யாழில் நாளுக்கு நாள் குற்றச் செயல்கள் அதிகரிப்பு
யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களின் எண்ணிக்கைகள் அதிகரித்துச் செல்வதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மாஅதிபர் எரிக் பெரகார தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று (04) சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் தொடர்பில் இரண்டு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவில் 17 வயதுப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தாய் மாமா நீர்கொழும்பில் தலைமறைவாகிய நிலையில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு அச்சுவேலிப் பகுதியில் 22 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் தலைமறைவாகியுள்ளார். இவரைத் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்றவாரம் யாழ்.குடாநாட்டில் நடைபெற்றதாக பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள குற்றச் செயல்கள் தொடர்பாக அவர் கூறியுள்ளார்.
அவைவருமாறு, மானிப்ப்பாயில் 22,000 ரூபா தொலைபேசி திருட்டு, 10 இலச்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
மானிப்பாயில் குடும்பப் பிரச்சனையால் கணவனை மனைவி கத்தியால் குத்தியுள்ளார்.
சுன்னாகத்தில் வீடு உடைத்து பல இலச்சம் ரூபா பொறுமதியான தங்க ஆபரணங்கள் இலத்திரணியல் சாதனங்கள் திருடப்பட்டுள்ளது.
இளவாலைப் பகுதியில் 1,80,000 ரூபா பெறுமதியான மோட்டர் சைக்கிள் திருடப்பட்டுள்ளது என்றார்.

Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed
//யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களின் எண்ணிக்கைகள் அதிகரித்துச் செல்வதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மாஅதிபர் எரிக் பெரகார தெரிவித்தார்.//
இத்தனைக்கும் காரனம் யார்??
///…இத்தனைக்கும் காரனம் யார்??….//
அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ‘புலிக்கொடி’ பறக்கவிடும் புலிப் பயங்கரவாதிகளாயிருக்குமோ??
மோட்டார் சைக்கிள் நம்பரைத்தந்தியள் எண்டால் பிடிச்சுப்போடுவம்!
இத்தனைக்கும் யார் காரனமா? அவரென்ன வச்சுக்கொண்டே வஞ்சகம் பண்ணுறார்?