பிரபாகரன் மாத்தையா – நவீன ஈழத்து நாடோடிக் கதை : நட்சத்திரன் செவ்விந்தியன்


Pirabakaran_Swimingpoolதர்மபுரக்காட்டுக்குள்ளிருந்த பிரபாகரனின் பங்கருக்குள் நாமல் ராஜபக்க்ஷவும் மாலக சில்வாவும் (மேர்வின் சில்வாவின் மகன்) நானும் படிகளில் இறங்கி போகிறோம். மூன்றாவது தளத்தில் டைனிங் கோல் மாதிரியிருந்தது. அங்கிருந்த ஒரு பீரோவுக்குள் அன்ரன் பாலசிங்கம் அரைவாசி குடிச்சிட்டு வைத்திருந்த அரிய சிங்கிள் மோல்ற் ஸ்கொச் விஸ்கி போத்திலொன்றையும் அரிய கியுபன் சுருட்டுக்களையும் கண்டெடுக்கிறான் மாலக. நாங்கள் மூவரும் மேசையிலிருந்து ஒரு பெக் அடிக்க மாலக தள்ளிக்கொணர்ந்த செக் குடியரசை சேர்ந்த நீலக்கண் சரக்கு அப்பொலேனா

“ நான் ஜேர்மன், பெல்ஜியம் பியர்தான் குடிப்பேன்”

என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்த குளிர்சாதனப்பெட்டிகளில் சல்லடை போட்டாள். அவளுக்கு பியர் கிடைக்கவில்லை. அடேல் அன்ரி பாதி குடிச்சிட்டு வைத்திருந்த தென் ஆஸ்திரேலிய பரோஸா கணவாயைச் சேர்ந்த செம்மதுப்புட்டி ஒன்று மட்டும் கிடைக்கிறது. அவள் தொடர்ந்து தேடியபோது அரச வம்சத்தினர் சாப்பிடும் கவியார் மீன் முட்டை ரின்கள் பலவும் விலையுயர்ந்த ரஷ்ய வோட்கா மதுவும் கிடைத்தன. கவியார் ரின்களைக்கண்டு மிகப்பரவசமடைந்த அப்பொலேனா எங்களுக்கு புரியாத ஒரு உசாரான ஜிப்ஸி பாடலை பாடிக்கொண்டு ஒரு முழு வோட்கா போத்திலைக்கொணர்ந்து மேசையில் வைத்தாள். அப்போது நாங்கள் விஸ்கி போத்திலை காலிபண்ணியிருந்தோம். அப்பொலேனா மாலகவிடமிருந்து லைற்றர் வாங்கி தனது சிகரெட்டை பற்றவைத்து புகையிழுத்து விட்டாள். பிறகு நாமலைப்பார்த்துக்கொண்டு

“கவியார் இருக்கிறதெண்டால் அதோட சேர்த்து சாப்பிட உப்பில்லாத கிறக்கர் விஸ்கோத்தும் வெங்காயம் எலுமிச்சைக்காயும் இந்த பங்கருக்குள்ள எங்கையாவது கிடைக்கும்”

எண்டு சொல்லிக்கொண்டே தேடப்போனாள். தனக்கு ஒரு சராசரி சிறிலங்கன் பெட்டையை விட சிறப்பான பிகர்கள் இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்த அப்பொலேனா தன் உடம்பை ஆட்டி நடனமாடியபடியே அந்த ஜிப்ஸி பாடலை தொடர்ந்தபடி போனாள். நாலாவது தளத்தில் அவள் உருவம் இறங்கி மறையும்வரை அவளையே பார்த்திருந்த மாலக எங்கள் பக்கம் திரும்பி

“ கண்டோண பொண்டோண ஒக்காண்டோண மச்சாங்”

என்கிறான். நானும் நாமலும் கூட பரவசமடைந்திருந்தோம்.

நாமல் மேசையில் ஒரு மரப்பெட்டி ஹியூமிடோரிலிருந்த கியூபன் சிகரெட்டுக்கள் மூன்றை எடுத்து எனக்கும் மாலகவுக்கும் ஒவ்வொன்று கொடுத்தான். மாலக தனது லைற்ரறால் மூன்றையும் பற்றவைத்தான். மூவரும் புகையிழுத்து கனவுற்றோம். கொஞ்சநேரம் நிலவறையில் மௌனம் நிலவிற்று. புகை உலவிற்று.

ஒரு இருமல். பிறகு ஒரு செருமல். இவ்வாறாக மௌனத்தை கலைத்த நாமல் என்னை நட்போடு பார்த்தான். “ மச்சாங் நீ மிச்சங் நாள் எனக்கு கரைச்சல் தாறது அத மம ஒக்கம பிக்ஸிங் நான் உன்ரை விசயமா கோட்டபாய சித்தப்பாவோட கதைச்சு அவரை சம்மதிக்கவச்சிட்டன். இதே பங்கருக்குள்ளதான் கடைசி தளங்களில பிரபாகரன் மாத்தையாவின்ரை மற்றும் புலிகளின் அனைத்து அரிய ஆவணங்களும் மிலிட்டறி இன்ரலிஞன் யுனிட்டால் முறையாக சேகரிக்கப்பட்டு ஒரு ஆவண காப்பகமாக பேணப்படுகிறது.

பிரபாகரன் மாத்தையா இந்தியனாமியோட அடிபர்ற காலத்தில் லிபியத் தலைவர் கேணல் கடாபிக்கு எழுதிய கடிதத்திலிருந்து கடைசி நாட்களில அல்கைடாவின் இரண்டாவது தலைவர் ஐமன் அல் ஸவாகிரி, பிரபாகரன் மாத்தையாவுக்கு எழுதிய பதில் கடிதம் மிச்சம் கொட்டியின்ரை வெளிநாட்டு லொக்கா காஸ்ரோவின் லவ்ஸ் நாட்குறிப்புக்கள் இப்படி மாற படு ஒக்கோம பள்ளய தியனவா. உனக்கு முழுமையா மூண்டு மாதம் திறந்து விர்றம். ஒரே ஒரு கொண்டிசன்தான் சித்தப்பா போட்டவர். இங்கை நீ அலசி ஆராய்ஞ்சு எழுதிற பிரபாகரன் மாத்தையான்ரை வாழ்க்கை வரலாற்றை தானும் பசில் சித்தப்பாவும் வாசிச்சு தேசிய பந்தோபஸ்துக்கு குந்தகமான விடயங்களை பிளக் அவுட் செய்வினம். ஹறித”

“மொக்கத்த மச்சாங்? அவையள் நான் இதுக்குள்ள கஸ்ரப்பட்டு எழுதிற அரிய சென்சிட்டிவ்வான விசயங்களையெல்லாம் தணிக்கை செய்வினமெண்டால் நான் எழுதப்போகிற பிரபாகர இதிஹாசயத்தில புதுசா ஒண்டுமிருக்காது. பொய் வேலை தானே மச்சாங்”

“அப்ப என்ன செய்யப்போறாய்? என்ர மூண்டு சித்தப்பன்மாரும் ஒம்பது ஒம்பதாய் இருவத்தேழு வருஷம் ஆண்டாப்பிறகுதான் நான் அரச கட்டில் ஏறமுடியும். அதுவரையும் காத்திருந்து புத்தகம் எழுதப்போறியோ? அப்ப எல்லாரும் பிரபாகரன் மாத்தையாவை மறந்திருப்பாங்கள்.

நீ என்ன செய்யிறாயெண்டால் ……..என்ர சித்தப்பன்மார் என்னைமாதிரி ஸ்மாட் இல்லை. அவங்களுக்கு விளங்க கயிட்டமான மறைமுகமான மொழியில சுத்திவளைச்சு சொல்ல வந்ததுகளை சொல்லுறாய். சரியோ”

இந்த நேரம் மாலக குழம்பினான். சொன்னது சின்ன லொக்கா நாமல். மாலக நாமலுக்குத்தான் அடிக்கோணும். ஆனால் அவன்

“என்ன? கோட்டபாய மாத்தையா ஸ்மாட் இல்லையோ”

என்று கேட்டுக்கொண்டு எனக்கு காதாவடியைப்பொத்தி அடிக்கத்தொடங்கினான். அதிலிருந்து தப்ப நான் ஒவ்வொரு தளமாய் படியேறித்தப்பி நிலத்துக்கு வருகிறன். நிலத்தில் ஒரே சனம். 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தை
“றி எனக்ட்” பண்ணி படமாய் எடுக்கினமாம். இந்தியத் தூதுவர் டிக்சித் தான் டைறக்ரறாம். அவர் “கட்” “கட்” என்று கன்னா பின்னாவாக கத்திக்கொண்டிருக்கிறார். இங்கால நடிகர்களான உமா மகேஸ்வரன், பிரபாகரன், பத்மநாபா, பாலகுமார், சிறி சபாரத்தினம் ஆக்கள் குந்தியிருந்து கள்ளடிச்சுக்கொண்டிருக்கினம். சிங்களவனட்டயிருந்து தப்பிவந்த நான் இங்க இவயளட்டயோ மாட்டுப்படவேண்டுமெண்ட கலவரத்தில நான் யாரையும் காணாதமாதிரி ஒரு கரையால மாற பிரபாகரன் என்னை கண்டிட்டார்.

“ தம்பி துலைக்கோ போறாய். இங்கவந்து ஒருவாய் கூவில் கள்ளு அடிச்சுப்போட்டுப்போ. சோக்கா இருக்கப்பு “

என்டு வசியம் பண்ணி என்னை கூப்பிட்டார்.

நான்

“ அண்ணை எனக்கு இன்னும் ஒழுங்கா பிடிச்சு மூத்திரம் பெய்யவே தெரியாது. என்னை கள்ளுக்குடிக்க கூப்பிடுறியளோ “

என்கிறேன். அவர் தொடர்ந்து

“அப்ப இந்த ஆட்டு ரத்த வறுவலை கொறிச்சுப்போட்டுப் போ மோன”

என்டு பொறி வச்சார். சொன்னதோட நிக்காம அவர் எழும்பி என்னை நோக்கி ரண்டு எட்டு வச்சார். நான் குதிக்கால் குண்டியில பட ஓட்டம் பிடிச்சன். மூச்சு வாங்கிச்சுது. அப்பத்தான் முழிச்சுக்கொண்டேன். கனவு.

(முற்றும்)

உங்கள் கருத்து
 1. Rohan on December 30, 2013 1:12 pm

  இந்த அமரகாவியத்தை உலகின் முன்னணி விருதுகளுக்கெல்லாம் அனுப்பவேணும். புலிச்சொப்பனத்தை பகிரங்கமாய் ஒப்புக்கொள்ளும் தைரியம் எழுத்தாளருக்கு இருப்பதைப் பாராட்டவும் வேணும். சேரன் தொகுத்தார் மரணத்துள் வாழ்வோம்! சக்கடத்தார் படைத்தார் கனவில் வாழ்வோம்.


 2. SV on December 31, 2013 4:15 am

  Utter Nonsense.


 3. Rohan on December 31, 2013 11:08 am

  “அவையள் நான் இதுக்குள்ள கஸ்ரப்பட்டு எழுதிற அரிய சென்சிட்டிவ்வான விசயங்களையெல்லாம் தணிக்கை செய்வினமெண்டால் நான் எழுதப்போகிற பிரபாகர இதிஹாசயத்தில புதுசா ஒண்டுமிருக்காது. பொய் வேலை தானே மச்சாங்”

  கனவில் மட்டும் தான் உண்மை கலந்து எழுதும் பிரயத்தனம் வருமாக்கும்!

  “அண்ணை எனக்கு இன்னும் ஒழுங்கா பிடிச்சு மூத்திரம் பெய்யவே தெரியாது.”


 4. varnan on December 31, 2013 11:39 am

  //கண்டோண பொண்டோண ஒக்காண்டோண மச்சாங்”//
  இந்தப் பச்சைத் தூசணத்தை தேசம்நெற் தமிழில் மொழிபெயாக்குமா?
  ஒரு வடிகட்டிய மோசமான பதிவு.


 5. Rohan on December 31, 2013 1:45 pm

  //கண்டோண பொண்டோண ஒக்காண்டோண மச்சாங்”//
  /இந்தப் பச்சைத் தூசணத்தை தேசம்நெற் தமிழில் மொழிபெயாக்குமா? ஒரு வடிகட்டிய மோசமான பதிவு./

  ச்
  ஐயையோ…நம்ம ஆஸ்தான எழுத்தாளரின் முன்னைய அமர காவியத்தை இன்னமும் படிக்கவில்லைப் போலிருக்கிறது!

  “எடேய் யார் உனக்குச் சொன்னது அவன் வேற சாதிக்காரரோடை படுக்கேல்லையெண்டு? யுனிவேசிற்றியில படிக்கிற ஒரு வெள்ளாம் பெட்டையை இவன் வச்சிருக்கிறது மட்டுமில்லாமல் அவளின்ரை தாய்க்கும் இவன்தான் ஓ**றானாம். இங்கால நாவலர் ரோட்டில ஒரு ஐயரம்மாக்கும் ஓ**றானாம். உங்காலை இளவாலைப் பக்கம் ஒரு சிஸ்டர் மடத்துக்கு அடிக்கடி போய்வாறானாம். ஒவ்வொரு ஊரிலையும் ஒவ்வொரு சாதியிலையும் ஓ**றான்.”

  முழுமையான பச்சைவார்த்தைகளுக்கு, சொடுக்குங்கள்……
  http://thesamnet.co.uk/?p=44888


 6. Rohan on January 1, 2014 12:53 am

  //கண்டோண பொண்டோண ஒக்காண்டோண மச்சாங்”//
  /இந்தப் பச்சைத் தூசணத்தை தேசம்நெற் தமிழில் மொழிபெயாக்குமா?/

  ‘ஒ’இல் தொடங்கும் அச்சொல்லின் முதல் எழுத்து ‘உ’ என்று வந்தால் தான் அது சிங்களச் சொல்.

  “அண்ணை எனக்கு இன்னும் ஒழுங்கா பிடிச்சு மூத்திரம் பெய்யவே தெரியாது. என்னை கள்ளுக்குடிக்க கூப்பிடுறியளோ” என்று சொன்ன கதையில் வரும் ‘நான்’ பாத்திரம், அப்பொலேனா ஒரு வோட்கா போத்திலைக்கொணர்ந்து மேசையில் வைப்பதற்கிடையில் நாமல் ராஜபக்க்ஷவுடனும் மாலக சில்வாவுடனும் இணைந்து விஸ்கி போத்திலைக் காலி பண்ணியிருந்ததைக் கவனிக்க வேண்டும். வெறியில் மாலக சொன்னது ‘நான்’ பாத்திரத்துக்கு வடிவாகக் கேட்கவில்லை போலிருக்கிறது!

  “சிங்களவனட்டயிருந்து தப்பிவந்த நான் இங்க இவயளட்டயோ மாட்டுப்படவேண்டுமெண்ட கலவரத்தில நான் யாரையும் காணாதமாதிரி ……”

  என்னதான் ‘மச்சாங்’ (‘மச்சான்’ இல்லை!) போட்டாலும் அடி போட்டவுடன் மாலக ‘சிங்களவன்’ ஆகிவிட்டதையும் கவனிக்க!

  ஓ சொறி… சொறி… கனவில நடக்கிற விசயங்களுக்கு லொஜிக் எல்லாம் பாக்கிறது பிழை தான்.


 7. Rohan on January 1, 2014 1:27 am

  //கண்டோண பொண்டோண ஒக்காண்டோண மச்சாங்”//
  /இந்தப் பச்சைத் தூசணத்தை தேசம்நெற் தமிழில் மொழிபெயாக்குமா?/

  ‘ஒ’இல் தொடங்கும் அச்சொல்லின் முதல் எழுத்து ‘உ’ என்று வந்தால் தான் ‘கா’ இடத்தில் ‘க’ என்றும் வந்தால் தான் அது சிங்களச் சொல்.

  “அண்ணை எனக்கு இன்னும் ஒழுங்கா பிடிச்சு மூத்திரம் பெய்யவே தெரியாது. என்னை கள்ளுக்குடிக்க கூப்பிடுறியளோ” என்று சொன்ன கதையில் வரும் ‘நான்’ பாத்திரம், அப்பொலேனா ஒரு வோட்கா போத்திலைக்கொணர்ந்து மேசையில் வைப்பதற்கிடையில் நாமல் ராஜபக்க்ஷவுடனும் மாலக சில்வாவுடனும் இணைந்து விஸ்கி போத்திலைக் காலி பண்ணியிருந்ததைக் கவனிக்க வேண்டும். வெறியில் மாலக சொன்னது ‘நான்’ பாத்திரத்துக்கு வடிவாகக் கேட்கவில்லை போலிருக்கிறது!

  “சிங்களவனட்டயிருந்து தப்பிவந்த நான் இங்க இவயளட்டயோ மாட்டுப்படவேண்டுமெண்ட கலவரத்தில நான் யாரையும் காணாதமாதிரி ……”

  என்னதான் ‘மச்சாங்’ (‘மச்சான்’ இல்லை!) போட்டாலும் அடி போட்டவுடன் மாலக ‘சிங்களவன்’ ஆகிவிட்டதையும் கவனிக்க!

  ஓ சொறி… சொறி… கனவில நடக்கிற விசயங்களுக்கு லொஜிக் எல்லாம் பாக்கிறது பிழை தான்.


 8. Ramesh on January 1, 2014 9:27 am

  என்ன ஒரு அற்புதமான சமகாலத்தை சித்தரிக்கும் கதை. முன் பின்னூட்டமிட்டவர்கள் எல்லாம் கலையை புரியாதவர்கள்.
  ஓவியங்களில் நிர்வாணமில்லையா? திரைப்படங்களிலில்லையா? நீலப்படத்துக்கும் எரோட்டிக்காவுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா தேசம்நெட்டில் பின்னூட்டமிடுபவர்கள்? செவ்விந்தியனில் காழ்ப்புணர்வுள்ளவர்களா? ஒரு சிலரே பலபெயரில்வந்து செய்கிறார்கள்.


 9. BC on January 1, 2014 11:46 am

  தென் இந்திய திரைபடங்களில் இல்லாத ஆபாசமா?


 10. SANDANA on January 1, 2014 2:04 pm

  What a political parody.


 11. Rohan on January 1, 2014 2:07 pm

  //என்ன ஒரு அற்புதமான சமகாலத்தை சித்தரிக்கும் கதை. முன் பின்னூட்டமிட்டவர்கள் எல்லாம் கலையை புரியாதவர்கள்.//

  வாவ்! லொஜிக்கும் இல்லாமல் ஒரு படைப்புக்குரிய கனதியும் இல்லாமல் வார்த்திகளால் எடுக்கப்பட்ட (புளிச்சல் மது நாறும்) வாந்தி இது! இது தான் கலை எனப்படுவதா?

  //ஓவியங்களில் நிர்வாணமில்லையா? திரைப்படங்களிலில்லையா? //

  அதற்காக, தெருவில் கொஞ்சம் ஆபாசமாக நின்று வாடிக்கையாளர் தேடுகிற பெண் கோவில்களிலும் தான் இருக்கின்றது நிர்வாணம் என்று வாதிட முடியுமா?

  //நீலப்படத்துக்கும் எரோட்டிக்காவுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா தேசம்நெட்டில் பின்னூட்டமிடுபவர்கள்? //

  ஓ… பச்சையான கெட்ட வார்த்தை பேசுவது தான் எரோட்டிக்கா என்பது முட்டாள் தெசம்நெற் வாசகர்களுக்குத் தெரியாது போலிருக்கிறது. ஆனாலும், காம உணர்வைக் கிளர்ந்தெள வைக்கும் படைப்புகளே எரோட்டிக்கா என்று இச்சொல்லின் வரைவிலக்கணம் சொல்கிறது. மேலுள்ள கலைப்படைப்பு அப்படி என்ன உணர்வைக் கிளறுகிறது?

  //செவ்விந்தியனில் காழ்ப்புணர்வுள்ளவர்களா? ஒரு சிலரே பலபெயரில்வந்து செய்கிறார்கள்.//

  கருத்தாளர்கள் எழுதியவரைக் குத்தப் போகவில்லை, எழுத்தையும் கருத்தையும் தான் கேள்விக்கு உள்ளாக்கியிருந்தார்கள். ஆனால் கருத்தாளர்களுக்குப் போதிக்க வந்த ஒருவர் கருத்தாளர்களை அவதூறு செய்கிறார். அது சரி, செவ்விந்தியனில் ஏன் மற்றவர்கள் காழ்ப்புணர்வு கொள்ளப்போகிறார்கள்? இரண்டு விடயம் சாதித்தவர் என்பதால் பொறாமை எழுகிறது என்றால், செவ்விந்தியன் அப்படிச் சாதித்தது தான் என்ன? கருத்துச் சொன்னவர்களே இரண்டு மூன்று பேர் தான், ஆனால், ‘ஒரு சிலரே பலபெயரில்வந்து …’?


 12. சாந்தன் on January 1, 2014 7:44 pm

  //.தென் இந்திய திரைபடங்களில் இல்லாத ஆபாசமா?..///

  அதானே? புலி என்ன திறமோ? தென் இந்திய திரைப்படம் திறமோ? இந்திய அரசியல்வாதி என்ன திறமோ? டேவிட் கமரோன் என்ன திறமோ? ஒபாமா என்ன திறமோ? கூட்டமைப்பு என்ன் அதிறமோ……..இதைத்தவிர இவர்களால் என்ன சொல்ல முடியும்!!!


 13. ksaddanathan on January 2, 2014 6:17 am

  நன்றாக வந்துள்ளது.


 14. Rohan on January 2, 2014 6:19 am

  //தென் இந்திய திரைபடங்களில் இல்லாத ஆபாசமா?//

  கவர்ச்சி, ஆபாசம், அசிங்கம்….


 15. Rohan on January 2, 2014 7:30 am

  // ஒரு சிலரே பலபெயரில்வந்து செய்கிறார்கள்.//

  வழக்கமா வராதவங்க எல்லாம் வந்திருக்காக….

  Ramesh வந்திருக்காக….வந்து “என்ன ஒரு அற்புதமான சமகாலத்தை சித்தரிக்கும் கதை. முன் பின்னூட்டமிட்டவர்கள் எல்லாம் கலையை புரியாதவர்கள்”ண்ணு சொல்லுறாக….

  ksaddanathan வந்திருக்காக….வந்து “நன்றாக வந்துள்ளது”ண்ணு சொல்லுறாக….

  எத்தன பேரு இப்பிடியா புறப்பட்டிருக்காகளோ!


 16. thurai on January 2, 2014 3:17 pm

  //இதைத்தவிர இவர்களால் என்ன சொல்ல முடியும்!!//சாந்தன்

  அதுசரி விசாரணையின்றி மரணதண்டனை கொடுக்க புலிகளை
  விட யாராவது இவ்வுலகில் உண்டா?.-துரை


 17. loku banda on January 2, 2014 3:55 pm

  மேர்வின் சில்வாவின் வீட்டில் மாலக்கவும் நாமலும் சந்திக்கின்றார்கள். மாலக்க சற்று கோபத்துடன் காணப்படுகின்றான்.
  மாலக்க – “மச்சாங் அபித்தெக்க காலா பீலா ஒக்கம கரலா தேசம் நெற்றுவே லியலா தியனவா ஏ பல்லா”
  நாமல் – “ஏஹேமத மச்சாங்?”
  மாலக்க – “ஒவ் மச்சாங் அற அப்பொலேனா விஸ்தர ஒக்கம லியலா தியனவா”
  இவ்வுரையடலைக் கேட்டுக்கொண்டிருந்த மேர்வின் விறுவிறுவென்று அந்தப் பக்கமாக வருகிறார்.
  மேரவின் -“கவுத அற உத்தா..? மட கியன்ன மங் பலாகன்னங்”
  ஆளைப் பிடித்து மரத்தில் கட்டினாலும் கட்டிவிடுவார் என்பதால் நாமல் ஒருவாறு அவரை சமாளித்து விட்டு அவ்விடத்தை விட்டு நகர்கிறார்.
  -லொக்கு பண்டா


 18. சாந்தன் on January 3, 2014 3:26 am

  //..அதுசரி விசாரணையின்றி மரணதண்டனை கொடுக்க புலிகளை
  விட யாராவது இவ்வுலகில் உண்டா?.-துரை…//

  மீண்டும் அதே பதில்தான்!!!!

  அதானே? புலி என்ன திறமோ? தென் இந்திய திரைப்படம் திறமோ? இந்திய அரசியல்வாதி என்ன திறமோ? டேவிட் கமரோன் என்ன திறமோ? ஒபாமா என்ன திறமோ? கூட்டமைப்பு என்ன் அதிறமோ……..இதைத்தவிர இவர்களால் என்ன சொல்ல முடியும்!!!


 19. thurai on January 3, 2014 10:36 am

  //இதைத்தவிர இவர்களால் என்ன சொல்ல முடியும்!!!//சாந்தன்

  பிறருக்கு நன்மை செய்யாவிடினும் தீமையாவது செய்யாதிரு.
  பொய்சொல்லுதல்,ஏமாற்ருதல்,களவெடுத்தல்,அடிகொடுத்தல்
  கொலைசெய்தல் இவைகளைப்போன்ற செயல்கள் செய்யாதிருத்தல்.

  இவ்வாறான செயல்களை ஆதரித்தவர்கழும் ஆமா போட்டவர்க்ழும் குற்ரவாளிகள்தான். இவர்கள் மற்ரவர்களைப்பற்ரி பேச என்ன தகைமையுண்டு.-துரை


 20. Rohan on January 3, 2014 12:45 pm

  //மேரவின் -“கவுத அற உத்தா..?//

  எரோட்டிக்காவா இதுவும்?


 21. சாந்தன் on January 3, 2014 7:35 pm

  //…பிறருக்கு நன்மை செய்யாவிடினும் தீமையாவது செய்யாதிரு.
  பொய்சொல்லுதல்,ஏமாற்ருதல்,களவெடுத்தல்,அடிகொடுத்தல்
  கொலைசெய்தல் இவைகளைப்போன்ற செயல்கள் செய்யாதிருத்தல்…..//

  இதைச் சொன்னவர் முன்னர் சொன்னவையாவன….

  சாதி ஒழிப்புக்கு தமிழரின் காணியைப்பறித்து சிங்களவருக்கு கொடு.
  தமிழரின் பிரச்சினை தீர வேண்டும் என்றால் தமிழரை நாட்டை விட்டுத்துரத்த வேண்டும்.
  தேவாலயங்களில் வழிபடுவோரை மோட்சத்துக்கு அனுப்பவேண்டும்!!!!

  என்னது? பிறருக்கு நன்மை செய்யாவிடினும் தீமையாவது செய்யாதிரு.
  பொய்சொல்லுதல்,ஏமாற்ருதல்,களவெடுத்தல்,அடிகொடுத்தல்
  கொலைசெய்தல் இவைகளைப்போன்ற செயல்கள் செய்யாதிருத்தல்……
  ஆஹா அருமையோ அருமை துரை!


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு