ரெலோவின் டோட்மண்ட் பிரகடனம்.


டோட்மண்ட் பிரகடனம் – Dortmund Declaration

Dortmund Declaration photo

By Tamil Eelam Liberation Organization (TELO)
12-13 July, 2014

1983ல் நடைபெற்ற தமிழ் மக்கள் மீதான இனக்கலவரத்தை நினைவு கூர்ந்து, 31வது ஆண்டு கறுப்பு யூலை தினம் 2014 யூலை மாதம், 12ம் 13ம் திகதிகளில் ஜேர்மன் டோட்மண் நகரில்அனுஸ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ரெலோவின் மூத்த தலைவர்கள் தங்கத்துரை குட்டிமணி உட்பட, இதர தமிழ் போராட்ட இளைஞர்களையும் நிளைவு கூர்ந்து நடாத்தப்பட்ட இம் மாநாட்டில், இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பரினர்களும், ஐரோப்பிய ரெலோ உறுப்பினர்களும் பங்கு கொண்டு வெளியிட்ட பிரகடனம்.

The 31st Black July Commemoration Ceremony was held on 12th and 13th July, 2014 in Dortmund, Germany, participated by the Members of Parliament, and Members of North and East Provincial Councils, and the European Members of TELO, to honour the thousands of Tamils massacred, along with TELO’s founding leaders Honourable Thangathurai and Kuddimani and the prominent Tamil youth in July 1983, and adopted the following declaration:

பி ர க ட ன ம் – D E C L A R A T I O N

1. இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்பொழுது அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலப்பறிப்புக்கள், படையினருக்கான குடியிருப்புக்கள், சிங்கள் குடியேற்றங்கங்கள், இராணுவமயமாக்கல் என்பவற்றிக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதே வேளை வடக்கு கிழக்கின் பொருளாதார அபிவிருத்தி, மீள்கட்டுமானம், மக்களின் வாழ்வாதாரம், ஆகியவற்றை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்படல் வேண்டும்.

To take lawful measures to counter the land grab, expanding military encampments, Sinhala colonization and militarization by the Sri Lankan state in Northern and Eastern provinces; while appraising and undertaking measures to progressively enhance the security, economic advancement, development, reconstruction and livelihood of Tamil speaking people of Sri Lanka.

2. இலங்கைத்தீவினுள் இந்திய அமெரிக்கா உட்பட சர்வதேச மத்தியஸ்த்துவத்துடன், வட கிழக்கு மாகாணங்கள் இணைந்த, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்ட்டி ஆட்சி அதிகாரம் கொண்ட, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படல் வேண்டும்.

Within the island nation of Sri Lanka, through the mediation of the international community, involving India and the USA; a constitutional and administrative reform be brought about that recognises and provides for: (i) the right to self determination of Tamil speaking people of North and East; and (ii) a merged North and East provincial assembly established, under a federal constitution.

3. இலங்கை இந்திய ஒப்பந்தத்திக்கு அமைய 13வது திருத்த சட்ட மூலமாக கொண்டுவரப்பட்ட மாகாணசபைகள் சட்டம், தமிழ்பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு ஆரம்ப புள்ளியாக மட்டுமே கருத்தப்படல் வேண்டுமே தவிர இது இறுதி தீர்வு அல்ல என்பதை கருத்தில் கொண்டே, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முழுமையாக தீர்ப்பதற்கான பேச்சுவர்த்தைகள் முன் எடுக்கப்பட வேண்டும்.

Acknowledging that the reforming provisions brought under the Indo-Sri Lanka accord, 13th amendment to the provincial assembly legislation, provide only the nominal points for a final settlement and requires further elaboration to resolve the outstanding self governance issues.

4. ஜநா மனித உரிமை சபையின் தீர்மானத்திற்க்கு அமைய இலங்கைத்தீவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் பற்றிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இலங்கையில் இனப்படுகொலைகள் நடைபெற்றதா என்பதை ஜ.நா விசாரணைக்குழ கண்டறிய வேண்டும்.

As per the resolutions of the United Nations Human Rights Council;
a thorough investigation must be held by the Commission appointed, to ascertain whether genocide did take place in Sri Lanka.

தமிழீழ விடுதலை இயக்கம். – ஜரோப்பா
Tamil Eeelam Liberation Organization – Europe

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு