தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கான நிதி சேகரிப்பு


கிழக்கு மாகாணசபைக்கு நடைபெறவுள்ள தேர்தல் மூலம் தமிழ் தேசியத்தை வலுப்படுத்தி வெற்றிவாய்ப்பை உறுதி செய்வதற்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் அவசர நிதிசேகரிப்பு.

தமிழ் உறவுகள் கூட்டமைப்பின் வெற்றிக்காக உதவ முன்வரவேண்டும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அன்பார்ந்த உறவுகளே!

இலங்கையின் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டது. இதனால் அரசும் அதன் அடிவருடிகளும் மாகாணசபையைத் தமது ஆளுமைக்குள் கொண்டுவந்தனர். இதனால் தமிழ் மக்கள் மேலும் மேலும் பலவழிகளில் துன்புறுத்தப்பட்டனர். இவர்களது ஆட்சியில் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். வடக்கு-கிழக்கு இணைப்பு தேவையற்றது எனும் பிரச்சாரம் இவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அரசியல் தீர்வு தேவையில்லை என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டது. பொலிஸ், காணி அதிகாரங்கள் தேவையே இல்லை என்றுகூட இவர்களால் கூறப்பட்டது. இந்நிலை மாற்றியமைக்கப்பட்டாக வேண்டும். கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தை ஆதரித்து நிற்கிறார்கள். வடக்கு-கிழக்கு இணைப்பை ஆதரித்து நிற்கிறார்கள் என்னும் ஒரு நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். வடக்காய் இருந்தாலும் கிழக்காய் இருந்தாலும் தமிழ் மக்கள் ஒரே சிந்தனையில் இருக்கிறார்கள் என்பதை மீண்டும் மீண்டும் இந்த அரசிற்கும், உலகிற்கும் உணர்த்தப்பட வேண்டும். ஆகவேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஐந்து கட்சிகளின் கூட்டாகும். இதில் தமிழரசுக் கட்சி மிகப்பெரும்பான்மையான இடங்களில் போட்டியிடுகின்றது. ஏனைய நான்கு கட்சிகளும் 15 ஆசனங்களில் போட்டியிடுகின்றன. இவர்களையும் வெல்ல வைப்பதினூடாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்டுக்கோப்பான, உறுதியான அமைப்பாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.

ஐந்து கட்சிகளும் ஒரே குடை அமைப்பாக – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகத் தமிழ் மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமாயின் இவர்கள் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வென்றாக வேண்டும்.

அந்த வகையில், இந்தத் தேர்தலை எதிர்கொள்வதற்கான நிதியுதவிகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட தேர்தல் எனும் அடிப்படையில், ஒவ்வொரு வேட்பாளரும் தனக்குரிய மாவட்டம் முழுவதிலும் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு பல இலட்சக்கணக்கில் நிதியுதவிகள் தேவைப்படுகின்றது. ஆகவே உங்களால் இயன்ற உதவிகளைச் செய்து இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்யுமாறு பணிவுடன் வேண்டுகின்றேன்.

நன்றி.
சுரேஷ். க. பிரேமச்சந்திரன்,
உத்தியோகபூர்வ பேச்சாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ் மாவட்டம்.

இது தொடர்பான வேறு பதிவுகள்

  • வேறு பதிவுகள் இல்லை!
உங்கள் கருத்து
  1. எஸ். அரசரத்தினம் on August 26, 2012 7:54 pm

    2012 செப்டெம்பர் 8 ஆம் நாள் கிழக்கு மாகாண அவைத் தேர்தல் நடைபெற உள்ளதைத் தாங்கள் அறிவீர்கள். இத் தேர்தலில் தமிழர் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறப் பொருள் வலுவும் மனித வலுவும் தேவைப்படுவதாகக் களச் செய்திகள் கூறுகின்றன. அவற்றை வழங்கி நம்மால் ஆன உதவியைச் செய்வோம்.
    அதற்காக நிதி சேர்க்கும் முகமாக வருகிற ஞாயிற்றுக் கிழமை ஆகஸ்ட் 26ம் திகதி 5:30 மாலை Metropolitan Banquet Hall (3840 Finch Avenue East Scarborough) இல் ஒரு நிதி சேர் இரவு விருந்து நடாத்த இருக்கிறோம். இவ் விருந்தில் தவறாது கலந்து கொண்டு ஆதரவு தாரீர்!

    மண் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் ததேகூ இன் கைகளை நாம் பலப்படுத்த வேண்டும். அரசியலுக்கு அப்பால் ததேகூ யை வெற்றிபெற வைக்க வேண்டிய இனநலம் சார்ந்த கடமை எமக்குண்டு! வெறும் கையால் முழம் போட முடியாது. பச்சைத் தண்ணீரில் பலகாரம் செய்ய முடியாது.

    இத்தேர்தலில் வெற்றி பெறுவதன் வாயிலாகக் கிழக்கு மாகாண மக்கள் தனது ஆட்சியை ஏற்றுத் தன்னோடு இருக்கின்றனர், தமிழ்மக்களுக்கு அரசியல் அடிப்படையிலான சிக்கல் ஏதும் இல்லை எனப் பன்னாட்டுச் சமூகத்துக்குக் காட்டலாம், தனது கைப்பொம்மையான ஒருவரை முதலமைச்சர் ஆக்கி அவரது ஒப்புதலோடு மாகாண அவைக்கு வழங்கப்பட்டுள்ள நிலம், காவல்துறை உள்ளிட்ட முதன்மையான அதிகாரங்களை மீளப்பெற்று விடலாம், அதன் பின்பு வலுவற்ற ஒரு மாகாணசபையைத் தமிழருக்குத் தீர்வாகக் காட்டலாம் எனச் சிறீலங்கா அரசு எண்ணுகிறது. அரச தரப்பைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருமிடத்து தனது எண்ணத்தை மகிந்த அரசு நிறைவேற்றிவிடும் என்பதில் ஐயமில்லை. இதைத் தமிழராகிய நாம் அனுமதிக்க முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

    இந்த நிலையில் இன்று கிழக்கு மாகாண அவைத் தேர்தலில் மகிந்தாவின் ஆளும் கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி, சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், தமிழர் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் தமிழ் மக்களது வாக்குகளைப் பிரிக்கும் நோக்கோடு அரசால் களமிறக்கப்பட்ட தன்னார்வ (சுயேட்சை) குழுக்களும் போட்டியிடுகின்றன.
    இந்த நிலையில் தமிழ் மக்கள் ஒற்றுமையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிப்பெரும்பான்மை கட்சியாக வரவும், கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கவும் கூடிய சூழல் காணப்படுகின்றது.

    கிழக்கு மாகாணத்தில் த.தே.கூட்டமைப்பு ஆட்சியமைப்பது, பிரிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை எதிர்காலத்தில் மீண்டும் இணைப்பதற்கு உறுதுணையாக இருக்கும்; வடக்கு, கிழக்கு இணைந்ததே தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டுக்கு வலுச்சேர்க்கும்; மாகாண அவைக்கு இருக்கும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பறி போகாமல் காக்கும்; தமிழரது இருப்பையும் நீண்ட கால வேட்கையையும் நிறைவேற்றத் துணை புரியம் என நம்புகிறோம்.

    எனவே, கிழக்கு மாகாண அவைத் தேர்தலில் தமிழர் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்ய வேண்டியது தமிழரது தலையாய கடமையாகும்.


  2. மலையக தினேஷ் on August 27, 2012 5:34 am

    “TNA” ஆதரவாளர்கள் கவனிக்க!

    நீங்க மனசு வச்சா ஒரு பத்திரிகையாளர் குடும்பத்தை காப்பாத்தலாம்! -http://tamil.oneindia.in/news/2012/08/25/tamilnadu-film-journalist-seeks-help-save-his-son-in-law-160256.html


  3. Sunthar on August 27, 2012 6:42 am

    கிழக்கு மாகாணத்தில் விதவைகள் மட்டும் 40000. முன்னாள் போராளியின் மனைவி தன் வருமானத்திற்கு தன் உடலை விற்கிறாள். போரால் பாதிக்கபட்ட குடும்பங்கள் இன்னும் நடுறோட்டில் நிற்கிறார்கள். இந்த மக்களிற்காக ஒரு நாள் கூட புலம்பெயர் மக்களிடம் பிச்சையேந்தாத இந்த கூட்டமைப்பு வெட்கம் கெட்டு புலம்பெயர் சமூகத்திடம் பணம் கேட்கும் இந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் குடும்பம் வெளி நாட்டில். பாராளுமன்ற வருமானம் சம்பளம் கிம்பளம் எல்லாம் சேமிப்பில்.. வெட்கம் கெட்டு இன்று தங்கள் கட்சிக்கு நிதி கேட்பது கேவலம். கடந்த மூன்று ஆண்டு காலத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இவர்களிற்கு முக்கியமில்லை கட்சிதான் முக்கியம்!


  4. பல்லி on August 27, 2012 8:35 pm

    :://கிழக்கு மாகாணத்தில் விதவைகள் மட்டும் 40000. முன்னாள் போராளியின் மனைவி தன் வருமானத்திற்கு தன் உடலை விற்கிறாள். போரால் பாதிக்கபட்ட குடும்பங்கள் இன்னும் நடுறோட்டில் நிற்கிறார்கள். இந்த மக்களிற்காக ஒரு நாள் கூட புலம்பெயர் மக்களிடம் பிச்சையேந்தாத இந்த கூட்டமைப்பு வெட்கம் கெட்டு புலம்பெயர் சமூகத்திடம் பணம் கேட்கும் இந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் குடும்பம் வெளி நாட்டில். பாராளுமன்ற வருமானம் சம்பளம் கிம்பளம் எல்லாம் சேமிப்பில்.. வெட்கம் கெட்டு இன்று தங்கள் கட்சிக்கு நிதி கேட்பது கேவலம். கடந்த மூன்று ஆண்டு காலத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இவர்களிற்கு முக்கியமில்லை கட்சிதான் முக்கியம்!//

    இதுக்கும் சிலரிடம் பதில் இருக்கும் பார்ப்போம்!!


  5. பல்லி on August 27, 2012 8:38 pm

    //மண் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் ததேகூ இன் கைகளை நாம் பலப்படுத்த வேண்டும். அரசியலுக்கு அப்பால் ததேகூ யை வெற்றிபெற வைக்க வேண்டிய இனநலம் சார்ந்த கடமை எமக்குண்டு! வெறும் கையால் முழம் போட முடியாது. பச்சைத் தண்ணீரில் பலகாரம் செய்ய முடியாது.//

    ஜயோ ஜயோ ஆவரங்கால் கந்தையர் தோற்றார் போங்க;


  6. BC on August 28, 2012 1:55 am

    //பல்லி – இதுக்கும் சிலரிடம் பதில் இருக்கும் பார்ப்போம்!!//
    சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் நல்லா இருந்தால் தான் தமிழினமும் நன்றாக வாழ முடியும்.


  7. thurai on August 28, 2012 8:32 am

    தேர்தலிற்கு முன் புலத்தினரின் பணம். தேர்தலில் வென்றதின் பின்னர் அரசின் பணம். உருமையை கேட்டு குரல் கொடுப்போம். அடிக்க வந்தால் இந்தியாவிற்கு ஓடுவோம். தமிழர்களிற்கு அடிக்கின்றார்கள் என்று குரல் கொடுப்போம். இதுவே எங்கள் அரசியல்(வாழ்வின்) தந்திரம் .-துரை


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு