இறந்த நிலமரூபன் உடலில் காயங்கள்: தாய் உருக்கம்
இலங்கையின் வடக்கே வவுனியா சிறைச்சாலையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தனது மகனை றாகம வைத்தியசாலையில் சடலமாகவே கண்டதாக உயிரிழந்துள்ள கணேசன் நிமலரூபன் என்ற தமிழ் அரசியல் கைதியின் தாயாராகிய 63 வயதுடைய கணேசன் இராஜேஸ்வரி தெரிவித்திருக்கின்றார்.
மகன் சுகமில்லாமல் ஆபத்தான நிலையில் இருக்கின்றார் எனக் கூறி அவரைப் பார்ப்பதற்காக இராஜேஸ்வரியையும் அவரது கணவனையும் பொலிசார் கடந்த புதன்கிழமை றாகம வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆயினும் மிகுந்த தாமதத்தின் பின்னர் மறுநாள் வியாழக்கிழமையே நிமலரூபனின் சடலம் அவருடைய பெற்றோருக்குக் காட்டப்பட்டுள்ளது.
‘சடலமாக கிடந்த என் பிள்ளைக்கு கையும் காலும் முறிந்திருந்தது. கையிலும், நெஞ்சிலும் தலையிலும் அடிகாயங்கள் இருந்தன.” என்றார் இராஜேஸ்வரி.
“பிரேதத்தை காட்டியவுடன் கையெழுத்து போடும்படி சிறை அதிகாரிகள் எங்களை வற்புறுத்தினார்கள். ஆனால் நாங்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டோம். என் மகனுடைய மரணத்துக்கு சிறைச்சாலை அதிகாரிகளே பொறுப்பு,” என்றார் அவர்.
இறந்தவரின் உடலை வவுனியாவுக்குக் கொண்டு சென்றால் அங்கு அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்ற பொலிசாரின் வேண்டுகோளுக்கிணங்க மகர பிரதேசத்திற்கு வெளியில் இறுதிக்கிரியைகளுக்காக அந்த சடலத்தைக் கொண்டு செல்லக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“ஒரே மகனுக்குத் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று விரும்பியிருந்தோம். அது இனி இல்லை. அவனது இறுதிக்கிரியைகளையாவது வீட்டில் வைத்துசெய்ய வேண்டும்” என்றனர் நிமலரூபனின் பெற்றோர்.
இந்நிலையில் நிமலரூபனின் சடலத்தை தமது சொந்த இடமாகிய வவுனியா நெளுக்குளத்திற்குக் கொண்டுசெல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
BBC TAMIL
._._._._._._._.
மகர சிறைச்சாலையில் இறந்த தமிழரின் உடலைப் பெறுவதில் சிக்கல்
05 07 2012
இலங்கையின் மகர சிறைச்சாலையில் தாக்குதலுக்கு உள்ளாகி, பலியான தமிழ்க் கைதி ஒருவரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
இறந்தவரின் உடலை இறுதிக் கிரியைகளுக்காக வவுனியாவுக்கு எடுத்துச் சென்றால், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்று பொலிசார் தெரிவித்த கருத்துக்கள் ஒரு நீதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பலியான கணேசன் நிமலரூபன் உடலை ராகமப் பகுதியிலேயே அடக்கம் செய்யும்படி நீதிபதி தெரிவித்துள்ளதை பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர்களின் வழக்கறிஞர்களில் ஒருவரான குகராஜன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
மகர சிறைச்சாலையில், நிமலரூபன் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளான நிலையிலேயே மரணமடைந்தார் என்று பல்தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அவரது சடலத்தின் பிரேதப் பரிசோதனை முடிவடைந்தாலும் அந்த அறிக்கை குடும்பத்தாருக்கோ, வழக்கறிஞர்களுக்கோ இதுவரை வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இறந்து போன ஒருவரின் உடலை, குடும்பத்தாரிடம் ஒப்படைத்து, அவர்கள் விருப்பப்படி இறுதிக் கிரியைகளை செய்ய அனுமதிக்காமல் இருப்பது கடுமையான மனித உரிமை மீறல் செயல்பாடாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசு தொடர்ந்து மனித உரிமை மீறல்களை செய்து வருகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்தும் இன்ன பிற மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்தும் கொழும்பிலுள்ள பன்னாட்டு தூதரக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
காலமான நிமலரூபனின் பெற்றோர் கூட பொலிசாரின் பிடியிலேயே உள்ளனர் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.
நாடாளுமன்றத்திலும் இந்த விஷயம் எழுப்பப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
BBC TAMIL
._._._._._._.
தமிழ்க் கைதி அடித்துக்கொலை; பலரின் நிலை பரிதாபம்
04 07 2012
இலங்கையின் வடக்கே, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் மற்றும் அதன்பின்னர் மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் அரசியல் கைதி நிமலரூபன் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு தமிழ் அரசியல் தலைவர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நிமலரூபன் சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்த பின்னரே அவரது உடல் றாகமை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டுகிறார்.
வவுனியாவில் சிறைக்காவலர்கள் மூவரை பிடித்து வைத்து போராட்டம் நடத்தியதாகக் கூறப்படுகின்ற தமிழ் அரசியல் கைதிகளில் 22 பேரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவினர் மகர சிறைச்சாலையில் இன்று புதன்கிழமை பார்வையிட்டனர்.
இவர்களில் ஆறுபேர் மகர சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களது நிலைமை மோசமானதாக இருப்பதாகவும் அவர்களைப் பார்வையிட்ட நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழோசையிடம் கூறினார்.
மகர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு கைதியான வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்த கணேசன் நிமலரூபன் (28 வயது) இன்று அதிகாலை அங்கு உயிரிழந்ததாகவும் அதன் பின்னர் அவரது உடல் றாகம அரச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இதுதவிர, மேலும் நான்கு பேர் றாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் கோமா நிலையில் இருக்கின்றார். ஏனைய மூவரில் ஒருவருக்கு இரண்டு கால்களும் அடித்து முறிக்கப்பட்டிருப்பதாகவும் மற்றொருவருக்கு ஒரு கால் அடித்து முறிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவருடைய காலில் துப்பாக்கிச் சூட்டுக்காயம் காணப்பட்டதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.
இதேவேளை மற்றுமொருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகர சிறைச்சாலையில் காயமடைந்த நிலையில் 16 பேர் வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றும் அவர் கூறினார்.
‘சிறை உயரதிகாரி முன்னால் தாக்கப்பட்டனர்’
அத்துடன் கண்டி போகம்பறை சிறைச்சாலையிலும் இருவர் இருப்பதாகவும், இவர்கள் அனைவருமே வவுனியா சிறைச்சாலையில் சிறைக்காவலர்கள் பணயம் வைக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கண்ணீர்ப்புகையால் மயக்கமடைந்ததன் பின்னர் கம்புகள், தடிகளினால் கடுமையாகத் தாக்கப்பட்டு, அனுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள உயர் சிறையதிகாரியின் முன்னிலையில் மிக மோசமான முறையில் தாக்கப்பட்டதாகவும் தங்களைச் சந்தித்த கைதிகள் அனைவரும் தெரிவித்ததாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
தமிழ் அரசியல் கைதிகள் இவ்வாறு மோசமான முறையில் தாக்கப்பட்டிருப்பது பாரதூரமான மனித உரிமை மீறல் என்று வர்ணித்துள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கென பல்வேறு அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ள விசேட குழுவொன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
மகர சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு இரண்டு தினங்களாக சட்டத்தரணிகள் முயற்சித்த போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்தள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற காரணத்தினாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, மகர சிறைச்சாலையில் காயமடைந்த நிலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கருத்துத் தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை தற்போதைய நிலைமை இன்னும் தீவிரமாக வெளிப்படுத்துவதாக சுட்டிக்காட்டினார்.
BBC TAMIL
._._._._._._._.
வவுனியா சிறையில் தாக்குதலுக்குள்ளான தமிழ் அரசியல் கைதி பலி
04 07 2012
வவுனியா சிறையில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த நிமல ரூபன் என்ற கைதி உயிரிழந்துள்ளார் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வவுனியா நெலுங்குளம் பகுதியைச் சேர்ந்த நிமல ரூபன் கடந்த வாரம் வவுனியா சிறையில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்து பின்னர் மஹர சிறைக்கு மாற்றப்பட்டு ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்ததாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ள மனோ கணேசன், உயிரிழப்புக்கான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed
இன்னொரு சுற்று புலி வசைக்காக காத்திருப்போம்.
வைத்தியசாலைக்கு நிமல ரூபனது உடலையே கொண்டு வந்ததாக -http://www.lankanewsweb.com/sinhala/index.php?option=com_content&view=article&id=1925:2012-07-04-11-18-41&catid=1:general&Itemid=53 எழுதியுள்ளது. தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒருவரது சிறுநீரகம் பாதிப்படைவதாகவும் ; அதனாலேயே கைதி மரணமாகியுள்ளதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கே, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் மற்றும் அதன்பின்னர் மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் அரசியல் கைதி நிமலரூபன் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு தமிழ் அரசியல் தலைவர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நிமலரூபன் சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்த பின்னரே அவரது உடல் றாகமை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டுகிறார்…………..
-http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/07/120704_manoprisoners.shtml
///…இலங்கையின் வடக்கே, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் மற்றும் அதன்பின்னர் மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் அரசியல் கைதி நிமலரூபன் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு தமிழ் அரசியல் தலைவர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது……///
அஜீவன் இவ்விடயம் பற்றி உங்களின் கருத்து என்ன? பி.பி.சி சொல்லுவதை நாமே வாசித்து அறிந்து கொள்வோம் தானே?
வன்னி முகாமில் சிங்கள இராணுவம் கொடூர தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு: நாம் தமிழர் கட்சி கண்டனம்
இலங்கையில் வன்னி முகாமில் இன்னமும் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் சிலரை பணயக் கைதிகளாக பிடிக்க வந்த சிங்கள இராணுவத்தினரை எதிர்த்த தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
வன்னி முகாமில் இருந்து இரண்டு பேரை விசாரணை என்ற பெயரில் சிங்கள இராணுவம் பிடித்துச் சென்று அனுராத புரம் சிறையில் அடைத்துள்ளது. இதனை எதிர்த்து வன்னி முகாமில் இருந்த தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஈடுபட்ட மூன்று பேரை பிடிக்க வந்த இராணுவத்தினரை மற்றவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். அவர்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்திய சிங்கள இராணுவத்தினர் 185 பேரை பிடித்துச் சென்று அனுராதபுரம் கொண்டு சென்றுள்ளனர். அனுராத புரம் சிறைக்கு கொண்டு சென்ற தமிழர்களை அங்கிருக்கும் சிறை கண்காணிப்பாளர் தனது காலில் விழுந்து வணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதனை எதிர்த்தவர்களை மண்வெட்டியை பயன்படுத்தும் கட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இந்த 185 பேர் மட்டுமின்றி, அனுராதபுரம் சிறையில் ஏற்கனவே இருந்த 35 அரசியல் கைதிகள் மீதும் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் 22 அரசியல் கைதிகள் பலத்த காயமுற்றுள்ளனர். அவர்களை அங்கிருந்து கொழும்புவிலுள்ள மகர சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். காயம்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காத கரணியத்தால் தலையில் கடுமையாகத் தாக்கப்பட்ட ஒரு அரசியல் கைதி இன்று மாலை உயிரிழந்துள்ளார். மற்றொரு அரசியல் கைதி உணர்வற்ற நிலையில் உள்ளார். காயமுற்ற அரசியல் கைதிகளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சென்று பார்த்துள்ளார்.
வன்னி முகாமில் உள்ளவர்களையெல்லாம் இன்னமும் சிங்கள அரசும், அதன் இனவெறி இராணுவமும் எப்படி கொடுமைக்குள்ளாக்கி வருகிறது என்பதற்கு இந்த சம்பவம் சான்றாகும். இங்கிருந்து செல்லும் இந்திய அரசின் பிரதிநிதிகள் இதுபற்றியெல்லாம் எந்தக் கேள்வியையும் எழுப்பாமல், இலங்கை எங்களது நட்பு நாடு என்று தொடர்ந்து பிரகடனம் செய்வதில் மட்டுமே கவனமாக இருக்கின்றனர். இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் அக்கறை கொண்டவர்களாக இருக்கிறோம் என்று கூறும் இந்திய மத்திய அரசுஇ சிங்கள அரசு தமிழர்களுக்கு இழைத்துவரும் கொடுமைகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்து வருவதே இன்றளவும் தொடரும் இந்த கொடுமைகளுக்கெல்லாம் கரணியமாகும்.
தமிழர்கள் மீது தொடுத்த போரில் மட்டுமல்ல, போர் முடிந்த பிறகும் தமிழின அழிப்பை சிங்கள பெளத்த இனவாத அரசு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த கொடூர சம்பவம் சாட்சியாகும். இதையெல்லாம் தடுத்து நிறுத்தக்கூடிய ஒரு அரசு இல்லாமல் தமிழினம் உலக அளவில் ஒரு அடிமைப்பட்ட இனமாக இருப்பது வேதனையாக இருக்கிறது. ஐ.நா.வும், உலக நாடுகளும், இந்திய மத்திய அரசால் முழுமையாக திசை திருப்பப்படுவதால், ஈழத் தமிழனின் துயரம் தொடர்கதையாகி வருகிறது.
இந்திய அரசு தங்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை சிங்கள இனவாத அரசிடம் இருந்து பெற்றுத்தரும் என்று இன்னமும் நம்பும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இதற்கு மேலாவது யதார்த்த நிலையை உணர்ந்து தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை சர்வதேச அளவில் முன்னெடுக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சிக்காக
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
//அஜீவன் இவ்விடயம் பற்றி உங்களின் கருத்து என்ன? பி.பி.சி சொல்லுவதை நாமே வாசித்து அறிந்து கொள்வோம் தானே?//
சாந்தன் ; தெரிந்து கொண்டே இப்படியான ஒரு செயலில் இறங்கியது வருத்தத்திற்குரியது. புத்திசாலித்தனமற்றது.
இறுதியுத்த காலத்தில் அகப்பட்ட அல்லது சரணடைந்த பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இன்றைய கால கட்டத்தில் அடைபட்டு இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் விடுதலை கிடைக்க வேண்டும். உண்ணாவிரதம் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு பெரிய அனர்த்தங்கள் ஏற்பட வாய்பில்லை. ஆனால் ஜெயிலர்களை பிடித்து வைத்துக் கொண்டு பேரம் பேசுவதில் ஈடுபடும் போதே இது ஒரு அனர்த்தத்தை உண்டாக்கும் என உணர முடிந்தது. குழந்தைதனமான செயலாகவே பார்க்க முடிகிறது.
ஒவ்வொரு அடி தூரத்திலும் பாதுகாப்பு படையினரின் அவதானிப்பு இருக்கும் போது; சிறையுடைப்பு போன்றவையும் சாத்தியமானதல்ல. கொழும்பு சிறைச்சாலையில் இது போன்றதொரு சம்பவம் சிங்களக் கைதிகளால் ஏற்பட்டு, பாரிய விளைவுகளை உருவாக்கியிருந்தது. மரணம் ஒன்று மட்டும் நிகழவில்லை. இங்கே மரணம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது அநியாயமான ஒரு சாவாகவே தெரிகிறது. இறந்தவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதும் தெரியவில்லை.
ஒரு சிலரைத் தவிர பலரால் இது அநியாயம் என வாதாட முடியவில்லை? அதற்கான காரணம் பணயக் கைதியாக வைத்திருப்பவர்களை மீட்கச் செல்லும் போது யாருக்கும் எதுவும் நடக்கலாம். இதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். இப்படியான நடவடிக்கைகளில் பெரும்பாலும் அப்பாவிகளே கொல்லப்படுகிறார்கள். இது இலங்கைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. சர்வதேசங்களிலும் இதுவே நடக்கிறது.
இந்நிகழ்வு சிறீலங்கா அரசு இன்னும் கடுமையாகவே இருக்கிறது என அனைவருக்கும் உணர்த்தியுள்ளது. அடுத்து புலிகள் இன்னும் பலமாக இருக்கிறார்கள் என சிங்கள மக்களிடம் ஒரு செய்தியை கொண்டு செல்ல வாய்பொன்றை அளித்திருக்கிறது.
ஒரு சில சிங்கள இணையத்தளங்களை விட, அநேக இணையத்தளங்களில் வந்திருந்த கருத்துகள் அனைவரையும் சாகடிக்காது இன்னும் என்ன முட்டாள் தனத்தை செய்கிறீர்கள் என்பதாகவே காண முடிந்தது. இது மிக வேதனையானது. தவிரவும் புலத்து புலிகளது பலம், இவர்களை இப்படி செயலாற்றச் செய்கிறது எனவும் எழுதப்பட்டிருக்கிறது.
சாவுக்கு பின் ஐநா வந்தென்ன? ஆபிரிக்கா வந்தென்ன? உள்ளே இருப்பவர்களின் விடுதலைக்காக அரசியல் ரீதியான பேச்சு வார்த்தைகளை ஊக்குவிப்பதை விடுத்து, அடாவடித்தனங்களில் இறங்குவது கரண்ட் கம்பியில் கையை வைப்பது போன்றது.
புலிகளை அழித்து சரித்திரம் படைத்தவர் என புகழப்பட்ட சரத் பொண்சேகாவுக்கே பியுசு போய் விட்ட போது, அடுத்தவர் நிலை என்ன என்பதை சொல்ல யாரும் தேவையில்லை.
அன்று வேறு இயக்க சார்பானவர்கள் புலிகளோடு இணைந்ததால்தான் நிம்மதியாக வாழ முடிந்தது. அதேபோல ஒரு நிலையைத்தான் மனோ கணேசன் சொல்லியுள்ளார். அதாவது சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தாவது உயிர் பிழைத்துக் கொள்ளுங்கள் என்பதாகும். இதுவும் செய்தியில் வந்ததுதான்.
அரசியல் நடத்துவதற்கு, புலத்து தமிழருக்கு ஏதாவது ஒரு சாவுச் செய்தி வேண்டும். அது புலியாகவும் இருக்கலாம் ; பொது மகனாகவும் இருக்கலாம், ஒரு சிங்களவனாகவும் இருக்கலாம், யாராவும் இருக்கலாம். அது போல ஒன்று நடந்திருக்கிறது. இதையும் வைத்து கொஞ்ச காலத்தை ஓட்டி விடுவார்கள். இறந்த நிமல ரூபனும் அவரது குடும்பத்தினரும் பாவம்.
//…அரசியல் நடத்துவதற்கு, புலத்து தமிழருக்கு ஏதாவது ஒரு சாவுச் செய்தி வேண்டும். அது புலியாகவும் இருக்கலாம் ; பொது மகனாகவும் இருக்கலாம், ஒரு சிங்களவனாகவும் இருக்கலாம், யாராவும் இருக்கலாம். அது போல ஒன்று நடந்திருக்கிறது. இதையும் வைத்து கொஞ்ச காலத்தை ஓட்டி விடுவார்கள். இறந்த நிமல ரூபனும் அவரது குடும்பத்தினரும் பாவம்……//
அஜீவன்,
அவர்கள் போராட்டம் நடத்தியது எதற்காக? அப்போராட்டத்தில் வரும் விளைவுகளை அறியாமலா நடத்தினர்? ஸ்ரீலங்கா அரசின் கொலைப்பாதக அரசியலை ஸ்ரீலங்காவின் சின்னப்பிள்ளையே அறியும். போராடுவோர் பாதிக்கப்படும்போது காலம் அறியாத போராட்டம் அது இது என அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்க எனக்குத் தெரியாது. போராடுபவனுக்கு தர்மீக ஆதரவை வழங்குவேன். ஆனால் நீங்களோ புலம்பெயர் தமிழரை இதற்கெல்லாம் இழுத்து காலத்தை ஓட்டுகிறீர்கள்!
காலம் அறியாப்போராட்டம் எனக் கதை விடுவது ஈசியிலும் ஈசி! பாவம் நிமல ரூபன் சிறைச்சாலையில் சித்திரவதையைக் காட்டிலும் போராடி இறந்து போனாலும் பரவாயில்லை என நினைத்திருப்பார் போலும்!
சிலர் போராடுங்கள் நாம் பார்க்கிறோம் என புலத்தில் இருந்து அவருக்கு தூது அனுப்பினார்கள் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றனவே என கதை விட்டாலும் விடுவார்கள்!!
//அவர்கள் போராட்டம் நடத்தியது எதற்காக? அப்போராட்டத்தில் வரும் விளைவுகளை அறியாமலா நடத்தினர்?//
முள்ளிவாய்கால் வரை தள்ளிக் கொண்டு போய் ; கடைசியில் செய்வதறியாது முடங்கி தமிழ் சமூகத்தின் பெரும்பகுதி அழிந்து போய் வெகு காலமில்லை. முன்னரே ஒரு முற்றுப் புள்ளி இல்லையானாலும் ; ஒரு கமாவோடு அநேகரை காப்பாற்றியிருக்கலாம் என ஆதங்கப்படுவோர் அநேகம். இங்கே யாரென்பது முக்கியமில்லை. பெரும்பாலான அப்பாவிகள் அநியாயமாக கொல்லப்பட்டனர் என்பதே வேதனையான விடயம். இன்னும் விளைவுகளை அறியாமலா போராட்டம் செய்தனர் என எழுதுவதற்கு வெளியில் இருப்பவர்களால் முடியும் சாந்தன். ஆனால் இறந்துவனின் உடலை ஊருக்கு கொண்டு போக முடியாத ; பெற்றோரது வறுமையும் ; நிலையும் மனம் படைத்த எவரையும் வருத்தவே செய்யும்.
//போராடுவோர் பாதிக்கப்படும்போது காலம் அறியாத போராட்டம் அது இது என அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்க எனக்குத் தெரியாது. போராடுபவனுக்கு தர்மீக ஆதரவை வழங்குவேன். ஆனால் நீங்களோ புலம்பெயர் தமிழரை இதற்கெல்லாம் இழுத்து காலத்தை ஓட்டுகிறீர்கள்!//
இது அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்குவதல்ல. உண்மையை சொல்வது வக்காலத்து வாங்குவதாகாது. மின்சாரத்தில் கை வைக்கப் போகும் உங்கள் குழந்தையை பார்த்து ; அதற்கு அது தெரியாததல்ல. அதற்கு ஆறறிவு இருக்கிறது. அதை ஏன் தடுக்க வேண்டும் ? அக் குழந்தை தனது திறனை பரீட்சித்து பார்க்க முற்படுகிறது. அதை ஊக்குவிக்க வேண்டுமே தவிர ; தடுக்கலாகாது என பாத்துக் கொண்டிருப்பீர்கள் போலுள்ளது உங்கள் கருத்து. ஏகப்பட்டவர்களது தார்மீக ஆதரவுதான் பல லட்சம் பேரை முடமாக்கியும் ; சாகடித்தும் உள்ளது. நீங்களும் புலத்தில் இருந்துதானே ஆதரவளிப்பேன் என்கிறீர்கள்? இலங்கையில் உள்ள எவரும் இப்படியான காலத்தில்; இதை ஆதரிப்பதாக சொல்லவே மாட்டார்கள்.
// பாவம் நிமல ரூபன் சிறைச்சாலையில் சித்திரவதையைக் காட்டிலும் போராடி இறந்து போனாலும் பரவாயில்லை என நினைத்திருப்பார் போலும்!//
இருக்காது என நான் நினைக்கிறேன். வெளியிலிருந்து பலர் அவர்களோடு தொடர்பு கொள்ள முடிந்தது. முடிகிறது. உதாரணத்துக்கு சில:
http://www.youtube.com/watch?v=l_36dhAXYkU
http://www.youtube.com/watch?v=iy8zL5bM6Tg
வெளிநாடுகளில் மனித உரிமை அமைப்புகள் போராடுகின்றன. ஐநா தீர்மானம் கொண்டு வருகிறது. சிறீலங்காவை அச்சுறுத்துகிறது. மேனன் வந்து தனது சினத்தை வெளிப்படுத்தி விட்டு போகிறார் என்பது போன்ற செய்திகளைப் பார்த்து உசுப்பேத்தி, நிம்தியாக வெளியே வரப் போகிற நிலையில் உள்ளவர்களையும் காவு கொடுக்கும் வழியை ஊக்குவிக்கும் ஒரு செயலே இது.
நிமல ரூபனின் கொலையை ஊடகங்கள் செய்தியாக கொண்டு வந்துள்ளதே தவிர, இதுவரை வெளிநாடுகள் எதுவும் கண்டித்ததாக தெரியவில்லை. இதுவும் ஒரு செய்தியாக மட்டுமே ஆகிவிடப் போகிறது.
சிறீலங்கா அதிபருக்கும், அவரது அரசுக்கும் எதிராக சிங்கள மக்கள் கொதிப்படைந்து கொண்டிருக்கும் போது அவர் லண்டன் வருகிறார். அவருக்கு எதிராக பெரும் போராட்டமே நடக்கிறது. அதைப் பொருட்படுத்தாதது போல அவர் அவரது நிகழ்வில் கலந்து விட்டு நாடு திரும்புகிறார். இவ்வளவு அதிர்ச்சி தரும் நிலையிலும் மகிந்தவால் அமைதி காக்க முடிகிறதே என மேற்கத்தையோர் வியக்கிறார்கள்.
ஒட்டு மொத்த நாடும் பயங்கரவாதத்தால் நடுங்கிக் கொண்டிருந்த எம் தலைவனை, வெளிநாட்டு தமிழர்கள் நையப்புடைக்கின்றனர். என்னதான் பிரச்சனை நாட்டில் ( பசி – பஞ்சம் – லஞ்சம் ……) இருந்தாலும், இன்று நிம்மதியாக வெளியே போய் வீடு வர, பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் அதிபர் மகிந்தவே எனும் நிலை சிங்கள மக்களிடம் இன்னும் இருக்கிறது. இதை மாற்ற எவராலும் முடியாது. இங்கே அனைத்து அரசியல் தன்மைகளையும் – முரண்பாடுகளையும் விட்டு ஒன்றாகி விடுகிறார்கள்.
எத்தனை அழுத்தங்கள் வந்தாலும், யார் வெருட்ட வந்தாலும், சீறிக் கொண்டு வந்தவர்கள், மூடிக் கொண்டு திரும்புகிறார்கள். என்ன நடக்கிறது?
இலங்கையை வெருட்ட அல்லது பணிய வைக்க ஏதாவது தேவை. அதை தமிழர் பிரச்சனை ஊடாக வைத்துக் கொண்டு மிரட்டுகிறார்களே ஒழிய, தமிழருக்கு தீர்வொன்றுக்கோ அல்லது நீதிக்கோ யாரும் முன்வருதாக இல்லை. அவர்களது சுய லாபத்துக்காக தமிழர் பகடைக் காய்களாகி இருக்கிறார்கள். இது இன்று நேற்று தொடங்கியதல்ல. காலா காலமாக அதுவே நடந்து வருகிறது.
இந்திரா, ஜேஆரை பழி வாங்க தமிழ் குழுக்களை பயன்படுத்தினார். இன்று பல உலக நாடுகள் தமக்கு ஒரு இடத்தை வைத்துக் கொள்ள அதையே தொடர்கிறது.
தமிழீழம் பெற்று தருவேன் என உறுதி மொழி அளித்த ஜெயலலிதாவும், தமிழகத்தில் அடைத்து வைத்திருக்கும் கைதிகளை விடுவிக்க வாய் திறக்கவில்லை. இலங்கை அரசை ஆட்டி விட்டு வருவதாக போன மேனனும் வாய் திறக்கவில்லை.
ஏன்?
மேலத்தேய நாடுகளில் பயங்கரவாதத்துக்கு உதவியதாக பல தமிழர்கள் கைதாகி உள்ளார்களே தவிர, எவரையும் மனித உரிமை குறித்து ஐநாவில் பேசும் நாடுகள் மன்னித்து விடுவித்ததில்லை. எனவே, அவர்கள் தமது தேவைக்காக பாவிக்கிறார்கள். இதை உணராது பேசுவது ஏன் என்றுதான் புரியுதில்லை.
நம்மவர்கள் முடக்கு வாதம் கொண்டவர்கள். அவர்களை நிமிர்த்த முடியாது. நல்லதை சொன்னாலும் ; அவர்களை துரோகி என்பர். அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்குவோர் என்பர். எதையாவது சொல்லி தம் வாழ்வை நிலையாக்கிக் கொள்வர். அழிவது என்னவோ இவற்றை அறியாதவாறு மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் மட்டுமே. இதுவே இன்றைய நிலை சாந்தன்.
//..ஆனால் இறந்துவனின் உடலை ஊருக்கு கொண்டு போக முடியாத ; பெற்றோரது வறுமையும் ; நிலையும் மனம் படைத்த எவரையும் வருத்தவே செய்யும்……//
அந்தளவுக்கு ஸ்ரீலங்கா அரசின் மனித நேயம்! இல்லையா அஜீவன்.
எதற்கெடுத்தாலும் ‘உசுப்பேத்தல்’ எனச் சொல்கிறீர்களே அப்போ அடங்கிப்போதல் தான் நல்லது எனச் சொல்லிவிட்டுப்போக வேண்டியதுதானே!
பார்த்தீர்களா முன்னர் ‘மோட்டுக்குடி’ என்றீர்கள் இப்போது நம்மவர்கள் முடக்குவாதம் கொண்டவர்கள் என்கிறீர்கள். இதனை நீங்கள் நடத்தும் ரேடியோவில் சொல்லி முடக்குவாதத்தை நிமிர்த்த முயற்சித்தீர்களா?
//…இவ்வளவு அதிர்ச்சி தரும் நிலையிலும் மகிந்தவால் அமைதி காக்க முடிகிறதே என மேற்கத்தையோர் வியக்கிறார்கள்…..//
ஏனென்றால் அப்படிப்பட்ட மனித நேயம் கொண்டவர்கள் நம்ம தலைவர்கள். இந்திய பாபர் மசூதி இடிப்பின் போது நரசிம்மராவ் பூசை அறையில் மணீ அடித்துக் கொண்டிருந்தார் என்கிறார் குல்திப் நாயர். மேற்கு மக்கள் வியக்கிறார்கள் காரணம் இந்த தடியை (பயங்கரவாததுக்கு எதிரான போர்) கொடுத்ததே அவர்கள் தானே?
நீங்கள் இவ்வாறான கொடுமைகள் நிறைந்த சிறையில் இருந்தால் போராடுவீர்களா இல்லையா?
நீங்கள் போராட மாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் போராட்டத்தில் இணைந்தது இலகுவான கால கட்டத்தில். அதுவும் ஸ்ரீலஙாக்வில் இல்லை. போன நாடும் ஸ்ரீலங்கா இல்லை எனப் பெருமையாகச் சொன்னவர் நீங்கள்.
மேலும் 30 வருட போராட்டத்தை, பல பல ராணுவ முகாம்களைத் தாக்கி அழித்த இயக்கத்தினை, பெரிய ஒரு பிரதேசத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்து நம்பிக்கையுடன் போரிட்ட அமைப்பின் முடிவை ஒரு ராணுவ காவலரணுள் இருந்து நடந்த ஒரு போராட்டத்துடன் ஒப்பிட்டு கதைக்கிறீர்களே.
அதேபோல உங்கள் சகோதர பத்திரிகையாளர்கள் தாக்கப்படும் போதும் சொல்லுங்கள். வெளிநாட்டில் உள்ல பத்திரிகையாளர்கள் அமைப்புகள் உசுப்பேத்துகிறார்கள், இவ்வளவு அதிர்ச்சி தரும் நிலையிலும் மகிந்தவால் அமைதி காக்க முடிகிறதே என மேற்கத்தையோர் வியக்கிறார்கள் எனவே போராடாமல் இருங்கள் என!
வன்முறைக்கு வன்முறை பதில் என்ற உண்மையை மறந்து இன்று கூச்சல் போடுபவர்கள் தான் இந்த மரணத்திற்கும் காரண கரத்தாக்கள். புலம்பெயர் நாட்டு தலையீடு இந்த அப்பாவி இளைஞனின் மரணத்திற்கு காரணம்! ஒரு அரச அதிகார வர்க்கதின் பிரதி நிதிகளை பயணக்கைதிகளாக பிடிக்க அறிவுரை கொடுத்த புண்ணியவான்கள் யார்? இந்த இளைஞர்கள் செய்த போராட்டம் நியாயமாக இருந்தாலும் அவர்கள் போராடிய வழிமுறை இந்த மரணத்திற்கு வித்திடும் என்ற பொறுப்பானவர்கள் குறிப்பாக இந்த இளைஞர்கள் மீது கரிசனை கொண்டவர்கள் அறிவுரை செய்யாதது ஏன்? இப்படி மரணங்கள் நிகழந்தால் தாங்கள் அரசியல் செய்யலாம் என்ற சிந்தனையா? பல கேள்விகள் பதில் கிடையாது.
//ஒரு அரச அதிகார வர்க்கதின் பிரதி நிதிகளை பயணக்கைதிகளாக பிடிக்க அறிவுரை கொடுத்த புண்ணியவான்கள் யார்? //
ஏரிக்கரைப் பத்திரிகைகளையும் விஜய பத்திரிகைகளையும் தவிர, இவ்வாறு அறிவுரை கொடுக்கப்பட்டது என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? இந்த இளைஞர்களுக்கு எவ்வழியில் அவ்வாறான ஆலோசனைகள் வழங்கப்பட்டனவாம்?
//புலம்பெயர் நாட்டு தலையீடு இந்த அப்பாவி இளைஞனின் மரணத்திற்கு காரணம்! //
நல்ல வசதியாய்ப் போய்விட்டது, இல்லையா?
புலி இருக்கும் வரை புலியைக் காரணம் காட்டினோம். இப்போது புலி போன பின் எப்படிப் பம்மாத்தலாம் என்று யோசித்தவர்கள் கண்டுபிடித்தது புலம்பெயர் தமிழரை! தயான் ஜயதிலகவே ஆங்கிலத்தில் ‘புலத்துப் புலிகள்’ என்று தட்டுகிறார். வெளியிலிருந்து அடி வாங்கிக் களைத்துப் போயிருக்கும் தமிழர்களைக் கட்டுப்படுத்தும் வல்லமையுடனா புலத்துத் தமிழர் உள்ளனர்?
Provincial Elections: Criticisms And Perspectives
Dayan Jayatilleka -
The contacts, interaction and overlap between the TNA and the Diaspora Tigers (Pulathap Puligal) are well known to anyone who follows the Tamil media, including websites. It would not be wise to assume that these and even more details are unknown to the decision makers in the Sri Lankan state.
//எதற்கெடுத்தாலும் ‘உசுப்பேத்தல்’ எனச் சொல்கிறீர்களே அப்போ அடங்கிப்போதல் தான் நல்லது எனச் சொல்லிவிட்டுப்போக வேண்டியதுதானே! //
மேற்கத்திய மற்றும் வெளிநாட்டு ஆதரவோடுதான் சிறீலங்கா அரசாங்கம் வன்னிப் போரில் வென்றதென்ற உண்மை எல்லோருக்கும் தெரியும் சாந்தன்.
இப்படி சிறீலங்காவுக்கு உதவிய நாடுகளில் உங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்கள். முடிந்தால் , அந்த நாடுகளுக்கு ஒரு பாடம் புகட்ட , ஒரு போராட்டத்தை எப்போது தொடங்கப் போகிறீர்கள்? அதை எந்த வடிவத்தில் செய்யலாம்? சொல்வீர்களா சாந்தன்?
//30 வருட போராட்டத்தை, பல பல ராணுவ முகாம்களைத் தாக்கி அழித்த இயக்கத்தினை, பெரிய ஒரு பிரதேசத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்து நம்பிக்கையுடன் போரிட்ட அமைப்பின் முடிவை ஒரு ராணுவ காவலரணுள் இருந்து நடந்த ஒரு போராட்டத்துடன் ஒப்பிட்டு கதைக்கிறீர்களே.//
இத்தனை தாக்குதல்களையும் செய்தவர்கள் , ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் முடக்கப்பட்டு கடைசியில் வெள்ளைக் கொடியோடு சரணடைந்து சாவடைந்தார்கள் என்பதையும் மறக்க முடியுமா? வன்முறையால் அனைத்தையும் பெற்று விட முடியாது. அதற்கு மேலான பல விடயங்கள் இருக்கவே இருக்கின்றன. அவற்றை நினைத்துப் பார்க்காத ஹீரோயிசம் . கடைசியில் தமிழ் மக்களிடம் இருந்ததையும் இல்லாமல் பண்ணியது. அது வருத்தமான உண்மை சாந்தன்.
வெளியே வந்தோர் பிழைத்துக் கொண்டார்கள். உள்ளே இருந்தவர்கள் அகப்பட்டுக் கொண்டார்கள். நாட்டுக்கு வெளியே இருப்போர் பேசுவது வீரம். நாட்டில் வாழ்வோர் செத்து செத்து பிழைப்பது சோகம்.
அது சரி – வெறும் மாரடைப்பால் செத்துப் போன ஒருவருக்காக எல்லோரும் ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்?
தனது அரசு கொடுங்கோல் அரசு என்று பொருள் பட புலத்துப் புலிகள் ஒரு இயற்கை மரணத்தை இப்படிப் பெரிதுபடுத்தவும், இவ்வளவு அதிர்ச்சி தரும் நிலையிலும் கெளரவ ஜனாதிபதி அவர்களால் அமைதி காக்க முடிகிறதே என உலகம் வியக்கிறது!
என்னே தலைவர் – என்னே தலைவர்!!!
>>> இப்படி சிறீலங்காவுக்கு உதவிய நாடுகளில் உங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்கள். முடிந்தால் , அந்த நாடுகளுக்கு ஒரு பாடம் புகட்ட , ஒரு போராட்டத்தை எப்போது தொடங்கப் போகிறீர்கள்? <<<
ஒரு புதிய சிந்தனை. இது ஒரு முக்கியமான அரசியல் கேள்வி. வாசகர்கள் ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டிய கருத்து. தமிழ் தேசிய வாதிகளும், சிங்கள இனவாதிகள், அவர்களது ஆதரவு தமிழ் "இணக்க" அரசியல் ஆய்வாளர்களும் இதை செய்யப் போவதில்லை. அனைவரும் நம்பி இருப்பது வல்லரசுகள், இந்தியா, சீன முரன்படுகளுக்கிடையில் நீர் மேல் நடக்கும் அற்புதம் நடக்குமா என்பதே. ராஜபக்சே அமைதி காப்பதும், சம்பந்தன் கொடி பிடித்ததும் நீர் மேல் நடக்கும் வித்தையின் ஒரு பகுதி.
வட கிழக்கில் வெளிநாடுகளில் இருந்து அரசியல் செய்வதால் தான் அரசு இன அழிப்பு செய்கின்றது என்று கருதுவது விரும்பியோ விரும்பாமலோ அரசின் நோக்கத்தினை ஆதரிப்பதாகும். "புகலிடப் புலிகள்" தான் அரசியல் தீர்வுக்கு பாதகமாக இருக்கின்றார்கள் என்ற வாதம் இனவாதத்தின் இன்னுமொரு துரும்பு. தமிழ் தேசிய வாதத்தின் கடும் விமர்சன பத்திரிகையாளர்களும், இணக்க அரசியல் வாதிகளும் இன்னும் ஓரிடமும் தங்களது வேலைத்திட்டம் என்ன என்பதற்கு ஒரு பொதுக் கூட்டம் நடத்த முடியவில்லை. எதாவது கூட்டம் [LLRC], நினைவு தினம், புத்தக வெளியீடு என்று நடத்தப்பட்டால் கடந்த இருபது வருடமாக தெரிந்த பழைய முகங்கள் புலியினை புதிய சொல்லாடலில் கடித்து குதறுவதினை தான் காணலாம். "இணக்க அரசியல் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பினை எப்படி உண்மை, நேர்மை அரசியல் செய்ய ஆலோசனை" என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தினை நடத்த இவர்களுக்கு இன்னும் திராணியில்லை. கடந்த முப்பது வருடங்களாக காய்ந்து போன குட்டைக்கு வெள்ளம் விட்டு புலி எதிர்ப்பு அரசியல் செய்யத்தான் முடியும்.
முக்கியமாக வட கிழக்கில் வாழ்வோர் இராணுவ ஆட்சியினை ஏற்றுக்கொள்ள தயாராகவில்லை. இதன் வெளிப்பாடுகள் சுயாதீனமான பல கிளர்ச்சிகளில் காணக்கூடியதாக இருக்கின்றது. போர் முடிந்து மூன்று வருடங்களின் பின்னர் இனவாதம் ஒரு மரணப்பிடியினை இராணுவத்தினால் இறுக்கி இருக்கின்றது. இந்த நிலைமைகளில் "புகலிட புலிகள் உசுப்பேத்து கின்றார்கள்" என்பது இராணுவத்திற்கு துணை போவதாகும். புகலிட புலிகள் உட்பட்ட தேசிய வாதிகள் தங்கள் நோக்கினை மாற்றப் போவதில்லை. ஆனால் மக்கள் தங்களது சிந்தனையினை மாற்றுகின்றார்கள்.
வவுனியாவில் சிறைக்காவலர்களை பணயம் பிடித்த மாதிரி சம்பவம் சிங்களவர்கள் செய்திருந்தாலும் இப்படி தான் முடிவு இருந்திருக்கும். தமிழ்நாட்டு சிறையில் இந்திய தமிழ் கைதிகள் சிறைக்காவலர்களை பணயம் பிடித்திருந்தாலும் இதே மாதிரி தான் முடிவோ அல்லது இதை விட மோசமானதாகவோ இருந்திருக்கலாம். புலிகளின் ஆட்சியில் புலிகளின் சிறையில் இப்படி நடந்திருந்தால் பணயத்தில் பங்குபற்றியவர்கள் அனைவரும் உடனடியாக படு கொலை செய்யபட்டிருப்பார்கள்.
றோகன் கண்ணை மூடி பால் குடிக்க வேண்டாம். அண்மையில் லண்டனில் இருக்கிற ஒரு தமிழ் நிறுவனம் இரு இணையம் இந்த இளைஞர்களின் தொலைபேசி பேட்டி போட்டது தெரியுமா? இதற்கு இவர்கள் பாவித்த மோபைல் எங்கிருந்து வந்தது? இந்த இலக்கங்கள் இலண்டனுக்கு எப்படி வந்தது! உங்கடை மாதிரி ஆட்கள் இந்த அப்பாவிகளை பப்பாவிலை ஏத்துறது தெரியாதா? இலங்கை அரசு அடக்கிறது ஒரு பக்கம் ஆனால் இந்த இளைஞர்களின் உயிரை அடகுவைத்து பிழைப்பு நடாத்தும் புலத்து தமிழரும் அரசியல்வாதிகளும் நாசமாப்போன இலங்கை அரசை விட மிக மோசமானவர்கள். அரசு 5 வருடத்திலாவது மாறும் ஆனால் இந்த ஏமாற்று பேர்வழியள்??
யதார்தத்தை காண ஏன் தயங்குகிறார்கள் என்பது தான் புரியவில்லை? பி.சீ. நாடகவேஷசமா? இல்லை அவர்களை வைத்து நாம் வாழும் வரை வாழ்ந்து அரசியல் நடத்திவிடுவோம் என கருதுகிறார்களா?
ஏதோ ஒருகாலத்தில் தமிழனின் ஆட்சியில் செங்கோல் உயர்ந்து நின்றது.தாய்மாடு கூட தனது நீதியைப் பெற்றது. தமிழனக்கு மட்டும் தனது கையில் ஆட்சி கிடைத்தால்…
இந்தியதமிழனும் இலங்கைத்தமிழனும் வேறுபட்டவன் இல்லை.தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளுகிறான். அங்கேயும் அவன் சிறையிலும் குவாண்டாமா சிறையிலும் நடப்பதிலும் காட்டிலும் என்னென்னமோ எல்லாம் நடக்கிறது. அது வெளி வருவதில்லை. அதைப்பற்றி அறிவதற்கும் தமிழனுக்கு ஆர்வமில்லை.
ஒரு புள்ளிவிபரத்தின்படி தமிழ்நாட்டு போலீஸ்சாருக்கும் லொறி ரைவருக்குமோ ஏட்ஸ் கிருமி கூடுதலாக இருப்பதாக அறிந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு போலீஸ் சமீபத்தில் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லலப்பட்ட நான்கு தலித் பெண்களை என்னமாதிரி பாலியல் உறவுக்கு உட்படுத்தினார்கள் என்பதை முதல் அமைச்சர் ஐந்துலட்ஷம் நஷ்டயீடு வழங்கப் பட்டதுடன் ருசுவாயிற்று.
கடுகுக்குள் ஆற்றையும் மலையையும் புகுத்துவான் தமிழன். அப்படித்தான் தமது காலத்தை தேசியத்தலைவர் விட்டுச் சென்றார். அதை நாம் பின் தொடருகிறோம் என்பவர்களோடு…
வேண்டா பொண்டாடி கைபட்டால் குற்றம். கால்பட்டால் குற்றம்.சிங்களத்தோடு பகைத்து தான் தமிழன் அரசியல் செய்வான் என கருதினால். அது அர்த்தமில்லாத கருத்து.
ஒரு மின்மினி ஒளி. இதை வைத்து வீட்டிற்கு ஒளி ஏற்ற முடியாது.
//வேண்டா பொண்டாடி கைபட்டால் குற்றம். கால்பட்டால் குற்றம்.சிங்களத்தோடு பகைத்து தான் தமிழன் அரசியல் செய்வான் என கருதினால். அது அர்த்தமில்லாத கருத்து.//
சரணாகதி அரசியல் என்ன செய்தது?
பிள்ளையானும் கருணாவும் அரசுடன் சேர்ந்த கிழக்கில் மகாவலி இப்போது பாலாயும் தேனாயும் தானே ஓடுகிறது!
//..வெளியே வந்தோர் பிழைத்துக் கொண்டார்கள். உள்ளே இருந்தவர்கள் அகப்பட்டுக் கொண்டார்கள். நாட்டுக்கு வெளியே இருப்போர் பேசுவது வீரம். நாட்டில் வாழ்வோர் செத்து செத்து பிழைப்பது சோகம்…..//
அப்படி ”வெளீயே” வந்தோரை வைத்து ஷோ காட்டிவிட்டு மீண்டும் ‘உள்ளே’ போட்டார்கள். அவர்கள் வெறுத்துப்போய் போராடினர். அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். அப்படிக் கொல்லப்பட்டவர்களின் பிணத்தை கையேற்க்கப் போனோரையும் பயமுறுத்தி அலைக்கழித்தனர்.
அவர்களில் ஒருவரின் தாயார் சொல்வதைக் கேளுங்கள். காது குளிர. செய்யும் தொழில் (வானொலித்துறை) ஏற்ர நேர்மை இருந்தால் வெள்ளைக்காரனின் பி.பி.சி க்கு இருக்கும் மனிதாபிமான பத்திரிகை நேய உணர்வில் ஒரு துளியேனும் இருக்குமானான் அந்த தாயை அழைத்து ஒரு பேட்டி எடுங்கள். உங்கள் ரேடியோவில் போராடுவோருக்கு அவரின் தாய் தந்தையருக்கு ‘புத்தி’ சொல்லுங்கள். (மோட்டுக்குடி, முடக்குவாத மருந்து).
http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/07/120706_victimsmother.shtml
பி.பி.சி யும் அந்த தாயை பேட்டி எடுத்து உசுப்பேத்துது எனச் சொனாலும் சொல்வீர்கள்!!
//பி.பி.சி யும் அந்த தாயை பேட்டி எடுத்து உசுப்பேத்துது எனச் சொனாலும் சொல்வீர்கள்!!// சாந்தன்
அப்போ எதற்காக 2009 உலகெங்கும் வீதி மறியல் செய்தும் தலைவரை காப்பாற்ர முடியாமல் போனது. இலங்கைத் தமிழரை (துரையப்பாவை சுட்டனான், சிங்களவன் கொல்கின்றான் என்று புலம்பெயர் நாடுகளில் உல்லாச அகதிகளாக வாழ்வோரை) மட்டுமே உசுபேத்தலாம். உலகினை எந்த பி.பி.சி ஆலும் முடியாது.-துரை
//பி.பி.சி யும் அந்த தாயை பேட்டி எடுத்து உசுப்பேத்துது எனச் சொனாலும் சொல்வீர்கள்!!// சாந்தன்
அப்போ எதற்காக 2009 உலகெங்கும் வீதி மறியல் செய்தும் தலைவரை காப்பாற்ர முடியாமல் போனது//
வட்டுக்கோட்டைக்கு போற வழி என்ன? துட்டுக்கு ரண்டு….
வட்டுக்கோட்டைக்கு போகிறவழியும் இதுதான்…..
இழப்புகள் அழிவுகளை கொடுத்து பலவருடங்களாக நடத்திய போராட்டம் வன்முறையைக் வைவிட்டு இறுதியில் வெள்ளைக் கொடியுடன் அடிபணிந்தது. அப்படியிருக்கும் போது… புதுவாழ்வை மேற்கொள்வதற்கு சரணடைந்தவர்கள் அங்கேயும்(சிறையில்) வன்முறையை கையாளுவதாக இருந்தால்..?
உலகத்தில் எந்தநாடும் சிறையில் வன்முறையை மேற்கொள்ளலாம் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஜெயிலரை பதினாறு மணித்தியாலங்கள் சிறையில் பூட்டிவைத்திருப்பது எந்த ஜனநாயகப் போராட்டத்திற்கு உட்பட்டது சாந்தன்.?
இதில் என்ன புதுமை என்றால் கடந்தகாலத்தில் புலிகளின் முதுகுக்கு பின்னால் மறைந்திருந்த தமிழ்தேசியக்கூட்டமைப்புபோ! மண்டையன் குழுத்தலைவரே இந்த வன்முறையைப் பற்றி எங்கேயாவது அல்லது வெளிநாட்டு ஊடகங்களுக்காவது ஒரு வார்த்தைதன்னும் வாய் திறந்தது இல்லை.
வெளிநாட்டு ஊடகங்கள் பி.பி.சி. தமிழர்களின் உரிமைக்காகத் தான் குரல்கொடுக்கிறார் என்று நீங்கள் நம்பினால் அது துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு எனத்தான் புரிந்து கொள்ளமுடியும்.
புலிப்போராட்டம் தமிழ்மக்களுக்கு எவ்வளவு அழிவை ஏற்பத்தினார்களோ அதுபோல சிறையில் நடக்கும் வன்முறை போராட்டம் சிறையில் இருக்கும் தமிழ்கைதிகளுக்கும் பேரழிவையே ஏற்படுத்திச் செல்லும். இப்படியான செயல்கள் மீண்டுவந்து அவர்கள் மறுவாழ்வை தொடங்குவதற்கு எந்த சந்தர்பத்தையும் அளிக்காது.
சிறை என்றும் சிறையாகவே இருக்கும். இங்கு யாரும் சிவப்பு கம்பளத்தில் வரவேற்கப் படுவதில்லை. இதைப் புரிந்தால் மட்டுமே வட்டுக்கோட்டைக்கு செல்வதற்கான வழியையும் கண்டடைய முடியும் திரு.சாந்தன் அவர்களே!.
//ஜெயிலரை பதினாறு மணித்தியாலங்கள் சிறையில் பூட்டிவைத்திருப்பது எந்த ஜனநாயகப் போராட்டத்திற்கு உட்பட்டது சாந்தன்.?//
ஆக, நிமலரூபன் தான் பூட்டி வைத்த குழுவின் தலைவர்! ஆகவே, அவரும் அவரது சகாக்களும் தலைமைச் சிறைக் காவலரது பாதணியை நக்குவதும், மண்வெட்டித் தடிகளால் குளறக் குளற அடி வாங்குவதும், காயப்பட்ட பின்னர் இரத்தம் வழிய வழிய வீசப்படுவதும், இறந்த பின்னர் மாரடைப்பு என்று முத்திரை குத்தப்படுவதும், உடல் ஊருக்குக் கொண்டு செல்லப்படாது கொழும்பில் புதைக்கப்படுவதும்…. எல்லம் ஜனநாயக முறைப்படி நல்லாட்சி நடக்கும் நாட்டில் சரியான தண்டனைகளே.
பேயாளும் நாட்டிலே பிணம் தின்னும் சாத்திரங்கள்…
ஜனநாயக முறைப்படி நல்லாட்சி நடக்கும் நாட்டில் துரை போய் வாழவேண்டியது தானே. போகும் போது மறக்காமல் குடும்பத்தையும் கூட்டிப் போகவும்.
புலிகளின் வதைமுகாமென்றால்லென்ன என்பதைப்பற்ரி சாந்தனிற்கு யாராவது விளங்கப்படுத்துவீர்களா?-துரை
//ஜனநாயக முறைப்படி நல்லாட்சி நடக்கும் நாட்டில் துரை போய் வாழவேண்டியது தானே. போகும் போது மறக்காமல் குடும்பத்தையும் கூட்டிப் போகவும்// றோகன்
முடியாது ,நான் புலிகளிற்கு பணம் சேர்க்கவில்லையே .-துரை
முப்பது வருடங்கள் புலம்பெயர்ந்தவர்கள் மண்னில் பலகனவுகளை விதைத்து விட்டவர் அவர்வழியில் அவர் இறக்கும் போது.. அவருக்காக கருமாதி செய்ய யாருமே இல்லை. இல்லையென்றாலும் எங்கே புதைத்தீர்கள்? எங்கே எரித்தீர்கள். எந்த ஓடையில் சாம்பலைக் கரைத்தீர்கள் என்பதையாவது கேட்டிருக்கிலாம். அதற்கும் ஒரு பயலும் இல்லை.
நான் சொல்வது இதுதான். நிமலரூபனின் சாவை வைத்து யாரும் அரசியல் பிழைப்பு நடத்தாதீர்கள் என்பதே!. இதை திரு.றோகன் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.
சாந்தன், மீண்டும் கேட்கிறேன் ?
சிறீலங்காவுக்கு உதவிய நாடுகளில் உங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்கள். முடிந்தால் , அந்த நாடுகளுக்கு ஒரு பாடம் புகட்ட , ஒரு போராட்டத்தை எப்போது தொடங்கப் போகிறீர்கள்? அதை எந்த வடிவத்தில் செய்யலாம்? சொல்வீர்களா சாந்தன்?
//..சிறீலங்காவுக்கு உதவிய நாடுகளில் உங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்கள். முடிந்தால் , அந்த நாடுகளுக்கு ஒரு பாடம் புகட்ட , ஒரு போராட்டத்தை எப்போது தொடங்கப் போகிறீர்கள்? அதை எந்த வடிவத்தில் செய்யலாம்? சொல்வீர்களா சாந்தன்?….//
நான் அண்மையில் சந்தித்த காங்கிரஸ் பிரதிநிதியிடம் ஸ்ரீலங்காவுக்கு உதவிய விடயம் பற்றியும் அதில் எனது ஆதங்கம் பற்றியும் சொன்னபோது அவர் சொன்னார். ஸ்ரீலங்காவுக்கு ‘உதவப்போய்’ தாம் ‘பாடம் கற்றுக்கொண்டுள்ளோம்’ என!
மீண்டும் சொல்கிறேன் இதனை நான் சொல்லவில்லை சொன்னவர் அமரிக்க காங்கிரஸ் பிரதிநிதி!!!!
அத்துடன் ஒரு சின்ன உதாரணம்….
இஸ்ரேலிய அகதிக்கப்பலை திருப்பி அனுப்பிய முதல் நாடு அமெரிக்கா என நினைக்கிறேன்.
இதிலிருந்து உலகமே ஐநா மனித உரிமைப் ‘பாடம்’ கற்றுக்கொள்ளவைத்தனர் யூதர்கள்!!!!
//போது மறக்காமல் குடும்பத்தையும் கூட்டிப் போகவும்// றோகன்
///முடியாது ,நான் புலிகளிற்கு பணம் சேர்க்கவில்லையே// .-துரை
அப்போ புலிகளுக்குப் பணம் சேர்த்தவர்களா ஸ்ரீலங்கா போகமுடியும். புலியைத் திட்டித் தீர்த்தவர்களே ஸ்ரீலங்காவுக்கு போகமுடியாமல் தவிக்கிறார்களா? என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை??
//நான் சொல்வது இதுதான். நிமலரூபனின் சாவை வைத்து யாரும் அரசியல் பிழைப்பு நடத்தாதீர்கள் என்பதே!. இதை திரு.றோகன் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.//மாவோ
30 வருடமாக ஒரு நாளில் ஒரு தடவையிலேயே 30 தமிழரை பலிகொடுத்து பிழைப்பு நடத்தியவர்கள். 2009 இல்
இறுதிப்போரில் பாரிய உயிர் இழப்புகள். 3 வருடம் சனல் 4 உடன் ஓடு முடிந்தது. எங்காவ்து ஒரு தமிழன் சிங்களவர் கையால் கொல்லப்பட மாட்டானா என ஏங்கும் புலிக்குணம் மாறுமா ஒருநாளில்.-துரை
//புலிகளின் வதைமுகாமென்றால்லென்ன என்பதைப்பற்ரி சாந்தனிற்கு யாராவது விளங்கப்படுத்துவீர்களா?-துரை///
தோழர் மணியம் ‘தேனீ’ யில் எழுதுவதைச் சொல்லவில்லைத்தானே?
புலிகள் ‘வதைமுகாம்’ வைத்திருந்தார்கள் ஆகவே ஜனநாயக சோலசிசக் குடியரசாகிய நாமும் மனித உரிமை பேணல் விடயத்தில் பயங்கரவாதப் புலிகளைப் பின்பற்றி போர்க்கைதியை கைகால்களை உடைத்து கத்தியால் வெட்டிக்கொலை செய்வோம்!! கேட்டால் புலி என திறமோ எனக்கதை விடுவோம்!!
வாழ்க மனித உரிமை மாற்றுக்கருத்து மாணிக்கங்கள்!!
//..ஆனால் இறந்துவனின் உடலை ஊருக்கு கொண்டு போக முடியாத ; பெற்றோரது வறுமையும் ; நிலையும் மனம் படைத்த எவரையும் வருத்தவே செய்யும்….///- அஜீவன்.
என்ன சொல்லுறீங்க அஜீவன். பி.பி.சி யில் அவரது தாயின் பேட்டி கேட்டீர்களா? அவர் தனது வறுமையைச் சொன்னாரா இல்லாமல் ‘எங்கே நான் எனது மகனை விட்டேனோ அங்கேயே தனது மகனின் உடலைக் கையளிக்கவேண்டும்’ என உரிமையைக் கேட்டாரா?
வசதியாக ‘வறுமை’ என மாற்றிப்போடுகிறீர்களே? சுப்பர் ‘மோட்டுக்குடி’ சுப்பர் ‘முடக்குவாத’ மருந்து! சுப்பர் பத்திரிகை தர்மம்!!!!
அத்துடம்ன் ‘நிலையும்’ என எதைச் சொல்கிறீர்கள் எனத் தெளிவாகச் சொல்லலாமே? ஏன் பத்திரிகைச் சுதந்திரம் தடுக்கிறதோ?
//வாழ்க மனித உரிமை மாற்றுக்கருத்து மாணிக்கங்கள்!! //சாந்தன்
மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் அன்றும் இன்றும் புலிகளையே குற்ரம் சாடுகின்றனர். காரணம் கொலைகாரப் புலிகளே கொலைகாரனை தேடி அலைவதால்தான். -துரை
>>> சிறீலங்காவுக்கு உதவிய நாடுகளில் உங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்கள். முடிந்தால் , அந்த நாடுகளுக்கு ஒரு பாடம் புகட்ட , ஒரு போராட்டத்தை எப்போது தொடங்கப் போகிறீர்கள்? அதை எந்த வடிவத்தில் செய்யலாம்? <<<
இந்த நாடுகளில் ஒரு போராட்டம் "ஒரு பாடம் புகட்ட" என்ற அடிப்படையில் பார்த்தால் யாருக்கு பாடம் புகட்ட என்ற கேள்வி எழுகின்றது. இந்த நாடுகளின் மக்கள் இந்த நாடுகளின் அரசுகள் இனப்படுகொலையினை செய்வதற்கு இலங்கை அரசிட்கு இராணுவ தளபாடம் வழங்கியதற்கு பொறுப்பில்லை. மேற்கு நாடுகளில் ஒரு போராட்டம் இரண்டு நோக்கங்களை கொண்டதாக இருக்கும்.
ஒன்று, ஸ்ரீ லங்கா அரசிட்கு இந்த நாடுகள் உதவி செய்ததின் மூலம் இன அழிப்பிற்கு துணை போகின்றன என்பதை இந்த நாடுகளின் மக்களுக்கு தெரிய படுத்துவது. இந்த நாடுகளில் தங்கள் அரசுகளின் இந்த வெளிநாட்டுக் கொள்கைக்கு எதிராக இருக்கும் பரந்து பட்ட மக்களுடன் இணைந்து அரசுக்கெதிரான போராட்டமாக வடிமைக்க வேண்டும். இதனை புலிகளின் ஒரு கன்னையும் செய்யப் போவதில்லை. மேற்கு நாடுகளின் அரசுகளுக்கெதிராக புலிகள் அல்லது தமிழ் தேசியம் எதிர்ப்பு தெரிவித்தது வரலாற்றில் இதுவரை இல்லை. புலிகளின் கன்னைகளுக்குள் என்ன குத்து வெட்டுக்கள் இருந்தாலும் இந்த நாடுகளின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்ப்படும் மாற்றங்கள் ஸ்ரீ லங்கா அரசிற்கு எதிராக திரும்புவதின் மூலம் உருவாகும் நிலைமைகளுக்குள் வட கிழக்கில் தமிழ் ஈழமோ அல்லது அது போன்ற ஒரு அதிகார கட்டுமானத்தினை பெற்றுக் கொள்ளலாம் என்ற "இராச தந்திரத்தில்" உடன்படுகின்றன. அதற்காக பனை வளர்ப்பதிலேயே காலத்தினை கடத்துகின்றனர்.
இரண்டாவது, இன்றைய இலங்கை அரசின் வெளிநாட்டுக் கொள்கையுடன் தொடர்பு பட்டது. போர் குற்றம் தொடர்பாக அரசின் பல பிரதிநிதிகள் மேற்கு நாடுகள் புலிகளை அழிப்பதற்கு ஆயுதம் வழங்கி "பயங்கரவாதம்" ஒழிக்கப்பட்டவுடன் மனித உரிமை பற்றி பேசுகின்றார்கள் என்று குறைப்பட்டுக் கொள்கின்றனர். மேற்கு நாடுகளுடன் போர் குற்றம் தொடர்பாக இருக்கும் முரண்பாடுகளை கரைத்து விடுவதற்கு ராஜபக்சே அரசு பல விதமான முயற்சிகளை எடுத்து வருகின்றது. மேற்கு அரசுகள் ஆயுதம் வழங்கியதற்கு எதிரான போராட்டம் இந்த அரசுகள் மேல் மட்டும் குற்றத்தினை சுமத்துவதற்கு பயன் படுத்தப்படலாம். அதன் மூலம் ராஜபக்சே அரசு குற்றமற்றது என்ற இராசதந்திர வாதம் முன் வைக்கப் படலாம். எசமான் துவக்கு குடுக்காட்டி அடிமை சுட்டிருக்க மாட்டான் என்ற மடத்தடி கதை இராச தந்திரமாக மாறும்.
மேற்கு நாடுகளில் ஒரு போராட்டம் அந்த நாடுகளின் அரசுகளிட்கு மட்டுமல்ல ஸ்ரீ லங்கா அரசிற்கும் எதிரானதாக ஒரு சுயாதீனமானதாக இருக்க வேண்டும். இங்கே இந்த போராட்டம் பற்றிய கேள்வி எழுப்பிய வாசகர் அஜீவன் எந்த முறையினை முன்வைக்கின்றார்?.
சாந்தன்; இலங்கையில் போராடுபவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லியிருந்தார்.
சரி; இலங்கையில் போராடுபவர்களுக்கு ஆதரவாக புலத்தில் இருந்து கொண்டு பேசுகிறீர்கள் அங்கே யுத்தம் செய்த அரசுக்கு எதிராக போராடுமாறு அங்கு வாழும் மக்களை சொல்கிறீர்கள். இங்கு வாழ்வோர் உறுதுணையாக இருப்பதாக வேறு சொல்கிறீர்கள்.
ஆனால் அந்த அரசுக்கு தொடர்ந்தும் உதவி வழங்கும் நாடுகளுக்கு எதிராக ஏன் இவர்களுக்கு தாம் வாழும் நாடுகளில் இருந்து ஜனநாயக ரீதியாக ஒரு போராட்டத்தை செய்ய முடியாது? இங்கு இவர்கள் செய்ய மாட்டார்கள். காரணம் இவர்களை உள்ளே தள்ளி விடுவார்கள். அல்லது சிறீலங்காவுக்கு நாடு கடத்தி விடுவார்கள்.
//நான் அண்மையில் சந்தித்த காங்கிரஸ் பிரதிநிதியிடம் ஸ்ரீலங்காவுக்கு உதவிய விடயம் பற்றியும் அதில் எனது ஆதங்கம் பற்றியும் சொன்னபோது அவர் சொன்னார். ஸ்ரீலங்காவுக்கு ‘உதவப்போய்’ தாம் ‘பாடம் கற்றுக்கொண்டுள்ளோம்’ என!
மீண்டும் சொல்கிறேன் இதனை நான் சொல்லவில்லை சொன்னவர் அமரிக்க காங்கிரஸ் பிரதிநிதி!!//
இது போதுமே! அமரிக்க காங்கிரசும் இந்த மனித படுகொலைகளுக்கு உடந்தை என வீதிக்கு இறங்க வேண்டியதுதானே? அதுதான் முடியாது. ஐநாவுக்கும்; மனித உரிமை அமைப்புகளுக்கும், அமெரிக்காவுக்கு எதிராக பகிரங்கமாக பெட்டிசன்களை அனுப்ப வேண்டியதுதானே? ஏன் தாமதம்?
//இதனை நான் சொல்லவில்லை சொன்னவர் அமரிக்க காங்கிரஸ் பிரதிநிதி!!// என்று கேட்டு விட்டு வந்து எழுதிகிறீர்கள்? என்ன கொடுமை!
சிறீலங்காவின் சிறையில் இருப்பவனுக்கு போராட தைரியம் கொடுக்கிறீர்கள்? இங்கே வெளியில் இருந்து கொண்டு காங்கிரஸ் பிரதிநிதி சொன்னதை கேட்டு ஆமேன் போட்டு விட்டு வந்திருக்கிறீர்கள்! உடனே நீங்களும் கொதித்தெழ வேண்டியதுதானே? உங்கள் உதவியால்தான் எம் மக்கள் அழிந்தார்கள் என; காங்கிரஸ் பிரதிநிதியை பணயக்கைதியாக்கி தமிழ் பகுதிக்கு சுதந்திரம் வாங்கித் தா என போராட வேண்டியதுதானே? நல்ல ஆட்கள்!
//…..சரி; இலங்கையில் போராடுபவர்களுக்கு ஆதரவாக புலத்தில் இருந்து கொண்டு பேசுகிறீர்கள் அங்கே யுத்தம் செய்த அரசுக்கு எதிராக போராடுமாறு அங்கு வாழும் மக்களை சொல்கிறீர்கள். இங்கு வாழ்வோர் உறுதுணையாக இருப்பதாக வேறு சொல்கிறீர்கள்….//
நான் எப்போது சொன்னேன் போராடுமாறு? அங்கு யாராவது போராட்டம் நடத்தினால், அவர்களை அடித்துக் கொலை செய்தால் அப்போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பேன். அக்கொலைகளுக்கு எதிராகக்குரல் கொடுப்பதை உசுப்பேத்தல், முடக்குவாதம் என எள்ளிநகையாட மாட்டேன்! இதனை அதுசார்ந்த அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன்!
மற்ரவர்களை மோட்டுக்குடி நானே அதிபுத்திசாலி என நக்கல் அடிக்க மாட்டேன்.
//….ஆனால் அந்த அரசுக்கு தொடர்ந்தும் உதவி வழங்கும் நாடுகளுக்கு எதிராக ஏன் இவர்களுக்கு தாம் வாழும் நாடுகளில் இருந்து ஜனநாயக ரீதியாக ஒரு போராட்டத்தை செய்ய முடியாது? இங்கு இவர்கள் செய்ய மாட்டார்கள். காரணம் இவர்களை உள்ளே தள்ளி விடுவார்கள். அல்லது சிறீலங்காவுக்கு நாடு கடத்தி விடுவார்கள்….//
இல்லை, உள்ளே தள்ளமாட்டார்கள். நான் அறிந்தவரை ஜனநாயகரீதியான போராட்டக்காரர்களை உள்ளே தள்ளுவது ’மகாத்மாவின் நாடு’ ’உலக ஜனநாயக நாடுகளில் பெரிய நாடு’என பீத்திக்கொள்ளும் இந்தியாவில் மட்டுமே நடக்கிறது.
இன்னொன்று போராட்டம் நடத்தியவர்கள் ஹம்பேகர் சாப்பிட்டார் என கதை விட்டு மற்றும் ‘நுண்ணிய கமராக்களால் படம்பிடித்தனர்’ என செக்ஸ் அப் பண்ணிய தேசம்நெற்!
உங்களுக்கு யார் சொன்னது அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ தமிழர்கள் ஜனநாயக வழியில் போராடவில்லை என. லெபனாலில் இஸ்ரேல் போர்க்குற்றம் நிகழ்த்தியது என ஐ.நா சொன்னதற்கு நியூயோக்கில் யூதர்கள் தெருவுக்கு வந்தனர், செய்தி நிறுவனங்கள் பிரசுரித்தனர். காரணம் அவர்களின் லொபியிங். நாமும் அந்த லொபியிங் நிலையில் இருக்கிறோம். சிறையில் நிமலரூபன் கொல்லப்பட்டதனை அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம். பின்னர் அவ்வமைப்புகளின் ஊடாக சிறு செய்தித்தாள்களில் இடம்பெறச்செய்வோம், அடுத்தது முக்கிய செய்தித் தாள்களாயிருக்கும்.
//நான் அண்மையில் சந்தித்த காங்கிரஸ் பிரதிநிதியிடம் ஸ்ரீலங்காவுக்கு உதவிய விடயம் பற்றியும் அதில் எனது ஆதங்கம் பற்றியும் சொன்னபோது அவர் சொன்னார். ஸ்ரீலங்காவுக்கு ‘உதவப்போய்’ தாம் ‘பாடம் கற்றுக்கொண்டுள்ளோம்’ என! மீண்டும் சொல்கிறேன் இதனை நான் சொல்லவில்லை சொன்னவர் அமரிக்க காங்கிரஸ் பிரதிநிதி!!//
/இது போதுமே! அமரிக்க காங்கிரசும் இந்த மனித படுகொலைகளுக்கு உடந்தை என வீதிக்கு இறங்க வேண்டியதுதானே? அதுதான் முடியாது. ஐநாவுக்கும்; மனித உரிமை அமைப்புகளுக்கும், அமெரிக்காவுக்கு எதிராக பகிரங்கமாக பெட்டிசன்களை அனுப்ப வேண்டியதுதானே? ஏன் தாமதம்?….///
சிலவிடயங்கள் ”பகிரங்கம்” சிலவிடயங்கள் ‘ரகசியம்’. அதுசரி, பெட்டிசன் அனுப்பவில்லை என யார் சொன்னது அஜீவன் உங்களுக்கு?
//இதனை நான் சொல்லவில்லை சொன்னவர் அமரிக்க காங்கிரஸ் பிரதிநிதி!!// என்று கேட்டு விட்டு வந்து எழுதிகிறீர்கள்? என்ன கொடுமை!
சிறீலங்காவின் சிறையில் இருப்பவனுக்கு போராட தைரியம் கொடுக்கிறீர்கள்? இங்கே வெளியில் இருந்து கொண்டு காங்கிரஸ் பிரதிநிதி சொன்னதை கேட்டு ஆமேன் போட்டு விட்டு வந்திருக்கிறீர்கள்! உடனே நீங்களும் கொதித்தெழ வேண்டியதுதானே? உங்கள் உதவியால்தான் எம் மக்கள் அழிந்தார்கள் என; காங்கிரஸ் பிரதிநிதியை பணயக்கைதியாக்கி தமிழ் பகுதிக்கு சுதந்திரம் வாங்கித் தா என போராட வேண்டியதுதானே? நல்ல ஆட்கள்!…//
அஜீவன் சொன்னால் உங்களுக்குப் புரியும் என நினைத்தேன். மஹிந்த வாக்குறுதி அளித்தார், டக்ளஸ் அப்பொயின்மற் தந்தார் எல்லாம் சுபம் என கதை விடுவது நாமல்ல. காங்கிரஸ் பிரதிநிதியுடன் பேசிவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கையிலும் இறங்கியாச்சு அஜீவன். மிக விரைவில் காங்கிரசில் இருந்து போர்க்குற்ற விசாரணை செய்ய சர்வதேச குழு அமைத்தல் தவறும் பட்சத்தில் அமெரிக்காவில் ஒரு விசாரணைக்குழு அமைத்தல் பற்றிய பிரேரணை வரலாம். இந்தப் பிரேரணையை முளையில் கிள்ள ஸ்ரீலங்கா அரசு பகீரதப்பிரயர்த்தனம் செய்கிறது. நாம் கோரிக்கை வைக்கும் காங்கிரஸ் பிரதிநிதிகளில் அனேகமானோரை ஸ்ரீலங்கா அரசு பல பல ஆசைவார்த்தை (உறுதியளிப்பு, இலவச பயணம், போன்ற பம்மாத்துகள்) காட்டி தமக்கு சாதகமாக மாற்ற முயன்ற கதைகள் கேட்டோம். ஆனாலும் இந்த முயற்சி வெற்றியளிக்கும் என நினைக்கிறேன்.
இதில் நிமலரூபனின் கொலை சேர்ந்துகொண்டால் என்னவாகும்? நீங்கள் ஒரு தமிழனின் கொலையை வியாபாரமாக்குகிறார்கள், உசுப்பேத்துகிறார்கள் என வாதிட முயல்வீர்கள். அவ்வளவு மனிதாபிமானம், மாற்றுக்கருத்து, ஜனநாயக பத்திரிகயாளரல்லவா நீங்கள்??
இன்னொன்று அஜீவன்,
அமெரிக்க உதவியால் தென்னாபிரிக்க இனவெறி அரசு இனாழிப்பை நிகழ்த்திய குற்ரச்சாட்டின் போது இங்கு உள்ள தென்னாபிரிக்க கறுப்பின மக்கள் அங்கு போராடும் மக்களின் போராட்டத்தை உசுப்பேத்தல் பயங்கரவாதம் எனச் சொல்லி முடக்குவாத மருந்து கொடுக்காமல் போராடினர். அமெரிகக் காங்கிரஸ் தமது பிழையை உணர்ந்தனர். தென்னாபிரிக்கா விடுதலை அடைந்தது. இனவாத அரசுக்கு ஆதரவழித்த வெள்ளையின மக்கள் கூட உங்களைப்போல் அவர்களைப் பணயக் கைதிகளாகப் பிடிக்கலாமே என புத்திசாலித்தன கேள்வி கேட்கவில்லை!!!
அஜீவன்,
இன்னொரு ஆள் கோமாவில ஆஸ்பத்திரியில ‘கண்டுபிடிச்சிருக்கிறாங்களாம்’. இவர் எந்த சிறைக்காவலரை பணயக்கைதியாய் பிடிச்சர் எண்டு உங்கட பத்திரிகையாளர் தொடர்பை வச்சு அறிஞ்சு சொன்னியள் எண்டா நல்லதாப்போகும்!!
புலம்பெயர் தமிழர் உசுப்பேத்துறது காணாதெண்டு இப்ப கோட்டை ரயில் நிலையம் முன்னால கொஞ்ச ‘சிங்கள கொட்டியாக்கள்’ வேறு கோசம்போட்டு உசுப்பேத்தினம்.