நீதிமன்றம் வருமாறு ரிசாத் பதியுதீனுக்கு உத்தரவு


மன்னார் நீதவான் ஏ.ஜுட்சனை அச்சுறுத்திய வழக்கு தொடர்பாக திங்களன்று நடைபெற்ற வழக்கு விசாரணையொன்றில், அமைச்சர் ரிசாத் பதியுதீனை வரும் 27 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு பாணந்துறை நீதவான் திசாநாயக்க அவர்களினால் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையின்போது அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் அச்சுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் மன்னார் நீதவான் ஏ.ஜுட்சன் நீதவான் திசாநாயக்க முன்னிலையில் தோன்றி சாட்சியமளித்தார். தன்னை அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களே தொலைபேசியில் தொடர்புகொண்டு அச்சுறுத்தியதாகவும், அவரது குரல் தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், இதற்கு முன்பும் அவர் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார் என்பதால் அவரது குரலை நன்கு அடையாளம் காணக்கூடியதாக இருந்ததாகவும் நீதவான் ஜுட்சன் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரண்டாம் முறையாக அமைச்சர் தன்னை அச்சுறுத்தியபோது, அவர் பேசியதை அந்த நேரம் தனது அருகில் இருந்த சட்டத்தரணிகள் சிலர் கேட்கும்படி செய்ததாகவும் குறிப்பிட்டார்.

இந்த வழக்கை விசாரணை செய்த சிஐடியினர் சாட்சியமளிக்கையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன், அவரது சகோதரர், மன்னார் நீதவான் ஜுட்சன் ஆகியோரின் வாக்குமூலங்களைத் தாங்கள் பதிவு செய்திருப்பதாகவும், தமது விசாரணைகளின் மூலம் அமைச்சருடைய சகோதரரே நீதவானுடன் தொலைபேசியில் பேசியதாகத் தெரிய வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

சிஐடியினர் நீதிமன்றத்திற்கு கையளித்துள்ள விசாரணைகள் தொடர்பான அறிக்கையில் எவரையும் பெயர் குறிப்பிட்டு சந்தேக நபராகக் குறிப்பிடாமல் இருந்ததை சுட்டிக்காட்டிய நீதவான் திசாநாயக்க அவர்கள், ஒரு விசாரணை அறிக்கையில் சந்தேக நபர் எவரையும் பெயர் குறித்து குறிப்பிடாமல் எவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அச்சுறுத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசியின் உரிமையாளர் யார் என்பது தெரிந்த பின்பும் ஏன் சந்தேக நபராக எவரையும் அறிக்கையில் சிஐடியினர் குறிப்பிடவில்லை என்றும் நீதவான் கேள்வி எழுப்பினார்.

நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
பின்னர் வரும் 27 ஆம் திகதி அமைச்சர் ரிசாத் பதியுதீனை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் நீதவான் ஜுட்சன் தர்பபில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உபதலைவர் கமகே, செயலாளர் அனோமா மற்றும் சிலர் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய சட்டத்தரணிகள் குழுவினர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

எதிர்த்தரப்பினருக்காக சட்டத்தரணி சகீர் ஆஜராகியிருந்தார்.

மன்னார் நீதிமன்றத்தின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய தாக்குதல் நடத்திய வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர். ஆயினும் மன்னார் சட்டத்தரணிகளான நேரில் கண்ட சாட்சிகள் பெயர் குறிப்பிட்டு தெரிவித்திருந்த 27 பேரும் தலைமறைவாகியிருப்பதனால் அவர்களைத் தங்களால் கைது செய்ய முடியவில்லை எனக் கூறிய பொலிசார், அவரகளைக் கைது செய்வதற்காக நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்டிருந்த உத்தரவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள 13 பேரையும் பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் செய்யப்பட்ட வாய் மொழி மூலமான பிணை விண்ணப்பத்தையடுத்து, எழுத்து மூலமாக விண்ணப்பம் செய்யுமாறு கூறிய நீதவான் திசாநாயக்க அவர்கள், இந்த வழக்கு தொடர்பில் தேடப்படுகின்ற 27 பேரையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என பொலிசாருக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

BBC TAMIL

இது தொடர்பான வேறு பதிவுகள்

  • வேறு பதிவுகள் இல்லை!
உங்கள் கருத்து
  1. Rohan on August 14, 2012 8:02 am

    என்னமா ஷோ காட்டறாங்க!

    அமைச்சருக்கு நீதிபதியையே தெரியாதாம் – அமைச்சரின் தம்பி தான் மிரட்டினார் என்று சொல்கிறது சிஐடி. ஆனால் விசாரணை அறிக்கையில் ‘சந்தேக நபரின்’ பெயர் இல்லை. தொலைபேசி உரிமையாளர் யார் என்று தெரிந்திருக்கிறது. ஆனால், அது பற்றி சிஐடி அலட்டிக்கொள்ளாது! ஆக, அமைச்சர் அல்லது சகோதரர் குற்றத்தை ஒப்புக்கொள்வாரா?

    அது சரி – முழு உலகத்துக்கே தெரிந்த விடயம் நீதிபதிக்கு எப்படித் தெரியாது போனது? வீடியோ இருந்தாலென்ன – முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் ஜிபிஎஸ் ஆள்கூறுகள் கொடுத்தால் மட்டுமே சிறிலங்கா பொலிஸ் பிடித்தாலும் பிடிக்கும்.


  2. ABI on August 14, 2012 12:36 pm

    /தமது விசாரணைகளின் மூலம் அமைச்சருடைய சகோதரரே நீதவானுடன் தொலைபேசியில் பேசியதாகத் தெரிய வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்/
    THEY PLYING A GAME


  3. பல்லி on August 15, 2012 8:17 am

    ///தமது விசாரணைகளின் மூலம் அமைச்சருடைய சகோதரரே நீதவானுடன் தொலைபேசியில் பேசியதாகத் தெரிய வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்//

    ஆக சட்டத்தின் மதித்துதான் அமைச்சர் தவறு செய்து உள்ளார் என சொல்லுங்கோ; என்னமா பிளான் பண்ணி அமைச்சர் பெருமக்கள் வாழ்கிறார்கள்,


  4. mohamed Nisthar on August 15, 2012 1:50 pm

    அன்புள்ள பல்லி,

    “என்னமா பிளான் பண்ணி அமைச்சர் பெருமக்கள் வாழ்கிறார்கள்,” இது நம்ம நாட்டல மட்டுமில்ல, இந்த யூ.கே யிலும் தெரியுந்தானே கிட்டத்தில் ஒரு எம்பி, ஸ்பிடிங் ஒபென்ஸ் ல மாட்டிக்கிட்டு தன்ட வைவ்ப் தான் கார ஓட்டினா என்டு சொல்ல சொன்னது ஞாபகம் இருக்குமென்டு நினைக்கிறேன்.

    நம்ம அமெரிக்க பழைய Boss,Bill Clinton சொன்னாரில்யா, I havn’t done anything with that woman. இப்படி வீட்டுக்கு வீடு வாசல் படி.


  5. பல்லி on August 15, 2012 4:15 pm

    //நம்ம அமெரிக்க பழைய Boss,Bill Clinton சொன்னாரில்யா, I havn’t done anything with that woman. இப்படி வீட்டுக்கு வீடு வாசல் படி..//
    ஆமா ஆமா!!! இப்படி கேடுகெட்ட விடயங்களில் ஆவது நம்ம தலமைகளும் நிர்வாகிகளும் மேல்நாட்டை பின்பற்றுகிறார்களே; மகிழ்ச்சி:


  6. சாந்தன் on August 15, 2012 5:41 pm

    //..இது நம்ம நாட்டல மட்டுமில்ல, இந்த யூ.கே யிலும் தெரியுந்தானே….///

    அதானே?புலி என்ன திறமோ வரிசையில் …அமெரிக்கா என்ன திறமோ? யூகே என்ன திறமோ?
    சும்மா சொல்லக்கூடாது!

    அமெரிக்காவிலோ அல்லது யூகேயிலோ ஒரு அமைச்சர் நீதிபதியை மிரட்டினால் என்ன நடக்கும்?
    எங்கள் பிரதேச காங்கிரஸ் பிரதிநிதி வேகமாக கார் ஒட்டி அகப்பட்டு மதுபோதையிலும் இருந்தார் என தெரியவந்து இரவு பொலிஸ் ரிமாண்டில் வைக்கப்பட்டு காலையில் அவரைப் பிணை எடுத்தவர் பின்னணி மாட்டி கள்ளப்பொம்பிளை மாட்டுப்பட்டு பிள்ளை இருப்பதும் தெரியவந்து பதவி இழந்து….

    ஸ்ரீலங்காவில் என்னடாவென்றால் ……ஓ..நிஸ்தார் நீங்கள் சொன்ன அந்த வீடியோ ’ஆதாரம்’ (அதுதான் நீதவான் கையைத்தூக்க ஃபிரீஸ் ஆகிய வீடியோ) ரூபவாகினியின் கைங்கரியம் என்கிறர்களே!! சும்மா சொல்லகூடாது…சுப்பர் ‘ஆதாரம்’ போங்க!!


  7. Ajith on August 15, 2012 7:46 pm

    இந்த வழக்கு தொடர்பில் தேடப்படுகின்ற 27 பேரையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என பொலிசாருக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.////

    பாவம் போலீசார் யார் சொல்லை கேட்பது. நீதிபதயின் சொல்லையா அல்லது கோடபாயாவின் சொல்லையா? வாழ்வா சாவா என்ற நிலையில் அவர்கள். ஸ்ரீ லங்கா நீதியில் இன்னும் நம்பிக்கை வைத்து ஒருக்கும் சிலருக்கு இது விளையாட்டு. பாவம் அப்பாவி பொலிசாருக்கு இது உயிர் வாழவதர்கான பிரச்சினை? வீடிற்கு வீடு வாசற்படி என்ற அல்லாவின் ஆணையை மீறாத சிலர் அல்லாவும் போ ஆட்டு குட்டியும் போ என்ற நிலையில் என்ன பரிதாபம். தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்பார் சிலர்.


  8. சாந்தன் on August 15, 2012 10:25 pm

    நிஸ்தார்,

    கிளின்ரன் சொன்னது “I did not have sexual relations with that woman” என்பதுதான் சரியானது. அமெரிக்கா உலகுக்கும் ஆங்கில இலக்கியத்துக்கும் வழங்கிய புகழ்பெற்ற வசனங்களில் ஒன்று என அமெரிக்கர் எள்ளிநகையாடும் வசனத்தை கையாளும் போது கொஞ்சம் கவனம் தேவை!

    மேலும் இதனை வீட்டுக்கு வீடு வாசல் படி என அமெரிக்க காங்கிரசில் விட்டுவிடவில்லை மாறாக அவர்மீது வழக்குத்தாக்கல் செய்ய வேண்டும் என நாடே அல்லோலகல்லோலப்பட்டது. காங்கிரசிலும் செனற்றிலும் 26 நாட்களுக்கு மேலாக விவாதம் நடந்தது. நாட்டில் அதைத்தவிர எதுவுமே நடக்கவிடாமல் எதிர்க்கட்சியினர் காங்கிரசை முடக்கினர். இறுதியில் செனற் சபையின் குடியரசுக் கட்சியினரில் 10 பேர்வரை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்து கிளின்ரன் மயிரிழையில் தப்பிப்பிழைத்தர்.
    ஆனால் இன்றுவரை அமெரிக்க மக்களில் ஒருசாரார் எதிர்த்து வாக்களித்த செனற்ற்ர்களை மன்னிக்கத்தயாரில்லை. பலர் அடுத்து வந்த தேர்தல்களில் கட்சிக்குள் ஆதரவிழந்து வெளியேறினர்.

    ஆனால் ஸ்ரீலங்காவில் நீதி அமைச்சர் …ஆமாங்க நீதி அமைச்சரே தான் – சொல்கிறார் சக அமைச்சர் என்கின்ர வகையில் கருத்து சொல்ல மாட்டாராம்.
    ஆனால் நேற்று நடந்த பள்ளிவாசல் எரிப்பு/நோன்பு துறப்பு அடிதடியில் அதாவுல்லா குற்றவாளியாம்? அட அதாவுல்ல ‘சக அமைச்சர்’ இல்லையா? அதுமட்டுமல்ல பொலிசுக்காரன் பக்கம் சார்ந்து நடக்கிறானாம்? சொல்லுறவர் நீதி அமைச்சர்…ஆமாங்க நீதி அமைச்சரே தான் !


  9. mohamed Nisthar on August 17, 2012 6:29 pm

    அன்புள்ள சாந்தன்,

    “வீட்டுக்கு வீடு வாசல் படி என அமெரிக்க காங்கிரசில் விட்டுவிடவில்லை மாறாக அவர்மீது வழக்குத்தாக்கல் செய்ய வேண்டும் என நாடே அல்லோலகல்லோலப்பட்டது” சாந்தன்.

    நான் அந்த Impeachment proceedings முழு விவாதத்தையும் பார்தேன். இங்கே முடிவுதான் முக்கியம். காப்பாற்றி விட்டார்கள். ஹிலரி அவர் கையை பிடிக்காமல் ஒரு மீட்டர் இடைவெளியில் நடந்து சென்ற காட்சி இன்னும் நினைவில். ஆக இப்படியான பிரச்சினைகளை(யும்) (அதில் அரசியல் பிரமுகர்கள் தப்பிவிடுவதையும்) தான் வீட்டுக்கு வீடு வாசல் படி என்றேனே தவிர உங்கள் ஆழ் மனதில் உள்ள (அறண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போல) “புலி திறமே” எண்ணத்தின் பிரதிபலிப்பல்ல அது.


  10. சாந்தன் on August 17, 2012 10:29 pm

    //…நான் அந்த Impeachment proceedings முழு விவாதத்தையும் பார்தேன். …//

    ஆக…வீட்டுக்கு வீடு வாசல் படி என விட்டுவிடாமல் முழுவிவாதத்தையும் உட்கார்ந்து பார்த்தீர்களா? அடடா!!
    ஹிளின்ரன் தப்பியது இது ஒரு ‘கள்ள உறவு’ விவகாரம் அன்றி நீதிபதியை மிரட்டல், நீதிமன்றம் மீது கல்லெறிதல் விவகாரம் அல்ல.
    அதற்குச் சரியான உதாரனம் என்றால் நிக்சன் தனது அரசியல் எதிரிக்கட்சியின் அலுவலகத்தை உடைத்து ஒட்டுக்கேட்கும் சாதனங்கள் பொருத்திய விடயம் பிடிபட்டதை சொல்லலாம். அதுதான் உண்மையிலேயே பொருத்தமான உதாரணம்.

    கட்சி அலுவலகத்தை உடைத்தது = கோட்டுக்கு கல்லெறிந்தது
    விசேட சட்டத்தரணியை வேலையை விட்டே தூக்கச் சொன்னது = நீதிபதியை மிரட்டியது

    இறுதியில் இது ‘வீட்டுக்கு வீடு வாசல் படி’ விவகாரமல்ல குற்ர்ச்செயல் என நிக்சன் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
    ஸ்ரீலங்காவில் அப்படி ஏதும் உண்டா?
    அமைச்சரின் சகோதரர் என அறிகிறார்களாம், ஆள் அகப்பட்டாரா இல்லை சிங்கப்பூரில் ஆசுப்பத்திரியிலா?


  11. abdula on August 18, 2012 1:21 pm

    முஸ்லிம் சமாதான நீதிவானை தாக்கி புத்தரை வழிபட வைத்த சிறிலங்கா காவல்துறை அதிகாரி

    முஸ்லிம் சமாதான நீதிவான் ஒருவரை கடுமையாகத் தாக்கி, புத்தர் சிலையை கட்டாயப்படுத்தி வழிபட வைத்துள்ளார் சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர். மாடு திருடியதான குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்கா காவல்துறையினர் சமாதான நீதிவான் என்.எம்.ஜுனைதீனை கைது செய்திருந்தனர்.

    அவரை ஹிந்தோகம காவல்நிலைய பொறுப்பதிகாரி மோசமாக தாக்கியதுடன் தனது அறைக்கு இழுத்துச் சென்று அங்கிருந்த புத்தர்சிலையை வழிபட வைத்துள்ளார்.

    தாக்குவதை நிறுத்துவதானால் புத்தர் சிலையை வழிபட வேண்டும் என்று சிறிலங்கா காவல்துறை அதிகாரி கூறியதால் வேறுவழியின்றி தான் புத்தர் சிலையை வழிபட்டதாக அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

    இந்தக் குற்றச்சாட்டை அடுத்து, வடமத்திய மாகாண பிரதி காவல்துறை மாஅதிபர் ஜெனத் அபேசிறி குணவர்த்தனவின் மேற்பார்வையின் கீழ், விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

    இதுகுறித்து சிறிலங்கா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிலும், பாதுகாப்புச் செயலரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


  12. Rohan on August 18, 2012 10:01 pm

    //தாக்குவதை நிறுத்துவதானால் புத்தர் சிலையை வழிபட வேண்டும் என்று சிறிலங்கா காவல்துறை அதிகாரி கூறியதால் வேறுவழியின்றி தான் புத்தர் சிலையை வழிபட்டதாக அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.//

    மத சமத்துவம் நிலவும் நந்நாடு!

    அது சரி – காவல்நிலைய பொறுப்பதிகாரி தாக்கினாரா அல்லது அவரது தம்பி தாக்கினாரா?

    அவங்க ஆளுங்க பாத்துகிடுவாங்க… நாம சாப்பிட்டு படுத்து சந்தோசமா நம்ம வேலையைப் பாக்கலாம்.


  13. Mohamed SR. Nisthar on August 18, 2012 10:32 pm

    அன்புள்ள சாந்தன்,

    உப்புக்குளம் விடயத்தில் அமைச்சர்-நீதிபதி இழுபறிக்கு நிகரான அமெரிக்க விடயங்களா இங்கு பேசப்படுகிறது? அட இதுவரை அதாவது அமெரிக்கவில் உள்ள சாந்தன் சொல்லும் வரை தெரியாமல் போய்விட்டதே. வீட்டுக்கு வீடு வாசற்படி என்றால், ஏன் மினக்கெட்டு அமெரிக்கவிடயங்களை பார்க்கவேண்டும் என்ற சாந்தனின் (தொக்கி நிற்கும்) கேள்வி விவேகமானதுதான்.

    அதே விவேகத்தை அவர் பாவித்து இங்கு வந்து மினக்கெட்டு கதை சொல்லி, எதிர்வாதம் பண்ணி இலங்கையில் பெரிய மாற்றம் காண விரும்பும் முயற்சி அப்பப்பா மெய்சிலிர்கிறது.
    வாழ்த்துக்கள்.


  14. சாந்தன் on August 19, 2012 7:33 pm

    //..உப்புக்குளம் விடயத்தில் அமைச்சர்-நீதிபதி இழுபறிக்கு நிகரான அமெரிக்க விடயங்களா இங்கு பேசப்படுகிறது? அட இதுவரை அதாவது அமெரிக்கவில் உள்ள சாந்தன் சொல்லும் வரை தெரியாமல் போய்விட்டதே…..///

    அதுதானே??? உப்புக்குளம் விசயத்தை ‘வீட்டுக்கு வீடு வாசல் படி’ என பில் கிளின்ரனின் கள்ள காதல் விடத்தை சார்ந்து பேசியவர் யார் என்பது தெரியாம போய்விட்டதே எனக்கு??? //……

    அதே விவேகத்தை அவர் பாவித்து இங்கு வந்து மினக்கெட்டு கதை சொல்லி, எதிர்வாதம் பண்ணி இலங்கையில் பெரிய மாற்றம் காண விரும்பும் முயற்சி அப்பப்பா மெய்சிலிர்கிறது.
    வாழ்த்துக்கள்……//

    ஸ்ரீலங்காவில் ஒரு அமைச்சர் நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுகிறார் அதனை வீட்டுக்குவீடு வாசல்படி என ஒரு கள்ளப்பொம்பிளை கேசுக்கு ஒப்பிட்டு மாற்றம் கொண்டுவரமுடியாமல் பண்ணி கள்ளத்தன ஓப்பீடு பண்ணி தட்டிக்களிக்கும் முயற்சி மெய்சிலிர்க்க வைப்பது மட்டுமல்ல என்னென்ன்வெல்லாமோ சிந்திக்கவைக்கிறது. சட்ட ஆலோசகரல்லவா நீங்கள் நிஸ்தார்!!


  15. சாந்தன் on August 19, 2012 7:50 pm

    //…நாம சாப்பிட்டு படுத்து சந்தோசமா நம்ம வேலையைப் பாக்கலாம்……//
    வேலையைப்பார்க்க இறங்கும் போது படியில் கவனமாக இறங்குங்க. வீட்டுக்கு வீடு இருக்கும் வாசல்படிதானே என அசமந்தமாக இறங்கி விடாதீர்கள்!!

    //.. மாடு திருடியதான குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்கா காவல்துறையினர் சமாதான நீதிவான் என்.எம்.ஜுனைதீனை கைது செய்திருந்தனர்….//
    நீதவானே சுட்டுக்கொல்ல உத்தரவு இடும் (அப்படித்தான் ரூபவாகினியின் வீடியோ ஆதாரம் சொல்லுது) கேஸ், அமைச்சரோ அச்சுறுத்தல் விடும் கேஸ், இன்னொரு அமைச்சர் கருத்துச் சொல்ல விரும்பாத கேஸ். நான் சமாதான நீதவான் அற்லீஸ்ற் ஒரு மாடு களவெடுக்க உரிமை இல்லையா என யோசித்திருப்பார்.


  16. Rohan on August 19, 2012 8:37 pm

    //அன்புள்ள சாந்தன்,

    உப்புக்குளம் விடயத்தில் …..
    அதே விவேகத்தை …..//

    பெரிய புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைப்பு! மேலே தரப்பட்ட பின்னூட்டத்தில் ஒரு பொருளும் இல்லை. குவித்து வைக்கப்பட்ட குப்பை ஒரு குவியலாகத் தோன்றினாலும் கிளறிப் பார்த்தாலும் ஒன்றுமே இல்லாதிருப்பது போல… ஒரு குவியல் வார்த்தைகளைப் போட்டு விட்டால் ஒரு பின்னூட்டமாக வந்துவிடும் என்ற நினைப்பு…. அவலை நினைத்து உரலை இடித்துக் கொண்டிருப்போமாக!


  17. நந்தா on August 20, 2012 10:58 am

    சட்டம் ஒழுங்கு பற்றி புலிக்கு இன்னமும் வாலாக இருப்பவர்களுக்கு என்ன பேச இருக்கிறது? புலிகளின் நீதி மன்றங்கள் பற்றி அவர்கள் வாய் திறப்பது நல்லது! புலிகளின் நீதி மன்றங்களில் தீர்ப்பு எழுதிய பின்னரெ விசாரணை.

    புலிகலின் “அசகாய சூரத்தனக்களை” ஆகா ஓகோ என்று வரவேற்றவர்கள் நீதி பரிபாலனம் பற்றி வாய் திறக்காமல் இருப்பது நல்லது.

    இன்று சிங்கள சட்டத்தரணிகள் அமைச்சரின் அடாவடித்தனம் பற்றி அக்கறை கொண்டு மன்னார் நீதிபதிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். அது ஜனநாயகம். புலி நாயகம் அல்ல!


  18. mohamed Nisthar on August 20, 2012 4:52 pm

    அன்புள்ள றோகன்,
    நீங்கள் எப்பேர் பட்டவர் என்பதையும், உங்கள் அறிவுசார் நிலையையும் நான் எடை போட்டிருக்கவில்லை. அதற்கான தேவையும் எனக்கில்லை. இங்கே கருத்துச் சொல்வது அவரவர் அறிவுஜீவிதத்தைக் காட்டவென்றும், நீங்கள் அறிவாளி என்று உங்களுக்கு நீங்களே பொன்னாடை போர்த்துவதும் உங்கள் விருப்பம். அதேநேரம் கருத்து விடுபவர்களின் திறண் வாசிப்போரால் இனங்காணப்படும் என்பது என் அபிப்பிராயம்.


  19. Ajith on August 20, 2012 6:20 pm

    புலிகலின் “அசகாய சூரத்தனக்களை” ஆகா ஓகோ என்று வரவேற்றவர்கள் நீதி பரிபாலனம் பற்றி வாய் திறக்காமல் இருப்பது நல்லது.///
    கொலையாளிகளை பாரளமன்ற உள்ளேயே வைத்து ஜனனனயகம் புரிகின்ற அழகு பற்றி பெருமை வேண்டியவர்கள் தான் நீங்கள். உங்கள் சிங்கள நீதிபதியே நீதிக்காக வேண்டி நிற்பது வேறு எந்த நாட்டில் உண்டு ?


  20. mohamed Nisthar on August 21, 2012 9:27 am

    அன்புள்ள கருத்தாளர்களுக்கு,

    முஸ்லீம் சமாதான நீதவானை தாக்கி புத்தர்,…

    “,… இந்த சம்பவத்தோடு தொடர்புடைய ஏ. ஜுனைதீன் என்பவர் நாச்சியாதீவுக்கு அன்மைக்கிராமான தெமட்டாவை எனும் கிராமத்தை சேர்ந்தவர் இவர் திருமணம் முடித்து நாச்சியாதீவு கிராமத்திற்க்கு வந்தவர். இவரது பரம்பரை தொழில் மாடுகளை வாங்குவதும் விற்பதும் , இந்த வியாபாரத்தில் தரகராக செயற்படுவதும், ஆகும் மாட்டு வியாபாரத்தில் இவர் தரகராக செயட்படுவதினால் மக்கள் இவரை JP என்று அழைக்க ஆரம்பித்தனர் இதுவே அவரை அடையாளப்படுத்தும் பட்டப்பெயராக (நிக் நேம்) பரிச்சயமானது மெய்யிலேயே இவர் ஒரு JP (சமாதன நீதவான்) கிடையாது மாட்டுத் தொழில் செய்பவர்களில் அநேகமானவர்கள் தில்லு முள்ளு செய்வது வாடிக்கையான விடயமாகும் அந்த வகையில் இவரும் தனது தில்லு முள்ளுகளுக்கு பிரதேசத்து பொலிஸ் நிலையத்தையும் பயன்படுத்தி வந்தார், ஆனால் தற்போது உள்ள ஹிதோகம பொலிஸ் பொறுப்பதிகாரி நீதிக்கு புறம்பான செயற்பாடுகளுக்கு எதிரானவர் மாடுகள் களவெடுத்தல், கஞ்சா கடத்தல், மதுபானம் தயாரித்தல் போன்ற குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முன்னிற்பவர் இலஞ்சம்,கொடுப்பதையும், வாங்குவதையும் கடுமையான குற்றமாக கருதுபவர் இதனால் பிரதேசத்தில் குற்றச்செயல்கள் புரிகின்ற ஆசாமிகளுக்கு இவர் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.தவிரவும் முஸ்லிம்களை மதிக்கின்ற, அவர்களது ஒற்றுமையை புகழ்கின்ற ஒரு நேர்மையானவர்.

    இனி நடந்த சம்பவத்தை பார்த்தால் – கடந்த மாதம் ஒரு ஏழை சிங்கள மாது தனது வாழ்வாதாரத்துக்கு பால் வழங்கிவந்த தன்னிடமிருந்த ஒரேஒரு பசுமாட்டை காண வில்லை என்று ஹிதோகம பொலிஸ் நிலையத்தில் ஹென்றியை பதிவு செய்துள்ளார் அவரது அந்த முறைப்பாட்டுக்கு இணங்க விசாரணைகளை ஆரம்பித்த ஹிதோகம போலீசார் அந்தப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு சிங்கள அன்பரின் கூடாக JP என்பருக்கு விற்கப்பட்டதாக அறியக்கிடைத்த தகவலை அடுத்து குறிப்பிட்ட சிங்கள வியாபாரியையும் இந்த JP என்பவரையும் விசாரித்து உள்ளனர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியதாலும் ஊர்மக்கள் அந்த மாடு சிங்கள மாதுக்கே சொந்தமானது என்று உறுதியாக கூறியதாலும் பொய் வாக்கு மூலம் வழங்கிய JP யும் மற்றவரும் கைது செய்யப்பட்டனர் இரண்டு பிரிவுகளில் இவர்களது குற்றம் பதிவு செய்யப்பட்டிருந்தது கள்ள மாடுகளை விற்றல் வாங்கள், அடுத்து பால் கொடுக்கின்ற பசுமாட்டை திருடியமை (மிருக வதை சட்டம்) இது வரை காலமும் தாம் எத்தனை தில்லு முள்ளு செய்தாலும் இலஞ்சம் கொடுத்து தப்பித்து கொள்ளும் வாடிக்கையான நிகழ்வு பிழைத்துப் போனதினால் இன்றைய நாட்டு நிலைமையை கருத்தில் கொண்டு இந்த ஓஈC யை விரட்ட கையாண்ட யுக்திதான் அவர் தன்னை மண்டியிட வைத்து புத்தர் சிலையை வணங்க வைத்தார் என்கின்ற புகாராகும் இதற்க்கு சாட்சியாக

    அதே நிலையத்தில் வேளை செய்கின்ற இரண்டு கான்ஸ்டபல்களையும் இவர் தயார் படுத்தியிருந்தார் ஆனால் அவர்கள் விசாரணையின் போது JP என்பவர் தமக்கு பணம் தந்து பொய் சாட்சி சொல்ல தொடர்ந்தும் வற்புறுத்தியதாகவும் அவரது பணத்திற்க்கு ஆசைப்பட்டே தாம் இவ்வாறு பொய் சாட்சி சொன்னதாகவும் கூறியுள்ளனர் இவர்கள் பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு பொய் சாட்சி சொல்ல முன் வந்ததும் இலஞ்சம் பெற்றுக்கொண்டதும் உறுதி செய்யப்பட்டதினால் இவர்கள் இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டதோடு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இப்போது மட்டும் அனுராதபுர சிறைச்சாலையில் உள்ளனர் இப்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளது..இந்த JP என்பவர் முதலில் இந்த விடயங்களை பத்திரிகையில் எழுத வேண்டும் என்று என்னிடம் தான் கேட்டுக்கொண்டார் இதனை ஆராய்ந்து பார்த்த நான் இதில் முற்று முழுதாக JP அவர்களின் மீதே தவறு இருப்பதும், பொய்யான குற்றச்சாட்டை ஹிதோகம ஓஈC மீது அவர் சொல்லுவதும் புலனாகியது, என்னால் முடிந்த அளவு அவருக்கு உபதேசம் பண்ணி அனுப்பி வைத்தேன் ஆனால் ஒரு நேர்மையான அதுவும் அடுத்த மதங்களை கவுரப்படுத்துகின்ற ஒரு நேர்மையான அதிகாரிக்கு களங்கம் ஏற்படுத்த முனைந்திருக்கும் இவர்போன்றவர்களினால் நமது சமூகத்தை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதற்க்கு அடுத்தவர்கள் தலைப்படுகின்றனர் இந்த விடயம்பற்றிய செய்தி மவ்பிம மற்றும் JஆFணா நியூஸ் ஆகியவற்றில் பிழையாக வெளியாகி இருந்தன JஆFணா நியூஸ் தனது பிழையை உடனே திருதிக்கொண்டது மவ்பிம பத்திரிகைக்கும் இதன் உண்மைத்தன்மைபற்றிய விளக்கத்தை அனுப்பியுளோம்” இந்த தகவல் லங்காமுஸ்லிம்.ஓர்க் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் கண்டதை பதிவிடுகிறேன்.


  21. சாந்தன் on August 22, 2012 2:18 am

    மற்ரவர்களின் போராட்டத்தில் குளிர்காயும் ராவுஃப் ஹக்கீமின் அடுத்த முயற்சி.

    “…தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இந்தப் பயத்தை எமது சமூகத்தின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு நாம் பயன்படுத்த வேண்டும். என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார். …”

    இவ்வளவு காலமும் புலிப்பூச்சாண்டி காட்டி வாழ்க்கையை – மக்கள் நலன், முஸ்லீம் இன சமூக நலன் வாழ்க்கையை ஓட்டினார்கள். இப்போது கூட்டமைப்பைக் காட்டி அடுத்த ஓட்டத்துக்குத் தயார். சும்மா சொல்லகூடாது ‘தனித்துவம்’ என்றால் தனித்துவம் அப்படி ஒரு தனித்துவம்! சுப்பர்.

    அரசியல்வாதி முன்னர் புலிப்பூச்சாண்டி இப்போ கூட்டமைப்பு பூச்சாண்டி…மாட்டுக்கள்ளன் புத்தர் பூச்சாண்டி…சுப்பர்!

    இந்த மாட்டுக்கள்ளன் பற்றிய விடயங்களை (புத்தர் பூச்சாண்டி குளிர்காயல்) அறிய விரும்புவோர் மேலே உள்ள விடயங்களைப் பதிவிட்ட நாச்சியாதீவு பர்வீனை – 0771877876 இலக்கத்தில் தொடர்பு கொள்ளும் படி கோரி இருக்கிறார்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு