சிவமோகன் சுமதியின் ‘இங்கிருந்து’


sumathyபுகழ்பெற்ற ‘ சிறிலங்கா தேயிலை’யில் தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு தேநீர்க் கோப்பைக்குப் பின்னாலும், ஆண்டு முழுவதும் சிறிலங்காவின் தேயிலைத் தோட்டங்களில் மிகக் கடுமையாக உழைக்கின்ற முகம்தெரியாத தொழிலாளிகள் உள்ளனர். சிறிலங்காவில் வாழும் அந்தத் தோட்டத் தொழிலாளர் சமூகம் தொடர்பாக ‘இங்கிருந்து’  [From Here]  என்கின்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் சிவமோகன் சுமதி.

இந்தத் திரைப்படம் வெகு விரைவில் கொழும்பு திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது . சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்பிரச்சினை தொடர்பான திரைப்படங்களுக்குள் மலையகத் தமிழ் தொழிலாளர்களின் கதைகள் ஒருபோதும் உள்வாங்கப்படவில்லை என்கிறார் இயக்குநர் சுமதி.

தென்னிந்தியாவிலிருந்து பிரித்தானியரால் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்ட மலையகத் தமிழர்கள் அல்லது தோட்டத் தமிழர்கள் இந்தியாவின் திருநெல்வேலி, திருச்சி, மதுரை மற்றும் தஞ்சாவூர் போன்ற இடங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிறிலங்கா தொடர்பில் இடம்பெற்ற அரசியல் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து குடியமர்த்தப்பட்டனர்.

வரலாற்று ரீதியாக மிகக் குறைந்தளவில் கவனம் செலுத்தப்படும் மலையகத் தமிழ் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை வெளியில் கொண்டுவருவதைத் தூண்டும் முகமாக ‘இங்கிருந்து’ என்கின்ற திரைப்படத்தை இயக்கியுள்ளதாக சுமதி குறிப்பிடுகிறார்.

மலையகத் தோட்டத் தமிழ் தொழிலாளர்கள் தொழில் ரீதியில் சுரண்டப்படுவது மட்டுமன்றி இவர்களுக்கான குடியுரிமை மற்றும் உடைமைகள் போன்றன எவ்வாறு அடக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பாக சுமதி தனது திரைப்படத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.from-here-movie

இந்த மக்கள் சிறிலங்கா அரசாலும் அதாவது, நாட்டிற்குள்ளும் வெளிச்சக்திகளாலும் பல்வேறு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். கருத்தியல் ரீதியாக நோக்கும் போது, இது யுத்தம் மற்றும் சமாதானம் ஆகிய இரண்டும் கலந்த ஒரு திரைப்படமாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என சுமதி குறிப்பிடுகிறார்.

‘நான் இந்தத் திரைப்படத்தை மூன்று, நான்கு பிரதான கதாபாத்திரங்களை மட்டும் மையப்படுத்தி எடுக்கவில்லை. நான் எனது தனிப்பட்ட கருத்துக்களை மட்டுமன்றி சமூகத்தின் பங்களிப்பையும் உள்வாங்கி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளேன். எனது பிரதான கதாபாத்திரமாக மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகம் காணப்படுகிறது’ என சுமதி மேலும் குறிப்பிட்டார்.

கவிஞரும், நாடகச் செயற்பாட்டாளருமான சுமதி, இத்திரைப்படத்தை இயக்குவதற்கு முன்னர் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்றியிருந்தார். இந்த மக்களுடன் இணைந்து பணியாற்றிய காலத்தில் இந்த மக்களின் உள்ளுணர்வுகளை சுமதி நன்குணர்ந்துள்ளார்.

இந்த மக்களுடன் மிகவும் நெருக்கமான உறவை இவர் பேணியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் தோன்றியுள்ள கதாபாத்திரங்கள் மலையக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார் சுமதி.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் பிரபல நடிகருமான மறைந்த எம்.ஜி.இராமச்சந்திரன் தொடர்பாக இத்திரைப்படத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘எம்.ஜி.ஆர் கண்டியில் பிறந்ததால் தான் இந்த மக்கள் இவரைப் போற்றுகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், உண்மையில் இம்மக்கள் எம்.ஜி.ஆரை மீளவும் நினைவுகூருகின்றனர். மலையகத் தோட்டங்களில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆர் கழகங்கள் மற்றும் அவரின் சிலைகள் என்பனவும் காணப்படுகின்றன’ என சுமதி குறிப்பிட்டார்.

இந்த மக்களின் அடிப்படைக் கலாசாரத் தொடர்புகள் தென்னிந்தியாவைச் சேர்ந்ததாகும். மலையக சமூகத்தின் மத்தியில் நிலவும் ஆண், பெண் சமத்துவமின்மை, தொழில் சுரண்டல்கள் போன்ற விடயங்கள் மிக அழகாக இத்திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளன.

இந்த மக்கள் சிறிலங்காவின் குடியுரிமையைப் பெற்றுக் கொள்ள முடியாது வாழ்கின்றனர்.இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்தியா மற்றும் தமிழ்நாடு போன்றன தமது பலமான கருத்துக்களை முன்வைக்கின்ற போதிலும், தென்னிந்தியாவுடன் மிகப் பலமான தொடர்பைக் கொண்டுள்ள மலையகத் தமிழ் மக்கள் தொடர்பாக எவரும் தமது கருத்துக்களை முன்வைக்கவில்லை. இந்திய-சிறிலங்கா உடன்படிக்கையால் மலையகத் தமிழர்கள் சிலர் நாட்டை விட்டு வெளியேறவேண்டி ஏற்பட்டது. இவை தொடர்பில் இத்திரைப்படத்தில் ஒரு தெளிவான தீர்வு அல்லது கருத்து முன்வைக்கப்படவில்லை.

‘எல்லாக் கேள்விகளுக்கும் இத்திரைப்படத்தினூடாக பதில் கூறவேண்டும் என நான் விரும்பவில்லை. எமது உண்மையான வாழ்வில் எமக்குள் உருவாகும் எல்லாக் கேள்விகளுக்கும் நாங்கள் பதிலைப் பெற்றுக்கொள்கிறோமா? இத்திரைப்படத்தைப் பார்க்கின்ற ஒவ்வொருவரும் மலையகத் தமிழர்களின் உண்மை நிலையைக் கண்டறியவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்’ என்கிறார் இயக்குனர் சுமதி.

இந்தத் திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்வதற்கு 18 நாட்கள் எடுத்ததாகவும் ஆனால், தயாரிப்புப் பணிகளுக்கு மிக நீண்ட நாட்கள் எடுத்ததாகவும் சுமதி குறிப்பிடுகிறார். இத்திரைப்படத்தை இயக்குவதற்கான 80 சதவீதமான பணம் தனது சொந்தப் பணம் எனவும், தனது நண்பர்களும் குடும்பத்தினரும் உதவி செய்தனர் என்றும் சுமதி தெரிவிக்கின்றார்.

‘திரைப்படத்தை இயக்குவதற்கு நிதி மட்டும் ஒரு பிரச்சினையில்லை. சிறிலங்காவின் மத்திய மாகாணத்தில் உள்ள சில தோட்ட உரிமையாளர்கள் திரைப்படக் காட்சிகளை ஒளிப்பதிவு செய்வதற்கு அனுமதிக்கவில்லை. இத்திரைப்படத்தில் வருகின்ற நிறையக் காட்சிகள் மிகவும் இரகசியமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டவையாகும்’ எனவும் சுமதி கூறினார்.

இத்திரைப்படத்திற்கான வர்த்தக சார் வரவேற்பு எவ்வாறிருக்கும் எனக் கேட்ட போது,   ‘உண்மையில் சிறிலங்காவில் வெளியிடப்படும் தமிழ் திரைப்படங்களுக்கு எந்தவொரு வர்த்தக சார் பெறுமதியும் கிடைக்கப் பெறாது’ என இயக்குநர் சுமதி விளக்கமளித்தார்.

மலையக மக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்படாத வெளிப் பிரதேசத்து நபர் ஒருவரின் பார்வையில் மலையக மக்களின் பிரச்சினைகள் எப்படி தெரிகின்றன என்கின்ற கண்ணோட்டத்தில் இந்தப் படத்தின் கதை நகர்கிறது.

இந்தியத் தலைநகர் டில்லியில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10ஆவது ஆசியப் பெண்கள் திரைப்பட விழாவில் ‘இங்கிருந்து’ திரைப்படம் காண்பிக்கப்படவுள்ளதாகவும் சுமதி கூறுகிறார்.

பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் தலைவராக பணியாற்றும் சுமதி சிவமோகன், கடந்த காலங்களில் சில சமூகப் பிரச்சினைகளை குறும்படங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து
 1. சாந்தன் on December 24, 2013 5:59 pm

  இவர் பிபிசி தமிழோசைக்கு கொடுத்த செவ்வியில் மேலும் பல விடயங்கள் சொல்லி இருக்கிறார்.
  இந்த திரைப்படத்துக்கு இசை சதானந்தன் என்கிறார் சுமதி. இப்படத்தில் வரும் பாடலை நிர்மலா ராஜசிங்கம் பாடி இருக்கிறார்.
  பாடல் “ஒரு பாய்க்கப்பல் ஏறியே வந்தோம் லங்கா மாதா நம்ம தாய்தான்….”


 2. BC on December 25, 2013 12:05 pm

  ஒரு பாய்க்கப்பல் ஏறியே வந்தோம் லங்கா மாதா நம்ம தாய்தான்…

  இலங்கையில் இருந்து பாஸ்போட் எடுத்து,பிளைட் ரிக்கற் வாங்கி திகதி புக்பண்ணி போனவர்களுக்கு அமெரிக்க சுதந்திர சிலை மாதாவதாகவும்,டேவிட் கெமரூன் பிதாவாகவும் இருக்கும் போது,பாய்க்கப்பல் ஏறியே வந்தவ மக்களுக்கு லங்கா மாதா.


 3. சாந்தன் on December 25, 2013 8:15 pm

  //..அமெரிக்க சுதந்திர சிலை மாதாவதாகவும்,டேவிட் கெமரூன் பிதாவாகவும் இருக்கும் போது,பாய்க்கப்பல் ஏறியே வந்தவ மக்களுக்கு லங்கா மாதா….//

  ஆனால் லங்காமாதா அவர்களுக்கு கொடுத்தது லயன் குடியிருப்பு, நோய், குறைந்த சம்பளம், பிரஜா உரிமை பறிப்பு என்கின்ற பாலைத்தான்!
  இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் அவர்களின் அவலத்தை புரியவைக்க திரைப்படம் எடுக்க வேண்டிய நிலை!

  நான் ஒரு தகவலுக்குச் சொன்னதை கண்டவுடனே ”புலம்பெயர் காய்ச்சல்வரும்” நிலையில் சிலர்!!!!!


 4. Rohan on December 26, 2013 10:42 am

  இப்படத்தில் வரும் பாடலை நிர்மலா ராஜசிங்கம் பாடி இருக்கிறார்.
  பாடல் “ஒரு பாய்க்கப்பல் ஏறியே வந்தோம் லங்கா மாதா நம்ம தாய்தான்….”

  பாடினாரா? என் அவரைத் தெரிவு செய்து பாட விட்டார்கள்?

  http://www.youtube.com/watch?v=leQNw6mDn90
  http://www.youtube.com/watch?v=M8uhjNph628


 5. சாந்தன் on December 26, 2013 11:17 pm

  //..அமெரிக்க சுதந்திர சிலை மாதாவதாகவும்,டேவிட் கெமரூன் பிதாவாகவும் இருக்கும் போது,பாய்க்கப்பல் ஏறியே வந்தவ மக்களுக்கு லங்கா மாதா….//

  ”…தாய்நாடென்றே எண்ணியிருந்தோம் இவர்கள் தகாத செயல்கண்டு மனம் மிக நொந்தோம்..” என பாடல் சொல்வதை அறியாமல் எங்கோ இருக்கும் சுதந்திர தேவி சிலை டேவிட் கமரோன் என அலைகிறது புலிக்காய்ச்சல் கூட்டம்!!!!

  அமெரிக்காவில் பிறந்த எவரும் அந்த நாட்டின் பிரஜைகளே. அவர்களின் தாய் தந்தையர் சட்டவிரோத குடியேற்ற வாசிகளாயிருந்தாலென்ன எதிரி நாட்டின் பிரஜைகளாய் இருந்தாலென்ன பிறந்தோர் யாவரும் பிரஜைகள்.
  ஆனால் லங்காமாதா தாய்தான் அவளுக்கு எல்லோரும் சேய்தான் என சொன்னோர் ஒரே இரவில் அனாதைகள் ஆக்கப்பட்டனர். அடையாள அட்டைக்கு விண்னப்பிக்க தந்தையார் எங்கே பிறந்தார், பிறப்பினாலா பதிவினாலா,அவ்வாறாயின் பாட்டனார் எங்கே பிறந்தார் என கேள்விகள் உள்ள படிவம் நிரப்ப வேண்டிய நாடு “லங்கா மாதா” நாடு.


 6. BC on December 28, 2013 1:33 pm

  பாய்க்கப்பல் ஏறியே வந்தவ மக்களுக்கு இலங்கை தனது யாழ்பாண மக்களுக்கு கொடுத்த வாழ்கை தரத்தை கொடுக்காதது ஒரு துயர சம்பவம். ஏற்று கொள்ள முடியாதது.
  ஆனால் அமெரிக்காவுக்கு இலங்கையில் இருந்து பிளைட் புக் பண்ணி ஏறி போனவர்களுக்கு அமெரிக்கா கொடுக்கும் வாழ்வு இலங்கையால் கொடுக்க முடியாது.
  இலங்கை கொடுப்பதாயின் இலங்கையும் அமெரிக்கா மாதிரி உலகத்தை கொள்ளை அடிக்க வேண்டும்.


 7. சாந்தன் on December 28, 2013 6:13 pm

  //…இலங்கை கொடுப்பதாயின் இலங்கையும் அமெரிக்கா மாதிரி உலகத்தை கொள்ளை அடிக்க வேண்டும்….//

  அப்படிக் கொள்ளை அடிக்க முடியாமல் போனதால் தனது நாட்டுக்காக அடிமட்ட சம்பளத்தில் உழைத்தோரின் பிரஜா உரிமையை ஒரே இரவில் “கொள்ளை” அடித்தனரோ????

  அடுத்த ஊரைக்கொள்ளை அடிக்க முடியவில்லை சொந்தமக்களைக் கொள்ளையடி!!!
  சுப்பர் ஐடியா !!!!

  அல்லது துரை சொல்வதுபோல சாதி ஒழிப்புக்கு தமிழரின் காணியைக் கொள்ளை அடித்து ராணுவத்தைக் குடியேற்று!!!!


 8. Rohan on December 28, 2013 11:52 pm

  //இலங்கை தனது யாழ்பாண மக்களுக்கு கொடுத்த வாழ்கை தரத்தை கொடுக்காதது //

  யாழ் மக்களுக்கு இலங்கை தான் வாழ்க்கைத் தரத்தைக் கொடுத்தது என்பது ஒரு interesting argument.

  இலங்கை அரசு வாழ்க்கைத் தரத்தைக் கொடுத்தலில் தெற்குக்கும் யாழ்ப்பாணத்துக்கும் பாகுபாடு காட்டுகிறது என்பது எவ்விதத்தில் சரி?

  //ஆனால் அமெரிக்காவுக்கு இலங்கையில் இருந்து பிளைட் புக் பண்ணி ஏறி போனவர்களுக்கு அமெரிக்கா கொடுக்கும் வாழ்வு இலங்கையால் கொடுக்க முடியாது.//

  கள்ள பாஸ்போட்டில் போய் அல்லது சொந்த பாஸ்போட்டில் போய் பொய் சொல்லி அகதி கேட்டவர்கள் இப்போது இலங்கையில் பயங்கரவாதிகள் அழிந்து சுபீட்சம் நிலவுகின்றமையால் பெட்டிகளைக் கட்டிக்கொண்டு திரும்பிப் போகவேண்டியது தானே. ஐரோப்பிய நாடுகளும் வட அமெரிக்காவும் கொடுத்த பெருவாழ்வு தந்த பணத்துடனும் அனுபவத்துடனும் போய் இறங்கலாம்.


 9. சாந்தன் on December 29, 2013 7:11 am

  /…”…தாய்நாடென்றே எண்ணியிருந்தோம் இவர்கள் தகாத செயல்கண்டு மனம் மிக நொந்தோம்..” ….//

  எனப பாடுவோரிடம் ”…இலங்கை கொடுப்பதாயின் இலங்கையும் அமெரிக்கா மாதிரி உலகத்தை கொள்ளை அடிக்க வேண்டும்….” எனச் சொல்லுங்கள்!
  அவர்களும் இந்த பீசீ என்கின்ற ஆள் சொல்வது சரிதான். டேவிட் கமரோன் வாக்குகளுக்கு ஆசைப்பட்டு புலம்பெயர் புண்னாக்குகளின் கதையைக் கேட்பதுபோல் நம்ம மகிந்தாவோ சிங்கள சகோதரர்களோ செய்யமாட்டார்கள். அவர்கள் தேவை என்றால் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவருவார்கள். ஒரே இரவில் பிரஜா உரிமை பறிப்பார்கள். நாங்கள் ஏழைகளாகவும் குடியுரிமை அற்றோராகவும் இருந்தாலும் இருப்போமே அன்றி புலம்பெயர் புண்னாக்குகள் போலவோ ஆயுத வியாபாரம் செய்யும் டேவிட் கமரோன் போலவும் இருக்க மாட்டோம் எனவும் சொல்வார்கள். பீசீ நீங்கள் காது குளிரக்க்கேட்டு மகிழலாம். விரல் களைக்க கீபோட்டில் வறுகி மகிழலாம்


 10. thurai on December 29, 2013 4:39 pm

  /யாழ் மக்களுக்கு இலங்கை தான் வாழ்க்கைத் தரத்தைக் கொடுத்தது என்பது ஒரு இன்டெரெச்டிங் அர்குமென்ட்.//றோகன்

  சாக்குப்போட்டு பாடசாலைகளில் இருக்கவிடாமலும்
  மேல்சட்டை போட்டு பெண்கள் வீதியில் செல்ல அனுமதித்ததும்.
  அரச உத்தியோகங்களில் வேறுபாடின்றி அமரவைத்ததும்
  இலங்கைதான் அதுவும் தென்னிலங்கை.-துரை


 11. thurai on December 29, 2013 4:56 pm

  //அல்லது துரை சொல்வதுபோல சாதி ஒழிப்புக்கு தமிழரின் காணியைக் கொள்ளை அடித்து ராணுவத்தைக் குடியேற்று!!!!//சாந்தன்

  ஆண்ட பரம்பரை ஆளநினைப்பதில் என்று சொல்லி
  30 வருடமாக இலங்கைத்தமிழரை அழித்து, புலம்பெயர் தமிழரை சுருட்டி சர்வதேச வர்த்தகர்களாக மாறிய தமிழர்யார்?

  தமிழீழம் கேட்டு சும்மா கிடந்த வன்னியை இராணுவத்தினரின்
  குடியேற்ரமாக மாற்ரிய தமிழர் யார்? புலியின் வாலைப்பிடித்தவர்கழும் புலியின் பெயரால் பிழைத்தவர்கழும்தான். புலியினை எதிர்த்தவ்ர்களல்ல.

  தமிழரிடம் சாதிப்பிரச்சினை உள்ளவரை விடுதலை சுதந்திரம் என்ற பேச்சு பேசவும் தமிழர் என்று உலகின் முன்நிமிர்ந்து
  நிற்க முற்படுவதும் மண்குதிரை மேல் ஏறி ஆற்ரினைக்கடக்க முற்படுவது போல்தான்.

  தமிழ்நாட்டில் ஆயுத பயிற்சி பெற்று இயக்கங்கள் ஆரம்பித்த
  போதே தலைமைபதவி தாழ்த்தப்பட்ட தமிழர்களிற்கு
  போகாமல் மிக அவதானத்தோடு நடந்தவ்ர்கள்.

  யாழ்ப்பாண்த்தில், வட கிழக்கில் என்ன பாடுபடுவீர்கள்?
  இவ்வாறு தமிழரை வேறுபடுத்தும் தாழ்த்தும் தமிழரே
  சிங்களவர்களிலும் பார்க்க கொடியவ்ர்கள்.

  இவர்களின் காணியைப்பறிப்பது மட்டுமல்லநாடற்ரவர்களாக்குவதன் மூலமே தமிழினம்
  விடுதலை பெறும்.-துரை


 12. சாந்தன் on December 30, 2013 9:23 pm

  //…இவர்களின் காணியைப்பறிப்பது மட்டுமல்லநாடற்ரவர்களாக்குவதன் மூலமே தமிழினம்
  விடுதலை பெறும்.-துரை…///

  ஒஹோ…அதுதான் கோத்தபாயா அழைத்தும் போகாம் இருக்கிறீர்களாக்கும்???
  காணியைப்பறித்து சாதியம் அழித்தாகிவிட்டது. இனி நாடற்றவர்கள் ஆக்கினால் விடுதலை பெறும். சுப்பர் கோட்பாடு!!!!
  பாவம் நீங்களும் என்னதான் செய்வீர்கள். ஜனநாயகம், மாற்றுக்கருத்து , மக்கள் நலன் எல்லாம் கோவிந்தாவாகிவிட்டது. இப்போ ஒன்றும் செய்ய முடியவில்லை.


 13. Rohan on December 31, 2013 10:47 am

  //உலகின் முன்நிமிர்ந்து
  நிற்க முற்படுவதும் மண்குதிரை மேல் ஏறி ஆற்ரினைக்கடக்க முற்படுவது போல்தான்.//

  தமிழே உருப்படியாக எழுத முடியாதவர்களுடன் தமிழில் உள்ள பழமொழிகளுக்கு விளக்கம் கேட்கவோ சொல்லவோ முடியாது.

  //நாடற்ரவர்களாக்குவதன் மூலமே தமிழினம்
  விடுதலை பெறும்.-துரை//

  மலையகத் தமிழர்களுக்கு ‘நாடற்றவர் ஆக்கல்’ நடந்தது. அவர்கள் இன விடுதலை பெற்ற சான்றுகளுக்குக் காத்திருப்போம்.


 14. சாந்தன் on December 31, 2013 6:18 pm

  “…இலங்கையில் மலையகத் தமிழர்கள் சொந்தக் காணிகளைப் பெற்றுவிடக்கூடாது என்ற இனவாத நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் குற்றஞ்சாட்டுகிறார்….”

  அண்ணை யோகராஜன் உதுக்கொல்லாம் நாங்கள் அசைஞ்சு குடுக்கமாட்டோம். துரை சொல்வதுதான் எமது வேதவாக்கு.
  காணியைப்பறிச்சு இவர்களை நாடற்றவர்களாக்கி “இனவிடுதலை” பெறப் புறப்பட்ட துரை அவர்களே பயப்படவேண்டாம் நாங்கள் உங்களோடதான்!!!!


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு