தமிழரசுக் கட்சி புனரமைக்கப்பட்டமை ஒரு மோசடி –வீ.ஆனந்தசங்கரி


49860998உரோமாபுரி பற்றி எரியும் போது நீரோ மன்னன் வீணைவாசித்துக்கொண்டிருந்தான் என்ற பழமொழிக்கு ஒப்ப தமிழ் தேசிய கூட்டமைப்பும் இலங்கை தமிழரசுகட்சியும் செயற்பட முனைகின்றன.

பாராளுமன்ற அரசியலிருந்து ஒதுங்கப் போவதாக என்னால் விடப்பட்ட அறிக்கை வருத்தத்திற்குரிய வகையில் சில பகுதியினரால் தப்பாக விளக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் மட்டும் கலந்துகொள்ளமாட்டேன் என்று தெளிவாக கூறியிருந்தேன். அந்த முடிவிற்குரிய விளக்கம் தரவேண்டிய கடமை எனக்கு உண்டு.

சுருங்கக்கூறின் 2004ம்ஆண்டு தொட்டு நடைபெற்றுவரும் பாராளுமன்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் எனக்கு ஏற்பட்ட கசப்புணர்வே இதற்கு முக்கியமான காரணமாகும். சுpல தலைவர்களின் கழுத்தறுப்பு நடவடிக்கைகளும் அரசியல் கற்றுகுட்டிகள் சிலரின் நடவடிக்கைகளும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அவர்களது அறிக்கைகளும் சுயலாபம் உடையவைகளாக இருப்பதால் தீர்வு இலக்கை இலகுவாக அடைய முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் வேறு பதவிகளையும் அடைந்த பெரும் மகிழ்ச்சியில் இருந்து விடுபடமுடியாத அவர்கள் தமது எதிர்கால பதவிகளை தக்கவைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளனர். இன ஒற்றுமை ஏற்படுத்துவதற்கு முரணானசிலரின் நடவடிக்கைகள் அதிர்ச்சியோடு கூடிய ஏமாற்றத்தைத் தருகிறது.

குறிப்பாக வட,கிழக்கில் உள்ள அரசியல்வாதிகளும் அரசியலும் மிக கீழ் மட்டத்தை அடைந்துள்ளமையால் எந்த விடயத்திலும் எந்த முறையிலும் ஜனநாயக கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கென புலம்பெயர்ந்தவர்களால் சேகரிக்கப்படும் பெருந்தொகைப் பணம் பாதிக்கப்பட்டவர்களிற்கு பல்வேறுபட்ட தேவைகள் இருக்கின்ற போதும் அவர்களின் வாக்குகளை விலைகொடுத்து வாங்குவதற்காக பெருந்தொகையான பணம் தேர்தல் மாவட்டங்களிற்குள் இறைக்கப்படுகின்றன.

ஆனால் எமது அனுபவ ரீதியாக கடந்த காலத்தில் வாக்காளர்களேதும் செலவில் தேர்தல் பிரசாரம் செய்து முடிந்ததன் பின் எஞ்சிய பணத்தை எம்மிடம் கையளிப்பது வழக்கமாக இருந்தது. சண்டித்தனம் மிரட்டல் பொய்ப்பிரச்சாரம் மிகப் பண்பற்ற முறையில் மனிதனின் பொறுமையின் எல்லைக்கு அப்பால் எங்கும் காணப்படுகின்றது. தப்பான முறையில் உபயோகிக்கப்படும் கணணிதொழில்நுட்பம் தமிழ்சமூகத்திற்கு பெரும் சாபக்கேடாக அமைந்திருக்கின்றது. அரசியல் தலைமைகள் அதனை நிறுத்த வேண்டும் என்பதை உணரவில்லை.

தமிழர்விடுதலைகூட்டணியை அதன் முன்னைய உச்சநிலைக்கு கொண்டுவர என்னிடமிருக்கும் முழு நேரத்தையும் உழைப்பையும் உபயோகிப்பேன். தமிழர்விடுதலைக்கூட்டணி இராணி அப்புக்காத்து என கௌரவிக்கப்பட்ட அமரர் சா. ஜே வே. செல்வநாயகம் அவர்களால் தமிழர்களுக்காக விட்டுச் செல்லப்பட்ட பெரும் சொத்து. தமிழரசு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய பதங்களை இப்போது எவர் பாவிக்கின்றார்களோ அவர்கள் அவற்றின் உண்மைஅடையாளங்களை வெளிப்படுத்த வேண்டும். எனது அபிப்பிராயப்படி- அபிப்பிராயம் மட்டுமல்ல உண்மையும் கூட.

இவ்விரு அமைப்புக்களும் எதுவித அதிகாரங்களுமின்றி மோசடி மூலம்ஆரம்பிக்கப்பட்டவையாக இருப்பதால் இவ்விரு அமைப்புக்களும் இயங்க அருகதை அற்றவையாகும். மதிப்பிற்குரிய கௌரவ ஜி.ஜிபொன்னம்பலம், கௌரவ சா.ஜே.வே. செல்வநாயகம் ஆகிய இருவராலும் 1945ம்ஆண்டு உருவாக்கப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து 1949ம்ஆண்டு பிரிந்து சென்று கௌரவ சா.ஜே.வே.செல்வநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்டதே தமிழரசுகட்சியாகும். சுமஷ;டிக் கட்சி என்றும் அழைக்கப்படும்.

இக்கட்சி மகாத்மா காந்தி அடிகளின் அகிம்சைக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு தன் வாழ்நாள் பூராகவும் அக்கொள்கையின் அடிப்படையில் வாழ்ந்த அவரால்வழி நடத்தப்பட்ட ஒரு கட்சியாகும்.
தமிழர் ஐக்கிய முன்னணியாக உருவாகி தமிழர் விடுதலைகூட்டணியாக பெயர்மாற்றம் பெற்று பெரும் மதிப்புக்குரிய அமரர் சா.ஜே.வே. செல்வநாயகத்தின் முயற்சியால் 1972ம்ஆண்டு உருவாக்கப்பட்டு பல அரசியல் தலைவர்கள் கல்விமான்கள் பிரபல வழக்கறிஞர்கள் அரச ஊழியர்கள் மதிப்புக்குரிய பெரியார்கள் இளைஞர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்ந்த பல துறைசார்ந்த மக்கள் இம்முயற்சிக்கு முழு ஆதரவையும் கொடுத்திருந்தனர்.

பல்வேறு நோக்கங்களில் ஒன்றாகிய தமிழ்பேசும் பல்வேறு சிறுபான்மை மக்களையும் ஒரு கொடிக்கு கீழ் கொண்டு வருதல் பிரதான நோக்கமாக இருந்தது. இது சோல் பரி பிரபுவின் அரசியல் சாசணத்துடன் உருவான சுதந்திர இலங்கையில்1972ம்ஆண்டு குடியரசு அரசியல் சாசணம்அமுல் படுத்தப்பட்ட வேளை பழைய சாசணத்திலிருந்த சிறுபாண்மை இனத்திற்கு சாதகமான பாதுகாப்புக்கள் நியாயமற்ற முறையில் நீக்கப்பட்டிருந்தன. அன்றைய அத்தியாவசிய தேவையை உணர்ந்து தனது ஒருகாலத்து சகபாடியாக இருந்த ஜி.ஜிபொன்னம்பலம் அவர்களிடம் இருந்த 23 ஆண்டு காலஅரசியல் பகைமையை புறந்தள்ளிவிட்டுஅவரின் வீடுசென்று நமக்கு புதிய மாற்றத்தினால் ஏற்பட்டிருக்கின்ற சவாலை எதிர்கொள்ளஉதவுமாறு அழைப்பு விடுத்தார். பாராட்டத்தக்க வகையில் எதுவித தயக்கமுமின்றி மிக்க மரியாதையுடன் அகிலஇலங்கை தமிழ்க் காங்கிரஸ்கட்சியின் தலைவர் இலங்கை தமிழரசுகட்சியின் தலைவரின் முயற்சிக்கு முழு ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.

தமிழ் மக்களை பொறுத்தவரையில் இத்தலைவர்களின் மீள் இணைவு இருபெரும் தமிழ்அரசியலவாதிகளின்; இணைப்பாக கருதப்பட்டது.

தமது விரோதங்களை ஒருபுறம் தள்ளிவிட்டு பொது நோக்கோடு மீண்டும் இணைந்த இவ்விரு தலைவர்களின் பெரும்தன்மையையிட்டு தமிழ் சமூகம் பெருமகிழ்ச்சி அடைந்தது. நாடு முழுவதும் இயங்கி வந்த தமிழரசுகட்சி தமிழ் காங்கிரஸ்கட்சி ஆகியவற்றின் கிளைகள் பல்வேறு பகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கிளைகளாக இணைக்கப்பட்டன. மேலும் தமிழ் காங்கிரஸ் கட்சியின் உபதலைவரும் முன்னைநாள் செனட்சபை உறுப்பினரும் கனக்கீஸ்வரன் அவர்களின் தந்தையாரும் பிரபலவழக்கறிஞருமாகிய கௌரவ எஸ்.ஆர். கனகநாயகம் தமிழ் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் வழக்கறிஞர் தா.சங்கரப்பிள்ளளை இணை பொருளாளர்கள் வழக்கறிஞர்ஆர்.செல்வராசா பின்னாள் பாராளுமன்ற உறுப்பினர்தா.திருநாவுகரசு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சிவசிதம்பரம் தா.சிவசிதம்பரம் ஆகியோரும் யாழ்ப்பாண மேயரும் பிரபல வழக்கறிஞருமான இராசாவிசுவநாதன் யாழ் மாவட்டசபை தலைவர் சு.நடராசா தமிழ்த் தலைவர்களின் ஒற்றுமைக்காக முன்னின்று உழைத்த அரச அதிகாரிஎன்.ஞானமூர்த்தி இதுபோன்ற இன்னும் பலர் இணைந்து தமிழர் விடுதலைக்கூட்டணியை உருவாக்கினர்.

தமிழரசு கட்சியின் செயலாளராக நீண்டகாலமாக இருந்து பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக செயலாற்றிய திரு.அ.அமிர்தலிங்கம் அன்னாரின் துணைவியார் மங்கயற்கரசி ஆகியோரின் பங்களிப்பும் செயலும் சொல்லிலடங்காது. ஆனால் மிக வேதனைக்குரியது என்னவெனில்அவர் தமிழரசு கட்சியின் ஆரம்பகாலஉறுப்பினராக இருந்தும் அவரைஅனேகர் மறந்துவிட்டனர். நானும் தமிழர்விடுதலைகூட்டணியின் ஆரம்பகால உறுப்பினர் ஆவேன். மேலும் தமிழர்விடுதலைக்கூட்டணி தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்காங்கிரஸ் தலைவர் ஜி.ஜிபொன்னம்பலம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு.எஸ்.தொண்டமான் அவர்களும் தமிழர்விடுதலைக்கூட்டணி மகாநாட்டில் திரு.செல்வநாயகம் அவர்களுடன் கட்சிதலைமையை பங்கிட தெரிவானார்கள். தமிழர் விடுதலை கூட்டணியை பலப்படுத்த எடுத்த நடவடிக்கைகளில் இது ஒன்றாகும்.

இத்தகைய ஒரு பலமானஅ டித்தளத்திலேயே தமிழர் விடுதலை கூட்டணி தமிழர்களிற்கு நிரந்தரமாக சேவையாற்ற உருவாக்கப்பட்டதேயன்றி கண்டவர்களும் கையாள்வதற்கு அல்ல. 1977ம்ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் தொகுதிகளில் 500வாக்குகளால் ஒருஸ்தானத்தை மட்டும் இழந்து, ஏனைய அத்தனைக்குமான தொகுதிகளையும் வென்று மக்களால் தமிழர் விடுதலை கூட்டணி ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதனை உலகறியச் செய்தது.

1972 புதிய அரசியல் சாசணம் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது தமிழர்விடுதலைக்கூட்டணி தனது பலத்தை வலுப்படுத்தும் நோக்குடன் கட்சிக்குள் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களிற்கு புதிய ஆணை பெறும் நோக்கோடு ஒரு தேர்தலை எதிர்நோக்க விரும்பியது. விரைவில் ஒருபொதுத்தேர்தல் நடைபெறும் சாத்தியக்கூறு இன்மையால் பாராளுமன்றத்தில் ஒரு ஸ்தானத்தை காலியாக்கி உபதேர்தலில்போட்டியிட்டுஅடையும் வெற்றியை மக்கள் கொடுத்த அடையாள ஆணையாககொள்வதாக தீர்மானிக்கப்பட்டது. கௌரவ சா.ஜே.வே.செல்வநாயகமே கட்சியில் தலைவராக அவ்வேளை இருந்தமையால் தானே தனது காங்கேசன் துறைத் தொகுதியின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து உபதேர்தலில் போட்டியிடுவதாக முடிவெடுத்து அரசின் பலத்த எதிர்ப்புடன் உபதேர்தலில் வெற்றிபெற்றார்.

அந்த நேரத்தில் தமிழர்விடுதலைக்கூட்டணி பதிவு செய்யப்பட்டிருக்காத காரணத்தால் தமிழரசு கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிட நேர்ந்தது. தமிழர்விடுதலைக்கூட்டணிஆரம்பிக்கப்பட்டதிலிருந்து திரு.சா.ஜே.வே. செல்வநாயகம்அமரத்துவம்அடைவதற்கிடையில்தமிழரசுகட்சியினுடையசின்னமான வீட்டுசின்னம் அந்த ஒரேயொரு தடவை மட்டுமே உபயோகிக்கப்பட்டது. அதே போன்று தமிழரசு கட்சியின் வெள்ளிவிழா கொண்டாட்டத்திற்காக தமிழரசுகட்சி என்ற பதமும் ஒரேயொரு தடவை மட்டுமே உபயோகிக்கப்பட்டது.

இந்த விழாவில் மதிப்புக்குரிய பெருமக்களிற்கு வழங்கப்படும் மூதறிஞர் என்ற கௌரவ பட்டத்தை திரு.செல்வநாயகம் அவர்களிற்கு கௌரவ முன்னாள் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்எஸ்தொண்டமான் வழங்க அன்னாரை அகிலஇலங்கைதமிழ்க்காங்கிரஸ் சார்பில் நான் பொன்னாடை போர்த்தி கௌரவித்தேன். இவ்விரு சந்தர்ப்பங்களும் தவிர தமிழர்விடுதலைக்கூட்டணி 1972ல்ஆரம்பித்த நாள் தொட்டு தந்தை செல்வாஅமரத்துவம்அடைந்தநாள் வரை (26.04.1977) தமிழரசுகட்சி என்ற பதமோஅதன் வீட்டுச் சின்னமோ எச்சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தப்படவில்லை.
ஒரு கிறிஸ்தவராக இருந்தும் அவரின் விருப்பத்திற்கமைய தகனகிரியைக்காக உதயசூரியன் கொடியால் போர்க்கப்பட்டு அன்னாரின் பூதவுடல் யாழ்.முற்றவெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும் நன்றியுள்ள மக்களால் அன்னாரின் ஞாபகார்த்தமாக உச்சத்தில் உதயசூரியன் பதிக்கப்பட்ட 80 அடித் தூண் அவர் தகனக்கிரியை செய்யப்பட்ட அதே இடத்தில் இராசகம்பீரமாக நிமிர்ந்து நிற்பது மட்டுமல்ல உலகம் அழியும் வரை தொடர்ந்து நிற்கும். இத்தூணிற்கு அருகாமையில் அவரின் அஸ்தியை சுமந்து ஒருகல்லறையும் அமைந்துள்ளது. இத்தகைய ஒரு பெரிய மனிதனின் வரலாற்றில் பெரும் பகுதி மறைக்கப்பட்டும் திரிபுபடுத்தப்பட்டும் இருப்பதால் அன்னாரால் உருவாக்கப்பட்ட தமிழர்விடுதலைக்கூட்டணிக்கும் தமிழரசுகட்சிக்கும் என்ன நடந்தது என்பதை உலகறிய செய்ய வேண்டிய புனிதமான கடமை எனக்கு உண்டு.

இத்தால் பொதுமக்களிற்கும் மற்றும் சம்மந்தப்பட்டவர்களிற்கும் அவர்உருவாக்கிய தமிழர்விடுதலைக்கூட்டணி தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்அவர் மரணித்து தமிழர்விடுதலைக்கூட்டணி தலைவராக தகனக் கிரியை செய்யப்பட்டுஅவர் நினைவாக ஒரு தூபியும் எழுப்பப்பட்டு 26 ஆண்டுகளின் பின் தனிப்பட்ட நபர் ஒருவர் தமிழரசு கட்சியை புனரமைப்பு செய்துள்ளார். எத்தகைய மோசடி மூலம் இது புனரமைக்கப்பட்டது என்பதை ஓர் செய்தி விளக்கியது. தமிழரசுகட்சியை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட தமிழர்விடுதலைக்கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கிளிநொச்சிக்கு 2003.10.14 அன்று விஜயம் செய்துள்ளார்.

அகிம்சைக்கு தன்னை முற்றாக அர்ப்பணித்து இறுதிவரை செயற்பட்ட ஒரு பெரும் தலைவருக்கு கொடுக்கப்படும் பெரும் கௌரவம் இதுவா என பலரும் எள்ளி நகையாடுகின்றனர். இது போன்று வேறு ஒரு மோசடிச் செயல் இக்கடிதத்தின் இரண்டாம் பகுதியில் வெளிவரும்.
வீ.ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி.

இது தொடர்பான வேறு பதிவுகள்

உங்கள் கருத்து
 1. maran on August 13, 2014 7:58 pm

  ஐயா ஆனந்தசங்கரி அவர்களே,
  தமிழர் விடுதலைக்கூட்டணி பழைய கட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்டதென்பதும் தெரியும்.இது உங்கள் தலைமையில் இன்று மோசமான நிலையில் உள்ளதென்பதும் தெரியும்.

  இந்த பழைய கட்சியை வைத்து்க்கொண்டு என்ன அரசியலை, வேலைத்திட்டங்களை நீங்கள் செய்கின்றீர்கள் என்றும் தெரியும்.

  உங்களுக்கு வயது போனது மட்டுமல்ல அறலைபேந்து விட்டதென்பதும் தெரியும்.

  கடிதம் எழுதுவதற்கென்று ஒரு கட்சி தேவையா? இன்று தமிழ் பிரதேசங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள, தமிழ் மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் பற்றி சிந்திக்கின்றீர்களா? அரசாங்திற்கு அவற்றை வெளிப்படுத்தி கடிதம் எழுதலாம்தானே.

  கட்சியை யாராவது ஆற்றலுள்ளவர்களிடம் நீங்கள் ஒப்படைப்பதே தமிழர் விடுதலைக்கூட்டணியை காப்பாற்றுவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய பணி.அதுவே நீங்கள் தந்தை செல்வாவிற்கும் ஜீ.ஜீ பொன்னம்பலம் அவர்களுக்கும் செய்யும் நன்றிக்கடனாக அமையும். அவர்களின் ஆத்மாவும் சாந்தியடையும்.

  இவ்வளவு பெரிய கடிதம் எழுதிவிட்டு அடுத்த பாகமும் வரும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
  வேண்டாம் சாமி தாங்க முடியாது.


 2. Rohan on August 13, 2014 10:22 pm

  “தமிழர்விடுதலைகூட்டணியை அதன் முன்னைய உச்சநிலைக்கு கொண்டுவர என்னிடமிருக்கும் முழு நேரத்தையும் உழைப்பையும் உபயோகிப்பேன்.”

  “தமிழர் விடுதலை கூட்டணி தமிழர்களிற்கு நிரந்தரமாக சேவையாற்ற உருவாக்கப்பட்டதேயன்றி கண்டவர்களும் கையாள்வதற்கு அல்ல.”

  ஆனால், சனநாயக முறைப்படி தமிழ்ர் விடுதலைக் கூட்டணி இயங்குவகைத் தடுத்து, செயலாளர் நாயகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் மட்டற்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆண்டுப் பொதுக்கூட்டம் கூட நடாத்த முடியாதபடி ஆயுள்காலச் செயலாளர் நாயகமாக இருப்பவர் மற்றவர்களில் குற்றம் காண எந்த அருகதையும் இல்லாதவர்!!

  சனநாயக முறைப்படி மக்களிடம் வாக்குப் பெறச் சென்ற போது, 2000ஆம் ஆண்டு எல்லோரும் சேர்ந்த தவிகூ சார்பில் 12888 (11%) வாக்குகளையும் 2001ஆம் ஆண்டு எல்லோரும் ததேகூ சார்பில் 36217 (19%) வாக்குகளையும் பெற்ற அவர் தனித்துப் போன போது யாழ் மாநகரசபையில் வெறும் 424 வாக்குகளையே பெற்றார். 2009இல் வெளிப்படையாகவே ததேகூ தோற்கடிக்கப்பட வேண்டும் என்று ஆனந்தசங்கரி பிரசாரம் செய்தார். 2010இல் தனது தவிகூ சார்பில் போட்டிக்குப் போய் கட்சி பெற்ற மொத்த வாக்குகளே வெறும் 2892 (1.95%) தான். 2013இல் மீண்டும் சரணடைந்த இடம் ததேகூ. மக்கள் மீண்டும் அவரை மூலையில் இருத்தினார்கள்.

  கடிதம் எழுத வலு இருக்கும் வரை அவர் எழுதுவார். என்ன செயவது?


 3. thurai on August 14, 2014 6:31 am

  தமிழ் என்னும் சொல்லை முன்வைத்து ஆரம்பிக்கப்பட
  அரசியல்கட்சிகழும் சரி,ஆயுதமேந்திய அமைப்புகழும் சரி
  மோசடியானவைகளாகவே செயற்பட்டுள்ளன.

  இதேபோலதான் தமிழகத்திலும் திமுக,அதிமுக என்று
  தொடங்கப்பட்டவைகழும். அமைந்துள்ளன.


 4. Rohan on August 17, 2014 1:43 pm

  அடடா… இவர் அல்லவோ தலைவர்!

  http://www.tamilwin.com/show-RUmsyISaLdjw4.html

  கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ததாக இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

  கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில், இணைக் குழு ஒன்றை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, சபாநாயகர் சமால் ராஜபக்சவிடம் கோரியுள்ளார்.

  விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களது, நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டுமென ஆனந்தசங்கரி கோரியுள்ளார்.

  விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டும்.


 5. பல்லி on November 15, 2014 10:00 pm

  //தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டும்.//
  ஈழதமிழரில் மிக கேவலமான அல்லது அசிங்கமான தமிழன்
  யார் என பல்லியை கேட்டால் என் கை நித்திரை தூக்கத்திலும் சங்கரியர் பக்கமே போகும்; இவர் நாடு கடத்த
  பட வேண்டியவர் மட்டுமல்ல இலங்கை குடிஉரிமையும்
  பறிக்க பட வேண்டியவர்,


 6. சாந்தன் on November 16, 2014 6:04 am

  //…இவர் நாடு கடத்த
  பட வேண்டியவர் மட்டுமல்ல இலங்கை குடிஉரிமையும்
  பறிக்க பட வேண்டியவர்,…//

  ஏன் இவரை நாடுகடத்த வேண்டும்?
  எந்த அடிப்படையில் இவரின் குடியுரிமை பறிக்கப்படவேண்டும்?

  சொல்லுங்க பல்லி உங்கள் ஜனநாயக, மாற்றுக்கருத்து, கருத்துச் சுதந்திரம் பற்றி அறிய ஆசையாய் இருக்கு!


 7. சாந்தன் on November 16, 2014 6:07 am

  //…விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டும்….//

  மஹிந்தாவுக்கு இவர் ஐடியா கொடுக்கிறார். விசாரணை ஆரம்பித்து இழுத்தடித்தால் அந்த ஒழுங்கையில் கிடாய் வெட்டலாம் என.
  இவரின் மகனே இவரை கணக்கில் எடுப்பதில்லை.


 8. Rohan on November 16, 2014 8:38 am

  //ஏன் இவரை நாடுகடத்த வேண்டும்?
  எந்த அடிப்படையில் இவரின் குடியுரிமை பறிக்கப்படவேண்டும்?

  சொல்லுங்க பல்லி உங்கள் ஜனநாயக, மாற்றுக்கருத்து, கருத்துச் சுதந்திரம் பற்றி அறிய ஆசையாய் இருக்கு!//

  கேட்டு அறிவை வளர்த்துக் கொள்ள நானும் ஆவலுடன் உள்ளேன்.

  இடக்கு முடக்காய் கதைத்து விட்டு, நான் பகிடி விட்டேன் என்று வாணம் விட்டார் ஓர் அறிவாளி. இவரும் அதே கயிற்றில் நடப்பார் என்று நான் நினைக்கிறேன்.


 9. பல்லி on November 16, 2014 2:29 pm

  //சொல்லுங்க பல்லி உங்கள் ஜனநாயக, மாற்றுக்கருத்து, கருத்துச் சுதந்திரம் பற்றி அறிய ஆசையாய் இருக்கு!//
  1 அன்று முட்டாள்களாய் மக்களை முட்டாள் ஆக்கி
  தனி நாடு கேட்டு தமிழரை அகதி ஆக்கியது;
  2 அதன் பின் அது சரி அல்ல அதனால் என பயணம்
  இந்தியாவை(பாதுகாப்பாய்)நோக்கி என தமிழகம்
  சென்றது,
  3 மீண்டும் அரசியல் ஆசை; அதனால் அடங்காத
  கூட்டணியை தன் கட்டுபாட்டில் வைத்து கொண்டது
  (சட்டதின் உதவியுடன்)
  4 மக்கள் சொத்தான கூட்டணி அலுவலகத்தை காசாக்கி
  தன் மக்களகளுக்கு(பிள்ளைகளுக்கு) தானம் செய்தத்துக்கு;

  தவறு யாராக இருந்தாலும் பல்லி சொல்ல தயங்க மாட்டேன்; அதில் எனக்கு வெக்கமோ அல்லது தயக்கமோ
  என்றும் வராது; போதுமா சாந்தன்;


 10. பல்லி on November 16, 2014 2:32 pm

  //இவரும் அதே கயிற்றில் நடப்பார் என்று நான் நினைக்கிறேன்.//

  எனக்கு அப்படி நடந்து நடக்க தெரியாது; நடக்க வேண்டிய
  அவசியமும் இல்லை ;


 11. சாந்தன் on November 16, 2014 8:15 pm

  //…தவறு யாராக இருந்தாலும் பல்லி சொல்ல தயங்க மாட்டேன்; அதில் எனக்கு வெக்கமோ அல்லது தயக்கமோ
  என்றும் வராது; போதுமா சாந்தன்;…///

  1 அன்று முட்டாள்களாய் மக்களை முட்டாள் ஆக்கி
  தனி நாடு கேட்டு தமிழரை அகதி ஆக்கியது;

  - டக்கிளஸ் தோழர்?
  2 அதன் பின் அது சரி அல்ல அதனால் என பயணம்
  இந்தியாவை(பாதுகாப்பாய்)நோக்கி என தமிழகம்
  சென்றது,
  -டக்கிளஸ் தோழர்
  3 மீண்டும் அரசியல் ஆசை; அதனால் அடங்காத
  கூட்டணியை தன் கட்டுபாட்டில் வைத்து கொண்டது
  (சட்டதின் உதவியுடன்)
  -டக்கிளஸ் தோழர் (கலில் விழுந்து வால்பிடித்து, காட்டிக்கொடுத்து..)

  4 மக்கள் சொத்தான கூட்டணி அலுவலகத்தை காசாக்கி
  தன் மக்களகளுக்கு(பிள்ளைகளுக்கு) தானம் செய்தத்துக்கு;

  - டக்கிளஸ் தோழர் -ஸ்ரீதர் தியேட்டர்?

  உங்கள் லொஜிக்கில் டக்கிளஸ் தோழரை என்ன செய்யலாம்.

  டக்கிளஸ் தோழரின் பெயரை தவராசா என மாற்றிப்பார்க்கவும் இன்னும் சுப்பராய் இருக்கும்.

  எல்லாம்போக எந்தச் சட்டத்தில் இவையெல்லாம் சரிவரும் எனச் சொன்னால் இன்னும் தெளிவு பெறுவேன்.


 12. பல்லி on November 17, 2014 11:04 am

  //உங்கள் லொஜிக்கில் டக்கிளஸ் தோழரை என்ன செய்யலாம்.//

  எதுவும் செய்யதேவையில்லை; சிங்கம் பசி எடுக்கும்
  போது அதுவாகவே இது இரையாகும்: மேலும் தோழர்
  பற்றி சூளைமேடு பிரச்சனை தீவு மக்கள் அடக்கு முறை என
  பலவிடயங்களில் பல்லி விமர்சித்துள்ளேன், தாங்கள் பார்க்க
  தவறியதுக்கு பல்லி பொறுப்பு அல்ல; தோழரை பல்லி நேரிலும் (ஜரோப்பாவில்தான்) சந்தித்து இருக்கிறேன்; அவர்
  தவறு செய்ய வில்லை என சொல்ல பல்லி முட்டாள் அல்ல; ஆனால் அவர் அன்று அரசுடன் இனையாவிட்டால்
  அவரது உயிர் இன்று???????? மேலும் தோழரும் சாந்தன்
  போல் ஒரு எடுபாட்டால் அமைப்புக்கு சென்றவர்தான்; அதன் பின் அவரது ஜெயில் வாழ்வு அதனால் அமைப்பில்
  உயர்ந்த நிலை; அதன் பின் அமைப்பில் முரன்பாடு, ஓடினார்
  அமைப்பைவிட்டு; தமிழகத்தில் கிராமமக்களுடன் தறுதலை
  போர்; அதன்பின் தாய்மண்; பாதுகாப்புக்காய் சிங்கத்தின் நிழல்; சாந்தன் தோழர் மட்டுமல்ல தம்பி இன்று இருந்து
  இறுதி போரில் அரசிடம் சரனடைந்து இருந்தாலும்(நடேசர்
  கேட்டதுக்கு இனங்க) இன்று தோழரை போல் அரசை விமர்சையாக கொண்டாடுவார், இதுவே எமது விடுதலை;
  தோழர் மீது மட்டுமல்ல எந்த ஒரு தமிழ் அரசியல்வாதி மீதும் பல்லிக்கு பாசம் கிடையாது; ஆனால் இன்றய வடக்கு
  முதல்வர் அவரை போன்ற கல்விமானகளை(சுயனலமற்ற) தன்னுடன் இனைத்து ஒரு நிர்வாகத்தை அங்கு உருவாக்கினால் ஓர் மாற்றம் அங்கு ஏற்படலாம், அதுவரை
  முதல்வர் சொன்னது போல் சூள் உரைக்காமல் அமைதியாய்
  மக்கள் தேவைகளை கவனிப்பதே சாத்தியமாகும்,


 13. சாந்தன் on November 17, 2014 6:03 pm

  //…ஆனால் அவர் அன்று அரசுடன் இனையாவிட்டால்
  அவரது உயிர் இன்று???????? …//

  அப்போ அவர் அரசுடன் இணைந்ததால் நாடுகடத்து பாஸ்போட்டை பறி என நீங்கள் சொல்லவில்லை அப்படித்தானே?
  இங்கே பிரச்சினை சங்கரியை நாடுகடத்த வேண்டும் என நீங்கள் சொன்ன காரணங்கள் அனைத்தும் டக்கிளசுக்கும் பொருந்தும்.
  நீங்கள் ஏன் அவரை நாடுகடத்தக் கோரவில்லை?
  அங்கே இங்கே ஓட வேண்டாம் பதிலை தெளிவாகச் சொல்லவும்!

  //…ஆனால் இன்றய வடக்கு
  முதல்வர் அவரை போன்ற கல்விமானகளை(சுயனலமற்ற) தன்னுடன் இனைத்து ஒரு நிர்வாகத்தை அங்கு உருவாக்கினால் ஓர் மாற்றம் அங்கு ஏற்படலாம்,….//

  பல்லி…பிரச்சினை சங்கரி நாடுகடத்தல்,குடியுரிமை பறிப்பு.
  விவாதத்தலைப்பு புரியுதா? திசைதிருப்ப வேண்டாம்.
  விக்கினேஸ்வரன் பற்றிய விவாதம் வேறோர் தலைப்பில் ஓடிக்கொண்டிருக்கு. தோழர் பற்றி இன்னொரு தலைப்பிலே ஓடிக்கொண்டிருக்கு. இங்கே பிரச்சினை சங்கரி!


 14. பல்லி on November 18, 2014 11:54 am

  //அப்போ அவர் அரசுடன் இணைந்ததால் நாடுகடத்து பாஸ்போட்டை பறி என நீங்கள் சொல்லவில்லை அப்படித்தானே?//
  அவரை தேடியது ஆயுதங்கள் அல்ல கரும்;;;;;;; அது
  எங்கேயும் எதுவும் செய்யும் அல்லவா??

  //இங்கே பிரச்சினை சங்கரியை நாடுகடத்த வேண்டும் என நீங்கள் சொன்ன காரணங்கள் அனைத்தும் டக்கிளசுக்கும் பொருந்தும்.//
  இல்லை இவர் தன் குடும்பத்துக்காக அரசியல் செய்கிறார்;
  அவரோ தன் உயிரை பணயம் வைத்து அரசியல் செய்கிறார்,(இவர் யார்?? அவர் யார்?? என்பது நீங்களே
  முடிவு செய்யுங்க)

  //நீங்கள் ஏன் அவரை நாடுகடத்தக் கோரவில்லை?//
  அவரது உயிருக்கு தாங்கள் பாதுகாப்பு தரமுடியுமா??

  //அங்கே இங்கே ஓட வேண்டாம் பதிலை தெளிவாகச் சொல்லவும்!//
  மாத்தையாவின் மரணத்தையும் கருணாவின் வாழ்வையும்
  உதாரனமாக சொல்லலாமே;

  //பல்லி…பிரச்சினை சங்கரி நாடுகடத்தல்,//
  அதுக்கான விளக்கத்துடன் மட்டும் நிற்க வேண்டுமா??

  //,குடியுரிமை பறிப்பு.
  விவாதத்தலைப்பு புரியுதா? //
  தொடருங்கள் முதல்வர் எப்படி இங்கு வந்தார் என்பது
  புரியும்;

  //திசைதிருப்ப வேண்டாம்.//
  வடக்கில் மட்டும் கவனம் செய்தால் கிழக்கு பறிபோகும் என்பது பல்லி அறிவதால் உங்கள் கேள்விக்கு அடங்காமல்
  இருப்பது பல்லிக்கு பாதுகாப்பு;

  //விக்கினேஸ்வரன் பற்றிய விவாதம் வேறோர் தலைப்பில் ஓடிக்கொண்டிருக்கு. //
  தேவைபட்டால் சங்கரியை அங்கும் அழைப்பேன்,(எழுத்தில்)

  //தோழர் பற்றி இன்னொரு தலைப்பிலே ஓடிக்கொண்டிருக்கு.//
  அப்படியா அப்புறம் எதுக்கு இங்கு தோழரை கூட்டி வந்தியள்???

  ::// இங்கே பிரச்சினை சங்கரி!//
  அது தெரியாமலா பல்லி இங்கு அவருக்கு பலன் சொன்னேன்; ஆனாலும் சாந்தன் தாங்கள் போட்டு வாங்குவதில் வல்லவர்தான்(எமது கிராமத்தில் இதைதான்
  பால் தொட்டு பால் கறப்பது என்பார்கள்)


 15. சாந்தன் on November 19, 2014 1:52 am

  //..அவரை தேடியது ஆயுதங்கள் அல்ல கரும்;;;;;;; அது
  எங்கேயும் எதுவும் செய்யும் அல்லவா??…//

  அதனால்தானா இப்போ அவரை நாடுகடத்து குடியுரிமை பறி என்கிறீர்கள்.
  பல்லி எனது கேள்வி எல்லாம் அவரை ஏன் நாடுகடத்த வேண்டும், எந்தச் சட்டத்தின்கீழ் குடியுரிமை பறிக்கப்படவேண்டும். அப்படி நியாயப்படுத்தும் பட்சத்தில் அந்நியாயங்கள் ஏன் டக்கிளசுக்குப் பொருந்தாது?

  பதில் உண்டா அல்லது மாட்டைக்கொண்டு போய் மரத்தில் கட்டப்போகிறீர்களா?

  //…அவரது உயிருக்கு தாங்கள் பாதுகாப்பு தரமுடியுமா??…//

  நாடுகடத்துப்படுபவர்களின் உயிருக்கு பாதுகாப்புக்கொடுக்க வேண்டும் என எங்கேயாவது சட்டம் உண்டா? சங்கரியின் உயிருக்கு நீங்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்திய பின்னரா அவரை நாடுகடத்தக்கோரினீர்கள்?

  //..மாத்தையாவின் மரணத்தையும் கருணாவின் வாழ்வையும்
  உதாரனமாக சொல்லலாமே;….//

  அங்கே இங்கே ஓடாமல் பதிலைத்தெளிவாகச் சொல்லக்கோரினால் மாத்தையா கருணா என ஓடுகிறீர்களே!

  //..அதுக்கான விளக்கத்துடன் மட்டும் நிற்க வேண்டுமா??…//
  ஆம் . இங்கே நாடுகடத்தல் குடியுரிமை பறிப்பை சொன்னது யார்? அதற்குப்பதில் கேட்டேன் அங்கே இங்கே ஓடாமல் பதில் தரவும்!

  ///…கேள்விக்கு அடங்காமல்
  இருப்பது பல்லிக்கு பாதுகாப்பு;…//

  பதில் இல்லை எனத்தெரிகிறது. இதில் பாதுகாப்பாம் பம்மாத்தாம்!

  //..தேவைபட்டால் சங்கரியை அங்கும் அழைப்பேன்,(எழுத்தில்)…//

  தெரியும்! ஏனென்றால் அங்கே ஓடி இங்கே ஓடி விவாததைத் திசை திருப்பி மடத்தடி கொசிப்புகலை இழுத்து வரும் கோஷ்டி அங்கத்தினரல்லவா நீஙகள்!

  //..(எமது கிராமத்தில் இதைதான்
  பால் தொட்டு பால் கறப்பது என்பார்கள்…//

  உங்கள் கிராமத்தில் எல்லோரும் உங்கலைப்போல மடத்தடி பம்மாத்துக்கோஷ்டி என நான் நினைக்கவில்லை!


 16. பல்லி on November 19, 2014 10:29 pm

  //அதனால்தானா இப்போ அவரை நாடுகடத்து குடியுரிமை பறி என்கிறீர்கள்.//
  யாரை சொன்னேன் நீங்க யாரை சொல்லுகிறீர்கள்;

  //எனது கேள்வி எல்லாம் அவரை ஏன் நாடுகடத்த வேண்டும், //

  விளக்கம் முன்பே சொல்லிவிட்டேன்; உங்களுக்காக அடைக்கடி அலைய முடியாது தேடி எடுங்கோ:

  //எந்தச் சட்டத்தின்கீழ் குடியுரிமை பறிக்கப்படவேண்டும்.//
  கண்டிப்பாக புலி சட்டம் அல்ல மரத்தடி விவகாரம் என
  எடுத்துகொள்ளுங்கள்( நட்டாண்மை)

  // நியாயப்படுத்தும் பட்சத்தில் அந்நியாயங்கள் ஏன் டக்கிளசுக்குப் பொருந்தாது//

  சாந்தனும் பல்லியும் ஒன்றா???

  //பதில் உண்டா அல்லது மாட்டைக்கொண்டு போய் மரத்தில் கட்டப்போகிறீர்களா?//
  ஆக உங்க நினைப்பில் மரம் மிக ஆழமாக வேர் விட்டது
  அல்லவா??

  //நாடுகடத்துப்படுபவர்களின் உயிருக்கு பாதுகாப்புக்கொடுக்க வேண்டும் என எங்கேயாவது சட்டம் உண்டா? //
  இல்லை மிருகங்கள் அல்லவே பல்லி; எது நடந்தாலும் உயிருக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் அல்லவா??

  //சங்கரியின் உயிருக்கு நீங்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்திய பின்னரா அவரை நாடுகடத்தக்கோரினீர்கள்?//
  கனடா செய்திகள் வாசிப்பதில்லையா???

  //அங்கே இங்கே ஓடாமல் பதிலைத்தெளிவாகச் சொல்லக்கோரினால் மாத்தையா கருணா என ஓடுகிறீர்களே!//
  பல்லி விளக்கமாகதான் சொல்லி உள்ளேன் தாங்கள் கலக்கம்
  இன்றி படியுங்கோ;(கருனா எப்படி தப்பினார்?? மாத்தையா
  எப்படி இறந்தார்??)

  //. இங்கே நாடுகடத்தல் குடியுரிமை பறிப்பை சொன்னது யார்? அதற்குப்பதில் கேட்டேன் அங்கே இங்கே ஓடாமல் பதில் தரவும்//

  அதே பழம் இதுதான்;பதில்(உங்கள் கேள்வி அப்படிதான்)

  //பாதுகாப்பாம் பம்மாத்தாம்!//
  இந்த இரு வார்த்தையும் இல்லாமல் உங்களால் எதுவும்
  எழுத முடியாது அல்லவா??

  //தெரியும்! ஏனென்றால் அங்கே ஓடி இங்கே ஓடி விவாததைத் திசை திருப்பி மடத்தடி கொசிப்புகலை இழுத்து வரும் கோஷ்டி அங்கத்தினரல்லவா நீஙகள்!//

  பல்லி சொல்லும் இடத்துக்கு எல்லாம் ஓடும் அதுவா நீங்க??

  :://உங்கள் கிராமத்தில் எல்லோரும் உங்கலைப்போல மடத்தடி பம்மாத்துக்கோஷ்டி என நான் நினைக்கவில்லை!//
  மனதுக்குள் பல்லி மீது சற்று பாசம் அப்படிதானே??


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு