யாழ் – கொழும்பு புகையிரத சேவை : நேர அட்டவணை

jaffna

அக்டோபர் 14 2014 முதல் யாழ் – கொழும்புக்கிடையே தினமும் 4 புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

இதில் குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி புகையிரதமும், யாழ் தேவி புகையிரதமும் யாழ் – கல்கிஸ்சை வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.

குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி 

***************************************

தினமும் அதிகாலை 5.10 மணிக்கு கல்கிசையிலிருந்து புறப்படுகின்ற குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி புகையிரதம் கொழும்பு கோட்டையை வந்தடைந்து காலை 5.50 மணிக்கு யாழ். நோக்கிப் புறப்படும். இந்தக் கடுகதி புகையிரதம் முற்பகல் 11.56 இற்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடையும்.

பின்னர் அந்த கடுகதி புகையிரதம் பிற்பகல் மணி 1.45க்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு இரவு 8.00 மணிக்கு கொழும்பு கோட்டையையும், 8.31க்கு கல்கிசையையும் சென்றடையும்.

யாழ் தேவி 

**************

தினமும் காலை மணி 6.30க்கு கல்கிசையிலிருந்து புறப்படும் யாழ் தேவி கொழும்பு கோட்டைக்கு வந்து, அங்கிருந்து மீண்டும் காலை 7.15க்கு புறப்பட்டு பிற்பகல் 3.04ங்கு யாழ்ப்பாணம் சென்றடையும்.

அதே சமயம் தினமும் காலை 7.25க்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் யாழ் தேவி மாலை மணி 3.47க்கு கொழும்பு கோட்டையையும், 4.16ன்னு கல்கிசையையும் சென்றடையும்.

யாழ் – கோட்டை இடையே  ’தயட்ட கிருள’ கடுகதி 

**********************************************************

தயட்ட கிருள (தேசத்திற்கு மகுடம்) என்ற பெயரில்  சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மற்றொரு நகர்சேர் கடுகதி புகையிரதம் பகல் மணி 11.50க்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு மாலை மணி 6.15க்கு யாழ்ப்பாணம் வந்தடையும். அதே வேளையில் பகல் 11.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் இந்த நகர்சேர் கடுகதி மாலை மணி 5.40க்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.

தபால் ரயில்

***************

தினமும் இரவு மணி 7.45க்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் தபால் ரயில் மறுநாள் அதிகாலை மணி 5.07க்கு யாழ்ப்பாணம் வந்தடையும்.  இதே வேளையில் இரவு மணி 7.05க்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் தபால் ரயில் மறுநாள் அதிகாலை மணி 4.23க்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.

வார இறுதி விசேட புகையிரதம்

யாழ் - மாத்தறை

******************

இதுதவிர, வார இறுதி விசேட புகையிரத சேவையொன்று ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 7.00 மணிக்கு மாத்தறையிலிருந்து புறப்பட்டு கொழும்பு கோட்டைக்கு வந்து, அங்கிருந்து மீண்டும் காலை மணி 9.40க்கு புறப்பட்டு மாலை  மணி 5.07க்கு யாழ்ப்பாணம் வந்தடையும்.

இதே புகையிரதம் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு மால மணி 6.11க்கு கொழும்பு கோட்டையையும்,  இரவு மணி 8.50க்கு மாத்தறையையும் சென்றடையும்.

உங்கள் கருத்து
 1. BC on October 16, 2014 9:18 pm

  யாழ்பாணத்தில் இருந்து தெற்கே போகும் ரெயின் சேவை பற்றி விளங்கும் படியாக தெளிவாக எழுதியது ஏகாந்தியே.

 2. சாந்தன் on October 17, 2014 7:07 am

  //..விளங்கும் படியாக தெளிவாக எழுதியது ஏகாந்தியே….//

  வெள்ளையள் இப்ப போக முடியாதெல்லோ. அதுதான் ஏகாந்தி “விளங்கும்படி” எழுத வேண்டியதாய் போய்விட்டது.

  பட் டோன்ற் வொறி வெள்ளையள், ஹோப்ஃபுல்லி இற் இஸ் ஒன்லி எ ரெம்பரரி செற்பக் ஃபோ யுர் சேவிஸ் ரு பிசி ஒஃப் இன்ஃபோமிங் எபெளட் ஸ்ரீலங்கா!

 3. vanni arrahchi on October 17, 2014 8:07 am

  யாழ்தேவி யாழ்பாணம் செல்வது ஒரு சிலருக்கு கிலுகிலுப்பு.

  மக்களின் பிரயாணவசதி குறித்தல்ல.

  பங்கருக்கு சிலுப்பர்கட்டை வந்திருக்கிறது.

  பனை தறித்து இழுத்துக் கொண்டு போவதிலும் பார்த்து இது இலகுவானது.

 4. Manachchaadchi on October 18, 2014 2:15 am

  தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள் சார்ந்த விடயங்களில் அரசாங்கம் பிரச்சனைகளைத் தருகின்றது என்பது உண்மை தான். அதே வேளையில், நல்ல விசியங்கள் நடக்கின்ற போது ஏற்றுப் பாராட்டுகின்ற பண்பும் எமது இனத்துக்குத் தேவை.

 5. vanni arrahchi on October 18, 2014 10:57 am

  மனச்சாட்சி: தமிழ்மக்கள் யார் என்று கேட்டால் நீங்கள் மனச்சாட்சியுடன் பதில் சொல்லுவீர்களா?

  தாங்கள் எப்படி பார்த்தாலும் தமிழ்மக்களின் உரிமை என்பது யாழ்ப்பாணம் ஆகிவிட்டது.அந்த அதிகாரத்தை எமக்கும் பங்கு தாருங்களே என்பதே இன்றைய போராட்டம்.

  செல்வநாயகம் அமிர்தலிங்கம் இவர்களால் ஏவிடப்பட்ட பேய்யாக கருதுகிற பிரபாகரன் அவர்களும் தமிழ்மக்கள் யார் என்று இனம் காணத் தெரியாதவர்கள். தமிழ்மக்கள் யாவரும் யாழ்பாணத்திற்குள் வாழ்கிறார்கள் என்கிற வழிபோக்கை வழி அமைத்துக் கொண்டவர்கள்.

  இந்த தமிழ்தலைவர்கள் தமதுயினம் யார் என்று கூட தெரியாதவர்கள்.இல்லை; தெரிந்தும் நடிப்பவர்கள்.

  தெரிந்திருந்தால் கிழக்குமகாணமக்களையும் மலையகமக்களையும் கூறுபோட்டு ஒரு அரசியல் நடத்தி இருப்பார்களா?

  இனவாத உரிமைக்கான போராட்டமே கசடுமுசடானவை. ஒவ்வொருயினத்திலும் தனது சுயலாபத்திகான திணிவுகள் போதுமான அளவு படிந்திருக்கிறது.

  இனப்பிரச்சனை மதப்பிரச்சனை சாதிப்பிரச்சனை தீர்கமுடியாத தலைமைகள் தமிழ்மக்களுக்கு தேவை இல்லை. இதை தீர்ப்பதற்கான தலைமையும் இதுவரை தமிழ்மக்களுக்கு வந்ததும் இல்லை.

  இலங்கை தமிழ்மக்கள் யார்? இலங்கையில் தானே வாழ்கிறோம்.இலங்கையின் அரசியலில் இலங்கையரசியலுக்கான அரசியலை மேடையில் முழங்கிய ஒரு தமிழனை காணமுடியுமா?

  முழுக்கமுழுக்க சிங்களயரசில் தமிழ்யரசியல் ஒருவருக்கொருவர் பகையை வெளிப்படுத்த முடிமோ! அவர்களே எமது கண்ணுக்கு தெரிந்தவர்கள் ஆகிறார்கள்.

  மிகுதி உங்கள் சிந்தனைக்கு.

 6. BC on October 18, 2014 12:45 pm

  யாழ்பாணத்தில் இருந்து வெளிக்கிடும் ரெயின் ஒன்று இப்போ மாத்தறை வரை போகிறது என்ற தகவலை தமிழ் ரிவி,தமிழ் ரேடியோ கேட்கும் சிலருக்கே நான் சொல்லி தான் தெரிய வேண்டி இருந்தது. உனக்கு யார் சொன்னது?
  தேசம்நெற்றில் ஏகாந்தி.
  இலங்கைக்கு போகும் போது யாம்பாணத்தில் இருந்து இந்த ரெயின் எடுத்து மாத்தறை போய் அப்படியே வெள்ளையள் சொன்ன அழகான தங்காலையையும் பார்த்துவிட வேண்டும் என்பது எனது ஆசை.
  //வெள்ளையள் இப்ப போக முடியாதெல்லோ. அதுதான் ஏகாந்தி “விளங்கும்படி” எழுத வேண்டியதாய் போய்விட்டது.//
  வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி என்பது புலம் பெயர் புலிகளின் செயற்பாட்டால் ஏற்படுத்தபட்ட மிக சிறு தடங்கள் மட்டுமே.முன்பு காலையில் கட்டுநாயக்காவில் இறங்கியவர்கள் பின்னேரம் யாழ்பாணம் போகும் பஸ்சிலும் போய் இருக்கிறார்கள். புலிகளின் கட்டுபாட்டில் தாங்கள் வாழ்ந்த போது அத்தியாவசிய மருத்துவ தேவைக்கு கூட புலிகளின் கட்டுபாட்டு பிரதேசங்களை விட்டு போக முடியாமல் அந்தமக்கள் புலிகளிடம் கொடுமைகள் அனுபவித்தவர்கள்.புலிகளுக்கு கப்பம் கொடுத்தது மட்டும் அல்லாமல் புலிகளின் கொலை பயமுறுத்தலுக்காக கட்டாய புலிகளுக்கு ஓசி சாப்பாடு சமைத்தும் புலிகளுக்குக கொடுத்தவர்கள்.ஆதலால் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி என்பது அவர்களுக்கு பிரச்சனை எதுவும் இல்லை.அதன் அவசியத்யையும் அவர்கள் அறிவார்கள்.

 7. Rohan on October 18, 2014 9:14 pm

  //இலங்கை தமிழ்மக்கள் யார்? இலங்கையில் தானே வாழ்கிறோம்.இலங்கையின் அரசியலில் இலங்கையரசியலுக்கான அரசியலை மேடையில் முழங்கிய ஒரு தமிழனை காணமுடியுமா?//

  ஐயோ ஐயோ…

  அரசியல் என்பதே அப்படித் தான் என்று தெரியாது தத்துவம் பேசுகிறோம்!

  “இலங்கையின் அரசியலில் இலங்கையரசியலுக்கான அரசியலை மேடையில் முழங்கிய ஒரு தமிழனை காணமுடியுமா?”என்ற கேள்வியே தெளிவில்லாத ஒன்றாக இருப்பினும், இலங்கையின் அரசியலில் இலங்கைக்கான அரசியலை மேடையில் முழங்கிய ஒரு சிங்களவனைக் காணமுடியுமா?

  //முழுக்கமுழுக்க சிங்களயரசில் தமிழ்யரசியல் ஒருவருக்கொருவர் பகையை வெளிப்படுத்த முடிமோ! அவர்களே எமது கண்ணுக்கு தெரிந்தவர்கள் ஆகிறார்கள்.//

  அட, யாராவது இதை யாராவது தமிழில் மொழிபெயர்த்துச் சொல்ல முடியுமா?

 8. Rohan on October 18, 2014 9:36 pm

  //யாழ்பாணத்தில் இருந்து வெளிக்கிடும் ரெயின் ஒன்று இப்போ மாத்தறை வரை போகிறது என்ற தகவலை தமிழ் ரிவி,தமிழ் ரேடியோ கேட்கும் சிலருக்கே நான் சொல்லி தான் தெரிய வேண்டி இருந்தது// என்று தனது நாடு பற்றித் தெரியாது இருந்தவர், ‘வெள்ளை’சொல்லியே அறிய வேண்டி இருப்பவர், சொல்வது:

  //இலங்கைக்கு போகும் போது யாம்பாணத்தில் இருந்து இந்த ரெயின் எடுத்து மாத்தறை போய் அப்படியே வெள்ளையள் சொன்ன அழகான தங்காலையையும் பார்த்துவிட வேண்டும் என்பது எனது ஆசை.//

  இதே அழகான தங்காலையில் தான் பிரதேச சபைத் தலைவர் அங்கு ‘அழகு பார்க்க’ வந்து இரவுநேரக் குடிசாலைக்குப் போயிருந்த ஒரு ரஷ்யப் பெண்ணின் ஆண் இணையைக் கொன்று போட்டு விட்டு கோஷ்டியாக அப்பெண்ணை ‘அழகு பார்த்தது’. பொலிஸ் வரும்போது உடல் காயங்களுடன் வன்புணர்வின் பின் நிர்வாணமாக விறைத்துப் போய் அரை உயிரில் கிடந்தார் அவர். சர்வதேச அழுத்தங்களின் பின் தான் விசாரணைக்கே பொலிஸ் போனது.

  இதெல்லாம் இவர்களுக்கும் தெரியாது. வெள்ளைகளும் சொல்ல மாட்டார்களா?

  இவர் போகும் போது தனது அழகான மகளையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு போகத் திட்டமிட்டிருக்கிறாரா?

  இவர்(கள்), ஒரு மேற்கு நாட்டில் இரண்டு நாள் தங்கி தனியே பயணம் செய்வது போலத் தங்காலையிலும் செய்வாரா?

  அதென்ன, இலங்கை போகும் போது? ஒரு பயணம் வந்து இங்கு தேசம்நெற்றில் குப்பை கொட்டும் முட்டாள் தமிழர்களுக்காக ஒரு பயணக்கட்டுரை எழுதலாமே?

  //வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி என்பது புலம் பெயர் புலிகளின் செயற்பாட்டால் ஏற்படுத்தபட்ட மிக சிறு தடங்கள் மட்டுமே//

  புலிகளை வென்று விட்டோம் என்றார்கள் அவர்கள் . பிறகு தமது நலன் கருதி புலிகள் மீள் இணைகிறார்கள் என்றார்கள்.

  அதென்ன, முன் அனுமதி பெறுவது? வடக்கு என்ன, ஒரு திறந்த வெளிச்சிறைச்சாலையா? புலம்பெயர் புலிகள் காசுடன் பறந்து விட்டார்கள் என்றார்கள் இவர்கள். இப்போது புலம்பெயர் புலிகள் ஏதோ பெரிய செயற்பாட்டாளரகள் என்று சொல்கிறார்கள். எப்போது தளம்புவது தான இவரகளெள வழமை என்பது தெரிகிற்து – குறைகுடங்கள் அப்படித் தானே.

  //அந்தமக்கள் புலிகளிடம் கொடுமைகள் அனுபவித்தவர்கள்.புலிகளுக்கு கப்பம் கொடுத்தது மட்டும் அல்லாமல் புலிகளின் கொலை பயமுறுத்தலுக்காக கட்டாய புலிகளுக்கு ஓசி சாப்பாடு சமைத்தும் புலிகளுக்குக கொடுத்தவர்கள்.ஆதலால் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி என்பது அவர்களுக்கு பிரச்சனை எதுவும் இல்லை.அதன் அவசியத்யையும் அவர்கள் அறிவார்கள்.//

  அட… அப்படியா? மரண வீட்டுக்குப் போவதற்கும் அனுமதி பெற வேண்டும். அட்கற்கான அவசொயத்தை மக்கள் அறிவார்களாம், மண்ணாங்கட்டி!!!

 9. Rohan on October 18, 2014 10:11 pm

  //இலங்கைக்கு போகும் போது யாம்பாணத்தில் இருந்து இந்த ரெயின் எடுத்து மாத்தறை போய் அப்படியே வெள்ளையள் சொன்ன அழகான தங்காலையையும் பார்த்துவிட வேண்டும் என்பது எனது ஆசை.//

  பாவம் ‘வெள்ளைகள்’!

  http://www.dailymirror.lk/53977/2014-10-17

 10. thurai on October 19, 2014 7:41 am

  //இவர் போகும் போது தனது அழகான மகளையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு போகத் திட்டமிட்டிருக்கிறாரா?//றோகன்

  சேர,சோழ,பாண்டிய மன்னரின் புகழ்பாடுவோம்
  சரித்திரம் சொல்வோம். ஆனால் தமிழரின் வடபகுதியில்
  புருசனை கொன்று குப்பையில் புதைத்த தமிழரின்
  கதையை அறியோம். சிங்களவன் கற்பழிக்கின்றான்
  கொலை செய்கின்றான் தமிழரோ ஒன்றும் தெரியாத
  அப்பாவிகள் என்று கதையளப்போம்.

 11. Rohan on October 19, 2014 12:03 pm

  ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஒரு கேள்வி இருந்துகொண்டிருந்தது… இந்த வன்னி அறைச்சி என்ற பெயரில் எழுதுபவரின் ‘குறுக்கு விவாதமும்’ மொழி நடையும் எனக்குப் பரிச்சயமானவை அல்லவா என்று மூளை மின்னிக் கொண்டிருந்தது.

  அடடா… இவர் பொதுவுடமை வாதத்தை எப்போது விட்டார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்!!!!! நாமெல்லாம் சேர்ந்து ஒரு பெரிய ஓ போடுவோம்.

 12. ajith on October 19, 2014 1:57 pm

  வன்னி ஆராச்சி என்ன முழங்குகிறார் என்று யாருக்கு ஆவது புரிகிறதா. இன்றைய போராட்டம் என்கிறார். இவர் யாருடன் போராடுகிறார் யாருக்க போரட்டுகிறார். யாழ்பாணம் என்று பேசுகிறார். யாழ்பாணத்தை பிரித்து எடுக்க போராடுகிரரா அல்லது யாழ்பாணத்தை அழித்து விட போராடுகிறாரா? செல்வநாயகத்தையும், அமிர்தலிங்கத்தையும் பிரபாகரனையும் பே என்று சொல்கிறார். பிறகு தமிழ் மக்கள் யார் என கண்டுபிடிக்க தெரியாதவர்கள் என்கிறார். தமிழர்கள் எல்லோரையும் ஒட்டுமொத்தமாக பே என்று சொல்கிறாரா. வடமாகாணத்தில் நடந்த தேர்தலில் மூன்றில் இரண்டு பகுதிக்கு மேற்பட்ட மக்கள் தான் தொடர்ந்து இந்த பேய்களுக்கு வாக்கு போட்டார்கள். ஆதரவு வழங்கினார்கள். இந்த பேயிற்கு புது விதமான் கண்களோ அல்லது சீனாவில் வாங்கிய பூத கண்ணாடி போட்டு இருக்கிறாரோ, ராஜபக்சே கொடுத்த மாக மருந்தை உட்கொண்டாரோ தெரியவில்லை. அது சரி கனக்க பிரச்சினைகள் சொன்னிர்கள். இன்னும் ஒரு தலைவனும் பிறக்கவில்லை என்றால் எப்போது அவர் பிறப்பார் என்று சொல்லுமா இந்த பே. இந்த பே தலைவனாக வருவதற்கு ஒரு தடையும் இல்லையே. சிங்கள அரசியலில் ஒரு பெரிய தலைவன் இருக்கிறான். அவன் மக்களை ஆடு, மாடு போல் மனிதர்களை வெட்டி கொள்ளை அடிப்பதில் சிறந்த தலைவனாக இருக்கிறான். அந்த பே யும் இந்த பேயும் சேர்ந்து கொண்டால் நாடு இரத்தத்தால் நிரம்பி வழியுமே.

 13. BC on October 19, 2014 4:15 pm

  //தனது நாடு பற்றித் தெரியாது இருந்தவர் ‘வெள்ளை’சொல்லியே அறிய வேண்டி இருப்பவர்//
  இலங்கையில் இருந்த போது இலஙகை முழுவதும் சுற்றுலா செல்லும் வசதி மிக்க யாழ்பாணத்து பண்ணையார் றோகானின் நிலையில் நான் இருக்கவில்லை.மற்றது கோர பற்களுடன் சிங்களவர்கள் திரிவார்கள் என்ற தமிழ் இனவாதிகளின் பயமுறுத்தல்கள் வேறு.
  //மரண வீட்டுக்குப் போவதற்கும் அனுமதி பெற வேண்டும்.//
  புலிகளின் கட்டுபாடுகளில் இருந்த போது செத்த வீடு என்ன எதற்குமே போக முடியாமல் ஆளை பிணை வை என்று கொடுமைகளை அனுபவித்தவாகள் இப்போது வெளிநாட்டு குடி உரிமை பெற்ற மக்களுக்கு இந்த சிறு தடங்கல் ஒரு தூசு மாதிரி.

  //துரை- புருசனை கொன்று குப்பையில் புதைத்த தமிழரின் கதையை அறியோம்.//
  யாழ்பாணம் தொடக்கம் இந்தியா,லண்டன்,ரொறின்ரோ வரை தமிழர்கள் செய்த கொலைகள் அறிவோம்.

 14. பல்லி on October 19, 2014 5:32 pm

  //இவர் பொதுவுடமை வாதத்தை எப்போது விட்டார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்!!!!! நாமெல்லாம் சேர்ந்து ஒரு பெரிய ஓ போடுவோம்.//
  சேர்ந்து போட்ட கும்மாளம் போதும் இந்த ஆட்டத்துக்கு
  பல்லி வரவில்லை சொல்லிபுட்டன்,

 15. ajith on October 19, 2014 6:09 pm

  /துரை- புருசனை கொன்று குப்பையில் புதைத்த தமிழரின் கதையை அறியோம்.//
  யாழ்பாணம் தொடக்கம் இந்தியா,லண்டன்,ரொறின்ரோ வரை தமிழர்கள் செய்த கொலைகள் அறிவோம். //////

  இவரின் கருத்துப்படி தமிழர்கள் கொலைகாரர்கள் , சிங்களவர் கொல்லபடுபவர்கள். நீங்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள். அதாவது தமிழர்கள் முற்று முழுதாக அழிக்கப்பட வேண்டும் என விரும்புவர்கள்.
  தமிழர்கள் கொல்லபட்டதை முற்று முழுதாக வரவேற்பவர்கள். இவர்கள் தமிழர்கள் அல்ல என்பதை வெளிப்படையாக ஒத்துகொண்டது பாராட்ட பட வேண்டிய விடயம்.

 16. Rohan on October 19, 2014 9:09 pm

  //துரை- புருசனை கொன்று குப்பையில் புதைத்த தமிழரின் கதையை அறியோம்.//
  /யாழ்பாணம் தொடக்கம் இந்தியா,லண்டன்,ரொறின்ரோ வரை தமிழர்கள் செய்த கொலைகள் அறிவோம்./

  வேலிக்கு ஓணான்… சரி சரி

 17. thurai on October 20, 2014 6:27 am

  //இவரின் கருத்துப்படி தமிழர்கள் கொலைகாரர்கள் , சிங்களவர் கொல்லபடுபவர்கள்//றோகன்

  உலகின் மனித இனம் தன்மையால் ஒன்றுபட்டவ்ர்கள்
  என்பதே என் விளக்கம். இதனை விளங்காத படிப்பறிவோ
  கேள்வியறிவோ இல்லாதவ்ர்களின் தீர்ப்பே சிங்களவ்ர்
  மட்டுமே கொலைகாரர் பொல்லாதவ்ர்கள் என்று விளம்பரம் செய்வது.

 18. Rohan on October 20, 2014 10:20 am

  //இவர் பொதுவுடமை வாதத்தை எப்போது விட்டார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்!!!!! நாமெல்லாம் சேர்ந்து ஒரு பெரிய ஓ போடுவோம்.//
  /சேர்ந்து போட்ட கும்மாளம் போதும் இந்த ஆட்டத்துக்கு
  பல்லி வரவில்லை சொல்லிபுட்டன்/

  பெரிய நகரம் மாநகரம், பெரிய தவம் மாதவம்… அப்படியானால் பெரிய ஓ? பொதுவுடமை வாதம்
  என்று வேறு சொன்னேன். பூடகமாகச் சொன்னால் புரியாது சிலருக்கு என்பதால் விரித்திருக்கிறேன்.

  /சேர்ந்து போட்ட கும்மாளம் போதும் இந்த ஆட்டத்துக்கு
  பல்லி வரவில்லை சொல்லிபுட்டன்/

  பார்க்கலாம்….

 19. Rohan on October 20, 2014 10:42 am

  thurai on October 20, 2014 6:27 am
  //இவரின் கருத்துப்படி தமிழர்கள் கொலைகாரர்கள் , சிங்களவர் கொல்லபடுபவர்கள்//றோகன்

  ஐயோ ஐயோ… வாசிப்பதே இல்லையா இவர்கள்????

  முன்னதாக..

  //ajith on October 19, 2014 6:09 pm
  /துரை- புருசனை கொன்று குப்பையில் புதைத்த தமிழரின் கதையை அறியோம்.//
  யாழ்பாணம் தொடக்கம் இந்தியா,லண்டன்,ரொறின்ரோ வரை தமிழர்கள் செய்த கொலைகள் அறிவோம். //////

  /இவரின் கருத்துப்படி தமிழர்கள் கொலைகாரர்கள் , சிங்களவர் கொல்லபடுபவர்கள். /

  ஒருவேளை ajith என்பதை றோகன் என்று தான் வாசிப்பது என்று நினைத்தாரோ என்னவோ…

 20. BC on October 20, 2014 12:15 pm

  துரை- புருசனை கொன்று குப்பையில் புதைத்த தமிழரின் கதையை அறியோம்.
  நான் – யாழ்பாணம் தொடக்கம் இந்தியா,லண்டன்,ரொறின்ரோ வரை தமிழர்கள் செய்த கொலைகள் அறிவோம்.
  பெரியவர் அஜித் -இவரின் கருத்துப்படி தமிழர்கள் கொலைகாரர்கள்.சிங்களவர் கொல்லபடுபவர்கள். நீங்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள். அதாவது தமிழர்கள் முற்று முழுதாக அழிக்கப்பட வேண்டும் என விரும்புவர்கள்.இவர்கள் தமிழர்கள் அல்ல என்பதை வெளிப்படையாக ஒத்துகொண்டது பாராட்ட பட வேண்டிய விடயம்.

  அஜித்தின் கருத்தை உற்று பார்த்தால் அஜித் என்ன சொல்ல வருகிறார் என்பது தெளிவாக விளங்கும். புலிகள் தான் இலங்கை தமிழர்கள் என்பவர்கள்.புலிகளுக்காக வாழாத தமிழர்கள் புலிகளை ஆதரிக்காத தமிழர்கள் அழிக்கபட வேண்டியவர்கள் என்ற புலிகளின் சிந்தனையின் வெளிப்பாடே.
  //இவர்கள் தமிழர்கள் அல்ல என்பதை வெளிப்படையாக ஒத்துகொண்டது பாராட்ட பட வேண்டிய விடயம்.// கேரளாவில் இருந்து குடியேறிய மலையாளிகளை தான் இவர்கள் ஆதரிப்பார்கள்
  //துரை – உலகின் மனித இனம் தன்மையால் ஒன்றுபட்டவ்ர்கள் என்பதே என் விளக்கம். இதனை விளங்காத படிப்பறிவோ கேள்வியறிவோ இல்லாதவ்ர்களின் தீர்ப்பே சிங்களவ்ர் மட்டுமே கொலைகாரர் பொல்லாதவ்ர்கள் என்று விளம்பரம் செய்வது//
  சின்ன பிள்ளைகளுக்கு தெரிவிக்க வேண்டிய உண்மைகளை புலம் பெயர்ந்த வளர்ந்த சின்னவர்களுக்கு விளங்கபடுத்த வேண்டிய நிலைமை.

 21. BC on October 20, 2014 12:53 pm

  //றோகான்-இந்த வன்னி அறைச்சி என்ற பெயரில் எழுதுபவரின் ‘குறுக்கு விவாதமும்’ மொழி நடையும் எனக்குப் பரிச்சயமானவை அல்லவா என்று மூளை மின்னிக் கொண்டிருந்தது.//

  பெரியவர் அஜித் என்ன சொல்கிறர் தெரியுமா? ஜெயபாலன் தான் வன்னி ஆராய்ச்சி.
  இலங்கை தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட வன்னி ஆராய்ச்சி மொழி நடை உங்களுக்கு பரிச்சயமானது என்பது அதிசயம் தான்.
  புலிகளின் புலனாய்வு பிரிவு பொட்டு அம்மானுக்கு பதிலாக நீங்கள் தான் அந்த பதவிவை தற்போது ஏற்று கொண்டிருக்கிறீர்களோ?

 22. ajith on October 20, 2014 5:46 pm

  /////அஜித்தின் கருத்தை உற்று பார்த்தால் அஜித் என்ன சொல்ல வருகிறார் என்பது தெளிவாக விளங்கும். புலிகள் தான் இலங்கை தமிழர்கள் என்பவர்கள்.புலிகளுக்காக வாழாத தமிழர்கள் புலிகளை ஆதரிக்காத தமிழர்கள் அழிக்கபட வேண்டியவர்கள் என்ற புலிகளின் சிந்தனையின் வெளிப்பாடே. ///////

  BC தம்பி பூதக் கண்ணாடி பூட்டி உங்கள் பூதக் கண்களால் பார்த்து வாசியுங்கள் பின் வரும் கூற்றை. புலி என்ற வார்த்தை எங்காவது கண்டீர்களா?

  “”"யாழ்பாணம் தொடக்கம் இந்தியா,லண்டன்,ரொறின்ரோ வரை தமிழர்கள் செய்த கொலைகள் அறிவோம்”"”".

  //இவர்கள் தமிழர்கள் அல்ல என்பதை வெளிப்படையாக ஒத்துகொண்டது பாராட்ட பட வேண்டிய விடயம்.// கேரளாவில் இருந்து குடியேறிய மலையாளிகளை தான் இவர்கள் ஆதரிப்பார்கள் ////

  மலையாளிகள் என்றால் மனிதர்கள் இல்லையா? நீங்கள் எங்கிருந்து வந்த (சிங்கத்திற்கும் மனிதனுக்கும் பிறந்த ) சிங்களவனை ஆதரிக்கவில்லையா?

  //துரை – உலகின் மனித இனம் தன்மையால் ஒன்றுபட்டவ்ர்கள் என்பதே என் விளக்கம். இதனை விளங்காத படிப்பறிவோ கேள்வியறிவோ இல்லாதவ்ர்களின் தீர்ப்பே சிங்களவ்ர் மட்டுமே கொலைகாரர் பொல்லாதவ்ர்கள் என்று விளம்பரம் செய்வது//
  சின்ன பிள்ளைகளுக்கு தெரிவிக்க வேண்டிய உண்மைகளை புலம் பெயர்ந்த வளர்ந்த சின்னவர்களுக்கு விளங்கபடுத்த வேண்டிய நிலைமை. //////

  படித்த மாமேதைகள் நீங்கள் பாவிக்கும் தொழில்நுட்ப வார்த்தைகளை சிங்கள அரசன் மகிந்தாவுக்கும், அவன் தம்பி கொடபாயாவுகும் , விமல் வீரவன்சே இற்கும் bbs சிங்கள மாமேதைகளும், மாற்று கருத்து மண்ணாங்கட்டி களுக்கும் விளங்குது தானே.

  //றோகான்-இந்த வன்னி அறைச்சி என்ற பெயரில் எழுதுபவரின் ‘குறுக்கு விவாதமும்’ மொழி நடையும் எனக்குப் பரிச்சயமானவை அல்லவா என்று மூளை மின்னிக் கொண்டிருந்தது.//

  பெரியவர் அஜித் என்ன சொல்கிறர் தெரியுமா? ஜெயபாலன் தான் வன்னி ஆராய்ச்சி.
  இலங்கை தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட வன்னி ஆராய்ச்சி மொழி நடை உங்களுக்கு பரிச்சயமானது என்பது அதிசயம் தான்.
  புலிகளின் புலனாய்வு பிரிவு பொட்டு அம்மானுக்கு பதிலாக நீங்கள் தான் அந்த பதவிவை தற்போது ஏற்று கொண்டிருக்கிறீர்களோ? /////

  அப்பா இவர் தான் அந்த வன்னி ஆராச்சி.

 23. Rohan on October 20, 2014 7:48 pm

  //துரை- புருசனை கொன்று குப்பையில் புதைத்த தமிழரின் கதையை அறியோம்.
  நான் – யாழ்பாணம் தொடக்கம் இந்தியா,லண்டன்,ரொறின்ரோ வரை தமிழர்கள் செய்த கொலைகள் அறிவோம்.//

  /புலிகளின் புலனாய்வு பிரிவு பொட்டு அம்மானுக்கு பதிலாக நீங்கள் தான் அந்த பதவிவை தற்போது ஏற்று கொண்டிருக்கிறீர்களோ?/

  ஓகோ.. ஸ்கொட்லண்ட்யாட் இவர்கள் தானோ…

 24. Rohan on October 20, 2014 8:02 pm

  ///இவர் பொதுவுடமை வாதத்தை எப்போது விட்டார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்!!!!! நாமெல்லாம் சேர்ந்து ஒரு பெரிய ஓ போடுவோம்.///
  //சேர்ந்து போட்ட கும்மாளம் போதும் இந்த ஆட்டத்துக்கு
  பல்லி வரவில்லை சொல்லிபுட்டன்,//

  பெரிய நகரம் = மாநகரம்.
  பெரிய தவம் = மாதவம்.
  பெரிய ஓ = ?

  பொதுவுடமை வாதம் என்று மேலதிக உதவியும் செய்திருந்தேன்.

  //சேர்ந்து போட்ட கும்மாளம் போதும் இந்த ஆட்டத்துக்கு
  பல்லி வரவில்லை சொல்லிபுட்டன்,//

  இது சும்மா… இங்கு நடக்கிற கூத்துகளை நாமெல்லாம் பார்க்கிறோம் தானே.

  /இலங்கை தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட வன்னி ஆராய்ச்சி மொழி நடை உங்களுக்கு பரிச்சயமானது என்பது அதிசயம் தான்./

  இலங்கைத் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர் என்ற கருத்தை நான் கணக்கில் எடுக்காமல விடுகிறேன். ஆனால், எனது பகுப்பாயும் தனமையைக் குறை கூற முடியாது. ‘இவர் தான் அவரோ’ என்ற கதைகளெல்லாம் இங்கு நான் பேசியதில்லை.

  /புலிகளின் புலனாய்வு பிரிவு பொட்டு அம்மானுக்கு பதிலாக நீங்கள் தான் அந்த பதவிவை தற்போது ஏற்று கொண்டிருக்கிறீர்களோ?/

  அடடா… பொட்டுஅம்மானின் புலனாய்வு வல்லமையில் இவர்களுக்கு அந்தளவுக்கு மதிப்பும் பயபக்தியும் இருக்கிறதா.

  புனைபெயர்களில் எழுதுவதில் ஒன்றும் தப்பில்லை. ஆனால், மாற்றி மாற்றி எழுதிப் பம்மாத்த வேண்டியதில்லை.

  புதிதாய் வந்த அறைச்சி என்னில் பாய்ந்து சுண்டெலி நசுக்க முற்படும் தேவை ஏதும் இல்லை என்று யோசித்த போது தான் முன்னைய சொல்லாடல்களின் போது தோல்வி உணர்வுடன் போன ஒருவரின் நினைவு தெறித்தது! அவருக்கே தெரியும் இப்போது…..

 25. பல்லி on October 20, 2014 9:30 pm

  //அஜித்தின் கருத்தை உற்று பார்த்தால் அஜித் என்ன சொல்ல வருகிறார் என்பது தெளிவாக விளங்கும். புலிகள் தான் இலங்கை தமிழர்கள் என்பவர்கள்.புலிகளுக்காக வாழாத தமிழர்கள் புலிகளை ஆதரிக்காத தமிழர்கள் அழிக்கபட வேண்டியவர்கள் என்ற புலிகளின் சிந்தனையின் வெளிப்பாடே.//
  இதுக்கு அவரிடம் பதில் இருக்காது ;

 26. Rohan on October 21, 2014 8:05 am

  ///இவர் பொதுவுடமை வாதத்தை எப்போது விட்டார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்!!!!! நாமெல்லாம் சேர்ந்து ஒரு பெரிய ஓ போடுவோம்.///

  //சேர்ந்து போட்ட கும்மாளம் போதும் இந்த ஆட்டத்துக்கு

  பல்லி வரவில்லை சொல்லிபுட்டன்,//

  பெரிய நகரம் = மாநகரம்.
  பெரிய தவம் = மாதவம்.
  பெரிய ஓ = ?

  பொதுவுடமை வாதம் என்று மேலதிக உதவியும் செய்திருந்தேன்.

  //சேர்ந்து போட்ட கும்மாளம் போதும் இந்த ஆட்டத்துக்கு
  பல்லி வரவில்லை சொல்லிபுட்டன்,//

  இது சும்மா… இங்கு நடக்கிற கூத்துகளை நாமெல்லாம் பார்க்கிறோம் தானே.

  /இலங்கை தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட வன்னி ஆராய்ச்சி மொழி நடை உங்களுக்கு பரிச்சயமானது என்பது அதிசயம் தான்./

  இலங்கைத் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர் என்ற கருத்தை நான் கணக்கில் எடுக்காமல விடுகிறேன். ஆனால், எனது பகுப்பாயும் தனமையைக் குறை கூற முடியாது. ‘இவர் தான் அவரோ’ என்ற கதைகளெல்லாம் இங்கு நான் பேசியதில்லை.

  /புலிகளின் புலனாய்வு பிரிவு பொட்டு அம்மானுக்கு பதிலாக நீங்கள் தான் அந்த பதவிவை தற்போது ஏற்று கொண்டிருக்கிறீர்களோ?/

  அடடா… பொட்டுஅம்மானின் புலனாய்வு வல்லமையில் இவர்களுக்கு அந்தளவுக்கு மதிப்பும் பயபக்தியும் இருக்கிறதா.

  புனைபெயர்களில் எழுதுவதில் ஒன்றும் தப்பில்லை. ஆனால், மாற்றி மாற்றி எழுதிப் பம்மாத்த வேண்டியதில்லை.

  புதிதாய் வந்த அறைச்சி என்னில் பாய்ந்து சுண்டெலி நசுக்க முற்படும் தேவை ஏதும் இல்லை என்று யோசித்த போது தான் முன்னைய சொல்லாடல்களின் போது தோல்வி உணர்வுடன் போன ஒருவரின் நினைவு தெறித்தது! அவருக்கே தெரியும் இப்போது…..

 27. Rohan on October 21, 2014 8:48 pm

  Rohan///இவர் பொதுவுடமை வாதத்தை எப்போது விட்டார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்!!!!! நாமெல்லாம் சேர்ந்து ஒரு பெரிய ஓ போடுவோம்.///
  பல்லி//சேர்ந்து போட்ட கும்மாளம் போதும் இந்த ஆட்டத்துக்கு
  பல்லி வரவில்லை சொல்லிபுட்டன்,//

  பெரிய நகரம் = மாநகரம்.
  பெரிய தவம் = மாதவம்.
  பெரிய ஓ = ?

  பொதுவுடமை வாதம் என்று மேலதிக உதவியும் செய்திருந்தேன்.

  //சேர்ந்து போட்ட கும்மாளம் போதும் இந்த ஆட்டத்துக்கு
  பல்லி வரவில்லை சொல்லிபுட்டன்,//

  இது சும்மா… இங்கு நடக்கிற கூத்துகளை நாமெல்லாம் பார்க்கிறோம் தானே.

  /இலங்கை தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட வன்னி ஆராய்ச்சி மொழி நடை உங்களுக்கு பரிச்சயமானது என்பது அதிசயம் தான்./

  இலங்கைத் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர் என்ற கருத்தை நான் கணக்கில் எடுக்காமல விடுகிறேன். ஆனால், எனது பகுப்பாயும் தனமையைக் குறை கூற முடியாது. ‘இவர் தான் அவரோ’ என்ற கதைகளெல்லாம் இங்கு நான் பேசியதில்லை.

  BC/புலிகளின் புலனாய்வு பிரிவு பொட்டு அம்மானுக்கு பதிலாக நீங்கள் தான் அந்த பதவிவை தற்போது ஏற்று கொண்டிருக்கிறீர்களோ?/

  அடடா… பொட்டுஅம்மானின் புலனாய்வு வல்லமையில் இவர்களுக்கு அந்தளவுக்கு மதிப்பும் பயபக்தியும் இருக்கிறதா.

  புனைபெயர்களில் எழுதுவதில் ஒன்றும் தப்பில்லை. ஆனால், மாற்றி மாற்றி எழுதிப் பம்மாத்த வேண்டியதில்லை.

  புதிதாய் வந்த அறைச்சி என்னில் பாய்ந்து சுண்டெலி நசுக்க முற்படும் தேவை ஏதும் இல்லை என்று யோசித்த போது தான் முன்னைய சொல்லாடல்களின் போது தோல்வி உணர்வுடன் போன ஒருவரின் நினைவு தெறித்தது! அவருக்கே தெரியும் இப்போது…..

 28. Rohan on October 22, 2014 12:28 pm

  ///இவர் பொதுவுடமை வாதத்தை எப்போது விட்டார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்!!!!! நாமெல்லாம் சேர்ந்து ஒரு பெரிய ஓ போடுவோம்.///
  //சேர்ந்து போட்ட கும்மாளம் போதும் இந்த ஆட்டத்துக்கு
  பல்லி வரவில்லை சொல்லிபுட்டன்,//

  பெரிய நகரம் = மாநகரம்.
  பெரிய தவம் = மாதவம்.
  பெரிய ஓ = ?

  பொதுவுடமை வாதம் என்று மேலதிக உதவியும் செய்திருந்தேன்.

  //சேர்ந்து போட்ட கும்மாளம் போதும் இந்த ஆட்டத்துக்கு
  பல்லி வரவில்லை சொல்லிபுட்டன்,//

  இது சும்மா… இங்கு நடக்கிற கூத்துகளை நாமெல்லாம் பார்க்கிறோம் தானே.

  /இலங்கை தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட வன்னி ஆராய்ச்சி மொழி நடை உங்களுக்கு பரிச்சயமானது என்பது அதிசயம் தான்./

  இலங்கைத் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர் என்ற கருத்தை நான் கணக்கில் எடுக்காமல விடுகிறேன். ஆனால், எனது பகுப்பாயும் தனமையைக் குறை கூற முடியாது. ‘இவர் தான் அவரோ’ என்ற கதைகளெல்லாம் இங்கு நான் பேசியதில்லை.

  /புலிகளின் புலனாய்வு பிரிவு பொட்டு அம்மானுக்கு பதிலாக நீங்கள் தான் அந்த பதவிவை தற்போது ஏற்று கொண்டிருக்கிறீர்களோ?/

  அடடா… பொட்டுஅம்மானின் புலனாய்வு வல்லமையில் இவர்களுக்கு அந்தளவுக்கு மதிப்பும் பயபக்தியும் இருக்கிறதா.

  புனைபெயர்களில் எழுதுவதில் ஒன்றும் தப்பில்லை. ஆனால், மாற்றி மாற்றி எழுதிப் பம்மாத்த வேண்டியதில்லை.

  புதிதாய் வந்த அறைச்சி என்னில் பாய்ந்து சுண்டெலி நசுக்க முற்படும் தேவை ஏதும் இல்லை என்று யோசித்த போது தான் முன்னைய சொல்லாடல்களின் போது தோல்வி உணர்வுடன் போன ஒருவரின் நினைவு தெறித்தது! அவருக்கே தெரியும் இப்போது…..

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு