“வடமாகாணத்தின் கல்விநிலை வீழ்ச்சிக்கு கற்பித்தல் சமூகமே முக்கிய காரணம்” : பா உ எம் சந்திரகுமார்: நேர்காணல் – த ஜெயபாலன்.


“வடமாகாணத்தின் கல்விநிலை வீழ்ச்சி அடைந்தமைக்கு கற்பித்தல் சமூகமே முக்கிய காரணம்” எனத் தெரிவித்தார் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான எம் சந்திரகுமார். நேற்று ஓகஸ்ட் 05 2012இல் தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணலில் பா உ சந்திரகுமார் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் “வடமாகாணத்தின் கல்வி நிலையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் கற்பித்தல் சமூகத்திடம் கடமையுணர்வும் அர்ப்பணிப்பும் இல்லாமையே கல்விநிலையை வீழ்ச்சி அடையச் செய்துள்ளது” என்றார். “பாடசாலைகளில் கற்பித்தலுக்கான வளங்களும் கற்பித்தலுக்கான சூழலும் இருந்த போதும் இவையிரண்டும் அற்ற கொட்டகைகளை தனியார் கல்விநிலையங்களை நோக்கியே மாணவர்கள் தள்ளப்படுகின்றனர் என்றும் பா உ சந்திரகுமார் தெரிவித்தார். ‘கல்வியும், மருத்துவமும்’ தமிழ் மக்கள் மத்தியில் வியாபாரப் பண்டங்களாகி விட்டது என்றும் பா உ சந்திரகுமார் தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் யாழ் இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் ஆர்வம் காட்டியமைக்கு முக்கிய காரணம் தரப்படுத்தல். அவர்களுடைய பல்கலைக்கழகக் கனவுக்கு தரப்படுத்தல் பெரும் தடையாக அமைந்தது. ஆனால் 30 வருட போராட்டம் கல்வி நிலையை மிக மோசமடையச் செய்துள்ளது. வடமாகாணத்தின் கல்வி நிலை மிகவும் கீழ் நிலைக்குச் சென்றுளதை தேசியப் பரீட்சைப் பெறுபேறுகள் எடுத்துக் காட்டி உள்ளது. தற்போது யாழ் மாணவர்களின் பல்கலைக்கழகக் கனவுக்கு தரப்படுத்தல் உறுதுணையாக உள்ளது.

“வடமாகாண கல்வித் தரத்தின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் இருந்தாலும் வட மாகாணத்தின் கல்வி நிலையை மேம்படுத்த கற்பித்தல் சமூகம் கடமையுணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவது மிக முக்கியமானது” எனப் பா உ சந்திரகுமார் வடமாகாண ஆசிரியர் சமூகத்தைக் கேட்டுக் கொண்டார்.

வடமாகாண பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை பெரும்பாலும் யாழ் பல்கலைக்கழகமே உருவாக்குகின்றது. யாழ் பல்கலைக்கழகம் பேராதனை, கொழும் பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் கீழ் நிலையில் உள்ளது. நீண்ட காலத்தில் வடமாகாண கல்வி நிலையை மேம்படுத்துவதற்கான சடுதியான இறுக்கமான நடவடிக்கைகள் யாழ் பல்கலைக் கழகத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை ஏற்றுக்கொண்ட பா உ சந்திரகுமார்; “பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுகின்ற பட்டதாரிகளிடம் துறைசார்ந்த தொழிலில் ஈடுபடுவதற்கான திறமை போதியளவு இல்லாமல் உள்ளது” எனக் கூறினார். “பல்கலைக்கழகம் புக முடியாதவர்கள் பல்வேறு வழிகளிலும் தங்கள் தொழில் திறமைகைளை வளர்த்துக் கொள்ள, பல்கலைக்கழகப் பட்டதாரிகள் வெறும் சான்றிதழ்களுடன் உலாவருகின்றனர்” எனவும் தெரிவித்தார்.

“யாழ் மாவட்டத்துடன் ஒப்பிடுகையில் வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்கள், மோசமான ஆசிரியர் வளப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகச் சுட்டிக்காட்டிய அவர், யாழ் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கான ஆசிரியர்கள் யாழில் இருந்தே வர வேண்டி இருப்பதால், அவ்வாறான ஆசிரியர்கள் வன்னி மாவட்டங்களில் பணியாற்ற விரும்பவில்லை” என்றும் பா உ சந்திரகுமார் தெரிவித்தார். இதே நிலை வன்னி மாவட்ட வைத்தியசாலைகளிலும் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். “வைத்தியர்களை ஈடுசெய்ய தென்பகுதியில் இருந்த சிங்கள வைத்தியர்கள் கடமையில் அமர்த்தப்பட்டு உள்ளனர்” எனத் தெரிவித்த அவர் வன்னி மாவட்டங்களின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தமிழ்நாட்டில் இருந்து ஆசிரியர்களை கடமைக்கு அமர்த்துவது பற்றியும் ஆராயப்படுவதாகத் தெரிவித்தார்.

வடமாகாணத்தின் கல்விநிலை தொடர்பான இந்தச் சந்திப்பின் முழுமையும் இங்கு இணைக்கப்பட்டு உள்ளது:

இது தொடர்பான வேறு பதிவுகள்

  • வேறு பதிவுகள் இல்லை!
உங்கள் கருத்து
  1. பல்லி on August 7, 2012 11:36 am

    :://வன்னி மாவட்டங்களின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தமிழ்நாட்டில் இருந்து ஆசிரியர்களை கடமைக்கு அமர்த்துவது பற்றியும் ஆராயப்படுவதாகத் தெரிவித்தார். //
    ?????


  2. ranjan on August 8, 2012 1:11 pm

    this is our social probelem it will take some tmes to recover untill this time the politicians must take strick attentions, and put forward the encouragements plans to the jaffna teachers to come forward to Vannni.


  3. Ajith on August 9, 2012 8:23 pm

    தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் யாழ் இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் ஆர்வம் காட்டியமைக்கு முக்கிய காரணம் தரப்படுத்தல். தற்போது யாழ் மாணவர்களின் பல்கலைக்கழகக் கனவுக்கு தரப்படுத்தல் உறுதுணையாக உள்ளது.///

    ஆகவே தரப்படுத்தல் முறைமை சரியானது இதனை எதிர்த்த தமிழ் ஈழப்போராடம் தவறானது என்ற முடிவுக்கு வரலாமா? அப்போது கொண்டுவரபட்ட தரப்படுதலும் இப்போது உள்ள தரப்படுதலுகும் வேறுபாடு உண்டா? அப்போது கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் மொழிவாரியான தரப்படுத்தல். அதாவது தமிழ் மூல மாணவர்கள் சிங்கள மொழி மூல மாணவர்களை விட அதிக புள்ளிகளை பெற வேண்டும் என்ற தரப்படுதலையே தமிழ் மாணவர்கள் எதிர்த்தார்கள். பின்தங்கிய மாவட்ட ரீதியான தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டது பின்பு.

    வட மாகாணத்தின் கல்வி வீழ்சிக்கு முக்கிய காரணம் சிங்கள அரசுகளின் திட்டமிட்ட இன அழிப்பு போராட்டம். இன்றும் இந்த அரசு வட மாகாணத்தின் மக்களின் விருப்பு நிலைக்கு மாறாக பயங்கரமான இரானுவமயபடுதபட்ட சூழ்நிலையை வைத்து இருப்பதன் மூலம் மக்களின் மனதில் பய உணர்வையும் சேவை மக்களுக்கு தேவையான சேவையை செய்யகூடியவர்களை மறைமுகமாக அந்த சேவையை வழங்க விடாமலும் வைத்து இருக்கிறது. இராணுவமும் EPDPயும் அங்கு இயல்பு நிலைமையை வர முடியாதவாறு ஒரு வன்முறை கலாசாரத்தை கட்டவிழ்த்து விட்டு வைத்தியர்கள ஆசிரியர்கள் கடமை உணர்வு அற்றவர்கள் என்று குற்றத்தை மற்றவர்கள் மேல் போட்டு தப்ப நினைகிறார்கள். முதலில் அங்கு இராணுவத்தையும் EPDP கூலிபடையம் வெளியேற்றி மக்கள் சுதந்திரமா தமக்கு விரும்பிய மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்து சுமூக நிலைமை வர செய்தால் அங்கு உள்ள சகல துறைகளிலும் வளர்ச்சியும் அபிவிருத்தியும் தானாகவே வரும்.


  4. vasanthi thayalan on August 10, 2012 2:22 am

    உண்மையை தைரியமாக சொல்லி உள்ளார்.. பாராட்டுக்கள்.


  5. நந்தா on August 11, 2012 12:48 am

    யாழ் தவிர்ந்த எனைய மாவட்டத்து மாணவர்களுக்குத் தரப்படுத்தல் ஒரு வரப்பிரசாதமாகத்தான் இருக்கிறது. மொழி அடிப்படையில் தரப்படுத்தல் என்று யாருக்கு காது குத்துகிறார்கள்? வழக்கமான தமிழ் ஈழ புலுடா!

    1972இல் வவுனியாவில் 1சீ 3 எஸ் பெற்ற மாணவி பேராதனை பல்கலைக் கழகத்தின் மருத்துவத் துறைக்குத் தெரிவு செய்யப்பட்டுப் படித்து இன்று ஒரு சிறந்த மகப்பேற்றுநிபுணராக இருக்கிறார்.

    யாழில் “குதிரை ஓட்டத்தை”நியாயப்படுத்த தரப்படுத்தலுக்கு எதிராக தமிழ்- சிங்களம் என்று விட்ட கரடிகளை இன்னமும் விட்டு யாரை ஏமாற்றுகிறார்கள்?

    தமிழர் கூட்டணியின் அரசியலுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்துக்குப் பல்கலை கழகமே வேண்டாம் என்றவர்கள் யாழ் பிரதேசக் கல்வி பற்றி பேசாமல் இருப்பது நல்லது.


  6. Rohan on August 11, 2012 10:13 am

    //1972இல் வவுனியாவில் 1சீ 3 எஸ் பெற்ற மாணவி பேராதனை பல்கலைக் கழகத்தின் மருத்துவத் துறைக்குத் தெரிவு செய்யப்பட்டுப் படித்து இன்று ஒரு சிறந்த மகப்பேற்றுநிபுணராக இருக்கிறார்.//

    மிக்க நல்லது. வவுனியா/ கிளிநொச்சி மருத்துவமனையில் தான் அவர் சேவை செய்கிறார் என்று யாராவது உறுதிப் படுத்த முடியுமா?

    அவரும் மகாஜனக் கல்லூரியில் சென்று படித்து விட்டு யாழ்ப்பாணி வசைபாடிகளாக இருக்கும் சிலர் போன்று யாழ்ப்பாணத்தில் தான் போய்ப் படித்திருப்பார் என்று தோன்றுகிறது.

    எல்லாப் பிரதேசங்களிலும் திறமைசாலிகள் இருக்கிறார்கள். 4எஸ் பெற்று என்னுடன் பல்கலைக்கழகம் வந்த கிழக்கு மாகாண மாணவர் ஒருவர் இன்று பிராந்தியப் பொறியியலாளராக இருக்கிறார். வாய்ப்புகள் இல்லாது அவர்களில் சிலர் மங்கிப் போய் விடுவார்கள். ஆனால், சும்மா பம்மாத்தி வாய்ப்புப் பெற்றவர்களும் உள்ளார்கள். அவர்களுள் ஒருவர் அக்கரைப்பற்றிலிருந்து வந்திருந்தார். தொகையீடு என்றால் எப்படிச் செய்வது என்று அவருக்குத் தெரியாமல் இருந்த போது அவருக்கு பொறியியல் பீடத்தில் கொடுக்கப்பட்ட இடம் சரி தானா என்று எனக்குக் குழப்பம் வந்தது!

    //மொழி அடிப்படையில் தரப்படுத்தல் என்று யாருக்கு காது குத்துகிறார்கள்? வழக்கமான தமிழ் ஈழ புலுடா!//

    கே எம் டி சில்வா, சீ ஆர் டி சில்வா என்று இரண்டு தமிழ் ஈழ புலுடாக்காரர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்போம். கூடவே, இங்கே புலுடா விடுவது யாரென்பதையும் துணிவோம்!

    In 1971, a system of standardisation of marks was introduced for admissions to the universities, obviously directed against Tamil-medium students.

    K.M. de Silva describes it as follows:
    ‘The qualifying mark for admission to the medical faculties was 250 (out of 400) for Tamil students, whereas it was only 229 for the Sinhalese. Worse still, this same pattern of a lower qualifying mark applied even when Sinhalese and Tamil students sat for the examination in English. In short, students sitting for examinations in the same language, but belonging to two ethnic groups, had different qualifying marks.’

    He observes that by doing this in such an obviously discriminatory way, ‘the United Front Government of the 1970s caused enormous harm to ethnic relations.’

    This was not the end; in 1972 the ‘district quota system’ was introduced, again to the detriment of the Ceylon Tamils. The historian C.R. de Silva wrote:

    ‘By 1977 the issue of university admissions had become a focal point of the conflict between the government and Tamil leaders. Tamil youth, embittered by what they considered discrimination against them, formed the radical wing of the Tamil United Liberation Front. Many advocated the use of violence to establish a separate Tamil state of Eelam. It was an object lesson of how inept policy measures and insensitivity to minority interests can exacerbate ethnic tensions.’


  7. Ajith on August 11, 2012 3:56 pm

    நந்தா,
    உங்கள் புலுடா இனி யாரிடமும் அவியாது. இந்த தரப்படுத்தலால் நானும் பாதிக்கப்பட்டவன். சிங்களவன் கூட ஏற்றுகொண்ட உண்மையை இனவாத சிங்களத்துக்கு வால் பிடிக்கும் தமிழ் பேசும் புலுடாகளை என்ன என்பது.


  8. Rohan on August 11, 2012 9:48 pm

    //உங்கள் புலுடா இனி யாரிடமும் அவியாது. இந்த தரப்படுத்தலால் நானும் பாதிக்கப்பட்டவன். சிங்களவன் கூட ஏற்றுகொண்ட உண்மையை இனவாத சிங்களத்துக்கு வால் பிடிக்கும் தமிழ் பேசும் புலுடாகளை என்ன என்பது.//

    புலுடா இனி யாரிடமும் அவியாது? இவர் இப்படி எத்தனை தடவைகள் பேசி கிட்டத்தட்ட அத்தனை தடவைகளுமே மூக்கைக் காயப்படுத்திக் கொண்டவர் தான். புரிபவர்களுக்குத் தான் உறைக்கும்.

    சில போட்டிகளில் handicap என்று கொடுப்பார்கள். அவரவர்களின் வல்லமைக் குறைவுகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கும் சம வாய்ப்புத் தரும் பொருட்டு விசேட சலுகைகளுடன் போட்டிகளில் அவர்கள் கலந்து கொள்வர். ஓட்டப் போட்டி என்றால், அவர்கள் சில மீற்றர்கள் முன்னாலிருந்து ஆரம்பிப்பர். ஆனால், ஒலிம்பிக் போட்டியில் ஒரு இந்திய வீரரைக் கொண்டு வந்து இவர் அரிசி சாப்பிடும் ஆசியர் – இவர் ஐந்து மீற்றர் முன்னாலிருந்து ஆரம்பிப்பார் என்று விடுவதில்லை.

    நல்ல வசதிகள் இல்லாத இடங்களிலிருந்து வரும் மாணவர்களுக்குக் கதவுகளைத் திறந்து விடுவதில் எனக்கு மிகுந்த சம்மதம் அப்போதும் இருந்தது – இப்போதும் இருக்கிறது.

    அஜித் போன்று பாதிக்கப்படாது பல்கலைகழகம் புகுந்திருந்ததால் வந்த ‘பெரிய மனப்பான்மை’ அல்ல இது – என்னுடன் கற்று பல்கலைக்கழகம் புகத் தவறி வாழ்விலும் ‘தோற்றுப் போன’ பல முகங்கள் எனது மனதில் அடிக்கடி வந்து போவது வழமை.

    கோட்டா முறையில் யாழ்ப்பாண மாவட்டம் மட்டுமன்றி கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டமை உண்மை தான். அம்பாறையிலிருந்தும் மாத்தறையிலிருந்தும் உயர்கல்விக்காக மாணவர்கள் அதிகளவில் பல்கலைக்கழகம் வந்ததும் தரப்படுத்தல் திறந்து விட்ட கதவின் ஊடாகத் தான்.

    ஆனாலும் ஆங்கிலத்தில் sunset clause என்று சொல்வது போல, ஒரு கட்டுப்பாட்டை வைத்திருக்க வேண்டும்.
    1. பின்தங்கிய பிரதேசக் கோட்டாவில் பல்கலைக்கழகம் வருபவர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் தமது பிரதேசத்தில் பணி செய்ய வேண்டும்.
    2. பின்தங்கிய பிரதேசக் கோட்டா முறை 5 ஆண்டுகளுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும் (1972இல் அறிமுகப்படுத்தப்பட்டால் 1977 வரை). அக்காலகட்டத்தில் அரசு நல்ல ஆசிரியர்களை அறிமுகப்படுத்துவதுடன், கற்பித்தல் வசதிகளை வளம்படுத்தல், அப்பிரதேசப் பட்டதாரிகள் – பல்கலைக்கழக மாணவர்கள் பங்களிப்புடன் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளைக் கிரமமாக நடாத்தி கல்வியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி மாணவர்களின் ஆர்வத்தை வளர்த்திருக்க வேண்டும்.
    3. பின்தங்கிய பிரதேசக் கோட்டா அறிமுகப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளில் வெறும் 10 வீதத்துக்குக் குறைக்கப்பட்டிருக்கலாம். திறமை மாணவர்களுக்கு 40-50%, பிரதேசவாரியான கோட்டா 50-40% என்று வைக்கப்பட்டிருக்கலாம்.

    அதை விட்டு விட்டு, கல்வி அபிவிருத்தியில் எந்த அக்கறையும் காட்டாது பின்தங்கிய கோட்டா ஒன்றும் பிரதேச அடிப்படை என்றும் குழாய்களைப் பெரிதாகத் திறந்து விட்டு விட்டு அரசுகள் தமது வேலைகளைப் பார்க்கப்போய் விட்டன.

    பின்தங்கிய பிரதேசக் கோட்டாவில் பல்கலைக்கழகம் போன பல மாணவர்கள் ‘கணக்கில் எடுக்கப்படும்’5 வருடங்களில் 3 வருடங்களாவது பின்தங்கிய பிரதேசங்களில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை குழம்பாதவாறு ‘முன்னேறிய பிரதேசங்களில்’ கற்றார்கள்.

    மற்றைய நாடுகளில் உரிய விளையாட்டு வசதிகள் இல்லை என்பதற்காக அமெரிக்க ஓட்ட வீரர்கள் கால்களில் கற்களைக் கட்டிக் கொண்டா ஓடுகிறார்கள்?

    அது தவிர, இப்படி ஓடுகிற அமெரிக்க வீரர்கள் எல்லோருமே தந்தை இல்லாத ஏழைக் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் தானே.

    கதை சொல்ல வருகிற நந்தா கூட கிராமத்துப் பாடசாலையாக இருந்தாலும் சிறந்த பாடசாலையான மகாஜனாவில் படித்தவர் தான், இல்லையா?


  9. நந்தா on August 13, 2012 5:25 am

    கே.எம்.டீ.சில்வாவை உதாரனம் காட்டுபவர்கள் அவரின் சரித்திரப் புத்தகத்தப் படித்தால் உடனெயே பொய்யன் என்பார்கள். அதாவது இந்த தமிழ் ஈழக் கும்பல்கள் அனைத்தும் இந்த சில்வாவின் வரலாற்று புத்தகங்களை “பவுத்த” பேரினவாதம் என்று முத்திரை குத்தினார்கள். சிலவேளைகளில் சில்வா தரப்படுத்தல் பற்றிச் சொல்லியிருக்கும் தகவல்கள் எப்படி இந்த ஈழக் காரர்களுக்கு உண்மையாகத் தெரிகிறது?

    பேராதனையில் படித்தவர் கிளினொச்சியில்/வவுனியாவில் வேலை சேய வேண்டுமாம். அதென்ன அவர் லண்டனிலோ அவுஸ்த்திரேலியாவிலோ வேலை செய்ய முடியாதோ?

    தரப்படுத்தலால் சிஙளவரும் பாதிக்கப்பட்டார்கள் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். தமிழர் மாத்திரம் பாதிக்கப்பட்டார்கள் என்று எந்த சிங்களவனும் சொன்னதாகத் தெரியவில்லை.

    தரப்படுத்தலால் சிஙளவரும் பாதிக்கப்பட்டார்கள் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். தமிழர் மாத்திரம் பாதிக்கப்பட்டார்கள் என்று எந்த சிங்களவனும் சொன்னதாகத் தெரியவில்லை.

    ஆயினும் தற்போதைய கல்வினிலை தரப்படுத்தலால் வந்தததா அல்லது தமிழ் ஈழத்தால் வந்ததா என்று யாரும் சொல்லக் காணொம்!

    புலிகள் சட்டக் கல்லூரி எல்லாம் நடத்தி தமிழ் செல்வன் பட்டம் கொடுத்து அந்த சட்டப்புலிகள் புலிகளின் நீதிமன்றங்களில் நீதிபதி பதவிகளிலும் இருந்தார்கள். அப்போது பாருங்கள்! புலிகள் ஒருநாட்டு நிர்வாகத்தையெ நடத்துகிறார்கள் என்று சொன்னார்கள். சிலவேளைகளில் புலிகள் இருந்திருந்தால் ஒரு “சூப்பர்” பலகலைக் கழகத்தை நடத்தியிருப்பார்கள் என்றும் சகல தமிழ் மாணவர்களையும டாக்டர், என்சினியர் ஆக்கியிருப்பார்கள் என்று புலி வால்கள் பிரலாபிக்கலாம்.


  10. karthti on August 13, 2012 10:47 am

    வன்னியில் வாழ்கின்றவன் என்ற வகையில் கூறுகிறேன் கடந்த காலத்தில் அபிவிருத்தியிலும் ஏனைய நடவடிக்கைகளிலும் புறக்கணிக்ப்பட்ட எமது கிராமங்கள் போன்று பல கிராமங்கள் தற்போது சந்திரகுமார் அவா;களின் நடவடி க்கைகளால் மாற்றம் கண்டு வருகிறது ஆதாவது புறகணிப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்திக்கு முன்னூரிமை கொடுத்து செயற்பட்டு வரும் அவரைபோன்ற பாராளுமன்ற உறுப்பினர்பகளே தற்போது தமிழ் மக்களுக்குத் தேவை அதை வெளிநாடுகளில் உள்ள எல்வலாராலும் புரிந்துகொள்ள முடியாது பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவனாக அந்த மக்களுடன் வாழ்கின்றவன் என்ற வகையில் கூறுகின்றேன் எங்களுடைய உணர்வுகள் எதிர்பார்ப்புகள் தேவைகள் வேறு உங்களுடைய செயற்பாடுகள் வேறு தலைவலியும் காச்சலும் தனக்கு தனக்கு வந்தால்தான் தெரியும் வலி


  11. Rohan on August 13, 2012 10:54 am

    //பேராதனையில் படித்தவர் கிளினொச்சியில்/வவுனியாவில் வேலை சேய வேண்டுமாம். அதென்ன அவர் லண்டனிலோ அவுஸ்த்திரேலியாவிலோ வேலை செய்ய முடியாதோ?//

    கிளிநொச்சியில் பிறப்போமாம், யாழ்ப்பாணத்தில் படிப்போமாம், கிளிநொச்சி மாவட்டம் என்று சொல்லி பல்கலைக்கழகம் போவோமாம், பட்டம் வாங்கிவிட்டு யாழ்ப்பாணத்தில் நல்ல சீதனம் வாங்கி பெண் எடுப்போமாம், கொழும்பில் வேலை செய்வோமாம், அவ்வபோது யாழ்ப்பாணிகளை நக்கல் செய்து கொள்வோமாம், இங்கிலாந்திலோ அவுஸ்திரேலியாவிலோ குடி போவோமாம்,

    பின்தங்கிய பிரதேசங்களைப் பின்தங்கிய பிரதேசங்களாகவே தொடர்ந்தும் வைத்திருப்பதில் முக்கிய பங்களிப்பு இவர்களிடம் இருந்து தான் போயிருக்கிறதுஇதெல்லாம் சரியான விஷயங்கள் தான் என்று புலுடா விடுவோமாம்.

    அது சரி – வவுனியாவில் 1சீ 3 எஸ் பெற்ற மாணவி மகத்தான மகப்பேற்று நிபுணராக சிட்னியிலோ இலண்டனிலோ வேலை செய்கிறார் என்றால் சொல்லிவிட்டுப் போவதை விட்டு விட்டு இப்படி எல்லாம் கதை அளக்க வேண்டியதில்லையே! வன்னியில் ஆயிரக்கணக்கில் கட்டப்பட்ட பாடசாலைகளை எண்ணி முடித்து விட்டு நந்தா வந்து வக்கணை பேசலாம்.

    //இந்த சில்வாவின் வரலாற்று புத்தகங்களை “பவுத்த” பேரினவாதம் என்று முத்திரை குத்தினார்கள். சிலவேளைகளில் சில்வா தரப்படுத்தல் பற்றிச் சொல்லியிருக்கும் தகவல்கள் எப்படி இந்த ஈழக் காரர்களுக்கு உண்மையாகத் தெரிகிறது?//

    அடேங்கப்பா – அப்படி ஒரு பெளத்த பேரினவாதியா தரப்படுத்தலால் தமிழர்களின் மேல் விழுந்த அடி பற்றி இப்படிப் பதிவு செய்திருக்கிறார்? இதை விடச் சிறந்த ஆதாரம் ஈழக்காரர்களுக்கு எங்கு கிடைக்கப்போகிறது? (இது நந்தாவுக்குப் புரியாத லொஜிக் தான் – இருந்தாலும்…)


  12. நந்தா on August 13, 2012 8:48 pm

    சிங்களவன் அதுவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அனியாயம் என்று சொல்லி தமிழ் ஈழம் என்று கத்துவார்களாம். யாழ்ப்பாணத்துக்குப் பல்கலைக் கழகம் என்றால் வேண்டாம் என்று கறுப்புக் கொடி காட்டுவார்களாம். கிடைத்த பின் உள்ளே புகுந்து கஜேந்திரன் கும்பலுடன் ஒஸியில் தின்று புலிப் பிரச்சரமும் செயலாமாம்.

    யாழ்ப்பாணத்தவர்கள் பேராதனைக்குப் போக விரும்புவது தமிழ் மக்களுக்கு சேவை செய்ய என்கிறார் றோகன். யாழ்ப்பாணத்தவர்களின் இந்தப் பல்கலைக் கழகப் பிரச்சனையே சீதனமும் ஆதனமும்தான்.

    யாழ்ப்பானத்தில் படித்துக் கொண்டு கிளினொச்சி என்று பல்கலைக் கழகம் போக முடியாது.

    அடுத்து சில்வாவின் தகவல்களுக்கான ஆதாரத்தைத் தரமுடியுமா? அல்லது அதுவும் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ற கதை போலத்தானோ?


  13. Rohan on August 14, 2012 8:54 am

    //யாழ்ப்பாணத்தவர்கள் பேராதனைக்குப் போக விரும்புவது தமிழ் மக்களுக்கு சேவை செய்ய என்கிறார் றோகன். //

    எங்கு சொன்னேன்? தமிழ் புரியாதவர்களுடன் பேச முற்படுவதில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கத் தான் செய்கிறது. அவர்கள் சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பம் உண்டு – ஆனால், சொந்தத் திறமையில் முன்னாள் வந்தவர்கள் சொந்த விருப்பபடி எங்கும் போகலாம். மாவட்டத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு வந்தவர்கள் மாவட்டத்துக்கும் கொஞ்சம் செய்யத் தான் வேண்டும்.

    //யாழ்ப்பானத்தில் படித்துக் கொண்டு கிளினொச்சி என்று பல்கலைக் கழகம் போக முடியாது.//

    கடைசி மூன்று ஆண்டுகளில் ஒன்றரை ஆண்டுக்கு மேல் கிளிநொச்சியில் படித்திருந்தால் போதும்…

    முதலில்:

    Working paper on University Admission 1975

    Determination of the district

    (a) In the case of school candidates,successful in the G.C.E. (A.L.) Examination, the district in which the school is situated will be considered as the distriot of origin provided that he has had

    (i) at least three years study in grades 10, 11, and 12 in that district:
    OR
    (ii) at least 2 years study in grades 10, 11 and 12 in that district and his family is permanently resident in the district for a period of more than 3 years.

    பின்னர்:
    For purpose of university admission, the district of a candidate will be determined as follows:-

    The district of any candidate (whether school or private) will be the district of location of school/schools in which the candidate was enrolled (on the basis of school records) for the highest number of days during the three-year period ending on the last day of the month immediately preceding the month in which he/she sat the G.C.E (A/L) Examination to qualify for admission even in case of having a proof of residence in another district for a period more than the days he/she was enrolled in a school specified above. Provided however, the district of a candidate who has been enrolled in a school/schools for a period of less than one year during the three – year period stipulated above will be determined on the basis of the location of school/schools in which he/she had been enrolled, permanent place of residence of the candidate and other evidence as decided by the UGC.

    //அடுத்து சில்வாவின் தகவல்களுக்கான ஆதாரத்தைத் தரமுடியுமா? //

    ஆஹா… ஆதாரம் வைத்துக் கொண்டு மட்டுமே பேசுகிறவர் கேள்வி ஆதாரம் கேட்பது நன்றாகத் தான் இருக்கிறது.

    கேஎம் சில்வா என்ன ஆதாரத்தை வைத்துக் கொண்டு சொல்கிறார் என்பதை அவரைக் கேட்டுத் தான் அறிந்து கொள்ள வேண்டும். தோளுக்கு பின்னால் நின்று பார்ப்பது மட்டும் போதாது. ஆனாலும், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவை உசாவினால் சில எளிய உண்மைகள் தெரிய வரும். இவை நந்தாவுக்காக எழுதப்படவில்லை. நந்தா சொல்வதில் தப்பித் தவறி ஏதாவது உண்மை இருந்துவிடுமோ என்று நினைத்துவிடக் கூடிய வாசகர்களின் நலன் கருதி மட்டுமே…

    At discussions with officials from theExaminations Department and the University, it transpired that as far back as 1970cthere had been allegations that selections to the Engineering Faculty at Peradeniya had been unfair. A linguistic basis for deciding admissions had been decided upon by the Government.

    பரீட்சைத் திணைக்களத்தினதும் பல்கலைக்கலகத்தினதும் அலுவலர்களுக்கிடையில் 1970இல் நடைபெற்ற கலந்துரையாடல்களில் பேராதனைப் பல்கலைக் கழகத்துக்கு நடைபெறும் தெரிவுகள் முறையற்றன என்று குற்றம் சாட்டப்பட்டது. அனுமதிக்கான தெரிவுகள் மொழிவாரியான அடிப்படையில் அமைய வேண்டும் என்று அரசு தீர்மானித்தது.

    Where the marking is subjective particularly in the essay type of paper, there oan be disparities in the student performance between the different media. It has also been submitted that the intrinsic differences inithe languages result in the same question being comprehended differently in the different language media.

    மாணவர்களின் ஆற்றலை மதிப்பிடும் வகையில் புள்ளியிடப்படும் போது வெவ்வேறு மொழியில் அளிக்கப்படும் பதில்கள் சமமற்ற முறையில் புள்ளியிடப்படலாம். குறிப்பாக, ஒரே கேள்வியானது வேறு மொழிகளில் வெவ்வேறு விதமாக விளங்கப்படலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

    //அல்லது அதுவும் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ற கதை போலத்தானோ?//

    இவர்களுக்காகப் பரிதாபப்பட மட்டும் தான் முடியும். மீசை மண்ணைத் துடைத்துக் கொண்டு போகட்டும்! கொஞ்சமாவது புரியும் ஆற்றல் இருந்தால் அடுத்த முறை வாயைத் திறக்க முன்னர் கொஞ்சம் யோசித்துக் கொள்வார்கள். இருந்தால்!


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு