மன்னாரில் நடைபெற்றது என்ன? நடைபெற்ற சம்பவத்தின் உள்விவகாரங்கள் என்ன?: சீ.ஏ. சந்திரபிரேம


கடந்தமாதம் மன்னாரில் நடைபெற்ற சம்பவத்தில் நம் எல்லோரினருடைய பார்வையிலும் தெரிவது, அமைச்சர் ரிச்சாட் பதியுதீன், தனது முஸ்லிம் மக்களின் சார்பாக நீதிபதி தனது தீர்ப்பினை வழங்க வேண்டும் என நீதிபதியை மிரட்டியதாகவே இருந்தது. இதன் காரணமாக நீதிமன்றங்களும், நீதித்துறை சார்ந்தவர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் உட்பக்கத்தை சற்று விரிவாக பார்ப்பது நலம் என்று நினைக்கத் தோன்றுகின்றது. இது ஒரு அரசியல்வாதியின் பேயாட்டமாக தெரிவதைவிட இது வடக்கின், தமிழ் – முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட பிரிவினையாகவே தெரிகின்றது.

இங்கே ஒருவர், மன்னார் நீதிபதிக்கு தொலைபேசி வழி மிரட்டியதாக சொல்லப்படுவது நீதிமன்னறத்தில் ஒப்புவிக்கப்படுமானால், அது பெரும்பாலும் நோயின் அறிகுறி அன்றி நோயின் தன்மையல்ல.

மன்னாரில் ஏற்பட்டுள்ள நிகழ்வின் செயற்பாடுகளை நாம் பார்க்கும்போது அதன் கடந்த காலத்தை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. அதாவது 1990களுக்கு நாம் செல்ல வேண்டும். 1990 களில் புலிகள் இயக்கம் வடக்கு பிரதேசத்தில் வாழ்ந்த, முஸ்லிம் மக்களை துரத்தியதோடு அல்லாமல் மன்னார் உப்புக்குளம் கிராமத்தில் இருந்த முஸ்லிம் மக்களையும் துரத்தினார்கள். அந்த கிராமத்திலிலிருந்து துரத்தப்பட்ட மக்கள் யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து துரத்தப்பட்ட அகதி மக்களோடு புத்தளத்திலேயே போய் வாழ்ந்தார்கள்.

உப்புக்குளம் கிராமவாசிகளின் பிரதானமான ஜீவாதாரமாக இருந்தது மீன்பிடித் தொழிலேயாகும். இவர்களுக்கு கொந்தைப்பிட்டி என்ற ஒரு வலைப்பாடு இருந்தது. வலைப்பாடு என்பது மீனவர்கள், வாடிகளை அமைத்து, படகுகளை வைத்துக்கொண்டு தங்கியிருக்கும் கரையோரப் பகுதியாகும்.

கொந்தைப்பிட்டி பாடு, உப்புக்குளம் கிராமத்தின் அருகாமையிலேயே அமைந்திருந்தது. முஸ்லிம் மக்கள் துரத்தப்பட்ட பின்னர், இந்த பகுதி வெற்றிடமாகவே இருந்தது.

இவை நடந்து சற்று காலத்துக்குப் பின்னர், அதாவது 1999களில், புலி அமைப்பினால் விடத்தல் தீவிலிருந்த தமிழ் மீனவர்கள் புலிகளின் தேவைகளுக்காக வெளியேற்றப்பட்டார்கள். இதற்கான காரணம் புலிகள் ஆயுதங்களை கொண்டு வந்து இறக்கும் இடமாக விடத்தல் தீவை பாவிக்கத் தொடங்கியமையேயாகும். விடத்தல்தீவு, புலிகள் ஆயுதங்களை கொண்டு வந்து இறக்கும் ஒரு பிரதான இடமாக இருந்தது.

இங்கு ஒரு முக்கிய விடயம் என்னவென்றால் மன்னாரிலிருந்து செல்லும் றோலர்களும் இந்தியாவிலிருந்து வரும் இந்திய மீனவர்களின் றோலர்களும் என நூறு, ஆயிரக்கணக்கில் இப்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டமையேயாகும்.

இந்திய மீனவர்களின் படகுகளுக்கு இலங்கையின் கரையோரப் பகுதிவரை வந்து மீன்பிடிக்க, புலிகள் உற்சாகம் அளித்தார்கள். இதனால் கடற்படையினரால் இதற்குள் யார் புலி, யார் மீனவர்கள் என்ற வித்தியாசத்தை உணர முடியவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இந்த மீனவர்களை அரணாக்கிக் கொண்டு, புலிகள் தமது றோலர்களில் ஆயுதங்களை இலகுவாக கொண்டுவந்து இறக்கினார்கள். புலிகள் இயக்கக்கத்துக்கு தேவையான பாரிய ஆயுதங்கள்கூட விடத்தல் தீவு வழியாகவே கொண்டுவந்து இறக்கப்பட்டன. இங்கு கொண்டுவரப்பட்ட பாரிய ஆயுதங்களையும், செல்களையும், குளிரூட்டிகளால் நிரப்பப்பட்ட லொறிகளிலேயே புலிகள் வன்னிக்கு கொண்டு போனார்கள்.

புலிகளின் தேவைகளுக்காக, விடத்தல் தீவிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மீனவர்கள், மன்னார் தீவின் பள்ளிமுனை என்ற பகுதியில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டார்கள். இப்படித் தங்கவைக்கப்பட்ட மீனவர்கள் றோமன் கத்தோலிக்க மதத்தை சார்ந்தவர்கள். பள்ளிமுனை என்ற கிராமம் தமிழ் கிராமமாகும். அங்கு தற்காலிகமாக குடியேறிய, விடத்தல் தீவு தமிழ் மீனவர்கள், பள்ளிமுனை தமிழ் மீனவர்களோடு இடம்பெற்ற சில பிரச்சினைகளின் காரணமாக அவர்களால், ஒருவருடத்துக்கு மேல் அங்கு வாழ முடியவில்லை.

அதன் பிறகு, பனங்காட்டுக் கொட்டு என்ற தமிழ் கிராமத்துக்கு இவர்கள் புலிகளால் இடமாற்றம் செய்ப்பட்டார்கள். அங்கும் அந்த மக்களோடு பிரச்சினைப்பட்டு, அங்கும் அவர்களால் வாழ முடியவில்லை. அதன் பின்னர் விடத்தல் தீவு மீனவர்களை, உப்புக்குளம் கிராமத்திலிருந்து 9 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள, தோட்டவெளி என்ற இடத்தில் தங்க வைக்கப்பட்டார்கள். தோட்டவெளியில் தங்கிய இந்த மீனவர்கள், கொந்தைப்பிட்டி கரையோரத்தை தமது பாவனைக்கு பிடித்துக் கொண்டார்கள். இக்காலம் 2002ம் ஆண்டாக இருந்தது.

1990களில் புலிகளால், உப்புக்குள கிராமத்திலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களின் ஒருசாரார் யுத்த நிறுத்த ஒப்பந்தம் காரணமாக புத்தளத்திலிருந்து அப்பகுதிக்கு வந்து மீண்டும், மீன்பிடித் தொழிலில் ஈடுபட தொடங்கினார்கள். இவர்கள் வந்தவுடன், ஏற்கனவே விடத்தல் தீவிலிருந்து வந்து குடியேறி, மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழ் கத்தோலிக்க மீனவர்களுடன் முரண்பாடுகள் உருவாகியது.

இந்த பிரச்சனையை சுமூகத்துக்கு கொண்டுவருவதற்கு, இப்பகுதிக்கு பொறுப்பாக இருந்த கடற்புலிகளின் தலைவர்களில் ஒருவரான அமுதன், இவர்களுடன் பேசி பிரச்சினையை தவிர்க்கும் முகமாக ஒரு இணக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தார். உப்புக்குள மீனவ சங்கத்துடனும், விடத்தல் தீவு மீனவ சங்கத்துடனும் பேசி கையெழுத்திட்ட ஒப்புதல் ஒன்றின் மூலம், விடத்தல் தீவு பிரதேசத்தை புலிகள் கைவிடும்போது, அங்குவாழ்ந்த மக்களை கொந்தைப்பிட்டியை விட்டு வெளியேற்றி விடத்தல் தீவுக்கு போக வழி செய்வதாக உறுதியளித்தார்.

உப்புக்குள கிராமமும், கொந்தைப்பிட்டி மீன்பிடி கரையும், முஸ்லீம் மக்களுக்கு உரித்தானதாக இருந்தது. விடத்தல் தீவு மீனவர்கள், கொந்தைப்பிட்டி கரையோரப்பகுதியில், வாடிகள் கட்டுவதற்கு வேண்டுமானால், உப்புக்குள மீனவ சங்கத்தின் அனுமதியுடன் தான் கட்ட முடியும் என அந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் பின்னர், அரசாங்க உத்தியோகத்தர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போதும், விடத்தல் தீவு மீனவர்கள் கொந்தைப்பிட்டி மீன்பிடிக் கரையோரப் பிரதேசத்தில் தற்காலிகமாக தங்க மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது. உதாரணமாக, 2005 யூன் 7ம் திகதி மன்னார் உதவி மீன்பிடிதுறை இயக்குனர், உப்புக்குள முஸ்லிம் மீனவர்களின் ஒப்புதலைப்பெற்று, விடத்தல்தீவு தமிழ் கத்தோலிக்க மீனவர்கள், மேலும் சில காலங்கள் அங்கு தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி பெற்று கொடுத்தார். அதன் பின்னர் தமிழ்தேசிய கூட்டு முன்ணணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற பிரதிநிதி செல்வம் அடைக்கலநாதன், தலையிட்டு விடத்தல் தீவு தமிழ் கத்தோலிக்க மீனவர்களை மேலும் ஒரு வருடம் தங்க அனுமதி வாங்கி கொடுத்தார்.

2007 மார்ச் 19ம்திகதி மன்னார் மாவட்டத்தின் பிரதேச செயலாளர் தலைமையில் நடாத்தப்பட்ட ஒரு கூட்டத்தில், உப்புக்குளம் மற்றும் விடத்தல் தீவு மீனவர்களிடையே தற்காலிக ஒரு உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் 2009ல் உப்புக்குளம் பகுதியிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம் மீனவர்கள், மீண்டும் அப்பகுதிக்கு வந்து தங்க தொடங்கிய போது, பிரச்சினை உக்கிரம் அடைந்தது.

2011 மார்ச் 7ம் திகதி உப்புக்குள மீனவர்கள், மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்தின அவர்களுக்கு ஒரு மகஜர் ஒன்றை கொடுத்து, கொந்தைப்பிட்டி மீன்பிடி கரையோரப் பிரச்சனைகளை தீர்த்து வைக்க கோரினார்கள். இதன் அடிப்படையில் 2011 நவம்பர் 3ம்திகதி, மன்னார் உதவி மீன்பிடி இயக்குனரும், மன்னார் மாவட்ட சங்கங்களின் தலைவரும், பள்ளி முனைப் பனங்காட்டு கொட்டு, உப்புக்குளம் விடத்தல் தீவு ஆகிய மீன்பிடி சங்கங்களின் தலைவர்கள் ஒரு கூட்டத்தை கூடி, விடத்தல் தீவு மீனவர்கள் மீண்டும் விடத்தல் தீவுக்கு திரும்பிச் வேண்டும் என்றும், 2011 நம்பர் 30ம் திகதிக்கு முன்னதாக தமது வாடிகளை அகற்றி, அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எல்லோரும் இணைந்து எடுத்த இந்த முடிவு நடைமுறைக்கு வரவில்லை.

பின்னர் இது சம்பந்தமாக பொலிசாருடன் இணைந்து, 2012 யூன் 7, 2012 யூன் 12 மற்றும் 2012 யூன் 26 ஆகிய 3 தினங்கள் ஒரு கூட்டம் நடைபெற்றது. அப்போதும், வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றாலும் முடிவு ஒன்றை எட்ட முடியவில்லை. இந்த மூன்று நாட்களில் கடைசி நாளில், கொந்தைப்பட்டி வாடிப் பிரதேசங்களை விட்டு, தாம் வெளியேறுவதாக விடத்தல் தீவு மீனவர்கள் சொன்னாலும், அவர்கள் அதை நடைமுறைப்படுத்தவில்லை.

அதன் பின்னர் 2012 யூலை 13ம் திகதி, முஸ்லீம் மீனவர்கள் 20பேர் அடங்கிய ஒரு குழு, தமது எதிர்ப்பை தெரிவிக்க கொந்தைப்பிட்டி கரையோரப்பிரதேசம் போய், அங்கு ஏற்பட்ட அமளி துமளிகளின் போது ஏகப்பட்ட மீனவ வாடிகள் சின்னாபின்னப் படுத்தப்பட்டன.

தமிழ் மீனவர்களிடமிருந்து 17 புகார்கள் பொலிசாரிடம் முறையிடப்பட்டன. இது குறித்த விசாரணைகளின் பின்னர், 2012 யூலை மாதம் 16ம் திகதி 396/2012 B அறிக்கை, மன்னார் நீதிமன்றத்துக்கு பொலிசாரினால் கையளிக்கப்பட்டது. இந்த அசம்பாவிதங்களில் ஈடுபட்ட முஸ்லீம்கள் அப்பகுதியை விட்டு ஓடிவிட்டனர் என பொலிஸ் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த அறிக்கையின்படி, மன்னார் நீதிபதி, முஸ்லிம் – தமிழ், இருபகுதியினர்க்கும், 2012 யூலை 15ம் திகதி, நீதிமன்றத்துக்கு சமூகம் அளிக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார். ஆனால் 15ம்திகதி நீதிமன்றத்துக்கு தமிழ் மீனவர்கள் மட்டுமே சமூகமளித்திருந்தார்கள். முஸ்லிம் மீனவர்கள் சமூகமளிக்கவில்லை. எனவே அன்று அப் பிரச்சனைக்கு ஒரு தீர்ப்பை வழங்க முடியாமல் போனதால், இந்த பிரச்சினை முடிவுறும் வரை தமிழ் மீனவர்களுக்கு, கொந்தைப்பிட்டி கரையோரங்களில் தற்காலீகமாக தங்க அனுமதியளித்து, பொலிசார் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இங்கே பொலிசார் மூன்று உத்தரவுகளை பிறப்பிக்குமாறு நீதிபதியிடம் வேண்டினார்கள்.

1. தமிழ் மீனவர்களுக்கு எதிராக, முஸ்லிம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது என்பதாகும். அது சமாதானத்தை பாழடித்துவிடும் என்று காரணம் கூறினார்கள்.

2. மாவட்ட காரியதரிசியும் பிரதேச காரியதரிசியும் இணைந்து தமிழ் மீனவர்களுக்கு வேறு ஒரு இடத்தை தேடிக்கொடுக்க வேண்டும் என்பதாகும்.

3.வேறு ஒரு இடம் தமிழ் மீனவர்களுக்கு கிடைத்த உடனேயே, தமிழ் மீனவர்கள் கொந்தைப்பிட்டி கரையோர பிரதேசத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதாகும்.

இது குறித்த தீர்ப்பு வழங்கப்பட வேண்டிய நாளான, 2012 யூலை 18ம் திகதி இருதரப்பினரும் நீதிமன்றத்துக்கு பிரசன்னமாகும்படி கட்டளையிடப்பட்டது. இருப்பினும் யூலை 18ம் திகதி முஸ்லிம்தரப்பில் எவருமே நீதிமன்றத்துக்கு வரவில்லை. அவர்கள் சார்பாக ஒரு வழக்கறிஞர் மட்டும் பிரசன்னமாகியிருந்தார்.

அவர் 1996 இலக்கம் சரத்து 2 எனும் மீனவ மற்றும் நீர்பாசன சட்டத்தின்படி 44 வது பிரிவில், மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளுவதற்கு மீன்பிடிதுறை இயக்குனருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு, நீதிபதிக்கு அது சம்பந்தமான அதிகாரங்கள் இல்லை என்றும் வாதிட்டார். அத்துடன் ஏற்கனவே மீன்பிடி இயக்குனர், கொந்தைப்பிட்டி தமிழ் மீனவர்கள் வெளியேற வேண்டும் என்ற முடிவை பலமுறை எடுத்திருப்பதாகவும் கூறிய தகவல்களை முன்வைத்தார்.

இதன் அடிப்படையில் மன்னார் நீதிபதி, 3 மாதத்துக்குள், மன்னார் அரசாங்க அதிபரும், பிரதேசசபை காரியதரிசியும், விடத்தல் தீவிலிருந்து வந்து தங்கியிருக்கும் தமிழ் மீனவர்களை, வேறு ஒரு இடத்தை ஒழுங்கு செய்து வாழ வழி செய்து கொடுக்க வேண்டும் என்றும், அது நடைமுறைப்படுத்தப்படும் போது உடனடியாக தமிழ் மீனவர்கள், கொந்தைப்பிட்டி கரையோரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கட்டளையிட்டார்.

நீதிமன்றத்துக்குள் இப்படியான ஒரு தீர்ப்பை நீதிபதி, முஸ்லீம்களுக்கு சார்பாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, நீதிமன்றத்திற்கு வெளியே குழுமியிருந்த 400 பேர்வரையிலான முஸ்லிம் மீனவர்கள், இது குறித்து அறியாது, நீதிபதிக்கு எதிராக கோசங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர். கொந்தைப்பிட்டி பிரச்சனைகளுக்கு முன்பே, இந்த நீதிபதி தமக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப் போவதில்லை, இந்த நீதிபதி தமிழர்கள் சார்பாகவே தீர்ப்பு வழங்குவார் என்ற சந்தேகம் முஸ்லீம் தரப்புக்குள் இருந்தது.

இதற்கு இன்னோர் காரணம், 2012 யூன் மாதம் மன்னார் பிரதேசத்தின் அடம்பன் மற்றும் மிரிச்சுகட்டி முஸ்லிம் பள்ளிவாசல்களின் தலைவர்கள், நீதித்துறை கமிசனுக்கு இந்த நீதிபதி குறித்து மகஜர் ஒன்றை அனுப்பி, இந்த நீதிபதியை, இந்த பகுதியிலிருந்து இடமாற்றம் செய்யும்படி வேண்டியிருந்தார்கள். கொந்தைப்பிட்டி பிரச்சினை தொடர்பாக இந்த நீதிபதியால் வழங்கப்படும் முடிவு, முஸ்லிம்களுக்கு சார்பாக இருக்காது என்று நினைத்ததனாலேயே, முஸ்லிம்கள் நீதிமன்றத்துக்கு சமூகம் அளிக்கவில்லை. இருந்தாலும் யூலை மாதம் 18ம்திகதி முஸ்லீம் மக்கள் வெளியே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது, நீமன்றத்துக்குள் நீதிபதி முஸ்லீம்களுக்கு சார்பாகவே நீதி வழங்கிக் கொண்டிருந்தார்.

இது குறித்து எவரும் (முஸ்லீம் சட்டத்தரணி உட்பட), வெளியிலிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தெரிவிக்கவே இல்லை. முஸ்லீம் மக்களுக்கு சார்பான ஒரு நீதி வழங்கப்பட்டும் வெளியே நீண்டு தொடர்ந்த, ஆர்ப்பாட்டத்தை செவிமடுத்த நீதிபதி, இதை ஒரு எரிச்சல்தரும் நிகழ்வாகவே சிந்தித்திருப்பார் என எண்ணத் தோன்றுகின்றது. நீதிபதி இருமுறை, மன்னார் பொலிஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு பொலீசாரின் பலத்தை பிரயோகித்து ஆர்ப்பாட்டக்காரரை துரத்தும்படி கேட்டிருந்தார். அதன் பின்னரும், தொடர்ந்தும் நீதிமன்றத்தின் வெளியே ஆர்ப்பாட்டகாரர்கள் கோசமிட்டுக் கொண்டிருந்ததினால், நீதிபதி ஆசனத்திலிருந்து நேரடியாக இறங்கி தனது அங்கியுடன் வந்து, ஆர்ப்பாட்டகார்களை அடித்து துரத்துமாறு அல்லது கண்ணீர் புகை அடித்து அல்லது முழங்காலுக்கு கீழ் வெடி வைத்து என்றாலும் துரத்தமாறு பொலீசாருக்குக் கட்ளை இட்டார்.

இதுவரைக்கும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு, பாதைகளை அடைத்துக்கொண்ட ஆர்ப்பாட்டக்கார்கள், நீதிபதியின் இந்த கட்டளையை கேட்டதும் கோபத்துக்குள்ளாகி, ஆவேசமானார்கள். அதன்போதே பொலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பாவித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை நீதிமன்றம் நோக்கி எறியத் தொடங்கினார்கள். மூன்று பொலீஸ் அதிகாரிகள் பாரதூரமான காயங்களுக்கு உள்ளானார்கள். இன்னும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்கார்களில் 18 பேரை கைது செய்த பொலீசார், 13 பேரை தடுத்துவைத்து, 5 பேரை விடுதலை செய்தனர். அதற்கு அடுத்தநாள் யூலை 19ம் திகதி மன்னார் நீதிபதி பொஸிற்கு ஒரு புகாரைக் கொடுத்து, அமைச்சர் ரிச்சாட் பதியுதீனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தார். அவர் யூலை மாதம் 15ம்திகதி தன்னால் வழங்கப்பட்ட தீர்ப்பு பிழையானது என்று தன்னை அச்சுறுத்தியதாகவும் அந்த வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ் – முஸ்லீம் சமூகங்களிடையே மோதல் ஒன்று உருவானதற்கான காரணங்களாக நாம் இரு விடயங்களைக் காண முடிகிறது.
1. ஒரு முஸ்லீம் அமைச்சர் நீதிபதியை மிரட்டினார் என தமிழ் பகுதியும்,
2. சமாதானமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களை அடித்துதுரத்த உத்தரவிட்டார் என முஸ்லிம் பகுதியும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

இந்த பிரச்சனையை தீர்ப்பதென்றால் இரத்தத்துக்கு இரத்தம் என்ற அடிப்படையில் போராடக்கூடாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இவை எல்லாவற்றிக்கும் அடிப்படைக் காரணமாகத் தெரிவது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் மனதில் இருக்கும் ஒருவர் மீது ஒருவருக்குள்ள அவநம்பிக்கையாகும். இது இன்னமும் தொடருமானால், இவர்கள் ஒரு முடிவுக்கு வர மாட்டார்கள் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

(‘திவயின’வில் 30 07 2012ல் வெளியான கட்டுரையை தேசம்நெற்றுக்காக தமிழில் மொழிபெயர்த்தவர் அஜீவன்)

இது தொடர்பான வேறு பதிவுகள்

  • வேறு பதிவுகள் இல்லை!
உங்கள் கருத்து
  1. Ajith on August 6, 2012 9:07 am

    மன்னாரில் ஏற்பட்டுள்ள நிகழ்வின் செயற்பாடுகளை நாம் பார்க்கும்போது அதன் கடந்த காலத்தை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. அதாவது 1990களுக்கு நாம் செல்ல வேண்டும். 1990 களில் புலிகள் இயக்கம் வடக்கு பிரதேசத்தில் வாழ்ந்த, முஸ்லிம் மக்களை துரத்தியதோடு அல்லாமல் மன்னார் உப்புக்குளம் கிராமத்தில் இருந்த முஸ்லிம் மக்களையும் துரத்தினார்கள்.////

    இந்த கட்டுரையின் ஆரம்பம் கடந்த காலம் என 1990 களில் புலிகள் முஸ்லிம் மக்களை துரத்தியதுடன் தொடங்கியது என வரலாற்று தவறை மறைக்க முற்படுகிறது. இது தமிழ் -முஸ்லிம் மக்களின் பிரச்சினையாக சிதரிகபடுகிறது. இங்கு மூன்றாம் சக்தியான சிங்கள தரப்புக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என வர்ணிக்க முற்படுகிறது. இலங்கையின் சிறுபான்மை இனங்களான தமிழ் பேசும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதன் மூலமே வடகிழக்கு இணைந்த தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான உரிமையை தகர்க்க முடியும் என சிங்கள அரசுகள் நம்பின. இதன் ஒரு அங்கமாகவே முஸ்லிம் மக்களின் அரசியல் தலைமைகளை பாவிப்பதற்காக அவர்களுக்கு அமைச்சு பதவிகளை தாரளமாக வழங்கியதுடன் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை அவர்களை கொண்டு நசுக்கவும் தொடங்கினார்கள். இதன் ஒரு அங்கமாக தான் கல்வி அமைச்சராக ஒரு முஸ்லிம் அமைச்சரை வைத்து தரப்படுதல் முறையை அமுல்படுத்தியதும் வெளிவிவகார அமைச்சராக ஒரு முஸ்லிம் அமைச்சரையும் பாவித்து சர்வதேச அளவில் தமிழரின் போராடத்திற்கு எதிராக பிரச்சாரம் வைத்ததும், முஸ்லிம்களை தமது உளவாளிகளாக பாவித்து விடுதலை போராட உள்விவகாரங்களை அறியமுற்பட்டதும் ஆகும்.
    முஸ்லிம்கள் தமிழர் விடுதலை இயக்கங்களில் ஊடுருவி சிங்கள இராணுவத்திற்கு உளவு செய்ததன் விளைவே முஸ்லிம்களை விடுதலை புலிகள் வடக்கில் இருந்து வெளியேற்றியது ஆகும். முஸ்லிம்களின் அரசியல் சக்திகள் இதன் மூலம் அதிக நன்மையை பெற்றார்கள் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. அதுபோல் சிங்கள அரசுகளும் முஸ்லிம்களை பாவித்து அதிக நன்மையை பெற்றார்கள். இலங்கையில் முஸ்லிம் மக்களை பொறுத்தவரை தமிழர்களுடன் சேர்வதினால் எந்த அனுகூலங்களும் இல்லை. இலங்கையில் முஸ்லிம்களுக்கு இலங்கயில் முஸ்லிம் அடையாளம் மட்டுமே அவர்களின் அடையாளத்திற்கு முக்கியம், அவர்களுக்கு நிலம், மொழி என்பன முக்கியம் இல்லை. அதை எப்போதும் சந்தர்பத்திற்கு ஏற்ப பாவிக்க முடியும்.


  2. thuari on August 6, 2012 2:15 pm

    //அவர்களுக்கு நிலம், மொழி என்பன முக்கியம் இல்லை. அதை எப்போதும் சந்தர்பத்திற்கு ஏற்ப பாவிக்க முடியும்.//அஜீத்

    அருமையான ஏற்கக்கூடிய கருத்து. இது முஸ்லிம்மக்களிற்காக அல்லது நாடுகடந்த தமிழீழ அரசிற்கா சரியாக பொருந்துகின்றது?. துரை


  3. Ajith on August 6, 2012 3:46 pm

    அருமையான ஏற்கக்கூடிய கருத்து. இது முஸ்லிம்மக்களிற்காக அல்லது நாடுகடந்த தமிழீழ அரசிற்கா சரியாக பொருந்துகின்றது?. துரை/////

    யார் யார் சிங்கள அரசுகளுக்க உளவு செய்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் பொருந்தும்.


  4. ajeevan on August 6, 2012 5:00 pm

    An Interview with ‘Controversial’ Mannar Catholic Bishop Rayappu Joseph
    -http://dbsjeyaraj.com/dbsj/archives/9180

    An Interview with ‘Controversial’ Mannar Catholic Bishop Rayappu Joseph- 5 August 2012, 10:40 am- by Sulochana Ramiah Mohan

    You have been called the ‘Controversial Bishop’ and recently Minister of Industry and Commerce Rishad Bathiudeen claimed that you were the ‘cause’ for the clash in Mannar where Muslims attacked the magistrate and the Tamil fishermen in Uppukkulam? What is your explanation?

    UK’s High Commissioner John Rankin in discussion with Mannar Bishop Rev. Rayappu Joseph, Jul 12, 2012-pic: UK In Sri Lanka

    I am called a controversial Bishop because there are ‘controversial’ issues taking place and when I speak on those issues I turned to be ‘controversial’.

    If I speak out, I am an ‘outspoken Bishop’. If I care for the poor and fight for justice, I am an anti Sri Lankan, a LTTE or a separatist. So, what am I to do? I care less about these names, but I will keep voicing against injustice and fight against human rights violations.

    In Uppukkulam, Tamil fisher folk paid a rent to the Muslims to put up vaadiayas and fish in their area for a couple of years. In 2006, they went to the Fisheries Harbour Corporation and asked permission to fish in their area. It’s just a 200 meter stretch on the beach and the additional director fisheries, and the GA issued a recommendation letter in 2006 giving permission to fish in the requested 200m beach front sea. The beach belongs to the state. Anyone can ask permission and fish but the Uppukulam Muslims did not want them to fish there. They ‘claimed’ it’s their land.

    The Muslims complained to Minister Bathiudeen and he went to the district divisional secretary and the GA to tell the Tamil fishermen not to fish there. After a complaint to the police, they were given another place to fish.

    There too the Muslims of that area chased them. Tamils said they will wait till an area is given for fishing but nothing happened. After staying for some days, unable to starve they went fishing when the clash took place. What the judge said was to give 3 weeks and he will settle them. He was fair in his judgment. You cannot chase people off all of a sudden. And the beach stretch is owned by the state. Why cannot they let them fish there?

    The Muslims say their livelihood is ‘threatened’ and less fish because all are fishing in their areas?

    Muslims of that area are not fishermen. Most of them are businessmen. They don’t fish in big numbers. They have about six boats, I guess. They are seasonal fishermen looking for sea cucumber. You don’t find sea cucumber throughout the year. Only 200 meter stretch of the beach was used for fishing by the Tamils. Do you mean all the fish in the sea is in that 200 meter stretch? Why can’t they fish just outside the 200m sea area? The sea belongs to all and fish is everywhere.

    What did the Fisheries Harbour Corporation do?

    What can they do? It’s not ours or their problem. If the Muslims want to fight they should challenge the Fisheries Harbour Corporation. We are not the complainants. It’s the Muslims.

    The Tamil fishermen have their own village about 10km away. Why cannot they return to their place?

    Most of the 300 displaced families have settled here, living for the last 11 years. They have their own houses and land. How can they return?

    But Amuthan, a Sea Tiger of LTTE issued an agreement letter to the Muslims that these Tamil fishermen will leave Uppukulam as soon as peace prevails. Shouldn’t they go?

    Who is Amuthan? A government official ? His agreement letter carries no weight or has no power to change anything. It’s silly to talk about him now.

    So you think it was a fair judgment given by Judge A Judeson?

    Yes, he asked the GA and the GS how long it will take to settle the fisher folks and they replied they need about three weeks and his judgment was based on that.

    But the protestors reacted in an inhuman way. They had a placard tied on a street dog’s neck which slandered the judge. The Minister is the one who told the judge to change the judgment. Who is he to change the verdict? He also went to the Judiciary Service Commission and gave a letter requesting to transfer the judge. It’s a contempt of court. They should have submitted an appeal.

    The Minister claims he was not involved and takes no responsibility for his supporters’ actions. Should he?

    Well, without a backing of a minister such protests and riots cannot take place. It’s upon his order they get the ‘strength’ to commit such offences. When you know you are ‘safe’ you can do anything and that ‘safety’ only can be provided by a powerful minister like Rishad.

    Many say you are a close friend of the Judge. So can that be the reason why the Muslims think they are sidelined and you and the judge are ‘biased’ being Tamils?

    He is one of those people who I know well. I know the brigadiers, senior military personnel etc. I don’t talk on judiciary matters with the judge. I have no right to talk about what he does and what he should do. That’s disrespect for me and him as well.

    So why do you think Minister Bathiudeen is getting involved in such a ‘manner’?

    All because of the forthcoming elections and to bag votes. It’s not Tamil clashing with Muslims but ‘winning votes’.

    To win votes, out of the 650 government job approvals he gave only 19 jobs for the Tamils and two for Sinhalese. The rest is all for his ‘ardent supporters’.

    Then the Indian government handed over 165 engine boats each worth Rs 4 lakhs to the ministry of fisheries. The ministry had a list of names of those who deserve the boats but Minister Bathiudeen rejected the list and gave ‘his list’. He wanted 150 boats to be given to his supporters and the rest to others.

    I wrote to the fisheries ministry copying it to the Indian High Commission. Finally the IHC took back the boats. I don’t want such injustice. Either distribute the boats to all communities equally or nothing at all. Even land is not equally distributed. Minister Bathiudeen takes the advantage of collecting money and buying it for his people.

    When it comes to land, the minister gets involved and when I speak he once said I am like the Dambulla Monk who protested against the Mosque being there. Why should I keep quiet? I am a citizen of this country. He also goes about saying I am ‘in charge’ of all the land in Mannar. I am not asking for land. I want the officials to regularize and follow the procedures. Be fair in every action. It’s the Tamils who were worse affected.

    Have you helped the Muslims?

    Of course, there are several families who come to me. I have donated money for medical treatment too.

    What do you think of the LLRC report?

    I will not want people to die in vain. I have details about the deaths and the missing persons based on the government statistics. I doubt the total population in the census. I pointed out the total persons missing to UNCHR and according to my calculation based on the government statistics its 146, 679 people missing.

    So you have been quite a rebel and controversial figure in Mannar?

    I am only standing for the truth and justice. We are talking about human lives and there is no ‘adjustments’ in human lives.

    Are you a LTTE or an ardent supporter of their movement?

    I don’t know why I am called so. It’s their weakness to call me so. I never accepted their killings and atrocities. I have condemned their killing and received death threats. I never wanted a separate country. Not even in my dreams. As a priest and follower of Jesus Christ who was a victim of violence yet manifested the Truth, the Life and the Way, I am doing my duties.

    You were earlier criticized for taking part in ‘Mahaveer’ celebration during LTTE times? Do you think it was right to be there?

    I went to listen to the speeches they made. I also should be aware of their next move and be informed as to what is going on there. I never participated.

    So do you see a mess in the system?

    There is no room for truth. No justice upheld. Everywhere holes and pits in governance. If I ask government officials about land being cleared in the forest all of a sudden, he is unaware. So such systems are dangerous. People do not know what the officials are doing and officials do not know what the people are doing.

    Did you invite Minister Bathiudeen for ‘talks’?

    I have always told him that he is like my son and told him to stand by the truth. I don’t condemn the sinner but the sin. He is dividing the community. He bribes people to support him and offers fishing nets and boats. He has done that in a place called Arippu. These are misleading tactics. The poor and the needy will definitely fall to such ‘preys’.

    Do you think if you are not there, people of Mannar will suffer?

    Well, I am the Bishop and they trust me because there is no policy and cheating is everywhere. I have even told people not to bring ‘evil money’ as offerings to the church. I will not permit that.

    Did you receive death threats?

    I don’t keep a record of that. In that case even Jesus Christ would have taken steps to live more than 100 years. I care less about death threats. I am alive because I am the Bishop. If not, I would have been part of Sri Lankan history. What I do is not to create disharmony but to help Sri Lanka. I am not anti but to point out the mistakes and rectify them.

    But many faults are found in your approaches?

    That is why I am telling, point it out to me. I am ready to face them.

    How can in your view, reconciliation process should take place?

    Show accountability of the deaths during the war. Speak the truth and also implement the LLRC. That is the only way forward. Settle the old issues. If you don’t clarify them how can you start afresh?

    So you say this is a failed nation?

    They have failed in their basic understanding. First of all there is one Sri Lanka. But there is no one people. I am not a Sinhalese and a Sinhalese will not say he is a Tamil at any point of his life. In that context, it is one country many nations, nation referring to the people of different communities having their own language, script, traditions and culture. The right to self determination in one country is also important. These should be recognized.

    So isn’t that accepted by all Sri Lankans?

    It must be meaningful when you say self determination, practically applied. Not just saying ‘it’s out there and all are entitled for it’.

    I get numerous letters in Sinhala. Who will read it? It would take one month for me to read it. It makes no sense to me.

    Do you think the National Anthem should be sung in Tamil too?

    I don’t mind signing in any language. What matters is that does it carry any meaning to a Tamil who sings it? If you want, you can translate to any other languages too, right? A national anthem must be sung with feelings. If that purpose is lost, everything is lost.

    We are ready to sing it in any language you want but the purpose is lost. It’s aimless. As a citizen of this country should we sing aimlessly, not knowing what we are singing? The fundamental principle is we are people and we are self determining people in one country under one rule. We jointly should develop the nation. We have political aspirations in one country. The reality is, we belong to different communities.

    So what is your final say here?

    It is one country many nations (nations: people). It’s similar to India which has many nations in one country.

    So you advocate that?

    I don’t advocate, I am pointing out the reality. Let’s help each other. I serve all communities. If there is injustice to any I can speak for them. I don’t hold it for Tamils only.

    Former US Ambassador Patricia Butenis met you before she left the shores? Any major issues discussed?

    She has come forward to help me in many ways. We did have some political issues discussed. Through her, the Sewalanka Foundation came to look into the Mullikulam matter.

    What is happening in Mullikulam?

    Mullikulam has been occupied by the Navy and the people are living in the jungles where elephants walk about. Sewalanka is negotiating to find a place to settle the people living in the jungle.

    What is your dream?

    To see a true statesmen who would rise above party politics, who will work for the welfare of the people irrespective of who they are, who would risk life to serve people, and who would stand by the people. Till then this country will be in darkness.

    What do you want the government to work on immediately?

    The forthcoming election should be free and fair. Give room for all parties to participate equally in its campaign and remove enmity.

    Defence Secretary Gotabhaya Rajapaksa met you recently. Did he help you with some of your requests?

    He came to Mannar on July 21. I told about the presence of Navy in Mullikulam and the people are living under hardship in the forest without shelter, food and job. People of Mullikulam were compelled to reside in the middle of a jungle at Malankadu, without even basic facilities. He asked the officials what’s going on and they explained.

    The officials suggested they will cultivate the land and make these villagers work in the field. I don’t think that is a reasonable solution. Why should the Navy cultivate the villagers’ land? I am waiting for a favourable reply for Mullikulam villagers and settle them according to their will and nothing ‘forced’ on them. courtesy: LakbimaNews


  5. mohamed Nisthar on August 6, 2012 5:20 pm

    அன்புள்ள அஜீத்,

    மொழி அடையாளம் தான் உங்களுக்கு முக்கியம் என்றால் ஏன் அதை முஸ்லிம்களும் ஏற்கவேண்டும்?

    யார் யாருக்கு என்னென்ன முக்கியம் என்பது கூட அஜீத் போன்றோரின் விருப்பில்தான் தங்கி இருக்க வேண்டும் என்றால் இந்த உலகம் தாங்காது. உங்களுக்கு மொழி முக்கியம் அதை மதிக்கின்றோம். எமக்கு சமயம் முக்கியம் அதை மதிக்கும் படி கேட்கவில்லை. ஆனால் அதை பிழை என்று சொல்ல எந்த அதிகாரமும் உரிமையும் உங்களுக்கு இல்லை என்பதை மாத்திரம் தெரிந்து கொண்டால் எல்லாருக்கும் நல்லதல்லவா?


  6. சாந்தன் on August 6, 2012 8:49 pm

    //..ஆனால் அதை பிழை என்று சொல்ல எந்த அதிகாரமும் உரிமையும் உங்களுக்கு இல்லை என்பதை மாத்திரம் தெரிந்து கொண்டால் எல்லாருக்கும் நல்லதல்லவா?…//

    நிஸ்தார்,
    நான் விளங்கிக்கொண்டதன்படி அஜித் அதனை ‘பிழை’ என்று சொல்லவில்லை. அது முஸ்லிம்களுக்கு ‘முக்கியம் அல்ல’ எனத்தான் சொல்லி இருக்கிறார்.

    முக்கியம் இல்லை = பிழை??

    நான் படித்த தமிழ் இலக்கணம் அப்படிச் சொல்லவில்லை!!


  7. பல்லி on August 6, 2012 10:12 pm

    //யார் யார் சிங்கள அரசுகளுக்க உளவு செய்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் பொருந்தும்.//
    அப்படியானால் முன்னாள் புலிகளுக்கே இது சமர்பணம் என எடுத்து கொள்ளலாமா…??


  8. அபிமன்யு on August 6, 2012 11:31 pm

    ஒரு கேள்வி:-

    இலங்கை முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகள் என்ன?

    கடந்த காலம் தரும் பதில்:-

    இலங்கையில் எந்தக் கட்சி அரசாங்கம் அமைத்தாலும் —அது யு.என்.பி.யாக இருக்கலாம், எஸ்.எல்.எவ்.பி.யாக இருக்கலாம்– சிங்கள அதிகார வர்க்கத்துடன் சேர்ந்து முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் அமைச்சர் பதவிகள் எத்தனை பெற முடியுமோ அத்தனையையும் பெற வேண்டும். அப்பொழுதெல்லாம் அவர்கள் முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளைப் பற்றி எதுவும் பேசாதிருக்கலாம். வாய் திறக்காதிருக்கலாம்.– அப்பொழுது முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகள் என்று ஒன்றும் இல்லை. அதிகாரத்திலுள்ள சிங்களத் தலைவர்கள் தரும் சலுகைகள்தான் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளும், உரிமைகளும். ஆனால், மிக மிக முக்கியம் ஒன்று- தமிழர்களுக்கு ஏதாவது அரசியல் உரிமைகள் என்ற பேச்சு எழுந்தால், அவை எப்பொழுதாவது அளிக்கப்பட்டால், சுயாட்சி, பூர்வீக நிலம் என்ற கோட்பாடுகள் எழுப்பப்பட்டால், அப்பொழுதெல்லாம் முஸ்லிம்கள் தாங்கள் தனி இனம் எனக் கோரி, தவறாது அதில் தங்களின் பங்கு கேட்டுத் தீவிரமாகக் குரல் எழுப்ப வேண்டும். போராட வேண்டும்.


  9. thuari on August 7, 2012 7:51 am

    //மொழி அடையாளம் தான் உங்களுக்கு முக்கியம் என்றால் ஏன் அதை முஸ்லிம்களும் ஏற்கவேண்டும்?// மொகமெட் நிஸ்தார்
    மொழியை அடையாளப்படுத்துவதன் மூலமே தமிழ்மொழியால் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள், விடுதலை அமைப்புகள் விளையாட்டுக்கழகங்கள் வர்த்தக ஸ்தாபனங்கள் வாழ முடியும்.

    நிச்சயமாக தமிழ் மொழிபேசும் அனைவரும் நன்மைபெற முடியாது. த்மைழீழம் கிடைத்தால் தேயிலைதோட்டத் தொழிலாளி யாழ்ப்பாணத்தில் தேயிலை கொழுந்து பறிக்கமுடியாது. மலையகத்திலும் ஊதியம் உயராது.

    முஸ்லிம் சமூகம் இதனை ஏற்கனவே அறிந்த படியால் தமிழ் மொழி தாய்மொழியானலும் முஸ்லிம் சமய அடிப்படையில் தமது வாழ்வை அமைதுள்ளார்கள். பலநூற்றாண்டுகளிற்கு முன்பே தோன்றிய மாற்றுக்கருதளார். அதனால்தான் முதலில் நல்லூரில் இருந்து வெளியேற்ரப்பட்டார்கள். பின்னர் யாழிலிருந்து அடையோடு வேரறுக்கப்பட்டார்கள். புலிகளிற்கு எதிரான பல சமூகத்தை சேந்தவர்கள் இருந்தும் குறிப்பிட்ட ஒரு சமூகங்க்ழுடனும் வேரறுக்கும் முடிவை புலிகள் எடுக்கவில்லை.

    காரணம் மொழியால் ஒன்றுபட்டவர்கள் உலகை ஏமாற்ரத்தேவை. -துரை


  10. Ajith on August 7, 2012 8:13 am

    மொழி அடையாளம் தான் உங்களுக்கு முக்கியம் என்றால் ஏன் அதை முஸ்லிம்களும் ஏற்கவேண்டும்?

    யார் யாருக்கு என்னென்ன முக்கியம் என்பது கூட அஜீத் போன்றோரின் விருப்பில்தான் தங்கி இருக்க வேண்டும் என்றால் இந்த உலகம் தாங்காது. உங்களுக்கு மொழி முக்கியம் அதை மதிக்கின்றோம். எமக்கு சமயம் முக்கியம் அதை மதிக்கும் படி கேட்கவில்லை. ஆனால் அதை பிழை என்று சொல்ல எந்த அதிகாரமும் உரிமையும் உங்களுக்கு இல்லை என்பதை மாத்திரம் தெரிந்து கொண்டால் எல்லாருக்கும் நல்லதல்லவா?//

    அன்பின் நிஸ்தார்,
    எனது கருத்தை சொல்வது எனது உரிமை. அதுபோல் உங்கள் கருத்தை சொல்வது உங்கள் உரிமை. எது சரி எது பிழை என தீர்மானிப்பது வாசகர்கள். நீங்கள் ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம். முஸ்லிம்களுக்கு எது முக்கியம் எது முக்கியம் இல்லை என்பதை தீர்மானிப்பது முஸ்லிம்கள் தான். நாங்கள் அல்ல. அது உங்கள் உரிமையும் கூட. சாந்தன் கூறியது போல முஸ்லிம்கள் பிழை தமிழர்கள் சரி என்று நான் சொல்லவில்லை. சிங்கள அரசுடன் சேர்ந்து தமிழர்களுக்கு எதிராக உளவு செய்த, செய்கின்ற தமிழர்களும் இருக்கவே செய்கிறார்கள். நான் இங்கு சொல்ல வந்த முக்கியமான விடயம்

    1. முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமான உறவு விரிசல்கள் ஆரம்பம் இந்த கட்டுரையாளர் சொன்ன மாதிரி 1990 அல்ல.

    2. இங்கு தமிழர் முஸ்லிம் உறவில் முக்கிய காரணி சிங்கள அரசியல்வாதிகள், முஸ்லிம் அரசியல்வாதிகளை எப்படி பாவித்து விரிசல்களை உருவாகினர் என்பதை தமிழர்களாகிய நாம் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதும் ஆகும்.


  11. Rohan on August 7, 2012 9:14 am

    //த்மைழீழம் கிடைத்தால் தேயிலைதோட்டத் தொழிலாளி யாழ்ப்பாணத்தில் தேயிலை கொழுந்து பறிக்கமுடியாது. மலையகத்திலும் ஊதியம் உயராது.//

    ……………..என்பது போல சிலரால் நீள – அகலமாகச் சிந்திக்க முடிவதில்லை.

    மரமேறுபவன் தொடர்ந்தும் மரம் ஏற வேண்டும் – முடி வெட்டுபவன் தொடர்ந்து முடி வெட்ட வேண்டும் – செருப்புத் தைப்பவன் தொடர்ந்து செருப்பு தைக்க வேண்டும் என்ற வழிமுறையில் வந்தவர்கள் இவர்கள். வளரவே மாட்டார்களா???

    By the way, தமிழீழம் கிடைக்காமையால் ஊதிய உயர்வு பெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள்.


  12. பத்மநாதன் on August 7, 2012 10:08 am

    மரமேறுபவன் தொடர்ந்தும் மரம் ஏற வேண்டும் – முடி வெட்டுபவன் தொடர்ந்து முடி வெட்ட வேண்டும் – செருப்புத் தைப்பவன் தொடர்ந்து செருப்பு தைக்க வேண்டும் என்ற வழிமுறையில் வந்தவர்கள் இவர்கள். வளரவே மாட்டார்களா??? / Rohan

    மரமேறுபவன் யார்? முடிவெட்டுபவன் யார்? சாண்டாராராகவிருந்து வெள்ளாளர் ஆகியவர்களின் தொழிலே மரமேறுதல் என்று சரித்திரம் சொல்கின்றன. மன்னார் நானாட்டான் பகுதியில் இன்னும் வெள்ளாளர் மரமேறுகிரார்கள். நெடுந்தீவில் இப்பொழுது குறைந்துவிட்டது. தமிழ் நாட்டில் திரானியர் கோத்திரப் பிராமணர்கள் இன்றும் மரமேறிகள் என்றே அழைக்கப் படுகிறார்கள். சுவிசில் கோப்பாய் வெள்ளாளர்கள் சிலர் டிப்ளோமா பெற்று சலூன் நடாத்துகிறார்கள். இப்போ மரமேறுபவன் யார்? முடிவெட்டுபவன் யார் சொல்லுங்கள் பார்க்கலாம் ?


  13. Ajith on August 7, 2012 10:18 am

    //யார் யார் சிங்கள அரசுகளுக்க உளவு செய்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் பொருந்தும்.//
    அப்படியானால் முன்னாள் புலிகளுக்கே இது சமர்பணம் என எடுத்து கொள்ளலாமா…??///

    முன்னாள் புலிகள் உறுப்பினர்கள் என்றால் என்ன, கழக தோழர்கள் என்றால் என்ன சிங்கள இனவாத அரசியலுக்கு துணைபோன, துணைபோகும் எல்லோருக்கும் பொருந்தும்.


  14. thurai on August 7, 2012 11:15 am

    //மரமேறுபவன் தொடர்ந்தும் மரம் ஏற வேண்டும் – முடி வெட்டுபவன் தொடர்ந்து முடி வெட்ட வேண்டும் – செருப்புத் தைப்பவன் தொடர்ந்து செருப்பு தைக்க வேண்டும் என்ற வழிமுறையில் வந்தவர்கள் இவர்கள். வளரவே மாட்டார்களா???// றோகன்

    ஒரு ஒழுங்கையில் வசிக்கும் தமிழரே ஒற்றுமையுடன் வாழபழகாதவர்கள். இதில் சாதி பேதமென்றில்லை. அதனைவிட பல எண்ணிலடங்கா பாகுபாடுகள் உருமை மறுப்புக்கள். இவ்வாறான் ஒரு இனத்தைச்சேர்ந்த ஒருபகுதியினர், இலங்கத்தமிழர் என்று சொல்லி முள்ளிவாய்க்காலில் பலி கொடுத்து முடிந்து
    இப்போ உலகத்தமிழரிற்காக குரல் கொடுக்கின்றனராம். உலகம் முழுவதும் ஆயிரமைப்புகள். இவைகள் தமிழரிற்காகவா? அல்லது தமிழர் பெயயாரால் பிழைப்பு நடத்தவா?

    மரமேறுபவனும் முடி வெட்டுபவனும் தமிழரால் அடக்கப்பட்ட தமிழர்கள். இவர்களை அடக்கி ஒடுக்கியவர்களே திருந்த வேண்டியவ்ரக்ள். மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள். புலம்பெயர் தமிழரின் நிலைமைவேறு இலங்கையில் நிலைமைவேறு. யாழ்ப்பாண்த்தில் அரச சேவைக்கு போட்டி போடுகின்றார்கள். புலம்பெயர்நாட்டில் எத்தொழில் செய்தாலும் பணம் கிடைத்தால் போதும்.

    புலம்பெயர் நாடுகளின் செல்வங்களை அனுபவித்து வாழ்ந்து கொண்டு தமிழரின் உருமைக்காக இலங்கைத் தமிழரின் இயல்பு நிலை அறியாது குரல் கொடுப்போர் தானே கத்தி பாம்பிற்கு இரையாகும் தவளைகள்தான். -துரை


  15. பத்மநாதன் on August 7, 2012 12:25 pm

    அப்படி அல்ல துரை அவர்களே! உலகம் முழுவது பறந்து,பரந்து வாழும் புலம் பெயர் தமிழர்கள் அரசியல்,அறிவியல் அஞ்சாமை நேர்மை விவேகம் கொண்ட ஒரு கூட்டுத் தலைமையின் கீழ் ஒரு பொதுமையின் கீழ் கொண்டு வரப் பட வேண்டும்.தவறின் அந்த வரலாற்றுத் தவறை சரி செய்ய இயலாமல் போகும்.மற்றவர்களின் போராட்ட உணர்வுகளை அவர்கள் யாராக இருந்தாலும் நாம் கொச்சைப் படுத்துவதர்த்கு உரிமையில்லை.புலிகள் பாசிஸ்டுகள் என்றாலும் அவர்களுக்காக பலியாகிப் போனவர்களெல்லாம் அப்பாவித் தாய்மார்களின் பிள்ளைகளே!மேலே சொல்லப் பட்ட பாரிய பொறுப்புக்கள் தேசம் நெட் ஆசிரியர் வாசகர் எல்லோருக்கும் உண்டு.


  16. thuari on August 7, 2012 2:19 pm

    //அப்படி அல்ல துரை அவர்களே! உலகம் முழுவது பறந்து,பரந்து வாழும் புலம் பெயர் தமிழர்கள் அரசியல்,அறிவியல் அஞ்சாமை நேர்மை விவேகம் கொண்ட ஒரு கூட்டுத் தலைமையின் கீழ் ஒரு பொதுமையின் கீழ் கொண்டு வரப் பட வேண்டும்//
    //அவர்களுக்காக பலியாகிப் போனவர்களெல்லாம் அப்பாவித் தாய்மார்களின் பிள்ளைகளே!மேலே சொல்லப் பட்ட பாரிய பொறுப்புக்கள் தேசம் நெட் ஆசிரியர் வாசகர் எல்லோருக்கும் உண்டு.//பத்மநாதன்

    முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். புலம்பெயர் தமிழர்களின் இரண்டாவது தலைமுறையின் மனமாற்ரம் எவ்வாறு இருக்குமென்பதே கேள்வியாகவுள்ளது.-துரை


  17. T Sothilingam on August 7, 2012 2:30 pm

    பத்மநாதனுடன் பல விடயங்களில் ஒத்துப்போகிறேன். தோழர் விபி அவர்கள் குறிப்பிடுகின்றார் பனை மரங்கள் சிறிய மரங்களாக இருந்திருந்தால் வெள்ளாளர்கள் இன்று கள்ளு இறக்கும் தொழிலை தமது தொழில் என்றிருப்பார்கள் என.

    இதன் பின்னர் சந்தர்ப்பங்கள் பின்னர் சூழலாலும் சந்தர்ப்பங்களாலும் உருவான சமூகம் என்ற கூட்டு இயக்கத்தின் பண்புகளால் பல மாற்றங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே வந்துள்ளது. இன்று நாம் பார்க்கும் பெரிய சாதியினர் என்றுமே பெரிய சாதியினராக இருந்ததில்லை இனிமேலும் இருப்பார்கள் என்றில்லை.

    எமது வாழ்வுக்காலம் சிறியதாக இருப்பதால் எம்மால் நீண்ட பெரிய காலமாற்றங்களை உடனடியாக உணர முடிவதில்லை. ஆனால் எம்முன் உள்ள நிலைமைகளை வைத்து இது தான் பாரம்பரியம் என்ற முடிவுக்கு வருவதும் மற்றவர்களை வரவைப்பதுமான கல்வியும் உள்ளது.

    நாம் மனிதர்களின் நீண்டகால வரலாற்னை அறிந்து கொள்வதும் ஏற்ப்பட்ட மாற்றங்களை புரிந்து கொள்வதும் புதிய தலைமுறையினரை புரியவைப்பதும் அவசியமானதாகும்.

    இன்று ஜரோப்பாவில் எல்லோரும் எல்லா தொழில்களும் செய்கிறார்கள். சாதிபார்க்காமல் திருமணங்கள் பல நடைபெற்றுள்ளன. காரணம் வாழும் சமூகம் வேறு. புதிய சந்ததியினர், தமிழ் சமூகத்தில் சாதியம் பற்றிய தவறான கோட்பாடுகள் உள்ளன என்பதை உணர்ந்துள்ளனர், பிற்போக்குதனமான சாதீயத்தை ஜரோப்பிய புதிய தமிழ் சமூகத்தின் தலையில் இனிமேல் யாரும் கட்டிவிட முடியாது புதிய சந்ததியினர் சரியாக உணர்ந்து கொள்கிறார்கள் இனிமேல் இது சரியான பாதையிலேயே பயணிக்கும்.

    ஏற்றுக் கொள்ளாதவர்கள் புதிய பாணியிலான சமூகத்திற்கு வழிவிட்டு கொடுக்கும் நிலையே வளரும், இதன் பாதிப்பு இலங்கைக்கும் பரவும் என்ற நம்பிக்கையுண்டு.

    யாழ்ப்பாணத்தில் சாதிய முரண்பாடுகள் மீண்டும் தலை தூக்கியுள்ளது என்பார்கள் சிலர் ஆனால் எனது பயண அனுபவம் அப்படிஅல்ல. சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சந்தர்ப்பங்கள் பலவற்றில் மாற்ற முடியாத மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இவைகள் நிரந்தர மாற்றங்களின் ஆரம்பப்படிகள் எனலாம் உடனேயே இதை நிராகரித்து பலர் எழுதலாம். நீண்ட கால மாற்றத்துக்கான ஆரம்பப்படிகள் அமைக்கப்பட்டு விட்டன. இது ஈபிஆர்எல்எப் காலத்திலிருந்து ஈபிடிபி காலம் வரையிலும் குறிப்பிடப்பட்ட மாற்றங்கள் உருவாகியுள்ளது. இதை உடைத்து விடாமல் தொடர்ந்து காப்பாற்ற வேண்டியது எமது கடமையாகும்.
    மாற்றங்களை கடந்த 30 வருடங்களில் கண்டிருக்கிறோம். இது வரலாற்றுக்கு இட்டுச்செல்லும் படியாக நாம் செயற்படல் வேண்டும்.
    சமத்துவத்தின் அவசியத்தை புகட்டும் கல்விமுறைகள் சாதியத்தின் உண்மைகள் பற்றிய கல்வி புதிய கலாச்சாரங்களின் வெற்றிகள் உலகியல் மாற்றங்களின் உண்மைத் தன்மைகளை உணரவைக்க வேண்டும். சமத்துவத்துக்கு ஊறுவிளைவிக்கும் காரணிகளுக்கு எததிரான சட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும்.

    இந்த தலையங்கத்திற்கு கீழு தொடர்ந்தும் வேறுவிடயங்களை தொடராமல் வேறு தலைப்பில் இவற்றை முன்வையுங்கள் என்பது எனது கருத்து, உங்கள் கருத்துக்களை கட்டுரையாக வையுங்கள்.


  18. T Sothilingam on August 7, 2012 5:42 pm

    இலங்கையின் வரலாற்றில் சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள பத்திரிகையாளர்களும், இன்னும் இலங்கைப் பிரச்சினைக்கு- தமிழர்களும் இந்தியாவும் பின்னர் புலிகள் இப்போ ரிஎன்ஏ- என்ற பிரச்சாரங்களையே செய்கின்றார்கள். உரிமைப்போராட்டம் சாத்வீக முறையில் செய்யப்பட்டபோது பெரும்பான்மையினரால் புரிந்து கொள்ளப்படாமல்; எப்போதும் சிறுபான்மையினரை குறை கூறி அவர்களுக்கு எதிராக வன்முறைகளை; இனக்கலவரங்களை ஏவிவிட்டு தாம் ஆட்சிக்கு வருவதும் பின்னர் தமக்கும் இவ்வன்முறைகளுக்கும் சம்பந்தம் இல்லாதது போல் சிங்கள மக்களுக்கு எடுத்துக் காட்டுவதேயாகும். இதன் உச்சக்கட்டமே இன்று இலங்கை அரசு சிறுக சிறுக ஒரு இறுக்கமான நிலைமைகளுக்குள் தன்னை இட்டுச் சென்றுள்ளமையாகும்.

    இப்படியான நிலைப்பாட்டை அரசும் அதன் அமைச்சர்கள் அதிலும் ரிச்சாட் போன்றவர்கள் செய்து கொண்டே இருக்கிறார்கள். சிங்கள மக்களை ஏமாற்றுவது போன்று புலிகளையும் தமிழர்களையும் காரணம் காட்டி முஸ்லீம்களையும் ஏமாற்றுகின்றனர்.

    இந்த சம்பவங்களில் ரிச்சாட் முக்கியமானவாராக உள்ளார். முஸ்லீம் மக்களின் விடயங்களை தான் அரசில் உள்ள அமைச்சராக செயற்படுவதை விடுத்து, புலிகளுக்கு எதிரான பிரச்சாரமாக, புலிகள் இல்லாத காலத்தில் செய்வதன் நோக்கம் என்ன? எப்படியாயினும் இந்த மாதிரியான நிகழ்வுகளால் அரசு ஒரு இறுக்கமான நிலையையே அடையும் .

    போர் முடிவடைந்து 3 வருடங்கள் ஆகிவிட்டன. இன்று முஸ்லிம்கள் அவர்களது இடங்களுக்கு போய் மீள குடியேற்றாமல் இழுத்தடிப்பது அரசு தவிர வேறு யாருமல்ல. புலிகளை குறை சொல்லிக்கொண்டு ஒன்றும் செய்து விடாமல் இருக்கவே புலிகள் என்று தொடங்கின்றார்கள். புலிகள் அமைப்பு இன்று இல்லை. ஏன் என்ன காரணங்களுக்காக புலிகள் மீதான பிரச்சாரங்கள் முடுக்கி விடப்படுகின்றன.

    புலிகள் இல்லாது போனபின்பு மக்களின் பிரச்சினைகளை மூடிமறைக்க ஏதோ காரணங்களை தேடுகிறார்கள். இன்று இலங்கையில் பொருளாதாரப் பிரச்சினை மிகமோசமான நிலையிலும் கடன்பழு அதிகரித்தபடியே செல்கிறது. பொருளாதாரப் பிரச்சினை என்பது வெளிப்படையானது. அரசு கடந்தகாலங்களில் கூறிய பதில்கள் போன்று தொடர்ந்து கூற முடியாது அல்லது. அரசு ஆட்சி மாற வேண்டியிருக்கும் அரசு தனது பொறுப்பலிருந்து புலிகள் என்று கூறி தவறு விடுகின்றது.

    அரசு தனது தவறுகளுக்குள் தானே இன்று விழுந்து நிற்கிறது. பார்வைக்கு அரசு ஏதோ தப்பிவிடும் என்று உடனடியாக கூறினாலும் நீண்ட போக்கில் அரசு தான் அடங்கியே தீர வேண்டியள்ளது, இலங்கையில் இன்று முஸ்லீம்களுக்கு எதிரான அடாவடித்தனங்களை முடுக்கி விடுகிறார்கள். அரசு தனது தவறுகள் இயலாமையை சிறுபான்மையினர் மீது பழி போடவே இவ்வாறான காரியங்களைச் செய்கிறார்கள்.

    இல்லாவிட்டால் பாதுகாப்பு போட்டு இஸ்லாமியர்களை சமய தொழுகை செய்ய அனுமதிப்பதற்குப் பதிலாக பாதுகாப்பு போட்டு பள்ளியை மூடிவைப்பது ஏன்? பள்ளியை மூட வேண்டும் என்று உடைக்க வந்தவர்களின் கொள்கைகளை அல்லவா அரசு பொலீஸ் பாதுகாப்புடன் செய்துள்ளது.

    புலிகள் தமிழ், முஸ்லிம் மக்களை மன்னார் பகுதியிலிருந்து வெளியேற்றியது உண்மை. இது ஆயுதங்களை கொண்டுவர என்பது அறியாமையாகும். புலிகள் இந்திய பகுதியிலிருந்து 1990 களிலிருந்தே ஆயுதங்களை கொண்டு வருவதில்லை. புலிகள் ஆயுதங்களை சர்வதேச கடற்பரப்பலிருந்து கிழக்கு- முல்லைத்தீவு கடலுக்குதான் கொண்டு வந்தார்கள்.
    கிழக்கில் இலங்கை கடற்படை பலமாக இருந்ததாக கட்டுரையாளர் கூறுகிறார். பல் நெடுங்காலமாக இலங்கை கடற்படை முல்லைதீவு கடற்பரப்புக்குள் போகமுடியாமல் இருந்ததும், புலிகள் சர்வதேச கடலிருந்து சர்வதேச ஆயுத விற்பனையாளர்களின் உதவியுடன் தமது தளபாடங்களை முல்லைதீவுக்கே கொண்டு வந்தனர் என்பது தெரியாமல் போனது ஏன்?

    புலிகள் கிழக்கில் தளம்கொண்டு தென்கிழக்காசிய நாடுகளுக்கு தொடர்ச்சியான கால அட்வணை கொண்ட போக்குவரத்துக்களை மேற்கொண்டிருந்தனர் என்பது கட்டுரையாளருக்கும் சிங்கள மக்களுக்கும் தெரியாதா?

    புலிகள் நீர் கொழும்புக்கும் அம்பாறைக்கும் கடல்வழியாகவே சென்று வந்திருந்தனர் என்பது கட்டுரையாளருக்கு தெரிந்திருக்கவில்லை. பொதுவாக சிங்கள மக்களின் கணிப்பு கிழக்கு கடல் முழுமையான பாதுகாப்பான பிரதேசம் என்பதேயாகும்.

    கட்டுரையாளர் இலங்கை கடற்படை கிழக்கில் பலமாகவே இருந்துள்ளது என்ற கற்பனையில் இருக்கிறார். இது பொதுவான சிங்கள மக்களின் கற்பனையில் இதுவும் ஒன்று. சிங்கள ஊடகங்கள் பல உண்மைகளை சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்த முனையவில்லை.

    இந்தியாதான் தமிழர்களுக்கு ஆயுதம் கொடுத்தது, இந்தியாதான் இலங்கையில் பிரச்சினைகளை ஆரம்பித்தது என்ற மாயையை சிங்கள மக்களிடம் நீண்ட காலமாக விதைத்தார்கள். ஆனால் இந்தியா ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் புலிகளுக்கு ஆயுதங்கள் எதுவுமே கொடுக்கவில்லை. புலம்பெயர் மக்களின் பணத்தில் புலிகள் சர்வதேச நாடுகளின் சந்தைகளிலேயே ஆயுதங்கள் வாங்கினர். இது தொடர்பாக பல நாடுகளில் பல வழக்குகள் உள்ளன என்பது கட்டுரையாளருக்கு தெரியாது போலும்.

    இந்திய கடற்பகுதியில் இந்திய மீனவர்களின் வரவு என்பது புலிகளின் காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருந்ததில்லை என்பதை வடக்கு மீனவர்கள் அரசுக்கும் தோழருக்கும் கூறிய விடயங்கள் பல ஊடகங்களில் வந்திருந்தன. புலிகளின் அழிவுக்கு பின்னரே இந்திய மீனவர்களின் வடக்கு பிரதேச ஆக்கிரமிப்பு என்பது யாவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் கட்டுரையாளர் புலிகள் காலத்தில் இந்திய மீனவர்களின் வருகையை மிகவும் பாரிய அளவிலிருந்தாக சித்தரிக்கிறார், இது உண்மையல்ல.

    கட்டுரையாளர் இந்தியா மீது ஒரு அழுத்தத்தை வைத்திருக்கவே முயல்கிறார் என்பது எனது கருத்து.

    கட்டுரையாளர் புலிகள் மீது பழியை போட்டு அரசு தப்பிவிடுவதை குறித்து காட்டி, அரசு மக்களின் மீள் குடியேற்றத்தில் உண்மையுடன் செயற்படல் வேண்டும் என்பதை, அரசுக்கு அழுத்தம் கொடுக்க தவறிவிட்டார். ரிச்சாட் புலிகளை காட்டி மக்களை ஏமாற்றுவதையும், புலிகளின் உதயம் வேண்டாம் என்று பூச்சாண்டி காட்டுவதையும் விடுத்து, ரிச்சாட் முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றத்தை இன்றே செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்த கட்டுரையாளர், தவறிவிட்டார்.

    இவற்றைவிட தமிழ் முஸ்லிம்களின் பிரச்சினையாகவே கட்டுரையாளர் கட்டுரையை தந்துள்ளார். இது அரசின் பிரச்சினை, புலிகளின் அழிவின் பின்னர் புலிகளின் காலத்தில் ஏற்பட்ட சம்பவங்களுக்கு கூட இன்று அரசே பொறுப்பு. 3 வருடங்களில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வு, பிள்ளைகளின் கல்வி போன்ற காரணங்களை எடுத்துக் காட்டி அரசுக்கு அழுத்தம் கொடுக்க கட்டுரையாளர் தவறிவிட்டார். இன்னோர் வகையில் அரசை காப்பாற்றவே முயற்சிக்கிறார், இன்னோர் வகையில் தமிழ், முஸ்லிம் மக்களின் பகைகள் என்று முடிவு தருகிறார்.
    தமிழ் மக்களுக்கெதிரான சிங்கள பெளத்த மேலாதிக்க அரசின் வரலாற்று காரணங்களே இவை யாவற்றுக்கும் பொறுப்பு என்பதை கட்டுரையாளர் சுட்டிக்காட்ட தவறி விட்டார்

    கருத்தாளர்களும் புலி பூச்சாண்டி விடுவதைவிட, இல்லாமல் போன புலிகளின் விடத்தில் காலத்தை ஓட்டுவதைவிட, இன்றுள்ள அரசு செய்ய வேண்டியதை செய்விக்க இயங்க வேண்டும் என்பது எனது கருத்தாகும். அரசு தனது பிடியிலிருந்து தளர்ந்து கொண்டு போவதை நாம் உணர்ந்து அரசை அரசியல் தீர்வுக்கு வர அழுத்த வேண்டும்.
    sothi@btinternet.com


  19. Rohan on August 7, 2012 9:44 pm

    //முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். புலம்பெயர் தமிழர்களின் இரண்டாவது தலைமுறையின் மனமாற்ரம் எவ்வாறு இருக்குமென்பதே கேள்வியாகவுள்ளது.-துரை//

    ஓமோம்… ஆனால் தோட்டத் தொழில் செய்யும் இந்திய வம்சாவளி மக்கள் தொடர்ந்து கூலிகளாகவே இருந்து மற்றவர்களைத் துரை – துரைசாணி என்று கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டிருப்பதில் துரைக்கு மிக்க உடன்பாடு இருக்கிறது!!!


  20. சாந்தன் on August 7, 2012 11:39 pm

    //…முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். புலம்பெயர் தமிழர்களின் இரண்டாவது தலைமுறையின் மனமாற்ரம் எவ்வாறு இருக்குமென்பதே கேள்வியாகவுள்ளது. -துரை//

    ஆனால் இங்கே ஒருவர் தமிழரின் காணிகளை ஸ்ரீலங்கா ராணுவம் அடாத்தாகப் பறித்து சிங்களவருக்கு கொடுப்பது சாதிய ஒழிப்பு நடவடிக்கை எனச் சொல்வதனை இரண்டாவது தலைமுறை எப்படி எடுத்துக்கொள்ளும் என்பதனை விளக்கிச் சொன்னால் வசதியாக இருக்கும்!


  21. சாந்தன் on August 7, 2012 11:46 pm

    //…போர் முடிவடைந்து 3 வருடங்கள் ஆகிவிட்டன. இன்று முஸ்லிம்கள் அவர்களது இடங்களுக்கு போய் மீள குடியேற்றாமல் இழுத்தடிப்பது அரசு தவிர வேறு யாருமல்ல. …//
    என்ன இப்படிச் சொல்லிட்டிங்க சோதி?
    லண்டனில் உங்களோடு இணக்க அரசியலில் ஈடுபட்ட மாற்றுக்கருத்து மாணிக்கங்கள், புலம்பெயர் ஜனநாயக மனித உரிமைச் சட்டத்தரணி போன்றவர்கள் குடியேற்ரம் நடக்க தமிழன் மலசலகூடம் கட்டிக் கொடுக்கிறானில்லை எண்டெல்லோ சொல்லினம்! நீங்கள் என்னடா எண்டால்….


  22. thuari on August 8, 2012 6:04 am

    //ஓமோம்… ஆனால் தோட்டத் தொழில் செய்யும் இந்திய வம்சாவளி மக்கள் தொடர்ந்து கூலிகளாகவே இருந்து மற்றவர்களைத் துரை //றோகன்

    பகைமையையூட்டி, உசுப்பேத்தி அர்சியல் லாபம் தேடுவோர் வாழ்க்கை நீடிக்காது. -துரை


  23. Ajith on August 8, 2012 8:54 am

    பகைமையையூட்டி, உசுப்பேத்தி அர்சியல் லாபம் தேடுவோர் வாழ்க்கை நீடிக்காது. -துரை///
    இந்த உண்மை உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் விளங்கினால் சரி. தமிழர்கள் மத்தியில் சாதி பிரச்சினை, சீதன பிரச்சினை போன்ற தீர்க்கமுடியாத பிரச்சினைகள் ஆயிரம் உண்டு. நண்பன் சோதிலிங்கம் கூறியபடி தற்போது மக்கள் மத்தியில் ஒரு மனமாற்றம் ஏற்பட்டு உள்ளது என்பதும் அதன் தன்மை படிப்படியாக குறைந்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. தமிழ் உரிமைக்கான போராட்டத்தில் எந்த இயக்கமும் சாதி ரீதியான பாகுபாடினை வைத்து அரசியல் செய்யவில்லை. இங்கு கருத்து கூறும் எந்த நபரும் இந்த சாதி உயர்ந்தது மற்றது எல்லாம் தாழ்ந்தது என்று விவாதம் செய்யவில்லை. எதோ நீங்கள் தான் சாதிபிரசினையில் அக்கறை உள்ளவர் போலவும் தமிழர் உரிமைக்காக போராடுபவர் எல்லோரும் உயர்ந்த சாதியினர் போலவும் காட்டி கொள்வது ஒரு அரசியல் லாபம் தேடும் முயற்சியே.


  24. Rohan on August 8, 2012 9:50 am

    // Rohan – ஓமோம்… ஆனால் தோட்டத் தொழில் செய்யும் இந்திய வம்சாவளி மக்கள் தொடர்ந்து கூலிகளாகவே இருந்து மற்றவர்களைத் துரை – துரைசாணி என்று கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டிருப்பதில் துரைக்கு மிக்க உடன்பாடு இருக்கிறது!!!//

    //துரை – பகைமையையூட்டி, உசுப்பேத்தி அர்சியல் லாபம் தேடுவோர் வாழ்க்கை நீடிக்காது//

    துரை என்ன தான் சொல்லி கதை திருப்பினாலும் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் தேயிலைதோட்டத் தொழிலாளியாக அதையே செய்ய வேண்டும் என்று சொன்னதை மறைக்க முடியாது. தாழ்த்தப்பட்ட சமூகத் தமிழர்கள் 500 பேர் நிரந்தரமாக கனடா போக யாராவது ஏற்பாடு செய்தால், ‘அங்கு போய் பனை ஏற முடியுமா’ என்று கேட்கும் பெரும் சாதிக்காரனுக்கும் துரைக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பர் என்பதால் இந்த விடயம் பற்றி இத்தலைப்பின் கீழ் நான் ஏதும் பேசாது விட்டுவிடுகிறேன்.

    //பத்மநாதன் – மன்னார் நானாட்டான் பகுதியில் இன்னும் வெள்ளாளர் மரமேறுகிரார்கள். நெடுந்தீவில் இப்பொழுது குறைந்துவிட்டது. தமிழ் நாட்டில் திரானியர் கோத்திரப் பிராமணர்கள் இன்றும் மரமேறிகள் என்றே அழைக்கப் படுகிறார்கள். சுவிசில் கோப்பாய் வெள்ளாளர்கள் சிலர் டிப்ளோமா பெற்று சலூன் நடாத்துகிறார்கள். இப்போ மரமேறுபவன் யார்? முடிவெட்டுபவன் யார் சொல்லுங்கள் பார்க்கலாம் ?//

    விவாதம் அது அல்லவே. தாமாக அவர்கள் இத் தொழில்களை எடுத்துச் செய்கிறார்கள். இந்தியாவில் குலக்கல்வி முறை கொண்டுவர ராஜாஜி போன்றோர் முனைந்தது போல ஒரு தொழில் செய்தவர்கள் அதையே செய்ய வேண்டும் என்று கேட்பது தான் எனக்குப் பிரச்சனையாகத் தெரிகிறது. அதில் வேடிக்கை என்னவென்றால், பிராமணனின் பிள்ளை புரோகிதர் ஆகப் போகாதாம் – வக்கீல், மருத்துவர், பொறியியலாள என்று தான் போகுமாம்.

    ஒரு நண்பர் சொன்ன பழைய தகவலுடன் முடிக்கிறேன்… அவருக்குத் தெரிந்த ஒரு ‘சாதிக்காரர்’ தமது பின்னணியை உதறிவிட்டு மீன் வியாபாரம் செய்ய முன்வந்தாராம். ஒரு carஇல் கடற்கரைக்குப் போய் மீன் வாங்கி வந்து ஒரு ஆளும் வைத்து சந்தையில் மீன் நிறுத்து விற்றாராம். ஆனால், அவரது மகள் ‘மீன்காரன் மகள்’ என்று கேலி செய்யப்பட்டாராம். அவர் காலை நேரத்தில் யாரும் வாடகைக்கு அமர்த்தாத car தான் பிடித்தாலும், அந்தக் car மீன் நெடி அடிக்காத போதிலும் வேறு யாரும் அந்தக் carஐ வாடகைக்கு அமர்த்த மறுத்தனராம். மீன் வியாபாரம விடப்பட்டது. சகாய விலையில் நல்ல மீன் வாங்கியவர்கள் தான் நட்டப்பட்டனர்! புலம் பெயர்ந்த இடத்தில் வடை வாங்கி வந்துவிட்டு எந்தச் சாதிக்காரன் பிடித்த வடையோ என்று மறுகுபவர்களும் இல்லாமல் இல்லை!


  25. பல்லி on August 8, 2012 11:21 am

    //புலம்பெயர் ஜனநாயக மனித உரிமைச் சட்டத்தரணி போன்றவர்கள் //

    இதுகூட நல்லா இருக்கே!!!


  26. information on August 8, 2012 11:39 am

    மன்னார் கோந்தைப் பிட்டியும் கோணலாகும் இன நல்லுறவும் – நடராஜா குருபரன்- 08 ஆகஸ்ட் 2012

    மன்னாரில் அண்மையில் தமிழ் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களைச்சார்ந்த இரு இன ஒரே தொழிலைபுரியும் குழுக்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டைப் பொறுப்புணர்வுடன் கையாளாது அதனைத் தமது சொந்த அரசியல் இருப்பிற்காக இரண்டு இனங்களுக்கிடையிலான மோதலாக மாற்றமுயன்றமையை அதில் சம்பந்தப்பட்டவர்களின் அதில் அரசியல் குளிர்காயதலை கேள்விக்கு உள்ளாக்கியதால் என்னைப் பல இஸ்லாமிய சகோதரர்கள் திட்டித் தீர்த்தார்கள். சில நண்பர்கள் நொந்து கொண்டார்கள். இந்த விடயத்தை நன்கு விளங்கிக் கொண்டவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

    எனினும் நான் எழுதிய ரிஸாத் பதியுதீனும் புலிகளின் ஆத்மசாந்தியும் என்ற கட்டுரை பல விவாதங்களையும் கேள்விகளையும் என்னை நோக்கிய சவால்களையும் உருவாக்கியிருப்பதால் இந்தக் கட்டுரையையும் எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

    தமக்கு எதிராக வரும் அழுத்தங்களைத் திசை திருப்ப தமது முகவர்கள் மூலம் சிறுபான்மைத் தேசிய இனங்களை மோதவிட்டு தம்மை தற்காத்துக் கொள்ளும் அரசியற் காய் நகர்த்தல்களை ஜேஆர் ஜெயவர்தன தனது ஆட்சிகாலத்தில் கட்சிதமாக மேற்கொண்டார்.

    இனவெறி அற்ற சனநாயக சிந்தனையுள்ள மனித உரிமைகளை மதிக்கிற அரசியல் தலைவர்கள் இனங்களுக்கிடையில் பிரச்சனை ஏற்படமுன்னரேயே அவற்றை உணர்ந்து அவற்றை எப்படி சரியாகக் கையாள்வதென்று யோசிப்பார்கள். மாறாக குறுகிய சிந்தனை கொண்டவர்கள் அரசியல் லாபங்களுக்காக அற்ப சொற்ப சலுகைகளுக்காக ஒடுக்கப்படும் இனங்களை எவ்வாறு பிரித்து அடக்கியாளலாம் என்று யோசித்து அதற்கு துணை போகக்கூடிய சிறுபான்மையின அரசியல்வாதிகளை விலைக்குவாங்கி தமது அதிகாரதைப்பேண அவர்களைப் பயன் படுத்திக் கொள்வார்கள். ஒடுக்கப்படும் இனங்கள் ஒன்று சேர்வதன் மூலம் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியாதபடி பிளவுகளை உருவாக்குவார்கள்

    அந்த வகையில் மன்னாரில் ஏற்பட்ட இந்த நிலமையினை அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் என்ற வகையில் இரண்டு சிறுபான்மை இனங்களில் வாக்குகள் மூலமாகவே பாராளுமன்றிற்கு தெரிவுசெய்யப்பட்டவர் என்ற வகையில் ரிட்சட் பதியுதீன் நிதானமுடன் கையாண்டு இருந்தால் இன நல்லுறவை சிறப்பாக ஏற்படுத்தியிருக்கமுடியும்.

    ஆனால் உண்மையில் நீதிமன்றமும் அரச அதிகாரிகளும் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர என்ன முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதனை தெரிந்து கொள்ளாமலே உணர்ச்சிவசப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் நீதிமன்ற அவமதிப்புவரை சென்றிருக்கிறது. இந்த நிலமைகள் குறித்து மன்னார் மக்கள் சிலருடன் இடம்பெற்ற உரையாடல்கள் இவை.

    உண்மையிலேயே பிரச்சனை என்னவென்றால், 13 ஆம் திகதி அன்று, கோந்தைப்பிட்டியிலுள்ள தோட்டவெளி ஆட்களுக்கும். முஸ்லிம் ஆட்களுக்கும் இடையில்….. சின்னப்பிரச்சினை ஏற்பட்டு விட்டது. காலையில் தொழிலுக்கு போன தோட்டவெளி மக்களை தொழிலுக்கு போக வேணாம் எண்டு உப்புக்குள மக்கள் சொல்லியிருக்கிறார்கள்.

    உண்மையிலேயே இவங்கட வாதம் எல்லாம் ஆதாரமற்றது. என்னனெண்டு சொன்னா.. அந்த காணி எல்லாம் அதாவது மீன்பிடிக்க போடுவங்கதானே வாடி… அந்த வாடி போட்டிருக்கிற இடம் உண்மையிலேயே, ஹபார் கோப்ரேஷனுக்கு உரியது. (கப்பல் கூட்டுத்தாபனத்திற்கு உரியது)

    அப்ப இவங்கள் 2002 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து மன்னாருக்கு வந்த போது .., ஆயர் அவர்கள் கிட்டத்தட்ட 10 அல்லது 20 பேர்ச்சஸ் காணியை தோட்ட வெளி என்றொரு இடமிருக்கு அங்க கொடுத்து, அங்கு நிரந்தரமாக வீடு கட்டி இருக்க அனுமதித்திருந்தார். . கிட்டத்தட்ட 2002 இல் இருந்து அந்த இடத்தில் இருந்து அவர்கள் தொழில் செய்கிறாங்கள்.

    2006 ஆம் ஆண்டு இவர்கள் ஹாபர் கோப்ரேஷனுக்கு ((கப்பல் கூட்டுத்தாபனத்திற்கு) தங்களுக்கு மீன்பிடி இறங்குதுறை இல்லை என்று கோரிக்கை விடுக்கின்றனர். மீன்பிடி உதவி ஆணையாளரும், இவர்களுக்கு நல்ல இடத்தை வழங்குமாறு சொல்லியிருக்கிறார். அப்ப அவங்க வந்து தற்காலிகமாகப் பாஸ் கொடுத்திருக்காங்கள். படகு, இயந்திரம் எல்லாம் வைக்கலாம் என்றும் அவர்கள் அனுமதி கொடுத்திருங்காங்கள். 2006 ஆம் ஆண்டிலிருந்து ஹாபர் கோப்ரரேஷன் லீகலாக இவர்களுக்கு பாஸ் ஒன்று கொடுத்திருக்கு. இந்த நிலையில் அங்கு உப்புகுளத்தை சேர்ந்தவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று படகுகளே இருக்கின்றன. தோட்டவெளி ஆட்கள் படகுகள், வாடிகள் வைத்திருக்கும், இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவிலேயே உப்புகுளம் மீனவர்களின் படகுகள் மற்றும் வாடிகள் உள்ளன. இதனால் உப்புக்குளம் மீனவர்களுக்கு, தோட்டவெளி மீனவர்கள் படகுகளை தோட்டவெளியில் நிறுத்தி வைப்பதால், எந்த இடையூறும் இல்லை.

    எனினும் எதிர்காலத்தில் தமக்கு இடம் வேண்டும் என்பதற்காக உப்புக்குளம் மீனவர்கள் பிரச்சினை ஒன்றை ஏற்படுத்தினர்.

    தோட்டவெளி மக்களிடன் அவர்கள் பயன்படுத்தும் இடம் தொடர்பாக அவங்களிடம் நிலவரைபட திட்டம் உட்பட அனைத்தும் இருக்கின்றன. தோட்டவெளி மீனவர்களுக்கு அந்த இடத்தைப்பயன் படுத்துவதற்குரிய சகல அதிகாரங்களும் உள்ளன. அவர்களிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. இதனால் உப்புக்குளம் மீனவர்கள் அந்த இடம் தங்களுடையது என உரிமை பாராட்ட இடமில்லை.

    என்றாலும் இதை வைத்து இனப்பிரச்சினையை கிளப்ப முயற்சிப்பதால் தமக்கு நல்ல இடம் கொடுத்தால் தாம் அங்கிருந்து வெளியேறிச் செல்வதாக தோட்டவெளி மீனவர்கள் தெரிவித்தனர். தீவில் நல்ல இடம் கொடுத்தால் தாம் போவதாகவும் எதற்கு சண்டடை போட வேண்டும் என தோட்டவெளி மக்கள் தெரிவித்தனர். இதற்கு இடையில் 13 ஆம் திகதி அங்கு சென்ற உப்புக்குளம் முஸ்லிம்கள் வாடிகளை உடைத்து விட்டனர். சுமார் 17 வாடிகளை உடைத்து விட்டனர். அதற்குள் இருந்த அந்தோணியார் சிலையை உடைத்து, அனைத்தையும் உடைத்து கடலுக்குள் போட்டு விட்டு சென்று விட்டனர். அவை உடைக்கப்பட்டு 30 நிமிடங்களில் சட்டத்துறை சம்பந்தப்பட்டவர்கள் அங்கு வந்தனர். கத்தோலிக்க மதகுருமார், தோட்டவெளி மக்கள் உட்பட அனைவரும் அங்கு வந்தனர். இதனையடுத்து உடனடியாகப் பொலீசைஅழைத்துச் சென்றோம். நேரில் பார்த்தவர்கள் உள்ளிட்டவர்களை அழைத்துச் சென்று 13 ஆம் திகதி இந்தச்சம்பவம் தொடர்பாக பொலிசில் வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டது.

    14-15 சனி- ஞாயிறு என்பதால் 16 ஆம் திகதி திங்கட்கிழமை வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன அதில் ஒன்று இந்த வாடி உடைக்கப்பட்ட வழக்கு. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதவான், தோட்டவெளி மக்கள் பத்து வருடங்களுக்கு மேலாக அவ்விடத்தில் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு மாற்று வழி செய்யும் வரை அவர்களுக்கு எவரும் இடையூறுகளை ஏற்படுத்தக் கூடாது எனவும் அவ்வாறு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் பொலிசிற்கு உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவு வழங்கப்பட்ட நாள் இரவே முஸ்லிம் மக்கள் இது தமது இடம் எனப்பிரச்சினை செய்ய ஆரம்பித்து விட்டனர். ஆனால் உண்மையில் அது கப்பல் கூட்டுத்தாபனத்திற்கு ( ஹாபார் கோப்ரரேஷனுக்கு) சொந்தமான இடம்.

    இதன் பின்னர், 17 ஆம் திகதி மன்னார் பொலிஸார் இந்தப் பிரதேசங்களுக்குச் சென்று இரண்டு தரப்பினருக்கும் இடையில் பொது பிரச்சினை ஒன்று வரப்போகிறது எனவே இரண்டு தரப்பும் சண்டையிட்டு, ஒரு கலவரம் வருவதை முன் கூட்டியே தடுக்கும் நோக்கத்துடன் 106 ஆம் இலக்கத்தின் கீழான பீ அறிக்கையை தோட்டவெளியை சேர்ந்த 5 பேருக்கு எதிராகவும் உப்புக்குளத்தை சேர்ந்த 5 பேருக்கு எதிராகவும் பதிவுசெய்தனர் .

    இதன்படி 17 திகதி இரு தரப்பினருக்கும் எதிராகப் பொலிசார் வழக்குத்தாக்கல் செய்தனர்.. உப்புக்குளம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதை அறிந்தே பொலிஸார் இந்தப் பீ அறிக்கையை கொண்டு வந்தனர். ஆனால் அப்படியொரு தடையுத்தரவு தேவையில்லை என நீதவான தெரிவித்தார். இரண்டு தரப்பினருக்கும் அறிக்கையை வழங்குங்கள் எனக் கூறியதை அடுத்து, காவற்துறையினர் அறிக்கையை வழங்கினர். இவ்வாறான பிரச்சினை ஏற்பட போகிறது என காவற்துறையினர் அவசரப்பட்டு தடையுத்தரவைக் கோரினர், எனினும் அதற்கு பதிலளித்த நீதவான், அவர்கள் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை ச்செய்வதை தடுப்பது நீதிமன்றத்திற்கு அழகல்ல ஆனால் ஏனையோருக்கு இடையூறு இல்லாமல், அவர்கள் ஆர்ப்பாட்டத்தை செய்யலாம் என அனுமதியை வழங்கினார்.

    (இங்கு நினைவுகூர வேண்டிய விடையம் என்னவெனில் யாழ்ப்பாணத்திலேயே ஜனநாயகரீதியான போராட்டங்களுக்கு அரசாங்கத்தின் அழுத்தத்தின் பேரில் நீதிமன்றம் தடைவிதித்திருந்தது)

    இதனையடுத்து அதற்கு முன்தினம் 17 ஆம் திகதியே பொலிஸார் வழக்கு குறித்த அழைப்பாணைகளுடன் சென்றனர். கோரிக்கையாளர்களான முதலாம் தரப்பாக தோட்டவெளி மக்கள், இரண்டாம் தரப்பாக உப்புக்குள மக்கள், மூன்றாம் தரப்பாக, அரச அதிபரையும், மேலதிக அரச அதிபரையும் பொலிசார் குறிப்பிட்டு இருந்தனர். 18 ஆம் திகதி வழக்குக்கு செல்ல வேண்டும் என்பதற்காக தோட்டவெளி மக்கள் அழைப்பாணையை (சம்மனை) பெற்றுக்கொண்டு விட்டனர். அரச அதிபரும், மேலதிக அரச அதிபரும் அதனை ஏற்றுக்கொண்டு விட்டனர். ஆனால் உப்புக்குளம் மக்கள் அழைப்பாணையை (சம்மனை) பெறப் போவதில்லை என நிராகரித்து, போலிஸாரை திருப்பி அனுப்பி விட்டனர்.

    சம்மனை பெறாதவர்கள் சார்பில் சட்டத்தரணி ஒருவர் ஆஜரானார். அவரை கொழும்பில் இருந்து அமைச்சர் ரிஸாத்பதியுதீன் அனுப்பி வைத்தார். இந்த நிலையில் அரச அதிபர் மற்றும் மேலதிக அரச அதிபரிடமும், தோட்டவெளி மக்கள் அந்த இடத்தை விட்டு போவதாக தெரிவித்திருந்தனர்.

    அந்த மக்களுக்கு மன்னார் தீவில், படகுகளை நிறுத்தி, வாடிகளை அமைத்து, தொழில் செய்ய 100 முதல் 200 மீற்றர் இடம்ஒன்றை வழங்க முடியுமா என நீதவான் பகிரங்கமாக கேட்டார். இதற்கு இரண்டு வார காலம் போதுமா என நீதவான் அரச அதிபரிடம் கேட்டார். இடத்தை அடையாளம் காண வேண்டும் என்பதால், மூன்று வார காலம் அவகாசத்தை அரச அதிபர் கோரினார்.

    நில அளவை திணைக்களம் வழங்கிய வரைபடம்-

    18 ஆம் திகதி அன்று முதலாவதாக இந்த வழக்கே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. நீதிமன்றத்தில் இவை நடந்து கொண்டிருக்கின்ற போது, சம்மனை பெறாதவர்களும், உப்புக்குளம் மக்களும் அனைவரும் சேர்ந்து, காலை மன்னார் நகரில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஒன்று கூடினர். நீதவான் ஜூட்சனுக்கு எதிராகவும் அவரின் தீர்ப்புக் எதிராகவும்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது என்பதை நீதிமன்றமோ, சட்டத்தரணிகளோ காலையில் அறிந்திருக்கவில்லை. அவர்கள் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர், தோட்டவெளி மக்கள் சார்பில் சட்டத்தரணிகள் சிலர் நீதிமன்றத்தில் ஆஜராகி விவாதித்து கொண்டிருந்தனர். அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளும், தமிழ் மக்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளும், அவர்கள் ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் என பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் போடும் சத்தம் நீதிமன்றத்திற்கு கேட்டது. அவர்கள் ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்யலாம் என தெரிவித்து, நீதவானும், ஆர்ப்பாட்டத்தை கலைக்க கோரவில்லை.

    இந்த வழக்கு முடிந்து அவர்களின் சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிச் சென்றுவிட்டனர். இதன் பின்னர் சுமார் 11 மணி முதல் 11.30 வரையான நேரத்தில் ஆர்ப்பாட்டத்தின் சத்தம் அதிகமாக கேட்டது. ஆர்ப்பாட்டம் அது ஆரம்பித்த இடத்தை விட்டு நகர்ந்து நீதிமன்றத்திற்கு அருகாமையில் வந்து விட்டது.

    நீதிமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் இருந்தவாறு,நீதவானை “நாயே வெளியேறு! உன்னை வெட்ட வேண்டும்!! கொத்த வேண்டும். முல்லைத்தீவான், உன்ரை தீர்ப்பால் நாங்கள், மன்னார் முஸ்லிம்கள் எல்லோரும் வெளியேறுகிறோம். இது ஒரு பக்கசார்பான தீர்ப்பு” என கோஷமிட்டதுடன் நாய் படம் ஒன்றில் நீதவானின் பெயரும் எழுதியிருந்தது. அப்போதும் வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருந்தன. சட்டத்தரணிகள் சிலர் வெளியில் சென்று பார்த்த போதுதான் இவற்றைக் காணக்கூடியதாக இருந்தது. இதனையடுத்து, முஸ்லீம் மக்களின் சட்டத்தரணிகளை அழைத்து, சட்டத்தரணி சம்சூதீன் என்பவர் இருந்தார், சட்டத்தரணி சபீர் என்பவர் போய்விட்டார் நீதவானுக்கு எதிராகதான் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது இதனை நிறுத்த வேண்டும என அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    தோட்டவெளி மக்கள் அங்கிருந்து செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். மூன்று வாரங்களில் அவர்களுக்கான காணி இனங்காணப்படும், அதுவரையில் மீன்பிடியில் ஈடுபட்ட அந்த மக்களுக்கு எந்த தடையுமில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூறுங்கள் என அவர்களின் சட்டத்தரணிகளிடம் தெரிவிக்கப்பட்டது. காரணம் நீதிமன்றத்திற்குள் என்ன நடந்தது என்பதை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அறிந்திருக்கவில்லை. இதன் பிறகு உப்புக்குள ஆட்களை அங்கு எடுக்கலாம். கிட்டதட்ட 10வருடங்களுக்கு மேலாகத் தோட்டவெளியில் தொழில் செய்து கொண்டிருந்த இருந்த மக்களுக்கு மூன்று வாரகால அவகாசம் வழங்கலாம் தானே என்றெல்லாம் உப்புவெளி மக்களிடம் மன்றாட்டமாக கேட்கப்பட்டது.

    ஆனால் அமைச்சர் ரிசாத்பதியுதீனின் நேரடி ஆதரவாளர்களான இளைஞர்களே ஆர்ப்பாட்டத்தில் அதிகமாக துள்ளிக்கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற பெண்கள் உட்பட 75 வீதமானவர்களுக்கு தாம் எதுக்கு சென்றோம் என்றுக் கூட தெரியாது. அவர்களிடம் பெனர்கள் எழுதி கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் அதனை ஏந்திக்கொண்டிருந்தனரே தவிர அவர்களுக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது.

    ஆனால் 18 ஆம் திகதி நீதவான் ஜூட்சனை இடையில் மறிக்க உள்ளதாக முதல் நாள் தகவல் கிடைத்திருந்தது. பங்களாவில் இருந்து நீதிமன்றத்திற்கு போகும் வழியில், சிறிது தூரத்தில் அவரது பங்களா உள்ளது. மக்களைத் திரட்டிச் சென்று நீதவான் நீதிமன்றம் செல்லும் போது வழி மறித்துப் பிரச்சினையை ஏற்படுத்த இருந்ததாகதான் தகவல்கள் கிடைத்திருந்தன. இதனை முதல் நாள் கேள்விப்பட்ட நீதவான் போலிஸ் பாதுகாப்புடன்தான் சென்றார். இதனால் காலையில் அவர்கள் எந்தவிதமான இடையூறுகளையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு பிறகுதான் எல்லாப் பிரச்சினையும் ஏற்பட்டது.

    தோட்டவெளி மக்களுக்கு வேறு காணிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டால் அவர்கள் சென்று விடுவார்கள் என்பது குறித்து பேசத்தான் சட்டத்தரணிகளும் சென்றிருந்தனர். அதனைதான் நீதவானும் கூறினார், இந்த பிரச்சினையை பெரிதாக்கக் கூடாது, இரண்டு சமூகங்கள் இருக்கின்ற இடம், அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நீதவான் பகிரங்க நீதிமன்றத்தில் தெரிவித்தார். இரண்டு தரப்பும் சமாதானமாக இருங்கள் எனக் கூறினார். அரச அதிபர் தகுந்த இடத்தை பெற்றுக்கொடுத்தால், அதற்கு பிறகு அடம்பித்து கொண்டிருக்கலாமல், நீங்கள் போய்விட வேண்டும் என நீதவான் தோட்டவெளி மக்களிடம் கூறினார். அதற்கு அவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் இணக்கம் தெரிவித்தனர்.

    எங்கள் தொழில் மீன்பிடிப்பதுதானே நிலம் பிடிப்பதல்ல. எங்களுக்கு அதற்கு இடம்கிடைத்தால் சென்று விடுவோம் எனக் கூறினார்கள். தோட்டவெளி ஆக்கள், கோந்தப்பிட்டியில் வாடிகளை வைத்திருந்தாலும் , அவர்களின் சொந்தஇடம் விடத்தல்தீவு. வாடிகளை இங்கு வைத்து கொண்டு விடத்தல் தீவுக்கு சென்றுதான் மீன்பிடித்து விட்டு வருகின்றனர். அவர்கள் உப்புக்குளத்தில் மீன்பிடிக்கவில்லை. அவர்கள் எந்த விதத்திலும் உப்புக்குள மக்களின் மீன்பிடியிலும் தடை ஏற்படுத்தவில்லை. விடத்தல் தீவில் இருந்து சென்று படகுகளை தோட்டவெளியில் கட்டிவிட்டுப் போய்விடுவார்கள், இரவில் மாத்திரம் படகுகள் அங்கு இருக்கும் காலையில் மீண்டும் தொழிலுக்கு செல்லும் போது படகுகளை எடுத்துச் சென்று விடுவார்கள். இதுதான் பிரச்சினை எனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைக் கலைந்து செல்லுமாறு கூறுங்கள் எனச் சட்டத்தரணி சபீரிடம் தமிழ்ச் சட்டத்தரணிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் இச்சட்டத்தரணிகள் அந்த தகவலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூறினார்களோ என்னவென்று தெரியவில்லை. 11 .45 அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் சத்தம் அதிகமாக கேட்க தொடங்கியது. நீதிமன்றத்திற்குள் நுழையும் முயற்சியில் தான் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். போலிஸார் விட்டிருந்தால், நீதிமன்றத்திற்குள் நுழைந்து அனைத்தையும் உடைப்பதற்காக அவர்கள் தயாராக இருந்தனர். இதனையடுத்து நீதிமன்ற பணிகளை இடைநிறுத்துமாறு சட்டத்தரணிகள் சிலர் சென்று நீதவானிடம் கோரினர்.

    அங்கு நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் நீதவானுக்கு எதிராக நடைபெறுகிறது என்பதை அதுவரை அவர் அறிந்திருக்கவில்லை. உங்களுக்கு எதிராகதான் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. உங்கட படத்தில் நாய் என எழுதப்பட்டுள்ளது. நீங்கள் வெளியில் வந்தால் வெட்டுவேன் கொத்துவேன் என்று கூறுகிறார்கள் என சட்டத்தரணிகள் நீதவானிடம் கூறினர். ஏதோ ஜனநாயக ரீதியாகதான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நீதவான் நினைத்திருந்தார். சட்டத்தரணிகளும் தோட்டவெளி மக்களுக்கு எதிராகதான் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் என்று கருதினர்.

    அதன் பின்னர் நீதிமன்றப் பணிகளை நிறுத்தி விட்டு காவற்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது போலிஸ் அத்தியட்சகர், உதவி போலிஸ் அத்தியட்சகர் இருந்தனர். நீதவான் போலிஸ் அதிகாரிகளை அழைத்து தனது படத்தை வைத்து, தீர்ப்பு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் கூட்டத்தை கலைத்து விடுமாறு அவர்களிடம் கூறினார். ஆர்ப்பாட்டகார்களை சத்தம் போட வேண்டாம் எனக் கூறியிருப்பார்கள், ஆனால் போலிஸார் அவர்களை கலைக்கவில்லை. மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிக கோஷங்களை எழுப்பி நீதிமன்றத்திற்குள் செல்ல முயற்சித்ததாகவும் காவற்துறையினரும் அவர்களை கலைக்க வில்லை என நீதவானிடம் தெரிவித்ததை அடுத்து, மீண்டும், காவற்துறை அதிகாரிகளை நீதவான் அழைத்தார். ஆர்ப்பாட்டகார்களை கலைக்குமாறு கூறியதுடன் போக மறுத்தால், பலத்தை பிரயோகிக்குமாறு கூறினார். இதுதான் உண்மையில் நடந்தது. அங்கிருந்து கூடடத்தை கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகளையாவது பயன்படுத்துங்கள் எனக் கூறினார். போலிஸ் சென்று அரை மணித்தியாலம் ஆர்ப்பாட்டகார்கள் கலைந்து செல்லவில்லை அங்கேயே நின்றனர். சத்தம் அதிகமாகவே இருந்தது. அதன் பின்னர், ஒரு கட்டத்தில் போலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். சுமார் 12 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. கண்ணீர் புகைக் குண்டு வீசியவுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓடினர்.

    மீண்டும் 10 நிமிடங்களில் ஓடி போனவர்களில் சுமார் 30 இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டதால் இந்த வன்முறைகள் நடந்தன. அவர்கள் சென்று கற்களை வீசி தாக்குதல் நடத்தி பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு பின்னர், நீதவான் நீதிமன்றத்திற்குள் இருக்க முடியவில்லை அவ்வாறு சத்தம் இருந்தது. கற்களை வீசுகின்றனர். போலிஸார் காயமடைந்தனர். அப்போதுதான் நீதவான் வெளியில் சென்றார். அவர் வெளியில் சென்றவுடன் வா அடி படுவோம் வாடா என நீதவானை அழைத்ததனர்.

    அப்போது பிரச்சினைக்கு உரியவர்களான ஒரு சிறிய தரப்பினரே அங்கு இருந்தனர். மீதமிருந்த பெண்கள் உட்பட அனைவரும் ஓடி விட்டனர். மீதமுள்ளவர்களை கைதுசெய்யுங்கள் முடியாவிட்டால், காலின் கீழ் சுட்டாவது கைதுசெய்யுங்கள் என நீதவான் போலிஸாருக்கு உத்தரவிட்டார். இவர்கள் இப்படி கடுமையான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போது அதனை தடுக்க நீதவானுக்கு சட்டத்தில் அதிகாரம் உண்டு. அத்துடன் காலை 9.30 மணி முதல் 12.30 வரை போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. நீதவான் 3 தடவைகள் உத்தரவிட்ட பின்னரும், போலிஸார் அமைதியாக இருந்தனர் காரணம் அமைச்சர் ரிஸாதத்பதியுதீனின் உத்தரவுகளுக்கு அவர்கள் கட்டுப்பட்டு இருந்தனர்.

    ஆர்ப்பாட்டகார்கள் தொடர்ந்தும் கல்லெறிந்து கொண்டிருந்தனர். மீண்டும் அவர்களை கலைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இல்லையெனில் மேலதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டிய நிலைமை ஏற்படும் என நீதவான் கூறினார். தீர்ப்புக்கு எதிராக இப்படி செய்ய முடியாது. அவர்களை உடனடியாக கலைக்குமாறு கூறினார். மறுபடியும் கண்ணீர் புகைக்குண்டுகளை பொலிசார் வீசினர், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசிய பின்னர், அவர்கள் கல்லெறிந்தனர், ஒடினர், இவர்களில் ஓரிரு காவற்துறையினருக்கு காயம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டகார்கள் ஒடுவதும் வருவதுமாக இருந்தனர். கண்ணீர் புகைக்குண்டு வீசு போது ஒடுவதும் வருவதுமாக இருந்தனர். கொஞ்ச நேரத்தில் அந்த குழுவை அடக்க முடியாது போனது.

    பின்னர் தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து பிரிகேடியர் டயஸ் என்பவர் அங்கு பிரசன்னமானார். அவர் நீதவானிடம் சென்ற போது, நீதவான் பிரச்சினை தெளிவுப்படுத்தினார். மேலிடத்தில் இருந்து துப்பாக்கி பிரயோக உத்தரவு வரும் வரை அவர்கள் சுமார் 10 நிமிடம் வரை காத்திருந்தனர். பின்னர், உத்தரவு கிடைத்தது. அதற்குள் போலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீச அவர்கள் பின்புறமாக உப்புக்குளத்திற்கு ஓடிவிட்டனர். பள்ளி முனை என்றும் கூறும் வீதி வழியாகதான் பின்புறமாக உப்புக்குளத்திற்கு செல்ல வேண்டும். அந்த பகுதியின் கரையோரம்தான் நீதிமன்றத்தின் பின்புறம் வருகிறது.

    புதிய நீதிமன்றம் அங்குதான் கட்டப்பட்டுள்ளது. ஓடிய இளைஞர்கள், தாம் கொண்டு சென்ற கருங்கற்கள், போத்தல்களைக் கொண்டு, நீதிமன்றக் கட்டம், நீதிபதிகளின் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நீதிபதிகள் தங்கும் இடங்கள் எல்லாம் கற்வீச்சு தாக்குதலில் உடைப்பட்டு விட்டன. எல்லாம் பெரிய பெரிய கற்கள். வாகனங்களை தாக்கியுள்ளனர். இடையில் டயர்களை எரியூட்டினர். பெட்ரோல் குண்டோ எதுவோ என்று தெரியவில்லை, அதனை வீசி எறிந்தனர் அது எரிந்துக்கொண்டிருந்தது. அங்கு சென்ற நீதிமன்ற ஊழியர்கள் அதனை அனைத்துவெளியில் போட்டு விட்டனர், இல்லாவிட்டால் எரிந்து, நீதிமன்றத்தில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்திருக்கும்.

    போலிஸார் சென்றதும் இளைஞர்கள் ஓடிவிட்டனர். அவர்களின் பள்ளி வாசலுக்கு போகும் வழியொன்று உள்ளது, அங்கிருந்து மீண்டும் கல்லெறிந்து கொண்டிருந்தனர். காலுக்கு கீழ் சுட அல்லது கைதுசெய்ய சுடும் அனுமதியை பெற்ற இராணுவத்தின் பிரிகேடியர் தமது ஆட்களை அந்த இடத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தார்.. இராணுவத்தினர் அணியாக போய்கொண்டிருந்தனர். நீதிமன்றத்தில் பணியாற்றுபவர்கள், அவர்களிடம் சென்று கூட்டத்தை கலைத்து விடுவதாகவும் 5 நிமிடம் தருமாறும் பிரிகேடியர் டயஸிடம் கேட்டுள்ளனர். ஊரில் இளைஞர்கள் முன்னால் நிற்க பெண்கள் சிறுவர்கள் பின்னால் நின்றுக்கொண்டிருந்தனர். நீதிமன்றத்தில் பணியாற்றும் முதலியார் மற்றும் இன்னுமொருவர் இருவரும் முஸ்லிமகள். அவர்கள் போய் மீண்டும் கல்லெறிந்தால் படையினர் சுடுவார்கள் எனத் தெரிவித்துள்ளனர். அப்போதும் அவர்கள் மதில் கரையில் மறைந்து இருந்து கொண்டு கல்லெறிவதுமாக இருந்தனர். பின்னர் இராணுவம் நடந்து போக வெளிகிட அவர்கள் ஓடிவிட்டனர். அதன் பின்னர், அந்த கூட்டம் கலைந்து போய்விட்டது. இதுதான் உண்மையில் நடந்த பிரச்சினை.

    அன்று நடந்த பிரச்சினையில் உண்மையில் அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு தொடர்பில்லை. அமைச்சர் ரிஸாத்பதியுதீனின் ஆதரவாளர்கள் சிலரே திட்டமிட்டு இதனை உருவாக்கினர். நீதவானிடம் முதலிலிலேயே மன்னார் பற்றி எரியும் என அமைச்சர் கூறியிருக்கிறாரே.

    அவர்கள் கொண்டு வந்த கற்களைப் பார்த்தீர்கள் என்றால் கலவரத்தை ஏற்படுத்துவதற்கென்றே கொண்டு வந்திருக்க வேண்டும்என்பது தெரியும் . இந்த செய்திகள் இப்படி இருக்க இலங்கை அரச தொலைக்காட்சிகள் முதலில் பெண்கள் உட்பட சிறுவர்கள் பெனர்களை பிடித்து கொண்டிருப்பதைக் காட்டி விட்டு நீதவான் வெளியில் வந்து கையை காட்டி பேசுவதையும், அவர் சுட சொன்னது போலவும் ஒரு பகுதியைக்காட்டியது. அரச தொலைக்காட்சிகள் பின்னால் மதகுமார் நிற்பதையும் வன்னியில் இருந்து மன்னார் வந்து செல்ல முடியாது தேங்கி இருந்தவர்களையும் படமெடுத்துத் தொகுத்துக் காட்டின. கத்தோலிக்க குருமாரும் நீதவானும் திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சும்மா சுடுமாறு நீதவான் உத்தரவிட்டதாகவும் புனைந்துள்ளனர்.

    இங்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு சவால் விடுகிறோம்? மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வுகள் சுமார் 45 நிமிடம் வரையான வீடியோ காட்சியாக உள்ளன அவற்றை இலங்கைத் தொலைக்காட்சிகள் ஊடாக மக்களுக்கு எந்தத் தணிக்கை யும் இல்லாமல் வெளியிடுவீர்களா?

    ஆனால் உண்மையில் நடந்தது இதுதான். 9.30 இல் இருந்து 11.30 வரையும் நீதவான் எதனையும் செய்யவில்லை. போலிஸார் கூட்டத்தை கலைக்க முடியாமல் போய், கண்ணீர் புகைக்குண்டு வீசி, அவர்கள் கலைந்து சென்று, மீண்டும் அவர்கள் திரும்பி வந்த போதே நீதவான் வெளியில் சென்றார். வெளியில் சென்றுதான் இந்த விடயத்தை கூறினார். ஆனால் இவர்கள் சும்மா வெளியில் இருந்தவர்கள் மீது நீதவான் உத்தரவிட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறுகின்றனர். உண்மையில் அங்கிருந்தவர்களில் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் இருக்கவில்லை. சம்பவத்தை திட்டமிட்டு செயற்படுத்தியவர்களை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியாததால், தற்போது அனைவரும் இணைந்து இதனைத் தமிழ், முஸ்லிம் பிரச்சினை என மாற்ற முனைகின்றனர்.

    மன்னார் ஆயரும், நீதவானும் இணைந்து முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடைசெய்வதாக ஊடகங்களில் தெரிவிக்கின்றனர். ஆனால் தற்போது நடந்த பிரச்சினை அதுவல்ல. இந்த நீதவான், மீள்குடியேறிவர்களில் எவரையும் மீள்குடியேற வேண்டாம் எனக் கூறவில்லை அவ்வாறு நீதவான் கூறியதாக நிரூபித்தால் சட்டத்தரணிங்கள் சங்கத்தில் இருந்து விலகுகிறேன் என ஒரு சட்டத்தரணி அன்றைக்கு கேட்டதையும் நான் பார்த்தன் . முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களில் குடியேற நீதவான் எதிர்ப்பு தெரிவிப்பரானால், அதற்கு தான் எதிராக குரல் கொடுப்பேன் என அவர் கூறியிருக்கிறார்.

    இந்த நீதவானைப்பற்றி இன்னுமொன்றையும் கூறவேண்டும். யுத்தம் நடந்து கொண்டிருந்தகாலத்தில் முஸ்லிம் பொதுமகன் ஒருவரை இனம் தெரியாதவர்கள் கடத்தி விட்டனர், கடத்தியவரின் பெற்றோர் கடற்படையினர்தான் அவரை கடத்தியதாக நீதிமன்றத்திற்கு சென்று தெரிவித்தனர். அப்போது நீதவான் ஜூட்சன், கடற்படையினரை அழைத்து அவர்களால் தனக்கு வரக்கூடிய அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது. அவர்கள்அவ்வாறு எவரையும் கடத்தினார்களா என நேரடியாக விசாரித்தார். அப்போது அவருக்கு அதனால் அச்சுறுத்தல் இருந்தது. அந்த யுத்தகாலத்தில் படையினரை எதிர்தால் கிளைமோர் வைத்துத் தாக்கி விட்டு, விடுதலைப்புலிகள் தான் தாக்கினார்கள் எனக் கூறிவிடுவார். அந்த நிலையிலும் துணிந்து தனது நீதித்துறையின் கடமையை இந்த மக்களுக்கு இந்த நீதவான் செய்திருக்கிறார். அவரை ஒரு பக்கசார்பானவர் என்று கூறுகிறீர்களே, முஸ்லீம்களை மன்னார் மாவட்டத்தில் வந்து குடியேற வேண்டாம் என நீதவான் தடைபோட்டாரா எனக் கேட்கப்பட்ட போது அங்கு நின்ற முஸ்லீம் பெரியவர்கள் மௌனித்திருந்திருக்கிறார்கள். அனைவரும் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்திருக்கிறார்கள்.


  27. information on August 8, 2012 11:42 am

    மன்னார் உரையாடல் 2

    காபர் கோப்பரேசனில் 83 களிற்கு பின்பு ரெலோ அமைப்பு முகாம் போட்டு இருந்த இடம். அதன் பிறகு நீண்ட காலமாக 90 களிற்கு பிறகு ராணுவம் பொறுப்பெடுத்தது. பின்பு 2002 ஒப்பந்தத்திற்குப் பிறகு 99ஆம் ஆண்டு 6ம் மாதம் 27ம்திகதி ரணஓசை ராணுவ நடவடிக்கைகளின் போது விடத்தல் தீவிலிருந்து தோட்டவெளிக்கு சென்ற மக்களுக்கு 2002ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டதுதான் அந்த இடம். புலிகளின் நிர்வாகம் மன்னாரில் இருக்கின்ற போது புலிகள் கதைத்துத்தான் அது கொடுக்கப்பட்டது. உண்மையிலேயே அது முஸ்லிம் மீனவர்களுக்கு சொந்தமானது என நிரூபிக்க முடியாதது. இரண்டாவதாக முஸ்லிம் மீனவர்கள் ஒரு 6 பேர் அட்டை பிடிப்பதற்காக மட்டும் போனதே தவிர அவர்களிடம் வள்ளமோ, வலையோ எந்தவிதமான அடிப்படை வசதிகளோ இல்லை. பிஷப்பிற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை றிசாத் பதியுதீன் எடுத்ததற்கு மன்னார் சமூகம் ஒரு எதிர்ப்பு செய்ததல்லவோ. அந்த விடயத்திற்கு எதிரொலியாக இந்த விடயம் கையிலெடுக்கப்பட்டதே ஒழிய இதில் வேறு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.

    இப்பவும் அங்கு கோந்தைப்பிட்டியில் காவல் நிலையமும், புலனாய்வுப்பிரிவினரின் அலுவலகங்கள் எல்லாம் அதற்குள்ளேயே இருக்கின்றது. கோந்தைப்பிட்டியில் புலிகளின் அழிவிற்குப் பின்னர் முஸ்லிம் மக்கள் குடியேற்றப்பட்டது என்பதே உண்மை. அந்தக் காணி சட்டவிரோதமாக அமைச்சரால் கிராம சேவையாளருக்கு உத்தரவிடப்பட்டு மன்னாரிலுள்ள பிரதான கோட்டைக் அருகிலுள்ள காணியில் சட்டவிரோதமாக ஒரு 3 வருடத்துகட்குள் இந்த மக்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு கோந்தைப்பிட்டி சொந்தமில்லை. துறைக்கு சண்டை பிடிப்பது உப்புக்குள மீனவர்கள். உப்புக்குளத்தில் ஏற்கனவே முஸ்லிம் மக்கள் இருந்தவர்கள். 91, 92 இலிருந்தே இருக்கின்றார்கள். உப்புக்குளத்தில் குடியேறவில்லை. கோந்தைப்பிட்டியில்தான் ஒரு பகுதி மக்களைக் கொண்டு வந்து குடியேற்றினது. உப்புக்குளத்தில் உள்ள மக்கள் திருமணம் முடித்து பிள்ளைகள் என வந்ததால் அங்க காணி இல்லாத ஆட்களுக்கு வீடு கொடுத்ததே தவிர அதில இருக்கிறவர்கள் எல்லாம் கடற் தொழிலாளர்கள் அல்ல. மன்னரில் முஸ்லிம் மக்கள் கடற்தொழில் செய்பவர் நூற்றுக்கு 2 வீதம் கூட இல்லை.

    மற்றது இதில் இன்னுமொரு பிரச்சினை என்னவென்றால் இந்த காபர் கோபரேசனின் காணி எனத் தெரிந்தததற்குப் பிறகு அந்த மக்கள் அவர்களிடம் கடிதம் வாங்கிக் கொண்டு வந்ததற்குப் பிறகு வாடகை கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள். காபர் கோப்பரேசனுக்குரிய காணி என்றதும அதற்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும் என கொடுக்காமல் விட்டு விட்டார்கள். அதோடு பிரச்சனை தொடங்கிவிட்டது. அதோடு சேர்த்து பிஷப்பினுடைய பிரச்சனையும் வந்து விட்டது.

    ஒரு விசயம். மருதானைக்கு மன்னாரிலிருந்து 12 பஸ்களில் ஆட்களை ஏற்றிக்கொண்டு போய்த்தான் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள். வவுனியா, மட்டக்களப்பு, காத்தான்குடி, யாழ்ப்பாணம் எல்லாப் பகுதிகளிலும் இருக்கினம். வடபகுதி மக்களை மீள்குடியேற்ற வேண்டுமென்று. மன்னாரில் மீள்குடியேறாமல் எந்த முஸ்லிம் இருக்கின்றார். அதற்கொரு பதில் வேணும் எங்களுக்கு. வழக்கைத் திசை திருப்புவதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம். அரசாங்கம் இதற்கு பதில் சொல்லாமல் ஏன்பார்த்துக் கொண்டிருக்குதென்று தெரியவில்லை.

    கிட்டத்தட்ட 67 ஆயிரம் முஸ்லிம் மக்கள் மீளகுடியேறியிருக்கின்றார்கள். அத்தனை மக்களும் மீள்குடியேறி சகல சலுகைகளையும் பெற்றுக் கொண்டு மீண்டும் போய் புத்தளத்தில் இருக்கினம்.

    உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறன். ஐசிஆர்சி கொடுத்த லாண்டமாஸ்ரர் வந்தது. மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு என்று கொடுக்கப்பட்டது. இதில் கிளிநொச்சிக்கும் முல்லைத்தீவிற்கும் கொடுத்தாச்சுது. மன்னாருக்கு என சென்றது 342. இதற்குரிய பட்டியல் இட்டவர் ஏசிஏ. முசலியில் உள்ள 162 தனிப்பட்ட குடும்பங்களுக்கு கொடுக்க வேணுமென அமைச்சர் பிரச்சனைப்பட்டு கடைசியில் ஐசிஆர் வரை போய் 01 லாண்ட மாஸ்ரர் கூட மன்னார்ப்பகுதிக்கு கொடுக்காமல் முழுவதையும் பாகிஸ்தானுக்கு ஐசிஆர்சிஅனுப்பி விட்டது.

    அதேபோல இந்தியா அனுப்பிய அவ்வளவு சைக்கிள்களும் முஸ்லிம் மக்களுக்குத்தான் கொடுக்கப்பட்டது. அதைவிட அரபு நாடுகளில் இருந்து குறிப்பாக சவூதியிலிருந்து வீட்டுத்திட்டம் அத்தனையும் முஸ்லிம் மக்களுக்கே வழங்கப்பட்டது.

    அதோடு முஸலிம் எயிட் என்ற முஸ்லிம் NGO அமைப்பு இயங்குது. அதன் மூலமும் அனைத்து வீடுகளும் முஸ்லிம் மக்களுக்கே கட்டிக் கொடுக்கப்பட்டது. வருகிற எதுவித உதவியென்றாலும் முஸ்லிம் மக்களுக்கே 90 வீதம் போகிறது. அவர்கள் புத்தளத்தில் இருந்து வந்து உதவியைப் பெற்றுக் கொண்டு போகினம். முஸ்லிம் மக்களுக்கு விவசாய பகுதி என தனியாக பிரித்து கொடுக்கப்பட்டிருக்குது.

    இந்திய அரசாங்கம் 272 ஆட்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் கொடுத்தது ஒரு ஆளுக்கு 5லட்சம் பெறுமதியானது. வெறும் 9 பேருக்குத்தான் தமிழ் மக்களுக்கு கொடுபட்டிருக்குது. அத்தனையும் முஸ்லிம் மக்களுக்கே கொடுபட்டிருக்குது. தனக்கு ஒத்துழைக்கவில்லை என அரச அதிபர் நிக்கலஸ்பிள்ளை மாற்றப்பட்டார். காணி அபகரிப்புக்கு இடம் கொடுக்கேல்லை என மாந்தைப்பகுதியிலுள்ள பிரபாகரன் என்ற கிராமசேவையாளர் தெல்லிப்பளைக்கு மாற்றப்பட்டார். தனக்கு இஸ்டமான ஆட்களுக்கு ஏடி போஸ்ற் கொடுக்கேல்லை அதிபராக போடவில்லை என வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் சுகந்தி உடனடியாக மாற்றப்பட்டார்.

    தனக்கு குளங் கட்டித் தரவில்லை என உடனடியாக ACAD திருமதி சிவலிங்கம் உடனடியாக மாற்றப்பட்டார். இவ்வளவையும் செய்து போட்டு இப்ப கச்சேரியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இங்கிருந்த சிரேஸ்ட உதவி அரச அதிபர் திருமதி மோகனாதனை வவுனியாவிற்கு மாற்றி தனக்கு ஏற்ற மாதிரி மன்னார் DS திருமதி ஸ்ரான்லி டிமலை உடனடியாக ஓடர் கொடுக்கப்பட்டிருக்கு assistant GA ஆக போடுவதற்கு.

    இவ்வளத்தையும் செய்து கொண்டு புலி என்று சொன்னால் இலங்கையின் நீதவான் புலியா? மன்னாரில் புலிகள் மீள்குடியேற்றத்தை செய்கிறார்கள் என்றால் இலங்கையின் நீதவான் புலியா?

    இரண்டாவது புலிகளோடு இருந்து ஆள் பிடிச்சுக் கொடுத்த ஆட்கள், புலிகளை தவறாக வழநடத்திய ஆட்கள் அத்தனை பேரும் இன்று றிசாத்தோடு நிற்கிறார்கள். புலிகளை இந்தளவிற்கு கேவலமான நிலைக்கு கொண்டு போன அத்தனை பேரும் றிசாத்தோடு நிற்கிறார்கள். அப்ப யார் புலியை வைச்சிருக்கிறது.

    ஆடம்பன் பிரதேசத்தில் இருக்கின்ற செ….பு, அவர் புலிகளின் காத்திருந்த கடற்கரை, எல்லைக்கற்கள் போன்றபடங்களில் நடித்தவர். மற்றது ரா…. மாஸ்ரர், நானாட்டானில் ம…. மாஸ்ரர், செ……ளை, அதிபராக இருக்கின்ற ப……, இவர்கள் மிக முக்கியமான ஆட்கள். இன்னும் கனபேர் இருக்கினம். இவை புலியிடம் நலன் பெற்று புலியால் வாழ்ந்த ஆட்கள். புலியை மன்னாரில் தவறாக வழிகாட்டிய ஆட்கள் இவன்கள்தான். இவர்களை வைத்துக் மிக அருகிலேயே யார் வைத்திருக்கிறார்கள்.

    மற்றது தடுப்பிலிருந்து விடுபட்ட ஆட்கள். தடுப்பில இல்லாமல் விட்ட ஆட்கள் எல்லாரையும் வைச்சுக் கொண்டு யாரைப் புலி யாரை புலியின் மறுபிறப்பென்று என்று சொல்லுறது.

    வேடிக்கையாக இருக்குது என்னவென்னறால் அந்த நீதிமன்றப் போராட்டத்தின்போது நீதிபதியை சுலோக அட்டையில் தூஷணத்தால் எழுதி வைத்திருந்தவர்கள், நீதிபதியை கேவலாக எழுதி வைத்து போராட்டம் செய்தது.

    அதைவிட 4 மாதத்திற்கு முன் இன்னுமொரு சம்பவம் நடந்தது என்னவென்றால் குற்றவாளிகளை; பொலிஸார் பிடித்துக் கொண்டு போய வைத்திருக்க பொலிஸ் விட மாட்டம் என்று சொல்ல மேவின் சில்வா மாதிரி பொலிஸ் ஸ்ரேசனுக்குள் போய் பொலிஸாருடன் மோதி அவர்களை இழுத்துக் கொண்டு போனார்கள். அந்த நேரம் பத்திரிகைகளில் எல்லாம் வந்தது.

    மன்னாரில் எவ்வளவு appointment கொடுத்திருக்கு. அவ்வளவும் நூற்றுக்கு நூறு முஸ்லிம் மக்களுக்கு. ARP ஒன்று கொடுத்திருக்கு. 53 பேர் 53 பேரும் முஸ்லிம் ஆட்கள். அதற்கு application போட்ட 1300 பேரில் மிகுதிப் பேர் காத்திருக்கிறான்கள்.

    இவ்வளவு அடாவடித்தனங்களையும் செய்து கொண்டு கொஞ்ச காணியை பிடிச்சு வைச்சிருக்கிறார்கள். இதற்கு பிஷப்பை சொன்னால் பிஷப் அரசாங்க அதிகாரியா? என்றெல்லாம் அந்த உரையாடலில் கேட்கப்பட்டது.

    இன்னும் சில உரையாடல்கள் விடயங்கள் கட்டுரையின் நீண்டு செல்லும் தன்மை கருதி நீக்கப்பட்டு இருக்கிறது.

    மன்னாரில் நடந்தவை நடக்கின்றவை முஸ்லீம் மக்களுக்கு எதிரானவை எனக் குற்றம்சாட்டுபவர்களிடம் பின்வரும் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன :

    1) பிரச்சனைக்கு உரிய கோந்தைப்பிட்டி வலைப்பாடு அதாவது வாடிவீடுகள் அமைக்கப்பட்ட காணி கப்பல் கூட்டுத்தாபனத்திற்கு உரியதா இல்லையா?

    2) இந்தக் காணியை 2006ல் தற்காலிக பாவனைக்கு என எழுத்து மூல அரசாங்க அனுமதியுடன் கப்பல் கூட்டுத்தாபனம் விடத்தல் தீவு மக்களுக்கு வழங்கிதற்கான ஆதாரம் உள்ளதை எவ்வாறு புரிகிறீர்கள்?

    3) விடுதலைப் புலிகளின் காலத்தில் அமுதன் முஸ்லீம்களுடன் செய்து கொண்ட உடன்பாட்டில் இந்தப் பகுதி அவர்களுடையது என கூறியதனை ஏற்றுக் கொண்டால் புலிகள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் அல்லது உடன்பாடுகள் சட்ட அந்தஸ்த்து உடையவை என்று பொருள்படும் …ஏற்றுக் கொள்கிறீர்களா?

    4) அரசாங்கத்தின் கப்பற் கூட்டுத் தாபனக் காணியை புலிகள் உங்களுக்கு உரியது எனக் கூறியதற்கு சட்ட அந்தஸ்த்து கொடுக்கப் போகிறீர்களா? அரசாங்க அதிகாரிகள் குறிப்பாக அப்போது கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் இருந்த அஸங்க அபயகுணசேகர கொடுத்த அத்தாட்சிக் கடிதத்திற்கு சட்ட அந்தஸ்த்து கொடுக்கப் போகிறீர்களா?

    5) இந்தக் காணியின் பயன்பாட்டுக்கு உரிய அனுமதிப் பத்திரத்தை வைத்திருந்தும் 3 வாரத்தில் தமக்குரிய இடம் ஒதுக்கப்பட்ட பின் அங்கிருந்து வெளியேற முடியும் என நீதிமன்றிடமும் அரசாங்க அதிகாரிகளிடமும் விடத்தல் தீவு மக்கள் வாக்குறுதியை வழங்கியபின்னும் அவர்களது வாடி வீடுகளை அடித்து உடைத்து அவர்களின் வணக்க சொரூபங்களை சிதைத்து கடலில் போட்டது சரியென வாதிடுகிறீர்களா?

    6) கடற்தொழிலையே நம்பி இருக்கும் அந்த மக்களுக்கு அமைச்சர் என்ற வகையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்று ஏற்பாட்டை ரிஸாத் பதியுதீன் மேற்கொள்ளாதது இனவாதம் அல்லது தவறு இதில் எது சரி?

    7) தேசிய நூதனசாலைக் காணியை தனது நேரடி உத்தரவில் உடனடியாகப் பெற்று உங்களைக் கோந்தைப்பிட்டியில் குடியமர்த்த முடிந்த அமைச்சருக்கு விடத்தல் தீவு மக்களுக்கு உரிய மாற்று ஏற்பாட்டை உடன் ஏன் செய்யமுடியவில்லை?

    8.தமிழர் அல்லாத நீதிபதி ஒருவரைக் கழுதை மற்றும் நாயின் படங்களில் அவர் பெயரைப்போட்டு அவரது பெயரைச் சொல்லி நாயே வெளியில் வா என்று கூறி நீதிமன்றத்தையும் தாக்கி இருந்தால் இப்போ நிலமை என்னவாகி இருக்கும்?

    9) மன்னார் சம்பவம் நடைபெற்ற போது 45 நிமிடங்களுக்கு மேலாக பதியப்பட்ட வீடியோக காட்சியை தணிக்கை இன்றி முழுமையாக மக்கள் முன் ஒளிபரப்புவீர்களா?

    10) மன்னாரில் நடந்த நடக்கின்ற அடாவடித் தனங்கள் குறித்து இன, மத, மொழி, மற்றும் பதவி நிலைகளின் பாதிப்பின்றிய அரசியல் தலையீடு இன்றிய, படையினரின் ஆட்சியாளரின் மிரட்டல்கள் இன்றிய ஒரு சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட உங்களுக்கு முடியுமா?

    இதற்கு பதில் எழுதுபவர்கள் எமது மின்அஞ்சல் முகவரிக்கு தம்மை உறுதிப்படுத்தி சொந்தப் பெயரில் அனுப்பிவைத்தால் அதனை எந்த வித தணிக்கையும் இன்றி வெளியிடத் தயாராக இருக்கிறோம். radiokuru@yahoo.com


  28. Ajith on August 8, 2012 1:16 pm

    Uthyan News
    மன்னார் நீதிமன்ற நீதிவானை அச்சுறுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீது வழக்குப்பதிவு செய்வதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளது என சட்டமா அதிபர் திணைக்களம் உறுதி செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

    This news is from Daily mirror:

    The Attorney General’s Department has found sufficient evidence in the police report to file charges against Minister Rishard Bathiudeen over allegations that he had threatened the Mannar Magistrate on July 18, the Daily Mirror learns.


  29. thuari on August 8, 2012 3:55 pm

    //விவாதம் அது அல்லவே. தாமாக அவர்கள் இத் தொழில்களை எடுத்துச் செய்கிறார்கள்//றோகன்

    வயிற்றுப் பிளைப்பிற்காக சில தொழில்களை விருப்பமன்றியே ஏழை நாடுகளில் செய்கின்றார்கள். அத்தொழிலைவிட் வேறு தொழில்கள் செய்யக்கூடாதென்று சாதி அடக்குமுறையும் உண்டு.


  30. Ajith on August 9, 2012 6:59 am

    வயிற்றுப் பிளைப்பிற்காக சில தொழில்களை விருப்பமன்றியே ஏழை நாடுகளில் செய்கின்றார்கள். அத்தொழிலைவிட் வேறு தொழில்கள் செய்யக்கூடாதென்று சாதி அடக்குமுறையும் உண்டு.//////
    இலங்கையில் கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக சிங்கள பெரும்பான்மை கொண்ட அரசுகளே சட்டம், நீதி, பாதுகாப்பு வழங்கும் சக்தியை கொண்ட ஆட்சி அதிகாரத்தை கொண்டு உள்ளன. இந்த அரசுகள் ஏன் சாதி அடக்கு முறைக்கு எதிராக, இன அடக்கு முறைக்கு எதிராக ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை உங்களால் விளக்க முடியுமா துரை அவர்களே.


  31. thurai on August 9, 2012 9:57 am

    //இந்த அரசுகள் ஏன் சாதி அடக்கு முறைக்கு எதிராக, இன அடக்கு முறைக்கு எதிராக ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை உங்களால் விளக்க முடியுமா துரை அவர்களே.//அஜீத்

    தென்னிலங்கையில் போய் தொழில்பார்க்கும் தமிழர் யாவரையும் தமிழராகவே சிங்களவர் கருதுகின்றர்கள். அடிகொடுக்கும்போதோ அல்லது அரவணைக்கும் போதோ சாதியைப்பற்ரி சிங்களவர் கேட்பதில்லை.(சாதி பாகுபாடு சிங்களவருடன் சேர்ந்து வாழும் போது தமிழரிடம் கடைப்பிடிப்பது கடினமான காரியம்.)

    பெரும்பான்மை சிங்களவர் வாழும்நாட்டில் சிறுபானமை இனம் கல்வி சமூக பொருளாதார வளர்ச்சியில் மேலோங்கி இருந்தது. இது தமிழரின் கெட்டித்தமென்பதைவிட தமிழரின் அடிமைச் சேவக மனப்பான்மையும் ஆங்கிலேய எசமானிடமிருந்த விசுவாசமுமேயாகும்.

    அந்தநிலையில் மறைமுக அடக்கு முறை தமிழர் சிங்களவர் மீதே அன்றி சிங்களவர் தமிழர் மேலல்ல. தென்னிலங்கையில் சிங்களவர் மத்தியில் வாழ்ந்து மேலோங்க வேண்டும் தனியாக ஆள ஒர் நாடும் வேண்டும்.

    இந்த மனநிலமையில் எழுந்த கலவரத்தில் அடிவாங்கி வடக்கு வந்த தமிழர் கலவரத்தில் இறந்தவ்ர்களின் ஒரு வருடம் பூர்த்தியாகுமுன் திரும்ப தெற்கில் போய் குடியேறியநிலமைக்கு யார் காரணம்?. இன்று முன்பிலும் மேலாக தெற்கில் தமிழரும் எதிர்மாறாக தமிழர் பகுதிகளில் சனத்தொகை குறைந்தும் விட்டது. மக்களின் விருப்பிற்கும் யதார்த்த நிலைமைக்கும் அரசியல் செய்வதா அல்ல்து புலம்பெய்ர உல்லாச அரசியலும் முள்ளிவாய்க்காலும் சன்ல் 4 தமிழர்களிற்கு விடிவு கொடுக்குமா? முதலில் சிங்களவன் பகைவன் என்பதை மனத்தில் இருந்து அகற்ருங்கள் அதன் பின் இலங்கை அரசியல் பேசுக்கள். தமிழர் மத்தியில வாழும் நச்சு பாம்புகளையும் கொடிய மிருகங்களையும் கண்டறியுங்கள்.- துரை


  32. Ajith on August 9, 2012 5:56 pm

    துரை நீங்கள் ஏதோ கேட்டால் ஏதோ கதைகிறீர்கள். இதற்கு மேல் உங்களிடம் எதிர் பார்ப்பது தவறு.


  33. thuari on August 10, 2012 7:59 am

    //துரை நீங்கள் ஏதோ கேட்டால் ஏதோ கதைகிறீர்கள். இதற்கு மேல் உங்களிடம் எதிர் பார்ப்பது தவறு.//

    நோய்க்கான காரணங்களை கண்டுபிடித்து வயித்தியம் செய்பவனாலேயே நோய் எதிர்காலத்திலும் வராமல் தடுக்க முடியும். சிங்கள மொழியையோ, சிங்கள மக்களைப் பற்ரியோ சரியாக அறியாத புலம் பெயர்நாடுகளில் பிறந்து வளர்ந்த சிறுவர்கள் புலிக்கொடி தூக்கி இலங்கை அரசினை எதிர்க்க பழக்கப்படிருக்கின்றார்கள். இதே போலவே இலங்கையில் அரசியலும். பிழைப்பு இரு சாராரிற்கும். பாதிக்கபடுவது ஏழைகள்.

    சிங்கள அரசு புலியை(பயங்கரவாதத்தை) அழித்தது.
    இதனால் இராச்பக்சாவின் அரசு பலமானது.
    அவரின் கட்சி பலமானது.
    அவரின் குடும்பம் பலமானது.
    தன் குடும்ப நலனைக்காக்கவே தற்போது முயற்சிக்கின்றனர்.
    இவர்கழுடன் தமிழீழப் போர் ந்டத்திய புலிகழும் சேர்ந்து விட்டார்கள்.

    ஏமாற்ரப்பட்டது இலங்கை மக்கள் தனியாக தமிழரென்பதெல்ல.-துரை


  34. Rohan on August 10, 2012 9:15 am

    //அஜீத் – இந்த அரசுகள் ஏன் சாதி அடக்கு முறைக்கு எதிராக, இன அடக்கு முறைக்கு எதிராக ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை உங்களால் விளக்க முடியுமா துரை அவர்களே.//
    //அஜீத் – துரை நீங்கள் ஏதோ கேட்டால் ஏதோ கதைகிறீர்கள். இதற்கு மேல் உங்களிடம் எதிர் பார்ப்பது தவறு.//

    /துரை – தன் குடும்ப நலனைக்காக்கவே தற்போது முயற்சிக்கின்றனர்.
    இவர்கழுடன் தமிழீழப் போர் ந்டத்திய புலிகழும் சேர்ந்து விட்டார்கள்.

    ஏமாற்ரப்பட்டது இலங்கை மக்கள் தனியாக தமிழரென்பதெல்ல./

    துரை எப்படிப் பதில் சொல்வாரென்று ஊகித்து (எழுத்துப் பிழைகள் உட்பட) சில வரிகளை எனது பெயருடன் எழுதி அனுப்பியிருந்தேன். தேசம் அதைப் புறக்கணித்து விட்டது. ஆனால், துரை நான் எதிர்பார்த்தது போன்ற பின்னூட்டம் ஒன்றை அட்டகாசமாக எழுதி நான் சரியாகத் தான் ஊகித்தேன் என்று தெளிவு படுத்தியிருக்கிறார்.


  35. சாந்தன் on August 10, 2012 4:50 pm

    //..அடிகொடுக்கும்போதோ அல்லது அரவணைக்கும் போதோ சாதியைப்பற்ரி சிங்களவர் கேட்பதில்லை.(சாதி பாகுபாடு சிங்களவருடன் சேர்ந்து வாழும் போது தமிழரிடம் கடைப்பிடிப்பது கடினமான காரியம்.)….//

    அடடா….தென்னிலங்கையில் ‘சேர்ந்து வாழப் பழகிவிட்டனர்’ என்றல்லாவா சொன்னீர்கள்? இப்ப என்ன வென்றால் தமிழர் என்றால் அடியாமே?

    சிங்களவர் சாதிய அடக்குமுறையை இல்லாதொழிக்க தமிழரின் காணிகளை அடாத்தாகப் பறித்து சிங்களவருக்கு கொடுக்கிறது என்றீர்களே? காணியைக்கூட சாதிபார்க்காமல் பறித்தெடுக்கும் சாதி ஒழிப்பு வாழ்க!!!!


  36. thuari on August 10, 2012 5:04 pm

    //அடடா….தென்னிலங்கையில் ‘சேர்ந்து வாழப் பழகிவிட்டனர்’ என்றல்லாவா சொன்னீர்கள்? இப்ப என்ன வென்றால் தமிழர் என்றால் அடியாமே?//சாந்தன்.

    அரவணைப்பதென்பதை ஏன் விட்டுவிட்டீர்கள்?.

    தமிழரின் பிரச்சினை தீர்க்க இந்தியா வரணும், அமெரிக்கா வரணும். தமிழரிடையேயுள்ள சாதிவெறியர்களையடக்க சிங்கள இராணுவம் வருவதில் என்ன தப்பு?. -துரை


  37. சாந்தன் on August 10, 2012 8:50 pm

    ///…அரவணைப்பதென்பதை ஏன் விட்டுவிட்டீர்கள்?…..//
    அதானே??
    தமிழ் படமொன்றில் ஒரு சீன் வரும்…
    “ஐயோ..ஐயோ …என்னக்காப்பாதுங்க…காபாத்துங்க”
    “காப்பாத்திறண்டி..காப்பாதிறன். முதல்ல உன்ன கற்பழிச்சிட்டு…அப்புறமாக் காப்பாதிறன்”

    //.தமிழரிடையேயுள்ள சாதிவெறியர்களையடக்க சிங்கள இராணுவம் வருவதில் என்ன தப்பு?. -துரை//
    அப்படியா? சாதிவெறியர்களைக் கொன்று சாதிகுறைந்தவர்களைக் காப்பாற்றி விட்டது சிங்கள ராணுவம்!!
    சாதிவெறியர்களின் காணியை அடாத்தாகப் பறித்து சாதிகுறைந்தோருக்கு கொடுத்துள்ளது ராணுவம்!
    என்னது சிங்களவருக்கா காணி… சாதி குறைந்த தமிழருக்கில்லையா?
    வாழ்க…வாழ்க….வாழ்க!!

    சாதிவெறியர்களின் காணியை அடாத்தாகப் பறித்த ராணுவம் அவற்றில் ஒன்றையாவது சாதிகுறைந்த தமிழருக்கு கொடுத்ததற்கு ஆதாரம் ஒன்றாவது இடமுடியுமா துரை. பம்மாத்துக்கதைகள் வேண்டாம்.


  38. Rohan on August 10, 2012 9:15 pm

    //தமிழரின் பிரச்சினை தீர்க்க இந்தியா வரணும், அமெரிக்கா வரணும். தமிழரிடையேயுள்ள சாதிவெறியர்களையடக்க சிங்கள இராணுவம் வருவதில் என்ன தப்பு?. -துரை//
    சிங்கள இராணுவத்துக்குப் பயத்தில் தான் துரை போன்ற சாதிவாதிகள் அங்கு செய்ய முடியாத தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் எனது சாதி ஒன்றும் தாழ்ந்ததல்ல என்று தலை நிமிர்ந்து நிற்கவேண்டும் என்று வாதிடுகிறார்கள் என்ற உண்மையை வெளிக் கொணர்ந்திருக்கிறார் துரை.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு