தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புஸ்பராணியின் சாட்சியம் ‘அகாலம்’ – நூல் பற்றிய நேர்காணல் (ஒளிப் பதிவு)
புஸ்பராணி உடன் அவரின் அகாலம் நூல் தொடர்பான நேர்காணல் யூன் 30இல் இடம்பெற்றது. நூல் பற்றியும் தனது தனிப்பட்ட வாழ்வில் அவர் எதிர்கொண்ட சவால்கள் பற்றியும் புஸ்பராணி தனது கருத்துக்களை வெளியிட்டு உள்ளார்.
புஸ்பராணி தமிழ் சிறுபான்மை என்ற ஒடுக்குமுறைக்கு மட்டுமல்ல பெண்ணாகவும் சாதிய ரீதியாகவும் முச்சுமையைச் சுமந்து போராடியவர். அவர் இந்நேர்காணலில் தமிழீழ விடுதலைப் போராட்டம் சாதிய ஒடுக்குமுறை பெண்களின் நிலை பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.

Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed
கருணானந்தசிவம் ஞாபகத்தில் இருக்கும் பெயர். துரையப்பா மரணத்தின் பின் பிரபாகரன் அவருடன் தங்கியிருந்து விட்டுத் தான் கடல் கடந்தார் என்பது அப்போதைய இரகசியம். கசி ஒரு தனியார் கல்வி நிலையம் நடாத்தியதாகவும் தனது ‘இணைப்புகளின்’ தைரியத்தில் படிக்க வரும் பெண் பிள்ளைகளிடம் கொஞ்சம் மேய முற்பட்டதாகவும் ஊரில் ஒரு பேச்சு இருந்தது. அவரின் மரணத்துக்கான உண்மைக் காரணமோ காட்டப்பட்ட காரணமோ எனக்கு நினைவில் இல்லை. தனி வீட்டில் கல்வி நிலையம் நடாத்தியதால் இளைஞர்கள் வந்து போவதோ – சிலர் இரவில் படுத்து எழுவதோ – சந்தேகத்துடன் பார்க்கப்படவில்லை. கொலையுதிர்காலம் தொடங்கிய பின்னர் செக்கென்ன சிவலிங்கமென்ன என்று ஆயிற்று. கருணானந்தசிவமும் தப்பவில்லை.
நேர்காணலில் ‘நீங்கள் மேல்தட்டு தலித் அல்லவா’ என்று பொருள்பட ஜெயபாலன் கேட்டது நியாயம் தான் என்று தோன்றியது. அடிப்படையில் ஏறுபட்டி – தளைநார் – முட்டி அளையாதவர்கள் தானே நீங்கள் என்பது ஜெயபாலன் வாதம்.
ஒரு மணி நேரம் ஓடாததாக – எங்கப்பன் குதிருக்குள் இல்லை ரேஞ்சில் புலிக்கு எதிராகா நான் எழுதவில்லை என்ற விளக்கம் எல்லாம் தவிர்த்து – இந்த உரையாடல் அமைந்திருக்கலாம். புஷ்பராணி சாதி என்ன சாதி என்பதை விடுத்து எனது சாதி ஒன்றும் குறைவில்லை என்று சாதிக்க முற்பட்டது குறையாகப் பட்டது. ‘இந்து சமயம் தான் சாதி அமைப்புக்குக் காரணம்’ என்பதும் பலவீனமான திசையிலேயே ஓடியிருந்தது. சத்திரிய – பிராமண – வைசிய – சூத்திர என்ற வர்ணாசிரம எனும் இந்து சமய படிமுறை இல்லாது, ‘பணமுடையான் – அடிமை – குடிமை’ என்ற படிமுறை வேறுபட்டது என்பதைப் புஷ்பராணி பார்க்கத் தவறியிருக்கிறார்.
இந்த பேட்டி (கலந்துரையாடல்) யில் உள்ள முக்கிய குறைபாடு காலநீட்சி. கொஞ்சம் எடிற் செய்திருக்கலாம் எனத்தோன்றுகிறது. புஸ்பராணி அவர்கள் திரும்பத்திரும்ப நான் குறை சொல்லவில்லை, பொய் சொல்லவில்லை எனச் சொல்லுவதும் பல இடங்களில் குரலை உய்ர்த்தி விரலை நீட்டிக் குற்றம் சாட்டும் பாணியில் பேசுவதும் எரிச்சலையும் அலுப்பையும் ஒரு சேரத்தருகிறது. அவரின் விரல்நக இடுக்குகளை பேனாவால் கிண்டும் போது மனதில் தான் சொல்லும் கருத்துகளுக்கு எதிராக நினைக்கிறாரோ என எண்னத்தோன்றுகிறது. மேலும் இப்புத்தகம் தனது குடும்பத்தினது பங்களிப்பை ஈழத்தமிழ்ச் சமூகம் மறந்துவிடுமோ என்கின்ற அல்லது வெறும் புஷ்பராஜாவின் ஆவணம் மூலம் மட்டுப்படுத்திவிடுமோ என்கின்ற ஆதங்கத்தில் எழுதப்பட்டிருக்குமோ எனவும் எண்ணவைக்கிறது. தனது நண்பி கிதாஞ்சலி கொலைநிகழ்வுகளை கோபமாகச் சொல்லும் போது அவரது சகோதரர் எழுதிய புத்தகத்தில் ‘மண்டையன் குழுவில் அவர் சேர்ந்து இயங்கிய நாட்களையும் சொல்லி, தமிழ் இளைஞர்களின் சித்திரவதைகளின் பின்னர் நேராக இரவு உணவு உண்டதைப்பற்றி அவர் சொல்லி இருப்பதையும் அதே கோப உணர்ச்சியில் சுட்டிக்காட்டி இருக்கலாம்!
இளைஞர்களிடத்தில் அரசியல் முதிர்ச்சி இல்லை என்கிறார். ஆனால் கூட்டணி தம்மை பயன்படுத்தினர் என்றும் சொல்கிறார். ”அரசியல் முதிர்ச்சி” என்பதே உண்மையான போராளிகளை தமக்குச் சாதகமாக பயன் படுத்துவதுதான் என்பதை அவர் நினைவில் கொள்ளல் நல்லது.
முன்னாளில் வங்கிக் கொள்ளையடிப்போரை மக்கள் கொள்ளைக்காரர்களாக பார்க்கவில்லை சிவகுமாரன் போராளி கிறிஸ்துவபாதிரி பூசை பண்ணினார் இந்துக்குரு தீபம் காட்டினார் என்கிறார் பின்னர் தன்னை ‘கொள்ளைக்காரி’ என்றார்கள் அதனால் பாதிக்கப்பட்டேன் என்கிறார்.
ஆயுதப்போராக்கம் தவறு ஆயுததால் அழிவே எஞ்சும் என மகாத்மாகாந்தி லெவலுக்கு கருத்து எழுத முடியும் ஆனால் ஜெயபாலனின் ஒரு சிம்பிள் கேள்விக்கு இப்போது தமிழர்களால் ஏலாது …காலம் மாறலாம் காட்சிகள் மாறலாம் என தட்டித்தடுமாறி பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. வக்கணைக்கதை பேசுவது இலகு ஆனால் நடைமுறை என ஒன்றிருக்கே!!
சாதியை சட்டம் போட்டு ஒடுக்கலாம் என்கிறார். அதுவும் இறுக்கமான நடைமுறையாம். அதனை யாராவது செய்தால் அதுவும் புலிகளாக இருந்தால் ….குற்றம் சொல்பவர்களின் வரிசையில் முதல் ஆளாக நிற்பார் இவர். இலக்கிய பெண்கள் சந்திப்புக் கோஷ்டியும் சேர்ந்து கொண்டு கும்மி அடிப்பார்கள்!
அடுத்த பொயின்ற் குறைந்த சாதிக்காரர் தமது சாதியை மறைக்கிறார்களாம், தான் வெளிப்படையாகவே சொல்லுவாராம். ஆனால் சாதியம் இல்லாத சமதர்ம சோசலிசக் கனவு கண்டாராம்.
சாதிய வாதத்தில் சேம்சைற் கோல் போடும் புஸ்பராணியை மிகக் கெட்டித்தனமாக ‘நான் நினக்கிறன் இத்துடன் இந்தப்பகுதியை நிறுத்திக்கொண்டு..’ என ஜெயபாலன் காப்பாற்றிக் கையாள்வது அவரின் பத்திரிகை நடத்திய முதிர்ச்சியை காட்டி நிற்கிறது!
சாதியத்தைன் கோரத்தை கிறிஸ்தவ பாடசாலைகளிலே கானமுடிந்தது இந்துப்பாடசாலைகள் கேட்கவே வேண்டாம் என்கிறார். ஆனால் சாதியம் இந்து மதக்க்குறைபாடு என்கிறார். பின்னர் பெளத்தமதத்தில் சேருவதால் ஒரு பிரயோசனமும் இல்லை நானெண்டால் அப்படிச் செய்திருக்க மாட்டேன் என்கிறார். இங்கே பிரச்சினை என்னவென்றால் சாதியம் இந்துமதத்துக்கு மட்டும் உரிய ஒன்றல்ல. மனித குலத்தின் கிளான் மென்ராலிற்றிகளில் ஒன்று. அது ஆப்கானிஸ்தானிலும் உண்டு, அமெரிகாவிலும் உண்டு. அது இனங்களிடையேயான கலப்புக்கான சந்தர்ப்பங்கள் வரும் போது கோரமுகத்தைக் காட்டும். பல சமுதாயங்கள் போரினால் அழிவடைந்து மீண்டும் உயிர்ப்பிக்கும் போது அச்சமுதாயத்தில் சாதிய முறை கைவிடப்படுவதை அவதானிக்கலாம். சில சமுதாயங்களில் அந்நிலைக்கான சாத்தியங்கள் இல்லாமல் இருந்தால் பொழுதுபோக்குக்காககூட இந்த சாதிய சமாச்சரங்களை தூக்கிப்பிடிப்பார்கள். இந்து சமயத்தின் சோதனைக்காலம் தனது தலையில் அதனைச் சுமக்க வேண்டி இருக்கிறது. இதனை இந்துசமய ‘காவலர்கள்’ இப்போது இந்து/பெளத்த இணைப்பு செயல்களில் தொடர்ந்தும் செய்கிறார்கள். அதுவும் சுவிஸில் இருந்து சென்று செய்கிறார்கள்.
கிறிஸ்துவசமயத்துக்கு மாறினாலும் அங்கேயும் தொடரும் என புஸ்பராணி சொல்லி இருக்கிறார். ஆனால் கீரிமலை விவகாரத்தில் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பை சரியாக அடையாளம் கண்டு கொண்டு அதனை எதிர்க்கிறார்.
இவ்விடத்தில் திரு.துரை அவர்களின் சாதிய ஒழிப்பில் ஸ்ரீலங்கா வன்புணர்ச்சி கொலைகார ராணுவம் ஆற்றிய நற் பங்குபற்றி தேசத்தில் பக்கம் பக்கமாக எழுதியிருப்பதால் நிறுத்தலாம் என நினைக்கிரேன்.
மேலும் பத்திரிகைகள் மிகைப்படுத்தல் பற்றிச் சொல்லும் இவர் தலித் சொல்லை தான் ‘இலகுவாக’ இருப்பதற்குப் பயன்படுத்தினாராம். நல்ல கதை! தலித் என்ற சொல்லை இவர்கள் பயன்படுத்தல் இந்தியாவில் இருக்கும் தலித்துகளின் ஆதரவைப்பெறவே. அது மிக மிக நல்ல அணுகுமுறை. ஆனால் அந்தோ பரிதாபம் இவர்களின் ‘தோழர்களின்’ உண்மையான நோக்கம் புலிகளுக்கு எதிரான பிரச்சாரமே என்பதனை இவர் அறிந்து கொண்டிருப்பார்! இறுதியில் இந்திய தலித்துகளின் ஆதரவும் இல்லை புலிகளும் இல்லை. இந்தக் கையறு நிலையே இவரை பேபி சுப்பிரமணியம், பாலகுமாரன் , சத்தியசீலன்… பெயர்களை இழுத்து நாத்தழுதழுக்க வைக்கிறது.
மனச்சாட்ச்சி என்னவெல்லாம் செய்யும் என்பது நன்றாகவே தெரிகிறது!
எல்லாவற்றிலும் சுப்பர்…வீட்டுக்காரனுடன் சண்டைபிடித்துக்கொண்டு பக்கத்து வீட்டுக்காரனுடன் சேர்வது என்றாரே!!
இதையே ஈழத்தமிழர்கள் எப்போதும் சொல்வார்கள். இலக்கியச் சந்திப்பு…பெண்கள் சந்திப்பு… கலந்துரையாடல்… கவிதை வாசிப்பு என எந்த ஊர்களை வலம்வந்தாலும் இவரின் மனச்சாட்சி சொன்ன பக்கத்து வீட்டுக்காரன் கதைதான் உண்மையிலும் உண்மை!
புத்தகம் கைக்கு வரட்டும் பார்க்கலாம். புஸ்பராஜாவின் ஆவணம் போல் சிதறலாக முன்பின் முரணாக போகிறபோக்கில் கிடைக்கிற ஒழுங்கையில் கிடாய் வெட்டும் புத்தகமாக இல்லாமல் ஜெயபாலன் சொல்வதுபோல வாசிக்கத் தூண்டும் ஒன்றாக இருக்கும் என நம்புவோமாக!!
நன்றி ஜெயபாலன்.
தமிழ் பெண்ணாகவும், தாழ்த்தப்பட்ட சாதியினராகவும், இருந்தும் தமிழ் இனத்தின்மீது அக்கறைகொண்டு தன் வாழ்வை ஆரம்பித்துள்ளார். போற்ரத்தக்கது. தமிழ் இனமென்று தமிழ் அரசியல்வாதிகளால் கட்டப்பட்ட வீட்டினுள் வாழ்ந்த பதுங்கியிருந்த கொடிய விசப்பாம்புகளை அறியாது வாழ்ந்த கோடி தமிழர்களில் இவரும் ஒருவராக இருந்துவிட்டார். இதுவே கவலைக்குரிய விடயமாகும்.
சாதிரீதியாக, பிராந்தியரீதியாக, குடியுருமைரீதியாக பிளபுபட்டு அல்லலுறும் இலங்கைத்தமிழர் தாம் ஓர் இனமாக அடையாளம் காட்ட முனைவதும், விடுதலை பற்ரி பேசுவதும் ஏற்கக்கூடியதா என்பதை புஸ்பராணி விளக்குவாரா?-துரை
//தமிழ் பெண்ணாகவும், தாழ்த்தப்பட்ட சாதியினராகவும், இருந்தும் தமிழ் இனத்தின்மீது அக்கறைகொண்டு தன் வாழ்வை ஆரம்பித்துள்ளார். //
சந்தர்ப்பம் – எதிர்பாராத நிலைமை – புஷ்பராணியை இந்த இடத்துக்குத் தள்ளியிருக்கிறது. சிலர் செயற்பாடுகளால் தலைமை தாங்குவார்கள். சிலர் தமது சிந்தனைகளால் – சிலர் தமது வலைவேலைகளினால்…. ஒரு தைரியத்துடன் எழுந்து நின்றதுடன் புஷ்பராணியின் பங்கு அங்கீகரிக்கப்பட்டதுடன் முடிந்தது.
எழுதிக் கொடுத்ததை வாசித்தார் பிரபாகரன் – படிக்காத மனிசன் – முடிந்தது அது தான். ஆனால், கதை, கட்டுரை, கவிதை எழுதும் புஷ்பராணியால் தமது கருத்துகளை வெளிப்படுத்த முடியவில்லை. முன்னுக்குப் பின் முரணாக வேறு பேசினார்.
தாழ்த்தப்பட்ட பிரிவுகள் சிலிர்த்து எழுவது சரி – ஆனால், ‘எங்கள் சாதி குறைவில்லை’ என்று வேலி கட்டுவதில் முனைப்பாக இருக்கும் புஷ்பராணியிடமிருந்து என்ன தலைமையை எதிர்பார்க்க முடியும்?
//சாதிரீதியாக, பிராந்தியரீதியாக, குடியுருமைரீதியாக பிளபுபட்டு அல்லலுறும் இலங்கைத்தமிழர் தாம் ஓர் இனமாக அடையாளம் காட்ட முனைவதும், விடுதலை பற்ரி பேசுவதும் ஏற்கக்கூடியதா என்பதை புஸ்பராணி விளக்குவாரா?//
ஏற்கெனவே தம்மை சாதிரீதியாகப் பிரித்து வைப்பதில் உள்ள நியாயங்களைத் தான் புஷ்பராணி முன்வைக்கிறார். அடிவாங்கிய போது கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டு போன சாதிப்பிரிவுகளை அப்ப்டியே ஊக்குவித்து சமப்படுத்தும் முயற்சிகளை விடுத்து, ‘நாம் என்ன குறைவா’ என்று கேட்கவும் எந்தச் சமயத்தில் இணைந்தால் எங்களைச் சமம் என்று காட்டிக் கொள்ள முடியும் என்பதான விவாதங்களில் இறங்கவும் முனையும் புஷ்பராணியால் சாதி என்ற தலைப்பின் கீழ் அதிகம் பங்களிக்க முடியாது.
அது சரி
1. குடியுரிமை ரீதியாக இலங்கைத் தமிழர்கள் பிளவுபட்டிருக்கிறார்களா?
2. சைவ – இந்து சமயங்களை சந்தியில் நிறுத்தும் புஷ்பராணிக்கு எதிராக தேசம் நெற்றின் சைவ – இந்து சமயக் காவலர்கள் இன்னமும் சீறி எழக் காணோம்!
இந்த புத்தகத்தை வாசகர்கள் வாங்கி ஒரு முறை பார்ப்பார்களானால் எங்களுடைய வரலாற்றில் சில முக்கியமான கால கட்டங்களை அறிந்து கொள்ளலாம் என்று ஜெயபாலன் பரிந்துரைக்கும் புத்தகத்தில் அந்த புத்தகத்தின் ஆசிரியர் இந்து மத்திற்கும் சாதிக்கும் தொடர்பு என்று அபந்தமாக எழுதும் போது சற்று சிந்தித்திருக்க வேண்டாமா? பேட்டியில் சாதியம் என்பது எமது சமூகத்தில் வேரூன்றி போய்யுள்ளது என்ற உண்மையை தெளிவாக கூறும் ஆசிரியர் அடுத்த கணம் இந்து மதமும் சாதியும் ஒன்றாக பின்னி பிணைந்தவை என்று இந்து மதத்தை அநியாயத்துக்கு இழுக்கிறார். ஏதோ இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களில் சாதிகள் இல்லாதது போல்.
//…அரசியல்வாதிகளால் கட்டப்பட்ட வீட்டினுள் வாழ்ந்த பதுங்கியிருந்த கொடிய விசப்பாம்புகளை அறியாது வாழ்ந்த கோடி தமிழர்களில் இவரும் ஒருவராக இருந்துவிட்டார். இதுவே கவலைக்குரிய விடயமாகும்……///
ஆம்….தமிழர்களிடையே சாதியத்தை ஒழிக்கவே ஸ்ரீலங்கா ரானுவம் தமிழ்ரின்காணிகளை அட்டாத்தாகப் பறித்து சிங்களவர்களைக் குடியேற்றுகின்ரது என சொல்பவர்களை அறியாமல் அந்த கொடிய விசப்பாம்புகளுடன் இருந்துவிட்டார்.
இப்போது தனது தோழர்கள் பாலகுமாரன், பேபிசுப்பிரமனியம் இந்த கொடிய விசப்பாம்புகளின் கோரச்செயல்களுக்கு இரையாகிவிட்டனர் என்றறிந்து தனது கையறு நிலையை நினைத்து தனது மனச்சாட்சியை அரங்கேற்றுகிறார்.
//…சில முக்கியமான கால கட்டங்களை அறிந்து கொள்ளலாம் என்று ஜெயபாலன் பரிந்துரைக்கும் புத்தகத்தில் அந்த புத்தகத்தின் ஆசிரியர் இந்து மத்திற்கும் சாதிக்கும் தொடர்பு என்று அபந்தமாக எழுதும் போது சற்று சிந்தித்திருக்க வேண்டாமா? ….//
இதுக்கு ஏன் உணர்ச்சிவசப்படுகிறீர்கள் பிசி?
போகிறபோக்கில் புலிக்காய்ச்சலுக்கு மருந்தாக சாதியம், சமதர்மம், மாற்றுக்கருத்து, ச்கோதரயுத்தம், பிரதேசவாதம் , பெண்ணியம், இலக்கியம், காவியம் என ….இப்படி போக்குக்காட்டி குளிகாய்ந்தவர்கள் பலப்ல பேர் இருக்கிறார்கள். இதில் இவரென்ன யோசிக்க இருக்கு? புலிக்காய்ச்சலுக்கு கையில் கிடைக்கும் எல்லா மருந்தையும் குடித்தார்கள்? இப்பொ எல்லாம் அம்போ!!
// குடியுரிமை ரீதியாக இலங்கைத் தமிழர்கள் பிளவுபட்டிருக்கிறார்களா?//றோகன்
கள்ளத்தோணி, தோட்டக்காட்டான், மலைநாட்டான் எல்லாம் தமிழர் சிங்களவர்களிற்கு கொடுத்த பட்டப்பெயர்களா அல்லது தமிழர்களிற்கு கொடுத்த பட்டப்பெயர்களா?-துரை
//ஆனால், ‘எங்கள் சாதி குறைவில்லை’ என்று வேலி கட்டுவதில் முனைப்பாக இருக்கும் புஷ்பராணியிடமிருந்து என்ன தலைமையை எதிர்பார்க்க முடியும்?//றோகன்
வேறு சாதிக்காரர் தாமே தமிழரினுள் உயர்ந்தவர்கள், தலைமை தாங்கவும், அரசியல் பேசவும் தகுதியானவர்கள் என்று கூறி நடைமுறைப்படுத்தும் போது தமது சாதியும் குறைவில்லை என்று கூறுவதும் அதனை தமிழீழத்தில் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் புலம் பெயர்நாடுகளிலாவது கடைப்பிடித்து வாழ்வதும் தமிழரால் உருமைகள் பறிக்கபட்ட தமிழர்களின் கடைமையாகும்.-துரை
//ஆம்….தமிழர்களிடையே சாதியத்தை ஒழிக்கவே ஸ்ரீலங்கா ரானுவம் தமிழரின் காணிகளை அட்டாத்தாகப் பறித்து சிங்களவர்களைக் குடியேற்றுகின்ரது என சொல்பவர்களை அறியாமல் அந்த கொடிய விசப்பாம்புகளுடன் இருந்துவிட்டார்.//சாந்தன்
தாழ்த்தப்பட்ட தமிழர் விலைகொடுத்து வாங்கிய காணிகளில் உள்ள வீடுகளை தமிழரின் காவலர்கழும் உயர்ந்தவர்கழும் என்று கூறும் தமிழர்கள் சிலர் தீயிட்டு கொழுத்தும்போது தாழ்த்தப்பட்ட தமிழர்களிற்கு சீமானும், திருமாவளவனுமா பாதுகாப்பு யாழ்ப்பாணத்தில் கொடுப்பார்கள்?
சிவன் கோவில்காணி, சிதம்பரத்துக் காணியென்று யாழ்ப்பாணத்தில் உள்ள காணிகளை உயர்சாதியைனரென்ற போர்வையில் தமிழர் அபகரித்தால் அது தமிழீழ விடுதலை. சிங்களவர் பறித்தால் தமிழின அழிப்பு.-துரை
//வேறு சாதிக்காரர் தாமே தமிழரினுள் உயர்ந்தவர்கள், தலைமை தாங்கவும், அரசியல் பேசவும் தகுதியானவர்கள் என்று கூறி நடைமுறைப்படுத்தும் போது தமது சாதியும் குறைவில்லை என்று கூறுவதும் அதனை தமிழீழத்தில் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் புலம் பெயர்நாடுகளிலாவது கடைப்பிடித்து வாழ்வதும் தமிழரால் உருமைகள் பறிக்கபட்ட தமிழர்களின் கடைமையாகும்.-துரை//
சாதிவாதியாக இங்கு இருப்பது….. துரை!!
சாதிச் சங்கங்கள் வரிசையில் முதலாவதைத் துரை தொடங்குவார் என்று எதிர்பார்ப்போம்.
அது சரி, தமிழீழம் என்றால் என்ன என்றும் துரை சொன்னால் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.
//கள்ளத்தோணி, தோட்டக்காட்டான், மலைநாட்டான் //
அதற்கும் குடியுரிமைக்கும் என்ன சம்பந்தம்?
//இந்து மதமும் சாதியும் ஒன்றாக பின்னி பிணைந்தவை என்று இந்து மதத்தை அநியாயத்துக்கு இழுக்கிறார். //
அப்படி இல்லையா? ஒரு குலத்தில் பிறந்தவர்கள் மட்டுமே பூணூல் தரிக்க முடியும் என்று இல்லையா? அவர்கள் மட்டும் தான் தேவபாஷையில் இறைவனுடன் தொடர்பு கொள்ள முடியும் என்று இல்லையா? சூத்திரனின் காதில் உருக்கிய ஈயத்தை ஊற்று என்று சொன்ன மனு கிறிஸ்தவனா?
புஸ்பராணியின் முதுகில் எறி சவாரி செய்யும் புத்திஜீவிகள்.
மற்றவர்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் பயன்படுத்தி வாழ்ந்தவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, புத்திஜீவிகளும் தான். எமது மக்களின் போராட்டத்தை பயன்படுத்தி வாழ்ந்த வாழ்கின்ற வியாபாரிகள் போல் தான், (இலக்கிய – இலக்கிய அரசியல்) பிரமுகர்களும். இங்கு இவை இரு எதிர் முனையிலும் தொடர்ந்து அரங்கேறுகின்றன. புஸ்பராணியின் உணர்ச்சிகரமான போராட்ட ஆற்றலை அன்று அரசியல்வாதிகள் பயன்படுத்தியது போல், இன்று அவரின் எழுத்தை பிரமுகர்கள் பயன்படுத்துகின்றனர். அன்றும் இன்றும் புஸ்பராணி பயன்படுத்தப்படுவராகவே தொடர்ந்தும் இருக்கின்றார். இது புஸ்பராணியின் நிலை மட்டுமல்ல, எமது மக்களினதும் நிலையும் கூட. இந்த வகையில் இந்த சமூக அமைப்புக்குள், புஸ்பராணிக்கே இருக்க கூடிய வர்க்க அரசியல் பார்வையுடன், வெளிப்படையான நேர்மையான தன் வரலாற்றுக் குறிப்பை அவர் தந்துள்ளார். இந்த அமைப்பில் தொடர்ந்து போராடுவதில் எற்பட்ட நேர்மையான அதிருப்த்தி தான், புஸ்பராஐhவின் நூலிலிருந்து இவரை வேறுபடுத்தி விடுகின்றது.
போராடிவர்களின் நேர்மையற்ற நடத்தைகளையும், அவர்களின் மனித விரோதக் கூறுகளையும் கண்டு வெறுத்து, மௌனமாகி ஒதுங்கியவர் தான் புஸ்பாரணி. மற்றொரு தலைமுறை புஸ்பராணி எதை கண்டு வெறுத்து ஒதுங்கினாரோ, அந்த மக்கள் விரோத கூறுக்கு எதிரான போராட்டத்தை நடத்தத் தொடங்கினர். இப்படி இந்த இரு அணியும் தான், உண்மையாகவும் நேர்மையாகவும் எம் வரலாற்றில் இருக்க முனைந்தனர். இப்படி இவ்விரண்டு அணியுடன் இல்லாதவர்கள் யாராக இருந்தனர். ஆம் அவர்கள் தான் எம் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள். இப்படி எம்மைச் சுற்றிய போராட்ட வரலாறு இருக்கின்றது. இந்த அடிப்படையில், தன்னை மௌனமாக்கிய அரசியலுக்கு எதிராக போராடியவர்களைக் கொண்டு, தன் நூலுக்கான முன்னுரை நூல் ஆசிரியர் பெற்று இருக்கவில்லை. மாறாக இந்த நூலுக்கு முன்னுரை எழுதியவர்கள் தான், மக்களின் எதிரிகளாக இருந்ததுடன் மக்களின் போராட்டத்தையே தோற்கடித்தவர்கள். புலித் (இயக்கத்) தலைவர்கள் மட்டுமல்ல, புலியை (இயக்கத்தை) சார்ந்த நின்ற புத்திஜீவிகளும் இணைந்து தான், இந்த சமூகத்தை நஞ்சிட்டு கொன்றனர். இந்த வகையில் இந்த நூலுக்கு முன்னுரை எழுதிய கருணாகரன், இந்த நூலுக்கு முரணான அரசியல் பாத்திரத்தை ஆற்றுகின்றார். தனது எழுத்து ஆளுமை மூலம், தாங்கள் “புத்திஜீவிகளாக” இருந்து, இந்த சமூகத்துக்கு நஞ்சிட்டு அழித்த பக்கத்தை, இந்த நூல் மூலம் மூடிமறைக்க முனைகின்றார். அதே எழுத்து ஆளுமையுடன் தான், 1980 முதல் முள்ளிவாய்க்கள் வரை சமூகத்தை ஏமாற்றி மக்களை படுகுழியில் தள்ளிப் பிழைத்தவர்கள் இவர்கள். இன்று புஸ்பராணியின் முதுகில் எறி தம்மை புனிதாரக்கியபடி சவாரி செய்ய முனைகின்றனர். சமூகத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்த புத்திஜீவிகளை, தன் நூல் முன்னுரை மூலம் பாதுகாக்க முனைந்த புஸ்பராணி இதற்காக விமர்சனத்துக்குரியவராகின்றார்.
அன்று முதல் புஸ்பராணி போன்ற ஆயிரக்கணக்கனவர்களின் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் தங்கள் நலன்களுக்கு கட்சிகளும், இயக்கங்களும் பயன்படுத்தின. இன்று புஸ்பராணியின் அனுபவத்தையும் கூட, பிரமுகராக உள்ள “புத்திஐPவிகள்” தம் சொந்த நலனுக்கு பயன்படுத்துகின்றனர். புஸ்பாரணி போன்றவர்கள் இன்னமும் மற்றவர்களால் பயன்படுத்தப்படுபவராக உள்ளனர். இதுதான் உண்மையான அர்ப்பணிப்புகளுக்கும், தியாகங்களுக்கும் நடந்தது. இது தான் எமது வரலாற்றுத் தோல்வியுமாகும். இந்த வகையில் தங்கள் குற்றங்களை மூடிமறைத்து, அதை மற்றவர்கள் மேல் குற்றம் சுமத்தும் அளவுக்கு இந்த நூலில் முன்னுரை எழுதுகின்றனர். “இயக்கத்தலைமைகளே பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறும் நீங்கள் யார்? இயக்கத்தின் பின் செயற்ப்பட்ட “புத்திஜீவிக”ளாகிய நீங்கள் இதற்கு பொறுப்பில்லையா? எல்லாம் தெரிந்த “புத்திஜீவிக”ளாகிய நீங்கள் தான், “இயக்கத்தலைமை”யை விட முதன்மைக் குற்றவாளிகள். “இயக்கத்தலைமைக”ள் செய்ததை முள்ளிவாய்க்கால் வரை நியாயப்படுத்தி கொண்டு இருந்த நீங்கள், முள்ளிவாய்க்காலுக்கு பின் புதுவேசம் போட்டு புஸ்பராணி முதுகிலும் எறி சவாரி செய்ய முயல்கின்றனர். யார் இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்களோ, அவர்கள் தம் எழுத்து ஆற்றல் மூலம் பொறுப்பை மற்றவர்கள் மேல் சுமத்திவிட்டு தப்பிக்க முனைகின்றனர்.
கருணாகரன் எழுதுகின்றார் “வரலாற்றையும் நிகழ்ச்சிகளையும் கூர்மையாக அவதானித்து மதிப்பிடும் ஒருவருக்குத் தடுமாற்றங்கள் ஏற்படாது.” என்கின்றார். இவர் தடுமாறாது புலிப் பாசிசத்துடன் கூடிக் குலாவி புத்திஜீவியாக வாழ்ந்தவர். இன்று “இது மீள்பார்வைகளின் காலம், போராட்ட அனுபவங்களை எழுதும் காலம்…” என்ற கூறுகின்ற பாசிச குதர்க்கத்தைக் காண்கின்றோம். 1980 களிலேயே மீள்பார்வையும், இதற்கு எதிரான எதிர் போராட்டமும் இவர்களுக்கு எதிராக தொடங்கிவிட்டது. அந்த போராட்டம் இன்று பண்பியல் மாற்றம் பெற்று இவர்களை ஒதுக்கும் காலத்தை தடுத்து நிறுத்த முனைகின்றனர். இதை “மீள்பார்வைகளின் காலம்” என்று கூறி தங்கள் வலதுசாரிய கண்ணோட்டத்தை புனர்நிர்மாணம் செய்யும் காலமாக இட்டுக்கட்டிக் காட்ட முனைகின்றனர். “இது மீள்பார்வைகளின் காலம், போராட்ட அனுபவங்களை எழுதும் காலமாக…” முள்ளிவாய்கலுக்கு பின், இவர்களுக்கு ஏற்ப போராட்டம் ஓய்ந்து விடவில்லை. அது இவர்களுக்கு எதிராக அன்றில் இருந்து ஓய்வின்றி இன்று வரை தொடருகின்றது.
போராட்டம் என்பதே மகிழ்ச்சியானது என்றார் கார்ல் மார்க்ஸ். போராடுவதை மகிழ்ச்சிக்குரிய வாழ்வாக கார்ல் மார்க்ஸ் தேர்ந்தெடுத்ததால், அவருக்கு வறுமை வாழ்வாகியது. தன் குழந்தைகளைக் கூட இந்த வறுமை கொன்றபோது கூட, போராட்டம் என்பதையே மகிழ்ச்சியாக கருதிப் போராடியவர். இந்த போராட்டம் மூலம் உலகத்தையே விளக்கி அதை தலைகீழாக்க கோரும் மார்க்சியத்தை தந்தார். இந்த மார்க்சிய வழி வந்த போராட்டம் எம் மண்ணிலும் முரணற்ற வழியில் தன்னை நிறுவி இருக்கின்றது.
இந்த அரசியல் வழியில் வந்தவர்கள் புஸ்பராணி போல் மௌனமாகி ஒதுங்காது, புஸ்பராணி போன்றவர்கள் ஒதுங்க காரணமான அரசியலுக்கு எதிராகப் போராடினார்கள். சிறு இயக்கமாகவும், இயக்கத்துக்கு உள்ளாகவும், உதிரியாகவும் தொடங்கி மாணவர்களையும் மக்களையும் அணிதிரட்டிக் கொண்ட போராட்டமாகவும் கூட மாறியது. இயக்கங்களுக்கும், அரசுக்கும் எதிரான போராட்டங்களை, தங்கள் சொந்த பிணங்களுக்கு மேலாகவே நடத்தினர். இன்று இந்த பக்கம் தான், “இது மீள்பார்வைகளின் காலம், போராட்ட அனுபவங்களை எழுதும் காலமாக…” கூறி, இவர்களால் அதிகளவில் திட்டமிட்டு இருட்டடிப் செய்யப்படுகின்றது. இதன் மூலம் தங்களை பிரமுகராக நிறுவும் காலமாக இதை சிரிஸ்டிக்க முனைகின்றனர்.
புஸ்பராணியின் வலதுசாரிய கண்ணோட்டம் தான் அவரை மௌனமாக்கி ஒதுங்க வைத்தது. அவரின் குடும்பத்தில் இருந்து உருவான போராட்ட உணர்வுகல்ல. அவரின் குடும்பத்தில் இருந்த 1986 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகம் வந்த இரு சகோதரிகள், ராக்கிங்ககு எதிரான தன்னியல்பான போராட்ட உணர்வு எம்மை வியக்க வைத்தது. ராக்கிங்கு எதிரான எனது போராட்டத்தை எதிர்த்து பல்கலைக்கழகத்தை மூடியவர்கள், ரக்கிங் தங்கள் உரிமை என்ற கூறி பகிஸ்கரிப்பை நடத்திய போது, அதற்கு எதிராக என்னுடன் முதல் அணியில் நின்று போராடியவர்கள் தான் புஸ்பராணியின் இரு சகோதரிகள். அந்தளவு போர்குணம்சத்துடன் உருவான குடும்ப பின்னணி என்பது, தனித்து ஒரு குடும்பமாக விடப்பட்ட அடிநிலை சாதியத் தன்மையும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வாழ்தலுக்கான போராட்டமும் முக்கிய காரணமாக இருந்துள்ளது.
இந்த போராட்ட மரபில் இருந்து வந்த புஸ்பராணியை மெனனமாக்கியது எது? அவரின் வலதுசாரிய அரசியல் தான். வலதுசாரிய அரசியல் இதைத் தாண்டி நேர்மையாகவும் உண்மையாக இருக்காது என்ற உண்மையை, அவர் இந்த நூல் வரை புரிந்து கொள்ளவேவில்லை. அந்த அரசியல் மற்றவன் உழைப்பை சுரண்டுவதையும், சுரண்டி வாழ்வதையும் அறமாகக் கொண்டது. அது மனித உணர்வுகளையும், போராட்ட அர்ப்பணிப்புகளையும் கூட தன் சொந்த சுயநலத்துடன் தான் பயன்படுத்துகின்றது. இந்த வகையில் தான் வலதுசாரிய கருணாகரன் கூட, புஸ்பராணியின் நூலைக் கொண்டு புத்திஜீவிகளாகிய தங்களை குற்றமற்றவர்களாக நிறுவ முனைகின்றார். இதைத் தாண்டி, புஸ்பராணியின் நூலின் உள்ளடக்கம் என்பது, வெளிப்படைத் தன்மை கொண்டு காணப்படுகின்றது. தான் கொண்டிருந்த இலட்சியத்தின் பால், எந்த விதமான அழுக்கும் படாதவண்ணமாக, தன் நேசிப்பை இந்த நூல் மூலம் அவர் வெளிப்படுத்துகின்றார். உண்மையில் இதுதான் இலட்சியம், இதுதான் விடுதலை, இதுதான் போராட்டம் என்ற கருதி அதற்காக போராடித் தியாகம் செய்த பொது சமூக எதார்த்ததை இந்த நூல் பதிவு செய்திருக்கின்றது. களத்தில் நின்று போராடிய ஆயிரம் ஆயிரம் (புலிகள்) பேரின் நிலையும் கூட இதுதான், இந்த அரசியலின் அப்பிராணிகளான தங்கள் அப்பாவித்தனத்துடன், தங்கள் சொந்த அனுபவங்களைக் கொண்ட வராலாற்றுக்கு, வெளிப்படையாகவே இது உரிமை கோரி இருக்கின்றது. இதுதான் பலரின் அனுபவம் கூட.
இன்னும் வலதுசாரிய அரசியலில் பின் நின்று, அப்பாவியாக தன்னைத்தான் வெளிப்படுத்தும் புஸ்பராணியை இந்த நூல் மூலம் பார்ப்போம். “யுத்த நிலத்திலிருந்து தப்பிச் செல்வதிலிருந்து மக்கள் தடுக்கப்பட்டார்கள். மக்களின் சாவுக் கணக்கு அதிகரிக்க அதிகரிக்க அந்தச் சாவுக் கணக்கை வைத்து சர்வதேச சமூகத்திடம் புலிகள் ‘லோபி” செய்ய முயற்சித்தது ஒன்றும் இரகசியமல்ல, வரலாற்று திரிபுமல்ல.” என்கின்றார். நிச்சயமாக இந்த உண்மை இன்றா தொடங்கியது. இல்லை. புஸ்பாரணியின் கைதின் போது கூட இதே ‘லோபி” அரசியல் தான் அரங்கேறியது. “நான் பொலிஸாரால் பாலியல் வன்புணர்வு செய்து வதைக்கப்பட்டேன் என்று பத்திரிக்கைகள் செய்தி பிரசுரித்தன. இன்று வரை அந்த செய்தி எமது சமூகத்தில் அவ்வப்போது பேசப்பட்டுக் கொண்டுதானிருக்கின்றது. என்னை பாலியல் பலாத்காரம் செய்தாரென்று இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை மீது குற்றம் சுமத்தப்பட்டது” இப்படி அன்று ஒரு பொய் புனையப்பட்டு, சமூகத்திற்கு நஞ்சிட்டு உசுப்பேற்றப்பட்டது. ஆக அங்கிருந்தே இந்த அரசியலும், இந்த அரசியல் வழிமுறையும் தொடர்ந்து வருகின்றது. அன்று சிறிய பலியீடுகள் தான், தொடர்ந்து பெரிய பலியீடுகளாக மாறுகின்றன. இந்த வகையில் தன்னையே தேசியம் பலியிட்டதை புரிந்து கொள்ளாத புஸ்பராணியின் மதிப்பீடுகள், பல அரசியல் குளறுபடிகளால் ஆனாது. பத்மநாபா, வரதராஜபெருமாள் தொடங்கி பலர் மீதான மதிப்பீட்டுக்களை, அவர்கள் கொண்டிருந்த அரசியலுக்கு வெளியில் வைத்துக் காட்ட முனைவது அபத்தமானது. பத்மநாபா, வரதராஜபெருமாள் அரசியல் இந்தியக் கைகூலி அரசியலாகவே இந்ததே ஒழிய மக்களுக்கான அரசியலாக இருக்கவில்லை. நீங்கள் மௌனமாக முன் இருந்த நேர்மையான உணர்வு தான், உங்களை மௌனமாக்கியது. ஆனால் அவர்களின் நேர்மையான உணர்வு நேர்மையற்ற உணர்வாகி இந்தியா கைக்கூலியாக இயங்க வைத்தது. எப்படி கி.பி அரவிந்தன் புலிகளுக்கு பின்னால் போனாரோ, அப்படித்தான் இவர்களும். இதில் எந்த வேறுபாடு இல்லை. ஆனால் வேறுபட்டு இங்கு பார்ப்பது, பார்க்க வைப்பது, இந்த நூலின் நேர்மையை மேலும் அசிங்கப்படுத்தி விடுகின்றது.
அன்று ஒரு பெண்ணை சமூகம் முன் பாலியல் வல்லுறவு செய்துதான், தேசிய அரசியல் செய்தனர். இறுதியில் புலிகள் சமூகத்தையே பலியிட்டதன் மூலம் தேசிய அரசியல் செய்து பிழைக்க முனைகின்றனர். ஆக அங்கிருந்து தான் வேர் வளருகின்றது. இப்படிப்பட்ட உண்மை கண்டு கொள்ளாது, இன்றைய சம்பவத்தை பார்ப்பதும், அதை குறிப்பாக்கி இனம் காண்பது அரசியல் அப்பத்தமாகும். உண்மையில் வலதுசாரிய வழி வந்த அரசியல் இது. புஸ்பாரணி வரிந்து கொண்ட அரசியலும் இதுதான். விசித்திரமான உண்மையாகும்.
தாங்கள் வரிந்து கொண்டுள்ள அரசியலுக்குள் இவை உயிர்ப்புடன் இருப்பதுதான் இதில் உள்ள முரண். சாதியம், ஆணாதிக்கம் … போன்ற சமூக ஒடுக்குமுறைகளை தன் சொந்த சமூத்திடமே சந்திக்கின்ற தமிழ் தேசிவாதியாக இருக்கும் அதே நேரம், அந்த தேசியத்தையே உயர்த்திய அறியாமையும் முரண்பாட்டையும் இங்கு நாம் காண்கின்றோம். இன்று வரை இந்த சமூக அமைப்புத்தான், அதை பாதுகாக்கின்ற உண்மையை காணமுடியாதவராக தன்னை வெளிப்படுத்துகின்றார் புஸ்பாரணி. இது தன் அறியாமைக்குள் தன்னைத்தான் பலியிடுகின்றது. இதைத்தான் மற்றவர்கள் சுயநலத்துடன் பலியிடுகின்றனர்.
சாதியம், ஆணாதிக்கம் தொடங்கி .. இயக்க அரசியலை தனிநபர் “அதிகாரம்” சார்ந்த அரசியல் பிழற்சியாக குறுக்கிக் காட்டுகின்றார். இந்த எல்லைக்குள் தன்னை குறுக்கிவிடுகின்ற ஒரு எல்லைக்குள், இந்த நூல் கூட குறுக்கிய பார்வை கொண்டது. கடந்த மனித விரோத வரலாற்றை தனிநபர் “அதிகாரம்” சார்ந்த ஒன்றாக காட்டி, கருணாகரன் போன்ற வலதுசாரிய புத்திஜீவிகள் மறுபடியும் சமூகத்தை மோசடி செய்து பிழைக்க வழிவகுத்து கொடுத்துள்ளது.
கருணாகரன் புஸ்பராணியின் பெயரால் எழுதுகின்றார் “..விடுதலை இயக்கங்கள் அதிகார மையங்களாக மாறியமையே பின்வந்த விளைவுகளுக்கும் சீரழிவுகளுக்கும் துக்கத்துக்கும் காரணமாகின. இதற்கான காரணங்களை இயக்கத்தலைமைகளே பொறுப்பேற்க வேண்டும்.” என்கின்றார். நீங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை என்றால், நீங்கள் யார்? நீங்கள் இதன் போது என்ன அரசியல் பாத்திரம் வகித்தீர்கள். சொல்லுங்கள்.? நாங்கள் தெளிவாக சொல்கின்றோம், இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் நீங்கள். இங்கு இயக்கத்தலைமை மட்டுமல்ல, இயக்கத்தைச் சேர்ந்த புத்திஜீவிகளும் தான் இதற்கான பொறுப்பு ஏற்கவேண்டும். இவர்கள் முன்னின்று முன்னெடுத்த வலது அரசியல் விளைவு தான் இதுவே ஒழிய, தனிப்பட்ட குணவியல்புகளல்ல. இதற்கு வெளியில் இந்த அரசியலுக்கு வேறு அரசியல் தெரிவு எதுவும் கிடையாது.
இந்த உண்மையை மூடிமறைக்க “தவறு” “குற்றம்” என்று கூறுகின்ற வலதுசாரிய போக்கிலித்தனத்தையே இங்கு காண்கின்றோம். இந்த வகையில் கருணாகரன் எழுதுகின்றார் “ஈழத்தமிழர்களின் கடந்த காலம் என்பது தவறுகளினாலும் குற்றங்களினாலும் அவற்றின் விளைவுகளால் ஏற்பட்ட பின்னடைவுகளாலும் தோல்விகளினாலும் ஆகியிருப்பதால், அது – கடந்த காலத்தின், நிகழ்காலத்தின், எதிர்காலத்தின் என முக்காலத்தின் தோல்வியாகவும் அவற்றின் துக்கமாகவும் மாறியுள்ளது…. தவறுகளைச் சுட்டிக்காட்டுவது வெறுமனே குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கும் வேலையுமல்ல. இந்தத் தவறுகளிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது …. கடந்த காலம் என்பது தவறுகளினாலும் குற்றங்களினாலும் அவற்றின் விளைவுகளால் ஏற்பட்ட பின்னடைவுகளாலும் தோல்விகளினாலும் ஆகியிருப்பதால்..” என்கின்றார்.
ஆக இங்கு தேசியம் (புலி) மீதான அரசியல் விமர்சனத்துக்கு பதில் “தவறு” “குற்றம்” குறித்த விமர்சனமாக இதை மாற்றுகின்ற வலதுசாரிய சாக்கடைகள் தான் இன்று இலக்கியமாகின்றது. இங்கு விமர்சனம், சுயவிமர்சனத்தை “தவறு” “குற்றம்” மாக காட்டி, முடக்கிவிடவும், தப்பித்துவிடவும் முனைகின்றனர். இதுதான் மக்களின் போராட்டத்தை மறுதளிக்கும் இலக்கியம் – அரசியல் இலக்கியமாக முகிழ்கின்றது. மக்களின் போராட்ட உணர்வுக்கு எதிரான, அரசின் புனர்வாழ்வு இலக்கியம் – இலக்கிய அரசியலும் இதுதான். அதாவது அரசியல் விமர்சனமாக கொண்டு புலியை விமர்சிக்காது, “தவறு” “குற்றம்” மீதான ஒன்றாக காட்டி போராட்ட உணர்வை இன்று நலமடிக்கின்றனர்.
“தவறுகள்” “குற்றங்கள்” எதன் மீது உருவாகின்றது? எந்த அரசியல் இதை உருவாக்கின்றது? எந்த அரசியல் இதை மறுதளிக்கின்றது? இதை உருவாக்கும் அரசியல் வலதுசாரியம், இதை மறுதளிக்கும் அரசியல் மார்க்சியம். இங்கு “அதிகார மையங்களாக” மாறிய “இயக்கத்தலைமை”கள் காரணம் என்பதும், அரசியல் உண்மைளைத் திரிப்பதாகும்.
அதிகாரத்தை நோக்கியது தான் போராட்டம். இதை யாரும் மறுதளிக்க முடியாது. இங்கு யாருக்கு அதிகாரம் என்பதில் தான், அரசியல் வேறுபடுகின்றது. வலதுசாரி அரசியல் தன் வாக்கம் சார்ந்து தனிமனிதனை மைய்யப்படுத்தியது. அது இறுதியில் தன் அதிகாரமாக இயல்பில் மையப்படுகின்றது. பாட்டாளி வர்க்கம் அதிகாரம் என்பது ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினதும், ஒடுக்கப்பட்ட சமூத்தினதும் அதிகாரத்தைக் கோருகின்றது.
இப்படி அதிகாரம் பற்றி வலது இடது அடிப்படை அரசியல் வேறுபாட்டுடன் தான் போராட்டங்கள் ஆரம்பிகின்றன. இந்த வகையில் வலதுசாரிய போராட்டம் “அதிகார மையங்களாக” இருப்பதையே தன்ளுள் கொண்டு தான் அது உருவாகின்றது. இப்படி தங்கள் அரசியலே அதுவாக இருக்க, அதையே காரணமாக சொல்வது இங்கு அரசியல் மோசடியாகும்.
இங்கு புஸ்பராணி “விடுதலை இயக்கங்கள் வெகு விரைவிலேயே அதிகார மையங்களாக மாறுவார்கள் என்றும் சொந்த மக்களையே கொன்று குவிப்பார்களென்றும் அப்போது யாரும் கருதியிருக்கவில்லை” என்கின்றார். இங்கு இது புஸ்பராணியின் அறியாமையாக இருக்க, கருணாகரன் போன்ற புத்திஜீவிகள் இந்த மோசடியைக் கொண்டு புஸ்பராணிக்கு போன்ற சமூகத்தில் வாழ்கின்ற மக்களின் முதுகில் எறி பயணித்தபடி அவர்களுக்கு நஞ்சிடுகின்றனர்.
எம்மை தோற்கடித்தது வலதுசாரிய அரசியல் தான். தனி மனிதன் சார்ந்த அல்லது நிகழ்வுகள் சார்ந்த, “அதிகார மையங்கள்”, “தவறுகள்”, “குற்றங்கள்”,… எம்மை தோற்கடிக்கவில்லை. இவை மக்களுக்கு எதிராக செயற்பட்டன. இதை உருவாக்கியது வலதுசாரிய அரசியல். மக்கள் அதிகாரத்தைக் கோராத, மக்கள் முரண்பாடுகளை தீர்க்காத வலதுசாரிய அரசியல் எம்மை தோற்கடித்தது. இப்படி இருக்க அதன் விளைவுகளைக் காரணமாக காட்டுவதும், காண்பதும் சாதரண மக்களை பொறுத்த வரையில் அவர்களின் அறியாமையாகும். ஆனால் “வரலாற்றையும் நிகழ்ச்சிகளையும் கூர்மையாக அவதானித்து மதிப்பிடும் ஒருவருக்குத் தடுமாற்றங்கள் ஏற்படாது.” என்றுகூறும் புத்திஜீவிகள் இப்படி காட்டுவது, எல்லாம் தெரிந்து செய்யும் அரசியல்-இலக்கிய மோசடியாகும். இந்த இரண்டு பக்கத்தையும், “அகாலம்” என்ற புஸ்பராணியின் இந்த நூலில் நாம் காணமுடியும்.
பி.இரயாகரன்
04.07.2012
//அப்படி இல்லையா? ஒரு குலத்தில் பிறந்தவர்கள் மட்டுமே பூணூல் தரிக்க முடியும் என்று இல்லையா?//
இந்து மதமும் சாதியும் ஒன்றாக பின்னி பிணையவில்லை. மக்களிடம் சாதி வேற்றுமை வேரூன்றி போய்யுள்ளது. அந்த மக்கள் இந்து மதம் கிறிஸ்தவ மதம் என்று பல மதங்களை சேர்ந்தவர்கள்.
எல்லா இந்துக்களும் தாராளமாக பூணூல் தரிக்க முடியும். ஆனால் தமிழர்களுக்கு தங்க சங்கிலி போட்டு கொண்டு திரிய தான் விருப்பம். அதனால் பூணூல் தரிக்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இது தான் உண்மை. இதை திரித்து இந்து மதத்தில் குறிப்பிட்ட சாதி தான் பூணூல் தரிக்க அனுமதி என்பது இந்து மதத்தின் மீதான வழமையான விசமத்தனமான குற்றசாட்டுகளே. சூத்திரனின் காதில் ஈயத்தை உருக்கி ஊற்றிய இந்து மதம், இந்து மதத்தை ஒழித்தால்தான் சாதி ஒழியும் இப்படி எல்லாம் சொன்னால் தான் தமிழ் முற்போக்காளர், தமிழ் பகுதறிவுவாதி ஆக முடியும்.
//..எம்மை தோற்கடித்தது வலதுசாரிய அரசியல் தான். தனி மனிதன் சார்ந்த அல்லது நிகழ்வுகள் சார்ந்த, “அதிகார மையங்கள்”, “தவறுகள்”, “குற்றங்கள்”,… எம்மை தோற்கடிக்கவில்லை. இவை மக்களுக்கு எதிராக செயற்பட்டன. இதை உருவாக்கியது வலதுசாரிய அரசியல். மக்கள் அதிகாரத்தைக் கோராத, மக்கள் முரண்பாடுகளை தீர்க்காத வலதுசாரிய அரசியல் எம்மை தோற்கடித்தது……///
சுப்பர்…அதுவும் சோசலிச சமதர்ம ஜேர்மனியில் இருந்து எழுதும் துணிச்சல் யாருக்கு வரும். ரயாகரனுக்கு தன்னை விட்டால் யாரும் இல்லை எனும் நினைப்பு. அதுவும் ”நாம்” என பன்மையிலேயே சொல்வார். ஏதோ தன்னுடம் லட்சக்கணக்கில் ஆட்கள் இருப்பது போல. இப்போதானே பாசிசப்புலி ஒழிந்து விட்டது ஸ்ரீலங்கா போய் மக்கள் போராட்டம் தொடங்கலாமே??
//எல்லா இந்துக்களும் தாராளமாக பூணூல் தரிக்க முடியும். பூணூல் தரிக்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இது தான் உண்மை. இதை திரித்து இந்து மதத்தில் குறிப்பிட்ட சாதி தான் பூணூல் தரிக்க அனுமதி என்பது இந்து மதத்தின் மீதான வழமையான விசமத்தனமான குற்றசாட்டுகளே. //
நான் சொல்ல வந்தது பூணூல் என்ற வெறும் நூல் கயிற்றை மட்டும் அல்ல – (சூத்திரர் தவிர்ந்த) யாரும் பூணூல் அணியலாம். அது அல்ல எனது கேள்வியின் தாத்பரியம். தீட்சை கூட யாரும் பெறலாம். பூசை கூட யாரும் செய்யலாம்.
ஆனால் இவை எல்லாம் விதிவிலக்குகளே – அட்காவது வழமைக்கு மாறானவையே.
சைவக் குருக்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் யார்? ஏன் அவர்கள் பிரித்து அழைக்கப்பட்டார்கள்? அவர்களும் பிராமணர்களா – அல்லது, கீழ்த் தட்டு பிராமணர்களா?
வீரசைவர்கள் பல கோயில்களில் பூசை செய்கிறார்கள். பண்டாரக் குருக்கள் என்று ஏன் அவர்களை அழைக்கிறோம்?
கொடி ஏற்றுவதற்கு ஏன் மெகா தகுதி உள்ள ஐயரைத் தேடுகிறோம்?
//இந்து மதமும் சாதியும் ஒன்றாக பின்னி பிணையவில்லை. //
நான் அறிந்த மற்றச் சமயங்கள் சாதிப் பிரிவுகளை முன் வைக்கவில்லை. நாம் மட்டும் பிராமண – க்ஷத்திரிய – வைசிய – சூத்திர என்று பிரித்து அதற்கு வர்ணாசிரம தர்மம் என்று கூடப் பெயர் வைத்திருக்கிறோம்.
//மக்களிடம் சாதி வேற்றுமை வேரூன்றி போய்யுள்ளது. அந்த மக்கள் இந்து மதம் கிறிஸ்தவ மதம் என்று பல மதங்களை சேர்ந்தவர்கள்.//
நிச்சயமாக – ஆனால், இந்து தர்மத்தின் வேர்களில் சாதியும் ஒன்று.
கண்ணப்ப நாயனார் ஏன் ஸ்பெஷல்? வேடராக இருந்து அவர் வீசிய பூக்களுக்கு ஏன் தனிச் சிறப்பு? அவர் மாமிசத்தை சிவலிங்கத்துக்குத் தந்தது ஏன் சிலாகிக்கப்படுகிறது?
திருநாளைப் போவார் நாயனார் அல்லது நந்தனார் ஏன் பேசப்படுகிறார்? அவர் புலையர் என்பதால் தானே. அவர் ஏன் கோயிலுக்குக் போக அனுமதிக்கப்படவில்லை?
அவரது ‘இழிபிறப்பு’ இறைவன் ஆடல் புரியும் பொன்னம்பலத்தை வழிபடுவதற்குத் தடையாய் இருந்ததாமே! அதற்கு இன்னொரு சூத்திரரான சிவபிரான் என்ன செய்தார்?அவரது கனவில் தோன்றி, இப்பிறவி போய் நீங்க ஏரியினிடை நீ மூழ்கி, முப்புரிநூல் மார்புடன் வா என்றாராம். அது மட்டுமன்றி தில்லைவாழ் அந்தணர் கனவிலும் போய் இவருக்கு வேள்வித் தீ அமையுங்கள் என்று பணித்தாராம். புலையர் நெருப்பில் நுழைந்து சுத்தமாகி வர, அவரை மற்றவர்கள் ஏற்றார்களம்.
அவர் நந்தனாராக இருந்தது தானே சிறப்பு. அதில் தீயில் ஏன் அவர் சுத்திகரிக்கப்பட வேண்டும்? அல்லது, அவர் சிறப்பூ ஏன் சிவபிரானால் தில்லைவாழ் அந்தணர்களுக்கு நிரூபித்துக்காட்டப்பட வேண்டும்?
ஆனால், “இந்து மதமும் சாதியும் ஒன்றாகப் பின்னிப் பிணையவில்லை” என்பர் எம்மில் சிலர்.
//இந்து மதத்தை ஒழித்தால்தான் சாதி ஒழியும் இப்படி எல்லாம் சொன்னால் தான் தமிழ் முற்போக்காளர், தமிழ் பகுதறிவுவாதி ஆக முடியும்.//
இத்தனை நாள் வாழ்ந்த இந்து (சைவ) மதம் இனியும் வாழும். அதற்கு சில்லறைக் காவலர்கள் தேவையில்லை. சமஸ்கிருதம் போல் அது வழக்கொழிந்து இயற்கை மரணமும் அடையலாம் – அதுவும் ஏற்கப்பட வேண்டியது தான்.
இந்து மதத்தை ஒழித்தால் சாதி ஒழியும் என்று யார் சொன்னார்கள் – நிச்சயமாய் நான் இல்லை. இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவர்களான இந்தியர் – இலங்கையர்கள் சாதியை இத்தனை தலைமுறைகளின் பின்னரும் விடவில்லை. தெல்லிப்பழையில் யூனியன் கல்லூரியில் இருந்த (செல்வநாயகமும் அங்கு தான் போய் வந்திருப்பார்) தேவாலயத்தில் கூட ‘கீழ் மக்களுக்கு’ வேறு ஆசனங்கள் இருந்தனவாம். பிரிவுகளை வெறுத்து அன்பைப் போதித்த பெளத்தம் இலங்கையில் எப்படி இருக்கிறது? மகாசங்கத்தின் பெருந்தலைவர்களாக குறித்த பின்னணியினரே வரமுடியும். கொவிகம அல்லாத பிரேமதாச ஆட்சியில் பட்டபாடு எல்லோரும் அறிந்தது.
பிசி சொல்வது யார் என்று எனக்குத் தெரியாது – ஆனால், எனக்குப் பகுத்தறிவுவாதி என்று பட்டம் எல்லாம் வேண்டாம்!!
//கள்ளத்தோணி, தோட்டக்காட்டான், மலைநாட்டான் எல்லாம் தமிழர் சிங்களவர்களிற்கு கொடுத்த பட்டப்பெயர்களா அல்லது தமிழர்களிற்கு கொடுத்த பட்டப்பெயர்களா?-//
தோட்டக்காட்டான், மலைநாட்டான், வடக்கத்தையான் எல்லாம் தமிழர்கள் கொடுத்த பெயர்கள். இலங்கைத் தமிழர்கள் கொடுக்காத பெயர்களா? சாதிப் பெயர்கள் தவிர, தீவான், வடமராட்சியான், குளைக்காட்டன், கிணறுகாவி, இப்படி!
ஆனால், கள்ளத்தோணி?
மலையகத் தமிழர்கள் கள்ளத்தோணிகள் எனப்படவில்லை. வல்வெட்டித்துறை மக்கள் சில சமயங்களில் அவ்வாறு அழைக்கப்பட்டனர்.
ஆனால், சிங்கள வகுப்புவாதிகளால் தான் தோசை, வடை, நல்லெண்ணெய் என்பவற்றுடன் கள்ளத்தோணிகள் எனவும் இலங்கைத் தமிழர்கள் அன்புடன் அழைக்கப்பட்டனர்.
மலையகத் தமிழர்கள் நல்ல தோணியில் உத்தியோகபூர்வமாக (கள்ளத்தனமான நோக்கத்துடன் பொய் சொல்லி) இந்தியாவின் தாழ்த்தபட்ட தமிழர்கள் மலையகம் கொண்டுவரப்பட்டமையை இலங்கைத் தமிழர்கள் தெரிந்து வைத்திருந்தனர்.
சாதிவாதி துரைக்கு இது தெரியாமல் இருந்திருப்பதில் என்ன ஆச்சரியம்?
//சாதிவாதி துரைக்கு இது தெரியாமல் இருந்திருப்பதில் என்ன ஆச்சரியம்?// றோகன்
தமிழர்களால் தமிழர்களின் உருமைகள் மறுக்கப்படுவதை இன்று கூறினால் சாதிவாதி.
புலிகளால் தமிழரின் உருமைகள் பறிக்கப்படுவதை அன்று கூறினால் துரோகி.-துரை
///….உயர்சாதியைனரென்ற போர்வையில் தமிழர் அபகரித்தால் அது தமிழீழ விடுதலை. சிங்களவர் பறித்தால் தமிழின அழிப்பு.-துரை…//
ஐயையோ துரை நீங்கள் எழுதியது மறந்து போச்சா? இரண்டும் வேண்டாம் நீங்கள் சொன்ன வக்காலத்து பம்மாத்து “சிங்களவர் பறித்தால் சாதிய ஒழிப்பு” என வைத்துக் கொள்ளலாமா?
//தமிழர்களால் தமிழர்களின் உருமைகள் மறுக்கப்படுவதை இன்று கூறினால் சாதிவாதி….//
சிங்களவர்களால் காணி பறிக்கப்படுவதை நியாயப்படுத்தி அதனை சாதிய ஒழிப்பு எனச் சொல்பவர் என்ன ‘வாதி’??
//சாதிவாதி துரைக்கு இது தெரியாமல் இருந்திருப்பதில் என்ன ஆச்சரியம்?// றோகன்
/தமிழர்களால் தமிழர்களின் உருமைகள் மறுக்கப்படுவதை இன்று கூறினால் சாதிவாதி./
சாதி என்று எமக்குள் நாமே வேலிகளைப் போடுவதை விடுத்து, ‘தமது சாதியும் குறைவில்லை என்று கூறுவதும் அதனை தமிழீழத்தில் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் புலம் பெயர்நாடுகளிலாவது கடைப்பிடித்து வாழ்வதும் தமிழரால் உருமைகள் பறிக்கபட்ட தமிழர்களின் கடைமையாகும்’ என்று போதிக்க வருபவர்கள் – சாதிப் பிரிவினைகளை தொடர்ந்தும் வைத்திருக்க முனைபவர்கள் -சாதிவாதிகள்.
இந்த நேரடிக் கருத்தை விளங்க மறுப்பதுடன், ‘புலிகளால் தமிழரின் உருமைகள் பறிக்கப்படுவதை அன்று கூறினால் துரோகி’ என்றெல்லாம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுபவர்கள் விதண்டாவாதிகள்.
குதிரைக்குத் தெரிந்து தான் கடவுள் கொம்பைக் கொடுக்கவில்லை என்பார்கள். துரை போன்ற மனப்பாங்கு உள்ளவர்கள் – நாம் மற்றவர்களால் தாழ்த்தப்பட்ட சாதிகளில் பிறந்து விட்டோம், ஆனால் ‘நமது சாதியும் குறைவில்லை’ என்பதையே முன்வைத்து சமத்துவம் பேச வருபவர்கள் – தாழ்த்தப்படாத சாதியில் பிறந்திருந்தால்…..? கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சாதித் தடிப்புடன் தீண்டாமையும் ஆலய வாசல் அடைப்புகளையும் சிரட்டைத் தேநீர் – ஓட்டைத் தட்டுச் சாப்பாடுகளையும் முன்னின்று நடாத்தியிருப்பார்கள்.
Thank God!
//வக்காலத்து பம்மாத்து “சிங்களவர் பறித்தால் சாதிய ஒழிப்பு” என வைத்துக் கொள்ளலாமா?//சாந்தன்
//சிங்களவர்களால் காணி பறிக்கப்படுவதை நியாயப்படுத்தி அதனை சாதிய ஒழிப்பு எனச் சொல்பவர் என்ன ‘வாதி’?//சாந்தன்
ஜேர்மனியில் கிட்லரின் கொடுமைகளை அடக்கிய அமெரிக்காவும் மற்றும் படைகழும் ஜேர்மனில் இன்றும் நிலைகொண்டுள்ளன. ஜேர்மனியர் அதற்கு எதிர்ப்பல்ல. ஆனால் தமிழ் பகுதியில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட அரச படைகள் எடுக்கும் நடவடிகைகள் தமிழரிற்கு (பிறரை அடக்கி வாழ எண்ணும் தமிழர்களிற்கு மட்டும்) கசக்கின்றது.-துரை
//குதிரைக்குத் தெரிந்து தான் கடவுள் கொம்பைக் கொடுக்கவில்லை என்பார்கள். துரை போன்ற மனப்பாங்கு உள்ளவர்கள் – நாம் மற்றவர்களால் தாழ்த்தப்பட்ட சாதிகளில் பிறந்து விட்டோம், ஆனால் ‘நமது சாதியும் குறைவில்லை’ என்பதையே முன்வைத்து சமத்துவம் பேச வருபவர்கள் – தாழ்த்தப்படாத சாதியில் பிறந்திருந்தால்…..? கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சாதித் தடிப்புடன் தீண்டாமையும் ஆலய வாசல் அடைப்புகளையும் சிரட்டைத் தேநீர் – ஓட்டைத் தட்டுச் சாப்பாடுகளையும் முன்னின்று நடாத்தியிருப்பார்கள்.//றோகன்
மேற்கத்திய நாடுகள் விண்வெளியில் நவக்கிரகங்களை தேடுகின்றன. தமிழீழம் கேட்கும் தமிழரோ உலகெங்கும் யார் யார் என்ன சாதியென தேடி அலைகின்றனர் என்பதை றோகன் துரையையும் தேடுவதிலிருந்து உறுதிப்படுத்தியுள்ளார்.
அகதிகள் அந்தஸ்துக்கு இலங்கைத்தமிழர்.
மாவீரர் தினத்திற்கும் பணம் பறிப்பிற்கும் ஈழத்தமிழர்.
தமிழர்மேல் ஆதிக்கம் செலுத்தவும், அரசியல் பேசவும் யாழ் மேலாதிக்கம். அன்றும் இன்றும் என்றும் யாழ்ப்பாணத்த மிளகாயத்தூளின் மணம் மாறினாலும் குணம் மாறதவர்கள். வளர்ந்த உலகில் வளராத மனோபவங்கள்.-துரை
//மேற்கத்திய நாடுகள் விண்வெளியில் நவக்கிரகங்களை தேடுகின்றன.//
ஏன்? அவை தொலைந்து போய்விட்டனவா? சொல்லவே இல்லையே.
நவக்கிரகங்களா? தமிழர்களின் / இந்துக்களின் நவக்கிரகங்களில் அடங்கும் சூரியன் ஒரு கிரகமா? இராகு – கேதுவைத் தேடுகிறார்களோ? புளூட்டோ ஒரு கிரகமா?
என்ன நடந்தது கிரகங்களுக்கு? சொன்னால், மற்றவர்களும் சேர்ந்து தேட முடியும் அல்லவா?
//வளர்ந்த உலகில் வளராத மனோபவங்கள்.-துரை//
//தமது சாதியும் குறைவில்லை என்று கூறுவதும் அதனை தமிழீழத்தில் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் புலம் பெயர்நாடுகளிலாவது கடைப்பிடித்து வாழ்வதும் தமிழரால் உருமைகள் பறிக்கபட்ட தமிழர்களின் கடைமையாகும்.-துரை//
கல்யாணராமன் கமல் மாதிரி துரை என்ன டபிள் அக்ரிங்கா?
//கல்யாணராமன் கமல் மாதிரி துரை என்ன டபிள் அக்ரிங்கா?//றோகன்
பிறந்த மண்ணில், சொந்த மண்ணில் உயர்ந்த சாதியில் பிறந்தவனே உயர்வானவன். அவர்களே தமிழர்களை ஆள தகுதியானவர்கள். தாழ்ந்த சாதியில் பிறந்தோன் தன் தகப்பனார் செய்த தொழிலையே செய்ய வேண்டும்.
புலத்தில் நாம் தமிழர். சிங்களவர் எங்கள் உருமைகளை பறிக்கின்றார்கள். பணத்திற்காக என்ன தொழிலையும் நான் முந்தி நீ முந்தியென்று போட்டி போட்டு செய்வோம். இதனை விட டபிள் அக்ரிங் யாரால் முடியும்.-துரை
>>> ஜேர்மனியில் கிட்லரின் கொடுமைகளை அடக்கிய அமெரிக்காவும் மற்றும் படைகழும் ஜேர்மனில் இன்றும் நிலைகொண்டுள்ளன. ஜேர்மனியர் அதற்கு எதிர்ப்பல்ல. ஆனால் தமிழ் பகுதியில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட அரச படைகள் எடுக்கும் நடவடிகைகள் தமிழரிற்கு (பிறரை அடக்கி வாழ எண்ணும் தமிழர்களிற்கு மட்டும்) கசக்கின்றது <<<
வேலுப்பிள்ளை பிரபாகரன், அடோல்ப் ஹிட்லரின் மறு அவதாரம் என்று ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொள்வோம். சின்னப் பிள்ளைகள் இந்த பத்திரிகையினை வாசிப்பது இல்லாததால் பேச்சுக்கு எடுத்தால் ஒருவரும் சண்டைக்கு வரமாட்டார்கள். சின்னப்பிள்ளைகளுக்கு தெரியும் 1930 களின் யேர்மனியும், 1970 களின் இலங்கைத்தீவும் சமூக அரசியல் பொருளாதார ஒப்பிட்டளவில் அப்பிளும் தேங்காயும் போன்றவை என்பது.
கதைக்கு எடுத்துக்கொண்டு கதைத்தால் 1945 இல் நேச படைகள் [US, UDSSR, Britain, France, Canada] நாசி ஜேர்மனியினை தோற்கடித்தவுடன் முதலாவதாக சிவில் நிர்வாகத்தினரை மருசீரமைப்பதட்கான நடவடிக்கைகளை எடுத்தன. இந்த சிவில் நிர்வாகம் சமஸ்டிக் குடியரசுக்கான ஒரு அரசியல் சட்டத்தினை உருவாக்கியது. ஒரு பாராளுமன்றமும் அரசியல் மேல் கட்டுமானமும் உருவாக்கப்பட்டது. நேச நாடுகள் விசேடமாக அமெரிக்கா ஜேர்மனியினை மீண்டும் தொழில்துறை படுத்துவதற்காக மார்சல் திட்டம் [Marsahal Plan] மூலம் கடன்கள் வழங்கியது. சண்டை முடிந்து இரண்டு வருடங்களின் பின்னர் ஜெர்மனியின் "பொருளாதார அற்புதம்" உருவாகியது.
நேச நாடுகளின் படைகள் சண்டை முடிந்து ஓரிரு மாதங்களுக்குள் நிரந்தர முகாம்களில் முடங்கியதுடன் ஜெர்மன் மக்களின் நாளாந்த வாழ்கையில் ஒரு வகையிலும், ஓம் ஒரு வகையிலும், ஒரு விதமான சட்ட ஒழுங்கு, இராணுவ ரீதியான தொடர்புகளினை ஏற்ப்படுத்த தடை செய்யப்பட்டது.
இந்த படைகளின் பணி "குளிர்கால யுத்த" அரசியலின் போது [1989 வரை] சோவியத் ஒன்றியதிட்கு எதிராக போருக்கான தயார் நிலையில் இருந்தது மட்டுமே. இதற்கு எதிராக தொடர்ந்து ஜெர்மனியர் ஆர்ப்பாட்டம் செய்தனர். 1970 களின் இறுதியில் இருந்து தொடந்த போராட்டங்களின் விளைவாக ஜெர்மனியின் "பசுமைக் கட்சி" உருவாகியது.
தற்போது ஜெர்மனியில் இருக்கும் படைகள் மத்திய கிழக்கு யுத்ததிற்கான விமான படைத்தளத்தினையும், கிழக்கு ஐரோப்பா நோக்கிய ஏவுகணை தளங்களையும் இயக்கும் ஒரு சில ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொண்டிருக்கின்றது. இந்த தளங்களின் முன்னால் நிரந்தரமாக ஆர்ப்பாட்டம் செய்யும் ஜெர்மன் மக்களின் எண்ணிக்கையும் ஒரு சில ஆயிரமே.
"தமிழ் பகுதியில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட அரச படைகள் எடுக்கும் நடவடிகைகள்" அம்புலிமாமா என்ற புத்தகத்தில் இருந்து
//”தமிழ் பகுதியில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட அரச படைகள் எடுக்கும் நடவடிகைகள்” அம்புலிமாமா என்ற புத்தகத்தில் இருந்து//வடிவேலு
கள்ளக்கடத்தல், கள்ளக்குடியேற்ரம் முதலியவற்ரை தடுக்கவே வடபகுதியில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. யாழ்நகரில் கூட பொருட்கள் வாங்க மட்டுமே வருவார்கள். பொலிசாரை துப்பாக்கியேந்தி தமிழர் கொலைசெய்த பின்னரே இராணுவமும் பொலிசாரிற்கு உதவியாக தேடுதல் நடவடிக்கைகளில் உதவி செய்யத் தொடங்கியது.
யாழ்ப்பாணத்திலிருந்து மக்கள் புலிகளால் துரத்தப்பட்டபோது சில பகுதிகளில் புலிகள் இராணுவத்திடம் சரணடைதிருந்தனர். அப்பகுதி மக்களை எவ்வாறு இராணுவத்தினர் நடத்தினர் என்பது நூல் வடிவில் 1998 யாழ்ப்பாணத்தில் வெளிவந்திருந்தது.
புலம்பெயர் தமிழர் தூங்கிக் கிடக்கும் சிங்கத்திற்கு கல்லெறிந்து விளையாடுவதும் மரத்தில் இருக்கும் குரங்கிற்கு மூக்கை சொறிந்து காட்டுவதும் சிறு பிள்ளைத்தனமான செயலன்றி வேறொன்றுமில்லை.-துரை
புலம் பெயர் நாடுகளில் வாழும் அரச உளவாளிகள், இராணுவ உளவாளிகள் வரலாறின் உண்மையினை திரித்து எழுதினாலும் அது அம்பலமாகும் போது இன்னுமொரு புதிய சுத்துமாத்து எழுதினாலும் உலகில் ஒரு நாட்டிலும் இராணுவம் சட்டத்தினையும் ஒழுங்கினையும் பாதுகாப்பதில்லை. இராணுவம் எப்போதும் எங்கும் உள்நாட்டில் மக்களின் எழுச்சியினை மழுங்கடிக்கவே பிரயோகிக்கப்படுகின்றது.
இலங்கையில் வட, கிழக்கில் தினசரி “புலம் பெயர் புலிகள்” அல்லது எதோ வகையில் தமிழ் தேசியம் கதைக்கும் பிரிவுகளுடன் ஒரு தொடர்புமில்லாத பொதுமக்கள் மனிதனின் அடிப்படை மானம் மதிக்கப்படாத நிலையில் நடத்தப் படுகின்றார்கள். கிழமைக்கு ஒரு மனிதன் என்ற வகையில் கொள்ளப் படுகின்றார்கள். நாளாந்தம் அடித்து விரட்டப் படுகின்றார்கள். மதிப்புக்கு உரிய மந்திரி டக்லஸ் தேவானந்த பொதுக்கூட்டம் கூடி இராணுவம் நிலங்களை அபகரிக்கக் கூடாது என்று சில கிழமைகளுக்கு முன்னர் அறிவித்திருக்கின்றார். இந்த அறிவிப்பின் போது இராணுவம் அவரை சுற்றி நின்று பாதுகாப்பு வழங்கியது.
இராணுவத்தினை எதிர்க்கும் மனிதர்கள் “கல்லெறியும் குரங்குகள்” என்பது வட, கிழக்கில் மட்டுமல்ல தெற்கிலும் என்பதை அரசு பிரகடனப் படுத்தியிருகின்றது. சிலாபத்தில் மீனவர்கள் மீது நடத்தப்பட்ட கொலை தாக்குதல்கள், சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலைசெய்வோர் மீது துப்பாக்கி பிரயோகம், தோட்ட தொழிலாளர்கள் மீதான தினசரி தாக்குதல்கள், பல்கலை கழக மாணவர்கள் மீதான் தாக்குதல்கள் இதை உறுதி செய்கின்றது.
“புலம் பெயர் புலிகள்” அடங்கிய தேசிய வாத அரசியலுக்குள் இலங்கையின் நிகழ்வுகளை குறுக்கி பூதம் காட்டுவது அறியாமையில்லை. அரச சதிக்கு பூமாலை போடுவதாகவும். வட கிழக்கில் அபகரிக்கப்படும் நிலங்கள் எந்த “புலம் பெயர் புலிக்கு” சொந்தம். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்கள், விவசாயிகள் எந்த புலம் பெயர் நாட்டில் இருந்து வந்தவர்கள்.
இப்ப உள்நாட்டு புலி இல்லை வெளிநாட்டு புலி இருக்கின்றது என்ற பூச்சாண்டி நீண்ட காலத்திற்கு எடுபடப் போவதில்லை. வடக்கு கிழக்கு தமிழ் பேசுவோரின் பாரம்பரிய வாழ்நிலம் அங்கெ இராணுவம் இனவாத இயந்திரமாக மட்டுமே செயல்படுகின்றது. இந்த இயந்திரம் இயங்கினால் மட்டுமே கொழும்பில் ஒரு ஆட்சி அது எந்த கட்சியாக இருந்தாலும் பதவியில் இருக்க முடியும். இந்த இராணுவம் முகாம்களுக்குள் முடங்கவோ அல்லது வெளியேறவோ போவதில்லை.
“கல்லெறியும் குரங்குகள்” இந்த இராணுவத்தினை அவர்களுடன் சேர்ந்தியங்குபவர்களுடன் சேர்த்து வெளியேற்றும் காலம் நீண்ட தூரத்தில் இல்லை. புலம் பெயர்ந்தோர் உட்ப்பட்ட தமிழ் தேசிய வாதமும் அதற்கு விதி விலக்கிலை.
உலகம் தட்டை என்று நிறையப்பேர் நீண்ட காலமாக நப்பியிருந்தனர்.
துரை விளங்கி கொள்ள வேண்டும் தமிழ் பகுதியில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட எடுக்கும் நடவடிகைகள் யாவும் மனித உரிமை மீறல்கள். இதே நடவடிக்கைகள் சீனா கியுபாவில் எடுக்கபட்டால் அவை அத்தியாவசிய தேவைகள்.
புஸ்பராணி பொலிசாரால் கற்பழிக்கப்பட்டார். கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார் என்றெல்லாம் கூட்டனி மேடைகளிலே அதிகம் பேசப்பட்டது. அப்போதெல்லாம் மெளனமாக இருந்துவிட்டு இப்போது அப்படி நடக்கவில்லை என்று மறுப்பதன் காரணம் என்ன?
“தலித்” தமிழ் சொல் அல்ல என்கிறார். அது எந்த மொழி என்றுகூட தெரியாது என்கிறார். அது இந்திய பத்திரிகைகளில் பயன்படுத்தப்படுவதால் தானும் பயன்படுத்தியதாக கூறுகிறார். ஆனால் அது தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சொற்களை விட சிறந்தது என்று தனக்கு தெரியும் என்கிறார். அதெப்படி என்பது புரியவில்லை!!
புலத்திலும் சாதியைக் கொண்டு வந்துவிட்டார்கள் என்கிறார். மறுபுறம் சாதியை சட்டம் கொண்டு ஒழிக்கலாம் என்கிறார். ஒரு மூத்த பெண் பொராளி அதுவும் தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்து வந்தவர் இவ்வாறு கூறுவது வெட்கக்கேடானது அல்லவா?
தனது நீண்ட கால அனுபவத்தில் இருந்து ஆயுதம் தூக்க வேண்டாம் என்கிறார். அப்படியானால் அதன் அர்த்தம் என்ன? சிங்கள இனவெறி அரசு படுகொலை செய்தால் பொறுமையாக இரு. அவ் அரசு நிலங்களைப் பறித்தால் சத்தம் போடாமல் இரு. ஏன் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகக் கூட போராடாமல் இருக்க வேணடுமாம். இதைத்தானே மகிந்த சகோதரர்களும் கூறுகிறார்கள். அப்படியானால் அவர்களுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்?
போராட்டம் புஸ்பராணி குடும்பத்திற்கு வெளிநாட்டில் வசதியான வாழ்க்கையை கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பழைய வரலாறு அவருக்கு ஒரு பிரமுகர்தனத்தையும் கொடுக்கிறது. எனவே இனி ஆயுதம் தூக்கி அதனை இழக்க அவர் விரும்பாமல் இருக்கலாம். ஆனால் அதற்காக நாட்டில் அடக்கு முறைக்குள்ளான மக்கள் ஆயுதம் தூக்கக்கூடாது என்று கூறுவது அப்பட்டமான துரோகமாகும்.
இறுதியாக புஸ்பராணியை மீண்டுமொருமுறை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியிருக்கும் தேசம் ஆசிரியர் ஜெயபாலன் நிச்சயம் பாராட்டுக்குரியவர்.
>>> BC on July 7, 2012 12:43 pm
துரை விளங்கி கொள்ள வேண்டும் தமிழ் பகுதியில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட எடுக்கும் நடவடிகைகள் யாவும் மனித உரிமை மீறல்கள். இதே நடவடிக்கைகள் சீனா கியுபாவில் எடுக்கபட்டால் அவை அத்தியாவசிய தேவைகள்.<<<
" உலகில் ஒரு நாட்டிலும் இராணுவம் சட்டத்தினையும் ஒழுங்கினையும் பாதுகாப்பதில்லை. இராணுவம் எப்போதும் எங்கும் உள்நாட்டில் மக்களின் எழுச்சியினை மழுங்கடிக்கவே பிரயோகிக்கப்படுகின்றது." என்று எனது முன்னைய கருத்தில் எழுதியிருந்தேன்.
நான் படித்த புவியியலில் சீனாவும், கியூபாவும் உலக வரை படத்தில் இருப்பதை கண்டிருகின்றேன். நேற்று இன்று எதாவது மாற்றங்கள் ஏற்ப்படதாக எனக்கு தெரிந்தளவில் இல்லை. புலத்துப் புலிகளுக்கு பின்னால் இடம் பெயரவும் இல்லை. சீனாவும், கியூபாவும் சிவப்புகிரகதிட்கு இடம் பெயர்ந்ததாக ஒருவரும் கிலிகொள்ள தேவையில்லை. நம்பாவிடில் google map இல் பார்த்து நம்பலாம்.
எல்லா உளவாளிகளின் ஒரு மிகவும் மலிவான முறை செய்திகளை, கருத்துக்களினை திரிப்பது. புதிய கதைகள் என்று கிழிந்த பளம் சீலையினை தூக்கி பிடிப்பது. [disinformation].
சீனா, கியூபாவுடன் ரஷ்யாவினையும் சேர்த்து பார்த்தால். கியூபா இராச தந்திர ரீதியாகவும் சீனா, ரஷ்யா இராணுவ, இராச தந்திர ரீதியாகவும் இன அழிப்பிற்கு ராஜபக்சே அரசிற்கு உதவி செய்தன, செய்கின்றன. தீவு முளுமையிலுமான இராணுவ அடக்குமுறைக்கு துணை போகின்றன. இது உளவாளிகளுக்கு தெரிந்த ஒன்று.
சீனா, கியூபா, ரஸ்சியாவில் மனித உரிமைகள் பாது காக்கப்படுகினது என்று சொல்லவேண்டிய தேவை ராஜபக்ச அரசிற்கும் அதனது உளவாளிகளுக்கும் மட்டும் தான் இருக்கினறது.
//துரை விளங்கி கொள்ள வேண்டும் தமிழ் பகுதியில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட எடுக்கும் நடவடிகைகள் யாவும் மனித உரிமை மீறல்கள். இதே நடவடிக்கைகள் சீனா கியுபாவில் எடுக்கபட்டால் அவை அத்தியாவசிய தேவைகள்.//
அவலை நினைத்து உரலை இடித்தலுக்கு இதை ஒரு ‘லோக்கல் உதாரணம்’ என்று கொள்ளலாமா?
//சீனா, கியூபா, ரஸ்சியாவில் மனித உரிமைகள் பாது காக்கப்படுகினது என்று சொல்லவேண்டிய தேவை ராஜபக்ச அரசிற்கும் அதனது உளவாளிகளுக்கும் மட்டும் தான் இருக்கினறது.//வடிவேலு
தனியாக ஓர்நாடோ, அரசோ, அரச உருமைகளற்ர இலக்கைத்தமிழர் மனித உரிமைகள் மீறியதுபோல், மீறுவதுபோல் யாராவது உலகிலுண்டா?-துரை
/அவலை நினைத்து உரலை இடித்தலுக்கு இதை ஒரு ‘லோக்கல் உதாரணம்’ என்று கொள்ளலாமா?//றோகன்,
5 பேர் வாழ 500 பேரை அழிவு கொடுப்பது சரியானதென அடம்பிடிக்கும் புலிகளின் கூட்டத்தை எப்படி உதாரணப்படுத்தலாம். -துரை
சிஜஏ உளவாளிகள் என்று மற்றவர்களை குற்றம் சாட்டி ஆரம்பித்த புரச்சி இன்று ராஜபக்ச உளவாளிகள் என்று சொல்லும் அளவுக்கு மேலை நாடுகளுக்குள் பாதுகாப்பாக இருந்து வேகமாக வளர்ந்துள்ளது.
>>> தனியாக ஓர்நாடோ, அரசோ, அரச உருமைகளற்ர இலக்கைத்தமிழர் மனித உரிமைகள் மீறியதுபோல், மீறுவதுபோல் யாராவது உலகிலுண்டா?-துரை <<<
தமிழ் மக்களை ஸ்ரீ லங்கா அரசு புலிகளின் அழிவிற்கு பின்னர் நடத்தும் முறை இலங்கை தமிழர் மனித உரிமை மீறல் குற்றவாளிகள் என்ற சித்தாந்தத்தில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது. மேலே உள்ள கருத்து இந்த சித்தாந்தத்தின் பிரதிபலிப்பு.
புலிகள் மனித உரிமை மீறல்கள் செய்ததில் தமிழ் விடுதலை இயக்கங்கள் மத்தியில் முதலிடத்தினை பெற்றுக் கொண்டார்கள் என்பதற்காக தமிழ்பேசும் மக்கள் அதற்கு பொறுப்பு ஏற்க முடியாது. புலிகள் தான் தாங்கள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி என்றார்களே தவிர தமிழ் மக்கள் இல்லை.
இலங்கை தமிழர்களோ அல்லது உலகில் எந்த ஒரு தேசிய இனமோ ஒட்டு மொத்தமாக மனித உரிமைகளை மீறவில்லை. சம்பந்தப்பட்ட மீறல்களின் போது அவர்களை பிரதிநிதி படுத்திய அரசியல் இராணுவ தலைமைகளுக்கு அவர்கள் ஒரு போதும் பொறுப்பில்லை. உதாரணமாக அமெரிக்க அரசுகள் இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக செய்து வரும் பல லட்சக்கணக்கான மனித படுகொலைகளுக்கு அமெரிக்க மக்கள் பொறுப்பில்லை.
ராஜபக்சே அரசு அதனது தமிழ் சேவகர்கள் டக்லஸ் போன்றவர்களின் தொடர்சியான மனித உரிமை மீறல்களுக்கு சிங்கள மக்கள் ஒரு போதும் பொறுப்பில்லை. இறுதி கால யுத்தத்தில் ராஜபக்சே இரணுவம் நடாத்திய காட்டுமிராண்டித்தனத்தின் உண்மைகள் முழுமையாக எப்போதாவது வெளிவரும் போது மனித நேயம் கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியினை ஏற்ப்படுத்தும். எனினும் இதற்கு சிங்கள மக்கள் பொறுப்பில்லை.
புலிகள் மாதிரி "யாராவது உலகில் உண்டா? என்று ஒரு கேள்வி வந்தால் அதற்கான விடைக்கு ராஜபக்சே தந்த மூக்குக் கண்ணாடியினை கழட்டி ஒரு உலக கண்ணாடியினை போடவேண்டும். 1970 களில் பெரும்பான்மையாகவும், அதற்கு முன்னரும் உலகில் உருவாகிய அனைத்து ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்களும் புலிகளின் தன்மையினையே கொண்டிருந்தன.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் பத்துக்கு மேற்ப்பட்ட பிரிவுகள், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், நிக்கறகுவாவின் சாண்டிநிஸ்த்தாஸ் என்று அடுக்கி கொண்டு போகலாம். வரலாறினை வாசித்தால் இவர்கள் புலிகளில் மோசமான போட்டி இயக்க படுகொலைகள், உட்படுகொலைகள், பொதுமக்கள் படுகொலைகளினை செய்திருக்கின்றார்கள். இவர்களிடம் இருந்து புலிகள் நிறைய படித்திருந்ததுடன் இலங்கையின் நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்துடன் இணைத்து காட்டுமிராண்டித் தனமான நடை முறைகளை அறிமுகப்படுத்தினர்.
பின் லாடன் அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தினை தகர்ப்பதற்கு முன்னர் இந்த இயக்கங்களில் பல அரசியல் அதிகாரத்தினை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தங்கள் கைக்குள் கொண்டு வந்தார்கள். இதனுடன் தான் புலிகள் அமெரிக்காவில் (புலிகள் 1997 இல் தடை செய்யப்பட்டது. நவம்பர் 2001 இல் இருந்து "Specially Designated Global Terrorist " என பயங்கரவாத பட்டம் சூட்டப்பட்டது ) தடை செய்யப்பட்டதுடன் தொடங்கி முள்ளிவாய்க்காலுக்கு வழிகாட்டப் பட்டனர். புலிகளை போன்று அளிக்கப்பட்ட இயக்கங்களில் ஒன்று குர்டிஸ்தான் விடுதலை இயக்கம் (PKK ).
>>> சிஜஏ உளவாளிகள் என்று மற்றவர்களை குற்றம் சாட்டி ஆரம்பித்த புரச்சி இன்று ராஜபக்ச உளவாளிகள் என்று சொல்லும் அளவுக்கு மேலை நாடுகளுக்குள் பாதுகாப்பாக இருந்து வேகமாக வளர்ந்துள்ளது<<<
உளவாளிகள் சினிமா படத்தில் வருபவர்கள் போல் இல்லை. உளவாளிகளில் பல விதம் உண்டு அது உளவாளிகளுக்கும் தெரியும். சம்பளம் இல்லாமல் செயல் படும் உளவாளிகள் சோத்துக்கு உப்பு போடுவது போல் கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு மூன்று வரிகளில் அரசியல் உளவு எழுதுவார்கள். இது அனைத்து உளவு நிறுவனங்களிலும் நடைமுறையில் இருக்கும் முறை. இது பற்றி யாராவது அறிய விரும்பினால் பின்வரும் புத்தகங்களை வாசிக்கலாம்.
The Art of Intelligence: Lessons from a Life in the CIA's Clandestine Service
-http://www.amazon.com/The-Art-Intelligence-Lessons-Clandestine/dp/1594203342/ref=sr_1_1?ie=UTF8&qid=1341952410&sr=8-1&keywords=CIA
The Official CIA Manual of Trickery and Deception
-http://www.amazon.com/The-Official-Manual-Trickery-Deception/dp/0061725900/ref=sr_1_5?ie=UTF8&qid=1341952410&sr=8-5&keywords=cia
CIA மட்டுமல்ல பிரான்சில் இருக்கும் DCRI [Direction centrale du renseignement intérieur] போன்று எல்லா நாடுகளிலும் பல விதமான உளவு நிறுவனங்கள் இருக்கின்றன. புரட்சி செய்ய வேண்டுமென்றால் இந்த நிறுவங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். புரட்சி வேகமாக வளர்ந்து வருகின்றது என்பது உண்மை. உலகின் முதல் புரட்சியான 1789 இன் பிரன்சுப் புரட்சியின் போது அரசனுடன் சேர்த்து உளவாளிகளும் கில்லடின் கத்தியால் கழுத்து வெட்டப்பட்டனர். இது இலங்கையிலும் நடக்காது என்று எப்படி சொல்வது ?
//புலிகள் மனித உரிமை மீறல்கள் செய்ததில் தமிழ் விடுதலை இயக்கங்கள் மத்தியில் முதலிடத்தினை பெற்றுக் கொண்டார்கள் என்பதற்காக தமிழ்பேசும் மக்கள் அதற்கு பொறுப்பு ஏற்க முடியாது. புலிகள் தான் தாங்கள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி என்றார்களே தவிர தமிழ் மக்கள் இல்லை.//வடிவேலு
யார் யாரெல்லாம் புலிகளாக மாறினார்கள், செயற்பட்டார்கள். அரசுடன் இரகசிய உறவுகளை என்றும் வளர்த்துவந்த புலிகள் யார்? புலம்பெயர் நாடுகளில் தமிழரை சுரண்டி வாழும் அமைப்புகள் எவை? மேற்கூறப்பட்ட தோடு மேலும் பல காரணங்களே இலங்கைத்தமிழரின் இன்றைய நிலமைக்கு காரணம். இவர்களைத் தட்டிக்கேட்க யாருமேயில்லை. இவர்களை தமிழர் அடையாள்ம் கண்டு கொள்ழும் வரை தமிழினத்தின் அழிவு தவிர்க்க முடியாத்தொன்றாகிவிடும்.
அன்று வாழ்ந்த்து கொலைகாரப்புலிகள் இன்று வாழ்வதோ தமிழரின் இரத்தம் குடிக்கும் புலிகள். சிங்களவரை தமிழினத்திற்கு எதிராக வைத்திருப்பதன் மூலமே புலிகளின் வாழ்வு சிறக்கும். தமிழரின் அழிவிற்கு காரணமானவர்களே தமிழரின் காவலர்கள் என்னும் நிலமை மாறவேண்டும்.-துரை
வரலாற்று உண்மையின் பிரகாரம் நளவர் சமூகம் சிங்களவரில் துராவ சாதிப்பிரிவினர். அவர்களது மதம் பௌத்தம். அதாவது சிங்கள மரமேறிகள். ஆதாரம் யாழ்ப்பான சரித்திரங்கள் 1.முத்துத்தம்பிப்பிள்ளை எழுதியது. 2வேலுப்பிள்ளை எழுதியது. 3.முதலியார் இராசேந்திரம் எழுதியது. மற்றும் இலங்கை சரித்திரநூல்கள். இதன் காரணமாகவே புஸ்பரானிக்கு யாழ்ப்பான சாதிய ஊழல்களை அம்பலப் படுத்தும் தைரியம் இல்லாமல் போனது.
விஜயகுமார்
cradlenin@gmail.com
சிங்களவர் வடபகுதியில் முன்பு வாழ்ந்துள்ளார்கள், தமிழ் பகுதிகளில் புத்த மதமும் இருந்துள்ளது. எதற்காக இப்போது வடக்கு தமிழர் பிரதேசம் என்னும் போராட்டம்? -துரை
வரலாற்றை பக்கம் சாராமல் ஆய்வு செய்து உண்மையை இங்கே சொன்னால் கொஞ்சம் கசக்கும். சாதி ரீதியாக வடக்கின் பூர்வீக குடிகள், கரையார், மள்ளர்(பள்ளர்) நளவர், கோவியர், சிங்களவர், பின்னாளில் மடப்பள்ளிகள் மாத்திரமே. இவர்களின் பூவீக நிலங்கள் வந்தேறிகளால் பிடுங்கப்பட்டு ஊருக்குள் இருந்து துரத்தப்பட்டு சின்னாபின்னப்படுத்தப்பட்டனர். இதில் போரில் கோவியர் பள்ளர் நளவர் சிறைப்பிடிக்கப்பட்டு சிலவேலைகளை வந்தேறிகளுக்கு செய்துகொடுக்க சம்மதித்தபடையால் சில உரிமைகள் மாத்திரம் இவர்களுக்கு மட்டுப்படுத்தி வழங்கப்பட்டிருந்தது. கோவியர்களில் உயரமானவர்கள் வெள்ளாள முதலிகளுக்கு சவம் காவவும் மள்ளர்/ பள்ளர் வயலில் உழவு தொழில் பயிர் தொழில் செயவும், நளவர் மரமேறவும் இப்படியே சில நியதிகள் ஏற்ற்படுத்தப் பட்டிருந்தன. இதன் பிரகாரம் இவர்கள் போரில் சிறைபிடிக்கப்பட்டதனால் அக்காலங்களில் அடக்கி வைக்கப்பட்டனர். பின்னாட்ட்களில் கோவியர்களை சிலசமூகப் பிரிவினருக்கு எதிராக வெள்ளாள முதலிகள் தூண்டிவிட்டனர். வெள்ளாள முதலிகள் தேவதாசி மரபினர் என்பது வரலாறு சொல்லும் ஆதாதாரம். கோவியர்களும் சிங்கள பிரிவினர் என்று தான் சகல சரித்திர நூல்களும் சொல்கின்றன.
சரித்திரங்கள் உண்மையாகவும் திரிவுபடுத்தப்பட்டும், மறைக்கப்பட்டும் இருக்கலாம்.
தமிழரின் இந்த நிலமைக்கு காரணமாக உள்ளோர் தமிழரோடுதான் சேர்ந்து வாழ்கின்றார்கள். அவர்களை கண்டறிய வேண்டும். அது மட்டுமல்ல சாதிகள் தொழில்கள் செய்யும் முன்பே இருநத்தா அல்லது செய்யும் தொழில்களால் தமிழரிடம் வந்து சேர்ந்தனவா என்பதே ஆராயப்பட வேண்டியது.-துரை
//வெள்ளாள முதலிகள் தேவதாசி மரபினர் என்பது வரலாறு சொல்லும் ஆதாதாரம். கோவியர்களும் சிங்கள பிரிவினர் என்று தான் சகல சரித்திர நூல்களும் சொல்கின்றன.//
அடடா… கள்ளபாட் விஜயகுமார் என்ற பெயரில வலைப்பூ நடாத்துவது இதே விஜயகுமார் தானா? சேறு வீசுதல் விடுப்புகளை விடுத்து ஆதாரபூர்வமாகவும் கண்ணியமாகவும் இந்த உரையாடல்கள் தொடர்வது தேசத்துக்கும் வந்து போபவர்களுக்கும் நல்லது.
Rohan “நீரளவேயாகும் நீராம்பல் தாம் கற்ற நூலளவேயாகும் நுண்ணறிவு”. இந்த நூற்றாண்டுகடந்த பாடல் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறது. கோவியர் சிங்களவர் தான் என்பத்ர்த்கு மேலே நான் குறிப்பிட்ட சரித்திர நூல்களே கண்கண்ட ஆதாரம். நீங்கள் அது உண்மையா என ஆராயாமல் என்மீது குற்றம் காண விழைகிறீர்கள். தவிர, ஜே.ஆர்.அரசில் அமைச்சராக இருந்த சிறில் மத்யூ கோவியர் சிங்களவர் தான் என்று பாராளுமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார். அது பாராளுமன்ற பதிவேட்டில் இன்னும் உள்ளது. வெள்ளாளரில் ௦௦௦௦ 130பிரிவினர் தமிழகத்தில் இருந்தனர். அவற்றில் சில பிரிவினரே யாழ்ப்பாணத்து வெள்ளாளர். வெள்ளாள முதலியார் வேறு வெள்ளாளர் வேறு. தேவதாசி மரபினர்தான் வெள்ளாள முதலியார் என ஆதாரப்படுத்த பல சரித்திர நூல்கள் தோன்றியுள்ளன. முதலியார், பிள்ளை, பெரிய கவ்ரவப் பட்டம் என நினைத்து தேவரடியார்கள் வழிவந்தோரும் தங்களை பிள்ளை முதலியார் எனக் கூற தயங்கவில்லை.(Off springs of devadasi style themselves as Pillai and Mudaliyaar.(By,Edgur ThurstonCast and tributes of saouth indian.vol V page-84)
சிங்களவர் வடபகுதியில் முன்பு வாழ்ந்துள்ளார்கள், தமிழ் பகுதிகளில் புத்த மதமும் இருந்துள்ளது. எதற்காக இப்போது வடக்கு தமிழர் பிரதேசம் என்னும் போராட்டம்? -துரை
சிங்களவர் எப்போது வட பகுதியில் பெரும்பான்மையாக வாழ்ந்தார்கள். எவளவு பெயர் வாழ்ந்தார்கள். எதற்காக வடபகுதியை விட்டு ஓடினார்கள் என்பதை ஆதரங்களுடன் எழுதினால் நன்றாக இருக்கும். புத்தமதம் சிங்களவர்களின் மதமா? தமிழர்கள் புத்த சமயத்தை பின்பற்றி இருந்தார்கள் என்று தேசம்நெட் இல் கூட யாரோ ஆராய்ச்சி கட்டுரை எழுதியதாக நினைவு. வடக்கு தமிழர் வாழும் வாழ்ந்த இடம் என்பதற்கு இலங்கை தீவின் சனத்தொகை மதிப்பீடே சான்று.
/சரித்திரங்கள் உண்மையாகவும் திரிவுபடுத்தப்பட்டும், மறைக்கப்பட்டும் இருக்கலாம். தமிழரின் இந்த நிலமைக்கு காரணமாக உள்ளோர் தமிழரோடுதான் சேர்ந்து வாழ்கின்றார்கள். அவர்களை கண்டறிய வேண்டும். அது மட்டுமல்ல சாதிகள் தொழில்கள் செய்யும் முன்பே இருநத்தா அல்லது செய்யும் தொழில்களால் தமிழரிடம் வந்து சேர்ந்தனவா என்பதே ஆராயப்பட வேண்டியது.-துரை
நிச்சயமாக உங்களை போல் தமிழரோடு தான் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதை சொல்லியா தெரிய வேண்டும். சாதி என்பது தமிழரோடு சேர்ந்தது மட்டும் அல்ல. இது இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து வருகிறது. இது சிங்களவர்களிடமும் இருக்கிறது, தமிழர்களிடமும் இருக்கிறது. சாதியை சொல்லி பிழைப்பு தேடும் அரசியல் செய்யும் ஒருவர்க்கம் மக்களை ஏமாற்றி சிங்கள இனவாதிகளுக்கு தமிழர்களை காட்டி கொடுத்து வருவதும் யாவரும் அறிந்த உண்மை.
//சாதி என்பது தமிழரோடு சேர்ந்தது மட்டும் அல்ல. இது இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து வருகிறது. இது சிங்களவர்களிடமும் இருக்கிறது, தமிழர்களிடமும் இருக்கிறது. சாதியை சொல்லி பிழைப்பு தேடும் அரசியல் செய்யும் ஒருவர்க்கம் மக்களை ஏமாற்றி சிங்கள இனவாதிகளுக்கு தமிழர்களை காட்டி கொடுத்து வருவதும் யாவரும் அறிந்த உண்மை.//அஜீத்
பிறப்பால் உயர்ந்தவர்களே உயர்ந்தோர் மற்ரோரெல்லாம் தாழ்ந்தோர் என்று வாழும் மனிதர்கள் தமிழ் பேசும் யாவரையும் தமது அரசியல் வாழ்விற்காக ஓர் இனமென்று உலகிற்கு காட்டி நடத்திய நாடகத்தின் பெயர்தான் தமிழீழ விடுதலைப் போராட்டம்.
சிங்கள இனமில்லையேல் தமிழ் அரசியல்வாதிகள் வேலைய்ற்ரவர்களாகி விடுவார்கள். இப்போது தமிழக அரசியல்வாதிகழும் சிங்கள இனத்தால் பிழைப்பு நடத்துகின்றார்கள். -துரை
//Rohan “நீரளவேயாகும் நீராம்பல் தாம் கற்ற நூலளவேயாகும் நுண்ணறிவு”. இந்த நூற்றாண்டுகடந்த பாடல் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறது……. என்மீது குற்றம் காண விழைகிறீர்கள்.//
நான் சொல்ல வந்தது ஒரு சின்ன விடயம்…. விவாதங்கள் கண்ணியமாகவும் ஆதாரபூர்வமாகவும் இருப்பது நல்லது என்பதே அது. இதில் பிழை பிடித்தல் எங்கு வந்தது?
கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு என்பது விதி ஆகாது. நுண்ணறிவு என்பது கற்றதைப் பகுத்து மற்றவைகளுடன் தொகுத்து குப்பைகளைப் பிரித்து நல்லவைகளைக் கொள்ளல் ஆகும். பிராமணியத்தை முன்வைத்து எழுதிய நூல்களை மட்டும் படித்து விட்டு வந்து நுண்ணறிவு காட்ட முற்படுபவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். கிணற்றுத் தவளையின் நுண்ணறிவு கிணற்றின் பாசியுடனும் பாறைகளுடனும் தானே முடியும்?
சாதி என்பது போலியாக வரையப்பட்ட கோடுகள் என்று காட்டுவட்கை விடுத்து ‘எனது சாதியும் ஒன்றும் குறைவில்ல -நானும் பெரிய சாதிக் காரன் தான்’ என்று புலம் பெயர்ந்த நாட்டில் காட்டித் திரிய வேண்டும் என்று வாதிக்கும் துரை சொல்கிறார்…… “பிறப்பால் உயர்ந்தவர்களே உயர்ந்தோர் மற்ரோரெல்லாம் தாழ்ந்தோர் என்று வாழும் மனிதர்கள் தமிழ் பேசும் யாவரையும் தமது அரசியல் வாழ்விற்காக ஓர் இனமென்று உலகிற்கு காட்டி நடத்திய நாடகத்தின் பெயர்தான் தமிழீழ விடுதலைப் போராட்டம். ”
சிரிப்பதா அழுவதா?
//…. “நீரளவேயாகும் நீராம்பல் தாம் கற்ற நூலளவேயாகும் நுண்ணறிவு”….//
விஜயகுமார் உங்களுக்கு ‘வழிகாட்டியாக’ இருக்கும் பாடலின் அடுத்த இரண்டு வரிகளை கொஞ்சம் எடுத்து விடலாமே? அதை ஏன் ஒழித்துவிட்டீர்கள்? நாமும் அப்பாடலை ‘வழிகாட்டியாக’ கொள்வதனை ஏன் தடுக்கிறீர்கள்…. ஏனிந்த ஓரவஞ்சனை??
உங்களுக்கு தெரியாவிடின் இதோ…..
‘தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம்’
இதில் குலம் என்பது என்ன தெரியுமா? சரியான பாடலைத்தான் உங்களுக்கு வழிகாட்ட தெரிந்தெடுத்துள்ளீர்கள். வாழ்க!!
“புத்தமதம் சிங்களவர்களின் மதமா? தமிழர்கள் புத்த சமயத்தை பின்பற்றி இருந்தார்கள் என்று தேசம்நெட் இல் கூட யாரோ ஆராய்ச்சி கட்டுரை எழுதியதாக நினைவு. ”
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் இரண்டு (மணிமேகலை + குண்டலகேசி) பெளத்த சமயப் பின்னணி கொண்டவை.
/சிங்கள இனமில்லையேல் தமிழ் அரசியல்வாதிகள் வேலைய்ற்ரவர்களாகி விடுவார்கள். இப்போது தமிழக அரசியல்வாதிகழும் சிங்கள இனத்தால் பிழைப்பு நடத்துகின்றார்கள். -துரை///
தமிழ் இனம் இல்லையேல் சிங்கள இனம் என்று ஒரு இனமே இலங்கையில் உருவாகி தமிழ் இனத்தை அடக்கி ஆளும் இனமாக சந்தர்பம் கிடைத்து இருக்காது. அது மட்டும் அல்ல உங்களை போல் சிங்கள கொடியஆட்சிக்கு சேவகம் செய்பவர்களும் உருவாகி இருக்க முடியாது.
விமர்சனத்தை தாங்குகின்ற பக்குவம் இன்மையால் தாழ்வு மனப்பான்மை கொண்டு புலிகள் ஏனைய இயக்கங்களில் தமிழ் சகோதரர்களை அழித்தார்கள். அதே வழியில் இப்போ இலங்கை அரசும் செல்கின்றது. அதேபோன்று தான் பின்னூட்டம் எழுதுபவர்களும் சிலர் இங்கே துவளுகிறார்கள். குலத்தளவேயாம் குணம் என்பது சரிதானே. இதில் எனக்கு சந்தேகம் இல்லை. யாழ்ப்பாணத்தில் வெள்ளாள முதலியார்களுக்கு வேலையாட்களாய் இருந்தவர்கள் மற்றவர்களுக்கு செய்த தீமை கொஞ்ச நன்சமா? இதுவும் குலத்தளவின் குணம் தான். பிறருடைய தன்நீர்கினற்றுக்குள் நஞ்சு ஊற்றுவது, வீடுகளுக்கு தீ வைத்தது இதெல்லாம் குலத்தின் குணங்களால் தான் அமையப்பெற்றது. நான் நூலைப் பற்றியும் நுண்ணறிவு பற்றிப் பேசியதும் அந்த தகவல்களை எப்படிப் பெற்றேன் என்பதைக் குறிக்கவே! குலத்தளவேயாம் குணம் என்பது செவி வழியே சென்று எல்லோர் மனங்களிலும் பாடமாய் இருப்பது தான். நூல்களை தேடி சென்று அதை யாரும் இங்கே எழுதிவிட்டதாக நான் கருதவில்லை. உண்மைகள் சுடும் என்பது எவளவு உண்மையாய் உள்ளது பார்த்தீர்களா?
//தமிழ் இனம் இல்லையேல் சிங்கள இனம் என்று ஒரு இனமே இலங்கையில் உருவாகி தமிழ் இனத்தை அடக்கி ஆளும் இனமாக சந்தர்பம் கிடைத்து இருக்காது//
ஆக தமிழினமே தனது எதிரியை உருவாக்கினான் என எடுத்து கொள்ளலாமா??
//. அது மட்டும் அல்ல உங்களை போல் சிங்கள கொடியஆட்சிக்கு சேவகம் செய்பவர்களும் உருவாகி இருக்க முடியாது.//
சில வரிகளிலேயே உங்க தடுமாற்றம் மிக நீளமானது; தமிழ் கொடியவர்களின் புகழ்பாடி தமிழரை காவு கொடுப்பதைவிட; ஆளும் கட்சிக்கு சேவகராக இருந்து எம்மின அடிப்படை தேவைகளை கவனிப்பது நல்லதுதானே;
சாதிய விவாதங்கள் சந்திக்கு வரும் போதெல்லாம் பின்னூட்டக்காரர்கள் தங்கள் கால்களையும் கைகளையும் உள்ளே இழுத்துக் கொள்கிறார்கள்.ஏன்?
//சாதிய விவாதங்கள் சந்திக்கு வரும் போதெல்லாம் பின்னூட்டக்காரர்கள் தங்கள் கால்களையும் கைகளையும் உள்ளே இழுத்துக் கொள்கிறார்கள்.ஏன்?//
அவரவர் அவரவருக்கு ஈடுபாடு உள்ள விடயங்களில் பேசுவார்கள். குறிப்பாக எந்த விடயம் பற்றி பின்னூட்டம் வந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தீர்கள், பத்மநாதன்?
//சில வரிகளிலேயே உங்க தடுமாற்றம் மிக நீளமானது; தமிழ் கொடியவர்களின் புகழ்பாடி தமிழரை காவு கொடுப்பதைவிட; ஆளும் கட்சிக்கு சேவகராக இருந்து எம்மின அடிப்படை தேவைகளை கவனிப்பது நல்லதுதானே//
ஆளும் கட்சிக்கு சேவகராக இருந்து புகழ்பாடி தமிழரைக் காவு கொடுப்பது?
இல்லை றோகன் அவர்களே! நம்மிடத்தில் சாதியம் பற்றி விவாதிக்கும் துணிந்த மனப் பான்மை இல்லை. வரலாற்று அறிவு இல்லை. பொய்களுக்கு மேலே மாத்திரம் உட்கார்ந்து சவாரி செய்யும் மனப் பான்மை. இப்படியான பலவீனமே யாழ்ப்பாண சீர்கேடுகளுக்கு காரணம். இந்தப் பலவீனமே புலிகள் வளர்ச்சிபெற மிகவும் உதவியது. யாழ்ப்பாண சீர்கெட்ட மைய வாதத்திற்கு போராட்டமென்ற பேரில் அப்பாவி தாய்மார் பெற்ற பிள்ளைகள் தான் பலியானார்கள்.
//நம்மிடத்தில் சாதியம் பற்றி விவாதிக்கும் துணிந்த மனப் பான்மை இல்லை. வரலாற்று அறிவு இல்லை. பொய்களுக்கு மேலே மாத்திரம் உட்கார்ந்து சவாரி செய்யும் மனப் பான்மை. இந்தப் பலவீனமே புலிகள் வளர்ச்சிபெற மிகவும் உதவியது. யாழ்ப்பாண சீர்கெட்ட மைய வாதத்திற்கு போராட்டமென்ற பேரில் அப்பாவி தாய்மார் பெற்ற பிள்ளைகள் தான் பலியானார்கள்//
சாதிய விடயங்கள் ஓரளவு உண்மையாயினும், ‘பெரிய சாதிக்கார’ இளைஞர்களின் உறுதியான பங்களிப்பு இல்லாது சாதிக்கட்டமைப்பு இந்த அளவுக்கு உடைக்கப்பட்டிருக்க முடியாது.
கிறிஸ்தவ நெறி பரவியதற்கு மேல்தட்டு மக்களின் ‘பதவி – வேட்கையும்’ கீழ்தட்டு மக்களின் ‘சம அந்தஸ்து ஆசையும் காரணமானது போலவே இயக்கங்களின் வளர்ச்சியிலும் சாதியக் கட்டமைப்பின் பின்னணி கொஞ்சம் இருந்திருக்கலாம். மற்றப்படி மாடைக் கொண்டு போய் மரத்தில் கட்டி விட்டு மரத்தைப் பற்றி எழுத முனையக் கூடாது.
//பெரிய சாதிக்கார’ இளைஞர்களின் உறுதியான பங்களிப்பு இல்லாது சாதிக்கட்டமைப்பு இந்த அளவுக்கு உடைக்கப்பட்டிருக்க முடியாது//றோகன்
வட பகுதியில் நடந்த சாதிக்கலவரங்களில் ஆயுதமேந்தி போராடிய தாழ்த்தப்ப்ட்டோரையும் உயிர்ழந்தோரையும் விடவா தமிழரைத் தாழ்த்திய தமிழர் உயர்ந்த சாதிகாரரும் பெரிய சாதிக்காரரும்?-துரை
/நம்மிடத்தில் சாதியம் பற்றி விவாதிக்கும் துணிந்த மனப் பான்மை இல்லை. வரலாற்று அறிவு இல்லை. பொய்களுக்கு மேலே மாத்திரம் உட்கார்ந்து சவாரி செய்யும் மனப் பான்மை. இந்தப் பலவீனமே புலிகள் வளர்ச்சிபெற மிகவும் உதவியது. யாழ்ப்பாண சீர்கெட்ட மைய வாதத்திற்கு போராட்டமென்ற பேரில் அப்பாவி தாய்மார் பெற்ற பிள்ளைகள் தான் பலியானார்கள்//
அன்பின் பத்மநாதன் அவர்களே,
சாதீயம், சாதீயம் என்று கூறி சீர்கேட்ட யாழ்ப்பான மையவாதம் என்று வாய்க்கு வாய் கூறி அரசியல் லாபம் பெற முயலும் நீங்கள் இந்த பிரச்சினையை தீர்பதற்கு , ஆனா வழிமுறைகள் என்ன, இதற்காக நீங்கள் எடுத்த முயற்சி என்ன, அவை ஏன் தீர்கபடாது இருகின்றன என்பதற்கான் காரணங்களை முதலில் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த சாதியம் எப்படி புலிகள் வளர்ச்சி பெற உதவியது எனவும் விளக்கமாக சொல்வது அவசியம் அல்லாவா? மிகத் துணிவு மிக்க நீங்களும் உங்கள் நண்பர்களும் இந்த விவாதத்தை செய்வது அவசியம் அல்லவா?
//இந்த சாதியம் எப்படி புலிகள் வளர்ச்சி பெற உதவியது எனவும் விளக்கமாக சொல்வது அவசியம் அல்லாவா?//அஜீத்
வேலைவாய்ப்பின்மை, வறுமை, சாதியப்பாகுபாடு இவைகளே வட, கிழக்கு தமிழரின் மேல்நாட்டு மோகத்திற்குக் காரணம். அகதிகள் அந்தஸ்த்திற்கு இலங்கையில் இனக்கலவரம் மேல்நாட்டு தமிழர்களிற்கு அவசியமாகின்றது. இந்தநிலமையில் மேல் நாடுகளில் தமிழர் ஒற்றுமையாக ஒருகருத்துடன் செயற்பட புலிகளின் தமிழீழ போராட்டம் கை கொடுக்கின்றது.
சாதி வேறுபாடின்றி, தொழில் வாய்ப்புகளோடு மேற்கு நாடுகளின் சுதந்திரத்தை, செல்வத்தை சகல தமிழர்கழும் அனுபவித்தார்கள். புலிகழுடன் சேர்ந்தவர்கள் யாவரும் புலிகளின் பெயரால் தங்கள் கைகளில் பணம் குவியும்போது ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காமல் ஒற்ருமையாக சாதி வேறுபாடின்றி சுருட்டிக்கொண்டார்கள். இதனைவிட சில புலிகள் சில நாடுகளின் கையாட்களாகவும் பயங்கரவாதிகளாகவும் செயற்பட்டார்கள்.
இலங்கையிலிருந்த சாதிக்கொடுமை, பொருளாதார பின்னடைவு ஆகியவற்ரிலிருந்து மேல்நாடுகளில் விடுதலை பெற்ர தமிழ்ரகளே கண்மூடித்தனமாக புலிகளிற்கு ஆதரவளித்தார்கள்.
இதே தமிழ் அகதிகழும், தென்னிந்திய தாழ்த்தப்பட்ட தமிழர்கழும் அன்றும் இன்றும் கைகட்டி, கையேந்தியே தமிழ்நாட்டில் வாழ்கின்றார்கள். மகாநாடு எடுப்பது கருணாநிதி குடும்பம். கொடி பிடிப்பது திமுக. ஊழலின் சிகரங்கள். வீதியில் இறங்குவதும் தீமூட்டி தற்கொலை செய்வதும் ஏழைகள்.
தமிழ் என்னும் மாயை தமிழ்நாட்டில், தமிழீழமென்னும் மாயை மேல்நாட்டில். பிழைப்பதோ புலிகள். அழிவததோ ஏழைகள்.- துரை
//புஸ்பராணி தமிழ் சிறுபான்மை என்ற ஒடுக்குமுறைக்கு மட்டுமல்ல பெண்ணாகவும் சாதிய ரீதியாகவும் முச்சுமையைச் சுமந்து போராடியவர். அவர் இந்நேர்காணலில் தமிழீழ விடுதலைப் போராட்டம் சாதிய ஒடுக்குமுறை பெண்களின் நிலை பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.//
போராட்டத்தின் அல்லது விடுதலை விரும்பிகளில் மிக முக்கியமான இவரே இறுதியில் ஆயுதம் மிக மோசமானது ஆயுத போராட்டம் தேவையற்ற ஒன்று எனவும் வாக்கு மூலம் அழித்துள்ளார்; அவரது 40 வருட அனுபவ வாக்குமூலத்தை எமது கிராமத்தில் சிறு பிள்ளை வேளாண்மை என இயக்க பிள்ளைகளை பார்த்து சிலர் அன்றே கிண்டல் செய்தது நினைவு வருகிறது; புள்ளியும் சரியில்லை: கோலமும் அழகில்லை என்பதுவே இவரது வாக்குமூலம்;
புஷ்பராணி எப்படி, அழகற்ற கோலமாய், “அகாலமாய்” போலீசாரிடம் பிடிபட்டார் என்பதை விளக்கியிருந்தால்,
“கொள்ளைக்காரி” என்று அழைக்கப்பட்டதன் காரணம் புரிந்திருக்கும்.
இவர்கள், திரும்பத்திரும்ப ஒரே கதையைப் பறைவதும், ஏமாந்தவர்கள் “உந்தப் பழம் புளிக்கும்” சொல்வதும்…………..
//தமிழ் என்னும் மாயை தமிழ்நாட்டில், தமிழீழமென்னும் மாயை மேல்நாட்டில். பிழைப்பதோ புலிகள். அழிவததோ ஏழைகள்.- துரை//
அருமை:
/இந்த சாதியம் எப்படி புலிகள் வளர்ச்சி பெற உதவியது எனவும் விளக்கமாக சொல்வது அவசியம் அல்லாவா?//அஜீத்
தமிழ் என்னும் மாயை தமிழ்நாட்டில், தமிழீழமென்னும் மாயை மேல்நாட்டில். பிழைப்பதோ புலிகள்.// thurai
கேள்விக்கு பதில் தேடினேன் கிடைக்கவில்லை. பிழைப்புக்கு வழியில்லாத துயரம் உங்களுக்கு, கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியவரை காணவில்லை.
//கேள்விக்கு பதில் தேடினேன் கிடைக்கவில்லை. பிழைப்புக்கு வழியில்லாத துயரம் உங்களுக்கு, கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியவரை காணவில்லை.//அஜீத்
மேல்நாடுகளில் இந்துக் கோவில்களிற்கு வேட்டியுடன் திருநூற்றுடனும் போகும் தமிழர்கள் எல்லோரும் சாதி வேறு பாடின்றியே போகின்றார்கள். காரணம் உண்டியலில் போட எல்லோரிடமும் பணமுண்டு. போகும் யாவரும் தம்மிடமுள்ள பாகுபாட்டை கடைப்பிடிக்கமுடியாது.
இதேபோல யாவரும் ஒன்றாக புலிக்கொடியை தூக்கி தம்மிடையேயுள்ள பாகுபாட்டை மறைத்தார்கள். புலி இனமாகவே வாழ்ந்தர்கள் மனிதர்களாக அல்ல. யாவரும் ஒற்றுமையாக் கொலலைகளை வரவேற்றார்கள்.
இலங்கையில் சண்டைகாரர் கொலைகாரென்றால் தாழ்த்தப்படோர். புலிகளானால் மாவீரர்.-துரை
மேல்நாடுகளில் இந்துக் கோவில்களிற்கு வேட்டியுடன் திருநூற்றுடனும் போகும் தமிழர்கள் எல்லோரும் சாதி வேறு பாடின்றியே போகின்றார்கள். காரணம் உண்டியலில் போட எல்லோரிடமும் பணமுண்டு. போகும் யாவரும் தம்மிடமுள்ள பாகுபாட்டை கடைப்பிடிக்கமுடியாது.
இதேபோல யாவரும் ஒன்றாக புலிக்கொடியை தூக்கி தம்மிடையேயுள்ள பாகுபாட்டை மறைத்தார்கள். புலி இனமாகவே வாழ்ந்தர்கள் மனிதர்களாக அல்ல. யாவரும் ஒற்றுமையாக் கொலலைகளை வரவேற்றார்கள்.
இலங்கையில் சண்டைகாரர் கொலைகாரென்றால் தாழ்த்தப்படோர். புலிகளானால் மாவீரர்.-துரை///
திரு துரை அவர்களே,
புலிகள் இயக்கத்தில் தாழ்த்தபட்டோர், தாழ்த்தபடாதோர் என்ற வேறுபாடு இருக்கவில்லை என்பது புரிவதற்கு உங்களுக்கு இந்தளவு நாள் சென்றது ஏனோ தேரியவில்லை. மேலை நாடில் வசிக்கும் நீங்கள் உட்பட எல்லோரும் பாகுபாடு இல்லை என்பதை ஏற்றதற்கும் நன்றி. இதற்கான காரணம் இங்கு இருக்கும் சட்ட திட்டங்களும் அதனை நடைமுறைபடுத்தும் நீதி துறையும் ஆகும். இதனை உங்களால் சிங்கள மேலதிகம் கொண்டு சிங்கள ஸ்ரீ லங்காவில் செய்ய முடியுமா என்று சிந்தியுங்கள்.
//இங்கு இருக்கும் சட்ட திட்டங்களும் அதனை நடைமுறைபடுத்தும் நீதி துறையும் ஆகும். இதனை உங்களால் சிங்கள மேலதிகம் கொண்டு சிங்கள ஸ்ரீ லங்காவில் செய்ய முடியுமா என்று சிந்தியுங்கள்.//அஜீத்
தமிழரின் கையில் அதிகாரம் கிடைத்தால் அதோ கெதிதான் என்பதை ஏற்ரதற்கு நனறிகள்.-துரை
//மேலை நாடில் வசிக்கும் நீங்கள் உட்பட எல்லோரும் பாகுபாடு இல்லை என்பதை ஏற்றதற்கும் நன்றி. இதற்கான காரணம் இங்கு இருக்கும் சட்ட திட்டங்களும் அதனை நடைமுறைபடுத்தும் நீதி துறையும் ஆகும்.//
மேல்நாட்டில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் தமது சாதியும் குறைவில்லை என்று கூறுவதும் அதனை தமிழீழத்தில் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் புலம் பெயர்நாடுகளிலாவது கடைப்பிடித்து வாழ்வதும் தமிழரால் உரிமைகள் பறிக்கபட்ட தமிழர்களின் கடைமையாகும் என்று கூறி, சாதி வேறுபாட்டை நிலைநாட்டி இங்கு நாழ்ந்து மகிழ்வீர் என்று துரை வற்புறூத்திக் கேட்டுக்கொள்வதை அஜித் இன்னமும் வாசிக்கவில்லையா?
பாகுபாடு இல்லை என்று ஒப்புக்கொண்டதறகு என்ன நன்றி – அவரது ஆதங்கமே சாதி வேறுபாட்டை நிலைநாட்டி வாழ முடியவில்லை என்பதாக அல்லவா இருக்கிறது!
//பாகுபாடு இல்லை என்று ஒப்புக்கொண்டதறகு என்ன நன்றி – அவரது ஆதங்கமே சாதி வேறுபாட்டை நிலைநாட்டி வாழ முடியவில்லை என்பதாக அல்லவா இருக்கிறது//றோகன்
உலகில் எங்காவது தமிழரால் உருமைகள் பறிக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட தமிழர்கள் இந்துக்கோவில்களிற்கு உருமையாளராக இருக்கின்றனரா? இருக்க விடுவார்களா? அப்படி இருந்தாலும் அங்கு போய் உருமை மறுத்தோர் வணங்குவார்களா?-துரை
துரை,
முதலாவது தவறு சாதிப்பிரச்சினையானது அடையாளம் காணல் என்பதிலிருந்தே ஆரம்பிக்கின்றது. புலம்பெயர் நாடுகளில் வாழும் பெரும்பானன்மையான புதிய தலைமுறையினர் இந்த அடையாளத்துக்குள் இல்லை. சாதியம் புலம்பெயர் நாட்டில் முன்னேற்றப் படியில் இருப்பதை உணர்வோம் சந்தோசப்படுவோம் ஊக்குவிப்போம்.
புலம்பெயர் சந்ததியினர் சாதியத்துக்கு உட்பட்டவர்கள் இல்லை. அவர்களை அதை உடைத்துவிட பயன்படுவது இன அடையாளமோ பாரம்பரியமோ அல்ல நாட்டின் சமூக சட்ட நடைமுறைகளே.
குறைந்தது இது போன்ற சட்ட சமூக நடைமுறைகள் சாதியம் உள்ள நாடுகளில் இருக்குமாயின் பிரயோசனமாக இருந்திருக்கும்.
புலம் பெயர் நாட்டில் சாதியத்தை நிலைநாட்டி யாரும் வாழமுடியாது அப்படி வாழ்ந்தாலும் அவரது வாழ்வுக்காலம் மட்டுமேயாகும் வாழ்ந்த விட்டு போகட்டும். அந்த நாட்டு சட்டங்களின்படி அவர் இன்னோருவரை சாதியின் பெயரால் வேறுபாறு காட்டாமல் வாழ வேண்டுமே, அப்படியாக சாதியின் பெயரால் வேறுபாடு காட்டாமல் வாழ்ந்தாலே அதுவும் ஒருபடி முன்னேற்றம் தான்.
எல்லாவற்றையும் எத்தனையோ பல நுhற்றாண்டுகள் வாழ்ந்த சாதியத்தை நாம் எமது வாழ்வுக்காலத்தில் மாறிவிடும் அதைநாம் கண்டு விட்டுத்தான சாகவேண்டும் என்று எண்ணுவது எவ்வளவு தூரம் நடக்கும் என்பது கேள்வியே அனால் சாதியத்தை அழிவுக்கு இட்டுச்செல்லும் சில நடைமுறைகளை அழிவின் ஆரம்ப விதிகளையாவது உருவாக்கிவிட வேண்டும். இந்த விதிகளில் சில உருவாக்கப்பட்டு விட்டது.
சாதியத்துக்கு பெயர்போன யாழ்ப்பாணத்தில் பல கிராமங்களில் அன்று பொதுக்கிணறுகள் சாதிக்காக இருந்தது. இன்று பொது கிணறுகள் மிகப் பெரும்பான்மைகள பொதுவாகவே இருக்கின்றன.
இரு பிரிவினர்க்குமான இடைவெட்டுக்கள் இருப்பினும் பல விடயங்கள் பொது என்ற சரியான அடையாளத்தை பெறுகின்றன.
//தாழ்த்தப்பட்ட தமிழர்கள் இந்துக்கோவில்களிற்கு உருமையாளராக இருக்கின்றனரா? இருக்க விடுவார்களா? அப்படி இருந்தாலும் அங்கு போய் உருமை மறுத்தோர் வணங்குவார்களா//-துரை
துரை, இருக்கிறது புலம்பெயர் நாடுகளில் உள்ளது.
இன்று புலம்பெயர் நாடுகளில் இந்து சமயத்தின் காவலர்கள் யார் என்பதை சரியாக புரிய தவறிவிடுகின்றீர்கள்.
துரை:
கனடாவில் ஆரியகுளம் பொன்ராசாவின் மருமகன் அடியார் ஒரு கோவில் நடத்துகிறார். பலர் போய் வருகிறார்கள். உண்டியலிலும் பணம் போடுகிறார்கள்.
சாதியம் என்பது மனித உருமை மீறல்களில் ஒன்றாகும்.
புலம் பெயர் நாடுகளில் தமிழரிடையே மெல்ல மெல்ல அழிந்து போவது உண்மை. இலங்கையிலும் 30 வருடத்திற்கு முன்பே சில பகுதிகளில் குறிப்பாக வட பகுதியில் சாதிப்பிரச்சினை அற்றுபோயிருந்தது.
சிலர் கூறுவது போல் தமிழீழ விடுதலைப்புலிகள்தான் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர் என்பதை ஏற்கமுடியாது. யாழ்ப்பாணத்தில் பாடசாலைக்கு தாழ்த்தப்பட்ட ஆசிரியர் போகும்போது மரமேறக்கூட இப்போ ஆளில்லை என வர்ணித்த போராளிகழும் உண்டு. மறைமுக மிரட்டல்கழும் நடந்துள்ளன.
//இன்று புலம்பெயர் நாடுகளில் இந்து சமயத்தின் காவலர்கள் யார் என்பதை சரியாக புரிய தவறிவிடுகின்றீர்கள்//சோதிலிங்கம்.
புலம்பெயர் நாடுகளில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மூடப்படுவதற்கும் இந்துக்கோவில்கள் புதிதாக திறக்கப்படுவதற்கும் காரணமென்ன?
கோவில் நடத்துவோரின் வருமானமே காரணம். வடபகுதியில் எத்தனை இந்துக் கோவில்கள் போரிற்கு முன்பே சீர்குலைந்து போயின. ஓர் பலமான இனத்தால்தான் சமயத்தையோ கலாச்சாராத்தையோ காக்கவும் வளர்க்கவும் முடியும்.
சமயங்கள் மக்களிற்காகவேயன்றி மக்கள் சமயங்களிற்காக அல்ல. தமிழர் இந்து சம்யத்திற்காக வாழ்கின்றார்கள் என்றால், சிங்கள புத்த பேரின வாதத்தையும் ஏற்ரவர்களாகி விடுகின்றோம்.
பிரச்சினைகளை தீர்கமுயல்வோர், ஓர் இனத்தின் விடுதலைப்பற்றி பேசுவோர் முதலில் தம்மை நிற வேறுபாடு, சாதி வேறுபாடு, சமயவேறுபாடு மொழி வேறுபாடுகளிலிருந்து விடுவித்தவர்களாக இருக்கவேண்டும். தவறின் அங்கு சுயநல அரசியலே தலைவிரித்தாடும். -துரை
//சாதியம் என்பது மனித உருமை மீறல்களில் ஒன்றாகும்.// இதை யார் சொன்னது? சாதியம் என்பது மனிதனின் முழு உரிமை. வகைப்படுத்தப்படாத எதுவுமே செயற்படாது. எங்கே சாதியில்லை? காட்டுங்கள் பார்க்கலாம்? ஐரோப்பி நாடுகளிலும் கிறிஸ்தவ தொழுகளும் சாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறர்கள். குடுப்பப்பெயர் என்று குறிப்பிடுவது எதை? எந்தச்சாதியில் எந்தப்பரம்பரையில்; புலத்தில் இவன் வந்தான் என்பதைக் குறிப்தே இந்தக் குடும்பப்பெயர். தொகைப்பட்ட அனைத்தும் வகைப்படவேண்டும் ஆதால் சாதியம் வாழ்க வளர்க.
/சாதியம் என்பது மனித உருமை மீறல்களில் ஒன்றாகும்.// //இதை யார் சொன்னது? ///நகு
சாதி, தீண்டாமையும் மனித உரிமை மீறலே-ஐநா
டெல்லி: சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமை உள்ளிட்டவற்றையும் மனித உரிமை மீறலாக அங்கீகரிக்கவுள்ளதாக ஐநா மனித உரிமைக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
தற்போது ஜெனிவாவில் நடந்து வரும் ஐநாவின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
ஆனால், மனித உரிமைக் கவுன்சிலின் இந்த முடிவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சாதி பிரச்சனைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்லக் கூடாது என்று அது கோரியுள்ளது.
அதேசமயம், கடந்த நான்கு மாதங்களுக்கு முன் ஐநா வெளியிட்ட வேலை மற்றும் இருப்பிடங்களில் சாதி பாகுபாடு ஒழிப்பு குறித்த வரைவு கொள்கைக்கு முழு ஆதரவு தருவதாக நேபாளம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கடந்த 16ம் தேதி நடந்த கூட்டத்தில் நேபாள அமைச்சர் ஜீத் பகதூர் டார்ஜீ கௌதம் பேசுகையில்,
சாதி ஒழிப்பு தொடர்பான ஐநா மனித உரிமை அமைப்பின் ஆவணத்துக்கு முழு ஒத்துழைப்பு தருவோம். சாதிய பாகுபாடுகளுக்கு எதிரான அவர்களது ஆக்கப்பூர்வ முயற்சிகளுக்கு உதவுவோம் என்றார்.
நேபாளத்தின் ஆதரவுக்கு ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
சாதி பிரச்சனைகள் பெருமளவில் இருக்கும் நேபாளம் இந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துள்ளது. இது மற்ற நாடுகளுக்கு நல்ல முன்மாதிரியாகவும், ஊக்கம் தருவதாகவும் இருக்கும்.
கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்த போது இதை இந்திய அரசிடம் வலியுறுத்தினேன். சாதி பிரச்சனை இந்தியாவின் தேசிய பிரச்சனைகளில் ஒன்று. ஆனால், தலைவர்கள் அதற்கு எதிராக போராட வேண்டும்.
கடந்த 2006ம் ஆண்டு இந்திய பிரதமர் மன்மோகன் தீண்டாமை ஒரு இனவெறி செயல் என கூறியிருப்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன் என்றார் பிள்ளை.
தென் ஆப்ரிக்க தமிழரான பிள்ளை, தமிழகத்தில் மதுரைக்கு அருகில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஐ.நாவின் இந்த ஆவணம் குறித்து ஐரோப்பிய யூனியனின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சாதி பாகுபாடுகளை களைவதே ஐரோப்பிய யூனியனின் முக்கிய குறிக்கோள். இந்த பிரச்சனை தொடர்ந்தால் மனித உரிமை கமிஷன் எதிர்காலத்தில் இதற்கு எதிராக வரைவு கொள்கையை தயாரித்து ஐநாவின் பொது சபையில் தாக்கல் செய்யும். அதன்மூலம் பெரிய அளவில் இப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
உலகம் முழுவதும் சுமார் 20 கோடி மக்கள் சாதி பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இது சமுதாயத்திலும், கலாச்சாரத்திலும் ஆழமாக வேரூன்றிவிட்டது என்றார்.
இந்தியாவுக்கு ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் இந்த முடிவு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2001ம் ஆண்டே டர்பனில் நடந்த மனித உரிமைக் கவுன்சில் மாநாட்டின்போது இந்தப் பிரச்சினை தலை காட்டியது.
அப்போது தீர்மானம் எதையும் நிறைவேற்ற விடாமல், சாமர்த்தியமாக அடக்கி விட்டது இந்தியா. ஆனால் இம்முறை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில், சாதி பாகுபாட்டை மனித உரிமை மீறலாக அங்கீகரிக்க தீர்மானமாக உள்ளதாக தோன்றுகிறது. இதனால் இந்தியாவின் நிலை சற்று சிக்கலாகியுள்ளது.