தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் படுகொலையானது இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன்னுமொரு தமிழினப் படுகொலையே! – த சோதிலிங்கம்.


நான்கு சுவருக்குள் முழுமையான இராணுவத்தின் சிறைக்காவலர்களின் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருக்கும் சிறைக்கைதிகள் மீதான தாக்குதல்கள் கோழைத்தனமான அரசினதும் அதன் இராணுவ சிறைக்காவலர்களினதும் பண்புகளையே காட்டி நிற்கிறது. சிறையிலிருந்து அடித்து நொருக்கப்பட்ட கைதிகளை தமது காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்த சிறைக்காவலர்களும் இவர்களின் கோழைத்தனங்களும் அடிப்படை பௌத்த சிந்தனைவாதத்திலிருந்தே எழுந்துள்ளது.

இந்த சிந்தனைத் தோற்றத்தின் வெளிப்பாடான வவுனியா சிறைக்கைதி நிமலரூபனின் கொலைகளை கண்டிக்காத அரசியல்வாதிகள் குறிப்பாக பௌத்த மதபீடத்தினரும் இந்த கோழைத்தனங்களின் பிரதிநிதிகள் என்பதே இலங்கையர்களின் பொதுவான கருத்தாக எழுந்துள்ளது.

கடந்த எனது சிறை வாழ்வின் அனுபவங்களை மீள நினைவுக்கு கொண்டுவந்து, சிறையில் ஒரு கைதி அதுவும் துப்பாக்கிச் சூட்டினால் பாதிக்கப்பட்டால் எப்படியான நிலைமைகளில் அவனை பராமரித்திருக்க முடியும் அல்லது பராமரித்திருப்பார்கள் என்ற மீள்சிந்தனை என்னை வெட்கம் கெட்ட அரசின் மீது கோபம் கொள்ள வைத்தது. நாம் சிறையில் இருக்கும்போது அரசின் ஆதரவுடனேயே தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதல்களை தொடுத்திருந்தனர். இராணுவத்தினர் எம்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் இருந்தனர்.

சிறையில் அடைத்து வைத்திருக்கும் கைதிகளை கொலை செய்யும் வெட்கம் கெட்ட ஜனநாயக விரோத சோசலிசக் குடியரசு, தமிழர்கள் கைகட்டி வாய்பொத்தி காலில் விழுந்து வணங்கியே வாழ வேண்டும் என வற்புறுத்துகின்றது. சிறையில் அடைத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியின் கொலையானது சர்வதேச மனித உரிமைகளை மீறியது மட்டுமல்ல மீண்டும் ஒருமுறை தமிழர்கள் மீதான இனப்படுகொலை செய்த இனவாத அரசு என்பதனை நிரூபித்துள்ளது. இது இலங்கை மக்களை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.

பகுத்தறிவுச் சித்தாந்தத்தில் உலகில் உள்ள சமயங்களில் பௌத்தம் மிகவும் முக்கியமானது என்பது உலக பொதுகருத்து. ஆனால் இலங்கையின் பௌத்த அரசு சிறைக் கைதிகளையே கொலை செய்யும் பௌத்த அரசாக திகழ்கின்றது. அதுவும் பல தடவைகள் சிறைக் கைதிகளை கொலை செய்து வரலாறு படைத்துள்ள அரசாகவும் திகழ்கின்றது.

இலங்கையின் வரலாற்றில் சிறைக்கைதிகள் மீதான படுகொலைகள் என்பது பௌத்த அரசுக்கு ஒரு கைவந்த கலை அதிலும் தமிழ் அரசியல் கைதிகளை படுகொலை செய்வதன் மூலம் இலங்கை அரசு சர்வதேச மனித உரிமைகளை பல தடவைகள் மீறியுள்ளது.

இலங்கை அரசின் ஆதரவுடனேயே 1983ல் வெலிக்கடை போராளிகள் மீதான படுகொலைகள் நடைபெற்றன. இலங்கை அரசின் ஆதரவுடனேயே 1987ல் பதுளையில் சிறைக்ககைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை அரசின் ஆதரவுடனேயே வவுனியா ஜோசப் முகாமில் அடைத்து வைக்கப்பட்ட ரெலோ போராளிகள் 1984ல் கொல்லப்பட்டனர். இலங்கை அரசின் ஆதரவுடனேயே திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் 1983, 1984ம் ஆண்டுகளில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மேற்கூறிய படுகொலைகளைப் போன்றே வவுனியா சிறைக்கைதியின் படுகொலையும் இலங்கையில் தமிழ் இனப்படுகொலைகளின் சாட்சியங்களாகும்.

நிரபராதிபதிகள் மீதும் கைதிகளாக உள்ளவர்கள் மீதும் இராணுவ நடவடிக்கை எடுப்பது என்பது சர்வதேச நடைமுறைகளை மனித உரிமைகளை மீறும் செயலாகும். இந்த நடைமுறைகள் இலங்கை அரசுக்கு, மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசுக்கு தெரியாமல் இல்லை, இவற்றிக்கும் மேலாக இன்னுமொரு தடவை வவுனியா சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது இராணுவ ஆயுததாரிகள் கொண்டு தாக்குதல் நடத்தும் மகிந்த அரசு, தமிழ் இன அழிப்பு செய்த அரசு என்பதை உலகிக்கு எடுத்துக்காட்டியதுடன் இலங்கை அரசின் பொலீஸ் இராணுவத்தினர் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு காட்டுமிராண்டிகளை விட மோசமானவர்கள் என்பதற்கு இந்த உதாரணங்களே போதுமானதாகும்.

புத்திசுவாதீனமற்ற தமிழ் இளைஞன் மீதான தாக்குதல்கள், யுத்தக் கைதிகளை கைகளை பின்னால் கட்டிப்போட்டு கொலை செய்தல், சரணடைந்தவர்களை கத்தியால் வெட்டி கொலை செய்தல், தாமே கொலை செய்த பிணங்களின் மீது வற்புணர்வுகளை வெளிப்படுத்தல், கொலை செய்த உடல்களை காட்சிப் பொருளாக்குதல், கொலை செய்யப்பட்ட பெண்களின் உள்ளாடைகளை அகற்றி உடல் அங்கங்களை பார்த்து ரசித்தல், இறந்த மனித உடல்களுக்கு மரியாதை செலுத்த தவறி சாதாரண மனிதர்கள் போன்று அடித்தல், உதைத்தல் போன்ற கேவலமான நடைமுறைகளுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

கடந்தகால யுத்த நடைமுறைகளை மீறிய எந்தவொரு காவல் படையினர் மீதோ அன்றி கடந்த 60 வருடமாக தமிழர்கள் மீதான தாக்கலுக்கு காரணமான ஒரு குற்றவாளியைக் கூட நீதிமன்றத்துக்கு கொண்டு வரமுடியாத அரசும் நீதித்துறையும், புலிகளை வெற்றி பெற்ற அரசும் அதன் இயந்திரங்களும் என்ற பெயரை பெற தகுதியடையதா? அல்லது அரசு, மக்கள் அரசு, நீதியான அரசு, பௌத்த அகிம்சா, காருண்ய சிந்தனைவாத அரசு, இலங்கையில் சிறுபான்மையினர்க்கான நீதி வழங்கும் அரசு, மக்களால் தெரிவு செய்ப்பட்ட அரசு என்றெல்லாம் உலகம் நம்ப வேண்டுமா?

அப்பாவி தமிழர்களை பட்டினி போட்டும், குண்டுகளை பொழிந்தும் தமிழ் இனப்படுகொலை செய்த அரசு அதன் ஒரு படி மேலே போய் இன்று சிறைக்கைதிகளையும் கொலை செய்துள்ளது சிறையில் அடைத்து வைப்பட்டிருக்கும் கைதிகள் மீது மலம் வீசும் அரச நிர்வாகம், தமிழ் மக்கள், சாதாரண அப்பாவி குழந்தைகள், பெண்கள் என்று பாராமல் தமிழ் இனப்படுகொலையை செய்யத் தயங்காது என்பதற்கு இதைவிட வேறு எந்த உதாரணங்களும் தேவையில்லை.
போரின் வெற்றியை, தமிழ் மக்களின் இனப்படுகொலையில் பிணக்குவியல்களின் மீது தனது வெற்றியை கொண்டாடும் பௌத்த தர்ம அரசு தமிழர்களை தமிழ் பேசும் மக்களை அடக்கி ஆள்வதையே தனது குறிக்கோளாக கொண்டு செயற்படுகின்றது தனது தொடரும் இன அடக்குமுறையின் அடையாளமாகவே தமிழ் சிறைக்கைதிகள் மீதான துப்பாக்கிப் பிரயோகமும் படுகொலையும் சாட்சியமளித்து நிற்கின்றது.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் தமிழர்கள் தமது உரிமைக்காக தமது வாழ்வாதார அடிப்படை நிலைகளை உயர்த்துவதற்காக எந்த ஒரு குரலையும் உயர்த்திடக்கூடாது என்பதில் அக்கறையுடன் செயற்படும் இலங்கை அரசும் அதன் இராணுவமும், தமிழர்கள் மீதான அடக்கு முறையின் கேவலத்தை, கொலை வெறித்தனத்தை, சிறையில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மீது காட்டி தமிழ் இனத்தின் மீதான கொலை வெறித்தனத்தின் சாட்சியமாக தன்னை வெளிப்படுத்தியுள்ளது. தமிழ் மக்களை அடக்கி வைத்துள்ளது.

சிறையில் அடைத்து வைத்திருந்த தமிழ் அரசியல் கைதிகளின் மீதான கொலை வெறித்தனத்தை ஆதரிக்கும் சிங்கள பௌத்த இனவாதிகள் இலங்கையில் பௌத்த பயங்கரவாதத்தின் அடிப்படைகளுக்கு வித்திட்டுள்ளார்கள் என்றே சர்வதேசமும் சர்வதேச பௌத்த விரும்பிகளும் கருத ஆரம்பித்துள்ளது. இது கடந்த காலங்களில் புத்தரின் சிலைகளை பாவித்து தமிழ் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் பௌத்த மேலாதிக்கத்தின், பௌத்த பயங்கரவாத்தின் அடுத்த நிலையாகும்.

இஸ்லாமிய வணக்கத்தலங்கள் மீதான தாக்குதல்கள் இஸ்லாமிய நிலையங்களின் மீதான கண்காணிப்புக்களும், இஸ்லாமிய கலாச்சார நிலையங்களின் மீதான கண்காணிப்புக்களும் இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகளில் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தினையே வெளிப்படுத்தி இலங்கையில் புதியதொரு சிறுபான்மையினர் அழிப்புக்கு இன்று இலங்கை அரசு வித்திட்டுள்ளது என்பதே, இலங்கை சிறுபான்மையினரின் கருத்தாக உருவெடுத்துள்ளது. கடந்த இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாத இன்னுமொரு புதிய பௌத்த சிங்கள பயங்கரவாதத்தை இன்றைய இலங்கை அரசு கட்டியெழுப்புகின்றது என்பதை இது பறை சாற்றுகின்றது. இவர்களின் கபடத்தனம் இலங்கையில் இன ஒற்றுமையை ஏற்படுத்த தடையாகவே இருக்கும்.

வவுனியா சிறைக் கைதிகளில் பலர் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களும் புலிகளின் இறுதிக்காலத்தில் கட்டாயமாக போரில் ஈடுபடுத்தப்பட்டவர்களுமாகும். இவர்களின் நியாயத்தை வெளிப்படுத்தி இவர்களின் விடுதலையில் அக்கறையற்று வெறுமனே அறிக்கைகள் விடும் போராட்டத்தை தவிர்த்து பேர்க் காலங்களில் காணாமல் போனோர்கள், கைது செய்யப்பட்டு விசாரணைக்கென்று எடுத்துச்செல்லப்பட்வர்கள் பின்னர் காணாமல் போனவர்கள், புனர்வாழ்வு என்று விடுவிக்கப்பட்டு காணாமல் போனவர்கள், என பல ஆயிரக்கணக்கான தமிழர்களின் நிலையையும் அவர்களின் குடும்பத்தினரின் நிலைமைகளையும் பற்றி சிந்திக்க வேண்டும் செயற்படல் வேண்டும்,காணாமல் போனவர்களின் குடும்பங்களின் வாழ்வியல் அவஸ்த்தைகள் பற்றி தீவிர அக்கறை செலுத்த வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தமிழ் அரசியல் கைதியின் கொலையில் குளிர்காய்ந்து விடாமல் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அக்கறையுடன் தமிழ் அரசியல் தலைவர்கள் செயற்படல் வேண்டும் சிறைக்கைதிகள் தமது விடுதலைக்காக தமது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும்போது அவர்களின் போராட்டங்களை வலுப்படுத்தி ஒத்தாசைகள் வழங்கிடல் வேண்டும் மீண்டும் ஒரு நிமலரூபனின் நிலை உருவாகிவிட அனுமதிக்க கூடாது.

வவுனியா சிறைக்கைதிகள் போன்று நாட்டின் பல பாகங்களிலும் பல தமிழ் இளைஞர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் இன்று அரசின் முக்கிய உறுப்பினர்களாகவும் அரசுடன் உறவாடுபவர்களாகவும் தமிழ்த் தலைவர்கள் கடந்த 3 வருடங்களாக இவ்விளைஞர்களின் விடுதலையில் அக்கறை கொள்ளாது தமது சொந்த நலன்களில் அக்கறை கொண்டிருந்ததன் விளைவுகளே நிமலரூபனின் கொலையாகும்.

தமிழ் தலைவர்கள் யுத்தம் முடிவடைந்து 3 வருடங்களாகிய பின்னரும் புலிகளின் வரலாறுகள் என்ற சாட்டுக்களை சொல்லிக்கொண்டு முன்னாள் போராளிகளின் வாழ்வியலில் அவர்களது விடுதலையில் அக்கறையற்று இருந்துள்ளனர், தமிழ் மக்களின் தலைமைகள் என்று கூறிக்கொள்ளும் ரிஎன்ஏ, ஈபிடிபி யினரும் யுத்தம் முடிவடைந்த 3 வருடங்களாக நீதி விசாரணைகள் இன்றியிருக்கும் அரசியல் கைதிகளின் நியாயத்தில் அக்கறையற்று இருக்கிறார்கள் அடுத்த தேர்தல் காலத்தின் பிரச்சாரத்திற்காக காத்திருக்கிறார்கள் என்றே பலரும் கருதுகிறார்கள். தமது பாராளுமன்ற ஆசனம் பெறுவதற்கான சிந்தனையுடனேயே இருக்கிறார்கள் என்ற கருத்து தமிழ் மக்களிடையே எழுந்துள்ளது.

இலங்கையில் தமிழர்கள் நலன்சார்ந்த முன்னெடுப்புகளிற்கு அரசு முட்டுக்கட்டை போடுகின்றது, இலங்கை பாராளுமன்றத்திலிருந்து செயற்பட முடியாது எனின் இவர்கள், சர்வதேசத்தின் தலையீட்டை இலங்கையிலிருந்தே கோர வேண்டும். பாராளுமன்றத்தில் கோர வேண்டும். தமிழ் மக்களுக்கான சாத்வீக போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்.

அடுத்த தமிழ் அரசியல் கைதி கொல்லப்படும்வரை காத்திராமல் தமிழ் இளைஞர்களின் விடுதலைக்காக அடுத்த நடவடிக்கை என்ன என்பதை தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் இதற்கான பதிலை ரிஎன்ஏயும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், இன்று கைதிகளாக இருக்கும் முன்னாள் புலிப் போராளிகளின் கட்டளைத்தளபதியாக இருந்த அமைச்சர் கருணாவும் தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

இன்று கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதியின் கட்டளைத்தளபதியாக இருந்த அமைச்சர் கருணா அரச இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களை இன்றுவரையில் கண்டிக்காது அரசுடன் இணைந்து தமது முன்னாள் இயக்க போராளிகளின் கொலைகளை வேடிக்கை பார்த்திருப்பது வெட்கத்துக்குரியதாகும்.

இன்றும் சிறைகளில் வாடும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சமூகத்தின் தாழ்ந்த பொருளாதார வசதிகளுடன் வாழ்ந்தவர்கள், போர்முடிவடைந்து மூன்று வருடங்களாகியும் தமது குடும்பங்கள் உறவுகளை கண்டிராதவர்களாகவும் தமது மறுவாழ்வு பற்றி நினைத்து பார்க்கக் கூட முடியாது உள்ளனர். இந்த அப்பாவி முன்னாள் போராளிகளின் மனிதாபிமானம் பற்றி இன்றைய அரசின் அமைச்சர்கள் சற்று நிதானமாக செயற்ப்பட வேண்டும் என்றே பலரும் விரும்புகிறார்கள்.

அகிம்சை, கொல்லாமை என எடுத்துக்கூறும் பௌத்தத்தின் துணையுடன் தமது கொலை வெறித்தனத்தை வெற்றிவிழா கொண்டாடியவர்களும், இன வெறியை, தமிழ் விரோதத்தை வளர்க்கும் மனிதாபிமானமற்ற தலைவர்களே இன்றும் இலங்கையின் தலைவர்களாக உள்ளார்கள். இவர்களில் எந்தவித மாற்றங்களும் ஏற்படவில்லை என்பதற்கு வவுனியா தமிழ் சிறைக் கைதியின் கொலை மேலும் ஒரு உதாரணமாக உள்ளது.

வவுனியா சிறையில் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன் நிமலரூபன் அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன். அவரது உறவினர்கள் குடும்பத்தினர்க்கு எனது அனுதாபங்களையும் ஆறுதல்களையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

(பதுளை பிந்துலுவவில் இந்த கைதிகள் கொல்லப்பட முன்பு காவலில் இருந்த இராணுவத்தினர் விலகிக்கொண்ட பின்னர் பிந்துலுவ இராணுவ முகாமில் 2000ம் ஆண்டு அக்டோபர் 24ம் திகதி 26 கைதிகள் கொல்ப்பட்டனர் பொது மக்கள் முன்பாக கொல்லப்பட்டனர்.)

sothi@btinternet.com

இது தொடர்பான வேறு பதிவுகள்

  • வேறு பதிவுகள் இல்லை!
உங்கள் கருத்து
  1. kanthasami on July 8, 2012 9:13 am

    சோதிலிங்கத்தின் ஆவேசம் நியாயமானது.ஆனால் இதற்கு பெளத்த மேலாதிக்க சிந்தனையே காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் தமிழ் சிறைக் கைதிகளை மட்டுமல்ல முன்பு ஜேவிபி கைதிகளுக்கும் இதுதான் நடந்தது.அவர்கள் சிங்கள பெளத்த சிறைக்கைதிகளாக இருந்தும்கூட அவர்களையும் இவ்வாறே அன்றைய அரசு நடத்தியதை நாம் மறக்கக்கூடாது. இதில் வேடிக்கை என்னவெனில் அன்று அதனை மனிதவிரோதம் என்று ஜ.நா மன்றுக்கு எடுத்துச்சென்ற அதே மகிந்த ராஜபக்சதான் இன்று இந்த மனித விரோத செயல்களை செய்கிறார்.

    பெளத்த அரசு மட்டுமல்ல எல்லா வித அரசுகளும் இதனையே செய்கின்றன.இந்தியாவில் தமிழ்நாட்டில் அதுவும் தமிழ்அரசினால் சிறப்புமுகாம் என்றும் சிறையில் தமிழ் அகதிகளுக்கு இதே கொடுமைகள் நிகழ்த்தப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    பிரச்சனைகளை சரியாக நன்றாக எடுத்துக் கூறிய சோதிலிங்கம் அவர்கள் அதற்கான தீர்வை சரியாக சொல்ல தவறிவிட்டார் என்பதே என் கருத்தாகும். அதுவும் ரிஎன்ஏ மற்றும் அமைச்சர்கள் டக்லஸ் கருணா போன்றோரை விழித்தல் என்பது அறியாமையே ஆகும்.

    நான் நினைக்கிறேன் ” இந்த மனித விரோத செயல்கள் உலக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும். குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் இதற்கு ஆதரவான சக்திகளை திரட்ட வேண்டும். இதற்காக சோதிலிங்கம் விரும்பினால் அனைவரும் பங்குபற்றக்கூடிய ஒரு ஆர்ப்பாட்டத்தை இலங்கை தூதுவராலயம் முன்பு நடத்தலாம். சர்வதேச மன்னிப்பு சபையிடம் மகஜர் வழங்கலாம். சர்வதே மனித உரிமை சக்திகளை உள்ளடக்கி ஒரு கூட்டம் நடத்தலாம்.ஒரு ஊடகவியலாளன் என்ற முறையில் தேசம்நெற் “பூனைக்கு மணி கட்டலாம்” என்பது என் கருத்தும் விருப்பமும் ஆகும்.


  2. karu jeyasinhe on July 8, 2012 9:21 pm

    -http://www.youtube.com/watch?v=LgbQN9WX-sw
    SIRASA 04072012 7 00PM P 1


  3. மல்லையூரான் on July 9, 2012 1:17 am

    இந்த படுகொலைக்கு இனவாதம் பூசி ஒரு கட்சி தொடங்கிற றேஞ்சில் கட்டுரை வரைந்த சோதிலிங்கம் உங்களிடம் இரண்டு கேள்விகள். வெள்ளவத்தையில் ஒரு மனநிலை சரியல்லாத ஒரு தமிழ் இளைஞரை அடித்து கொன்ற சிங்கள பொலீஸ் அதிகாரியை உங்களுக்கு தெரியுமா? அவரும் இந்த நிமலரூபன் போல் சிறையில் மாரடைப்பில் திடீரென இறந்தவர். தெரியாத ஒரு வியடம் இவரும் சிறையில் தாக்கப்பட்டே இறந்தார். தெற்கில் அண்மையில் ஒரு சிங்கள இளைஞர் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டில் பிடிக்கப்பட்டார். படு மோசமாக அதிகாரிகளால் தாக்கப்பட்டு சிறையில் மரணமான இந்த கைதி பற்றி யாரும் அக்கறைப்படவில்லை. ஆனால் இன்று முன்னாள் புலி ஒருவர் சிறையில் இறந்ததற்காக நீங்கள் பொங்கி எழுந்து பந்தி பந்தியாக எழுதி தள்ளியுள்ளீர்கள். அன்று அமிர் அண்ணாவும் இப்படித்தான் பொங்கி எழுந்தார். சரி எனது முதலாவது கேள்வி தெற்கில் இன்று மிக மோசமாக நடைபெறும் நான் சென்ன கொலைகள் குறிப்பாக சிறையில் நடந்த படுகொலைக்கு நீங்கள் பொங்கி எழாத காரணம் என்ன? அது தமிழ் ரத்தம் இல்லை என்பதாலா? இரண்டாவது கேள்வி.. இந்த நிமலரூபனின் இந்த தாக்குதலுக்கான அத்திவாரம் பற்றி நீங்கள் கொஞ்சம் கூட கூறாதது ஏன்? குறிப்பாக சிறை அதிகாரிகளை பயணக்கைதிகளாக பிடித்து பல மாதகாலம் தம் பிடியில் வைத்திருக்க முனைந்த நோக்கம் அல்லது அதன் தேவை பற்றி நீங்கள் மூச்சுக் கூட காட்ட மறந்தது ஏன்? விடை தாருங்கள் மீள விவாதிப்போம்!


  4. thurai on July 9, 2012 5:05 pm

    //முதலாவது கேள்வி தெற்கில் இன்று மிக மோசமாக நடைபெறும் நான் சென்ன கொலைகள் குறிப்பாக சிறையில் நடந்த படுகொலைக்கு நீங்கள் பொங்கி எழாத காரணம் என்ன?//மல்லையூரான்.

    சிந்திக்கவைக்கும் கேள்வி மட்டுமல்ல, தமிழர் யாவரும் தெற்கில் வாழும் சகல இனமக்களின் பிரச்சினைகளிலும் அக்கறை கொள்வதன் மூலம்தான் இன ஒற்றுமைக்கும் தமிழரின் பிரச்சினைகளிற்கு தீர்வுகாணும் வழிகளிற்கும் வித்திடமுடியும்.-துரை


  5. mao on July 9, 2012 9:04 pm

    இதை நாம் முழுமையாக ஆதரிக்கிறோம். அதுமட்டுமல்ல…

    வடகிழக்கு மகாணங்களுக்கு மட்டுமல்ல இலங்கையிலுள்ள சகல மகாணங்களுக்கும் மகாணங்களுக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

    இதுவே இனமுரண்பாடுகளையும் லஞ்சம் மோசடிகளை முழுமையாக இல்லாவிட்டாலும் குறைப்பதற்கான முதல்முன் முயற்சியாகவும் இருக்க முடியும். இதுவொரு ஆரம்பமாகக் கொள்ளலாம்.

    இல்லையேல் இலங்கைலுள்ள பிரச்சனை தமிழன்-சிங்களவனுக்குமுள்ள பிரச்சனையாக்கி வளர்த்துக் கொண்டு போக நிறையவே அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் இரு பகுதிலும்.


  6. BC on July 10, 2012 3:34 am

    மல்லையூரானின் கேள்விகளில் உள்ள நியாயங்கள் ஆணித்தரமானவை.


  7. Rohan on July 10, 2012 9:03 am

    //மல்லையூரானின் கேள்விகளில் உள்ள நியாயங்கள் ஆணித்தரமானவை.//

    இது உட்பட?

    /இந்த நிமலரூபன் போல் சிறையில் மாரடைப்பில் திடீரென இறந்தவர். /

    மாரடைப்பு வரும்போது கால், கை முறியும்;நெஞ்சிலும் தலையிலும் உடைவுகள் ஏற்படும் என்று எனக்குத் தெரியாது போயிற்று. இவ்வாறு ஆணித்தரமான அறிவூட்டலைச் செய்வதற்கு ஆள் இல்லாது தேசம் திணறிக் கொண்டிருக்கும் போது விடிவெள்ளியாக வந்திருக்கும் மல்லையூரானின் வருகைக்காக ஆண்டவனுக்கு நன்றியுடையேன்

    அதற்கிடையில் ஒத்து ஊதுவதற்கும் வேறு ஆட்கள் முளைத்து விட்டார்கள். பலே பலே.

    நிமலரூபனும் திடீரென்று இறந்திருக்கிறார் என்ற செய்தியையும் நாம் அவசரம் பரப்ப வேண்டும். ஏதோ மருத்துவ உதவி இல்லாது இறந்துவிட்டதாக அல்லவா அவரது தாய் பொய்ப் பிரசாரம் செய்து திரிகிறார்.

    //தமிழர் யாவரும் தெற்கில் வாழும் சகல இனமக்களின் பிரச்சினைகளிலும் அக்கறை கொள்வதன் மூலம்தான் இன ஒற்றுமைக்கும் தமிழரின் பிரச்சினைகளிற்கு தீர்வுகாணும் வழிகளிற்கும் வித்திடமுடியும்//
    அதிகம் அவசரப்பட வேண்டாம் – தெற்கில் வாழும் சகல இனமக்களும் அரசால் தமிழர்களின் காணிகளில் காட்டிக் கொடுப்போர் – கூட்டிக் கொடுப்போர் – அவர்களது ஜால்ராக்கள் – எல்லோரினதும் ஆதரவுடனும் குடிவைக்கப்பட்டு விடுவார்கள். நாங்கள் வடக்கில் வைத்தே அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கலாம்.

    அது சரி – துரை ஏதோ “தமிழீழத்தில் செய்ய முடியாத, ‘எமது சாதியும் உயர்ந்த சாதிதான்’ என்ற வாதத்தை மேற்குலகில் செய்ய வேண்டும்” என்று பிரசாரம் செய்ததைப் பார்த்தேன். தமிழீழம் என்றால் என்ன என்று துரை சொன்னால் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.


  8. thurai on July 10, 2012 3:02 pm

    //அது சரி – துரை ஏதோ “தமிழீழத்தில் செய்ய முடியாத, ‘எமது சாதியும் உயர்ந்த சாதிதான்’ என்ற வாதத்தை மேற்குலகில் செய்ய வேண்டும்” என்று பிரசாரம் செய்ததைப் பார்த்தேன். தமிழீழம் என்றால் என்ன என்று துரை சொன்னால் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.//றோகன்

    தன் சாதியே உயர்வாந்தென்று கூறும் ஒருவன் முன் தமிழரின் எல்லா சாதிக்காரரும் தானும் குறைந்தவரல்ல என மேற்குலகில் வாழ்ந்து காட்ட வேண்டும். அது நடைபெறுகின்றது.

    தமிழீழமென்பது தமிழரில் ஒரு பகுதியினரை தாழ்த்தி தாமே மேலானவர்கள், தமிழரை ஆள தாமே பரம்பரை பரம்பரையாக தகுதியானவர்கள் என்போர் தமிழினத்தை தம் வசம் வைத்திருக்க கூறி வீசிய மாயவலை.-துரை


  9. விமலநாதன் on July 10, 2012 4:58 pm

    றோகன் மல்லையூரான் நக்கலாக தான் மாரடைப்பு என்று எழுதியுள்ளார். நீங்கள் உண்மையிலேயே அதை மாரடைப்பாக்கி விட்டீர்கள் போல் தெரிகிறது!


  10. T Sothilingam on July 11, 2012 10:59 pm

    கருத்துக்கள் பதிவு செய்தவர்களுக்கு நன்றிகள்

    கட்டுரை எழுதுவது எனது உணர்வுகளுக்கு உட்பட்டுத்தான் எழுதியுள்ளேன். சிறை சம்பந்தப்பட்ட விடயங்களில் எனது பார்வையை எழுதியுள்ளேன். இதில் நான் அரசுக்கு எதிராக எழுதியதற்காக நான் இனவாதம் பூசி ஒரு கட்சி தொடங்குகின்ற …… என்ற கருத்து எனக்கு ஏற்புடையதோ என்று திரும்ப யோசிக்கவும்.

    சோதிலிங்கம் கட்சிகள் அற்றவன். கட்சிகளை உருவாக்க வேண்டும் என்றால் நாட்டில் இருந்திருக்க வேண்டும். காலம் இயங்கிவிட்டது அது சோதிலிங்கத்தினால் இனிமேல் இயலாது. இருக்கும் கட்சிகளைக் கொண்டு என்ன செய்யலாம் என்று தமிழ் மக்களைப் போலவே தான் சிந்திப்பது சரியானது அல்லது புரட்சிகர சக்திகளுக்கு பின்னால் அணிதிரளுவதைவிட வேறு என்ன!

    நான் ஏற்கனவே இரண்டு கட்டுரைகள் வெள்ளவத்தை இளைஞன் மற்றும் சிங்கள கைதிகளை கொலை செய்தது பற்றியும் எழுதியுள்ளேன். ஏன் என்னை ஏதோ இனவாத அரசியலில் குதித்து விட்டான் என்று இழுக்கிறீர்கள். இப்படி இழுப்பதன் மூலம் இனிமேல் அரசுக்கு எதிராக யாரும் எழுதக்கூடாது என்ற பாணியில் கூறுகின்றீர்கள்.

    நாம் சிறையில் இருக்கும்போது உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தினோம். முதல் பிரிவு 30 நாள் உண்ணாவிரதிகள். அடுத்த பிரிவு 15 நாள் உண்ணாவிரதிகள். இரண்டாவது பிரிவில் சோதிலிங்கமும் அடங்குவார். எமது அன்றைய போராட்டத்திற்கு எம்மால் தெரிவு செய்யப்பட்டு தலைமை தாங்கிய குழுவில் இருந்தோர் லண்டனில் இன்றும் உள்ளனர்.

    அன்று எமது போராட்டத்தை குழப்ப வேண்டும் என்று எத்தனையோ குழப்பங்களை சிறைச்சாலை நிர்வாகம் எடுத்திருந்தது. உண்ணாவிரதத்துடன் இணைந்ததாக சத்தியாக்கிரக போராட்டமும் நடாத்தினோர்கள் மீது சிறைச்சாலை நிர்வாகம் சிங்கள கைதிகளை ஏவிவிட்டு எமது பிரிவுக்கு இருந்த சுவரை உடைக்க ஆரம்பித்து விட்டார்கள். எமது தோழர்கள் அடிபட தொடங்க வேண்டும் என்று நிற்கிறார்கள். பாதர் சிங்கராயர் தனது கட்டிலின் காலை முறித்து எமது கைகளில் மூன்றையும் தான் தனது கையில் ஒன்றுமாக முன்னால் நின்றார். சக தோழர்கள் எமக்கு குளுக்கோஸ் தந்து உசார்ப்படுத்தினார்கள் எழுந்து நடக்க கூடியவாறு. சிங்கள சிறைக்கைதிகளின் பக்கத்திலிருந்து கூரை ஓடுகள் எமது பக்கம் பறந்து வந்து கொண்டிருந்தது. ஆனால் எமது போராட்ட நிர்வாகம் திருப்பி இப்போது தாக்க கூடாது என்று பதிலுக்கு எறிய தடைவிதித்தது.

    ஆனால் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இராணுவம் எம்மீது தான் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தது. சிங்கள கைதிகளை கலைக்கவும் இல்லை.
    நண்பர்களே இங்கு யாரை குறை கூற வேண்டும் இராணுவத்தினரையா? கைதிகளையா? அரசையா? நாம் 100 சதுர மீற்றருக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் எம்மீதோ அல்லது வவுனியா கைதிகள் மீதோ ஏன் துப்பாக்கி பிரயோகம் தேவை?

    தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை ஒன்று வழங்குவதுதான் இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு. இலங்கையில் தமிழ் சிங்கள மக்கள் ஒரே கலாச்சார, இனத்துவ அடிப்படையாக கொண்டவர்கள் ஜக்கியப்பட்டு வாழ மாறி மாறி அரசுக்கு வரும் பெரும் கட்சிகள் இடம் கொடுக்க மாட்டார்கள், அதற்காக சிங்கள தமிழ் மொழி பேசும் மக்களிடையே உறவுகளை ஏற்படுத்தும் பல பாரிய முயற்சிகள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். எப்படி என்பது தான் பெரிய கேள்வி? அரசு இடம் கொடுக்குமா? முகாமிலிருந்து தமது இடங்களுக்கு குடியேறப் போன மக்களை திரும்ப முகாமிற்கு இழுத்து வரும் அரசு, தனது திட்டமிட்ட பெளத்த சிங்கள குடியேற்றங்களிலேயே அக்கறை காட்டுகின்றது. இந்து இஸ்லாமிய வணக்கத்தலங்களை இடித்து தள்ளுகின்றது. இது பெளத்த மேலாதிக்க வாதிகள் அரசுடன் இணைந்து தமது மேலாதிக்கத்தை செயற்படுத்துவதாக அர்த்தப்பட முடியாதா?

    தேசம்நெற் பல முரண்பட்ட கருத்தாளர்கள் கருத்துக்களை பகிர இடம் கொடுக்கும் தளம். அது கட்சி கட்டாது. அரசியல் அனுபவம் வாய்ந்த பலர் இங்கு கருத்து எழுதுகிறார்கள். அவர்களில் பலருக்கு கட்சிகளின் பின்னணி உண்டு. அவர்களின் கட்சிகள் மணிகட்டினால் சோதிலிங்கம் வருவேன்.

    நாலு சுவருக்குள் இருப்பவர்களுக்கு துப்பாக்கி கண்ணீர் புகைக்குண்டுகள் யுத்த முஸ்தீபு செய்யும் அரசு பற்றி நான் எழுத, கைதிகள் என்ன செய்தார்கள் என்று விவாதிக்க வரும் முன்பு ஒருமுறை சிந்தித்து விட்டு கருத்து எழுதுவதே சிறந்தது. கைதிகள் என்னதான் செய்தாலும் நாலு சுவருக்குள் தான் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட்டீர்கள்.

    கைதிகள் ஏற்கனவே அரசினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதியிலிருந்தே போராட்டத்தை தொடங்கினார்கள்.

    சோதிலிங்கம் கற்பனையில் அல்ல சிறைக்கைதிகளின் உண்மை நிலவரம் தெரிந்துதான் எழுதினேன். இச் சிறைக் கைதிகள் தொடர்பில் இன்றைய அரசில் அங்கம் வகிக்கும் முன்னாள் போராளிகளின் அடுத்த நடவடிக்கை என்ன? வவனியா சிறையிலிருக்கும் முன்னாள் போராளிகளை விடுவிக்க, இந்த அரசுடன் அங்கம் வகிக்கும் முன்னாள் போராளிகளே வழிகாட்டுவார்களா?? அரசு இவர்கள் மீது நீதியாக செயற்படுமா??

    சிறைக்கைதிகள் தொடர்பாக என்ன செய்ய உள்ளோம் என்று திட்டவட்டமாக அரசு அறிவித்து அதை செயற்படுத்த வேண்டும். அந்த முன்னாள் போராளிகள் தாமும் தமது குடும்பத்துடன் வாழ வேண்டுமே! (இப்படி ஏமாற்றியதன் விளைவே இந்த வவனியா போராட்டம்)
    கருத்து எழுதிய நண்பர்களே இந்த விடயத்தில் நான் சோதிலிங்கம் யாருடன் யார் பக்கம் நிற்க வேண்டும்.?.
    இந்த அரசு பல தவறான நடத்தைகளை சிங்கள மக்களுக்கும் செய்துள்ளது, செய்கிறது. நான் இங்கு எனது மொழி பேசும் நிமலரூபனுக்காக எழுதுவது தவறா? எப்படி தவறு என்று கருத்தை பகிருங்கள்? நிமலரூபன் உள்ளே இருந்து கொண்டு அங்குள்ள நிலைமைகளினாலேயே பாதிக்கப்பட்டு போராடுகின்றான்.
    போராட்டம் என்பது என்ன? போராட்டத்தின் அரத்தம் என்ன? அதையே தான் நிமலரூபனும் செய்திருக்கிறான். இதையே நானும் செய்தேன். தற்செயலாக நான் உயிர்வாழ்கிறேன். அவன் உயிர்வாழவில்லை. யார்பக்கம் யார் நிற்பது? எது சரி? சிறையில் போராடும் போராளிகள் பணம் பலம் இருப்பவர்கள் என்றால் அவர்கள் விடுதலையாகியிருப்பார்கள் என்பது உறுதி ? நாம் யார் பக்கம்?
    அடித்து உதைத்து கொண்டு போகும் கைதிகளை திரும்பவும் அடித்து உதைத்து முகத்தில் துப்பி மலம் எறிந்து காலில் விழுந்து கும்பிட சொல்லி தலையில் கட்டையால் அடித்து. என்ன இது? நிமலரூபனின் தவறா? காலில் விழுந்து வணங்கும் அடிமைப்படுத்தும் குணாம்சம் இன்றும் பலமாக சிங்கள பெளத்தர்களிடையே உள்ளது? (உதாரணமாக கிழக்கு மாகாண அமைச்சர் பதவி வழங்க முன்பு கண்டி தலதா மாளிகையில் பெளத்த மதகுருவின் காலில் பிள்ளையான் விழுந்து வணங்கினார், வன்னியில் ஒரு பாடசாலை மாணவன் அமைச்சர் காலில் விழுந்து வணங்க மறுத்தான். வடக்கில் இராணுவத்தினர் தமது காலில் விழுந்து வணங்க சொல்லி பாடசாலை பிள்ளைகளை கேட்கிறார்கள்) இப்போ சிறைச்சாலைகளிலும் நடக்கிறது.

    நான் சிறையில் இருந்து இடம் மாற்றம் செய்து தங்காலை சிறைக்கு எம்மை கொண்டு போனபோது உள்ளே போனதும் ஒவ்வொருவருக்கும் அடிபோட்டுத்தான் உள்ளே தள்ளுவார்கள் காரணம் எம்மை அடக்கி வைத்திருப்பதற்காகவே. இது இலங்கை சிறைச்சாலைகளின் நடத்தை. இன்றும் இலங்கை சிறைச்சாலைகள் அடிமைகள் காலத்து பண்புடனே இருக்கிறது. நாம் தங்காலை சிறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு போனபோது எம்மிடையே இருந்த குழுவின் தலைவராக இருந்த காதர் மாஸ்டர் முதலாவதாதக போய் அங்குள்ள சிறைக்காவலர்களுடன் பிரச்சினைப்பட்டு பின்னர் ஏதோ தந்திரோபாயமாக பேசி பின்னால் வந்த பலருக்கு அடிவிழாமல் பார்த்துக் கொண்டார்.
    இந்த தங்காலை சிறையில் ரஞ்சன் என்ற ரெலோ தோழர் அடித்து கொல்லப்பட்டிருந்தார்.
    இந்த தங்காலை சிறைச்சாலையில் நாம் இருந்தகாலத்தில் ஜேவிபி சிங்கள கைதிகள் இருந்தார்கள் அவர்கள் மீதும் இப்படியே பல தாக்குதல்களை சிறைக்காவலர்கள் நடாத்தினார்கள்.

    //இன்று முன்னாள் புலி ஒருவர் சிறையில் இறந்ததற்காக நீங்கள் பொங்கி எழுந்து…….தெற்கில் மோசமான குறிப்பாக சிறையில் நடந்த படுகொலைக்கு நீங்கள் பொங்கி எழாத காரணம் என்ன? // மல்லையூரான்
    பொங்கினதை நீங்கள் தேசத்தில் காணலாம்.
    கட்டுரை எழுதியிருந்தேன் தமிழன் (உறவு) என்பதற்காகவும் எழுதுகின்றேன். நீங்களும் தமிழன் என்பதாலேயே இங்கே பதில் எழுதுகிறேன்.

    அமிர்தலிங்கத்திற்கு மக்கள் வாக்களித்தனர். அவர் பாராளுமன்ற உறுப்பினரானார். அவர் மீது விமர்சனம் என்றால் உண்மை முகத்தடன் விமர்சியுங்கள்.

    //இந்த தாக்க்குதலுக்கான அத்திவாரம் பற்றி நீங்கள் கொஞசம் கூட கூறாததது ஏன் குறிழப்பாக சிறை அதிகாரிகளை பணயக்ககைதிகளாக விடைதாருங்கள் மீள விவாதிப்போம்// – மல்லையூரான்.
    அதுதான் போராட்டம் என்று அவர்களே சொல்லுகிறார்கள். வாழ்வுக்கான சந்தர்ப்பம் இல்லை என்றே கருதுகிறார்கள். இனிமேலும் பல நடக்கலாம் என எதிர்பார்க்கிறேன்.

    மல்லையூரான், அரச அதரவுடன் நடைபெறும் கொலைகளை ஆதரிப்பது சரியா? அவர்கள் ஏன் சிறையில் இருக்கிறார்கள்?? நூற்றுக்கணக்கான பொலீசாரை கொன்றவர்களுக்கு அமைச்சர் பதவி, சாதாரணமானவர்களுக்கு வழக்கு விசாரணைகள் கூட இல்லையா?.

    இன்றைய தலைவர் மகிந்தா, புலிகளின் போராளிகள் தவறாக வழிகாட்டப்பட்டே போராட்டங்களை செய்தார்கள் என்றும்; அவர்களுக்கு புனர்வாழ்வு அழிப்பேன்- அவர்களின் தலைவர் தான்தான் என்பதை நிரூபிப்பேன்- என்றெல்லாம் கூறியதுடன்; 1 வருடத்தில் முழுப்பேர்களையும் புனர்வாழ்வழித்து விடுதலை செய்யப்படுவார்கள் என்றெல்லாம் கூறியதுடன்; தான் புத்தமதத்தின் அடையாளமாக இருப்பதால் இது தன்னால் முடியும் என்றும் கூறிவிட்டு – இன்று நாலு சுவருக்குள் வைத்து அவர்களை கொலை செய்ததைப்பற்றி விமர்சிக்காது நாலு சுவருக்குள் இருந்தவர்கள் தவறு என்பது எப்படி சரியாகும்?
    தவறாக வழிநடத்தப்பட்டவர்கள் என்று கூறிவிட்டு தானே அவர்களை தவறாக வழிநடத்துவது என்பது??… ஆயுதம் இல்லாமல் இவர்களுடன் பேசியிருக்க முடியாதா?… அவர்களுடன் அரசினால் கூறப்பட்ட கோரிக்கைகளை பற்றி பேசியிருக்க முடியாதா?…
    சிங்கள கைதிகள் கொல்லப்பட்டபோது ஜநா போன மகிந்தா ஏன் இன்று தமிழ் கைதிகளை கொல்ல உத்தரவு? இது தமிழர்கள் என்பதால் தான். தமிழர்களை இப்படித்தான் நடாத்த வேண்டும் என்ற திட்டவட்டமான திட்டத்துடனே நடைபெறுகின்றது, கடந்த 3 வருடத்தில் பல வகை தொகையான உதாரணங்கள் உண்டு.
    இன்று இலங்கையில் தமிழன் சிங்களவன் பிரச்சனையாகவே அரசு வைத்திருக்கிறது அது தான் பிரச்சனையின் காரணம். தமிழர்கள் என்பதாலேயே சிறையில் இருக்கிறார்கள், கொல்லப்படுகிறார்கள், நிலத்தை விட்டு இரவோடு இரவாக கலைத்துவிடப்படுகிறார்கள்.

    கடந்தகாலம் எல்லோருக்கும் விமர்சனத்துக்குரியது. விமர்சனங்களை உண்மை முகத்துடன் செய்யலாம்


  11. சாந்தன் on July 12, 2012 2:05 am

    //..நண்பர்களே இங்கு யாரை குறை கூற வேண்டும் இராணுவத்தினரையா? கைதிகளையா? அரசையா? …///

    சோதிலிங்கம் ‘புலம்பெயர் தமிழர்’ களை விட்டுவிட்டீர்களே! நியாயமா? இவர்கள் உசுப்பேத்துவது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? கேட்டால் அமெரிக்காவில் ஏன் காங்கிரஸ் பிரதிநிதியை பணயக்கைதியாகப் பிடிக்கவில்லை என்றெல்லாம் முழங்கும் அட்டகாச ”லொஜிக்” பத்திரிகையாள சகோதரர்கள் கண்ணுக்குப்படவில்லையா?


  12. Rohan on July 12, 2012 9:10 am

    //நண்பர்களே இங்கு யாரை குறை கூற வேண்டும் இராணுவத்தினரையா? கைதிகளையா? அரசையா?//

    தேசம்நெற்றில் கேட்கும் கேள்வியா இது? புலிகளை மட்டுமே குறை கூற வேண்டும் என்பதே சரியான விடை.


  13. T Sothilingam on July 12, 2012 4:32 pm

    வவுனியா சிறைச்சாலை படுகொலை பற்றி தோழர் காதர் அவர்களின் கருத்துக்கள்.

    http://youtu.be/yApmo5zYJ6Q

    Condemn the Brutal Killing of the Political Prisoner – NIMALARUBAN

    http://www.youtube.com/watch?v=UJ4VokP6If0&feature=share


  14. சாந்தன் on July 12, 2012 9:21 pm

    சோதிலிங்கம்,
    அஜீவன் புலம்பெயர்தமிழர் உசுப்பேதுறாங்கல் என்கிறார் இந்த் காதர் அவர்களால்தான் பாதுகாப்பு என்கிறார். இந்த 25 நிமிச வீடியோவெல்லாம் வெறும் வேஸ்ற்!
    அஜீவனின் கதையைக்கேட்டால் முடக்குவாதம் மோட்டுத்தன எல்லாம் போகும் அதைவிட்டு வீடியோவைப்பாத்து ரைமை வேஸ்ற் பண்ணாமல் சன் ரிவியில நாடகம் பாத்து உருப்படுங்கோ!!


  15. சாந்தன் on July 12, 2012 9:50 pm

    சும்மா புலம்பெயர் தமிழரின் உசுப்பேத்தல்களால் கொல்லப்பட்ட தமிழரை சொன்னால் இவர் வேறு வந்து தான் சிறைக்குள் இருந்தாராம் குளிக்கவே விடயில்லையாம் வெளியில் நடக்கும் ஒண்டுமே தமக்குத் தெரியாதாம் இருக்கும்போது அவ்வளவு கொடுமையாம் வெளியில துவக்கோட நிக்கிறவனை விட கொதிப்பில் இருந்தவராம். விடுகிறார் கதை!! சிங்களக் கைதியளை மாத்தயா எண்டு கூப்பிடுவாங்களாம், தமிழனுக்கு மரியாதை இல்லையாம். விடுகிறார் கதை. எவ்வளவு மரியாதையாய் மஹிந்தா யாழ்ப்பானத்தில் தமிழில பேசினவர், இங்கிலாந்து காரருக்கு ஓசி ரிக்கற், மட்டின்ரோல் குடுத்தவர். இந்த யாழ்ப்பாணியள் நன்றி கெட்ட ஜென்மங்கள்.
    இந்த மோட்டுக்குடி முடக்குவாத தமிழர் கோஷ்டி யின்ர கதையள விட்டு உருப்பட வழிபாருங்கோ!!


  16. Rohan on July 13, 2012 2:54 am

    //போராட்டம் என்பது என்ன? போராட்டத்தின் அரத்தம் என்ன? அதையே தான் நிமலரூபனும் செய்திருக்கிறான். இதையே நானும் செய்தேன். தற்செயலாக நான் உயிர்வாழ்கிறேன். அவன் உயிர்வாழவில்லை. யார்பக்கம் யார் நிற்பது? எது சரி? சிறையில் போராடும் போராளிகள் பணம் பலம் இருப்பவர்கள் என்றால் அவர்கள் விடுதலையாகியிருப்பார்கள் என்பது உறுதி ? நாம் யார் பக்கம்?//

    உங்கள் அளவு அனுபவிக்காதவன் நான் – ஆனால், அந்த வலியை உணர முடிகிறது, சோதி.

    புலி இருந்த போது புலி – புலி என்று காட்டுக் கூச்சல் பொட்டவர்கள் புலி செத்த பின்னர், செத்த புலி அடிப்பதுடன் ‘மாற்றுக்கருத்துக் கடமை’ தீர்ந்ததாக நினைக்கிறார்கள்.

    சிறையில் போராடும் போரளிகள் என்று சொன்னீர்ர்கள். போகும் போது அப்பாவியாக உள்ளே போனவர்கள் எத்தனை பேர்! அதிக தூரம் போக வேண்டாம்….
    “2005-ம் ஆண்டில் கட்டாருக்கு வேலைக்குச் சென்றிருந்த இந்த இளைஞன் 2007-ம் ஆண்டில் நாட்டுக்குத் திரும்பியிருந்த நிலையில், பின்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து மீண்டும் வெளிநாடு செல்வதற்காக முயன்றபோது அதற்கு புலிகள் அனுமதியளிக்கவில்லை.

    அதன்போது, அவர் விடுதலைப் புலிகளுக்குத் தெரியாமல் கடல்வழியாக இலுப்பைக் கடவையிலிருந்து மன்னார் பகுதிக்குச் சென்றபோது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    ஒருமாதத்தின் பின்னர், முருங்கன் களிமோட்டை சிறப்பு இராணுவ முகாமில் அவர் இருப்பது தமக்குத் தெரியவந்ததாகவும் சிறிது காலத்தின் பின்னர் அந்தத் தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் அவரது தாயார் கூறுகிறார்.

    வவுனியா சிறைக்கைதிகள் பலர் தென்னிலங்கை சிறைகளுக்கு மாற்றப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது

    பல ஆண்டுகளாக டில்ருக்ஷன் பற்றிய தகவல்கள் இல்லாமல் இருந்துவந்த நிலையில், இப்போது அவர் ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. கைகால்கள் அடித்து வீங்கிய நிலையில், தலை மற்றும் கழுத்துப் பகுதியில் காயங்கள் காணப்படுவதாகவும் கைகால்களில் விலங்குகள் பூட்டப்பட்டிருப்பதாகவும் அவரது தாயார் கூறினார்”.

    தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க நீங்கள் எடுத்த தீர்மானத்துக்கு நன்றி, சோதி.


  17. Rohan on July 13, 2012 6:47 am

    மூன்று சிறை அதிகாரிகள் வவுனியாவில் கைதிகளால் பிடித்து வைக்கப்பட்டார்கள் என்ற செய்தி அப்பட்டமான பொய் என்றும் கோத்தபாய இராஜபக்ச வழிநடத்தலில் செய்யப்பட்ட ஒரு பம்மாத்து முயற்சியே இது என்றும் ஆதாரத்துடன் தகவல்கள் வந்திருக்கின்றன. சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தோரின் போராட்டத்தை துவம்சம் செய்து பாழ்படுத்தும் பொருட்டு இக்கதை பின்னப்பட்டு ஊடகங்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இப்போது, அரசுக்குச் சவால் விடும் தேவை ஒன்று எமக்கு வந்திருக்கிறது. அதாவது, சிறைப்பட்ட மூன்று சிறை அதிகாரிகள் பெயர்களை வெளிப்படுத்த வேண்டும் என்பதே அச்சவாலாகும். உண்மையில் இது போன்ற ஒரு சம்பவம் அங்கே நடந்திருந்தால், வவுனியா சிறை அதிகாரிகள் முதல் குறைந்தது தொலைபேசியிலாவது இசம்பவம் குறித்து வவுனியா காவல்துறைக்கு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், வவுனியா பொலிஸ் நிலையத்தில் இது போன்ற புகார் எந்தப் பதிவும் இல்லை.

    விடுவிக்கப்பட்ட பின்னரும் இந்த அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள் என்பது பற்றி வவுனியா பொலிஸ் நிலையத்தில் அன்று ஒரு பதிவு, அங்கு கூட இல்லை.

    உண்ணாவிரதம் இருந்த இந்த கைதிகளை சட்டத்துக்குப் புறம்பாகக் கட்டுப்படுத்த உத்தரவுகளை கொடுத்தவர் கோத்தபாய இராஜபக்ச.

    பன்னிரு அதிரடிப்படை வீரர்களை அனுப்பி, IGP இலங்கக்கோனுக்கு கோத்தபாய இராஜபக்ச கொடுத்த உத்தரவு, அவர்களைச் சிறையிலேயே கொல்லுங்கள். மற்றவர்களையும் நோய் படும்வரை தாக்குங்கள்’ என்பதாகும். ஆனால், வவுனியா போலிஸ் நிலையத்துக்கு இப்படி ஒரு அதிரடிப்படை வீரர் குழு வருவது தெரியாதிருந்தது.

    இத்தாக்குதலில் பங்குபற்றிய ஒரு அதிரடிப்படை வீரரின் வாக்குமூலத்ததின்படி, ஒரு விடுதலை புலிகள் முகாம் எப்படி அணுகப்படுமோ அவ்வாறே சிறையில் உண்ணாவிரதிகள் இருந்த இடம் அணுகப்பட்டது. சென்றவர்கள் 4 அடி நீண்ட இரும்பு குண்டாந்தடிகளுடன் போயிருந்தார்கள். கைதிகள் மட்டுமே இருந்தனர் – அவர்கள் எந்த சிறை அதிகாரிகளையும் சிறைப்பிடித்து வைத்திருக்கவில்லை.

    உண்ணாவிரதிகள் தமிழில் சுலோகங்களைத் தங்கள் உடைகளிலும் அட்டைகளிலும் எழுதி வைத்திருந்தார்கள். நீதிமன்றத்தில் சொல்லும் பொய்களைத் தவிர்க்க, தங்களை பூசா முகாமுக்கு மாற்றுமாறு அவர்களது சுலோகங்கள் கோரின.

    கொல்லப்பட்ட நிமலரூபனே இந்தப் போராட்டத்தை முன்னின்று நடாத்தியிருந்தார். அவருக்கு ‘விசேட கவனிப்பு’ வழங்குமாறு ஏற்கெனவே அதிரடிப்படை வீரர்கள் பணிக்கப்பட்டிருந்தார்கள்.. ……


  18. மல்லையூரான் on July 13, 2012 7:42 am

    திரு சோதிலிங்கம் அவர்களே உங்கள் கோபம் நியாயமானது. ஏற்கனவே சிறையில் இருந்த அனுபவங்கள் மற்றவர்களை விட உங்களை கோபப்படுத்தும். ஆனால் உங்கள் கோபத்தை காட்டிய விதம் தவறே ஒளிய கோபத்தை நான் விமர்சிக்கவில்லை. தமிழ் தேசிய புலி ஊடகங்கள் இன்று போடும் அதே கோஷத்தை நீங்களும் து}க்கியதை தான் நான் கேள்வி கேட்டேன். 1983 சிறை படுகொலை திட்டமிட்டு நடைபெற்ற இன அழிப்பு படுகொலை. ஆனால் நிமலரூபன் மற்றும் சக கைதிகள் மீதான தாக்குதல் பழிவாங்கல் தாக்குதல். நிமலரூபன் இருந்த இடத்தில் நிமல ரூப என்ற சிங்கள கைதி இருந்திருதாலும் நடைபெற்றிருக்கும். அதிகார வர்க்கம் தன்னை எதிர்ப்பவர்களை அடிபணிய வைக்கும் ஆயுதம் இது. இங்கு நீங்கள் பெளத்த சிங்கள பேரினவாதம் என்று முத்திரை குத்தியது தான் தவறு. இன்று இலங்கையில் அதிகார வர்க்கம் தன் அதிகாரத்தை காக்க தமிழ் மக்களை விட பெளத்த சிங்கள மக்களையே மிக மோசமாக அடக்குகுpறது. இது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையை? இன்று பெளத்த சிங்கள பத்திரிகையாளர்கள் நாட்டை விட்டு ஓடுகிறார்களே அதுவும் உங்களுக்கு தெரியவில்லையா? தமிழ் தேசிய புலி ஊடகங்கள் சொன்ன அம்புலிமாமா கதைகளை நம்பி சைவ கோயில்களை இடித்து பெளத்தவிகாரா கட்டுகிறார்கள் என்று நீங்கள் எழுதியது உங்கள் திறமையையே மலிவீனம் ஆக்கியுள்ளது. உங்களையும் தமிழ் தேசிய புலி ஊடகவியலாளனாக மற்றியுள்ளது. இலங்கையில் இந்து சமயத்திற்கு ஒரு அமைச்சு உள்ளது அதற்கு ஒரு அமைச்சரும் உள்ளார். அவரிடம் இதைப்பற்ற்றி ஒரு நியாயமான பேட்டியை எடுத்திருந்தால் அதையும் நீங்கள் எழுதியிருந்திருந்தால் அது பத்திரிகை தர்மமாயிருந்திருக்கும். வடக்கு கி;ழக்கில் இராணுவ கடற்படை முகாம்களை சுற்றி பெளத்த வழிபாட்டு தலங்கள் உருவாகுவது உண்மை. அனால் பெளத்தர்கள் இந்து கடவுள் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள். தெற்கில் கப்பிகாவத்தையில் உள்ள சைவக் கோயிலின் கோபுர கும்பாவிஷேகம் கூட அண்மையில் நடந்தது. வடக்கில் பெரும்பாலான சிங்கள படையணியை சேரந்தவர்கள் சைவக்கோயில்களுக்கு வழிபட செல்கிறார்கள். இந்து சமயம் இலங்கையில் இந்த இரண்டு இனங்களாலும் மதிக்கப்படும் ஒரு சமயம். அனால் வடக்கில் மக்களின் ஏழ்மையை பாவித்து பரவலான மத மாற்றம் குறிப்பாக கிறீஸ்தவ மதம் சார்ந்த நிறுவனங்கள் செய்து வருகிறது. இது நிறுவனமயப்படுத்தப்பட்டே நடைபெறுகிறது. இது உங்கள் கண்களுக்கு தெரியாது பெளத்த பேரினவாதம் என்ற பதம் மட்டும் ஏன் உங்கள் கண்களை உறுத்துகிறது? இன்று இலங்கையில் காட்டாட்சி நடைபெறுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. நீங்கள் இந்த அரசின் செயலை பெளத்த பேரினவாத முத்திரை குத்தாது மகிந்த அராஜகம் அல்லது அரச வன்முறை என்ற பதத்தை பாவித்திருந்தால் அது பாதிக்கபடும் சிங்க மக்களையும் உங்களுடன் இணையை வைத்திருக்கும். பெளத்த சிங்கள தேசிய வெறி அரசதரப்பில் இல்லை என்று கூறவி;ல்லை. ஆனால் அதை இன்று தமிழர்கள் ஆயுதமாக எடுப்பது தான் தவறு. அரச தன் அதிகாரத்தை நிலைநிறுத்த செய்யும் அனைத்து அடக்குமுறைகளையும் இலங்கையில் சிங்கள் தமிழ் முஸ்லீம் மக்கள் இணைந்து போராட்டம் மூலம் தான் தடுக்கலாம். இலங்கையில் உள்ள பிரச்சனைக்கு தீர்வு ஒரு நல்லாட்சி. இந்த நல்லாட்சி என்பது சிங்கள் பெளத்த மக்களால் தான் கொண்டு வர முடியும். அவர்களை பகைத்து எதுவும் நடைபெறாது. அவர்கள் மீண்டும் மகிந்தாவை ஆட்சிக்கு கொண்டு வரவே உங்கள் பாணியிலான எழுத்துகள் உதவும். நன்றி


  19. நந்தா on July 14, 2012 2:30 am

    “சிங்கள பவுத்த” என கூறுபவர்கள் “சிங்கள கிறிஸ்த்தவர்கள்” மகா யோக்கியர்கள் என்று காட்ட முனைகிறார்களா?

    அடுத்து சிறை வைக்கப்பட்டவர்கள் புலிக் கேடிகள் என்பதனை மறைத்து “அரசியல் கைதிகள்” என்று புதுச் சாயம் புரட்டுவதன் நோக்கம் என்ன?

    புலிகளால் பிடித்துச் செல்லப்பட்ட ஆயிரக் கணக்கான தமிழர்களின் தகவல்களே இன்றும் கிடையாது. அப்படியிருக்க ஒரு புலிப் பயங்கரவாதிக்கு பரிந்து பேசுவது ஆச்சரியமாக உள்ளது.

    பொலிஸ் அராஜகங்கள் சகலநாடுகளிலும் நடை பெறுகின்றன. மல்லையூரான் அவற்றைச் சுட்டியுள்ளார். சமீபத்தில் கற்பழிக்கப்பட்ட மாணவியின் கேசை விசாரிக்கப் போன பொலிஸ் சார்ஜன்ட் அந்த மாணவியை இன்னும் சிலருடன் செர்ந்து கற்பழித்துள்ளார். பொலிசார் அவர்களக் கைது செய்துள்ளனர்.

    அந்த மாணவி மலைநாட்டு மாணவி என்பதால் பரிவில்லை. ஆனால் புலிக் கேடிக்கு அனியாயம் என்றவுடன் காட்டப்படும் பரிவும் அதற்கு சிங்கள பவுத்த என்று கூறுவதும் அபத்தம்.


  20. Rohan on July 14, 2012 8:10 am

    //அடுத்து சிறை வைக்கப்பட்டவர்கள் புலிக் கேடிகள் என்பதனை மறைத்து “அரசியல் கைதிகள்” என்று புதுச் சாயம் புரட்டுவதன் நோக்கம் என்ன?//

    தமிழ் வாசிக்கவும் தெரியாதவர்களுக்கு எப்படி அறிவூட்டுவது?

    /“2005-ம் ஆண்டில் கட்டாருக்கு வேலைக்குச் சென்றிருந்த இந்த இளைஞன் 2007-ம் ஆண்டில் நாட்டுக்குத் திரும்பியிருந்த நிலையில், பின்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து மீண்டும் வெளிநாடு செல்வதற்காக முயன்றபோது அதற்கு புலிகள் அனுமதியளிக்கவில்லை.

    அதன்போது, அவர் விடுதலைப் புலிகளுக்குத் தெரியாமல் கடல்வழியாக இலுப்பைக் கடவையிலிருந்து மன்னார் பகுதிக்குச் சென்றபோது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    பல ஆண்டுகளாக டில்ருக்ஷன் பற்றிய தகவல்கள் இல்லாமல் இருந்துவந்த நிலையில், இப்போது அவர் ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. கைகால்கள் அடித்து வீங்கிய நிலையில், தலை மற்றும் கழுத்துப் பகுதியில் காயங்கள் காணப்படுவதாகவும் கைகால்களில் விலங்குகள் பூட்டப்பட்டிருப்பதாகவும் அவரது தாயார் கூறினார்”//


  21. mao on July 14, 2012 9:02 am

    ஒருசிலர் இடம் தெரியாமல் அழிக்கப்பட்டார்கள். இன்னும் ஒருவர் கோமாநிலையில் அடையாளம் காணப்பட்டார். சிலவேளை இதைபோன்ற சம்பவங்கள் இனியும் வரும்.

    இதெல்லாம் நியாமான கேள்விகளே!. யாருக்கு இந்த கேள்விகளை கேட்கும் நியாயம் இருக்குமென்றால் துணுக்காய் புலிமுகாமில் 5000 தமிழ்கைதிகளின் இறப்பிடம் புதைவிடம் எரிப்பிடம் தெரிந்தவர்களால் மட்டுமே இலங்கையரசு எதிரான வழக்கை தாக்கல் செய்யமுடியும்?

    றோகனே சாந்தனே இதை கேட்பதற்கு நீங்கள் யார்? நீங்களே கிறிமினல் பட்டியில் உள்ளக்கப்பட்ட நியாயத்தை ருசு படுத்துவதற்கு உரிய வக்கிலாகவே எனக்கு தெரிகிறது.


  22. நந்தா on July 14, 2012 11:06 am

    தமிழ் வாசிக்கத் தெரிந்தபடியால்த்தான் றோகன் இன்னமும் தலைவர் உயிரோடு இருப்பதாகநம்பி கொண்டிருக்கிறார்.

    நிமலரூபன் புலி என்பது தெரிந்த விஷயம். நிமலரூபனின் பிரச்சனைக்கும் கோமாவில் இருக்கும் நபரின் கதைக்கும் என்ன சம்பந்தம்?


  23. SJeyakkumar on July 14, 2012 11:24 am

    Nantha …… ….. ….! Yaar pulik kedi?


  24. ajeevan on July 14, 2012 4:45 pm

    காதல்வயப்பட்தற்காக ஒரு போராளியின் நெற்றியின் சுட்டார் தகட்டு இலக்கம் 2 மாத்தையா.

    இலங்கையின் வடக்கில் வன்னிப் பகுதியில் ஒரு காட்டுப் பாசறையில், ஒரு பெண் தோழியோடு காதல் வயப்பட்டதற்காக 18 வயது கெரில்லாவான சாந்தனை அப்போதைய எல்ரிரிஈ நம்பர் 2 மாத்தயா சுட்டுக் கொன்றார். சாந்தனை கூடாரத்துக்குள் இட்டுச் சென்ற இரண்டு இளைஞர்கள் இப்போது அவனது கையைப் பிடித்து உடலை இழுத்துக் கொண்டு வந்தார்கள். சாந்தனின் நெற்றிப்ப பொட்டிலிருந்து வழிந்தோடிய இரத்தம் அவனது வெள்ளை மற்றும் நீலநிற சட்டையை நனைத்தது. இவ்வாறு முன்னாள் பெண் போராளி நிரோமி டி சொய்சா எழுதியுள்ள தமிழ் பெண்புலிகள் என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

    நிரோமி டி சொய்சா தனது 17 வயதில் 1987 ஆம்பத்தில் எல்ரிரிஈயில் சேர்ந்தார். தற்போது அவுத்திரேலியாவில் வாழும் அவர், வன்முறை தமிழீழத்துக்கு வழிகாட்டாது என்று தான் உணர்ந்தபோது அந்த குழுவை விட்டு விலகியதாக கூறுகிறார்.

    அப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய விடயங்களை ஐஏஎன்எஸ் கீழ்கண்டவாறு தொகுத்துள்ளது.

    குற்றஞ்சாட்டப்பட்ட ஒற்றர்களையும் காட்டிக் கொடுப்பவர்களை எல்ரிரிஈயினர் சித்திரவதை செய்து கொன்றனர். அத்துடன் இலங்கையில் இந்திய அமைதிப் படைக்கு எதிராக போரிட்டபோது தமிழ்க் கடைகளையும் வீடுகளையும் சூறையாடினர்.

    ஒருநாள் பிற்பகல், யாழ்ப்பாணத்தில் சுதுமலையில் நிரோமியும் அவளது புலி நண்பர்களும், ‘ நான் அதைச் செய்யவில்லை, நான் அதைச் செய்யவில்லை’ என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தும் வெள்ளை எனப்படும் பதின்ம வயது எல்ரிரிஈ உறுப்பினரை சில ஆண் தோழர்கள் உதைத்து வதை செய்து கொண்டிருந்த்தைக் கண்டனர்..

    வெள்ளையை இந்திய ஒற்றனாக குற்றம் சுமத்தி, தோள்வரை புதைத்து சைனைட்டை விழுங்கும்படி பலவந்தப்படுத்தினார்கள் அது அவனை என்ன செய்யும் என்று பார்ப்பதற்காக என்று தமிழ் பெண்புலிகள் என்ற தனது 308 பக்க புத்தகத்தில் கூறுகின்றார். (மேகா ப்ப்ளிசிங் ஹவுஸ்).

    கடைசியாக ஒரு எல்ரிரிஈ கெரில்லா ஜஸ்டின் அவனது தலையில் கோடரியால் ஒரு போடுபோட்டார். ‘ பையன்கள் சிரிப்பொலி எழுப்பினார்கள். அவர்களைப் பொறுத்தளவில் வேலனைக் கொல்வதற்கும் கரப்பான் பூச்சியைக் கொல்வதற்கும் வித்தியாசம் கிடையாது என்று கொலையாளிகளைப் பற்றி நிரோமி கூறுகின்றார்.

    பிறகு, இலங்கையின் வடக்கில் வன்னிப் பகுதியில் ஒரு காட்டுப் பாசறையில், ஒரு பெண் தோழிரோடு காதல் வயப்பட்டதற்காக 18 வயது கெரில்லாவான சாந்தனை அப்போதைய எல்ரிரிஈ நம்பர் 2 மாத்தயா சுட்டுக் கொன்றார். சாந்தனை கூடாரத்துக்குள் இட்டுச் சென்ற இரண்டு இளைஞர்கள் இப்போது அவனது கையைப் பிடித்து உடலை இழுத்துக் கொண்டு வந்தார்கள். சாந்தனின் நெற்றிப் பொட்டிலிருந்து வழிந்தோடிய இரத்தம் அவனது வெள்ளை மற்றும் நீலநிற சட்டையை நனைத்தது. ஒருவர் ஜீப்பின் பின் கதவைத் திறந்து சாந்தனின் உடலை உள்ளே போட்டபின், அதை ஓட்டிக் கொண்டு போனார்கள். அதன் பிறகு பாசறையில் யாரும் அந்த கொலையைப் பற்றிக் கதைக்கவில்லை. விம்மிக் கொண்டிருந்த இறந்தவனின் காதலி லோராவைத் தேற்ற யாரும் இல்லை.

    இந்த இளைஞனின் அர்த்தமற்ற கொலையை உள்வாங்கிக் கொள்ள என்னால் முடியவில்லை. எனக்கு அசௌகரியமாக இருந்தது, குழப்படைந்தேன், திடீரென்று அவமானப்பட்டுப் போனேன் என்று நிரோமி எழுதுகிறார்.

    இத்தகைய கொடுமைகளைப் பாரத்த பின்னர், எல்ரிரிஈ தோழர்களை இயக்கும் விழுமியங்கள் பற்றி கேள்வி எழுப்பத் தொடங்கினார் நிரோமி. எமது அமைப்பில் உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும், எல்ரிரியின் நன்மைக்காகவே தாங்கள் செய்வது யாவும் என்று அவர்கள் நியாயப்படுத்திக் கொள்ளும் யாவற்றையும் அவர்கள் செய்தார்கள். இதற்கு நான் ஆயத்தமாக வில்லை.

    நிரோமி எல்ரிரிஈயில் சேர்வதற்கு முன்னர் 1986 ல் யாழ்ப்பாணத்தில் அவர்கள் தமக்கு எதிரான இயக்கங்களின் உறுப்பினர்களை படுகொலை செய்தார்கள் என்று புத்தகம் கூறுகின்றது. டெலோ சீருடை அணிந்த உறுப்பினர்களை மரத்தில் கட்டித் தொங்கவிட்டதும் அவர்கள் உயிரோடு இருக்கையிலேயே தீயிட்டுக் கொளுத்தியதும் இவற்றுள் அடங்கும்.

    யாழ்ப்பாணத்தில் தாங்கள் கைதியாகப் பிடித்த மற்றொரு தமிழ் குழுவான ஈபிஆர்எல்எவ் காரர்களையும் எல்ரிரிஈ படுகொலை செய்திருந்தது.. 1987 ல் இருதரப்பு ஒப்பந்த்தின் கீழ் இலங்கை வடகிழக்கில் அமர்த்தப்பட்டிருந்த இந்திய அமைதி காக்கும் படையின் பிடியிலிருந்து தப்பியோடிய போது, எல்ரிரிஈயினர் கடைகளை உடைத்துக் கொண்டு உள்நுழைந்து கோழிகளையும், உடுதுணிகளையும், உணவுகளையும் இன்னும் பலவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு போனதை நிரோமி கண்டிருக்கிறார்.

    அவள் அதை ஆட்சேபித்த போது எல்ரிரிஈ உறுப்பினர் ஒருவர். ‘ நாங்கள் கொள்ளையடிக்காவிட்டால் வேறு யாராவது கொள்ளையடிப்பார்கள் என்றாராம். அத்தகைய நியாயப்படுத்தலில், தானும் தனக்கு சேர்ட், ஷாம்பூ பக்கட்கள், சொக்கலேட் பக்கற்றுக்கள் மற்றும் ஒரு சில சிறுவர் புத்தகங்களை அடித்துக் கொண்டு சென்றதாக நிரோமி கூறுகின்றார்.

    ஒப்பனைப் பொருட்களை (எமது கட்டளைத் தளபதி) தடுத்திருந்தாலும், சில (எல்ரிரிஈ) தோழிகள் தோலை வெண்மையாக்கும் பெயார் அண்ட் லவ்லி முகப்பூச்சுக்கள் மற்றும் நகப்பொலிஷ்களை அடுத்துக் பொண்டு செல்லத் தவறவில்லை.

    வேறொரு சம்பவத்தில், எல்ரிரிஈ கெரில்லாக்கள் சப்பாத்துகள், சுகாதாரத் துவாய்கள் உள்ளாடைகள் போன்றவற்றை கடையில் கொள்ளையிட்டார்கள். அத்தகைய கொள்ளைகள் இந்திய படைவீரர்கள் மீது சுமத்தப்பட்டது.

    இந்திய அமைதி காக்கும் படையோடு மோதுவதைக் கைவிடும் படி யாழ்பாணத்து மக்கள் தொடர்ந்நும் எல்ரிரியை வேண்டினார்கள்.

    எல்ரிரிஈயில் நிரோமியின் ஒரு நெருங்கிய சகா அகிலா. 1991 ல் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூவரில் ஒருவர் அவர். மற்றிருவர் பிரபாகரன் மற்றும் அவரது புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மான். 1988 ல் நிரோமி எல்ரிரியை விட்டு விலகிய பின்னர், அகிலா, பெண்கள் புலனாய்வுப் பிரிவின் துணைத் தலைவராக உயர்ந்தார். 1995 ல் யாழ்ப்பாணம் நீர் வேலியில் இலங்கை இராணுவம் அவரைக் கொன்றது…………


  25. T Sothilingam on July 14, 2012 9:19 pm

    இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு தேவையில்லை இப்படியே இருந்து விட்டுப் போகலாம் சும்மா தேவையில்லாமல் மக்களை கஸ்டப்படுத்துகிறார்கள் என்ற கருத்து கொண்டவர்கள் எம்மத்தியில் இருக்கிறார்கள். தமிழ் மக்களின் அரசியல் உரிமையில் அக்கறையற்ற இவர்கள் ஆனால் அரச ஆதரவு என்று ஒரு முயற்சி செய்து அவற்றின் பலாபலன்கள் என்ன? விமர்சனங்கள் என்று எதையும் முன்வைக்காமல் ஒளித்துக் கொண்டார்கள்.

    அரசை ஆதரிக்கும்போது அல்லது அரசு சார்பு கட்சியை ஆதரிக்கும்போது இவர்களின் அரசு நடத்தைகளில் தமிழர் உரிமைப்போராட்ட அம்சம் எப்படி இருக்கிறது, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெறுவதில் அரசுகளின் செயற்ப்பாடுகளின் தன்மை போன்ற விடயங்களை நன்கு சீர்தூக்கி பார்க்க வேண்டும் அதில் சரியான நிலைப்பாடு இல்லாது போகிறார்கள் என்ற நிலைவரும் போது அல்லது அவர்கள் வழுவும் போது அங்கிருந்து வெளியேறக் கூடியவாறே தொடர்புகள் இருந்திருக்க வேண்டும்.

    அதைவிடுத்து யார் அதிகாரத்தில் அல்லது பலத்துடன் இருக்கிறார்களோ அவர்களுடன் அப்பப்ப உறவு கொண்டாடுவதில் ஆபத்துள்ளது. சுய கருத்துப்பலத்தை இழப்பது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. இது பின்னர் மாற்று கருத்தாளர்கள், அரசின் மேலாதிக்கத்துக்கு எதிராக கருத்து வைப்பவர்களை பயங்கரவாதிகள், ஆயுதப் போராட்டத்துக்கு துணை போகிறார்கள், அல்லது இவர்கள் புலி என்ற முத்திரை குத்தும் அரசியலை விட வேறு எதுவும் செய்ய முடியாது போய்விடுகின்றது.

    எம் உள்உணர்வுடன் எதற்காக இயங்குதல் என்பதிலிருந்து நாம் தவறி விடக்கூடாது.

    ஆனால் அரசோ 1983ம் ஆண்டிலிருந்து இலங்கைத்தமிழர்க்கு அரசியல் தீர்வு என்று ஒன்று இல்லை, அபிவிருத்தி மட்டுமே தீர்வு என்ற எண்ணக் கருத்துடன் உள்ளது. இலங்கை அரசின் நிரந்தர உயர் பதவிகளிலிருக்கும் பலரிடம் இக்கருத்துள்ளதை நான் நேரடியாகவே உணர்ந்து கொண்டேன். இப்படியான எண்ணக்கருக்களின் தொடர்ச்சியே இன்றும் தமிழர்கள் மீதான அடாவடித்தனங்களை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது, இவ்வளவு காலம் வரலாறாகிய பின்பும் இலங்கை அரசு எதையும் படிக்கவில்லை தமிழர்களை இலங்கை மக்களாக மதிக்கவில்லை. இதேபோன்று போராடிய இயக்கங்களிலிருந்து இன்று குடும்பம் வாழ்வு என்றிருப்பவர்களும் கையாறா நிலையில் அரசு ஒன்றும் தராது நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது என்ற சோர்ந்து போன நிலைமைகளில் அரசை ஆதரித்து அதுவும் ஒன்றுமில்லை என்ற நிலையில் ஒதுங்கிக் கொள்கிறார்கள் அல்லது அரசுடன் ஒன்றித்து விடுகிறார்கள்.

    இப்படியாகத்தான் தமிழர் வரலாறு தொடர வேண்டுமா? இப்படியாகத்தான் தமிழர் வரலாறு எழுதப்படுமா? நாம் நினைப்பவைகளுக்கு மாறாகவும் புதிய அத்தியாயங்களையும் எழுதும் முனைப்புக்களை நாம் அவதானிக்க தவறிவிடுகின்றோம்.

    இது வன்னி இறுதி யுத்தத்தின் தொடரும் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளிலிருந்தும் தான் எழுகின்றது. அரசும் இதனை அவதானிக்க தவறிவிடுவதின் விளைவே நிமலரூபன் போன்றோர் கொல்லப்படுதலும் சமூகத்தில் முன்னோடி உறுப்பினர்கள் முன்னாள் இயக்க, புலிகள் மீதான தாக்குதல்களும் கொலைகளுமாகும், இதையே நான் மீண்டும் ஒரு இனப்படுகொலை என நிமலரூபனின் கொலையை சித்தரிக்கிறேன், இந்த நிமலரூபனின் கொலை மூலம் தமிழர்கள் தமது உரிமைக்காக போராடக் கூடாது, போராடினால் இது தான் பதில் என்பதே அரசின் வெளிப்பாடாகும். அரசு சிங்கள மக்களின் போராட்டங்களையும் நசுக்குகின்றது என்பதில் கருத்து வேறுபாடில்லை. இங்கு தமிழ் போராட்ட களத்திலிலேயே இதை செய்கின்றது. இங்கு சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் பிரதிநிதியாகவே அரசு செயற்பட்டுள்ளது.

    1970, 1980களிலும் அரசு இப்படியான தவறுகளையே செய்திருந்தது அன்றும் தமிழர்கள் மிகவும் இராணுவ அடக்கு முறைகளுக்கு உட்பட்டே இருந்தனர், அன்றும் அரசிலிருந்த கட்சி மாற்றப்பட்டது இனிமேலும் அப்படி அரசு மாற்றப்படலாம், அன்றும் தமிழர், போராட்ட தமிழர்கள் கொல்லப்பட்டபொது எந்த விசாரணைகளும் இல்லை இன்றும் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் எந்த விசாரணைகளும் இல்லை, அரசு தான் ஜனநாயகம் சட்ட நடைமுறைகள் என்பவற்றிலேயே அக்கறை கொண்டுள்ளதாக கூறி தமிழ் மக்கள் மீது மேலாதிக்கத்தையே செய்து கொண்டிருக்கிறது இல்லையென்று மறுக்க முடியுமா? இன்று வெளிநாடுகளிலிருந்து ஈழப்பிரதேசங்களுக்கு போய்வருபவர்கள் அவதானிக்க தவறும் அடக்கு முறைகள் இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    அத்துடன் இந்த நிலைமைகளின் எதிர்காலம் என்ன என்பதை கிரகித்துக்கொள்ள முடியாதவர்கள் நல்லாட்சியே தேவை என்ற கருத்து நிலைகளில் உளல்கிறார்கள் தாம் அந்த கருத்து நிலையை எடுத்துக் கொள்கிறார்கள் நல்லாட்சியை உருவாக்குவது வெறுமனே இலங்கையில் சிங்கள மக்களின் கைகளில் மட்டும் தங்கியில்லை, தமிழர்களின் பங்களிப்பு சிங்கள மக்களின் பங்களிப்புக்கு சமமாக இருத்தல் வேண்டும் அதற்கான ஜனநாயகத்தை உருவாக்குவதே சிறந்தது அதாவது 80 சதவிகித சிங்கள இனத்துக்குள்ள அத்தனை உரிமைகளும் பலமும் அதிகாரங்களும் சிறுபான்மை இனத்தவர்களுக்கும் இருக்க வேண்டும் பெரும்பான்மை இனத்தவர்கள் அரசை மாற்றியமைக்க உள்ள அதே அளவு உரிமை சிறுபான்மையினரும் பெரும்பான்மையினரின் ஆதரவின்றி அரசை மாற்றியமைக்கும் உரிமை தேவை அரசு பரிசீலிக்குமா? (நாம் ஜரோப்பில் உள்ள பல நாடுகளின் அரசியல் அமைப்புக்களை படிக்க வேண்டியுள்ளது)

    புதிய வகையிலான வழிவகைகளை உருவாக்க வேண்டும் புதிய சமுதாயத்ததை உருவாக்கும் கடமைகளில் ஈடுபடல் வேண்டும் அதற்கான பாதையை நோக்கி அரசை தள்ள வேண்டும் அதற்காவே புலம்பெயர் மக்களும் தம்முடன் இணைந்து செயற்ப்படல் வேண்டும் இதையே என ஈழத்தமிழர் எதிர்பார்க்கின்றார்கள், இதையே ஈழத்தமிழர்களும் புலம் பெயர் தமிழர்களிடம் உங்களுக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று அதை செய்யுங்கோ என்று கேட்கிறார்கள் எதிர்பார்க்கிறார்கள். (எமது பயணக்கட்டுரையில் இதை குறிப்பிட்டுள்ளோம்)

    நான் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவே போராட ஆரம்பித்தேன் புலிகளை கொல்லவோ அல்லது புலிகளுடன் போராடவோ அல்ல ஆனால் போராட்ட சூழ்நிலைகள் புலிகளுடன் மோதலை ஏற்படுத்தியிருந்தது அதன் போது புலிகள் மீதான பல அவர்களது அரசியல், நடைமுறை விமர்சனங்களை முன்வைத்துள்ளேன், அவ் விமர்சனங்கள் மட்டும் எமது சமூகத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லுமா?

    இலங்கையின் இரு இனங்களிடையேயான உறவு மேம்பாட்டுக்கான எந்த முன்னெடுப்புக்களையும் அரசு செய்ய முன்வரவில்லை. செய்பவர்களை புலிகள் அல்லது சிங்கள புலிகள் என்று முத்திரை குத்தி காணாமல் போனவர்களின் பட்டியலில் இடுகின்றது, அரசு எல்லாவற்றிக்கும் மாறாக இனத்துவே வளர்ப்புக்கான அடையாளங்களையே இலங்கையின் வடக்கு கிழக்கில் நிறுவியுள்ளது தமிழர்களை போரில் வென்ற வெற்றியையே கொண்டாடுகின்றது மூன்று வருடங்களின் பின்னரும் கொண்டாடுகின்றனர் (இவை பற்றி எமது இலங்கைப்பணக் கட்டுரையில் எழுதியிருந்தோம்) இவற்றையே வைத்து அரசியல் செய்கின்றது, அரசின் நிலைப்பாடு என்றும் ஆகிவிட்டது.

    இன்று புலிகள் இல்லை, ஆனால் தமது அரசியல் சுய லாபங்களுக்காக அவ்வப்போது புலிகள் வரப்போகிறார்கள் என்று கூப்பாடு போட்டு மக்களை பீதியில் வைத்திருப்பதில் அரசும் அதற்கு ஒத்து அரச ஆதரவுக்காரர்களும் நன்றாகவே வேலை செய்கிறார்கள், அரசு புலிகளின் கொடியை யாழ் மேதின ஊர்வலத்தில் கபட நோக்குடன் பகிரங்கப்படுத்தி விட்டு புலம்பெயர் நாட்டில் புலிகள் இருக்கிறார்கள் போருக்கு ஆயத்தம் செய்கிறார்கள் என்ற பூச்சாண்டி வேலைகளை நாம் மறந்துவிட முடியாதே!

    நிமலரூபன் கேட்டதெல்லாம் தம்மை விசாரணை செய் அல்லது விடுதலை செய் என்பதே இதில் என்ன தவறு உள்ளது அது சரியானதே அதையே அரசு செய்ய வேண்டும்.

    அதேசமயம் மல்லையூரான் போன்றவர்களின் அரசுக்கு எதிரான பின்னூட்டத்தில் அரசு காட்டேறித்தனமாக நடக்கிறது, அதிகாரிகள் அடித்து நொருக்குகிறார்கள், சிறைக்குள் இருப்பவர்களை பழிக்குப் பழி வாங்குகிறார்கள் , பொலிசார் கூட்டுக் கற்பழிப்புச் செய்கிறார்கள, மதமாற்றம் செய்கிறார்கள் என்று நீங்களே ஒப்புதல் கொடுத்துக் கொண்டு என்னை புலியாகவே சித்தரித்துக் கொண்டு இனிமேல் அரசின் காடைத்தனங்களை எழுதக் கூடாது என்று தடை போடவே முனைகின்றார்கள்.

    இதையே அரசும் அதன் இராணுவமும் புலானாய்வுத்துறையினரும் செய்கிறார்கள் அதையே வெளிநாடுகளில் செயற்ப்படுத்தவும் முற்படுகிறார்கள்.

    இவர்களின் புழுகுகளை நான் ஏற்றுக்கொண்டு எமாறினால், அல்லது ஏமாறியது போன்று நடித்தால் சோதிலிங்கம் நல்லவன் முற்போக்குவாதி என்பீர்கள் சோதிலிங்கம் தனக்கு என்றுள்ள அரசியலுடன் இருக்க கூடாதா?

    நிமலரூபன் அரசு உடன்பட்ட விடுதலையை கோரியுள்ளார், அரசு பல தடவைகள் அதுவும் மகிந்தா பல தடவைகள் தடுப்பு காவலில் இருப்போரை 1 வருடத்துக்குள் விடுதலை செய்து விடுவோம் என்று பலதடவைகள் கூறியதையே, தடுப்பு முகாம்களுக்கு வருகை தந்த அரசியல்வாதிகளினால் கொடுக்கப்பட்ட உத்தரவாதத்தையே அவர்கள் திருப்பி கேட்டுள்ளான் அத்துடன் தனது வியாதிகளையும் காரணம் காட்டி விடுதலையை கேட்டுள்ளார் இதர கைதிகள் இவற்றை முழு கைதிகளின் போராட்டமாக மாற்றியமைத்து போராட வேண்டும் என்றுதான் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது

    நிமலரூபன் வெளிநாட்டு ரேடியோவுக்கு பேசியதை வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத்துடன் இணைந்து செயற்படுபவர்களினால் நிமலரூபன் அடையாளம் காணப்படுகின்றார் இலங்கை புலனாய்வுத்துறையினர் பின்னர், நிமலரூபனை கொலை செய்கிறார்கள், காதர் மாஸ்டர் கூறியது போன்று சிறைச்சாலை நிர்வாகம் உள்ளேயே இதற்கான விசாரணைகளை உருவாக்கி விசாரித்து இருக்கலாம், முதலில் விசாரிக்க அல்லவா வேண்டும், தமிழர்கள் என்றவுடன் தகவல் கிடைத்தவுடன் கொல்லுதல் இலங்கையில் முதல்தடவைகள் அல்லவே, காரணம் தமிழர்கள் என்பதுதான், சிங்கள கைதிகள் இருந்தால் என்ன இஸ்லாமிய கைதி இருந்தால் என்ன இது நடந்திருக்கும் என்பது சூட்குமமான கருத்தேயாகும். இங்கே தமிழன் என்பதால் கொல்லப்பட்டான் என்பது யதார்த்தம்

    தமிழ் மொழியின் ஜந்து காவியங்களில் மூன்று பௌத்தம் சம்பந்தப்பட்டது தமிழ் பௌத்தம் இருந்த காலங்களில் தமிழர்கள் மிகவும் சிறப்பாகவே வாழ்ந்திருக்க வேண்டும் அதனால்தான் காவியங்களை படைத்து இருக்கிறார்கள் இந்த காவியங்கள் எனது, எமது காவியங்கள, இந்த மூன்றும் சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்த பின்பு தமிழ் பாடநெறிகளில் இவற்றின் கருத்துக்களில் மாற்றங்களை ஏன் கொண்டு வந்தார்கள்? என்ன காரணங்களுக்காக கொண்டு வந்தார்கள்? இலங்கையில் தமிழ் சிங்கள மக்களின் பாரம்பரிய உறவுகள் கலாச்சார உறவுகளை மேலும் மெருகூட்டி அதை பாடசாலை பாடவிதானங்களில் இணைப்பதற்குப் பதிலாக தமிழ் பாடவிதானங்களில் நீக்கியது ஏன்? இது மேலாதிக்கப்போக்கு அல்லவா?

    இன்று இலங்கையின் படையினரில் சிங்கள மக்களுக்கு அடுத்து இஸ்லாமிய மக்கள் இருக்கிறார்கள் இந்த படையினர் இஸ்லாமிய வணக்கத்தலங்களை ஏன் உருவாக்க முடியாது உள்ளது அற்காக இந்த அரசு, இராணுவ அமைப்பு இடம் கொடுக்குமா? கொடுக்காது விட்டால் பௌத்த மேலாதிக்கம் இல்லையா?

    இங்கு கருத்து எழுதும் பலருக்கும் தெரியும் இந்து, பௌத்தம், இஸ்லாம் மக்களின் வாழ்வின் வழிகாட்டிகள் அல்ல, வாழ்வின் வழிகாட்டிகள் என்பது ஜனநாயகம் மட்டுமே. (இங்கு ஜனநாயக படிமுறைகள் பற்றி நான் விபரிக்க முனையவில்லை) ஆனால் சமயவாத அடிப்படைவாதிகள் தத்தமது சமயங்கள் மட்டுமே சிறந்தது என்றும் சமயங்கள் ஒன்றே வாழ்வுக்கு வழிகாட்டிகள் என்று அயோக்கியத்தனம் செய்வார்கள் இந்த அயோக்கியத்தனத்தை இலங்கையில் எம்மால் பார்க்க முடியவில்லையா? அது இஸ்லாமிய நாட்டில் புத்தரின் சிலைக்கு விளக்கு வைத்ததால் கைது செய்யப்பட்டவரை காப்பாற்றும் பௌத்தம் இலங்கையில் இதர இனங்களின் வணக்கத்தலங்களையும் பாதுகாக்க வேண்டும் அல்லவா?

    நீங்களே ஒரு காரணத்தை எழுதி விட்டு அதை நான் சொன்னதாக கூறி எனக்கு விளக்கம் கூறுவதை விடுத்து இலங்கையில் காட்டாட்சி நடைபெறுகின்றது என்றால் அதைப்பற்றி எழுதுங்கள் காட்டாட்சியை மாற்றிட நீங்கள் என்ன முன்னெடுப்புச் செய்கிறீர்கள் என்பதை முன்வையுங்கள்.

    மாறி மாறி ஆட்சிக்கு வரும் இரு பெரும் கட்சியினரும் தாம் ஆட்சியில் இல்லாத போது புரட்சி கதைப்பதும் ஆட்சிக்கு வந்த பின்பு மறப்பதும் தொடர்கதை. இந்த நிலை மாற வேண்டும் என்றே தமிழர்கள் போராட எழுந்தனர்.

    தமிழர் பிரதேசங்களையே ஆக்கிரமிக்கிறார்கள் தமிழர்களையே இரவோடு இரவாக விரட்டி யடித்துவிட்டு இராணுவ முகாம் அமைக்கிறார்கள் தினம் தினம் வரும் செய்திகளை ஏன் கோட்டை விடுகின்றீர்கள் காரணம் தமிழர்கள் என்பதால் தான் இது சிங்களவர் என்பதாலோ அல்லது சிங்கள பிரதேசத்தில் நடைபெறவில்லையே ஏன்? அது சிங்கள பிரதேசம் என்று முடிவான பிரதேசம் இதர தமிழ் பிரதேசங்களையும் சிங்கள பௌத்த பிரதேசமாக்குவதன் மூலமே இலங்கையில் சிறுபான்மையினர் என்று யாரும் இல்லை எல்லோரும் இலங்கையர் என்ற அடையாளத்தை புகுத்த முனைகிறார்கள். அதற்கு அரசு பௌத்தத்தை ஆயுதமாகப் பாவிக்கிறது. இது பௌத்த சிங்கள மேலாதிக்கம் இல்லையா? பலவருடங்கள் போராடிவிட்டு இன்றும் மேலாதிக்கம் என்பதை புரிந்து கொள்ளாமல் ….சோதிலிங்கம் பௌத்த மேலாதிக்கம் என்று தவறாக…….. என்ன இது?? தவறு அல்ல நீங்கள் புரிய தவறுவது அல்லது புரிய மறுப்பது என்பது மட்டுமே தான்.

    பௌத்தர்களே இல்லாத இடங்களில் பௌத்த கோவில்களை நிறுவுவது ஏன்? அப்படி நிறுவிய பல கோவில்லகள் ஆள் அரவம் இல்லாது கிடக்கிறது ஏன்? இப்படி நிறுவிய இடங்களுக்கு அயலில் உள்ள இதர சமய கோவில்களுக்கு மக்கள் போகவிடாது தடுத்து வைக்கப்பட்டிருப்பதன் காரணம் என்ன? இது மேலாதிக்கம் இல்லையா? இதர சமய கோவிலலகளுக்குள் இராணுவம் பொலீசார் துப்பாக்கியுடன் காலில் சப்பாத்துடன் போகிறார்கள் ஏன்? யார் உத்தரவு கொடுக்கிறார்கள்? கோவில் நிறுவனர் உபயகாரர்கள் கேட்டால் அடித்து உதைக்கிறார்கள் யார் சொல்லி இவைகள் நடைபெறுகின்றன. பௌத்த கோவில்களுக்கு பாதணிகள் அணிந்து போகலாமா? உடனேயே மிரட்டுவார்கள் அல்லது பொலிசும் இராணுவத்தினரும் சேட்டில் பிடித்து இழுத்து வெளியேற்றுவார்கள். இது என்ன?, இவைகள் பற்றிய நாளாந்த செய்திகள் தினம் தினம் காவிவரும் செய்திகள் என்ன பௌத்த மேலாதிக்கம் இல்லையா?

    –“தமிழ் தேசிய புலி ஊடகங்கள் சென்ன அம்புலிமாமா கதைகளை நம்பி சைவ கேயில்களை இடித்து பௌத்தவிகாரா கட்டுகிறார்கள் என்று நீங்கள் எழுதியது உங்கள் திறமையையே மலிவீனம் ஆக்கியுள்ளது. உங்களையும் தமிழ் தேசிய புலி ஊடகவியலாளனாக மற்றியுள்ளது.”—

    சோதிலிங்கம் கட்சி சார்ந்தவன் அல்ல, அமைப்பு சாராதவர், ஊடகவியலாளன் அல்ல, சமூக ஆர்வலன் மட்டுமே என்பதும் உங்களுக்குத் தெரியும், உங்களின் இப்படியான எழுத்துகள் நிமலரூபன் சிறைக்காவலர்களை பிடித்து வைத்திருந்தான் என்று புனைவுகள் கூறி கொலை செய்தமைக்கு ஒப்பானது.எனக்கு புலி என்று பட்டம் சூட்டி பயப்படுத்தும் நோக்கம் கொண்டதில்லையா?

    அரசு தான் செய்யும் ஒவ்வொரு பிழைக்கும்; அப்பட்டமான பொய்யான காரணங்களை முன்வைத்து சாக்கு போக்கு சொல்லி தனது மேலாதிக்கத்தை ஒப்பேற்றி செல்வது சாதாரணமாக இருக்கிறதே அதற்குச் சமமான ஒன்றேயாகும்.

    புலிகள் அழிந்த பின்பு புலம்பெயர் சமூகத்தில் இருப்பவர்களைப்பற்றி அரசின் புலனாய்வுத்துறையினருக்கு தவறான செய்திகள் இப்படியான எழுத்துக்களால்தான் வழங்கப்படுகின்றது. தமது சுய லாபங்களுக்காக இதர தமிழர்கள் மீது அபாண்டங்களை சுமத்தி ஆயுதம் தரித்த புலிபட்டம் சூட்டும் நிகழ்வுகள் தாராளமாகவே நடைபெறுகின்றன. உங்கள் பார்வையில் அரசின் தவறுகளை விமர்சிப்பவன் புலிக்கு வேலை செய்கிறான் என்பதே. புலியான புலியெல்லாம் இன்று மகிந்தாவுடன்தான் கரங்கோர்த்து நிற்பது உங்கள் கண்களுக்குத் தெரியவே தெரியாது.

    பிரயோகித்த அத்தனை ராஜதந்திரங்களும் பொய்த்து விட்டன தவறாகிப்போய்விட்டது இனிமேல் பாவிக்க முடியாது போய்விட்டது இப்படியான இத்துப்போன நுட்பங்களை என்மீது பாய்ச்ச வேண்டாம் நாம் எல்லோருமாக தமிழர்களாக தோற்றுப் போயுள்ளோம் நாம் எல்லோரும் தமிழர்களின் அரசியல் உரிமைக்காக ஜனநாயகப் போராட்டங்களை உயர்த்தவே விளைகின்றோம் ஆயுதங்களை அல்ல. சோதிலிங்கம் எந்த கட்சியோ அமைப்போ சாராத வெறும் சமூக நலவிரும்பி மட்டுமே எழுத்து உரிமையுள்ள நாட்டில் எனது கருத்துக்களையும் முன்வைக்கிறேன்.

    —-“தமிழ் தேசிய புலி ஊடகங்கள் இன்று போடும் அதே தேசிய கோஷத்தை நீங்களும் தூக்கியதை”…..…..
    இந்த புலி ஊடகங்கள் புலி எழுத்தாளர்களுக்கு முன்பாகவே 1980 களில் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்காக போராட ஆரம்பித்தேன் இன்னமும் அந்த போராட்டம் இன்றும் இலங்கையில் தமிழ் மக்களிடையே நடைபெற்றுக்கொண்டு தானே இருக்கிறது இதையாரும் மறுக்கிறார்கள் என்றால் அவர்களுடன் அரசியல் கலந்துரையாடல் செய்ய முடியாது.

    வெலிக்கடைசிறையில் 1983ல் படுகொலை செய்யப்பட்ட தோழர் தங்கத்துரை அடிக்கடி கூறும் வார்த்ததைகள் இவை. “நாம் வரலாற்றில் ஒரு சிறு பகுதி நாம் என்ன செய்ய யோசிக்கிறோம் என்ன செய்கிறோம் என்பதை மக்களிடம் இதர போராட்ட அமைப்புக்களிடம் சொல்லிவிட வேண்டும் காரணம் எம்மை அரசு அழித்தாலும் அந்த கருத்து அழிக்கப்பட முடியாதது” அந்த இலக்கை நோக்கி நாம் மட்டும் தான்சிந்திக்க வேண்டும் என்பதல்ல இன்னுமொருவர் எமக்கு மேலாக சிந்தித்து செயலாற்றும் வல்லமை கொண்டவராக இருப்பார் என்பதை மந்துவிடக்கூடாது என்பதற்காகவேயாகும்.

    இலங்கையில் நடைபெறுவது பௌத்த சிங்கள பேரினவாதமேயாகும் (இலங்கையில் இந்து பேரினவாதம் இல்லை இஸ்லாமிய பேரினவாதம் இல்லை) இலங்கையில் பௌத்த பேரினவாதம் அரசமதம் என்ற அடையாளத்துடன் அரச படைகளுக்குள்ளும் அரசின் பாராளுமன்றத்துக்குள்ளும் ஒளிந்திருந்து தனது மேலாதிக்கத்தை தனது பயங்கரவாதத்தை அரசு இராணுவம் என்ற பெயரில் ஒப்பேற்றுகின்றது.

    மகிந்தா அரசு கடந்த 3 வருடங்களில் புலிகளின் மறைவுக்குப் பின்னால் இவற்றை மாற்றி அமைத்திருக்க வேண்டும் ஏன் செய்யவில்லை? ஏன் செய்ய முடியாது உள்ளது? இனிமேல் மாற்றங்களை இந்த அரசு கொண்டு வரமுடியுமா? அதற்கான பக்குவத்தில் இந்த அரசு, கட்சி உள்ளதா?

    வன்னியுத்தம் மிக உயர்ந்த இருந்த போது சரத் பொன்சேகாவின் மற்றும் பௌத்த தேரோக்களின் பௌத்த பாராளுமன்ற உறுப்பினரின் கருத்துக்கள் சிங்கள் பௌத்த பேரினவாத்தின் குரலாக இருந்தது தமிழர்கள் அடங்கிப்போதல் என்று நேரடியாகவே பேசியிருந்தார் இது ஜே ஆர் பேசியது போன்று இருந்திருந்ததே!

    இன்று வடக்கு மாகாணத்தேர்தல் நடத்த விரும்பாமையின் காரணம் என்ன? கிழக்கு மாகாணம் போன்தொரு நிலைமையை வடக்கிலும் உருவாக்கிவிடவே அரசு முனைகின்றது இனிமேல் இலங்கையில் தமிழர் பிரதேசம் அல்லது தமிழர்கள் பெரும்பான்மையாக பிரதிநிதித்துவம் பெறும் பிரதேசம் இருக்க கூடாது என்பதற்காகவே தான் காத்திருக்கிறார்கள் இதன் மறுபக்கம் என்ன சிங்கள் பௌத்த மேலாதிக்கம் அன்றி வேறு என்ன?

    சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் நோக்கம் அன்றி வேறு என்ன? மாகாவம்சம் திருத்தி எழுதி தமக்கு வேண்டியபடி எழுதி அதையே இலங்கையின் வரலாறு என்று கூற ஆரம்பித்தகாலம் தொட்டு இன்று வரையில் இலங்கையின் வரலாற்றில் தமிழர்களின் பாரம்பரியம் என்ற கருத்தாடல்கள் எங்கு சரி எழுந்திருக்கின்றதா? (விக்கிரமபாகு மட்டுமே கருத்து வெளியிட்டிருந்தார்.) ஆனால் தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்று சட்டவாக்கம் உருவாக்கவே முனைப்பு காட்டினார்கள் ஏன்? தமிழ் சிங்களம் இரு மொழிகளிலும் ஒவ்வோரு சந்தரப்பத்திலும் பாட வேண்டும் என்று சட்டவாக்கம் செய்திருக்கவில்லை இலங்கையில் பௌத்தத்தின் வளர்ச்சியில் தமிழின் பாரிய பங்களிப்புக்கு இது நல்ல உதாரணமாக இருந்திருக்கலாம் அல்லவா? ஏன் செய்ய வில்லை? அரசு ஆதரவுக்காரர்கள் அரசுநல்லா நடத்துது என்பவர்கள் அரசிடம் இது பற்றி கேட்பார்களா? இது மகிந்த சிந்தனை என்றால் நன்றாக இருந்திருக்கும்.

    “இவற்றிக்கு பெயர்தான் பௌத்த சிங்கள பேரினவாதம்”

    இலங்கையில் சிங்கள பௌத்தம் இல்லை என்பதற்கான ஆதாரங்களுடன் ஒரு கட்டுரையை வரையுங்கள் விவாதத்தை தொடர இலகுவாக இருக்கும்.

    இதர மதங்கள் நம்பிக்கைகள் மீதான அடக்குமுறை அவர்களது வாழ்வின் அடிப்படை உரிமைகளை மறுப்பது தனது இனம் மதம் மட்டுமே மேலாது என்றும் அதையே பின்பற்றுமாறு இதரமத, இனம் குழுக்கள் மீது திணிப்பதேயாகும் இலங்கையில் இதர இன மத மக்கள் சகல உரிமைகளுடன் இராணுவ அத்து மீறல்கள் இன்றி சுதந்திரமாக வாழும் போது அந்த மக்களுடன் சிங்கள பௌத்தம் பற்றிய போதனைகளை செய்து அப்போது அவர்கள் ஏற்றுக்கொள்வது ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதே.

    இலங்கையில் பௌத்த சிங்கள பேரினவாதத்தை சிங்கள மக்கள் செய்வதில்லையே மாறிமாறி ஆட்சிக்கு வரும் அரசுகளே தாமே பொறுப்பேற்று செய்வது அதன் மூலம் சிங்கள மக்களின் உரிமையாளர்கள் என்ற பெயரை தாமே பெற்று சிங்கள மக்களை தமது மாயைக்குள் வைத்து தமது சுயநலங்களை பாரத்துக் கொள்பவர்களே இதை செய்கிறார்கள்

    இவற்றை மாற்றி இலங்கையில் கசல இன மக்களுக்கமான அரசாக மாற்றி சகல இனமக்களையும் சமமாக அரசாட்சி செய்பவர்கள் இருக்கிறார்களா? மகிந்தா ஆட்சிக்கு வரும் போது அப்படியாகவே பேசி ஆட்சிக்கு வந்தார் மீண்டும் வேதாளம் முருக்ககை மரத்தில் ஆனால் எம்மை மட்டும் எதிராக போர்க்கொடி உயர்த்த வேண்டாம் அப்படி போர்க்கொடி உயர்த்துபவர்கள் புலிப்பட்டம் சூட்டப்பட்டு கொலை செய்வதில் என்பன நியாயம்? இதில் தமிழ் மக்கள் என்ன சிங்கள மக்கள் என்ன? இஸ்லாமிய மக்கள் என்ன? எல்லோரையுமே சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் பிரதிநிதிகள் கொல்லுவார்கள்.

    சிங்கள பத்திரிகையாளர்கள் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை எதிர்க்கும் சிங்கள மக்கள்,; என பலரையும் அரசுகொலை செய்வது கண்கூடு. சிங்கள மக்கள் இந்த பௌத்த சிங்கள மேலாதிக்க வாதிகளின் செயல்களுக்கு பொறுப்பானவர்கள் அல்ல அவர்களில் பலர் இந்த பௌத்த சிங்கள மேலாதிக்க வாதிகளினால் ஏமாற்றப்படுபவர்களேயாகும்.

    இந்த கருத்தை புரிந்தவர்களுடனேயே நான் கருத்தாடல் செய்ய விரும்புகிறேன் அ, ஆ, இ படிப்பித்து கருத்தாடல்கள் செய்யும் றேஞ்சில் நான் இல்லை

    அரசு வன்னியில் செய்த இனப்படுகொலையின் பின்னர் பாரிய அழுத்தங்களுடன் உலகை எதிர்கொள்கின்றது இந்த நேரத்தில் எந்த புத்திசாலித்தனமான அரசின் அமைச்சர்கள் ஆலோசகர்கள் வவுனியா சிறைச்சாலைக்குள் புகுந்து இராணுவத்தை கொல்ல அனுமதியளிப்பார்கள் இப்படி செய்ய சொன்னவர்கள் புத்திசுவாதீனமானவர்களா? என்ற கேள்வி சாதாரண மனிதர்களிடம் எழாமல் இல்லை.

    ……. ”இலங்கையில் உள்ள பிரச்சனைக்கு தீர்வு ஒரு நல்லாட்சி. இந்த நல்லாட்சி என்பது சிங்கள் பௌத்த மக்களால் தான் கெண்டு வர முடியும். அவர்களை பகைத்து எதுவும் நடைபெறாது. அவர்கள் மீண்டும் மகிந்தாவை ஆட்சிக்கு கெண்டு வரவே உங்கள் பாணியிலான எழுத்துகள் உதவும்”——-

    இலங்கையில் கடந்த 60வருடங்களாக நல்லாட்சிதான் உருவாக்கியிருக்கின்றது அதையே தான் சிங்கள மக்கள் செய்திருக்கிறார்கள் இனிமேலும் மாறி மாறி யுஎன்பி சுதந்திரக்கட்சியே ஆட்சிக்கு வரும் அதுவும் சிங்கள மக்களுக்கு நல்லாட்சியே ஆனால் எல்லோரும் பௌத்த சிங்களத்தை கையில் எடுக்காமல் ஆட்சிக்கு வரமுடியாது யாரும் தமிழர்களை கொல்லாத சிறுபான்மை இனத்தை அடக்கியாளாத அரசை உருவாக்குவோம் என்ற கோசத்தை முன்வைத்து ஆட்சிக்கு வர முடியமா?

    குறைந்த பட்சம் மதசார்பற்ற மொழியில் அடிப்படையிலான உரிமைப் பங்கீட்டை, பிரதேச மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் செய்யும் பக்குவம் பெற்றவர்கள் சிங்கள மக்களிடம் துணிந்து இவற்றை எடுத்துக்கூறும் தலைவர்கள் தேவை.

    சிங்கள முற்போக்கு சக்திகளிடம் இணைவு அவசியத்தை முன்பே எழுதியுள்ளேன்.

    நல்ல முன்மாதிரியான நோக்குடன் நிமலரூபன் விடயத்தில் அரசு செயற்படுமா? அவனது உடலைக்கூட கையளிக்காது கதைசொல்லும் அரசு, நிமலரூபன் விடயத்தில் செய்த தவறை உணரும் என்பது சந்தேகமே

    கட்டுரை சார்பான கருத்துக்களை முன்வையுங்கள்.
    அதற்கு வெளியே வந்து என்னை விமர்சிக்க வருபவர்கள் உங்கள் உண்மை முகங்களுடன் வாருங்கள். அதுவே விமர்சனமாகும்.

    sothi@btinternet.com (0784 63 22 369)(UK)


  26. சாந்தன் on July 14, 2012 9:28 pm

    ///..றோகனே சாந்தனே இதை கேட்பதற்கு நீங்கள் யார்? நீங்களே கிறிமினல் பட்டியில் உள்ளக்கப்பட்ட நியாயத்தை ருசு படுத்துவதற்கு உரிய வக்கிலாகவே எனக்கு தெரிகிறது…..//
    உங்களுக்கு எல்லாமே தெரியும். அந்தளவுக்கு விண்ணர் நீங்கள். கேட்ட கேள்விக்குப் பதில் இல்லை….தொடர்பற்ற விவாதப்பொருளை வலிந்து இழுத்து வந்து ஸ்ரீலங்கா இறந்த பிணத்தையே புணர்ந்த ராணுவத்துக்கு வக்காலத்து வாங்குவது. யாராவது கேட்டால் உனக்கு என்ன உரிமை எனக்கேட்பது. புலி என்ன திறமோ கேசுகள்!!

    //.. சிலவேளை இதைபோன்ற சம்பவங்கள் இனியும் வரும்….//
    ஸ்ரீலங்காக்காரனின் வக்கிர புத்தி தெரிந்திருக்கிறது. எதுக்கும் ஒரு சேஃப்ரிக்கு சொல்லி வைப்போம். பலே கில்லாடி நீங்கள்.

    சிறைக்காவலாளியை பணயக்கைதியாக பிடித்தனர். அவர்களுக்கு உசுப்பேத்தினர் புலம்பெயர் தமிழர், மோட்டுக்குடிகள். முடக்குவாத கோஷ்டி எனவெல்லாம் கதை விட்டு, திரு. காதர் வீடியோவில் சொன்னதையும், சோதிலிங்கத்தினதும் பதில்கள் வந்ததும் வழமையாக லங்கா ஈநியூசின் சிங்களப்பதிவை வாசித்து பின்னூட்டப்பதிவு விட்டவர் காவலாளி பணயக்கைதியாகப் பிடிக்கப்படவில்லை இது திட்டமிட்ட கொலைஎன வந்தபோது மாயமாய் போய் இப்போது நிரோமி டி சொய்சாவை வலிந்து இழுத்து திடீரெனெ வருகிறார். பத்திரிகையாள ரேடியோகாரருக்கு தலைப்பு என்னவென்று மறந்து போச்சு. மோட்டுக்குடி முடக்குவாத மருந்து ஊரெல்லாம் ஓடி ஓடி சுத்திச் சுத்தி வருகின்றது!!


  27. சாந்தன் on July 14, 2012 9:37 pm

    //…நிமலரூபன் புலி என்பது தெரிந்த விஷயம். நிமலரூபனின் பிரச்சனைக்கும் கோமாவில் இருக்கும் நபரின் கதைக்கும் என்ன சம்பந்தம்?…..//

    “…வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் டில்ருக்ஷன் என்பவரும் ஒருவர்….இலங்கை ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்ற டில்ருக்ஷன் என்ற தமிழ் அரசியல் கைதி பாஷையூரைச் சேர்ந்தவர் என மற்றுமொரு குடும்பத்தினர் இப்பொழுது உரிமை கோரியிருக்கின்றனர்.”– – பி.பி.சி

    சம்பந்தம் புரியுதா நந்தா??


  28. thurai on July 15, 2012 10:23 am

    //சம்பந்தம் புரியுதா நந்தா??//சாந்தன்
    இதுவரை யாராவது தமிழர் கொல்லப்பட்டால் அவர்கள் விடுதலைக்கு வித்தானார்களென்றும், கால் கை இல்லாதவர்களையோ காயப்பட்டவர்களையோ கருத்தில் அனறும் இன்றும் எடுப்பதில்லை.

    விடுதலையென்றால் அழிவுகளை தமிழர் சந்திதித்தே நேரவேண்டும். இவவாறு ஏதும் கொலைகள் இல்லாவிட்டால் நாடுகடந்த அரசு, உலகத்தமிழர் பேரவை மேலும் பல அமைப்புகளின் பிழைப்புகள் இல்லாமல் போய்விடுமல்லவா.-துரை


  29. சாந்தன் on July 15, 2012 3:42 pm

    கட்டுரை சார்பான கருத்துக்களை முன்வையுங்கள்.
    அதற்கு வெளியே வந்து என்னை விமர்சிக்க வருபவர்கள் உங்கள் உண்மை முகங்களுடன் வாருங்கள். அதுவே விமர்சனமாகும். -

    மிக்க நன்றி சோதி! ஆனால் எவ்வளவு சொன்னாலும் புரியாது இவர்களுக்கு!


  30. BC on July 15, 2012 7:24 pm

    பல உண்மைகளை தெரிவித்த முன்னாள் புலி நிரோமி பற்றிய தகவலுக்கு அஜீவனுக்கு நன்றி.


  31. BC on July 15, 2012 7:49 pm

    //இஸ்லாமிய நாட்டில் புத்தரின் சிலைக்கு விளக்கு வைத்ததால் கைது செய்யப்பட்டவரை காப்பாற்றும் பௌத்தம்//
    சிறிதும் பொருத்தம் அற்ற உவமானம். சவூதி அரேபியாவில் புத்தரை வணங்கியதற்காக கைது செய்ப்பட்டார் பௌத்த மதத்தவர். இலங்கையில் இந்துக்கள் சாமி கும்பிட்டாலோ, முஸ்லிம்கள் சாமி கும்பிட்டாலோ கைது செய்யபட மாட்டார்கள். நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளும் ஏற்பாடுகள் புலம் பெயர் நாடுகளில் பரபரபாக நடந்து கொண்டிருக்கு.


  32. T Sothilingam on July 15, 2012 10:20 pm

    நான் எழுதிய பதில் பின்னூட்டத்தின் ஒரு துண்டை எடுத்து தனிமைப்படுத்தி பார்த்தால் அது வேறு அர்த்தப்படும் தயவு செய்து அதை தவிர்த்து சிறைக்கைதி நிமலரூபனின் கொலை சம்பந்தமான உங்கள் கருத்தை பதிவிடவும். நன்றி.


  33. Rohan on July 15, 2012 10:46 pm

    ////இஸ்லாமிய நாட்டில் புத்தரின் சிலைக்கு விளக்கு வைத்ததால் கைது செய்யப்பட்டவரை காப்பாற்றும் பௌத்தம்//

    BC – சிறிதும் பொருத்தம் அற்ற உவமானம். சவூதி அரேபியாவில் புத்தரை வணங்கியதற்காக கைது செய்ப்பட்டார் பௌத்த மதத்தவர். இலங்கையில் இந்துக்கள் சாமி கும்பிட்டாலோ, முஸ்லிம்கள் சாமி கும்பிட்டாலோ கைது செய்யபட மாட்டார்கள். //

    ஆனால், சோதி எழுதியது என்னவோ:

    //அது இஸ்லாமிய நாட்டில் புத்தரின் சிலைக்கு விளக்கு வைத்ததால் கைது செய்யப்பட்டவரை காப்பாற்றும் பௌத்தம் இலங்கையில் இதர இனங்களின் வணக்கத்தலங்களையும் பாதுகாக்க வேண்டும் அல்லவா?//


  34. நந்தா on July 16, 2012 6:48 am

    தமிழ் மக்களின் உரிமை என்பது இதுவரை தமிழ் கட்சிகளால் வரையறுக்கப்படவுமில்லை. பகிரங்கப்படுத்தப் படவுமில்லை.

    ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் ஒவ்வொரு கதையுடன் தமிழ் கட்சிகள் வருவார்கள். தேர்தல் முடிந்தவுடன் அந்தக் கதைகளும் முடிந்து விடும்!

    காளியின் வாகனம் சிங்கம். அதனால்த்தான் சிங்கக் கொடி பிடிப்பதில் தனக்குப் பிரச்சனை இல்லையென்று சம்பந்தன் அசட்டுத்தனமாக கூறுகிறார். சம்பந்தனுக்கு அந்தக் கொடி இலஙையின் தேசியக் கொடி என்பது தெரியாதா?

    இப்பொழுது யாழ் நூலகம் எரிப்பு மெதுவாக அமுக்கப்படுகிறது. யு.என்.பி சிங்களவர்களுடன் சேர்ந்து தமிழர்கள் கொல்லப்படுவது தங்கள் அரசியலுக்கு லாபம் என்றே செல்வனாயகம் காலத்திலிருந்து நடத்தப்படும் தமிழ் உரிமை அரசியல். புலிகளும் அதனையே செய்தனர்.

    தமிழ் அரசியலுக்காகவும் யு என் பி கும்பல்களினதும் லாபங்களுக்காக தமிழர்கள் தாக்கப்படுவதிலிருந்து கொலை வரை முன்னேற்றம் வந்துள்ளது.

    அடுத்து சிறை வைக்கப்பட்டுள்ளவர்களுக்காக எந்த “தமிழ்” சட்டத்தரணியும் நீதி மன்றம் போகத் தயாரில்லை. ஏன்? சோதிலிங்கம் சொல்லுவாரா?

    இலங்கை அரசின் சட்ட திட்டஙளுக்குள் அரசியல் போராட்டம்நடத்தி சிறைக்கு அனுப்பப்படுபவர்கள் மட்டுமே “அரசியல் கைதிகள்” என்ற அந்தஸ்த்தைப் பெறுவார்கள்.

    குண்டு வைத்தவனும், பிரபாகரனுக்குச் சத்தியப் பிரமாணம் எடுத்துவிட்டு கொலை, கொள்ளை, குண்டு வைப்பு நடத்தியவர்கள் “அரசியல் கைதிகள்” என்ற வரையறையுள் எப்படி வர முடியும்?

    சரணடைந்த புலிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தங்களையும் அப்படி விடுதலை செய் என்று கைது செய்யப்பட்ட புலிகள் கோருவது எந்த வகையில் நியாயம்?

    ஆயினும் புலிகள் இலங்கை அரசிடம் “நீதி வழங்கு” என்று கேட்பது புரியவில்லை. வெளினாடுகளில் மகிந்த போர்குற்றவாளி, கைது செய் என்று கோஷம் போடுபவர்கள் கைது செய்யப்பட்ட புலிகளை கருணை காட்டி விடுதலை செய் என்பது என்ன நாடகம்?


  35. Rohan on July 16, 2012 8:17 am

    //இலங்கை அரசின் சட்ட திட்டஙளுக்குள் அரசியல் போராட்டம்நடத்தி சிறைக்கு அனுப்பப்படுபவர்கள் மட்டுமே “அரசியல் கைதிகள்” என்ற அந்தஸ்த்தைப் பெறுவார்கள். //

    அகராதி வரைவிலக்கணப்படி தமது அரசாங்கத்தை எதிர்த்தவர்கள் அல்லது விமர்சித்தவர்கள் கைது செய்யப்படும் போது….

    //ஆயினும் புலிகள் இலங்கை அரசிடம் “நீதி வழங்கு” என்று கேட்பது புரியவில்லை…..கைது செய்யப்பட்ட புலிகளை கருணை காட்டி விடுதலை செய் என்பது என்ன நாடகம்?//

    நீதிமன்றம் கொண்டு போ – அல்லது விடுதலை செய் என்று கேட்பதில் எங்கே முரண்பாடு இருக்கிறது? கருணை காட்டி? யார் கேட்டார்கள்??

    //அடுத்து சிறை வைக்கப்பட்டுள்ளவர்களுக்காக எந்த “தமிழ்” சட்டத்தரணியும் நீதி மன்றம் போகத் தயாரில்லை. ஏன்? சோதிலிங்கம் சொல்லுவாரா?//

    ஒட்டாவா போக எந்த விமானம் எடுக்க வேண்டும், சோதிலிங்கம்? அடுத்த ஆண்டு பெற்றோல் விலை கூடுமா சோதிலிங்கம்??


  36. T Sothilingam on July 16, 2012 9:08 am

    நந்தா
    சோதிலிங்கம் ஒரு பொது மகன் மட்டுமே எந்த ஒரு அரசியல் கட்சியையைோ அமைப்பையோ சார்ந்தவன் அல்ல

    எனது பொது அறிவு என்னவென்றால் இலங்கை ஒரு நாடு, ஒரு அரசு, ஒரு அரசியல் அமைப்பை கொண்ட நாடு, மாறி மாறி ஆட்சிக்கு கட்சிகள் வருகின்றன. இலங்கையில் வரலாற்றில் பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அவை ஏன் செய்யப்பட்டன?? இல-இந்திய ஒப்பந்தம் – தமிழ் அரசியல் இயக்கங்களும் அரசும் உடன்பட்ட இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசம் – புலிகள் அரசு ஒப்பந்தம் பல நாடுகளின் ஒப்புதலுடன் – இப்படி சில உங்கள் நினைவை விட்டு ஏன் விலகியதோ?

    இயக்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை செய்கின்றது அந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் கைது செய்யப்படும்போது அரசியல் கைதி இல்லையா?

    நான் சிறையில் இருந்து கொழும்பு உயர்நீதி மன்றம் கொண்டுவரப்பட்டபோது எனக்காக வாதிட யாரையும் நான் ஒழுங்கு செய்திருக்கவில்லை. கோட்டில் எனது பெயர் அழைக்கப்பட்டது ஒரு சில நிமிடங்கள் யாரும் ஏதும் பேசவில்லை. என்னைப் பொறுத்தவரையில் எதுவும் நடக்கட்டும் என்றே இருந்தேன். ஒருபக்கத்தே இருந்த மோதிலால் நேரு எழுந்து தான் பிரதிநிதிப்படுத்துவதாக கூறினார்……

    இன்று அப்படி ஒருவர் எழுந்து சொன்னால் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்


  37. mao on July 16, 2012 9:28 am

    சோதியின்முகம் கண்டேன் அன்று. தனது இலங்கைப் பயணக் குறிப்பில் தான் கண்டதையும் கேட்டதையும் எழுதியிருந்தார்.

    எங்கும் இராணுவமயம் சிங்களவர்கள் புத்தகோவில்கள் தமிழ் நிலங்கள் பறிபோகின்றன். வாழையடிவாழையாக வந்த தமிழ்மக்களின் புனிதப்பிரதேசமான கிண்ணியா கூட இன்று சிங்களவரின் ஆதிக்கத்தில் தான். புகைப்படம் கூட அனுப்பியிருந்தார்.

    ஆனானப்பட்ட பொதுநலவிரும்பிகள். யுத்தம் நம்மைவிட்டு கடந்துபோயிற்று. செல்லடியும் இல்லை குண்டுவீச்சு விமானமும் இல்லை. இடம்பெயர்வும் இல்லை என்று ஆர்ப்பரித்து கூத்தாடிக் கொண்டிருக்கும் வேளையில் சோதி வாடியமுகத்துடன் லண்டன் வந்து சேர்ந்தார்.

    இன்று…தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லாடா!! தூக்குமேடை பஞ்சுமெத்தை! ஆண்ட தமிழன் மீண்டு ஆளநினைப்பதில் என்ன தவறு என்பது போன்ற வார்தைகளின் கோட்டை தாண்டவாறு தனது கருத்துக்களை முன்மொழிகிறார். எமக்கு சிங்களப்புலி தமிழ்புலியென முத்திரை குத்தி எம்மீது உங்கள் நியாயத்தை திணிக்காதீர்கள் எனவும் பண்போடு கேட்டுக் கொள்ளுகிறார்.

    திருகோணமலையின் கடற்கரைக் கிராமத்தில் காலணி எதையுமே “பாட்டா” என்று சொல்லுவார்கள். இது என் கண்ணால் கண்டகாட்சி. வன்முறைக்கு இலக்கணமே புலிகள் தான். வன்முறையை புலிகள் என்று அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது?.

    20:80 இணையாக முடியாது என்பதை எந்த சிறுபிள்ளைக்கும் தெரியும். எண்பது உள்ள நியாயம் இருபது உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டுமென்பது அறியாமை. இதையும் மீறிக் கேட்டீர்களாக இருந்தால் அது பூஜியத்தில் தான் வந்தடையும்.

    இதை வெல்லுவதற்கு வேறு வழியும் இருக்கிறது.. மனிதவாழ்கை வெறும் கணக்குடன் முடிவடைவதில்லை. அதற்கு அப்பால்பட்டதும் ஒன்று இருக்கிறது. அதுவே! வரலாறு.

    சோதி சொன்ன 80:20 இனரீதியில் தான் பிரிக்க முடிந்தது. அடக்கியொடுக்க பட்ட மக்களில் எனரீதியில் பிரித்துப்பார்த்தால் 79.5 வீதமானவர்கள் சிங்கள பகுதிகளிலும் 19.5 வீதமானவர்கள் தமிழ்பகுதிகளிலும் இருப்பதை காண முடியும்.

    இந்த காலங்கள் தான் தன்கட்டுப்பாட்டையும் மீறி சூழன்று கொண்டு இருக்கிறது. இதை புரிந்து கொள்வதற்கு தமிழ்-சிங்கள அடையாளங்கள்களோ விக்கிரபாகு கருணரெட்ண- மகிந்தா அடையாளங்கள் தேவையில்லை.

    பின்குறிப்பு: இங்கு கேள்விகேட்டமட்டும் தகுந்த பல தருமிகள் இருக்கிறார்கள். பதில் சொல்லமாட்டார்கள். மகிந்தாக்கெதிரான கேள்விகள் எழுப்பக் கூடியவையே! அதுவே ஜனநாயகம். இந்த ஜனநாயக உரிமை யாருக்கு இருக்குமென்றால். புலிகளின் வதைமுகாமில் புகையாக்கப் பட்டவர்களின் விபரம் தெரிந்தவர்கள் மட்டுமாலேயே!.


  38. T sothilingam on July 16, 2012 10:02 am

    மாவோ
    சோதிலிங்கம் ஒரு பொது மகன் மட்டுமே எந்த ஒரு அரசியல் கட்சியையைோ அமைப்பையோ சார்ந்தவன் அல்ல

    எனது பொது அறிவு என்னவென்றால் இலங்கை ஒரு நாடு, ஒரு அரசு, ஒரு அரசியல் அமைப்பை கொண்ட நாடு, மாறி மாறி ஆட்சிக்கு இரண்டு கட்சிகள் வருகின்றன. இலங்கையில் வரலாற்றில் பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அவை ஏன் செய்யப்பட்டன?? இல-இந்திய ஒப்பந்தம் – தமிழ் அரசியல் இயக்கங்களும் அரசும் உடன்பட்ட இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசம் – புலிகள் அரசு ஒப்பந்தம் பல நாடுகளின் ஒப்புதலுடன் – இப்படி சில உங்கள் நினைவை விட்டு ஏன் விலகியதோ?

    இயக்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை செய்கின்றது அந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் கைது செய்யப்படும்போது அரசியல் கைதி இல்லையா?

    நான் எழுதியது
    /அத்துடன் இந்த நிலைமைகளின் எதிர்காலம் என்ன என்பதை கிரகித்துக்கொள்ள முடியாதவர்கள் நல்லாட்சியே தேவை என்ற கருத்து நிலைகளில் உளல்கிறார்கள் தாம் அந்த கருத்து நிலையை எடுத்துக் கொள்கிறார்கள் நல்லாட்சியை உருவாக்குவது வெறுமனே இலங்கையில் சிங்கள மக்களின் கைகளில் மட்டும் தங்கியில்லை, தமிழர்களின் பங்களிப்பு சிங்கள மக்களின் பங்களிப்புக்கு சமமாக இருத்தல் வேண்டும் அதற்கான ஜனநாயகத்தை உருவாக்குவதே சிறந்தது அதாவது 80 சதவிகித சிங்கள இனத்துக்குள்ள அத்தனை உரிமைகளும் பலமும் அதிகாரங்களும் சிறுபான்மை இனத்தவர்களுக்கும் இருக்க வேண்டும் பெரும்பான்மை இனத்தவர்கள் அரசை மாற்றியமைக்க உள்ள அதே அளவு உரிமை சிறுபான்மையினரும் பெரும்பான்மையினரின் ஆதரவின்றி அரசை மாற்றியமைக்கும் உரிமை தேவை அரசு பரிசீலிக்குமா? (நாம் ஜரோப்பில் உள்ள பல நாடுகளின் அரசியல் அமைப்புக்களை படிக்க வேண்டியுள்ளது) /

    நான் எழுதிய பதில் பின்னூட்டத்தின் ஒரு துண்டை எடுத்து தனிமைப்படுத்தி பார்த்தால் அது வேறு அர்த்தப்படும் தயவு செய்து அதை தவிர்த்து சிறைக்கைதி நிமலரூபனின் கொலை சம்பந்தமான உங்கள் கருத்தை பதிவிடவும். நன்றி.


  39. mao on July 16, 2012 11:04 am

    சோதி மாவோவுக்கும் நந்தாவுக்கும் ஒரே பதில்தானா? நான் ஒரு பொதுமகன் என்பது?

    இந்த வகையில் பார்க்கப்போனால் வேலுப்பிள்ளை பிரபாகரனும் ஒருபொதுமகனே! பத்துவருடங்களுக்கு முன்பும் மகிந்தாவும் ஒரு பொதுமகனே! தமிழின அடையாளத்தில் கொல்லப்பட்ட அத்தனை உயிர்களும் பொதுமக்களே!

    துரோகிப்பட்டம் சூட்டபட்ட பள்ளியாசியர்கள் கல்லூரியாசியர்கள் அரசியல்வாதிகள் வியாபாரிகள் கப்பங்குடுக்க மறுத்தவர்கள் முஸ்லீம் தமிழ்சமூகம் முழுமையாக பொது மக்களே!

    அதிகாரத்தையும் அதிகாரத்திற்கு உட்படுபவனையும் அடக்கியாளுவதற்கு ஒரு வரன்முறை இருக்கிறது. அது எது?

    நிமலரூபன் இறந்துவிட்டார். அவர் இறக்கும்போது தனது தனது தவறுகளை உணர்ந்தவராக இறக்கவில்லை. வெட்டவெளியில் நாற்படைகள் தோற்கடிக்கப்பட்டு நிர்மூலமாக்க பட்டபோது கட்டியசிறையில் வன்முறையில் ஜனநாயகத்தை வெளிப்பட்டதலாம் என்று நினைப்பது எங்கனம்?.

    திருசோதி நீங்கள் சொல்லாம் ஜெயிலரை பிடித்து வைத்ததுக்கும் நிமலரூபனுக்கும் சம்பந்தம் இல்லையென்று…
    வன்னி-புலி வன்முறையை சிறையில் தன்யிகமாகவோ தூண்டுதலேயோ தொடர்ந்திருக்கிறார்கள்.

    இதை நீங்கள் மறுக்க முடியுமா? இதற்காக சிங்களயரசு இராணுவம் செய்தது சரியானது என நான் வாதிடுவதாக கற்பிதம் செய்யவேண்டாம்.

    இனியும் சொந்தயினத்தை சொல்லி தூண்டில் புழுக்களாக மாற வேண்டாம் என எச்சரிக்கை செய்கிறேன். தமிழ் தேசியக் கூட்டப்பு சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற கசடுப்பேர்வழிகளுக்கு பின்னால் சோதிலிங்கமும் போய்விடக்கூடாது. தேசம் வாசகர்களும் அள்ளுப்பட்டு விடகூடாது.


  40. Ajith on July 16, 2012 11:43 am

    மாவோ வின் உண்மையான சிங்க முகத்தை இப்போது கண்ணாடியில் பார்க்கிறோம். மகிந்தவின் உருவம் அப்படியே தெரிகிறது. நீதியான ஒரு ஆட்சியை பற்றி பற்றி யாராவது விமர்சித்தால் இன்று யுத்தம் இல்லை ஆர்ப்பரித்து கூ தட்டி கொண்டு இருக்கிறார்களாம். இவர் யாரை சொல்கிறாரோ தெரியவில்லை. ஆம் யூத்தம் இல்லை சர்வாதிகாரம் அங்கு ஆட்சி செய்கிறது. ஒருபக்கத்தில் சிங்கள இராணுவத்தின் ஆட்சி, மறு புறத்தில் ராஜபக்சே குடும்பத்தின் அடக்குமுறை. கடத்தல்களும், கப்பம் வேண்டும் ஆட்சிமுறை வன்முறை இல்லையாம் இந்த மாவோக்கு. எதற்கும் புலி முகத்தை வைத்து அபிசேகம் செய்ய முனையும் இந்த மாவோ வின் தத்துவம் பிரமாதம். திருகோணமலையில் எல்லா செருப்பையும் பாட்டா என்கிறார்களாம் ஆகவே வன்முறை என்றால் புலியாம். யாழ்பாணத்திலும் செருப்பை பாட்டா என்பார்கள், ஹம்பாந்தோட்டையில் அதே செருப்பை பாட்டா என்று தான் சொல்வார்கள் .

    20 :80 இணையாக முடியாது என்று புதிய கண்டு பிடிப்பை கூறும் கணித பண்டிதரின் அறிவை மெச்சாமல் இருக்க முடியாது. 79 .5 : 19 .5 கணகிற்கான தகவல் மூலம் என்ன இன்று மாமேதை சொல்லி இருக்கலாமே. யார் அவர்களை ஒடுக்குகிரார்கள் என்று சொல்லாமல் கணக்கு விடும் வரலாற்று விந்தை பிரமாதம். இந்த கணக்கிற்கு வரலாற்றில் வழி இல்லையோ மாவோ? இதற்கு மேல் கேட்டால் என்ன விகிதம் கிடைக்கும் என்று மகிந்தவின் மருமகனுக்கு தெரியாதோ?


  41. BC on July 16, 2012 12:21 pm

    றோகன்,
    நிமலரூபனை நியாயபடுத்துவதற்காக தனது அறையில் புத்தர் கும்பிட்ட ஒருவரை கைது செய்த சவூதி அரேபியாவிடம் இருந்து அவரை காப்பாற்ற முற்பட்ட அரசை பௌத்தம் இலங்கையில் இதர இனங்களின் வணக்கத்தலங்களையும் பாதுகாக்க வேண்டும்என்று உங்கள் கட்டுரை ஆசிரியர் கூறியது சிறிதும் பொருத்தம் அற்ற உவமானம்.
    இலங்கையிலும் சாமி கும்பிட்டால் இந்து,முஸ்லிம்கள் கைது செய்படுவார்கள், என்ற நிலை இருந்தால்,சவூதி அரேபியாவில் நடந்த மாதிரியே இலங்கையிலும் நடக்கும் என்றால் உங்கள் கட்டுரையாளர் பௌத்த சிங்களவாதிகள் தனது அறையில் புத்தர் கும்பிட்டதிற்காக கைது செய்யப்பட்ட ஒருவரை சவூதி அரேபியாவிடம் இருந்து காப்பாற்றும் பௌத்தம் சிங்கள பேரினவாத அரசு இலங்கையிலும் பிற மதத்தவரை சாமி கும்பிட அனுமதிக்க வேண்டுமல்லவா என்று சொன்னால் இந்த நியாயத்தை யாரால் மறுக்க முடியும்?

    இலங்கையில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வணங்கும் தலங்கள் புரணமைப்பு செய்யபட்டு கொண்டிருக்கின்றன.
    சவூதி அரேபியாவில் தனது அறையிலேயே சாமி கும்பிட கூட உரிமை மறுக்கபடும் ஒருவனை இங்கே இலங்கையோடு கட்டுரை ஆசிரியர் கொண்டு வருகிறார் என்றால் அவரது இனவெறியை என்னவென்பது?


  42. T Sothilingam on July 16, 2012 12:28 pm

    அமைப்புக்கும் தனி மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம் மாவோ அவர்களே?

    இன்று அமைப்பு இல்லை அமைப்பில் இருந்த தனிமனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அன்றைய அமைப்பின் குணாம்சங்களை கொண்டிருக்கலாம் அதன் காரணமாக அவர்கள் சிறையில் என்ன தவறுகளை செய்திருந்தாலம் ஒரு சிறை நிர்வாகம் இருக்கிறது அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு;

    அந்த குணாம்சம் என்பது அமைப்பு சார்ந்தே அமைப்பு இல்லாதபோது அந்த அமைப்பின் பிரதிநிதிகளாக அந்த குணாம்சம் கொண்டவர்களாக பார்ப்பது தவறு (இயங்கியல் அல்ல) இன்று இந்த தனிமனிதர்களுக்கு புனர்வாழ்வு அழிக்க வேண்டியது (அவர்கள் இலங்கைப்பிரஜைகள் எமது மக்கள் தவறாக வழிநடாத்தப் பட்டவர்கள் என்று மகிந்தா பல தடவைகள் கூறியிருந்தாரே) அரசின் பொறுப்பு குறைந்த பட்சம் புலிகளின் படைத்துறைத் தளபதி கேணல் கருணா போன்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட புனர்வாழ்வையே நான் உடனடியாக எதிர்பார்க்கிறேன். அவர்களை சிறையில் வைத்து கொலை செய்தது சர்வதே குற்றம் அல்லவா? சரி குற்றம் இழைத்தவர்களை குற்றத்தினாலா தண்டிப்பது இது தர்மமா? இது பெளத்தமா?

    ……..இனியும் சொந்தயினத்தை சொல்லி தூண்டில் புழுக்களாக மாற வேண்டாம் என எச்சரிக்கை செய்கிறேன். தமிழ் தேசியக் கூட்டப்பு சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற கசடுப்பேர்வழிகளுக்கு பின்னால் சோதிலிங்கமும் போய்விடக்கூடாது. தேசம் வாசகர்களும் அள்ளுப்பட்டு விடகூடாது.……
    இந்த கருத்துக்களுடன் நான் உங்களுடன் முழுமையாக உடன் படுகின்றேன் இனிமேல் தமிழினத்தின் பெயரால் கடந்தகால தவறுகள் மீளவும் நடைபெறக் கூடாது என்பது மிகவும் முக்கியம்.

    இலங்கையில் இன்று தமிழர்களின் அரசியல் சாத்வீக ஜனநாயக போராட்டங்களை பயங்கரவாதமாக சித்தரிப்பது யார்? அரசு அதையும் விட அரச பயங்கரவாதத்தின் மூலம் மக்கள் மீது இராணுவ அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றது. இதை எமது சில தோழர்கள் மறுக்கிறார்கள். நீங்கள் அல்ல.

    புலம்பெயர் தமிழர்கள் போராட்டங்களை கையில் எடுப்பது தவிர்க்க முடியாதது. இலங்கை அரசு முறையாக செயல்ப்படுவதன் மூலம் மட்டுமே தீர்வினை அடையலாம்?, நடக்குமா?


  43. Rohan on July 16, 2012 1:03 pm

    //மாஓ – தமிழ் தேசியக் கூட்டப்பு சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற கசடுப்பேர்வழிகளுக்கு பின்னால் சோதிலிங்கமும் போய்விடக்கூடாது. தேசம் வாசகர்களும் அள்ளுப்பட்டு விடகூடாது//

    ஆயிரம் தந்திரம் தெரிந்த நரி போல, தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு வழிகளை அடுக்கி வைத்திருப்பவர் பேசுகிறார்.

    //சோதிலிங்கம் -புலம்பெயர் தமிழர்கள் போராட்டங்களை கையில் எடுப்பது தவிர்க்க முடியாதது.//

    புலம்பெயர் தமிழர்கள் எடுப்பது எந்த அளவு வரை போகும் என்பது தெரியவில்லை…

    கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் மணி ரத்தினம் பயன்படுத்திய சண்முகம் சிவலிங்கத்தின் வரிகள்:

    எங்கள் புருவங்கள்
    தாழ்ந்துள்ளன
    எங்கள் இமைகள் கவிந்துள்ளன
    எங்கள் உதடுகள் அண்டியுள்ளன
    எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன
    நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்
    எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக
    எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக
    எங்கள் முதுகில் கசையால் அடிக்குக
    எங்கள் முதுகுத் தோல் பிய்ந்துரிந்து போகட்டும்
    தாழ்ந்த புருவங்கள் ஒருநாள் நிமிரும்
    கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்
    இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும்
    கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்
    அதுவரை நீங்கள் எங்களை ஆள்க
    அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக

    ஆனால்,தாழ்ந்த புருவங்கள் நிமிரும் போதும் கவிந்த இமைகள் உயரும் போதும் இறுகிய உதடுகள் துடிதுடிக்கும் போதும் கண்டிய பற்கள் நறநறக்கும் போதும் “அதிகாரத்தையும் அதிகாரத்திற்கு உட்படுபவனையும் அடக்கியாளுவதற்கு ஒரு வரன்முறை இருக்கிறது. அது எது?” என்று வெறும் குடத் தத்துவங்களுடன் வருவார்கள் சிலர்!


  44. Rohan on July 16, 2012 1:11 pm

    //சவூதி அரேபியாவில் தனது அறையிலேயே சாமி கும்பிட கூட உரிமை மறுக்கபடும் ஒருவனை இங்கே இலங்கையோடு கட்டுரை ஆசிரியர் கொண்டு வருகிறார் என்றால் அவரது இனவெறியை என்னவென்பது?//

    இனவெறியர் சோதிலிங்கம் ஒழிக…

    லேபல்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் இலவசமாக வழங்கப்படும். அணுகுங்கள் BC Enterprises.


  45. BC on July 16, 2012 2:30 pm

    //றோகன் -ஆயிரம் தந்திரம் தெரிந்த நரி போல தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு வழிகளை அடுக்கி வைத்திருப்பவர் பேசுகிறார்//
    ஓம் மாவோ சொல்வது இலங்கையில் வாழும் தமிழர்களை காப்பாற்றுவதற்கான வழிகளை.
    கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் சினிமா பாடலுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்? கன்னத்தில் முத்தமிட்டால் படம் புலிகளுக்கு விரோதமானது என்று சொல்லபட்டது வெளிநாட்டில் வசதியாக வாழ்ந்து கொண்டு வெறும் குடத் தத்துவங்கள் பேசாதீர்கள்.


  46. நந்தா on July 16, 2012 6:44 pm

    சோதிலிங்கம்
    தமிழ் அரசியலில் தமிழ் சட்டத்தரணிகளின் தகிடுதத்தங்கள்தான் இன்று தமிழர்களைக் காவு கொடுக்கும் காரணிகளாக அமைந்து விட்டன. இந்த சட்டத்தரணிகள் அல்லது பிரக்கிராசிகள் இன்று பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்காக வழக்காட தயாரில்லை. ஏனென்றால் அவர்களிடம் இருந்து சில்லறை கிடைக்காது.

    தமிழினிக்காக ஒரு சிங்கள சட்டத்தரணி வழக்காடியிருக்கிறார். பொங்குதமிழ் கணெசலிங்கத்தின் கற்பழிப்பு வழக்கில் வழக்காடிய சிறிகாந்தாக்கள் எதற்காக மவுனம் சாதிக்கிறார்கள்?

    சம்பந்தனே ஒரு சட்டத்தரணிதான். அவரால் சிங்கக் கொடி பிடிக்க முடிகிறது. ஆனால் பத்து தமிழ் சட்டத்தரணிகளை அமர்த்தி சிறையில் உள்ளவர்களுக்காக வழக்காட முடியாதா?

    இயக்கங்களுடன் பேச்சு வார்த்தை செய்யும் பொழுது இயக்கங்கள் குண்டு வைத்தால் கைது செய்யக் கூடாது என்றோ அல்லது இயக்க அங்கத்தவர்களின் அடாவடிகள அரசு தட்டிக் கேள்க்க முடியாது என்று வாதிடுவது நல்ல கருத்தாகப் படவில்லை.

    பயங்கரவாத தடைச் சட்டம் இன்றும் அமுலில் உள்ளது. அதன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சட்டத் தரணிகள் மூலம் தங்கள் வழக்குகளை விரைவு படுத்தலாமே ஒழிய தன்னிச்சையாக ஆர்ப்பாட்டம் பண்ணிக் காரியம் சாதிக்க முடியாது.

    சுமந்திரனின் வழக்கை தமிழ் சட்டத்தரணி பாலேந்திரா நடத்தி வெற்றியும் பெற்றிருக்கிறார். எனவே “இன்று அப்படி ஒருவர் எழுந்து சொன்னால் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்” என்று பயம் காட்டுவது சரியான பதிலல்ல!

    சிறையில் உள்ள புலி சந்தேகநபர்கள் பலரிடம் நிதி வசதி இல்லையென்பதும், அவர்களால் யாருக்கும் பயனில்லை என்பதும் மாத்திரம்தான் நிஜம். அதனால்த்தான் அவர்கள் “கைவிடப்பட்ட கேஸ்”களாக மாறியுள்ளனர். அவர்களைத் தூண்டிவிட்டு இப்படி ஏதாவது மரணம், கொலை என்று ஆகினால் அது அரசியலாக்க உபயோகப்படும் என்ற எதிர்பார்ப்பே இப்பொழுது உள்ளது.

    லண்டனில் புலிக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்ய ஆயிரக் கணக்கில் இருப்பவர்கள் கைதிகளாக உள்ள புலிகளை விடுவிக்க் அல்லது அவர்களுக்காக வழக்குப்பேச முயலாதது பரிதாபம்.

    புலிகள் சாகத் துணிந்தவர்கள் சாகட்டும் என்று விட்டு விட்டார்களோ தெரியவில்லை! தமிழர்கள் மண்டையைப் போட்டாலே தமிழர் போரட்டம் வீறு கொள்ளும் என்ற சித்தாந்தம் காரணமாகவும் இருக்கலாம்!


  47. Rohan on July 16, 2012 10:09 pm

    ////றோகன் -ஆயிரம் தந்திரம் தெரிந்த நரி போல தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு வழிகளை அடுக்கி வைத்திருப்பவர் பேசுகிறார்////

    //ஓம் மாவோ சொல்வது இலங்கையில் வாழும் தமிழர்களை காப்பாற்றுவதற்கான வழிகளை.//

    ஓமோம்… நானும் அதே விடயத்தைப் பற்றித் தன் பேசுகிறேன். இலங்கையில் வாழும் தமிழர்களை காப்பாற்றுவதற்கான வழிகளை BCக்கும் Mao சொல்லியிருப்பார் என்று தோன்றுகிறது. BCஉம் Maoஉம் சேர்ந்து தாம் அடுக்கி வைத்திருக்கும் இலங்கையில் வாழும் தமிழர்களை காப்பாற்றுவதற்கான வழிகளைப் பட்டியல் இடலாம். எனது முதலாவது வரியை IQ 60க்கு மேல் கொண்டவர்களுக்காகவே இலகுவாக எழுதியிருந்தேன். சரி – அடுத்த தடவை இன்னமும் இறங்கி வந்து பேசுகிறேன்.

    // கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் சினிமா பாடலுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்?//

    உவமானம், உவமேயம், பொதுத் தன்மை உதைக்கிறதோ. சோதிலிங்கம் எழுதிய வழிபடும் உரிமை பற்றிய பொதுத்தன்மை புரியாது எழுதியவரிடமிருந்து எதை எதிர்பர்ப்பது?

    தமிழர்கள் போராட்டங்களை கையில் எடுப்பது தவிர்க்க முடியாதது என்ற கருத்தை ஒட்டியே (அக் கருத்தை மேற்கோள் இட்டு) நான் சண்முகன் சிவலிங்கனுடைய கவிதையைத் தூக்கினேன். அலை சஞ்சிகையில் 1984இல் வந்த கவிதை இது. அன்று படித்த போதே ஆழமாய்த் தொட்டது. இதற்கும் ஆயிரம் வழி வைத்திருக்கும் Mao கருத்துக்கும் என்ன சம்பந்தம்?

    //கன்னத்தில் முத்தமிட்டால் படம் புலிகளுக்கு விரோதமானது என்று சொல்லபட்டது வெளிநாட்டில் வசதியாக வாழ்ந்து கொண்டு வெறும் குடத் தத்துவங்கள் பேசாதீர்கள்.//

    ஐயையோ.. ஆடுகளம் ஜெயபாலன் ஆடுகளத்தில் நடித்தார் என்பதற்காக ஜெயபாலனின் பின்னணியை வெறுப்பதால் அவர வெறுக்க வேண்டும் – ஆடுகளத்தையும் வெறுக்க வேண்டும் என்று முரண்டு பிடித்தவர்களுள் நான் இல்லை. சண்முகன் சிவலிங்கம் கவிதைகள அதிகம் பரிச்சயம் ஆகாமலே அக்கவிதை பிடித்தது. சிவலிங்கத்தைப் பிடிக்காமல் இருந்திருந்தாலும் கவிதை பிடித்திருக்கும். கன்னத்தில் முத்தமிட்டால் எனக்குப் பிடித்திருந்தது. – அதில் வரும் ‘விடை கொடு எங்கள் நாடே’ பிடித்திருந்தது. மாங்குளத்தில் மலை இல்லை என்றால் – அக்காட்சி பிடிக்கப்பட்ட போது இராணுவம் அங்கே இருந்திருக்க முடியாது என்ற லொஜிக் உதைத்தால் என்ன செய்வது?

    கன்னத்தில் முத்தமிட்டால் பிடிக்காமல் விட்டிருந்தாலும் கூட – அக் கவிதை முன்னர் வாசித்த ஒன்றாக இல்லாது புதிதாகப் படத்துக்கக எழுதப்பட்டிருந்தாலும் கூட எனக்குப் பிடித்திருக்கும். BC போன்றொருக்கு இவற்றில் முரண்பாடுகள் இருக்கும். எனக்கு இல்லை.

    அது சரி – புலிகளுக்கு அப்படம் விரோதமானது என்ற விடயத்துக்கும் எனது பொயின்ற்றுக்கும் என்ன சம்பந்தம்? எல்லாப் பொருத்தமும் இல்லாது பேசுவோரைக் கேள்வி கேட் கும் BCக்கு இதில் எப்படி அடி சறுக்கிற்று.


  48. ajeevan on July 16, 2012 10:26 pm

    BC, நானின்றி நானில்லை எனும் பாடல் வரிகள் வரும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் ; இஸ்டம்.
    பாடலின் தலைப்பு : ஒரு மேகம்….

    (இங்கே இத் தகவலை எழுதியமைக்கு ஏனைய வாசக நண்பர்கள் பொறுத்தருளவும்)

    Film : Ishtam
    song Title : Oru Megam
    Download link :-http://links.lankasri.com/vanninet


  49. சாந்தன் on July 17, 2012 1:53 am

    //..(இங்கே இத் தகவலை எழுதியமைக்கு ஏனைய வாசக நண்பர்கள் பொறுத்தருளவும்)…///

    வவுனியா சிறையில் அடித்துக்கொலப்பட்ட அரசியல்கைதிக்கு புலம்பெயர் தமிழர் உசுப்பேத்தினார் என நீங்கள் சொல்லியது தப்பு என காதரும் அந்த கொல்லப்பட்டவரின் தாயாரும் சொன்னதை கேட்கப்போக நீங்களோ சுவிஸ் ரேடியோவில இன்னொருவரின் பேட்டியை போட்டு திசைதிருப்பி அதில் கடைசியில் ஏதோ பாடுப்போட எல்லாவற்ரையும் கோட்டை விட்ட பிசியை பொறுத்தருள்வதா…… அல்லது ஆசிரியர் பாடம் நடத்தும்போது சொன்ன ஜோக்குகளை மட்டும் மண்டைக்குள் ஏற்றி ஏண்டா பாடம் எடுத்தோம் என ஆசிரியரை தனது தலையிலேயே அடிக்க வைத்த மாணவன் போல அண்னை அந்தப் பாட்டு எந்தப்படத்தில எனும் லெவலுக்கு பிசியை கொண்டுபோய் விட்ட உங்களை பொறுத்தருள்வதா ……அல்லது அஜீவனின் ரேடியோவில் போனால் மக்களை தமது கருத்துகள் சென்றடையும் என நம்பி வந்த முன்னாள் போராளியை பொறுத்தருள்வதா?


  50. BC on July 17, 2012 12:08 pm

    உங்களுக்கு இடையூறாக இருக்கும், பிடிக்காது என்பதால் நீங்கள் மற்றவர்களுக்கு செய்யும் இடையூறுகள், பிடிக்காதவைகள், மகா அறுவைகளை பொருட்படுத்தாமல் “பொறுத்தருளவும்” என்று பணிவாக அஜீவன் கேட்ட பின்பும் இவ்வளவு வாங்கி கட்ட வேண்டியிருக்கே அமெரிக்காவில் எல்லாம் இப்படி இல்லையே!
    புலி அமெரிக்காவில் இருந்தாலும் புலி தான்.


  51. T Sothilingam on July 17, 2012 9:40 pm

    அஜீவனின் ரேடியோ மட்டும் என்று பாராது தேசம் உட்பட எத்தனை இணையத்தளங்களை தமிழ் மக்கள் இலங்கையில் வாசிக்கிறார்கள் என்று பார்த்தால்…….

    ஆனால் புலம்பெயர் எழுத்துக்களை அரசு நன்றாகவே கவனித்துக் கொள்கின்றது எமது தமிழ் மக்கள் சார்பான புலம்பெயர் மக்களின் எதிர்பார்ப்புக்களை தெரிந்து கொள்கிறார்கள்.

    காரணம் இலங்கையிலிருந்து இதற்கான குரலை பலமாக எழுப்ப முடியாது இராணுவ, அரச அடக்கு முறைகள் உள்ளதை புரிந்து புலம்பெயர் மக்களிடையே எழும் கருத்துக்களும் செயற்பாடுகளும் தமிழர்களின் உரிமைப்போராட்ட குரலாக சர்வதேசத்தினாலும் கருதப்படுகின்றது; பல புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச சமூகத்திடம் ஈழ மக்கள் சார்பாக அசைவுகளை ஏற்படுத்துகிறார்கள்.


  52. T Sothilingam on July 17, 2012 10:10 pm

    நந்தா நாம் என்ன செய்ய வேண்டும் என்ற உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்

    கட்டுரையை விட்டு அதிக தூரம் போவது தொடர்ச்சியாக கருத்தை அல்லது அந்த கருவை சுற்றி நிற்க முடியாது தடுத்து விடுகின்றது. இங்கு மையக் கருத்து சிறையில் அடைத்து வைத்திருக்கும் போராளிகள் பற்றியதும் அவர்கள் பற்றிய அரசின் நிலைப்பாடும் பற்றியதோயகும்.

    பொதுவாக உங்கள் மற்றும் வேறு சிலரின் கருத்துக்களில் புலிகள் பயங்கரவாதிகள் என்றும் அவர்களை சிறையிலேயே அடைத்து வைத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே காண்கிறேன்.

    நாம் கைது செய்யப்பட்ட போதும் எமது குடும்பத்தினர் சொன்னார்கள் மக்கள் உங்களைப் பற்றி அக்கறைப்படுவதில்லை என. நீங்கள் அநியாயமாக உங்களை சிறையில் வருத்துகிறீர்கள் என்று. இவையாவும் எமது போராட்ட நடைமுறைகள் போராட்டப் பாதை தேர்வுடன் சம்பந்தப்பட்டது; போராட்ட பாதையையும் போராட்டம் சீரமைக்கும் என்றே இன்றும் நான் கருதுகிறேன் கருத்து ஒருமித்தவர்கள் தொடர்ந்து இயங்குவதே சரியானது, அதுவே புதிய பாதையினை திறக்கும்.

    இலங்கையில் தமிழ் சிங்கள மக்களின் உறவு நிலையை திறப்பதற்கான பல முயற்சிகள் தேவையானதும் அடிப்படையானதுமாகவே நான் கருதுகிறேன். எம்மில் சிலர் இது அவசரப்படும் விடயமல்ல, இலங்கையில் தமிழ் சிங்கள இன உறவுகள் பற்றி இப்போது பேசமுடியாது என்று கருதுகிறார்கள்.

    அதேபோன்று எமது சமூகத்திடையேயான சாதிய ஒடுக்கு முறை பற்றியும் தீவிரமாக அக்கறை செலுத்த வேண்டும் இந்த விடயத்தில் போராட்ட அமைப்புக்களில் பல முன்முயற்சிகளில் வெற்றியும் பெற்றுள்ளன. ஈபிஆர்எல்எப் னால் ஏற்படுத்தப்பட்ட சில அடிப்படைகள் இன்றும் சமூகத்தில் இயங்குகின்றன. அவை தொடர்ந்து இயங்க ஆதரவளிக்க வேண்டும்; இந்த முயற்சியில் தமிழ் சமூகத்திடையேயான மாற்றத்திற்கு சில முத்தாய்ப்புக்களில் தோழரினதும் ஈபிடிபியின் செயற்பாடுகளில் எனக்கு திருப்தி உண்டு.

    புலிகள் அமைப்பு இருக்கிறதா, இன்னும் புலிகள் அமைப்பினால் அரசுக்கு அச்சுறுத்தலா, என்று பார்த்தால் இல்லை என்றே விடை வரும். அப்போ ஏன் முன்னாள் புலிகளை அடைத்து வைத்திருக்கிறார்கள்?. தமது சொந்த அரசியல் நலன்களுக்காகவே தடுத்து வைத்திருக்கிறார்கள். பின்னர் அவர்களை அரசும், பாராளுமன்ற கதிரைகளை பிடிக்க எல்லோரும் பயன்டுத்துகிறார்கள். அதில் தமிழ் தரப்பினரும் அடங்குவார்கள்;

    நந்தா சொல்லும் ஒரு விடயத்தினை ஏற்றுக்கொள்கிறேன். சட்டத்தரணிகள் கூட்டம் எப்போதும் தமிழர் பிரச்சினைகளை தமது சுய பாராளுமன்ற அரசியல் கதிரைகளுக்காக பயன்படுத்தியுள்ளனர். போராட்ட ஆரம்பகாலங்களில் தமிழ் இளைஞர்கள் இந்த விடயங்களில் மிகவும் அவதானமாக இருந்துள்ள போதிலும் சட்டத்தரணிகள் தமக்கென சமூகத்தில் இருந்து போலியான செல்வாக்கை சாதிய ஆதிக்கத்தை, படித்தவர்கள் என்ற போர்வையை காட்டி போராட்டத்தை திருடிப் போய்விட்டனர். இதன் பின்னர் போராட்ட நடவடிக்கைகளில் வந்த பலர் இதனை உணர்ந்து கொண்டு செயற்பட்டனர்

    இன்று இதன் பிரதிநிதிகளாக ரிஎன்ஏயில் இருந்து அன்றைய அதே பாணியிலான அரசியலை ஆரம்பித்துள்ளார்கள் ஆனால் பிற்காலத்தில் பாராளுமன்ற அரசியலை எதிர்த்த அல்லது அது மாதிரியான பதவிப்போட்டிகளுக்கு பாராளுமன்றத்தை பாவிப்பதாத கூறிய போராட்ட இளைஞர்கள் குழு அல்ல இயக்கங்களும் இந்த சகதியில் இறங்கிவிட்டனரே.

    இன்று இவர்கள் 25 பேர்களது பாராளுமன்றத் தெரிவுக்கான போராட்டமாக தமிழர்களின் போராட்டம் மாறிக்கொண்டிருக்கும் நேரத்தில் நாம் நிற்கிறோம். இவர்கள் மீண்டும் மீண்டும் தாம் பாராளுமன்றம் போகும் போட்டியை தளமாக கொண்டு தமிழ் மக்கள் அரசியல் போராட்டங்களை மேலும் கீழுமாக அசைப்பார்கள். அண்மைக்கால தேர்தல்கள் தேர்தலுக்கான ஆயத்தங்கள் வரையில் அவர்களது அன்றைய பாணியிலான செயற்பாடுகளை காணலாம் அவர்களிடையே எழுந்த பல குழப்பங்களும் அதன் முடிவில் யார் எத்தனை ஆசனங்கள் ஒதுக்கீடுகள் பற்றி முடிவுகளும் திட்டவட்டமாக தெரிவிக்கின்றன ஆனாலும் மிகச் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். அவை சமூகத்தில் உணரக்கூடியவைகளாக இல்லை.

    கைதிகள் விடயத்தில் தமிழ் சட்டத்தரணிகள் பின்னடிக்கிறார்கள், இவர்கள் எல்லோரும் காசுதான் என்று பின்னடிக்கிறார்கள் என்று கூறினாலும் இன்று வழக்குகள் என்று வரும் போது ஒருசில சட்டத்தரணிகள் முன்வந்து பேசுகிறார்கள். சமூகம் இவர்கள் புலிகள் என்று விட்டு விட்டு போவது தவறு. இவர்களின் விடுதலைக்காக இயங்க வேண்டியது நம் எல்லோரினதும் கடமையாகும். புலிகள் என்று கூறி தமிழர்களைத்தானே கைவிடுகின்றோம்.

    அரசில் அமைச்சர்களாக உள்ள முன்னாள் புலிகள் இந்த போராளிகளின் விடுதலையில் அக்கறையற்று இருக்கின்றார்கள் என்பதில் சாதாரண மக்கள் அதிருப்தியாகவே உள்ளனர். தோழர் டக்ளஸ் கைதிகள் விடயத்தில் அக்கறை எடுக்க வேண்டும் என்ற கருத்தும் பலமாகவே உள்ளது.

    புலிகள் இயக்கத்தில் இருக்கும்போதும் புலி இயக்கத்தின் போர்க் குணாம்சமும், நடவடிக்கைகளுமே அவர்களை சாகக் கூடியவர்களாக வைத்திருந்தது. புலிகள் இல்லாதபோது அவர்களை கைவிடுவது அதர்மமேயாகும். கைதிகளாக உள்ளவர்களில் புலிகளுடன் சம்பந்தப்படாதவர்கள் பலரும் உள்ளனர். இவர்களுக்கும் புலி முத்திரையே குத்தப்பட்டுள்ளது.

    புலி இயக்கம் இன்று இல்லை அதன் பணங்கள் பலரிடம் உள்ளது. அவர்கள் பணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தம்முள் அடிபட்டுக் கொண்டே அரசியல் ஒன்றை புலம்பெயர்நாடுகளில் செய்கிறார்கள். புலிகளினால் உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் கூட இக்கைதிகள் விடயத்தில் அக்கறையற்று இருப்பது வெட்கத்துக்குரிய விடயமே.

    நாம் இங்கு கருத்து எழுதுவது ஏன், இதன் பிரதிபலிப்பு என்ன, என்ற எமக்கான விமர்சனங்களும் எழ வேண்டுமல்லவா? நான் எதிர்பார்க்கிறேன் இன்று எம்மிடையே பொதுவான உடன்பாடு ஒன்று உருவாக வேண்டியள்ளது. அது இலங்கை அரசு சார்பாகவும் அரசியல் தீர்வு சார்பாகவும் உருவாக்கப்படல் வேண்டும் அதை நோக்கி பலர் இயங்குகிறார்கள்.

    கடந்த மூன்று வருடங்களாக முகாம் வாழ்க்கை, மீள்குடியேற்றம், அபிவிருத்தி, கல்வி, போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகள்……. என்று எதைப் பற்றிக் கதைக்கும்போதும்; புலிகளின் பணத்தை கொண்டுவர வேண்டும் அவற்றைக் கொண்டுதான் வட கிழக்கை முன்னேற்றலாம் என சொல்வது அரசும் அரசை சார்ந்தவர்களினதும் வாய்ப்பாடாகிப் போய்விட்டது. இந்த பணம் பற்றி கதைத்துக்கொண்டே காலத்தை ஓட்டும் அரசியல் செய்கிறார்கள்.

    நாம் புலிகள் மீது விமர்சனங்கள் முன்வைத்த காலங்களில் எம்மீது பாய்ந்து விழுந்தவர்கள் புலிகளுக்காக பேசியவர்களில் பலர் இன்று அரசின் முக்கியஸ்த்தர்கள் அவற்றை விட அரசின் கைக்குள் கேபி இருக்கிறார். புலிகளின் பணம் யாராலும் பெற முடியாத பணம் என்பது அரசுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் அல்லது அன்றைய புலிகள் இன்றைய அரசின் சிநேகிதர்கள், புலிகளின் பணம் பற்றிய முழு கதைகளும் சொல்லியிருப்பார்கள் ஆனால் அரசு அதையே திரும்ப திரும்ப பேசி காலத்தை ஓட்டுகிறதே ஏன்? எல்லாருமே ஏதாவது ஒரு விடயத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடாத்தவே திட்டமிடுகிறார்கள். மாறி மாறி வரும் அரசு எல்லோரும் இதையே செய்வார்கள்.

    அரசியல் கைதிகள் விடயத்திலும் இந்த நிலைதான் கைதிகளை வைத்து பூச்சாண்டி காட்டி தமது அரசியல் பிழைப்பு நடாத்துகிறார்கள்.

    இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தும் விதம் இதுவோ? ஏதோ ஒரு காரணத்தை எப்பவுமே கூறி இராணவ ஆதிக்கத்தை வடக்கில் வைத்திருக்க முயல்வதேன்?
    அரசு இனமுரண்பாடுகளை தீர்த்து இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படுத்துவது என்றால் அது ஆகக்கூடியது 6 மாதகால அவகாசம் மட்டுமே. அரசியல் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டால் சமூகத்தில் மாற்றங்கள் மிகவிரைவாக ஏற்பட்டுவிடும். அப்படி செய்யும் மனப்பாங்கு கொண்ட அரசு இல்லை.
    எது என்னவோ புலிகள் குற்றவாளிகள் என்றால் அவர்களை விசாரணைகளாவது செய்து கோட்டில் நிறுத்தலாம் தானே அதையும் செய்யமாட்டார்கள். நான்கு சுவருக்குள் வைத்து கொல்வதுதான் தீர்வா?


  53. thamilan on July 17, 2012 10:49 pm

    in london tooting area still somany businesses run by lttes money but those people dont think about them atleast 0%
    if u want their details i can puplish in this website


  54. mao on July 18, 2012 11:19 am

    திரு சோதிலிங்கம் நெல்லென நினைத்து நீங்கள் உமியை இடித்து கொண்டிருக்கிறீர்கள் அரிசி வருமென..

    இங்கு நந்தாவின் கேள்வியில் என்னால் எந்தக் குறையையும் காணமுடியாமல் இருக்கிறது. நந்தாவின் கருத்தை தொகுத்தெடுத்தால் தமிழனே! தமிழனனைக் காட்டிக் கொடுக்கிறார் என அர்த்தம் கொள்ளமுடியும். உன்னெதிரி உன்நாட்டுக்குள்ளே இருக்கிறான் என்கிற முதுமொழியை கூர்மையாக்கும் விதத்தில் உன்னெதிரி உன்யினத்தில் உள்ளான் என்பதாகக்கூட அர்த்தம் கொள்ள முடியும்.

    தமிழர்என்று தாங்கள் யாரை வரைந்து வைத்திருக்கிறீர்கள்?

    தமிழர்களை தமிழர்கள் தான் காட்டிக் கொடுத்தார்கள்… உங்களுக்கு எத்தனை உதாரணங்கள் வேண்டும்?.

    பத்துலட்சம் மலையகத்தமிழர்கள் தென்இந்தியாவுக்கு நாடுகடத்தும் போது எந்ததமிழனவது ஒருகொடிபிடித்து போராட்டம் நடத்தியிருக்கிறானா? அப்படியொரு போராட்டம் நடத்தியிருந்தால் இந்த முப்பதுவருட அவலங்கள் நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது.

    சமபந்தி போசனம் உண்டுமகிழ்ந்த தமிழ்தலைமைகள் வீட்டுக்கு வந்ததும் “கிணற்றில்நாம்தான் தண்ணீர் அள்ளி ஊற்றுவோம் ஏந்துங்கள்” என்பது எந்த தமிழின- வாதத்திற்குள் அடங்கும்?

    சாதியடிமைமுறையை ஒழிபதற்கு ஒரு வரலாற்று தத்துவயாணம் வேண்டாமா? எங்கிருந்து அடிமைமுறை தொடங்கியதோ அங்கிருந்துதான் அதை அகற்ற வேண்டுமென ஒரு சிறுவிளக்கம்தனும் இல்லாமல் எழுதியிருக்கிறீர்கள். அதுவுமில்லாமல் அது இனத்தின் கடமையென சிறுகப்படுத்தி விடுகிறீர்கள்.

    சாதியமைப்புமுறைக்கு வேறுயொரு சொல்லை பிரதியீடு செய்வதாக இருந்தால் அதற்கு பெயர்:அடிமை.

    தங்களை பொறுத்தவரை இலங்கையில் இருக்கும் சாதிமுறையை பற்றியே தெரியும். எமக்கு குமரிமுனையில் இருந்து இமையமலை சாரல்வரை நச்சுவலையாக படந்திருக்கிற சாதியயடிமைப் பற்றி தெரியும். அதற்காக கவலைகொண்டு அதற்கான வழிமுறையைத் தேடும் போதுமட்டுமே! தமிழினத்திலும் சாதியமைப்பு அடிமை முறையையும் அழிந்தொழியும்.

    நீங்கள்எழுதிய… பொதுவாக உங்கள் மற்றும் வேறு சிலரின் கருத்துக்களில் புலிகள் பயங்கரவாதிகள் என்றும் அவர்களை சிறையிலேயே அடைத்து வைத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே காண்கிறேன். ….என்கிற சொற்தொடரைப் பாருங்கள்.

    புலியாக..புலிசந்தேகத்தின் பெயரில் கைதி செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைத்து வைத்திருக்திருக்க வேண்டும்மென கருத்தி எழுதியிருக்கிறார்கள். கருத்தில்-பிலாக்கொட்டை குருவி அளவைக் கொண்டவர்கள் கூடா இத்தளத்தில் இப்படியான கருத்தை கொண்டது கிடையாது.


  55. சாந்தன் on July 18, 2012 4:32 pm

    //…கைதிகள் விடயத்தில் தமிழ் சட்டத்தரணிகள் பின்னடிக்கிறார்கள், இவர்கள் எல்லோரும் காசுதான் என்று பின்னடிக்கிறார்கள் என்று கூறினாலும் இன்று வழக்குகள் என்று வரும் போது ஒருசில சட்டத்தரணிகள் முன்வந்து பேசுகிறார்கள். ….//

    சோதி,
    சட்டத்தரணிகள் பின்னடிக்கிறார்கள் என மொட்டையாகச் சொன்னால் என்ன அர்த்தம்? ஏன் பின்னடிக்கிறார்கள்? அரசிடம் இருந்து நீதிபதிகளுக்கே மிரட்டல் வருகிறது. சொல்லப்போனால் பாராளுமன்ற ஆசனத்தில் இருக்கும் சட்டத்தரணிகள் மட்டுமே இந்த மிரட்டலுக்கு ஓரளவு அடிபணியாது செயல்படுகின்ற உண்மையை ஏற்றுக்கொள்கிறீர்களா? எனக்குத் தெரிந்த சட்டத்தரணியுடன் ஒரு அரசியல் கைதி பற்றி பேசினேன். அவரும் இலவசமாக சட்ட ஆலோசனை வழங்கவும் கோட்டில் ஆஜாராகவும் சம்மதித்தார். அடுத்த நாள் ஒட்டுமொத்தமாகப் பின்வாங்கினார். ஒருவேளை பணம் தேவைப்படுகிறதோ என நினைத்து அதற்கும் உடன்பட்டேன். அதுவும் இல்லை வேறு காரணம் என்றார் அதனை சோதிலிங்கம் உணர்ந்திருப்பார், நான் சொல்லத் தேவையில்லை!

    மேலும் கைதிகளுக்கு ஆஜாராக முன்னர் அவர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யவேண்டுமல்லவா? ஏன் ஸ்ரீலங்கா அரசு செய்ய மறுக்கிறது என்பதுதானே இன்று சர்வதேச சமூகம் கேட்கும் கேள்வி? இல்லையா சோதி?
    அதிகம் ஏன் வவுனியா சிறைப்போராட்டம் வழக்குப்போடு இல்லை விடுதலை செய் எனக்கோரி ஆரம்பித்த போராட்டத்தின் தொடர்ச்சி அல்லவா?

    //…குமரிமுனையில் இருந்து இமையமலை சாரல்வரை நச்சுவலையாக படந்திருக்கிற சாதியயடிமைப் பற்றி தெரியும். அதற்காக கவலைகொண்டு அதற்கான வழிமுறையைத் தேடும் போதுமட்டுமே! தமிழினத்திலும் சாதியமைப்பு அடிமை முறையையும் அழிந்தொழியும்…..///- மாஓ

    அப்படியே குமுனையில் இருந்து இமயமலை வரை உள்ள மனித உரிமை , ஜனநாயகம், அரசியல் உரிமை போன்றனவற்றைப் பற்றியும் அறிந்திருப்பீர்களே!!

    ///..புலியாக..புலிசந்தேகத்தின் பெயரில் கைதி செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைத்து வைத்திருக்திருக்க வேண்டும்மென கருத்தி எழுதியிருக்கிறார்கள். ….//
    சந்தேகத்தின் பெயரில் சிறையா? அப்பாடா……அட்டகாச மனித உரிமை…அட்டகாச ஜனநாயகம்!!
    உங்களிலும் ஒரு நாள் சந்தேகம் வரலாம்…அப்போது காலவரையறை இன்றி சிறையில் இருக்கும் போதும்கூட சிந்தனைவராத கூட்டம் நீங்கள்!


  56. mao on July 18, 2012 8:00 pm

    திரு சாந்தன் உங்கள் வசதிக்கேற்றமாதிரி சொற்களை எடுத்து கையாளாமல் முழுமையாக எழுதி எதிர்கருத்தை வைப்பதே ஒழுங்கு முறைக்கு ஒவ்வானது.

    இப்படியான தரங்குறைவேலைகளை தாங்கள் பலமுறை செய்திருக்கிறீர்கள் என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    இது எதிர்விமர்சனத்திற்கு உகந்தவிதி அல்ல. இப்படியான வழிகளில் ஏன்தான் சிரமப்படுகிறீர்கள்?.


  57. சாந்தன் on July 18, 2012 8:42 pm

    //….இப்படியான தரங்குறைவேலைகளை தாங்கள் பலமுறை செய்திருக்கிறீர்கள் என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்…..///

    பரவாயில்லை விடுங்கள். இங்கே தலைப்பு சிறையில் இருக்கும் அரசிலய் கைதியை அடித்துக்கொன்றது. இதனைப்பற்றி உங்கள் கருத்தென்ன? கொல்லப்பட்டவரின் தாயாரின் வாக்குமூலம், பழைய போராளி காதரின் கருத்துகள், வழமையான அரசாங்கத்தின் ‘பணயக்கைதி’ பம்மாத்துக்கதை உடைந்துபோனது போன்றவைபற்றி உங்கள் கருத்து என்ன?

    அதனை விடுத்து சாதிய அமைப்புமுறை …..இமயம் முதல் குமரிவரை…. உசுப்பேத்தல்…. காட்டிக்கொடுத்தல் என ‘தரம்நிறைந்த வேலைகள்’ செய்வதோ அல்லது கொல்லப்பட்டவரின் தாயாருக்கு உலக ஏகாதிபத்தியத்தில் இதுவெல்லாம் சாதாரண நிகழ்வு என் மிக மிக ’தரம் மிக்க’ பதில்கள் சொல்லவோ விழைவது ஏன்?

    இதனை பாதிக்கப்பட்ட உங்களின் உறவினர் ஒருவருக்குச் சொல்லிப்பாருங்கள். எப்படியான ‘தரம் மிக்க’ பதில் கிடைக்கும் என நான் சொல்ல வேண்டியதில்லை!!

    //…இது எதிர்விமர்சனத்திற்கு உகந்தவிதி அல்ல. இப்படியான வழிகளில் ஏன்தான் சிரமப்படுகிறீர்கள்?……//
    ஓஹோ…அப்படியா. அரசியல் கைதிகளின் அடித்துக்கொலைக்கு கருத்துக்கேட்டால் இமயம் முதல் குமரிவரை சாதிய அமைப்பின் அறிவை இழுத்து எழுபவர் சொல்கிறார். எல்லோரும் ஓடோடி வந்து கேளுங்கள்.

    இதில் சிரமப்படுகிறேனாம். சிம்பிள் கேள்வி சிம்பிள் மறுமொழி இருக்கிறது. இமயம் முதல் குமரிவரை ஓடுகிறவர் சொல்கிறார் சிரமப்படுகிறேனாம்….. சுப்பர்!!


  58. Rohan on July 18, 2012 9:52 pm

    //இது எதிர்விமர்சனத்திற்கு உகந்தவிதி அல்ல. இப்படியான வழிகளில் ஏன்தான் சிரமப்படுகிறீர்கள்?.//

    கொஞ்ச நாட்களாக ‘உலகத் தொழிலாளர் ஒற்றுமை’ கோஷத்தைக் காணோம். நாடகத்தில் நாய் வேடம் போடுபவர் இடைக்கிடை குரைக்க மறப்பதைப் போல…!


  59. T Sothilingam on July 18, 2012 10:03 pm

    மாவோ இங்கு நானும் நீங்களும் ஒரே கட்சியையோ அல்லது அமைப்பையோ பிரநிதித்துவப்படுத்தி கருத்து எழுதவில்லை என்பதை மறந்து எழுதுகிறீர்கள். நாம் சாதாரண கருத்தாளர்கள் மட்டுமே கொள்கையளவில் உடன்பட்டவர்கள் அல்ல ஆகவே மாவோ நீங்கள் என்னை கட்சி உறுப்பினர் போன்று உங்கள் தோழர்கள் போன்று விமர்சிக்கத் தேவையில்லை என்ற யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளவும். எனது கருத்துக்கள் உங்கள் கருத்துக்கள் என்பதற்கு அப்பால் ஏதும் இல்லை

    சாதீயம் பற்றிய உங்கள் கருத்துக்கள் கொள்கைகளை விபரமாக எழுதுங்கள் (கட்டுரையாக தரவிரும்பின் admin@thesamnet.co.uk என்ற மெயிலுக்கு அனுப்பலாம்) சாதியத்துக்கு எதிரான வேலைத்திட்டங்களை முன்வையுங்கள் அல்லது திட்டவட்டமாக சொல்லுங்கள் இணைந்து செயற்படுவோம் இங்கு சாதீயம் பற்றிய அறிவார்த்த கருத்தாடல்கள் மட்டுமே செய்கிறேன் என்று எல்லாவற்றையும் இணைத்து குழைத்தால் எந்த ஒழுங்கில் குழைத்துள்ளீர்கள் என்று முன்னுரையை வையுங்கள் அல்லது இலக்கமிடுங்கள்.

    புலிஆதரவாளர்களை பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்துவது தவறு அல்லவா. அதைவிட அவர்களில் ஒருவனை சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லும் போது அந்த மனிதாபிமானமற்ற செயலை கண்டிக்காது நியாயப்படுத்துவது தர்மமா?

    சோதிலிங்கத்தின் கழுத்து அறுப்பதைவிடுத்து சமூகத்தில் பிரயோசனமான செயலில் இறங்கும் ஒரு வேலைத்திட்டத்தை முன்வையுங்கள்.

    இப்படி கேட்கும்போது நீங்கள் கேட்கலாம் உமது திட்டம் என்ன என்று “எனது இன்றைய வேலைத்திட்டம் ‘தமிழ் பேசும் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை என்பதே அரசியல் தீர்வு’ உடன்படுபவர்களை ஒன்றுபடுத்துதல் அதிலும் புலிகள் அல்லது வேறு இயக்கத்தவர்கள் என்ற பிரிவினைகள் இல்லாது தமிழர் தரப்பினர் என்ற பொது தரப்பினரை உருவாக்குதல்.”

    கைதிகளின் மனித உரிமையை பாதுகாப்பதை விடுத்து அவர்களை நாலு சுவருக்குள் கொலை செய்வதை ஆதரிப்பது தர்மமாகாது.


  60. T Sothilingam on July 18, 2012 10:33 pm

    சாந்தன்
    இலங்கையில் புலிகளின் ஆதரவாளர்களுக்கு புலிகளின் உறுப்பினர்க்கு வழக்கு அல்லது உதவிகள் செய்வதற்கு யார் சரி எந்த வடிவில் முன்வந்தாலும் அது இலங்கை இராணுவத்தின் அரச படைகளின் உளவுப்படைகளின் தலையீடு இல்லாமல் செய்ய முடியாது இது வரலாறு நண்பரே இதை தெரியாமல் ஒருவர் தேசம்நெற்றில் கருத்து எழுதுகிறார்கள் என்றால் என்ன சொல்வது.


  61. சாந்தன் on July 19, 2012 2:37 am

    //.. இது வரலாறு நண்பரே இதை தெரியாமல் ஒருவர் தேசம்நெற்றில் கருத்து எழுதுகிறார்கள் என்றால் என்ன சொல்வது….//

    அதனை அப்படியே ஏற்றுக்கொள்வதா என்பதே எனது கேள்வி !
    மொட்டையாக சட்டத்தரணிகள் தமிழர்களைப் பயன்படுத்தினர் எனச் சொன்னதை ஏன் ஏற்றுக்கொண்டீர்கள்? இங்கு பம்மாத்துக்கதை விடும் ஒருவர் சட்டத்தரணிகள் (பிரக்கிராசிமார்) என கதை விட்டது தனது குறைகளை அரச ஆலவட்டம் பிடிப்பு வெள்ளையடிப்பை நியாயப்படுத்த என்கின்ற உட்காரணம் நீங்கள் அறியாததல்ல!!


  62. சாந்தன் on July 19, 2012 5:37 am

    /… (கட்டுரையாக தரவிரும்பின் admin@thesamnet.co.uk என்ற மெயிலுக்கு அனுப்பலாம்) ….//

    அப்படியே ஆயிரக்கணக்கான வன்னிப் பாடசாலைகள் கட்டியது, டாக்டர்.ராஜசுந்தரம் ஜே ஆருக்கு எழுதியகடிதம் கண்டது, பாதிரிகளை எதிர்த்து போராட்டம் நடத்தியது, பின்னர் அதே பாதிரிகளை ஸ்ரீலங்காவுக்கு ஆதரவாக வத்திக்கான் அனுப்பியது போன்ற விபரங்களையும் அனுப்பினால் மெத்தப்பெரிய உபகாரமாயிருக்கும் என்ப்தனையும் சொல்லி அதனையும் ஒரு போகிறபோக்கில சைற்றால பதிவிடவேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்ளவும்!!


  63. நந்தா on July 19, 2012 11:24 am

    //சோதி,
    சட்டத்தரணிகள் பின்னடிக்கிறார்கள் என மொட்டையாகச் சொன்னால் என்ன அர்த்தம்? ஏன் பின்னடிக்கிறார்கள்? அரசிடம் இருந்து நீதிபதிகளுக்கே மிரட்டல் வருகிறது. சொல்லப்போனால் பாராளுமன்ற ஆசனத்தில் இருக்கும் சட்டத்தரணிகள் மட்டுமே இந்த மிரட்டலுக்கு ஓரளவு அடிபணியாது செயல்படுகின்ற உண்மையை ஏற்றுக்கொள்கிறீர்களா? எனக்குத் தெரிந்த சட்டத்தரணியுடன் ஒரு அரசியல் கைதி பற்றி பேசினேன். அவரும் இலவசமாக சட்ட ஆலோசனை வழங்கவும் கோட்டில் ஆஜாராகவும் சம்மதித்தார். அடுத்த நாள் ஒட்டுமொத்தமாகப் பின்வாங்கினார். ஒருவேளை பணம் தேவைப்படுகிறதோ என நினைத்து அதற்கும் உடன்பட்டேன். அதுவும் இல்லை வேறு காரணம் என்றார் அதனை சோதிலிங்கம் உணர்ந்திருப்பார், நான் சொல்லத் தேவையில்லை!//

    இப்படியான கஜப் புழுகை அவிழ்த்து விட சாந்தன் பொன்றவர்களால் மட்டுமே முடியும். ஏனென்றால் அவரும் இன்னமும் தலைவர் வருவார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஒரு “சட்டை” மாற்றிய புலி. இவர் இலங்கையில் புளொட். அமெரிக்காவில் புலி. தசாவதாரங்கள் எடுக்க சாந்தன் போன்றவர்களால் முடியும்.

    நான் எழுதிய உண்மைகளைக் கண்டவுடன் மிரண்டது மாத்திரமின்றி சோதிலிங்கத்தின் பதிலும் இவருக்குக் கடுப்பேத்தியிருக்கிறது.

    இலங்கயில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் வெளினாடுகளில் புலிக் கொடி பிடித்து தங்கலை மாத்திரம் சந்தோஷப்படுத்திக் கொள்ளும் சாந்தன் போன்றவர்கள் ……… ………. ….. என்பதனை அவரே தனது எழுத்துக்களின் மூலம் நிரூபிக்கிறார்.


  64. நந்தா on July 19, 2012 11:39 am

    சோதிலிங்கம்:
    இலங்கயில் இன்று புலிகளின் விடுதலை அல்லது வழக்கு என்றால் அரசினதும் படைகளினதும் கவனம் ஈர்க்கப்படும் என்ற உண்மை எப்படித் தெரியாமல் இருக்கிறீர்கள்?

    புலிகள் சாதாரண குற்றவாளிகள் அல்ல என்பதனையும் அவர்கள் என்ன குறங்களைப் புரிந்துவிட்டு அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதனையும் பொறுத்ததே அவர்களின் விடுதலை.

    இன்று அந்த கைதிகள் போராட்டம் அல்லது கோரிக்கைகள் வைத்தமை நியாயம் என்று வாதிக்கும் பலர் அதே நியாயத்தை நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளூடாக முன்வைக்க முடியாது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயமல்ல.

    சுமந்திரன் போன்றவர்கள் புலிகள் யுத்தம் செய்த காலத்திலேயே புலிகளுக்காக கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கடியிருக்கிறார். நீங்கள் சொல்லும் “அச்சுறுத்தல்கள்” அன்றும் இல்லை. இன்றும் இல்லை.

    மொத்தத்தில் அந்தப்”பிரயோசனமில்லாத” புலிகளுக்கு வழக்கடுவது வீண் என்பதுதான் சட்டத்தரணிகளினதும் மட்டுமல்ல உங்கள் கருத்தும் என்றே கருதுகிறேன்.


  65. Rohan on July 19, 2012 12:34 pm

    //இலங்கயில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் வெளினாடுகளில் புலிக் கொடி பிடித்து //

    வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 11 வீதமான பாடசாலைகள் இராணுவத்தினரின் தேவைக்காக மூடப்பட்டுள்ளது:-

    இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 11 வீதமான பாடசாலைகள் இராணுவத்தினரின் தேவைக்காக மூடப்பட்டுள்ளதாக அந்த மாகாண ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இலங்கை அரசாங்கம், வடமாகாண பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய போதுமான தலையீடுகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    போருக்கு பின்னர், வடபகுதியில் உள்ள பாடசாலைகளை மேம்படுத்துவதற்காக அரசசார்பற்ற நிறுவனங்களும், புலம்பெயர் தமிழர்களுமே உதவி செய்தனர் எனவும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அடிக்கடி வந்து வாக்குறுதிகளை மாத்திரம் அள்ளி வழங்கி விட்டு சென்றதாகவும் வடமாகாண ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

    அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு சென்ற தந்த ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமால் ராஜபக்ஷ, வன்னியில் உள்ள பாடசாலைகளின் அபிவிருதிக்காக 5 மில்லியன் ரூபாவும் நீச்சல் தடாகமும் அமைத்து கொடுப்பதாக உறுதியளித்திருந்தார்.

    யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 491 பாடசாலைகளில் 67 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் உள்ள 107 பாடசாலைகளில் 14 பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 112 பாடசாலைகளில் 18 பாடசாலைகளும்,முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 126 பாடசாலைகளில் 7 பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தில் உள்ள 197 பாடசாலைகளில் 3 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. மொத்தமாக இந்த மாவட்டத்தல் 109 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.


  66. T Sothilingam on July 19, 2012 2:11 pm

    //சோதி சட்டத்தரணிகள் பின்னடிக்கிறார்கள் என மொட்டையாகச் சொன்னால் என்ன அர்த்தம்? ஏன் பின்னடிக்கிறார்கள்? அரசிடம் இருந்து நீதிபதிகளுக்கே மிரட்டல் வருகிறது. சொல்லப்போனால் பாராளுமன்ற ஆசனத்தில் இருக்கும் சட்டத்தரணிகள் மட்டுமே இந்த மிரட்டலுக்கு ஓரளவு அடிபணியாது செயல்படுகின்ற உண்மையை ஏற்றுக் கொள்கிறீர்களா? எனக்குத் தெரிந்த சட்டத்தரணியுடன் ஒரு அரசியல் கைதி பற்றி பேசினேன். அவரும் இலவசமாக சட்ட ஆலோசனை வழங்கவும் கோட்டில் ஆஜாராகவும் சம்மதித்தார். அடுத்த நாள் ஒட்டுமொத்தமாகப் பின்வாங்கினார். ஒருவேளை பணம் தேவைப்படுகிறதோ என நினைத்து அதற்கும் உடன்பட்டேன். அதுவும் இல்லை வேறு காரணம் என்றார் அதனை சோதிலிங்கம் உணர்ந்திருப்பார், நான் சொல்லத் தேவையில்லை// சாந்தன்
    இந்த நிலைமை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறேன் இதற்கு பல உதாரணங்கள் என்னிடமும் உண்டு.

    சட்டத்தரணிகளாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் அரசியலிலை தமது சுயலாபங்களுக்காகப் பயன்படுத்தி விட்டுப் போயுள்ளமை பற்றியே நான் எழுதினேன்.
    கைதிகளுக்கு வழக்குபேச வரும் சட்டத்தரணிகளை அல்ல. அவர்களுக்கு பலமான மிரட்டல்கள் உள்ளது அவர்கள் பயப்படுகிறார்கள் என்பது உண்மையே!!

    /மொத்தத்தில் அந்தப் ”பிரயோசனமில்லாத” புலிகளுக்கு வழக்கடுவது வீண் என்பதுதான் சட்டத்தரணிகளினதும் மட்டுமல்ல உங்கள் கருத்தும் என்றே கருதுகிறேன்.//நந்தா
    இக்கருத்துடன் நான் என்றைக்கும் உடன்பட மாட்டேன். சிறையில் அடைக்கப்பட்டவர்கள் யாராக இருப்பினும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்படல் வேண்டும்.

    நிமலரூபன் மீதான கோழைத்தனமான கொலையைக் கண்டித்து நான் எழுதியமைக்கு இங்கு பலர் அதை நியாயப்படுத்தும் காரணங்களையே தேடினீர்கள்(எமதுபோராட்ட காலங்களில் நடாத்தப்பட்ட படுகொலைகளும் ஒவ்வொரு காரணங்களைச் சொல்லிச் சொல்லியே தொடர்ந்தன என்பதை மறக்க வேண்டாம்)
    அரசினால் வெளியிடப்படும் காரணங்களின் பதிவை நீட்டி பேசி கருத்து எழுதிவிட்டு பின்னர் அதையே கொலைக்கான காரணங்களாக முன்வைத்தல் தவறாகும்.


  67. எஸ்.ஜெயக்குமார் on July 19, 2012 2:12 pm

    Maoஎன்பவருக்கு சாதீயம் பற்றி விவாதிக்க வேறு கட்டுரை தலையங்கம் ஒன்றும் கிடைக்கவில்லையா? பிறருடைய கண்ணீரோடு விளையாட முற்படுபவர்கள் அதை நிறுத்த வேண்டும்!


  68. சாந்தன் on July 19, 2012 4:41 pm

    ///….புலிகள் சாதாரண குற்றவாளிகள் அல்ல என்பதனையும் அவர்கள் என்ன குறங்களைப் புரிந்துவிட்டு அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதனையும் பொறுத்ததே அவர்களின் விடுதலை…..//
    அது உண்மை என்றால் வழக்குத்தாக்கல் செய்ய வேண்டியதுதானே? ஏன் இழுத்தடிப்பு? ராவுஃப் ஹக்கீம் (அவர்தான் நீதி அமைச்சர் என மக்கள் பேசிக் கொள்கின்றனர்) கூட ஏதோ ஸ்பெசல் நீதிமன்றம் போடுகிறேன் கொமிசன் போடுகிறேன் எனவெல்லாம் உலகத்துக்கு ‘கதை’ விட்டுக்கொண்டு திரிந்தார்!!

    ///…பலர் அதே நியாயத்தை நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளூடாக முன்வைக்க முடியாது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயமல்ல…../

    கோரிக்கை வைத்தால் உடனடியாக (நீதிபதி கருத்துச் சொல்ல முன்னரே முந்திக்கொண்டு) அவர் எங்களிடம் இல்லை, அவரை இரண்டு வருடத்துக்கு முன்னர் விடுவித்து விட்டோமே!, அவர் வெளிநாடுக்கு அசைலம் அடிக்கப் போய்விட்டார் எனவெல்லாம் கதை விடுவார்கள். பின்னர் பார்த்தால் அடி வெட்டுக்குத்துக் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் கோமாவில இருக்கிறார் என விபரம் தெரிய வரும்! அப்படிப்பட்ட நாடு ஸ்ரீலங்கா!!

    அதுமடுமா அசைலம் அடித்த ஆட்களைப்பற்றி என்னிடம் தகுந்த ஆதாரம் உள்ளது என ஐநா சபையிலேயே சொன்னவர் ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதம சட்டத்தரணி!! ஐநா சபையிலேயே பச்சைப்பொய்யைச் சொல்லி பின்னர் ஸ்ரீலங்கா கோட்டில் போய் எல்லாம் ஆண்டவனுக்கே வெளிச்சம் எனச் சொன்னவர் பிரதம சட்டத்தரணியாக உள்ள நாடு ஸ்ரீலங்கா!!

    ///…நான் எழுதிய உண்மைகளைக் கண்டவுடன் மிரண்டது மாத்திரமின்றி சோதிலிங்கத்தின் பதிலும் இவருக்குக் கடுப்பேத்தியிருக்கிறது…….//
    அப்பா……அப்ப்பப்பா…..ஐயையோ!!
    நந்தா இப்படி எக்கச்சக்க ‘உண்மைகளை’ நான் வாழ்க்கையில் கண்டதே இல்லை! வெலவெலத்துத்தான் போனேன்!


  69. சாந்தன் on July 19, 2012 10:19 pm

    இன்னொரு விசயம் சொல்ல மறந்து விட்டேன். ஸ்ரீலங்கா நேவியில் 1980 ஆரம்பங்களில் இருந்து 2009 வரை ‘கடமை’ ஆற்றி பின்னர் நேவியில் இருந்து ‘இளைப்பாறி’ கனடாவில் அசைலம் அடித்தவர் கோட்டில் சொன்னது எனக்கு ஸ்ரீலங்கா அரசுக்குப் பயம் என!!
    இப்படிப்பட்ட நேவி கொமோடோர்கள் உள்ல நாடும் ஸ்ரீலங்கா!!
    ஒரு நேவிக்கொமாண்டருக்கே ஸ்ரீலங்கா கோட்டுக்கு போகேலாத நிலமை என்கிறார் அவர்!! இங்க என்னடாவெண்டால் தமிழ் அரசியல் கைதியை கோட்டுக்குப் போகட்டாம் ‘நீதி’ கிடைக்குமாம்.
    இந்த ‘நீதி’ அமைச்சரே இலக்சன் கூட்டில் நியாயம் கிடைக்கேல்ல ஆனால் வெற்றி பெற்ரபின் ‘சேர்ந்து’ இயங்கி ‘தனித்துவத்தை’ நிலைநாட்டுவோம் என அழும் அவலம் ஸ்ரீலங்காவில்தான் காணலாம்!!


  70. நந்தா on July 20, 2012 5:51 am

    அசைலம் அடிப்பவர்கலின் கதைகளில் ஒரு சதவீதம் கூட உண்மைக் கதை கிடையாது என்பது எல்லோருக்கும் தெரியும். தவிர கனடாவில் அகதிகளும் வருடாவருடம் உள்வாங்கும் குடிவரவாளர்களின் ஒரு பகுதியே தவிர அகதிகல் என்பவர்களுக்கு விசேட கோட்டா ஒன்றும் கிடையாது.

    தமிழர்கள் பதவியில் இருந்து விலகியபின் அல்லது இளைப்பாறியபின் தங்களது யாழ்ப்பாணிப் புத்தியைக் காட்டுவது சர்வ சாதாரணம். சட்டமாதிபர் சிவா பசுபதி போன்றவர்கள் சிறந்த உதாரணம்.

    அவுஸ்த்திரேலியாவுக்கு வள்ளங்களில் போனவர்களில் 600க்கும் அதிகமானவர்கள் கடலில் மூழ்கி மரணித்துள்ளனர். அவர்கள் பற்றி எந்த பிரலாபிப்புக்களையும் எங்கும் காணொம். ஏனென்றால் அவர்கள் இந்திய அகதிகள் முகாம்களிலிருந்து போய் மாண்டவர்கள். இந்தியாவில் உள்ள அகதிகள் பற்றி யாரும் அலட்டுவதில்லை. ஏனென்றால் அவர்களும் புலிப் பிரசாரங்களுக்கு உதவ முடியாதவர்கள்.

    கோமாவில் கிடக்கும் ஒருவர் எப்படி சாந்தனுக்கு நடந்து முடிந்த சம்பவங்களைப் பற்றிக் கூறினார் என்பதுதான் இன்னமும் புரியாத புதிர்!

    அரசின் நடைமுறைகளை ஏற்க மாட்டோம் என்பவர்கள் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. நீதிமன்ற நடைமுறைகள் புலி நீதிமன்றங்கள் என்ற நினைப்பில் எழுதினால் அல்லது கருதினால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது.

    சிங்க கொடி சம்பந்தன் கொஷ்டி இப்பொழுது வெளினாடுகளுக்கு வந்து 100 டால்ர் டின்னர் என்று பணம் செர்ப்பதில் குறியாயிருக்கிறார்களே தவிர இந்தக் கைதிகள் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. எனவே அடுத்த முறை சுமந்திரனுக்கு டின்னர் கொடுத்துக் காசும் கொடுக்கும் போது கைதிகள் பற்றிப் பிரஸ்தாபிக்கலாம்.


  71. mao on July 20, 2012 8:00 am

    உங்களுக்கிருக்கிற மதவெறியும் இனவெறியும் என்எழுத்தில் எங்குதேடியும் கண்டுபிடிக்க முடியாது. புலிகளில் மூளைச்சலவை செய்து பலியாக்க பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் தொழிலாளவர்கத்கத்தை சேர்ந்தவர்கள் தான். அதிலும் கிராமப்புறத்தில் இருந்து வந்த ஒடுக்கபட்ட சாதியை சேர்ந்தவர்களே!
    இதுவெல்லாம் உங்கள் தொழிலாளவர்க்க விரோதத்தை காட்டி நிற்கும் போது! உங்கள் குற்றத்தை எம்மீது சுமத்த பார்க்கிறீர்கள். உங்களுக்கும் விமர்சனத்தில் துணிவிருந்தால் சர்வதேச தொழிலாளவர்க்க ஐக்கியத்திற்கு “எதிரான” ஒரு வாக்கியத்தை தன்னும் என் எழுத்தில் எடுத்து காட்ட முடியுமா?.


  72. Rohan on July 20, 2012 10:27 am

    //அசைலம் அடிப்பவர்கலின் கதைகளில் ஒரு சதவீதம் கூட உண்மைக் கதை கிடையாது என்பது எல்லோருக்கும் தெரியும். //

    அரிச்சந்திரனின் அண்ணன் பேசுகிறார் – இவர் பொய் சொல்லி அறியார். அசைலம் அடிக்காத பெருமை மிக்கவர் என்பதால் இவர் 210 வீதம் உண்மை தான் பேசுவார்.

    //தவிர கனடாவில் அகதிகளும் வருடாவருடம் உள்வாங்கும் குடிவரவாளர்களின் ஒரு பகுதியே தவிர அகதிகல் என்பவர்களுக்கு விசேட கோட்டா ஒன்றும் கிடையாது.//

    http://www.cic.gc.ca/english/department/media/releases/2010/2010-11-01a.asp

    In keeping with recent reforms to Canada’s refugee system, the 2011 plan also includes an additional 1,125 refugees resettled in Canada as part of the commitment to increase total refugee resettlement by 2,500 over three years. கனடாவின் அண்மையில் சீரமைக்கப்பட்ட அகதிகளுக்கான முறைமைக்கு இணங்க 2011 ஆம் ஆண்டுக்கான திட்டம் மேலும் 1125 அகதிகளைக் கனடாவில் வாழ வைப்பதாகும். இது கனடா அகதிகளாக உள்வாங்குவோரை மூன்று ஆண்டுகளில் 2500 ஆல் அதிகரிப்பது என்ற கடப்பாட்டுக்கு அமைய செய்யப்பட்ட ஒன்றாகும்.

    http://www.arabamericannews.com/news/index.php?mod=article&cat=Canada&article=833

    Canada’s Minister of Citizenship and Immigration, Diane Finley, announced this week that Canada will more than double the number of refugees it receives this year from Iraq, accepting 1,800 to 2,000 refugees, up from 900 in 2007. கனடாவின் குடிவரவு அமைச்சர் டயான் பின்லே, கனடா ஈராக்கிலிருந்து உள்வாங்கும் அகதிகளின் தொகையை இரண்டு மடங்குக்கு மேலாக அதிகரிக்கப்போவதாக இவ்வாரம் அறிவித்தார். இதன் படி 2007இல் உள்வாங்கப்பட்ட 900இலிருந்து இத்தொகை 1800 – 2000 என உயர்த்தப்படும்.

    //தமிழர்கள் பதவியில் இருந்து விலகியபின் அல்லது இளைப்பாறியபின் தங்களது யாழ்ப்பாணிப் புத்தியைக் காட்டுவது சர்வ சாதாரணம். சட்டமாதிபர் சிவா பசுபதி போன்றவர்கள் சிறந்த உதாரணம்.//

    சிவா பசுபதி அப்படி என்ன யாழ்ப்பாணிப் புத்தியைக் காட்டினார்?

    //கோமாவில் கிடக்கும் ஒருவர் எப்படி சாந்தனுக்கு நடந்து முடிந்த சம்பவங்களைப் பற்றிக் கூறினார் என்பதுதான் இன்னமும் புரியாத புதிர்! //

    இன்னமும் …..? http://www.bbc.co.uk/tamil/mobile/sri_lanka/2012/07/120711_missingyouthragama.shtml

    //அரசின் நடைமுறைகளை ஏற்க மாட்டோம் என்பவர்கள் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. //

    அரசின் நடைமுறைகளை ஏற்கும் நந்தா போன்றவர்கள் அரசுக்கு உத்தரவு போட்டு சந்தேகத்தில் பிடித்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர் – அல்லது விடுதலை செய் – என்று முயற்சிக்கலாமே. சந்தேகத்தில் காலவரையறையின்றி சிறையில் அடைப்பது சரி என்பது நந்தாவின் வாதமாக இருந்தால் அதை வெளிப்படையாகச் சொல்லலாம். முழுப்புலிகள் மறுவாழ்வு தந்து விடுதலை செய்யப்படுவார்களாம் – ஆனால் சந்தேகத்தின் பேரில் பலர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுக் கொல்லப்படுவார்களாம். அது சரி என்று வாதிட அறிவாளிகள் அணிவகுப்பர்களாம்.


  73. Rohan on July 21, 2012 3:53 am

    //உங்களுக்கிருக்கிற மதவெறியும் இனவெறியும் எனெழுத்தில் எங்குதேடியும் கண்டுபிடிக்க முடியாது.

    உங்கள் குற்றத்தை எம்மீது சுமத்த பார்க்கிறீர்கள். உங்களுக்கும் விமர்சனத்தில் துணிவிருந்தால் சர்வதேச தொழிலாளவர்க்க ஐக்கியத்திற்கு “எதிரான” ஒரு வாக்கியத்தை தன்னும் என் எழுத்தில் எடுத்து காட்ட முடியுமா?.//

    சங்கரி ஐயா திறந்த மடல் எழுதும்போது முகவரி இட்டு எழுதுவார். அம்முகவரிக்குச் சொந்தக்காரர் ஒருபோதும் பதில் எழுதுவதில்லை என்றாலும், மடல் யாருக்கு எழுதப்பட்டிருக்கிறது என்ற விடயம் வெளிப்படையாக இருக்கும். இங்கு மாஓ யாருடன் சவால் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்று கூடத் தெரியாதவாறு…..


  74. mao on July 21, 2012 6:20 pm

    திரு.றோகன் உங்களுக்காகத் தான் எழுதியது. தணிக்கைப் பட்டு விட்ட பகுதிக்குள் பெயரும் போய்விட்டது.
    உங்கள் 18திகதி 9:52 பிற்பகல் பின்னோட்டத்திற்கு போங்கள். வாசியுங்கள். திரும்பி வந்து நான் எழுதியதையும் வாசியுங்கள்.


  75. Rohan on July 21, 2012 11:21 pm

    //திரு.றோகன் உங்களுக்காகத் தான் எழுதியது. தணிக்கைப் பட்டு விட்ட பகுதிக்குள் பெயரும் போய்விட்டது. உங்கள் 18திகதி 9:52 பிற்பகல் பின்னோட்டத்திற்கு போங்கள். வாசியுங்கள். திரும்பி வந்து நான் எழுதியதையும் வாசியுங்கள்.//

    நான் எழுதியது என்னவோ …
    /கொஞ்ச நாட்களாக ‘உலகத் தொழிலாளர் ஒற்றுமை’ கோஷத்தைக் காணோம். /

    //உங்களுக்கிருக்கிற மதவெறியும் இனவெறியும் எனெழுத்தில் எங்குதேடியும் கண்டுபிடிக்க முடியாது. புலிகளில் மூளைச்சலவை செய்து பலியாக்க பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் தொழிலாளவர்கத்கத்தை சேர்ந்தவர்கள் தான். அதிலும் கிராமப்புறத்தில் இருந்து வந்த ஒடுக்கபட்ட சாதியை சேர்ந்தவர்களே! இதுவெல்லாம் உங்கள் தொழிலாளவர்க்க விரோதத்தை காட்டி நிற்கும் போது! உங்கள் குற்றத்தை எம்மீது சுமத்த பார்க்கிறீர்கள். உங்களுக்கும் விமர்சனத்தில் துணிவிருந்தால் சர்வதேச தொழிலாளவர்க்க ஐக்கியத்திற்கு “எதிரான” ஒரு வாக்கியத்தை தன்னும் என் எழுத்தில் எடுத்து காட்ட முடியுமா?.//
    ….என்று பாய்வதற்கு அங்கே என்ன இருக்கிறது?

    நாட்டில் மழை பெய்யாவிட்டாலும் பூர்ஷுவாக்களையும் வங்குரோத்து ஏகாதிபத்தியங்களையும் குற்றம் சாட்டும் எத்தனை ‘கொம்யூனிஸ்ட்’ சம்பியன்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் உழைக்கும் வர்க்கத்தை மறந்துவிடுவார்கள். என்ன அவர்களை மறந்து விட்டீர்களா என்று கேட்டால் ‘நான் எப்போது அவர்களைத் திட்டினேன்’ என்று அவர்கள் எப்படி என்மீது பாயலாம்? “உங்களுக்கும் விமர்சனத்தில் துணிவிருந்தால் சர்வதேச தொழிலாளவர்க்க ஐக்கியத்திற்கு “எதிரான” ஒரு வாக்கியத்தை தன்னும் என் எழுத்தில் எடுத்து காட்ட முடியுமா?”என்ற கேள்விக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?

    “உங்கள் குற்றத்தை எம்மீது சுமத்த பார்க்கிறீர்கள்.” என்பது இங்கு என்ன விதத்தில் வருகிறது? நான் என்ன குற்றம் சுமத்தினேன்?

    புலிகள் கிராமப்புறத்தில் இருந்து வந்த ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களைச் சேர்த்துக் கொண்டமை (உண்மையில் அப்படி இருந்ததா என்பது அல்ல இங்கு கேள்வி) எனது தொழிலாள வர்க்க விரோதத்தை காட்டி நிற்குமாம்! லொஜிக் பிரமாதமாகத் தான் இருக்கிறது.

    //உங்களுக்கிருக்கிற மதவெறியும் இனவெறியும் எனெழுத்தில் எங்குதேடியும் கண்டுபிடிக்க முடியாது. //

    எனது எழுத்தில் உள்ள இனவெறியும் மதவெறியும்?

    //ஒரு வாக்கியத்தை தன்னும் என் எழுத்தில் எடுத்து காட்ட முடியுமா?.// என்ற மாஓவின் சவாலை அவருக்கே திருப்பிப் போட்டிருக்கிறேன்.

    வாவ்! தணிக்கை செய்யபடும் அளவுக்கு என்னைச் சுட்டி எழுதும்படி நான் என்ன குற்றம் செய்தேன்?


  76. நந்தா on July 22, 2012 3:40 am

    கனடாவின் குடிவரவாளர்களின் கோட்டா 250,000/வருஷம் என்ர விஷயம் றோகன் பொன்றவர்களுக்குத் தெரியவில்லை. இவர் குறிப்பிடும் அகதிகள் அந்த “குடிவரவாளர்கள்” என்ற தொகுதிக்குள் அடக்கம் எனபதைப் புரிந்து கொண்டால் நல்லது. கனடா வருடத்துக்கு எத்தனை “அகதிகளை” ஏற்றுக் கொள்கிறது என்று இவரால் சொல்ல முடியுமா? குடிவரவாளர்களின் தொகை குறைந்தால் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இது கனடாவில் சர்வ சாதாரணம்.

    என்ன இருந்தாலும் “தலைவரின்” வருகைக்குக் காத்திருக்கும் றோகனுக்கு எனது அனுதாபங்கள்!

    அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சந்தேகத்தின் பேரில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்களாம். றோகனுக்கு யார் சொன்னது? புலிகள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிடிக்கப்பட்டவர்கள். அந்த சட்டத்தின்படி என்னநடக்கும் என்பதை றோகன் படித்தறிவது நல்லது.


  77. Rohan on July 22, 2012 9:12 am

    //புலிகள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிடிக்கப்பட்டவர்கள். அந்த சட்டத்தின்படி என்னநடக்கும் என்பதை றோகன் படித்தறிவது நல்லது.//

    சட்டத்தின் படி நடக்கும் இலங்கை அரசு அல்லவா? படித்து அறிவது நல்லது தான். முழுப்புலிகள் அரசின் அனுசரணையில் உல்லாச வாழ்க்கை வாழ சந்தேகத்தின் கீழ் பிடிக்கப்பட்டவர்கள் மரணவதையில் – கோமாவில் – அழிகிறார்கள்.

    பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழனுக்கு இப்படித்தான் நடக்கும் என்பது புலிகள் பகுதியிலிருந்து தப்பிப் போகும் வழியில் பிடிபட்டு இப்போது கோமாவில் கைவிலங்குடன் கிடக்கும் இளைஞனின் கதையிலிருந்து தெரிகிறது. இதற்கு மேல், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிடிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை படித்தறியும் தேவை என்ன?

    அன்று:
    //அகதிகல் என்பவர்களுக்கு விசேட கோட்டா ஒன்றும் கிடையாது.//

    இன்று:
    //கனடாவின் குடிவரவாளர்களின் கோட்டா 250,000/வருஷம் என்ர விஷயம் றோகன் பொன்றவர்களுக்குத் தெரியவில்லை. இவர் குறிப்பிடும் அகதிகள் அந்த “குடிவரவாளர்கள்” என்ற தொகுதிக்குள் அடக்கம் எனபதைப் புரிந்து கொண்டால் நல்லது. குடிவரவாளர்களின் தொகை குறைந்தால் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இது கனடாவில் சர்வ சாதாரணம். //

    நான் அகதிகள் உள்வாங்கல் அதிகரிப்பு என்ற அடிப்படையில் இலக்கங்களைச் சுட்டியவுடன் நந்தா பின்வாங்கி விட்டது தெரிகிறது.

    அகதிகள் குடிவரவாளர்களுக்குள் அடக்கம் என்றால், எப்படி குடிவரவாளர்களின் தொகை குறைந்தால் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்?

    ஆனாலும், ஆண்டுக்கு 250,000 குடிவரவாளர்கள் என்று கனடால் இறுக்கமாக இல்லை. இந்தப் புள்ளி விரபரம் 2010இல் 270,000க்கு மேற்பட்டோர் உள்வாங்கப்பட்டதைக் காட்டுகிறது.

    -http://www.immigrationwatchcanada.org/

    //கனடா வருடத்துக்கு எத்தனை “அகதிகளை” ஏற்றுக் கொள்கிறது என்று இவரால் சொல்ல முடியுமா? //

    தெரியாவிட்டால் அப்படிக் கேட்பதை விட்டுவிட்டு என்ன பந்தா?

    இந்த இணைப்பு ஒவ்வொரு ஆண்டும் எந்த நாட்டிலிருந்து எத்தனை பேர் எடுக்கப்பட்டனர் என்று சொல்கிறது.
    -http://www.cdp-hrc.uottawa.ca/projects/refugee-forum/projects/documents/REFUGEESTATSCOMPREHENSIVE1999-2011.pdf

    இதில் உசாத்துணை விபரங்களும் உள்ளன. -http://www.cbc.ca/news/canada/story/2010/09/23/f-immigration-board-refugee-acceptance.html

    //என்ன இருந்தாலும் “தலைவரின்” வருகைக்குக் காத்திருக்கும் றோகனுக்கு எனது அனுதாபங்கள்!//

    தமது மூக்கைக் காயப்படுத்திக் கொள்பவர்கள் இந்த அளவுக்கு மனமும் நொந்து போகிறார்கள் என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டது!


  78. thurai on July 22, 2012 2:25 pm

    //முழுப்புலிகள் அரசின் அனுசரணையில் உல்லாச வாழ்க்கை வாழ சந்தேகத்தின் கீழ் பிடிக்கப்பட்டவர்கள் மரணவதையில் – கோமாவில் – அழிகிறார்கள்.//றோகன்
    உண்மைகளை மெல்ல மெல்ல ஏற்பதற்கு வாழ்த்துக்கள். சந்தேகத்தின் கீழ் பிடிக்கப்பட்டவர்களென்பதற்குப் பதிலாக இலங்கைத்தமிழர் என்பதையும் ஏற்ரால் மேலும் நன்றாக இருக்கும்.-துரை


  79. Rohan on July 22, 2012 10:08 pm

    //உண்மைகளை மெல்ல மெல்ல ஏற்பதற்கு வாழ்த்துக்கள். சந்தேகத்தின் கீழ் பிடிக்கப்பட்டவர்களென்பதற்குப் பதிலாக இலங்கைத்தமிழர் என்பதையும் ஏற்ரால் மேலும் நன்றாக இருக்கும்.-துரை//

    Positive ஆகவும் துரைக்கு எப்போதாவது பேச வரும் என்று வெளிப்படுத்த வாய்ப்பு அளித்ததில் திருப்தி உடையேன். ஆனாலும், ஏதோ இப்போது தான் நான் உண்மைகளை ஏற்பது போல வாசகர்களுக்குக் காட்ட முற்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.


  80. thurai on July 23, 2012 7:09 pm

    //ஏதோ இப்போது தான் நான் உண்மைகளை ஏற்பது போல வாசகர்களுக்குக் காட்ட முற்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.//றோகன்

    உண்மைகளை எவராலும் உடனடியாக அறியவோ ஏற்கவோ முடியாது. இதில் துரையோ றோகனோ விதிவிலக்கல்ல.-துரை


  81. நந்தா on July 23, 2012 9:56 pm

    றோகன் குடிவரவாளர்களின் எண்ணிக்கையில்த்தான் அகதிகளும் அடக்கம்……. 250,000 க்குள்த்தான் சகலதும்………..


  82. Rohan on July 24, 2012 11:25 am

    //தவிர கனடாவில் அகதிகளும் வருடாவருடம் உள்வாங்கும் குடிவரவாளர்களின் ஒரு பகுதியே தவிர அகதிகல் என்பவர்களுக்கு விசேட கோட்டா ஒன்றும் கிடையாது.//
    //கனடாவின் குடிவரவாளர்களின் கோட்டா 250,000/வருஷம் என்ர விஷயம் றோகன் பொன்றவர்களுக்குத் தெரியவில்லை. கனடா வருடத்துக்கு எத்தனை “அகதிகளை” ஏற்றுக் கொள்கிறது என்று இவரால் சொல்ல முடியுமா? //

    … போன்ற விலாசக் கதைகளுக்கு புள்ளிவிபரங்களுடன் உரிய பதில் கொடுத்தாயிற்று. ஆனால், விளங்க முடியாதவர்களுக்கு என்ன சொல்லித் தான் என்ன பயன்?

    //குடிவரவாளர்களின் தொகை குறைந்தால் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இது கனடாவில் சர்வ சாதாரணம். //
    … என்று தெரியாதவர்கள் தெரிந்தவர்களுக்குச் சொல்ல எடுத்த முயற்சிகளுக்கும் விளக்கம் தந்தாயிற்று.

    பின்வரும் விடயங்களுக்கு ஆதாரச் சுட்டிகளும் கொடுத்தாயிற்று.

    The percentage of immigrants allowed under economic migrant class will stay around 60 percent but the numbers will decline by around 5,000, stated Kenney. This is for allowing increased number of children and spouses into Canada for the year 2011. 2011இல் பொருளாதார அடிப்படையிலான குடிவரவு வகுப்பு கிட்டத்தட்ட 60 வீதத்தில் பேணப்படும். ஆயினும், வாழ்க்கைத் துணைகளையும் குழந்தைகளையும் அதிகளவில் உள்வாங்கும் பொருட்டு வழக்கத்திலும் பார்க்க இந்தத் தொகை 5000த்தினால் குறைக்கப்படும்.

    On the other hand, there will be an increase of 1,500 to 2,500 in the number of immigrants allowed under family class. அதேவேளை குடும்ப குடிவரவு வகுப்பின் கீழ் வரும் குடிவரவாளர்கள் கிட்டத்தட்ட 1500 இலிருந்து 2000 த்தினால் அதிகரிக்கப்படுவர்.

    So, total intake of refugees will now be up to 3,000 as Canada wants to allow more refugees from various camps from the world over including UN. ஆகவே, அகதிகள் குடிவரவு வகுப்பு உள்வாங்கல் இப்போது 3000 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஐநா மற்றும் உலகெங்கும் பல முகாம்களில் உள்ள அகதிகளை கூடுதல் தொகையில் அனுமதிக்க கனடா விரும்புவதே இதற்கான காரணமாகும்.

    அதன் பின்னும் நந்தா றோகனுக்கு அறிவூட்டுவதில் மகா முனைப்பாக இருக்கிறார்.

    //றோகன் குடிவரவாளர்களின் எண்ணிக்கையில்த்தான் அகதிகளும் அடக்கம்……. 250,000 க்குள்த்தான் சகலதும்………..// என்பவருக்கு, “250,000 என்பது ஒரு உத்தேச இலக்கமே அன்றி 240,000க்கும் 265,000க்கும் இடையில் குடிவரவாளர்களை ஏற்றுக் கொள்வது என்பது பொதுவான கொள்கை, அல்லது திட்டம். ஆனால், 2011 இல் கனடா 280,000 குடிவரவாளர்களை உள்வாங்கியது” என்ற தகவல் கொண்ட ஆதாரச் சுட்டியை நான் கொடுத்தது தெரியாதிருக்கிறது.

    தேசம்நெற் வாசகர்களின் அறிவு வல்லமை பற்றி நந்தாவுக்கு அப்படி ஒரு மட்டமான மதிப்பீடா இருக்கிறது?


  83. T Sothilingam on July 29, 2012 3:23 pm

    நிமலரூபன் படுகொலை – சிறையில் நடந்தது என்ன? -Written by ndpfront

    தனது மகன் நிமலரூபனின் பிரேதத்தை பெறும் வரைக்கும் அறுபத்து மூன்று வயதான இராஜேஸ்வரி ஒரு நாளும் மனம் தளர்ந்ததில்லை. நம்பிக்கைதான் அவளுக்கு வாழ்க்கை.

    யுத்த கோரங்களினால் 1990 களில் காரைநகரில் இருந்து இடம் பெயர்ந்து பல்வேறு இடர்களுக்கு மத்தியிலே வவுனியாவுக்கு வந்து சேர்ந்தனர் இராஜேஸ்வரி குடும்பத்தினர். நெளுக்குளம் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. தன்னுடைய ஒரே ஒரு மகனான நிமலரூபனை எப்படியெண்டாலும் வளர்த்து ஆளாக்கிவிட வேண்டும் என்பதே இராஜேஸ்வரியின் கனவாகும்.

    5.10.2009 நெளுக்குளத்திலிருந்து வவுனியாவுக்கு வரும் போது வேப்பம் குளம் இராணுவமுகாம் சோதனைச் சாவடியில் வைத்து நிமலரூபன் இராணுவ புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டான். நிமலரூபன் கைது செய்யப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் நிமலரூபனின் நண்பர்கள் மூவர் இராணுவதினரால் கைது செய்யப்பட்டு நெளுக்குளத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர். அன்றிலிருந்து நிமலரூபனும் இராணுவத்தினரால் குறிவைத்து தேடப்படும் ஒரு நபராகவே இருந்து வந்தார். பல தடவைகள் வீட்டுக்கு இராணுவத்தினர் தேடி வந்த போதெல்லாம் மறைந்து வாழ்ந்த நிமலரூபன் கடைசியில் வேப்பங்குளத்தில் வைத்து கைது செய்யப்பட்டான்.

    வேப்பங்குள முகாமில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிமலரூபன் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். பயங்கரவாத தடுப்பு பிரிவின் மோசமான சித்திரவதைகளுக்கு நிமலரூபன் உள்ளாக்கப்பட்டார். புலிகளின் மறைவுக்குப் பின் வவுனியாவில் புலிகளின் நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு தாக்கப்பட்டார். அவனிடமிருந்து பொய்யான குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பெற்றிருந்தனர்.

    பயங்கரவாத தடுப்பு பிரிவிலிருந்து கொழும்பு தடுப்புக்காவலுக்கு மாற்றப்பட்ட (ஊசுP) நிமலரூபன்இ ஒரிரு மாதத்தில் வவுனியா சிறைக்கு மாற்றப்பட்டான். உயர் நீதிமன்றத்தில் எந்தவித வழக்கும் தாக்கல் செய்யப்படாத நிலையில் பதினைந்து நாட்களுக்கொருதடவை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டான். ஒரு தடவை நெஞ்சுக்குள் நோவதாக சொல்லி மருந்தும் எடுத்திருக்கிறான். தினமும் சாப்பாடு கொண்டுவரும் தாயிடம்இ சித்திரவதைகளினால் தனக்கு நோய் தொட்டுவிட்டது என்று சொல்லி அழுவான். தாயின் ஆறுதல் வார்தையிலும் தைரியத்திலுமே அவனின் காலங்கள் ஓடிக்கொண்டிருந்தது.

    சிறையிலிருந்து வெளியே வருவான் என்ற நம்பிக்கை மட்டும் இராஜேஸ்வரி மனதில் உறுதியாக இருந்தது. வவுனியா சிறையிலிருக்கும் மகனை தினமும் பொட்டல சோற்றுடன் நெளுக்குளத்திலிருந்து பார்க்கச் செல்வாள். மகனுக்கு மட்டுமல்லாது தன்னால் இயன்றளவு மற்ற பிள்ளைகளுக்கும் சேர்த்து சமைத்துக் கொண்டு போவாள். சிறையிலிருந்தாலும் தன் மகன் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்று நினைப்பவள். அவளுக்கென்று இருக்கிற சொந்தமென்றால் வயதான கணவன் கணேசனும் மகன் நிமலரூபனும்தான்.

    சிறைச் செலவுகளுக்காக காரைநகரிலிருந்த தனது காணியை அடகு வைத்தே செலவுசெய்து வந்திருந்தாள். பலசரக்கு கடையிலும் அறுபதினாயிரத்துக்கும் மேல் கடன். மற்றத் தாய்மாரைப் போல் தானும் ஒரு நாள் தன்பிள்ளையுடன் சந்தோசமாக வாழுவன் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.

    வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்காக ஒரு மாடிக்கட்டிடம் மாத்திரமே உள்ளது. கீழ் பகுதியில் உள்ள செல்லில் 27 அரசியற் கைதிகளும் மேற்பகுதியிலுள்ள திறந்த மண்டபத்தில் சிவில் கைதிகள் 180 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். குறைந்த வசதிகளைக்கொண்டு கைதிகளால் நிரம்பிய சிறைச்சாலையாகவே வவுனியா சிறைச்சாலை இருந்து வந்தது. கைதிகள் ஆவணக்காப்பகத்தை (சுநஉழசன சுழழஅ) தவிரஇ வவுனியா சிறைச்சாலை அநுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகரின் கீழ் இயங்குமமொரு கிழையாகவே இருந்துவந்தது.

    சிறைச் செல்லில் உள்ளவர்கள் தங்களுடைய பொதுவான பிரச்சினைகளை சிறைச்சாலை நிருவாகத்துடன் கதைப்பதற்கு தங்களுக்குள் ஒருவரை தெரிவு செய்து வைத்திருப்பார்கள். அப்படி தெரிவு செய்யப்பட்டுஇ காம்பரா பாட்டியாக இருந்தவர்தான் நிமலரூபனும். சிறையின் செல்களிலுள்ள எல்லோருடனும் கதைப்பதைவிட எல்லோர் சார்பாகவும் ஒருவருடன் கதைப்பதற்கு சிறைச்சாலை நிருவாகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு ஒழுங்கு முறையாகும் இது. சிக்கலான பிரச்சினைகள் வரும் போதுஇ சிறைச்சாலை நிருவாகத்துடன் காம்பிரா பாட்டி ஒத்துப் போகக் கூடியவராக இருந்தால் அவரை தங்கள் பக்கம் வைத்துகொண்டு பிரச்சினைகளை தணிக்க நிர்வாகம் முயற்சிக்கும். ஆனால் நிமலரூபன் வளைந்து கொடுக்காதது சிறைச்சாலை நிருவாகத்துக்கு நிமல்ரூபன் மேல் கடுப்பாக இருந்தது.

    பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வழக்கு தங்களுக்கு சாதகமற்ற நிலையில் இருந்தால்இ “பயங்கரவாதத் தடை சட்டத்தின் திருத்தியமைக்கப்பட்ட 10 ஆம் இலக்க 1982 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 15 ஆம் அ(1) ஆம் பிரிவின் கீழ்இ அரச பாதுகாப்பிற்கும் பொது அமைதிக்கும் பங்கம் விளையுமென பாதுகாப்புச் செயலாளர் கருதும் இடத்து சுதந்திரமான நியாயமான விளக்கம் நடைபெறுவதை உறுதிப்படுத்தஇ வழக்கின் எதிரியை விளக்க மறியலிலிருந்து மீண்டும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைத்தல்”இ என்ற சட்டத்தைப் பயன்படுத்தி வழக்காளியை மேலதிக விசாரணை என்று விசாரணப் பிரிவுக்கு மாற்றம் செய்வர். வழக்காளியின் வழக்கை இழுத்தடிப்பதற்கு அரச பயங்கரவாதம் கையாளும் ஒரு உத்தியாக இது இருக்கின்றது.

    இதனடிப்படையில் நிமலரூபனுடன் வவுனியா சிறையிலிருந்த கணேஸ்வரன்இ சிந்து என்ற இருவரையும் பூஸா தடுப்பு முகாமுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் உள்ளெடுத்திருந்தனர். கணேஸ்வரன் புனர்வாழ்வு பெறுவதற்காக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த நிலையிலேயே வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்படமலே பூஸா தடுப்பு முகாமுக்கு எடுத்து செல்லப்பட்டனர். அவர்களுடைய உடுப்புக்களைக் கூட சிறைச்சாலைக்குச் சென்று எடுத்துவர பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அனுமதிக்கவில்லை.

    நிமலரூபனுடனிருந்த மற்றுமொரு கைதியான நாகராசா சரவணபவான் அனுராதபுரம் நொச்சியாகம நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக சென்றவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் உள்ளீர்க்கப்பிட்டிருந்தார். அன்றிரவு சரவணபவான் அனுரதபுர சிறையிலே தங்கவைக்கப்பட்டிருந்தார். அனுரதபுரத்தில் 60-70 அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள். இவர்களுக்கென்று பிரத்தியேகமான அயஒiஅரஅ செல் இருக்கிறது. சரவணபவான் அந்த செல்லில் அடைக்கப்படாமல் p1 என்ற சிங்களக்கைதிகளின் செல்லில் போடப்பட்டிருந்தார்.

    ஏற்கனவே சரவணனுக்கும்இ p1 செல்லில் இருந்த சிங்களக்கைதி ஒருவருக்குமிருந்த முரண்பாட்டின் வெளிப்பாடு சரவணனை தாக்கி மலங்களை ஊற்றி கொடுமைப்படுத்தியுள்ளனர். இவைகள் சிறைச் சாலை நிருவாகத்துக்கு தெரிந்திருந்தும் கண்டும் காணாததுபோல் நடந்து கொண்டனர். ஏற்கனவே உணவு தவிர்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டிருந்த இவர்களை பழிவாங்கும் செயலாகவும் சிறைச்சாலை நிருவாகம் இதனை கையாண்டுகொண்டது.

    சிறைச்சாலைகள் நீதிமன்ற நிருவாகத்தின் கீழே இயங்குகிறது. ஆனால் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை நீதிமன்றத்தாலும் தடுத்து நிறுத்த முடியவில்லைஇ தங்களுடைய கோரிக்கைகளை சிறைச்சாலை நிருவாகமும் செவிமடுக்கவில்லை என்ற வெப்புசாரத்தில் வவுனியா சிறையில் இருந்த கைதிகளுக்கு சரவணனுக்கு நடந்தவைகள் மேலும் ஆத்திரத்தை ஊட்டியது. கணக்கெடுப்பு செய்ய வந்த மூன்று சிறைச்சாலை அதிகாரிகளை கைதிகள் தங்களுடன் பிடித்து வைத்துவிட்டு கதவை பூட்டிவிட்டனர்.

    கைதிகளின் கோரிக்கைகள்இ பிரச்சினைகள் மறைக்கப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகளை கைதிகள் பிடித்து வைத்தது மட்டுமே மேற்கிளம்பியது. நீதிபதி அலக்ஸ்ராசாஇ சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ஆகியோர் கைதிகளிடம் கதைத்து சிறைச்சாலை அதிகாரிகளை விடுவதற்கான உடன்பாட்டுக்கு வந்துருந்தனர். ஆனால் பாதுகாப்பு செயலாளரின் உத்தரவின் பெயரில் விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலை கட்டிடத்துக்குள் கண்ணீர்புகை அடித்து கைதிகளை அரை மயக்க நிலையில் வைத்துஇ விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலையை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தனர்.

    கைதிகளை விசேட அதிரடிப்படடையினர் தாறுமாறாக தாக்கியபோது எதிர்ப்பக்க கட்டிடத்தில் நீதிபதியும்இ விசேட அதிரடிப்படியின் பொறுப்பதிகாரியும் பார்த்துக்கொண்டிருந்தனர். ‘கைதிகளை தாக்க வேண்டாம் என்று அதிரடிப்படைப் பொறுப்பதிகாரி’ கூறியும் அதனை அவர்கள் செவிமடுக்கவில்லை. சப்பாத்துக் கால்களைத் தூக்கி கைதிகளின் நெஞ்சில் உதைந்தனர். பட்டன் பொல்லால் ஓங்கும் விசைக்கு தலையில் அடித்தனர். அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. சட்டம் கைகட்டிஇ வாய்பொத்தி பார்த்துக் கொண்டிருந்தது.

    அன்றைய தினம் மதியமளவில் வவுனியா சிறைச்சாலையிலிருந்து அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கைதிகள் கொண்டு செல்லப்பட்டனர். கைதிகள் வாசலில் வைத்து தரம் பிரிக்கப்படனர். சிவில் கைதிகள் வேறாகவும் பயங்கரவாத சந்தேக கைதிகள் வேறாகவும் பிரிக்கப்பட்டனர்.

    பிரித்தெடுத்த கைதிகள் அனைவரையும் அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகரின் முன்பாக முழங்காலில் நிக்குமாறு பணித்தனர். அத்தியட்சகரே தனது பட்டன் பொல்லால் தாக்குதலை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அனைவரும் வந்த வீச்சுக்கு தாக்கினர். ஒரு கட்டத்தில் களைப்படைந்த நிலையில் தண்டனை கைதிகளாக இருந்த நான்கு சிங்கள கைதிகளை கூட்டி வந்து விட்டார் சிறைச்சாலை அத்தியட்சகர். அவர்களும் அரசியற் கைதிகளை அடித்தார்கள். சிறைச்சாலை அத்தியட்சகரின் சப்பாத்தை நக்கச் சொல்லி கைதிகளை பலவந்தப்படுத்தினர்.

    நிமலரூபன்இ ஜெபநேசன்இ வேலாயுதம்இ டில்ருக்ஸன்இ சசி ஆகியோரைத் தனிமைப்படுத்தித் தாக்கினர். நிமலரூபனின் நெஞ்சில் காயம் ஏற்பட்டு இரத்தக்கசிவு ஏற்பட்டது. கைப்பகுதியில் நரம்பு வெடித்து தோலின் உட்பகுதியினூடாக இரத்தம் கசிந்தது. நிமலரூபனை காலில் பிடித்து இழுத்து சென்று செல் கம்பிக்குள் இரண்டு காலையும் விட்டு திருகிமுறித்தார்ககள்.

    டில்ருக்ஸனின் தலையில் புத்தகதை வைத்து பொல்லால் ஓங்கி அடித்தார்கள். அந்த சிறையில் மரண ஓலத்தை தவிர எந்த சத்ததையும் கேட்கமுடியவில்லை. அநுராதபுர சிறைச்சாலையின் பல நூறு காதுகள் அந்தக் கைதிகளின் மரண ஓலத்தை கேட்டு சிரித்துக் கொண்டிருந்தன.

    அன்று நள்ளிரவே 27 அரசியற் கைதிகளையும் அநுராதபுரத்திலிருந்து மகர சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர் சிறைச்சாலை மிருகங்கள். நடக்க முடியாதபோதும் இழுத்து ஏற்றிக்கொண்டு சென்றார்கள். மகர சிறையின் செல்லில் மரணவலியில் எல்லோரும் துடித்துக் கொண்டிருந்தனர். ஓரளவுக்கு முடிந்தவர்கள் நிமலரூபனுக்கும் மற்றவர்களுக்கும் உதவிகள் செய்தனர். வைத்திய வசதிகளுக்காக கைதிகள் மன்றாடியும் அதிகாரிகளால் நிராகரிக்கப்படது. ஒவ்வொருவருடைய காயங்களிலிருந்தும் ஊனம் வடிந்து கொண்டிருந்தது. மகர சிறைச்சாலை அதிகாரிகளும் கைதிகளின் மரண வேதனையினை இரசித்தனர்.

    நிமலரூபன் வலியாலும்இ இரத்தப் போக்காலும் துடித்துக் கொண்டிருந்தான். அதற்குமேலும் சித்திரவதைகளைத் தாங்கமுடியாமல் அவனது உடலை விட்டு உயிர் பிரிந்து அடங்கியது.

    ஒரு அத்தியாயம் முடிந்தது. எல்லோரது கண்களிலும் மரண பயத்தைத்தன் காணமுடிந்தது. இதைத்தான் இந்த அரச பயங்கரவாதம் எதிர்பார்த்தது.

    கதைத்துக் கொண்டிருக்கும் போது மயக்கமுற்று விழும் ஜெபநேசனும்இ வேலாயுதமும் கோமாவோடு போரடும் டில்ருக்ஷ்னும்இ ஒரு காலில் ஐந்து இடத்தில் முறிவுஇ கையில் முறிவு என அல்லலுறும் சசியினதும் என சிறைக் கைதிகளின் அவலம் தொடருகிறது.

    அரச பயங்கரவாதம் தனது கோரமுகத்தை இன்னுமொருமுறை வெளிப்படுத்தி பலரைத் தீர்த்துக்கட்டியுள்ளது. விசாரணைகளைப் பற்றி அக்கறை கொள்ளப்படாத நிலையிலே இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெளிவாகிறது. இப் படுகொலை அரசியற் போராட்டத்துக்கு விழுந்திருக்கும் பலத்த அடி.

    தன்னுடைய ஒரே ஒரு மகனான நிமலரூபனை எப்படியெண்டாலும் வளர்த்து ஆளாக்கி விட வேண்டும் என்று கனவுடன் வாழ்ந்த இராஜேஸ்வரி இப்போது தன்மகனின் இறந்த உடலை சட்டத்தினூடாக பெறுவதற்கு போரடுகிறாள். இவளுக்கு உதவி செய்பவர்களுக்கு அரச இயந்திரம் மறைமுக மிரட்டல்களை கொடுக்கிறது.

    தாயின் தளராத நம்பிக்கையும் போராட்டமும் தொடர்கிறது.

    -கனகமணி


  84. Vimalan on August 1, 2012 7:02 am

    -http://www.flickr.com//photos/vikalpasl/sets/72157630756498698/show/


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு