தள்ளாடி இராணுவ முகாமில் இருந்தே தாக்குதலை வழிநடத்தினார் றிசாத் பதியுதீன் – ‘லங்கா நியூஸ்வெப்‘ தகவல்
மன்னார் நீதிவான் நீதிமன்றம் மீதான தாக்குதலை தள்ளாடி இராணுவ முகாமில் இருந்தே சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் வழிநடத்தியதாக ‘லங்கா நியூஸ் வெப்‘ தகவல் வெளியிட்டுள்ளது. மன்னார் விடத்தல்தீவில் உள்ள தமிழ் மீனவர்களின் வீடுகள் மீது கடந்த 16ம் நாள் கற்களை வீசியதான குற்றச்சாட்டில், றிசாத் பதியதீனின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 17ம் நாள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
விடத்தல்தீவில் உள்ள வீடு ஒன்றின் உரிமை தொடர்பாக எழுந்த பிரச்சினையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கவனிக்க தான் உடனடியாக மன்னாருக்கு செல்ல வேண்டும் என்று றிசாத் பதியுதீன், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் உலங்குவானூர்தி ஒன்றைக் கோரியிருந்தார்.
சிறிலங்கா பாதுகாப்புச் செயலரின் உத்தரவை அடுத்து றிசாத் பதியுதீன் உலங்குவானூர்தி ஒன்றில் தள்ளாடி இராணுவ முகாமுக்கு சென்றார். அப்போது மன்னார் நீதிமன்றத்துக்கு வெளியே சுமார் 1000 முஸ்லிம்கள் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் மன்னார் நீதிமன்றத்துக்குள் நுழைவதைத் தடுக்க சிறிலங்கா காவல்துறையினர் தடைகளை ஏற்படுத்த முயன்றனர்.
நீதிமன்றத்துக்கு வெளியே அவர்கள் எதிர்ப்பில் ஈடுபட அனுமதிக்கப்பட்டிருந்தனர்.மன்னார் நீதிமன்றத்தின் மீது கற்கள் வீசப்பட்டபோது அதை சிறிலங்கா காவல்துறையினர் தடுக்க முனையவில்லை. அதற்குக் காரணம், மன்னார் காவல்நிலைய தலைமையக ஆய்வாளரான துசார தளுவத்த, றிசாத் பதியுதீனின் ஆதரவாளர்கள் மூலம் கண்டிக்கு மீன்களை அனுப்பி வியாபாரம் செய்து வந்ததேயாகும்.
றிசாத் பதியுதீனின் ஆதரவாளர்கள் நீதிமன்றம் மீதும் சிறிலங்கா காவல்துறையினர் மீதும் கற்களை வீசிய போதும், ஆய்வாளர் தளுவத்தவும் காயமடைந்தார்.இதையடுத்து அவர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது தாம் மன்னாரில் இருக்கவில்லை என்று சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.தான் அரசியலுக்கு வந்த பின்னர் ஒருபோதும் மன்னார் நீதிமன்றத்துக்கே சென்றதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.உப்புக்குளம் செல்வதற்காக தாம் உலங்குவானூர்தி மூலம் பிற்பகல் 3.30 மணியளவிலேயே தள்ளாடி இராணுவ முகாமில் தரையிறங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed
முஸ்லீம்களையும் அழிக்க அரசு றிச்சாட்டை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
தொலைபேசி வழியாக அமைச்சர் றிசாத் பதியுதீன் நீதிபதியை அச்சுறுத்தியது குறித்து போலீசில் புகார் செய்துள்ளார். இதே போன்ற அழுத்தங்களை அமைச்சர் றிசாத் பதியுதீன் ஏற்கனவேயும் நீதிபதிக்கு கொடுத்தது குறித்து புகார் அளித்துள்ளார்.
நிலமையை அவதானித்த அதிபர் தொலைபேசி யாருடையது என அறியும்படி புலனாய்வுத் துறைக்கு கட்டளை இட்டுள்ளார். நீதிபதியை அச்சுறுத்திய தொலைபேசியின் உரிமையாளர் பெயரை ( சனி – ஞாயிறு தினங்களுக்குள்) வேறொருவர் பெயருக்கு மாற்ற முயல்வதாக தகவல்கள் கசிந்துள்ளன. நீதிபதி கொடுத்துள்ள புகாரின் படி அமைச்சர் றிசாத் பதியுதீனை கைது செய்யலாம். ஆனால் அவரை தப்ப வைக்க அரசு முயல்கிறது. நீதிபதிக்கே நீதியில்லையெனில் …………. ? யா அல்லா!
//நீதிபதி கொடுத்துள்ள புகாரின் படி அமைச்சர் றிசாத் பதியுதீனை கைது செய்யலாம். ஆனால் அவரை தப்ப வைக்க அரசு முயல்கிறது. நீதிபதிக்கே நீதியில்லையெனில் …………. ? //
றிஷாத் பதுர்தீன் ஏன் கோத்தபாயவுக்கு ஒரு முக்கியமான ஆளாக இருக்கிறார்?
முக்கிய சொற்கள்:
சமூக நம்பிக்கை நிதியம் / பலகோடிக்கணக்கான சொத்து / புத்தளம் தலைமைச் செயலகம் / பட்டாணி ராசிக் / காணாமல் போனார் / முஸ்தபா நிகாமத் / சகாப்தீன் நெளஷாத் / மலக் குழி / புதைப்பு / முஷ்டீன் / பாதுகாப்பு அமைச்சு / றிஷாத் பதுர்தீனின் அமைச்சு வாகனம் /
http://www.lankaenews.com/English/news.php?id=13038
It is a widespread question among the people , why hooligan of a Minister Badurdeen is more important to MaRa and Gota than adherence to clear benign laws and rules of discipline in the country . Why is the Govt. seeking to protect this bestial Minister ? Of course, there is an answer to this.
http://groundviews.org/2012/02/11/who-killed-razeek-and-why-unanswered-questions-two-years-after-his-abduction/
The date and method used to kill Razeek is not clear.
To the best of our knowledge, the police have made no move to apprehend or question several others implicated in the case including;
Mr. Irshard, Parliamentary Secretary to Minister Rishard Bathiudeen, who stated publicly, in October 2010, that Mr. Razeek was held by the Defense Ministry;
Persons travelling in the vehicle with suspect Musdeen, in which according to the suspect, Mr. Razeek was abducted;
Persons travelling with suspect Nowshaadh, who admitted to meeting Mr. Razeek in Polonnaruwa on the day he disappeared. According to Nowshaadh, he and several others were travelling in a vehicle belonging to the Resettlement Ministry, headed by Minister Bathiudeen at the time;
Minister Bathiudeen and Mustafa Nihamath, former CTF Trustee General and currently employed at the World Food Program in Colombo. The Razeek family and the Puttalam Mosque Committee believe that M. Nihamath is a key suspect in the case and that his involvement merits further inquiry. Before the postmortem on 2nd August 2011, Mr. Razeek’s son Riskhan clearly told the JMO that he believed M. Nihamath to be involved in his father killing. At Mr. Razeek’s funeral on 3rd August thousands of those present chanted slogans calling for the arrest of M. Nihamath and Minister Bathiudeen.
மேலே றோகன் தந்துள்ள செய்தி உண்மையானது.
2010ம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போன கொமினிட்டி டிரஸ்ட் பண்டின் முக்கியஸ்த்தராக இருந்த பட்டாணி ராசிக் வசம் இருந்த கோடிக் கணக்கான பணத்தை அபகரிக்க றிசாட் தரப்பு பட்டாணியை கொலை செய்தது.
பட்டாணியின் உடலம் றிசாட்டின் காரியதரியினுடைய வளவு கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அதன் பின்னர் பட்டானி இஸ்லாமிய மக்களுக்காக உருவாக்கிய டிறஸ்ட்டிலிருந்த பணத்துக்கு என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாது. அதை றிசாட் கோட்டா மற்றும் மகிந்தாவுடன் பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனாலேயே றிசாத்தை காப்பாற்ற ரெஜீம் தரப்பு முயல்கிறது. என்னதான் இருந்தாலும் பிரச்சனை உக்கிரமடைந்து விட்டது.
முன்னால் நீதித்துறை காரியதரிசியாக இருந்த சொலிசிட்டர் ஜெனரல் சுகத கமலத், மன்னார் நீதிபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருமாறு வேண்டிய போது, அதற்கு மசியாத மன்னார் நீதிபதி ஜுட்சன், இது தனது தனிப்பட்ட விடயமில்லை. இது சட்டத் துறைக்கான சவால் என சொல்லி பின்னர், சுகத கமலத், தான் அழைத்தது குறித்து யாரிக்கும் தெரிவிக்க வேண்டாம் என சொல்லியுள்ளார். ஆனால் மன்னார் நீதிபதி ஜுட்சன் தொலைபேசி கலந்துரையாடலை வெளியிட்டுள்ளார்.
இப் பிரச்சனையில், நீதிபதிகளும் – சட்டத்தரணிகளும் ஆளாளுக்கு கயிறிழுப்பார்களோ என சந்தேகங்கள் இருந்த போதும், ஒரு சில அரசுக்கு சார்பானவர்களைத் தவிர பெரும்பாலான அரசு சார்பான நீதிபதிகளும், சட்டத் தரணிகளும் கூட றிசாத்துக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
இதைத் தவிர இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க மன்னார் நீதிபதி ஜுட்சன், ஒரு புலி என அவரது நிகழ்ச்சியில் தெரிவித்ததை அடுத்து நிலமை இன்னும் மோசமாயுள்ளதாகவும், அதற்காக மற்றொரு வழக்கை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் நாளை தொடுக்கவிருக்கின்றனர்.
றிசாத் பதியூதீன் தனது அதிகாரபூர்வ தொலைபேசி மூலமே நீதிவானை அச்சுறுத்தினாரா?
அமைச்சர் றிசாத் பதியூதீன், மன்னார் நீதிவானுக்கு அச்சுறுத்தல் விடுத்தது தொடர்பான குற்றச்சாட்டையடுத்து, அமைச்சரின் தொலைபேசி அழைப்புகள் பற்றிய விபரங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சேகரித்து வருகின்றனர்.அமைச்சர் றிசாத் பதியூதீன், தனது அதிகாரபூர்வ தொலைபேசி இலக்கத்தில் இருந்தே மன்னார் நீதிவானின் கைத்தொலைபேசிக்கு அழைத்துள்ளமை அறியப்படுவதாக ‘சண்டே ரைம்ஸ்‘ தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், கைத்தொலைபேசி இணைப்பு வழங்குனரிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் பற்றிய விபரங்களை தாம் கோரியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.
இதேவேளை உதவி கண்காணிப்பாளர் சோமரத்ன தலைமையிலான மூன்று பொலிஸ் குழுக்கள், போராட்டம் தொடர்பாகவும், மன்னார் நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சம்பவ இடத்தில் இருந்த ஊடகவியலாளர்களின் காணொளி ஆதாரங்களை வைத்து இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், மன்னார் நீதிவான் யூட்சன், நீதிச் சேவைகள் ஆணைக்குழுவில் செய்துள்ள முறைப்பாட்டில், கடந்த 17 மற்றும் 18ம் திகதி, றிசாத் பதியூதீன் என்று அறிமுகப்படுத்தியவரிடம் இருந்து தனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் இரண்டு தொலைபேசி அழைப்புகள் வந்ததாக கூறியுள்ளார்.
இதேவேளை தான் நீதிமன்றத்தின் மீதான தாக்குதலை நடத்தவோ அல்லது நீதிவானுக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கவோ இல்லை என்று றிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.
இச்சம்பவத்தினால் அமைச்சர் றிசாத் பதியூதீனுக்கு ஆதரவாகவும் எதிர்ப்புத் தெரிவித்தும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
-http://tamil.srilankaxnews.com/
//அமைச்சர் றிசாத் பதியூதீன், மன்னார் நீதிவானுக்கு அச்சுறுத்தல் விடுத்தது தொடர்பான குற்றச்சாட்டையடுத்து, அமைச்சரின் தொலைபேசி அழைப்புகள் பற்றிய விபரங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சேகரித்து வருகின்றனர்.அமைச்சர் றிசாத் பதியூதீன், தனது அதிகாரபூர்வ தொலைபேசி இலக்கத்தில் இருந்தே மன்னார் நீதிவானின் கைத்தொலைபேசிக்கு அழைத்துள்ளமை அறியப்படுவதாக ‘சண்டே ரைம்ஸ்‘ தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், கைத்தொலைபேசி இணைப்பு வழங்குனரிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் பற்றிய விபரங்களை தாம் கோரியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.
//
இதை விட இனிப்பான செய்தி கோத்தாவுக்குத் தேவையில்லை. காப்பாற்றுவதற்காக என்று பேரம் பேசி றிஷாத் பதுர்தீனிடம் சுளை சுளையாகக் கறந்து விட்டு … அப்படியே தள்ளியும் விட்டுவிடலாம்.
கோத்தாவா கொக்கா….
மேலே குறிப்பிடப்படும் இஸ்லாமிய சமூகத்தின் அமைப்பானது பலபேர்களின் கூட்டான குழு ஒன்றினால் நிர்வகிக்கப்படுவது. அங்கே தவறுகள் நடைபெறாமல் இருக்கும். ஏன் இலங்கை அரசும் மந்திரிகளும் அதில் தலையீடு செய்ய வேண்டும் இது பணத்தை சூறையாடுவதற்கு என்பதை விட வேறு என்னவாக இருக்கும்.
இலங்கையின் சுதந்திரமடைந்த நாட்களில் இருந்து இந்த நாட்டின் வரலாற்றை மீட்டு பார்ப்போமானால் இன்று இந்த நாட்டின் அலங்கோலங்களுக்கு விடைகாண முடியும். அடிப்படையில் நாட்டின் சகல நிர்வாகங்களிலும் (நீதி, பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு, காணி, கல்வி) அரசின் சட்டத்திற்கு முரண்பாடான தலையீடு அதன் பிரதிபலிப்பால் லஞ்சம், ஊழல் எல்லா துறைகளிலும் ஊறி நிற்பது இந்த நாட்டின் சாபகேடகும். ஜனநாயம் என்பது ஒரு சிறந்த ஒரு ஆட்சி முறை என்பதில் ஐயமில்லை. ஆனால் அது எப்போது சிறந்ததாக இருக்கும் என்றால் அதற்கான கடமைபுகள் அரசியல் தலையீடு அற்ற சுதந்திரமான நிறுவனங்களாக இருக்கவேண்டும். அல்லாவிடில் அது முடி ஆட்சியை விட கொடுமையான சர்வாதி காரமாக உருவாகும். அந்த நிலைமைக்கே இன்று இலங்கை என்ற நாடு சென்றுவிட்டது. அதன் உச்ச கட்டமே இந்த அமைச்சரின் நீதி துறையின் மீதான பாச்சல் ஆகும். இது ஒன்றும் புதிது அல்ல. இது அந்த அமைச்சரின் குற்றம் அல்ல. இது ஆரம்பிக்க பட்டு பல தசாப்தங்களை கடந்து விட்டோம். பச்சிளம் பாலகர்கள் முதல் தள்ளாத முதியவர்களை கூட பெட்ரோல் ஊற்றி கொளுத்த அதனை பார்த்தும் பாராதவர்கள் போல் இருந்த பாதுகாப்பு துறை, சட்டத்துறை, நீதித்துறை இனியும் மாறுமா?
//பச்சிளம் பாலகர்கள் முதல் தள்ளாத முதியவர்களை கூட பெட்ரோல் ஊற்றி கொளுத்த அதனை பார்த்தும் பாராதவர்கள் போல் இருந்த பாதுகாப்பு துறை, சட்டத்துறை, நீதித்துறை இனியும் மாறுமா?//
இதை எல்லோரும் இலங்கையில் செய்துள்ளார்கள்!
சட்டம் அப்போதும் பார்த்துக் கொண்டுதான் இருந்தது?
கொலைகாரர்களுக்கு, சோடா அல்லவா ஊத்திக் கொடுத்தார்கள் .
அன்புள்ள அஜீவன்,
“இதை எல்லோரும் இலங்கையில் செய்துள்ளார்கள்!
சட்டம் அப்போதும் பார்த்துக் கொண்டுதான் இருந்தது?”
என்று கூறுவதன் மூலம் சாந்தனுக்கு சூடேற்றியுள்ளீர்கள் அதாவது, “புலி என்ன திறமோ” என்று கேட்டுள்ளீர்கள் மாதிரியும், அப்போது புலி, இப்போது அரசாங்கம் என்று சொல்லி சமாளிக்கின்றீர்கள் என்றும் அவசரமாக வருவார்.
இது எப்போதும் தெரிந்த கதைதானே. சிங்களவர் மோடர், வேடர், பிணம் திண்ணி என்பார்கள். ஹகீம் தனது அரசியல் இருப்புக்கு ஏதாகிலும் செய்தால் ஏதோ உலகத்தின் முதல் அரசியல்வாதி இப்படி நடந்துவிட்டதாகவும், ஆகவே அவர் சார்ந்த சமயத்தினர் அத்தனை பேறும் அதே போக்கானவர்கள் என்றும் பெரிய கதை அடிப்பார்கள். தாங்கள் மோசமாக சித்தரித்த அதே சிங்களவருடன் கூடிக்குலாவ ஆயத்தமாகுவார், முஸ்லீம்கள் ஓரம்கட்டப் படுவர் என்ற நப்பாசையில். இப்படி உங்கள் போன்ற ஓரிருவர் இடைகிடை விடயத்தை விளக்கி சொல்லும் போது ஓடி ஒளிந்துவிடுவர் அல்லது அதிரடி தாக்குதலுக்கு சந்தர்பம் பார்த்துவ நிற்பர். போதாதற்கு pure politics பேச முனைவர்.
//…என்று கூறுவதன் மூலம் சாந்தனுக்கு சூடேற்றியுள்ளீர்கள் அதாவது, “புலி என்ன திறமோ” என்று கேட்டுள்ளீர்கள் மாதிரியும், அப்போது புலி, இப்போது அரசாங்கம் என்று சொல்லி சமாளிக்கின்றீர்கள் என்றும் அவசரமாக வருவார்…..//
நிஸ்தார்,
பதில் வரமுன்னரே தெரிந்துவைத்து ஒப்புதல் வாக்குமூலம் அழித்துள்ளீர்கள்.
ஒரு பயங்கரவாத அமைப்பு என உலகமெல்லாம் ‘போற்றி புகழப்படும்’ அமைப்பு செய்த விடயம், அதன் ‘சட்டங்கள்’ ‘செயற்பாடுகள்’ போன்றவற்றை உலகமே ‘ஏற்றுக்கொண்டது’ இல்லையா ?
அவர்களுக்கு ஐ.நாவில் அங்கத்துவம் கூட உண்டாமே? அவர்கள் உலக மனிதாபிமான சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பார்கள் என ’கையெழுத்து’ போட்டுக் கொடுதனராமே? இப்படிப்பட்ட இயக்கம் செய்த விடயங்களை ஒரு அரசாங்க (கேவலம் ஒரு அரசாங்கம்) அமைப்புகளான காவல் துறை நீதித்துறை போன்றவர்கள் செய்த விடத்துடன் ஒப்பிடலாமா?
சட்டம் படித்தவர்கள், ஒலிபரப்புத்துறை, சினிமா, என பல்துறை விற்பன்னர்கள் என்ன கொக்கா?? ஒப்பீடு என்றால் ஒப்பீடு அப்படி ஒரு ஒப்பீடு!!
நிஸ்தார் நீங்கள் லிற்றில் எய்ட் நிறுவன ‘சட்ட ஆலோகர்’ என்கிறார்கள். உண்மையா?
//…இது எப்போதும் தெரிந்த கதைதானே. சிங்களவர் மோடர், வேடர், பிணம் திண்ணி என்பார்கள். ….//
ஏன் மோட்டுக்குடி, முடக்குவாதம் எல்லாம் விட்டுவிட்டீர்கள்? பிணம்தின்னிகளோ இல்லையோ பிணத்தைப் புணர்ந்து வீடியோ எடுத்தவர்களும் இருக்கிறார்கள்!
//….ஹகீம் தனது அரசியல் இருப்புக்கு ஏதாகிலும் செய்தால் ஏதோ உலகத்தின் முதல் அரசியல்வாதி இப்படி நடந்துவிட்டதாகவும், ஆகவே அவர் சார்ந்த சமயத்தினர் அத்தனை பேறும் அதே போக்கானவர்கள் என்றும் பெரிய கதை அடிப்பார்கள்…….//
ஹக்கீம் செய்யும் விடயம் தனது அரசியல் இருப்பு. ஆனால் பலருக்கு அது ‘ஆப்பு’! ”அண்ணன் சிவாவின்” நினைவு உரை கேட்டீர்களா? அரசியல் இருப்பென்ன இருப்பு…..இவரை வைத்து முஸ்லிம்ளை ஒட்டுமொத்தமாக எடைபோட வேண்டியதில்லை. காரணம் இப்போ இவருக்குப் போட்டியாக இன்னொருவர் வந்துள்ளார். அவர்தான் மன்னார் நீதவான் கிறிஸ்தவர் ஆகவே மத மோதல் நிகழுகிரது என திருவாய் மலர்ந்துள்லார்!!!
//….. தாங்கள் மோசமாக சித்தரித்த அதே சிங்களவருடன் கூடிக்குலாவ ஆயத்தமாகுவார், முஸ்லீம்கள் ஓரம்கட்டப் படுவர் என்ற நப்பாசையில்…….///
அப்படியா? ஹக்கீம் முதுகெலும்புள்ள தமிழ் தலைமைக்கு வணக்கம் என்கிறார். பாவம் அவர் சிங்களவருடன் ‘கூடிக்குலாவ ஆயத்தமானார்’ நிலமை மோசமடைய திரும்பி வந்துள்ளார்!!!
///…..இப்படி உங்கள் போன்ற ஓரிருவர் இடைகிடை விடயத்தை விளக்கி சொல்லும் போது ஓடி ஒளிந்துவிடுவர் அல்லது அதிரடி தாக்குதலுக்கு சந்தர்பம் பார்த்துவ நிற்பர். போதாதற்கு pure politics பேச முனைவர்……//
அப்படியா? இங்கே தேசம் தளத்தில் ஓடி ஒழிந்தவர் யார் என வாசகர்களுக்குத் தெரியும்.
//…ஹகீம் தனது அரசியல் இருப்புக்கு ஏதாகிலும் செய்தால் ///
//…போதாதற்கு pure politics பேச முனைவர்.//
ஹக்கீம் செய்வது அரசியல் இருப்பு (அதாவது pure politics) எனச் சொன்னவர் மற்றவர்களைச் சாடுகிறார்!!
//..அதே சிங்களவருடன் கூடிக்குலாவ ஆயத்தமாகுவார், முஸ்லீம்கள் ஓரம்கட்டப் படுவர் என்ற நப்பாசையில். ….//
அடக்கப்பட்ட இனங்கள் அரசியல் நியாயம் தேடி போராடும் போது கிடைக்கும் ஒழுங்கையில் கிடாய் வெட்டிக் கூடிக்குலாவுவது ‘தனித்துவ இனத்துக்கு’ மட்டும் சொந்தமானதா? இல்லையே??
//… இப்படி உங்கள் போன்ற ஓரிருவர் இடைகிடை விடயத்தை விளக்கி சொல்லும் போது ஓடி ஒளிந்துவிடுவர் ….//
விவாததலைப்பு என்ன?
”…மன்னார் நீதிவான் நீதிமன்றம் மீதான தாக்குதலை தள்ளாடி இராணுவ முகாமில் இருந்தே சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் வழிநடத்தியதாக ‘லங்கா நியூஸ் வெப்‘ தகவல் வெளியிட்டுள்ளது….”
அதற்கு ராவுஃப் கஹ்கீம், கூடிக்குலாவுதலை ஏன் இழுத்து வரவேண்டும்? நிஸ்தார் அட்டகாச சட்ட ஆலோசகர் நீங்கள்!
ஒருவேளை ‘எனது சக அமைச்சர் என்கின்ற வகையில் கருத்துச் சொல்ல விரும்பவில்லை’ என நீதி அமைச்சர் (ஆம் நீதி அமைச்சரே தானுங்க!!) சொன்னதைச் சொல்கிறீர்களோ??
//….இது எப்போதும் தெரிந்த கதைதானே. சிங்களவர் மோடர், வேடர், பிணம் திண்ணி என்பார்கள்……//
இதில் ‘சிங்களவர்கள்’ என்பதனை யூதர்களால் மாற்றீடு செய்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்னரும் கோஷமிடும் கோஷ்டி ஒன்றும் உள்ளது!!
நிஸ்தார் தலைப்பில் உள்ள விடயம் பற்றீ உங்களுக்குக் கருத்து ஏதாவது உண்டா? அல்லது நீங்கள் சொன்ன ‘அதிரடி தாக்குதலுக்கு சந்தர்பம் பார்த்து’ கணக்காக அஜீவனுக்குப் பின்னால் வந்தவரா? சில வேளைகளில் மற்றவர்களைப்பற்றி சொல்ல வந்தது தனக்கே பொருத்தமாகிப் போகிறதல்லவா?
இரண்டரை நாட்களாக மன்னார் தாக்குதல் பற்றி ஒரு கருத்தும் எழுதவில்லை (JULY 21, 2012 12:51 PM – July 23, 2012 5:26 pm ). கணக்காக அஜீவன் ஏதோ எழுதப்போக களம் வந்தவர் சொல்கிறார் ஓடி ஒழிந்து அல்லது அதிரடி தாக்குதலுக்கு சந்தர்பம் பார்த்துவ நிற்பராம். சொல்கிறார் கேளுங்கள் சட்ட ஆலோசகர்!!
நிஸ்தார் மீண்டும் கேட்கிறேன் தலைப்பில் உள்ள விடயம் பற்றீ உங்களுக்குக் கருத்து ஏதாவது உண்டா?
சோதிலிங்கம்:
சட்டத்தரணிகளும், நீதிபதிகளும் இன்று ஒரு அமைச்சரையே எதிர்த்து அவர்கள் சார்ந்த துறையினரின் ஆதரவைக் கட்சி பேதம் இன்றிப் பெற்றுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலிகளுக்காக வழக்காடினால் ஆபத்து என்று எப்படி உங்களால் பூச்சாண்டி காட்ட முடிகிறது?
புலிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் மனித உரிமை, ஜனனாயகம் என்பது நகைப்புக்குரிய விஷயம்.
//நிஸ்தார் மீண்டும் கேட்கிறேன் தலைப்பில் உள்ள விடயம் பற்றீ உங்களுக்குக் கருத்து ஏதாவது உண்டா?//
அப்படியே நிஸ்தார் பட்டாணி ரசீக் பற்றியும் சொல்லலாம்.
Jaffna Muslim போன்ற தளங்கள் றிஷாத் பதுர்தீனுக்கு முண்டு கொடுக்கின்றன. ஆனால் றிஷாத் பதுர்தீனை மகிந்த குடும்பம் கைவிட்டு விடலாம் என்றும் ஒரு எதிர்பார்ப்பு உண்டு. தராசின் எப்பக்கம் சரிகிறது என்று பார்த்து சப்போட் பண்ண நிஸ்தார் காத்திருக்கிறாரோ என்னவோ – அழுத்தம் கொடுக்காமல் விடுவோமோ?
//…தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலிகளுக்காக வழக்காடினால் ஆபத்து என்று எப்படி உங்களால் பூச்சாண்டி காட்ட முடிகிறது?…//
ஆட்டைக்கடித்து…மாட்டைக்கடித்து …மனிதரைக்கடிக்கும் நிலைக்கு அரசு வந்துவிட்டது. இனி உயிர்தான் மிச்சம். பயந்து ஆகப்போவது ஒன்றுமில்லை எனும் நிலைக்கு வந்துவிட்டனர் நீதிபதிகள். இதே நிலை பருத்தித்துறை நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரனுக்கும் வந்தது. ஆனால் பாவம் அவர் அமைதியாக இருந்துவிட்டார். அவரின் வீட்டுக்கு கல்லெறிந்தனர். இப்போது மன்னார் நீதிவான் வரை வந்ததும் நீதிபதிகளே பொறுத்தது போதும் என நினைத்து விட்டனர். அதுதான் உண்மை!
//நந்தா – புலிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் மனித உரிமை ஜனனாயகம் என்பது நகைப்புக்குரிய விஷயம்//
தெளிவான உண்மை.
இதை எல்லோரும் இலங்கையில் செய்துள்ளார்கள்!
சட்டம் அப்போதும் பார்த்துக் கொண்டுதான் இருந்தது?
கொலைகாரர்களுக்கு, சோடா அல்லவா ஊத்திக் கொடுத்தார்கள் .///// அஜீவன்
இதை எல்லோரும் செய்தார்கள். இதை ஆரம்பித்ததே இலங்கை அரசுகள் என்பதே இங்கே முக்கியம். இந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு அரசுக்கு உண்டு. ஏனெனில் அதனை ஆக்கியவர்கள் அவர்கள். இன ரீதியான வன்முறைகளுக்கு வித்து இட்டவர்கள் இந்த நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்றவர்கள். அவர்கள் செய்த தவறுகள் தான் மற்றவர்களை வன்முறை பாதைக்கு இட்டு சென்றது. இலங்கையின் அரசுகளை அமைக்கும் பொறுப்பை சிங்கள அரசியல் தலைமைகளே பெற்றன. ஜனநாயக ரீதியில் இலங்கையில் எந்த ஒரு தமிழரோ அல்லது சோனகர்களோ அரசை அமைக்கும் பொறுப்பினையோ அல்லது அரசியல் அமைப்பை அமைக்கும் பொறுப்பினையோ பெறமுடியாது. இது தான் நிஜம். இங்கு புலி திறம், அரசு திறம், முஸ்லிம் திறம் என்பது அல்ல. எல்லோரும் குற்றம் புரிந்தவர்கள் தான். புலிகள் ஜனநாயக பாதையை எடுத்தவர்கள் அல்ல. ஆனால் ஜனநாயக பாதையை ஏற்ற அரசும் அரசோடு பங்கு ஏற்றுள்ளவர்களும் நீதி, பாதுகாப்பு, சட்ட ஒழுங்குகளை மீறி பயங்கரவாதிகளாக மாறி நடப்பது ஆரம்பித்து 60 வருடங்கள் ஆகிவிட்டன. 1956 ,1958 இல் மக்களை இழுத்து நடு வீதியில் பெட்ரோல் ஊற்றி எரிதவர்களில் ஒருவனையாவது சட்டத்தின் முன் நிறுத்தி இருந்தால் இந்த நாட்டின் சரித்திரமே மாறி இருக்கும். இனவ்வாதம் எங்கு ஆரம்பிகபட்டதோ அங்கு தான் மாற்றம் ஏற்பட வேண்டும். அதை விட்டு புலி செய்தது அதனால் நாம் செய்கிறோம் என்று வியாக்கியானம் கொடுப்பது சிங்கள இனவாதத்திற்கு முட்டு கொடுப்பது போன்றதாகும்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் தனது அதிகாரத்தை துஸ் பிரயோகம் செய்து நீதி துறையை பயமுறுத்தியது புதிது அல்ல. அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி குற்றமற்றவர் என்று தப்பி விடுவார். ராஜபக்சே அரசு இப்படி எத்தனையோ குற்றவாளிகளை குற்றமற்றவர்கள் எனவும் குற்றமற்றவர்களை குற்றவாளிகள் ஆகியும் உள்ளது. அவருக்கு தேவை தனது பதவி. இது இலங்கை அரசியலில் மிகவும் சகஜம். இது ஜனநாயகத்தால் அவருக்கு கொடுக்கபட்ட பதவி. இதே போல் ஹகீம் கதிரை மாறுவது அரசியலில் சகஜம். ஏன் டக்லஸ் என்ன செய்கிறார். கருணா என்ன செய்கிறார். இது ஜனநாயகத்தின் சிறப்பு. புலிக்கு தெரியுமா இந்த ஜனநாயகத்தின் இனிப்பு தன்மை என்று சங்கு கூவவும் தயங்க மாட்டார்கள் புலி எதிர்ப்பு மாற்று கருத்தாளர்கள்.
//புலிக்கு தெரியுமா இந்த ஜனநாயகத்தின் இனிப்பு தன்மை என்று சங்கு கூவவும் தயங்க மாட்டார்கள் //
அவர்களும் IPKF காலத்தில் பிரேமதாசவுடன் சேர்ந்து வேலை செய்யவில்லையா?
//இதை எல்லோரும் செய்தார்கள். இதை ஆரம்பித்ததே இலங்கை அரசுகள் என்பதே இங்கே முக்கியம். இந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு அரசுக்கு உண்டு. – Ajith //
ஆகா ; என்ன அற்புதமான சிந்தனை!
சட்ட திட்டங்களை மதிக்க வேண்டிய பொறுப்பு ; அரசுக்கு மட்டுமல்ல ; அனைத்து குடிமக்களுக்கும் உண்டு.
மக்கள்தான் அரசு. மக்கள் சரியாக நடந்தால் அது அரசு நடப்பதாக ஆகும்.
மக்கள்தானே அரசை தேர்வு செய்கிறார்கள்?
புலிகள் மக்கள் வாக்குளால் தேர்வானவர்களா?
புலிகளை எதிர்க்க முடியாதவாறு மக்கள் இருந்ததற்கு காரணம் என்ன?
புலிகள் சரியாக ஆட்சி செய்ததாலா?
இல்லை ; ஆயுத முனை ஆட்சியாலா?
(புலிகள் எப்போது ஆட்சி செய்தார்கள் என்று மறு கேள்வி கேட்காமல் இருந்தால் போதும்.)
புலிகளை அழிக்கும்வரை சிங்கள அரசு.
அழித்தபின்னர் இலங்கை அரசு.
இலங்கை அரசை இராசபக்சாவின் அரசாக மாற்ரியது யார்?
புலத்துப்புலிகளின் பணமும் நட்புறவுகழும்.
இராசபக்சாவின் அரசு புலிகள் வன்னியில் தமிழரை ஆண்ட அரசிற்கு ஒத்ததேயாகும். எனவே புலிகளை ஆதரித்தோர் ஆதரிப்போர் புலிமுகம் கொண்ட இராசப்க்சாக்களே.-துரை
அவர்களும் IPKF காலத்தில் பிரேமதாசவுடன் சேர்ந்து வேலை செய்யவில்லையா?/// Rohan
ஆம் IPKF காலத்தில் பிரேமதாசவுடன் சேர்ந்து வேலை செய்தார்கள். ஆனால் புலிகள் பிரேமதாசவுகாக, பிரேமதாசவுடன் சேர்ந்து கொலை, கடத்தல், கப்பம், விபசாரிகளை சிங்கள இராணுவத்திற்கு ஒழுங்கு செய்து கொடுக்கவில்லை. அவர்கள் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைக்கு தீர்வான சுயநிர்ணய உரிமையை விட்டு கொடுக்கவில்லை, தமது எதிரிகளான IPKF, EPKF இன் துனைபடையாக இருந்த EPRLF என்பவற்றிக்கு எதிராக போராடினார்கள்.
//ஆகா; என்ன அற்புதமான சிந்தனை!
சட்ட திட்டங்களை மதிக்க வேண்டிய பொறுப்பு ; அரசுக்கு மட்டுமல்ல ; அனைத்து குடிமக்களுக்கும் உண்டு.
மக்கள்தான் அரசு. மக்கள் சரியாக நடந்தால் அது அரசு நடப்பதாக ஆகும்.
மக்கள்தானே அரசை தேர்வு செய்கிறார்கள்?// Ajeevan
அற்புதமான வாதம். மக்கள் தான் அரசை தெரிவு செய்கிறார்கள். ஆகவே அரசு எதையும் செய்யலாம் என்ற தத்துவம் சபாஸ். அரசு சரியாக செல்கிறது. ஆனால் மக்கள் பிழையாக செல்கிறார்கள். மக்கள் லஞ்சம் கொடுகிறார்கள். ஆகவே அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவது சரி. மக்கள் களவு எடுகிறார்கள். எனவே அமைச்சர்கள் களவு எடுப்பது சரி.
புலிகள் மக்கள் வாக்குளால் தேர்வானவர்களா?
இல்லை
புலிகளை எதிர்க்க முடியாதவாறு மக்கள் இருந்ததற்கு காரணம் என்ன?
புலிகள் தமிழர்களுடைய விடுதலைக்காக தம்மை அற்பணித்தார்கள் என்பதற்காக.
புலிகள் சரியாக ஆட்சி செய்ததாலா?
சிங்கள அரசுகளின் ஆட்சியை விட சிறப்பாக செய்தார்கள் என்று சிங்கள மக்களே ஏற்று கொண்டார்கள்..
இல்லை ; ஆயுத முனை ஆட்சியாலா?
ஆம். புலி எதிர்பாளர்கள் அவர்களை எதிர்க்கமுடியாமல் இருந்ததற்கான காரணம் அவர்களுடைய ஆயுதபலம், மக்கள் மத்தியில் அவர்களுக்கு இருந்த ஆதரவு.
(புலிகள் எப்போது ஆட்சி செய்தார்கள் என்று மறு கேள்வி கேட்காமல் இருந்தால் போதும்.)///
இப்போது போதுமா.
////புலிகளை அழிக்கும்வரை சிங்கள அரசு.
அழித்தபின்னர் இலங்கை அரசு.
இலங்கை அரசை இராசபக்சாவின் அரசாக மாற்ரியது யார்?
புலத்துப்புலிகளின் பணமும் நட்புறவுகழும்.
இராசபக்சாவின் அரசு புலிகள் வன்னியில் தமிழரை ஆண்ட அரசிற்கு ஒத்ததேயாகும். எனவே புலிகளை ஆதரித்தோர் ஆதரிப்போர் புலிமுகம் கொண்ட இராசப்க்சாக்களே//.-துரை
இலங்கை அரசு=சிங்கள அரசு. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏனெனில் சிங்களவர்கள் மாத்திரம் தான் இலங்கை தீவின் அரசியல் சாசனத்தை ஏனைய இனங்களின் பக்களிப்பு இன்றி நிர்மாணித்தவர்கள் .
புலத்து புலிகளின் பணமும் நட்புறவுகளுக்கும் மேலாக ராஜபக்சேயின் காலடியில் விழுந்து சேவகம் புரியும் சிங்க முகம் கொண்ட புலத்து மாற்றுக்கருத்து தமிழ் வின்னர்களும்.
//மக்கள் லஞ்சம் கொடுகிறார்கள். ஆகவே அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவது சரி. மக்கள் களவு எடுகிறார்கள். எனவே அமைச்சர்கள் களவு எடுப்பது சரி.//
மகிந்தவிடம் பணம் வாங்கிக் கொண்டு
சாதாரண மக்களை வாக்களிக்காமல் தடுத்து
மகிந்தவை ஆட்சி பீடம் ஏற்றி
மகிந்த கையாலேயே அழிந்ததை மறந்து விட்டீர்களோ என்னவோ!
புலிகள் மகிந்தவிடம் வாங்கியது லஞ்சமா? அன்பளிப்பா?
புலிகள் சரியாக ஆட்சி செய்ததாக சிங்களவர்கள் ஏற்று கொண்டதால்தான் புலிகள் அழிந்ததும் ரபாணா தட்டி பால் சோறு கொடுத்து மகிழ்ந்தார்கள்?
//சிங்கள அரசுகளின் ஆட்சியை விட சிறப்பாக செய்தார்கள் என்று சிங்கள மக்களே ஏற்று கொண்டார்கள்..//
உள்ள வந்த பிறகுதான் அடியே என்று சொன்ன மாதிரி சிங்களவர்களும் புலி ஆட்சி நல்லாட்சி என புலிகளில் ஊடகங்கள் பம்மாத்து விட்டன. மகிந்த சரியில்லைதான். ஆனாலும் புலிகளை அழித்து மக்களுக்கு விமோசனம் அளித்தது மகிந்ததான் என சிங்களவர்கள் (மகிந்தவுக்கு எதிரானவர்களும்) சொல்லவே செய்கிறார்கள்.
//…மக்கள்தான் அரசு. மக்கள் சரியாக நடந்தால் அது அரசு நடப்பதாக ஆகும்……//
மக்கள் சரியாக நடக்கவில்லை = அரசு சரியாக நடக்கவில்லை= = ராணுவம் சரியாக நடக்கவில்லை= ராணுவம் = மக்கள் = தமிழர் =ராணுவம் இறந்த பிணங்களைப் புணர்ந்தது= மக்கள் இறந்த பினங்களைப் புணர்ந்தனர்= = இறந்த பிணங்களே தங்களைப் புணர்ந்தன = தமிழர் இறந்த பிணங்களைப் புணர்ந்தனர்!!
உங்கட லொஜிக்கை இப்படியான சுப்பர் ஜொஜிக் ஆக சொல்லால்!!
சுப்பர் அஜீவன் சுப்பர்…. .சும்மா சொல்லக்கூடாது….. பத்திரிகையாளர், மனித உரிமைவாதி …சுப்பரோ சுப்பர்!!
இந்தாள் இவ்வளவு நாளும் எங்க இருந்தார் என மஹிந்தா/கோத்தாவே ஆச்சரியப்படப் போகிறார்கள்!!
தள்ளாடி ராணுவமுகாமில் இருந்து நீதிமன்றம்/நீதிபதி மீது வழிநடத்திய தாக்குதல் பற்றிக்கேட்டால் சுப்பராய் லொஜிக் காட்டுகிறார்!
ஐயோ நம்ம சாந்தனுக்கு என்ன ஆச்சு?
//மக்கள் சரியாக நடக்கவில்லை = அரசு சரியாக நடக்கவில்லை= = ராணுவம் சரியாக நடக்கவில்லை= ராணுவம் = மக்கள் = தமிழர் =ராணுவம் இறந்த பிணங்களைப் புணர்ந்தது= மக்கள் இறந்த பினங்களைப் புணர்ந்தனர்= = இறந்த பிணங்களே தங்களைப் புணர்ந்தன = தமிழர் இறந்த பிணங்களைப் புணர்ந்தனர்!! – சாந்தன் //
அன்புள்ள சாந்தன், றோகன்
“//நிஸ்தார் மீண்டும் கேட்கிறேன் தலைப்பில் உள்ள விடயம் பற்றீ உங்களுக்குக் கருத்து ஏதாவது உண்டா?// உண்டே. ஆனால் இது தம்புள்ளை பள்ளிவாசல் விடயம் போன்று எம்மை மட்டும் சார்ந்தல்ல. மன்னார் பிரதேசத்தின் விடயங்கள் தொடர்பாக பலவித கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் இருந்தே றிஷாத் பதியுத்தீனும், செல்வம் அடைக்கலநாதனும் கீரியும், பாம்பும் போல செயற்பட்டுக் கொண்டிருகிறார்கள். அங்கு நடக்கும் ஒவ்வொரு விடயமும் ஒவ்வொரு பகுதிகளாலும் மிகைப்படுத்தல்களுக்கும் உற்படுத்தப்படுவதை அவதானிக் கூடியதாக உள்ளது. போதாதற்கு இணைய தளங்கள், பத்திரிகைகள் என்பன உண்மைக்குப் புறம்பான விடயங்களையும் கட்டவிழ்த்து விடுகின்றன. எனவே உண்மை தெரியாமல் கருத்து சொல்ல முடியாதென்பதே என்னது தற்போதைய கருத்து.
புலிகளால் வெளியேற்றப்பட்டு புத்தளத்தில் அகதிகளாக கடந்த 20 வருடங்களை கழித்துவிட்டு மெது மெதுவாக தங்கள் இருப்பிடங்களை நோக்கி செல்லும் போது அவர்களின் காணிகளில் பலர் அத்து மீறி குடியேறியுள்ளனர். ஆகவே அங்கே உரிமைப்பிரச்சினை எழுகின்றது. இதில் இரு இனத்தின் பிரமுகர்களும் ஏதோ ஒருவகை உடன்பாட்டுக்கு வந்திருக்கலாம் அல்லது இனிதானும் வரலாம். ஆனால் விடயம் இனத்துவேசமாக மாறிவருகின்றது. உ+ம் ஒரு தமிழ் பெண் தனது காணியை ஒரு சோனக முஸ்லீமுக்கு விற்க முற்படாராம். அதை எதிர்த்த மன்னார் ஆயர்(பாதிரி) அப்படி விற்றால் உனக்கு சாபமிடுவேன் என்று அந்த பெண்னை பயமுறுத்தியதாக ஒரு கதை. அதே போல் அப்பிரதேச சோனக முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர் தொழிற் வழங்களில் தமிழர்களை புறக்கணித்தாக இன்னொரு தகவல். குறிப்பிட்ட அந்த பா.உ ரை லண்டனில் சந்தித்தபோது நான் அவரிடம் கேட்ட கேள்வி “நீங்கள் மன்னாருக்கான பா.உ அல்லது முஸ்லிம்களுக்கான பா.உ?” என்பதாகும். அவர் ஏன் என்று கேட்க அடைக்கலநாதனின் இந்த பா.உ க்கான எதிர்ப்பு ஆர்பாட்டம் பற்றி சொன்னேன். அவர் சென்னார் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்பாட்டம் கைவிடப்பட்டதாக, அதற்கான காரணமாக அடைக்கலநாதனின் தப்பபிப்பிராயம் என்றும் அது அப்பிரதேச தமிழ் மக்களால் அடைக்கலநாதனுக்கு சுட்டிக் காட்டப்பட்டதாகவும் கூறினார். இதைவிட புதிய விடயமாக நீதிபதி ஜூட் நீதிபதி உடையுடனே வெளியே வந்து ஆர்ப்பாட்டக்காரர் மேல் சுடும்படி பொலீசுக்கு உத்தரவிட்டதாக ஒரு செய்தி இப்படி ஒன்றுக்கொன்று மாறுபாடான செய்திகள் வந்து கொண்டிருப்பதால் அவசரப்பட்டு நாம் கருத்துச் சொல்லவோ அல்லது இருக்கும் நிலைமைகளை இன்னும் குழப்பியடிக்கவோ விரும்பவில்லை. ஆனால் சட்டம் யாராலும் மீறப்பட்டிருந்தால் அது மந்திரியாகட்டும், நீதிபதியாகட்டும், ஆயராகட்டும், ம.(கா)ராஜா(பக்க்ஷ)வாகட்டும் சட்டத்துகு முகம் கொடுத்தே ஆகவேண்டும்.
//அப்படியே நிஸ்தார் பட்டாணி ரசீக் பற்றியும் சொல்லலாம்.// சொல்லலாம் என்ன? சென்ற வருடம் ஓகஸ்ட மாதம் 26 திகதி புத்தளம் ஒன்லைனில் “லண்டனில் இருந்து அமைச்சருக்கு ஒரு கடிதம்” என்ற தலைப்பில் ஒரு பகிரங்க மடல் இட்டிருந்தேன். அதிலே அவர் சந்தோசப்பட, கோவப்பட, வெட்கப்பப்ட, தன் மனசாட்சியுடன் ஒரு முறை கதைத்துப்பார்க்க என்று பலதும் அதில் இருந்தது. அந்த கடிதம் அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு செல்லபட்டுள்ளது எனவே உங்கள் கூற்றான “தராசின் எப்பக்கம் சரிகிறது என்று பார்த்து சப்போட் பண்ண நிஸ்தார் காத்திருக்கிறாரோ என்னவோ – அழுத்தம் கொடுக்காமல் விடுவோமோ?” என்ற விடயம் உப்பு சப்பு இல்லாத உணவு நீங்களே சாப்பிட்டுக் கொள்ளுங்கள். நமக்கு என்றும் முக்கியமான விடயம் “நியாயம்,நேர்மை” பக்கம் சார்வது, தொப்பி பிரட்டுவது நமது அகராதியில் இல்லாதது.
/…மக்கள்தான் அரசு. மக்கள் சரியாக நடந்தால் அது அரசு நடப்பதாக ஆகும்……//
//உங்கட லொஜிக்கை இப்படியான சுப்பர் ஜொஜிக் ஆக சொல்லால்!!//சாந்தன்
பயஙகரவாதத்தினை அழிக்க இராசபக்ச அரசிற்கு சிங்கள மக்கள் ஆதரவழித்தனர். அதனை துஸ்பிரயோகம் செய்வதை யாராலும் தடுக்க முடியாது. மக்களே உணர்ந்து பாடம் புகட்டுவதே ஒரே வழி. அதனை விரைவில் எதிர்பார்க்கலாம்.
புலிகளை ஆயிரம் தவறுகள் செய்தாலும் தமிழரிற்காக போராடுகின்றார்களென்று தமிழர்கள் ஆதரித்தார்கள். புலியின் பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் சட்டத்தரணிகழும், கல்வியிற் சிறந்த மேலோங்கிய தமிழர்கழும். இவர்களால் தமிழரை தொடர்ந்தும் ஏமாற்ர முடியும். எனவே சிங்களவர் இராசபக்சவின் அரசை தூக்கி எறிந்தாலும் தமிழரை தமிழரே ஏமாற்ரி வாழ்ந்து கொள்வார்கள். தமிழர் திருந்தும் வரை தமிழரிற்கு ஏற்ர தலைமையுமில்லை விடிவுமில்லை. தமிழர் அனுபவிப்பது தமிழரால்தான். மக்களே அரசு, அரசே மக்கள்.-துரை
//…எனவே உண்மை தெரியாமல் கருத்து சொல்ல முடியாதென்பதே என்னது தற்போதைய கருத்து…..///
சுப்பர்…சுப்பரோ சுப்பர் பதில்!
நிஸ்தார் நான் கேட்டது கீரி பாம்பு கதை அல்ல. நீதிமன்றம்/நீதிபதிக்கு ஒரு அமைச்சர் அச்சுறுத்தல் விடுத்தது பற்றி. அது சரியா பிழையா? அவர் தள்ளாடி முகாமில் இருந்து விடுத்தார் என்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மேலும் இதனைப்பற்றி ஒரு அமைச்சர் (ஆம் நாட்டின் நீதி அமைச்சரே தானுங்க) அமைச்சரவை சகா என்ற படியால் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்கிறார்’!!!
///….அந்த பெண்னை பயமுறுத்தியதாக ஒரு கதை….///
கொஞ்ச நேரத்துக்கு முன்னர் தான் ‘உண்மை தெரியாமல் கருத்துச் சொல்ல முடியாதே’ என்கிறீர்கள். இங்கே ‘கதை’யை இழுத்து நீதிபதியை அச்சுறுத்திய விடயம் பற்றிக்கேட்டால் கீரி/பாம்பு என்கிறீர்கள்!
நிஸ்தார் கேள்வி சிம்பிள் நீங்கள் ஒரு ‘சட்ட ஆலோசகர்’. படித்தவர் இல்லையா?
ஒரு அமைச்சர் ஒரு நீதிபதிக்கு ‘நான் ஆணையிட்டால்’ லெவலில் ஊரே எரியும் எனும் பாணியில் அச்சுறுத்தல் விடலாமா? அவ்வாறு விட்ட பொழுது ஸ்ரீலங்காவின் சட்டத்தரணிகள் ஒன்றுகூடி வேலை நிறுத்தம் செய்கிறார்களே?
ஒரு ‘சட்ட ஆலோசகராக’ அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள். அவர்கள் என்றுமில்லாத வகையில் ஏன் இவ்வாறு வேலை நிறுத்தம் செய்ய வேண்டும்? ஒரு காரணம் இருக்குமல்லவா?
அது மட்டுமல்ல இவர் (அமைச்சர்) நீதி ஆனைக்குழுவின் தலைவரிடம் சென்று நீதிபதியை இடமாற்றம் செய்யக்கோரி இருக்கிறார். அவ்வாறு முடியாத பட்சத்தில் கல்லெறிந்து அட்டகாசம் செய்ய தூண்டி இருக்கிறார்.
நிஸ்தார் 20 வருடப்போருக்குப் பின்னர் மீள்குடியேற நினைக்கும் முஸ்லிம்களே பொறுக்க முடியாமல் கல்லெறிந்து நீதிமன்றத்தைத் தாக்குகிறார்கள் என்ற விடயம் நியாயமானது என்றால்……. 140,000 பேர் வரை கொலை செய்யப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, கடத்தப்பட்ட இனம் என்ன செய்ய வேண்டும்?
//…அந்த கடிதம் அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு செல்லபட்டுள்ளது….//
நடவடிக்கை எடுக்க உத்தரவு இடப்பட்டுள்ளது…..
அதுபற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு இடப்பட்டுள்ளது….
அமைச்சரவையில் பேசி சாதகமான பதிலைப் பெற்றுத்தர அமைச்சர் உறுதி….
அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன….
(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
என தினகரன்/ஈ.பி.டி.பி பாணியில் பதில் சொல்ல பழகிவிட்டீர்கள்! சட்ட ஆலோகலர் இல்லையா, அப்படித்தான் இருக்கும்……பலே நிஸ்தார் பலே..பலே!!
இல்லாவிட்டா நாந்தானே முதலில் சொல்லிட்னே மினிஸ்ரர் எண்டாலென்ன, ஃபாதர் எண்டாலென்ன , மகாராசா எண்டாலென்ன சட்டத்துக்கு ‘முகம்’ குடுக்கத்தான் வேனும் என அட்டகாசமான சுத்திவளைப்பு பூசிமெழுகல்மிக்க உலகத்தில் வேறெங்கும் கேட்காத ‘கருத்து’ ஒன்றைச் சொல்லிவிட்டேனே என பதில் சொல்லாம் தானே!!
///…ஐயோ நம்ம சாந்தனுக்கு என்ன ஆச்சு?…..//
எல்லாம் உங்கட மனிதாபிமான, மக்கள்நலன் ‘லொஜிக்’ தான்!
உங்கட லொஜிக்கைப்படிச்சு சுத்தின தலை இன்னும் நிக்கேல்ல!!!!
அன்புள்ள சாந்தன்,
நீங்கள் கேட்ட கேள்வியிலும் எனது பதிலும் எனக்கு எந்த தடுமாற்றமும் இல்லை. “அந்த பெண்னை பயமுறுத்தியதாக ஒரு கதை” இதில் “ஒரு கதை” என்று குறிப்பிடப்பட்டுள்ளதே ஏன் கண்களில் படவில்லையா?
மேலும், நீங்கள் அமெரிக்காவில் இருந்து கொண்டு “அவர் அப்படி செய்திருக்கிறார், இவர் இப்படி செய்யவில்லை என்று எப்படி இவ்வளவு துணிவாகக் கூறுகிறீர்கள்? நீங்களே பலமுறை சந்தேகம் எழுப்பிய இலங்கை பத்திரிகையில், பத்திரிகா தர்மத்தில் இவ்வளவு அசைக்க முடியாத நம்பிக்கையா? சற்று பொறுமை காத்தால் என்ன? …..
இரண்டு யூ-டியூப் வெளியீடுகள் வந்துள்ளன. ஒன்று இந்த மன்னார் விடயம் தொடர்பாக வன்னி மாவட்ட ஒரு சோனக முஸ்லிம் எம். பியின் பாரளுமன்ற பேச்சு. மற்றயது குறிப்பிட்ட நீதிபதியாக சொல்லப்படும் நபர் பொலீசுக்கு உத்தரவு பிறப்பிப்பதான காட்சி. தொடர்புகளை இன்று இரவு பதிவிடுவேன்.
ஆம் எல்லாவற்றுக்கும் ஒர் காரணம் இருக்கும். ஆனால் பிரச்சினை என்னவென்றால் அது சரியான காரணமா? இல்லையா? என்பது முக்கியம்.
இலகுவான உதாரணம் லண்டனில் இரண்டு லட்சம் தமிழர், ஒரு லட்சம் புலி கொடியுடன், “போரை நிறுத்து” என்று அரசாங்கத்தைதான் கேட்டனர். “புலியே” அப்பாவி தமிழரில் கைவைக்காதே என்று கோசமிடவில்லை. அந்த பேரணியின் நோக்கம் போரை நிறுத்துவதுதான் என்று உலகம் நம்பியிருந்தால் அவர்களே அதை செய்திருப்பார்கள். ஆனால் அந்த “போரை நிறுத்து” என்றதற்குள் “தலைவரை காப்பாற்று” என்று இருந்ததால் நீங்கள் களைப்படையும் வரை கத்துங்கள் என்று உலகம் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. இப்படி ஒரு செயலுக்கு ஒன்றோ, பலதோ காரணங்கள் இருந்தது போல நீங்கள் சொல்லும் இந்த பணிபுறக்கணிப்புக்கும் இருந்திருக்கலாம் அல்லவா? ஆகவே தான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன் சற்று பொறுமை காருங்கள். எல்லாம் ஓடி வெளிக்கும் போது உண்மை வெளிவரும் அப்போது எனது அபிப்பிராயம் உங்களுக்கு தேவைப்படாதும் போகலாம். சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்பதில் நாம் எப்போதும் உறுதியாகவே இருக்கிறோம்.
“அமைச்சருக்கான பகிரங்கக் கடிதம்” அவருக்கு எதிராக sarcastic காக எழுதப்பட்டது. ……
அன்புள்ள சாந்தன்,
இதோ யூ-டியூப் தொரட்பு 1.
-https://www.youtube.com/watch?v=WOJkhJXNRU4&feature=plcp
தொடர் 2.
-https://www.youtube.com/watch?v=rdrqgvNGN3E
இந்த யூ-ரியூப் இல் என்ன இருக்கிறது?
நீதிபதி நடந்து வருகிறார்… தமிழ் சினிமாவில் வருவதுபோல் கையைத்தூக்கி விஜயகாந் காட்டுவதுபோல் சுட்டிக்காட்டுகிறார்…. ஃபிரேம் ஃபிரீஸ் ஆகிறது..
பின்னணி பேசுபவர் “ Isn’t that contempt of the cloak? ” என முடிக்கிறார்?
ஏன் வீடியோ இடைநிறுத்தப்பட்டு வெட்டி ஒட்டப்படுகிறது?
நீதிபதி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட சம்பவ இடத்துக்கு போய் காலின்கீழ் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி கைதுசெய்யும்படி சொல்ல ஸ்ரீலங்கா சட்டத்தில் இடம் இருக்கிறது!
நான் சின்ன வயசிலேயே ‘நீதிபதி காலின்கீழ் சுட்டு கைது செய்யும்படி உத்தரவு’ என பத்திரிகைகளில் படித்திருக்கிறேன்!
சொல்லப்போனால் ‘பயங்கரவாத சந்தேகநபர்களை சுட்டுக்கொலை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்படும் நாட்டில்’ காலின்கீழ் சுட்டு கைது செய்யும் படி சொல்லியது மிக மிகப் புதிரானதாய் இருக்கலாம்!!
//…நீங்கள் கேட்ட கேள்வியிலும் எனது பதிலும் எனக்கு எந்த தடுமாற்றமும் இல்லை. “அந்த பெண்னை பயமுறுத்தியதாக ஒரு கதை” இதில் “ஒரு கதை” என்று குறிப்பிடப்பட்டுள்ளதே ஏன் கண்களில் படவில்லையா?…//
அதைத்தான் நானும் சொல்ல வருகிறேன். ஒரு நாட்டின் அமைச்சர் நீதிபதிக்கு எச்சரிக்கை விடுக்கிறார்… ஊரே எரியும் என்கிறார். அதைப்பற்றிக் கேட்டால் யாரோ ஒரு பாதிரி சொன்னாராம் அதைப்போல் இதுவும் இருக்கலாம் அதனால் கருத்துச் சொல்லவில்லை என்கிறீர்களே? ஆனால் நான் எந்தக்கருத்துமே சொல்லாத நிலையில் ஓடிவந்து (இரண்டு நாள் கழிச்சு) சாந்தனுக்கு சூடேறப்போகுது… ஓடி ஒளிநது விட்டார்… அதிரடி தாக்குதலுக்கு சந்தர்பம் பார்த்துவ நிற்பர். என தலைப்புக்குத் தொடர்பு இல்லாமல் அஜீவன் இட்ட இடுகைக்கு ‘சந்தர்ப்பம்’ பார்த்து வந்து கதை சொன்னவரல்லாவா நீங்கள். இப்போது அங்கே ‘கதை’ கேட்டேன் இங்கே பாதிரி ‘சாபம்’ போடுகிறார் அதனால் இந்த மினிஸ்ரர் கதையும் பிடிசாபம் கதைபோல இருக்கலாமல்லவா என நியாயம் சொல்கிறீர்கள்? எப்படி எப்படி எல்லாம் பிடிசாபக்கதையையும், கீரி/பாம்புச் சண்டையையும் நீதிமன்றத் தாக்குதலையும் பொருத்த முடிகிறதோ?? சும்மாவா??சட்ட ஆலோசகரல்லவா!!
///….ஆகவே தான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன் சற்று பொறுமை காருங்கள். எல்லாம் ஓடி வெளிக்கும் போது உண்மை வெளிவரும் அப்போது எனது அபிப்பிராயம் உங்களுக்கு தேவைப்படாதும் போகலாம். ….//
அந்தப் பொறுமையை நான் காத்தேன். எனது கருத்து இத்தலைப்பில் எப்போது இட்டேன் என ”ரைம் ஸ்ராம்பிங்” இருக்கிறது. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!!
ஆனால் நீங்கள் தான் முதலில் வந்து சூடேற்றுதல்,
“புலி என்ன திறமோ” சிங்களவர் மோடர், வேடர், பிணம் திண்ணி… ஹக்கீமின் அரசியல் இருப்பு …. அவர் சார்ந்த சமயத்தினர் அத்தனை பேறும் அதே போக்கானவர்கள் என்றும் பெரிய கதை அடிப்பார்கள்….. சிங்களவருடன் கூடிக்குலாவல் ….. நப்பாசை…ஓடி ஒளிந்துவிடுவர் அல்லது அதிரடி தாக்குதலுக்கு சந்தர்பம் பார்த்துவ நிற்பர். போதாதற்கு pure politics பேச முனைவர்…. என தலைப்புக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லாத சொற்களை வலிந்து இழுத்து வந்து பின்னூட்டம் இட்டது!!
இப்ப என்னடாவென்றா ‘பொறுமை’ காக்கட்டாம்!
சுப்பர்!! இதில் சந்தர்ப்பம் பார்த்து தாக்குதலாம்!!
சும்மா சொல்லக்கூடாது, சட்ட ஆலோசகரில்லையா?
//..“அமைச்சருக்கான பகிரங்கக் கடிதம்” அவருக்கு எதிராக sarcastic காக எழுதப்பட்டது. ………//
sarcastic எழுதியதை ஏதோ அப்போதே நியாயம் கேட்டேன் எனும் லெவலுக்கெல்லாம் கொண்டு போய் பில்ட்-அப் கொடுத்தீர்களே? அப்படியில்லை வெறும் ‘நக்கல்’ பேச்சுத்தானா அது? தெரியாமல் போச்சு!!
சட்ட ஆலோசகரல்லா நீங்கள். நாந்தான் ஏதோ பெரிய நியாவான், கேள்வியின் நாயகன், சுடசுட கேல்விகேட்பார் என நினைத்து விட்டேன்!!
பரவாயில்லை எனது என தினகரன்/ஈ.பி.டி.பி பாணியில் பதிலும் அப்படியே என எடுத்துக்கொள்ளுங்களேன்!!
இங்கே நடக்கும் கதைகளை வாசித்த போது , லங்காலீக்ஸ் எனும் சிங்கள இணைய தளத்தில் நான் வாசித்த ஒரு கதையை , இங்கே தமிழாக்கம் செய்யலாம் என்று நினைக்கிறேன். இது மேலே உள்ள படி தலை சுற்றி நிக்கவல்ல. அப்படி ஏதாவது யாருக்காவது நடந்தால் அதற்கு யான் பொறுப்பல்ல.
இது இலங்கை சிங்கள தொலைக் காட்சியில் ஒளிபரப்பானது.
கான்ஸ்ட்டபிள் தேர்வுக்காக இளைஞர்கள் வருகிறார்கள்.
அப்படி தேர்வுக்காக வந்த ஒரு இளைஞனின் சரித்திர அறிவை பரீட்சிப்பதற்காக , வரும் இளைஞர்களிடம் கேள்வி கேட்கும் ,
உயர் மட்ட போலீஸ் அதிகாரி ” விஜயபா கொள்ளை”யை செய்தது யார் என்று கேட்கிறார்.
(இது விஜயபா அரசர் காலத்தில் நடந்த ஒரு சம்பவமாகும்)
அவன் யோசிக்கத் தொடங்குகிறான்.
வந்த இளைஞன் யோசிக்கத் தொடங்கும் போது
போலீஸ் அதிகாரியின் கைத் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது.
போலீஸ் அதிகாரி தொலைபேசியில் பேச வெளியே எழுந்து போகிறார்.
போகும் போது நான் வரும் போது விடையை சொல்.
அதுவரை யோசி என சொல்லி விட்டு வெளியேறுகிறார்.
பக்கத்தில் இதை அவதானித்துக் கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர், தேர்வுக்கு வந்த இளைஞனிடம்
” எங்கள் உயரதிகாரிகள் மிக நல்லவர்களாக ஆகிவிட்டார்கள். அவரிடம் நீ சொல்லாவிட்டால் பரவாயில்லை. என்னிடம் சொல்லு” என்கிறார்.
இளைஞனோ தனக்குத் தெரியாது என்கிறான்.
“உன்னிடம் இப்படிக் கேட்டால் பதில் வராது. அதை எப்படிக் கேட்க வேண்டும் என எனக்குத் தெரியும் ” என அவனது காலரை பிடித்து தள்ளிக் கொண்டு ஒரு அறைக்குள் போகிறார் அந்தப் போலீஸ்காரர்.
அதன் பின்னர் அந்த இளைஞனை அடித்து உதைக்கும் சத்தம் கேட்கிறது.
தொலைபேசி உரையாடல் முடிந்து , திரும்பி வரும் போலீஸ் உயரதிகாரி
” ஓய் ; இங்கிருந்த இளைஞன் எங்கே ” என போலீஸ்காரரிடம் கேட்கிறார்.
போலீஸ்காரர் : ஒரு பிரச்சனையுமில்லை சர். ஆள் பத்திரமாக அங்கே இருக்கிறார் சர்.
போலீஸ் உயரதிகாரி : அங்கே என்ன செய்கிறார்?
போலீஸ்காரர் : ஆள் உண்மையை சொல்லிட்டார் சர். தான்தான் விஜயபா கொள்ளையை செய்ததென்று….. எழுதி கையெழுத்தும் போட்டு ஒப்புதல் வாக்கு மூலமும் வாங்கிட்டேன் சர்.
போலீஸ் உயரதிகாரி: உனக்கென்ன பைத்தியமா? எங்க ஓய் அந்த ஆள்?
போலீஸ்காரர் : நான் அழைத்துக் கொண்டு வாரன் சர். நீங்களே கேட்டுப் பாருங்க?
இரத்த வெள்ளத்தோடு வரும் இளைஞன் போலீஸ் உயரதிகாரி முன் தான் தான் அந்தக் கொள்ளையை செய்ததென்று கும்பிட்டுக் கொண்டே சொல்கிறான்.
போலீஸ் உயரதிகாரி தலையில் கைவைத்துக் கொள்கிறார்.
//…இரத்த வெள்ளத்தோடு வரும் இளைஞன் போலீஸ் உயரதிகாரி முன் தான் தான் அந்தக் கொள்ளையை செய்ததென்று கும்பிட்டுக் கொண்டே சொல்கிறான்……//
அஜீவன் இது பலருக்குச் சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால் இப்படிப்பட்ட பொலிசார், ராணுவம் உள்ள நாட்டில்தான் ஒரு இனம் தனது உரிமைக்காக போராடவேண்டி இருக்கிறது. அப்படிப்பட்ட நாட்டின் சிறைக்குள் நடந்த அடித்துச் சித்திரவதை செய்து கொலையை ’புலம்பெயர்’ தமிழரின் உசுப்பேற்றலால் நடந்தது எனச் சொல்வோரும் உள்ளனர்!!
அஜீவனுகான எனது பதில் எங்கோ மறைந்துவிட்டது.
._._._._._._.
அஜித் உங்கள் கருத்து எதுவும் பதிவில் இருக்கவில்லை. தயவுசெய்து மீண்டும் பதிவேற்றவும். நன்றி
தேசம்நெற்
நான் பதிவேற்றிய கதை சிரிப்பதற்காக அல்ல சாந்தன்.
அது சிங்களத் தொலைக் காட்சி ; இலங்கையில் உள்ள காவல் துறை குறித்து பகிரங்கப்படுத்திய ஒரு விடயம்.
இதையே தமிழர் ஆட்சியாளருக்கு செய்திருந்தால்??
அப்படியான சுதந்திரத்தை இல்லாமல் பண்ணியதால்தான் ; அவர்களும் இல்லாமல் போனார்கள். இன்னும் புலத்தில் இது தொடர்கிறது. அவர்களும் இல்லாமல் போகும் காலம் தொலைவில் இல்லை.
//….இதையே தமிழர் ஆட்சியாளருக்கு செய்திருந்தால்??…//
ஹைபொதெற்றிக்கல் கேள்விகள் எல்லோரை நோக்கியும் கேட்கலாம். புத்திசாலித்தனமாக பிரச்சினையை திசைதிருப்பலாம்.
//அஜீவன் – அது சிங்களத் தொலைக் காட்சி இலங்கையில் உள்ள காவல் துறை குறித்து பகிரங்கப்படுத்திய ஒரு விடயம்.இதையே தமிழர் ஆட்சியாளருக்கு செய்திருந்தால்??//
புலி ஆட்சியாளகள் இதை விட கொடூரமாக செய்தார்கள் செய்வார்கள்.ஆனால் புலம்பெயர் ஊடகங்கள் புகழ்பாடும்.
மேலும் அஜீவன் எனது பதிலை கவனமாக வசிக்கவும், நான் சிலருக்கு சிரிப்பை வரவழைக்கலாம் எனவே கூறி இருந்தேன்.
நீங்கள் ஏதோ காவல் துறையை ‘பகிரங்கப் படுத்திய’ என சேட்டிபிக்கேற் கொடுக்கிறீர்கள். தமிழர் எல்லோருக்கும் இந்த விடயம் நன்றாகவே தெரியும். சிங்களவர் எல்லோரும் நன்றாக அறிவார்கள். ஆனால் சாவது தமிழந்தானே (புலி எனவும் அழைப்பர்) என நினைத்து போய்விடுவார்கள்.
தமிழருக்கு ஏலவே நன்றாக தெரிந்த விடயங்களை மீண்டும் மீண்டும் பதிவிடுவதனை தவிர்ப்பது பலரது கால விரயத்தைத் தடுக்க உதவும்!!
நேற்று சிவாஜிலிங்கம் குழுவினரை எச்சரித்த பொலிசார் ‘ஆமிக்காரங்கள் கோபத்தில இருக்கிறாங்கள் கவனம்’ என ‘ஆலோசனை’ சொல்லி அனுப்பி இருக்கிறார்கள். நீங்கள் வேற பொலிஸ்காரனை நக்கல் அடிச்சு பதிவு போட்டு உசுப்பேத்துறீங்க. கவனம் அஜீவன்!
சிவாஜிலிங்கம் சொல்லின் செல்வர் இராஜதுரையை பகிரங்கமாக கேவலப்படுத்தியவர். இனி அவர் சொல்லி இருக்கிறார் என்பதை தூக்கிப் பிடிக்க வேண்டிய தேவை யாருக்கும் இல்லை.
இதில் வேடிக்கை என்ன வென்றால் இராஜதுரையும் சிவாஜிலிங்கமும் மீன்பிடி சமூகத்தின் அங்கங்கள். ஆனால் சிவாஜிலிங்கம் தான் என்னமோ உயர் சாதி என்ற பாணியில் இராஜதுறையை திட்டியதுதான் தமாஷ்!
அஜீவனின் பதிவில் வெளியிட்டிருக்கும் தமாஷான உண்மையைப் புரிந்து கொள்ள பலருக்கு பலகாலம் செல்லும். புலிகளின் தலைவன் பிரபாகரனை நிழல் கூடத் தொட முடியாது என்று கோபாலசாமி சொல்லியிருக்கிறார். தலைவர் எப்படியும் வந்து ஈழப் போர் துவங்குவார் என்பதை நம்புவர்கள் இன்னமும் அசட்டுத்தனமாக வெளினாடுகளில் புலிகளின் பிரச்சார தும்புகளில் தொங்குவார்கள்.
விஜயபா கொள்ளை”யை செய்தது யார் ?//
இந்த கேள்வியை அவர் தேர்ந்து எடுத்தது ஏன்?
போலீஸ் உயரதிகாரி தலையில் கைவைத்துக் கொள்கிறார்..//
இந்த போலிஸ் உயர் அதிகாரி ஏன் தலையில் கைவைத்து கொள்கிறார் என்பதற்கான விளக்கம் என்ன என்பதை யாராவது சொல்வார்களா?
//…விஜயபா கொள்ளை”யை செய்தது யார் ?//
இந்த கேள்வியை அவர் தேர்ந்து எடுத்தது ஏன்?….//
பொலிஸ் வேலைக்குத் தேவையான கேள்வி ‘கொள்ளை’ பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும். காரணம் ஸ்ரீலங்கா கொள்ளையர்கள் பெரும்பாலும் பொலிசுக்காரரே!!
///… இந்த போலிஸ் உயர் அதிகாரி ஏன் தலையில் கைவைத்து கொள்கிறார் என்பதற்கான விளக்கம் என்ன என்பதை யாராவது சொல்வார்களா?……//
கொள்ளை என்றால்… விசாரிக்கிறேம்… கொள்ளையரைத் தேடி குடாநாடெங்கும் வலை வீச்சு…… விரைவில் கைது செய்து விடுவோம்… ஆராவது நம்பர் பிளேற் சொன்னால் பிடிச்சுப்போடுவோம்…. எனும் பாணியிலேயே பதில் சொல்லவேண்டும். அதைவிடுத்து இப்படிச்செய்து விட்டானே என தலையில் கையை வைத்திருப்பார்!
//இங்கே நடக்கும் கதைகளை வாசித்த போது , லங்காலீக்ஸ் எனும் சிங்கள இணைய தளத்தில் நான் வாசித்த ஒரு கதையை , இங்கே தமிழாக்கம் செய்யலாம் என்று நினைக்கிறேன்.//
சரி அஜீவன் – கதை நான் கேள்விப்பட்ட கதை தான். அதில் உள்ள ‘கதையின் நீதி’ இந்தத் தலைப்புடனோ இங்கு பேசப்பட்ட விடயங்களுடனோ எவ்வாறு சம்பந்தப்படுகிறது?
தமிழ்ப்படத்தில் வரும் மெயின் கதைக்குச் சம்பந்தமே (அதிகம்) இல்லாது நகைச்சுவைப்பகுதி வரும். படம் பார்ப்பவர்களும் சிரித்து விட்டு வருவார்கள். படம் எடுத்தவனையும் தப்புச் சொல்ல முடியாது. இரண்டாம் மூன்றாம் தர இரசிகர்களையும் தமாஷ்படுத்தும் தேவை அவனுக்கு இருக்கிறது. செந்தில் – கவுண்டமணி என்னமாய் வசனம் பேசினார்கள் என்று சொல்லி மகிழ்வார்கள். தான் தமிழ்நாட்டில் கற்றதாகவும் தனக்குத் தமிழ் தெரியும் என்றும் சொன்னார் ஒரு தெலுங்கு நண்பர். படத்தில் வந்த வடிவேலு காமெடிக்கு(!) கடுமையாகச் சிரித்துக் கொண்டிருந்தார். வெளியில் வந்து பேசிய போது தான் தெரிந்தது அவருக்கு வடிவேலுவின் வசனங்கள் எதுவுமே புரியவில்லை என்பது. சிரிக்காவிட்டால் தனக்குப் படம் (குறிப்பாக தமாஷ்)புரியவில்லை என்று மற்றவர்கள் நினைத்து விடுவார்கள் என்று மனிதருக்கு ஒரு கெளரவப் பிரச்சனை!
//இது தலை சுற்றி நிக்கவல்ல. அப்படி ஏதாவது யாருக்காவது நடந்தால் அதற்கு யான் பொறுப்பல்ல.//
ஆனால், அஜீவனுக்கு இந்தக் கதையின் நோக்கம் – இணைப்பு புரிந்ததை விட நந்தாவுக்கு அதிகம் புரிந்திருப்பதாகத் தோன்றுகிறது. அவரே சொன்னால் இன்னமும் சிறப்பாக இருக்கும்!
//கொள்ளை என்றால்… விசாரிக்கிறேம்… கொள்ளையரைத் தேடி குடாநாடெங்கும் வலை வீச்சு…… விரைவில் கைது செய்து விடுவோம்… ஆராவது நம்பர் பிளேற் சொன்னால் பிடிச்சுப்போடுவோம்…. எனும் பாணியிலேயே பதில் சொல்லவேண்டும். அதைவிடுத்து இப்படிச்செய்து விட்டானே என தலையில் கையை வைத்திருப்பார்!//
குற்றச் செயல்கள் இலங்கையில் நடப்பதே இல்லை. நம்ம கோத்தா சொல்லியிருக்கிறார். பொலிசில் *முறைப்பாடு செய்தால்* பொலிஸ் கண்டுபிடிக்கும் என்று தானே கோத்தா சொன்னார் – முறைப்பாடு செய்யாமல் பொலிஸ்காரன் எப்படித் தீர்வு காணலாம் என்று அதிகாரி குழம்பியிருப்பாரோ?
//..குற்றச் செயல்கள் இலங்கையில் நடப்பதே இல்லை. நம்ம கோத்தா சொல்லியிருக்கிறார். …//
அதைவிட யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களின் அதிகரிப்பு யாழ்ப்பாணம் பழைய இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டது என்பதன் அடையாளம் என திருவாய் மலர்ந்தருளியவர் ஸ்ரீலங்காமாதாவின் பிரதம சட்டத்தரணி!
புலிகள் ஆட்சி செய்த பகுதிகளில் கொள்ளைகள் இடம் பெறவில்லை.
காரணம் கொள்ளையரே ஆட்சி செய்தனர்.
செய்ய வேண்டியதை எல்லாம் பகிரங்கமாகவே செய்தார்கள்.
கொலை – கொள்ளை – கடத்தல் – எல்லாவற்றையும் தமிழீழத்துக்காக செய்வதாக பேக்காட்டியே செய்தார்கள்.
போதைப் பொருள் கடத்தியவர் புலிகளின் அன்றைய சர்வதேச தொடர்பாளர் கேபீ. ( போதைப் பொருள் கடத்துவது தேசத்தை காக்க)
அன்புள்ள மேத்தா,
ஒரு விடயத்தை மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன், அதாவது 100% புலி ஆட்சி நடைபெற்ற பிரதேசத்தில், காற்றும் புகமுடியாத புலி புலனாய்வு நடைபெற்ற பிரதேசத்தில் “இனந்தெரியாத ஆயுததாரிகள்” இதை எல்லாம் செய்ததாக லண்டன் புலி வானொலிகள் பரப்புரை செய்தன. எல்லாமே ஆச்சரியம்தான்!!
//அதைவிட யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களின் அதிகரிப்பு யாழ்ப்பாணம் பழைய இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டது என்பதன் அடையாளம் என திருவாய் மலர்ந்தருளியவர் ஸ்ரீலங்காமாதாவின் பிரதம சட்டத்தரணி//சாந்தன்
உலகில் எங்காவது குற்ரச்செயல்கள் இல்லாத நாடுகளை இங்கு விவரித்தால் அங்கு போய் தமிழர் அகதிகள் விண்ணப்பம் செய்ய உதவியாக இருக்கும்.-துரை
//உலகில் எங்காவது குற்ரச்செயல்கள் இல்லாத நாடுகளை இங்கு விவரித்தால் அங்கு போய் தமிழர் அகதிகள் விண்ணப்பம் செய்ய உதவியாக இருக்கும்.-துரை//
இது கூடத் தெரியாதா? சரியான பதில் சிறீலங்கா! துரை எப்போது பெட்டி கட்டுகிறார்?
//..உலகில் எங்காவது குற்ரச்செயல்கள் இல்லாத நாடுகளை இங்கு விவரித்தால் அங்கு போய் தமிழர் அகதிகள் விண்ணப்பம் செய்ய உதவியாக இருக்கும்.-துரை….//
குற்றச்செயல்கள் நடைபெறுவதைச் சொல்லவில்லை அதனை ‘இயல்புநிலை’ என வக்காலத்து வாங்குவதுதான் பிரச்சினை, அதுவும் ஒரு சட்டமா அதிபர் சொல்கிறார்.
//குற்றச்செயல்கள் நடைபெறுவதைச் சொல்லவில்லை அதனை ‘இயல்புநிலை’ என வக்காலத்து வாங்குவதுதான் பிரச்சினை, அதுவும் ஒரு சட்டமா அதிபர் சொல்கிறா// சாந்தன்
ஒரு சட்ட மா அதிபரே தவறு விடும்போது, புலம்பெயர் அகதித்தமிழர் 30 வருடமாக தவறு விட்டதில் எந்தத் தப்புமில்லை.-துரை