ஜேவிபியினரின் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலம்


கிளிநொச்சியில் இன்று ஜேவிபியினர் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடாத்தியுள்ளனர். மக்களை வதைக்கும் ஆட்சிக்கு எதிராக தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு அணித்திரள்வோம் என்ற வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இன்று (23) காலை கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக ஆரம்பித்து ஏ9 பிரதான வீதி வழியாக சென்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தினை காவற்துறையினர் கிளிநொச்சி காவல் நிலையம் முன்பாக தடுத்து நிறுத்தினர்.

அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்து காவற்துறையினரால் ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்டபோது காவற்துறையினருக்கும் ஆர்ப்பாட்டகார்களுமிடையே முறுகல் நிலை ஏற்பட்டபோது மேலதிக காவற்துறையினர் மற்றும் பிராந்திய பிரதி காவற்துறைப் பொறுப்பதிகாரி ஆகியோர் குறித்த இடத்திற்கு வருகைதந்து நிலைமையினை கட்டுப்படுத்தி ஆர்ப்பாட்டகார்களை கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டதனையடுத்து வீதியில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்கார்கள் சிறுது நேரம் தங்களுடைய கோசங்களை எழுப்பிய வண்ணம் தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தி கலைந்த சென்றனர்.

இது தொடர்பான வேறு பதிவுகள்

  • வேறு பதிவுகள் இல்லை!
உங்கள் கருத்து
  1. Rohan on July 23, 2012 10:10 am

    //அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்து காவற்துறையினரால் ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்டபோது //

    அனுமதி இல்லாது ஏன் செய்தார்களாம்?

    யாரும் புலிக் கொடி காட்டவில்லை என்பதைத் தான் நம்ப முடியவில்லை!!


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு