தமிழர்கள் என்றுமே மறக்க முடியாத கொடூர நிகழ்வு யூலை’83: ஐ.தி.சம்பந்தன்


சிங்களவர் கலவரம் செய்வது புதிய ஒரு விடயம் அன்று. அன்று ஸ்ரீலங்கா என்ற நாடு இலங்கை என்று அழைக்கப்பட்ட காலம் தொட்டே சிங்களவரின் கலவரம் நிலைகொண்டிருந்தது கண்கூடு. ஆரம்பகாலத்தில், பௌத்த மத வளர்ச்சியில் நாட்டம் கொண்ட பௌத்தமத தீவிர வாத பிக்குமார், சிங்கள வெறியையும் பௌத்த மத மேம்பாட்டையும் வளர்க்க தம்மாலான சகல முயற்சிகளையும் எடுத்தனர்.

அன்று பௌத்த மத வரலாற்றையும், சிங்கள இனத்தின் ஆரம்பத்தையும், மஹா நாமா என்ற பௌத்த பிக்கு, பாலி மொழியில் எழுதினான். அவன் எழுதிய வரலாற்று நூலே ‘மஹாவம்சம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்நூல் ஏழாம் நூற்றாண்டு அளவில் எழுதப்பட்டது.

புத்த பிரானின் பிறப்பு, நிர்வாண நிலைபற்றி எழுதிய இந்த நூலாசிரியர், பௌத்தமதம் பரவியது பற்றி எழுதும்போது, பொய், புனைசுருட்டு, கற்பனைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளான். அன்றைய காலத்தில், புத்தபிரான் மூன்றுமுறை இலங்கைத்தீவுக்கு வந்தார் என்றும் எழுதியுள்ளான். மூடர்களாகவும், விலேச்சர்களாகவும் வாழ்ந்த தமிழர்களை வென்று, பௌத்த மதத்தை நிலைநாட்டினர் என்றும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளதனைக் காணமுடிகிறது. தமிழ் விரோத கொள்கைகளைப் பரப்பிய முதல் மனிதன் மஹா நாமவே யாவான் இவனது மஹாவம்சமே, எல்லாத் தமிழ் விரோத நடவடிக்கைகளுக்கும் ஆதார நூலாக அமைந்துள்ளது.

இந்த நாடு புத்தபிரானால் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு என்ற சித்தாந்தம் மஹாவம்சத்தில்தான் முதலில் வித்திடப்பட்டது.
அதையடுத்து துட்டகெமுனுக்கும் எல்லாள சிங்கன் என்ற அனுராதபுரத்திலிருந்து ஆண்ட தமிழ் மன்னனும்கும் இடையில் யுத்தம் நடைபெற்றது என்றும் வர்ணிக்கப்படுகிறது. இரண்டு மன்னர்களுக் இடையிலான யுத்தம், இனவிரோத யுத்தமாக வெற்றிகரமாக சித்தரிக்கப்படுகிறது.

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்தோன்றிய சிங்கள அரசியல் வாதிகள் இந்த இனவாத பாதையிலேயே இனக் கலவரங்களை ஏற்படுத்தி தமிழர்களை அழித்தொழிக்க முற்பட்ட வரலாறே 1958, 1977, 1881, 1983 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற கலவரங்கள் இதில் மிகக் கொடியது 1983 யூலை இனக்கலவரம். இக்கலவரம் நடைபெற்று 29 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அந்தக் கொடூர நிகழ்வுகள் மக்கள் மனதைவிட்டு அகலவில்லை.

தென் இலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்களையும் அவர்களது சொத்துக்களையும் அழித்து திட்டமிட்ட குண்டர்களினால் ஆயுதப் படைகளின் துணையுடன் கோரத்தனமாக நடத்திய இனக்கலவரங்கள். மூவாயிரத்துற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்த நாடு 2000க்கு மேற்பட்ட தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இந்த தீ வைப்பிலும் வாகனங்களில் நின்ற தமிழர்களை இனங்கண்டு அடித்துக் கொள்வதற்கு ஆனந்தா கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டது வெளிப்படையான காட்சி.

யாழ்ப்பாண திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் விடுதலை புலிகளினால் உயிர் இழக்க நேர்ந்த சம்பவத்தை காரணமாக வைத்து அரசினால் ஏற்கனவே திட்டமிட்ட இனக்கொலை அரங்கேற்றப்பட்டது. மக்கள் வதைக்க வதைக்க தீயிட்டு கொழுத்திய கொடூர காட்சியை நேரில் கண்டவர்கள் ஆயிரக்கணக்கானோர். பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி அகதி முகாமிலும் ஏனய பல அகதிகள் முகாம்களிலும் அகதிகளாக தஞ்சம் அடைந்து அவலப்பட்ட காட்சியை நேரில் பார்த்தோர் பலர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அநாகரிகமான முறையில் தாக்கப்பட்ட உடமைகளையும் உறவுகளையும் இழந்து துயரத்தோடு தஞ்சம் புகுத்தியிருந்த 200க்கு மேற்பட்டோருடன் நேரில் கலந்துரையாடி திரட்டிய தகவல்களை ‘அகதிகளின் சோக வரலாறு’ என்ற ஒரு நூலாக இலண்டனில் வெளியிட்டேன். அந்த நூலில் இடம் பெற்ற உண்மையான சம்பவங்கள் எமது மக்கள் அரசியல் தஞ்சம் கோர ஆவணமாக அமைந்தது.

இனக்கலவரம் நடைபெற்று 25 ஆவது ஆண்டு நினைவாக நான் வெளியிட்ட BLACK JULY 83 – Indictments யூலை 83 இனக்கலவரம் குற்றச்சாட்டுகள் என்ற பெயரில் ஆங்கிலம் தமிழ் ஆகய மொழிகளில் 500 பக்கத்தில் வெளிவந்த நூலில் கறைபடிந்த கறுப்பு யூலை இனக் கலவரத்தின் சோக வரலாற்று ஆதாரத்துடன் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்நூல் பிரித்தானியா, கனடா, மலேசியா, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டன. இலங்கையில் இன்நூல் இன்னமும் வெளியிடப்படவில்லை. அதற்கான காரணங்களை சொல்லாமலே விளங்கிக் கொள்வீர்கள்.

இந்நூலைப்படித்த பேராசிரியர் சுப வீரபாண்டியன் வெளியிட்ட கருத்துக்கள்: ’1956 ஆம் ஆண்டு தொடங்கியே தமிழர்கள் மீதான ஒடுக்கு முறை அங்கு கட்டவிழ்த்தது விடப்பட்டுள்ள தெனினும், 1983ம் ஆண்டு வன்முறையோடு எதனையும் ஒப்பிடமுடியாது. ஈழமக்களுக்கு நடந்த கொடுமைகளோடு மட்டுமன்றி, உலகெங்கும் நடந்த கொடுமைகளோடு கூட அதனை ஒப்பிட இயலாது.

வெலிக்கடைச்சிறையில் குட்டிமணிக்கு நிகழ்த்தப்பட்ட சித்திரவதையை நம்மால் முழுமையாகப் படிக்க முடியவில்லை. என்னதான் இனவெறி, மதவெறி இருந்தபோதிலும், கருவுற்றிருக்கும் ஒரு பெண்ணின் வயிற்றில் கத்தியைச்செருகும் காட்டுமிராண்டித்தனம் இன்று வரை நாம் கதைகளில் கூடப்படித்திராத நிகழ்ச்சி, கற்பனைக்கு எட்டாத அத்தனை சித்திரவதைகளும், ஈழத்தமிழ் மக்களுக்கு நடந்தேறியுள்ளன, எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிவநேசச்செல்வன் முன்னாள் ஆசிரியர் தினக்குரல் – அவரது பார்வையில் ‘இனவாதத்தின் கொடூரத் தாண்டவத்தினை இந்நூலில் ஒவ்வொரு பக்கத்திலும் காண்கிறீர்கள். ஒவ்வொரு சம்பவமும் மீண்டும் இரத்தக் கொதிப்பை ஏற்படுத்துகிறது. சில சோக நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் அசை போட்டுப்பார்க்கும் போது அவற்றை மனதில் இருந்து அகற்றுவது கடினமான காரியமாகி விடுகிறது.

ஸ்ரீலங்கா வெலிக்கடைச்சிறைப் படுகொலையும் புத்தரின் காலடியில், வீரத்தமிழ் இளைஞர்களின் செங்குருதி.
1983 யூலையில் ஸ்ரீலங்காவில் உள்ள வெலிக்கடைச்சிறையில் பூட்டப்பட்ட அறைகளில் ஈழத்தமிழ் விடுதலைப் போராளிகள் கோழைத்தனமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிங்கள இனவாதப் படுகொலையின் மற்றொரு மைல்கல்லாகும்.

காட்டுமிராண்டித்தனமான இச்சம்பவம் நாகரீக உலகில் சிங்கள மக்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது.
புத்தபெருமான் போதித்த அன்பு, கருனை, கொல்லாமைக் கோட்பாடுகளுக்கு விரோதமான இச்செயலையிட்டு ஒவ்வொரு உண்மையான பௌத்தனும் வெட்கித்தலைகுனிய வேண்டும். சிங்கள மக்களின் எல்லா மட்டங்களிலும் தமிழர் விரோத உணர்வு எவ்வளவு தூரத்திற்கு ஊட்டப்பட்டுள்ளது என்பதை இச்சம்பவம் வெளிப்படுத்தியது.

சுமார் 29 ஆண்டுகளுக்குப் பின்னரும் இதேபோன்ற கொடூர கொலை வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் சிறைக்கைதிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. வவுனியா நெலுங்குளத்தைச் சேர்ந்த நிமலரூபன் கொலைக்கும் குட்டிமணிபோன்ற 52 தமிழ்க்கைதிகள் 1983ல் வெலிக்கடைச் சிறைச்சாலையில் கொலை செய்யப்பட்டதும் வித்தியாசமே கிடையாது. சிங்கள பௌத்த இனவாத அரசின் இனக்கொலை தொடர்ந்த வண்ணமே உள்ளது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் வெற்றி பெற்று தமிழ் பிரதேசத்தில் தமிழ் பேசும் மக்களின் ஆட்சி அமைய வேண்டும். அதன்மூலம் தமிழர்கள் சுயபாதுகாப்பை பெற்று தமிழ்பேசும் மக்கள் விடயத்தில் கௌரவத்துடனும் சுயகௌரவத்துடனும் வாழ வழிவகுக்குக.

இது தொடர்பான வேறு பதிவுகள்

  • வேறு பதிவுகள் இல்லை!
உங்கள் கருத்து
  1. thuari on August 2, 2012 8:01 am

    ஒருகாலத்தில் வடக்கு கிழக்கு மட்டுமே தமிழரின் பிரதேசம். காலமாற்ரத்தால் தென்பகுதியிலும் தமிழர் குடியேற்ரம் அதிகரித்து விட்டது. தற்சமயம் உலக்ம் முழுவதுமே வடக்கு கிழக்கு தமிழர் குடியேறிவிட்டனர்.

    வடக்கு கிழக்கில் அன்று தொடக்கம் இன்று வரை புலம்பெயராத தமிழர்கழும் வாழ்கின்றார்கள். அடிமட்ட பொருளாதார்த்தில் வாழ்ந்த இந்த மக்களின் பொருளாதாரம் இன்று தரைமட்டமாக மாற்ரப்பட்டுள்ளது.

    அதேசமயம் தெனிலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலிமிருந்து தமிழரின் உருமைகோருவோரே அதிகம். பொருளாதார சமூக மேம்பாட்டில் சிங்களவ்ர்கழுடன் சேர்ந்து கையோடு கை சேர்ந்து ஒரு சமுகம் மாறிவிட்டது.

    இலங்கையில் அவலம் தற்போது ஏழைகளிற்கே. தமிழர் சிங்களவர் என்னும் துவேசத்தை மீண்டும் வளர்க்காமல் இலங்கை ஏழைகள் சார்பில் தமிழ் அரசியல்வாதிகள் கவனம் செலுத்துவதன் மூலமே தமிழ் சிங்கள நட்புறவையும் வளர்த்து தமிழர்களையும் காப்பாற்ரலாம். -துரை


  2. Rohan on August 2, 2012 11:49 am

    /ஒருகாலத்தில் வடக்கு கிழக்கு மட்டுமே தமிழரின் பிரதேசம். காலமாற்ரத்தால் தென்பகுதியிலும் தமிழர் குடியேற்ரம் அதிகரித்து விட்டது. தற்சமயம் உலக்ம் முழுவதுமே வடக்கு கிழக்கு தமிழர் குடியேறிவிட்டனர்.//

    ஆனால், வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்குத் தான் அவர்களது பூமி பறிபோயிருக்கிறது. மரணச் சடங்கு நடாத்தக் கூட அனுமதி இல்லை!

    //வடக்கு கிழக்கில் அன்று தொடக்கம் இன்று வரை புலம்பெயராத தமிழர்கழும் வாழ்கின்றார்கள். அடிமட்ட பொருளாதார்த்தில் வாழ்ந்த இந்த மக்களின் பொருளாதாரம் இன்று தரைமட்டமாக மாற்ரப்பட்டுள்ளது.//

    ‘வாழ்கிறார்கள்’?

    கீரிமலை மயானம் கூட….!!
    -http://www.newjaffna.com/fullview.php?id=MTc4MDA=


  3. thuari on August 2, 2012 3:05 pm

    //ஆனால், வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்குத் தான் அவர்களது பூமி பறிபோயிருக்கிறது. மரணச் சடங்கு நடாத்தக் கூட அனுமதி இல்லை!//றோகன்

    ஜனாதிபதியுடன் ஆண்ட பரம்பரை திருமணவிழா கொண்டாடுவதை எப்படி பார்க்கிறீர்கள்.-துரை

    யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகளின் வம்சமும் ராஜபக்க்ஷ வம்சமும் திருமணபந்தத்தில் இணைந்தன! (படங்கள் இணைப்பு)

    இலங்கையில் யாழ்ப்பாண சுதந்திர இராச்சியத்தை ஆட்சி செய்த வர்கள் ஆரியச் சக்கரவர்த்திகள். இவர்களின் தலைநகரமாக நல்லூர் விளங் கியது. இந்த யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகளின் வம்சத்து தோன்றல்களில் ஒருவர் துவாரகா விஜே நாதன். இவர் ரோரன்ரோ பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றவர்.

    இலங்கையில் தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற செயல் திட்ட பணிப்பாளராக உயர் பதவி வகிப்பவர் மிலிந்த ராஜபக்க்ஷ .

    மிலிந்த ராஜபக்க்ஷவுக்கும் துவாரகா விஜேநாதனுக்கும் இடையில் மலர்ந்த காதல் இறை ஆசியுடனுமி பெற்றோரி பெரியோர் ஆகியோரின் சம்மதத்துடனும் கொழும்பில் கடந்த ஜூலை 05 ஆம் திகதி வெகுவிமரிசையான திருமணமாக நடந்தேறியது. திருமண சடங்குகள் கொழும்பு கங்காராம விகாரையில் சிங்கள பௌத்த பாரம்பரியப முறையிலுமி கொழும்பு தெகிவளை விஷ்ணு ஆலயத்தில் தமிழ் இந்து பாரம்பரிய முறையிலும் இடம்பெற்றன.

    சிறிலங்கா ஜனாபதி மஹிந்த ராஜபக்க்ஷ புதுமண தம்பதியை அலரி மாளிகைக்கு வரவழைத்து ஆசிகள் வழங்கி இருந்தார். 07 ஆம் திகதி கொழும்பில் உள்ள பிரபல ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு வைபவம் ஒன்றும் புதுமண தம்பதியால் நடத்தப்பட்டது.

    யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகளின் வம்சத்தில் தோன்றிய முடிக்கு உரிய இளவரசர் ரெமிஜியஸ் கனகராஜா நெதர்லாந்தில் இருந்தவாறு இத்தம்பதியை வாழ்த்தி உள்ளார். இளவரசர் ரெமிஜியஸ் கனகராஜாவுக்கு மருமகள் உறவு முறை உடையவர் துவாரகா விஜேநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருமணத்தை தொடர்ந்து பெயரை துவி விஜேநாதன் ராஜபக்க்ஷ என்று கையாண்டு வருகின்றார் துவாரகா விஜேநாதன்.


  4. Rohan on August 2, 2012 9:24 pm

    //ஆனால், வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்குத் தான் அவர்களது பூமி பறிபோயிருக்கிறது. மரணச் சடங்கு நடாத்தக் கூட அனுமதி இல்லை//

    //ஜனாதிபதியுடன் ஆண்ட பரம்பரை திருமணவிழா கொண்டாடுவதை எப்படி பார்க்கிறீர்கள்.-துரை//

    உயிர் போகும் பிரச்சனை அவர்களுக்கு. துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு என்று வருகிறார் இவர்!

    சிங்கள ஆணை மணந்தவர் இன்னும் தமிழர்களுக்கு அரசியாக நினைப்பது தமிழர்களுக்கு மொட்டை அடிக்கும் செயல் என்று சொல்வர் சிலர். காத்திருப்போம்.


  5. thuari on August 3, 2012 6:36 am

    //சிங்கள ஆணை மணந்தவர் இன்னும் தமிழர்களுக்கு அரசியாக நினைப்பது தமிழர்களுக்கு மொட்டை அடிக்கும் செயல் என்று சொல்வர் சிலர். காத்திருப்போம்.//றோகன்

    சிங்களவருடன் கதைத்தால் துரோகி மரணதண்டனை மணந்தால் அரசபதவி இழப்பா?-துரை


  6. Rohan on August 3, 2012 9:51 am

    அழகான படங்கள்:
    -http://www.facebook.com/media/set/?set=a.10150997460938353.430090.105801763352&type=3


  7. BC on August 3, 2012 4:28 pm

    //துரை – சிங்களவருடன் கதைத்தால் துரோகி மரணதண்டனை மணந்தால் அரசபதவி இழப்பா//
    அதே தான் புலிகளின் நடை முறை. இனவாதம் பேசி தாங்கள் இலாபம் அடையலாம். ஆனால் தாங்கள் மட்டும் கதைக்கலாம், காதலித்து திருமணமும் செய்யலாம். நடேசனின் மனைவி சிங்களம், பாலசிங்கத்தின் மனைவி ஒரு வெள்ளை, சுரேன் சுரேந்திரன் ஒரு சிங்கள மனைவி வைத்திருந்தார்.
    மிலிந்த ராஜபக்ச துவாரகா விஜேநாதன் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.


  8. சாந்தன் on August 3, 2012 6:28 pm

    //..//துரை – சிங்களவருடன் கதைத்தால் துரோகி மரணதண்டனை மணந்தால் அரசபதவி இழப்பா//….

    உண்மை துரை உண்மை…ஆனால் இது நடந்தது 1983 இல். அப்போது நடந்த கலவரத்தில் தமிழரை மணந்த சிங்களப்பெண்களும் அடித்து விரட்டப்பட்டனர். இதனை மறக்காமல் இருக்கும் துரைக்கு வாழ்த்துக்கள்.

    மேலும் 1983 இல் நடந்த இனஅழிப்புப்பற்றிய தலைப்பில் எங்கெல்லாமோ ஓடி..ஓடி இருவரின் திருமணச்செய்தியை இழுத்து வந்து விவாதத்தை திசை திருப்பி திருமணவாழ்த்துச் சொல்லி மகிழும் மாற்றுக்கருத்து மாணிக்கங்களுக்கும் வாழ்த்துக்கள்.


  9. Rohan on August 3, 2012 9:57 pm

    ///சிங்கள ஆணை மணந்தவர் இன்னும் தமிழர்களுக்கு அரசியாக நினைப்பது தமிழர்களுக்கு மொட்டை அடிக்கும் செயல் என்று சொல்வர் சிலர். காத்திருப்போம். றோகன்///
    //சிங்களவருடன் கதைத்தால் துரோகி மரணதண்டனை மணந்தால் அரசபதவி இழப்பா?-துரை//

    BC on July 11, 2012 6:56 pm
    சிங்கள பெண்ணை மணந்த சுரேன் சுரேந்திரன் தமிழர்களுக்கு தலைவராக நினைப்பது தமிழர்களுக்கு மொட்டை அடிக்கும் செயல்.

    அந்த நேரம் துரை கேள்வி கேட்காமல் இருந்தார்!

    இப்போது பெரிய சுத்தவான் கூரையில் நின்று குரல் தருகிறார்!!

    /அதே தான் புலிகளின் நடை முறை. இனவாதம் பேசி தாங்கள் இலாபம் அடையலாம். ஆனால் தாங்கள் மட்டும் கதைக்கலாம், காதலித்து திருமணமும் செய்யலாம். நடேசனின் மனைவி சிங்களம், பாலசிங்கத்தின் மனைவி ஒரு வெள்ளை, சுரேன் சுரேந்திரன் ஒரு சிங்கள மனைவி வைத்திருந்தார்./


  10. thuari on August 4, 2012 7:00 am

    //மேலும் 1983 இல் நடந்த இனாழிப்புப்பற்றிய தலைப்பில் எங்கெல்லாமோ ஓடி..ஓடி இருவரின் திருமணச்செய்தியை இழுத்து வந்து விவாதத்தை திசை திருப்பி திருமணவாழ்த்துச் சொல்லி மகிழும் மாற்றுக்கருத்து மாணிக்கங்களுக்கும் வாழ்த்துக்கள்.//சாந்தன்

    காதலித்து கோவிலில் உற்ரார் உறவினர் முன் திருமணமுடித்தவர்களிடையே கூட குடும்பப் பிரச்சினைகள் தோன்றும். தங்கள் பிள்ளைகளின் நலஙருதும் பெற்ரோர் பொறுமையுடன் வாழ்வர்கள். நான் பெரிது நீ பெரிது என பிள்ளைகளின் நலனை எதிர்காலத்தை எண்ணிப் பார்க்காதவர்கள், கருதாதவர்கள் பழைய கோபமூட்டும் கோபமூட்டிய நிகழ்வுகளை நினைவுபடுத்தி பிரச்சினைபடுவார்கள். இதில் தமிழ் அரசியல் வாதிகளிற்கும் புலம்பெயர் புலிவியாபாரிகளிற்கும் எது தேவையென மேலும் சொல்ல வேண்டியதில்லை. -துரை


  11. thuari on August 4, 2012 11:37 am

    //அந்த நேரம் துரை கேள்வி கேட்காமல் இருந்தார்!இப்போது பெரிய சுத்தவான் கூரையில் நின்று குரல் தருகிறார்!!//றோகன்

    மாற்று அமைப்புகளை புலிகள் அழிக்கும்போது சோடா கொடுத்தார்கள். எனவே புலிகளென்றால் தமிழர்தான் அனறும் இன்றும் என்றும் எனக்கொள்ளலாமா?-துரை


  12. BC on August 4, 2012 11:47 am

    Rohan – BC on July 11, 2012 6:56 pm சிங்கள பெண்ணை மணந்த சுரேன் சுரேந்திரன் தமிழர்களுக்கு தலைவராக நினைப்பது தமிழர்களுக்கு மொட்டை அடிக்கும் செயல்.
    அந்த நேரம் துரை கேள்வி கேட்காமல் இருந்தார்!இப்போது பெரிய சுத்தவான் கூரையில் நின்று குரல் தருகிறார்!!

    இனங்களுக்கிடையில் பகை மூட்டி அரசியல் பிழைப்பு நடத்தும் புலிகளின் அயோக்கியதனங்களை தெளிவாக புரிந்து கொண்ட தேசம்நெற் கருத்தாளர் துரைக்கு சிங்கள பெண்ணை மனைவியாக கொண்ட அல்லது கொண்டிருந்த சுரேன் சுரேந்திரன் தமிழர்களுக்கு மொட்டை அடிக்கிறார் என்பதை புரிந்து கொள்வது மிக சாதாரண விடயம். ஆனால் றோகனின் பிரச்சனை அதுவல்ல.
    மிலிந்த ராஜபக்ச- துவாரகா விஜேநாதன் இப்படியே மேலும் பலர் ஐக்கியமாக தொடங்கினால்!! புலி மனது திக் திக் என்று அடிப்பது கேட்கிறது.


  13. சாந்தன் on August 4, 2012 3:42 pm

    //.. இதில் தமிழ் அரசியல்வாதிகளிற்கும் புலம்பெயர் புலிவியாபாரிகளிற்கும் எது தேவையென மேலும் சொல்ல வேண்டியதில்லை. -துரை…..//
    தலைப்பு ஜூலை கலவரம் பற்றியது… இங்கு திருமண வாழ்த்துச் சொல்கிறார்கள். என்கெல்லாம் ஒடி…ஓடி திசைதிருப்பி குளிர்காய்கிறார்கள்.

    திருமணவாழ்த்துப் பகுதி ஒன்றை ஆரம்பிக்க தேசத்தைக் கேட்டுக்கொள்கிறேன் அப்படி ஆரம்பித்தால் கொசுத்தொல்லை தீரும்!


  14. சாந்தன் on August 4, 2012 3:43 pm

    //..துவாரகா விஜேநாதன் இப்படியே மேலும் பலர் ஐக்கியமாக தொடங்கினால்!! புலி மனது திக் திக் என்று அடிப்பது கேட்கிறது…..//
    அப்படி ஐக்கியமானவர்களே 1983 இல் கப்பலில் யாழ்ப்பானம் வந்தார்கள். இக்கோரச் சம்பவம் பதியப்பட்டுள்ளது, இதில் திக்..திக் அடிப்பது தமிழருக்கல்ல!


  15. thuari on August 4, 2012 5:13 pm

    //தலைப்பு ஜூலை கலவரம் பற்றியது… இங்கு திருமண வாழ்த்துச் சொல்கிறார்கள். என்கெல்லாம் ஒடி…ஓடி திசைதிருப்பி குளிர்காய்கிறார்கள்.//சாந்தன்

    தொடங்கியது தமிழீழ விடுதலைப்போராட்டம். கொன்று குவித்து அழித்தது மாற்ரு அமைப்புகள், மாற்றுக்கருத்தாளர்களை. அடக்கி ஆண்டது வன்னி மக்களை.
    அடியோடு பலிகொடுத்தது முள்ளிவாய்காலில். 56 ,58,77,81,83 ம் ஆண்டுகளைக்காட்டி தொடங்கி 2009 இல் பலி கொடுத்தவர்கள் யார்?
    இனியென்ன வேலை தலைவர் பின்னால் போனவர்களிற்கு?.

    //அப்படி ஐக்கியமானவர்களே 1983 இல் கப்பலில் யாழ்ப்பானம் வந்தார்கள். இக்கோரச் சம்பவம் பதியப்பட்டுள்ளது, இதில் திக்..திக் அடிப்பது தமிழருக்கல்ல!//சாந்தன்
    1983இல் இராணுவதத்தை கொன்று தொடங்கியவர்கள் இறுதியில் ஒரு இனத்தையே தங்களை காக்க பலிகொடுத்த வீர வம்சாவழிகளல்லவா. இப்போ உருதிரகுமாரும், இம்மானுவல் அடிகளாரும் உலகத்தமிழினத்தையே காக்க போகினமாம். உலகத்தமிழிந்த்திற்கே இனி திக் திக் தான்.-துரை


  16. Rohan on August 5, 2012 2:41 am

    தமிழர்களும் சிங்களவர்களும் அங்காங்கே கலந்து மணம் செய்வது பிரச்சனைகளைத் தீர்க்காது. தமிழர்களுக்கிடையில் சாதிக் கலப்பு மணம் செய்து வைத்ததோ சமயக் கலப்பு மணம் செய்து வைத்ததோ இந்தப் பிரிவுகளை உடைத்து விடவில்லை.

    நான் பத்தாம் வகுப்புக்குக் கூடப் போகாத காலத்தில் அருள் சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயது வந்துவிட்டது நாவல் வெளிவந்தது. சிறிமாவோ காலத்தில் எழுதப்பட்டு ஜேஆர் பதவிக்கு வந்தவுடன் வெளிவந்த நாவல் என்று நினைவு.

    கொழும்புக்கு வேலைக்குப் போகும் ஒரு தமிழ் இளைஞனின் கதை. அங்கு சந்திக்கும் ஒரு சிங்களப் பெண்ணிடம் மயங்கியது மட்டுமன்றி வாரிசு ஒன்றையும் விதைத்து விட்ட அவன் அவளைத் துணையாக்கிக் கொள்வதும் அவனது சகோதரியின் திருமணம் குழம்புவதும் பெற்றோர்களின் உணர்வுக் குழப்பங்களும் என்று கதை அழகாக நகர்வதாக ஒரு ஞாபகம் (அதில் வரும் ‘ஐயான்ர சிலமனைக் காணேல்லை’ என்பதன் பொருள் அப்போது விளங்கவில்லை). அப்போது தான் ஒரு ‘சிங்களத்தியோட போனதுக்காக’ தனது தம்பியைத் தள்ளி வைத்த எனது ஆசிரியர் ஒருவரினதும் ஒரு ‘தோசையுடன் போனதுக்காக’ ஊரிலிருந்து துரத்தப்பட்டு கணவனுடன் நம்மூர் வந்த சீலாவதி அக்காவினதும் பிரச்சனைகள் எனக்குப் புரிந்தன.

    பணக்காரர்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏற்றுக் கொண்டு போய்விடுவார்கள். கதிர்காமரின் முதல் மனைவி தமிழாகவும் இரண்டாவது மனைவி சிங்களவராகவும் இருக்கவில்லையா? அடுத்த தலைமுறையினரில் மகிந்தவின் அபிமானம் பெற்ற நிருபமா ராஜபக்ச தமிழனை மணக்கவில்லையா (ஆனால் கோத்தபாய ராஜபக்ச கடைந்தெடுத்த பேரினவாதி என்று சொல்லப்படுவகிறது) புலி முக்கியஸ்தர் நடேசனின் மனைவி கூட சிங்களப் பெண் அல்லவா?

    ஆனாலும், சந்திரிகா குமாரதுங்க தமது மகள் ஒரு தமிழனை மணப்பதைத் தடுத்தார் என்று சொல்லப்படுகிறது.

    தனிப்பட, எனக்கு சிங்கள மாணவர்களுடனுன் குடும்பங்களுடனும் பழகிய அனுபவம் இருக்கிறது. அவர்களின் பண்புகளில் பல நம்மவர்களுக்கு இல்லை என்று நான் மறுகியதையும் மறைக்க முயல மாட்டேன்.

    ஐந்து திருமணங்கள் உலகை மாற்றி விடும் என்பது கற்பனை – கிணற்றுத் தவளைத் தனம்.

    ஒரு புலி வீரனுக்கும் சிங்களப் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்ததை இலங்கை அரசு இடுப்பில் சலங்கை கட்டி உலகெங்கும் பறை சாற்றியது.

    மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெலாம் பேய் – பூனையின் சீறலே புலியின் உறுமலாய் உதறல் எடுக்க வைக்கும் அளவுக்குப் புலிக் காய்ச்சலில் இருப்போர்க்கு இதெல்லாம் எங்கே புரியும்?


  17. Rohan on August 5, 2012 4:17 am

    இன்று விளக்கம்: //இனங்களுக்கிடையில் பகை மூட்டி அரசியல் பிழைப்பு நடத்தும் புலிகளின் அயோக்கியதனங்களை தெளிவாக புரிந்து கொண்ட துரைக்கு சிங்கள பெண்ணை மனைவியாக கொண்ட அல்லது கொண்டிருந்த சுரேன் சுரேந்திரன் தமிழர்களுக்கு மொட்டை அடிக்கிறார் என்பதை புரிந்து கொள்வது மிக சாதாரண விடயம்.//

    அன்று சொன்னது என்னவோ: //சிங்கள பெண்ணை மணந்த சுரேன் சுரேந்திரன் தமிழர்களுக்கு தலைவராக நினைப்பது தமிழர்களுக்கு மொட்டை அடிக்கும் செயல்.//

    சுரேன் செய்வது மொட்டை அடித்தல் என்று துரைக்கு விளங்கும் என்று சொல்லும் BC தனது கருத்தாக ‘சிங்கள பெண்ணை மணந்தவர் தமிழர்களுக்கு தலைவராக நினைப்பது தமிழர்களுக்கு மொட்டை அடிக்கும் செயல்’ என்று தெளிவாகத் தான் சொல்லியிருக்கிறார். ஆக, தமிழர்களுக்குத் தலைவராவதற்கு தமிழ்ப் பெண்ணை மணந்தவர் (குறைந்தது, சிங்களப் பெண்ணை மணக்காதவர்)மட்டுமே தகுதியுடையவர் என்று சொல்லிவிட்டு இன்று தட்டைத் திருப்பிப் போடுகிறார். …..பிழைத்துப் போகட்டும்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு