ரொறொன்ரோ நகரில் மீண்டும் தலையெடுக்கும் அரசியல் வன்முறை: நியூட்டன் & சிவராமன்


முள்ளிவாய்க்காலுக்கு முந்திய காலத்தில், தமிழர் தாயகத்தில் மாத்திரமன்றி, தமிழர்கள் வாழும் பிரதேசமெங்கும் மோசமான அரசியல் வன்முறை நடைமுறையில் இருந்தது நாம் அறிந்ததே. அனைத்து முற்போக்கு, ஜனநாயக அரசியல் சக்திகளுக்கும் எதிராக புலிகள் மேற்கொண்ட இந்த வன்முறையானது, தமிழ் மக்களது அரசியல் ஆன்மாவை சிதைத்து, இறுதியில் முள்ளிவாய்காலில் கொண்டுபோய்விட்டது.

முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பின்னர், புலிகளது வன்முறையானது முற்றுப்பெற்றதுடன், தமிழர் மத்தியிலுள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகள் மீண்டும் அரசியல் அரங்கில் தலையெடுக்கத் தொடங்கின. தாயகத்தில் முடியாவிட்டாலுங்கூட, புலம் பெயர்ந்த நாடுகளிலாவது, சற்று விரிவான கலந்துரையாடல்களும், விவாதங்களும் இடம்பெறத் தொடங்கின. இது பல தரப்பு அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும், புதிய தலைமுறையினர் மத்தியிலும் சற்று நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தூண்டும் விதத்தில் அமைந்திருந்தது. ஆனால் இந்த ‘திறந்த வெளி’ மூடப்படுவதற்கான அறிகுறிகள் இப்போது தென்படத் தொடங்கியுள்ளன. இது ரொறொன்ரோவில் நேசன் என்பவர் மூலமாக அரங்கேறத் தொடங்கியுள்ளது.

கனடாவிலுள்ள ‘தேடகம்’ அமைப்பானது, கடந்த சிலகாலமாக மிகவும் முக்கியமான தலைப்புக்களில் பல கூட்டங்களையும், கருத்தரங்குகளையும் தொடர்ந்து ஏறக்குறைய 20 ஆண்டுகளாக நடத்திவருகிறது. தேடகம் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட கடந்த மூன்று கூட்டங்களில் நேசன் என்பவர், ஒவ்வொரு கூட்டத்திலும் ஏதாவது ஒரு காரணத்தைக்கூறி, வன்முறை செயற்பாடுகளில் ஈடுபட முனைவது கூட்டத்தில் கலந்து கொள்வோரிடையே விசனத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

பெப்ரவரி 25 அன்று ஒழுங்கு செய்யப்பட்ட ஐயரது ‘ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்‘ நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நேசன், சுவிஸ் முரளி உட்பட பலரும் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். கூட்டம் முடிந்த பின்பு, நேசன் தெரிவித்த கருத்து தொடர்பாக அவருடன் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்த முரளியை நோக்கி நேசன் கையை ஓங்கி அடிப்பதற்கு முனைந்தார். அதனை சுற்றியிருந்தவர்கள் தடுத்ததனால் அன்றைய கூட்டம் எவ்வித வன்முறையும் இன்றி நிறைவு பெற்றது.

அடுத்ததாக, தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலுக்கு எதிராக யூன் 05 ம் திகதி, நடைபெற்ற கூட்டத்தில் நேசன், தன்னை புகைப்படம் எடுப்பது குறித்து ஆட்சேபம் தெரிவித்தார். “இந்த படம் எங்குபோய் முடியும் என்று எனக்குத் தெரியும்” என்று குறிப்பிட்டார். இவரது கருத்தை கோணேஸ், சேனா மற்றும் ரகுமான் ஜான் ஆகியோர் ஆட்சேபித்தனர். கடந்த காலத்தில் இப்படியாக படங்களை பிரசுரிப்பதன் மூலமாக பலருக்கும் ஆபத்துக்களை உருவாக்கியது

நேசன் இணைந்து செயற்படும் ரயாகரன் நடத்தும் ‘தமிழரங்கம்’ வலைப்பக்கமே என்று தெரிவித்தனர். இதனை அடுத்து பல காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன. இவற்றை ஒருவாறு முடிவுக்கு கொண்டுவந்த கூட்ட ஏற்பாட்டாளர்கள், தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலுக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

கூட்ட முடிவில், அந்த மண்டபத்தின் வாசலில் ரகுமான் ஜானை வழிமறித்து பேசிய நேசன், ஏற்கனவே வலைப்பக்கங்களில் பரிமாறப்பட்டுவரும் கருத்துக்கள் தொடர்பாக ஆட்சேபனைகளைத் தெரிவித்தார். இந்த கருத்துக்களுக்கள் ஆதாரமற்றவை என்று சாடினார். இதற்கு பதிலளித்த ரகுமான் ஜான், தான் தெரிவித்த கருத்துக்கள் அனைத்திற்கும் தன்னிடம் போதிய ஆதாரம் இருப்பதாகவும், அவற்றை எந்தவொரு பகிரங்க மேடையிலும் சமர்பிக்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதனால் ஆத்திரமுற்ற நேசன், ரகுமான் ஜானை அடிக்க முனைந்தார். இந்த தடவையும் அருகில் இருந்தவர்கள் தலையிட்டதால் இந்த தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டது.

நேற்று (18 ஆகஸ்ட் 2012 இல்) ‘தேர்தல் அரசியல் கடந்த சமூக வெளியில் இரு சமூகங்களின் இருப்பும் எதிர்காலமும்’ என்ற தலைப்பில் இலங்கையில் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லீம் தேசிய இனங்களின் ஐக்கியத்தை முன்நிறுத்தி நடைபெற்ற கூட்டத்திற்கு நேசன் வந்திருந்தார். தனது கையில் கூட்டம் தொடர்பாக ‘இனியொரு’ வலைப்பக்கத்தில் வந்திருந்த பத்தி எழுத்து ஆக்கத்தை ‘பிரிண்ட்’ எடுத்து வந்திருந்தார். அதில் இந்தக் கூட்டம் தொடர்பான இனியொருவில் வந்த எழுத்தும் அத்துடன் நாளை நடைபெறவிருக்கும் கருமையத்தின் கூட்டத்திற்கான அறிவிப்பும் இணைக்கப்பட்டிருந்தன. நாளை நடைபெறும் கூட்டத்திற்கான அழைப்பும் அதில் அச்சிடப்பட்டிருந்தது.

அதனை கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிடையே நேசன் விநியோகித்தார். அதனை கட்டாயம் வாசிக்கும்படியும் அனைவரிடமும் அதிகாரத் தொனியில் கோரினார். கூட்டத்திற்கு வந்திருந்த பொதுவான பார்வையாளர் மிரட்சியுடன் அதைப் பார்த்தனர்.

ஒரு சிறீலங்கா அரச ஆதரவு லும்பன் என்று தன்னை அந்த பத்தி எழுத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக தனக்கு முறையாக பதிலளிக்காமல், கூட்டத்தை நடத்த முடியாது என்றும் வலியுறுத்தி அடம் பிடிக்கத் தொடங்கினார். அத்துடன் அவரது ‘உடல்மொழியில்’ ஒருவித வன்முறை வெளிப்படத் தொடங்கியது. தான் அணிந்திருந்த ‘ஏயார் கண்டிசன்’ நிறுவுதல் தொடர்பான கருவிகள் அடங்கிய இடுப்புப் பட்டியைத் கழற்றித் தூக்கி வீசினார்.

இந்த கட்டத்தில் இவரை அணுகிய கூட்ட ஏற்பாட்டாளர்கள், நேசன் தமது அனுமதியைப் பெறாமல் துண்டுப்பிரசுரம் விநியோகிப்பதுடன், கூட்டத்தை குழப்பும் விதத்தில் செயற்படுவது அனுமதிக்கப்பட முடியாது என்றும் தெரிவித்தனர். கூட்டத்தின் முடிவில் அவர் தனது துண்டு அறிக்கையை விநியோகிக்கலாம் என்றும் கூறினர்.

இதனை மறுத்த நேசன் தான் சரியான பதிலைப் பெறாமல் கூட்டத்தை நடத்த அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். பின்னரும் தொடர்ந்து கூட்டத்தில் அமர்ந்திருந்தார். தொடர்ந்து உரத்த குரலில் பதில்சொல்ல வேண்டும் என்று கேட்டார். இப்படியாகப் போனால் அவரை வெளியேற்ற வேண்டியேற்படும் என்று கூட்ட ஏற்பாட்டாளர்களால் எச்சரிக்கப்பட்டார். இதனை அவர் செவிமடுக்க மறுத்ததனால் கூட்ட மண்டபத்தின் பாதுகாப்பு ஊழியருக்கு இது பற்றி தெரிவிக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு ஊழியர் நேசனை கூட்டத்தில் இருந்து வெளியேற்றினார்.

இப்போது எழும் பிரச்சனை இதுதான்.
நேசன் இப்படியாக ஒவ்வொரு கூட்டத்திற்கு வந்து குழப்பத்தை ஏற்படுத்துவதும், வன்முறையில் இறங்குவதும் ஏன்? இத்தனைக்கும் பின்பு, வழக்கம்போல ‘தமிழரங்கம்’ வலைப்பக்கத்தில் வந்து, இந்த கூட்டங்களில் தனது ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டதாக கதைவிடுவதும் எதனைக் காட்டுகிறது?
‘இனியொரு’ வலையில் இவரைப்பற்றி ஏதாவது செய்திகள் வருமாயின் அதனை இவர் அந்த வலைப்பக்கத்தவர்களுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் அல்லவா?

அதுசரி! ‘இனியொரு’ வலையில் ‘அரசாங்க சார்பு லும்பன்கள்’ என்றுதானே குறிப்பிடப்பட்டிருந்தது. அது ஏன் நேசனை கோபப்படுத்த வேண்டும். இவர் தன்னைத்தான் இது குறிப்பிட்டதாக எப்படி முடிவுக்கு வந்தார். இதுதான் உண்மை நிலைமையா?
அல்லது, இது தோன்றிவரும் அரசியல் வன்முறையின் அறிகுறிகளா என்று ஜனநாயக விரும்பிகள் கேள்வி கேட்கத் தொடங்குகிறார்கள்.

வன்முறைகள் தொடர்பான எதிர்ப்புக்குரலைத் தொடர்ந்து வரும் கருமையத்தின் கூட்டத்திற்கான அழைப்பிதழைச் சுமந்து வந்திருந்த நேசனின் இந்த நடவடிக்கை குறித்த கருமையத்தின் பொறுப்புணர்வும் உண்மைத் தன்மையும் என்ன என்பதும் கேள்வியாகின்றது.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தோழர் என்று ராயகரனால் கோரப்பட்டியிருக்கும் நிலையில் நேசன் இவ்வாறு பொறுப்பற்று வன்முறையுடன் நடந்து கொண்டமை பற்றி புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்ன வகையில் பொறுப்பேற்றுக் கொள்கிறது என்ற கேள்வியும் எழுகின்றது.

இங்கு அனைவராலும் பேசப்படும் மனித உரிமை என்பது அவரவர் தங்கள் தனிமனித வன்முறைகளை செலுத்துவதற்கான வழிமுறையா என்ற கேள்வியும் எழுகின்றது.

நியூட்டன் & சிவராமன்

இது தொடர்பான வேறு பதிவுகள்

  • வேறு பதிவுகள் இல்லை!
உங்கள் கருத்து
  1. kovai on August 20, 2012 1:34 am

    நியூட்டன் & சிவராமன் கம்பனி எழுதி, ஜெயபாலன் பெயரால் அரங்கேறியதை வாசிக்கும்போது, “அமைச்சரின் தம்பி செஞ்சார்.” என்கிற ஜனநாயகம் முறுக்கேறுகிறது.
    கனடாவில் பதிவு செய்யப்பட்ட தேடகம் அமைப்பு என்பது வாயில்லாப் பிள்ளை போலும்.


  2. Ramesh on August 20, 2012 4:34 am

    கடந்த ஞாயிற்றுக் கிழமை(06.05.12) தேடகமும், மே-18 இயக்கமும் நடத்திய கண்டனக் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். இலங்கையில் தம்புள்ளை என்ற இடத்தில் அமைந்திருக்கும் முஸ்லீம் மக்களின் பள்ளிவாசலை, சிங்கள பௌத்த பிக்குமார்களும், அவர்களுடன் சேர்ந்த சிங்கள பௌத்த கலகக்காரர்களும் அந்த பள்ளிவாசலை தாக்கி, அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியும், அப்பிரதேசத்து முஸ்லீம் மக்களை அச்சுறுத்தியமையையும் கண்டிக்கும் பொருட்டே இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதற்கு அமைய அக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

    இக்கூட்டத்தில் பேசுவதற்காக மீராபாரதி, சுல்பிகா, தர்சன், ஜான்மாஸ்டர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் தமது உரைகளில் மிகவும் விரிவாகவும், ஆழமாகவும், இலங்கையில் முஸ்லீம் மககளின் வரலாறு, அவர்களின் இருப்பு, பௌத்தமதத்தின் மறுமலர்ச்சி, அதனால் ஏனைய சமூகங்களுக்கும், மதங்களுக்கும் ஏற்பட்ட தாக்கங்கள், இன, மத ரீதியான குறுகிய பார்வை, அநியாயங்களுக்கு எதிரான போராட்டங்களை மேலும் பல்வேறு வழிகளிலும் விரிவுபடுத்த வேண்டிய தேவைகள் போன்ற பல விடையங்களை பேச்சாளர்கள் மிக நுணுக்கமாக ஆராய்ந்து பேசினார்கள்.

    ஆனால் இக்கூட்டத்தில் நடந்த இன்னொரு சம்பவம் பற்றிய அக்கறையே இதை எழுத எனக்குத் துாண்டியது. இந்தக் கண்டனக்கூட்டம் இன்றைய சூழலில் எவ்வளவு முக்கியமாக இருந்ததோ அந்த முக்கியத்துவம் மலினப்படும் வகையில் அன்று தேடக உறுப்பினர்கள் நடந்து கொண்டது அவர்கள் தங்களையும், தங்கள் அமைப்பையும் மீளாய்வு செய்ய வேண்டிய தேவையை உணர்த்தியிருக்கிறது.

    தேடகம் (தமிழர் வகை துறை வள நிலையம்) அமைப்பிற்குள் இருக்கும் சர்ச்சைகளுக்குள் இப்போது நான் போகவிரும்பவில்லை. ஆனால் அன்றைய கூட்டத்தில் நடந்த சர்சைகளுக்கு, தேடக அமைப்பிற்குள் உறைந்து போய்யிருக்கும், அவ்வமைப்பு தொடர்பாக, அவ்வமைப்பின் உறுப்பினர்களுக்கு இருக்கும் விமர்சன பார்வையற்ற போக்கு என்றால் அது மிகையாகாது.

    எனவே அன்றைய கூட்டத்தில் பேசிய மீராபாரதி தனது பேச்சின்போது சில கேள்விகளை முன்வைத்து தனது கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் முன்வைத்தார். அவர் தனிப்பட்ட முறையில் தேடகத்தையோ, அல்லது அதுபோன்ற வேறு அமைப்பையோ குறிப்பிட்டுப் பேசவில்லை. அதை அவர் திருப்பத்திரும்ப வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் தேடக ஆரம்ப உறுப்பினர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், தேடகத்தின் சாதனைகளை குறிப்பிட்ட கூட்டத்தில் பட்டியலிட வேண்டிய தேவைதான் என்ன?
    தேடகம் நடத்துகின்ற ஒவ்வொரு கூட்டங்களிலும் தனது கடந்தகால நடவடிக்கைகளை, சாதனைகளை குறிப்பிடாமல் ஒரு கூட்டமும் நடந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு அது தனது கடமையை செய்து கொண்டுதான் வந்திருக்கிறது! அன்றைய கூட்டத்திலும் தொடக்கவுரையை ஆரம்பித்துப் பேசியவரும் வழமைபோல தேடகத்தின் செயற்பாடுகளை விபரித்திருந்தார். மீராபாதி தொடக்கம் அங்கு வந்திருந்தவர்களில் 99 வீதமானவர்கள் தேடகத்தினை அறிந்திருக்கிறார்கள். அவ்வாறு இருக்கையில் ஏன் இந்த முந்திரிக்கொட்டைப் பாச்சல்?

    தேடகத்தின் ஆரம்பகால உறுப்பினர்களாக இருந்தவர்களில் அனேகமானவர்கள் வேறு அமைப்புகளை உருவாக்கிக் கொண்டோ அல்லது “தற்போதைய தேடகத்தில்” இருந்து ஒதுங்கியிருந்தாலும், தற்போதைய தேடகத்தின் கூட்டங்களில் கலந்துகொள்ளும் போது, அவர்களையும் உள்ளடக்கிக் கொண்டே உங்கள் கடந்தகால சாதனைகள், நடவடிக்கைகள் போன்றவற்றை பேசவேண்டும். அது திட்டமிட்டு தவிர்க்கப்படும்போதுதான் அன்று நடந்தமாதிரியான “முறுகல்” நிலை தோன்றுவதை தவிர்க்கமுடியாமல் போய்விடும். அத்தோடு கூட்டத்தை நடத்திச் சென்றவர், கருத்துரை வழங்கியவர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டி நடந்துகொண்டமை குறிப்பிட்ட நிகழ்வை விட்டு வேறு சர்ச்சைகளை தோற்றுவிக்க காரணமாய்யிருந்தன.

    மேலும் ஒரு முக்கியமான கண்டனக் கூட்டத்தை நடத்தும்போது, அவ்வமைப்பு சார்ந்தவர்கள் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பது யாரும் சொல்லித் தெரியவேண்டியவை அல்ல. தேடகத்தின் மீதுள்ள அபிப்பிராயத்தில் தான் பலர் விமர்சனங்களுக்கும் அப்பால் கலந்துகொள்ள வந்துள்ளார்கள். அவர்களின் நேரத்தையும், மதிப்பையும் அலட்சியம் செய்யும் வகையில் நடந்து கொள்வது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    தேடகம் தனக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள முரண்பாடுகளை ஜனநாயக விழுமியங்களுடன் கூடிய கருத்துப் பரிமாற்றங்களுடன் எதிர்காலத்தில் நகர்த்தப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு!


  3. T Sothilingam on August 20, 2012 9:35 am

    ஈழப்போராட்ட அழிவின் ஆரம்பமே தீர்க்கமுடியாது போன புளொட்(புலி) பிரச்சினையே. அதன் எச்ச சொச்சங்களே தொடர்கின்றன.

    புளொட்டின் கடந்தகால வரலாறுகளே இன்றும் பல காரணங்களுக்கும் குழப்பங்களுக்கும் பொறுப்பாக இருக்கின்றது. இன்றும் பல இடங்களில் ஈழ போராட்டம் பற்றி பேசத் தொடங்கும்போது அங்கு ஒரு புளொட் அமைப்பின் வரலாற்றை, உட்கொலைகளை விமர்சிப்பதை காணமுடியும. சிலவேளை இதன் காரணமாக அந்த உரையாடல் தொடரமுடியாதும் போய்விடுகின்றது.

    இன்றும் இந்த கூட்டத்தில் உள்ள பலர் முன்னாள் புளொட் அமைப்பினர், தோற்றுப்போன புளொட் வரலாற்றின் எச்ச சொச்சங்களே இந்த குழப்பமான சூழ்நிலைகளுக்கு காரணமாகும். நேசன் என்ற தனிமனிதனில் பழி போட்டு விட்டு போவது சரியா?

    நாலுபேர் புலிக்கொடியை காட்ட முழு புலம்பெயர் மக்களும் காட்டுகிறது என்று இலங்கை அரசு கூறுவது போன்று பொதுதளத்தில் விமர்சனங்களை முன்வைக்கும் நேசனையும் தமிழர்கள் சார்பில் கூட்டத்தை குழப்புகிறார் என்று கூறிவிட முடியாது.


  4. Ajith on August 20, 2012 12:35 pm

    முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பின்னர், புலிகளது வன்முறையானது முற்றுப்பெற்றதுடன், தமிழர் மத்தியிலுள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகள் மீண்டும் அரசியல் அரங்கில் தலையெடுக்கத் தொடங்கின.///

    முல்லிவாய்கால் நிகழ்வுகளுக்கு பின்னர் புலிகளின் வன்முறையானது முற்றுபெற்றதுடன் என்ற சொற்பதம் ஏனைய வன்முறைகள் மீண்டும் தலை தூக்க தொடங்கின என்பதையே தாங்கி நிற்கிறது. இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னான வரலாற்றை இங்கு கதை எழுதும் ஆசிரியர்களுக்கு தெரிந்து இருக்கா விட்டாலும் சுதந்திரத்துக்கு பின்னான காலத்தில் நடந்த நிகழ்வுகள் பசுமரத்து ஆணிகள் போல் நினைவில் இருக்கும். ஜனநாயகம் என்ற போர்வையில் தமிழர்கள் மத்தியில் திணிகபட்ட வன்முறைகள் தான் தமிழ் இளம் சந்ததியிரனை வன்முறை அரசியலில் ஈடுபட செய்தது. இங்கு புலிகள் மாத்திரம் வன்முறைகளில் ஈடுபட்டார்கள் நாங்கள் முற்போக்குவாதிகள், ஜனநாயக சக்திகள் என்று சொல்வதனை எந்த தமிழனும் ஏற்கமாட்டான். புலிகளின் தோல்விக்கு பின்னால் தமிழர்கள் மத்தியில் தொடரும் வன்முறைகள் முற்றுபெற்றது என்று முழு பூசணிகாயை சோற்றுக்குள் புதைத்துவிட முடியாது. உண்மையை சொல்ல வேண்டுமானால் புலிகளின் காலத்தில் தமிழர்கள் மத்தியில் இருந்த நின்மதி போய் இன்று தினம் தினம் பயந்து மக்கள் படும் துயரம் சில அரசியல் சக்திகளுக்கு பூரியாது. இதனை நான் சொல்லவில்லை. அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள்.


  5. thurai on August 20, 2012 5:15 pm

    பிரச்சினைகளை ஜனநாயக ரீதியாக அணுகத்தெரியாதவர்கள் பொதுப்பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கி விடுவது நல்லது. தவறின் அவரும் பயங்கரவாதியாகி மேலும் பல பயங்கரவாதிகளை உருவாக்கி தனக்கும், தன் சமூகத்திற்கும் ஏன் இனத்திற்குமே அழிவினை ஏற்படுதுவார். -துரை


  6. தமிழரங்கம் on August 20, 2012 8:52 pm

    இன ஐக்கியத்தின் பெயரில், கனடா தேடகம் முன்தள்ளும் இனவாதம்: பி.இரயாகரன்

    “சுற்றி சுற்றி சுப்பற்ரே கொல்லைக்கே” என்ற வழக்குக்கு ஏற்ப, கனடா தேடகம் தன் இனவாதத்தை இன ஐக்கியமாகக காட்டி அரங்கேற்றுகின்றது. முள்ளிவாய்க்காலுக்கு முன் திடீரென புலிவாலை பிடித்துக் கொண்டு ஓடத் தொடங்கிய கனடா தேடகம், இன்று “தமிழ், முஸ்லிம் தேசிய இனங்களின் ஐக்கியம்” பற்றி மட்டும் மூடிமறைத்து பேசுகின்றது.

    1975 களில் கூட்டணியும், 1983 இல் இயக்கங்களும் பேசிய அதே “ஐக்கிய” பல்லவியை, மீண்டும் இன்று கூட்டமைப்பு சம்மந்தன் பேச கனடா தேடகம் அதற்கு அமைவாக ஆலவட்டம் பிடிக்கின்றது.

    இலங்கையில் இன ஐக்கியம் என்பது, அனைத்து இனங்களையும் உள்ளடக்காத வரை அது குறுகிய குறுந்தேசிய இனவாதமாகும். “இலங்கையில் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம்” பற்றி மட்டும் ஐக்கியம் பேசுகின்றவர்கள், இனங்களை பிளக்கின்ற கடைந்தெடுத்த பொறுக்கிகள்தான்.

    இன ஐக்கியம் என்பது, உண்மையானதாகவும், நேர்மையானதாகவும் அமைய வேண்டும் என்றால்

    1. ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கு இடையிலானதாகவும்
    2. அனைத்து இன மக்களைச் சார்ந்தாகவும் தான் இருக்கவேண்டும்.

    இது அல்லாத ஐக்கியம் பித்தலாட்டமானது, மோசடியானது. இதன் அரசியல் என்பது மூடிமறைத்த சந்தர்ப்பவாதமாகும்.

    இது

    1.மற்றைய இனத்துக்கு எதிரான இனவாதமாகும்
    2.சுரண்டும் வர்க்கத்தின் குறுந்தேசியமாகும்.

    இது சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களை தன் சொந்த எதிரியாக காட்டுகின்றது. சிங்கள ஆளும் வர்க்கத்தையும், சிங்கள ஒடுக்கப்பட்ட வர்க்கத்தையும், தமிழ்-முஸ்லீம் மக்கள் முன் ஒன்றாக காட்டி விடுகின்றது. இதன் மூலம் தமிழ் முஸ்லீம் மக்களின் எதிரியாக காட்டுகின்றது. மறுபக்கத்தில் தமிழ் முஸ்லீம் சுரண்டும் வர்க்கத்தையும், சுரண்டப்படும் வர்க்கத்தையும் ஒன்றாக முன்னிறுத்துகின்ற, பச்சை இனவாதமாகும்.

    1948 முதல் தமிழ் – சிங்கள சுரண்டும் வர்க்கங்கள் செய்து வந்த அதே அரசியல் மோசடி. இன்று “இலங்கையில் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் தேசிய இனங்களின் ஐக்கியத்தை முன்நிறுத்தி தேர்தல் அரசியல் கடந்த, சமூக வெளியில் இரு மூகங்களின் இருப்பும் எதிர்காலமும் கருத்துப்பகிர்வும் கலந்துரையாடலும்” என்று புதுக் கதை விடுகின்றது.

    தமிழ் – முஸ்லிம் இன ஐக்கியத்தை குழிதோண்டிப் புதைத்த அதே சுரண்டும் வர்க்கம் தான், இன்று தமக்கு இடையில் இன ஐக்கியத்தை பற்றி பேசுகின்றது. சுரண்டப்படும் வர்க்கங்களின் ஐக்கியத்துக்கு பதில், அதை குழிதோண்டி புதைக்க ஐக்கியம் பற்றி புதுவேசம் போட முனைகின்றனர்.

    இன்று மக்களை ஏய்க்கின்ற சம்மந்தன் போன்று, தாங்கள் “தேர்தல் அரசியல் கடந்த, சமூக வெளியில்” ஐக்கியம் பற்றி பேசுகின்றனராம்! எதுக்கு சிங்களவனுக்கு எதிராக, தமிழ்-முஸ்லீம் சேர்ந்து குண்டு வைக்கத்தான். ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் ஐக்கியம் என்பது சிங்கள ஒடுக்கப்பட்ட வர்க்கத்துக்கு வெளியில் கற்பனையானது, போலியானது. சுரண்டும் வர்க்கம் சார்ந்த, அதன் குறுகிய இனவாதத்தில், ஐக்கியம் என்பது மூடிமறைத்த குண்டு தான். இதைத்தான் கனடா தேடகம் மகிந்தவுக்கு நிகராக முன்வைக்கின்றது.

    பி.இரயாகரன்


  7. manorathan on August 21, 2012 5:45 am

    நான் நினைக்கிறேன் இங்கு நேசன் தேவையில்லாமல் தாக்குதலுக்கு உள்ளாகிறார் என்று. இப்போது என்ன பிரச்சனை? நேசன் சிறீலங்கா அரச ஆதரவாளரா இல்லையா என்பதுதானே? அதனை நேசனே தெளிவு படுத்துவதன் மூலமாக இவர்களது வாயை அடைத்துவிடலாமே………….


  8. Ajith on August 21, 2012 10:27 am

    இலங்கையில் இன ஐக்கியம் என்பது, அனைத்து இனங்களையும் உள்ளடக்காத வரை அது குறுகிய குறுந்தேசிய இனவாதமாகும். “இலங்கையில் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம்” பற்றி மட்டும் ஐக்கியம் பேசுகின்றவர்கள், இனங்களை பிளக்கின்ற கடைந்தெடுத்த பொறுக்கிகள்தான்./// பி.இரயாகரன்

    இது தான் இன ஐக்கியத்தின் வரைவிலகணமா அல்லது கருத்து சொன்னவரின் … வரவிலகினமா என்பது தெரியவில்லை. உண்மையான இன ஐக்கியம் என்பது ஒடுக்கபட்ட வர்க்கங்களுக்கு இடையானதாகவும் அணைத்து இன மக்களையும் சார்ந்தததாக இருக்க வேண்டும் என்றால் வர்க்கரீதியான ஒடுக்குமுறை இருக்ககூடாது, இன ரீதியான ஒடுக்குமுறை இருக்கலாம் என்ற வாதம் எந்த வகையில் சரியாகலாம். வர்க்க ரீதியான சித்தாந்தங்கள் எல்லாம் காற்றோடு காற்றாக அள்ளுண்டு போய் இன்று பல தசாப்தங்களை கடந்து விட்டோம். வர்க்க ரீதியான அரசியல் பேசியவர்கள் இன்று சந்தர்பத்திற்கு ஏற்ப பேரினவாத்தின் அடிமைகளாய் முதலாளித்துவத்தின் நன்மைகளை பகிர்ந்து மறைந்து வாழ்கின்றனர். வர்க்கங்களுக்கு இடையே ஐக்கியத்தை ஏற்படுத்த இவர்கள் செய்த சாதனைகள் என்ன. அப்பாவி தொழிலாளிகளை சுரண்டுபவர்கள் இவர்கள் தான். தமிழ், முஸ்லிம் இனங்களை ஒடுக்குவதில் சிங்கள மக்கள் இடையில் வர்க்க பேதம் கிடையாது என்பதை இந்த போலி இடதுசாரிகள் தெரிந்தும் தெரியாதவர்கள் நாடகம் ஆடுவதில் வல்லவர்கள். மசாலா வடை, தோசை என்று ஆரம்பித்த இடதுசாரிகளின் வளர்ச்சி இன்று மகிந்தாவின் காலடியின் கீழ் விழுந்து பௌத்த கோஷங்களுடன் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மக்களின் மத உரிமைகளை கூட வன்முறையை பாவித்து தடுக்கும் காவலர்கள் இந்த போலி இடதுசாரிகள். இவர்கள் தான் உண்மையான சமூக விரோதிகள். மக்களிடையே வர்க்க பேதங்களை வளர்த்து அப்பாவி சிங்கள் ஏழை தொழிலால வர்கத்தின் ஆயிரகணக்கான இளம் தலை முறையினரை பலி எடுத்தவர்கள். உங்களை மக்கள் இனி எப்போதும் நம்ப மாடார்கள்.


  9. பல்லி on August 21, 2012 9:33 pm

    யார் இந்த நேசன்?? தேசத்தில் வந்த கட்டுரைக்கு தமிழரங்கத்தில் பல பாகம் எழுதியவரா??

    அப்படியாயின் நேசனிடம் சில கேள்விகள்
    நீங்க யார்? உங்களுக்கும் ஈழ போராட்டத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? எதுவரை,?? அது எப்படி?? யாரால்?? எங்கே,,??


  10. நந்தா on August 22, 2012 6:59 am

    தேடகம் என்பது முன்னாள் புலிகளினால் ஆரம்பிக்கப்பட்டது. கிட்டுவை பிரபாகரன் துரத்திய பொழுது கிட்டுவின் ஆதரவாளர்கள் என்று இனம் கானப்பட்டவர்களும் துரத்தப்பட்டனர். அவர்களில் “போக மாட்டேன்” என்று அடம் பிடித்த திலீபனை பின்னர் பிரபாகரன் “காந்தி”யாக்கியது பலரும் அறிந்த விஷயம்.

    தேடகம் முதலில் நன்ஙொடைகளில் இயங்கவாரம்பித்தது. அதை தொடங்கியவர்கள் புலிகளின் முடக்கு வாதப் போக்கையே கையாண்டனர்.

    நன் கொடைகள் வற்றித் தேடகமும் காணாமல் போனது. இப்பொழுது அந்த முன்னாள் தேடகத்தினர் நாலைந்து பிரிவாகப் பிரிந்துள்ளனர். ஒவ்வொரு கோஷ்டியும் கூட்டங்கள் வைக்கும் பொழுது “தேடகம்” என்ற லேபலையே பயன் படுத்துகிறனர்.

    அவர்களில் சிலர் இன்னமும் புலியை ஆராதிக்கின்றனர். அவர்களுடன் “ஜான்” உரமாக ஒட்டிக் கொண்டிருக்கிறார்.

    நேசன் புளொட் இயக்கத்தில் இருந்தவர். ஜானின் தற்போதைய சறுக்கலில் அவர் புலிகள் மீது அதீத அன்பு காட்டுவதுடன் தான் இருந்த புளொட் இயக்கத்தினர் மீது சேறு வாரி எறிவதில் அக்கறையாக இருக்கிறார்.

    நேசனின் பிரச்சனைக்கு அதுவே காரணம்.


  11. manorathan on August 23, 2012 5:01 am

    நந்தா நீங்கள் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. முன்னாள் புலியான இளங்கோ பற்றிய பிரச்சனையில் அவரை தேடகம் வெளியேற்றியபோது அவரோடு சேர்ந்து வெளியேறிய நபர்தான் இந்த நேசன். பின்னர் இளங்கோ, ஜானுடன் சேர்ந்து இயங்கியபோது, தமிழீழ மக்கள் கட்சியை புலிகளுக்கு காட்டி கொடுத்துதாக புரளியை கிளப்பியவரும் இதே நேசன்தான். ஆனால் தமிழீழ கட்சியில் இளங்கோ இயங்கியபோது அவருடன் தொடர்ந்தும் நட்பில் இருந்தார். ஆனால் இப்போது இவர் ரயாகரனுக்கு ஒரு முகமும், கனடாவிலுள்ள அரச ஆதரவாளர்களுக்கு ஒரு முகமும் காட்டுவதுதான் வேடிக்கையானது.


  12. ரமணன் on August 23, 2012 5:25 am

    முன்னம் ரயாகரன் தேசம்நெட் ஜெயபாலன் அரச ஆதரவளர் என்று குற்றஞ்சாட்டினவர். இப்ப என்னடாவென்டா, அரச ஆதரவாளர் என்று இனம் காட்டப்படுற நேசன் இவருடைய முன்னணி அங்கத்தவராம். அத்தோட நேசன் தமிழரங்கத்தில வந்து வரலாறு என்டு கதை பண்ணுகிறார். கனடாவில இவயெல்லாம் சேர்ந்து வைச்ச கூட்டத்தில பிரதான பேச்சாளர் வரதர் அணியைச் சேர்ந்த ஜேம்ஸ். இப்ப பிரச்சனை என்னவென்டா யார் யாரோட கூட்டு என்றதுதான்.


  13. மீராபாரதி on August 23, 2012 8:03 pm

    நட்புடன் நண்பர்களுக்கு…
    தேடகம் நடாத்திய தம்புள்ள கூட்டம் – ஜான் மாஸ்டர் நேசன் முரண்பாடு -நடந்தது என்ன?

    தேடகம் நடாத்திய தம்புள்ள கூட்டத்திற்கு வழமையாக வருகின்றவர்களைவிட புதிதாக சிலரும் வந்திருந்தனர். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள். கூட்டத்தில் கருத்துரை வழங்கியவர்கள் உரையாற்றும் வரை கூட்டம் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. கலந்துரையாடல் ஆரம்பித்த உடன்தான் முரண்பாடுகள் வெளிப்பட்டன. முரண்பாடுகள் வெளிவந்ததில் தவறில்லை. ஆனால் அதை எவ்வாறு வழிநடாத்துகின்றோம், வெளிப்படுத்துகின்றோம் போன்றவற்றில் ஏற்பட்ட தவறே அன்றைய கூட்டம் குழப்பத்தில் முடிந்ததற்கான காரணமாகும்.

    ரமேஸ் மற்றும் நேசன் ஆகியோர் அன்றைய கூட்டத்தில் நடந்தது தொடர்பாக சில விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இவை ஒரு பக்க பார்வை கொண்ட விமர்சனங்களே. ரமேஸ் அவர்கள் குறிப்பிட்டதன்படி எனது உரையில் இவ்வாறான கூட்டங்கள் வெறுமனே “நாம் என்ன செய்தோம்” என்பதை நமது அமைப்புகளின் வரலாற்றில் பதிவதற்காக மட்டுமல்லாது ஆரோக்கியமான செயற்பாடுகளை நோக்கியும் செல்வதாக இருக்கவேண்டும் என்றே குறிப்பிட்டேன். தனிப்பட எந்த ஒரு அமைப்பையும் நபர்களையும் தாக்குவதை நோக்கமாக கொண்டதல்ல எனது உரை.

    குறிப்பாக ரொரன்டோவில் நடைபெறுகின்ற கூட்டங்கள் கூட்டங்கள் கூடுவதற்க்காகவே நடைபெறுகின்றன எனது புரிதல். அடுத்த கூட்டம் முதல் கூட்டத்திலிருந்து எந்த படிப்பினைகளையும் பெறாது மீண்டும் முதலிலிருந்தே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கும். இதனை தொடர்ச்சியாக அவதானித்ததன் விளைவாக. ஒரு முன்மொழிவை பங்குபற்றிய பல கூட்டங்களில் முன்வைத்திருந்தேன்.

    அதாவது ஒழுங்கு செய்கின்ற கூட்டத்தில் நடைபெறுகின்ற விடயங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் தொடர்பாக குறிப்புகள் எடுத்து பதிவு செய்தல் வேண்டும். மற்றும் குறிப்பிட்ட சிலரே தொடர்ச்சியாக இவ்வாறான கூட்டங்களில் பங்குபற்றுகின்றோம். ஆகவே குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பாக ஒவ்வொரு கூட்டத்திலும் அனைவரும் உடன்பாடு ஒன்றுக்கு வருவது. அடுத்த கூட்டத்தில் நமக்குள் உடன்பாடான குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக மீண்டும் கலந்துரையாடாமல் அதிலிருந்து அடுத்த விடயத்திற்கு செல்வதும், அது தொடர்பாக கலந்துரையாடுவதும், அது தொடர்பான உடன்பாட்டுக்கு வருவதுமாகவே இருக்கவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஒரு ஆரோக்கியமான படிமுறை வளர்ச்சியை நாம் காணமுடியும்.

    ஆனால் இங்கு நடைபெறுகின்ற பல கூட்டங்கள் நாம் எத்தனை கூட்டங்கள் செய்தோம் என்பதைக் கணக்கிடுவதற்காகவும் பதிவு செய்வதற்காகவும் நடைபெறுவதுபோலவே தோற்றமளிக்கின்றது. ஏனெனில் ஒவ்வொரு கூட்டத்திலும் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை, கருத்தை, ஒரே வட்டத்திற்குள் இருந்தே விவாதித்துக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறன செயற்பாட்டுடன் எனக்கு உடன்பாடு இல்லை என்பதுடன் இது சலிப்புட்டும் ஒரு செயற்பாடாகவே இருக்கின்றது.

    எனது கருத்து தனிப்பட பாதித்ததன் காரணமாகவோ என்னவோ குமரன் அவர்கள் தேடகம் என்ன செய்தது என்பது தொடர்பான வரலாற்றை கலந்துரையாடலின்போது கூற ஆரம்பித்தார். இவர் இவ்வாறு பல கூட்டங்களில் செய்ததை அவதானித்திருக்கின்றேன். ஆனால் அன்றைய கூட்டம் தேடகத்தின் வரலாறு தொடர்பானதல்ல. தம்புள்ள பள்ளிவாசல் இடிக்கப்பட்டதற்கான கண்டனக் கூட்டம். ஆகவே கூட்டத்தை வழிநடாத்திய ஜெயகரன், இது கூட்ட விடயத்திற்கு பொருத்தமானதல்ல என கூறி நெறிப்படுத்தியிருக்க வேண்டும். அதனை அவர் செய்யவில்லை. இதனால் வந்திருந்தவர்களில் ஒருவர் கோவமடைந்து அவரது வரலாற்று உரையை நிற்பாட்டும்படி கூறினார். இது முதலாவது பதட்டநிலை உருவாவதற்கான காரணம்.

    பின் நேசன் அவர்கள் கருத்துக்கூற ஆரம்பித்தபோது அங்கு கருத்துக்கூறிய எல்லோரையும் படம் பிடித்ததுபோல் அவரையும் படம் பிடித்தனர். இவ்வாறு படம் பிடிப்பது வழமையான ஒன்று. புதிய ஒரு விடயமல்ல. மற்றது இது ஒன்றும் இரகசிய கூட்டமல்ல. ஒரு பொதுக்கூட்டம். யாரும் வரலாம். யாரும் படம் பிடிக்கலாம். எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. ஆனால் தன்னைப் படம் பிடிக்கவேண்டாம் எனக் கூறி தடுத்தார். இது வீணான விதண்டாவாதப் போக்காகவே நான் உணர்ந்தேன். இவ்வாறு அவர் கூறியதும் மீண்டும் ஒரு பதட்ட நிலையை உருவாக்கியது.

    இதேவேளை நேசன் எழுதுகின்ற வரலாற்றுத்தொடரில் ஜான் மாஸ்டர் சீருடையுடன் இருக்கின்ற படத்தை இராயகரன் பயன்படுத்தியிருந்தார். இதனால் கோணேசும் ஜான் மாஸ்டரும் இவர் மீது ஏற்கனவே கோவத்தில் இருந்திருக்க வேண்டும். இக் கோவத்தின் காரணமாக முதலில் கோணேஸ் நீங்கள் மட்டும் படத்தைப் வெளியீட்டு காட்டிக் கொடுப்பது எந்தவகையில் நியாயம் என கோவமாக கத்தினார். இதன் தொடர்ச்சியாக ஜான் மாஸ்டரும் நேசன் தனது கட்டுரையில் தன்னைக் காட்டிக் கொடுத்த்தாகவும் தொப்பி பிரட்டி போன்ற இனவாதக் கருத்துக்களை பயன்படுத்துவதாகவும் கோவத்தில் எழும்பி நின்று கத்தினார். இது கூட்டத்தில் பதட்டத்தை அதிகரித்து ஆளாளுக்கு கத்த ஆரம்பித்தனர். இது பதட்ட நிலையை அதிகரித்தது.

    நேசன் தனது வரலாற்றை எழுத ஆரம்பித்தபின் அவர் எழுதுகின்ற முறை அவர் மீது இருந்த மதிப்பை மேலும் குறைத்துள்ளதாகவே நான் கருதுகின்றேன். மேலும் ஜான் மாஸ்டருக்கு எதிரான கருத்தை நிலைநாட்டுவதற்காக எழுதப்படுவதாகவே அவரது கட்டுரைகள் தோற்றமளிக்கின்றன. தன்னை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்துவதற்கு மாறாக நியாயப்படுத்துவதாகவும் எதிர் கருத்துடையவர்களை மிகவும் இழிவாக பழிசுமத்துவதாகவுமே இருக்கின்றது. இது நேசன் மீதான தனிநபர் தாக்குதல் அல்ல. அவர் எழுத்தின் மீதான விமர்சனமே. இவ்வாறான விமர்சனத்தை அவருக்கு நேரடியாகவும் வைத்திருக்கின்றேன்.

    இவ்வாறான பதட்ட நிலையில்தான் பதட்டத்தைத் தணிப்பதற்காக, கோணேஸ் மற்றும் ஜான் மாஸ்டரை நோக்கி ஒரு முன்மொழிவை முன்வைத்தேன். நேசன் இன்று ஒரு தனிநபர். தனிநபர்களை விட அமைப்பாக இயங்குகின்றவர்களுக்கு அதிகமான பொறுப்பு உள்ளது. அந்தடிப்படையில் கோணேசும் ஜான் மாஸ்டரும் ஒரு அமைப்பை பிரதிநிதித்துவப் படுத்துகின்றவர்கள். அவர்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு பொறுப்புடன் செயற்பட தவறியமைக்காக அரசியலடிப்படைகளிலும், அவர்களுடன் முன்பு இணைந்து வேலை செய்தவன் என்ற உரிமையின் அடிப்படையிலும், சபையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன்.

    ஜான் மாஸ்டர் தனது தவறை உணர்ந்து சபையில் மன்னிப்பு கேட்டார். ஜான் மாஸ்டரின் மீது விமர்சனங்கள் இருந்தபோதும் அவரது இவ்வாறன செயற்பாடுகளே அவரை நான் மதிப்பதற்கான காரணம். ஆனால் கோணேஸ் மன்னிப்புக் கேட்க விருப்பமில்லாது இருந்தது தென்பட்டது. இவர் ஒன்று மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். இல்லயெனில் ஏன் கேட்க விருப்பமில்லை என்பதைக் கூறியிருக்க வேண்டும். ஆனால் இரண்டையும் செய்யாது வழமைபோல நழுவிக் கொண்டிருந்தார். இவரது இவ்வாறன போக்கே, இவருடன் இணைந்து வேலைசெய்ய முடியாமைக்கு இருக்கின்ற பல காரணங்களில் ஒன்று.

    இந்தக் கூட்டம் முடிய ஜான் மாஸ்டர் தன்னை முஸ்லிமாக அடையாளம் கற்பித்து தொப்பி பிரட்டி போன்ற முஸ்லிம் விரோதக் கருத்துகளை எனக்கு எதிராகப் பரப்புகின்றனர் எனக் கூறியது விவாதமானது. ஜான் மாஸ்டரை நோக்கி, நீங்கள் ஒரு மார்க்ஸிட்டாக இருந்துகொண்டு எப்படி இவ்வாறான ஒரு விமர்சனத்தை முன்வைக்க முடியும் எனவும், ஒரு இன மத அடையாளத்துடன் எவ்வாறு நீங்கள் உங்களை அடையாளங் காணமுடியும் எனவும், உங்களுக்கு எதிரான இவ்வாறா குற்றச் சாட்டுக்கள் எவ்வாறு உங்களைப் பாதிக்க முடியும் போன்ற விமர்சனங்களை மயில் அவர்கள் முன்வைத்தார்.

    மயிலின் இந்த விமர்சனத்துடன் உடன்படாத நான், அடக்கப்பட்டவர்களின் உணர்வுகளை அடக்குபவர்களால் புரிந்துகொள்ள முடியாது என்றேன். ஆகவே ஜான் மாஸ்டர் மீதான இவ்வாறன விமர்சனம் அர்த்தமற்றது அவரை மீளவும் நோகடிப்பதாகும் எனவும் கூறினேன். இக் கூட்டம், தம்முள்ள முஸ்லிம் பள்ளிவாசல் இடித்தத்தைக் கண்டிப்பதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் மீண்டும் முஸ்லிம் சமூகத்தைச சேர்ந்த மனிதர்களின் இதயங்களை இடித்ததாகவே நான் உணர்ந்தேன்.

    இப்படியான ஒரு நிலையில் இன மத ஐக்கியத்திற்கான கூட்டத்தை எவ்வாறு நாம் ஒழுங்கு செய்யலாம்? முதலில் நமக்குள் உள்ள வர்க்க சாதிய பிரதேச சமூக முரண்பாடுகளை தீர்ப்பதற்காகவும் அதில் ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்கான கூட்டங்களை ஒழுங்கு செய்யவேண்டும். பிற இனங்கள் மதங்கள் தொடர்பாக நமது நிலைப்பாடுகள் என்ன என்பதில் நமக்குள் உடன்பாடு காண்பதற்கான கூட்டங்களை ஒழுங்கு செய்யவேண்டும். லன்டனில் உள்ள நண்பர்கள் சிலர் இதற்கான முன்முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். இதன்பின்தான் பிற இன மதங்களை சேர்ந்தவர்களை அழைத்து இன மத ஐக்கிய கூட்டங்களையும் கலந்துரையாடல்களையும் நடத்தலாம். இந்த அக்கறையின்றி முன்னெடுக்கப்படும் இவ்வாறன செயற்பாடுகள் நமது அமைப்புகளின் வரலாற்றில் இவ்வாறன கூட்டங்களை நாம் செய்தோம் என குறிப்பதற்கு மட்டுமே பயன்படும். இதனால் சமூகங்களில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படாது.

    இறுதியாக தம்முள்ள இடிக்கப்பட்டதற்கான கண்டனத்தை வெளியீட்டு அதற்கான கையெழுத்துகள் வாங்குவது என முடிவானது. கூட்டம் முடிந்து வெளியில் வந்தபோது மீண்டும் நேசனுக்கும் ஜான் மாஸ்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் முட்டிக்கொண்டனர். அவர்கள் மோதிக்காள்ளாமல் இருக்க நாம் தடுக்க வேண்டியதாயிற்று. இந்த மோதலானது இவர்கள் கடந்த காலங்களில் ஒன்றாக செயற்பட்டபோது உருவான வடுக்களையும் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள முன்முடிவுகளையுமே இன்னும் சுமந்து திரிகின்றனர் என்றே புரிந்து கொள்கின்றேன். இதற்கான தீர்வு தமது கடந்த காலத்தை நேர்மையான முறையில் இருவரும் வெளிப்படையாக விமர்சனம் செய்வதனுடாகவும் தவறுகளுக்கு கூட்டாகப் பொறுப்பு எடுப்பதனுடாகவுமே கடந்து செல்லலாம் என்பது எனது நிலைப்பாடு.

    இவ்வாறன தனிமனித போக்குகளால்தான் அரசியலிலிருந்து 2000ம் ஆண்டு ஓதுங்கிக்கொண்டேன். பல நாட்கள் என்னையோ நான் கேள்விக்கு உட்படுத்தியிருக்கின்றேன். அரசியலிலிருந்து விலகியது சரியா என? ஆனால் நான் எடுத்த முடிவு சரியானது என்பதை இவர்கள் இன்னும் மாறவில்லை என்பது உறுதிப்படுத்தியது. இதனால்தான் சமூக மாற்றத்திற்கான பாதையில் தனிமனித மாற்றமும் முக்கியமானது எனவும் இரண்டு விடயங்களிலும் சமாந்தரமாகவும் ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை முன்வைக்கின்றேன்.

    இங்கு நான் முன்வைத்தவை எனது நினைவில் உள்ளவையும் நான் தொடர்புபட்டவையும் மட்டுமே. ஏனெனில் எனது பெயரையும் இணைத்து ஒருபக்க சார்பான கட்டுரைகள்; வெளிவந்ததன் காரணமாக எனது பக்க பார்வையை முன்வைக்கவேண்டும் என உணர்ந்தன் விளைவே இந்தப் பதிவு. தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும். திருத்திக் கொள்ளப்படும். இதனால்தான் கூட்டக் குறிப்புகள் முக்கியம் என வலியுறுத்துகின்றேன்.

    கூட்டங்களை ஒழுங்கு செய்ய இருக்கின்ற ஆர்வம் அது தொடர்பான பதிவுகளை செய்வதிலையோ குறிப்புகள் எடுப்பதிலையோ அக்கறையின்றி இருப்பது நமது நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குகின்றது. நீதிமன்றங்களில் என்ன நடந்தாலும் குறிப்பு எடுக்கின்றவர் அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருப்பார். அப்படி நாமும் பதிவு செய்யவேண்டும். அப்பொழுதுதான் என்ன நடந்தது என்பது பற்றிய ஒரளவாவது முழுமையான பார்வையை அனைவரும் பெறமுடியும். இனிமேலாவது இதில் அக்கறை காட்டுவோமா.

    நன்றி நட்புடன்
    மீராபாரதி


  14. பல்லி on August 23, 2012 9:56 pm

    //நட்புடன் நண்பர்களுக்கு…
    தேடகம் நடாத்திய தம்புள்ள கூட்டம் – ஜான் மாஸ்டர் நேசன் முரண்பாடு -நடந்தது என்ன?//

    மீராபாரதி உங்களிடம் இருந்து இந்த ரயாகரன்; ஜான்! நேசன்: என்னும் மும்முனை போரின்(எழுத்தில்) விபரம் அறிய பல்லிக்கு விருப்பம் அதிகம்: காரணம் உங்கள் புள்ளியில் இருந்தே என் கோலத்தை ஆரம்பிக்க விருப்பம்:

    நட்புடன் பல்லி;


  15. சாந்தன் on August 24, 2012 2:34 am

    நண்பர் மீராபாரதி எழுதிய விடயங்களின் சாராம்சம்…

    1) நன்றாகப்போய்க் கொண்டிருந்த கூட்டம் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்க முரண்பாடுகள் வெளிப்பட்டன
    2) கூட்டம் கூடுவோர் ஒவ்வொரு கூட்டத்திலும் முன்னைய கூட்டத்தில் பேசிய விடயங்களையே மீண்டும் மீண்டும் பேசுகின்ரனர்.
    3) கூட்டங்களில் யாரும் குறிப்பெடுப்பதில்லை. (meeting minutes ஐக்குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன்)
    4) எத்தனை கூட்டம் வைத்தாலும் மீண்டும் மீண்டும் அதே முகங்கள்.

    நான் என்ன நினைக்கிறேன் என்றால்….

    இவ்வளவு நாளும் புலியைக் கும்மும் போது சிக்கல் வரவில்லை. ஒரே கோஷ்டி இலக்கியச்சந்திப்பு, பெண்கள் சந்திப்பு, சாதிய எதிர்ப்பு, ஜனநாயக கோஷ்டி என வெவ்வேறு பெயர்களில் கூடினாலும் கும்முவது புலியை. புலி இருக்கும் வரை வசதியாக போய்க்கொண்டிருந்திச்சு.

    ஜனனாயக விரோதி, தனிநபர் பயங்கரவாதம், மக்கள் விரோதி என நாலைந்து சொல்லாடல்கள் போதும். எதற்கு கூட்டகுறிப்பேடு, புதிய முகங்கள், கலந்துரையாடல் என மினக்கட்டுக்கொண்டு இருக்க வேணும். போகிற போக்கில கும்மிப்போட்டு போயாச்சு. இப்ப வந்து பார்த்தால் தானே தெரியுது சிக்கல்.

    மாற்றுக்கருத்து, மாற்றுத்திட்டம், மக்கள் போராட்டம், வேலைத்திட்டம் என பாட்டுப் பாடிக்கொண்டு திரிந்தோர் கதை விட்டோர் ஒரு மீற்றிங் மினிற்ஸ் கூட எடுப்பதில்லையாம். சுப்பர்!


  16. ரமணன் on August 24, 2012 10:52 pm

    நான் நீண்ட காலமாக தேடகம் நடத்தும் கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக சென்று வருபவன். அன்றைய கூட்டத்திற்கு வேலை முடிந்து போக சற்று தாமதமாகிவிட்டது. மண்டபத்தினுள் நுழைந்ததும் நேசன் மண்டப காவலர்களுடன் வாதிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டேன். “இவர்கள் பயங்கரவாதிகள். இவர்களை கூட்டம் நடத்த நீங்கள் அனுமதிப்பது தவறு” என்று நேசன் குறிப்பிட்டார். அதற்கு காவலர்இ “எமக்கு இவர்களை நீண்டகாலமாகவே தெரியும். நீங்கள்தான் புதியவராக இருக்கிறீர்கள். எனவே தயவு செய்து கட்டடத்தை விட்டு வெளியேறுங்கள்” என்று வலியுறுத்திக் கொண்டிருந்தார். இதனை கடந்து கூட்ட மண்டபத்தினுள் சென்றபின்னர்தான் நடந்தது என்னவென்று தெரிந்தது. இது என்ன வேலை நேசன்?
    இரயாகரன் தமிழரங்கத்தில் தேடகம் அமைப்பை மே 18 க்காரர் கைப்பற்ற முனைவதாகவும்இ அதற்கு எதிராகவே முன்னணி போராடிக் கொண்டிருப்பதாகவும் கதைவிடுகிறார். தேடகம் தரப்பில் இது தொடர்பாக எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. அப்படியானால் இரயாகரனின் கருத்து சரியானது என்று எடுத்துக்கொள்ளலாமா? அதுதான் இந்த கூட்டங்களில் நேசன் செய்யும் கலவரங்களின் உண்மையான பின்னணியா?


  17. எஸ். அரசரத்தினம் on August 25, 2012 2:21 pm

    இறுதியாக தேடகம் நடத்திய கூட்டம் காலம் செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில்தான் இந்தக் களேபரம் நடைபெற்றது. காலம் செல்வம் அவர்கள் எங்கள் தேசியத் தலைவருடன் மிக நெருக்கமான உறவில் இருந்தவர். கரம்போட் விளையாட்டில் தேசியத் தலைவரைக் கூட காலம் செல்வம் அவர்கள் தோற்கடித்திருக்கின்றார் .
    மேலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசின் சபாநாயகர் திரு பொன் பாலராஜன் அவர்கள், மற்றும் தமிழ்த் தேசியத்தின் காவலன் நக்கீரன் ஐயா அவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து உரையாற்றிச் சிறப்பித்தனர்.
    தமிழ்த் தேசியத்தில் மிகுந்த பற்று வைத்திருக்கும் ஆர்வலர்கள் தேடகம் மூலமாக நடத்தும் கூட்டங்களுக்கு தமிழ்த் தேசியத்தின் எதிரிகள், தமிழீழத்துக்காக தம்மைத் தியாகம் செய்த வீர வேங்கைகளின் அர்ப்பணிப்புகளை மதிக்காதவர்கள், வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை படுகொலை செய்துவிட்டு இன்று சர்வதேசத்தின் பிடியில் அகப்பட்டுத் தவிக்கும் மகிந்த அரசுடன் இரகசியமாக தொடர்பில் இருப்பவர்கள் வந்து குழப்புவதை தமிழர்களான நாம் அனுமதிக்க முடியாது.
    முப்பதாயிரம் மாவீரகளின் தியாகங்கள் வீண் போகாது வீண் போகவும் கூடாது


  18. ரமணன் on August 25, 2012 4:47 pm

    நாம் ஒவ்வொருவரும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். அவற்றை வெளிப்படையாக வைப்பதற்கும் மற்றவர்கள் முன்வைக்கும் கருத்துக்களை ஒட்டி ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ கருத்துச் சொல்வதற்கும் எம் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. இந்த கருத்துக்களில் சரியானது எது தவறானது எது என்பதை மக்கள் தமது சொந்த அறிவு மற்றும் அனுபவங்கள் மூலமாக கண்டு கொள்வார்கள். இதுதான் ஜனநாயகத்தின் தார்ப்பரியமாகும்.
    இதற்கு மாறாக கருத்துக்களை முன்வைப்போரை தனிப்பட்ட ரீதியாக தாக்குவது கண்ணியக்குறைவாக பேசுவது என்பது போன்ற செயற்பாடுகள் இந்த கருத்துச் சுதந்திர உரிமையை மறுப்பதாக அர்த்தப்படும். நான் எந்தெந்த பாசிசங்களுக்கு எதிராக போராடுகிறோம் என்பதல்ல நாம் நம்மளவில் பாசிச நடைமுறைகளை கையாள முடியாது என்பது இங்கு முக்கியத்துவம் பெறவேண்டும்.
    இப்போது வலைப்பக்கங்களில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் ஆயினும் அதன் பின்னால் வரும் பின்னூட்டங்கள் ஆயினும் சரி இந்த ஜனநாயக பண்புகளை அறவே மதிப்பதாக தெரியவில்லை. இதனை இப்படியே நாம் விட்டுவிட முடியாது ஏனெனில் இந்த போக்கானது தவிர்க்க முடியாதவாறு இதன் அடுத்த கட்டத்தில் வன்முறைக்கு இட்டுச்செல்லும். இதன் ஆரம்ப வடிவங்கள்தாம் இப்போது ரொறொன்ரோவிலும் லண்டனிலும் நடைபெறுவனவாகும். எனவே இந்த நிகழ்வுகளை வெறுமனே தனிநபர் அல்லது குழுக்கள் சார்ந்த சச்சரவுகளாக குறுக்கிவிடாமல் ஜனநாயகத்திற்கும் அதனை மறுக்க முனைபவர்களுக்கும் இடையிலான பிரச்சனையகா புரிந்துகொண்டு ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் ஒன்று திரண்டு இந்தவிதமாக காடைத்தனங்களை அவற்றின் முளையிலேயே கிள்ளியெறிய தம்மாலான அனைத்தையும் செய்தாக வேண்டும். இல்லையேல் நாளை ஒரு கலை இலக்கிய கூட்டத்தை நடத்துவதற்குக்கூட நான் யார் யாரினதே அனுமதியை பெற்றாக வேண்டிய நிலைமை ஏற்படும். இப்படிப்பட்டதொரு இருண்ட காலத்தினூடக வந்தவர்கள் நாம் என்பதை மறந்துவிடலாகாது.


  19. நந்தா on August 25, 2012 8:16 pm

    கனடாவில் ஆனானப்பட்ட “புலிகள்” எல்லாம் நேரு குணரத்தினம் போல புலிக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று பகிரங்க அறிக்கைகள் சமர்ப்பித்து புலிகளைத் தடை செய்துள்ள கன்சர்வெடிவ் கட்சியில் இணைந்து தேர்தல்களிலும் போட்டி போடுகிறார்கள்.

    நக்கீரன் என்ற தங்கவேலு “உலகத் தமிழர் இயக்கத்தின்” உபதலைவராக இருந்தவர். சுரேஷ் மாணிக்க வாசகன் “கனடா தமிழ் ஈழச் சங்கத்தில்”…………. ……….. …………….. துணை போனவர்.

    காலம் செல்வம் போன்றவர்கள் புலி என்றால் எந்த மோசடியும் செய்ய அருகதை உள்ளவர்கள் என்ற போக்கினை அனுசரிக்கும் ஒரு …… எழுத்துக்காரன்.

    புலிகள் வெட்கம் கெட்டு சயனைட் கடிக்காமல் வெள்ளைக்கொடி பிடித்து அம்மாணமானார்கள் என்ற விஷயத்தை எழுதத் தைரியம் இல்லாத் செல்வம் போன்றவர்கள் தங்கவேலு போன்றவர்களுடன் எதனச் சாதிக்க முயல்கிறார்?

    புலிகள் என்று தங்களை காட்டிக் கொண்டு பல அடாவடிகளை புலிகளை எதிர்த்தவர்கள் மீது தாகுதல்கள் செய்த “உலகத் தமிழர்” இயக்கப் பிரமுகர்கள் பலர் இன்று இலங்கைக்குப் போய் மகிந்தவிடம் பாப விமோசனம் பெற்றிருக்கிறார்கள். அதில் உலகத் தமிழர் இயக்கத்தின் முன்னாள் தலைவர் இன்பனாயகமும் ஒருவர். புலிகள் கனடா கந்தச்சாமி கோவிலைப் பிடித்தவுடன் சிங்கள்ப் பெண்ணைத் திருமணம் செய்த பாதிரி பிரான்ஸிஸ் செவியர் கோவிலுள் இந்துக் குழந்தைகளுக்கு ஏடு தொடக்கம் செய்யப் போனவர். இப்பொழுது இலங்கைத் தூதரகம் நடத்தும் எந்த விழாவிலும் வந்து என் போன்ற பலரை அசத்துகிறார். அது மாத்திரமல்ல “அவர் போய்ஸ் ஆர் பாட்” என்று பகிரங்கமாக சொல்லி பலரை வியப்பில் ஆழ்த்துகிறார்.

    இந்த புலி வேஷம் போட்டவர்களின் தற்போதைய பிரச்சனை என்ன?

    கடல் கடந்த ஈழம் என்பதற்குப் பல பிரதமர்கள் வந்து விட்டார்கள். அமெரிக்காவில் உருத்திரகுமாரன். கனடாவில் …… திருச்செல்வம். ஐரொப்பாவில் வினாயகம், நெடியவன் என்று பல பேர்.

    இவர்களின் போராட்டம் புலிகளின் பெயரால் வெளினாடுகளில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை யார் அனுபவிப்பது என்பதுதான். இலங்கை தமிழர்களை மகிந்த இராஜபக்ஷவும் டக்ளசும், கருணாவும்தான் கவனிக்க வேண்டுமாம்.


  20. எஸ். அரசரத்தினம் on August 26, 2012 2:19 am

    நந்தா அவர்களே ! புலிகள் மீதான கடுப்பில் தயவு செய்து கண்டபடி எழுத வேண்டாம். மாதகல் கண்ணன், மொட்டை ரமேஸ், சுரேஸ் மாணிக்கவாசகம் போன்றவர்கள் கனடாவுக்கு அகதியாக வந்த பின்தான் நெஞ்சை நிமிர்த்தி புலிக்கு காசு சேர்க்கத் தொடங்கியவர்கள். நேரு குணரத்தினம் போன்றவர்களும் எத்தனையோ மில்லியன்களுக்கு கணக்கு காட்டவில்லை என்றும் சில “கதைகள்” கேள்விப் பட்டனான். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட “காலம்” செல்வம் அவர்கள் , பொன் பால்ராஜ் அவர்கள் , கக்கீரன் ஐயா அவர்கள் போன்றவர்கள் உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக தமிழ்த் தேசியத்துக்காக பாடுபட்டவர்கள். பாடுபடுபவர்கள். இளங்கோ, ஜோன் மாஸ்டர் போன்றவர்களும் இவ்வாறே பாடுபட்டவர்கள். ஜோன் மாஸ்டரைப் பற்றி புலிகளில் இருந்த ஐய்யர் என்பவர் வெளியிட்ட புத்தகத்திலும் தகவல் இருந்ததாக அதை வாசித்த ஒருவர் எனக்குத் தெரிவித்திருந்தார். நந்தா சொன்ன மாதிரி இளங்கோ கிட்டுவின் ஆள் என்பதற்காக வெளிநாடு அனுப்பி வைக்கப்படவில்லை. இளங்கோ தேடகம் அமைப்பில் பிரதான பாத்திரம் வகித்ததோடு மட்டுமலாமல் தாயகம் பத்திரிக்கை, தீபொறி போன்ற இயக்கங்களையும் புலி எதிர்ப்பு கோசங்களை கைவிட்டு உண்மையாக தமிழீழத்துக்காக போராட பெரும் முயற்சி எடுத்தவர். இளங்கோவின் ஆலோசனைகளால் தாயகம் நிறுத்தப்பட்டது. தீபோரியை இளங்கோவே ஜோன் மாஸ்டரிடமிருந்து பொறுப்பெடுத்தார். இளங்கோவின் பெருமுயற்சியால்தான் ராதிகா சிற்சபைஈசன் கனடாவில் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்தலில் வெல்ல முடிந்தது. ஜோன் மாஸ்டரும் முள்ளிவாக்கால் முடிவல்ல அதுவே ஆரம்பம் என அறிவித்து மே 19 என இயக்கம் உருவாக்கி பாடுபடுவது நந்தாவுக்கு ஏன் தெரியாமல் போனது?


  21. Ajith on August 26, 2012 4:29 pm

    இலங்கை தமிழர்களை மகிந்த இராஜபக்ஷவும் டக்ளசும், கருணாவும்தான் கவனிக்க வேண்டுமாம்.////

    இவர்களுடன் நந்தா என்ற சிறப்பு பிரதிநிதியையுன் சேர்த்தால் நன்றாக இருக்குமே. கூலிபடையில் உங்களைபோல் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களையும் இணைத்து கொள்ளுங்கள்.


  22. நந்தா on August 26, 2012 6:51 pm

    அரசரத்தினம்:
    உங்கள் கதைகளைப் பார்த்தால் கனடாவில் இருப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற நினைப்பில் கதைப்பதாகவே தெரிகிறது. மாதகல் கண்ணனும், மொட்டை ரஞ்சனும் புலியைக் கண்ணால் காணாதவர்கள். சுரேஷ் மாணிக்க வாசகன் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தூள் கடத்தல் மன்னன்.

    நேரு குணரத்தினமும், திருச்செல்வமும் இப்பொழுது கடல் கடந்த ஜனநாயகத் தமிழ் ஈழம் நடத்தும் கதை தெரியாதோ? பாலராஜன் உருத்திர குமரனின் ‘சபா நாயகர்”. செல்வம் ஒரு புலி வால். அதற்குக் காரணம் அவர் கத்தொலிக்கனும், கரையார சாதி என்பதும் மட்டும்தான். அதைத் தவிர வேறு எதுவும் கிடையாது. நக்கீரன் முன்னர் “முழக்கம்” என்ற பத்திரிகையில் இந்துக்களுக்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவாகவும் எழுதிக் கொண்டிருந்தார். இந்த முழக்கம் பத்திரிக்கை புலிகள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் காணாமல் போன உடனேயே அதுவும் காணாமல் போய் விட்டது. இந்துக்களுக்கு எதிராகக் கதைக்கும் இந்த தங்கவேலு கனடா கந்தசாமி கோவிலைப் பிடுங்குவதற்குப் புலிக் கும்பல்களுடன் சேர்ந்து அப்போதைய கோவில் நிர்வாக சபை தலைவர் பொன்னுச்சாமியை மிரட்டிய நபர். மாதகல் கண்ணன் கும்பலுடன் இயங்கிய தங்கவேலு போன்றவர்கள் தமிழுக்கு என்ன கிழித்தார்கள் என்று இதுவரை தெரியாது இப்பொழுது தமிழர் கூட்டமைப்பின் கனடாக் கிளை என்று ஒரு கோஷத்துடன் அலைந்து கொண்டிருக்கிறார். தமிழர் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கனடாவில தங்கள் கூட்டமைப்பின் கிளைகள் திறக்க யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை என்று பகிரங்க அறிக்கையும் விட்டிருந்தார்.

    தாயகம் பத்திரிகை ஜோர்ஜ் குருஷேவ் என்பவருடையது. அதற்கு இளங்கோ, ராதா, பின்னி போன்று புலிகளால் துரத்தப்பட்டவர்கள் ஆதரவளித்தனர். அவர்களே பிரபாகரன் என்ன செய்தான் என்று சொல்லும் பொழுது உங்களுடைய கதையின் தமாஷை ரசிக்க முடியவில்லை. இளங்கோவின் ஆலோசனைகளால் தாயகம் நிறுத்தப்படவில்லை. நேரு குணா, சுரேஷ் மாணிக்க வாசகன் கும்பலின் கடைக் கண்ணாடியுடைப்பு என்ற கிரிமினல் விளையாட்டின் பலனாகவே நிறுத்தப்பட்டது. இளங்கோ உங்கள் கதை பார்த்து சிரிக்கப் போகிறார். டி பி எஸ் ஜெயராஜின் மஞ்சரிக்கும் அதுவே நடந்தது.

    ஜான் மாஸ்டர் புளொட் இயக்கத்தில் இருந்தவர். அவர் இப்பொழுது தன்னை அன்டன் பாலசிங்கம் என்ற நினைப்பில் பல “அறிக்கை” தமாஷ்கள் பண்ணிக் கொண்டிருப்பவர். தீப்பொறிக்கும் இளங்கோவுக்கும் சம்பந்தம் என்றால் தீப்பொறியினர் செருப்பாலடிப்பார்கள். “தேடகத்தினர்” இளங்கோவை விலக்கி பல வருடங்கள் ஆகிவிட்டன என்ற தகவலும் தெரியவில்லை என்றே தெரிகிறது.

    ராதிகா சிற்சபெசனுக்கு இளங்கோவை யாரென்று கூடத் தெரியாது. கனடாவில் அடித்த “என்டிபி” அலையில் எம்பியாகியவர். கியூபெக்கில் தொகுதிக்குப் போகாமலேயே பலர் என்டிபி கட்சியில் வென்றிருக்கிறார்கள். அதில் பத்தொன்பது வயதுடைய மாணவன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிலைமைகள் அப்படியிருக்க உங்களுடைய கதைகள் காதில் பூ சுற்றும் கதைகளாகவே இருக்கிறது.

    புலிகளுடன் கடுப்பு மாத்திரம் அல்ல அவர்களின் பொறுக்கித்தனங்களையும், கொலை, கொள்ளைகளையும், பிள்ளை பிடிகளையும் ரசிக்க முடியாது. புலிகள் வன்னியில் அடைவு கடை நடத்தி தமிழர்களுக்கு சிவகாசியில் அச்சிட்ட தமிழீழ நோட்டுக்களைக் கொடுத்து தமிழர்களின் தங்க நகைகளை அபேஸ் செய்தவர்கள். சூசையின் மனைவி தப்பி ஓடும்பொழுது ஏழு கிலோ தங்க நகைகளுடன் அகப்பட்ட கதைகள் தெரியாதோ? வேலையும் கூலியுமில்லாமல் புலிகளால் விலக்கி வைக்கப்பட்டிருந்த சூசையின் மனைவியிடம் ஏழு கிலோ தங்க நகைகள். தலை சுற்றுகிறது.

    அது மாத்திரமல்ல தமிழர்களிடம் கொள்ளையடித்து கோபாலசாமிக்கு பல பெட்ரோல் நிலையங்கள் கட்டிக் கொடுத்தவர்கள். தமிழீழம் என்று சொல்லிக் கொண்டு கொழும்பில் பல தொடர் மாடிகளைக் கட்டி வாடகைக்கு விட்டவர்கள். இப்படியாகத் தமிழர்களிடம் கொள்ளையடிப்பதை மாத்திரம் செய்த புலிக் கும்பலை இன்று அரசு அழித்துள்ளது.

    சம்பந்தன் இப்பொழுது சிங்கக் கொடி சம்பந்தன் ஆகியுள்ளார். புலி வால்கள் யாழ் நூல் நிலையம் எரித்தது யுஎன்பி என்று இது நாள் வரையில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது “ஐக்கிய தேசியத்துள்” நுழைந்துள்ளனர். தமிழ் தேசியம் என்பதே ஒரு பம்மாத்து. அதில் குளிர் காய்பவர்கள் தங்களை வளமாக்கிக் கொண்டு தமிழ் மக்களுக்குக் கெடுதல்கள் செய்ததுதான் வரலாறு.


  23. எஸ். அரசரத்தினம் on August 26, 2012 8:12 pm

    இன்று வேலுப்பிள்ளை தங்கவேலு (நக்கீரன்) ஐயா அவர்கள் கூட்டமைப்பின் தேர்தல் நிதிக்காக நிதி சேர் இரவு ஒன்றை நிகழ்த்துகின்றார். கூட்டமைப்பின் கனடாக் கிளையின் தலைவர் நக்கீரன் ஐயா அவர்களே. சும்மா விஷயம் தெரியாமல் நந்தா எழுதுகின்றார்.
    தீப்போரியின் தலைமையை ஜோன் மாஸ்டர் இளங்கோவிடம் கொடுத்ததை நந்தா அறியவில்லை போலும். இளங்கோவும் அவரது உதவியாளர் பீட்டரும் ராதிகா சித்சபைஈசன் தேர்தல் வெற்றிக்கு உழைத்தது சகலருக்கும் தெரிந்த விடயம்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு