சிவந்தனின் காலவரையற்ற உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கருணாநிதி கோரிக்கை
லண்டனில் ஈழத் தமிழர் நிலைமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஒலிம்பிக் பூங்கா முன்பு ஈழத் தமிழரான கோபி சிவந்தன் மேற்கொண்டு வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈழ மக்களின் உரிமைகளுக்காகவும், மறு வாழ்விற்காகவும், உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய இத்தருணத்தில், விலை மதிப்பில்லா உயிரைக் காப்பாற்ற உண்ணாவிரதத்தை கைவிட்டு வேறு அறவழிகளில் அனைவருடனும் இணைந்து செயல்களில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed
//இத்தருணத்தில், விலை மதிப்பில்லா உயிரைக் காப்பாற்ற உண்ணாவிரதத்தை கைவிட்டு வேறு அறவழிகளில் அனைவருடனும் இணைந்து செயல்களில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்//
ஒரு கவன ஈர்ப்புக்கு மேல் உண்ணாவிரதம் வீணானது என்பது எனது கருத்து.
இருந்தாலும் கருணாநிதியின் கருத்து வேடிக்கையாகத் தான் உள்ளது.
அதென்ன வேறு அறவழிகள்? கடிதம் எழுதுதல், சிறை நிரப்புப் போராட்டம், 2 மணி நேர உண்ணாவிரதம் இப்படி ஏதாவதா?
அனைவருடனும் இணைந்து? யார் அந்த ‘அனைவர்’? ஸ்ராலின், அழகிரி, கனிமொழி, தயாநிதி, கலாநிதி, போன்றோரா??
10,000 கிலோ மீற்ரருக்கப்பால் வாழும் கருணாநிதிக்கு சிவந்தன் மீது வந்த அக்கறை வேறு ஒரு மேற்குலக அரசியல் வாதிகளிற்கும் ஏன் ஏற்படவில்லை. தமிழர் செய்யும் போராட்டமெல்லாம் மேற்குலகில் தெருக்கூத்தாக கணிக்கப்படுகின்றதா?.-துரை