யாழ் பா உ சந்திரகுமார் உடன் லண்டனில் சந்திப்பும் கேள்வி நேரமும்


லண்டன் வந்துள்ள இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாருடனான சந்திப்பும் கேள்வி நேரமும், வெள்ளி மாலை – ஓகஸ்ட் 10 2012 மாலை ஆறு மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஈழமக்கள் ஜனநாயக முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சந்திரகுமார் குறிப்பாக கிளிநொச்சியை மையமாகக் கொண்டு கல்வி மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இச்சந்திப்பின் போது பிரதானமாகக் கேள்வி நேரமும் இடம்பெற உள்ளது. கேள்வி நேரத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரிடம் சபையோர் தங்கள் கேள்விகளை முன்வைக்க முடியும்.

தேசம்நெற் கடந்த காலங்களில் அரசியல் பிரமுகர்களுடன் கேள்விநேரத்தை ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக பா உ சந்திரகுமார் உடனான கேள்வி நேரம் இடம்பெறுகிறது.

பா உ சந்திரகுமார் உடனான சந்திப்பும் கேள்வி நேரமும்:

காலம்: ஓகஸ்ட் 10 2012 வெள்ளி மாலை 6:00 மணி

இடம்: Lord Brooke, 47 Shernhall Street, Walthamstow, London, E17 3EY

பாராளுமன்ற உறுப்பினர் எம் சந்திரகுமாருடனான இச்சந்திப்பிலும் கேள்வி நேரத்திலும் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்கள் வருகையை கீழுள்ள தொலைபேசி இலக்கத்திலோ அல்லது மின் அஞ்சலிலோ பதிவு செய்துகொள்ளும்படி தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறோம்.

தொ இல : த ஜெயபாலன் 07800 596 786, த சோதிலிங்கம் 0784 6322 369
மின் அஞ்சல் : ரி கொன்ஸ்ரன்ரைன் tarrin@desilugroup.com

இது தொடர்பான வேறு பதிவுகள்

  • வேறு பதிவுகள் இல்லை!
உங்கள் கருத்து
  1. T Sothilingam on August 9, 2012 8:35 am

    இக்கூட்டத்திற்குச் சமூகமளிக்க முடியாதவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரிடம் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கே பதிவிடவும். நன்றி.

    sothi@btinternet.com


  2. பல்லி on August 9, 2012 12:24 pm

    தமிழர் தேசியத்திலும்; அரசின் வடகிழக்கு அபிவிருத்தி மற்றும் செயல்பாடுகள்; ஏன் வடகிழக்கில் அரசியல் தலமைதுவ போட்டிகளிலும் காட்டும் அக்கறை (தமிழ் தலமைகள்) வடகிழக்குக்கு தாம் என்ன செய்ய வேண்டும் என்பதிலோ அல்லது இவ்வளவு பெரிய அழிவை சந்தித்த மக்களுக்காய் அவர்கள் எதிர் காலத்துக்காய் அனைத்து தமிழ் தலமைகளும் ஏதோ ஒரு விட்டு கொடுப்புடன் ஒற்றுமையாய் செயல்படாது நீயா நானா என போட்டி போட்டு கொண்டும்: அரசின் அதிகாரதனத்தையும் செயல்பாட்டையும் நியாயபடுத்தி கொண்டும் காலத்தை போக்காட்டும் தமிழ் அரசியல் தலமைகள் அல்லது அங்கதவர்கள் பற்றிய உங்களுடைய கருத்து என்ன?? இது உங்களையும் சேர்த்துதான்;
    தமிழர் ஒற்றுமைக்கு இடையூறாக இருப்பது என்ன?? கொள்கையா?? அல்லது தொல்லையா??


  3. T. Constantine on August 9, 2012 2:06 pm

    Security & Procedure

    Please be advised we have notified the Waltham Forest Police regarding this meeting. Police will be visiting the premises at least twice but the property will be under constant surveillance from 6PM to 9PM.

    We have given the brief profile of the MP and the general brief regarding the nature of our concern. Organisers of this meeting, staff or guest will not tolerate any threats or abuse. You can either contact me or phone 101 and give the reference number CAD 4970. The entry is made under my name (Tarrin Constantine).

    Please also note that we have also hired two SIA registered security guards and they are in charge of the security. Please note that Pub Management will NOT allow any other security (formal or informal) within the building. Security Guards will have the power to search people at their discretion.

    Please note that only the people who have pre registered will be allowed to enter. Security Guard will require ID. No one under 18 years will be allowed inside. Final decision on Health and Safety & Security will be made by the Designated Premises Licence Holder, Mrs Mitchell Boyle.

    We sincerely apologise for any inconvenience caused to the guests by this security arrangements

    Please note that meeting must finished by 9 PM.


  4. Ajith on August 9, 2012 6:48 pm

    போர் முடிந்து மூன்று வருடங்களாகியும் அங்கு அரசபடைகளும் EPDP யும் சேர்ந்து நடத்தும் பயங்கரவாதம் தான் பல்வேறு தமிழ் நிபுணர்கள் வடபகுதிக்கு வர தயங்குகிறார்கள் என வடபகுதி மக்கள் தெரிவிப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? உதாரணமாக நாட்டிற்கு சேவை புரிய வந்த பேராசிரியர் ஹூலே அவர்களை EPDP இனது பயங்கரவாதமே துரத்தியது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். எப்போது EPDP தமது பயங்கரவாதத்தை நிறுத்தும் என்பதனை பகிரங்கபடுத்துமா?


  5. Rohan on August 9, 2012 8:35 pm

    //We have given the brief profile of the MP //

    Can you give the same profile here as well? Is it confidential??


  6. வடிவேலு on August 10, 2012 10:55 am

    What a pity? Recently T.Jeyabalan had shed democratic tears in an article in this site that LTTE rival groups have employed security to remove a young man who asked questions from the meeting. He even said that it is unusual to employ security guards in meetings.

    But this meeting is going to happen as like in the High Security Zones of Sri Lanka. People have to register in advance to hear a member of parliament. Through out the event the premises is “under constant surveillance”. Video footage of everyone who attends the meeting.

    I would propose to boycott the meeting. There is a real danger for people those who genuinely oppose the British and Sri Lankan government that their identities are recorded.

    A public meeting with such security arrangements demonstrate the real “peace” in Sri Lanka. The precautions are not to control the LTTE supporters almost all the groups of the LTTE in some way work with Rajapakse. This is aimed at the majority of the public that oppose the government.

    Above all the language of Comrade T. Constantine resembles Gotabaya Rajapakse.


  7. mao on August 10, 2012 11:05 am

    கேள்வி பதில்கள் அறிவுரைகள் அண்ணன் தம்பி உறவு முறைகள் தான்.

    “லண்டன் வந்ததின் நோக்கம் என்னா” என்று அரசியல் ஆள்மையுள்ளவரிடம் ஓரு கேள்வி கேட்டேன். உடனடியாக அவர் ஒரு பதிலை அளித்துவிட்டார்.

    எல்லாம் இந்த “ஒலம்பிக்” விளையாட்டின் மகத்துவம் தான் என்றார்.

    புலி ஒலம்பிக்கையை ஆண்டாண்டு காலம் கண்டு அதை வென்றவர்களுக்கு லண்டன் ஒலம்பிக்குகள் என்றும் ஒரு ஒலம்பிக்குகளாக இருக்கப் போவதில்லை.

    சந்திரகுமார் லண்டன் வந்த நோக்கம் என்னவென்று தெரியவில்லை. உண்மையான நோக்கம் எதிர்காலத்தில் தெரிய வரும்.இருந்தாலும் எனது ஊகத்தின் படி சில எதிர்வு கூறுகளை சொல்ல கடைமைப் பட்டவன்.

    புலம்பெயர் தமிழரிடம் ஏதாவது பொருள்உதவி பெறுவதாக இருந்தால் அதை மறந்து விடுங்கள். அந்த தகுதி உங்களுக்கு இல்லை. ஒருமாதத்திற்கு பத்து ஆமியாவது போட்டு தள்ள வேணும். இரண்டு துரோகிக்காவது பப்பிளிக்கில் மரணதண்டணை நிறைவேற்றியாவது இருக்க வேண்டும். இந்த தகுதி இருந்தால் மட்டுமே பணச் சேகரிப்பில் ஈடுபட முடியும் வெற்றியும் கொள்ள முடியும்.

    அதாவது “இரவின் மடியில்” என்பது போன்ற ஒரு அலதியான சுகம் தேவைப்படுகிறது. அது உங்களால் கொடுக்க முடியாது.

    இன்பமும் துன்பமும் ஒரு காலத்தில் தோன்றும் மறையும் என்கிற கோட்பாட்டை கொண்டவன் நான். இது இங்கு எல்லோருக்கும் இல்லைவே இல்லை.

    சுகங்களில் பல வகை.

    திரு சந்திரகுமார் அவர்களே! போகும் போது எந்த இங்கிருந்து எந்த பொருள்களையும் எடுத்துச் செல்லாதீர்கள். வழங்கும் அறிவுரையும் தான்.

    வந்த புத்தியுடன் திரும்பிச் செல்வதே ஈழத்தமிழர்களுர்களுக்கு “நான் இலங்கையன்” என்கிற மமதையை ஏற்படுத்தும்.


  8. Rohan on August 10, 2012 9:23 pm

    //சந்திரகுமார் லண்டன் வந்த நோக்கம் என்னவென்று தெரியவில்லை. உண்மையான நோக்கம் எதிர்காலத்தில் தெரிய வரும்.இருந்தாலும் எனது ஊகத்தின் படி சில எதிர்வு கூறுகளை சொல்ல கடைமைப் பட்டவன்.//

    எதிர்வு கூறல் என்பதன் பொருள் என்ன என்று மாஓ கொஞ்சம் அறிந்து கொள்வது நலம்.

    //இன்பமும் துன்பமும் ஒரு காலத்தில் தோன்றும் மறையும் என்கிற கோட்பாட்டை கொண்டவன் நான். இது இங்கு எல்லோருக்கும் இல்லைவே இல்லை.//

    ஐயையோ…. கொஞ்சம் சொற்களைக் குலுக்கிப் போட்டு எடுத்து அடுக்கி விட்டது போல் அல்லவா இருக்கிறது இந்த வாக்கியத் தொடர்! வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டவர் … வரலாற்றிலிருந்து தமிழன் கற்றுக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறவர் எப்படி வரலாற்றிலிருந்து கற்றுக் கொண்ட பாடம் சொல்கிற முதல் வரி உண்மை அல்ல என்று சொல்கிறார்? சோமபானம் மன்று கொண்டு பேசுகிற மேல்தட்டு கொம்மியூனிஸ்டுகள் தோற்றார்கள் போங்கள்!


  9. Rohan on August 10, 2012 9:39 pm

    //Recently T.Jeyabalan had shed democratic tears in an article in this site that LTTE rival groups have employed security to remove a young man who asked questions from the meeting. He even said that it is unusual to employ security guards in meetings.//

    வடிவேலு சொல்வது சரி தானே.

    இதேவேளை இன்னொரு முரண்பாட்டையும் நான் கண்டேன். முன்னரே சம்மதித்துக் கொண்ட அடிப்படைகளுக்குக் கீழ் தனது பக்க நியாயத்தை முன்வைக்க வந்த ஜீவன் கூல் அடாவடியாக நடந்து கொண்ட தவராஜாவால் மட்டுமல்ல – கேள்விகளுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும் அன்று அடம் பிடித்த கேள்வியாளர்களாலும் கெக்கலி கொட்டப்பட்டார். அக் கூட்டம் கட்டு மீறிப் போனதும் உண்மை தான்.

    பகிரங்கக் கூட்டம் என்று சொல்லி விட்டு கட்டுப்பாடு விதிப்பதை விட தனிப்பட்ட கூட்டம் – பிரத்தியேக கூட்டம் என்று முதலே அறிவிப்பது நல்லது தான்.

    அது சரி – சந்திரகுமார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற உத்தியோக பூர்வ அடிப்படையிலா வந்திருக்கிறார்? தனிப்பட்ட விடயமாக வந்த இடத்தில் அவர் நாலு கூட்டாளிகளைச் சந்தித்துக் கதைப்பதில் என்ன தப்பு?

    ஜெயபாலனின் நேர்காணலில் கூட ஜெயபாலன் கேள்வி கேட்டாலும் பதில் என்னவோ தனக்கு முன்னால் இருந்த (…. தவராஜாவா முன்னால் இருந்தார்?) ஒருவருடனேயே சந்திரகுமார் பேசியதாகப் பட்டது.

    அப்போதெல்லம் ஜெயபாலன் கொஞ்சம் அசெளகரியப்படுவது போலவும் எனக்குத் தோன்றியது.


  10. T Sothilingam on August 10, 2012 11:26 pm

    தேசம்நெற் பல கூட்டங்களை ஒழுங்கு செய்வது யாவரும் அறிந்ததே. எமது தாயகத்தில் நடைபெறும் மக்களின் சேவைகளில் எழும் கருத்துக்கள் அதன் பிரதிபலிப்புக்களை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் நாம் பல கூட்டங்களை ஒழுங்கு செய்கிறோம். இப்படியான பல கூட்டங்களை நாம் தொடர்ந்தும் ஒழுங்கு செய்வோம். கருத்துக்களை வெளிக்கொணர்தல், கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடல் என்பவற்றிக்காகவே தேசம்நெற்றில் நாம் சமூக ஆர்வலர்களாக இயங்குகின்றோம்.

    நாம் ஈபிடிபிக்கு எதிராக நிலைப்பாட்டினை கொண்டிருந்த திரு கூல் அவர்களுடன் ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்து பல சர்ச்சைகளை எழுப்பியிருந்தது யாவரும் அறிந்ததே!

    நாம் ஈபிடிபியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சந்திரகுமாருடன் இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தோம். கடந்த ஞாயிறு அன்று வேறு ஒரு கூட்டம் ஒன்றிற்கு அவர் கலந்து கொள்ளவிருந்த சம்பவத்துடன் திரு சந்திரகுமார் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு தமிழ் இயக்கத்தின் லண்டன் பொறுப்பாளர் அவருடைய கார்(இலக்கம்) ஒரு கவுன்சிலர் மற்றும் சிலர் இதில் முக்கியமாக செயற்பட்டுள்ளனர். இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் மாற்றுக்கருத்தாளர்கள் என்ற அடையாளங்களுடன் கருத்து சுதந்திரம் என்றும் புலி எதிர்ப்பு என்றும் பேசியவர்கள் முழங்கியவர்கள் இன்று ஜனநாயகத்தையே புதைக்கிறார்கள்.

    ஈபிடிபி தாயகத்தில் நடைபெறும் பல அபிவிருத்தி வாழ்வாதார விடயங்களுடன் சம்பந்தப்படுகின்றது. புலம்பெயர் நாட்டில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. நாம் தேசம்நெற்றின் கடமையாக இந்த சந்திப்பை ஏற்படுத்துகின்றோம்.

    கருத்துசுதந்திரம், ஜனநாயகம் என்றவற்றின் அடிப்படையிலேயே தான் யாவற்றையும் கட்டியெழுப்ப முடியும். அதன் அர்த்தத்தை உணராதவர்களால்தான் சந்திரகுமாரின் சந்திப்பை நடாத்த முடியாதபடி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இதற்காக, அரசியலை புரிந்து கொள்ளாதவர்களால் ஏற்படுத்தப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளை சரிசெய்ய, தேசம்நெற் பாதுகாப்பு நடைமுறைகளுடன் கூட்டத்தை நடாத்த வேண்டிய இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டோம்.

    நாம் தொடர்ந்தும் கருத்துக்காக போராட வேண்டியிருக்கிறது. கருத்து சுதந்திரம், ஜனநாயகம் பற்றி அறியாமலே போராட்டம் என்று ஒன்றை நடாத்தி முடித்திருக்கிறோம். அதனால் தொடர்ந்தும் கருத்து சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றிக்காக போராட வேண்டியிருக்கிறது.

    சந்திரகுமார் தனிப்பட்ட விடயமாகவே லண்டன் வந்திருந்தார். நாம் சந்திப்புக்கள் நேர்காணல்கள் பல ஒழுங்கு செய்திருந்தோம். அதன் அடுத்தபடியே பல வேறுபட்ட, முரண்பட்ட கருத்தாளர்களுடன் பேசவே ஒழுங்கு செய்தோம் இப்படியான கூட்டங்களுக்கு தேசம்நெற் வருகை தரவுள்ளோரை முன்கூட்டியே தமது வருகையை தெரிவிக்கும்படி நாம் கேட்பது வழமை. அதே போன்று இம்முறையும் விசேடமாக சந்திரகுமார் விடயத்தில் சிலரினால் கடைகளில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ்களும் அதன் பின்னணிகளும் பற்றி தெரிந்திருந்ததால் நாம் பாதுகாப்பு நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டியிருந்தது.

    இந்த சிக்கலான நிலையை உருவாக்கியவர்கள் சந்திரகுமார் மீதான கருத்து முரண்பாடுகள் அல்லது ஈபிடிபிக்கு எதிரான நிலை என்பதைவிட
    1.வன்னியில் இனவாத அரசியல் ஒன்றிக்கு ஆரம்ப புள்ளியாக ஈபிடிபி மீது ஒரு பழிவாங்கல் என்பதற்காக சிலரும்
    2.லண்டனில் தமது தனிப்பட்ட சுயலாபங்களை முன்னனிறுத்தியே இயங்கியுள்னளர்.

    கடந்த 30 ஆண்டு போராட்டகாலத்தில் புலிகளினால் எமக்கு ஏற்படுத்தப்பட்டிராத அசெளகரியங்களை இன்று புலிகளின் பெயரால் சிலர் செய்ய முன்வருகிறார்கள். அவர்கள் தமது தவறை உணருவார்கள் என நம்புகின்றோம்.

    றோகன்
    சந்திரகுமார் அவர்களுடனான நேர்காணலின்போது தேசம் குழுவினர் மட்டுமே இருந்தனர். இதில் வேறு யாரும் சம்பந்தப்படவில்லை. முன்னால் இருந்த எம்மைப் பார்த்தே அவர் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.


  11. Rohan on August 10, 2012 11:41 pm

    //றோகன்
    சந்திரகுமார் அவர்களுடனான நேர்காணலின்போது தேசம் குழுவினர் மட்டுமே இருந்தனர். இதில் வேறு யாரும் சம்பந்தப்படவில்லை. முன்னால் இருந்த எம்மைப் பார்த்தே அவர் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.//

    நன்றி சோதி… கேள்வி கேட்டவரை விட்டு விட்டு வேறு யாருடனோ பேசுவது நெருடியது…. தெளிவுபடுத்தலுக்கு நன்றி.

    சந்திரகுமார் கூட்டம் நன்றாகப் போயிற்று என்று நம்புகிறேன்.


  12. Rohan on August 11, 2012 12:01 am

    //இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் மாற்றுக்கருத்தாளர்கள் என்ற அடையாளங்களுடன் கருத்து சுதந்திரம் என்றும் புலி எதிர்ப்பு என்றும் பேசியவர்கள் முழங்கியவர்கள் இன்று ஜனநாயகத்தையே புதைக்கிறார்கள்.//

    எத்தனையோ தடவைகள் என்னைப் போன்றவர்கள் சுட்டிக்காட்டிய விடயம் தான். மாற்றுக்கருத்தாளர்கள் என்று தம்மை அடையாளம் காட்டியோர் குற்றம் காணுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டிருந்தனர். பதிப்பகத்தில் பிரதிகளில் பிழை திருத்துவோருக்கு அது மட்டுமே முடிகிறது போல – அவர்களால் ஒரு பக்கம் சொந்தமாக எழுத முடியாது இருப்பது போல – மாற்றுக்கருத்தாளர்களால் குற்றம் காணுவதை மட்டுமே செய்ய முடியும்!!

    உருப்படியாக ஒரு துரும்பைக் கூட அவர்களால் நகர்த்த முடியாது.

    //கடந்த 30 ஆண்டு போராட்டகாலத்தில் புலிகளினால் எமக்கு ஏற்படுத்தப்பட்டிராத அசெளகரியங்களை இன்று புலிகளின் பெயரால் சிலர் செய்ய முன்வருகிறார்கள். அவர்கள் தமது தவறை உணருவார்கள் என நம்புகின்றோம்.//

    புலிகள் எத்தனை தவறுகள் செய்திருந்தாலும், தமது வழிக்கு நடுவில் வராத நல்ல செயல்களை நடக்க விட்டிருந்தார்கள். அப்போது அவ்வாறான விடயங்களைச் செய்து கொஞ்சம் அங்கீகாரத்தைச் சமூகத்தில் பெற்றுக் கொண்டவர்களே இப்போது புலிக்குப் பின்னான சமூக முயற்சிகள் சிலவற்றைத் தொடர்ந்து செய்கிறார்கள். மாற்றுக் கருத்தாளர்கள் நொட்டை பிடிப்பதுடன் சரி.

    பழைய (புலிப்) பெருங்காய டப்பாக்களையும் இந்த இடத்தில் மறப்பதற்கில்லை. புலி இருந்த போது இவர்களும் உறுமினார்கள்… இப்போது இவர்கள் அட்டைப் புலிகள் – ஆனால். உறுமலாம் என்று இன்னமும் நினைக்கிறார்கள்.


  13. சாந்தன் on August 11, 2012 12:31 am

    //இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால்..///

    சோதி நாங்கள் ஒண்டும் கவனமில்லாமல் இருக்கேல்ல இப்ப ‘கவனிக்கப்பட’ வேண்டிய விசயங்களை கண்கொண்டு பார்க்க.
    நாம் மிகக்கவனமாக இருந்தோம். பம்மாத்துக்கதை விட்ட கூட்டம் இப்ப வந்து ‘கவனிக்கப்பட வேண்டிய’ விடயம் எண்டு எங்களுக்கு கிளாஸ் எடுக்கினம்.

    //.. மாற்றுக்கருத்தாளர்கள் என்ற அடையாளங்களுடன் கருத்து சுதந்திரம் என்றும் புலி எதிர்ப்பு என்றும் பேசியவர்கள் முழங்கியவர்கள் இன்று ஜனநாயகத்தையே புதைக்கிறார்கள்.//
    நல்லது சோதி.
    புலியை கிழி கிழி என்று கிழிச்சியளே?
    அவர்களின் ‘முகமூடியை’ கிழிச்சியளே?
    ‘அதிகாரத்தை’ நோக்கி கேள்வி மேல் கேள்வி கேட்டியளே?
    நல்லது..நல்லது…
    இப்போ மட்டும் ’புலி எதிர்ப்பு’ ,’ஒரு கவுன்சிலர்’ என ஒழி..ஒழி என ஒழிக்கிறியள். ஏன் கிழி..கிழி என கிழிக்க மாட்டியளே?
    அவர்களின் பெயரையும் ‘முகமூடியை’ கிழிச்சு வெளியே விடுவதுதானே?
    என்ன சோதி செய்வியளா? அல்லது ஸ்ரீலங்கன் எம்பசி ஓசி மட்டின் ரோல் தொண்டைக்குள்ள சிக்குப்படுதோ?

    //…கடந்த 30 ஆண்டு போராட்டகாலத்தில் புலிகளினால் எமக்கு ஏற்படுத்தப்பட்டிராத அசெளகரியங்களை இன்று புலிகளின் பெயரால் சிலர் செய்ய முன்வருகிறார்கள். அவர்கள் தமது தவறை உணருவார்கள் என நம்புகின்றோம்…///

    அப்போதெல்லாம் அம்னஸ்ரி இன்ரனசனலுக்கும், ஹியூமன் ரைட்ஸ் வோச்சுக்கும் கடிதம் எழுதினியளே? இப்ப மட்டும் என்ன ‘தவறை உணர்வார்கள்’ என நிப்பாட்டியிட்டியள்.


  14. நந்தா on August 11, 2012 12:33 am

    சோதிலிங்கம்:
    உங்கள் முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கிறேன். மு.சந்திரகுமார் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் உபதலைவரும் ஆவார். அடுத்து புலியின் துப்பாக்கிகளுக்கு தப்பி அவர் லன்டனில் வாழ்ந்தவர்.

    கூல் மெத்தப் படித்து புரியாத அரசியலுக்குள் காலை விட்டு நீதிமன்றம், சமன்ஸ் என்றவுடன் நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தவர்.

    கிளினொச்சியில் அவர் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மக்களுக்கு தன்னால் முடிந்தவற்றைச் செய்கிறார்.


  15. சாந்தன் on August 11, 2012 1:44 am

    //..பகிரங்கக் கூட்டம் என்று சொல்லி விட்டு கட்டுப்பாடு விதிப்பதை விட தனிப்பட்ட கூட்டம் – பிரத்தியேக கூட்டம் என்று முதலே அறிவிப்பது நல்லது தான்….//

    அதை ஏன் பிரத்தியேக கூட்டம் எனச்சொலி பிரத்தியேக கூட்டங்களின்ர மதிப்பை குறச்சுப்போடாமல் ஸ்ரீலங்கா அமைச்சர் வக்கிற கூட்டம் போல இருக்கும் எனச் சொன்னால் எமக்கும் விளங்குமெல்லே!!!

    சந்திரகுமார் வந்தது ‘தனிப்பட்ட’ பயணமா? அல்லது ஒலிம்பிக் பார்க்க கவன்மன்ற் செலவில வந்த 30 பேரில ஒருத்தரா?


  16. சாந்தன் on August 11, 2012 1:51 am

    சோதிலிங்கம், கேள்விகளை ’இங்கே பதிவிடவும்’ என்றார். ஒருதனும் கணக்கெடுக்கேல்ல போல. இந்த ஈ.பி.டி.பி யிட்ட கேள்வி கேட்டால் …

    1) கெளரவ அமைச்சரிடம் பேசி பதில் தரப்படும்.
    2) கெளரவ அமைச்சர் உரிய அதிகாரிகளிடம் பதிலைப் பெற்றுத்தருவார்.
    3) கெளரவ ஜநாதிபதியிடம் தெரியப்படுத்தி இருக்கிறோம்.

    எனும் பாணியிலேயே பதில் இருக்கும் எனத் தெரியாதாக்கும்.
    கொஞ்சம் இறுக்கி கேட்டால் ‘கொஞ்சம் பின்போடச் சொன்னனெண்டா கிடப்பில போட்டிடுவினம்’ எனச் சொன்னவர் தானே தோழர். அவரின் தொண்டரெல்லோ இவர். பதில் எப்படி இருக்கும்?
    இல்லாட்டி வாழ்வாதாரம், இணக்க அரசியல், மக்கள் சேவை, அபிவிருத்தி என கொஞ்ச வசனங்களை எடுத்து விடுவார்.
    முடியும் போது (படங்கள் இனைக்கப்பட்டுள்ளன) என இருக்கும்.
    இதைவிட என்ன எதிர்பார்க்க முடியும்.


  17. Rohan on August 11, 2012 10:23 am

    //தேசம்நெற் கடந்த காலங்களில் அரசியல் பிரமுகர்களுடன் கேள்விநேரத்தை ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக பா உ சந்திரகுமார் உடனான கேள்வி நேரம் இடம்பெறுகிறது.//

    ஆனால், பின்னால் ஈபிடிபியின் பதாகை அல்லவோ தொங்குகிறது. தவராஜா தான் தலைமையும் தாங்குகிறார். அதற்குள் ‘ஐக்கிய இராச்சியக் கிளை’ என்று ஒரு துண்டு வேறு தலை காட்டிப் போகிறது.


  18. Ajith on August 11, 2012 11:52 am

    நாம் ஈபிடிபிக்கு எதிராக நிலைப்பாட்டினை கொண்டிருந்த திரு கூல் அவர்களுடன் ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்து பல சர்ச்சைகளை எழுப்பியிருந்தது யாவரும் அறிந்ததே!///
    கருத்துசுதந்திரம், ஜனநாயகம் என்றவற்றின் அடிப்படையிலேயே தான் யாவற்றையும் கட்டியெழுப்ப முடியும்///

    நண்பர் சோதிலிங்கம் அவர்களே, பேராசிரியர் ஹூலே அவர்கள் EPDP இற்கு எதிராக நிலைபாடினை கொண்டு இருந்தவர் என்ற உங்கள் கூற்று ஒரு சந்தேகத்தை எழுப்புகிறது. அவர் EPDP இற்கு எதிராக இருந்தாரா அல்லது EPDP இன் பயங்கரவாதத்திற்கு எதிராக இருந்தாரா என்பதனை தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும். நீங்கள் ஒழுங்குபடுத்திய கூட்டத்தில் ஹூலே நடந்துகொண்ட முறைக்கும் தவராஜா அவர்கள் நடந்துகொண்ட முறைகளில் இருந்து EPDP இன் ஜனநாயக குணாதிசயங்களை அறிந்து கொள்ளலாம்.
    திரு சந்திரகுமாருக்கு கொலை பயமுறுத்தல் விடுக்கப்பட்டு இருக்குமானால் இந்த கூட்டத்தை நடத்த தீர்மானித்ததே தவறு ஆகும். ஸ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்சே அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கமுடியாத நிலையில் அவர் தனது ஒக்ஸ்பேட் உரையையே ரத்து செயதது யாவரும் அறிந்த விடயம். அவருக்கு உண்மையாக கொலை மிரட்டல் இருக்குமானால் இந்த கூட்டத்தினை நீங்கள் தவிர்த்து இருக்க வேண்டும். அவரை பாதுகாப்பாக ஸ்ரீ லங்காவுக்கு அனுப்பி இருக்க வேண்டும். இங்கு உண்மையான நோக்கம் ஏதோ என்று எண்ண தோன்றுகிறது.


  19. T Sothilingam on August 11, 2012 7:00 pm

    சாந்தன்,
    இந்தக் கூட்டத்தை குழப்ப முற்பட்டவர்கள், சம்பந்தப்பட்டவர்களைப் பற்றிக் குறிப்பிட்டு…. இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் ….. என தொடர்ந்தது சம்பந்தப்பட்டவர்களின் அரசியல் நிலைப்பாட்டையே ஒழிய, ஒட்டுமொத்த மாற்றுக்கருத்தாளர்களையுமல்ல.
    இதில் சம்பந்தப்பட்டவர்கள் அமைப்பு ரீதியாக சந்திரகுமாருக்கு எதிராக செயற்படவில்லை, தனிப்படவே செயற்பட்டுள்ளார்கள். தனிப்பட்ட பகைகளையும் அரசியலில் புகுத்த முனைகிறார்கள். இவர்களின் பெயர்களை வெளிப்படுத்தி எழுதுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை ஆனால் இது இன்று பொலீஸ் சம்பந்தப்பட்ட விடயம்.

    அடுத்து புலிகளின் அரசியல் தவறுகளுக்கு மட்டுமே எம்மிடமிருந்து எதிர்ப்பு இருந்தது, அவர்களின் போராட்ட உணர்வை நாம் எதிர்க்கவில்லை. புலிகளுடன் ஓர் அரசியலில் சந்திக்கவே எம்மில் பலர் முயற்சித்தோம். இந்த சந்திப்பில் மற்றைய அமைப்பினருடன் இணைந்து உருவாக்க பல தடவைகள் முயற்சித்தோம் வெற்றிபெறவில்லை.

    நான் சோதிலிங்கம் போராட்டத்துடன் இணைத்துக் கொண்ட காலம் தொடக்கம் எனக்கு மக்கள் பற்றிய ஒரு திட்டவட்டமாக முடிவுடன் தான் எழுதுகிறேன், கூட்டங்களுக்கு போகிறேன், தொடர்ந்தும் எங்கும் யாருடனும் கூட்டங்களுக்கும் போவேன், சுயமாக எனது கருத்துக்களை எழுதுவேன், எந்த கட்சி சார்பாகவோ அமைப்பு சார்பாகவோ அல்ல. மக்கள் சார்பாக மட்டும் அதற்காக யாருடனும் கூட்டங்களை ஏற்படுத்துவேன் எது சரி என்று நான் நாம் புரிந்து கொள்கின்ற கருத்துக்களை வெளிக்கொணர முயற்சிப்பேன்— தேசமும் முயற்சிக்கும்.

    அஜித்,
    பேராசிரியர் கூல் சம்பந்தப்பட்ட விடயம் தேசம் நெற்றில் பல்வேறு சம்பந்தப்பட்ட தலைப்புகளின் கீழ் விவாதிக்கப்பட்டது. இங்கு கருப்பொருள் அதுவல்ல.
    அடுத்து ராஜபக்ச ஒப்பீடு எந்தவிதத்திலும் பொருத்தமற்றது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் தமிழர்கள் நாமே கையாள வேண்டும்.

    - தேசம்நெற் கட்சிகள் அமைப்புக்கள் என்று பார்ப்பதில்லை. கருத்தை, விடயங்களை வெளிக்கொணர யாருக்கும் கூட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் சந்திப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும். சுதந்திரமாக கருத்துக்களை வெளிக்கொண்டு வரும். இதுவும் எமது வழி முறைகளில் ஒன்று.

    நாம் மக்களுக்கான கருத்து, மக்களுக்கான தேவைகள் என்பவற்றிலிருந்தே பார்க்கிறோம் யார்? எந்த கட்சி? என்ற அடிப்படையிலிருந்து அல்ல. இதில் ஒன்று தான் ஈபிடிபிக்கு கூட்டத்தை நடாத்த ஏற்பாடுகள் செய்திருக்கிறோம் அவர்களின் செயற்பாடுகளை வெளிக் கொணர்ந்திருக்கிறோம்.

    இலங்கை அரசின் அமைச்சர்கள் இது போன்ற கூட்டங்களுக்கு வருவார்களானால் தேசம்நெற் கூட்டத்தை ஏற்பாடு செய்யும். அவரை பேசவிடாது கலைப்பதா அல்லது பேசி எமது கருத்துக்களை அவர்களிடம் கேட்பதா சரியானது என்பதை ஜனநாயக கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் தீர்மானிப்பதே சரியானது.

    - கருத்தாளர்கள் பின்னூட்டத்திற்க்கு பின்னூட்டம் விடுவதை தவிர்த்தால் தேவையற்ற நீட்சியை தவிர்க்கலாம்.

    - அஜித், வடிவேலு, பல்லியின் கருத்துக்கள், கேள்விகள் சந்திரகுமாரிடம் கொடுக்கப்பட்டு வழங்கப்பட்ட பதில்கள் (http://thesamnet.co.uk/?p=39098 -கட்டுரையில்) பகுதி 3 ஒளிப்பதிவில் உள்ளது.

    http://youtu.be/j97OBabev7I


  20. வடிவேலு on August 11, 2012 9:43 pm

    வடிவேலு on August 10, 2012 10:55 இல் நான் எழுதியது இந்த கூட்டத்தினை அரசுக்கு எதிரான அரசியல் செய்யும் தனி நபர்கள் பகிஸ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை உள்ளடக்கி இருந்தது.

    அது அவர்களின் அடையாளங்கள் அரசின் கைகளுக்கு போவதனை தவிர்க்கும். இந்த கோரிக்கை தொடர்பாக ஒரு சமரசமும் இல்லை. எதிர்கால கூட்டங்களுக்கும் இந்த கோரிக்கை பொருந்தும்.

    இது ஒரு கேள்வியோ அல்லது கருத்தோ இல்லை இது ஒரு கோரிக்கை. இதை ஏற்ப்பது அல்லது நிராகரிப்பது வாசிப்பவர்களின் தனி உரிமை.

    நான் ஒரு போதும் இது தொடர்பாக இந்த கூட்டத்தோடு சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்து கேட்கவில்லை. அந்த அளவிற்கு நான் ஒரு அரசியல் கோமாளி இல்லை.


  21. Rohan on August 11, 2012 11:04 pm

    //தேசம்நெற் கட்சிகள் அமைப்புக்கள் என்று பார்ப்பதில்லை. கருத்தை, விடயங்களை வெளிக்கொணர யாருக்கும் கூட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் சந்திப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும். சுதந்திரமாக கருத்துக்களை வெளிக்கொண்டு வரும். இதுவும் எமது வழி முறைகளில் ஒன்று.

    இலங்கை அரசின் அமைச்சர்கள் இது போன்ற கூட்டங்களுக்கு வருவார்களானால் தேசம்நெற் கூட்டத்தை ஏற்பாடு செய்யும். //

    இங்கு தான் கடுமையான முரண்பாடுகள் தெரிகின்றன.

    கூட்டம் தேசம்நெற் நடாத்தும் ஒன்று என்றால் அதன் பரிமாணங்கள் முழுவதும் தேசம்நெற்றின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்க வேண்டும். இது, பங்குபற்றுவோருக்கான (மேசைக்கு இருபுறமும்) ஆரம்ப அறிவுறுத்தல்களை வழங்குவதிலிருந்து கூட்டத்தின் போது நடக்கும் அடாவடிகளைக் களைவது வரை இருக்க வேண்டும்.

    தனது அக்கூட்டங்கள் தேசம்நெற்றின bannerக்குக் கீழேயே நடாத்தப்பட வேண்டும். ஈபிடிபி (ததேகூ என்றாலென்ன ஜேவிபி என்றாலென்ன சிறீரங்கா என்றாலென்ன) நடாத்துவது என்றால் இடையில் தேசம்நெற் எதற்கு ஏஜென்ற் வேலை பார்க்க வேண்டும்?

    //நாம் மக்களுக்கான கருத்து, மக்களுக்கான தேவைகள் என்பவற்றிலிருந்தே பார்க்கிறோம் யார்? எந்த கட்சி? என்ற அடிப்படையிலிருந்து அல்ல. இதில் ஒன்று தான் ஈபிடிபிக்கு கூட்டத்தை நடாத்த ஏற்பாடுகள் செய்திருக்கிறோம் அவர்களின் செயற்பாடுகளை வெளிக் கொணர்ந்திருக்கிறோம்.//

    தவறு என்று நான் பார்க்கிறேன். சந்திரகுமாரை வைத்து ஈபிடிபியின் ஐக்கிய இராச்சியக் கிளை கூட்டம் நடாத்தலாம். அதில் அவர்கள் அரசியல் பேசலாம் – புலிவசை பாடலாம் – அடாவடி செய்யலாம். தேசம்நெற்றின் கூட்டம் என்றால் Thesamnet என்ற brand name உரிய கெளரவத்துடன் நடாத்தப்படுவதும் கேள்விகள் கேட்பதும் சுருக்கமான பதில் சொல்லுமாறு கேட்பதும் துணைக் கேள்விகள் கேட்பதும் ஏற்பாட்டாளர்களின் கையிலேயே இருக்கவேண்டும்.

    Criticism அல்ல feedback தந்திருக்கிறேன். ஏற்பதும் விடுவதும் நும்பாடு!!


  22. T Sothilingam on August 11, 2012 11:10 pm

    தேசம்நெற்றின் பதாதை பாவிக்கப்படாமல் போனதில் தவறு உள்ளதை ஏற்றுக்கொள்கிறேன்.

    இந்த கூட்ட ஒழுங்கமைப்பு விடயங்களில் வழமையாக கூட்ட நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் தேசம் ஆசிரியர்களால் ஒழுங்கு செய்யப்படாமல் போனதும், இக்கூட்டத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு சம்பந்தமான அல்லோலகல்லோலமும், மிகவும் குறுகிய நேர காலத்திற்குள்ளாகவும் ஒரு சாராதண வேலை நாளில் இந்தக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததும் எமக்குள் சிரமங்களை உருவாக்கியிருந்துள்ளதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

    இப்படியான தவறுகள் இனிமேல் ஏற்படாமல் செயற்படுவோம்.


  23. Rohan on August 11, 2012 11:14 pm

    மாற்றான் தோட்டத்து மல்லிகை என்று அதன் மணத்தைக் குறைத்து மதிப்பிடும் – அல்லது. வயிற்றைப் புரட்டுகிறது என்று கதை விடும் உலகம் இது.

    ஆனால், இது நான் சொல்ல வந்து சொல்லத் தவறியது…..

    சந்திரகுமார் நிதானமாகப் பேசுகிறார். நையாண்டிகளோ அல்லது வசைபாடல்களோ இல்லாது கருத்துகளை முன்வைக்கிறார். எவ்வளவு சரி என்பது தெரியாது – ஆனால், புள்ளிவிபரங்களின் துணையுடன் கருத்துரைக்கிறார். இவர் தான் என்று சொல்வதற்கு அவரை எனக்குத் தெரியாது – ஆனால், இவர் போன்ற தலைவர்கள் தமிழர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். டக்ளசின் கண்களில் இவர் இடறாத வரை – காதுகளில் யாரும் வத்தி வைக்காத வரை – கொஞ்சம் நல்ல விடயங்கள் நடக்கும் என்று தோன்றுகிறது.


  24. சாந்தன் on August 11, 2012 11:58 pm

    //..ஆனால் இது இன்று பொலீஸ் சம்பந்தப்பட்ட விடயம்….//

    ’மாற்றுக்கருத்தாளர்’ கொலை மிரட்டல் விட்டிருக்கிறார். நீங்கள் இது பொலிஸ் கேஸ் எனச் சொல்லி அவரைக் காப்பாற்றுகிறீர்கள். இதுவே புலி செய்திருந்தால் ‘நெடுங்குருதி…கொடுங்குருதி… என எத்தனை கவிதைபாடி கருத்தரங்கு வச்சிருப்பீர்கள், இல்லையா சோதி?
    பொலிஸ்கேஸுகளில் சம்பந்தப்பட்ட ‘புலிவாலுகள்’ பெயர் விபரம் பற்றி மாற்றுக்கருத்தாலர்கள் கருத்தே சொவதில்லை என நீங்கள் சொன்னால் நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் சோதி!

    //..தேசமும் முயற்சிக்கும்…//
    ஓஹோ…இனிமேல்தானா?

    //..இந்த சந்திப்பில் மற்றைய அமைப்பினருடன் இணைந்து உருவாக்க பல தடவைகள் முயற்சித்தோம் வெற்றிபெறவில்லை…..//
    ஏன் வெற்றிபெறவில்லை என்பதற்கு ‘கொலைமிரட்டல்’ மாற்றுக்கருத்தாளர்கள் ஜனநாயகவாத மனித உரிமைப்போர்வையில் உங்களுடன் இருந்ததே காரணம்! இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.

    இதனை இற்றைக்கு 5 வருடங்களின் முன்னரே WEDNESDAY, 30 JULY 2008 21:22 அன்று பி.இரயாகரன் சொன்னார்…

    “புலம்பெயர் இலக்கியமும், புலம்பெயர் ஜனநாயகமும், படிப்படியாக இன்று அரசு சார்பான ஒரு நிகழ்ச்சிகளாகிவிட்டது. இனி அரசுக்குத் சார்பாகத்தான், புலியெதிர்ப்புக் கூட்டங்கள் நடக்கும். பேரினவாத அரசுக்கு எதிராக, இவர்கள் எதையும் முன்னெடுக்க முடியாது. அரசுக்கு சார்பு எடுபிடிகளாக, அரச கூலிக்கும்பலாக புலம்பெயர் புலியெதிர்ப்பு கும்பல் சீரழிந்து விட்டது. இதற்கு வெளியில் வேறு எந்த அரசியலும் யாரிடமும் கிடையாது. ஜனநாயகம் என்பது, பேரினவாத அரசைத் தொழுவது தான்.

    இப்படி ஜனநாயகத்தின் எதிரிகள், அரச பாசிசத்தின் எடுபிடிகளாக அம்பலமாகி வருகின்றனர். புலிப் பாசிசத்திடம் இருந்து கோரிய ஜனநாயகம், மக்களுக்கானதல்ல என்பது இந்த கும்பலின் பொது நிலைப்பாடு. இந்த நிலையில் எந்த அரசியலும், பேரினவாத அரசு சார்பானதாக மாறி விடுவது ஆச்சரியமானதல்ல. இதில் சிலர் வெளிப்படையாக அரச கூலிக்குண்டர்களாக, சிலர் இந்த அரசியல் எல்லைக்குள் கும்மியடிக்கின்றனர். …”

    நாம் எப்போதோ சொல்லிவிட்டோம்.


  25. T Sothilingam on August 12, 2012 9:04 am

    சாந்தன்,
    நான் எழுதிய பதிலின் ஒரு துண்டை எடுத்து தனிமைப்படுத்தி பார்த்தால் அது வேறு அர்த்தப்படும்.
    பல தடவைகள் தேசத்தில் பலராலும், பலருக்கு சுட்டிக் காட்டப்பட்ட விடயமிது. தயவு செய்து அப்படியான செயலை தவிர்க்கவும். நன்றி.


  26. Ajith on August 13, 2012 11:46 am

    நாம் ஈபிடிபியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சந்திரகுமாருடன் இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தோம்.
    நாம் தேசம்நெற்றின் கடமையாக இந்த சந்திப்பை ஏற்படுத்துகின்றோம்.
    அரசியலை புரிந்து கொள்ளாதவர்களால் ஏற்படுத்தப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளை சரிசெய்ய, தேசம்நெற் பாதுகாப்பு நடைமுறைகளுடன் கூட்டத்தை நடாத்த வேண்டிய இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டோம்.
    அதே போன்று இம்முறையும் விசேடமாக சந்திரகுமார் விடயத்தில் சிலரினால் கடைகளில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ்களும் அதன் பின்னணிகளும் பற்றி தெரிந்திருந்ததால் நாம் பாதுகாப்பு நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டியிருந்தது. ///

    இந்த கூட்ட ஒழுங்கமைப்பு விடயங்களில் வழமையாக கூட்ட நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் தேசம் ஆசிரியர்களால் ஒழுங்கு செய்யப்படாமல் போனதும், இக்கூட்டத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு சம்பந்தமான அல்லோலகல்லோலமும், மிகவும் குறுகிய நேர காலத்திற்குள்ளாகவும் ஒரு சாராதண வேலை நாளில் இந்தக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததும் எமக்குள் சிரமங்களை உருவாக்கியிருந்துள்ளதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

    தேசம்நெற்றின் பதாதை பாவிக்கப்படாமல் போனதில் தவறு உள்ளதை ஏற்றுக்கொள்கிறேன்.இப்படியான தவறுகள் இனிமேல் ஏற்படாமல் செயற்படுவோம்.///

    அன்பின் நண்பர் சோதி அவர்களே நீங்கள் தேசம்நெட் ஆசிரியர் குழுவில் ஒருவர். உங்களுடைய கருத்துகளுக்கும் மற்றவர்களுடைய கருத்துகளுக்கும் முரண்பாடுகளை நாம் காணக்கூடியதாக இருந்தாலும் உங்கள் குழுவில் ஸ்ரீ லங்கா ராஜபக்சே அரசு – EPDP கூட்டனி சார்பு வாதிகள் பெரும்பான்மையாக உள்ளது நாம் அறிந்த விடயம். இந்த கூட்டத்தை தேசம்நெட் EPDP யின் பிரசாரத்திற்கு உதவும் நோக்கத்துடன் தேசம்நெட் குழுவால் ஒழுங்குசெய்ய பட்ட ஒரு கூட்டம் என்பதை நீங்கள் மறுத்தாலும் அது தான் நியம என்பதை உங்கள் மேலே கூறபட்ட உங்கள் முரண்பாடான எழுத்துகளில் இருந்து தெரிகிறது. இங்கு தனிபட்ட விஜயத்தை மேற்கொண்ட சந்திரகுமார் அவர்கள் சகலவிதமான பிரசார ஆயுதங்களுடனும் வந்து இருக்கிறார் என்பது மிகத் தெளிவாக அவருடைய பேச்சு சான்று.

    இந்த சிக்கலான நிலையை உருவாக்கியவர்கள் சந்திரகுமார் மீதான கருத்து முரண்பாடுகள் அல்லது ஈபிடிபிக்கு எதிரான நிலை என்பதைவிட
    1.வன்னியில் இனவாத அரசியல் ஒன்றிக்கு ஆரம்ப புள்ளியாக ஈபிடிபி மீது ஒரு பழிவாங்கல் என்பதற்காக சிலரும்
    2.லண்டனில் தமது தனிப்பட்ட சுயலாபங்களை முன்னனிறுத்தியே இயங்கியுள்னளர்./// சோதி

    இங்கு நீங்கள் என்ன கூறவருகிறீர்கள் என்பதை புரிவது கஷ்டமாக இருக்கிறது. இங்கு சந்திரகுமாருக்கு சிக்கலை உருவாக்கியவர்கள் ஒரு இனவாத அரசியல் ஒன்றிற்கு ஆரம்ப புள்ளியாக EPDP மீது ஒரு பழிவாங்கல் என்பதற்காக என கூறுவது சற்று பொருத்தமற்றதாக தெரிகிறது. EPDP இற்கு எதிரானது அல்ல என்று கூறிவிட்டு பின்னர் EPDP மீது பழிவாங்கல் என்று முரண்படுவது ஏன்? EPDP மீது பழிவாங்குவதால் எப்படி இனவாத அரசியலை ஆரம்பிக்கலாம்?
    சந்திரகுமாருகும் சிலருக்கும் தனிபட்ட முரண்பாடை இயங்குவதற்கும் தேசம்நெட் பாதுகாப்பு நடவடிக்கை எடுபதற்கும் என்ன தொடர்பு என்று புரியும்படி கூறுங்களேன்.


  27. பல்லி on August 13, 2012 12:15 pm

    //’மாற்றுக்கருத்தாளர்’ கொலை மிரட்டல் விட்டிருக்கிறார். நீங்கள் இது பொலிஸ் கேஸ் எனச் சொல்லி அவரைக் காப்பாற்றுகிறீர்கள். இதுவே புலி செய்திருந்தால் ‘நெடுங்குருதி…கொடுங்குருதி… என எத்தனை கவிதைபாடி கருத்தரங்கு வச்சிருப்பீர்கள், இல்லையா சோதி?//

    இதை புலி செய்திருந்தால் சாந்தன் கண்டிப்பாக நியாயபடுத்தி இருப்பார், இல்லையா சாந்தன்??

    ஆனால் மாற்றுக்கருத்தாளர் செய்யும் தவறைகூட தவறு தவறுதான் என ஒரு ஊடகவியாளனாய் சோதி சுட்டி கட்டியது வரவேற்கதக்கது;

    புலிகளை மட்டும் திட்டுவதும் மாற்று கருத்தாளைர்களை பாலூத்து பாராட்டுவதும் தேசத்தின் நோக்கமாக இருக்காது அல்லவா சாந்தன்??


  28. Ajith on August 13, 2012 1:14 pm

    ஆனால் மாற்றுக்கருத்தாளர் செய்யும் தவறைகூட தவறு தவறுதான் என ஒரு ஊடகவியாளனாய் சோதி சுட்டி கட்டியது வரவேற்கதக்கது;//
    ஆனால் தோழர் டக்லஸ், அவரின் சகா தேவராஜன் செய்த தவறை சுட்டி காட்டாமல் அவரையே தேசம்நெட் இனால் ஒழுங்குசெய்த கூட்டத்திற்கு அவரையே தலைவராகி விட்டது எந்த விததிற்குள் அடங்கும். அதாவது தேவராஜன் இப்போது தேசம்நெட் இனை வழிநடத்தும் ஆசிரியர் குழுவில் ஒருவராகிவிட்டது வரவேற்க படவேண்டியது தானோ?


  29. சாந்தன் on August 13, 2012 5:05 pm

    ///..நான் எழுதிய பதிலின் ஒரு துண்டை எடுத்து தனிமைப்படுத்தி பார்த்தால் அது வேறு அர்த்தப்படும்.
    பல தடவைகள் தேசத்தில் பலராலும், பலருக்கு சுட்டிக் காட்டப்பட்ட விடயமிது. தயவு செய்து அப்படியான செயலை தவிர்க்கவும். நன்றி….///

    சோதிலிங்கம்,
    நான் கேட்ட கேள்விகளுக்கு ஏன் பதில் இல்லை. பொலிஸ் கேஸ் எனச் சொல்லி ஏன் சமாளிக்கிறீர்கள். நீங்கள் மாற்றுக்கருத்தாளர்கள் அல்லவா? இவ்வாறு சமாளிபிக்கேசன் விடலாமா?
    நடந்த சம்பவம் பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாம் என உங்களுக்கு பொலிசார் சொன்னார்களா?
    அப்படிச் சொன்ன பட்சத்தில் ஏன் நீங்கள் செய்தவர்கள் பற்றி அரசல் புரசலாக கதை விட்டீர்கள்?
    இந்த அரசல் புரசல் கதை பலரை பலர்மீது ஐயம் கொள்ளவைக்கும் என்கின்ற விடயம் தெரியாதா?
    அல்லது பொலிசாரே உங்களுக்குச் சொன்னார்களா அரசல் புரசலாக குழப்பக் கதை விடும்படி?
    அவ்வாறாயின் பொலிசாரின் ‘குழப்ப வேலைகளுக்கு’ நீங்களும் துணைபோனீர்களா?

    சோதி அவர்களே,
    ஈழத்தமிழ் மக்கள் மீதான உங்கள் உண்மையான அரசியல் வேலைத்திட்டங்களை நான் என்றும் சந்தேகிக்கவில்லை. மற்றவர்கள் போல உங்கள் மீது இனவாத கரி பூசவில்லை. ஆனால் நீங்கள் எழுதிய விடயம் மிகவும் குழப்பத்தை வரவழைக்கிறது. வன்னியில் இனவாத அரசியலை நடத்த விழைபவரை ஏன் பொலிஸ் கேஸ் எனச் சொல்லி மரைக்கிறீர்கள். இனவாத கேசுகளை பொலிஸ் ஒழிச்சு வைப்பது ஸ்ரீலங்கா அரசியல். அதனை ஏன் இங்கிலாந்திலும் செய்ய முற்படுகிறீர்கள்?


  30. சாந்தன் on August 13, 2012 5:08 pm

    //..இதை புலி செய்திருந்தால் சாந்தன் கண்டிப்பாக நியாயபடுத்தி இருப்பார், இல்லையா சாந்தன்??…//

    நாங்கள் ஜனநாயகவாதிகள், மக்கள் போராட்டக்காரர்கள், புலிப்புண்ணாக்குகள் இல்லை. கொலைமிரட்டல் கேசுகள் இல்லை….

    என்னது …..லண்டனில் தமிழ் எம்பிக்கு கொலை மிரட்டலா? ஐயையோ… ஓடிவாங்க…. புலி… புலி…. புலி!!

    இல்லை செய்தது மாற்றுக்கருத்தாளர்…

    அதானே புலி என்ன திறமோ??


  31. சாந்தன் on August 13, 2012 7:32 pm

    //..இதை புலி செய்திருந்தால் சாந்தன் கண்டிப்பாக நியாயபடுத்தி இருப்பார், இல்லையா சாந்தன்??…/

    இதுக்கு ரயாகரன் சுப்பராய் பதில் சொல்லி இருக்கிறார்… இதோ மீண்டும் கீழே,,,

    “… புலிப் பாசிசத்திடம் இருந்து கோரிய ஜனநாயகம், மக்களுக்கானதல்ல என்பது இந்த கும்பலின் பொது நிலைப்பாடு. ….”


  32. நந்தா on August 13, 2012 8:54 pm

    சந்திரகுமார் பங்கு பற்றும் கூட்டத்துக்கு தேவராஜன் தலைமை தாங்கினால் யாருடைய முடியும் கவிழ்ந்து விடாது. சீவரத்தினத்தை தலமைக்கு அழைக்கவில்லை என்ற ஆதங்கமோ தெரியவில்லை!


  33. பல்லி on August 13, 2012 9:52 pm

    :://இதுக்கு ரயாகரன் சுப்பராய் பதில் சொல்லி இருக்கிறார்… இதோ மீண்டும் கீழே,,,//

    இருக்கட்டுமே பல்லியின் கருத்து சோதி போன்றோர் மாற்று கருத்தாளர்களையும் விமர்சிக்கிறார்கள்; அவர்கள் விடும் தவறுகளையும் சுட்டி காட்டுகிறார்கள். ஆனால் சாந்தனோ மறந்து போய் கூட புலியின் தவறையோ அல்லது கொலையையோ கண்டு கொள்வதில்லையே!

    சாந்தன் தேசம்நேற்க்கு எதிராக போர் கொடி தூக்கியவர்கள் மாற்றுகருதாளர்தான் என்பது தாங்கள் அறியாதது அல்ல! அதுக்காக அதை வைத்து கொண்டு புலியின் செயல்பாடுகளை நியாயபடுத்தலாமா?? மாற்றுகருத்தாளர்களின் மறைமுகத்தையும் சுட்டி காட்டியதும் உங்களின் மாற்று கருத்தாளரே;

    //புலிப் பாசிசத்திடம் இருந்து கோரிய ஜனநாயகம்,//
    இது அவர்களிடம் இருந்திச்சா?? கேப்பதுக்கு??
    மக்களும் சரி மற்றய அமைப்புக்களும் சரி புலிகளிடம் இருந்து கேட்டது உயிர் பிச்சை மட்டுமே; இதில் நீங்க சொன்னவரும் விதி விலக்கல்ல;


  34. Rohan on August 13, 2012 9:59 pm

    //சந்திரகுமார் பங்கு பற்றும் கூட்டத்துக்கு தேவராஜன் தலைமை தாங்கினால் யாருடைய முடியும் கவிழ்ந்து விடாது. சீவரத்தினத்தை தலமைக்கு அழைக்கவில்லை என்ற ஆதங்கமோ தெரியவில்லை!//

    ஈபிடிபி கூட்டம் போடலாம் – கும்மி அடிக்கலாம் – புலுடா கோஷ்டிகளுடன் மட்டன் றோல் சாப்பிடலாம் – ஆனால் தேசம்நெற் நடத்துக் கூட்டத்துக்கு தேசம்நெற் பதாகையும் தேசம்நெற் தலைமையும் இருக்க வேண்டும்.

    சொல்கிற வகையில் சொல்லி புரிகிறவர்களுக்குப் புரிந்தும் விட்டது.

    ஜால்ராக்கள் விலகி நின்று – தொடர்ந்து ஜால்ரா அடிக்கலாம்.


  35. T Sothilingam on August 13, 2012 10:12 pm

    /புலியை கிழி கிழி என்று கிழிச்சியளே? அவர்களின் ‘முகமூடியை’ கிழிச்சியளே? ‘அதிகாரத்தை’ நோக்கி கேள்வி மேல் கேள்வி கேட்டியளே?// என சாந்தன் நீங்கள் எழுதியதற்கு,
    நான் தந்த பதில் / புலிகளின் அரசியல் தவறுகளுக்கு மட்டுமே எம்மிடமிருந்து எதிர்ப்பு இருந்தது, அவர்களின் போராட்ட உணர்வை நாம் எதிர்க்கவில்லை. புலிகளுடன் ஓர் அரசியலில் சந்திக்கவே எம்மில் பலர் முயற்சித்தோம். இந்த சந்திப்பில் மற்றைய அமைப்பினருடன் இணைந்து உருவாக்க பல தடவைகள் முயற்சித்தோம் வெற்றிபெறவில்லை.//
    இங்கு நான் சொன்னது அரசுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் புலிகள் ஒரு பக்கமாகவும் மறுபக்கத்தில் மற்றவர்களுமாக இயங்கக் கூடிய ஒரு நிலைப்பாட்டையே. இதற்கான ஒரு பொது உடன்பாட்டை புலிகளுடன் ஏற்படுத்தவே முயற்ச்சித்தோம். என்பதையே!ஆனால் சாந்தன் நீங்கள் இறுதிவரியை மட்டும் எடுத்து சந்திரகுமாரின் சந்திப்பு கூட்டத்துடன் சேர்த்து குழப்பி அதன் கருத்தை திரிபுபடுத்திக் கொண்டே போவதால் அந்த திரிபுகளுக்கு பதில் நான் சொல்லத் தேவையில்லை.

    சாந்தன்,
    நான் எழுதிய பதிலின் ஒரு துண்டை எடுத்து தனிமைப்படுத்தி பார்த்தால் அது வேறு அர்த்தப்படும்.
    பல தடவைகள் தேசத்தில் பலராலும், பலருக்கு சுட்டிக் காட்டப்பட்ட விடயமிது. தயவு செய்து அப்படியான செயலை தவிர்க்கவும். நன்றி.

    - தற்போது உள்ள சூழ்நிலை: ஈபிடிபியின் கூட்டத்தை குழப்ப முயன்றவர்கள் ஈபிடிபியிடம் மன்னிப்பு கோரும் நிலைக்கு வந்துள்ளனர், அதற்கான ஆரம்ப நிலையில் இருப்பதால் அவர்களின் பெயர்கள் வெளிவராமலும் போகலாம்.

    - இன்னோர் விடயம் தெரிய வந்துள்ளது. கூட்டத்தை குழப்ப முயன்ற மாற்றுக்கருத்தாளர்கள் எனப்படுவோரில் சிலர், தற்போதய புலிகளின் பெயரில் அமைப்புக்களைக் கொண்டுள்ள அமைப்புக்களிடையே உள்ள எதிர்/ மாற்றுக் கருத்தாளர்கள் (முன்னைய புலிகள்), (தலைவர் இருக்கிறார்/ தலைவர் இல்லை / நாடு கடந்த கோஸ்டிகள்) ஆகும்.

    சாந்தன்,
    ஈழத்தமிழ் மக்கள் மீதான உங்கள் உண்மையான அரசியல் வேலைத்திட்டங்களை நான் என்றும் சந்தேகிக்க வில்லை என்ற உங்கள் கூற்றில் உள்ள நேர்மையின்மையை, ஸ்ரீலங்கன் எம்பசி ஓசி மட்டின் ரோல் தொண்டைக்குள்ள சிக்குப்படுதோ?…… என்ற கேள்வி உறுதிப்படுத்துகின்றது.


  36. வடிவேலு on August 21, 2012 6:58 am

    தோழர் T Constantine சலசலப்பு இணைத்தளத்திட்கு சந்திரகுமாரன் தொடர்பான குத்து வெட்டுக்களின் விபரத்தினை எழுதியுள்ளார். இது சோதிலிங்கத்தின் வியாக்கியானங்களில் இருந்து சற்று வித்தியாசப்படுகின்றது. என்றாலும் லண்டன் வியாபாரிகள் மத்தியில் இருக்கும் குத்து வெட்டுக்களை சம்பத்தப்பட்ட வியாபாரியே எழுதியது இவர்களின் சிந்தனைகளின் எல்லைகளை சுட்டிகாட்டுகின்றது.

    கிளிநொச்சியில் இருந்து ஈஸ்ற்ஹாம் வரை தொடரும் வன்முறைம் அடாவடித்தனமும் :

    சலசலப்பு
    ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி எம்பி மு சந்திரகுமார் லண்டன் வந்ததும் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திடிர் கூட்டம் தொடர்பாகவும் தெளிவுபடுத்துவது அவசியம். குறிப்பாக எம்பி மு சந்திரகுமாரின் கூட்டத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான காரணங்கள் தெளிவுபடுத்தப்படுவது ஜனநாயக விழுமியங்களுக்காக குரல்கொடுக்கும் ஊடகத்தின் கடமை.

    லிற்றில் எய்ட் யாழில் நடத்துகின்ற கணணி மையத்தில் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்விற்கு எம்பி மு சந்திரகுமார் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டு இருந்தார். அங்கு அவர் வடக்கின் கல்வி நிலை பற்றி வழங்கிய உரை சாதாரண அரசியல்வாதிகளின் உரைகளைப் போல் ‘வெட்டினோம் வீழ்த்தினோம்’ என்று அல்லாது மிகக் காத்திரமானதாக அங்குள்ள கல்வி நிலையின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதாகவும் அக்கல்விநிலையை மேம்படுத்த வேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாகவும் தரவுகளுடனும் அமைந்தது.

    மேலும் கணணிக் கற்பித்தலுக்கான பல்வேறு மையங்கள் யாழில் உள்ளதால் லிற்றில் எய்ட் இன் உதவி வன்னிக்கே அவசியமானது என்றும் லிற்றில் எய்ட் வன்னியில் ஒரு கணணி மையத்தை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட எம்பி சந்திரகுமார் அதற்கான பூரண ஒத்துழைப்பை தனது கட்சி வழங்கும் என உறுதி அளித்தார். அந்த உறுதியை நிறைவேற்றிய அவர் கிளிநொச்சியில் லிற்றில் எய்ட் கணணி மையம் ஒன்றை உருவாக்க சகல ஒத்துழைப்புகளையும் வழங்கி உள்ளார். இக்கணணி மையம் செப்ரம்பர் – ஒக்ரோபர் மாதம் முதல் இயங்க உள்ளது. லிறிறில் எய்ட் இன் செயற்பாடுகளும் வன்னியை மையப்படுத்தியே நடக்க உள்ளது.தங்களுடைய கருத்துக்களை வெப்களிலும் தற்போது பேஸ்புக்கிலும் பதிந்து கொசிப்படிப்பவர்களைக் காட்டிலும் செயலில் கட்டுபவர்கள் மதிப்புக்கு உரியவர்கள். அந்த ரீதியில் ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, எம்பி மு சந்திரகுமாரின் செயற்பாடுகள் வெறும் பிரச்சாரங்களாகவோ உறுதிமொழிகளாகவோ இல்லாமல் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் செயற்திறன் குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் எனக்கு முரண்பாடுகள் குறைகள் இருந்தாலும் அதனை மட்டுமே கதைத்துக் கொண்டு இருப்பதால் யாருக்கும் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை.

    ஒருவர் தேசம்நெற் இல் எழுதியமாதிரி புலிகளைப் பற்றி விமர்சனம் செய்த பலர் ஒரு துரும்பைக்கூட தள்ளி வைக்க முடியாதவர்கள். புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தான் எத்தனை பேர் புலிகளின் எதிர்ப்பலையின் பின்னணியில் இருந்துகொண்டு வெத்து வேட்டுக்கள் தீர்த்தார்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. இன்று இவர்களில் பலர் புலிகளைவிடக் கேவலமான மத எதிர்ப்பும் இனத்துவேசமும் தீவிர தமிழ் தேசியமும் பேசுகின்றனர். தேவைப்படும் போது வன்முறையையும் பாவிக்கத் தயங்கவில்லை.

    இதைத்தான் Warren Buffett இவ்வாறு கூறினார்> “You never know who’s swimming naked until the tide goes out.”

    தனிப்பட்ட விஜயமாக லண்டன் வந்திருந்த எம்பி சந்திரகுமாரை ஒகஸ்ட் 8இல் லிற்றில் எய்ட் கணணி மையம் தொடர்பாக நானும் த ஜெயபாலனும் சந்தித்தோம். அதற்கு ஒரு மணித்தியாலங்கள் முன் தொலைபேசியில் பயமுறுத்தல் விடுக்கப்பட்டது. அதற்கு முன்னதாக நாங்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்ட இடத்திற்கு வந்து இச்சந்திப்புப் பற்றி விசாரித்தும் சென்றுள்ளனர்.

    மிரட்டல்கள், மறைமுகமான பயமுறுத்தல்கள், சுதந்திரமான செயற்பாடுகளில் தலையீடு என்பன எவருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தும் செயல்கள். இவை ஜனநாயகச் செயற்பாடுகளுக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே கருதப்பட்டது. இவ்வாறான வன்ம நடவடிக்கைகளை தேசம் – தேசம்நெற் கடந்த காலங்களில் மிகத் தீவிரமாக எதிர்த்து நின்றது. அதனை மீண்டும் ஒருமுறை செய்வதில் தேசம்நெற் இற்கு எவ்வித தயக்கமும் இருக்கவில்லை.

    ஜனநாயகச் செயன்முறைக்கு விடுக்கப்பட்ட சவாலுக்கு எதிராக தேசம்நெற் எம்பி மு சந்திரகுமாருடனான சந்திப்பிற்கும் கேள்விநேரத்திற்கும் ஏற்பாடு செய்தது. அதனை ஈபிடிபி இன் வெளிப்படையான அடையாளத்துடன் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. அதனாலேயே இபிடிபி இன் பனர் கூட்டத்தில் கட்டப்பட்டது.

    ஏற்கனவே ஓகஸ்ட் 5இல் எம்பி சந்திரகுமார் உடன் இடம்பெற இருந்த சந்திப்பில் அவரைத் தாக்குவதற்கு ஈஸ்ற்ஹாம் இளைஞர்களைக் கொண்ட வன்முறைக்குழு வாடகைக்கு அமர்த்தப்பட்டு சந்திப்பு இடம்மாற்றப்பட்டது. அதனால் ஓகஸ்ட் 10இல் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பிற்கு மெற்றோ பொலிட்டன் பொலிஸாரிடம் உதவி கோரப்பட்டது. பாதுகாப்பு வழங்கச் சமதித்த பொலிசார் கூட்டத்திற்கு வருபவர்களின் பெயர்ப் பட்டியல் இருத்தல் வேண்டும்; வருபவர்கள் பட்டியலில் உள்ள தங்கள் பெயர்களை உறுதிப்படுத்தும் அடையாள ஆவணம் ஒன்றைக் கொண்டுவர வேண்டும்; கூட்டத்திற்கு வருபவர்கள் பிரச்சினையில் ஈடுபடக் கூடாது போன்ற அறிவுரைகளை வழங்கினர்.

    எம்பி மு சந்திரகுமார் வருவதும் கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவதும் தான் அன்று என்முன் தீர்க்கமாக இருந்தது. 1980க்களில் இந்த மனப்பான்மையில் தான் GUES/EPRLF நோட்டிஸ்களை பண்டத்தரிப்பு – சண்டிலிப்பாய் சந்தியில் ஒட்டினேன். பல தடவைகள் புளொட் – புலி தாக்கப்பட்ட நோட்டிஸை ஒட்டினேன். 30 வருடம் கழிந்தும் லண்டனில் இதையே செய்தது வருத்தத்திற்குரியது.

    எம்பி மு சந்திரகுமார் மீதான தாக்குதல் முயற்சியின் பின்னணி:

    எம்பி மு சந்திரகுமார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் கிளிநொச்சியைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வருபவர். அதேவேளை தமிழ் எம்பி கிளிநொச்சியைத் தளமாகக் கொண்டவர். லண்டனுக்கு பல தடவைகள் வந்திருந்த அவர் புலிகளின் பின்னணி காரணமாக பிரித்தானிய தமிழர் பேரவையினருடனும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகச் செயலகத்துடனும் மிக நெருக்கமானவர். அவர்களே இவரை லண்டனுக்கு அழைப்பது வழமை.

    கிளிநொச்சியில் தங்களுக்கு இடையே உள்ள போட்டியைத் தீர்க்க எம்பி சந்திரகுமாரை புலம்பெயர்ந்த தமிழர்கள் நிராகரித்தனர், அவரைத் தாக்கினர், அவரது கூட்டத்தைக் குழப்பினர் என்ற விதமாகச் செய்திகள் வரவேண்டும் என அவ்எம்பி பிரித்தானிய தமிழர் பேரவை, அனைத்துலகச் செயலக முக்கியஸ்தர்கள் சிலரைக் கேட்டுக்கொண்டதாக அவர்களில் ஒருவர் தெரிவித்தார். இந்த வேண்டுதலுக்கு அமைய பிரித்தானிய தமிழர் பேரவை – அனைத்துலகச் செயலகம் (இரண்டையும் இயக்குபவர்கள் ஓரே நபர்களே.) எம்பி மு சந்திரகுமாரைத் தாக்க திட்டமிட்டது. ஆனால் இவர்கள் எம்பி சந்திரகுமாரை முன்பின் அறியாதவர்கள். சந்திரகுமாரின் நடவடிக்கைகள் எதனையும் தெரியாதவர்கள். அதனை அறிவதற்கு இவர்களுக்கு உதவி தேவைப்பட்டது.

    இந்நிலையில் தமிழ் தேசியக் காங்கிரஸ் இல் இருந்து வெளியேற்றப்பட்ட மூவர் தமது வெளியேற்றத்துக்கு ஈபிடிபி யும் காரணம் என்ற காரணத்தினால் முன்னையவர்களுக்கு தகவலையும் வாகன வசதியையும் வழங்கினர்.

    தாங்கள் தமிழ் தேசியக் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டமைக்கு பழிவாங்கும் ஒரு நடவடிக்கையாக ஈபிடிபி எம்பி சந்திரகுமாரைத் தாக்குவதற்கு பிரிஎப் மற்றும் அனைத்துலகச் செயலகத்தின் நபர்களுக்கு தங்கள் உதவியை இவர்கள் வழங்கினர்.

    ஓகஸ்ட் 5 மாலை கிழக்கு லண்டனில் உள்ள ஆனந்தபவானில் வழமைபோல் ரிஎன்சி இன் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு தொலைபேசிக் குறிப்புகள் மூலம் தகவல் அனுப்பப்பட்டது. அதில் எம்பி சந்திரகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வதும் குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்காலிகமாக நீக்கப்பட்ட மூவரது தடையையும் பெரும்தன்மையுடன் முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டு அம்மூவருக்கும் தகவல் அனுப்பப்பட்டது.ஆனால் இத்தகவலை இவர்கள் பிரிஎப் மற்றும் அனைத்துலகச் செயலகத்தின் நபர்களுடன் பரிமாறி எம்பி சந்திரகுமாரைத் தாக்கும் நடவடிக்கைக்கு முழுஒத்துழைப்பையும் வழங்கினர்.

    ஆய்வாளர் வி சிவலிங்கம் குறித்த நேரத்திற்கு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றிருந்தார். அங்கு சில இளைஞர்கள் கூட்டத்தை குழப்பும் நோக்குடன் செயற்படுவதை அவதானித்து எம்பி சந்திரகுமாரை அவ்விடத்திற்கு வரவேண்டாம் என்று தகவல் அனுப்பினார். அங்கிருந்த இளைஞர்கள் ஈஸ்ற்ஹாம் வன்முறைக்குழுவைச் சார்ந்தவர்கள். அங்கு எம்பி சந்திரகுமார் பற்றிய மோசமான சுவரொட்டியும் ஒட்டப்பட்டு இருந்தது. வி சிவலிங்கம் அனுப்பிய தகவல் கிடைக்கவும் எஸ் அரவிந்தன் கூட்டம் நடைபெற இருந்த இடத்தை வந்தடைந்தார். அங்கு இராதாகிருஸ்ணன் வாகனத்தையோட்ட கெ வரதீஸ்வரன் முன்னிருக்கையில் இருந்தார். பிரிஎப் – அனைத்துலகச் செயலக முக்கியஸ்தர் வாகனத்தின் பின்னிருக்கையில் இருந்தார்.

    எஸ் அரவிந்தன் ஏற்கனவே கூட்டத்திற்கு வந்தவர்களை ஏற்றிக்கொண்டு புதிய இடத்திற்குப் புறப்பட இராதாகிருஸ்ணனின் வாகனமும் ஈஸ்ற்ஹாம் வன்முறை இளைஞர் குழுவின் வாகனமும் எஸ் அரவிந்தனைப் பின்தொடர்ந்தது. ஏஸ் அரவிந்தன் அரை மணிநேரத்திற்கு மேலாக வாகனத்தை பல்வேறு பாதைகளினூடாகத் திருப்பி தன்னை யாரும் பின் தொடரவில்லை என்பதனை உறுதிப்படுத்திக் கொண்டு மாற்றப்பட்ட புதிய இடத்திற்கு ஒரு மணிநேரம் தாமதமாக வந்தடைந்தார்.

    தாமதமாக இடம்பெற்றாலும் ரிஎன்சி இன் கூட்டம் எம்பி சந்திரகுமாரின் உரையுடனும் அதனைத் தொடர்ந்து கலந்துரையாடலுடனும் நடந்து முடிந்தது.

    ரிஎன்சி இன் இக்கூட்டத்தைக் குழப்பி எம்பி மு சந்திரகுமாரைத் தாக்க முற்பட்ட பிரிஎப் – அனைத்துலகச் செயலகக் குழுவே அண்மையில் ஜரிஎப் கூட்டத்தையும் குழப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. பிரிப் உம் அனைத்துலகச் செயலகமும் தாங்களே தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் என்ற நிலைப்பாட்டுடனேயே இன்றும் இயங்குகின்றனர். இவ்வன்முறைக் குழுவினருக்கு பொறுப்பாக பல முக்கியஸ்தர்கள் உள்ளனர். இம்முக்கியஸ்தர்கள் பணமும் மதுவும் கொடுத்து இந்த இளைஞர்களை ஏவிவிடுகின்றனர்.

    இவர்களின் இந்த ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு சவாலாகவும் வன்முறைக் குழுக்களைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற அராஜக அரசியலுக்கு சவாலாகவுமே தேசம்நெற் எம்பி மு சந்திரகுமாருடன் ஒரு சந்திப்பையும் கேள்வி நேரத்தையும் ஏற்பாடு செய்திருந்தது. திடிரென ஒழுங்கு செய்யப்பட்ட இச்சந்திப்பு பற்றிய தகவல்கள் பொதுத் தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டு பொதுவானவர்களையும் உள்ளெடுக்க முயற்சிக்கப்பட்டது.

    ஓகஸ்ட் 08 இரவு பிரிஎப் – அனைத்துலகச் செயலகத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ரி ரகுராஜ் (ஆணிவேர் படத் தயாரிப்பாளரும் யாழில் கட்டப்பட்டு உள்ள ரில்கோ ஹவுஸ் ஹோட்டல் உரிமையாளருமான திலகராஜா வின் சகோதரர்.) ஓகஸ்ட் 10 எம்பி சந்திரகுமாரின் பொதுக்கூட்டம் இடம்பெறப் போகின்றது என்றதும் ‘ஈபிடிபி துரோகிகளை ஆட்களை வைத்து அடிப்போம்’ என்று தேசம்நெற் ஆசிரியர் த ஜெயபாலனை எச்சரித்துள்ளார். ரகுராஜ். ஈஸ்ற்ஹாமில் பயணமுகவரகம் ஒன்றை நடாத்திவருகிறார்.

    இந்தப் பின்னணியில் ஓகஸ்ட் 10 எம்பி சந்திரகுமாரின் சந்திப்பிற்கு மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்ட லோட்புறூக் மண்டபத்துக்கு அண்மையாக சந்திப்பின் ஆரம்பம் முதல் இறுதிவரை பத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். மண்டப வாயிலில் மூன்று தனியார் பாதுகாவலர்கள் நிகழ்வுக்கு வருபவர்களை> கொடுக்கப்பட்ட பட்டியலுடன் சரிபார்த்து நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதித்தனர்.

    நிகழ்வு ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்ட மாலை ஆறு மணிக்கு முன்பாகவே வாகனங்களில் தமிழ் இளைஞர்கள் வந்து மண்டபத்தை நோட்டமிட்டனர். பொலிஸார் வந்து இறங்கவும் வந்த இளைஞர்கள் வாகனங்களை எடுத்துச் சென்றனர். மாலை ஆறு மணிக்குப் பிறகு இந்த இளைஞர்களில் சிலர் நடந்து வந்து மண்டபத்துக்குள் நுழைய முற்பட்டனர். அவர்களில் வோல்தம்ஸ்ரோ இளைஞர் வன்முறைக் குழுவின் தலைவனும் ஒருவர். குடிபோதையில் இருந்த சிலர் மோசமான துசணங்களை அள்ளி வீசினர். இரவு மண்டபத்தை கொழுத்தப் போவதாக என்னை எச்சரித்தனர். ‘நான் வீட்டுக்கு போகும் போது மண்டபத்தை கொண்டு போக மாட்டேன். நீங்கள் கொழுத்துங்கள்’ என்று சொல்லிவிட்டு நான் அவ்விடத்தை விட்டுச் சென்று விட்டேன். மண்டபத்தினுள் நுழைய முனைந்தவர்களை தங்களுடைய அடையாளத்தை உறுதிப்படுத்தும்படி பாதுகாப்பு கடமையில் இருந்தவர்கள் கேட்ட போது அவர்கள் தவறான தகவல்களை வழங்கினர். இதன் காரணமாக இவர்கள் மண்டபத்தினுள் அனுமதிக்கப்படவில்லை. அப்படி இருந்தும் அத்துமீறிச் செல்ல முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    மேலே நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்க கீழே மண்டபத்துக்கு அண்மையில் இருந்த மாடித்தொகுதிக்கு அண்மையாக வன்முறைக் குழு சார்ந்த இளைஞர்கள் கூடினர். இவர்கள் மாடித்தொகுதியின் கீழும் மாடித் தொகுதியில் இருந்த ஒரு பிளாற்றிலும் இருந்து மோசமான துசண வார்த்தைகளால் கத்தி சத்தம் போட்டனர். குடிபோதையில் இருந்த இவர்களை பொலிசார் தெருவுக்கு வந்து பொதுமக்களை இடைஞ்சல்படுத்தாதவாறு தடுத்து வைத்திருந்தனர்.

    நிகழ்ச்சிகள் முடிவடைந்து வீடு திரும்பியவர்களை நோக்கி இயலாமையில் துசண பூஜையை போதையில் நின்றவர்கள் செய்தனர்.

    நிகழ்ச்சி ஒழுங்குகள் திட்டமிட்டபடி நடந்தது. நான் தலைமையேற்று சிற்றுரையொன்றை வழங்கினேன். எஸ் தவராஜா எம்பி மு சந்திரகுமாரை அறிமுகப்படுத்தி வைத்தார். எம்பி சந்திரகுமார் ஒரு மணிநேரம் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பார்வையாளர்கள் தங்கள் கேள்விகளை முன் வைத்தனர். இதன் முழுத்தொகுப்பும் தேசம்நெற் இல் பதிவு செய்யப்பட்டு உள்ளது. திட்டமிட்டபடி ஒன்பது மணிக்கு முடிவடைய வேண்டிய நிகழ்ச்சி சற்று தாமதமாக முடிவடைய எம்பி மு சந்திரகுமார் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் ஒரு ஜனநாயகக் கடமையைச் செய்த திருப்தியுடன் மனநிறைவுடன் வீடு திரும்பினார்.
    சென்ற காலங்களில் தமிழ் இளைஞர்களின் வன்முறையை அடக்கினோம் என்று மெற்றொ பொலிட்டன் பொலிஸ்க்கு ஆலோசனை வழங்கிய உள்ளுர் அரசியல்வாதிகளும் ஆன்மீகத்தை அடிப்படையாகக்கொண்ட உலகின் பாரம்பரிய மதத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் இன்றைய இளம் சமூகத்தை தவறான பாதையில் வழிநடத்துவது மிகவும் பரிதாபத்திற்குரியது.

    உள்ளுரில் பத்து சண்டியர்களைத் தெரிந்தவர்கக்கு இவ்வளவு செய்ய முடியும் என்றால் மூன்று லட்சம் படையை வைத்துள்ள ஃலங்கா அரசு எவ்வளவு அடாவடித்தனத்தை தமிழர்கள் மீது காட்ட முடியும். Violence is the last refuge of the incompetent

    ரி கொன்ஸ்ரன்ரைன்
    -http://salasalappu.com/?p=57565


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு