கைதான சீன மீனவர்கள் தூதரகத்திடம் ஒப்படைப்பு


தடுத்து வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்த 37 சீன மீனவர்கள் அந்நாட்டு தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சீன அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதை இலங்கை கடற்படையின் பேச்சாளர் கோசல வர்னகுலசூரிய பிபிசியின் சந்தேஷ்யவிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஞாயிறன்று இரவு மட்டக்களப்பு கடற்பிராந்தியத்தை அண்மித்த பகுதியில் இரண்டு இழுவைப் படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 37 சீனமீனவர்கள் மற்றும் இரண்டு இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இவர்கள் திருகோணமலை துறைமுகப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டனர்.

இந்தப் படகுகளுக்கு இலங்கை மீன்பிடித்துறை அமைச்சால் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் கூட இலங்கைக் கடற்பரப்பில் 200 கடல்மைல்களுக்கு அப்பால் இவர்கள் மீன்பிடிப்பதற்கே அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும் இவர்களோ வழங்கப்பட்ட அனுமதியையும் மீறி பத்து அல்லது பதினைந்து கடல் மைல் பிரதேசத்துக்குள்ளேயே மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக இவர்களை விடுவிக்குமாறு இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் கோரிக்கை விடுத்தது.

BBC TAMIL

._._._._._._._.

இலங்கை கடற்பரப்பில் 37 சீனப் பிரஜைகள் கைது
06 08 2012

சட்டவிரோதமாக இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 37 சீனப் பிரஜைகள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்புக்கு கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் இரண்டு படகுகளுடன் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த படகுகளில் பணியாற்றியவர்களில் இலங்கையர்கள் இருவரும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கடற்தொழில் அமைச்சுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய இலங்கையில் இருந்து 200 கடல் மைலுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான அனுமதி சீனாவுக்கு உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அந்த உடன்படிக்கையை மீறும் வகையில் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வேறு பதிவுகள்

  • வேறு பதிவுகள் இல்லை!
உங்கள் கருத்து
  1. பல்லி on August 7, 2012 11:30 am

    //அந்த உடன்படிக்கையை மீறும் வகையில் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.//

    கடலுக்குள் வந்தால் கைது செய்கிறார்கள்;
    நாட்டுக்குள் அழைத்து வந்து வேலை கொடுக்கிறார்கள்.
    சில வேளை கடல் தொழிலாளரை தெரு தொழிலாளர் ஆக்கும் திட்டமோ??


  2. சாந்தன் on August 7, 2012 4:29 pm

    முன்னர் ஒரு முறை (2007இல் என நினைக்கிறேன்) ஸ்ரீலங்கா அரசின் ‘அனுமதியுடன்’ ‘மீன்பிடித்துக்’ கொண்ட சீன மீன்பிடிக்கப்பல் ஒன்று ‘மர்மமான முறையில்’ தாழ்ந்து போனது நினைவுக்கு வருகிறது !

    இரண்டு மூன்று நாள் பொறுங்கள் நிறைய கலகலப்புக்கு இடம் இருக்கிறது!!


  3. பல்லி on August 7, 2012 8:29 pm

    //இரண்டு மூன்று நாள் பொறுங்கள் நிறைய கலகலப்புக்கு இடம் இருக்கிறது!!//
    30 வருடம் பொறுத்த நாம் ஒரு இரு நாள்கள் பொறுப்பது கஸ்ற்றம் இல்லையே; (கலகலப்புக்காய்)


  4. சாந்தன் on August 7, 2012 9:53 pm

    அதற்கெல்லாம் அவசியம் இல்லாமல் போய்விட்டது. இப்போதே ஆரம்பிட்து விட்டார்கள் கலகலப்பை!!

    1) சீன மீனவர்களின் அசைவுகளை ஒருபோதும் ஸ்ரீலங்கா நேவி கட்டுப்படுத்தவில்லை. –
    2) அவர்கள் எங்கும் சென்றுவர அனுமதிக்கப்பட்டது.
    3) அவர்கள் ரோலரில் தொடர்ந்து இருக்கப்போகிறார்களா இல்லை வீடு திரும்பப்போகிறார்களா என அவர்கள் தீமானிக்கலாம்.
    4) ஸ்ரீலங்கா நேவிக்காரர் சொல்கிறார்கள் நாம் ஒருபோதும் ரொய்ட்டருக்கு செய்தி கொடுக்கவில்லை.
    5) இந்த இரண்டு ரோலர்களும் ஸ்ரீலங்காவுக்குச் சொந்தமானவை. அவை சீன நிறுவனம் ஒன்றிடம் வாங்கப்பட்டவை. அதில் இருந்த பழைய எழுத்துகளைப் பார்த்து ஸ்ரீலங்கா நேவி குழம்பி இருக்கலாம்.
    6) ஸ்ரீலஙாக் நேவிக்கொமாண்டர் சொல்கிறார் கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடித்தலுக்காக கைது செய்யப்பட்டுள்லனர் அவர்கள் பொலிசிடம் பாரம் கொடுக்கப்படுவார்கள் என.
    7) கைது செய்யப்பட்ட மீனவர்கள் மட்டக்களப்பு அருகில் கைது செய்யப்பட்டனர். ரோலர்கள் ஸ்ரீலங்காவில் பதிவுசெய்யப்பட்டவை ஆனால் அவை ஸ்ரீலங்கா பிரத்தியேக பொருளாதார வலயத்துக்கு அப்பால் மீன்பிடிக்கவே அனுமதி உண்டு!

    எல்லாவற்றிலும் விட அட்டகாச ஜோக் ஸ்ரீலஙகாவின் எல்லைக்கு அப்பால் மீன்பிடிக்க ‘அனுமதி’ வழங்கினராம். போகிறபோக்கில் நான் அம்ரிக்காவில் மீன்பிடிக்க ஸ்ரீலங்காவிடம் அனுமதி வாங்கவேண்டி வருமோ? சொல்லி வச்சமாதிரி ஒவ்வொருகப்பலிலும் ஒரு ஸ்ரீலங்கன்தான் , மிச்சம் சீனர்கள். 19 பேரை ‘மீன்பிடிக்க’ விட்டு ஒருவர் சுப்பவைஸ் பண்ணினாராக்கும்.

    கலகலப்புக்கு இன்னும் இடம் இருக்கு போல!!!


  5. சாந்தன் on August 7, 2012 9:54 pm

    //..30 வருடம் பொறுத்த நாம் ஒரு இரு நாள்கள் பொறுப்பது கஸ்ற்றம் இல்லையே; (கலகலப்புக்காய்)…//
    30 வருடமாய் கலகலப்பு இல்லாமலோ இருந்தீர்கள்?
    உண்மைதான்….கொசிப்படித்தல் எல்லாம் இனிச் சரிவராதுதானே!!


  6. பல்லி on August 8, 2012 11:38 am

    //30 வருடமாய் கலகலப்பு இல்லாமலோ இருந்தீர்கள்?//
    அதில் என்ன சந்தேகம்:??

    //உண்மைதான்….கொசிப்படித்தல் எல்லாம் இனிச் சரிவராதுதானே!!//
    கலகலப்பெனில் பேசவேண்டும் சிரிக்க வேண்டும்: இது இரண்டுக்கும் பொட்டரின் அனுமதி வேண்டுமே (அன்று) அதை பெறுவதுக்கு சாந்தனின் உதவி வேண்டும்(இதுவும் அன்றுதான்) ஆனால் இன்று பேசவோ அல்லது ஏசவோ என்னிடம் கொசிப்பு தனம் இருந்தால் போதும்; ஆங்கில நாளேடுகளையோ அல்லது சனல் (5.6.7……… என தேட தேவையில்லை;

    //நான் அம்ரிக்காவில் மீன்பிடிக்க ஸ்ரீலங்காவிடம் அனுமதி வாங்கவேண்டி வருமோ? //
    யார் கண்டது அப்படியும் வரலாம்; லண்டனில் ஒரு கோவிலை யார் நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதை கிளிநொச்சியில் கஸ்ரோ அண்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்தத்தை மறக்கலாமோ?? ஏன் உங்க வக்கில் கூட கே பி அண்ணனுடன் கொழும்பில் ஜக்கியமாகி சாந்தனுக்கு இப்படிதான் தூண்டில் போட வேண்டும் என கோடு போடலாமல்லவா??

    நேற்று போல் இன்று இல்லை;
    இன்று போல் நாளையும் இருக்காது;(கொசிப்புதான்)


  7. Rohan on August 8, 2012 1:35 pm

    //நேற்று போல் இன்று இல்லை;
    இன்று போல் நாளையும் இருக்காது;(கொசிப்புதான்)//

    ஏன் இருக்காது?

    நேற்றும் துட்டுக்கு ரெண்டு கொட்டப்பாக்கு… இன்றும்…. நாளையும்…. என்றும்….

    இடையில் ஒரு இடைவேளை வரும்… ஆனால், கொட்டப்பாக்கு விஷயம் மாறாது தொடரும்!


  8. thuari on August 8, 2012 2:43 pm

    //ஏன் இருக்காது?//றோகன்

    வட்டுக்கோட்டைக்கு போகின்ற வழி எது? துட்டுக்கு இரண்டு கொட்டப்பாக்கு.
    தமிழீழம் காண வழியெது? திரும்பவும் ஒரு முள்ளிவாய்க்கால்.

    புலிகளிற்கு நேற்று, இன்றும், நாளையும் ஒன்றுதான். (புலியென்றால் தன்னினத்தை தானகவே ஏமாற்ரி வாழும் மனித இனப்பிறவிகள் பேசும் மொழி தமிழ்).-துரை


  9. பல்லி on August 8, 2012 8:07 pm

    //ஏன் இருக்காது? //
    பல்லியும் றோகனும் பாதுகாப்பாய் இருப்பதால் என வைத்து கொள்வோமே;

    //நேற்றும் துட்டுக்கு ரெண்டு கொட்டப்பாக்கு… இன்றும்…. நாளையும்…. என்றும்….

    இடையில் ஒரு இடைவேளை வரும்… ஆனால், கொட்டப்பாக்கு விஷயம் மாறாது தொடரும்!//
    எல்லோரையும் உங்கள் கூட்டத்தில் இணைப்பது உங்கள் பெரும் தன்மையை காட்டுகிறது; (எதுக்கும் துரையின் கருத்தையும் கவனிக்கவும்)


  10. Rohan on August 8, 2012 9:34 pm

    //தமிழீழம் காண வழியெது? திரும்பவும் ஒரு முள்ளிவாய்க்கால்.
    புலிகளிற்கு நேற்று, இன்றும், நாளையும் ஒன்றுதான். (புலியென்றால் தன்னினத்தை தானகவே ஏமாற்ரி வாழும் மனித இனப்பிறவிகள் பேசும் மொழி தமிழ்).-துரை//

    திருவிழா ஊரில் நடக்கும். லெளட் ஸ்பீக்கர் எல்லாம் கட்டி பாட்டுகள் போடுவார்கள்.

    முல்லை மலர் மேலே மொய்க்கு… மொய்க்கு… மொய்க்கு… என்று பாட்டு திணறும்.

    ‘வந்திட்டாண்டா இவன் பிறகும் இந்தக் கீறல் விழுந்த றெக்கோட்டோடை’ என்பான் எனது தம்பி.

    துரையின் ‘மொய்க்கு மொய்க்கு’ தொடரட்டும்.


  11. thuari on August 9, 2012 7:02 am

    .//வந்திட்டாண்டா இவன் பிறகும் இந்தக் கீறல் விழுந்த றெக்கோட்டோடை’ என்பான் எனது தம்பி. துரையின் ‘மொய்க்கு மொய்க்கு’ தொடரட்டும்.//றோகன்

    30 வருடமாக மாற்றுக்கருத்தாளர் ஒரே புலியின் செயலை எதிர்த்தார்கள் அப்போதும் எங்களைத் துரோகிகள் என்றீர்கள். புலிகளா, துரோகிகளா முள்ளிவாய்க்காலின் அழிவிற்கு காரணம்? இராசபகசா ஆக மாற்ரிவிட்டீர்களே என்ன அரசியல் இராசதந்திரம் உங்கழுடையது.-துரை


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு