்சாட்டினர்.
“இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்த முடியாமல் போனமைக்கு இலங்கையின் பாத்திரத்தை குறைத்து மதிப்பிட முடியாது. இலங்கை அரசு இதனை அமுல்படுத்த விரும்பி இருக்கவில்லை” என தேசம்நெற் ஆசிரியர்களில் ஒருவரான த சோதிலிங்கம் தெரிவித்தார்.
“இலங்கையில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் உள்ள அதிகாரப் பரவலாக்களுடன் கூடிய ஒரு தீர்வுக்கு முயற்சிப்பதே இன்றைய சூழலில் பொருத்தமானது” என இடதுசாரி செயற்பாட்டாளர் எஸ் குகதாசன் தெரிவித்தார்.
இதே கருத்தினை வெளியிட்ட தமிழ் ரைம்ஸ் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த பி ராஜநாயகம் “இலங்கை – இந்திய ஒப்பந்தம் போன்ற ஒரு வாய்ப்பு தமிழ் மக்களுக்கு இனிக் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை” எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் “இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பதும் 13வது திருத்தச்சட்டம் என்பதையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்ளலாகாது எனத் தெரிவித்தார். 13வது திருத்தச் சட்டம் ஏற்கனவே பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்று இருப்பதால் அதனை இலங்கையில் உள்ள முற்போக்கு சக்திகளின் துணையோடு அமுல்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்”‘ எனத் தெரிவித்தார்.
“இன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அழிவுகளைப் பார்க்கும் போது 25 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட இழப்புகள் மிகச் சொற்பமானவையே. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கூட சில நூறு போராளிகளே அப்போது உயிரிழந்து இருந்தனர். ஆனால் இன்று அழிவுகள் உச்சத்தைத் தொட்டு விட்ட நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் 2007 வரை 23000 போராளிகள் உயிரிழந்து இருந்தனர். அதன் பின்னர் ஆயிரக் கணக்கான போராளிகளும் அதன் தலைமையும் முற்றாக அழிக்கப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து உள்ளனர். இன்றைய நிலையில் இலங்கை – இந்திய ஒப்பந்தம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தவறவிடப்பட்ட ஒரு சந்தர்ப்பமே” எனத் தெரிவித்தார் தேசம்நெற் ஆசிரியர் த ஜெயபாலன். “இலங்கை – இந்திய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்த முடியாமைக்கு தமிழ் தலைமைகளும் காரணமாக இருந்தாலும் தமிழ் தலைமைகள் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இரு நாடுகளுக்கும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு முக்கிய பொறுப்பு இருந்தது” எனவும் த ஜெயபாலன் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் “இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்தி இனப்பிரச்சினையைத் தீர்க்கத் தவறியதால் இலங்கை மக்கள் ஆயிரக்கணக்கில் (சிங்கள மக்கள் உட்பட) கொல்லப்பட்டனர். சிங்கள பாதுகாப்புப் படைகள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டனர். நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் தடைப்பட்டது” எனத் தெரிவித்தார்.
“இந்தியா ஒரு வல்லரசாக சர்வதேசத்தின் முன் காட்டிக்கொண்ட போதும் மத்தியஸ்தம் செய்ய அழைத்தவர்களே இந்தியாவுக்கு எதிராக தங்கள் ஆயுதங்களைத் திருப்பி இந்தியாவை வடக்கு – கிழக்கில் இருந்து வெளியேற்றினர். இந்தியப் படைகள் 1500 பேர் வரை இலங்கையில் கொல்லப்பட்டனர். இந்தியாவுக்கு நேரடியான பொருளாதார இழப்புகள் பெருமளவில் இல்லையானாலும் இந்தியாவின் இராஜதந்திரத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரும் தோல்வி இது. ஆகவே இலங்கை – இந்திய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு முத்தரப்பினரும் பொறுப்புடையவர்கள்” என்றார் த ஜெயபாலன்.
<>
“இலங்கை அரசு இந்திய மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களிலும் பார்க்க இம்மியளவும் அதிகம் தருவதை இந்தியா ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை. அதனால் இந்திய முறையை ஒத்த தீர்வையே நான் வலியுறுத்தி வருகிறேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி நீண்டகாலமாக வன்னி யுத்தத்திற்கும் முன்பாக இருந்து தெரிவித்து வருகின்றார். அதனை யூன் 23இல் அவரது 79வது பிறந்தின நிகழ்வில் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி இருந்தார். இந்நிகழ்வை தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளை கிழக்கு லண்டனில் ஏற்பாடு செய்திருந்தது.
“தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர் இரா சம்பந்தனும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க இந்திய முறையை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு அதனை அடைவதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். “அதனை விடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இரா சம்பந்தனும் தெளிவான அரசியல் தீர்வை முன்வைக்காமல் நழுவல் போக்குடன் செயற்படுவது தவறு” எனவும் விமர்சித்தார்.
பத்மநாபாவின் நினைவுக் கூட்டத்தில் வி ஆனந்தசங்கரி பேசுவதாக இருந்த போதும் அவர் முதல்நாளே பயணமாக வேண்டி இருந்ததால் அவர் கலந்துகொள்ள முடியவில்லை.
<>
கடந்த பல ஆண்டுகளாக தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் பெரும்பாலும் ஒன்றிணைந்த அரசியல் செயற்பாட்டைக் கொண்டிருந்தன. தமிழரங்கத்தில் இணையும் போதும் ஒன்றாக இணைந்து செயற்பட்டன. தமிழரங்கத்தில் இருந்து வெளியேறும் போதும் ஒன்றாகவே வெளியேறின.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைவது பற்றிய முடிவிலும் ஒன்றாகவே இணைவது என்றே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி நம்பி இருந்தது. தேர்தலில் ஏற்பட்ட தோல்வியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மட்டும் தற்போது தனித்து நிற்கின்றது.
இதற்கு ஈபிஆர்எல்எப் சுரேஸ் அணியின் சுரேஸ் பிரேமச்சந்திரனே முக்கிய காரணமாக உள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரே அமைப்பின் இரு பிரிவுகள் இருக்கக் கூடாது எனவும் நாபா அணியினர் வருவதானால் தனது தலைமையின் கீழேயே வரவேண்டும் என்றும் அழுத்தமாக உள்ளார்.
சிறீதரன் தலைமையிலான நாபா அணியினருக்கு சுரேஸ் அணியில் இணைவதில் உடன்பாடில்லை. அதற்கு நியாயங்களும் உண்டு. மிகமோசமான மனித உரிமையை மீறிய ஒருவருடன் படுகொலை செய்யப்பட்ட தலைமையையும் போராளிகளையும் மதிக்காத ஒருவருடன் கூட்டிணைவது சற்று கடினமானதே.
இந்த நிலையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் மக்கள் செல்வாக்குப் பெற்ற துரைரட்ணம் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இவரது நிலையென்ன என்பது இன்னமும் வெளிப்படையாக தெரிவிக்கப்படாத நிலையிலேயே உள்ளது.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தற்போதைய நிலை ஒரு குழப்பமானதாகவே உள்ளது. அவர்கள் அரசியல் கூட்டில் தனித்து விடப்பட்டு உள்ளனர்.
<>
இலங்கை – இந்திய ஒப்பந்தமும் 13வது திருத்தச் சட்டமுமே இனப்பிரச்சினையத் தீர்ப்பதற்கான யதார்த்தமான குறைந்தபட்ச தீர்வாக அமைய முடியும் என்பதை தமிழ் தேசியக் காங்கிரஸ் அமைப்பும் வலியுறுத்தி வருகின்றது. தமிழரசுக் கட்சி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உட்பட லண்டனில் உள்ள இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட தமிழ் தேசியக் காங்கிரஸ் சென்ற மே 30இல் பிரித்தானிய பாராளுமன்ற குழு அறையில் வெளியிட்டுள்ள தனது ஆவணத்தில் இதனை வெளிப்படுத்தி உள்ளது. பங்குபற்றிய கட்சிகள் இதனைக் கொள்ளையளவில் ஏற்றுக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
<>
இலங்கை – இந்திய ஒப்பந்தமும் 13வது திருத்தச் சட்டமும் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான யதார்த்தமான அடிப்படை என்பது பத்மநாபாவின் நினைவுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு அரசியல் தரப்பினரதும் கருத்தாக இருந்தது. நாபாவின் நினைவு நிகழ்வில் 80 பேர் வரை கலந்துகொண்டனர்.

Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed
தோழர் பத்மநாபவிற்கும் அவரது தோழர்களுக்கும் எனது அஞ்சலிகள். அதுபோல் இந்திய கூலிப்படையாக மாறி பத்மநாபாவின் EPRLF இன் வன்முறையால் உயிர் இழந்த, வாழ்விழந்த அப்பாவி தமிழ் மக்களுக்கும் எமது அஞ்சலிகள். முதலாவது வட கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது தேர்தலில் சில அரசியல் கட்சிகளை தேர்தலில் போட்டியிடாமல் தடைசெய்து ஜனநாயகத்தையே புதைத்த பெருமை இந்திய பேர் அரசுக்கும் EPRLF என்ற புரட்சிகர ஆயுதகுளுவுகும் பெருமை தேடித்தந்த சம்பவங்கள். அண்மையில் ஆயுதகுளுகளின் வன்முறை பற்றி தோழர் ஜெயபாலன் ஒரு கட்டுரையும் எழுதி இருந்தார். அவர் அதில் EPRLF இன் மண்டையன் குழு பற்றி விமர்சித்தார். ஆனால் எப்ர்ல்ப் இன் மற்றைய குழுவின் அட்டகாசங்களை தவிர்திருதார். ஏனெனில் அவர் நடுநிலையான (ஜனாதிபதி)ஜனநாயக வாதி. இங்கு பேசிய தோழர் சிவலிங்கம், தோழர் ராசநாயகம், தோழர் ஜெயபாலன் என்பவர்கள் ராஜபக்சே அரசின் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது சொல்லி தெரிய வேண்டிய அவசியம் அல்ல. இவர்கள் சந்திரிகாவிற்கு பின்னல் திரிந்தார்கள். சந்திரிகாவே தான் செய்த தவறை உணர்ந்து இப்போது மன்னிப்பு கேட்கிறார். இவர்களோ ராஜபக்சே இற்கு பின்னால் வால் பிடிகிறார்கள். இவர்கள் நோக்கம் தமிழ் மக்களை பலி வாங்குதல். எப்ர்ல்ப் இன் தோழர் டக்லஸ் தேவானந்தாவின் உறவுகள். இணைந்த வட கிழக்கு மாகாணத்தை பிரித்து எடுத்த ராஜபக்சே அரசின் தோழர்கள். இவர்கள் புலிகளுக்கு எதிரான ராஜபக்சே அரசின் பிரசாரங்களுக்கு துணை போவவர்கள்.
இந்திய-இலங்கை ஒப்பந்தமும் 13 வது அரசியல் திருத்தமுமே தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்று “ஆண்டிகள் மடம் கட்டுவதுபோல் கூடி” இங்கு கதை விடுகிறார்கள். “சுயநிர்ணய உரிமை” பற்றி தமிழ்-சிங்கள மக்களை ஏமாற்றிய புரட்சி (புரட்டு) இடதுசாரி வித்துவான்கள் இன்று இனவாத ராஜபக்சே அரசுக்கு முண்டு கொடுக்க 13 ஆம் திருத்தசட்டம் பற்றி குத்துகரணம் அடிகிறார்கள். தமிழர் தேசிய கூட்டமைப்பை உடைக்க வேண்டும் என்ற ராஜபக்சே அரசின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இவர்கள் படும்பாடு என்ன என்பதை தமிழ் மக்கள் மிக தெளிவாக உணர்ந்து உள்ளார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்க வெளியில் இருந்து ஆட்கள் தேவையா?
>>> தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்க வெளியில் இருந்து ஆட்கள் தேவையா? <<<
இது யாழ்ப்பாணத்து மேல் தட்டினரின் இறுமாப்பு சொல்லாட்டம்.
தனி மனித உறவுகள் தொடங்கி அரசியல் கட்சிகளின் உறவுகள் வரை ஒரு உடைவு அதில் சம்பந்தப்பட்டோரினால் தான் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது. ஆனால் இந்த உறவுகளும் உடைவுகளும் தனித்து ஏனைய அரசியல் நிலைமைகளின் தாக்கங்களுக்கு வெளியே நடைபெறுவதில்லை. நடைபெறவும் முடியாது.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருப்பவர்கள் மற்றும் கூட்டமைப்பின் மதில் மேல் இருப்பவர்கள் மத்தியில் இருக்கும் குத்து வெட்டுக்கள் இவர்களுக்குள் ஒரு உடைவினை ஏற்ப்படுத்தினால் அதில் ஒரு ஆச்சரியமும் இல்லை. இப்படி ஒரு உடைவின் அரசியல் பிரச்சினை எந்த மட்டதிட்கு அரசின் பக்கம் சார்ந்து உரிமை பெறுவது என்ற கேள்வி தொடர்பாக மட்டும் தான் இருக்கின்றது. சம்பந்தனின் ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சமூக அரசியலுக்குள்ளால் அரசின் பக்கம் சார்பது சரியா அல்லது கூடுதலான சலுகைகளை செய்ய வேண்டுமா? அல்லது தம்பி எப்போதாவது வருவார் என்ற அரசியலை செய்ய வேண்டுமா என்ற மிகவும் சின்ன வித்தியாசங்களே ஒரு உடைவிட்கு காரணமாக இருக்கும். இதற்குள் வெளியாரின் பாத்திரம் ஒரு தீர்மானகரமான தலையீடாக இருப்பது சாத்தியம்.
சங்கரியும், சித்தனும் அரசுக்கு எதிராக எப்போதாவது கதைத்திருந்தால் அது தெருவில் நடந்தால் அடி விழாமல் இருப்பதற்காக செய்யப்பட்டது. இவர்கள் மூலமாகவோ அல்லது வேறு நபர்கள் மூலமாகவோ அரசு பத்திரிகை கட்டுரையில் இருந்து பணம் வரை பாவித்து ஒரு உடைவினை ஏற்ப்படுத்துவது ஒன்றும் புதினமில்லை.
எனினும் அரசும் அதனது ஆதரவுகளும் விரும்புவது போல் ஒரு உடைவு ஏற்ப்பட்டாலும் அது கூட்டமைப்பினை பெரிதளவில் பாதிக்கப் போவதில்லை. கூட்டமைப்பினை பலவீனப்படுத்துவது அல்லது புலிகள் போல் அழித்தொழிப்பது அரசு எதிர்ப்பு தமிழ் தேசிய வாதத்தினை இல்லாமல் செய்யப் போவதில்லை. இனவாதத்தினால் ஒடுக்கப்படும் மக்களின் எதிர்ப்பினை தமிழ் தேசிய வாதம் அரசியல் மூலதனமாக கொள்கின்றது. இந்த எதிர்ப்பு இருக்கும் மட்டும் அது ஏதோ ஒரு அமைப்பு வடிவத்தில் உருவெடுக்கும். கோழி முதல் வந்ததோ அல்லது முட்டை முதல் வந்ததோ என்ற கேள்விக்கு மயக்கமான பதில் தான் இருக்கின்றது. ஆனால் இனவாதம் முதல் வந்ததோ அல்லது தமிழ் தேசிய வாதம் முதல் வந்ததோ என்ற கேள்விக்கு இனவாதம் தான் என்ற பதில் மயக்கமற்றது. இனவாத அரசிற்கு முடிவு கட்டுவது மட்டும் தான் அனைத்து தேசிய வாதத்திற்கும் முடிவு கட்டும்.
அரசு பிழை ஆனால் அரசுடன் சேர்ந்து அபிவருத்தி செய்வோம் வாருங்கோ, கூட்டமைப்பினை உடையுங்கோ என்பதனை கேட்ப்பதற்கு காதில் பூ வைத்தவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் கூட்டமைப்பின் அரசியல் ஒரு சுத்துமாத்து என்பதனை கண்டுகொள்வோரின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரிப்பது இராணுவத்திற்கு எதிரான சுயமான நடவடிக்கைகளில் தெரிகின்றது.
அது சரி பத்மநாபாவின் கூட்டத்தில் பேசிய தவரசாவில் இருந்து கிபோர்ட் மார்க்சிஸ்டுகள் வரை ஏதோ வகையில் புலிகள் பிழை அல்லது புலிகள் மட்டும் பிழையில்லை இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை அந்த நாட்களில் நடைமுறைப் படுத்த முடியாமல் போனதற்கு என்கின்றார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு நான் அறிந்தளவில் இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பில்லை. இந்த ஒப்பந்தத்தினை இப்போது இன்று நடைமுறைப் படுத்துவது கூட்டமைப்பினை தற்காலிகமாக தன்னும் உடைபதட்கு வழிகோலும்.
LLRC இனை நடைமுறைப்படுத்த லண்டனில் கூட்டம் போட்டவர்கள் ஏன் இந்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்த கூட்டம் போடவில்லை. இவர்கள் தொடர்ந்தும் பிரபாகரன் என்ற மாய மானை கலைப்பது ராஜபக்ச என்ற பிசாசினை வழிபடுவதற்கு மட்டுமே.
விக்ரமாதித்தன் வேர்த்து விறுவிறுக்க மயானத்தில் நடந்து கொண்டிருந்தான். அவனது காலடிகளை கேட்ட துரையப்பா கல்லறைக்குள் காதினை பொத்திய படி முகம் குப்புற படுக்கின்றார்.
//தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்க வெளியில் இருந்து ஆட்கள் தேவையா? இது யாழ்ப்பாணத்து மேல் தட்டினரின் இறுமாப்பு சொல்லாட்டம்.//
இதிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு புரட்சிகர சக்தியாக அங்கீகரிக்கபட்டுவிட்டது தெரிகிறது. பின்பு கூட்டமைப்பு சுத்துமாத்து அரசியல் செய்கிறது என்கிறார். விளங்கவில்லையே!
//தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்க வெளியில் இருந்து ஆட்கள் தேவையா?//
இது கூட்டமைப்புக்கல்ல அத்தனை தமிழ் அமைப்புக்களுக்கும் பொருந்துமே:
//பல்லி _ தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்க வெளியில் இருந்து ஆட்கள் தேவையா?
இது கூட்டமைப்புக்கல்ல அத்தனை தமிழ் அமைப்புக்களுக்கும் பொருந்துமே//
உண்மை தான். ஆனால் இது கூட்டமைப்பை நோக்கி சொல்லபட்ட காரணத்தால் யாழ்ப்பாணத்து மேல் தட்டினரின் இறுமாப்பு சொல்லாட்டம் ஆகிவிட்டதை பல்லி கவனிக்க வேண்டும்.
naba or pirabhakaran or uma all are same
jaffna mentalitity
when telo leader sri was killed by ltte kittu naba was in jaffna
but he dint take any action why???
that time naba was a founder member of enlf